You are on page 1of 7

வணக்கம்

அரங்கம் மணக்கும் இறைவனுக்கும் தமிழுக்கும் வணக்கம் செலுத்த


அவையோரின் இணக்கம் வேண்டுகிறோம். தலைநிமிர்ந்து நிற்பதில் என்ன சுணக்கம் இருக்கப்
போகிறது..?

தாயவள் தன்னைத் தந்தைக்குத் தந்து


நோய் நிகர் உறவில் தீட்டிய என்னை
சேய் என உலகம் அறிவித்தப் போதும்
பேய் நிகர் மனதில் பிறவியின் பாரம்
இதுவென்ன இதுவென்ன சாபம்..
இறைவா உனக்கென்ன கோபம்

முன்பொருகாலம் உயரத்தில் இருந்து


பின்பொருகாலம் துரோகத்தால் பறந்து
துன்புறும் தமிழர் கூட்டத்தில் பிறந்து
தென்புறம் கடந்து ரப்பரில் நனைந்து
இதுவென்ன இதுவென்ன சாபம்..
இறைவா உனக்கென்ன கோபம்

சோழன் செழித்த புலிக்கொடிநெடுக


ஈழத்தமிழர் குருதியின் ஓடை
வேழம் போல வாழ்ந்த தளபதி
ஆழம் போனதில் திசையெட்டும் கோடை
இதுவென்ன இதுவென்ன சாபம்
இறைவா உனக்கென்ன கோபம்

கத்தியின் நுனிபோல் ஆயிரம் கஷ்டம்


குத்திக் கிழித்த வாழ்வியல் நடுவே
பத்திராமாய் ஒரு பெருந்தொற்றெனும் பேய்
மத்தியில் நின்று ஆடிய ஆட்டம்
இதுவென்ன இதுவென்ன சாபம்
இறைவா உனக்கென்ன கோபம்

நன்றி மறக்கும் நற்குணம் எல்லாம்


குன்றில் ஏற்றிய விளக்கென மாறும்
அன்றில் போல வாழ்ந்ததை மறந்து
அரசனை நம்பி அழுதாள் தாரம்
இதுவென்ன இதுவென்ன சாபம்
இறைவா உனக்கென்ன கோபம்

மொத்தக் கசப்பில் ஒருசிலவற்றை


சித்தம் கலங்கி இறக்கி வைத்தேன்
முத்தம் போல இனிக்கிற இறைவன்
சத்தமின்றி காதில் சிரித்தான்

பகல்கள் ஒன்றே பொழுதைத் தின்றால்


அகல்களின் அழகை எப்படி ரசிப்பாய்
உடலுக்குள்ளே உணவை வைத்தால்
பசிக்கிற ருசியை எப்படிப் புசிப்பாய்

துளைகள் தானே குழலுக்கு ராகம்


அலைகள் தானே கடலுக்குத் தாளம்
சிலைகளின் அழகில் உளிகளின் ஆட்சி
பச்சை பாலனே பசுமைக்குச் சாட்சி

வளைவுகள் எல்லாம் ஊனம் இல்லை


வானவில் அழகைப் பார்த்தாயா
வார்த்தைகள் எல்லாம் கூச்சல் எனும் நீ
மூர்த்தியின் மொழியைக் கேட்டாயா

கோயில் தருகிற அருளை விடவும்


தாயில் விளைகிற கருணைக்கு ஏங்கு
இரவு என்றால் திருடர்கள் தானா
தெய்வீகன்கள் உண்டென்று நிம்மதியாய்த் தூங்கு

தமிழில் பேசி தமிழ்பப் ள்ளி நேசி


தன்மான மரம் வாழாதா
உன் இனம்தனில் தானே சரவணன் பிறந்தார்
இந்தப் பெருமை போதாதா

குறைகளை மட்டும் இதுவரைச் கண்டாய்


கண்ணுக்கு எதுவோ கேடு என்றார்..
அரைகுரை கவிதையாய் இது இருந்தால்கூட
உங்களையும் கொஞ்சம் கைத்தட்டச் சொன்னார்..

