You are on page 1of 3

ஆயுளும் ஆரோக்யமும்

2018 – ஜூலை 27,28,29-ம் தேதி மைசூரில் நடைபெற்ற அரிமாக்களின் PST


பயிற்சி முகாமில் “LEADERSHIP SYMPOSIUM” Ln.டாக்டர் A.ராமலிங்கம் அவர்கள்
ஆற்றிய உரை.

நம் எல்லோருக்கும் ஒரே ஒரு ஆசை உண்டு. நோய் நொடியில்லாமல்


ஆரோக்யமாக நூறாண்டு காலம் வழ வேண்டுமென்பதே அது.அதற்காக நாம்
மிகவும் மெனக்கெட்டு பிரியத்னப்பட்டு எவ்வளவோ காரியத்தை செய்து
வருகிறோம்.அதாவது தலைக்கு சாயம் (HAIRDYE) பூசிக்கொள்வதும், மொத்த
பல்லையும் பிடுங்கி போட்டு விட்டு புதிய பல்செட் கட்டிக் கொள்வதும்,
தலைக்கு “விக்” வைத்துக் கொள்வதும், முகத்தில் தோலில் சுருக்கம்
விழாமல் இருக்க கண்ட கண்ட களிம்புகளை (CREAM) வாங்கி பூசிக்
கொள்வதும் இப்படி எவ்வளவோ செய்கிறோம். ஆனால் இவைகளால் பயன்
ஏதும் இல்லை தொல்லையே. ஆனால் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம்.
உண்மையில் நோய் நொடியின்றி நூறாண்டுகாலம் வாழ – ஆரோக்யமாய்
வாழ – இளமையாய் வாழ – நம்முன்னோர்கள் அதிலும் குறிப்பாக பதினெண்
சித்தர்கள், ஒவ்வைபிராட்டி போன்ற தமிழ்புலவர்கள் அய்யன் திருவள்ளுவர்
போன்றோர் மிக எளிமையாக சொன்னதை கடைப்பிடிக்க மறந்து
விடுகிறோம். அவை நினைவுக்கு வந்தாலும் “கண்டதே காட்சி-கொண்டதே
கோலம்” என வாழ்ந்து அவர்களின் அறிவுரையை அலட்சியபடுத்தி
விடுகிறோம். ஆண்டுதோறும் நமது அரிமா சங்கத்திற்கு தலைவராக –
செயலாளராக – பொருளாளராக பதவியேற்றுக் கொள்ளுங்கள் என்றால்
அய்யயோ எனக்கு நீரிழிவு – சர்க்கரை (Diabetes) இருக்கிறது, எனக்கு இரத்த
அழுத்தம் (BP) இருக்கிறது, எனக்கு மூட்டு வலி ஆர்த்ரைடிஸ் (RHEUMATISM)
இருக்கிறது என்றெல்லாம் காரணத்தை கூறுகிறோம். சேவை செய்வதை
தள்ளிப்போட இத்தனை காரணங்களைத் தேடும் நாம் – இந்நோய்களெல்லாம்
வராமல் இருக்க வழி என்ன என்பதை ஆராய்வதில்லை.

ஒவ்வைபிராட்டி எளிமையாக சொன்னார்கள் வைகைறைத் துயில் எழு


– நொறுங்கத் தின்றால் நூறு வயது – சனி நீ ராடு – இடையில் குளியேல்
கடையில் மறவேல் – பெண்டிற்கழகு உண்டி சுருங்குதல் – என்றெல்லாம்
சொன்னார். இதனையே நமது தெய்வப்புலவர் வள்ளுவப் பெருந்தகை தனது
திருக்குறள் மருந்து என்னும் அதிகாரத்தில் 10 குறட்பாக்களில் மிக
எளிமையாக “உணவே மருந்து மருந்தே உணவு” என்றார். இன்னும் சற்று
விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் நோய் நொடியில்லாமல் நூறாண்டு
ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று பதினெண் சித்தர்களில் ஒருவரான
தேரையர் தனது “தேரன் பிணி அணுகா விதி” –எனும் நூலில் அவர்கூறும்
வழியில் வாழ்ந்தால் எமனுக்கு நம்மிடம் வேளை இல்லை என்கிறார்.

