You are on page 1of 2

திருச்சிற்றம்பலம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை


இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே !!
(இதன் பொருள்)
ஐந்து கைகளையும், யானை முகத்தையும், இளம்பிறைச்
சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத் தையும் உடைய
சிவபெருமானின் திருமகனும், அறிவுக் கொழுந்தாக
உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன்
திருவடிகளையும் போற்றுகின்றேன்.

திருச்சிற்றம்பலம்
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

( தெரிந்து கொள்க)
தினமும் நமக்கு உரிய உணவு கிடைக்கும் போது, அதை
நன்றி சொல்லி உட்கொள்வது நம் மரபு தினமும் நாம்
உணவருந்துவதற்கு முன்பு ஒரு முறையாவது பாடுவது
சிறப்பு.

You might also like