You are on page 1of 153

நிலாக் காயும் நேரத்திலே -1

ஏப்ரல் 08, 2021

முத்துலட்சுமி ராகவன் எழுதிய

நிலாக் காயும் நேரத்திலே...

 
          
ஆசிரியர் கடிதம்...

 
 
மனம் விட்டுப் பேசலாமா..?

 
என் பிரியத்துக்குரிய வாசக... வாசகிகளே...!

 "உங்களின் எழுத்துக்களைப் பற்றி நீங்கள் என்ன


நினைக்கிறீர்கள்..?" என்று ஒரு வாசகி கேள்வி கேட்டார்..

"இதைவிடவும் அருமையான, மிகச் சிறந்த எழுத்துக்களை நான்


படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.." என்று நான் பதில்
சொன்னேன்..

உண்மைதான்.. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து புத்தகக்


குவியல்களின் மத்தியில்தான் நான் இருந்திருக்கிறேன்.. 

அருமையான கதையம்சம் கொண்ட புத்தகங்களை விட மிகச் சிறந்த


துணை வேறெதுவுமில்லை..

நடுக்கடலில் ஆளேயில்லாத தீவில் புத்தக மூட்டைகளுடன் விட்டு


விட்டால் அங்கே தனிமையின் பயம் அண்டாது.

எனது பெற்றோர் வாசிக்கும் பழக்கமுடையவர்கள்.. 

அதிலும் மாறுபட்ட ரசனை கொண்ட வாசிப்புக்கள் அவர்களுடையது. 

எனது அப்பாவுக்கு சாண்டில்யனின் கதைகள்தான் பிடிக்கும்.. 


குமுதத்தில் தொடர்கதைகளாக வந்த யவனராணி, கடல்
புறா, ராஜமுத்திரை என்று பல கதைகளைத் தொடர்ந்து கிழித்து எடுத்து
பத்திரப் படுத்தி பைண்டிங் பண்ணி வைத்திருப்பார்.. 

குமுதத்தில் வந்த பிற தொடர்கதைகளையும் பைண்டிங்குகளாக நான்


படித்திருக்கிறேன்.. 

அந்தக் காலத்திய எண்ணவோட்டத்தை அந்தக் கதைகளின் பின்


பக்கங்களில் வரும் சினிமா விமரிசனம், நகைச்சுவைத் துணுக்கு
முதலியவை பிரதிபலிக்கும்.. அதைப் படிக்க எனக்குப் பிடிக்கும்.. 

ஐந்து பைசா அம்மு அப்படிப் படித்ததுதான்.. இப்போது ஐந்து பைசாவே


இல்லை..

அம்மாவின் ரசனை வேறு விதமானது. 

அவர்கள் அமுதசுரபி, கலைமகளின் வாசகி, 

மு.வரதராசனின் நெஞ்சில் ஒரு முள்ளை எனக்கு


அறிமுகப்படுத்தியவர்.. 

ரா.ஜி ரங்கராஜனின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பவர்.. படகு வடு



கதையின் பைண்டிங் எங்கள் வட்டில்
ீ இருந்தது.. எஸ்.ஏ.பியின்
பலகதைகள் அப்படிப் படித்தவைதான்..

கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின்


சபதம், அலைஓசை, முதலிய கதைகள் பைண்டிங் செய்யப் பட்டு
எங்கள் வட்டு
ீ புத்தக அலமாரியை அலங்கரித்திருந்தன.. 

மணியம் செல்வனின் காலத்தால் அழியாத கை வண்ணத்தில்


குந்தவையும், நந்தினியும், பூங்குழலியும், வானதியும் அவரவருக்கான
பிரத்யேக அடையாளமான தலையலங்காரத்துடன் என் கனவில் வந்து
போவார்கள்.

அது ஒரு காலம்..! மொட்டை மாடிப் படிகளின் அடியில் எவர்


கண்ணிலும் படாமல் புத்தகங்களின் மத்தியில் வாழ்ந்த காலம்..!

ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகனையும், வியாசர் விருந்தையும்


எண்ணற்ற முறை படித்திருக்கிறேன்.. 
விக்ரமாதித்தன் கதைகளை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன்..
மலைக்கள்ளன் பிரதாப முதலியாரின் சரிதம் என்று எதையும் விட்டு
வைக்கவில்லை..

காமிக்ஸ் உலகம் என்று ஒன்று உண்டு.. முத்து காமிக்ஸ், ராணி


காமிக்ஸ், லயன்ஸ் காமிக்ஸ் என்று பலதரப்பட்ட காமிக்ஸ் கதைகளில்
என் அண்ணனும் நானும் ஆழ்ந்திருப்போம்.. இரும்புக்கை
மாயாவி, மாடஸ்டி பிளைசி என்று அதன் கதைகளின்
நாயக, நாயகியரின் சாகசத்தில் எங்களை மறந்திருப்போம்..

என் அண்ணனின் மறைவிற்குப் பின்னால் காமிக்ஸ் படிப்பதை


நிறுத்திவிட்டேன்.. இன்றும் என் மனதில் இரும்புக்கை மாயாவியின்
கதைக்கான தேடல் உண்டு.

மகரிஷியின் எழுத்துக்கள் தனி விதம்.. 

மிக அருமையான கதைகளைக் கொடுத்த எழுத்தாளர்.. தி.


ஜானகிராமனின் மோகமுள் படிப்பவர்களின் மனங்களில் நெருஞ்சி
முள்ளாக நெருடும் நுட்பம் வாய்ந்தது. 

லா.ச.ராவின் எழுத்துக்கள் புரிபடாத நுண்ணிய உணர்வுகளைக்


கொண்டு நெய்யப் பட்டவை.. 

புரிய முயன்றால் மூச்சுத்திணறும்.. 

புரியவில்லை என்று விலகி ஓடவிடாமல் அவரின் எழுத்துக்கள் சிந்தா


நதிச் சுழல் போல உள்ளே இழுக்கும்..

மௌனியின் எழுத்து மௌனராகம் போன்றது. மனதுடன் அது பேசும்..

வாஸந்தி, ராஜம் கிருஷ்ணன் என்று நான் தேடித் தேடிப் படிக்கும்


எழுத்தாளர்களின் எழுத்துக்கள் குவிந்து கிடக்கின்றன..

இவையே இலக்கியம்..! மனிதரின் வாழ்வியல் பற்றிய கதைகளை


மனதுடன் உறவாடிக் கதை சொல்பவர்களே இலக்கிய வாதிகள்..! 

மனதில் ஆணியடித்து குருதி கொப்பளிக்க வைத்து மனச் சிதைவை


ஏற்படுத்தும் எழுத்துக்கள் இலக்கியமல்ல.. அதை எழுதுபவர்களும்
இலக்கியவாதிகள் அல்ல..
என் கதைகளைப் படிப்பவர்கள் செலவளிக்கும் மணித்துளிகளுக்கு நான்
ஆற்ற வேண்டிய கடமை யாதெனில் அந்த மணித்துளிகளுக்கான
மனநிறைவை அவர்களுக்கு அளிப்பது. 

என்னைப் பொறுத்தவரை இதுவே இலக்கியம்..! 

படித்தவர்களையும் தாண்டி பாமர மக்களுக்கும் புரியும்படி கதை


சொல்வதுதான் மிகச் சிறந்த இலக்கியம்..! 

நான் படித்த, பண்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எனக்கு


போதித்திருப்பது இதைத்தான்.. 

இனிவரும் எழுத்தாளர்களுக்கு நான் போதிப்பதும் இதைத்தான்..

வாருங்கள்.. நாம் கதை சொல்லிகளாக இருப்போம்.. அறிவு ஜீவி


பட்டம் நமக்குத் தேவையில்லை..

 
- நட்புடன் -

முத்துலட்சுமி ராகவன்

 
 
 
 
கவிதை சொல்லவா..?

 
சுட்டெரிக்கும் நிலா முற்றம்...

 
நிலாக் காயும் நேரத்திலே..

     நீயும் என்னைத் தேடி வந்தாய்..

கூடிக் களித்திருந்தோம்..

     பாடிப் பறந்திருந்தோம்..

விடியலிலே எனை விட்டுப்

     பிரிந்து பறந்து சென்றவளே..!


விடியல் தேடி காத்திருக்கிறேன்..

     வெந்நிலவே..! வந்து விடு..

நீயில்லாத நிலாமுற்றம்..

     வெம்மைகொண்டு எரிக்குதடி..

நீயும் வந்து சேர்ந்து விட்டால்..

     நிலாவெளியில் குளிர் காய்வோம்..

 
- முத்துலட்சுமி ராகவன்

 
 
 
 
 
 
 
 
1

 
மங்கலகரமான நாதஸ்வரத்தின் இனிமையான நாதம் திருமண
மண்டபத்தை நிரப்பியிருந்தது.. 

குண்டூசி விழக்கூட இடமில்லாமல் கூடியிருந்த ஜனத்திரளில்


மீ ராவுக்கு மூச்சு முட்டியது.. 

இத்தனை ஜனத்திரளை இதற்கு முன்னால் அவள் கண்டதில்லை..

அவள் வளர்ந்த விதமே வேறு.. 

என்ஜினியர் அப்பாவுக்கும் பேங்கில் வேலை பார்க்கும் அம்மாவுக்கும்


மகளாகப் பிறந்தவள்.. 

நாம் இருவர், நமக்கு இருவர் என்று நால்வராக வாழ்ந்த குடும்பத்தின்


அங்கம்.. 
அவளுடைய தாத்தா பாட்டிமார்களும் நகரத்திலேயே வசித்ததினால்
கிராமத்தின் சாயலைப் பற்றிக் கொஞ்சம் கூட அறியாதவள்.. 

அளந்து பேசும் வழக்கமுடையவளுக்கு மூச்சு விடாமல் பேசித்


தள்ளும் கிராமத்து ஜனங்களின் வாஞ்சை புதிதான ஒன்றாக இருந்தது.

"பொண்ணை அழைச்சுட்டு வாங்க.."

கர்ஜனை போல வந்த குரலில் தாயின் கையை இறுக்கிப் பிடித்துக்


கொண்டாள்.. 

மகளின் விரல்கள் நடுங்கியதை புரிந்து கொண்டவளாக கையை


அழுத்திப் பிடித்து ஆறுதல் படுத்தினாள் சுமதி.. 

தாயின் கரத்தின்மீ து தலை சாய்த்துக் கொண்ட மகளின் முடிகோதி


காதருகே தைரியம் சொன்னாள்..

"ஈஸி மீ ரா..! என் மேரேஜப்ப நானும் இதைப் போலதான் ஃபீல்


பண்ணினேன்.. அப்பா எவ்வளவு அருமையானவர்..! நைஸ்
ஜெண்டில்மேன்..! மாப்பிள்ளையும் அப்படித்தான் இருப்பார் பாரேன்..
அப்ப இந்த நடுக்கமெல்லாம் பஞ்சாப் பறந்திரும்.."

இருப்பானா..? 

மீ ராவின் தந்தையான பிரகாசம் கனிவுமிக்கவர்.. மனைவியிடம்


மாறாத காதலை கொண்டவர்.. 

மீ ராவின் கணவனாக வரப்போகும் ரகுநந்தன் அதுபோன்ற காதலுடன்


இருப்பானா..?

பதில் கிடைக்கவில்லை.. 

அவளை பெண் பார்க்க வந்த போது இறுகிய முகத்துடன் எங்கோ


பார்த்துக் கொண்டிருந்தான்.. 

அவள் காபிக் கோப்பைகளைக் கொண்ட டிரேயை அவன் முன்னால்


நீட்டிய போது...

"பெண்ணைப் பார்த்துக்கடா ரகு.. அப்புறமா வட்டுக்கு


ீ வந்து நானெங்கே
பெண்ணைப் பார்த்தேன்னு சொல்லக் கூடாது.. ஆமாம்..
சொல்லிட்டேன்.." என்று குரல் கொடுத்தாள் நந்தினி..
அவள்தான் ரகுநந்தனின் அக்காவாம்.. அம்மாவைப் போல அதட்டிப்
பேசினாள்.. 

ரகுநந்தனின் இன்னொரு அக்காவான ராதிகா நந்தினிக்கு மேல்


இருந்தாள்..

"எதுக்கு நந்தினி தம்பியை மிரட்டற..? அவனுக்குத் தெரியாததையா


நீயும் நானும் சொல்லப் போறோம்..? எல்லாம் அவனுக்குத் தெரியும்..
பேசாம இரு.." என்று நந்தினியையே அதட்டி வைத்தாள்..

தம்பியின் மீ து ஆதிக்கம் செழுத்துவதில் சகோதரிகள் இருவருக்கும்


இடையில் நடந்த போட்டா போட்டியில் ரகுநந்தனைப் பெற்ற
யமுனாவாலேயே வாயைத் திறக்க முடியவில்லை.. 

இந்த லட்சணத்தில் பெண்ணைப் பார்க்க வேண்டிய மாப்பிள்ளையின்


செல்போன் ஒலித்துவிட அவன் காபிக் கோப்பையை எடுத்துக்
கொண்டு வாசல் பக்கம் நகர்ந்து  விட்டான்..

'அவன் என்னைப் பார்த்தானா இல்லையா..?'

மணமேடைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும் மீ ராவின்


மனதை அந்தக் கேள்விதான் குடைந்து கொண்டிருந்தது.. 

அவளும் பலவிதமாக கேட்டுப் பார்த்து விட்டாள்.. தெளிவான


பதில்தான் கிடைத்த பாடாக இல்லை..

"அதெல்லாம் பார்த்திருப்பார்டி.." என்றாள் சுமதி..

"இல்லைம்மா.. அவர் பார்த்த மாதிரி தெரியல.." குழப்பத்துடன்


புலம்பினாள் மீ ரா..

"பார்க்காம எப்படிடீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வார்..?" 

மகளின் குழப்பத்தை பொருட்படுத்தாமல் நகர்ந்து விட்டாள் சுமதி.

மீ ராவின் மனம் சமாதானமாகவில்லை.. 

திருமணநாள் நெருங்க, நெருங்க அவளது அடிவயிற்றில் பய பந்து


உருள ஆரம்பித்தது.

"என்னக்கா நீ.. இப்படி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிற..?" தலையில்


அடித்துக் கொண்டான் அரவிந்தன்.
"எனக்கென்னவோ திக்கு திக்குன்னு இருக்குடா.."

"வெளியில் சொல்லிராதே.. சிரிக்கப் போறாங்க.. உன்னைப் பார்த்தா


கல்யாணப்பெண் போலவா இருக்கு..? என்னதான் பிரச்னை உனக்கு..?"

"சொல்லத் தெரியலைடா.." பரிதாபமாக சொன்னாள் மீ ரா..

அவளுக்கு சொல்லத்தான் தெரியவில்லை.. 

எதை நினைத்து அவள் அஞ்சுகிறாள்..? அதற்கான தேவைதான் என்ன..?

"தாராமங்களத்தின் ஜமீ ன் வட்டில


ீ இருந்து பெண் கேட்டு
வந்திருக்காங்க.."

அக்கம் பக்கம் முழுவதும் சொல்லி மகிழ்ந்து போனாள் சுமதி.. 

அதற்கேற்ப பெண் பார்க்க வந்தவர்கள் பெண்ணைப் பிடித்து விட்டது


என்று வைர அட்டிகையை மீ ராவின் கழுத்தில் போட்டுத்
திருமணத்தை உறுதி செய்து விட்டுப் போனதில் அவளுக்குக் கால்கள்
தரையில் பாவவே இல்லை.. 

இறக்கையில்லாமல் வான்வெளியில் மிதந்தாள்..

"அழகில குறைச்சலா..? படிப்பிலா குறைச்சலா..? பணத்தில


குறைச்சலா..? சொல்லு.." மகளை அதட்டினாள்..

எதிலும் குறைவில்லைதான்.. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று


தெரியாததுதான் குறை.. 

இதைச் சொல்ல முடியாமல் தவித்துப் போனாள் மீ ரா..

"நீ தேவையில்லாம பயப்படறன்னுதான் நான் சொல்வேன்.. ஆள்


பார்க்க ஜம்முன்னு ஹீரோ போல வெரி ஹேண்ட்சம்மா இருக்காரு..
கொழுத்த பணக்காரர் வேற.. இப்படியாப்பட்ட மாப்பிள்ளை உனக்குக்
கிடைச்சிருக்காரேன்னு உன் பிரண்ட்ஸோட காதெல்லாம் புகை வருது..
தீபாக்கா என்கிட்ட புளியங்கொம்பா பிடிச்சிட்டீங்களான்னு பொருமித்
தள்ளுது.. நீங்க போய் வேப்பங் கொம்பத் தேடிப் பிடிங்கன்னு
கடுப்படிச்சுட்டு வந்தேன்.. நீ என்னடான்னா இப்படிப் பயந்துக்கிட்டு
இருக்கிற..?"

அரவிந்தன் கடிந்து கொண்டதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்தது.. 


மீ ராவின் சிநேகிதிகள் அவளைத் தூண்டித் துருவி விசாரிக்கத்தான்
செய்தார்கள்.. 

அவர்களின் கேள்விகளில் அப்பட்டமான பொறாமை வழிந்தோடியது..

"மாப்பிள்ளை ஜமீ ன் வம்சமாமே..?"

"அப்படித்தாண்டி சொல்லிக்கிறாங்க.."

"உங்களுக்குச் சொந்தமா..?"

"தூரத்துச் சொந்தமாம்.."

"கிட்டத்துச் சொந்தத்திலேயே போட்டியிருக்கும்.. தூரத்து சொந்தம்ன்னு


சொல்ற..? எப்படிப் பிடிச்சீங்க..?"

"என்னது..?"

என்னவோ வலை வசி


ீ ரகுநந்தனைப் பிடித்து விட்டதைப் போல
தோழிகள் கேள்வி கேட்டதில் வெகுண்டு போனாள் மீ ரா..

"தப்பாச் சொல்லலைடி.. இந்தக் கல்யாணத்தைப் பேசி முடிச்சது


யாருன்னுதான் கேட்டோம்.."

"என்னோட பேரண்ட்ஸ்தான் பேசி முடிச்சாங்க.."

"அவங்களுக்கு யார் தகவல் சொன்னதாம்..?"

"இதை அவங்ககிட்டத்தான் கேட்கனும்.."

தலைவலி தாங்க முடியாமல் பட்டென பதிலளித்து தோழிகளை


துரத்தி விட்டு தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.. 

அந்தச் சமயம் பார்த்து ஆரவாரத்துடன் வட்டுக்குள்


ீ வந்தார் பிரகாசம்.

"என்னோட சுப்பிரீயரும் நம்ம இனம்தான் சுமதி.. பெருங்கொண்ட


பணக்காரர்.... படித்த படிப்புக்காக வேலை பார்ப்பவர்.. அவருக்கு
ஒற்றைப் பெண்தான்.. நம்ம மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்கனும்னு
யார் யாரையோ பிடித்து பேசிப் பார்த்தாராம்.. சொந்தஊரும் தேனிக்குப்
பக்கதிலங்கிறதினால மாப்பிள்ளையோட குடும்பத்தைப் பத்தி
நல்லாவே தெரியுமாம்.. அவருக்குப் பிடி கொடுக்காம சென்னையில
இருக்கிற நம்மளைத் தேடி வந்து நம்ம பொண்ண நிச்சயம்
பண்ணிட்டுப் போயிட்டாங்கங்கிற சேதியைக் கேட்டவுடன் மனுசன்
நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டாருன்னா பார்த்துக்கயேன்.."

"இருக்காதா பின்னே..? எங்க பேங்கிலயும் இந்தக் கதைதான்..


பெருமூச்சில் அனல் பறக்குது.."

மகிழ்ந்து போகும் தாய், தந்தையரிடம் எனக்கு மாப்பிள்ளையை


நினைத்தால் பயமாக இருக்கிறது என்று சொல்ல முடியாமல்
தனக்குள்ளேயே ஒடுங்கிப் போனாள் மீ ரா..

ரகுநந்தன்தான் அவளைப் பெற்றவர்களுக்கு பெருமையை அள்ளித்


தரும் மாப்பிள்ளையாகவும், அக்கம் பக்கத்தவரின் பொறாமையைத்
தூண்டி விடும் பணக்காரனாகவும் இருந்து வைக்கிறானே..

இப்படிப்பட்ட மாப்பிள்ளையைப் பற்றி அவள் எதைச் சொன்னாலும்


அவளைப் பெற்றவர்களின் காதுகளில் விழுகுமா..?

அவளுடைய அச்சத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் திருமணநாளும்


வந்து விட்டது.. 

தமக்கை படும் பாட்டைக் காணப் பொறுக்காமல் அரவிந்தன்


தந்தையின் செல்போனை நோண்டி ரகுநந்தனின் நம்பரைக்
கண்டுபிடித்து போன் போட்டுத்தந்தான்.

மறுநாள் திருமணம்.. அன்று பெண்ணழைக்க வந்து விடுவார்கள் என்ற


நிலையில் மொட்டைமாடியில் உட்கார்ந்து கொண்டு வானத்தை
வெறித்துக் கொண்டிருந்த மீ ராவிடம் தனது செல்போனைக் கொடுத்து..

"லைனில் இருக்காருக்கா.. பேசு.." என்றான்..

'யார் லைனில் இருக்காங்க..?' புரியாமல் போனை வாங்கி காதில்


வைத்த மீ ரா..

"ஹலோ.." என்றாள்..

மறுமுனையில் பதிலில்லை.. 

என்னடா இது என்று போனை தம்பியிடம் கொடுக்கப் போனாள்..


அதற்குள் கனத்த குரல் அவள் காதுகளில் விழுந்தது..

"என்ன பேசனும்..?"
மீ ராவுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை.. 

எவனோ ஒருவன் அவளிடம் என்ன பேசனும் என்று போனில்


கேட்கிறானே என்ற நினைவுடன்..

"எனக்கொன்னும் பேச வேண்டியதில்லை.." என்று எரிச்சலுடன்


போனை அணைத்து தம்பியின் கையில் கொடுத்து விட்டாள்..

"சொதப்பிட்டேயேக்கா.. உன் மனசில இருக்கிற குழப்பத்தைப் பேசித்


தீர்த்துக்குவேன்னுதானே அவரோட போன் நம்பரை வேலை
மெனக்கெட்டுக் கண்டுபிடிச்சுப் போன் போட்டுத் தந்தேன்..? இப்படி
எனக்கொன்னும் பேச வேண்டியதில்லைன்னு சொன்னா அவர் என்ன
நினைச்சுக்குவார்..?"

"எவர்டா அந்த அவர்..?"

"உன்னைக் கட்டிக்கப் போகிற மாப்பிள்ளை..!"

"என்னது..?"

அதிர்ச்சியில் மீ ராவுக்கு மயக்கமே வந்து விட்டது.. 

ரகுநந்தனா அவளுடன் பேசியது..? 

அது தெரியாமல் எனக்கொன்றும் பேச வேண்டியதில்லையென்று


போனை அணைத்து விட்டாளே.. 

அவன் என்ன நினைத்துக் கொள்வானோ..

'இருக்கிற இடியாப்ப சிக்கலிலே இது வேறா..?'

நிலாக் காயும் நேரத்திலே -2


ஏப்ரல் 09, 2021

 
தோழியர் புடைசூழ.. தாயின் அரவணைப்புடன் பதுமையைப் போல
மணமேடையை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்த
மீ ராவின் மனதில் அலைகடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.. 

மேடையில் அமர்ந்திருந்த ரகுநந்தனின் முகத்தை மேல் பார்வையாய்


பார்த்தாள்.. 

பாறை போல இறுகியிருந்தது.. 

கடினமான அந்த கரும்பாறை முகத்தைக் கொண்டவனின் மனதில்


என்ன உணர்வுகள் ஓடிக் கொண்டிருக்கிறதோ என்ற நினைவில் அவள்
மனம் அதிர்வு கொண்டது.

"நானாடா சொதப்பினேன்..? நீதாண்டா சொதப்பிட்ட.. ஒருவார்த்தை..


ஒரேயொரு வார்த்தை.. போனில் பேசறது அவர்தான்னு சொல்லித்
தொலைக்கிறதுக்கென்ன..? வாயில என்ன ஜிலேபியையா
வைச்சிருந்த...?"

முன் தினத்தின் காலையில் தம்பி மீ து சீறிப்பாய்ந்த மீ ரா தாள


மாட்டாமல் அழுதுவிட்டாள்.. 

பொலபெலவென வழிந்த கண்ண ீர்துளிகளைத் துடைக்கக் கூட மனம்


வராமல் அழுக ஆரம்பித்த தமக்கையை சமாதானப்படுத்தும் வழி
தெரியாமல் திகைத்தான் அரவிந்தன்..

அவனறிந்த மீ ரா அவ்வளவு எளிதாக அழுதுவிட மாட்டாள்.. 

அவள் சிரித்து விளையாடும் குணம் கொண்டவள்.. சிரித்த முகத்துடன்


இருப்பவள்..

"உனக்காகத்தான்க்கா போன் போட்டேன்.."

"அதை என்னிடம் சொல்லியிருக்கனுமா வேண்டாமா..?"

"தப்புத்தான்.. இரு.. திரும்பவும் போன போடறேன்.. நீயே யாருன்னு


தெரியாமப் பேசிட்டேன்னு சொல்லிரு.."

நம்புவானா..? 

மீ ரா தவியாய் தவித்தாள்.. 
வட்டில்
ீ உள்ள மற்றவர்கள் சொல்லைக் கேட்டு அவர்களுக்காக
மறுபடியும் போன் போட்டுப் பேசுவதாக எண்ணிவிட மாட்டானா..?

டென்சனுடன் நகத்தைக் கடித்துத் துப்ப ஆரம்பித்தாள்.. அரவிந்தன்


செல்போனில் எண்களை அழுத்திக் காதுக்குக் கொடுத்தான்..

"ரிங் போகுது.. பேசு.." பரபரப்புடன் அவள் கையில் கொடுத்தான்..

"என்னத்தைடா பேசறது..?" நடுங்க ஆரம்பித்து விட்டாள்..

அவளுக்கு வந்த சோதனையாக அவள் பேச ஆரம்பித்ததை


மறுமுனையில் ரகுநந்தன் கேட்டு விட்டான்..

"யோசிச்சு வைத்துக்க.. தெரியலைன்னா டியூசன் எடுத்துக்க..


மனப்பாடம் பண்ணி மனதில் வைத்து தாராமங்களத்துக்கு வந்த
பின்னால் பேசு.. இப்ப எனக்கு வேலை நிறைய இருக்கு.."

நிதானமாக சொன்னவனின் குரலில் ஒளிந்திருந்தது கோபமா.. இல்லை


வேறு எதுவுமா என்று புரியாமல் சிலையாக சமைந்து விட்டாள் மீ ரா..

மறுமுனையில் சப்தமில்லை.. 

போன் துண்டிக்கப்பட்டு விட்டது என்பதை உணர்ந்தவளின் மனதில்


ஏமாற்றம் கவிந்தது.

இவ்வளவுதானா..? 

இதற்கு மேல் அவளிடம் பேச அவனுக்கு எதுவுமே இல்லையா..? 

ஒரிரு வார்த்தைகளை கண்டிப்புடன் உரையாடுபவன் மறுநாள்


காலையில் அவள் கழுத்தில் தாலி கட்டப் போகிறான்.. 

அவன் மனதில் மறைந்திருப்பது என்ன என்று தெரியாமலே அவள்


அவன் கைபிடித்து அவன் வட்டிற்குப்
ீ போய் அவனுடன் வாழப்
போகிறாள்..

'கடவுளே..!' கண்களை மூடிக் கொண்டு பரிதவித்தாள் மீ ரா..

"என்னக்கா சொன்னாரு..?" ஆவலுடன் கேட்டான் அரவிந்தன்..

"ம்ம்ம்.. சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னாரு.." எரிந்து


விழுந்தபடி தம்பியிடம் போனை நீட்டினாள் மீ ரா..
"அவரை வந்து உப்புப் போட்டுட்டுப் போகச் சொல்லு.. ஆனாலும் நீ
இவ்வளவு தத்தியா இருக்கக் கூடாது.." என்றான் அரவிந்தன்..

'அவனைப் போலவே இவனும் சொல்கிறானே..'

புத்திசாலி மீ ராவிற்கு தனது அறிவாற்றலைக் குறித்து அவ


நம்பிக்கையே வந்துவிட்டது.

"ஏண்டா நீ வேற.. இதையேதான் அவரும் சொன்னாரு.."

"என்னன்னு..? நீ தத்தின்னா..?"

"ஏறக்குறைய அப்படித்தாண்டா.."

அவன் சொன்ன வார்த்தைகளை அழ மாட்டாத குறையாக மீ ரா


ஒப்பிக்க அரவிந்தன் விழுந்து விழுந்து சிரித்தான்.. 

மீ ராவுக்கு முகம் சிவந்து விட்டது..

தம்பி கேலி செய்கிற அளவுக்கு ஆகிவிட்டதே..

"அவர் சொன்னதிலே தப்பே இல்ல.. என்னடா, நமக்காக தம்பி


சிரமப்பட்டு போன் நம்பரைக் கண்டு பிடிச்சு கொண்டு
வந்திருக்கானேன்னு அதை யூஸ் பண்ணி அவர்கிட்ட மாட்டாட
வேண்டிய முறையில மாட்டாடி குழப்பத்தை தெளிவு பண்ணிக்காம
கோட்டை விட்டு வைக்கிற.. அதுதான் போகுது.. போன் நம்பரையாவது
உன் செல்போனில சேவ் பண்ணிக்குவன்னு பார்த்தா அதையும்
செய்யாம இந்தாடா தம்பின்னு என்கிட்ட போனை நீட்டற..
இப்படியிருந்தா உன்னை தத்தின்னு சொல்லாம
கொண்டாடுவாங்களா..? இதுவே உன் பிரண்டு தீபாக்காவா
இருந்திருக்கனும்.. கோடு போட்டுக் கொடுத்தா ரோடு போட்டு
கோட்டையையே கட்டி முடிசசிருப்பாங்க.. நீ சுத்த வேஸ்டுக்கா.."

உதட்டைப் பிதுக்கிய அரவிந்தனின் வார்த்தைகளில் இருந்த


உண்மையில் இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள் மீ ரா..

உண்மைதானே.. 

அரவிந்தன் சொல்வதற்கு முன்னாலேயே மீ ராவிற்குத் தோன்றியிருக்க


வேண்டாமா..? 
ரகுநந்தனின் போன் நம்பரை அவள் கைப்பற்றியிருக்க வேண்டாமா..? 

அதை மறந்து செல்போனை தத்தி போல தம்பியிடம் நீட்டுகிறாளே..

ரகுநந்தன் யார்..? அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப்


போகிறவன்.. 

மறுநாளின் இதே பொழுதில் அவனுக்கு அவள் மனைவியாகி


இருப்பாள்.. 

அவன் மீ து அவளுக்கு இல்லாத உரிமையா..? 

அவன் போன் நம்பரை பதிய வைத்துக் கொள்ளும் சிந்தனையின்றி


வேறு எவனுடைய போன் நம்பரைப் போல கண்டு கொள்ளாமல்
தம்பியிடம் போனைக் கொடுக்கிறாளே..

"நீ தேற மாட்டக்கா.."

அவளை மனமார ஆசிர்வதித்து விட்டு அவளுடைய செல்போனில்


ரகுநந்தனின் போன் நம்பரை பதிய வைத்து விட்டுப் போய்விட்டான்
அரவிந்தன்.. 

நடுக்கத்துடன் அந்த நம்பரையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீ ரா..

'பேசலாமா.. வேண்டாமா..'

அவள் மனம் கடிகாரத்தின் பெண்டுலம் போல இங்கும் அங்குமாக


ஆடியது..

'கேட்டு விடலாமா..? உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா


இல்லையா..? ஏன் எப்போதும் கடும்பாறைபோல இறுகிப் போன
முகத்துடன் இருக்கிறாய்..? இந்தக் கல்யாணத்தில் உனக்கு
விருப்பமில்லையா..?'

கேட்டு விட வேண்டியதுதான் என்று செல்போனை தொட்டபோது


திபுதிபுவென மாடிக்கு உறவினர் கும்பல் வந்து விட்டது.. 

அனைவரும் அவள் வயதில் இருக்கும் பருவப் பெண்கள்.

"இங்கே பாருடி.. இவ தனியா உக்காந்துக்கிட்டு கனவு கண்டுக்கிட்டு


இருக்கிறதை.."
"இனிமே கனவுக்கெல்லாம் வேலையே இல்லை மீ ரா.. எல்லாம்
நனவுதான்.. பெண்ணழைக்க கார் வந்துருமாம்.. நீ
குளித்துத்  தயாராகலைன்னு சித்தி புலம்பறாங்க.. கிளம்பு.. கிளம்பு.."

"ஆமாமாம் கனவுகளை மூட்டை கட்டி மெரினா பீச்சில் தூக்கிப்போடு..


தாராமங்களத்தில உன்னோட நனவு உனக்காக காத்திருக்கு.."

"ஆமாமாம்.. ஆறடி உயரத்தில அம்சமா.. அழகா கம்பீரமா.. ஜமீ ன்


தோரணையோட மீ சையை முறுக்கிக்கிட்டு காத்திருக்கு.."

ரகுநந்தனின் அடர்ந்த மீ சையை நினைத்துக் கொண்டாள் மீ ரா.. 

அவனது கனவில் மிதப்பதைப் போன்ற ஆழ்ந்த பார்வையும் அடர்ந்த


மீ சையும் ஏதோ ஒர் நதிக்கு இழுத்துக் கொண்டு போகும் வல்லமை
கொண்டதுதான்..

'ஆனால், அந்தக் கண்டிப்பான கண்கள்.. இறுகிய முகம்..'

மறுபடியும் கலங்கிப் போனாள்.. 

உறவுப் பெண்களின் கேலியில் பொறாமை இழையோடியது.. 

அவனைப் போன்ற மாப்பிள்ளை தனக்கு வாய்க்கவில்லையே என்ற


ஆதங்கத்தை மறைமுக வார்த்தைகளில் அனைவருமே
வெளிப்படுத்தினார்கள்..

"எங்கப்பா கெட்டிக்காரர்ன்னுதான் பேரு.. ஊர்க்காரியத் தனத்தில


முன்னால நிப்பார்.. பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடறதில மட்டும்
மண்ணைக் கவ்விருவார்.. ஆயிரம்தான் இருந்தாலும் மீ ராவோட
அப்பாவைப் போல வருமா..? அவர் கெட்டிக்காரர்.."

"அதைச்சொல்லு.. எங்கப்பாவும் இப்படித்தான்...


யானையாக்குறேன், குதிரையாக்குறேன்னு அளப்பார்.. நிஜத்தில
ஒன்னையும் ஆக்க மாட்டார்.. மீ ரா கொடுத்து வைத்தவ.."

மீ ராவுக்கு என்னவோ போல இருந்தது.. 

இதுபோன்ற பொறாமைகளை அவள் விரும்ப மாட்டாள்.. 

பேசுவது உறவுக்காரப் பெண்கள்.. 


கடிந்து பேசவும் முடியாது.. அதே சமயத்தில் அவர்களின் அனல்
பெருமூச்சை சகித்துக் கொள்ளவும் முடியாது.. 

மூச்சு முட்ட தப்பிக்கும் மார்க்கம் தேடி அவள் தவித்துக் கொண்டிருந்த


போது மீ ட்க வந்த ரட்சகியாய் சுமதியே வந்து விட்டாள்..

"இவதான் கிளம்பாம உட்கார்ந்திருக்கான்னா நீங்க இவளுக்கு மேலே


இருக்கீ ங்களே.. அரட்டையடிக்க இதுவா நேரம்..? எழுந்திருங்க..
எழுந்திருங்க.."

அவள் விரட்டிய விரட்டலில் அவர்கள் குருவிக் கூட்டம் போலக்


கலைந்து கலகலத்து சிரித்த வண்ணம் மாடிப்படிகளில் இறங்கி
ஓடினார்கள்.. 

சுமதி மகளின் அருகில் வந்து கன்னத்தைத் தொட்டு வழித்து திருஷ்டி


கழித்தாள்..

"எப்படிச் சத்தம் வருது பாரு.. அம்புட்டுக் காண்டு.."

அவள் சொல்வதில் மிகையில்லை என்பதால் அமைதியாக தாயைப்


பின் தொடர்ந்தாள் மீ ரா.. 

அடுத்த சில மணிகளில் அவள் மணப்பெண்ணாக மாற


வேண்டியிருக்கும் என்பதில் அவளது நெஞ்சம் படு வேகமாக அடித்துக்
கொண்டது.

நிலாக் காயும் நேரத்திலே -3


ஏப்ரல் 10, 2021

 
மணமேடையை நோக்கி நடந்து கொண்டிருந்த இந்த நேரத்திலும்
அவள் மனம் படுவேகமாக அடித்துக் கொண்டுதான் இருந்தது. 
முதல்நாள் ஆரம்பித்த படபடப்பு குறையவே இல்லை.. கூடிக்
கொண்டிடுதான் இருக்கிறது.

மீ ராவின் வடு
ீ பெரியதுதான்.. 

பிரகாசமும் சுமதியும் கைநிறைய சம்பாதித்ததால் சிக்கனம்


பார்க்காமல் தாராளமாக செலவு செய்து பங்களாவைப் போல வட்டைக்

கட்டியிருந்தார்கள்.. 

அந்த வடு
ீ முழுவதும் உறவினர் கூட்டம் நிறைந்திருந்தது.. 

கசகசவென இருப்பதாக மீ ராவுக்குத் தோன்றியதை கல்யாணக்களை


என்று சுமதி மகிழ்ந்து போனாள்..

குளித்து பட்டுப்புடவையுடுத்தி தலை நிறையப் பூவைத்து


மணக்கோலத்தில் மகள் நின்ற போது அவளுக்கு அழுகை வந்து
விட்டது.

"அதான் கெட்டிக்காரத்தனமா ஜமீ ன் மாப்பிள்ளையை வளைச்சுப்


போட்டாச்சில்ல.. இன்னும் அழுகையென்ன வேண்டிக் கிடக்கு..?"

நிஷ்டூரமாக சொன்ன பெண்மணியின் வயது அறுபதுக்கு மேல்


இருக்கும்.. பிரகாசத்திற்கு சித்தி முறையாம்.

"இவங்களையெல்லாம் கல்யாணத்துக்கு அழைக்கனுமா..?" அரவிந்தன்


அடிக்குரலில் மீ ராவிடம் சீறினான்.

அவளுக்கும் அதே எண்ணம்தான் என்றாலும் அதை எப்படி வாய்


விட்டுச் சொல்வது..?

"விடுடா.." என்று முணுமுணுத்தாள்.

"இதையெல்லாம் விடச்சொல்லித்தான் நானும் சொல்றேன்க்கா..


பாத்துக்கிட்டே இரு.. தாரா மங்களத்துக்கு போகிற வழியிலே இதைக்
கழட்டி விட்டுட்டு பஸ்ஸை விரட்டறேன்.." கருவினான் அவன்.

வைர அட்டிகையை மீ ராவுக்கு போட்டு விட்டாள் சுமதி.. அதற்குப்


பொருத்தமான வைரத் தொங்கட்டான்களையும், வைர
வளையல்களையும் அவள் அணிவித்து விட்டபோது உறவுப்
பெண்களின் வயிறு எரிந்தது.
"ஏன் சுமதி.. மாப்பிள்ளை வட்டில
ீ வைர அட்டிகையை மட்டும் தானே
போட்டு விட்டாங்க..? இப்ப என்னடான்னா வைரத் தொங்கட்டான், வைர
வளையல்கள்ன்னு அடுக்கிற..? நீங்க வாங்கினதா..?"

"இல்லைக்கா.. முகூர்த்தச் சேலை எடுக்கப் போனப்ப சம்பந்தகாரம்மா


கொடுத்து விட்டாங்க.. செட்டா போட்டு விட மறந்து போனாங்களாம்..
அவசரத்தில் அட்டிகையை மட்டும் கொண்டு வந்துட்டோம்.. மத்தது
வட்டில
ீ இருந்தது. முகூர்த்த சேலையெடுக்க நீங்க வர்றப்ப கொடுத்து
விடலாம்ன்னு எடுத்துக்கிட்டு வந்தேன்னு சொன்னாங்க.."

பேசியபடியே வைர ஆரத்தையும் எடுத்து மீ ராவின் கழுத்தில் மாட்டி


அழகு பார்த்தாள் சுமதி.. 

பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் ஒன்று சொன்னதைப்


போல நெஞ்சுவலி வந்து விட்டது.

"என்னது..! வைர ஆரமா..?"

'ஆ'வென பிளந்த வாய்களில் ஈயும் கொசுவும் ஊர்வலம் போய் திரும்பி


வந்தன.

"ஆமாக்கா.. மத்த வைர நகைகளையெல்லாம் மருமகள் அவங்க


வட்டுக்கு
ீ வாழ வந்த பின்னாலே போட்டு விடுவாங்களாம்.."

'இன்னும் இருக்கா..?' மனம் தாளாமல் பொருமினார்கள்..

"இதென்ன சுமதி அதிசயமா இருக்கு..? பெண்ணுக்கு தாய் வட்டிலதான்



சீர் செய்வாங்க.. இங்கே தலைகீ ழா இருக்கே.."

"அது அவங்க ஜமீ ன் வழக்கமாம் அக்கா.. பரம்பரையா வர்ற வைர


நகைகளை குடும்பத்தில வாழ வர்ற பொண்ணுக்கு போட்டு
விடுவாங்களாம்.. நாங்க நூறுபவுன் நகை போடறோம்.. வைர நகையும்
வாங்கிப் போடறோம்ன்னு சொன்னோம்.. புதுசா வைரம் எதையும்
வாங்க வேண்டாம்ன்னு சம்பந்தியம்மா சொல்லிட்டாங்க.. அவங்ககிட்ட
இல்லாத வைரமா..?"

கேட்டுக் கொண்டிருந்தவர்களின் அடிவயிறு பொசுங்குவதை கண்டு


கொள்ளாமல் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு மகளை
பூஜையறைக்கு அழைத்துச் சென்று விட்டாள்..
'தெய்வங்களே..! எந்தக் கொள்ளிக் கண்ணும் என் பிள்ளை மேலே
படாமல் அவள் நீடுழி மங்களகரமான, வாழ்வை சந்தோசமாக வாழ
நீங்கள்தான் அருள்செய்ய வேண்டும்..'

தாயின் மனம் தவிப்புடன் வேண்டுதலை வைத்தது 

விளக்கேற்றி தீபாதரனை காட்டி வணங்கி மகளின் நெற்றியில்


குங்குமம் இட்டு விட்டாள்.. 

மீ ராவின் கண்கள் கலங்கியதில் அவளது நெஞ்சம் கலங்கியது.

'கைக்குள்ளேயே வைத்து வளர்த்த மகள்..!'

மனதை மறைத்துக் கொண்டாள்.. 

அவள் மனம் தவிப்பதை அறிந்தால் ஏற்கனெவே கலங்கிப்


போயிருக்கும் மகள் இன்னமும் அதிகமாக கலங்குவாள்..

"ம்த்சு.. கண் கலங்கக் கூடாது.. கொஞ்ச நேரத்தில மாப்பிள்ளை வட்டில



இருந்து பெண்ணழைக்க வந்திருவாங்க.. கண் கலங்கினா என்ன
நினைப்பாங்க..?" மகளை அதட்டினாள்.

'அவன் என்ன நினைத்துக் கொண்டிருப்பான்..?' ரகுநந்தனைப் பற்றி


யோசித்தாள் மீ ரா..

பேச வேண்டும் என்று அவளுடைய தம்பி சொன்னதற்காக பேச


வந்தவனிடம் எனக்கொன்றும் பேச வேண்டியதில்லை என்று
சொன்னவள் அவள்.. மறுபடியும் அரவிந்தன் போனை போட்டுத்
தந்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் துப்பு இல்லாமல்
என்னத்தைப் பேச என்று கேட்டு வைத்தவள்.. சும்மாவும் கேட்டு
வைக்காமல் 'என்னத்தைடா..' என்று 'டா' போட்டுக் கேட்டு வைத்தவள்.