சித்தர்கள் கூறிய ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையான பல


விஷயங்களில் நம் உடலில் உள்ள பதினான்கு வேகங்களும் ஒன்று.
வேகங்கள் என்றால் ஆங்கிலத்தில் கூறப்படும் SPEED என்ற பொருளில்
எடுத்துக் கொள்ளக்கூடாது. உந்து சக்தி FORCE என்ற பொருளில் கருத்தில்
கொள்ளவேண்டும். நம் உடலில் எழும் வேகங்கள் எனும் உந்து சக்தியை
சித்தர்கள் 14 வகையாகப் பிரித்துள்ளனர். இந்த பதினான்கு வகை வேகங்களை
அடக்கினால் நோய் உண்டாகும் என்கின்றனர். அந்த 14 வேகங்கள் என்ன
என்பதை ஒரு சித்தர் பாடல் மூலம் அறியலாம்.

“ பதினான்கு வேகப் பேர்கள்

பகர்ந்திட அவற்றைக் கேளாய்

விதித்திடும் வாதத் தும்மல்

மேவுநீர் மலங்கொட் டாவி

கதித்திடு பசிநீர் வேட்கை

காசமோ டிளைப்பு நித்திரை

மதித்திடு வாந்தி கண்ண ீர்

வளர்சுக்லஞ் சுவாச மாமே”

சித்தர்கள் கூறும் 14 வேகங்கள் என்னென்ன?

1.வாதம் வாய்வு(கீ ழ்க்காற்று), 2.தும்மல், 3.சிறுநீர், 4.மலம், 5.கொட்டாவி, 6.பசி,


7.நீர் வேட்கை(தாகம்), 8.காசம் (இருமல்), 9.இளைப்பு, 10.நித்திரை (தூக்கம்),
11.வாந்தி, 12.கண்ண ீர், 13.சுக்கிலம், 14.சுவாசம் ஆகியன இவற்றை
அடக்கக்கூடாது.மேற்கண்ட இயற்கை உபாதைகளை அடக்கினால்
என்னென்ன நோய்கள் வரும் என்பதை அழகாக விவரிதுள்ளார்கள்.

ஒவ்வைப்பிராட்டியும் சொன்ன படியும் வள்ளுவர் கூறும் வழிமுறைகள்


படியும் நம் வாழ்க்கை முறையையும் – உணவு முறையும் கடை
பிடித்தோமானால் நமக்கு நோய் என்பதே இல்லை. நரை-திரை-பிணி-மூப்பும்
இல்லை. அவர்கள் கூறும் நாள் ஒழுக்கம் என்பதும் மிகவும் முக்கியமானது.
அதிகாலை துயில் எழுந்ததுலிருந்து இரவு படுக்க செல்லும் வரை நமது
வாழ்க்கை முறை “LIFE STYLE” எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம்
வகுத்துக் கொடுத்துள்ளார்கள். உதாரணமாக சூரியன் நம்மைப் பார்க்கக்
கூடாது. நாம்தான் அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து
சூரியனை வணங்கவேண்டும்.இதனால் நமது ஐம்புலன் கூறும் ஆற்றல்
பெறுகின்றன. அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி – உடற்பயிற்சி முடித்து
யோகாசனம் – பிறகு மூச்சுபயிற்சி – பிராணாயாமம் –அதன்பிறகு சிறுது நேரம்
நமது அரிமாசங்க நிர்வாகிகள் – உறுபினர்களுடன் தொலைபேசியில் அன்றாட
சங்கப் பணிகள் குறித்து உரையாடல் – என்ன பொருளில் உரையாடல்
என்பதை முதல்நாள் இரவு படுக்குமுன்பே குறிப்பெழுதி வைத்துக் கொள்வது
நலம்.

இதை நாம் நம் வாழ்வில் அன்றாடம் நாள் ஒழுக்கமாக கடை


பிடித்தோமானால் நம்வாழ்வில் ஆரோக்கியமும் – வெற்றியும் உறுதி. நலமும்
நன்றாக இருக்கும். அரிமா சங்கத்தில் நமது சேவையும் நன்றாக
வெற்றியடையும் – தொடரும். இதன்படி இன்று முதல் நம் வாழ்வை
அமைத்து நோயற்ற வாழ்வு வாழ்ந்து – ஆரோக்கியமாக நூறாண்டு
இளமையுடன் இருப்போம்.

You might also like