You are on page 1of 4

ஸ்ரீராமஜெயம்.9788968519.

வாட்ஸ் அப்

பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் பலவனமாக


ீ இருக்கும் பொழுது,71/2 சனியில்,
ஜென்மச்சனி கடுமையாக பாதிக்குமா? அதுபோல் உடைபட்ட நட்சத்திரத்தில்,
ஒருவரின் ஜென்ம ராசி இருந்தாலும் ,ஜென்மச்சனி கடுமையாக பாதிக்குமா?

(நேற்று பேசிய வாசகரின் கேள்விக்கு பதில் )

ஆம். பாதிக்கும்.அதற்கான விளக்கம்

சனிபகவான், எதிர்மறை குணங்கள் அனைத்தையும் தன்னகத்தே


வைத்திருக்கும் ஒரு கிரகம்.

உயிரும்,உடலும் இணைந்து தான் மனித சரீரத்தை இயக்க முடியும் என்பதால்,


உயிர் என்பது ஆத்மாவான சூரியன். உடல் என்பது சந்திரன்.

அதுபோல் ஆன்ம பலத்தை கொடுக்க கூடிய கிரகம் சூரியன்.

மனோபலத்தை கொடுக்கக் கூடிய கிரகம் சந்திரன்.

சூரியன் ,சந்திரனுக்கு சனி கடுமையான பகை கிரகம்.

உயிராகிய சூரியன் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் உயிர் இல்லை


என்றால் உடலுக்கு மதிப்பு இல்லை.

உடலாகிய சந்திரனை வைத்து தான் ,மற்ற இயக்கங்கள் அனைத்தும்


நடைபெறுகின்றன.

அதாவது கட்டளையிடுவது சூரியன். களத்தில் இறங்கி பணி செய்வது சந்திரன்


அப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.
பணியாளை நாம் எளிதாக சந்திக்க முடியும் .ஆனால் ஓனரை சந்திக்க
முடியுமா? அவ்வளவு எளிதாக நடக்காது.

சனி ஒரு ஜாதகத்தில், கோட்சாரத்தில், ராசியின் மீ து பயணமாகும் பொழுது,


தன்னுடைய எதிர்மமறைப பலன்களை அங்கு அளவில்லாமல் அளிக்கும்.

மனோகாரக கிரகமான சந்திரன் மீ து, சனி வரும் காலமே கோட்சாரத்தில்


ஜென்ம சனி என்று அழைக்கப்படுகிறது.

சந்திரன் சுய தன்மையற்று, சூரியனிடமிருந்து ஒளியைப் கடன்வாங்கி


பிரகாசிக்கும் கிரகம்.

அதுபோல் பாவ கிரகங்களின் தொடர்பை சந்திரன் பெறும் பொழுது,


பாவகிரகங்களின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டே செல்ல வேண்டியிருக்கும்.

பிறப்பு ஜாதகத்தில் சந்திரன், தேய்பிறைச் சந்திரனாக இருந்தாலும், சனியோடு


இணைந்து இருந்தாலும், ராகு, கேதுவுடன் நெருக்கமாக இணைந்து கிரகணம்
ஆகியிருந்தாலும், (அமாவாசை அமைப்பில் இருந்தாலும், இதைப் பற்றி
அடுத்த பதிவில் ஒரு பதிவு போடுகிறேன்), சனி செவ்வாயின் நேரடிப்
பார்வையில் இருந்து, சந்திரன் பலவனப்
ீ பட்டாலும், ஜென்மச்சனி வரும்
காலகட்டங்களில்,அந்த நேரத்தில், சுய ஜாதகத்தில் தசாபுத்திகள் மாறுபட்ட
அமைப்பில் இருந்தால்

மிக மிகக் கடுமையான பலனாகத்தான் இருக்கும்.

ஓஹோவென்று ஒபாமாவைப் போல் இருந்தவர்கள், ஒரே நாளில் தெருவிற்கு


வருவதெல்லாம் இது போன்ற அமைப்பில் தான்.

சுய ஜாதகத்தில் பலவனப்பட்ட


ீ சந்திரனுக்கு குரு பார்வை அல்லது வேறு
ஏதாவது சுப கிரக பார்வைகள், எந்த அளவுக்கு சுபமாக கிடைக்கிறது என்பதைப்
பொறுத்து, பலன்களில் ஏற்ற இறக்கம் உண்டு.
சுய ஜாதகத்தில் வேறு சுபகிரக பார்வை இன்றி, முழுவதுமாக சந்திரன் கெட்டு
இருந்தால் ,நம்மை ஏழரைச் சனியில் மிக மிக கஷ்டப்படுத்தாமல் செல்லாது.

அதுபோல்

அதுபோல் உடைபட்ட நட்சத்திரம் என்பது மூன்று கிரகங்களின்


நட்சத்திரங்களுக்கு மட்டுமே வரும்..

சூரியன் ,செவ்வாய் ,குரு.

தலையற்ற ,உடல் அற்ற

வால் அற்ற நட்சத்திரங்கள் என்று இவற்றை அழைப்பார்கள்.

உதாரணமாக மேஷ ராசியில் சூரியனின் கார்த்திகை 1-ஆம் பாதம் மட்டும்


இருந்து,

ரிஷபத்தில் கார்த்திகை இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம் ,நான்காம் பாதம்


இருப்பதால் சூரியனுடைய நட்சத்திரங்கள் காலற்ற எனப்படும்.

செவ்வாயின் உடைய நட்சத்திரங்கள், ஒரு ராசியில் இரண்டு


நட்சத்திரங்களும், மற்றொரு ராசியில் இரண்டு நட்சத்திரங்களும் இருப்பதால்,
அவை உடலற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படும்.

குருவினுடைய நட்சத்திரத்தில் மூன்று நட்சத்திரம் ஒரு ராசியிலும்,


மற்றொரு நட்சத்திரம் இன்னொரு ராசியிலும் இருப்பதால் ,அவை தலையற்ற
நட்சத்திரங்கள் எனப்படும்.

ஒரு முழு நட்சத்திரம் உடைபடும் பொழுது அதனுடைய பலன் மாறுபடும்


தானே இருக்கும் அந்த அமைப்பிலும், சூரியனும், செவ்வாயும், சனிக்கு
கடுமையான பகை கிரகம் என்பதாலும், குரு சம அமைப்புடைய கிரகம்
என்பதாலும் ,உடைபட்ட நட்சத்திரத்தை பெற்றவர்களுக்கு, ஏழரைச்சனியின்
தாக்கம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.

அதேநேரத்தில் சுயஜாதகத்தில் ஏழரைச்சனி நடக்கும் பொழுது ,அந்த


நேரத்தில் நடக்கின்ற சுப தசாபுக்தி அல்லது அசுப தசா புத்தியைப் பொறுத்து
பலன்கள் மாறுபடும்.

ஏழரைச் சனி நடக்கும் பொழுது, மனதைக் கட்டுப்படுத்தும், யோகா,தியானம்


போன்றவற்றில் மனதை செலுத்துவது நல்லது.

பௌர்ணமி விரதம் இருப்பதும் , மனம் சலனம் ஆகாமல் பார்த்துக் கொள்ளும்.


மன அழுத்தத்தையும் குறைக்கும்.

ஓம் நமசிவாய

ஜோதிடர் மாரிமுத்து.9788968519.வாட்ஸ் அப்

You might also like