You are on page 1of 7

தேசிய வகை சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி

அரையாண்டு மதிப்பீடு 2023


நன்னெறிக் கல்வி
நேரம் 1 மணி 15 நிமிடம்
ஆண்டு 3

பெயர் : .................................................... தேதி


: .....................

பிரிவு அ
சரியான விடைக்கு வட்டமிடுக. (25 புள்ளிகள்)

1. இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை எது ?

A. கிறிஸ்துமஸ்
B. நோன்பு பெருநாள்
C. தீபாவளி

2. எந்த இனத்தவர்கள் குருதுவாரில் வழிப்படுவார்கள் ?

A. இந்தியர்கள்
B. கிறிஸ்துவர்கள்
C. சீக்கியர்கள்

3. பள்ளிக்குடியினர் ஒன்றிணைந்து வேலையைச் செய்வதால் பணிச்சுமை _______________.

A. அதிகமாகும்
B. கடினமாகும்
C. குறையும்

4. பள்ளிக்குடியினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதால் ____________________ ஏற்படும்.

A. பகைமையுணர்வு
B. புரிந்துணர்வு
C. பொறாமையுணர்வு

5. நீங்கள் பள்ளிக்குடியினருக்கு உதவுவதால் ஏற்படும் மனவுணர்வைத் தேர்ந்தெடுக்கவும்.

A. திருப்தி
B. மனக்கவலை
C. கோபம்

நன்னெறிக் கல்வி ஆண்டு 3 1


6. எது பள்ளியில் ஆற்றும் கடமை ?

A. B. C.

7. ஆசிரியர் மாணவர்களின் புத்தகங்களைச் சேகரித்து வரும்படி கூறுகிறார். நீ என்ன


செய்வாய் ?

A. ஆசிரியரின் கட்டளையை நிறைவேற்றுவேன்.


B. ஆசிரியரின் கட்டளையை அலட்சியம் செய்வேன்.
C. ஆசிரியர் கூறியதைக் கேட்காமல் சென்று விடுவேன்.

8. கட்டொழுங்கு ஆசிரியர் மாணவர்த் தலைவர் பொறுப்புகளைப் சிறப்புடன் செய்யப்


பணித்தால் ______________________________.
A. கட்டளையைப் பின்பற்றி நடப்பேன்.
B. கட்டளையைப் பின்பற்றாமல் மெத்தனமாக இருப்பேன்.
C. கட்டளையைக் கேட்காமல் நடந்துக் கொள்வேன்.

9. மாணவர்நலத் துணைத்தலைமையாசிரியர் பள்ளித்தூய்மையைப் பேணும்படி அறிவுரை


கூறினால் ____________________________________________.

A. பள்ளித்தூய்மையைப் பேண மாட்டேன்.


B. பள்ளித்தூய்மையின் மீது அக்கரை செலுத்த மாட்டேன்.
C. பள்ளித்தூய்மையைப் பேணும் நடவடிக்கையில் ஈடுப்படுவேன்.

10. பள்ளியில் ஆற்ற வேண்டிய கடமைகளின் முக்கியத்துவத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


I. கட்டொழுங்குப் பிரச்சனை இருக்காது.
II. ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை கூடும்.
III. பள்ளியில் நல்ல உறவு நீடிக்கும்.
A. I, II
B. II, III
C. I, III

நன்னெறிக் கல்வி ஆண்டு 3 2


11. வகுப்புகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் துப்புரவுப் பணியாளர்களுக்கு
_____________________________.
A. வணக்கம் கூறுவேன்.
B. சிறிய பரிசு வாங்கிக் கொடுப்பேன்.
C. தெரியாதது போல் இருப்பேன்.

12. பள்ளிக்குடியினர்க்கு உதவுவதால் ________________________ ஏற்படும்.


A. கவலை
B. சோகம்
C. மனநிறைவு

13. உதவி செய்த நண்பனுக்கு _________________ கூற வேண்டும்.


A. வணக்கம்
B. நன்றி
C. வாழ்த்துக்

14. நன்றி பாராட்டும் வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.


