You are on page 1of 8

3/4/22, 11:36 PM உடல் நலனும் மன நலமும் : பதற்றமாக இருக்கிறதா?

உங் களுக்குக் கைகொடுக்கும் 3 வழிகள் - BBC New…

முகப்பு உலகம் இந்தியா இலங்கை விளையாட்டு அறிவியல் சினிமா வீடியோ

உடல் நலனும் மன நலமும்: பதற்றமாக


இருக்கிறதா? உங்களுக்குக் கைகொடுக்கும் 3
வழிகள்

25 பிப்ரவரி 2022

GETTY IMAGES

தேர்வு, காலக்கெடு, பணிக்கான நேர்காணல், ஒன்றை தொகுத்து வழங்குவது போன்ற

செயல்பாடுகள் பொதுவாகவே உங்களை மிகவும் பதற்றமாக்கும்.

https://www.bbc.com/tamil/science-60514892 1/8
3/4/22, 11:36 PM உடல் நலனும் மன நலமும் : பதற்றமாக இருக்கிறதா? உங் களுக்குக் கைகொடுக்கும் 3 வழிகள் - BBC New…

நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய தருணத்தில், உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம்;

உங்கள் உள்ளங்கை வியர்க்கலாம்; உங்கள் குரல் வித்தியாசமாக மாறலாம்; உங்கள் மூளை

இருண்டுப்போகலாம்.

நரம்பியல் அறிவியலின் படி, உங்களை நீங்களே இயல்பாக்கிக்கொள்ள மூன்று எளிய,

நம்பக்கூடிய உத்திகள் இருக்கின்றன; நீங்கள் எவ்வளவு பதட்டமாக இருந்தாலும், இந்த

உத்திகள் உங்களை அமைதியாக்கி, முன்நடத்தி செல்லும்.

மன அழுத்ததை எதிர்கொள்ள நிச்சயமாக வேறு பல உத்திகள் உள்ளன; ஆனால், இந்த மூன்று

உத்திகளும் உங்களுக்கு உடனடி தீர்வை தரும்.

மூச்சுப் பயிற்சி

முதலில் மூச்சுப்பயிற்சி - நீங்கள் உங்கள் மூக்கு வழியாக ஐந்து நொடிகள், ஆழமாக, நன்றாக

மூச்சை இழுங்கள். அதை ஒரு நொடி பிடித்து வையுங்கள். பின்னர், இழுத்துப் பிடித்திருக்கும்
காற்றை உங்கள் மூக்கு வழியாக, ஒன்றிலிருந்து ஐந்து வரை எண்ணிக்கொண்டு, மெதுவாக

வெளியில் விடுங்கள். இப்படி சில முறை செய்யுங்கள். நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள்.

பல நூற்றாண்டுகளாக, நம் உடலின் நரம்பியல் அமைப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க,


யோகிகளும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மூச்சுப் பயிற்சி உத்தியைப்

பயன்படுத்தியுள்ளனர். இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவியல் புரிந்துக்கொள்ள


தொடங்கியுள்ளது.

ப்ரீ-பாட்ஸிங்கர் அமைப்பு (PRE-BOTZINGER COMPLEX) - மன அழுத்தத்துடன் இருக்கும் போது,


மிகவும் வேகமாக மூச்சை விடுவோம். அதனால், நம் உடல் ஆபத்தில் இருப்பதற்கு தயாராகும்.

இது நாம் ஓடி செல்ல உதவலாம். ஆனால், பொதுவெளியில் பேச தயாராகும்போது உதவி
செய்யாது.

https://www.bbc.com/tamil/science-60514892 2/8
3/4/22, 11:36 PM உடல் நலனும் மன நலமும் : பதற்றமாக இருக்கிறதா? உங் களுக்குக் கைகொடுக்கும் 3 வழிகள் - BBC New…

GETTY IMAGES

நாம் மூச்சை ஆழமாகவும் மெதுவாகவும் விடும்போது, 'ஆபத்தில்' இருந்து' எல்லாம் நன்றாக


இருக்கிறது' என்று நம் மூளைக்கு இதன் மூலம் செய்தி சென்றடைகிறது. அதனால், அடுத்த

முறை உங்களின் பதட்டம் அதிகரித்தால், உங்கள் மனநிலையை அமைதியாக்க, நீங்கள்


ஆழமாக மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், இதை யாரும்

கவனிக்க மாட்டார்கள்; நீங்கள் மேடையில் நின்றாலும், பார்ப்பவர்களுக்கு அது தெரியாது.

