You are on page 1of 2

வளர்தமிழ் விழா 2022

(பேச்சுப்போட்டி)

(தமிழ் மொழியின் சிறப்பு)

பெருமதிப்பிற்குறிய அவைத்தலைவர் அவர்களே, நீதியை நிலைநாட்ட


வீற்றிருக்கும் நீதிபதிகளே ஆசிரியர் பெருந்தகைகளே உங்கள் அனைவருக்கும்
என் முத்தான முதற்கண் வணக்கத்தை சமர்பிக்கின்றேன். “கல்வி” இதுவே
அடியேன் எடுத்துக்கொண்ட தலைப்பு.

சான்றோர்களே,

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது ஆன்றோர் வாக்கு.

முகத்தின் அழகு காண, தேவை ஒரு 'கண்ணாடி,'


அகத்தின் அழகுதனை காண
தேவை ' கல்வி '
என்றுமே உன் முன்னாடி !
என்பது இன்றைய வாக்கு.
கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி
கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்க்காமல் இருந்து தனது காலத்தை
கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.
கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாதவாறு* என்று குறிப்பிடுகிறார்.
மேற்கூரிய வாசகத்தை ஆராய்ந்த போது கற்றவனின் சிறப்பை கணலாம். அதாவது இக்கல்விக்காக உயிர்
கொடுத்தோர் மரணிப்பதில்லை என்பது கல்வி கற்றவர் மரணித்து விடுவார் ஆனால் அவர் கற்ற, கற்ப்பித்த
கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்தே ஆகும். அவர்களுள் டாக்டர் அப்துல்கலாம், அரிஸ்டாட்டில்,
அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், பிளாட்டோ மற்றும் சாக்கிரட்டீஸ் போன்றவர்கள்
குறிப்பிடத்தக்கவர்களாவார். சிறந்த கல்வி ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கு இட்டுச்
செல்லும்.இதனையே கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை என கூறப்படுகிறது.

படிக்காமல் இருப்பதனை விட பிறக்காமல் இருப்பதே மேல் என்கின்றார் பேரறிஞர் பிளாட்டோ. ஒரு மனிதன்
கல்வியை கற்காமல் இருப்பானானால் அவனது பிறப்பிற்கே எந்த வித அர்த்தமும் இல்லை.

கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது ஔவையார் வாக்கு. பிச்சை எடுத்து
அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள
வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே
உண்மையான பொருள். அதாவது காலில் விழுந்தாவது சாதித்துக் கொள்ள வேண்டும்
மனிதனை உருவாக்கும் கல்வியே மகத்தானது. அத்தகைய கல்வியே நன்மை, தீமைகள் குறித்து சுயமாகச்
சிந்திக்கவும், பிறர் துன்பங்களைத் தீர்க்கும் மருந்தாகவும், தன் காலில் தானுான்றி நிற்கவும் உதவும் என்பார்
சுவாமி கற்றோர் மிளிர்வர், தேசம் உயரும். 'கேடுஇல் விழுச் செல்வம் கல்வி' எனும் வள்ளுவர் வாக்கு
நிலைத்து நிற்கும்இதனையே “இன்று உலகத்தை மாற்றக் கூடிய ஒரு ஆயுதம் உள்ளது, அதன் பெயர் கல்வி”
என்று நெல்சன் மண்டேலோ குறிப்பிடுகின்றார்.

ஆன்றோர்களே,

You might also like