You are on page 1of 2

வாழ்க்கை வார்க்கும் அனுபவங்களை வார்த்தைகளில் வடித்து விட முடியாது.

கண்ணீருக்கும்
புன்னகைக்கும் இடைப்பட்ட காலவெளியில்தான் மனம் தன்னை வெப்பமாகவே வைத்திருக்கிறது.
ஒரு சாதாரண தோட்டப்புற பையனான எனக்கு காலம் கொடுத்திருக்கிற நிகழ்கால நாற்காலியே மிக மிக
உயரமானது. அதில் பல மனிதர்களை என்னால் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. அதில்
சுமத்திரா மிக முக்கியமானது. என் அக்காள்; இன்னொரு அம்மா.
விதி வளைவின் ஒரு முக்கியத் திருப்பத்தில் நானும் அதுவும் ஏறக்குறை பத்து ஆண்டுகள் பேசாமலே
கடந்து விட்டோம். அதற்கு முன் எனக்கு எல்லாமும் அதுதான். என் கல்விச்சுமைக்காக தன் கல்விக்
கனவை இறக்கி வைத்து தொழிற்சாலைக்கு வேலைக்குப் போய் பல்கலைக்கழகம் வரை நான் பத்திரமாய்
வளர்வதற்கு அது துவிய உரம், வரம்..!
திருமணத்துக்குப் பின் முதல்முறை சூல் கொண்ட போது வயிற்றில் வளர்நத
் மகனுக்கு கௌதமன் என
பெயர் வைத்தேன்.அந்தக் குழந்தை இறந்தே பிறந்த போது கண்ணீர் கசப்போடு என் இந்தக் கைகளில்
ஏந்திதான் புதைத்தேன்.
அதற்கு பின் பிறந்த குழந்தையை குடும்பமே கொண்டாடித் தீர்தத ் து. என் அம்மாவின் முதல்
பேரக்குழந்தை. ஆசை ஆசையாய் அவனுக்கு நான் தான் பேர் வைத்தேன்; தூக்கி வளர்த்தேன்; உச்சி
முகர்ந்து சுமந்து திரிந்தேன். பின்னொரு நாள் பெரியவர்களின் பொல்லாத பிரிவு போரில் அவனும்
என்னை விட்டுத் தூரம் நின்றான்.
இன்றிருக்கும் என்னைச் செதுக்கிய பெரும் பங்கு மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப்பேரவைக்கு உண்டு.
பேரவையின் துடிப்புமிகு உறுப்பினராக, பின்னர் செயலவை உறுப்பினராக, பேரவைக் கதைகள்-19
தொகுப்பு திட்டத்தின் இயக்குநராக, பின்பு பேரவைத் தலைவராக நான் கடந்த அனுபவத்தின்
மடிப்புகளெல்லாம் அதற்குப் பிந்திய என் வளர்சச ் ியின் படிப்புகள். எனக்கும் என் நண்பர்களுக்கும்
பல்கலைக்கழகம் வெறும் கல்விக்கழகமாக மட்டுமல்ல..நாங்கள் அங்கிருந்தே சமுதாயப்பற்றையும்,
மொழி பாசத்தையும் பெருமளவில் பட்டைத் தீட்டிக் கொண்டிருந்தோம்.

நானும் சுமத்திராவும் பேசிக்கொள்ளாத காலத்தில் நான் தூக்கி வளர்த்த அவனை சில குடும்ப
நிகழ்வுகளில் மனம் கனத்து சந்தித்திருக்கிறேன். மாமா எனும் ஒற்றைச் சொல்லோடு என்னை கண்ணீர்
மல்க பார்ப்பான்.பதிலுக்குத் தலையசைத்து விட்டு சத்தமில்லாமல் சத்தில்லாமல் நகர்ந்து விடுவேன்.

பின் எல்லாம் சரியாகி, அவ்வனை மீண்டும் சந்திக்கும் போது என் தோளுக்கு மேல் வளர்ந்திருந்தான்.
நான் தூக்கி வளர்தத ் அவானா இவன் மலைத்துப் போவேன். பின் இடைநிலைப்பள்ளி
தமிழ்மொழிக்கழகத்தில் துடிப்புடன் செயல்பட்ட கதையறிந்து நம்ம ரத்தம் அப்படிதான் இருக்கும் என
தோன்றியது.அவனைப் போலவே சுமத்திராவின் அடுத்தடுத்த வரிசுகளும் திறமையானவர்கள் தான்
என்றாலும் அவன் மீது எனக்குத் தனி அன்பிருந்தது. ஏனெனில் அவன் அதிக நாள் என் கதகதப்பில்
வளர்நத் ிருக்கிறான்; வாழ்ந்திருக்கிறான்.

இன்று அவனது சிந்தனை விதையின் பெரும் பயனாக ஒரு பல்கலைக்கழக நூலகத்தின் வரலாற்றில்
முதன் முதலாக தமிழ் நூல்கள் வரிசைப் பிடித்திருக்கின்றன. தேனீயைப் போல் தேடித் தேடி நூல்களைக்
கொணர்ந்து தான் பயிலும் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் தன் தாய்மொழிக்கு மரியாதை
செய்திருக்கிறான்.

என் மடியில் தவழ்ந்த அவனது அருஞ்செயலைக் காணும்போது இன்று அவன் மீதிருந்த பாசம் மதிப்பாக
கொதிக்கிறது. இந்தத் தொண்டுக்குக் காரணமான அவனுக்கும் அவனோடு இருந்த அத்தனை
நல்விதைகளுக்கும் நன்றி; வாழ்த்துகள்.
சுமத்திரா அடிக்கடிச் ச்சொல்லும் ‘ இவன் மட்டும் உன்ன மாதிரிதான் குணத்திலும் கோபத்திலும்
‘என்று..ஏறக்குறைய ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சிந்தனையிலும் வளர்சச
் ியிலும் அவன் என்னை விட
உயர்ந்தவனாக இருக்கிறான் என்று சொல்லத் தோன்றுகிறது.
அவன் பெயர் ஜெயபாரதி. என் மகாகவிக்கு முன் பிறந்த மூத்த மகன்.

You might also like