You are on page 1of 2

பள்ளி மணி ஒலித்தது, மாணவர்கள் அனைவரும் பள்ளியை விட்டு சிட்டாய்ப்

பறந்தனர்.

அகிலனும் தனது நண்பர்களும் எப்போதும் போல மூவரும் இணைந்து வீட்டிற்குப்


புறப்பட்டனர்.

“ சிறுவர்களைக் கடத்தும் கும்பல் பற்றி ஆசிரியர் கூறியதைக் கவனமாகக்

,”
கேட்டீர்களா? என அகிலன் தனது தோழர்களிடம் கேட்டான்.

“ அகிலா, நாங்கள் மிகவும் கவனமாகக் கேட்டோம். ஆனால், இதைக் கேட்டவுடன்

,”என்று
மனதில் ஏதோ ஒரு பயம் தொற்றிக்கொண்டுள்ளது.

அறிவழகன் கூறினான்.
இவ்வாறான கடத்தல் சம்மவம் நமக்கு நேர்ந்தால் என்னவாகும் என மனதில்
நினைத்தவாறே அகிலன் தனது பயணத்தைத் தொடர்ந்தான்.

போம்! போம்! என மஞ்சல் நிற வாகனம் ஒன்று வாகனத்தில் ஒலியை எழுப்பிக்


கொண்டு அச்சாலையில் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.

அவ்வாகனம் வேகமாக விரைந்து நாங்கள் ஓரமாக சென்று கொண்டிருக்கும் வழியில்


வந்து நின்றது. பயத்தால் கால்கள் அவ்விடத்தை விட்டு விரைந்தன.

பையன்களே! வாங்க! எங்களோட மகிழுந்துல ஏறிப் போகலாம். என வாகனத்திலிருந்து


ஓர் ஆடவர் எங்களை உரத்த குரலில் அழைத்தார்.
வாருங்கள் நண்பா இவ்வழகான வாகனத்தில் நாமும் ஏறி ஒருமுறை சவாரி செய்து
வரலாம், என அறிவழகன் தனது நண்பர்களை அழைத்தான்.

“வேண்டாம் நண்பா, அவர்களைப் பார்த்தாலே சந்தேகமாக இருக்கு என”,


அகிலன் தன் நண்பர்களை எச்சரித்தான்.

நண்பர்கள் இருவரும் அகிலனின் சொல்லுக்குச் செவி சாய்க்கவில்லை.

இருவரும் விரைந்து மகிழுந்தில் ஏறினர்.அந்த சொகுசு காரில் ஒரு வலம் வர


தயாராகினர். இருவரும் வாகனத்தில் ஏறியவுடன் அக்காரின் கருமையான கண்ணாடி
மூடப்பட்டது. தனது நண்பர்கள் இருவரும் உள்ளே இருப்பதே தெரியவில்லை.

அகிலனின் மனம் படபடத்தது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதாக அவன்


நினைத்தான். உடனே விரைந்து சென்று தனது ஆசிரியரிடம் கூறினான்.

ஆசிரியர் திரு.ராஜாவிடம் அகிலன் கொடுத்த தகவல்களை காவல் துறையினரிடம்


கூறினார். காவல்துறையினர் விரைந்து அகிலனின் நண்பர்களை அந்த
கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டனர்.

காவல்துறையினர் அகிலனுக்கு நன்றி கூறி அவ்விடத்தை விட்டு புறப்பட்டனர்.


அகிலனும் அவனது நண்பர்களும் வீடு திரும்பினர்.

You might also like