'இப்படிப் பேசினா டியூசன் எடுத்து மனப்பாடம் பண்ணிக்கிட்டு வான்னு


சொல்லாம என்ன செய்வான்..?' சலித்துக் கொண்டாள்.

பெண்ணழைக்க கார்கள் வந்து விட்டன.. 

வரவேற்கும் சம்பிரதாயம் முடிந்து பிரகாசமும் சுமதியும் மகளை


அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வட்டில்
ீ அனுப்பியிருந்த பெரிய
வெளிநாட்டுக் காரில் ஏறி உட்கார்ந்தார்கள்..
"காரைப் பார்த்தியாடி.."

கசமுசவெனப் பேசப்பட்ட பொறாமைப் பேச்சுக்களை காதில் போட்டுக்


கொள்ளாமல்..

"நம்ம சொந்த பந்தம் அத்தனை பேரையும் கவனமா பஸ்ஸில்


கூப்பிட்டுக்கிட்டு காலாகாலத்தில போடிக்கு வந்து சேர்ந்திரனும்..
பெரியப்பா இருக்கார்.. அவரிடம் யோசனை கேட்டு பக்குவமா
நடந்துக்க.. புரிஞ்சதா.." என்று மகனை அதட்டினார் பிரகாசம்.

"இதெல்லாம் ஒரு மேட்டரா..? நான் பார்த்துக்கறேன்ப்பா.. என்னவோ


பஸ்ஸையே சுமந்துக்கிட்டு வரனும்போல பில்ட்-அப் கொடுக்கறிங்க..
சொகுசான ஏஸி பஸ்..! அங்கே பாருங்க.. உங்களுக்கு முன்னாலேயே
எல்லோரும் இடம் பிடிச்சு உட்கார்ந்தாச்சு.. இதில எல்லாம் நம்ம
சொந்தக்காரங்க கெட்டிப்பா.. உலகத்தையே வித்துப்புடுவாங்க..
பஸ்ஸில ஏறி ரைட் கொடுத்துட்டு வடியோவில
ீ படத்தைப் போட்டு
விட்டாப் போச்சு.."

"ஊடும் பாடும் பஸ்ஸை நிறுத்தி சாப்பிட வைச்சுக் கூப்பிட்டு


வாங்கப்பா.."

"நான் நிறுத்தச் சொல்லலைன்னாலும் அவங்களே விசிலடிச்சு


பஸ்ஸை நிறுத்திருவாங்க.. கூல்டிரிங்க் கேன்கனை பஸ்ஸில்
அடுக்கியிருக்கேன்.. ஸ்நாக்ஸ் பாக்கெட்ஸை வாங்கி வைச்சா பஸ்ஸே
குப்பைக் கூடையாகிரும்.. தேவையா..?"

"வேணாம், வேணாம்.."

"அது..! எதையெதை எப்படியெப்படி செய்யனும்னு ஐயாவுக்கு


அத்துபடிப்பா.. நீங்க அக்காவை மட்டும் பத்திரமா பார்த்துக்கங்க.. உங்க
சொந்த பந்தத்தை பார்த்துக்க நானாச்சு.."

"அதாண்டா பயமாயிருக்கு.."

"யாமிருக்க பயமேன்ப்பா..?"

"நீ பார்த்துக்கறதினாலதாண்டா பயமாயிருக்கு.."

பயப்படுவதைப் போல பாவனை செய்தாலும் சிரிப்பு பொத்துக்


கொண்டு வந்தது பிரகாசத்திற்கு.. 
மகனின் அடாவடித்தனத்தில் மனம் லயித்து மெச்சிப் போனார்.

மகனுக்கு கையசைத்து விட்டு கார் கிளம்பியதும் சாய்ந்து உட்கார்ந்து


பின் சீட்டிலிருந்து மனைவி பக்கம் திரும்பி..

"இவன் இருக்கானே.." என்று செல்லமாக அலுத்துக் கொண்டார்..

மீ ராவை சாய்ந்து உட்காரச் சொன்னாள் சுமதி.. 

அவளும் மகளும் மட்டுமாக பின்சீட்டில் அமர்ந்திருப்பதில் சௌகரியக்


குறைவு எதுவும் ஏற்படவில்லையென்பதில் அவள் மனம்
நிறைந்திருந்தது.

"நல்லாக் கவனிச்சுக்கிறாங்க.." கணவனிடம் சொன்னாள்..

பிரகாசம் ஆமோதிப்பாக தலையசைத்தாலும் பின் பக்கமாக திரும்பி


டிரைவர் பக்கம் கண்சமிக்ஞை காட்டி மூன்றாவது நபர் ஒருவர்
காரிலிருப்பதை அறிவுறுத்தினார்.. 

சுமதி தனிப்பட்ட முறையிலான சொந்த விவரங்களைப் பேசுவதை


நிறுத்திக் கொண்டாள்..

பொதுப்படையான பேச்சுக்களை அவர்கள் பேசிக் கொண்டார்கள்.. 

மாலை மயங்கி இருள் சூழ்ந்த நேரத்தில் போடி நகரத்துக்குள் கார்


பிரவேசித்தது.

அருகில் தெரிந்த மூணாறு மலையின் அழகை ரசிக்க முடியாமல்


மனதுக்குள் ஓர் குளிர் பரவுவதை உணர்ந்தாள் மீ ரா.. 

வந்து விட்டாள்.. இதோ.. அவளுக்காக காத்திருக்கும் திருமண


மண்டபத்திற்குள் கார் நுழையப் போகிறது.. 

அதன் பின்னால் அவள் நினைத்தாலும் சென்னைக்கு திரும்பி


விடமுடியாது.

அவள் தாராமங்களம் ஜமீ ன் வட்டிற்கு


ீ வரப் போகும் மருமகள்.. 

அவளுக்கு தாலிகட்டக் காத்திருக்கும் ரகுநந்தனுக்கான மணப்பெண்..

 மீ ரா இனி தனித்துவம் கொண்டவளல்ல.. அனைத்தும் ரகுநந்தன்


சார்ந்ததாக அவளது முகவரி மாறப் போகிறது.
"வாராயென் தோழி வாராயோ..

           மணமேடை காண வாராயோ.."

ஒலி பெருக்கியில் ஒலித்த பாடலைக் கேட்டபடி காரை விட்டு


இறங்கினாள் மீ ரா.

நிலாக் காயும் நேரத்திலே -4


ஏப்ரல் 11, 2021

 
'தனனா..' என்ற இனிமையான நாதஸ்வர ஒலி மீ ராவின் மனதை ஏதோ
செய்தது.. 

மங்கலத்தை உணர்த்தும் நாதஸ்வர இசையை ரசித்துக் கேட்க


அவளுக்குப் பிடிக்கும்.. 

அங்கிருந்த சேர்களில் ஒன்றில் உட்கார்ந்து இந்தத் திருமணத்திற்கும்


அவளுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லையென்று கண்மூடி இசையை
மட்டும் ரசித்தால் நன்றாயிருக்குமென்று தோன்றியது.

"பார்த்து மீ ரா.. தடுமாறி விடாமல் நட.." சுமதி கிசுகிசுப்பாக மகளுக்கு


அறிவுறுத்தினாள்..

மகளின் நடையிலிருந்த தயக்கம் அவளுக்கு கவலையைத் தந்தது.. 

பயம் என்பதை அவளறிவாள்.. மற்றவர்கள் அறிவார்களா..? 

கிராமத்து ஜனங்கள் நுண்ணறிவு மிக்கவர்கள்.. 

நடையின் வேறுபாட்டிற்கான காரணத்தை வேறு விதமாக யூகித்து


விட்டால் என்ன செய்வது..?

'பொண்ணுக்கு கல்யாணத்தில இஷ்டமில்லையாம்..'


பொறி போல ஒரு வார்த்தை கிளம்பி விட்டால் கூடப் போதும்.. 

தீப்பரவுவதைப் போல நொடிப் பொழுதில் கண், காது மூக்கு வைத்து


விசயம் பறந்து விடும்.. 

திருமண மண்டபத்தையும் தாண்டி சுற்றுப்பட்டிக் கிராமங்களில் பரவி..


பொள்ளாச்சியில் கால் பதித்து சென்னைக்குத் தாவி விடும்.. 

சுமதிக்கு வாய்த்திருக்கும் உறவினரின் பாசம் அத்தகையது.

'எல்லாத்துக்கும் வயிற்றிலே பல்..!'

மகளின் தோளை அணைவாக பிடித்துக் கொண்டாள்.. 

தயக்கத்தில் மீ ராவிற்கு கால் தடுக்கி விட்டால் என்ன செய்வது என்ற


அடுத்த கவலை அவளைப் பற்றிக் கொண்டது.

'கல்யாணப் பொண்ணுக்கு கால் தடுக்குதே.. சகுனம் சரியில்லையே..'

அடுத்த பேச்சு ஆரம்பமாகிவிடும்.. 

ஆமாமாம்.. சென்னையில் வட்டிலிருந்து


ீ கிளம்பும்போதே
நிலைப்படியில் நெற்றியை இடித்துக் கொண்டாள் என்ற உபரித்
தகவலைக் கொட்ட மீ ராவின் உறவினர்கள் ஆயத்தமாக இருப்பார்கள்.

'இவ ஏன் இப்படி நடக்கிறா..?'

கல்யாணக் களையுடன் வெட்கத்தில் முகம் சிவக்க நடக்காமல்


பயத்தில் முகம் சிவக்க நடக்கும் மகளை கவலையுடன் பார்த்துக்
கொண்டாள்.. மீ ரா கொஞ்சம் சிரித்த முகமாக இருந்தால்
தேவலையென்று அவளுக்கு இருந்தது.

பாவம் மீ ரா..! 

அவளென்ன சிரிப்பை வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறாள்..? 

அவளுக்குத்தான் ரகுநந்தனை பார்த்தவுடன் சிரிப்பு மறந்து பயம் வந்து


ஒட்டிக் கொள்கிறதே..

முதல்நாள் மாலையிலும் இப்படித்தான்.. வாராயென் தோழி வாராயோ


என்ற பாடலில் மனம் லயித்தபடி காரை விட்டு இறங்கி நின்றவளுக்கு
ஆரத்தி எடுக்கப்பட்டது.
வடியோவின்
ீ மஞ்சள் நிறம் கலந்த ஒளி வெள்ளத்தில் குளித்தபடி
லேசாக குனிந்த தலையுடன் மண்டபத்திற்குள் செல்ல முயன்றவள்
ரகுநந்தனைப் பார்த்து விட்டாள்.. 

அப்போதும் அவன் செல்போனும் கையுமாக யாருடனோ பேசிக்


கொண்டிருந்தான்.. 

தோட்டத்தில் நின்றிருந்தவனின் பேச்சு செல்போனில் இருந்தாலும்


பார்வை இவள்மீ தே படிந்திருந்தது.. 

துளைக்கும் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மொத்தமாக


தலையைக் குனிந்து விட்டாள்.. 

மணப்பெண்ணுக்கான அறையில் நுழைந்து அங்கிருந்த சேரில்


உட்கார்ந்த பின்பும் அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

"மீ ரா..! என்ன இது பச்சைக் குழந்தையாட்டம்..?"

சுமதி அதட்டியதில் தன்னிலைக்கு வந்தாலும் நடுக்கம் குறைய வெகு


நேரமானது.. 

அவள் நிலையை நினைத்து அவளுக்கே தலைவேதனையாக


இருந்தது.. 

உற்றார் உறவினரெல்லாம் பொறாமைப் படும் அளவிற்கு கண்ணுக்கு


அழகான கம்பீரமான ஆண்மகனுக்கு வாழ்க்கைப்படப் போகிறாள்..
அவனைக் கண்டு பயந்து நடுங்குகிறாளே..

ஒருவழியாக பயத்தை துரத்தி விட்டு இயல்பாக இருக்க முயன்று


கொண்டிருந்தபோது அடுத்த சோதனை ஆரம்பமானது.

"சீக்கிரம் மீ ரா.. குவிக்.. ஓடு.. ஓடு.."

"எங்கேம்மா..?"

"இந்தப் பட்டுப் புடவையை மாத்தி நைட்டியை மாட்டிக்கிட்டு முகம்


கழுவிட்டு வா.. வேற சேலைக்கு மாறனும்.."

"ஏன்..? இந்த சேலைக்கு என்ன..?"

"நலங்கு வைத்து நிச்சயம் பண்ணப் போறாங்கம்மா.."


"அதைத்தான் பெண் பார்த்த அன்னைக்கே பண்ணிட் டாங்களே..?"

"அது கல்யாணப் பேச்சை உறுதி பண்ணினது.. இது பரிசம்.."

"பரிசமா..?"

"நிச்சய தாம்பூலத்தை கிராமப்பக்கத்திலே பரிசம் போடறதுன்னு


சொல்வாங்க.. மாப்பிள்ளை ஜமீ ன் வம்சங்கிறதினாலே ஜனக்கட்டு
அதிகம்.. பரிசம் போட சென்னைக்கு வந்தா நமக்கு சமாளிக்கக்
கஷ்டமாகிரும்ன்னு பந்தக்காலிலே பரிசம் போட்டுக்கறோம்ன்னு
சொல்லிட்டாங்க.."

"பந்தக்காலில பரிசமா..?"

"என்ன மீ ரா இது..? எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுக்கிட்டு


இருக்கிற..? இது கேள்வி கேட்கிற நேரமா..? நிச்சயதாம்பூலத்தை
கல்யாண மண்டபத்திலே நடத்திக்கிறதுக்குப் பெயர்தான் பந்தக்காலிலே
பரிசம் போடறது.."

பெண்ணைத் திருமணம் பண்ணிக் குடுப்பதற்கு முன்பே


தாராமங்களத்தின் பேச்சு வார்த்தைகளுக்கு பழக்கப்பட்டு விட்டாள்
சுமதி.. 

தாயின் அந்தப் பாண்டித்தியத்தில் வியந்து போனாள் மீ ரா.. 

நைட்டிக்கு குளியலறைக்குள் புகுந்தவளுக்கு குளித்தால் தேவலை


யென்று தோன்றிவிட்டது.. 

குளித்து முடித்தவுடன் கிடைத்த புத்துணர்வில் அவளுக்குள் இருந்த


பயம்கூட பஞ்சாய் பறந்து விட்டது.

"சமத்து.."

தெளிந்த முகத்துடன் இருந்த மகளை மெச்சிக் கொண்டாள் சுமதி.. 

திபு திபுவென அறைக்குள் புகுந்தது உறவினர் கும்பல்.

"நம்ம சொந்தக்காரங்க வந்துட்டாங்க.. இரும்மா.. அரவிந்தனைப்


பார்த்துட்டு வந்துடறேன்.. நீ மேக்-அப் போடறவங்களுக்கு கோ-ஆபரேட்
பண்ணி அடங்கி உட்காரு.."

மீ ராவுக்கு சுமதியின் பின்னாடியே போக வேண்டும் போல இருந்தது.. 


அரவிந்தனைப் பார்க்க வேண்டும்.. 

உறவினர் கூட்டத்தை எப்படி அவன் மேய்த்தான் என்ற கதையைக்


கேட்க வேண்டும்.. 

அதை அவன் விவரிக்கும் விதத்தை ரசித்துச் சிரிக்க வேண்டும்..

எங்கே..? 

அவளை நகர விடாமல் ஒப்பனை செய்யும் பெண்கள் இருவரும்


அழுந்தப் பிடித்து சேரில் உட்கார வைத்து விட்டார்களே.. 

அவளால் அசைய முடியவில்லையே..

மடமடவென ஒப்பனை முடிந்து புதுப் பட்டுச்சேலையை உடுத்தி


கண்ணாடி பார்த்தபோது அப்சரஸ் போன்ற அழகுடன் மிளிர்ந்தாள்..

"பட்டும் வைரமுமா நின்னா எல்லோரும் அப்சரஸ்தான்.."

அவளது மனதைப் படித்ததைப் போல தூரத்துச் சொந்த அத்தை


நொடித்தாள்.. 

மீ ரா பதிலேதும் பேசவில்லை.. 

அம்மா வந்தால் தேவலையென்று அவள் நினைத்து முடிப்பதற்குள்


சுமதி வந்து விட்டாள்.. 

வரும்போதே அத்தையின் பேச்சைக் கேட்டிருப்பாள் போல..

"எல்லோருக்கும் அப்படியில்லை அண்ணி.. அழகா


இருக்கறவங்களுக்குத்தான் பட்டும், வைரமும் கூடுதல் அழகைச்
சேர்க்கும்.. ஒரு சிலருக்கு என்னதான் பட்டையும், வைரத்தையும்
இழைத்தாலும் கண்றாவியாத்தான் இருக்கும்.." என்று போட்டுத்
தாக்கினாள்.

சுமதி இல்லையென்ற தைரியத்தில் வாய்விட்ட அத்தை வாயை இறுக


மூடிக் கொண்டாள்.

"கொஞ்ச நேரத்துக்கு தனியா விட்டுட்டுப் போக முடியலை.. கல்யாணப்


பெண்ணுக்கு துணைக்கிருப்போம்ங்கிற புத்தியில்லாம கண்டதையும்
பேசறது.. புத்தியைக் கடன் கொடுத்துட்டு கல்யாணத்துக்கு கிளம்பி
வந்திருப்பாங்க போல.."
இன்னும் கொஞ்சம் சாடி விட்டு மகளிடம் குனிந்து.

"வாம்மா.. கல்யாண மேடைக்குப் போகலாம்.." என்று அழைத்தாள்.

"காலையிலேதானேம்மா கல்யாணம்..?" மீ ரா பயந்து போனாள்..

"இப்ப நலங்கு வைத்துப் பரிசம் போடுவாங்க மீ ரா.." 

அலுப்புடன் மகளை எழுப்பி விட்டாள் சுமதி.

அவளுக்கு ஆயாசமாக இருந்தது.. 

வாராது வந்திருக்கும் பெரிய இடத்து சம்பந்தம்.. 

சுற்றியிருக்கும் சொந்தக்காரர்கள் பொறாமையில் வெந்து


கொண்டிருக்கிறார்கள்.. 

திருமணத்தில் குழப்பம் விளைவிக்க எதுடா சாக்கு என்று அவர்கள்


காத்துக் கொண்டிருப்பதை மீ ரா உணர வேண்டாமா..? 

படித்த பெண்..! இப்படியா புரிந்து கொள்ளாமல் இம்சை செய்வது..?

தாயின் சங்கடத்தை உணராமல் நலங்கு வைக்கும் இடத்துக்கு


ரகுநந்தன் வருவானா என்ற மனக்கிலேசத்துடன் நடந்தாள் மீ ரா.. 

அவன் வாராதிருக்க வேண்டும் என்று அவள் மனம் பிரார்த்தித்தது.

'இப்போது வராமல் இருந்தாலும் காலையில் கல்யாண மேடையில்


தாலி கட்ட மாப்பிள்ளையாக அவன் வந்துதானே தீரவேண்டும்..?'

புத்தி கேள்வி கேட்டது.. 

அந்தக் கவலையுடன் மேடை யேறியவள் அரவிந்தனை பார்த்து


விட்டாள்.. 

பெரியப்பாவுடன் பெரிய மனிதனைப் போல அவன் ஆழ்ந்த குரலில்


விவாதித்துக் கொண்டிருந்தான்..

'எப்படிக் கூப்பிடுவது..?' மீ ராவுக்கு பெருங்கவலையாய் போனது.

அரவிந்தா என்று பெருங்குரலெடுத்துக் கத்தினால் ஒருவேளை அவன்


அவளிருக்கும் பக்கமாக திரும்பிப் பார்க்கலாம்.. 

அப்படிக் கத்த முடியாமல் அவள் மணப்பெண்ணாக நலங்கு வைக்கும்


மேடையில் அமர்ந்திருக்கிறாளே..
அவன் திரும்பிப் பார்க்கிறானா என்று பார்த்தாள்.. 

அவனும் திரும்பியதைப் போல தலையைத் திருப்பி வைத்தான்.. 

இவள் உற்சாகமாகி தம்பியை நோக்கி இங்கே வா என்று கையை


ஆட்டினாள்.. அதைப் பார்த்தது அரவிந்தனல்ல.. ரகுநந்தன்..!

அரவிந்தன் பெரியப்பாவுடன் மட்டும் பேசிக் கொண்டிருக்க


வில்லையென்று அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.. 

ரகுநந்தனும் அவர்களுடன் நின்றிருக்கிறான்.. 

அரவிந்தன் ஆழ்ந்த குரலில் விவாதித்துக் கொண்டிருந்தது


ரகுநந்தனிடம்தான் என்பதில் அவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்..

அவள் கையசைத்து விட்டு நாக்கைக் கடித்ததை பார்த்தவனின்


கண்களில் மின்னல் வெட்டியதில் மீ ரா பயந்தே போனாள்..

'என்னடா இது சோதனை..!' தலைவேதனையாகி விட்டது..

'அவன் என்னன்னு நினைச்சுக்குவான்..? நலங்கு வைக்க மேடையில்


உட்கார்ந்துக்கிட்டு அவனைப் பார்த்து கையாட்டி னேன்னு தானே
நினைச்சுக்குவான்..? காலையிலே போன் பேசறப்ப சொதப்பினது
போதாதுன்னு இப்பவும் சொதப்பிட்டேனே..'

அவன் கண் பார்வையிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும் போல


அவளுக்கு லஜ்ஜையாகி விட்டது. 

அதற்கு முடியாமல் மேடையேறிய ரகுநந்தனின் தாய் யமுனா


மீ ராவின் கன்னத்தில் சந்தனம் கலந்த மஞ்சளைத் தடவி நலங்கை
ஆரம்பித்து வைத்தாள்..

நிலாக் காயும் நேரத்தில -5


ஏப்ரல் 12, 2021

 
மணமேடையின் பக்கவாட்டில் இருந்த படிகளில் தளர்வுடன் ஏறினாள்
மீ ரா.. 

கல்யாண மாப்பிள்ளையாக உட்கார்ந்திருந்த ரகுநந்தனை பக்கவாட்டுத்


தோற்றத்தில் பார்க்க முடிந்தது.. 

பட்டுவேட்டி, பட்டுச் சட்டையில் கம்பீரமாக இருந்தான்.. 

மீ ராவின் பாசையில் சொல்வதாக இருந்தால் செமத்தியான அழகோடு


இருந்தான்..

'இதிலொன்னும் குறைச்சலில்ல..'

அவன் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்ற பதட்டத்தோடு படிகளில்


ஏறியவள் மேடையில் கால் வைத்த போது அவன் திரும்பி அவளைப்
பார்த்து விட்டான்..

அதே தீட்சண்யமான ஊடுறுவும் பார்வை..! கடினமான இரும்பு முகம்..!


அவளுக்குள் குளிர் பரவியது.

இவனைப் போன்ற இரும்பு மனிதனிடம் கல்லூரியில் கலையரங்கம்


கட்ட நன்கொடை கேட்கலாம்.. 

கலை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கச் சொல்லி கோரிக்கை


விடுக்கலாம்.. 

அதையெல்லாம் விடுத்து மனைவியாக அவன் பக்கத்தில் இருக்கச்


சொன்னால் எப்படி..?

அவன் முகத்தில் எந்தவிதச் சலனமுமில்லை.. 

பார்வை மட்டும் அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது.. 

முன் தினமும் இதைப் போலதான் இருந்தான் என்பதை அவள்


நினைவு கூர்ந்தாள்..

நலங்கு வைப்பதை யமுனா ஆரம்பித்து வைக்க சுமதி தொடர்ந்தாள்.. 

அவள் நலங்கு வைத்து முடித்ததும் ரகுநந்தனின் தமக்கைகள்


இருவரும் மேடையேறினார்கள்.. 

மெல்ல அந்தச் சம்பிரதாயத்தில் ஆழ்ந்து போனாள் மீ ரா.. 


ரகுநந்தனை மறந்து போனவளாக வந்து போகும் உறவினர்களின்
கேள்விகளுக்கு மெல்லிய குரலில் பதிலைச் சொல்லிக்
கொண்டிருந்தவள் சும்மா இருக்காமல் அரவிந்தன் எங்கே இருக்கிறான்
என்று பார்க்க ஆரம்பித்து விட்டாள்..

அரவிந்தன் இருந்தான்.. மேடைக்கு எதிரிலிருந்து நாற்காலிகளின்


வரிசையில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்தான்.. 

சோதனையாக அவன் பக்கத்தில் கால்மீ து கால்போட்டு படு


தோரணையாக ரகுநந்தனும் உட்கார்ந்திருந்தான்..

'போச்சுடா..'

தம்பியைப் பார்த்து விட்ட உற்சாகம் வடிய தலையைக் கவிழ்ந்து


கொண்டாள் மீ ரா.. 

ஓடி ஒளிந்து கொண்டால் தேவலை போல அவளது விரல்கள் நடுங்க


ஆரம்பித்தன. 

லேசாக இமைகளை உயர்த்திப் பார்த்தாள்.. 

ரகுநந்தன் கற்சிலைபோன்ற முகபாவத்துடன் அவளையே பார்த்துக்


கொண்டிருந்தான்.

அந்த நேரம் பார்த்தா அரவிந்தன் அவளைப் பார்த்துக் கையாட்ட


வேண்டும்..?

'போடா..' என்றிருந்தது மீ ராவுக்கு..

அவள் கையாட்டும் போது அவன் பார்க்க மாட்டானாம்.. ரகுநந்தன்


பார்த்து வைப்பானாம்.. 

இப்போது நலங்கு மேடையில் அவள் உட்கார்ந்திருக்கும் போது


ரகுநந்தனை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவன் கையாட்டுவானாம்.. 

அவளால் பதிலுக்கு கையாட்ட முடியுமா..?

ரகுநந்தனின் இதழ்களில் புன்னகை வந்து போனதைப் போல இருந்தது..


கனவாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்..

'ரகுநந்தனாவது.. சிரிப்பதாவது..'
கற்சிலை எங்கேனும் சிரிக்குமா..? 

கீ ழ்பார்வையில் நோட்டமிட்டாள்.. அவன் சிரிக்க மறந்தவனைப் போல


இறுகிப் போன முகத்துடன்தான் இருந்தான்..

'அதானே பார்த்தேன்..'

அரவிந்தன் இப்போது பலமாக கையாட்டினான்.. 

அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. 

ரகுநந்தன் அவளை சுவராஸ்யமாக வேடிக்கை பார்த்துக்


கொண்டிருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.. 

அவன் முகத்தைப் பார்த்தால் செதுக்கி வைத்த சிலை போல


இருந்தது..

'மூக்கும் முழியுமா நல்லாத்தான் இருக்கான்..'

அந்த நிலையிலும் ஜொள்ளியது அவள் மனம்.. 

அவளைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் அந்த கற்சிலை


முகத்துக்காரனின் வடிவழகில் வசீகரிக்கப்பட்டாள் அவள்..

ரகுநந்தன் சரிந்து அரவிந்தனின் காதுகளில் ஏதோ சொன்னான்.. 

அவன் உடனே பெரிய நகைச்சுவையைக் கேட்டதைப் போல விழுந்து


விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்..

'என்னடா இது..?' 

மீ ராவுக்கு ஆச்சரியமாகி விட்டது..

தம்பியை வினோதமாக பார்த்தாள்.. 

அக்காவின் கணவனாக ஆகப் போகிறான் என்பதற்காக மொக்கை


ஜோக்குக்கெல்லாம் அரவிந்தன் சிரிப்பானா என்ன..?

'இவன் அந்த கேட்டகிரி இல்லையே..'

ரகுநந்தனால் நகைச்சுவையாய் பேச முடியும் என்பதை அவள் மனம்


நம்ப மறுத்தது.. 
முதலில் அவன் மற்றவர்களைப் போல சகஜமாக பேசுவானா என்பதே
சந்தேகமாக இருக்கும் போது நகைச்சுவையாய் பேசுகிறான் என்றால்
நம்பவா முடிகிறது..?

'நோ சான்ஸ்..' 

தீர்மானமாக அவள் நினைத்தாள்..

அவளுடைய தம்பியிடம் சிரிப்பை மூட்டிவிட்டு அதற்கும் அவனுக்கும்


சம்பந்தமே இல்லாததைப் போல அவன் செல்போனை காதுக்கு
கொடுத்தபடி அவளைப் பார்த்தான்..

'பேசாமல் இவன் என்னைக் கல்யாணம் பண்ணுவதற்குப் பதில்


செல்போனை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்..'

மனதில் தோன்றிய பரிந்துரையை அவனிடம் சொல்வது யார்..? 

இஞ்சி இடுப்பழகனைக் கண்டால் அவளுக்கு பேச்சா வருகிறது..? 

காற்றே என் வாசல் வந்தாய் என்று காற்றுத்தானே வாயில்


வருகிறது..?

"இம்புட்டு அழகா இருந்தா எங்க ரகு கவிழாம என்ன செய்யுமாம்..?"

ரகுநந்தனின் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி மீ ராவின் கன்னத்தில்


சந்தனத்தைத் தடவியபடி சொன்னாள்.. 

அவளுக்கு வெட்கமாகி விட்டது.. 

அவனா கவிழ்ந்து விடுகிற ஆள் என்று நினைத்துக் கொண்டாள்..

'இவன் ஊரையே கவிழ்த்துப் போடுவானே..'

அடிப்பார்வையாய் எதிரில் பார்த்தவள் அங்கே அரவிந்தனும்


ரகுநந்தனும் இல்லாததில் திகைத்தாள்.. 

விடுதலையுணர்வுக்குப் பதிலாக ஏமாற்றம் வந்து தொலைத்தது


ஏனென்றுதான் புரியவில்லை..

'எங்கே போயிருப்பாங்க..'

யோசனையுடன் பார்வையைச் சுழற்றியவளின் உள்ளுணர்வில் ஏதோ


உறுத்த அவசரமாக அருகில் பார்த்தாள்.. 
அங்கே ரகுநந்தன் நின்று கொண்டிருந்தான்.. 

வாயெல்லாம் பல்லாக.. "அக்கா.." என்றபடி அரவிந்தன் அவள் பக்கத்தில்


வந்தான்..

தம்பியிடம் பேச வேண்டுமென்று ஆசைப்பட்டவள் ஊமையாகிப்


போனாள்.. 

ரகுநந்தனின் முன்னால் அவள் என்னத்தைப் பேசுவாள்..? 

அது புரியாத அரவிந்தன்..

"ஏன் கேக்கிற..? நம்ம பக்கத்து சொந்தங்களை மேய்த்து ஓட்டிக்கிட்டு


வர்றதுக்குள்ள படாத பாடு பட்டுப் போயிட்டேன்.." என்று கதை
சொல்ல ஆரம்பித்தான்..

"அப்ப நீதான் சிறந்த மேய்ப்பர்ன்னு சொல்லு.."

உடனடியாக வந்த பாராட்டின் நகைச்சுவையில் மீ ரா சிரித்து


விட்டாள்.. 

சொன்னது யாரென்று பார்த்தால் மேடையில் ரகுநந்தனைத் தவிர


யாருமில்லை.. 

அது அவனுடைய குரல்தான் என்பதில் அவளுக்கு வந்த சிரிப்பு


வாயோடு நின்று விட்டது.. 

மனதுக்குள் மட்டும் குறுகுறுத்தது.

'ஒரு வாசகம் பேசினாலும் திருவாசகம் போல பேசி வைக்கிறான்..


அதனாலதான் அரவிந்தன் குலுங்கி குலுங்கிச் சிரிச்சானா..? என்னவோ
போடி மீ ரா.. ஒன்னுமே புரியலை..'

அங்கலாய்த்த மனது அதிர்ந்தது.. 

ரகுநந்தன் குனிந்து சந்தனத்தையும் மஞ்சளையும் எடுத்து அவளது


கைகளில் தீற்றினான்.. 

அவன் விரல்பட்ட இடத்தில் மின்சாரம் பாய்ந்ததைப் போல இருந்ததில்


அவள் திணறிப் போனாள்..

அது தாராமங்களத்தின் சம்பிரதாயமாம்.. 


வரப் போகும் மனைவிக்கு மாப்பிள்ளையும் நலங்கு வைக்க
வேண்டுமாம்..

'இதை முதலிலேயே சொல்லித் தொலைச்சிருந்தா அலெர்ட்டா


இருந்திருப்பேனில்ல..' அவள் மனம் அரற்றியது..

எதிர்பாராத தொடுகையில் அவள் மனம் மத்தளம் வாசிக்க


ஆரம்பித்தது.. 

ஏஸி ஹாலிலும் வியர்த்துப் போனவளை அவன் தீர்க்கமாக பார்த்தபடி


மேடையை விட்டு இறங்கினான்.. 

அரவிந்தன் ஓடிப்போய் அவனுடன் ஒட்டுப் புல்லைப் போல ஒட்டிக்


கொண்டான்..

அவளை பார்வையிலே மிரட்டுகிறவன் அரவிந்தனிடம் வெகு சகஜமாக


வெகுநாள் பழகியவனைப் போலப் பேசிக் கொண்டிருந்ததை 'ஆ'வென
வாய் பிளந்து அதிசயத்துடன் பார்த்து வைத்தாள் மீ ரா.

'அடப்பாவி..! அக்கா ஆடுன்னா முறைக்கனும்.. தம்பி ஆடுன்னா


சிரிக்கனுமா..? நல்லா இருக்குடா உன் நியாயம்..'

ஹாலில் இரு வட்டாரும்


ீ எதிரும் புதிருமாக அமர்ந்தார்கள்.. 

நிச்சய தாம்பூலம் பத்திரிக்கை வாசிக்கப் பட்டது.. 

தட்டை மாற்றிக் கொண்டார்கள்.. 

மீ ராவை நிச்சயப் பட்டுப் புடவையை கட்டிக் கொண்டு வருமாறு


பணித்தார்கள்.. 

ஒரு நாளில் எத்தனை முறைதான் புடவையை மாற்றி ஒப்பனை


செய்து கொள்வது என்று அலுப்புடன் முணுமுணுத்தபடி எழுந்து
போனாள் மீ ரா.. 

கல்யாணப் பெண் என்றால் அப்படித்தான் என்று சமாதானம்


சொன்னாள் சுமதி.. 

என்னவோ செய்து கொள்ளுங்கள் என்று நிச்சயப் புடவைக்கு மாறி


கல்யாண மேடைக்கு வந்தாள்..

'திரும்பவும் நலங்கு வைப்பாங்களோ..'


அப்போதுதான் கழுவி விட்டு வந்த சந்தனத்தை நினைத்து அதைத்
தொடர வேண்டுமா என்று மீ ரா கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது
அவளது விரலை வலிமையான கரம் பற்றியது.

'அதே டச்சிங்..'

மீ ராவின் உடலில் மறுபடியும் மின்சாரம் பாய்ந்தது.. 

அவளையே பார்த்தபடி அவளது விரல்பற்றி நிச்சயதார்த்த மோதிரமாக


வைர மோதிரத்தை போட்டு விட்டான் ரகுநந்தன்.. 

அவளது விரலின் நடுக்கத்தில் அவனது புருவங்கள் உயர்ந்தன.

நிலாக் காயும் நேரத்திலே -6


ஏப்ரல் 13, 2021

 
 
"உட்காரு மீ ரா.."

மீ ராவின் தோள் பற்றி மணமேடையில் ரகுநந்தனின் பக்கத்தில் உட்கார


வைத்தாள் சுமதி.. 

தோழிப் பெண்ணாக இருப்பதற்கு நான் முந்தி, நீ முந்தி என மீ ராவின்


தோழிகளும், உறவுப் பெண்களும் போட்டி போட்டாலும் மகளை விட்டு
நகர மறுத்து விட்டாள் சுமதி..
'இவளே பயந்து போயிருக்கா.. இவளுககிட்ட விட்டா
அவ்வளவுதான்..' என்ற எச்சரிக்கையுணர்வு அவளுக்கு..

மகளின் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன்.

"இவளுக்கு என்ன வேணும்னு எனக்குத்தான் தெரியும்.. நான்


பார்த்துக்கறேன்.. நீங்கள்ளாம் ஃப்ரீயா பங்சனை என்ஜாய்
பண்ணுங்க.."  என்று சொல்லி விட்டாள்..

அதுவும் சரிதான் என்று அவர்கள் வந்திருக்கும் விருந்தினர்களை


வேடிக்கை பார்ப்பதும் அரட்டையடிப்பதுமாக கலகலத்துக்
கொண்டிருந்தார்கள்..

ரகுநந்தனை உராய்ந்தபடி உட்கார வைக்கப்பட்ட மீ ரா


பதறிப்போனவளாக நகர்ந்து உட்கார்ந்தாள்.. 

அவன் புருவச் சுளிப்புடன் அவளை முறைத்துப் பார்த்தான்..


அவளுடைய நடுக்கம் அதிகரித்தது.

'கடவுளே..! தாலி கட்டறதுக்கு முன்னாடியே இந்த முறை


முறைக்கிறானே.. கட்டின பின்னாலே எப்படி டிரில் வாங்குவானோ..'

அவளுக்கு உடம்பெல்லாம் உதற ஆரம்பித்தது.. 

அவள் பக்கமாக அவன் நகர்ந்து உட்கார்ந்தான்.. 

உராய ஆரம்பித்த உடல்களில் அவளுக்கு தீப்பற்றியதைப் போன்ற


திகுதிகுக்கும் உணர்வு ஏற்பட்டது.. 

அவள்மீ து இயல்பாக இடித்த அவனது முழங்காலில் உண்டான


குறுகுறுப்பை அடக்க முடியாமல் தவித்தாள்.. 

அய்யர் சொன்ன மந்திரங்களின் மீ து கவனம் போகாமல் சிதறியதில்


அவன் மீ ண்டும் அவளை முறைத்தான்.. 

பள்ளிச் சிறுமியைப் போல மலங்க மலங்க விழித்தபடி அய்யர்


சொன்ன மந்திரங்களைச் சொன்னாள்..

"கெட்டிமேளம்.. கெட்டிமேளம்.." கோரஸாக குரல்கள் ஒலித்தன..


நாதஸ்வரம் ஒலிக்க கெட்டி மேளம் முழங்க மங்கல நானை எடுத்து
அவள் கழுத்தில் கட்டினான் ரகுநந்தன்.. மூன்று முடிச்சுக்களைப்
போட்டான்..

'இனி இவன் என் கணவன்..! நான் இவனுடைய மனைவி..!'

இன்பமா, துன்பமா என்று புரியாத ஓர் உணர்வு அவளுக்குள் எழுந்தது.. 

அவன் எழுந்து நின்றான்.. அவளைப் பார்த்தான்.. 

என்ன செய்வது என்று புரியாமல் அவள் திருதிருத்தாள்.. 

அவன் முகத்தில் இளக்கம் வந்தது.. லேசான புன்னகைகூட எட்டிப்


பார்த்துப் போனது.. 

அவளுக்காக கை நீட்டினான்.. புரியாத குழந்தையாக அவனது கை மீ து


கை வைத்து அவள் பற்றிக் கொண்டதில் அவன் முகத்தில் மென்மை
படர்ந்தது..

'இது இவன்தானா..?' பிரமித்தாள்..

"எழுந்துக்க மீ ரா.. மாப்பிள்ளையோட கையை பிடிச்சுக்கிட்டு


அக்கினியை சுற்றி வரனும்.."

மகள் இன்னொருவனின் மனைவியாகி விட்டாள் என்ற உணர்வில்


கண்கள் பனிக்க.. பட்டுப்புடவையின் முந்தானையால் அதை
துடைத்தபடி குனிந்து மகளின் தோள் பற்றி எழுப்பி விட்டாள் சுமதி..

ரகுநந்தனின் கரம் அவளது கரத்தைப் பற்றித் தூக்கிவிட்டதில் எழுந்து


நின்றாள் மீ ரா.. 

அவன் அக்கினியை வலம் வரத் தொடங்கினான்.. அவள் அவனைத்


தொடர்ந்தாள்..

'அக்கினி சாட்சி..!' அவளது மேனி சிலிர்த்தது..

அர்த்தம் பொருந்திய இந்து மதத்தின் திருமணச் சடங்குகள் அவளை


ஆக்ரமித்தன.. 

முன்னால் அவளது கரம் பற்றியபடி கம்பீரமாக நடந்து


கொண்டிருந்தவனைப் பார்த்தாள்..
'இவன் என்னுடையவன்..' என்பதில் அவளது மனம் மயங்கியது..

மணமக்கள் மேடையை விட்டு இறங்கி பெரியவர்களிடம் ஆசி வாங்க


ஆரம்பித்தார்கள்.. 

கோபிநாதன், யமுனா தம்பதியரின் பாதம் பணிந்தார்கள்..

"தீர்க்காயுளும் தீர்க்க சுமங்கலியுமா இருக்கனும்.." 

ஒருமித்த குரலில் ஆசிர்வதித்தார்கள் ரகுநந்தனைப் பெற்றவர்கள்..

'இவர்தான் என் மாமனாரா..?'

அப்போதுதான் கோபிநாதனை பார்ப்பதைப் போல பார்த்து வைத்தாள்


மீ ரா.. 

ரகுநந்தனின் பார்வை அவள்மீ து படிந்தது.. அதில் ஏதோ


செய்தியிருப்பதைப் போல தோன்றியதில் புரியாமல் விழித்தாள்.. 

அவள் கைபற்றி அழுத்தினான் அவன்.. 

அவளது முகம் குங்குமமாக சிவந்து விட்டது.. 

உரிமையான அவனது தொடுகையின் ஸ்பரிசத்தைத் தாங்கிக் கொள்ள


முடியாமல் தவித்தாள்..

"உன்னோட மாமனார், மாமியார் கால்களில் விழுந்தால் போதுமா..? என்


மாமனார், மாமியார் கிட்ட ஆசி வாங்க வேணாமா..?"

மெதுவாக அவன் சிரித்த போது தெரிந்த பல்வரிசையின் அழகில்


அவள் பிரமித்தாள்.. 

சிரிக்கும் போது அவனது அழகு பன் மடங்காக பெருகுவதில்


ஆச்சரியம் கொண்டாள்..

பிரகாசம், சுமதி தம்பதியரின் கால்களில் அவர்கள் பணிந்து


எழுந்தபோது சுமதி அழுது விட்டாள்.. 

ஆண்கள் அழக்கூடாது என்று காலம் காலமாக அறிவுறுத்தப்படுவதால்


பிரகாசம் வந்த அழுகையை மறைத்துக் கொண்டு இமைகளைச்
சிமிட்டியபடி..
"என் உயிரையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் மாப்பிள்ளை.." என்று
தழுதழுத்தார்..

"அப்பா பாசமலர் டயலாக்கை உல்டா பண்ணிச் சொல்றாரு அத்தான்.."


என்றான் பக்கத்தில் நின்ற அரவிந்தன்..

"அதை நீயில்ல சொல்லனும்..? நீ கோட்டை விட்டுட்ட.. மாமா


கெட்டியா கேட்ச் பிடிச்சுட்டாரு.." ரகுநந்தன் சிரித்தான்..

அக்காள் கணவன், மைத்துனனின் சொந்தம் நிறைந்த உரையாடலைக்


கண்ட சுமதியின் மனம் நிறைந்தது.. 

மீ ராவுக்கோ இவன் இத்தனை இயல்பாக பேசக் கூடியவனா என்று


மயக்கம் மயக்கமாக வந்தது..

"தாலிகட்டி ஒரு நிமிசம்தான் ஆகுது.. அதுக்குள்ளே என்தம்பி என்னை


மறந்துட்டு, மாமனார், மாமியார்ன்னு ஆகிட்டானே.."

அழகாகக் கட்டப்பட்ட தேன்கூட்டைக் கலைப்பதைப் போல நந்தினி


சத்தமாக பேசினாள்.. 

சுமதி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. பிரகாசத்தின் முகம் மாறியது..


அரவிந்தன் சிரிப்பு காணாமல் போனது..

"எல்லோர் வட்டிலயும்
ீ இது இருக்கிறதுதான்.." பக்கத்தில் வந்த யமுனா
இதமாக கூறினாள்..

"நந்தினிக்கு தம்பிங்கிற பாசம்.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.."

"இல்லைங்கண்ணி.. இதில தப்பா எடுத்துக்க என்ன


இருக்க..? அரவிந்தனோட கல்யாணத்தில எங்க மீ ராவும் இதைப்
போலதான பேசி மிரட்டுவா..?"

