You are on page 1of 3

வணக்கம்

அரங்கம் மணக்கும் இறைவனுக்கும் தமிழுக்கும் வணக்கம் செலுத்த


அவையோரின் இணக்கம் வேண்டுகிறோம். தலைநிமிர்ந்து நிற்பதில் என்ன சுணக்கம் இருக்கப்
போகிறது..?

அடர் மழைக்காட்டின் அந்தி சாயும் பொழுதொன்றின் தொடர் குயில் ராகத்தைப் போல் இடர் எது
நேர்ந்தாலும் சுடர் பொங்கும் புன்னகையால் தமிழும் தமிழரும் தவழும் இடமெல்லாம் அமிழ்தாய் அழகாய்
பற்றிப் படரும் தொட்டுத் தொடரும் எம் பாட்டுடைத் தலைவன் பட்டுடை முருகன் மாண்புமிகு நெருப்பு
டத்தோஶ்ரீ எம். சரவணன் அவர்களே..
எழுத்து எனும் பெருந்தவத்தின் இச்சைப் பெற்றெடுத்த இளையப்பிள்ளை பச்சை நிறம் அணிந்த
கவிதைப் பந்தல், நூல் என்னும் பால் சிந்தும் இன்றைய பொழுதின் மாலைநிலா அன்புச் சகோதரர்
கவிஞர் ந.பச்சைபாலன் அவர்களே..வாழ்த்துரை வழங்க வந்திருக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்
சங்கம் எனும் சிங்கப்படை நடத்தும் சமகால தங்கம் திரு ஞான சைமன் அவர்களே, இலக்கியம் பேசும்
துப்பாக்கி..மலேசியக் காவல் துறையின் கோபுரத்தில் பறக்கும் எங்கல் சேவற்கொடி டத்தோ ஶ்ரீ
ஆ.தெய்வீகன் அவர்களே, இளைய சுவர்முழுக்க இலக்கியம் கிறுக்கி பின் இனிமை தவழும் மோர்
சரித்திரம் படைத்த எம் இலக்கியக் காவலர் பி.எம் மூர்த்தி அவர்களே..
நொய்வமரநெடுகே
தோய்நத
் ிருந்த
வாசனை போல்
காலப்பெருவெளியில்
கரைந்து விட்ட
காதலி போல்
நகரப் புகைநடுவே
நுகரவொரு நூல் கொடுத்தால்
பகர பதில் மறந்து
பறந்தோடி வரும்
தமிழ்ப்படித்த, தமிழ்குடித்த, தமிழ்பிடித்த
அத்தனை உறவுகளையும்
முரண் ஏதும் முளைக்காத
நூல்களின் நகரத்திலிருந்து
மனக்கண் கசிய வரவேற்கிறோம்..
வரவேற்கிறோம். வணக்கம். வருக..வாழ்க

வாழ்த்துரை வழங்க எங்கள்


வான நிலவு வர
நேரமாகும் என்பதனால்
ஞான சைமன் வருகிறார்
மோனம் களைந்து உங்கள்
கானம் இசையுங்கள் தலைவா..!
மலேசிய எழுத்தாளர் சங்கத்தலைவர் சகோதரர்.
__________________________________________________________________________________
________________
அவருக்கு நன்றி
கிளையில்
முகிழ்த்த மலருக்கு
முகவரி எதுவும் இல்லாதபோதும்
அந்த வாசனைப் பூக்கள்
குறித்த யோசனையைக்
காற்றே நமக்குக் காதலுடன் முன் மொழிகிறது

பெயரிலேயே பச்சையம் சுமக்கிற நம் அருமை கவிஞரின் எழுத்துகளுக்கும் விளம்பரம் தேவையில்லை


என்றாலும் மலர் அதை முன்மொழிகிற காற்று என்று நான் குறிப்பிட்ட உவமைக்கு உரம் சேர்க்க நூல்
அறிமுகம் அவசியமாகிறது.
அந்த வகையில் முதலாவது நூல் அறிமுகம் நிகழ்த்த செயல் புயல், நற்றமிழ் வயல், இந்த மண்ணில்
தமிழர் பெருமைச் சுமக்க காலம் எழுதி வைத்த உயில் டத்தோஶ்ரீ தெய்வீகன் அவர்களை மேடைக்கு
அழைக்கிறோம்.

