You are on page 1of 1

யார் தமிழ்ப் படிப்பார் !

தமிழ்மாணவரே தமிழ்மாணவரே ; தமிழைப் படிக்கத் தயங்குகின்றீரே

தமிழைத் தமிழ்மாணவர் படிக்காமல் ; இமிழ்கடல் உலகில் எவர்ப்படிப் பாரே!

தாய்மொழி நமக்குத் தமிழ்மொழித்தேனே ; தாய்நலங்காப்பது சேய்கடன் தானே

ஓறாண்டல்ல ஈராண்டல்ல ; ஆறாண்டாக அடிப்படைக் கல்வி

அளித்த மொழியின் அருமை மறந்து ; புளித்தது என்று புகல்வதா இன்று!

ஆதியில் அறிவில் உறைத்த தமிழை ; பாதியில் ஏளனப் படுத்தி ஒதுக்கிட

எண்ணும் எண்ணம் எப்படி வந்தது? ; பெற்ற தாயைப் பிள்ளை மறப்பதும்

உற்றதாய் அன்பினை உதறிப் போவதும் ; மற்றவர் நடுவில் மதிப்பை நல்குமா?

கற்றவர் அவையில் கையொலி பெறுமா? ; வறு


ீ குறைந்த வணன்
ீ இவனைக்

கூறுபோட்டுக் கொன்றிட்டாலும் ; தீரா தென்றன் சினம்தீ ராது!

எந்த நாட்டினில் எந்த மொழிதான் ; எவர்க்கும் சோற்றை ஏந்தி வந்து

துவையல் கறியுடன் ஊட்டு கின்றது? ; உழைப்பும் உறுதியும் உள்ளவன் எவனும்

மொழியில் பழியை ஏற்றுவ தில்லை ; தமிழால் தமிழன் தாழ்ந்துபோனானாம்

தமிழ்த்தான் இவனைத் தலையெடுக்காமல் ; தரையொடு தரையாய்ச் சிறைப்படச்

செய்ததாம்

இப்படியா இவன் செப்பித்திரிவது ; ஒப்பிடும் செய்தியா அப்படிச் சொல்வது?

You might also like