சுமதி கலகலத்து சிரித்தபடி சூழ்நிலையின் இறுக்கத்தை தளர்த்தி


விட்டாள்.. 

புத்திசாலித்தனமாக செயல்பட்ட இருதாய்மார்களும் வாழ்க்கையை


வாழ்ந்து பார்த்த அனுபவசாலிகள்.. 

பிரச்னைகளை துளிரிலேயே கிள்ளிப் போட்டு விடும் சாதுர்யம்


கொண்டவர்கள்.. 
யமுனா நீட்டிய உதவிக்கரத்தை இறுகப் பிடித்து தன் பங்குக்கு பேச
வேண்டியதை பேசி விட்டாள் சுமதி.. 

வாழப் போவது அவர்கள் பெற்ற பிள்ளைகளாயிற்றே..

மனதுக்குள் தாயையும், மாமியாரையும் மெச்சியபடி நந்தினியின்


பக்கத்தில் போனான் ரகுநந்தன்..

"ஆசிர்வாதம் பண்ணுக்கா.." மீ ராவுடன் பாதம் பணிந்தான்..

ஈஸ்வரன் ரகுநந்தனைத் தடுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டார்..

"உங்க அக்கா குணம் தெரியாதா ரகு..? இப்படித்தான் எங்கே எதைப்


பேசனும்னு இல்லாம உரிமையப் பேசறோம்ன்னு எதையாச்சும் பேசி
வைச்சிருவா.. உடனே நீ காலில விழுக வந்துருவியா..?"

"விழுந்தாத் தப்பில்ல மாமா.. நீங்களும் அக்காவும் எனக்கு அப்பாம்மா


போலதானே.."

மைத்துனனின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போன ஈஸ்வரன் கட்டித்


தழுவிக் கொள்ள நந்தினி மட்டும் நிஷ்டூரமாக முகத்தை வைத்துக்
கொண்டு நொடித்தாள்.

"இப்படிப் பேசிப்பேசியே எங்களை தள்ளி வைச்சிட்டடா.."

மீ ராவுக்கு சங்கடமாக இருந்தது.. 

அவள்தான் தனது தம்பியைத் தன்னிடமிருந்து பிரித்து விட்டாள்


என்பதைப் போல நந்தினி பார்த்த பார்வையை அவளால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை..

அதை உணர்ந்தவனைப் போல ஈஸ்வரனின் அணைப்பிலிருந்து


விலகிய ரகுநந்தன் நகர்ந்தான்.. நந்தினியின் முகம் கடுமையானது.

"எங்கேடா போற..?"

"சின்னக்காகிட்ட ஆசிர்வாதம் வாங்கத்தான்.. நீ எட்டடி பாய்ந்தா அது


பதினாறு அடி பாயுமே.."

"ஓ..! அவ அந்த அளவுக்கு பெரிய ஆளா..?"

நந்தினி கண்கள் சிவக்கக் கேட்ட கேள்விக்கு..


"பின்னே.. இல்லையா..?" என்ற பதில் ராதிகாவிடமிருந்து புறப்பட்டது..

மாலையும் கழுத்துமாக நின்ற ரகுநந்தனின் கையைப் பிடித்துத்


தன்பக்கம் இழுத்துக் கொண்டாள் அவள்.. 

மீ ரா என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி விழித்தாள்..


நந்தினியோ வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு கிளம்பி விட்டாள்..

"என்னைவிட எட்டுக் குருத்துக்கு இளையவ.. நீ என்னைவிட பெரிய


ஆளா..?"

எட்டுக்குருத்து என்றால் என்னவாக இருக்கும் என்று மீ ரா


யோசித்தாள்.. அரவிந்தனுக்குத் தெரிந்திருக்கலாம்.. 

ஆனால் ரகுநந்தனின் மனைவியாக மாலையும் கழுத்துமாக


மணப்பெண்ணாக நிற்பவள் நாத்தனார்களின் வாக்குவாதத்தைப் பற்றிய
விளக்கவுரையை தம்பியிடம் எப்படிக் கேட்பவள்..? 

அவர்களே வில்லங்கத்தை விலைபேசி அழைப்பவர்களாக


இருக்கிறார்கள்.. 

இவள் வேறு புதிதாக ஒரு வில்லங்கத்தை வெற்றிலை பாக்கு வைத்து


அழைக்க வேண்டுமா..?

"எட்டுக்குருத்துக்கு இளையவளா..? உன்னைவிட இரண்டு வயசுதான்


இளையவள்.." என்ற ராதிகாவும் எட்டுக் குருத்தைப் பற்றிய
விளக்கத்தைச் சொல்லவில்லை..

சண்டை களை கட்டி விடும் அபாயச் சூழலில் ரகுநந்தன்


தமக்கைகளை அதட்டினான்..

"இப்ப என்னாங்கறிங்க.."

ஸ்விட்ச் போட்டதைப் போல இரண்டு தமக்கைகளும் அடங்கிப்


போனதில் ஆச்சரியப்பட்டுப் போனாள் மீ ரா.. 

கடுகடுத்த முகத்துடன் இருந்தவன் இமைகளை மூடித் திறந்து அவளை


அருகே வரும்படி அழைத்தான்.. 

மீ ராவின் முகம் சிவந்தது.. மெதுவாக அவன் பக்கத்தில் போனாள்.. 


அவள் கையை அவன் இறுக்கிப் பிடித்துக் கொண்டபோது மனதில்
இருந்த பயம் அகல்வதை வியப்புடன் உணர்ந்தாள்..

நிலாக் காயும் நேரத்திலே -7


ஏப்ரல் 14, 2021

 
ஈஸ்வரனைப் போலவே ராதிகாவின் கணவர் சண்முகமும்
மைத்துனனை பாதம் பணிய விடாமல் தடுத்து ஆரத் தழுவிக்
கொண்டார்.. 

ராதிகாவின் முகத்தில்தான் எள்ளும் கொள்ளும் வெடித்தன..

"அத்தானை கைக்குள்ள போட்டுக்கிட்டு அக்காவை ஏமாத்திட்டா தம்பி.."


என்று கண் கலங்கினாள்..

"ஒன்னும் ஏமாத்தலை.. உனக்கு கொடுக்க வேண்டிய மஞ்சக்காணி


நிலத்தைக் கொடுக்காம விட்டுப்புட்டாப்புலயா..? இல்ல.. வைர
நகைகளை பெட்டி பெட்டியா கொடுக்க மறந்துட்டாப்புலயா..? இல்ல..
வண்டி வண்டியா தாய் வட்டுச்
ீ சீ ரை அனுப்புறதை நிறத்திப்
புட்டாப்புலயா..? இல்ல.. தாய்மாமனா நம்ம வட்டு
ீ விசேசங்களில வந்து
சபையை நிரப்பி, நிரக்கச் சீர் செய்யலையா..? எதில ஏமாத்தினாப்புல
ராதிகா..? சொல்லு.. கேட்கிறேன்.." என்று வரிசைப்படுத்தினார்
சண்முகம்..

"அவன் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டிங்களே.."

"நீ மறக்கக் கூடாதுன்னுதான் சொல்றேன்.."

"சீர் கொடுத்துட்டாப் போதுமா..? என் தாய் வட்டுச்


ீ சொத்து சுகத்தை.."

ராதிகா சொல்லிக்கொண்டே போக சண்முகம் கடுமையான


முகத்துடன்..

"போதும் ராது.." என்று அதட்டினார்..


ஜீவுஜீவுத்துப் போன அவர் முகத்தைப் பார்க்க மீ ராவுக்கு பயமாக
இருந்தது.. 

அவளையும் அறியாமல் அவள் கையைப் பிடித்திருந்த ரகுநந்தனின்


கையை இறுக்கிப் பிடித்தபடி அவனுடன் ஒன்றி நின்று கொண்டாள்.. 

இறுகிப் போன முகத்துடன் தமக்கைகளின் வாக்குவாதத்தைக்


கவனித்துக் கொண்டிருந்த ரகுநந்தன் ஒர்நொடி மனைவியைப்
பார்த்தான்.. 

அவன் விழிகள் சொல்லிய மொழி புரியாமல் விழித்தாள் மீ ரா.. 

அவளது உள்ளங்கையை அவன் விரல்கள் அழுத்த நீவிக் கொடுத்ததில்


சிவந்திருந்த அவள் முகம் மேலும் சிவந்தது..

"அவளையே அதட்டறீங்க..?"

தங்கை மீ து திடிர் பாசத்துடன் குறுக்கிட்டாள் நந்தினி.. 

என்னடா இது.. இப்போதுதான் அடித்துக் கொண்டார்கள் என்று


விழிகளை விரித்தாள் மீ ரா.. 

நந்தினிதான் அப்படியென்றால் ராதிகா அவளுக்கும் மேல் இருந்தாள்.

"நல்லாக் கேளுக்கா.." என்று தமக்கையுடன் கூட்டணி போட்டுக்


கொண்டாள்..

"இவ என் பெண்டாட்டி அண்ணி.. அதனால அதட்டறேன்.." பல்லைக்


கடித்தார் ஈஸ்வரன்..

மனைவிக்குப் பதில் சொல்லலாம்.. மனைவியின் அக்காவுக்குப் பதில்


சொல்ல வேண்டுமென்றால் எப்படி..?

"நல்லா உறைக்கிறதைப் போலச் சொல்லுங்க தம்பி.. அப்போதாவது


இவ புத்தியில உறைக்குதான்னு பார்க்கலாம்.." சண்முகத்தை விட
அதிகமாக பற்களை நறநறத்தார் ஈஸ்வரன்..

"பெண்டாட்டின்னா மத்தவங்க முன்னால அதட்டுவங்களா..?"


நந்தினியின் பார்வை மீ ராவின் மீ து படிந்து நீதான் அந்த மற்றவள்


என்றது.. ரகுநந்தனின் முகம் கடினமானது.
"அதுதானே.." ராதிகாவும் கோரஸ் பாடினாள்..

"வேண்டாம் ராது.. நீ சொல்ற மத்தவங்க முன்னால


தேவையில்லாததைப் பேசாதே.. பெண்டாட்டியை மத்தவங்க முன்னால
அதட்டக் கூடாதுன்னு சொல்கிறியே.. நீ மட்டும் அந்த மத்தவங்க
முன்னால கூடப்பிறந்த தம்பியை அதட்டலாமா..? டில்லிக்கு
ராஜான்னாலும் பெத்தவங்களுக்கும் வளர்த்தவங்களுக்கும் பிள்ளைன்னு
ரகு பொறுமையா போகிறாப்புல.. அதை சாதகமா எடுத்துக்கிட்டு
நீயும், உன் அக்காவும் அளவுக்கு மீ றிப் பேசக் கூடாது..
சொல்லிட்டேன்.." சண்முகம் கடிந்து கொண்டார்..

"உன் வட்டுக்காரர்
ீ உன்னைத்தான் பேசனும் ராதிகா.. என்னைக் குறை
சொல்லக் கூடாது.." நந்தினி சினந்தாள்..

"அறிவு கெட்டவளே..! நீ மட்டும் தம்பியைக் கேள்வி


கேட்கலாமா..?" ஈஸ்வரன் கோபத்துடன் நந்தினியை கண்டித்தார்..

ராதிகாவும் நந்தினியும் அடங்கிப் போனவர்களாக வாய்க்குள்


முணுமுணுவென திட்டித் தீர்த்தபடி வேலையிருப்பதைப் போல
நகர்ந்து விட்டார்கள்.. 

அவர்கள் யாரைத் திட்டியிருப்பார்கள் என்று யோசித்தாள் மீ ரா.. 

அவர்களுடைய கணவன்மார்களைத் திட்டியிருப்பார்களா..? 

இல்லை ரகுநந்தனைத் திட்டியிருப் பார்களா..? 

இவையிரண்டும் இல்லாமல் மீ ராவைத் திட்டியிருப் பார்களா..?

கடைசியில் சொல்லப்பட்டதுதான் உண்மையாக இருக்கும் என்று


மீ ராவுக்குத் தோன்றியது.. 

நாத்தனார்களுக்கு வேண்டாத தம்பி மனைவியாய் அவள் ஆகி


விட்டாளே என்று பயமாய் இருந்தது.. 

நகரின் முக்கியஸ்தர்கள் சிலருடன் பேசவென்று ரகுநந்தன் நின்றுவிட..


கிடைத்த இடைவெளியில் அரவிந்தனிடம் தன் பயத்தைப் பகிர்ந்து
கொண்டாள்..
"எந்த நாத்தனாருக்குத்தான் அண்ணன் பெண்டாட்டியையும், தம்பி
பெண்டாட்டியையும் பிடித்திருக்கிறது..?" என்று கேட்டான் அவன்..

"என்னடா இப்படிச் சொல்ற..?"

"வேற எப்படிச் சொல்லச் சொல்ற..? நம்ம அம்மாவையே எடுத்துக்க..


தங்கம்ன்னா தங்கம்.. கலப்படமேயில்லாத இருபத்திநாலு காரட்
சொக்கத் தங்கம்..! அவங்ககிட்ட அவங்க அண்ணன் பெண்டாட்டி
எப்படின்னு கேட்டுப் பாரு.. பிடாரின்னு ஒற்றை வார்த்i யில
ஒபினியனைச் சொல்லிருவாங்க.. அத்தையிடம் அம்மாவைப் பத்திக்
கேட்டா அதுக்கும் மேலே ஒபினியனைச் சொல்லுவாங்கங்கிறது வேற
விசயம்.. இதுதான் நேச்சர்க்கா.. இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு
இருக்கியே.. விட்டுத் தள்ளிட்டுப் போவியா.."

"எங்கேடா போகச் சொல்ற..?"

"அத்தான்கிட்டப் போ.. அவர்தான் உன் அக்கா என்ன இப்படியொரு


பயந்தாங்குளியா இருக்குன்னு கேட்டுக்கிட்டு இருக்கார்.."

"என்னது..?"

ரகுநந்தன் அவளை பயந்தாங்குளி என்று சொல்லி விட்டானே என்று


ரோசப்பட்டுப் போனாள் மீ ரா.. 

அவள் பயந்தாங்குளியா..?

"பின்னே இல்லையா..?" என்று கேட்டான் அரவிந்தன்..

"ஆமாண்டா.. நீயும் உன் அத்தானும் சூப்பர் மேன்க.. நான் மட்டும்


பயந்தாங்குளி.. கண்டு புடிச்சுட்டீங்க.."

"நான் சூப்பர் மேனோ இல்லையோ.. அத்தான் சூப்பர் மேனேதான்..


வாவ்.. என்ன மாதிரியான பெர்சனாலிட்டி தெரியுமா..?"

"என்ன மாதிரியான பெர்சனாலிட்டியாம்..?"

மீ ரா ரகுநந்தனைப் பார்த்தாள்.. 

சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தான்.. கம்பீரமான கவர்ச்சயுடன்


இருந்தான்.. 

இவனுக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா என்றிருந்தது அவளுக்கு..


அவளைப் பார்த்தால் மட்டும் கற்சிலைபோல முகத்தை வைத்துக்
கொள்கிறான்.. 

மற்றவர்களிடம் பல்லைப் பல்லைக் காட்டிப் பேசுகிறான்.. 

மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்..? 

இந்த லட்சணத்தில் இவளைப் பார்த்து பயந்தாங்குளி என்று வேறு


சொல்லியிருக்கிறான்.. 

பெண் பார்க்க வந்ததில் இருந்து தாலிகட்டி மனைவியாக்கி பக்கத்தில்


நிறுத்தி வைத்திருக்கும் இந்த நொடி வரை பூச்சாண்டி போல முகத்தை
வைத்துக் கொண்டு முறைத்தால் பயப்படாமல் என்ன செய்வாளாம்..?

அதை அரவிந்தனிடம் சொன்னபோது அவன் விழுந்து விழுந்து


சிரித்தான்..

"பூச்சாண்டியா..? அத்தானா..? ஹா.. ஹா.."

சுற்றிலும் இருந்தவர்கள் அரவிந்தனின் சிரிப்பைப் பார்த்து விட்டுத்


தாங்களும் சிரிப்பில் கலந்து கொண்டதில் மீ ரா நடுங்கிப் போனாள்..

"வேண்டாம்டா அரவிந்த்.. பேசாம இரு.." கெஞ்சினாள்..

அழுது விடுபவளைப் போல அவள் ஆகிப் போனதில் ஒருவழியாக


சிரிபபை நிறுத்திய அரவிந்தன்..

"நீ.. இருக்கியே.." என்று செல்லமாக அலுத்துக் கொண்டான்.

"உன்னைப் போல தம்பி வாய்த்தா நான் இப்படித்தான்


இருந்தாகனும்டா அரவிந்தா.." 

தலையில் கை வைத்த மீ ரா ரகுநந்தன் இருக்கும் திசை பார்த்ததும்


அரண்டு விட்டாள்..

அங்கே மற்றவர்களுடன் பேசும் பேச்சு பேச்சாக இருக்க இவளையே


பார்த்துக் கொண்டிருந்தான் ரகுநந்தன்..

'மொத்தக் கூத்தையும் பார்த்திருப்பானோ..' அவள் மனம் குறுகுறுத்தது..

"ஏண்டா அரவிந்த்.."

"என்ன..?"
"உன் அத்தான் இங்கேயே பார்த்துக்கிட்டு இருக்காரே.."

"அவரோட பெண்டாட்டி..! அவர் பார்க்கிறார்.. இதை நான் தட்டிக் கேட்க


முடியுமா..? எங்கக்காவை ஏன் பார்க்கறிங்கன்னு கேட்டா நான் தாலி
கட்டியிருக்கேன்ம்பார்.. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும்தான்
தம்பி தட்டிக் கேட்கலாம்.. கல்யாணமா கிட்டா ஹஸ்பெண்ட்தான்
இன்சார்ஜ் எடுத்துக்கனும்னு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனைப் பிட்டுப்
பிட்டு வைப்பார்.."

"டேய்.. டேய்.. நிறுத்துடா.."

மீ ராவின் முகம் குங்குமமானது.. 

ரகுநந்தன் இருக்கும் திசையைப் பாராததைப் போல பார்த்தாள்.. 

அவன் ஒளிவு மறைவின்றி நேரடியாக அவளைப் பார்த்துக்


கொண்டிருந்தான்..

'எப்படிப் பார்க்கிறான் பார்..' அவள் மேலும் முகம் சிவந்தாள்..

"உனக்கு என்னதான் பிரச்னை..?"

"நாம பேசினதை அவர் கேட்டிருப்பாரா..?"

"எதை..? நீ அவரை பூச்சாண்டின்னு சொன்னதையா..? ஹா.. ஹா.."

"திரும்பவும் சிரிக்க ஆரம்பிச்சிராதேடா.. ப்ள ீஸ்.."

ரகுநந்தனை மறந்து மீ ரா அரவிந்தனிடம் கெஞ்ச ஆரம்பித்தபோது..

"என்ன ஜோக் அரவிந்தன்.. என்னிடம் சொன்னா நானும் சேர்ந்து


சிரிப்பேன்ல்ல.." என்ற ரகுநந்தனின் குரல் அருகில் கேட்டது.

மீ ராவின் உடல் விறைத்தது.. 

அவள் நகர்ந்து லேசாக தலையைக் குனிந்தபடி நின்று கொண்டாள்.. 

அவனைக் கண்டதும் அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தில் ரகுநந்தனின்


புருவங்கள் சுருங்கின..

"அதுவா அத்தான்..?" என்று ஆரம்பித்த அரவிந்தன்..

"அரவிந்தா.." என்ற பிரகாசத்தின் குரலில்..

"அப்பா கூப்பிடறார் அத்தான்.." என்று ரகுநந்தனின் முகம் பார்த்தான்..


"அப்பாதான் பர்ஸ்ட்.. ஜோக்கெல்லாம் நெக்ஸ்ட்.." சிரித்தபடி அனுமதி
கொடுத்தான் ரகுநந்தன்..

அரவிந்தன் சிட்டாக பறந்து விட்டான்.. 

பூமிக்குள் புதையல் இருக்கிறதா என்று ஆராய்பவளைப் போல


தலையைக் குனிந்து கொண்டிருந்த மீ ராவிடம் எதையோ சொல்லப்
போனான் ரகுநந்தன்.

"ரகு.. கலெக்டர் கிளம்பறார்.."

கோபிநாதன் அழைத்ததும் மீ ராவை ஆழ்ந்து பார்த்தபடி


போய்விட்டான்.. 

'அப்பாடி..' என்ற விடுதலையுணர்வுடன் சீராக மூச்சை விட்டாள் மீ ரா..


திருமணப் பரபரப்பில் அவளுக்கு அயர்வாக இருந்தது..

நிலாக் காயும் நேரத்திலே -8


ஏப்ரல் 15, 2021

 
காருக்குள் ஒன்றும் கூட்டமில்லை.. பின்பக்க இருக்கையில்
ரகுநந்தனும், மீ ராவும் மட்டும்தான் இருந்தார்கள்.. 

ஆனாலும் என்னவோ இடமே இல்லாததைப் போல அவன் அவளுடன்


ஒட்டி உட்கார்ந்து வந்தான்.. போதாக்குறைக்கு அவளது தோளைச்
சுற்றிக் கையைப் போட்டிருந்தான்.. 

மீ ராவுக்கு இம்சையாக இருந்தது.. கையை எடு என்று எப்படிச்


சொல்வது என்று தெரியாமல் திணறினாள்.. 

அரவிந்தன் கூட வந்தாலாவது அவனிடம் சொல்லிச் சொல்லச்


சொல்லலாம்.. 

எங்கே..? ரகுநந்தன்தான் அதற்கு வகையில்லாமல் செய்து விட்டானே..


திருமண மண்டபத்தில் மதிய உணவு விருந்து முடிந்ததும்
விருந்தினர்கள் அவரவரின் ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்தார்கள்.. 

ஓய்வெடுக்க வேண்டும் என்று மீ ரா மணப்பெண்ணின் அறைக்குப்


போகக் கிளம்பினாள் 

ரகுநந்தன் அவளை முறைத்து வைத்தான்..

"என்னவாம்டா..?" அரவிந்தனின் காதைக் கடித்தாள்..

"உலகத்திலேயே கட்டிக்கிட்ட ஹஸ்பெண்டுக்கு தூது அனுப்பற ஆள்


நீயாத்தான் இருப்ப.."

அலுத்தபடி ரகுநந்தனிடம் போனான் அரவிந்தன்.. திரும்பி வந்தவன்..

"ரெஸ்ட் எடுக்க கல்யாணப் பெண்ணுக்கான ரூமுக்குப் போகப்


போனியா..?" என்று குற்றம் செய்தவளை விசாரிப்பதைப் போல
விசாரித்து வைத்தான்..

"ஆமாம்.. அதுக்கென்ன..?" விழித்தாள் மீ ரா..

"அதுக்கென்னவா..? அப்படியே மண்டையில ஒரு போடு போட்டேன்னா


பாரு.. ஏன்க்கா இப்படியிருக்க..? அங்கே என்னடான்னா அத்தான் கத்தோ
கத்துன்னு கத்தறாரு.."

"எதுக்காம்..?"

"எல்லாம் என்னோட கூமுட்டை அக்காவாலதான்.."

'இவன் என்ன என்னை விட்டுட்டு அவன்கூட கூட்டுச் சேர்ந்துக்கிறான்..


அவன் என்னையும் என் தம்பியையும் பிரிக்கப் பார்க்கிறானா..?'

அவளையும் அரவிந்தனையும் பிரிக்க வந்த அன்னிய நாட்டு


சதிகாரனைப் பார்ப்பதைப் போல ரகுநந்தனை பார்த்து வைத்தாள் மீ ரா.. 

நல்ல வேளையாக திருமணத்திற்கு வந்திருந்த நெருங்கிய உறவினரை


வழியனுப்பிக் கொண்டிருந்த ரகுநந்தன் அவள் பார்வையை
பார்க்கவில்லை..

"அங்கேயென்ன பார்வை வேண்டிக்கிடக்கு..?"


"இது என்னடா அனியாயமா இருக்கு..? நானென்ன வழியில்
போகிறவனையா பார்த்தேன்..? என்னைக் கட்ட்ட்.. டிக்கிட்ட
ஹஸ்ஸ்ஸ்.. பெண்டு.. அவரைத்தானே பார்த்தேன்..?"

மீ ரா 'கட்டிக்கிட்ட ஹஸ்பெண்டு..'க்கு அழுத்தம் கொடுத்து மென்று


துப்பினாள்..

"ஆஹா..! என்ன ஒரு அன்பு..! எந்தப் புதுப் பெண்ணும்


புதுமாப்பிள்ளையைப் பத்தி இத்தனை அன்பா பேச மாட்டா.."

"நான் பேசுவேன்.."

"அதானே.. நீயாரு.."

"அதையும் நீயே சொல்லு.."

"கூமுட்டை அக்கா.."

"அடிவாங்கப் போறடா அரவிந்தா.. அவர் என்ன சொன்னார்ன்னு இங்கே


வந்து தையாத்தக்கான்னு குதிக்கிற..?"

"பின்னே என்ன..? கல்யாணமான மாப்பிள்ளையும் பெண்ணும் தனித்தனி


ரூமில ரெஸ்ட் எடுக்கனும்னு போனா பாக்கிறவங்க என்ன
சொல்வாங்க..?"

"ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. பெண்ணும் மாப்பிள்ளையும்


பிரைவஸியை மெயின்டெயின் பண்றாங்கன்னு சொல்லுவாங்க.."

"தாராமங்களத்தில அப்படிச் சொல்ல மாட்டாங்களாம்.. ஹஸ்பெண்ட்


அண்ட் வொய்புக்குள்ள பிரைவசி என்ன வேண்டிக்கிடக்குன்னு
சொல்லுவாங்களாம்.."

"அப்படின்னு உன் அத்த்த்.. தான்ன்ன்.. சொன்னாரா..?"

"எதுக்கு அத்தானில இத்தனை ஆவேசம்..?"

"ஆசை அதிகமாகிருச்சு.. அதனாலதான்.."

பேசிவிட்டுத் திரும்பியவள் திகைத்து நின்றாள்.. 

அங்கே அவளைக் கடித்துத் தின்று விடுவதைப் போலப் பார்த்தபடி


ரகுநந்தன் நின்றிருந்தான்.. 
அவளைப் பார்த்தபடி அரவிந்தனிடம்..

"போகலாமா..?" என்றான்..

"இதோ நீங்க முன்னால போனா அக்கா பின்னால ஃபாலோ பண்ணி


வந்துக்கிட்டே இருக்கும் அத்தான்.."

அரவிந்தன் உத்தரவாதம் கொடுக்க அமர்த்தலான பார்வையுடன்


ரகுநந்தன் முன்னால் நடந்தான்.. 

பின்னால் தொடராமல் எங்கேயோவது ஓடிப்போய் விடலாமா என்று


யோசித்தாள் மீ ரா..

"எனக்கு ரெஸ்ட் எடுக்கனும்னு தோணலைடா.." தம்பியிடம்


முறையிட்டாள்..

"இப்பத்தானே டயர்டா இருக்கேன்னு சொன்ன..?" அவன் மடக்கினான்..

"இப்ப டயர்டு ஓடியே போயிருச்சு.. இட்'ஸ் கான்.. என்னை நம்புடா


அரவிந்தா.."

"இதோ பாரு.. உன் அழிச்சாட்டியத்துக்கு நான் ஆளில்ல.. ஆல்ரெடி


அத்தான் ரெஸ்ட் எடுக்கத் தயாராகிட்டாரு.. நீயும் ரெஸ்ட்
எடுத்துத்தான் ஆகனும்.."

"இது என்னடா அராஜகமா இருக்கு..? அவரு டயர்டா இருந்தா


அவர்தான் ரெஸ்ட் எடுக்கனும்.. நானும் ஏண்டா ரெஸ்ட் எடுக்கனும்..?"

"அது அப்படித்தான்.."

அரவிந்தன் அவளை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போய்


ரகுநந்தனின் அறைக்குள் உட்கார வைத்துவிட்டு நழுவினான்.. 

அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.. 

ரகுநந்தன் ஏஸியைப் போட்டு விட்டுக் கதவைச் சாத்தினான்.. 

நடுக்கத்துடன் எழுந்து நின்று விட்டாள் மீ ரா.. 

பூட்டப்படாமல் இருந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே வந்த


யமுனா மருமகளிடம் கனிவாக..

"ஏம்மா நிற்கிற..? உட்காரு.." என்றாள்..


"உங்க மருமக பூச்சாண்டியைக் கண்டு பயந்து போயிருக்காம்மா..
உட்கார்ந்தா பூச்சாண்டி பிடிச்சுக்கும்ன்னு நின்னுக்கிட்டே தவம்
செய்யறா..?"

அவளைத் துளைப்பதைப் போலப் பார்த்தபடி ரகுநந்தன் சொன்னான்.. 

மீ ரா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவள் சொன்னதை அவன்


கேட்டு விட்டான் என்பதில் உடல் நடுங்கியது.

'எதையும் பேச முடியலை.. எல்லாத்தையும் கேட்டுத்


தொலைச்சிடறான்..'

மாமியாரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் கைகளைப்


பிசைந்தாள்.. யமுனாவோ சிரித்தாள்..

"போடா போக்கிரி.. நீ பக்கத்தில இருக்கறப்ப புதுசா ஒரு பூச்சாண்டி


வரப் போகிறானாக்கும்..?"

மாமியாரின் கேள்வியில் மீ ராவுக்கு சிரிப்பு வந்து விட்டது.. 

அடக்கிக் கொண்டாள்.. அதை கண்டு கொண்டவனின் ஆழ்ந்த


பார்வையில் சிரிப்பு ஓடி விட்டது..

"நீங்க ஒருத்தங்க போதும்மா.. நான் பூச்சாண்டின்னே முடிவாகிரும்.."

மகனின் பேச்சில் கலகலவென சிரித்தாள் யமுனா.. 

அதைப் போல ஏன் தன்னால் சிரிக்க முடியவில்லை என்று


தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள் மீ ரா.. 

அவனைக் கண்டு ஏன் அஞ்சி நடுங்கு கிறாள்..? அவன் யார்..? அவளது


கணவனாகி விட்டவன்தானே..

'கணவன்தான்.. காதல் கணவனா..?'

இமைமூடி யோசித்தாள் மீ ரா.. அவளது பின்னந்தலையில் அடி


விழுந்தது..

'யார்..?' கோபத்துடன் இமை திறந்தாள்..

"தூக்கம் வந்தா பெட்டில படுத்து தூங்குவியாம்.." என்றபடி அரவிந்தன்


நின்று கொண்டிருந்தான்..
'தூங்குவியாம்ன்னா என்ன அர்த்தம்..? இதை இவனாச் சொல்லலைன்னு
அர்த்தம்.. இவன்தான் இவனோட அத்தான் சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளையாகிட்டானே.. இவன்கிட்ட சேதி சொல்லி விட்டு அவன்
எங்கே போயிட்டான்..?' பார்வையால் துழாவினாள்..

"என்னத்தைப் பார்க்கிற..?"

"நீ எப்போடா வந்த..?"

"இப்பத்தான்.. நீயென்ன இப்படியாகிட்ட..?"

"எப்படியாகிட்டேன்.."

"முழிச்சுக்கிட்டே தூங்கிக்கிட்டு இருக்க..?"

"அது ஒரு குத்தமாடா..?"

"இல்லையா பின்னே..? நீ கல்யாணப் பொண்ணுக்கா.."

"இதையே எல்லோரும் சொல்லுங்கடா.."

அலுத்துக் கொண்டாள் மீ ரா.. 

இயல்பாக இருக்க முடியாமல் கல்யாணப் பெண் வேசம் கட்டியாகி


விட்டது. 

இனி புதுப் பெண்டாட்டி, புது மருமகள் வேசங்களையும் கட்டியாக


வேண்டும்.

தூக்கம் வருவதைப் போல இருந்தது.. துரத்தினாள்.. 

அது எதற்கு வம்பு..? கல்யாணப் பெண் தூங்கலாமா என்று அதற்கும்


வழக்கு வைப்பார்கள்..

பின் மதிய வேளையில் மண்டபமே காலியாக இருந்தது..


அரவிந்தனையும் அவள் பக்கத்து உறவினர்களையும் காணோம்.. 

எங்கேயென்று விசாரிக்க முடியாமல் குலதெய்வ கோவிலுக்குக்


கிளம்பச்சொல்லி விட்டார்கள்.. 

அங்கிருந்து தாராமங்களத்துக்குப் போக வேண்டுமாம்..

தாராமங்களம்..! 

அவளது புகுந்தவடு
ீ அங்குதான் இருக்கிறது.. 
காருக்குள் ஏறியவளைக் கை வளைவிற்குள் கொண்டு வந்தான்
ரகுநந்தன்.. 

ஒடுங்கவும் முடியாமல் உரசவும் முடியாமல் தவித்துப் போனாள் மீ ரா..

நிலாக் காயும் நேரத்திலே -9


ஏப்ரல் 16, 2021

 
எழுமிச்சை பழ நிறத்தில் இருந்த மெல்லிய மைசூர் பட்டுச்சேலை
மெலிதாக அவளது உடலைச் சுற்றியிருந்தது.. 

தளரப் பின்னப்பட்ட கூந்தலில் மொட்டு மொட்டான மல்லிகை


மலர்களைக் கொண்டு நெருக்கிக் கட்டப்பட்ட மல்லிகை மலர்ச்சரம்
தோள்களில் வழியும்படி சூட்டப் பட்டிருந்தது.. 

கழுத்தில் காலையில் கட்டப்பட்ட புது மஞ்சள் தாலிச் சரடு மின்ன


அதற்குத் துணையாக மெல்லிய தங்கச் சங்கிலியும்  கழுத்தில் வைர
அட்டிகையும் மின்னின.. காதுகளில் வைர ஜிமிக்கிகள் ஆடின.. 

கைகளில் தங்க வளையல்களும் வைர வளையல்களும் குலுங்கின.. 

நெற்றியில் குங்குமத் தீற்றுக்கு மேல் அடர்சிவப்பில் ஸ்டிக்கர் பொட்டு..

"தேவதை போல இருக்கே மீ ரா.."

மகளின் கன்னம் தொட்டு வழித்தாள் சுமதி.. நடுங்கும் விரல்களுடன்


அவள் கையைப் பிடித்துக் கொண்டாள் மீ ரா..

"பயமாய் இருக்கும்மா.."

சுமதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. 

எப்படி புரிய வைப்பாள்..? 


உறவினர்களெல்லாம் மாலையில் புறப்பட்டு விட அவளும் பிரகாசமும்
அரவிந்தனை அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு
தாராமங்களத்துக்கு மணமக்களுடன் கிளம்பி வந்திருந்தார்கள்.. 

புகுந்த வட்டில்
ீ மகளைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள
வேண்டிய கடமை சுமதிக்கு இருந்தது.. 

புது இடம்..! மகளை தனித்து விட முடியாது..

அன்றைய இரவுக்கான அலங்காரத்தை அவளே செய்து விட்டாள்.. 

மெல்லிய அலங்காரத்திலும் தேவதையாக ஜொலித்த மகளின் அழகில்


அவள் மனம் பெருமிதம் கொண்டது.. 

ஆனால்.. மீ ரா இப்படி பயந்து நடுங்குகிறாளே..

"அவர் உன்னோட ஹஸ்பெண்டும்மா.."

"எப்படிம்மா..? இன்னைக்குக் காலையிலதான் தாலி கட்டியிருக்கார்..


உடனடியா முன்னே பின்னே தெரியாதவரை ஹஸ்பெண்டுன்னு
எப்படிம்மா நினைக்கிறது..?"

'கடவுளே..!' சுமதி தலையில் கை வைத்துக் கொண்டாள்..

இப்படிப் பேசும் மகளை முதலிரவு அறைக்குள் எப்படி அவள் அனுப்பி


வைப்பாள்..? 

மீ ராவின் தோழிகளில் யாராவது ஒருவரை நிறுத்தி


வைத்திருக்கலாமோ என்ற காலங்கடந்த ஞானோதயம் ஏற்பட்டது.. 

அவர்களின் உறவுப்பெண்களை நிறுத்தக் கூடாது.. என்று சுமதி


தீர்மானித்திருந்தாள்.. 

பொறாமையும் புகைச்சலும் மணவாழ்வை ஆரம்பிக்கப் போகும்


மகளை பாதித்து விடக் கூடாது.

"மீ ரா.."

என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் திணறிக் கொண்டிருந்த


போது..
"பெரியம்மா.. நாங்க பார்த்துக்கறோம்.. நீங்க நகருங்க.." என்றபடி
நந்தினியின் மகள் நந்திதா வந்தாள்.. அவளுடன் இருந்த மோனிகா
சிரித்தாள்..

"இதெல்லாம் எங்களோட டிபார்ட்மெண்ட் பெரியம்மா.."

ரகுநந்தனின் அக்கா மகள்களின் ஆதரவு கிட்டியதில்


நிம்மதியடைந்தாள் சுமதி.. 

மிகப்பெரிய தர்ம சங்கடத்திலிருந்து விடுவித்து விட்ட அந்தச் சின்னப்


பெண்களை நன்றியுடன் நோக்கினாள்..

"விட்டா பெரியம்மா நமக்கு கோவில் கட்டியே கும்பிட்டு விடுவாங்க


போல இருக்கு மோனி.."

"ஆமாமா.. ஏன் மீ ரா.. இப்படியா பெரியம்மாவை அரட்டி வைப்பீங்க..?"

"பயமாயிருக்காம்டி.."

"நாளைக்கு காலையில இதே வார்த்தையை சொல்லு வாங்களான்னு


பார்ப்போம்டி நந்திதா.."

"கரெக்ட்.."

பெண்கள் இருவரும் மீ ராவின் காதருகே குனிந்து ரகசியம்


பேசினார்கள்.. 

கன்னம் சிவந்து போன மீ ரா கைகளால் முகத்தை மூடிக் கொண்டு


விரலிடுக்கில் தாயைத் தேடினாள்..

"துணைக்கு ஆள் சேக்கறிங்களா..? அதெல்லாம் நடக்காது.. பெரியம்மா..


உங்க ரூமுக்குப் போங்க.. கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டிங்கள்ல..
இனிமே மீ ரா அவங்க அத்தானோட சொத்து."

"ஆமாமா.. சரியாச் சொன்னேடி நந்திதா.. நம்ம மாமா பாவம்..


மேய்ச்சலுக்குத் தயாரா பர்ஸ்ட் நைட் ரூமில காத்திருக்கார்.. இவங்க
என்னடான்னா அம்மாவோட முந்தானைச் சேலையைப் பிடிச்சுக்கிட்டு
இருக்காங்க.."

"அதைச்சொல்லு.. அங்கே நம்ம மாமா இவங்களோட முந்தானைச்


சேலையைப் பிடிக்கக் காத்துக்கிட்டு இருக்காரே.."
அந்தப் பெண்களின் கேலியில் சுமதிக்கே லஜ்ஜையாகி விட்டது.. 

மீ ராவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. 

சுமதியின் பின்னால் ஒளிய மாட்டோமா என்று ஏங்கி தவித்துப்


போனாள்.. 

அங்கிருந்தால்தானே பிரச்னையென்று சுமதி மகளைக் கண்டு


கொள்ளாமல் நழுவி விட்டாள்.. 

மீ ரா தனித்து நாத்தனார் பெண்களிடம் மாட்டிக் கொண்டாள்.. 

அவர்கள் பேசிச் சிரித்த ரகசியப் பேச்சுக்களில் அவளுக்கு வெட்கம்


பிடுங்கித் தின்றது.

"வாங்க.. வாங்க.." நந்திதா மீ ராவின் கையைப் பிடித்து இழுத்தாள்..

"எங்கே..?" தடுமாறினாள் மீ ரா..

"மாடியில மாமா ரூமில தொட்டில் கட்டி வைச்சுட்டுக் காத்துக்கிட்டு


இருக்கார்.. நீங்க போனிங்கன்னா தாலாட்டுப் பாடி தூங்க வைப்பார்.."
நொடித்தாள் மோனிகா..

"அருமையாச் சொன்னேடி மோனி.." மெச்சிப் போனாள் நந்திதா..

இரண்டு பக்கமும் நந்திதாவும் மோனிகாவும் ரகசியம் பேசிக் கொண்டு


வர.. மாடிப்படியேறி மீ ராவின் கால்கள் பின்னின.. 

திரும்பி விடலாம் போலத் தோன்றியதில் திரும்பிப் பார்த்தாள்..

"என்ன.. மாடிப்படியிலே குதிச்சு ஓடிப் போகலாம்ன்னு வழியைப்


பார்த்து வைச்சுக்கறிங்களா..?" நந்திதா கேட்டாள்..

"என்னடி நந்திதா இவங்க இப்படி இருக்கிறாங்க..? கேட்டுக்கங்க மீ ரா..


ஊரு பூரா எங்க மாமாவுக்கு முறைப் பொண்ணுகதான்.. அத்தனையும்
மாமாகிட்ட சின்ன வடா
ீ வரட்டுமா, பெரிய வடா
ீ வரட்டுமான்னு வலை
போடற ஆளுகதான்.. இப்படி பயந்து நடுங்கினா கோட்டையைப்
பிடித்துக் கொடியை நட முடியாது.. கோட்டை விட்டுட்டு
உக்காந்திருக்க வேண்டியதுதான்.."

"ஊரை விடுடி மோனிகா.. உன்னையும், என்னையும் எடுத்துக்க.. எங்க


மாமன்தான், எங்களுக்கு மட்டும்தான்னு காத்திருந்தவங்களோட
மாமாவை நேத்து வந்த இவங்க தட்டிப் பறிச்சிட்டாங்க.. அதை
இறுக்கிப் பிடிச்சுக்கனுமா வேண்டாமா..?"

"ஆமாங்க மீ ரா.. நாங்க பாக்கத்தான் ஃசாப்ட் லேடிங்க.. நிஜத்தில பாத்தா


பக்கா கேடிங்க.. சைக்கிள் கேப்பில எங்க மாமாவை ரூட் மாத்தி
ஓட்டிக்கிட்டுப் போயிருவோம்.. கெட்டிக்காரத்தனமா முந்தானையில
முடிஞ்சு வைச்சுக் காப்பாத்திக்கங்க.."

"பர்ஸ்ட் நைட் ரூம் வந்தாச்சு.. நாங்க சொல்லுறதைச் சொல்லிட்டோம்..


இனி மகளே.. உங்க சமத்து.."

"ஆமாமா.. மாமா பாடு, உங்க பாடு.."

பெண்கள் இருவரும் ரகுநந்தனின் அறைக்குள் மீ ராவைத் தள்ளி


விட்டார்கள்.. 

அவர்கள் தள்ளிய வேகத்தில் உள்ளே நின்றிருந்த ரகுநந்தனின் மார்பில்


சாய்ந்து வழ்ந்தாள்
ீ மீ ரா.. 

அவள் விழுந்து விடாமலிருக்க அவன் இறுக்கி அணைத்துக்


கொண்டான்..

"கம்மங்காடே.. கம்மங்காடே..!

           காளையிருக்கு பசியோடு.."

வெளியே பாடல் கேட்டது.. கூடவே கலகலவென்ற சிரிப்பு சப்தம்


வேறு..

"இதுதான் முதல் ராத்திரி..

           அன்புக்காதலி.. என்னை ஆதரி.."

தொடர்ந்த பாடலில் முகச் சிவப்புடன் விலகிக் கொண்டாள் மீ ரா.. 

ரகுநந்தனின் பாறை முகத்தில் சிரிப்பு படர்ந்தது.. 

அவன் கதவருகே போய் அக்காள் மகள்களிடம் பேசினான்..

"ஏய்ய்.. வாலுகளா..! தூங்கப் போகலை..?"


"ஹ..ஹ..ஹ..! இப்படி அதட்டினா நாங்க ஓடிப் போயிருவோம்.. நீங்க
கதவை லாக் பண்ணிக்கலாம்ங்கிற கணக்குத்தானே மாமா..?"

"உதை வாங்கப் போற.."

"அதை உங்க பெண்டாட்டிக்குக் கொடுங்க.. கட்டிக்க மாட்டாராம்.. உதை


கொடுக்க மட்டும் வருவாராம்.. யாருகிட்ட..?"

