You are on page 1of 1

Blue print தேவை.

முன்னர் ஒரு மாவட்ட த்தைச் சார்ந்த தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு


பாடங்களை முழுவதும் நடத்தாமல் பாஸாகத் தேவையான சில எளிய பாடங்களை மட்டுமே
குருட்டுத்தனமாக மனனம் செய்வித்து தேர்வில் வாந்தி எடுக்க வைத்து 100 சதவீத தேர்ச்சி என
விளம்பரம் செய்து வந்தார்கள்.
கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெறக்கூடிய எளிய பாடங்களின்
இறுதியில் உள்ள வினாக்களுக்கான விடைகளை நூறு முறை எழுதவைத்து புரிந்து கொள்ளாமல்
மனனம் செய்யவைத்து அந்த பாடங்களில் நூற்றுக்கு நூறு வாங்க வைத்தார்கள்.
இதனால் மாநில அளவில் முதல் இடத்தை பலர் பெற்றாலும் மேற்படிப்புகளில் பல்கலைக் கழகத்
தேர்வுகளில் தோல்வியுற்று விபரீத முடிவுகளை எடுத்தனர்.

இதற்காகத்தான் Blue print முறையும் மதிப்பெண் வழங்கும் முறையும் தடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது ஐம்பது சதவீதம் புத்தகத்தின் உள்ளே இருந்தும் புத்தகத்திற்கு வெளியேயும்


வினாக்கள் கேட்கப்படும் முறை அமல்படுத்தப் பட்டுள்ளது.
இப்போது புரிந்து கொள்ளாமல் மனனம் செய்தாலும் நூற்றுக்கு நூறு வாங்க கண்டிப்பாக முடியாது.

எனவே தற்போது Blue print தேவை. Blue print தேவை. Blue print தேவை. அப்போதுதான் சராசரி
ஆர்வம் கொண்ட மாணவர்களும் அச்சமின்றி தேர்வினை எதிர்கொள்வர். தேர்ச்சி திண்ணம்
எனும்போது படிப்பை பாதியில் நிறுத்தாமல் ஊக்கத்துடன் கற்பர்.

You might also like