You are on page 1of 2

இன்சூரன்ஸ் வாங்கும் போது இந்த 3 வார்த்தை மந்திரத்தை சொல்லுங்க!

அதுக்கப்புறம் ஒரு
ரூபாய் கூட நஷ்டமாகாது!
நீங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் வாங்கப்போகிறீர்களா? அப்பொழுது ஒரு இன்சூரன்ஸ்
போட்டு தரும் நபரிடம் சொல்வதற்கான ஒரு 3 வார்த்தை மந்திரம் இருக்கிறது. இதைச்
சொல்லிவிட்டால் வாகனம் வாங்கிய பின்பு எந்த விதமா பிரச்சனையும் இல்லாமல் இன்சூரன்ஸ்
கிளைம்களை பெற முடியும். இந்தியச் சாலையில் ஒருவர் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால்
அவர் அந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டப்படி
வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டாயம். இன்சூரன்ஸ் இல்லாமல் ஒரு வாகனம் இயங்குகிறது
என்றால் அந்த வாகனம் சட்ட விரோதமாக இயங்குவதாகக் கருதப்படும். இப்படியாக
இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பார்கள்.
ஒரு வாகனத்திற்கு இன்சூரன்ஸ் தான் காப்பு, ஒரு வாகனம் தொலைந்துவிட்டாலோ
அல்லது விபத்தில் சிக்கிவிட்டாலோ அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை இந்த
இன்சூரன்ஸ் தான் ஈடு செய்யும். இது எல்லாம் நமக்குத் தெரிந்தது தான் ஆனால் உண்மையில்
ஒரு வாகனம் விபத்தில் சிக்கிவிட்டால் இன்சூரன்ஸ் கிளைம் செய்யச் செல்லும் போது தான்
இதில் அது இல்லை இது இல்லை அதனால் இன்சூரன்ஸ் கோ முடியாது என பல விஷயங்களை
உங்களுக்குப் புதிதாகச் சொல்லுவார்கள்.
ஆனால் நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதைப் பற்றி எல்லாம் உங்களுக்குச்
சொல்லியிருக்கவே மாட்டார்கள். அதனால் நீங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸை வாங்கும்
போது எதில் கவனமாக இருக்க வேண்டும். இன்சூரன்ஸில் உங்களுக்கு ஏற்படும் நஷ்டம்
முழுவதையும் ஈடு செய்ய எப்படிப்பட்ட இன்சூரன்ஸை தேர்வு செய்ய வேண்டும் என்பதைத்
தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம். இந்திய மோட்டார் வாகன சட்டப்படி 3 ம்
நபருக்கான இன்சூரன்ஸை உங்கள் வாகனத்திற்கு எடுத்தால் மட்டும் போதும். அது மட்டுமே
கட்டாயம். மற்ற இன்சூரன்ஸ்கள் எல்லாம் கட்டாயம் கிடையாது. உங்களுக்கு விருப்பப்பட்டால்
எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதுமாக ஈடுபட்ட
தற்போது நீங்கள் சில அட் ஆன்களுடன் இன்சூரன்ஸை எடுத்து வைத்துக்கொள்வது சிறந்தது.
இப்படியாக 3 அட் ஆன்கள் மிகவும் முக்கியம். நீங்கள் உங்கள் வாகனத்திற்கு இன்சூரன்ஸ்
வாங்கப்போகிறீர்கள் என்றால் இன்சூரன்ஸ் போடும் நபரிடம் இந்த 3 வார்த்தை மந்திரத்தை
மட்டும் சொல்லுங்கள்.
ஜீரோ டிப்ரிஸியேஷன்,
இன்ஜின் புரோடெக்ட்,
இன்வாய்ஸ் புரோடெக்ட்
இந்த மூன்று வார்த்தை தான் அந்த மந்திரம். இந்த இதற்கான விளக்கத்தை
ஒவ்வொன்றாகக் காணலாம். ஜீரோ டிப்ரிஸியேஷன் இன்சூரன்ஸ் எடுக்கும் போது நாம் முதலில்
பார்க்க வேண்டியது, இதை தான். உங்கள் இன்சூரன்ஸில் இந்த வசதி இருந்தால் உங்கள் காரில்
ஸ்கிராட்ச்கள், அல்லது கோடுகள் ஏதாவது இருந்தால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
அதைச் சரி செய்வதற்கான செலவை இன்சூரன்ஸ் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும். அதே போல்
உங்கள் வாகனத்தின் உதிரி பாகங்கள் ரிப்பேர் ஆனாலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதைச் சரி
செய்யும் செலவு அல்லது அதை மாற்றும் செலவையும் ஏற்றுக்கொள்ளும். இந்த இன்சூரன்ஸை
எடுப்பது மூலம் நீங்கள் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தலாம். இன்ஜின் புரோடெக்ட் காருக்கு
இன்ஜின் என்பது இதயம் போன்றது. இன்ஜின் மட்டும் நின்றுவிட்டால் காரே இயங்காமல்
போய்விடும். இன்ஜினில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை சரி செய்ய ஏராளமான பணம்
செலவாகும். அதனால் இன்ஜினிற்கு பாதுகாப்பு அவசியம். உங்கள் இன்சூரன்ஸில் இன்ஜின்
புரோடெக்ட் வசதி இருந்தால் உங்கள் காரின் இன்ஜின் பாதிக்கப்பட்டால், அதைச் சரி
செய்வதற்கான செலவை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இந்த அட் ஆன் செலவு
குறைவுதான் ஆனால் பாதிக்கப்பட்டால் கிடைக்கும் பலன் அதிகமாக இருக்கும். இன்வாய்ஸ்
புரோடெக்ட் இந்த இன்சூரன்ஸ் மிகவும் முக்கியம். பலருக்கு இந்த இன்சூரன்ஸ் குறித்த விரிவான
விபரங்கள் தெரிவதில்லை. நீங்கள் வாங்கிய வாகனம் தொலைந்துவிட்டாலோ அல்லது ஏதாவது
விபத்து அல்லது இயற்கை பேரிடரில் சிக்கி வாகனம் முழுவதும் ரிப்பேர் ஆகிச் சரி செய்ய
முடியாத நிலைக்குச் சென்றுவிட்டாலோ நீங்கள் வாகனம் வாங்கிய காசு முழுவதும் உங்களுக்குக்
கிடைத்துவிடும். இந்த வாகனத்தால் உங்களுக்கு எந்த விதமான நஷ்டமும் ஏற்படாது. இந்த
திட்டத்திற்கு ஆர்டிஐ (ரிட்டர்ன் டூ இன்வாய்ஸ்) என்ற ஒரு பெயரும் உண்டு

You might also like