நந்திதாவும் மோனிகாவும் வம்பிழுத்து விட்டுப் போய் விட்டார்கள்.. 

சிரித்த முகத்துடன் கதவை அடைத்து விட்டுத் திரும்பினான்


ரகுநந்தன்.. 

படபடப்புடன் நகர்ந்த மீ ரா கட்டில் தடுக்கியதில் நின்றாள். 

படுக்கையைச் சுற்றித் தொங்கிய மலர்சரங்களின் வாசம் அவளை


மயக்கியது. 

மெத்தையில் துவப்பட்டிருந்த மலர்கள் கண்சிமிட்டி நடக்கப் போகும்


நிகழ்வினை அறிவுறுத்தின.

மீ ராவின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தன. 

அவளது பார்வை தரையில் பதிந்திருந்தது.. 

குனிந்த தலையை நிமிர முடியாமல் வெட்கம் அவளை ஆட்


கொண்டது. 

நடுங்கும் விரல்களை மறைக்க அவற்றை மடக்கிக் கொண்டாள்.. 

ரகுநந்தன் அருகில் வருவதை உணர்ந்ததில் அவளது உடல்


நடுங்கியது.

ரகுநந்தன் அவளை சமீ பித்தான்.. அசையாமல் அவனது பார்வை


அவள்மீ தே மையம் கொண்டிருந்தது. 

நடுங்கும் அவளது தளிருடல் கண்டவனின் முகத்தில் மென்மை


விரவியது.. கனிந்த பார்வையுடன் அவள் விரல் தொட்டான்.. 

பதறிப் போனவளாக அவளது விரல்களை உறுவிக் கொள்ள


முயன்றாள் மீ ரா.. அவன் விடவில்லை.

"ஊஹீம்.." என்றான் கண்டிப்புடன்.


பள்ளி மாணவியைப் போல அவன் அதட்டியதில் அவளுக்குள்
கோபமும் ரோசமும் பொங்கின.. 

இவன் என் கையைப் பிடிப்பான்.. மறுத்தால் அதட்டுவானா என்று


மனதுக்குள் பொருமினாள்.

"நீ சின்னக்குழந்தையில்லை.. நான் உன் புருசன்..! இது நம்மோட ரூம்..!


இனி உன்னோட ரூம்..! இந்த நாலு சுவத்துக்குள்ள நமக்கான
வாழ்க்கை ஆரம்பமாகப் போகுது.. புரிஞ்சு நடந்துக்க.."

அவள் விரல் பற்றிய அவனது விரல்களின் அழுத்தத்தில் நடுங்கிப்


போனாள் மீ ரா.. 

புரிந்து நடந்து கொள்ளுதல் என்றால் என்ன என்று அவளுக்குப்


புரியவில்லை.. 

அவளது விரல்களைப் பற்றிய அவனது விரல்களின் அழுத்தம் அதை


அவளுக்கு புரிய வைக்க ஆரம்பித்தது. 

அவளது உள்ளங்கையை அழுத்தி வருடி உயர்த்தி தன் இதழ்களில்


பதித்து முத்தம் கொடுத்தான் அவன்.

ஆழிப் பேரலையொன்று எழுந்து வந்து அவளை அமிழ்த்தி


வழ்த்தியதைப்
ீ போல நிலை குலைந்து போனாள் மீ ரா.

நிலாக் காயும் நேரத்திலே -10


ஏப்ரல் 17, 2021

10

 
'எப்படி..?'

மீ ராவால் அவனது முத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. 

அன்றுதான் அவன் அவளுக்குத் தாலி கட்டியிருக்கிறான்.. 

முதல்நாள் வரை அவனது முறைப்பையும் விறைப்பையும் தவிர


அவன் எப்படிப்பட்டவன், எதுபோன்ற ரசனைகளையுடையவன், என்ன
மாதிரியான குணாதிசியம் வாய்க்கப் பெற்றவன் என்று எதுவும்
அவளுக்குத் தெரியாது.

அவள் பாட்டுக்கு தேமேயென்று கல்லூரிக்குப் போனாள்.. 

படித்தாள்.. பட்டம் வாங்கினாள்.. 

மேலே படிக்கலாம் என்ற யோசனையுடன் அவளிருக்க ஒரு


புயலைப்போல அவளது வாழ்க்கையில் பிரவேசித்து அனைத்தையும்
மாற்றியமைத்து விட்டான் அவன்.

ஏதோ ஓர் திருமணத்தில் பார்த்தானாம்.. 

பிடித்திருக்கிறது என்று சொல்லி பொதுவான உறவினர்கள் மூலம்


பெண் கேட்டு விட்டான்.. 

ஜாக்பாட் அடித்ததைப் போல அவளது பெற்றோர் மகிழ்ந்து போய்


அவனுக்கு அவளை தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்கள்..

அவளிடம் சம்மதம் கேட்டார்கள்தான்.. 

அவள் மறுத்து விடக் கூடாது என்ற பரிதவிப்புடன் கேட்கப்பட்ட


சம்மதம் அது.. 

தாராமங்களத்தின் ஜமீ ன் வம்சத்தில் பெண் கொடுப்பது என்பது


உறவினர் வட்டாரத்தில் அவள் குடும்பத்தை உயர்நிலையில் நிறுத்தும்
என்பதைச் சொல்லிச் சொல்லிக் கேட்கப்பட்ட சம்மதம் அது.

மீ ராவால் மறுக்க முடியவில்லை.. 

பெண் பார்க்க வந்தவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறதா என்று


தெரியவேயில்லை.. 

அவன் பிடித்துப் போனதினால் பெண் கேட்டு விட்டான் என்பதை


அவளால் நம்ப முடியவில்லை.. 

பிடித்துப் போய் பெண் கேட்டு விட்டவன் பெண் பார்க்க வந்த சமயம்


பெண்ணின் முகத்தைக் கூடப் பார்க்காமல் செல்போனை காதுக்குக்
கொடுத்து வெளியேறி விடுவானா..?
அதுதான் போகட்டும்.. அரவிந்தன் போன் போட்டுக் கொடுத்த போது
பேச முடியாமல் அவள் தடுமாறினாளே.. அப்போது அவன் எப்படிப்
பேசினான்..?

"யோசிச்சு வைத்துக்க.. தெரியலைன்னா டியூசன் எடுத்துக்க..


மனப்பாடம் பண்ணி மனதில் வைத்து தாராமங்களத்துக்கு வந்த
பின்னால் பேசு.. இப்ப எனக்கு வேலை நிறைய இருக்கு.."

இப்படிச் சொன்னவன்தான் அவளைப் பேசவிடாமல் வாயடைக்க


வைத்து முத்தம் கொடுக்கிறான்.

மீ ரா விலகினாள்.. ரகுநந்தன் மூர்க்கமானான்.. 

அவளை இரும்புப் பிடியாய் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான்..

"புரிந்து நடந்துக்கன்னு சொன்னேனா இல்லையா..?" உறுமினான்..

அதிர்ந்து விட்டாள் மீ ரா.. 

உடல் வெடவெடக்க மழையில் நனைந்த அன்னப்பறவை போல


சிலிர்த்து நடுங்கினாள்.. 

ரகுநந்தனின் கோபம் குறைந்தது.. மிருதுவான புன்னகையுடன் அவளது


கன்னங்களை வருடி..

"என்னடி.. இப்படிப் பயப்படற..?" என்றான்.

'என்ன.. 'டீ' யா..?'

அவளை வாடி, போடி, என்று அவன் அழைப்பதை மீ ரா


விரும்பவில்லை.. 

அவனோ அவளது விருப்பத்தை மதிக்காதவனாக இருந்தான்.. 

அவளது விரல் பற்றியிருந்த கரங்கள் உயர்ந்து அவளது


முழங்கைகளில் வழுக்கி ஏறியதில் உடல் கூசினாள் மீ ரா.. உதறித்
தள்ள முயன்றாள்..

"ம்ப்ச்.." அதிருப்தியுடன் ஆட்சேப சூள் கொட்டினான் அவன்.

'இவன் என்னை என்னவென்று நினைத்திருக்கிறான்..? தொட்டுத் தாலி


கட்டி விட்டால் நான் இவனுக்கு அடிமையா..? இவன் தொடுவதைப்
பொறுத்துக் கொள்ளும் மரப்பாச்சி பொம்மையா..?' அவளுக்கு சீற்றமாக
இருந்தது.

"என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு மீ ரா.." அதட்டினான்..

பதிலுக்கு அதட்ட முடியாமல் கண் கலங்கினாள் அவள்.. 

அவளை உற்றுப் பார்த்தவனின் விழிகளில் உக்கிரம் வந்தது..

"இப்ப எதுக்குக் கண் கலங்கற..?"

ஒன்றுமில்லையென்று சொல்லக்கூட முடியாமல் வாயடைத்துப்


போனது மீ ராவுக்கு.. 

அவன் முன்னால்தான் அவளுக்கு பேச்சு வந்து தொலைக்க மாட்டேன்


என்கிறதே..

"பெண் பார்க்க வந்தப்பவும் இப்படித்தான்.. என்னைப் பார்க்காம


தரையைப் பார்த்துக்கிட்டு காபி கொண்டு வர்ற.. கூட வந்த என்
அக்காக்கள் என்ன நினைச்சுக்குவாங்க..? அவங்க பெண்களைக் கட்ட
மாட்டேன்னு சொல்லிட்டு உன்னைக் கட்டிக்கனும்னு சொன்னவன்
நான்.. நீ கை காட்டின பொண்ணு உன்னை ஏறெடுத்தும்
பார்க்கலைன்னு சொல்ல மாட்டாங்களா..? அதான் செல்போனில
பேசறதைப் போல வெளியில போயிட்டேன்.. நீ என்னடான்னா அதை
ஒரு குத்தம்ன்னு சொல்லி உன் தம்பிகிட்டப் புலம்பியிருக்க.."

'என்னடா இது..'

அவள் அறியாத புதுக்கோணத்தை அவன் சொன்னதில் விழிகள் விரிய


அவனைப் பார்த்தாள்.. 

அந்தப் பார்வையில் சங்கமித்த அவன் பார்வையில் உக்கிரம் வடிந்து


விட்டது.

"நீ குழந்தையேதாண்டி.." கன்னம் தட்டினான்.

இப்போது அவன் 'டீ' போட்டு அழைத்ததில் அவளுக்கு கோபம்


வரவில்லை.. 

அது ஏனென்றும் தெரியவில்லை.. 


மலங்க மலங்க விழித்தவளைக் கட்டிலில் அமர்த்தி பக்கத்தில்
உட்கார்ந்து அவளது கையைபிடித்து விரல்களை நீவியபடியே பேச
ஆரம்பித்தான்.

"என் அக்காவைப் பிடிக்கலையா அத்தான்னு உன் தம்பி போன்


போடறான்.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.. மில்லில
சரக்கை ஏத்திக்கிட்டு இருக்காங்க.. நான் அதைக் கூடக் கவனிக்காம
உன் தம்பிகூடப் பேசினேன்.. அது தெரியுமா உனக்கு..?"

அவளுக்காக அவன் வேலையை விட்டுவிட்டு அரவிந்தனிடம்


பேசினான் என்பதில் அவள் மனதுக்குள் சந்தோசத் தென்றல் வசியது.. 

மனதுக்குள் பரவிய இதமான குளிர் சுகத்தில் தன்னை மறந்தாள்.. 

அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்தாள்.

முதன் முதலாக அவனைத் தேடிய அவளது பார்வையில் அவன்


விரல்களை நீவுவதை மறந்து அவளையே பார்த்தான்.. 

அதில் தெரிந்த தாகத்தில் அவளுக்குள் இனம் புரியாத பரபரப்பான ஓர்


உணர்வு பரவியது.. வெட்கத்துடன் பார்வையைத் தாழ்த்தினாள்.

ரகுநந்தனின் கண்களில் மின்னல் வந்தது.. 

அவன் நகர்ந்து அவளை ஒட்டி உரசியவாறு உட்கார்ந்தான்.. அவள்


நகரப் போனாள்.

"ஏன்..?" அதட்டினான்..

உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் தலையைக் குனிந்து கொண்டாள் 

ஏனென்று கேட்டால் என்னவென்று சொல்வாள்..?

"மணமேடையிலும் இப்படித்தான்... எட்டடி தள்ளி உட்காருகிற.. தாலி


கட்டறவன் தாவி வந்தா தாலி கட்டுவான்..? அதை நினைச்சுப் பார்க்க
வேணாமா..?"

அவனுடைய கோபத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.. 

இதில் இவ்வளவு இருக்கிறதா என்ற எண்ணத்துடன் விழிகளை


உயர்த்தி அவனைப் பார்த்தாள்.
"இப்பச் சிரி.." அவள் தலையில் குட்டினான்.

"மேடையிலேயே குட்டு வைச்சிருப்பேன்.. எல்லோரும் பார்த்துக்கிட்டு


இருக்காங்களேன்னு பொறுமையாப் போனேன்.."

'இதுக்குத்தான் அப்படி முறைத்தானா..?'

அது தெரியாமல் குழம்பியதை நினைத்துக் கொண்டவளின் முகம்


மலர்ந்தது.. 

ரகுநந்தன் ஆசையுடன் அவளைத் தொட்டான்.. 

மின்சாரம் பாய்ந்ததைப் போல உணர்ந்தாலும் அவள் விலகவில்லை..  

மௌனமான அந்த சம்மதத்தில் அவன் மகிழ்ந்து விட்டான்.

"சமத்து.." அவன் இதழ்கள் வேட்கையுடன் அவள் கன்னத்தில் பதிந்தன.

நடுங்கிய அவளது உடலைத் தழுவியபடி கட்டிலில் சரிந்தான்.. 

பூமாலையாய் அவன்மீ து விழுந்து புரண்டவளின் மீ து புரண்டு


படர்ந்தான்.. 

அவளது முகமெங்கும் அவனது ஈரமுத்தங்கள் வெப்பமான மூச்சுக்


காற்றுடன் இழைந்து ஈஷின.

"எனக்கா உன்னைப் பிடிக்கலை..? முட்டாள்.. உன்னைக்


கண்டமாத்திரத்தில் இவள்தான் என் பெண்டாட்டின்னு முடிவு
கட்டினவண்டி நானு... அப்படிப்பட்டவனுக்கு உன்னைப் பிடிக்கலைன்னு
உன்தம்பிகிட்டச் சொல்லியிருக்க.. எப்படி உனக்கு
தெரியப்படுத்தறதுன்னு தெரியாம முழிச்சா அக்காகிட்டப் பேசுங்க
அத்தான்னு என் மச்சினனே ரூட்டு போட்டுக் கொடுத்தாண்டி.. அந்த
நொடியிலயே அவனை எனக்குப் பிடிச்சுப் போச்சு.."

"அவனோட அக்காவைத்தான் பிடிக்கலை.."

ரகுநந்தனின் முன்னால் பேசாமடந்தையாகிருந்த மீ ரா பேசி விட்டாள்..

"ஏய்ய்..! இது நீதானாடி..." ரகுநந்தன் கள்ளுண்ட சிங்கமானான்..

"இப்பப் பேசறவ... அப்ப எனக்கொன்னும் பேச வேண்டிய தில்லைன்னு


பட்டுக் கத்தரிச்சயே.. என்னடா இது, இந்தப் பொண்ணு இப்படிச்
சொல்லுதுன்னு எனக்குக் குழப்பமாகிருச்சு.. மறுபடியும் போன் வருது..
பேச வந்தா என்னத்தடா பேசறதுன்னு கேட்டு வைக்கிற..?"

"ஐயோ.. அது உங்களைச் சொன்னதில்லை.. அரவிந்தன்கிட்டச்


சொன்னது.." கையை உதறினாள் மீ ரா..

"அது எனக்குத் தெரியுமா..? சரிதான், கட்டிக்கப் போகிறவ


வாடா, போடான்னு கூப்பிட்டா அதுவும் ஒரு சுகம்தான்னு ரசிச்சேன்..
அதுக்கு மேல பேச ஆசைதான்.. வேலை தடுத்துருச்சு.."

மோகப் பெருமூச்சுடன் அவளை ஆள ஆரம்பித்தவன் அவள்


காதுகளில் கிசுகிசுப்பாக..

"இப்போத் தடுக்க எதுவுமில்லைடி.. வா.." என்றான்.

அவள் வரத் தயங்கினாள்.. 

தயக்கமெல்லாம் அவளுக்குத்தான்.. அவனுக்கு இல்லை.. 

தடைகளை உடைத்தெறியும் மூர்க்கத்துடன் அவளை அருகில் இழுத்து


அணைத்து தன் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள ஆரம்பித்தான்..

மீ ராவிற்கு நிறையப் பேச வேண்டியிருந்தது.. 

எண்ணற்ற வினாக்களுக்கு விடை வேண்டியிருந்தது.. 

அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளும் மூர்க்கத்தில் அவன்


அவளைப் பேசவிடவே யில்லை..

நிலாக் காயும் நேரத்திலே -11


ஏப்ரல் 18, 2021

11

 
அதிகாலையில் விழிப்பு வந்ததும் மீ ரா உணர்ந்தது அவள் மீ து
அப்பியிருந்த ரகுநந்தனின் நெருக்கத்தைத்தான்.. 

விலக முயன்றாள்.. 
விலக்க முடியாமல் அவன் கைகள் அவளை சிறை பிடித்திருந்தன.. 

அறையில் பரவியிருந்த ஊதுபத்தியின் மணம் கலந்த பூக்களின்


நறுமணம் அவளை கிறக்கத்தில் ஆழ்த்தியது.. 

முதல்நாள் இரவின் நிகழ்ந்த நிகழ்வுகளின் நினைவில் அவள் வெட்கம்


கொண்டாள்..

'முரடன்..!'

அவள் முகத்தோடு முகம் பதித்திருந்த அந்த முரடனின் நெற்றியில்


படிந்திருந்த முடிக்கற்றையைக் கோதி சீராக்கினாள்.. 

விழித்துக் கொண்டவன் அவளை இறுக்கிக் கொண்டான்..

"விடுங்க.. ப்ள ீஸ்.."

"விடறதுக்கா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..?"

"போதுமே.."

"எனக்குப் போதாது.."

அவன் நெருங்கி அவள்மீ து பரவினான்.. 

அவள் செல்லச் சிணுங்கலுடன் அவன் மார்பில் கை வைத்துத் தள்ளி


விலக்கி விட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.. 

முகத்தில் தண்ணரை
ீ அடித்துத் துவாலையில் அழுந்தத் துடைத்துக்
கண்ணாடி பார்த்தவளின் இதழ்கள் தன்னிச்சையாக பாடின.

"அந்த மாப்பிள்ளை காதலிச்சான்..

           கையைப் பிடிச்சான்..

     எந்தன் கையைப் பிடிச்சான்..

           அங்கே முன்னால் நின்றான்

                பின்னால் சென்றேன்..

     வா, வா என்றானே - அருகினில்

           வா, வா, என்றானே.."
கதவைத் திறந்து வெளியில் வந்தவள் திகைத்து விட்டாள்.. 

அங்கே கைகளை மடித்துக் கட்டியபடி கசங்கிய பட்டுவேட்டியும்


மலர்கள் படிந்த வெற்று மார்புமாக ரகுநந்தன் நின்றிருந்தான்..

"இந்த மாப்பிள்ளையைப் பத்தி அங்கே பாடின பாட்டை இங்கே பாடினா


மாப்பிள்ளை சந்தோசப் படுவான்ல்ல..?"

மீ ராவுக்கு வெட்கமாகி விட்டது.. 

முகச் சிவப்புடன் ஜன்னலருகே சென்றாள்.. 

திரை விலக்கி ஜன்னலைத் திறந்து பார்த்தாள். 

கருக்கல் விடியல் வெளிச்சமில்லாமல் இருள் பரவி நின்றது.

"இன்னும் முழுசா விடியலைடி.."

அவள் பின்னால் நின்று முதுகுப் பகுதியில் படிந்து தழுவிக்


கொண்டவனின் கரங்கள் அவளது வயிற்றில் படிந்தன.. 

குறுகுறுத்தவளின் பின்னங்கழுத்தில் முகம் புதைத்து இதழ் பதித்தான்.. 

குறுகுறுப்பு அதிகமானது..

"ஸ்ஸ்ஸ்.. ஜன்னல்.." கிறக்கத்துடன் முணுமுணுத்தாள்..

அவளது வழவழப்பான வயிற்றுப் பகுதியில் சில்மிசம் செய்த அவனது


கரங்களின் தொடுகையில் கிளர்ந்தவள் அவனுடன் பசை போட்டதைப்
போல ஒட்டிக் கொண்டாள்..

"ஜன்னலுக்கென்ன..?" 

அவளது காதோரமாக முணு முணுத்தவனின் கைகள் முன்னேறி


அவளை பேச்சிழக்கச் செய்தன...

"யாராச்சும் பார்த்துட்டா..?" பலவனமாக
ீ பேசினாள்..

"பார்த்தாப் பார்க்கட்டும்.. என் பெண்டாட்டியை நான் கட்டிப்புடிப்பேன்..


முத்தம் கொடுப்பேன்.. இன்னும்.."

அவளது காதோரமாக அவன் சொன்ன செய்திகளில் அவளது உடலில்


வெப்பம் பரவியது.. 
மோக வெள்ளத்தை தூண்டி விடும் அவனது அணைப்பில் தூண்டிற்
புழுவைப் போல அவள் சிக்கித் தவித்தாள்..

ரகுநந்தனின் கரம் நீண்டு ஜன்னலை அடைத்தது.. 

திரையை இழுத்து மூடியவன் அவளைத் தன் பக்கமாகத் திருப்பி


அவளது முகம் நோக்கிக் குனிந்தான்.. 

படபடத்த இமைகள் எதிர்பார்ப்புடன் விழிகளை மூடிக்கொள்ள அவள்


இசைந்து கொடுத்தாள்.. 

ஆழப் பதிந்த முத்தத்தில் அவர்களின் உணர்வுகள் விழித்துக் கொண்டு


கரையுடைத்தன.. 

தொய்ந்து சரிந்தவளின் இடையில் கை கொடுத்துத் தூக்கிக் கொண்ட


ரகுநந்தன் கட்டிலை நெருங்கினான்.. 

அவளைக் கிடத்தி.. அவள்மீ து சரிந்து படர்ந்து பரவினான்..

இரவு முழுவதும் தேடிய தேடலை அவன் தொடர்ந்த போது


எதிர்ப்பேயின்றி அவன் கைகளுக்குள் தன்னை ஒப்படைத்தாள் மீ ரா.. 

அவளுடன் கூடிக் களித்துக் களைத்து அவள் நெற்றியில் அவன்


திருப்தியுடன் முத்தமிட்டபோது அவன் முதல் நாள்தான் அவளை
மணந்தான் என்பதே அவளுக்கு மறந்து போனது. 

காலம் காலமாக அவனுடன் வாழ்வதைப் போன்ற ஓர் உணர்வு


ஏற்பட்டது.. 

அவனும் அதையே சொன்னான்..

"இன்னைக்குத்தான் வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கிறதைப் போல


இல்லேடி.. நீயில்லாத வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கேன்னு
நினைச்சும் பார்க்க முடியல.. எப்படிடீ..?"

அவனுக்கே தெரியாதபோது அவளுக்கு மட்டும் தெரிந்து விடுமா


என்ன..? 

அவள் மழலை போல விழித்து விட்டு அவனுடன் ஒன்றிக்


கொண்டாள்.
சில தினங்களாக அவள் மனதை அலைக்கழித்த குழப்பங்களெல்லாம்
விலகி ஓடி விட்டதைப் போன்ற நிர்மலமான உணர்வை உணர்ந்தாள்
மீ ரா.. 

நிச்சிந்தையான மனதுடன் இமை மூடியவளை ஆழ்ந்த தூக்கம்


ஆக்ரமித்தது.. 

ரகுநந்தனின் வெற்று மார்பில் முகம் புதைத்துத் தூங்கி விட்டவளின்


முடி கோதி அவளது தூக்கம் கலையாமல் அவளது நெற்றியில்
மென்மையாக முத்தமிட்ட ரகுநந்தனின் கரம் அவளது முதுகைச் சுற்றி
வளைத்து அணைத்துக் கொண்டது.

அவன் விரும்பி மணந்தவள் அவனை விரும்பி அவனது


விருப்பத்திற்கு உடன்பட்டு விட்டதில் அவன் மனதில் எல்லை
யில்லாத திருப்தி நிரம்பியது.. 

அந்த திருப்தியுடன் அவனும் இமைகளை மூடித் தூங்க ஆரம்பித்தான்..

கருக்கல்லைக் கலைக்கும் வெளிச்சம் பரவியது.. 

அதிகாலை விடிகாலையாக மாறிய பொழுதில் ரகுநந்தனின்


அறைக்கதவு தட்டப்பட்டது.. 

விழித்துக் கொண்ட ரகுநந்தன் அவன் மார்பில் பூமாலைபோல முகம்


பதித்து தூங்கிக் கொண்டிருந்த மீ ராவைப் பார்த்தான்.. 

கதவு தட்டப்படுவதை உணராமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.. 

அவளது உதடுகளில் தவழ்ந்த மோகனச் சிரிப்பில் அவனுக்குள் மோகம்


மூண்டது.

'கள்ளச் சிரிப்பழகி..!'

அவளது இதழ் கவ்வும் ஆசையை தள்ளிப் போட்டு விட்டு மெதுவாக


அவளது முகத்தை நகர்த்தி தலையணையின் மீ து வைத்தான்.. 

சந்தடியில்லாமல் எழுந்து சென்று கதவைத் திறந்தான்.. 

கையில் காபித் தம்ளர்கள் இருந்த தட்டுடன் நந்தினி நின்றிருந்தாள்..

"எங்கேடா உன் பெண்டாட்டி..?"


ரகுநந்தனின் பின்னால் அவளது பார்வை சென்றதில் ரகுநந்தன் கோபம்
கொண்டான்..

"இன்னும் எழுந்திருக்கலையா..?" என்ற அவளது அடுத்த கேள்வியில்


அவனது கோபம் அதிகமானது..

"காதம்பரி எங்கே..?" பதிலுக்கு கேட்டான்..

காதம்பரி அந்த வட்டில்


ீ வேலை செய்பவள்.. 

அவளை ரகுநந்தன் விசாரித்ததில் நந்தினியின் முகம் சுருங்கியது..

"அடுப்படியில பூவாயிக்கு ஒத்தாசையா இருக்கா.. ஏன் கேட்கிற..?"

"அவ கையில காபித்தம்ளர்கள கொடுத்து விட வேண்டியது தான..? நீ


ஏன் சிரமப்பட்டுக்கற..?"

"அதுசரி.. கல்யாணம் ஆகி ஒருநாள்தான் ஆகுது.. அதுக்குள்ள அக்கா


கையில காபி வாங்கிச் சாப்பிட உனக்குக் கசக்குது.. இதுக்குத்தாண்டா
தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்.. ஒன்னு என் பொண்ணக் கட்டு..
இல்லேன்னா ராதிகாவோட பொண்ணக் கட்டுன்னு..
கேட்டியா..? நந்திதாவோ, மோனிகாவோ உனக்குப் பெண்டாட்டியா
வந்திருந்தா இப்படி நீ கேட்பியா..? கடவுளே..! என் தம்பிக்கு நாங்க
வேண்டாதவங்களா ஆகிப் போயிட்டோமே.. ஆசையாசையா காபி
கொண்டு வந்தவளப் பாத்து நீயேன் வந்தன்னு தம்பி கேட்கிறதைப்
போலச் செய்துட்டாளே.."

நந்தினியின் பலத்த அழுகையில் மீ ரா விழித்து விட்டாள்.. 

யார் இப்படி அழுவது என்று புரியாமல் விழித்தவளின் பார்வை அறை


வாயிலில் படிந்தது.. 

நந்தினியின் பிலாக்கணத்தில் ஒட்டு மொத்தத் தூக்கமும்


ஓடிப்போய்விட பதறிப் போய் எழுந்தாள்..

உடை கலைந்திருந்தது.. கூந்தல் சீராக இல்லாமல் பிரிந்து தொங்கிக்


கொண்டிருந்தது.. 

இதுபோன்ற தோற்றத்துடன் நாத்தனாரின் முன்னால் செல்லக் கூசிய


மீ ரா குளியலறையை ஒட்டியிருந்த உடை மாற்றும் அறைக்குள்
சென்று உடையைச் சீர் செய்து தலை முடியைக் கோதியபடி
வெளியில் வந்து தயக்கத்துடன் அறை வாசலுக்குப் போனாள்..

அழுகை, அழுகையாக இருக்க மீ ராவின் நடவடிக்கையை


நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் நந்தினி.. 

அவளுடைய பிறந்த வட்டில்


ீ ஆள வந்தவள் என்ற வெறுப்புடன்
மீ ராவை துவேசமாகப் பார்த்தாள்.. 

அந்தப் பார்வையில் முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போக ரகுநந்தனின்


முதுகுக்குப் பின்னால் ஒன்றிக் கொண்டாள் மீ ரா.. 

அதில் நந்தினியின் ஆவேசம் அதிகமானது.

"வடான
ீ வட்டில
ீ கோழி கூவி உச்சிப் பொழுது வந்த பின்னாலும்
உறங்கிக்கிட்டு இருக்கிற மருமகள்தான் தாராமங்களத்து ஜமீ ன்
வம்சத்து வட்டுக்கு
ீ வந்து சேரனுமா..? இதை எங்கே போய்
சொல்லுவேன்..?"

"என்கிட்டச் சொல்லு.."

கடுமையான குரலுடன் அங்கே வந்து நின்றார் ஈஸ்வரன்.. 

கணவரைக் கண்டதும் நந்தினியின் கண்ண ீர் நின்று விட்டது.. 

அதற்குள் வட்டிலிருந்த
ீ ஒட்டு மொத்த ஆள்களும் ரகுநந்தனின்
அறைக்கு முன்னால் குழுமி விட்டார்கள்..

மீ ராவுக்கு அழுகையே வந்து விட்டது.. 

அவளால் இயல்பாக எல்லோரையும் பார்க்க முடியவில்லை.. 

எல்லையில்லாத சங்கட உணர்வுடன் மறுகினாள்.. 

இதுபோன்ற அநாகரிகத்தைக் கண்டித்துச் சொல்ல முடியாமல்


தவித்தாள்..

மகளின் வெளுத்து சிவந்த முகத்தைக் கண்ட சுமதியின் தாய்மனம்


பதறியது.. 

பெண்ணுக்குப் பெண்ணாக மகளின் கூச்சத்தை அவள் புரிந்து


கொண்டாள்..
நிலாக் காயும் நேரத்திலே -12
ஏப்ரல் 19, 2021

12

 
 
'என்ன செய்வது..?' பரிதவித்தாள் சுமதி.. 

மகளை இழுத்து ஒன்றுமில்லையென்று ஆறுதல் கூறவும் முடியாது.. 

முதலிரவு முடிந்து கணவனின் அறைக்குள் அவன் முதுகுக்குப் பின்னால்


பயத்துடன் மறைந்து நின்றிருக்கிறாள் சுமதியின் மகள்.. 

கூட்டத்திற்கு முன்னால் வரக் கூச்சப்பட்டுத் தவித்துக்


கொண்டிருக்கிறாள்.. 

அது புரிந்தும் புரியாதவளைப் போல மகளின் நாத்தனார் அழுது வட்டில்



உள்ளவர்களைக் கூட்டம் போட வைத்திருக்கிறாள்..

'ச்சே..! என்ன மாதிரியான குணம் இது..'

அசூசை கொண்டாள் சுமதி.. அவளது பார்வையும் பிரகாசத்தின்


பார்வையும் சந்தித்து மீ ண்டன..

 மகளின் சங்கடத்தை உணர்ந்தவராக பிரகாசம் தள்ளி நின்றிருந்தார்..

"இப்ப நீ கண்ணரை
ீ கடலவிட என்ன காரணம் நந்தினி..? உன் சொத்தை
யாரும் தட்டிப் பறிச்சுக்கிட்டாங்களா..?" அதட்டினார் ஈஸ்வரன்..

அப்படித்தான் என்பதைப் போல ரகுநந்தனைப் பார்த்துவிட்டு அவன்


முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்று பார்த்த மீ ராவை பகைமையுடன்
பார்த்து வைத்தாள் நந்தினி.. 

நிஷ்டூரமான அந்தப் பார்வையில் நடுங்கினாள் மீ ரா..

"உரிமையைத் தட்டிப் பறிச்சுட்டாங்க.."

"எந்த புடலங்காய் உரிமையைத் தட்டிப் பறிச்சுட்டாங்க..?"


"என் தம்பிக்கு பாசமா நான் காபி கொண்டு வந்தது தப்பாம்.. இவன்
பிறந்தப்ப நான்தான் மடியில போட்டு தாலாட்டுப் பாடித் தூங்க
வைச்சேன்.. நிலாவைக் காட்டி சோறு ஊட்டினேன்.."

உணர்ச்சிப் பெருக்குடன் விவரித்து நந்தினி விம்ம..

"நீ மட்டும்தான் அவனைத் தூக்கி வளர்த்தியா..? நான்


வளர்க்கலையா..? அவனைத் தரையில கால் பதிக்க விடாம என் இடுப்பில
தூக்கி வைச்சு வளர்த்தவ நானு.. மறந்திட்டுப் பேசாதே.." என்று
சண்டைக்கு வந்தாள் ராதிகா..

"அப்படியாப்பட்டவ இவனுக்கு காபி கொண்டு வந்திருக்க


வேண்டியதுதானே..?"

"எங்கே..? நான் கலந்து வைச்சிருந்த காபியத்தான் நீ தூக்கிக்கிட்டு வந்து


டிராமா போடறியே.. மறுபடியும் காபி கலந்துக்கிட்டு வர நேரமாகிருச்சு..
அதுக்குள்ள இங்கேவந்து அழுது ஆகாத்தியம் பண்ணி வட்டைக்

கூட்டிட்ட.."

"பறிகொடுத்தவளோட ஆத்தாமையைப் பத்தி உனக்கென்னடி தெரியும்..?"

"நீ மட்டும்தான் பறி கொடுத்தியா..? நான் கொடுக்கலையா..? எனக்கும்


அந்த ஆத்தாமை இருக்கு.. நீ அடங்கு.."

அக்காமார்கள் இருவரும் போட்டுக் கொண்ட சண்டையில் வெறுத்துப்


போனான் ரகுநந்தன்..

 ராதிகாவைத் கட்டிய கணவரான சண்முகமோ..

"உன் அக்காவை அடங்கச் சொல்லிட்டு நீ ஆரம்பிக்கப் போறியா..?" என்று


மனைவியின் திட்டத்தை மோப்பம் பிடித்தார்.

'கண்டு பிடிச்சிட்டாரே..' பல்லைக் கடித்தாள் ராதிகா..

"அடடா..! ஏண்டா மகேஷ்.. நீ காபி குடிச்சியாடா..?" என்று அண்ணனை


விசாரித்தாள் நந்திதா..

"எங்கே குடிக்கிறது..? தம்பிக்கு காபி குடுக்க அடிதடி நடக்குது.. பெத்த


மகனுக்கு காபி கொடுக்கனும்கிற ஞாபகம் யாருக்கு இருக்கு..? என்னைக்
கேட்கறியே.. உனக்குக் காபித் தண்ணி வந்ததா..?"
"ஊஹீம்.. அப்பா உங்களுக்கு.."

"இல்லேம்மா.. இவளுக்குத்தான் புருசனைப் பத்தியும் பிள்ளைகளைப்


பத்தியும் கவலையில்லையே.."

"ம்த்சு... ம்த்சு.. இப்படியா நம்ம கதி ஆகனும்..? ஏண்டி மோனி.. உங்க வட்டு



கதை எப்படி..?"

"பெரியம்மா எவ்வழியோ அவ்வழிதான் எங்கம்மா வழி.. அப்பாவுக்கும்


பெப்பே.. எனக்கும் பெப்பே.. தம்பிக்கு ஏதும் காபி கிடைச்சிருக்குமோ
என்னவோ..?"

"அப்படியாடா சதிஷ்..? உங்க அக்காவுக்கும், அப்பாவுக்கும் கிடைக்காத


காபி உனக்குக் கிடைச்சிருச்சா..?"

"ஏன்க்கா நீ வேற.. எங்கம்மாவுக்கு தம்பிதான் முக்கியம்.. என்னை


தவிட்டுக்கு வாங்கி வந்தாங்களோ என்னவோ.."

இரண்டு மகள்களின் கணவர்களும், பிள்ளைகளும் கழுவிக் கழுவி


ஊற்றியதில் வெகுண்டு போனார் கோபிநாதன்.. மனைவியை சப்தம்
போட்டார்..

"இதுதான் உன் பொண்ணுகளை வளர்த்துக் கட்டிக் கொடுத்திருக்கிற


லட்சணமா யமுனா..?"

"நான் என்னங்க செய்வேன்..?"

"தாராமங்களத்து ஜமீ ன் வட்டில


ீ பொறந்த பொண்ணுக புருசனையும்
புள்ளைகளையும் கவனிச்சுக்கிற லட்சணத்தைக் கேட்டியா..? இதைத்தான்
நீ சொல்லிக் கொடுத்து வளர்த்தியா..?"

"நானாங்க இப்படி வளர்த்தேன்..? இதுக தானா இப்படி வளர்ந்து நிக்குதுக..


அம்மாடி.. நான் பெத்த பொண்ணுகளா.. நந்தினி, ராதிகா.. கையில
இருக்கிற காபித் தம்ளர்கள உங்க பிள்ளைக கையில கொடுத்துட்டு உங்க
புருசன்களுக்கு காபி கொண்டு போங்க.. ரகுநந்தனைக் கவனிச்சுக்க என்
மருமக வந்திட்டா.. அவ அவளோட புருசனைப் பார்த்துக்குவா.."

"நீங்களே துண்டு வெட்டி விடறிங்களாம்மா..?"

"அதானே.. நந்தினியும் நானும் எங்க தம்பியைத் தூக்கி வளர்த்தவங்க.."


"பேசாம போயிருங்க.. இல்லேன்னா வாயிலேயே போட்டிருவேன்.. வடு

பூரா வேலையாளுக இருந்தாங்க.. உங்க ரெண்டு பேத்தையும் தூக்கி
வளர்த்ததைப் போல ரகுவையும் தூக்கி வளர்த்தாங்க.. இதுகளைத் தூக்கி
வளர்க்கவே ஏழுரூ சனம் வேணும்.. இதில இதுக ரெண்டும் என்
புள்ளையைத் தூக்கி வளத்தாங்களாம்.. போவிங்களா..?"

யமுனா போட்ட போட்டில் நந்தினியும் ராதிகாவும் வாயடைத்துப்


போனார்கள்..

"குட் ஜட்ஜ்மெண்ட் பாட்டி.."

பாராட்டிய கையோடு நந்தினியின் கையிலிருந்த தட்டிலிருந்து காபித்


தம்ளர்களைக் கைப்பற்றி மகேஷிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு காபியை
உறிஞ்ச ஆரம்பித்தாள் நந்திதா..

"பாட்டின்னா பாட்டிதான்.. நீங்கதான் பாட்டி தாராமங்களத்து ஜமீ னோட


லேடி நாட்டாண்மை..!"

தன் பங்குக்கு பாராட்டை அள்ளி விட்ட மோனிகா ராதிகாவின்


கையிலிருந்த தட்டைப் பறித்து சதீஷீடம் காபித் தம்ளர்களை பகிர்ந்து
கொண்டாள்..

"ஓடு.. ஓடு.. எனக்குத் தலை வலிக்குது.. உடனடியாக் காபி வேணும்.."

நந்தினியைப் பற்றிக் கொண்டு போனார் ஈஸ்வரன்.

"உனக்கு வேறத் தனியாச் சொல்லனுமா..?"

ராதிகாவை கைபிடியாய் அழைத்துக் கொண்டு போனார் சண்முகம்..

பிள்ளைகள் நால்வரும் காபியை உறிஞ்சியபடியே பால்கனிப் பக்கம்


போய்விட அங்கே ரகுநந்தனின் பெற்றோரும் மீ ராவின் பெற்றோரும்
மட்டுமே நின்றார்கள்..

"தாராமங்களத்து ஜமீ ன் வட்டில


ீ காபிக்கு இம்புட்டுப் பஞ்சாயத்தான்னு
பொண்ணக் கொடுத்த சம்பந்தகாரங்க நினைக்கட்டும்ங்கிற நினைப்பாடி
உனக்கு..?" யமுனாவை கடிந்து கொண்டார் கோபிநாதன்..
"நான் என்னங்க பண்ணுவேன்..? காதம்பரிகிட்ட காபியைக் கொடுத்து
விடறதுக்குள்ள இவளுக ரெண்டு பேரும் நீ முந்தி, நான் முந்தின்னு
அடிச்சுக்கிட்டு வந்துட்டாளுகளே.." என்றாள் யமுனா..

"விட்டுத் தொலை.. கீ ழே போய் காதம்பரியிடம் காபியைக் கொடுத்து


அனுப்பு.. வாங்க மச்சான்.. நாம கீ ழே போகலாம்.."

பிரகாசத்தை அழைத்துக் கொண்டு படியிறிங்கி விட்டார் கோபிநாதன்..

"நீ போடா ரகு.. காதம்பரி காபி கொண்டு வருவா.."

யமுனா சுமதியின் கையைப் பிடிக்க.. அவள் மீ ராவைப் பார்த்தாள்.. 

மருமகனின் முன்னால் மகளுக்கு தைரியம் சொல்ல அவளுக்கு


என்னவோ போல இருந்தது.. 

யமுனா நியாயமாக நடந்து கொண்டிருக்கும் போது நடந்ததைப் பற்றிப்


பேசுவது நாகரிகமாகாது என்பதினால் அவளும் எதுவுமே நடக்காததைப்
போல யமுனாவுடன் போய் விட்டாள்.. 

மீ ராவுக்கு அழ வேண்டும் போல இருந்தது.. 

அவள் ரகுநந்தனை விட்டு நகர்ந்து ஜன்னலின் திரையை விலக்கி


ஜன்னலைத் திறந்தாள்.. 

அறைக்குள் சூரிய வெளிச்சம் விழுந்தது..

ஜன்னலின் கம்பிகளில் முகம் புதைத்திருந்தவளை யோசனையுடன்


பார்த்தான் ரகுநந்தன்.. 

கதவை அடைத்து விட்டு அவளை அணுகி.. தோள்களைப் பற்றினான்.. 

முதல்நாள் இரவு போல நெகிழ்ந்து கொடுக்காமல் அவளது மேனி


விறைத்தது..

"மீ ரா..?" என்றான்..

"நீங்க உங்க அக்கா பெண்களில் யாரையாவது ஒருத்தரைக் கல்யாணம்


பண்ணியிருக்கலாம்.."

அவனது கைகளை விலக்கி விட்டு அவள் குளியலறைக்குள் புகுந்து


விட்டாள்.. 
அசைவற்று நின்று விட்ட ரகுநந்தனின் முகத்தல் கடினம் வந்தது.. 

முதன் முதலாக மீ ரா அவனைப் பார்த்த போது அவன் முகத்தில் தெரிந்த


அதே கடினம் அது.

நிலாக் காயும் நேரத்திலே -13


ஏப்ரல் 20, 2021

13

 
முகம் கழுவி வெளியில் வந்த போது லேசாக மனம்
தெளிந்திருப்பதைப் போல உணர்ந்தாள் மீ ரா.. 

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக பின்னங்கைகளைக் கட்டியபடி


ரகுநந்தன் நடந்து கொண்டிருந்தான்.. 

பேசாமல் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.. 

காதம்பரி காபிதம்ளர்களுடன் வந்து விட்டாள்.. 

மீ ராவைப் பார்த்து தயக்கத்துடன் சிரித்தாள்.. 

பதிலுக்கு மீ ரா சிரித்ததில் சின்னம்மா சிரித்து விட்டார்கள் என்று


சந்தோசமாகி விட்டாள்.. 

சமையல் செய்யும் பூவாயி இதைக் கேட்டால் எப்படி


பொறாமைப்படுவாள் என்ற கற்பனையில் அவள் மனம் விகசித்தது.