இப்போது, நீங்கள் இசையை மனதுக்குள்ளேயே பாடத் தயாராகுங்கள். ஒரே ஒரு இசை

சுரத்தையோ உங்களுக்கு விருப்பமான இசையையோ என எதை வேண்டுமானாலும் பாடலாம்.


ஏன் தெரியுமா?

நம் உடலின் பெரிதும் அறியப்படாத மிக முக்கிய பாகமாக 'வேகஸ் நரம்பு' (vagus nerve) உள்ளது.

இசையை மனதுக்குள் பாடுவதன் மூலம் இதயத் துடிப்பு சீராகுகிறது என்று ஆய்வுகள்


தெரிவிக்கின்றன.

இப்படி செய்வதற்கு லத்தீன் மொழியில் 'அலைந்து திரிவது' என்று பொருள் தரும். ஏனெனில்
இது மூளையில் இருந்து வெளிப்பட்டு, தகவல்தொடர்புக்கான ஒரு துரிதமான பாதை போல

உடலில் மேலும் கீழும் வளைந்து, இதயம், நுரையீரல் மற்றும் வயிறு, குரல் பகுதி, காதுகள்
போன்ற உறுப்புகளுடன் மூளையை இணைக்கிறது.

2013ஆம் ஆண்டு பாடகர்கள் பற்றிய ஆய்வில், பாடுவது, ஹம்மிங் செய்வது பக்தி மந்திரங்கள்

கூறுவது அனைத்தும் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகின்றன என்பதைக்


காட்டுகிறது.

நாம் சரியான நேரத்தில் சாப்பிடவில்லை என்றால் என்ன நடக்கும்?

'பாலியல் கற்பனைகள்' திருமண உறவை பாதிக்குமா?

அதனால், அடுத்த முறை உங்கள் இதயம் வேகமாக துடிக்கும் போது ஒரு பாடலைப் பாடுங்கள்
அல்லது ஒரு பாடல் குறிப்பை முணுமுணுத்து, உங்கள் நாடி நரம்புகளை அமைதியாக்குங்கள்.

https://www.bbc.com/tamil/science-60514892 3/8
3/4/22, 11:36 PM உடல் நலனும் மன நலமும் : பதற்றமாக இருக்கிறதா? உங் களுக்குக் கைகொடுக்கும் 3 வழிகள் - BBC New…

GETTY IMAGES

இறுதி உத்தி, கவனம் செலுத்துவது. நீங்கள் பிஸியாக இருக்கும்போது பல பணிகளைச்


செய்யத் தோன்றும். ஆனால் நீங்கள் அமைதியாக இருந்து உண்மையில் செய்ய
வேண்டியவற்றை முடிக்க வேண்டுமெனில், ஒரே சமயத்தில் பல பணிகளைச் செய்யாதீர்கள்.
உங்கள் மூளை ஒரு நேரத்தில் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய முடியும் என்பதை ஆய்வுகள்

கூறுகின்றன.

ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே

நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்யும் போது, நீங்கள் மிக வேகமாக மாறி
மாறி வேலை செய்ய வேண்டும். மேலும், இதனால் ஏற்படும் அதிகப்படியான தூண்டுதலால்
உங்கள் உடல் மன அழுத்த ஹார்மோன்களால் நிரப்புகிறது.

உங்கள் மூளையை இணைக்கும் விதத்தில் வேலை செய்வதன் மூலமும், ஒரு நேரத்தில் ஒரு
செயலை செய்வதன் மூலம், நீங்கள் சோர்வுற்ற உணர்விலிருந்து விரைவாக அமைதி
பெறலாம்.

அதனால், உங்கள் பணியை சிறிய பகுதிகளாகவோ அல்லது படிப்படியாக பிரித்தோ

செய்யுங்கள். அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்ற
பணிகளை அவற்றின் நேரம் வரும் வரை மறந்து விடுங்கள். இது சில நேரங்களில்
'செயல்முறை சிந்தனை' என்று அழைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் தங்கள்
விளையாட்டில் கவனம் செலுத்த அவர்களின் பயிற்சியாளர்கள் இந்த உத்தியை

பயன்படுத்துவார்கள்.

கவனம் செலுத்துவது
https://www.bbc.com/tamil/science-60514892 4/8
3/4/22, 11:36 PM உடல் நலனும் மன நலமும் : பதற்றமாக இருக்கிறதா? உங் களுக்குக் கைகொடுக்கும் 3 வழிகள் - BBC New…

உங்கள் முழு கவனத்துடன் ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்வது உங்கள் மனதை ஓர்
இடத்தில் வைத்திருக்கும். மேலும் இது ஒரு சிறந்த பழக்கத்தை உருவாக்கும். அடுத்த முறை
நீங்கள் பதட்டமாக உணர்ந்தால், கொஞ்சம் சுதாரியுங்கள். மூச்சுப் பயிற்சி செய்யவும், பாடல்

முனகவும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவும் நினைவில் வைத்துக் கொள்ளவும். நீங்கள்


அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பிற செய்திகள்:

களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் நாகப்பாடி விவசாயிகள்: களர் நிலங்களுக்கு


தீர்வா?

