You are on page 1of 2

தொழிலாளர்களின் கவனத்திற்கு

பெசாரஸ் ஆல்ஃபா ட்ரைவ்ஸ் நிர்வாகம் நமது தொழிற்சாலையில் ஆலோசனை வழங்கும்


திட்டத்தை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது.

தொழிலாளர் ஈடுப்பாட்டை ஊக்குவித்து ஒரு நிறுவனம் தன்னுடைய குறிக்கோள்களை


வெற்றிகரமாக அடைவதும், படைப்புத் திறன் (creativity) உள்ள தொழிலாளர்களை அடையாளம்
கண்டு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் அவர்களை பயன்படுத்திக் கொள்வதும்
இந்த ஆலோசனை வழங்கும் திட்டத்தின் நோக்கமாகும்.

தொடர்ந்து புதுமையான யோசனைகளை இனம் கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம்


நமது வியாபாரத்தை மேலும் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நமது நிர்வாகம்
கருதுகிறது.

இதற்காக தொழிலாளர்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

ஆலோசனை கொடுப்பவர்களின் கவனத்திற்கு:

1. மேனேஜர்கள் தவிர அனைத்து தொழிலாளர்களிடம் இருந்தும் ஆலோசனைகள்


வரவேற்கப்படுகின்றன.
2. அனைத்து துறைகளில் இருந்தும் ஆலோசனைகள் பெறப்படும்.
3. ஒருவர் எத்தனை ஆலோசனைகள் வேண்டுமென்றாலும் தரலாம்.

எது சிறந்த ஆலோசனை?

நடைமுறைபடுத்தக்கூடிய மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் அனைத்து


ஆலோசனைகளும் சிறந்த ஆலோசனைகளாக கருதப்படும்.

சிறந்த ஆலோசனைக்கு உரிய வெகுமதிகள் வழங்கப்படும்.

உங்கள் ஆலோசனைகள் கீ ழ்க்கண்டவைகளை குறித்து இருக்கவேண்டும்.

1. உற்பத்தித் திறனை அதிகரித்தல் (Increasing Productivity)


2. உற்பத்தி செலவை குறைத்தல் (Reducing Production Cost)
3. சைக்கிள் டைம், செட்டிங் டைமை குறைத்தல் (Reducing Cycle Time & Setting Time)

Page 1 of 2
4. இன்ஸ்ப்பெக்க்ஷன் டைமை குறைத்தல் (Reducing inspection Time)
5. செயல்முறையை நிர்ணயித்தல் (Process Standardisation)
6. டூல்ஸ் மற்றும் ஃபிக்சர்களை மேம்படுத்துதல் (Improvement of tools and fixtures)
7. வணானவைகளை
ீ தவிர்த்தல் (Wastage elimination)
8. உற்பத்தி பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல் (Quality Improvement)
9. உற்பத்தி பொருட்களின் குறைகளை தவிர்த்தல் (Defect Prevention)
10. ஆப்பரேட்டர் மற்றும் பொருட்களின் தேவையற்ற போக்குவரத்துகளை குறைத்தல்
(Unwanted Transportation)
11. உற்பத்தித் திறன் பாதிக்காமல் ஆப்பரேட்டர் சுமைகளை குறைத்தல் (Reducing Operator
Strain)
12. மின்சாரம், தண்ண ீர் மற்றும் இதர வளங்களை உரிய வகையில் பயன்படுத்துதல் (Proper
Resource Utilisation)
13. உற்பத்தி பொருட்களின் தேவையற்ற இருப்பை குறைத்தல் (Inventory Reduction)
14. மூலப்பொருட்களின் சேமிப்பு (Raw material Savings)
15. மதிப்பளிக்காத வேலைகளை தவிர்த்தல் (அல்லது) குறைத்தல் (Reduce or eliminate Non-
value added activities)
16. விபத்துக்களை தவிர்த்தல் (Accident Prevention)
17. புதுமையான திட்டம் (Innovative idea)

ஆலோசனை படிவங்களை திரு. டேனியல் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்

தேதி : 13.06.22 நிர்வாகத்திற்காக

Page 2 of 2

You might also like