"நானு காதம்பரிங்கம்மா.. ஜமீ ன் வட்டில


ீ ரொம்ப காலமா வேலை
செய்யறேன்.." அறிமுகப் படுத்திக் கொண்டாள்..

"அப்படியா..?" தாராளமாக சிரித்தாள் மீ ரா..

"எது வேணும்னாலும் காதம்பரின்னு ஒரு குரல் குடுங்க.. ஓடி


வந்துருவேன்.."

"அதுக்கென்ன.. தேவைப்பட்டா கூப்பிடறேன்.."

"சரிங்கம்மா."
ஜமின் வட்டு
ீ ரகுநந்தன் ஐயாவின் புதுமனைவியிடம் பேசி விட்ட
செய்தியை வட்டில்
ீ உள்ள மற்ற வேலையாள்களிடம் சொல்லிப்
பெருமைப் படுவதற்காக ஓடி விட்டாள் காதம்பரி.. 

காபித் தம்ளர்களை வெளித்துப் பார்த்தபடி எடுத்துக் கொள்ளாமல்


உட்கார்ந்திருந்தாள் மீ ரா.. அவளை உறுத்துப் பார்த்த ரகுநந்தன்..

"அதில் விசமில்லை.. எடுத்துக் குடி.."  என்றான்..

மாறுபட்டிருந்த அவனது குரலில் அவனை ஏறிட்டுப் பார்த்தவளின்


பார்வையில் வெறுமையிருந்தது.. 

அதில் அவனது புருவங்கள் சுருங்கின.. பற்றில்லாமல் காபித் தம்ளரை


எடுத்துக் கொண்டாள்.. அதை உற்றுப் பார்த்தவள்..

"காபியில் விசமில்லை.. சிலர் மனசிலதான் விசமிருக்கு.." என்றாள்..

ரகுநந்தனின் முகம் பயங்கரமாக மாறிப் போனது.. 

கோபத்தில் சிவந்து விட்ட அவன் விழிகளைப் பார்க்க மீ ராவிற்கு


பயமாகத்தான் இருந்தது.. 

அதற்காக சொல்ல நினைப்பதை அவளால் சொல்லாமல் இருக்க


முடியவில்லை.. 

சற்றுமுன் நடந்த நிகழ்வில் அவள் அதிர்ந்து போயிருந்தாள்..

"சின்னப் பெண்ணாச்சேன்னு பார்க்கறேன்.. இல்லேன்னா நடக்கறதே


வேறா இருக்கும்.. என்ன..? புதுசாக் கட்டிக்கிட்டு வந்திருக்கோம்.. புதுப்
பெண்டாட்டி என்ன சொன்னாலும் ரகுநந்தன் கேட்டுக்குவான்ங்கிற
நினைப்பா..? ரகுநந்தன்கிட்ட அந்த நினைப்பெல்லாம் செல்லுபடியாகாது..
புரிஞ்சு நடந்துக்க.."

ரகுநந்தன் அடிக்குரலில் சீறினான்.. 

மீ ராவின் தொண்டைக் குழியில் இறங்கிய காபியின் இனிப்பு மாறிக்


கசந்தது.. விசம் போலவே இருந்தது.. 

புரிந்து நடந்து கொள் என்று இரண்டாம் முறையாக சொல்கிறான்.. 

முதல்நாள் இரவில் முதல் முறையாக அதைச் சொன்னான்.. 


அந்த புரிந்து நடந்து கொள்ளுதலுக்கும் இதற்கும் எத்தனை
வித்தியாசம்..?

மீ ரா பதில் சொல்லாமல் குளிக்கப் போய் விட்டாள்.. அதில்


வெகுண்டான் ரகுநந்தன்.. 

குளித்து ஈரத்தலையை துவாலையால் சுற்றி.. ஊதா வண்ண பிரிண்டட்


சேலையுடன் வெளியே வந்தவளின் அழகு அவனை அடித்துப்
புரட்டியது.. 

அதையும் தாண்டிய கோபத்தில் இருந்தவன் கத்த யத்தனித்தபோது


கோபிநாதன் வந்து விட்டார்..

"ரகு.." என்ற அவரின் அழைப்பில்..

"அப்பா.." என்று வெளியே போய் விட்டான்..

வார்த்தை யுத்தத்தை எதிர்பார்த்து வந்திருந்த மீ ரா அது தள்ளிப்


போனதில் தற்காலிக நிம்மதி கொண்டவளாக தலையைத் துவட்டி
விரியத் தொங்க விட்டபின் நகைகளை அணிந்து கொள்ள
ஆரம்பித்தாள்.. 

லேசாய் உலர்ந்திருந்த தலைமுடியை வாரித் தளரப் பின்னலிட்ட பின்


அறையை விட்டு வெளியே வந்தாள்.. 

மாடி ஹாலில் இருந்த சோபாக்களில் உட்கார்ந்திந்த


ரகுநந்தனையும், கோபிநாதனையும் கண்டதும் அவளது நடை
தளர்ந்தது.. 

மாமனார் இருக்கிறார் என்ற மரியாதையுடன் தலையைக் குனிந்தபடி


நடந்தவளின் காதுகளில் அவர்களது பேச்சு விழுந்தது..

"மருமகளைக் கூப்பிட்டுக்கிட்டு கோவிலுக்குப் போயிட்டு வந்திரு


மறுவட்டு
ீ விருந்துக்கு அழைச்சுக்கிட்டுப் போக உன் மாமனாரும்
மாமியாரும் காத்திருக்காங்க.."

"இன்னைக்கே மறுவட்டு
ீ விருந்துக்குக் கிளம்பனுமா..?"

ரகுநந்தனின் மறுப்புக் கலந்த குரலில் மாடிப்படிகளில் கால்


பதித்திருந்த மீ ரா நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.. 
அவனது புருவச் சுளிப்பில் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. 

அவள் பார்வையைக் கண்டவன் உறுத்துப் பார்த்தான்.. 

பார்வையை விலக்கிக் கொண்டவள் நீ எது வேண்டுமானாலும்


சொல்லிக் கொள்.. எனக்கொன்றுமில்லை என்ற ரீதியில் முகத்தை
வைத்துக் கொண்டு படியிறங்கி விட்டாள்.. 

ரகுநந்தனின் முகம் கருத்தது..

'இருக்குடி உனக்கு.. திமிரா காட்டற..?' கருவிக் கொண்டான்.

"ஆமாம் ரகு.. தள்ளிப் போடக் கூடாது.. சொந்த பந்தங்களோட மீ ராவின்


தம்பியை அனுப்பி வைத்துட்டு மகளுக்காக அவங்க இங்கிருக்காங்க..
சென்னையில வரவேற்பை வேறு ஏற்பாடு பண்ணியிருக்காங்களாம்.."

"அது எதுக்கு தேவையில்லாம..?"

"எத்தனை தூரந்தொலைவில கல்யாணம் வைத்தாலும் உறவுக்கார


ஜனங்க வந்து போயிருவாங்க.. கூட வேலை பார்க்கிறவங்க
யோசிப்பாங்கள்ல..? மருமகளோட அம்மாப்பா ரெண்டு பேருமே வேலை
பார்க்கிறவங்க.. அவங்களோட வேலை பார்க்கிறவங்களுக்கு மகளோட
கல்யாண விருந்தைக் கொடுக்கனுமா வேண்டாமா..?"

கோபிநாதன் எடுத்துச் சொன்னார்.. 

பொதுவாக தகப்பனார் எடுத்துச் சொல்லும்படி ரகுநந்தன் வைத்துக்


கொண்டதில்லை.. 

அவன்தான் மற்றவர்களுக்கும் சில சமயங்களில் தகப்பனாருக்கும்


எடுத்துச் சொல்வான்.. 

மீ ரா சொன்ன சொல் அவனை அந்த அளவிற்குப் பாதித்திருந்தது..

"இருந்தாலும் அப்பா.."

"என்ன ஆச்சு ரகு..?"

மகனை யோசனையுடன் பார்த்தபடி கேட்டார் கோபிநாதன்.. 

மகன் விரும்பிய பெண்ணை பொருளாதார ஏற்ற தாழ்வு பார்க்காமல்


மணம் முடித்து வைத்திருக்கிறார்.. 
அப்படியிருந்தும் முதல்நாள் திருமணம் முடிந்து முதலிரவைக்
கொண்டாடி முடித்திருக்கும் மகனின் முகத்தில் மலர்ச்சியில்லையே..

'காலையில பார்த்தப்ப ரெண்டு பேரும் அன்யோன்யமாத்தானே


இருந்தாங்க..?'

நந்தினியின் அளப்பறையில் அரண்டு போன மீ ரா வெகு இயல்பாக


ரகுநந்தனின் கைபற்றி அவனது முதுகிற்குப் பின்னால் மறைந்து
ஒன்றிக் கொண்டதை நினைவு கூர்ந்தார்..

வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திருந்த கோபிநாதனுக்கு அந்த இயல்பில்


இருந்த தாத்பர்யம் புரிந்திருந்தது.

மனம் பொருந்திய தாம்பத்திய வாழ்வை வாழாமல் அந்த இயல்பான


தொடுகையும், நெருக்கமும் வந்திருக்காது.

"ஒன்னுமில்லேப்பா.." அவசரமாக பதில் சொன்னான் ரகுநந்தன்.

"பின்னே எதுக்காக மறுத்துப் பேசற..? அவங்க யாரோ எவரோ இல்லை


ரகு.. உன் மாமனாரும், மாமியாரும்.. அவங்களோட தரப்பில இருக்கிற
நியாயத்தையும் நீ பார்த்தாகனும் ரகு.."

"ஆகட்டும்ப்பா.."

அரை மனதாக சம்மதம் சொல்லி விட்டுக் குளிக்கப் போனான்


ரகுநந்தன்.. 

முதல்நாள் இரவின் குளுமை மறைந்து மனம் முழுவதும் வெம்மை


பரவியிருந்தது.

மீ ராவிற்கும் அப்படித்தான் இருந்தது.. 

தனியறையில் தனது அறையில் படுத்து உறங்கும் சுதந்திரத்துடன்


இருந்தவளை அறை வாயிலில் இருந்து குரல் கொடுத்து எழுப்பி
விட்டு குரோதமாக பார்த்த நந்தினியின் பார்வைதான் திரும்பத் திரும்ப
அவள் நினைவுக்கு வந்தது.. 

அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல அவள் துடித்தாள்.. 


மறுவட்டு
ீ விருந்துதான் அவளுக்கான சுதந்திர வாசல் என்று அவள்
நினைத்துக் கொண்டிருக்க ரகுநந்தன் அதற்கும் தடை போடுவதைப்
போல பேசி வைத்ததில் அவள்மனம் உழன்றது.

"வந்துட்டியாம்மா.."

கனிவான புன்னகையுடன் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்தை அவள்


தலையில் வைத்து அழகு பார்த்த யமுனாவின் செய்கையில் மீ ராவின்
மன உளைச்சல் சற்றுக் குறைந்தது.

சுமதியும் அங்குதான் இருந்தாள்.. 

மகளை விழிகளால் அமைதிப் படுத்தியபடி சிரித்த முகத்துடன்


யமுனாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.. 

யமுனா பூஜையறைக்கு மீ ராவை அழைத்துக் கொண்டு போய்


விளக்கேற்ற வைத்தாள்.. விளக்கின் சுடரில் மீ ராவின் மனக்காயம்
சற்றே ஆறியது..

"அப்படியே உன் இடுப்பில தொங்கற கொத்துச் சாவியையும் கழட்டிக்


கொடுத்திருங்கம்மா.."

ஓங்கி வந்த சப்தத்தில் நந்தினி வருகிறாள் என்று புரிந்து போக முகம்


இறுகி பூஜையறையை விட்டு வெளியே வந்தாள் மீ ரா.. 

எதிரியைப் பார்ப்பதைப் போல பார்த்தபடி வந்து நின்ற நந்தினி..

"எங்கேயோ இருந்ததுகள்ளாம் ஜமீ ன்தாரினி பட்டத்த வாங்கிருதுக..


இந்த ஜமீ ன் வட்டில
ீ பிறந்து வளர்ந்தவ பெத்த பொண்ணால அந்தப்
பட்டத்த வாங்க முடியல.." என்று வெளிப்படையாக புலம்பினாள்.

பல்லைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு பொறுமை


காத்தாள் மீ ரா..

நிலாக் காயும் நேரத்திலே -14


ஏப்ரல் 21, 2021

14

 
 
கரும்பச்சை நிறத்தில் இருந்தது குளத்து நீர்..! 

படித்துறையை ஒட்டிய இடத்தில் சிதறி விழுந்த பொரிகளைக் கவ்வ


மீ ன்களின் கூட்டம் குவிந்து நிறைந்து தண்ண ீருக்குள் மறைந்தது.

தண்ணரை
ீ ஒட்டிய படிக்கட்டில் அமர்ந்து குளத்தின் மையத்தில் இருந்த
தாமரைப் பூக்களை வெறித்துக் கொண்டிருந்தாள் மீ ரா.. 

அமைதியும், அழகும் நிரம்பிய குளத்தை ரசிக்கும் மனநிலையில் அவள்


இல்லை.. 

சோகம் ததும்பிய முகத்துடன் இருந்தாள்..

அவளுக்கு சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்த ரகுநந்தன் புருவங்கள் முடிச்சிட


யோசனையாக இருந்தான்.. 

மீ ராவைச் சமாதானப் படுத்தவும் அவன் முனையவில்லை.. அவளை கடிந்து


பேசவும் முனையவில்லை.

அவள் மீ து கடுங் கோபத்துடன்தான் இருந்தான்.. 

அந்தக் கோபம் குறையாமல்தான் மாடியிலிருந்து இறங்கி வந்தான்..

'கோவிலுக்குப் போகிறப்ப தனியா மாட்டுவாள்ல.. அப்ப மாட்டு, மாட்டுன்னு


மாட்டிரனும்..'

கங்கணம் வைத்துக் கருவிக் கொண்டிருந்தவனின் காதுகளில் நந்தினியின்


வெங்கலக்குரல் ஒலித்தது.

"தங்கம் தங்கமா வளர்த்த தம்பியை ஊரான் வட்டுப்


ீ பொண்ணுக்குத் தாரை
வார்த்துக் கொடுத்ததுமில்லாம அவ வட்டில
ீ கால் வைச்ச மறுநாளிலேயே
அதிகாரத்தையும் தூக்கிக் கொடுக்கிறீங்களாம்மா..?"

"நந்தினி.."

"நாள பின்ன நானும் என் தங்கச்சியும் குடும்பத்தோட இந்த ஜமீ ன் வட்டுக்கு



வந்து போகனும்னு நீங்க நினைச்சிருந்தா இவ கையில அதிகாரத்தை
கொடுப்பீங்களா..?"

"இப்ப என்னடி நடந்து போச்சு..?"


"பூஜையறையில விளக்கேத்தறவங்கதான் வட்டுக்கு
ீ எஜமானிம்மா.. நீங்க
எஜமானியா இருந்தாத்தான் நீங்க பெத்த பொண்ணுக உரிமையோட வந்து
போக முடியும்.. அது புரியாம இவளை எஜமானியாக்கறிங்களே.."

"இவ்வளவுதானா..? இதுக்கா இந்த குதி குதிக்கிற..? வட்டுக்கு


ீ வாழ வந்த
மருமகள் பூஜையறையிலே விளக்கேத்தனும்மா.. அதுதான் நம்ம வட்டு

சம்பிரதாயம்.. அதைத்தான் மீ ராவும் செய்தா.. அதுக்குப் போயி
என்னென்னத்தையோ இழுக்கறியே.."

"ம்மா.. புரியாமப் பேசறிங்களே.. இன்னைக்கு பூஜையறை.. நாளைக்கு


கொத்துசாவி.. இதுதானே நடக்கும்..?"

நந்தினியின் ஆக்ரோசமான கேள்விக்கு..

"நடந்தா உனக்கென்ன நஷ்டம்..?" என்ற கேள்வியுடன் வந்து நின்றான்


ரகுநந்தன்..

தம்பி வந்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்திருந்தால் நந்தினி அடக்கி


வாசித்திருப்பாள்.. 

விடியும் போதே காபிச் சண்டையை ஆரம்பித்து விட்டதில்


கோபப்பட்டிருக்கும் தம்பியை சமாதானப் படுத்தி தன் பக்கம் இழுக்கும்
முயற்சியில் ஈடுபட்டிருப்பாள்.. 

அது தெரியாமல் பூஜையறையில் உரிமையுடன் மீ ரா விளக்கேற்றியதில்


வெகுண்டு போய் சண்டைக்கு இழுத்துவிட்டு திருதிருத்தாள்..

ரகுநந்தனுக்கு கோபமான கோவம்.. 

திருமணமான இரண்டாவது நானே அவனுடைய புது மனைவி சிலர் மனதில்


விசம் இருக்கிறது என்று அவனுடன் பிறந்த தமக்கைகளைக் குறிப்பிட்டு
ஜாடையாக சொல்லி விட்டாளே என்ற சினம் அவனுக்குள் கனன்று
கொண்டிருந்தது.. 

ஆயிரம்தான் அவன் ஆசைப்பட்டு மணந்த மனைவியென்றாலும் அவனுடைய


அக்காக்களைப் பற்றிப் பேச அவன் அனுமதிக்கலாமா..? 

அந்தத் துணிவு மீ ராவுக்கு எப்படி வந்தது..? 


அதைத் தந்தது நந்தினியின் பொடித்தனமான நடவடிக்கையல்லவா..?

அவனே அந்த கோபத்தில் இருந்தான்.. 

மீ ராவை விளாசு, விளாசென்று விளாச அவன் சமயம் பார்த்துக் கொண்டிருக்க


நந்தினி அடுத்த பொடித்தனத்தை ஆரம்பித்துத் தொலைத்திருந்தாள்..

'இந்த அக்காவை என்ன செய்தால் தகும்..?'

கொலைவெறி கொண்டவனின் முகத்தில் வழிந்த ரௌத்ரத்தில் நடுநடுங்கி


விட்டாள் நந்தினி.. 

இதுபோன்ற பொடித்தனமான பேச்சுக்களை அவள் புதிதாக ஒன்றும்


பேசிவிடவில்லை.. அடிக்கடி பேசுகிறவள்தான்.. 

அப்போதெல்லாம் அதைப் பொருட்படுத்தாமல் சிரித்துக் கொண்டே நகர்ந்து


விடும் ரகுநந்தன் அன்று மட்டும் கொலைவெறி கொண்டதில் திருதிருத்தாள்..

"அவ என் பெண்டாட்டி.. என் வட்டில்


ீ விளக்கேத்த வந்தவ.. விளக்கேத்தறா..
நாளைக்கே கொத்துசாவியை கையில வாங்கிக்க வேண்டிய அவசியம் வந்தா
வாங்கிக்குவா.. அதில் உனக்கென்ன நஷ்டம் அக்கா..?"

மீ ராவை முன்னால் வைத்துக் கொண்டு நன்றாக நாக்கைக் கடிக்க


வைப்பதைப் போல காரசாரமாக ரகுநந்தன் கேட்ட கேள்வியை நந்தினியால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை.. 

அதே கேள்வியை மீ ரா இல்லாமலிருக்கும் போது ரகுநந்தன் கேட்டிருந்தால்


கூட அவள் தணிந்து போயிருப்பாள்..

"எனக்கென்ன நஷ்டமா..? இது என் வடு


ீ ரகு.."

"இல்லைக்கா.. இது உன் வடில்லை..


ீ நீ பிறந்த வடு.."

அழுத்தம் திருத்தமாக ரகுநந்தன் சொன்னதில் அங்கே நின்றிருந்த ராதிகா


ஸ்தம்பித்து விட்டாள்.. 

நந்தினிக்கு சொல்லும் வார்த்தைதானே அவளுக்கும்.. 

அக்கா, தங்கைகளை கட்டிய கணவர்களான ஈஸ்வரனும் சண்முகமும் முகம்


கருத்து விட்டார்கள்.. 
இவ்வளவு ஏன்..? ஏதோ ஒன்றைப் பற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த
நந்திதாவும் மோனிகாவும் அமைதியாகி விட்டார்கள்.. 

சதிஷீம், மகேஷீம் சன்னமான கோபத்துடன் தாய்மாமனைப் பார்த்தார்கள்..

கோபிநாதனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. எது பேசினாலும்


குற்றமாகக் கூடிய சூழல் அது.. 

அவர் என்ன பேசுவார்..? யார் பக்கம் பேசுவார்..?

ரகுநந்தனின் கேள்வியில் தவறில்லை என்றாலும் அதை அவர் ஆதரித்து


விட முடியாதே.. 

அவர் ரகுநந்தனுக்கு மட்டும் தந்தையல்ல.. 

நந்தினி, ராதிகாவுக்கும் அவர்தான் தந்தை.. 

ஒன்றுக்கு இரண்டாகப் பெண்களைப் பெற்றவர்.. 

பிறந்த வட்டில்
ீ மதிப்புக் கிடைத்தால்தான்  புகுந்த வட்டில்
ீ பெண்கள்
நிம்மதியாக வாழ முடியும் என்ற உலக நடப்பை அறிந்தவர்.

நந்தினியையும் ராதிகாவையும் அவளது புகுந்த வட்டில்


ீ தாங்குகிறார்கள்
என்றால் அதற்கான ஒரே காரணம் அவர்கள் இருவரும் தாராமங்களத்தின்
ஜமீ ன் வட்டில்
ீ பிறந்த பெண்கள் என்பதுதான்.. 

வைரத்தில் நகைகள், வண்டி வண்டியாய் சீர்வரிசை, புகுந்த வடு


ீ இருக்கும்
நகரத்தில் வாங்கிக் கொடுக்கப் பட்டிருக்கும் வடு..
ீ வருடம் தவறாமல்
பண்டிகைகளுக்கு செல்லும் தாய் வட்டுச்
ீ சீ தனம்..

இவற்றின் அடிப்படையில் கோலோச்சுபவர்கள் தம்பியின் திருமணத்திற்குப்


பின்னால் அவையெல்லாம் நின்று விடுமோ என்று அஞ்சுவது இயல்புதானே..

அதனால்தான் தங்களின் பெண்களை ரகுநந்தனுக்குத் திருமணம் செய்து


வைத்து விடும் குறிக்கோளுடன் அவர்கள் ஒற்றைக் காலில் நின்று
போராடினார்கள்.. 

அக்காவும் தங்கையும் உடன் பிறந்த பாசத்தை மறந்து போட்டா போட்டி


போட்டார்கள்..
ரகுநந்தன் இருவருக்கும் பெப்பே சொல்லி விட்டு எங்கோ சென்னையில்
பிறந்து வளர்ந்த மீ ராவின் பக்கமாக கைகாட்டி விட்டால் அவர்களுக்கு எப்படி
இருக்கும்..?

அந்தத் தணல்தான் நந்தினியை ஆங்காரப்பட வைத்து விட்டது.. 

அதைப் புரிந்து சமாதானப்படுத்தும் மனநிலையில் ரகுநந்தன் இல்லை... 

அவன் மீ ராவின் வார்த்தைகளில் காயப்பட்டிருந்தான்... 

தமக்கையின் பேச்சினால்தானே மீ ரா அப்படியொரு வார்த்தையை விட்டு


விட்டாள் என்று சினம் கொண்டிருந்தான்.

அந்தச் சினத்தில்தான் அவனைத் தூக்கி வளர்த்த தமக்கையைப் பார்த்து இது


உன் வடில்லை, நீ
ீ பிறந்த வடு
ீ என்று சொல்லி விட்டான்.

"போதுமா நந்தினி..? படித்துப் படித்துக் சொன்னேன்.. தேவையில்லாம வாய்


விடாதேன்னு.. கேட்டியா.. இப்போப் பார்.. எப்படிப்பட்ட வார்த்தை வந்து
விட்டதுன்னு.. இது உன் வடில்லை
ீ நந்தினி.. உன் வடு
ீ கோயம்புத்தூரில்
இருக்கு.. கிளம்பு.." அழுத்தம் திருத்தமாக ஈஸ்வரன் சொல்லியதில் யமுனா
பதறிவிட்டாள்..

"எங்கே கிளம்பச் சொல்கிறீங்க மாப்பிள்ளை..?"

"எங்க வட்டுக்குத்தான்
ீ அத்தை.. இது உங்க மகளின் வடில்லை.."

"இப்படிப் பேசலாமா மாப்பிள்ளை.. ரகு ஏதோ ஒரு கோபத்தில்


சொல்லிட்டான்... நந்தினியும் தேவையில்லாம பேசிட்டாதானே..?"

"அதுக்குத்தான் வாங்கிக் கட்டிக்கிட்டாளே.."

ஈஸ்வரன் ஒரு பக்கம் முறுக்க.. சண்முகம் தாவிக் குதித்தார்..

"அக்காவுக்குச் சொன்னதுதாண்டி தங்கைக்கும்.. உனக்கு வேறத் தனியாச்


சொல்லனுமா..? கிளம்பு ராதிகா.."

"மாப்பிள்ளை.. நீங்களுமா..?"

"ஏன் அத்தை..? உங்க பெரிய மாப்பிள்ளைக்குத்தான் ரோசமிருக்கனும்.. சின்ன


மாப்பிள்ளைக்கு இருக்கக் கூடாதா..? கோயம்புத்தூருக்கு குன்னூர்
குறைஞ்சதில்லை அத்தை.. அவரு மில்லு ஓனருன்னா நான் எஸ்டேட் ஓனர்..
தாரா மங்களத்து ஜமீ னுக்கு எங்க வடுக
ீ குறைஞ்சதில்லை.."

சண்முகம் மென்மையான குணம் படைத்தவர்.. 

மாமியாரிடம் அதிகமாக பேசியறியாதவர்.. 

அவரே எகிறும் போது ஈஸ்வரனைப் பிடித்து நிறுத்தி விட முடியுமா..?

யமுனா கைகளைப் பிசைந்தபடி கோபிநாதனைப் பார்த்தாள்.. 

அவரோ ரகுநந்தனைப் பார்த்தார்.. 

அவன் இறுக்கமாக நின்றான்..

மீ ராவுக்கு அழுகை அழுகையாக வந்தது.. 

ரகுநந்தனின் மீ து இருந்த மயக்கம் அடி மனதின் ஆழத்தில் அமிழ்ந்து


போனது.

'இவனை யார் என்னைத் தேடி வந்து கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து


இந்த வட்டில்
ீ நிறுத்தச் சொன்னது..?' என்று கோபம் வந்தது.. 

அவள் விழிகளில் தெரிந்த அந்த கோபத்தை ரகுநந்தன் கண்டு கொண்டான்.

நிலாக் காயும் நேரத்திலே -15


ஏப்ரல் 22, 2021

15

 
'ஏன் என்னைத் திருமணம் செய்து கொண்டாய்..?'

ரகுநந்தனைப் போன்ற பராக்கிரமசாலியைப் பார்த்து பார்வையினால் இந்தக்


கேள்வியைக் கேட்டாள் மீ ரா.. 

அவனது முகம் ஜிவுஜிவுத்தது.

அவரவர்க்கு அவர் நியாயம்.. மீ ராவின் பக்கம் இருக்கும் நியாயம் வெகு


நியாயமானது.
அவள் என்ன தவறு செய்தாள்..? 

தாராமங்களத்து ஜமீ ன் வட்டிலிருந்து


ீ பெண் கேட்கிறார்கள்.. மாப்பிள்ளை
வராதி
ீ வரன்..!
ீ சூராதிசூரன்..! தேசிங்கு ராஜாவைப் போன்ற திறமைசாலி..!
மறுத்து விடாதே என்று அவளைப் பெற்றவர்கள் மண்டியிடாத குறையாக
கெஞ்சுகிறார்கள்.. 

அவளும் பெற்றவர்களின் மன சந்தோசத்திற்காக சம்மதம் சொல்கிறாள்..

அந்த மாப்பிள்ளைக்கு இரண்டு தமக்கைகள் இருக்கிறார்கள்.. 

அவர்கள் இருவருக்கும் மீ ராவின் வயதில் பெண்கள் இருக்கிறார்கள்.. 

அந்தப் பெண்களில் ஒருத்தியைத்தான் அவன் திருமணம் செய்து கொள்ள


வேண்டும் என்று வழக்கடிக்கிறார்கள்.. 

அவன் இருவரையும் மறுத்து மீ ராவை கை காட்டியிருக்கிறான் என்று அவள்


கனவா கண்டாள்..?

அவளே பாவம்.. 

அந்த மாப்பிள்ளைக்கு அவளைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று


தெரியாமல் அந்தக் குழப்பத்திலேயே மனதை உழல விட்டபடி அவனுக்குக்
கழுத்தை நீட்டியிருக்கிறாள்..

முதல் இரவில்தான் அவன் தன் மனதைத் திறந்து அவளைப் பிடித்துப்


போய்தான் திருமணம் செய்து கொண்டான் என்பதைச் சொல்லி அவளது
மனக்குழப்பத்தை போக்கி வைத்தான்..

நீண்டநாள்களுக்குப் பிறகு நிம்மதியாக உறங்கியவளை விடிந்தவுடனே காபி


கொண்டு வருகிறேன் பேர்வழியென்று எழுப்பி விட்டு சண்டையிழுத்தது
நந்தினிதான்.

அந்தக் காபியை அவள் கேட்டாளா..?

இப்படியொரு பொறாமையை எதிர்கொண்டு வாழ வேண்டுமா என்ற


சஞ்சலத்துடன் குளித்து முடித்து தாயைத் தேடி வந்தால் அவளுடைய
மாமியார் எதிர் கொண்டழைத்து பூஜையறையில் விளக்கேற்றச் சொன்னாள்..

வடான
ீ வட்டில்
ீ விளக்கேற்றி சாமி கும்பிட்டது ஒரு குற்றமா..?
இப்படி அவள் நின்றால் குற்றம்.. நடந்தால் குற்றமென்று கண்ணில் காண
விடாமல் கரித்துக் கொட்டினால் மீ ரா எங்கே போய் ஒளிந்து கொள்வாள்..?

இப்படி ஓடி ஒளியத்தான் திருமணம் செய்து கொண்டு வந்திருக்கிறாளா..?

பேசாமல் சென்னையைப் பார்த்துக் கிளம்பிப் போய் விடலாம் போல


அவளுக்கு இருந்தது.. 

அவள் முகத்தில் தெரிந்த தீர்மானத்தில் ரகுநந்தனின் புருவங்கள் நெரிந்தன..

"கோவிலுக்குப் போகனும்னு அப்பா சொன்னார்.. வா, போயிட்டு வந்திரலாம்.."


என்று மீ ராவைப் பார்த்துச் சொன்னான்.

'என்னது..?' மிரண்டு விழித்தாள் மீ ரா..

இருக்கிற இன்னல்கள் போதாது என்று புதிதாக ஒன்றை அவன் பின்னி


வைக்கிறானே.. 

நந்தினியின் கணவரும், ராதிகாவின் கணவரும் ஊருக்குக் கிளம்ப வேண்டும்


என்று தாவிக் கொண்டிருக்கும் போது அதைப் பற்றிய கவலையில்லாமல்
கோவிலுக்குப் போகலாம் வா என்று அவன் கூப்பிட்டு வைக்கிறானே.. 

அதற்கும் மீ ராதான் காரணம் என்று அவனுடைய தமக்கைகள் மீ ராவின்


மண்டையைத்தானே உருட்டுவார்கள்..? 

அதைப் பற்றிய பிரக்ஞை துளியாவது அவனிடம் இருக்கிறதா..?

'இவனுக்கென்ன..? மண்டகப்படியெல்லாம் எனக்குத்தானே நடக்குது..' நொந்து


போனாள் மீ ரா..

"சபாஷ் மாமா.." கை தட்டினாள் நந்திதா..

"கீ ப் இட் அப்.." என்றாள் மோனிகா..

"அவங்கவங்களுக்கு குடும்பம் வந்திட்டா அக்காவாவது, தங்கையாவது..


இப்படித்தான் இருக்கனும் மாமா.." என்றான் மகேஷ்..

"எங்க அம்மாக்களுக்கு இந்தப் புத்தி இல்லாமல் போயிருச்சே.. ஒரு நாளாவது


இன்னார் வட்டு
ீ மருமகள் இன்னாரோட வொய்ப்.. இந்தப் பிள்ளைகளோட
அம்மான்னு சொல்லியிருப்பாங்களா..? எதுக்கெடுத்தாலும் நான் தாராமங்களம்
ஜமீ ன் வட்டில
ீ பிறந்தவங்கிற ஐடெண்டிதான்.. தேங்க்ஸ் மாமா.. எங்க
அம்மாக்களின் கண்களைத் திறந்துட்டிங்க.. புத்தி வர வைச்சுட்டிங்க.."
வஞ்சகப் புகழ்ச்சி பாடினான் சதீஷ்..

அக்கா மக்கள் நால்வரையும் ஆழ்ந்து பார்த்த ரகுநந்தன்..

"பேசி முடிச்சிட்டிங்களா..?" என்றான்.

அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்..

"இப்ப எதுக்காக உங்க நாலு பேருக்கும் கோபம் வந்திருக்கு..? உங்க


அம்மாக்களைச் சொல்லிட்டேன்னுதானே..? சொன்னது உங்க அம்மாக்களோட
கூடப் பிறந்த தம்பின்னு நீங்க நாலு பேரும் நினைச்சுப்
பார்த்தீங்களா..? இல்லை உங்களோட அப்பாக்கள்தான் நினைச்சுப்
பார்த்தாங்களா..?"

"நல்லா இருக்கே கதை.." நந்திதா சண்டைக்கு வந்தாள்..

"உங்க அக்கா, தம்பி கதையெல்லாம் அவங்களுக்கு கல்யாணம் ஆகிற


வரைக்கும்தான்.. இப்ப அவங்க எங்க அப்பாவோட வொய்ப், எங்க அம்மா.."

"இதைத்தானே நானும் சொன்னேன்..? அதுக்குத்தானே நீங்க எல்லோரும்


கச்சை கட்டிக்கிட்டு இந்த குதி குதித்து சண்டைக்கு வர்றீங்க.. நீங்க சொன்னா
சரி.. நான் சொன்னா தப்பா..?"

இளையவர்கள் நால்வரும் திகைத்துப் போனவர்களாக ஒருவர் முகத்தை


ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. 

ஈஸ்வரனும் சண்முகமும் நிதானித்தார்கள்..

"சொல்லு ராதிகா.. உங்க வட்டு


ீ பூஜையறையில் யார் விளக்கேத்தி சாமி
கும்பிடறது..?"

"அம்மாதான்.."

"அதைத் தப்புன்னு உங்க அப்பா கூடப் பிறந்த அக்காவோ, தங்கையோ சத்தம்


போட்டா உங்க அப்பா என்ன செல்வாரு..? வேடிக்கை பார்த்துக்கிட்டு பேசாம
இருப்பாரா..?"

"அதெப்படி இருப்பாரு..? என் வட்டில


ீ என் பெண்டாட்டி விளக்கேத்தாம வேற
யாரு விளக்கேத்துவாங்கன்னு லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுவாரில்ல.."
"நான் லெப்ட் அண்ட் ரைட் வாங்கலை.. இது என் வடு..
ீ இங்கே என்
பெண்டாட்டி விளக்கேத்தறதுக்கு உரிமையிருக்குன்னு மட்டும்தான்
சொன்னேன்.. இல்லேன்னா சொல்லுங்க.. நான் என் பெண்டாட்டியைக்
கூப்பிட்டுக்கிட்டு தோட்டத்து பங்களாவுக்கு குடி போயிடறேன்.. தாரா
மங்களத்து ஜமீ ன்ங்கிற பட்டமும் எனக்கு வேண்டாம்.. இந்த வடு
ீ சொத்து
சுகம் எதுவும் எனக்கு வேண்டாம்.. அத்தனையையும் என் அக்காக்களே
எடுத்துக்கட்டும்.."

அழுத்தமான ரகுநந்தனின் பேச்சில் ஆடிப் போய் விட்டாள் யமுனா.. 

ரகுநந்தன் சொன்னதைச் செய்பவன்.. 

அவன் பாட்டுக்கு புது மனைவியுடன் தோட்டத்துப் பங்களாவிற்கு குடி போய்


விட்டால் அவள் என்ன செய்வாள்..?

"என்னடா பேசற..?" பதறினாள்..

கோபிநாதன் அசையாமல் நின்றார்.. 

எப்படி மருமகன்கள் சப்தம் போடும் போது மௌனம் சாதித்தாரோ.. அதைப்


போலவே மகனின் பேச்சுக்கும் மறுபேச்சுப் பேசாமல் மௌனம் சாதித்தார்..

"அவனா பேசலைம்மா.. இவ பேச வைக்கிறா.."

பழியுணர்வுடன் மீ ராவை வெறித்தாள் நந்தினி.. 

பயந்து போனவளாக சுமதியின் பக்கம் நகர்ந்து அவள் முதுகிற்குப் பின்னால்


மறைந்து கொண்டாள் மீ ரா..

காலையில் காபி கொடுக்க வருகிறேன் பேர்வழியென்று நந்தினி வம்பு


வளர்த்த போதும் மீ ரா பயந்து முதுகிற்குப் பின்னால் மறைந்தாள் தான்.. 

அப்போது சுமதி அங்கேயிருந்தும் வெகு இயல்பாக ரகுநந்தனின் கைபற்றி


அவன் முதுகிற்குப் பின்னால் மறைந்தாள்.. 

இப்போதோ ரகுநந்தன் அங்கிருந்தும் சுமதியின் பக்கமாக நகர்ந்து அவள்


முதுகிற்கு பின்னால் மறைகிறாள்..

அந்த மாற்றத்தை ரகுநந்தனால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை.. 


முதல்நாள் இரவில் வென்றிருந்த அவனது காதல் மனைவியின் மனதை
தோற்றுக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.. 

விடியற்காலையில் நந்தினியின் செயலால் கணவன் மனைவிக்குள்


ஏற்பட்டிருந்த விரிசல் பெரிதாகி இடைவெளி ஏற்பட்டு விட்டதில் மனம்
அதிர்ந்தான்..

"கேட்டுக்கிட்டியா..?" நந்திதாவிடம் கேட்டான்..

அவளால் பேச முடியவில்லை.. 

ஈசுவரனின் கோபம் பஞ்சாய் பறந்திருந்தது.. 

மனைவியின் கன்னத்தில் ஓர் அப்பு அப்ப அவரது கை துடித்தது.. 

வயதானாலும் புஜபல பராக்கிரமசாலியாக மீ சையை முறுக்கிக் கொண்டிருந்த


கோபிநாதனின் நினைவில் துடிப்பை அடக்கிக் கொண்டார்..

"சொல்லுங்க மாமா.. இது என் வடில்லை..


ீ உங்க வடாவே
ீ இருக்கட்டும்..
விட்டுக் கொடுத்துட்டு நான் வெளியேறிக்கறேன்.. என்ன சொல்கிறீங்க.."
ஈஸ்வரனிடம் அழுத்தமாக கேட்டான் ரகுநந்தன்..

"நீ கோவிலுக்குப் போகனும்னு சொன்ன ீயே போயிட்டு வா.." 

அவர்களைத் தாட்டி விடுவதில் குறியானார் ஈஸ்வரன்..

"நீங்க..?"

"நாங்க டிபன் சாப்பிட்டுட்டு ஆத்துப் பக்கம் காத்தாடப் போயிட்டு


வரலாம்ன்னு இருக்கோம்.."

"ஊருக்குப் போகனும்னு சொன்ன ீங்களே.."

"உங்களை மறுவட்டு
ீ விருந்துக்கு அனுப்பி வைச்சுட்டு நிதானமா ரெண்டு
நாள் ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவாப் போறதா இருக்கோம்.. ரகு.. நீ கிளம்பு.."

'அஃது..' என்ற வெற்றிப் பார்வையுடன் கிளம்பினான் ரகுநந்தன்.. 

அவன் பார்வையில் பயந்து போனவளாக பின் தொடர்ந்தாள் மீ ரா..

நிலாக் காயும் நேரத்திலே -16


ஏப்ரல் 23, 2021
 

16

 
"குடும்பம்ன்னா நல்லதும் இருக்கும்.. கெட்டதும் இருக்கும்.. அனுசரிச்சுப்
போறதுதான் வாழ வந்த பெண்களுக்கு அழகு.." என்றான் ரகுநந்தன்..

குளத்திலிருந்த மீ ன் கும்பலை வெறித்துக் கொண்டிருந்த மீ ரா எவருக்கு


சொல்லப்பட்ட வார்த்தைகளோ என்பதைப் போல பேசாமல் இருந்தாள்..

"ஏய்ய்.." அதட்டினான் ரகுநந்தன்..

'ஏயாமில்ல.. இவர் வட்டு


ீ வேலைக்காரி பார்.. ஏய்ன்னு கூப்பிடறாரு..
வேலைக்காரங்க கூட பேர்சொல்லாம ஏய்ன்னு சொன்னா போய்யா
நீறுமாச்சு, உன் வேலையுமாச்சுன்னு உதறித் தள்ளிட்டுப் போய்கிட்டே
இருப்பாங்க..' பல்லைக் கடித்தாள் மீ ரா..

"உன்கிட்டத்தாண்டி பேசிக்கிட்டு இருக்கேன்.."

மீ ரா சுற்றுமுற்றும் பார்த்து விட்டு..

"என்னையா சொல்கிறீங்க..?" என்று தெரியாததைப் போலக் கேட்டாள்..

"கொழுப்புடி உனக்கு.."

"இருக்கலாம்.. இருந்தா ஒன்னும் தப்பில்லையே.. தாராமங்களத்து ஜமீ ன்


வட்டில
ீ பிறந்த பெண்களுக்குத்தான் கொழுப்பு இருக்கனுமா..? அங்கே வாழ
வந்த பெண்களுக்கு இருக்கலாம்.."

"பல்லைக் கழட்டிருவேண்டி.. நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன்..


ரொம்பத்தான் பேசற.. காலையில என்னன்னா காபியில விசமில்ல.. சிலர்
மனசிலதான் விசமிருக்குங்கறே.. இப்ப என்னடான்னா என் அக்காக்களுக்கு
கொழுப்புன்னு பேசற.. திமிரா..?"

"ஆமாமாம்.. நீங்க சாப்பாடு போட்டு வளர்த்ததில வந்த திமிரு.. கொழுப்புன்னு


நான் முதலில் சொல்லலை.. நீங்கதான் சொன்ன ீங்க.. என்னைப் பார்த்து நீங்க
சொல்லலாம்.. உங்க அக்காக்களை நான் சொல்லக் கூடாதா...? ஏங்க இந்த
ஃபார்சியாலிட்டி..? உங்க வட்டுப்
ீ பெண்ணுக மட்டும் உயர்த்தி..? ஊரான் வட்டுப்

பெண்ணுன்னா மட்டமா..?"

"அடிவாங்கப் போறேடி.. நீ ஊரான் வட்டுப்


ீ பெண்ணா..?"

"என் அப்பாவோட பெண்.."

"அது அப்ப.. இப்ப என் பெண்டாட்டி.."

கொதித்துக் கொண்டிருந்த கோபத்திலும் அந்த வார்த்தைகள் தேனாக


இனித்துத் தொலைத்தன.. 

பட்டுவேட்டி சட்டையிலிருந்து பேண்ட் சர்ட்டுக்கு மாறியிருந்தான்.. 

அதில் மாப்பிள்ளைக் கோலத்தில் மயங்க வைக்கம் அழகுடன் இருந்து


தொலைத்தா னென்றால் இதில் வசீகரிக்கும் பேரழகனாய் அவள் மனதை
வசியம் செய்து தொலைத்தான்..

'இருந்தாலும் இவன் இத்தனை அழகனாய் இருந்து தொலைக்கக் கூடாது..' 

அவனைக் கண்டதும் கட்டவிழ்ந்த கன்றுக்குட்டியாய் தறி கெட்டு ஓடும்


மனதை இழுத்துப் பிடித்துக் கட்டுக்குள் இருந்த அவள் வெகுவாய்
பிரயத்தனப் பட்டாள்..

மனதில் அவன் மீ தான ஆசையை சுமந்து கொண்டு வெளியில் வேறு


விதமாய் வார்த்தைகளைச் சிதற விட்டாள்..

