You are on page 1of 1

நாட்டுப்புற நம்பிக்கைகள்

முன்னுரை
நாட்டுப்புற நம்பிக்கைகள் நாட்டுப்புற மக்களால் வழிவழியாக நம்பப்

பட்டும் பாதுகாக்கப் பட்டும் வருகின்ற நம்பிக்கைகளே நாட்டுப்புற

நம்பிக்கைகளாகும். பெரும்பாலான நம்பிக்கைகள் நாட்டுப்புற

க்களாலேயே உருவாக்கப் பட்டும் ஒரு தலைமுறையினரிடம் இருந்து

அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப் பட்டும் வருகின்றன. Belief

என்ற நம்பிக்கையே நாட்டுப்புற மக்களிடம் வேரூன்றிக்காணப்படுகிறது.

இது மரபின் முத்திரையாக, காரண காரியத்திற்கு இடம் கொடாமல்

வழிவழியாகப் பின்பற்றப் பட்டு வருகிறது. மனிதன் தாயின் வயிற்றில்

கருவாக இருப்பதில் இருந்து இறந்த பின் எரியூட்டப்படுவது வரை; ஏன்?

இறந்த பின்பும் கூட அவன் ஆவியாக அலைகின்றானா,பேயாகத்

திரிகின்றானா என்பது வரை, அனைத்து நிலைகளிலும்,நாட்டுப்புற

மக்களிடம் நம்பிக்கைகள் நிறைந்துள்ளன.இந்நம்பிக்கைகளுக்குப்

பின்னால் ஏதேனும் ஒரு வலுவானஉளவியல் (Psychological) காரணம்

இருப்பதையும் நாம் அறிய முடியும். முற்பகல் செய்யின் பிற்பகல்

விளையும் என்ற நம்பிக்கை ஒருமனிதனைத் தீமையைச் செய்ய

விடாமல் தடுக்கிறது. சத்தியம் தொடர்பான நம்பிக்கை கட்டுப்பாட்டை

வளர்க்கிறது. விதி, தலையெழுத்து பற்றிய நம்பிக்கை மனத்தைத்

தேற்றிக் கொள்ள உதவுகிறது. இவ்வாறு உளவியல் ரீதியான

சோகங்களுக்கு மருந்தாக நம்பிக்கைகள் செயல்படுகின்றன. நாட்டுப்புற

மரபில் நம்பிக்கை முடிச்சுகள் ஏராளம். நம்பிக்கைகளைத் தொகுத்தால்

ஏடு கொள்ளாது என்னும் அளவிற்கு அவை நிறைந்து

காணப்படுகின்றன.

You might also like