செயலாற்றிச் சென்ற புயலுக்கு நன்றி..மீண்டும் ஒரு நூல் அறிமுகம்

மனனம் செய்து வைத்திருந்த


கட்டுரைகளை
மறந்து விடாமல்
கொட்டி விட்டால்
கெட்டிக்காரன் எனும் பெயரெடுக்கலாம்
எனும் சூழலில்
படைப்பிலக்கியம் எனும்
பகுதியை மாணவர் வாழ்ககை
் குள்
கொண்டு வந்து சிறுகதை எனும்
கற்பகச் செடியை செழிக்கச் செய்த இலக்கியக் காவலர் பி.எம் மூர்த்தி எனும் தென்றலை இப்போது
மேடைக்கு அழைக்கிரோம்..
….
அவருக்கு நன்றி
நிகழ்ச்சியில் தொடர்ந்து ஏற்புரை..பிரசவ நாளில் மறுப்பிறப்பெடுத்த தாயொருத்தி பக்கத்தில்
படுத்திருக்கும் தன் பச்சிளங்குழந்தையைப் பார்க்கையில் சிந்தும் முதல் சொட்டு கண்ணீருக்குக்
கொஞ்சமும் குறைவில்லாத எழுத்தாளரின் ஏகாந்த உரை..

கனவுகள்
விற்கும்
கடைவீதி எங்கும்
கடவுளோடு
நடக்கிறார்கள்
நம் கவிஞரும் அப்படியொரு கலைஞர்தான்

பன்னெடுங்காலமாக இலக்கியத்தை விரும்பும் இலக்கியமே விரும்பும் அன்புச்சோகோதரர்


ந.பச்சைபாலனின் பெயர் மலேசியத் தமிழ் இலக்க்கியத்துக்குப் புதிதல்ல. எண்ணற்ற மாணவர்களின்
மனம் சேமிக்கும் நல்லாசிரியர்,தொடர்ந்து மலேசியத் தமிழ்க்கவிதை உலகில் செழித்திருக்கும்
கவிதைகளுக்குச் சொந்தக்காரர் போன்ற அடையாளங்களையெல்லாம் தாண்டி மலேசியத் தமிழ்
இலக்கிய உலகுக்கு ஹைக்கூவின் அழகை அப்படியே கடத்திய ஆளுமைதான் அவரைப் பார்தது ்
கிறுக்கத் தொடங்கிய என்னைப் போன்ற இளைஞருக்கெல்லாம் நினைவுத்தோகை சுமக்கும் இறகுகள்.
இந்த முறை கதைகளின் வழி தன் கற்பனை தீவுக்குப் பாலம் கட்டியிருக்கிறார். நாம் எல்லாம் சுற்றிப்
பார்க்க வந்திருக்கிறோம். வந்தவர்களுக்குத் தன் கற்பூரச் சொற்களால் ஆரத்தி எடுக்க அன்புக்
கவிஞரை அருமை சகோதரரை இல்லாத அண்ணனை தன் பெயரில் பூட்டி இன்னும் அவர் புகழ் பேசும்
நல்ல மனிதரை மேடைக்கு அழைக்கிறோம்.

மேகம் திரண்டு
வானம் குளிர்நத
் பின்
பூமி வணங்கி
மழையில் நனையும் முன்
அந்த இடைப்பட்ட இனிப்பு நிமிடத்தில்
தோகை விரிக்கும் மயிலுக்காய்
தொடர்நத

தலைமையுரை என் தலைவன் உரை

You might also like