"போதும்.. இந்தப் பெண்டாட்டிப் பட்டம் கிடைச்சதிலதான் இத்தனை பாடும்..


பேசாம எங்கப்பாவுக்கு மட்டும் மகளாய் இருந்திருந்தா இந்த அவதியில்லை.."

"என்னடி சொன்ன..?" உக்கிரமாகி விட்டான் ரகுநந்தன்..

"வட்டிலயும்
ீ இதே போலதான் பார்த்து வைச்ச.. காலையிலயும் உங்க அக்கா
பொண்ணுகள்ல யாராவது ஒருத்தியைக் கட்டியிருக்கலாம்ன்னு ஆலோசனை
சொல்ற.. உன் மனசில என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கிற..? ரகுநந்தனைப்
பார்த்தா உனக்கு எப்படி இருக்கு..?"

இழுத்துக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது அவளுக்கு.. 

அவனுடைய கோபம் அவளை வசீகரித்து ஈர்த்தது.. 


கள்ளத்தனம் மிக்க அவனது காதல் மழையில் மீ ண்டும் நனைய ஆசையாய்
இருந்தது.. 

அதைச் சொல்ல முடியாமல் ரோசம் வந்து தடுத்தது..

"என்னைப் பார்த்தா உங்களுக்கும் உங்க அக்காக்களுக்கும் எப்படியிருக்கு..?"

"ஏய்ய்.. பேச்சு உனக்கும் எனக்கும்தான்.. என் அக்காக்களைப் பேச்சில்


இழுக்காதே.."

"இழுப்பேன்.. அவங்களும் அப்படி இருக்கனுமில்ல.. பேச்சு அக்கா, தம்பிக்குள்ள


மட்டும் இருந்திருந்தா நான் ஏன் பேசப் போறேன்..? அதையும் தாண்டி
என்னை ஏன் கரிச்சுக் கொட்டறாங்க..? நான் என்ன தப்பு செய்தேன்..?"

"புரிஞ்சுக்க மீ ரா.. அவங்களோட பொண்ணுகள்ல ஒருத்தியை நான்


கட்டிக்கனும்னு எதிர் பார்த்தாங்க.. அது நடக்கலைங்கிற கோபத்தை உன்
மேல் காட்டறாங்க.."

"அதுக்கு நானா பிணை..? நானா உங்க அக்கா பெண்கள கல்யாணம்


பண்ணிக்க வேணாம்ன்னு சொன்னேன்..?"

"என்னடி நீ..! உன்மேல ஆசைப்பட்டுக் கல்யாணம் கட்டிக்கிட்டேன்னு


கோபப்பட்டு அந்தக் கோபத்தில ஏதேதோ பேச வர்றாங்கன்னு சொன்னாப்
புரிஞ்சுக்காம பேசறியே.."

"எல்லாம் புரியுது.. அந்தக் கோபத்தை என்மேல ஏன் காட்டறாங்கன்னுதான்


புரியலை..? நானா உங்களைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு
ஆசைப்பட்டேன்..? ''

'' ஏய்ய்..''

'' நீங்கதான் என்மேல ஆசைப்பட்டேன்னு சொல்லிப் பெண் கேட்டிங்க..


எங்க வட்டில
ீ உங்களுக்குப் பெண் கொடுக்கனும்னு ஆசைப்பட்டாங்க..
அப்பாம்மா ஆசைப்படறாங்களேன்னு நானும் சம்மதம் சொன்னேன்..''

 '' இல்லைன்னா  ? '' 
 ''   இல்லைன்னா சென்னையில பிறந்து வளர்ந்தவ பட்டிக்காட்டுக்கு ஏன்
வாழ்க்கைப்பட்டு வரப் போறேன்..? தாரா மங்களத்து ஜமீ ன் வட்டுக்கு
ீ சொந்தம்
கொண்டாடனும்னு நான் ஒன்னும் வேண்டுதல் வைக்கல..''

"என்னடி சொன்ன..?"

'' உங்க அக்காக்கள் கோபப்படனும்னா உங்க மேல கோபப்படனும்.. என் மேல


கோபப்படக் கூடாது..'' 

'' மீ ரா ''

'' என்ஜினியரிங் படிச்சிருக்கேன்.. கேம்பஸ் இண்டர்வியுவில வேலை


கிடைச்சிருக்கு.. வெளிநாட்டுக் கம்பெனி.. யு.எஸ் போறதுக்கான சான்ஸ்..
அத்தனையையும் விட்டு விட்டு உங்களுக்கு கழுத்தை நீட்டியிருக்கேன்.. என்
படிப்பு, என் வேலை, என் கனவு, என் எதிர்காலம்ன்னு எல்லாத்தையும்
மூட்டை கட்டி மெரினா பீச்சில் விட்டெறிஞ்சுட்டுத்தான் தாராமங்களத்துக்கு
வந்திருக்கேன்.. நீங்களும் தெரிஞ்சுக்கிட்டு உங்க அக்காக்கள் கிட்டயும்
சொல்லி வையுங்க.."

"ஓ.."

ஒற்றை எழுத்தில் இருந்த உணர்ச்சிப்பிரவாகத்தை மீ ரா உணர்ந்து


கொள்ளவில்லை.. 

சில வார்த்தை வெல்லும்.. சில வார்த்தை கொல்லும். 

சிதறிய வார்த்தைகளை அள்ளி விட முடியாது.. 

அதை உணராமல் வார்த்தைகளைச் சிதற விட்டுக் கொண்டிருந்தாள் மீ ரா..

அவள் தரப்பில் நியாயம் இருந்ததுதான்.. 

அவள் சொல்லிய அனைத்தும் உண்மையானவைதான்.. 

ஆனால் ரகுநந்தன் போன்ற கணவனுக்கு முன்னால் அவை எல்லாமே தூசு..! 

அதை யோசிக்காமல் மீ ரா பேசிவிட்டாள்...

அவன் ஒன்றும் அவனுடைய தமக்கைகள் பேசுவதை வேடிக்கை


பார்க்கவில்லை.. 
அவற்றைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று மீ ராவைக் கட்டாயப்
படுத்தவில்லை.. 

மீ ராவை ஓர் வார்த்தை அவர்கள் சொன்னால் அதற்குப் பதிலாக பல


வார்த்தைகளை இவன் சொல்லி தமக்கைகளைக் கண்டிக்கத் தவறவில்லை.

அவன் மீ ராவிடம் சொன்னதெல்லாம் ஒன்றுதான்.. 

என் தமக்கைகள் பேசுவதை நீ காதில் போட்டுக் கொள்ளாதே.. 

அவர்களைப் பற்றிக் குறைவாகப் பேசாதே.. 

அவர்கள் உன்னைப் பேசினால் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க


மாட்டேன்.. கண்டித்து வைப்பேன்.. 

நீ மட்டும் பொறுமையாக இருந்தால் போதும்.. அனைத்தையும் நான் பார்த்துக்


கொள்வேன்.

இப்படிப்பட்டக் கணவன் கிடைப்பது வரம்.. 

மீ ரா பாவம் சிறுபெண்.. 

கல்யாணக் கனவுகள் காணாமல் படிப்பு, வேலையென்ற கனவுகளைக் கண்டு


கொண்டிருந்தவள்.. 

திடிரென்று அவள் மீ து திணிக்கப்பட்டக் கல்யாண பந்தத்தில் அரண்டு


போயிருந்தாள்..

ரகுநந்தன் ஒருவழியாக அவளது மிரட்சியைப் போக்கி அவள் மனதில்


காதலை விதைத்து வைத்த போது துளிரிலேயே அதைக் கிள்ளி
விடவேண்டுமென்று நந்தினி ஆவேச ஆட்டம் ஆடி விட்டாள்..

மீ ராவின் முன்னிலையில்தான் அவன் நந்தினியை கடிந்து கொண்டான்.. 

யமுனாவோ, கோபிநாதனோ மகளின் பேச்சை ஆதரிக்கவில்லை.. 

மகளைக் கண்டித்தார்கள்.. 

கோவிலுக்கு கிளம்புவதற்கு முன்னால் ரகுநந்தன் வட்டை


ீ விட்டு வெளியேறி
விடப் போவதாகவே சொல்லி விட்டான்..
இதற்கு மேல் அவன் என்ன செய்ய வேண்டுமென்று மீ ரா எதிர்பார்க்கிறாள்
என்ற எரிச்சல் ரகுநந்தனுக்குள் மண்டியது..

மீ ராவோ அதிர்ந்து போயிருந்தாள்.. 

அசூசை தளும்பும் நாத்தனாரின் பார்வையை நினைத்துப் பார்க்கக் கூட


அவளுக்கு பயமாக இருந்தது.. 

அந்த பயத்தில் இவனால்தானே இந்த இன்னலெல்லாம் என்று ரகுநந்தனின்


மீ து கோபத்தைக் காண்பித்துப் பொருமித் தள்ளிக் கொண்டிருந்தாள்..

"வைரமாம், அட்டிகையாம், வளையல்களாம்..! யாருக்கு வேண்டும் உங்க


வைரமும் நகைகளும்..? எஸ்டேட் ஓனராம்.. நான் கேட்டேனா..? எஸ்டேட்
ஓனர்தான் எனக்கு ஹஸ்பெண்டா வரனும்னு நான் கேட்டேனாங்கறேன்.
தாரா மங்களத்து ஜமீ ன் சொத்தாம்.. யாருக்கு வேணும் உங்க சொத்து..?''

''  -----  ''

'' எனக்கு படிப்புத்தான் பெரிய சொத்து.. கொத்துச் சாவிக்கு நான்


ஆசைப்படறேனாம்.. என்னோட அலமாரிச் சாவிக்குக் கூட நான்
ஆசைப்பட்டது கிடையாது.. அது பப்பரப்பான்னு திறந்துதான் கிடக்கும்..
அதிகாரத்தை கைப்பற்றிக்குவேனாம்.. அதை வைச்சு நானென்ன
செய்ய..? அதிகாரம் பண்ணி பழக்கமில்லாதவங்க நானு.. அது உங்க
அக்காக்களுக்குத்தான் கைவரும்..'' 

'' -----  ''

'' என்னைக் கேட்டா நீங்க என்னைக் கல்யாணம் பண்ணியிருக்கவே


கூடாதுன்னுதான் சொல்வேன்.."

இமைக்காமல் அவளையே பார்த்த ரகுநந்தனின் மனம் வலித்தது.

நிலாக் காயும் நேரத்திலே -17


ஏப்ரல் 25, 2021

17

 
மனதில் உள்ள எண்ணங்களை மறைக்காமல் கொட்டிக் கவிழ்த்து விட்டாள்
மீ ரா.. 

அது ரகுநந்தனுக்கும் புரிந்தது.. 

உதடுகள் துடிக்க.. மூக்குநுனி கோபத்தில் சிவந்திருக்க ரகுநந்தனின் முகம்


பார்க்காமல் பேச நினைத்தை பேசி விடும் வேகத்துடன் அவள் பேசிக்
கொண்டிருந்தாள்..

ரகுநந்தனின் முகம் பார்த்தால் அவளது மனது மயங்கி விடும்.. 

அனைத்தும் மறந்து போய் அவன் மார்பில் ஒன்றிக் கொள்ளும் ஆசை


உண்டாகி விடும்.. 

அது கூடாது.. அவள் சொல்ல நினைப்பதை சொல்லிவிட வேண்டும்..

சொல்ல நினைப்பதையெல்லாம் சொல்லி விடக் கூடாது என்பதை


பாவம், அந்த பேதை அறியவில்லை.. 

அவள் பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அவளுடைய கணவனை


அவளிடமிருந்து தள்ளி நிறுத்திவிடும் என்பதை அவள் நினைத்தும்
பார்க்கவில்லை..

ஊரே அவனைப் பார்த்து மயங்க அவன் மீ ராவைப் பார்த்துத்தான்


மயங்கினான் என்பதை மறந்து அவள் பொங்கிக் கொண்டிருந்தாள்..

"ஓ..! வேற யாரைக் கல்யாணம் பண்ணியிருக்கனும்னு சொல்றீங்க மீ ரா


மேடம்..?"

நிதானமான அவனது குரல் அவளை உசுப்பி விட்டது..

"உங்க அழகு அக்கா மகள்களில ஒருத்தியைக் கல்யாணம்


பண்ணியிருக்கனும்.." என்று அவள் சீறினாள்..

"இதைத்தானே காலையில இருந்து மந்திரம் போல ஓதிக்கிட்டு இருக்கீ ங்க..


நான் யாரைக் கல்யாணம் பண்ணியிருந்திருக்கனும்னு நீங்க அபிப்ராயம்
சொல்ல வேணாம்.. வாயை மூடிக்கிட்டு இருக்கப் பழகிக்கங்க.."

"என்னது..?"
"சொன்னது புரியலைங்களா..? வாயைத் திறக்காதீங்கன்னு சொன்னேன்.. நான்
யாரைக் கட்டியிருக்கனும்னு வியாக்கினம் பேசாதீங்க.. அது எனக்குப்
பிடிக்காது.."

"பேசினா..?"

"பல்லை உடைப்பேங்க.. நான் கோபக்காரன்.. பார்த்துப் பதனமா பேசிப்


பழகுங்க.. சூதானமா இருந்துக்கங்க.. ஆமாம்.. சொல்லிட்டேன்.. நான் கட்டின
தாலியைக் கழுத்தில போட்டுக்கிட்டு நீங்க அவளைக்
கட்டியிருக்கலாம், இவளைக் கட்டியிருக்கலாம்ன்னு அறிவுரை
சொன்ன ீங்கன்னு வையுங்க.. முகரையைப் பேர்த்திருவேன்.."

"காட்..! அடிப்பீங்களா நீங்க..?"

"கையை முறிப்பேங்க.. அதனால வாயைப் பொத்திக்கிட்டு என்


பெண்டாட்டியா லட்சணமாப் பேசிப் பழகுங்க.."

"இல்லேன்னா..?"

"மென்னியைத் திருகுவேன்.. சவடால் வேண்டாங்க.."

"இந்தச் சவடாலை உங்க அக்காக்கள்கிட்டக் காட்டுங்க.."

"காட்டிக்கிட்டுத்தான் இருக்கேங்க.. அதை நீங்க சொல்லிக் காட்டக்


கூடாதுங்க.. எனக்கே அது தெரியும்.. அவங்க பேசினா என்கிட்டச் சொல்லிட்டு
சோலிக் கழுதையைப் பாருங்க.. நான் கேட்டுக்கறேன்.. நீங்க திருவாயைத்
திறந்து அவுக மனசில விசமிருக்கு இவுக மனசில அமிர்தம் இருக்குன்னு
அருள்வாக்க சொல்லாதீங்க.. நான் கேட்டுக்கிட்டிருக்க மாட்டேன்.."

"உங்க அக்காக்கள் மட்டும் என்னைப் பேசலாம்.. நான் அவங்களைப் பேசக்


கூடாது.. அப்படித்தானே..?"

"இல்லேங்க.. அவங்க உங்களைப் பேசறதைக் கேட்டுக்கிட்டு நான்


சும்மாயிருக்க மாட்டேன்.. கண்டிச்சு வைப்பேன்.. அதைப் போல நீங்க
அவங்களைப் பேசவும் அனுமதிக்க மாட்டேன்.. வெளுத்துக் கட்டிருவேன்.."

ரகுநந்தனின் இறுகிய முகத்தில் மீ ராவுக்குப் பயமாக இருந்தது..

'இவன் பூச்சாண்டியேதான்..' என்று மருண்டாள்..


'அடிப்பேன்ங்கிறானே.. இந்தக் காட்டுமிராண்டி மேல காதல் வந்து
தொலைக்குதே.. கடவுளே..! இப்படியாப்பட்ட கல்யாண பந்தத்திலா நான்
மாட்டனும்..?'

"திட்டி முடிச்சுட்டிங்களா..?"

"வாட்..?"

"மனசுக்குள்ள என்னைத் தாளிச்சுக்கிட்டு இருந்தீங்களே.. அதை


முடிச்சுட்டிங்களான்னு கேட்டேன்.. வட்டைப்
ீ பார்த்துப் போயாகனும்.. வெறும்
வயித்தோட சாமி கும்பிட வந்தாச்சு.. வயிறு பசிக்குது.."

"எனக்குப் பசிக்கலை.."

"திமிரா..? இதெல்லாம் வேண்டாம்ன்னுதான் பாடம் சொல்லிக்கிட்டிருக்கேன்..


கேட்டு பழகிக்கங்க.. அதைவிட்டுட்டு வெளிநாட்டில வேல கொடுத்தாக..
கனடாவுல என்னக் காணோம்ன்னு தேடறாக.. என் நேரம்.. தாரா
மங்களத்துக்கு வாக்கப்பட்டு வந்துட்டேன்னு கதை சொல்லிக்கிட்டு
இருந்தீங்கன்னு வையுங்க.. நான் மனுசனா இருக்க மாட்டேன்.."

"இப்ப மட்டும் மனுசனா இருக்கிறதாய் நினைப்பா..?"

வெடுக்கென்று கேட்டு விட்டு மடியில் கிடந்த பின்னலைத் தூக்கி பின்னால்


விசிறியபடி எழுந்து விட்டாள் மீ ரா..

அவன் முகத்தில் உராய்ந்து விலகிய பின்னலில் கமழ்ந்த நறுமணத்தை


முகர்ந்த ரகுநந்தன் கிறங்கிப் போனான்.. 

அவளது பின்னலில் ஈர்க்கப்பட்டுத்தான் அந்த திருமண விழாவில் பக்கத்தில்


இருந்தவரிடம் அவள் யாரென்று விசாரித்தான்..

"அந்தப் பொண்ணா தம்பி..? நம்ம பிரகாசத்தோட பொண்ணு.. என்ஜினியரா


இருக்காரு.. பெரிய குளத்தில பொண்ணுக் கட்டியிருக்காரு.. அதுவும் நம்ம
சொந்த பந்தம்தான்.. பேங்கில வேல பாக்குது.. உங்களுக்கு மாமன்
முறையாகனும்.. தூரத்துச் சொந்தம்தான்.. பெண் ஒன்னு, ஆணொன்னு
ரெண்டே புள்ளைக.. சென்னையில குடியிருக்காக.. இந்தப் பொண்ணுகூட
என்ஜினியருக்குத்தான் படிச்சுக்கிட்டு இருக்குன்னு சொன்னாக.. "
"படிச்சுக்கிட்டு இருக்குதா.. படிச்சு முடிக்கப் போகுதா..?"

"தெரியலைங்களே தம்பி.. இருங்க.. விசாரிச்சுட்டு வந்து சொல்றேன்.."

அடுத்த சில நிமிடங்களில் மீ ராவின் மொத்த ஜாதகமும் ரகுநந்தனின் கைக்கு


வந்து விட்டது.

பெயர் மீ ரா.. வயது 21. என்ஜினியரிங் படிப்பு முடிய இன்னும் ஒரு


மாதம்தான் பாக்கியுள்ளது.. சென்னையில் பிறந்து வளர்ந்தவள்.. இத்யாதி..
இத்யாதி..

ரகுநந்தன் முடிவு செய்து விட்டான்.. 

கல்யாணமென்ற ஒன்றைப் பண்ணிக் கொள்வதாக இருந்தால் இவளைத்தான்


பண்ணிக் கொள்வேன்.. என்று வட்டாருக்கு
ீ அவளைக் கை காட்டி விட்டான்.. 

மகனின் விருப்பத்துக்குத் தடை போட முடியாது என்பதை உணர்ந்து


வைத்திருந்த கோபிநாதன் தாமதிக்காமல் பிரகாசத்திடம் பெண் கேட்டு
விட்டார்.. 

மீ ராவும் ரகுநந்தனின் மனைவியாகி விட்டாள்..

அப்பேற்பட்ட கீ ர்த்தி மிகுந்த பின்னலை பின்னால் தூக்கிப் போட்டு அது


முழங்கால்களைத் தொட்டு விளையாடும் அழகில் கணவன் சொக்கிப்
போவதை உணராமல் கோபத்துடன் நடந்து கொண்டிருந்த மனைவியிடம்
மிளிர்ந்த பெண்மையின் மென்மையில் மனம் லயித்தான் ரகுநந்தன்..

'காலளவு கருங்கூந்தல்ன்னு இருக்கிறவ வெளிநாட்டுக்கு வேலை பார்க்கப்


போறாளாம்.. ஆளைப் பாரு..'

அவனுடைய ஆளைப் பார்த்தான்.. 

அழகாக அம்சமாக இருந்தாள்.. 

சொக்கிப் போன சொக்கநாதனாக அவனுடைய மீ னாட்சியைத் தொடர்ந்தான்..

"அம்மனையும் அப்பனையும் சேவிச்சுக்கங்க.. அம்மையப்பன் அருளும்


கிடைக்கும்.. அம்பாளின் அனுக்கிரகமும் கிடைக்கும்.. நீங்க பதினாறும் பெற்று
சிறப்பா வாழ்வங்க.."

தீபாதரனைத் தட்டுடன் வந்த அர்ச்சகர் ஆசிர்வாதம் போலச் சொன்னார்.. 


கற்பூர ஒளியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்ட ரகுநந்தனும்
மீ ராவும் குங்கும பிரசாதம் வாங்கிக் கொண்டு பிரகாரத்தை வலம் வந்து
மண்டபத்தின் படிக்கட்டில் அமர்ந்தார்கள்..

"ஒன்றைப் பெற்றுக்கறதுக்கே உன்பாடு, என் பாடுன்னு இருக்கு.. இதில


பதினாறைப் பெற்றுக்கனும்னு அர்ச்சகர் ஆசிர்வாதம் பண்றார்.. ம்ஹீம்..
எனக்கு வாச்சிருக்கிற பெண்டாட்டியப் பத்தி அவருக்கென்ன
தெரியும்..?" ரகுநந்தன் அலுத்துக் கொண்டான்..

மீ ராவுக்கு சிரிப்பு வந்தது.. 

கணவனை ஜாடையாக பார்த்தாள்.. 

அலைபாயும் சிகையோடு தேர்ந்த சிற்பியொருவன் செதுக்கிய சிற்பம் போல


திருத்தமான முக அமைப்போடு இருந்தான்.. 

முதல்நாள் இரவில் அவள் முகத்தோடு அந்த முகம் பதிந்த நினைவு வர..

'கோவிலில உக்காந்துக்கிட்டு எதை நினைத்து வைக்கிறேன்..' என்று


தன்னைத்தானே கடிந்தபடி எழுந்து விட்டாள் மீ ரா..

"என்னடி..?" முகம் சுளித்தான் ரகுநந்தன்..

"வாங்க போங்கன்னு கூப்பிட்டதைப் போல இருந்தது..?"

"எப்ப..?"

"அப்ப..?"

"எனக்கு நினைவில்லை.."

"எப்படி நினைவிருக்கும்..? என்னடா.. மரியாதை கொடி கட்டிப் பறக்குதுன்னு


நான்கூட அசந்துட்டேன்.. கால் மணி நேரத்துக்குள்ள அது காத்தோட பறந்து
போயிரும்ன்னு தெரியாம போயிருச்சே.."

"இனித் தெரிஞ்சுக்க.. இவளை வாங்க போங்கன்னு பூப்போட்டு


வணங்குவாங்களாம்.. வாடி பேசாம.."

அமர்த்தலாகச் சொன்னவனை ஏறிட்டுப் பார்த்தாள் மீ ரா.. 


அவளது பார்வையைச் சந்தித்த நொடியில் அமர்த்தலான அவனது பார்வை
ஆழ்ந்த பார்வையாக மாறிப் போனதில் அரண்டு போன மீ ரா பார்வையை
தழைத்துக் கொண்டாள்..

'அம்மாடி.. இவனைப் பார்த்தா நான் தொலைஞ்சேன்.. காதல் மன்னனில்ல


இவன்..'

நிலாக் காயும் நேரத்திலே -18


ஏப்ரல் 26, 2021

18

 
மனதுக்குள் பேசிக் கொண்ட இருவரும் மௌனமாக வடு
ீ திரும்பினார்கள்.. 

அவன் பாராதபோது அவள் பார்த்தாள்.. 

அதை உணர்ந்து கொண்டவன் சட்டென அவள் எதிர்பார்க்காத நொடியில்


அவளைப் பார்த்து வைத்து மிரள வைத்தான்.. 

அவள் தடுமாறிப் போய் வேறு திசையில் பார்ப்பதை ரசிக்கவும் செய்தான்.. 

அவனைப் பார்ப்பதும் அவன் பார்த்தால் வேறு திசையில் பார்ப்பதைப் போல


பாவ்லா செய்வதுமாக இருந்தவளின் முரண்டில் அவன் மனம் லயித்தது..

'இன்னும் குழந்தையாவே இருக்கா..'

அவளைத் தொடத் துடித்த கைகளை மடக்கிக் கொண்டான்.. 

தொடுவது சுலபம்.. ஆனால் அவனது முரட்டுத்தனத்தை பிரயோகித்து


அவளை ஆள்வதாக அவள் நினைத்து விடக் கூடாது..

 அவளுடைய கோபம் தற்காலிகமானது.. அது குறைய சில நாளாகலாம்..

அதுவரை காத்திருப்பதே சாலச் சிறந்தது.. 


அதை விடுத்து அவள் மீ திருக்கும் தாகத்தில் அவளுடைய கோபத்தை
லட்சியம் செய்யாமல் அவளைத் தொட்டு விட்டால் தற்போது வெறும்
கோபமாக இருப்பது கடும் வெறுப்பாக மாறி விடக் கூடும்.. 

அந்நிலை வந்து விடக் கூடாது..

ரகுநந்தனால் மீ ராவின் கோபத்தை எதிர்கொள்ள முடியும்.. வெறுப்பை


எதர்கொள்வது கடினம்.. 

ஏற்கனெவே நந்தினியின் பேச்சுக்களால் அவள் மனம் ரணமாகியிருக்கிறது.. 

அதை ஆற்றிவிட முனையாமல், ஆறும்வரை காத்திருக்காமல் அவளுடைய


கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொண்டால் விபரீதத்தில் முடிந்து
விடும்..

ரகுநந்தனுக்குத் தேவையானது மீ ராவின் காதலுடன் கூடிய கூடல்.. 

காதலைத் தவிர்த்த கூடலால் அவனது உடல் திருப்தியடையலாம்.. மனம்..? 

அது வெறுமையாகி விடும்..

இருவேறு சிந்தனைகளுடன் இருவரும் காரை விட்டு இறங்கினார்கள்.. வடு



அமைதியாக இருந்தது..

"எப்படிம்மா..?" வியந்து போனான்..

"உன் அக்காக்களை அவங்களோட புருசன்மார்களும் பிள்ளைகளும் தோப்புப்


பக்கம் போயிட்டு வரலாம்ன்னு இழுத்துக்கிட்டு போயிருக்காங்கடா.." யமுனா
வட்டில்
ீ நிலவிய அமைதிக்கான விளக்கத்தைச் சொன்னாள்..

"அவங்க வர்றதுக்குள்ள நீயும் மருமகளும் மறுவட்டு


ீ விருந்துக்கு
சென்னைக்குக் கிளம்பிருங்கப்பா.." அவசரப்படுத்தினார் கோபிநாதன்..

"ஆகட்டும்ப்பா.." என்ற ரகுநந்தன் மாடியறைக்குப் போனதும் பெட்டிகளில்


துணிகளை அடுக்க ஆரம்பித்த மீ ராவிடம்..

"அப்பா சொன்னதை கேட்டதானே.. இதுதாண்டி என் வடு.."


ீ என்று பீற்றிக்
கொண்டான்..

அவனை ஏறிட்டுப் பார்த்த மீ ராவின் பார்வையில் கேலி மின்னியது.. 


எதுவும் சொல்லாமல் கடமையே கண்ணாகினாள்.. 

ரகுநந்தனால் தாள முடியவில்லை.. 

அவனுடைய அப்பா எப்படி மகனுக்குச் சாதகமாக வழி சொல்லிக்


கொடுக்கிறார்.. அதை பாராட்டுகிறாளா..? 

பெரிய இவள் போல மர்மமாக பார்த்து வைக்கிறாளே..

"என்னடி..? பேச்சைக் காணோம்.."

"என்னத்தைப் பேசச் சொல்றீங்க..?"

"எங்க அக்கா ஏதாவது சொன்னா மட்டும் வக்கணையா வாய் கிழியப் பேசத்


தெரியுதுல்ல.. அப்பா சொன்னதுக்கு ஆஹா.. என் மாமனார் எம்புட்டுச்
சப்போர்ட்டா இருக்காருன்னு மகிழ்ந்து போய் ஒற்றை வார்த்தை
சொல்றியாடி நீ ...?"

"வேணாங்க.. நான் வேற எதையாச்சும் சொல்லிடப் போறேன்.."

"சொல்லிப்பாரு.. பல்லுப் பதினாறும் உதிரும்.."

"உதிரும்.. உதிரும்.."

மீ ரா வேகமாக பெட்டியை மூடி வைத்து விட்டு நிமிர்ந்து சேலையை


இழுத்துச் செறுகிக் கொண்டாள்..

'என்னடா இது.. வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வர்றா..' 

ரகுநந்தன் ரசனையுடன் மனைவியைப் பார்த்தான்..

சும்மா இருந்த பெண் சிங்கத்தை சொரிந்து விட்டு விட்டானோ..?

மீ ரா பேசிய பேச்சு அவனது சந்தேகத்தை ஆமாமென்று ஊர்ஜிதம் செய்தது..

"என்ன சொன்னார்..? என் மாமனார் நமக்குச் சப்போர்ட்டா என்ன


சொன்னாருன்னு கேட்கறேன்..? ''

'' "என்னடி..சொன்னார்?''

'' என் மகள்கள் ரெண்டு பேரும் தோப்புக்குப் போயிருக்காங்க.. அவங்க


கண்ணில தென்பட்டுடாம அவங்க தோப்பில இருந்து வர்றதுக்குள்ள தப்பிச்சு
மறுவட்டு
ீ விருந்துக்கு ஓடிப் போயிடுங்கப்பான்னு வழி சொல்றார்..''
''  ----------- ''

'' இதைக் கேட்டுக்கிட்டு என்னோட வராதிவ


ீ ரீ சூராதி சூர ஹஸ்பெண்டு
எகிறிக் குதிச்சு நாங்க ஏன்ப்பா ஒளிஞ்சு மறைஞ்சு தப்பிச்சுப் போகனும்னு
கேட்காம ஆகட்டும்ப்பான்னு சொல்லிட்டு வர்றார்..''

'' ------------ ''

'' இதில என் மாமனார் சப்போர்ட் பண்ணிட்டாருன்னு நான் மகிழ்ந்து வேற


போகனுமாம்.. குட் ஜோக்.."

இடுப்பில் ஒரு கையை வைத்து மறு கையின் உள்ளங்கையை மடக்கி


உயர்த்தி அவனிடம் அவள் கேள்வி கேட்ட விதத்தில் ஈர்க்கப்பட்ட ரகுநந்தன்
அவளை சுவராஸ்யமாக பார்க்க ஆரம்பித்து விட்டான்..

'பரவாயில்லையே.. என் பெண்டாட்டி பாயிண்ட், பாயிண்டாத்தான் கேள்வி


கேக்கறா.. இது எனக்குத் தோணாம போயிருச்சே.. இவ என்ஜினியருக்குப்
படிக்கிறதுக்குப் பதிலா வக்கீ லுக்குப் படிச்சிருக்கலாம்..'

அவனது சுவராஸ்யத்தில் சண்டையை நிறுத்தி விட்டாள் மீ ரா.. 

பதிலுக்குப் பதில் பேசுகிறவனிடம் சண்டை போடலாம்.. 

சண்டை போடுகிறவளைச் சாப்பிடுவதைப் போலப் பார்ப்பவனிடம் என்னத்தை


சண்டை போடுவது..?

'இது வேலைக்கு ஆகாது..'

அவன் பக்கமே பார்க்காமல் வேலையைத் தொடர ஆரம்பித்தாள்..

"என்னடி.. பாதியிலேயே நிறுத்திட்ட..?" என்றான் அவன்..

"எதை..?"

"சண்டையை.."

"உங்ககிட்ட சண்டை போட்டுட்டாலும்.."

"அடேங்கப்பா.. இவ என்கிட்ட சண்டை போடாத ஆளுதான்..''

''  வேணாங்க.''
'' பொண்ணுபாக்கப் போனப்ப பேச்சு வராத ஊமை மாதிரி பேந்த பேந்த
முழிச்சா.. இவதம்பி போன் போட்டுக் கொடுத்தப்ப அலறினா..''

'' ----------- ''

'' நேத்துக் காலையில தாலி கட்டினப்ப பேசா மடந்தையா அமைதியின்


சிகரமா இந்தப் பெண்ணும் பேசுவாளான்னு அப்புராணி வேசம் போட்டா.''

'' ------------- ''

''. ஒருநாள் கூட ஆகலை.. இன்னைக்குக் காலையிலே வாயைத்


திறந்தவதான்.. விடாம சண்டை போடறா.. இதில உங்ககிட்ட சண்டை
போட்டுட்டாலும்ன்னு அலுத்துக்கிறா..''

'' -------------- ''

'' ஏண்டி..? என்கிட்ட சண்டை போட அம்புட்டு அலுப்பாயிருந்தாச் சொல்லு..


தோப்புக்கு போன் போட்டு எங்க அக்காக்களை வரச் சொல்றேன்.. நான்
அழைச்சேன்னு வைய்யி.. அடுத்த நொடியிலே இங்கே இருப்பாங்க..
வேணும்னா அவங்க கூட சண்டை போடு.."

"திமிரா..?"

"எனக்கா..?"

"உங்களுக்குத்தான் திமிர் வரும்.. வேற யாருக்கு


வரும்..? என்ன..? சொர்ணாக்களோட பிறந்திருக்கோம்ங்கிற தெனா வெட்டா..?"

"பல்லைக் கழட்டிருவேன் மீ ரா.. என்ன..? வாய் நீளுது.. எம்புட்டுத்


தைரியமிருந்தா என் அக்காக்களை சொர்ணாக்கான்னு சொல்லுவ..?"

கடுமையான கோபத்துடன் அடிக்கக் கையை ஓங்கி விட்டான் ரகுநந்தன்.. 

இமைகளை இறுக மூடிக் கொண்ட மீ ராவின் மிரட்சியில் அவனது கை


இறங்கியது..

"ச்சீ.." என்றபடி வெளியே போய் விட்டான்..

கரகரவென கண்ண ீர் பெருக்கியபடி உட்கார்ந்து விட்டாள் மீ ரா.. மனம்


பொருமியது..
'அவன்தானே சீண்டினான்..? அவனோட அக்காக்கள் கூட சண்டை போட
முடியுமாங்கிறதைப் போல சவால் விட்டான்..? அப்புறம் நான்
சொர்ணாக்கான்னு சொல்ல மாட்டேனா..?'

தேம்பிக் கொண்டிருந்தவளின் காதில்..

"மீ ரா.." என்ற யமுனாவின் குரல் விழுந்ததும் அவசரமாக முகத்தைத்


துடைத்து மலர்ச்சியாக வைத்துக் கொண்டு..

"அத்தை..?" என்று எழுந்தாள்..

"இன்னும் கிளம்பலையாம்மா..? தோப்புக்குப் போயிருக் கிறவங்க


வாரதுக்குள்ள கிளம்பிருங்கம்மா.. நான்தான் கூறுகெட்ட மகள்களைப் பெத்து
வைச்சிருக்கேனே.. அதுக பேசத் தெரியாம பேசித் தொலைச்சிரும்க.. உன்
மனசு நோகும்.. ''

'' ------------------- ''

''  பாவம்.. நீ பச்சைக் குழந்தை..! விவரம் புரியாத சின்னப் புள்ள..


குடும்பம்ன்னா இப்படி நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்ன்னு
தெரியாம படிப்பு, படிப்புன்னு இருந்த பொண்ணு.. இதெல்லாம் பழக
நாளாகும்..''

'' ------------------- ''

'' நந்தினி சொன்னது சரிதான்ம்மா.. இந்த வட்டை


ீ என்னைப் போலவே நீயும்
தாங்கியாகனும்.. தம்பி பெண்டாட்டியா இல்லாம ஒரு தாயா என் மகள்களை
நீ அரவனைக்கனும்..'' 

''----------------------- ''

''எனக்கு நம்பிக்கையிருக்கும்மா.. நீ கெட்டிக்காரி.. இந்தக் குடும்பத்தை நிலை


நிறுத்துவ.. இப்பக் காலாகாலத்தில கிளம்பும்மா.."

மீ ராவின் தலைகோதி யமுனா பேசப்பேச எதிர்த்துப் பேசத் தோன்றாமல்


பிரமிப்புடன் கேட்டுக் கொண்டாள் மீ ரா.. 

ரகுநந்தனிடம் வார்த்தையாடியதைப் போல யமுனாவிடம் அவளால்


வார்த்தையாட முடியவில்லை.. 
யமுனாவே மருமகளுக்கு தலைவாரிப் பின்னலிட்டு பூச்சூடி விட்டாள்.. 

அவளின் பாசத்தில் கரைந்து போன மீ ரா மாமியாரின் பாதம் பணிந்து


எழுந்தாள்..

"நல்லாயிரும்மா.. தீர்க்காயுளா தீர்க்க சுமங்கலியா இரு.."

மனதார மருமகளை ஆசிர்வாதம் பண்ணி எழுப்பி அணைத்துக்


கொண்டாள் யமுனா.. 

அறை வாசலில் நிழலாடியது.. மீ ரா திரும்பிப் பார்த்தாள்.. 

விசித்திரமான பார்வையுடன் உள்ளே வந்த ரகுநந்தன் பெட்டிகளை எடுத்துக்


கொண்டான்.. 

அவர்கள் சென்னைக்குக் கிளம்பினார்கள்.

நிலாக் காயும் நேரத்திலே -19


ஏப்ரல் 27, 2021

19

 
"எங்க ஊருப் பக்கம் ஒரு சொலவடை சொல்வாங்க.."

காரை ஓட்டியபடி அவள் பக்கம் திரும்பாமல் சொன்னான் ரகுநந்தன்.. 

பின் பக்கமாக திரும்பி பிரகாசத்தின் கார் அவர்களின் காரைத் தொடர்ந்து


வருகிறதா என்று பார்த்துக் கொண்டாள் மீ ரா..

"உங்கப்பாவோட காரை எந்தக் குருவியும் தூக்கிக்கிட்டு ஓடிராது.. இது


ஃபோர்வே.. சென்னைக்குப் போற நேர்வழிப் பாதை.. அவர் வழி தப்பிர
மாட்டார்.. அடங்கி உட்காரு.."

அவனின் அறிவுறுத்தலுக்கு உதட்டைச் சுழித்து அழகு காட்டி விட்டு


ரோட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..
"பின்னாடி வார காரை எக்கி எக்கிப் பார்க்கத் தெரியுது.. பக்கத்தில
உட்கார்ந்திருக்கவன் என்ன பேசறான்னு காதில விழுக மாட்டேங்குது.."
அவனின் மின்னல் பார்வையில் உதட்டைக் கடித்தவள்.

"என்னத்தைப் பேசின ீங்க.. ஏதோ வடையைப் பத்திச் சொல்லிக்கிட்டு


இருந்தீங்க.." என்றாள்..

அவளைத் திரும்பிப் பார்த்தவனின் பார்வையில் திகைத்தவள்..

"அது இல்லையா..?" என்று கேட்டாள்..

"அறைஞ்சேன்னா பாரு.. திங்கிறதிலேயே இருப்பியா..? சொலவடையைப்


பத்திச் சொன்னா தின்கிற வடையைப் பத்திப் பேசறா.." என்று எரிந்து
விழுந்தான் அவன்..

"சொலவடையா..? அப்படின்னா..?"

"பழமொழி.. உன் லாங்வேஜில சொல்றதா இருந்தா புராவெர்ப்.."

"ஓஹோ.. என்ன பழமொழியாம்.."

"ஆடு பகை.. குட்டி உறவாம்பாங்க.."

'அதை எதுக்கு இப்பச் சொல்றான்..?'

மீ ரா வினோதமாக அவனைப் பார்த்து விட்டு..

"போரடிச்சா பாட்டுப் போட்டுக் கேளுங்க.. பிளேடு போடாதீங்க.. ஏற்கனெவே


நான் நொந்து போயிருக்கேன்.." என்று சிடுசிடுத்தாள்..

"பிளேடு..? என்கிட்டப் பேசக்கூட பயப்படுவாங்க.. நீ பிளேடு ரேன்ஜீக்குப்


போயிட்ட.. ஒரு மஞ்சக்கயித்த உன் கழுத்தில கட்டிப்புட்டு மாட்டிக்கிட்டு
முழிக்கறேண்டி.."

"இங்கேயும் அப்படித்தான்.. அதென்ன ஆடு பகை.. குட்டி உறவு கதை..?"

"அதான் தலைகீ ழா மாறிப் போயிருக்கே.."

"எப்படி..?"

"குட்டி பகை.. ஆடு உறவு.."

'ஓ.. இவன் அப்படி வர்றானா..?'


யமுனாவிடம் அவள் பாசம் காட்டியதைச் சொல்கிறான் என்பதை புரிந்து
கொண்டாள் மீ ரா.. 

வேறொன்றுதான் அவளுக்குப் புரியவில்லை..

'குட்டின்னு யாரைச் சொல்றான்..? இவனோட அக்காக்களையா..? அவங்க


குட்டிகளா..? யானைகளில்ல..?'

அவன் தமக்கைகளைப் பற்றியே பேசவில்லை.. 

ஆழ்ந்த குரலில் அவள் மனதை ஊடுறுவும் விதத்தில்..

"என் கூடன்னா சண்டை போடுவ.. எங்க அம்மாகூடக் கொஞ்சிக்


குழாவுவியா..? என்னடி நியாயம் இது..?" என்று கேட்டான்..

'இவனையா குட்டின்னு சொல்றான்..?'

சிங்கம் போல மதர்த்து இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டாள்.. 

அந்த ஓரவிழிப் பார்வையையும் அவன் பார்க்காத போது பார்த்து வைத்தாள்.. 

அவனுக்குத் தெரியும்படி பார்த்து வைத்தால் அவ்வளவுதான்.. 

கள் குடித்த சிங்கம் போல ஆகி விடுவானே..

"பெரிசா தாராமங்களத்து ஜமீ னுன்னு பெருமை பேசிக்க மட்டும் தெரியுது..


நியாயமா நடந்துக்கத் தெரியலை.."

"யாருடி நியாயமில்லாம நடந்துக்கிட்டது..?"

"மிஸ்டர் ரகுநந்தன்தான்.."

சுவாதீனமாக பெயர் சொல்லியவளை ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்தான்


ரகுநந்தன்.. அவளின் வாயாடித்தனம் அவனை வசீகரித்தது..

'பேச மாட்டேங்கிறா.. வாயைத் திறந்தா வெளுத்துக் கட்டிட்டுத்தான் வேற


வேலை பார்க்கிறா..'

கடித்துத் தின்று விடுவதைப் போல அவன் பார்த்த பார்வையில்..

'ஆரம்பிச்சுட்டானா..' என்று நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள் மீ ரா..


'இதுக்குத்தான் நான் வாயைத் திறக்கறதே இல்லை.. விடாம வாயைக்
கொடுத்து வம்பிழுத்து சைட்டடிக்கிறானே..'

"இப்ப என்னத்துக்கு நகர்ந்து உட்காருகிற..?"

"எனக்கு கம்பர்டபிளா இல்லை.."

"எதுடி கம்பர்டபிளா இல்லை..? நானா..?"

வம்பிழுத்தவனை நான்கு வாங்கு வாங்க வேண்டும் போல இருந்தது


அவளுக்கு.. 

அழகு அக்காக்களுடன் பிறந்து விட்டு இவனுக்கு இவ்வளவு ஆகாத்தியம்


ஆகாது என்று பல்லைக் கடித்தாள்..

"ரோட்டைப் பார்த்துக் காரை ஓட்டுங்க.."

"உன்னைப் பார்க்கக் கூடாதுங்கறியா..?"

இப்படியே தவளை தண்ண ீருக்கு இழுக்க ஓணாண் மேட்டுக்கு இழுக்க என்று


எகனைக்கு மொகனையாய் வம்பிழுத்து சண்டை போட்டபடி சென்னைக்குப்
போய் சேர்ந்தார்கள்..