I. உதவி செய்த நண்பனைக் கண்டும் காணாதது போல் செல்லலாம்.
II. மாலா போட்டிக்குத் தன்னைத் தேர்ந்தெடுத்த ஆசிரியருக்கு நன்றி கூறினாள்.
III. ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் அவர்களுக்குப் பூங்கொத்து வழங்கினர்.
A. I, II
B. II, III
C. I, III

15. உயர்வெண்ணத்தைக் குறிக்கும் செயல் எது?

A. B. C.

16. பள்ளிக்குடியினரிடம் பணிவன்பையும் நன்னடத்தையையும் கடைப்பிடிப்பதன்


முக்கியத்துவம் யாவை?
I. மதிப்புக் கூடும்.
II. பண்பானவர் எனப் பாராட்டப்படுவர்.
III. புரிந்துணர்வு ஏற்படும்.

A. I, II
B. II, III
C. I, II, III
நன்னெறிக் கல்வி ஆண்டு 3 3
17. ஆசிரியர் அறிவுரை கூறியும் அதே தவற்றைச் செய்தால்
__________________________.
A. உறவு பாதிக்கும்.
B. புரிந்துணர்வு ஏற்படும்.
C. நல்லுறவு நீடிக்கும்.

18. பள்ளிக்குடியினரிடம் அன்போடு பழகி வந்தால் ________________________________.


A. சண்டை ஏற்படும்.
B. நல்லுறவு நீடிக்கும்.
C. புரிந்துணர்வு கெடும்.

19. துப்புரவுப் பணியாளர்களிடம் மரியாதையுடன் பேசினால் _________________________.

A. அன்பு குறையும்.
B. நற்பெயர் கிடைக்காது.
C. நற்பெயர் கிட்டும்.

20. பள்ளிக்குடியனரை மதிக்கும் சூழலைத் தெரிவு செய்க.


A. மணி தோட்டக்காரர் நட்டு வைத்த செடிகளை மிதித்து வீணாக்கினான்.
B. சாந்தி தேவாரம் பாடும்போது பாத்திமா அமைதியாக இருந்தாள்.
C. மீரா நூலகத்திலுள்ள புத்தகங்களைக் களைத்துப் போட்டாள்.

21. பள்ளியின் கழிப்பறையில் யாரேனும் கிறுக்கினால் __________________________.


A. கட்டொழுங்கு ஆசிரியரிடம் முறையிடுவேன்.
B. கண்டும் காணாததுபோல் சென்று விடுவேன்.
C. தேவையான உதவிகளைச் செய்வேன்.

22. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் சண்டையிட்டால் ______________________________.


A. காணாததுபோல் சென்று விடுவேன்.
B. வேண்டாத வேலையென்று செல்வேன்.
C. தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுவேன்.

23. எப்போதும் பள்ளிக்குடியினரிடம் பொய் பேசி வந்தால்


_______________________________.
A. அன்பு வளரும்.
B. உறவு பாதிக்கும்.
C. புரிந்துணர்வு உண்டாகும்.

24. சிற்றுண்டிச் சாலையில் இளைய மாணவர்களுக்கு வழிவிட்டால்


_________________________.

நன்னெறிக் கல்வி ஆண்டு 3 4


A. கவலை அடைவேன்.
B. வெறுப்பு அடைவேன்.
C. மகிழ்ச்சி அடைவேன்.

25. பள்ளியில் கடைப்பிடிக்கக்கூடிய மிதமான மனப்பான்மை யாவை?


I. சிற்றுண்டிச் சாலையில் அளவாகச் சாப்பிடுதல்.
II. நூலகத்தில் நண்பர்களோடு அரட்டை அடித்தல்.
III. பேச்சில் பணிவையும் மரியாதையையும் கடைப்பிடித்தல்.
IV. வகுப்பில் ஆசிரியர் இல்லாத போது அதிக சத்தம் போடுதல்.

