You are on page 1of 2

1

03.06.2022
அனுப்புநர்
கு.குப்பம்மாள், (47/வயது)
க/பெ. குப்பன்,
# 281, பள்ளிக்கூட தெரு,
பிரம்மகுண்டம் கிராமம் & அஞ்சல்,
சங்கராபுரம் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – 605702

பெறுநர்
திரு.சார்பதிவாளர் அவர்கள்,
சார்பதிவாளர் அலுவலகம்,
வடபொன்பரப்பி,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.

ஐயா

நான், மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர்


திரு.குப்பன், த/பெ.ஜெயராமன் அவர்கள் தற்போது MIYA KUPPRI, ISSAR
THAPPA AL ZAHABI, SAUDI ARABIA என்கிற முகவரியில் ஊலி வேலை
செய்து வசித்து வருகிறார். அவருடைய நிரந்திர முகவரி கதவு எண்.281,
பள்ளிக்கூட தெரு, பிரம்மகுண்டம் கிராமம் & அஞ்சல், சங்கராபுரம் வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – 605702 ஆகும். இத்துடன் இணைத்து தாக்கல்
செய்யப்பட்டுள்ள பொது அதிகாரப்பத்திரத்தில் கண்டுள்ள காரணங்களுக்காக
என்னை அவரின் முகவராக நியமித்து, பொது அதிகாரப் பத்திரம் எழுதி
கொடுத்துள்ளார். மேற்படி பொது அதிகார ஆவணமானது EMBASSY OF INDIA
AT RIYADH- ஆல் சான்றுரைக்கப்பட்டு 08.05.2022 அன்று கையொப்பம்
செய்துள்ளார்.

மேற்படி பொது அதிகார ஆவணமானது கள்ளக்குறிச்சி மாவட்டம்,


சின்னசேலம் வட்டம், எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் வசித்து வரும்
அண்ணாமலை குமாரர் வெங்கடேசன் அவர்கள் சவுதி அரேபியாவில்
இருந்து வரும்பொழுது மேற்படி பொதுஅதிகார ஆவணத்தை எடுத்து
வந்தார். அவருடைய கடவுச்சீட்டு நகல் இணைக்கப்பட்டுள்ளது. மேற்படி
ஆவணமானது கடந்த 27.05.2022 அன்று எனக்கு கிடைக்கப் பெற்றது.
2

மேற்படி பொது அதிகார ஆவணமானது சட்டப்படியான


காரணங்களுக்காக, முறைப்படியாக வழங்கப்பட்டு, மேலே குறிப்பிட்டுள்ள
EMBASSY OF INDIA AT RIYADH- ஆல் சான்றுரைக்கப்பட்டு, கையொப்பம்
செய்யப்பட்டதுள்ளது. எனவே, மேற்படி ஆவணம் உண்மையானதும்,
சட்டப்படி செயல்படுத்தக்கூடியதும் ஆகும்.

எனவே ஐயா அவர்கள் மேற்படி பொது அதிகார ஆவணத்தை ஏற்றுக்


கொண்டு, பதிவு அலுவலக செயல்முறைபடுத்தி (Adjudication) கொடுக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன். மேற்படி பொதுஅதிகார ஆவணமானது எதிர்வரும்
காலங்களில் தவறானது அல்லது போலியானது அல்லது சட்டத்திற்கு
முரணானது என்று கண்டறியப்பட்டால், அதற்கு தாங்கல் அலுவல்
முறையில் எடுக்கும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைக்கும் நான்
கட்டுப்படுகிறேன் என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.

இப்படிக்கு

(கு.குப்பம்மாள்)

You might also like