அவர்களுக்கு ஆரத்தி எடுத்த மீ ராவின் பெரியம்மா மகள் ரகுநந்தனை


மையலுடன் பார்த்தபடி..

"ஆரத்தி தட்டில் பணம் போடுங்க அத்தான்.. இல்லேன்னா வழிவிட


மாட்டேன்.." என்று கொஞ்சினாள்..

தோளில் இருந்த ஹேண்ட் பேகைக் கழட்டி அவள் தலையில் சுழற்றியடித்து


விரட்டி விட வேண்டும் போல வெறியாகிப் போன மனைவியை படு
சுவராஸ்யமாக வேடிக்கை பார்த்த ரகுநந்தன்..

"என்னடி இது..? விட்டா உன் பெரியம்மா பொண்ணு என்னை ஸ்வாஹா


பண்ணிருவா போல இருக்கே.. இப்படிப் பார்க்கிறா.." என்று மீ ராவின்
காதோரமாக கிசுகிசுத்து எரிகிற தீயில் எண்ணெயை கரண்டி கரண்டியாக
ஊற்றி விட்டான்..

"அவ ஸ்வாஹா பண்ணப் பார்க்கிறாளா.. இல்லை.. நீங்க ஸ்வாஹா பண்ணப்


பார்க்கறிங்களா..?" பல்லைக் கடித்தாள் மீ ரா..
"நான் ஸ்வாஹா பண்ண நினைக்கிறதென்னவோ உண்மைதான்.. ஆனா
ஆள்தான் நீ சொன்ன ஆளில்லை.." ரகுநந்தனின் பார்வை மீ ராவை
மேய்ந்தது..

தம்பதிகளின் ரகசியப் பேச்சை மீ ராவின் பெரியம்மா மகளால் சகித்துக்


கொள்ள முடியவில்லை.. 

மன்மத பாணத்தை அவள் வச


ீ அதன் பலன் மீ ராவைப் போய் சேர்வதா..?

"அத்தான்.." அவள் சிணுங்கினாள்..

'அத்தானாம்.. அத்தான்.. இவ வாயில சூடு போடனும்..' மீ ரா சூடானாள்..

"நான் சொன்னதை நீங்க கவனிக்கவே இல்லை.." 

மீ ராவின் பெரியம்மா மகளின் பார்வை என்ன நீ கவனிக்கவே இல்லையே


என்று ஏங்கியது..

அதற்குள் உறவினர் கூட்டமும் அக்கம் பக்கத்து வட்டினரின்


ீ கூட்டமும்
அவர்களைச் சூழ்ந்து விட்டது.. 

எல்லோரும் ரகுநந்தனிடம் பேச ஆரம்பிக்க அவர்களிடம் பேசியபடி ஆயிரம்


ரூபாய் நோட்டு ஒன்றை ஆரத்தி தட்டில் போட்டுவிட்டு மீ ராவுடன்
வட்டுக்குள்
ீ போய் விட்டான் ரகுநந்தன்.. 

மீ ராவின் பெரியம்மா பெண் சரசமாடாமல் பேசியிருந்தால் ஆரத்தி தட்டில்


ஆயிரம் ரூபாய் கட்டு விழுந்திருக்கும்.. 

அவள் சரசமாடியதில் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஆயிரம் ரூபாய்


நோட்டுடன் கழன்று கொண்டான் ரகுநந்தன்.. 

இல்லாவிட்டால் மீ ரா அவனை உண்டு இல்லையென்று பண்ணி விடுவாளே.. 

இருக்கும் மனச்சடைவுகள் போதாது என்று இதுவும் கூட்டுச் சேர


வேண்டுமா..?

வந்தவர்களிடம் முகம் மாறாமல் பேசிச் சிரித்த மருமகனின் மீ து வாத்சல்யம்


பெருகியது பிரகாசத்துக்கு..

"பரவாயில்லை பிரகாசம்.. ஜமீ ன் மாப்பிள்ளை.. பந்தா காட்டி உன்னை


ஒருவழி பண்ணிருவார்ன்னு பார்த்தா சொந்த வடு
ீ மாதிரி இத்தனை
இணக்கமா இருக்காரே.." என்று அவர் பக்கத்து பெரியவர்கள் சொல்லியதில்
அவரின் உச்சி குளிர்ந்து விட்டது..

"நாம போன ஜென்மத்தில புண்ணியம் பண்ணியிருக்கோம் சுமதி.."


மனைவியிடம் புளகாங்கிதம் பட்டுப் போனார்..

மீ ராவின் காதுகளில் அவை விழுகத்தான் செய்தன.. 

இருந்தாலும் நந்தினியின் பேச்சை மறக்க முடியாமல் ரகுநந்தனிடம்


முறைத்துக் கொண்டுதான் இருந்தாள்..

"மாப்பிள்ளையை உங்க ரூமுக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போம்மா.." என்று சுமதி


சொன்ன போது.

"உங்க ரூமா..?" என்று திருதிருத்தாள்..

"மக்கு.. உன் ரூமைத்தான் உங்க ரூம்ன்னு அம்மா சொல்றாங்க..


தாராமங்களத்து அரண்மனையில மட்டும் அத்தான் ரூமை உன் ரூமா
மாத்திக்கிட்டு உணக்கையா உலா வந்தேல்ல.. அதுவே சென்னைக்கு வந்ததும்
என் ரூம்ன்னு செல்பிஷா இருக்கே பார்த்தியா..?" அரவிந்தன் மீ ராவின்
தலையில் குட்டினான்.

"ஊஹீம்.." ரகுநந்தன் அதை ஆட்சேபித்தான்..

"ஏன் அத்தான்.. அக்கா இப்ப உங்க வொய்புங்கிறதினால அக்கறைப்


படறிங்களா..?" அரவிந்தன் கேட்டான்.

"அட.. அதில்லைப்பா.. அடிக்கிறதும் குட்டறதும் என்னோட உரிமை..


அதைத்தான் சொன்னேன்.. குட்டனும்னா என்கிட்டச் சொல்லு.. பலமா குட்டு
வைக்கிறேன்.. நீ ஏன் அலட்டிக்கிற..?" கரிசனமாக ரகுநந்தன் சொல்லியதும்.

"ஹா.. ஹா.. அக்கா.. உன் ஆட்டம் குளோஸ்.." என்று பலமாக சிரித்தான்


அரவிந்தன்.

மாடியறையில் கதவைச் சாத்தியதும் இறுகிய முகத்துடன்..

"என் ஆட்டம் குளேஸ்தான்.. அது தெரியாம என் தம்பி சிரிக்கிறான்.."


என்றாள் மீ ரா..
"உன் புத்தி உன்னை விட்டுப் போகாதுடி.. மறுவட்டு
ீ விருந்துக்கு
வந்திருக்கிறோம்.. எனக்காக வேண்டாம்.. உன்னைப் பெத்தவங்க
சந்தோசத்துக் காகவாவது சந்தோசப்படறதைப் போல இரு.." என்றான்
ரகுந்தன்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாலும் அறைக்கு வெளியே அவனுடன்


சந்தோசமாகப் பேசிப் பழகினாள் மீ ரா.. 

அறைக்குள் வந்தவுடன் எவளோ ஒருத்தியைப் போல இழுத்துப் போர்த்துக்


கொண்டு தூங்கினாள்.

20

 
"புகுந்த வடு
ீ இனிமையான

           மல்லிகைப் பந்தல்..!

     அங்கு புதிய வாழ்வைத்

           தேடிப் போகும்

     இவளொரு தென்றல்..! மங்கை

           இவளொரு தென்றல்..!"

மெல்லிசைக் குழுவினரின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. 

திருமண வரவேற்பிற்கு ஒரு  திருமண மண்டபத்தையே பிடித்து


அசத்தியிருந்தார் பிரகாசம்..

"தாராமங்களத்து ஜமீ ன் மாப்பிள்ளை சார்.. அவரோட தகுதிக்குக்


குறையாம இருக்கனுமில்ல.." என்று உடன் வேலை பார்ப்பவர்களிடம்
மருமகனின் குடும்பப் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருந்தார்..

பிங்க் வண்ண ஷிபானில் ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப் பட்டிருந்த


சேலை, ரவிக்கையுடன்.. கொண்டையிட்டு அதில் வெண்ணிற
பாசிகளைச் செறுகி வேறு விதமான அலங்காரத்துடன் மேடையில்
ரகுநந்தனின் பக்கத்தில் நின்றிருந்தாள் மீ ரா..
'எப்படி அலங்காரம் பண்ணிக்கிட்டாலும் அப்சரஸ் மாதிரியே இருந்து
தொலைக்கிறாளே..' 

தாபத்துடன் மனைவியின் அழகை அள்ளிப் பருகுவதைப் போல


பார்வையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ரகுநந்தன்..

'ப்பா..! என்னமா அசத்துறா..' ஜொள்ளியது அவன் மனம்.

அப்படி அவன் மனதை ஜொள்ள வைத்த மீ ராவின் மனதை


அலைக்கழித்துக் கொண்டிருந்தது அவனது கம்பீரமான அழகு..

சாம்பல் வண்ண கோட் சூட்டில் இருந்தவனை..

'ரேமண்ட் மாடல்போல இருந்து தொலைக்கிறான்..' என்று அவள் மனம்


திட்டித் தீர்த்தது.

'இவன் இவ்வளவு அழகா இருந்து தொலைக்கனுமா..?' பொறாமையில்


பொங்கித் தவித்தாள் மீ ரா..

அவளுடைய தோழிகள் அனைவரும் சொல்லி வைத்ததைப் போல


மேடையேறியதும் அவளை விட்டு விட்டு அவனுக்கு கை
கொடுத்தார்கள்.. 

வாழ்த்துச் சொல்கிறார்களாம்.. 

குலுக்கிய அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நலம்


விசாரித்தார்கள்.. 

அவனுடன் ஒட்டி நின்று போட்டோவிற்கும், வடியோவிற்கும்


ீ போஸ்
கொடுத்தார்கள்..

'அடிப்பாவி..! உங்களுக்கெல்லாம் நான்தாண்டி பிரண்டு.. இங்கே


விட்டுட்டு அங்கே போய் ஜோடி போடறிங்களே.. அவனுக்கு
பெண்டாட்டி நான்தாண்டி..'

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவள் தவித்த


தவிப்பை அவன் ரசனையுடன் பார்வையிட்டதில் அவளது பொருமல்
அதிகமானது.. 

அந்தப் பொருமலுடன் அவனை பஸ்பமாக்கி விடுவதைப் போல


முறைத்தாள்..
"என்னாச்சு..?" கரிசனமாக அவன் விசாரித்தான்..

"ம்ம்ம்.. தலைவலி..!" அவள் வெடித்தாள்..

"நான் பிடித்து விடவா..?"

மேடையில் அவள் நெற்றியை அவன் வருடப் போக அதை


விட்டுவிடாமல் கேமராவும் வடியோவும்
ீ கேட்ச் பண்ணி பத்திரப்
படுத்தின..

மகளும் மருமகனும் காட்டும் அன்யோன்யத்தில் (?) பிரகாசமும்


சுமதியும் மகிழ்ந்து போனார்கள்..

அந்த நேரம் பார்த்து மேடையேறிய சுமதியின் அத்தைமகன்


ரகுநந்தனிடம் குறும்பாக..

"மேடைங்கறிதினால நெற்றியைப் பிடிக்கறீங்க.. தனி ரூம்ன்னா


காலைப் பிடிச்சிருப்பீங்கதானே..?" என்று கேட்டு மீ ராவின் லஜ்ஜையை
அதிகப் படுத்தி வைத்தான்..

அவனுடன் ஒட்டி நின்றிருந்த அவன் மனைவியைப் பார்த்து நட்புடன்


சிரித்த ரகுநந்தன்..

"அனுபவம் பேசுது..?" என்றான்..

அத்தை மகனின் மனைவி முகம் சிவந்தாள்..

'இவன் இருக்கானே.. எந்தப் பக்கம் பால் வந்தாலும் கேட்ச்


பிடிச்சுவிடுவான்.. கில்லாடி..' மனதுக்குள் கணவனை மெச்சிக்
கொண்டாள் மீ ரா..

சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள்.. 

இல்லை யில்லை, வேலை இருக்கிறது என்று பிகு பண்ணாமல்


பிரகாசமும் சுமதியும் கேட்டுக் கொண்டபடி ஒரு வாரம் அவன்
சென்னையில் தங்கியிருந்ததில் மனதுக்குள் இதமாக உணர்ந்தாள்
மீ ரா..

மருமகனைப் போல பந்தா காட்டாமல் அந்த வட்டின்


ீ மூத்த மகனைப்
போல பாசத்துடன் பழகினான் ரகுநந்தன்.. 

அரவிந்தனிடம் பிரியம் காட்டினான்.. 


பிரகாசத்திடம் மரியாதை கலந்த நேசத்துடன் பேசினான்.. 

சுமதியிடம் பணிவான பாசத்தை பிரதிபலித்தான்..

மீ ராவைப் பெற்றவர்களும், கூடப்பிறந்தவனும் மகிழ்ந்து போய்


விட்டார்கள்.. 

அரவிந்தன் வாயைத் திறந்தால் 'அத்தான் புராணம்..' தான் பாடினான்.. 

பிரகாசத்திற்கும் சுமதிக்கும் கால்கள் தரையில் பதியவே இல்லை..


சிறகில்லாமல் வான்வெளியில் பறப்பதைப் போல உணர்ந்தார்கள்..

மீ ராவும் ரகுநந்தனும் தாராமங்களத்திற்குப் புறப்படும் நாள் வந்தது.. 

ரகுநந்தன் மொட்டைமாடியில் தனித்து நின்று செல்போனில் பேசிக்


கொண்டிருந்தான்.. 

சப்தமில்லாமல் மெதுநடை நடந்து தயக்கத்துடன் அவனை அணுகி


நின்ற பிரகாசத்தையும் சுமதியையும் பார்த்ததும் அவனது புருவங்கள்
உயர்ந்தன.. 

செல்போனை அணைத்து விட்டு..

"என்ன விசயம் மாமா.. எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க


அத்தை.. என்னை மருமகனா நினைச்சுக்க வேண்டாம்.. உங்க மகனா
நினைச்சுக்கங்க.." என்றான்..

"மாப்பிள்ளை.." பிரகாசம் பேச முடியாமல் தவித்தார்..

"உங்க அக்காக்கள் நல்லவங்கதான் தம்பி..! அதில் பழுது சொல்ல


முடியாது.. அவங்க ஆதங்கம் எங்களுக்குப் புரியுது.. அவங்க இடத்தில
நான் இருந்திருந்தாலும் இப்படித்தான் கோபப் பட்டிருப்பேன்.. ஆனா
மாப்பிள்ளை.. மீ ராவுக்கு பக்குவம் கிடையாது.. அவ சின்னப் பெண்..
உங்க அக்காக்களின் பக்கமிருக்கிற நியாயத்தையும், ஆதங்கத்தையும்
புரிஞ்சுக்க மாட்டா.." சுமதி சொல்லி விட்டாள்..

"புரியுது.." புரிதலுடன் சொன்னான் ரகுநந்தன்.

"அவளையும் குத்தம் சொல்ல முடியாது.. காரணமேயில்லாம கரிச்சுக்


கொட்டினா யாராலேயும் தாங்க முடியாதுதான்.. அதுக்கான
காரணமென்னன்னு கண்டுபிடிக்க வயதும் பொறுமையும் வேணும்..
அது ரெண்டும் அவகிட்ட இப்ப இல்ல.. வயசாக ஆக பொறுமையும்
புரிதலும் தானா வந்திரும்.. அதுவரைக்கும்.." இறைஞ்சலுடன் கேட்ட
சுமதியின் கண்கள் கலங்கி விட்டன..

"கவலைப்படாதீங்க அத்தை.. நான் பார்த்துக்கறேன்.. இதையெல்லாம்


நீங்க சொல்லனும்ங்கிற அவசியமே இல்லை.. எனக்கே தெரியும்.."
ரகுநந்தன் ஆறுதலாக சொன்னான்..

"தெரியும் மாப்பிள்ளை.. உங்களுக்குத் தெரியும்ன்னு எங்களுக்கும்


தெரியும்.. ஆனா.. பெத்த மனசு கேட்க மாட்டேங்குதே.." கண்களைத்
துடைத்துக் கொண்டாள் சுமதி..

"உங்க ரெண்டு பேருக்கும் வாக்குக் கொடுக்கறேன் அத்தை.. என்னோட


அக்காக்களாலே மீ ராவின் மனசு புண்படாம நான் பார்த்துக்குவேன்..
மீ ரா.. கோபப்பட்டா விளக்கம் சொல்லி புரிய வைச்சுக்குவேன்.. நீங்க
கவலைப்பட வேணாம்.." உறுதியளித்தான் ரகுநந்தன்..

"அதைக் கண்கூடா தாராமங்களத்தில பார்த்துட்டோமே மாப்பிள்ளை..


மீ ராவை நீங்க விட்டுக் கொடுக்கலையே.. சொத்து பத்தை
விட்டுக்கொடுத்துட்டு தோட்டத்து பங்களாவுக்கு குடி போகப் போகிறதா
சொன்னவங்கதானே நீங்க.. உங்களைப் போல மாப்பிள்ளை கிடைக்க
நாங்க கொடுத்து வைச்சிருக்கனும்.."

உணர்ச்சிப் பெருக்குடன் ரகுநந்தனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்


பிரகாசம்.. 

அவரது கைகளைத் தட்டிக் கொடுத்தான் ரகுநந்தன்.. நிம்மதியுடன்


பிரகாசமும் சுமதியும் படியிறங்கி விட்டார்கள்..

"க்கும்.." கனைக்கும் ஒலி கேட்டது.

திரும்பிப் பார்த்தான்.. மீ ரா நின்றிருந்தாள்.. 

கிளிப்பச்சை வண்ணத்தில் ஜார்ஜெட் சேலையும் நீண்ட பின்னலுமாக


தேவதையைப் போல ஒயிலாக நடந்து அவன் பக்கத்தில் வந்தாள்..

இழுத்து அணைத்துக் கொள்ளும் வேட்கை அவன் மனதில் சுழன்றது.. 

அதை கண்களில் கண்டு விட்டவள் படு ஜாக்கிரதையாக இரண்டடி


தள்ளி நின்றதில் கடுப்பானவன்..
"கிட்ட நின்னா உன் கற்பு பறி போயிருமாடி..?" என்று கடுகடுத்தான்..

'எப்படிப் பேசுகிறான் பார்.. ராஸ்கல்..' அவள் முகம் செவ்வானமானது.

"அம்மா சாப்பிடக் கூப்பிடறாங்க.." 

அவன் முகத்தைப் பார்த்தால்தானே வம்பு என்று வானத்தைப்


பார்த்தபடி சொன்னாள்.

அவள் யாரிடமோ சொல்வதைப் போல அலட்சியப் படுத்திய ரகுநந்தன்


செல்போனை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.

"நானொருத்தி இங்கே பேசிக்கிட்டு இருக்கேன்.. கண்டுக்காம


செல்போன்கிட்ட என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு..?" காண்டானாள்
மீ ரா..

"உன்னைக் கொஞ்ச முடியலைன்னு செல்போனையாவது


கொஞ்சலாமேன்னதான் கொஞ்சிக்கிட்டு இருக்கேன்.. வேணாம்ன்னா
சொல்லு.. உன்னைக் கொஞ்சறேன்.."

ரகுநந்தன் செல்போனை விட்டு நிமிர்ந்து அவள் பக்கத்தில் வர அவள்


பின்னால் நகர்ந்து பல்லைக் கடித்தபடி..

"ஜென்டில்மேனைப் போல நடந்துக்கங்க.." என்று வெடித்தாள்..

"என்ன அலுவலுக்கு..? அந்த வெங்காயப் பட்டமெல்லாம் எனக்கு


வேண்டாம்.. பெண்டாட்டிகிட்ட ஜெண்டில்மேனைப் போல
நடந்துக்கத்தான் தாலி கட்டியிருக்கேனா..? சின்னப் பெண்ணாச்சேன்னு
பார்க்கறேன்.. இல்லைன்னா நடக்கறதே வேற.."

"என்ன..? மிரட்டறிங்களா..?"

"ஆமாண்டி.. மிரட்டறேன்தான்.. ஆளைப் பாரு.. உன் புருசன் இங்கே


நிக்கறேன்.. நீ என்னவோ வானத்தில மிதக்கிற கந்தர்வனைக்
கூப்பிடறதைப் போல அண்ணாந்து பாத்து சாப்பிடக்
கூப்பிடற..? அங்கேயா உன் புருசன் இருக்கான்..?"

"யு..யு..யு.."

என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்தாள் மீ ரா.. 


இது போன்ற ரகுநந்தனின் பேச்சுக்களை அவளால் எதிர்கொள்ளவே
முடிவதில்லை.. 

பேச முடியாமல் 'யு..யு..' என்று திணறுவாள்..

ரகுநந்தனுக்கு வேடிக்கையாக இருந்தது.. 

அவள் எதிர்பாராத தருணத்தில் அவள் கையைப் பற்றி இழுத்தான்.. 

அவன் மீ து விழுந்தவளின் முதுகைச் சுற்றி வளைத்து சிறை பிடித்தன


அவன் கரங்கள்.. 

விடுபட போராடியவளின் இதழ்களின் மீ து குனிந்து இதழ்களைப்


பதித்தான்.. 

ஆழ்ந்த முத்தத்தில் மெல்ல, மெல்ல அவளது போராட்டம் குறைந்து


நின்று விட்டது.. 

நீண்ட நேரத்திற்குப் பின்னால் அவளை விடுவித்தவன் அவளது முகம்


வருட யத்தனித்த போது அவன் கையைத் தள்ளி விட்டு சிவந்த
முகத்துடன் மூச்சிரைத்தபடி..

"ஆம்பளைத் திமிரைக் காட்டறிங்களா..?" என்று சண்டைக்கு வந்தாள்..

"இல்லை.. என் பெண்டாட்டிகிட்ட என் காதலைக் காட்டறேன்.."


என்றான் அவன்..

"ஒன்னும் வேண்டாம்.." கோபத்துடன் பொறுமியவள் ஓடி விட்டாள்..

நிலாக் காயும் நேரத்திலே -21


ஏப்ரல் 29, 2021

21

 
 
"ஏலக்காய் எத்தனை டன் இருக்கு..?"

பச்சை வண்ணத்தில் இருந்த ஏலக்காய்களை கையில் அள்ளிப் பார்த்தபடி


கேட்டான் ரகுநந்தன்.. 
அதன் கமகமவென்ற நறுமணம் விசேச வட்டில்
ீ இருப்பதைப் போல அவனை
உணர வைத்தது.

"நூத்தி ஐம்பது டன் இருக்கும்ங்கய்யா.."

முண்டாசை இறுக்கிக் கட்டியபடி பதில் சொன்னான் கர்ணன்.. 

போடி மெட்டில் இருந்த ஏலக்காய் எஸ்டேட்டை மேற் பார்வையிடும்


சூபர்வைசர் அவன்.. 

ஏற்றுமதிக்கான ஏலக்காய்களை தரம் பிரித்து எடை போட்டு பெட்டிகளில்


பக்குவமாக அடைத்துப் பார்சல் பண்ணிக் கொண்டிருந்தான்.. 

சீல் முதற் கொண்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்து


கொண்டிருந்த ரகுநந்தனின் போன் அடித்தது.. 

எடுத்துப் பார்த்தான்.. மீ ரா அழைக்கிறாள் என்று ஒளிர்ந்து சொன்னது


செல்போன்..

'அட..! என் பொண்டாட்டி அழைக்கிறா..!'

ஆச்சரியத்துடன் விலகி நடந்து சற்றுத் தொலைவில் சென்று நின்று போனை


அழுத்திக் காதுக்குக் கொடுத்து..

"என்னடி..?" என்றான்..

அதற்குள் நான்கைந்து முறை அழைத்து விட்ட மீ ரா ஆத்திரத்துடன்..

"ரிங் போய்கிட்டே இருக்குது.. எடுத்துப் பேச இவ்வளவு நேரமா..?" என்று


பொங்கினாள்..

"மத்தவங்க போனுன்னா மத்தவங்க முன்னாடி பேசலாம்.. பொண்டாட்டி


போனுன்னா தள்ளி வந்துதாண்டி பேச முடியும்.. அதுக்கு நேரமாகிருச்சு..
கோவிச்சுக்காதே.." கெஞ்சுதலாக விளக்கம் சொன்னான்..

மறுமுனையில் ஒர்நொடி நிசப்தம் நிலவியது..

"மீ ரா..?" என்றான்..

"யாரும் இங்கே கொஞ்சிப் பேச அழைக்கலை.. தள்ளி வந்து ஏன்


பேசனும்..? நின்ன இடத்திலேயே இருந்திருக்கலாம்.."
'சுருக்'கென்று வந்த பேச்சில் ரகுநந்தனின் முகம் கருத்து விட்டது..

"பல்லைக் கழட்டிருவேன்.. கொஞ்சிப் பேசினாத்தான் பெண்டாட்டி.. கோபமா


பேசினா எவளோ ஒருத்தியா..? எப்படிப் பேசினாலும் பெண்டாட்டி
பெண்டாட்டிதாண்டி.." எகிறினான்..

"எப்படியோ போங்க.. இதைப் பத்தி எனக்கென்ன பேச்சு..?"

"வேற எதைப் பத்திப் பேசப் போறவ..?"

"உங்க அக்காக்கள் வந்திருக்காங்க.."

மீ ராவின் அழைப்புக்கான காரணம் விளங்கி விட தலையைப் பிடித்தபடி..

"உன்னை எதுவும் சொன்னாங்களா..?" என்று கேட்டான்..

"சொல்லாம இருப்பாங்களா..?"

"என்ன சொன்னாங்க..?"

"எதைச் சொல்லலைன்னு கேளுங்க.. பேச வேண்டிய அத்தனையையும் பேசித்


தள்ளிட்டாங்க.."

"நான் வருகிற வரைக்கும் நீ நம்ம ரூமுக்குள்ளேயே இருந்திருக்க


வேண்டியதுதானே..?"

"இதை நீங்க சொல்லிக் கொடுக்கனுமாக்கும்..? தோட்டத்தில நின்றிருந்தேன்..


ஒன்னு பின்னாலே ஒன்னா ரெண்டு கார் வந்து நின்னுச்சு.. யாருன்னு
பார்த்தா குன்னூரும், கோயம்புத்தூரும் அடுத்தடுத்து இறங்குது.."

'இவ வாய் இருக்கே..'

ரகுநந்தனின் இதழ்களில் புன்னகை அரும்பியது.. 

கோயம்புத்தூரில் இருக்கும் நந்தினியும், குன்னூரில் இருக்கும் ராதிகாவும்


அடுத்தடுத்து காரில் வந்து இறங்கியதை அவள் சொல்லிய விதத்தை
கோபத்துடன் ரசித்தான்.. 

அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்..

"என்னடி..? பயம் அத்துப் போச்சா..? என் அக்காக்களைப் பார்த்தா உனக்கு


எப்படி இருக்கு..?" என்று அதட்டினான்..
"ம்ம்ம்.. பேயைப் பார்த்ததைப் போல இருக்கு.." பதிலுக்கு மறுமுனையில் மீ ரா
நொடித்தாள்..

"அறைஞ்சேன்னா பாரு.."

"அத்தனை பல்லும் உதிர்ந்துரும்.. அதுதானே..? ஐயா.. எனக்குப் பல்லெல்லாம்


உதிர்ந்து பொக்கைவாய் கிழவியானாலும் பரவாயில்லை.. உங்க
அக்காக்களை அன்பு தேவதைகள்ன்னு சொல்ல என்னால முடியாது.. அதுக்கு
இப்ப என்னாங்கறிங்க..?"

"இருடி.. வட்டுக்கு
ீ வந்து உன்னைப் பேசிக்கறேன்.."

"அதைச் செய்யுங்க முதல்ல.. காரைக் கண்டதும் அலறியடிச்சுக்கிட்டு


ஒளிஞ்சுக்கலாம்ன்னுதான் பார்த்தேன்.. அதுக்குள்ள
கோயம்புத்தூரும், குன்னூரும் என்னைக் கண்டுக்கிட்டு வட்டுக்கு
ீ வந்த
நாத்தனார்களுக்கு ஆரத்தி எடுத்து காலைத் தொட்டு வணங்கி வான்னு
கூப்பிடாம நழுவப் பார்க்கிறயா..? இது யார் கொடுத்த
தைரியம்..? தாராமங்களத்து ஜமீ ன் வட்டு
ீ ல பொறந்த பொண்ணுகன்னா ஒரு
பயம், பத்து வேணாம்ன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க.."

"இரு.. இரு.. ஆரத்தி எடுத்து காலைத் தொட்டு வணங்கச்


சொன்னாங்களா..? அவங்க அப்படிச் சொல்லியிருக்க மாட்டாங்களே.."

"க்கும்..! இப்ப இந்த ஆராய்ச்சிதான் ரொம்பவும் முக்கியம்.. ஏன்..? அதைச்


செய்யச் சொல்லலைங்கிற குறையா உங்களுக்கு..?"

"ஏய்ய்..! நீயா இட்டுக் கட்டிச் சொன்னயா..?"

"இட்டும் கட்டல.. கட்டும் கட்டல.. நீங்க முதல்ல வட்டுக்கு


ீ வந்து என்னை
சென்னைக்கு டிரெயின் ஏத்தி விட்டிருங்க.."

"அடங்கவே மாட்டியாடி..? இப்ப என்ன அலுவலுக்கு சென்னைக்குப்


போகனும்ங்கிற..?"

"பின்னே..? உங்க அக்காக்கள் வட்டு


ீ விருந்துக்குப்
போகலாம்ங்கறிங்களா..? நான் வரமாட்டேன் சாமி.."

'இதுதான் விசயமா..?'
ரகுநந்தனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. 

இப்படிச் சொல்கிறவளை இழுத்துக் கொண்டு எப்படி அக்காக்களின் வட்டுக்கு



விருந்தாடச் செல்வது..? 

அதற்காக கூடப் பிறந்த அக்காக்கள் உடன் பிறந்த ஒரே தம்பிக்கு கொடுக்கும்


கல்யாண விருந்தை தட்டிக் கழிக்க முடியுமா..?

தலை வேதனையுடன் கர்ணனிடம் வேலையைப் பார்த்துக் கொள்ளச்


சொல்லி விட்டு காரில் ஏறி தாரா மங்களத்திற்குப் பறந்தான்.. 

போர்டிகோவில் காரை நிறுத்தும் போதே வட்டுக்குள்ளிருந்து


ீ வந்த சப்தம்
அவன் காது ஜவ்வை பதம் பார்த்தது..

'இந்தச் சத்தத்திலே அவ இருக்க மாட்டாளே..'

யோசனையுடன் வட்டுக்குள்
ீ போனான்.. 

அவனது கணிப்பு சரியாக இருந்தது.. ஹாலில் மீ ரா இல்லை.. 

யமுனாவும் கோபிநாதனும் ஆளுக்கொரு சோபாவில் ஒடுங்கியிருக்க..


ஈஸ்வரனும் சண்முகமும் தலையைப் பிடித்தபடி விட்டத்தைப் பார்த்துக்
கொண்டிருக்க.. நந்தினியும், ராதிகாவும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள்..

"எல்லாம் அவன் கொடுக்கிற இடம்ப்பா.."

"ஆமாண்டி ராது..! அப்பவே நான் சொன்னேன்.. யாரும் காதில


போட்டுக்கலை.. இப்பப் பார்த்தியா.. எங்கே வந்து நிற்குதுன்னு.."

பேசியபடி திரும்பியவர்கள் ரகுநந்தனைப் பார்த்து விட்டார்கள்.. 

அவ்வளவுதான்.. கோபிநாதனையும் யமுனாவையும் ஆய்ந்து


கொண்டிருந்தவர்கள் அவர்களுக்கு விடுதலை கொடுத்து விட்ட ரகுநந்தனின்
மீ து பாய்ந்து ஆய ஆரம்பித்து விட்டார்கள்..

"வாடா ரகு.. உன் பொண்டாட்டிதான் எங்களை வான்னு கேட்கலை..


நாங்களாவது உன்னைக் கேட்கிறோம்.."

"இனிமே இப்படித்தாண்டி ராது.. நாமளா நம்மளை வான்னு கேட்டுக்கனும்..


இவனையும் இவன் பொண்டாட்டியையும் வாங்கப்பான்னு வரவேற்றுக்கனும்..
தாரா மங்களத்து ஜமீ ன் வட்டில
ீ பொண்ணாப் பொறந்ததுக்கு நமக்குக்
கிடைக்கிற மரியாதை இவ்வளவுதாண்டி.."

ரகுநந்தனுக்கு மனம் தாளவில்லை.. அவர்களின் வட்டில்


ீ அவனுடைய
அக்காக்களும் வரவேற்பில்லையா..?

"ஏன்க்கா இப்படிப் பேசறிங்க.. இது நீங்க பிறந்த வடுக்கா..


ீ உங்களுக்கில்லாத
மரியாதையா..? வரவேற்பா..? உங்க ரெண்டு பேருக்கும்தான்க்கா முதல்
மரியாதை.. உரிமை.. உங்களுக்கு அடுத்துத்தான்
எனக்கும், மத்தவங்களுக்கும்.."

தழதழத்த ரகுநந்தனின் குரலில் கோபம் தணிந்து விட்ட அவனது தமக்கைகள்


வழக்கு வைக்க ஆரம்பித்தார்கள்..

"பின்னே என்னடா ரகு..? எங்க கார்கள் வந்தப்ப உன் பொண்டாட்டி


தோட்டத்திலதான் நின்னிருந்தா.. எங்களையும் பார்த்தா.. வான்னு கேட்காம
உள்ளே ஓடப் பார்த்தாடா.." நந்தினி விவரித்தாள்..

"அப்படியா செஞ்சா.. இருக்கா.. அவளைக் கூப்பிட்டு வாங்கண்ணின்னு


கேட்கச் சொல்கிறேன்.." என்றான் ரகுநந்தன்..

"அதெல்லாம் வேண்டாம் ரகு.. நாங்க ரெண்டு பேரும் போட்ட போட்டில


அலறியடிச்சுக்கிட்டு உன் பொண்டாட்டி எங்க எல்லோரையும் வாங்கன்னு
கேட்டுட்டா.." தடுத்தாள் ராதிகா.

"அப்பச்சரி.." என்று உட்கார்ந்தான் ரகுநந்தன்..

"சரின்னு சொல்லிட்டா சரியாப் போயிருமா..? நாத்தனர்க.. அதிலயும் பெத்த


பெண்ணை பிறந்த வட்டில
ீ கட்டிக் கொடுக்க முடியாத நாத்தனர்க கூடக்
குறையப் பேசத்தான் செய்வோம்.. வாய் வார்த்தையில பேசறதைக்
கேட்டுகிறதில அப்படியென்ன கஷ்டம் உன் பொண்டாட்டிக்கு..?"

சட்டமாக நந்தினி கேட்டதில் வெறுத்து விட்டான் ரகுநந்தன்..

'இந்த அக்கா வில்லங்கமா என்னத்தைப் பேசித் தொலைச்சதோ.. அவளை


என்கூட வாழவிடாம விரட்டி விடறதிலேயே குறியாய் இருக்கே..'
"அதானே.. நந்தினியக்கா கேட்டதைத்தான் நானும் கேட்டேன்.. அப்படியென்ன
எங்க பொண்ணுக கிட்ட இல்லாத அழகு உன்கிட்ட இருக்கு..? எங்க ரகு
மயங்கிப் போயிட்டான்னு கேட்டதுக்கு பொசுக்குன்னு கோவிச்சுக்கிட்டு
மாடியேறிப் போயிட்டா.. இருந்தாலும் உன் பொண்டாட்டிக்கு இம்புட்டு ராங்கி
ஆகாதுடா ரகு.."

ராதிகா பேசப்பேச ரகுநந்தன் யமுனாவைப் பார்த்தான்.. குற்ற உணர்வுடன்


அவள் கைகளைப் பிசைந்தாள்.. 

கோபிநாதனால் மகனின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.. 

ஈஸ்வரனுக்கும் சண்முகத்துக்கும் முகத்தில் ஈயாடவில்லை.. ரகுநந்தனுக்கு


வெறுப்பாக இருந்தது..

'இவங்க ரெண்டு பேரும் இப்படிப் பேசிட்டு விருந்துக்கு வான்னு கூப்பிட்டா


எப்படி அவ வருவா..?'

"போனது போகட்டும்டா ரகு.. அவளுக்குத் தெரிந்த வளமை அவ்வளவுதான்..


விட்டுத்தள்ளு.. எங்க வளமை அவளுக்கு வருமா..?"

'அது சரி..'

"வார புதன்கிழமை கோயம்புத்தூரில எங்க வட்டில


ீ உனக்கு கல்யாண
விருந்து கொடுக்கப் போறோம்.. விடியறதுக்குள்ள வந்து சேர்ந்திரு.. ஞாயிறு
வரைக்கும் எங்க வட்டில
ீ இருந்துட்டு திங்கள் கிழமை குன்னூருக்கு ராதிகா
வட்டு
ீ விருந்துக்கு கிளம்பிக்கலாம்.. என்ன சொல்ற..?"

அவன் என்னத்தைச் சொல்வான்.. 

பெற்றவர்களின் இறைஞ்சிய பார்வையில் சரியென்று சொல்லி விட்டு


மாடிக்குப் போனான்.. அங்கே பத்ரகாளியாக அவனை எதிர்கொண்ட மீ ரா..

"நானா உங்களை மயக்கினேன்..?" என்று சீறினாள்..

நிலாக் காயும் நேரத்திலே -22


ஏப்ரல் 30, 2021

 
22

 
குளிரும் இல்லாத வெயிலும் இல்லாத இதமான கோயம்புத்துரின் சீ தோஷ்ண
நிலையிலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உர்ரென்று இருந்தாள்
மீ ரா.. 

ரகுநந்தனிடம் பேசுவதைத் தவிர்த்தாள்.. 

விஷ்ணு துர்க்கை கோவிலுக்குப் போய் அம்மனையும், நவகிரகங்களையும்


வணங்கும் போது கண்களை மூடி கண்ண ீர் மல்க நின்றாள்.. 

மருதமலை முருகன் கோவிலும் அதே போல் வேண்டியவளைக் கண்டதும்


ரகுநந்தனின் மனம் வலித்தது..

மனைவியின் மன வேதனையை அவன் புரிந்து கொள்ளாதவனா..? 

இல்லையென்று மீ ரா குற்றம் சாட்டுகிறாளே.. 

அவன் சுயநலவாதி, இரக்கமில்லாதவன் என்று பட்டம் சூட்டுகிறாளே..

அவனுடைய அக்காக்களின் வட்டு


ீ விருந்துகளுக்கு வரமாட்டேன் என்று
அடம் பிடித்தவளை மல்லுக்கட்டி அவன் சம்மதிக்க வைத்தான்.. 

அதற்காக அவன் பட்ட பாடு.. அப்பப்பா..!

"புரிஞ்சுக்க மீ ரா.. அவங்க என் கூடப் பிறந்த அக்காக்கள்.."

"அதுக்காக உங்களை நான் மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு


இன்டீஸண்டா பேசுவாங்களா..?"

மீ ராவின் கண்கள் கலங்கி விட்டன.. ரகுநந்தன் மனம் கசிந்தான்.. 

அவள் தோள் தொட்டு ஆதரவாக அணைத்துக் கொள்ள முயன்றான்..


சீற்றத்துடன் அவள் தள்ளி விட்டாள்..

"வெறியைக் கிளப்பாதீங்க.. சொல்லிட்டேன்.. நான் என்னோட வட்டுக்குப்



போறேன்.."

முகத்தைத் திருப்பிக் கொண்டு அவள் சொன்னதில் ரகுநந்தனுக்கு வெறி


வந்து விட்டது.. 
அவள் முகத்தை முரட்டுத்தனமாகப் பிடித்துத் தன்பக்கமாக திருப்பியவன்..

"உன் வடு
ீ இதுதாண்டி.. சென்னையில இருக்கிறது உன் அப்பா வடு.."
ீ என்று
சீறினான்..

"இல்லை.. இது என் வடில்லை..


ீ உங்க அக்காக்களோட பிறந்தவடு..
ீ இங்கே
நானிருக்க மாட்டேன்.." அவள் முரண்டினாள்.

"சரி.. வா.. போகலாம்.." அழுத்தமான கூப்பிட்டான் ரகுநந்தன்..

"எங்கே..?" மிரண்டாள் மீ ரா..

"உன் புருசன் பணக்காரன்.. கோடிஸ்வரன்.. தாராமங்களத்து அரண்மனை வடு



மட்டும் அவனுக்கு சொந்தமில்லை.. தேனியில வடிருக்கு..
ீ எஸ்டேட்டில
பங்களா இருக்கு.. தோட்டத்து பங்களாவும் இருக்கு.. எங்கே உனக்குப்
பிடிக்குதோ அங்கே போகலாம்.. வா.. நம்மோடு அம்மாவும், அப்பாவும் வர
மாட்டாங்க.. நாம் மட்டும்தான் இருப்போம்.. அங்கே உன்னைக் குத்திக்காட்டிப்
பேச என் அக்காக்கள் வரமாட்டாங்க.."

"தனியாப் போறதா..? அத்தை, மாமாவை விட்டு விட்டா..?"

"ஆமாம்.. அவங்க இந்த தாராமங்களத்து அரண்மனை வட்டை


ீ விட்டுட்டு
எங்கேயும் வர மாட்டாங்க.. கிளம்பு.. கிளம்பு.."

ரகுநந்தனின் தீவிரத்தில் வாயடைத்துப் போய் பின் வாங்கிய மீ ரா தரையில்


அமர்ந்து முழங்கால்களைக் கட்டி அதில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்..

ரகுநந்தனுக்கு பாவமாக இருந்தது.. மனைவியின் அருகில் உட்கார்ந்து


தொடாமல் பேச ஆரம்பித்தான்..

"நீ எந்த முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுவேன் மீ ரா.. என்


விருப்பத்தை உன் மேல் திணிக்க மாட்டேன்.. உன் விருப்பம்தான் என்
விருப்பம்.. யோசித்துப் பார்.. உன் வடு
ீ சென்னையில் இருக்குதுன்னு
சொல்கிறயே.. இது போலதானே என் அக்காக்களும் சொல்வாங்க..? பிறந்த
வடுங்கிற
ீ உரிமை எல்லாப் பெண்களுக்கும் உண்டுடி.. நாளைக்கு
அரவிந்தனுக்கு கல்யாணமாகி அவனோட பெண்டாட்டி வந்ததுமே உன்
அம்மா வட்டை
ீ என் வடில்லைன்னு
ீ நீ விட்டுக் கொடுத்திருவியா..? வாய்
வார்த்தைக்கு இது என் பிறந்தவடு..
ீ எனக்கில்லாத உரிமையான்னு உன் தம்பி
பெண்டாட்டிகிட்டக் கேட்க மாட்டியா..?"

"வேண்டாங்க.. நானே வெறுப்பில இருக்கேன்.. உங்க அக்காக்களோடு என்னை


இணை கூட்டாதீங்க.. அவங்களைப் போல நான் இன்டீஸண்டா பேச
மாட்டேன்.. நான் உங்களை மயக்கினேனாம்.."

"நான் உன்னிடம் மயங்கியதும், மயங்கிக்கிட்டு இருக்கிறதும் உண்மைதானே


மீ ரா..?"

ரகுநந்தனின் ஆழ்ந்த கிறக்கமான குரலில் பேச்சிழந்தாள் மீ ரா.. 

அவளுடைய மௌனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல்


விலகியே இருந்த ரகுநந்தன் தன்மையாக பேசினான்.

"கொஞ்சநாள் பொறுமையா இருந்தாப் போதும்.. எல்லாம் சரியாகிரும்..


நம்புடி.. ஒன்னை மட்டும் மனசில வைச்சுக்க.. நான் உன் புருசன்..! நீ
மட்டும்தான் எனக்கு முக்கியம்.. நீ வான்னு கூப்பிட்டா எல்லாத்தையும்
விட்டுட்டு உன்பின்னாலே வந்திருவேன்.. அதில உனக்கு சந்தேகம்
வேணாம்.."