A. I, III
B. II, IV
C. I, III, IV

பிரிவு ஆ
சரியான கூற்றுக்கு (  ) பிழையான கூற்றுக்கு (  ) எனக் குறியிடவும். (12
புள்ளிகள்)

1. கார்த்திகேயன் கீழே கண்டெடுத்த பணத்தைப் பொறுப்பாசிரியரிடம் கொடுத்தான்.

2. டேவிட் பள்ளிக்குத் தாமதமாக வந்ததால், தூணுக்குப் பின்னால் மறைந்து நின்றான்.

3. தனக்கு உணவு வழங்கிய சிவாணியாவிற்கு யுவராஜா நன்றி கூறினான்.

4. முத்து ஆசிரியரிடம் தவறுதலாகப் பூச்சாடியை உடைத்ததை ஒப்புக்கொண்டான்.

5. மாறன் சிற்றுண்டிச்சாலை பணியாளர்களிடம் உயர்ந்த தொனியிலே பேசுவான்.

6. சுமதி தனது பணப்பையைத் தேடித் தந்த வரதன் மீது வீண்பழி சுமத்தினாள்.

7. பாதுகாவலருக்கு எப்போதும் வணக்கம் கூறுவேன்.

8. பாண்டியன் நண்பனின் புத்தகத்தை மறைத்து வைத்துவிட்டு, தான் பார்க்கவில்லை


என்று கூறினான்.
9. நடுவுநிலைமையான தீர்ப்பால் பள்ளியில் வேற்றுமை வளரும்.

10. மாவட்டத் திடல்தடப் போட்டியில் வெற்றி பெற்றதால் பள்ளியில் நற்பெயர் கெடும்.

11. ஆசிரியர் கொடுக்கும் பாடங்களைத் தவறாமல் செய்தால் பாராட்டு கிடைக்கும்.

12. மீனா சோதனையின் போது தோழியின் விடையைப் பார்த்து எழுதினாள்.

நன்னெறிக் கல்வி ஆண்டு 3 5


மிதமான போக்கு / மிதமற்ற போக்கு என வகைப்படுத்துக. (6 புள்ளிகள்)

1. கீதா உணவை மீதம் வைக்காமல் உண்டாள்.


மிதமான
2. சிவா தன் வீட்டைப் பற்றி தற்பெருமையாகப் பேசினான்.
போக்கு
3. மதியழகன் தேவைக்கேற்ற செலவு செய்வான்.

4. பகலில் வகுப்பு மின் விளக்கு எரிகின்றது.


மிதமற்ற
5. கவிதா அனைவரிடமும் பணிவாகப் பேசுவாள்.
போக்கு
6. பானு பிறந்தநாளை எளிமையாக் கொண்டாடினாள்.

சூழலுக்கு ஏற்புடைய விடையை எழுதுக. ( 3 புள்ளிகள் )

1.
மேற்கண்ட படத்தில் அகிலன் என்ன செய்கிறான் ?

2. இச்சூழலில் அடைந்த மனவுணர்வு யாது ?

3. இச்சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள் ?

நன்னெறிக் கல்வி ஆண்டு 3 6


சரியான கூற்றுகளைத் தெரிவு செய்து வண்ணமிடுக. (4 புள்ளிகள்)

மற்ற மாணவர்களின் கருத்துகளை மதித்து ஏற்க வேண்டும்.

நண்பன் செய்யும் சிறுசிறு தவறுகளை மன்னிக்கக் கூடாது.

பிடித்தவர்களிடம் மட்டுமே விட்டுக்கொடுத்து நடக்க வேண்டும்.

தவறுதலாக எழுதுகோலை எடுத்த நண்பன் மீது கோபப்படக் கூடாது.

வரிசையில் நடக்கும்போது முந்திச் செல்ல வேண்டும்.

மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்.

பள்ளி பணியாளர்களிடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்

தயாரித்தவர்: உறுதிப்படுத்தியவர்: பெற்றோர் கையொப்பம்

........................... ............................. .............................


ப.யோகே௵Š வரி து.கோமதி
(பாட ஆசிரியர்) ( பாடப் பணிக்குழுத் தலைவி )

நன்னெறிக் கல்வி ஆண்டு 3 7

You might also like