அஜித்தின் 'வலிமை' - சினிமா விமர்சனம்

யுக்ரேன் பதற்றம்: புதினின் முடிவால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிர அமைச்சர் கைது

'மரணம் ஏற்படும் கடைசி நொடியில் வாழ்க்கையின் பிளாஷ்பேக் தெரியும்'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்

டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்

தொடர்புடைய தலைப்புகள்

https://www.bbc.com/tamil/science-60514892 5/8
3/4/22, 11:36 PM உடல் நலனும் மன நலமும் : பதற்றமாக இருக்கிறதா? உங் களுக்குக் கைகொடுக்கும் 3 வழிகள் - BBC New…

மனநல ஆரோக்கியம் அறிவியல் பெண்கள் பெண்ணுரிமை பெண்களின் ஆரோக்கியம்

உடல்நலம்

முக்கிய செய்திகள்

நேரலை ஸாப்போரீஷியா அணுமின் நிலைய தாக்குதலில் சிலர் உயிரிழப்பு; மேலும்


சிலர் காயம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார்


3 மணி நேரங்களுக்கு முன்னர்

யுக்ரேன் Vs ரஷ்யா: இந்தப் போர் முடிவதற்கான 5 வழிகள் என்னென்ன?


2 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறப்புச் செய்திகள்

கணினி மூலம் பங்குச் சந்தையில் லட்சங்களை ஈட்ட


முடியுமா?
1 மார்ச் 2022

சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறித்து என்ன


சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
2 மார்ச் 2022

கும்பகோணம் கல்லூரியில் இடிந்து விழும் நிலையில்


வகுப்பறைகள், பாம்புகளும் வரும்
2 மார்ச் 2022

'ஹே சினாமிகா' துல்கர் சல்மான்: "பட தலைப்புக்காக


மணிரத்தினம் கேட்ட ராயல்டி"
2 மார்ச் 2022

https://www.bbc.com/tamil/science-60514892 6/8
3/4/22, 11:36 PM உடல் நலனும் மன நலமும் : பதற்றமாக இருக்கிறதா? உங் களுக்குக் கைகொடுக்கும் 3 வழிகள் - BBC New…

யுக்ரேன் மீது படையெடுப்பு: இந்தியா ரஷ்யாவுக்கு


எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?
2 மார்ச் 2022

யுக்ரேனிய மருத்துவ படிப்பை இந்தியர்களால் தொடர


முடியுமா?
1 மார்ச் 2022

ராகுல் காந்தி: "என் ரத்தம் கலந்தது இந்த தமிழ்நாட்டு


மண்"
28 பிப்ரவரி 2022

தமிழகத்தில் 'ஊரக கண்டுபிடிப்பாளர்' விருதுக்கு


விண்ணப்பிப்பது எப்படி?
28 பிப்ரவரி 2022

'கருவிலேயே 10 ஆயிரம் சொற்களை கற்கும் குழந்தை'


21 பிப்ரவரி 2022

அதிகம் படிக்கப்பட்டது

1 மு.க. ஸ்டாலின் உத்தரவு: "தலைமையை மதிக்காமல் பதவியேற்றவர்கள் பதவி


விலகுங்கள்"

2 500 பில்லியன் டாலர்கள் செலவில் செளதியின் பசுமை நகரம் - இது சாத்தியமா?

3 யுக்ரேன் Vs ரஷ்யா: இந்தப் போர் முடிவதற்கான 5 வழிகள் என்னென்ன?

https://www.bbc.com/tamil/science-60514892 7/8
3/4/22, 11:36 PM உடல் நலனும் மன நலமும் : பதற்றமாக இருக்கிறதா? உங் களுக்குக் கைகொடுக்கும் 3 வழிகள் - BBC New…

4 ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்?

5 தமிழ்நாடு: கும்பகோணம் மேயர் ஆன ஆட்டோ டிரைவர் - டெல்டாவின் மேயர்கள் யார்

நீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்?

பயன்பாட்டு விதி குக்கிகள்

பிபிசி பற்றி பிபிசி-யை தொடர்பு கொள்க

தனியுரிமை கொள்கை AdChoices / Do Not Sell My Info

© 2022 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான
எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

https://www.bbc.com/tamil/science-60514892 8/8

You might also like