மனதைத் தொட்ட கணவனின் பேச்சைக் கேட்டதும் நிமிர்ந்து அவனைப்


பார்த்தாள் மீ ரா.. 

கன்னத்தில் வழிந்த கண்ண ீரில் ஒட்டியிருந்த அவளின் முடிக்கற்றையைச்


சீராக்கி ஈர முகத்தைத் துடைத்து விடத் துடித்தது அவன் மனம்.. 

அவளின் உணர்வுகளை மதித்து பொறுமை காத்தான்.

"அத்தை, மாமாவை விட்டு விட்டு என் பின்னால வாங்கன்னு நான் கூப்பிட


மாட்டேங்கிற தைரியம்தானே உங்களுக்கு..?"

இதழ்கள் துடிதுடிக்க கேட்டவளின் இதழோடு இதழ் பதித்து முத்தமிட


வேண்டும் போல நெகிழ்ச்சி மேலிட்டது அவனுக்கு..

'இவள்தான் எப்பேற்பட்டவள்.. என் அக்காக்கள் இவளைக் கண்ணில் காண


விடாமல் குதறியெடுக்கிறார்கள்.. அவர்களைப் பெற்ற என் அப்பாவையும்
அம்மாவையும் இந்த அளவுக்கு நேசிக்கிறாளே..'
என் மீ ரா என்று அவன் மனம் கூவியது.. 

அவனது மீ ரா மூக்கை உறிஞ்சினாள்.. முகத்தை ஏறுக்கு மாறாக துடைத்துக்


கொண்டாள்..

"ஆனா.. ஒன்னு.." என்று அறிவித்தாள்..

"என்னடி..?" கனிவாக அவன் கேட்டான்.

"உங்க அழகு அக்காக்கள் கொடுக்கும் விருந்துக்கு நான் வரமாட்டேன்.."

"வேண்டாம்.. உனக்குப் பிடிக்காத விருந்து எனக்கும் வேண்டாம்.."

உறுதியாகச் சொல்லி விட்டுத் தேனியில் இருக்கும் ஜவுளிக்கடைக்குப்


போய்விட்டான் ரகுநந்தன்.. 

திரும்பி வந்து பார்த்தால் மீ ரா கோயம்புத்தூர் போவதற்காக பெட்டிகளில்


துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்..

"என்னடி..?" வியந்து போனான் ரகுநந்தன்.

"அத்தை கெஞ்சுதலாக் கேட்கிறாங்க.. நாம விருந்துக்குப் போகலைன்னா


சம்பந்தி வட்டில
ீ அத்தை, மாமா மேல கோபப் படுவாங்களாம்.. வருத்தம்
வந்து சேருமாம்.. என்கிட்டப் போய் அத்தை கெஞ்சலாமா..? என்னால அத்தை
மாமாவுக்கு வருத்தம் வரலாமா..? அதான்.. கிளம்பிட்டேன்.. விதி வலியது..
உங்க அக்காக்கள் கொடுக்கிற விருந்துக்கு நான் கிளம்பியாக
வேண்டியிருக்கே.."

"மீ ரா.." உருகிப் போனான் ரகுநந்தன்.

"போதும்.. போதும்.. ரொம்பத்தான் உருக வேணாம்.." கறாராக சொல்லி


விட்டாள்.

மனைவியின் மீ து காதல், காதலாக வந்தது ரகுநந்தனுக்கு.. 

விருந்துக்கு அழைக்க வந்த நந்தினியும், ராதிகாவும் எவ்வளவு முடியுமோ


அவ்வளவு தூரத்திற்கு மீ ராவுடன் சண்டை போட்டு வெறுப்பை மூட்டி
விட்டுப் போய் சேர்ந்தார்கள்.

"சேர்ந்து போகலாமாடா ரகு.." என்று நந்தினி கேட்டபோது கையெடுத்துக்


கும்பிட்டு வழியனுப்பி வைத்து விட்டான் ரகுநந்தன்.
"விருந்து கொடுக்கக் கூப்பிட்டுட்டு எங்ககூட நீயும் சேர்ந்துக்கிட்டா
எப்படிக்கா..? விருந்தை யார் கொடுப்பாங்க..?"

ஒருவழியாக அவர்களை அனுப்பி வைத்து விட்டு இரண்டு நாள்கள் கழித்து


நிதானமாக மீ ராவுடன் கிளம்பினான்.

"பத்திரம்டா ரகு.. மீ ரா பக்கத்திலேயே இருந்து பார்த்துக்க.. உன்


அக்காக்கள்கிட்டத் தனியா பேச விட்டுராதே.."

பெற்ற மகள்கள் என்றும் பாராமல் மருமகளின் மீ து அவள் காட்டிய


அக்கறையில் குளிர்ந்து விட்டாள் மீ ரா.

"கவலைப்படாதீங்கத்தை.. அண்ணிகள் கூடக் குறையப் பேசினாலும் நான்


கண்டுக்காம இருந்துட்டு வந்துடறேன்.." என்று அவள் யமுனாவிற்கு
தைரியம் சொல்ல ஆரம்பித்து விட்டாள்.

என்னதான் மனதிற்குள் தைரியம் சொல்லிக் கொண்டாலும்


நந்தினி, ராதிகாவின் தேள் கொடுக்கு நாக்குகளை நினைத்து மீ ராவிற்கு குளிர்
காய்ச்சல்தான் வந்தது. 

விதியே என்று காலத்தின் கட்டளையை சிரமேற்கொண்டு வாழ்க்கைத்


துணையாக அவளை வரித்து அவனுடைய அக்காக்களைக் கரித்துக் கொட்ட
விட்டிருக்கும் ஆருயிர் கணவனோடு கோயம்புத்தூருக்கு கிளம்பி விட்டாள்.

கோயம்புத்தூரில் நந்தினியின் வட்டில்


ீ விருந்து சிறப்பாகத்தான் இருந்தது. 

நந்தினியின் நடவடிக்கைகள்தான் சிறப்பாக இல்லை.. 

ரகுநந்தனின் மனைவி மீ ராதான் என்பதை முற்றிலும் மறந்து விட்டவளைப்


போல அவள் நடந்து கொண்டாள்.. 

என்னவோ ரகுநந்தனுக்கு கழுத்தை நீட்டியிருப்பவள் நந்தினியின் மகளான


நந்திதா தான் என்பதைப் போல ரகுநந்தனுக்குத் தேவையான அனைத்தையும்
நந்திதாவைச் செய்யச் சொன்னாள்.

"நந்தும்மா.. நந்தனுக்கு காபி குடுடா செல்லம்.."

"நந்துக்குட்டி.. நந்தன் வந்துட்டான் பாரு.. பரிமாறு.."


"நந்து.. என்ன பொண்ணு நீ.. நந்தன் களைப்பா இருக்கான் பாரு.. ரெஸ்ட்
எடுக்கக் கூப்பிட்டுக்கிட்டுப் போ.."

ஈஸ்வரனாலேயே தாங்க முடியாத அளவுக்கு நந்தினியின் அட்டகாசம்


அதிகமாகி விட்டது. 

திருமணமாக வேண்டிய பெண்ணிடம் எப்படியெல்லாம் சொல்லி வைக்கிறாள்


பார் என்று அவர் பல்லைக் கடிக்க ஆரம்பித்து விட்டார்.. 

மீ ராவின் முகம் வெளுத்து பதுமை போல ஆகி விட்டாள்.. 

பேச்சை மறந்து கண்களில் துயரோடு நடமாடும் மனைவியைக் கண்டு


மறுகிப் போனான் ரகுநந்தன்.. 

நல்ல வேளையாக நந்திதா நல்லவளாக நியாய தர்மம் நிறைந்தவளாக


இருந்து வைத்ததினால் ரகுநந்தன் தப்பித்தான்.. 

இல்லாவிட்டால் மீ ரா அவனிடமிருந்து முழுவதுமாக விலகியிருப்பாள்..

"ம்மா.. இதென்ன புதுசா மாமாவை நந்தன்னு கூப்பிடறிங்க..? ரகுன்னுதானே


கூப்பிடுவங்க..?"

"ரகுநந்தனுக்கு உன்னைக் கட்டிக் கொடுக்கனும்னுதானே நந்தனுக்குப்


பொருத்தமா நந்திதான்னு பேரு வைச்சேன்..?"

"சசிக்கலை.. அவர் நந்திதாவின் நந்தனில்ல.. மீ ராவின் நந்தன்.. அதுசரி..


எனக்கான காபியையே நான் எடுத்துக் குடிச்சுக்க மாட்டேன்.. இதில
மாமாவுக்கு காபி குடுக்கச் சொல்றீங்களே.. நானென்ன சர்வரா..?"

"அவன் உன்னோட மாமன்டி.."

"இப்ப மீ ராவின் ஹஸ்பெண்ட்.. மீ ரா மாமாவுக்கு காபி குடு.. அதுக்கப்புறமா


என்ன சொன்ன ீங்க.. பரிமாறனுமா..? நானா..? செய்துட்டாப் போச்சு.. மீ ரா மாமா
பக்கத்தில உட்காரு.. செர்வ் பண்றேன்.. இந்த விருந்தே உனக்காக தயார்
பண்ணினதுதான்.. சாப்பிட்டு முடிச்சதும் டயர்டா இருக்கிற உன்
ஹஸ்பெண்டை ரெஸ்ட் எடுக்கக் கூப்பிட்டுக்கிட்டுப் போவியாம்.. அம்மா..
மாமாவோட வொய்ப் கிட்டச் சொல்லிட்டேன்.. அவ மாமாவைப்
பார்த்துக்குவா.. நீங்க கவலையே படவேண்டாம்.."
இப்படியாகத்தானே நந்தினியின் மாய்மாலத்தை நந்திதா
நொடிப்பொழுதில் 'ப்பூ..' என்று ஊதி புஸ்வானமாக்கி விட்டு மீ ராவுடன் ஜோடி
போட்டு கோயம்புத்தூரைச் சுற்றிக் காண்பித்தாள்.

பல்லைக் கடித்தபடி நான்கு நாள்களை ஓட்டி விட்டு ரகுநந்தனுடன்


குன்னூருக்குக் கிளம்பிப் போனாள் மீ ரா.. 

அங்கே ராதிகா நந்தினிக்கு மேல் இருந்தாள்.. 

கோயம்புத்தூர் கதை இங்கும் தொடர்ந்ததில் வெறுத்துப் போனாள் மீ ரா.. 

நந்திதாவைப் போல மோனிகாவும் தாயின் மூக்கை உடைத்தாலும் குறி


பார்த்துத் தாக்கும் நாத்தனார்களின் சாகசத்தை மீ ராவால் ஜீரணித்துக் கொள்ள
முடியவில்லை. 

ஒருவழியாக இருவர் வட்டு


ீ விருந்தையும் முடித்து தாராமங்களத்திற்கு
திரும்பிய மீ ரா ரகுநந்தனிடம் பேசுவதையே நிறுத்தி விட்டாள்..

நிலாக் காயும் நேரத்திலே -23


மே 01, 2021

23

 
மெலிதான தூறலில் நனைந்தபடி தோட்டத்தில் நின்றிருந்தாள் மீ ரா.. 

ரகுநந்தன் வட்டில்
ீ இருக்கும் பொழுதுகளில் அவள் தோட்டத்திற்கு வந்து
விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். 

அவளின் மௌன யுத்தத்தை முறியடிக்க ஆன மட்டும் போராடிப் பார்த்து


விட்டு அவள் போக்கில் விட்டு விட்டான் ரகுநந்தன்.. 

முதலிரவில் அவனுடன் பிணைந்திருந்தவளின் நினைவு அவ்வபோது எட்டிப்


பார்க்கும்.. பெருமூச்சுடன் அடக்கிக் கொள்வான்.. 

அன்றும் அது போன்ற நினைவு எழ பெருமூச்சுடன் அடக்கிக் கொண்டு


சோகச் சித்திரம் போல நின்றிருந்த மனைவியின் அருகில் போனான்.
"மீ ரா.."

பதிலில்லை.. மௌனமாக, அதே சமயத்தில் உதாசீனம் போல இல்லாமல்


அவன் சொல்வதைக் கவனிப்பதைப் போல முகத்தை வைத்துக்
கொண்டிருந்தாள்.

"அம்மா சொல்லியிருப்பாங்க.. அவங்களோட அம்மா வடு..


ீ மாமா
வெளிநாட்டில் இருக்கார்.. தாத்தாவும் பாட்டியும் மட்டும்தான் கிராமத்து
வட்டில்
ீ இருக்காங்க.. திருநெல்வேலிக்குப் பக்கத்தில அழகாபுரிங்கிற ஊர்..
விருந்துக்கு அழைச்சிருக்காங்க.. முடியாதுன்னு மறுத்தா அம்மா மனசு
சங்கடப்படும்.. போயிட்டு வந்துரலாம்.."

மீ ரா மறுப்பாக தலையை ஆட்டவில்லை.. அவள் மறுக்க மாட்டாள் என்று


ரகுநந்தனுக்கும் தெரியும்.. 

ரகுநந்தனிடம் மட்டும்தான் அவள் பேச மாட்டாள்.. யமுனாவிடம் மடை


திறந்த வெள்ளம் போலப் பேசிக் கொண்டே இருப்பாள்.. 

மாமியாரின் முந்தானையைப் பிடிக்காத குறையாக அவளுடன் ஒட்டிக்


கொண்டிருப்பாள்.. கோவில், தென்னந்தோப்பு என்று யமுனா எங்கே
போனாலும் நிழலாக பின் தொடர்வாள்..

அப்படி ஒட்டிக் கொண்டிருக்கும் மாமியாரின் பிறந்த வட்டு


ீ விருந்தை மீ ரா
புறக்கணிப்பாளா என்ன..?

அதைத் தெரிந்து வைத்திருந்த யமுனா தன் தாயிடம் அனைத்து


விவரங்களையும் தெளிவாக சொல்லியிருந்தாள்..

"நான் சொன்னா என் மருமக கேட்டுக்குவாம்மா.. தட்ட மாட்டா.."

"அப்புறம் ஏன் யமுனா கவலையாய் பேசற..? உன் மருமக


குணவதியாத்தானே இருக்கா..? மாமியார் மேல பாசமா இருக்கிற மருமக
இந்தக் காலத்தில எங்கேயிருக்கா..? சொல்லு பாப்போம்.."

கோசலை கெட்டிக்காரி.. மகளின் குரலை வைத்தே அவளின் மன


வாட்டத்தைக் கண்டு பிடித்து விட்டாள்..
"என் மேல பாசமா இருந்தாப் போதுமாம்மா..? என் புள்ளை மேல பிரியமா
இருக்க வேணாமா..?"

"இதென்னடி கூத்தா இருக்கு..? ஆணழகன் என் பேரன்.. அவனுக்கு


வாக்கப்பட்டவ பிரியமா இல்லாம இருப்பாளா..?"

"உங்க பேத்திக ரெண்டு பேரும் இருக்க விட்டாத்தான..? பேசாததையெல்லாம்


பேசிப்புட்டாளுக.. அவளுக மேல இருக்கிற கோபத்தை என் மருமக என்
மகன் மேல காமிக்கிறா.. புருசன் கிட்ட முகம் கொடுத்துப் பேச
மாட்டேங்கிறாம்மா.."

ஆற்றாமையுடன் நடந்த கதை அனைத்தையும் சொல்லி யமுனா


புலம்பித்தள்ள.. நானிருக்கேன் என்று அபயம் கொடுத்தாள் கோசலை..

"கவலைக் கழுதையை விட்டுத் தள்ளு.. நான் பார்த்துக்கறேன்.. நீ விருந்துக்கு


பேரனையும் மருமகளையும் அனுப்பி வைய்யி.. அவங்க திரும்பி வரப்ப
ஜோடி போட்டுக்கிட்டு வர நானாச்சு.."

கோசலையின் உத்தரவாதத்தில் மகிழ்ந்து போன யமுனா மகனையும்


மருமகளையும் அழகாபுரியிலிருக்கும் அவளது தாய் வட்டிற்கு
ீ விருந்திற்குப்
போகச் சொல்லிக் கட்டளையிட்டாள்..

"இனியொருதரம் விருந்து மருந்துன்னு என்னை வெளியூருக்குக் கூப்பிட்டா


நடக்கறதே வேற.."

ரகுநந்தனிடம் மீ ரா சீற்றத்துடன் பேசிய வார்த்தைகள் இவை.. அதற்குப்


பின்னால் அவள் அவனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டாள்..

அழகாபுரிக்கு விருந்திற்குப் போக வேண்டும் என்று யமுனாவும்


கோபிநாதனும் சொன்னபோது எப்படி மீ ராவிடம் சம்மதம் வாங்குவது என்று
ரகுநந்தன் கவலைப்படாததிற்கு ஒரே காரணம் அது யமுனாவின் பிறந்த வடு

என்பதினால்தான்..

'இவளுக்கு மாமியாரைப் பிடிக்கும்.. மாமியார் பெற்ற மகளைத்தான்


பிடிக்காது..' இப்படி நினைக்கும் போதே.. முதலிரவில்..

'அரவிந்தனைப் பிடிக்கும்.. அவளோட அக்காவைத்தான் உங்களுக்குப்


பிடிக்காது..' என்று சொன்ன மீ ரா நினைவிற்கு வந்தாள்..
பயமும், எதிர்பார்ப்பும், பிரமிப்பும், ஆசையும், நாணமும் கலந்து இமைகள்
படபடக்க நின்ற அந்த மீ ரா எங்கே போனாள்..?

எதிர்ப்பைக் காட்டாமல் அழகாபுரிக்குக் கிளம்பும் ஆயத்தங்களில் ஈடுபட்டாள்


மீ ரா.. 

ரகுநந்தனுக்கும் ஏதேனும் ஓர் மாறுதல் தேவைப்பட்டது.. 

மூச்சு முட்டும் அந்தச் சூழலில் இருந்து விடுபட ஒரு மார்க்கம்


கிடைத்திருப்பதில் உற்சாகமாக அவன் கிளம்பினான்.

போகும் ஊர் புது ஊர்..! மீ ராவுக்கு அறிமுகமில்லாத மனிதர்களிடையே அவள்


ரகுநந்தனிடம் பேசித்தானே ஆக வேண்டும்..?

அந்த எதிர்பார்ப்பும் நினைவும் கொடுத்த புத்துணர்வுடன் அழகாபுரிப்


பிரயாணத்தை விருப்பத்துடன் வரவேற்றான் அவன்..

"போயிட்டு வாங்க.. என் பிறந்த ஊர் செழிப்பான ஊர் மீ ரா.. தாராமங்களத்து


ஜமீ ன் வட்டுக்கு
ீ குறைஞ்ச வடில்லை..
ீ அண்ணா படிச்சுட்டு வெளிநாட்டில
வேலைக்குன்னு போனவன் அங்கேயே இருந்துட்டான்.. அம்மாவும், அப்பாவும்
மட்டும்தான் இங்கே இருக்காங்கன்னு நினைக்காதே.. ஊரு பூரா
சொந்தக்காரங்களும், வடு
ீ நிறைய வேலையாள்களும் இருக்காங்க.."
வாத்சல்யத்துடன் மருமகளின் கன்னம் தொட்டு வழித்து மகனையும்
மருமகளையும் அனுப்பி வைத்தாள் யமுனா.

"உடனே வரனும்னு அவசியமில்லைடா ரகு.. எஸ்டேட்டையும், ஜவுளிக்


கடையையும் நான் பார்த்துக்கறேன்.. பாவம்.. உன் பாட்டியும் தாத்தாவும்
தனியா இருக்காங்க.. ஒரு மாச வாக்கில இருந்துட்டு வாங்க.. அவங்களுக்கும்
கலகலன்னு இருக்கும்." கோபிநாதன் சொன்னார்..

"ஆகட்டும்ப்பா.."

மீ ராவிடம் கேட்காமலே வாக்குக் கொடுத்து விட்டுக் காரைக் கிளப்பினான்


ரகுநந்தன்.. 

யமுனாவின் முகத்துக்காக அழகாபுரிக்குக் கிளம்பினால் இவன் அங்கே ஒரு


மாதம் டேரா போடுவானா என்ற கோபத்துடன் அவனை முறைத்தாள் மீ ரா.. 
ரகுநந்தனின் புருவங்கள் என்னவென்ற பாவனையுடன் ஏறியதில் மயங்கிப்
போனவள் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..

ரகுநந்தனின் மனதில் தென்றலடித்தது.. 

நீண்ட நாள்களுக்குப் பின்னால் அவனிடம் மயங்கிய பார்வையைப்


பார்க்கிறாள்.. 

அவனிடமிருந்து விலகி ஓட முடியாமல் காருக்குள் பக்கத்தில்


அமர்ந்திருந்தவளை ஆசையுடன் நோட்டமிட்டபடி விசிலடித்தான்.

"சொக்குப் பொடி மீ னாட்சி..! - உன்

           சொக்கநாதன் நான்தாண்டி.."

வாய்விட்டுப் பாடிய அந்த வசியக்காரனின் பாடலில் வசீகரிக்கப் பட்டாள்


மீ ரா.. 

சொக்குப் பொடி போடுவது அவளா இல்லை அவனா என்ற கேள்வி அவள்


நெஞ்சில் எழுந்தது.. 

வழி முழுவதும் இதுபோன்ற பாடல்களும் இமை மூடித் திறக்கும் கண்


சிமிட்டல்களுமாக பயணித்தான் அவன்.. 

மீ ராவின் மனதில் மோகமுள் தைத்தது.. 

அதைப் பிடுங்கியெறியக்கூடிய மருத்துவன் அவளருகில்தான் இருந்தான்.. 

அவளுக்குத்தான் அவனை அணுக முடியாமல் பெரும் கண்ணாடிச்


சுவரொன்று மறித்து நிற்கின்றதே..

"கணவனின் துணையோடுதானே..

           காமனை வென்றாக வேண்டும்.."

ராகமெடுத்துப் பாடியவனின் கண்களில் தெரிந்த வேட்கையில் மீ ராவின்


உடலில் பரபரப்பு புகுந்தது..
 இவன் ஏன் இப்படியாகப்பட்ட பாடல்களாகத் தேர்ந்தெடுத்துப் பாடி
வைக்கிறான் என்று மறுகினாள் அவள்.. 

இரவு நேரத்தின் கார் பயணமும் மனம் மயக்கும் பாடல்களுமாக அவள்


மனதைப் புரட்டிப் போட்டு அடித்துக் கொண்டிருந்தன.

'அழகாபுரி அன்புடன் அழைக்கிறது..'

என்ற பெயர் பலகையை ஒட்டியிருந்த சாலையில் கார் திரும்பியது..


விசிலடித்தபடி மனைவியைப் பார்த்த ரகுநந்தன்.

"அழகாபுரிக்காவது இந்த ரகுநந்தனின் மேலே அன்பிருக்கே.." என்று அவளை


வம்புக்கு இழுத்தான்..

உதட்டைக் கடித்தபடி அவனை வெட்டும் பார்வை பார்த்தாள் மீ ரா..


தோள்களைக் குலுக்கிக் கொண்டவனின் கவர்ச்சியில் மனம் மயங்கினாள்..
தொலைவில் விளக்குகள் ஒளிர்ந்தன.

"ஊர் வந்துருச்சு.." என்றான் ரகுந்தன்..

அழகான அந்த முன்னிரவுப் பொழுதில் அழகாபுரிக்குள் கார் நுழைந்து


தெருக்களில் திரும்பி ஊரின் மையப் பகுதியில் கோட்டைச் சுவருடன்
இருந்த அந்தப் பெரிய வட்டின்
ீ போர்டிகோவில் சென்று நின்றது.

'அத்தை பிறந்த வடும்


ீ பெரிசா இருக்கே..'

அண்ணாந்து பார்த்து வட்டின்


ீ பிரம்மாண்டத்தை வியந்தபடி காரிலிருந்து
இறங்கிய மீ ராவை..

"பேரன் பக்கத்தில நில்லும்மா.." என்றபடி ஆரத்தித் தட்டுடன் எதிர்


கொண்டாள் கோசலை..

யமுனாவின் முகச் சாயலை உணர்ந்து கொண்ட மீ ராவின் மனதில் பிரியம்


வந்தது.. 

அவள் கோசலையின் சொல்படி ரகுநந்தனின் பக்கத்தில் நின்றாள்.. 

போதாது என்ற பாவனையில் உதட்டைப் பிதுக்கிய கோசலை..


"மருமகதான் வெட்கப்படறா.. நீயேண்டா தள்ளி நிற்கிற..? புருசனா லட்சணமா
பொண்டாட்டி தோள்மேல கையைப் போட்டுக்கிட்டு நிற்க வேணாமா..?" என்று
பேரனைப் பார்த்து அதட்டினாள்..

ரகுநந்தன் சும்மாவே நூறடி பாய்வான்.. 

எங்கே, எங்கே என்று வாய்ப்புக்காக காத்திருந்தவனுக்கு இவ்வளவு


சொன்னால் போதாதா..? 

அவன் ஆயிரம் அடி பாய்ந்து மீ ராவின் தோள்மீ து கை போட்டு தன்பக்கமாக


இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டு நின்றான்..

அவன் இப்படிச் செய்து வைப்பான் என்று எதிர்பார்த்திருந்த மீ ராவின் உடலில்


ஜிவ்வென்று மின்சாரம் பாய்வதைப் போல உணர்வலைகள் பாய்ந்தன.. 

கணவனின் இறுக்கமான அணைப்பை மறுபடியும் உணர்ந்தவளுக்குள்


பிரளயம் வெடித்தது.

இதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாத கோசலை பேரனுக்கும்


மருமகளுக்கும் ஆரத்தி எடுத்து வட்டுக்குள்
ீ அழைத்துச் சென்றாள்..

"வாடா.. பேராண்டி.." ஆசையுடன் வரவேற்றார் தசரதன்..

"அப்புறமா கட்டிக்கலாம்.. முதல்ல பாட்டியுடன் சேர்ந்து நில்லுங்க.."

கறராக உத்தரவிட்ட ரகுநந்தன் மீ ராவுடன் பெரியவர்களின் பாதம் பணிந்து


எழுந்தான்.. 

மீ ராவுக்கு அந்த வயோதிக தம்பதிகளைப் பிடித்து விட்டது..

"பேத்தி என்ன படிச்சிருக்கா..?" ரகுநந்தனிடம் கேட்டாள் கோசலை..

"கேட்கிறாங்கள்ல.. சொல்லுடி.." என்றான் ரகுநந்தன்..

மீ ரா சொன்னாள்.. ரகுநந்தனின் தொழில் பற்றிய கேள்விகளை கோசலை


மீ ராவிடம் கேட்டு வைக்க.. அவள் வேறு வழியில்லாமல்..

"ஏங்க.. பாட்டி கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க.. உங்க பிஸினெஸ்ஸைப்


பற்றி எனக்கு என்ன தெரியும்..?" என்று ரகுநந்தனிடம் பேசி விட்டாள்..

ரகுநந்தனின் விழிகளில் பல்ப் எரிந்தது.. 


தசரதனும் கோசலையும் ஜாடையாக பார்த்துக் கொண்டார்கள்.. 

இரவு உணவை ரகுநந்தனுக்குப் பரிமாறச் சொல்லிக் கட்டளையிட்டாள்


கோசலை.. 

மறுக்க முடியாமல் கணவனுக்குத் தானே பரிமாறினாள் மீ ரா.. 

அவன் போதுமென்று அவள் கை பிடித்துத் தடுத்தான்.. மீ ராவைத் தன்னுடன்


உட்காரவைத்துக் கதை பேசியவாறு பரிமாறினாள் கோசலை.. 

அவள் பேசிய கதையெல்லாம் ரகுநந்தனைப் பற்றிய கதைகளாகவே


இருந்தன.. 

அவனது பால்யப் பருவம், பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், என்று கதை


தொடர்ந்து அவன் வெற்றிகரமான இளந்தொழிலதிபனாக வந்து நிற்பதில்
வந்து நின்றது.

ஒன்றை உணர்ந்து திகைத்தாள் மீ ரா.. அது ரகுந்தனைப் பற்றிய பேச்சை


அவள் விரும்பிக் கேட்கிறாள் என்பது.

நிலாக் காயும் நேரத்திலே -24


மே 02, 2021

24

 
ரகுநந்தனுக்கும் மீ ராவுக்கும் கொடுக்கப் பட்டிருந்த மாடியறை
வித்தியாசமானதாக பழங்கால பாரம்பர்யத்தைப் பிரதிபலிப்பதைப் போல
இருந்தது. 

மாடியிலிருந்த நீண்ட ஹாலை ஒட்டிய பெரிய அறையின் மையப் பகுதியில்


கட்டில் இருந்தது.. 

உடைமாற்றும் அறையை ஒட்டிய குளியலறை.. 


இதிலெல்லாம் நவினமாக இருந்த அறையின் மறுபக்கம் இருந்த கதவைத்
திறந்தால் நீண்ட பால்கனி போன்ற அமைப்புடன் கூடிய மொட்டை மாடி
இருந்தது.

அந்த மொட்டை மாடியின் சுற்றுச் சுவர் ஓரமாக வரிசை கட்டியிருந்த


பூந்தொட்டிகளில் இருந்து வளர்ந்து சுவரில் படர்ந்திருந்த கொடி
முல்லைச்சரம் அடர்ந்து படர்ந்திருந்ததில் சுற்றுச் சுவர் மறைக்கப்பட்ட
மலர்களுடன் கூடிய கொடிகள் மட்டுமே பின்னிக் கிடந்ததில்..

"வாவ்.." என்று விழி விரித்தாள் மீ ரா..

மொட்டை மாடியில் ஒரு கட்டில் கிடந்தது.. எதிரில் நான்கைந்து சேர்கள்.. 

ஊடும் பாடும் இருந்த தொட்டிகளில் வளர்ந்திருந்த செடிகளின் பசுமை அதை


தோட்டத்தைப் போலவே உணர்த்தியதில் ஆனந்தம் கொண்டாள் அவள்.

சிலுசிலுவென வந்த காற்றும்.. வானத்தில் தெரிந்த முழுநிலவும்.. அதன்


ஒளியில் தெரிந்த செடி கொடிகளுமாக புதுவித உணர்வை அவளுக்குள்
ஊட்டியதில் அறைக்குள் படுக்காமல் அங்கே கிடந்த கட்டிலில் படுத்து
விட்டாள்.. 

அண்ணாந்து பார்த்து வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை எண்ணி ஓய்ந்து


விழிகள் சொக்க ஆரம்பித்த பின்னரே அறைக்குள் வந்து படுத்தாள்.

காலைக் காபியுடன் வந்த கோசலை மீ ராவின் கையில் காபித் தம்ளரைத்


திணித்து விட்டு பேரனை எழுப்பிக் கொடுக்கச் சொன்னாள்.. 

அங்கேயே அவள் நின்றிருந்ததில் வேறு வழியில்லாமல் ரகுநந்தனைத்


தொட்டு உசுப்பி எழுப்பினாள் மீ ரா.. 

அவன் அதுதான் சாக்கென்று புரண்டு மீ ராவின் மடியில் படுத்து அவள்


இடுப்பைச் சுற்றிக் கைகளால் வளைத்துக் கொண்டான்.. 

மீ ராவின் உடலில் தடதடவென ரயில் ஓடுவதைப் போன்ற அதிர்வு


உண்டானது.

"டேய்.. பாட்டி இருக்கேண்டா.." கோசலை சிரித்தாள்..

"பாட்டி இருக்காங்கன்னு சொல்றதில்லையா..?" 


என்னவோ தினம் தினம் அப்படித்தான் நிகழ்வதைப் போல மீ ராவிடம்
செல்லமாக கோபித்தபடி எழுந்து உட்கார்ந்தான் அவன்.

காபி குடித்து முடித்த ரகுநந்தன் குளிக்கப் போனான்.. அங்கிருந்து..

"மீ ரா.." என்று அவன் குரல் கொடுக்க..

"முதுகு தேய்த்து விடும்மா.." என்று குளியலறைக்குள் மீ ராவைத் தள்ளி


விட்டாள் கோசலை..

உள்ளே வந்து விழுந்தவளை ஈர உடலுடன் நின்றிருந்த ரகுநந்தன் வாகாக


தாங்கிக் கொண்டான்.. 

குளித்து முடித்தவனின் ஈரத்தலையை கோசலையின் அதட்டலால் அவள்


துவட்டி விட வேண்டியிருந்தது.. 

சட்டையைப் போட்டுக் கொண்டவனுக்கு பொத்தனைப் போட்டு விட


வேண்டியிருந்தது.

கோசலையின் முன்னால் அவளுடன் ஈஷோ ஈஷென்று ஈஷித் தீர்த்தான்


ரகுநந்தன்.. 

சரக்கென்றால் மீ ராவின் மடியில் படுத்துக் கொண்டான்.. 

அவளுடன் கதை பேச அவனுக்கு ஆயிரம் விசயங்கள் இருந்தன.. 

புதிதாக வந்திருந்த ஊரில் அவனிடம் பாராமுகம் காட்ட முடியாமல்


இயல்பாக பேச ஆரம்பித்து விட்டாள் மீ ரா.. 

மெல்ல அந்த இயல்பு அனைத்து நடவடிக்கைகளிலும் திரும்பி விட..


கோசலை சொல்லாமலே ரகுநந்தனைத் தொட்டு எழுப்பி, காபி கொடுத்து
குளிப்பாட்டி தலை துவட்டி சட்டையின் பொத்தான்களைப் போட
ஆரம்பித்தாள்..

ரகுநந்தனின் திடிர் அணைப்புகளில் அவளுக்குள் தீப்பற்றுவதைப் போல


உணர்வு ஏற்பட.. அவள் கணவனின் அணைப்பிற்கான பிரதிபலிப்பை உணர்த்த
ஆரம்பித்தாள்..

இளகிவரும் அவள் உணர்வுகளை புரிந்து கொண்ட ரகுநந்தன் திடிரென்று


யாரோ ஒருத்தியுடன் காரில் வந்து இறங்கினான்.
"ஆத்துப்பக்கம் போன பேரன் இவளை எங்கே பார்த்துத்
தொலைத்தான்..?" கோசலை கவலை போல காட்டிக் கொண்டாள்.

ரகுநந்தனின் தோளைத் தொட்டுத் தொட்டுப் பேசிய அந்த யுவதியின்


உரிமையிலும் கோசலையின் கவலையிலும் மீ ராவுக்கு திகில் பற்றிக்
கொண்டது.

"அவ யாரு பாட்டி..?" விசாரித்தாள்..

"ம்ப்ச்.. எல்லாம் சொந்தக்காரிதான்.. ரகுநந்தன் மேல உயிராய் இருப்பா..


கல்யாணத்துக்கு முன்னாலே உரிமை கொண்டாடினா சரி.. இப்பத்தான்
அவனுக்குக் கல்யாணமாகி பொண்டாட்டின்னு நீ ஒருத்தி இருக்கியே..
இன்னும் உரிமை கொண்டாடினா எப்படி..? பார்த்துப் பத்திரமா உன் புருசனை
முந்தானைச் சேலையில முடிஞ்சு வைச்சுக்க மீ ரா.. கிளி போல பொண்டாட்டி
இருந்தாலும் குரங்கு போல வைப்பாட்டியை வைத்துக்கறது
ஆம்பளைங்களோட புத்தி.." கோசலை புளியை கரைத்து ஊற்ற..

"பாட்டி..!" என்று திகிலானாள் மீ ரா..

"உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. தலை வாழை இலை போட்டு விருந்துச்


சாப்பாட்டை பரிமாறினாலும் இந்த பாஸ்ட்டு புட்டுன்னு ருசிபார்க்க ஓடற
காலம் இது.. உன் புருசனைப் பட்டினி கிட்டினி போட்டுராதே.."

"பாட்டி.."

"விருந்து சாப்பிடறவனே ஹோட்டலுக்குப் போகிறப்ப.. பட்டினி கிடக்கிறவன்


படி தாண்ட மாட்டானா..?"

"பாட்டி.."

"விட்டுப்புட்டு புடிக்க முடியாம ஐயோ அப்பான்னு புலம்பறதுக்குப் பதிலா


விடாம இறுக்கிப் பிடிச்சுக்கறவதான் புத்திசாலிப் பெண்டாட்டி.. நான்
சொல்லறதைச் சொல்லிப் புட்டேன்.. இனி பேத்தி உன் சமத்து.."

சமத்துப் பெண்ணான மீ ரா யோசித்து யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள்.. 

அந்த முடிவு அவளுக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது என்பது வேறு


விசயம்.. 
அந்தி மயங்கிய நேரத்தில் குளித்து மெலிதான மைசூர் சில்க் புடவையை
உடுத்தி.. நீண்ட பின்னலில் நெருக்கிக் கட்டப்பட்ட மல்லிகைச் சரத்தை சூட்டி..
அழகு தேவதையாக நின்றாள்.. 

அவள் கசங்கிய நைட்டியுடன் இருந்தாலே 'ஆ' வென வாய் பிளந்து ரசிக்கும்


ரகுநந்தன் அன்று கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப் போல அவளையும்
பார்த்து விட்டுக் கொட்டாவியுடன் தூங்கப் போனான்.. 

பேரன் பண்ணும் அழிச்சாட்டியங்களைக் கண்டும் காணாதவளைப் போல


தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள் கோசலை..

மாடிக்குத் தூங்கப் போன கணவனைத் தேடி பின்னாடியே போன மீ ரா


அறைக் கதவை தாழிட்டு விட்டு கட்டிலைப் பார்த்தாள்.. 

அங்கே அவனில்லை..

'எங்கே போயிருப்பான்..'

மொட்டை மாடித் தோட்டத்திற்குப் போனாள்.. 

அவளுடைய மச்சான் அங்கிருந்த கட்டிலில் சயனித்திருந்தான்.. 

மெதுவாக கட்டிலை அணுகி அவன் மீ து சாய்ந்தாள்.. 

விழித்துக் கொண்டவன் புரண்டு படுத்து அவளைப் பார்த்தான்.. 

அவனது முகத்தின் மீ து மீ ரா சூடியிருந்த மல்லிகைச் சரம் படிந்து மோகக்


கனலை மூட்டியது.. 

மீ ராவின் சுட்டு விரல் ஆகாயத்தைக் காட்டியது.. 

அங்கே என்ன இருக்கிறது என்று புருவங்களை உயர்த்தினான்.. முழுநிலவை


சுட்டிக் காட்டிய மீ ரா..

"நிலாக் காயுது.. நேரம் நல்ல நேரம்..

           நெஞ்சில் பாயுது காமண்விடும் பாணம்.."


என்று சொக்கிப் போன குரலுடன் பாடினாள்.. ரகுநந்தன் எழுந்து உட்கார்ந்து
விட்டான்.. அவன் மடி சாய்ந்த மீ ரா..

"தூக்கம் வல்ல மாமா..

           காக்க வைக்கலாமா..?

     ஆக்கி வச்ச சோத்த

           ஆறப் போடலாமா.."

என்று தாபத்துடன் கேட்டாள்.. 

அவ்வளவுதான். வேசம் கலைத்த ரகுநந்தன் வேட்கையுடன் அவளைத்


தழுவிக் கொண்டான். 

கட்டிலில் அவர்கள் சரிந்தார்கள்.. தென்னங்கீ ற்றின் சலசலப்பும்..


தென்றல்காற்றின் சிலுசிலுப்பும் அவர்களை எங்கோ இழுத்துச் சென்றன..

"தென்னக் கீ ற்றும் பூங்காற்றும்

           என்ன பண்ணுதோ..?"

பாடிய மீ ராவை பாடுவது இவள்தானா என்ற ஆச்சரியத்துடன் உற்றுப்


பார்த்தான் ரகுநந்தன்.. அவன் மனைவிக்கு சரசம் கூடத் தெரியுமா..?

"உன்னைப் போலத் தோளைத் தொட்டுப்

           பின்னிக் கொள்ளுதோ.."

அவளின் சேலை தொட முனைந்தவனின் கையைத் தட்டி முகம் சிவந்தாள்


மீ ரா.. தாள முடியாத தாபத்துடன் கெஞ்சினான் ரகுநந்தன்..
"வெட்கம் பிடுங்குது பொறுத்துக்கய்யா..

           அது விலகிப் போனதும் எடுத்துக்கய்யா.."

என்றவளின் கோரிக்கையை மறுத்தவன் பிடிவாதமாக..

"கட்டில் போட்டதும் தெரிஞ்சுக்கனும்

           கொல்லைப் பக்கம் ஒதுங்கிடப் புரிஞ்சுக்கனும்.."

என்று அதட்டி அவள்மீ து படர்ந்து பரவினான்..

"அம்மாடி..

     அதுக்கென்ன அவசரமோ..?"

என்ற போலி மறுப்போடு அவனுடன் கலந்தாள் மீ ரா.. 

அவளை வென்று தின்ற திருப்தியுடன் புரண்டு படுத்தான் ரகுநந்தன்..


அதையறியாமல் அவனை வென்று விட்ட திருப்தியோடு படுத்திருந்த
மனைவியிடம்..

"தண்ண ீர் கேட்கும்.. ஏ.. பெண்ணே..

           தாகம் தணிந்ததா..?"

என்று முத்தமிட்டான்..

"அத்தான் தேவை நான் தந்தேன்..

           ஆசை குறைந்ததா..?"
அவள் பதிலுக்குக் கேட்டாள்..

"கொட்டிக் கிடக்குது ஊரளவு..

           இதில் வெட்டி எடுத்து ஓரளவு.."

அவன் கிறக்கத்துடன் அவள் இடுப்பில் கை போட்டு அள்ளிக் கொண்டான்..

"இன்று கொடுத்தது இதுவரைக்கும்

           இனி நாளை இருப்பது இருவருக்கும்.."

அவன் கழுத்தைச் சுற்றிக் கைபோட்டு வளைத்துக் கொண்டாள் மீ ரா..

"அன்பே..! நீ

     அதிசய சுரங்கமடி.."

அறைக்குள் நுழைந்து கட்டிலில் அவளைக் கிடத்திக் கதவை அடைத்த


ரகுநந்தனின் மனதும் உடலும் நிறைவுற்றிருந்தன..

இரு மனதாய் அழகாபுரி விருந்துக்குச் சென்ற மகனும், மருமகளும் ஒரு


மனதாய் திரும்பி வந்ததில் சந்தோசப்பட்டுப் போனாள் யமுனா..

"எப்படிம்மா..?" போனில் தாயிடம் வியந்தாள்..

"எங்கே அடிச்சா எது விழுகும்ங்கிற கணக்குத்தான்.." என்றாள் கோசலை..

நந்தினியும், ராதிகாவும் பிறந்த வட்டிற்கு


ீ வந்து போனார்கள்..
சொல்லம்புகளை வசத்தான்
ீ செய்தார்கள்.. 

மீ ரா அவற்றை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டாள்.. 

அவளுக்குத் தெரியும்.. எப்படியும் ரகுநந்தனின் காதுகளுக்கு விசயம் போய்


விடுமென்று.. 
அவன் தமக்கைகளை காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சித் தீர்த்ததில் அவர்கள்
அடங்கிப் போனார்கள்.. 

மாதங்கள் நகர்ந்தன.. மீ ரா தாய்மையடைந்தாள்.. 

தம்பிக்கு மகன் பிறந்ததில் நந்தினியும் ராதிகாவும் மனம் மாறி பழைய


பாசத்துடன் பிறந்த வட்டிற்கு
ீ வந்து போனார்கள்..

நிலாக் காயும் நேரத்திலே தன் வாழ்வை மீ ட்டுக் கொண்ட மீ ரா.. நிலாவைக்


காட்டிக் கதை சொல்லி மகனுக்கு சோறுட்டும் தாயானாள்..

வாழ்க்கை நிலவின் ஒளியை உள்ளடக்கியது.. காலம் நம்முன் கடுமை


காட்டலாம்.. விதி நமக்கு தடைகல் போடலாம்.. அதை புத்தியோடு
எதிர்கொண்டால் நிலாக் காயும் நல்ல நேரம் நமது வாழ்வில் நிலைக்கும்..

- சுபம் -

You might also like