அடர் மழைக்காட்டின் அந்தி சாயும் பொழுதொன்றின் தொடர் குயில் ராகத்தைப் போல் இடர் எது
நேர்ந்தாலும் சுடர் பொங்கும் புன்னகையால் தமிழும் தமிழரும் தவழும் இடமெல்லாம் அமிழ்தாய் அழகாய்
பற்றிப் படரும் தொட்டுத் தொடரும் எம் பாட்டுடைத் தலைவன் பட்டுடை முருகன் ம.இ.காவின் தேசிய
துணைத்தலைவர், முன்னாள் மனிதவள அமைச்சர். எந்நாளும் எங்கள் தீநத ் மிழ் மேடைகளின் அரசன்
மாண்புமிகு நெருப்பு டத்தோஶ்ரீ எம். சரவணன் அவர்களே..
வாழ்த்துரை வழங்க வந்திருக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் எனும் சிங்கப்படை நடத்தும்
சமகால தங்கம் திரு ஞான சைமன் அவர்களே,
இலக்கியம் பேசும் துப்பாக்கி..மலேசியக் காவல் துறையின் கோபுரத்தில் பறக்கும் எங்கல் சேவற்கொடி
டத்தோ ஼ ஆ.தெய்வீகன் அவர்களே,

இளைய சுவர்முழுக்க இலக்கியம் கிறுக்கி பின் இனிமை தவழும் மோர் சரித்திரம் படைத்த எம்
இலக்கியக் காவலர் பி.எம் மூர்த்தி அவர்களே,
எழுத்து எனும் பெருந்தவத்தின் இச்சைப் பெற்றெடுத்த இளையப்பிள்ளை பச்சை நிறம் அணிந்த
கவிதைப் பந்தல், நூல் என்னும் பால் சிந்தும் இன்றைய பொழுதின் மாலைநிலா அன்புச் சகோதரர்
கவிஞர் ந.பச்சைபாலன் அவர்களே..
நொய்வ மரம் நெடுக
தோய்நத
் ிருந்த
வாசனை போல்
காலப்பெருவெளியில்
கரைந்து விட்ட
காதலி போல்
நகரப் புகைநடுவே
நுகரவொரு நூல் கொடுத்தால்
பகர பதில் மறந்து
பறந்தோடி வரும்
தமிழ்ப்படித்த, தமிழ்க்குடித்த, தமிழ்ப்பிடித்த
அத்தனை உறவுகளையும்
முரண் ஏதும் முளைக்காத
நூல்களின் நகரத்திலிருந்து
மனக்கண் கசிய வரவேற்கிறோம்..
வணக்கம். வருக..வாழ்க
-----------------------------------------------------------------------------------
கிளையில்
முகிழ்த்த மலருக்கு
முகவரி எதுவும் இல்லாதபோதும்
அந்த வாசனைப் பூக்கள்
குறித்த யோசனையைக்
காற்றே நமக்குக் காதலுடன் முன் மொழிகிறது

பெயரிலேயே பச்சையம் சுமக்கிற நம் அருமை கவிஞரின் எழுத்துகளுக்கும் விளம்பரம் தேவையில்லை


என்றாலும் மலரரை முன்மொழிகிற காற்று என்று நான் குறிப்பிட்ட உவமைக்கு உரம் சேர்க்க நூல் அறிமுகம்
அவசியமாகிறது.
அந்த வகையில் முதல் அங்கமாக முரண் சிறுகதை தொகுப்பு நூல் அறிமுகம்

மனனம் செய்து
மனதில் பதப்படுத்தி
வைத்திருந்த
கட்டுரைகளைக்
கெட்டு விடாமல்
தேர்வு நாளில்
கொட்டி விட்டால்
கெட்டிக்காரன் எனும் பெயரெடுக்கலாம்
எனும் தமிழ்க்கல்விச் சூழலில்
படைப்பிலக்கியம் எனும்
பாரிஜாத பெருங்காட்டைப்
பாடத்திட்டத்துக்குள்
பக்குவமாய்ச் செதுக்கி வைத்த
இலக்கியக் காவலர், பி.எம் மூர்த்தி எனும் தீந்தமிழ்த் தென்றலை மேடைக்கு அழைக்கிறோம். அவருக்கு
மரியாதைச் செய்வதற்கு அருமை சகோதரர் ந. பச்சைபாலன் அவர்கள்..

……………………………………………………………………………………………………………
முதலாவது நூல் அறிமுகம் செய்து வைத்த அருமைச் சகோதரர் உயர்திரு பிம் . எம் மூர்த்தி அவர்களுக்கு
நன்றி.
……………………………………………………………………………………………………………
நூல்கள் பெற்று நுண்ணறிவுப் பெறுவதற்கான விற்பனை விபர புறாக்கள் உங்கள் கை அமர்ந்திருக்கும்.
மூன்று நூல்கள் உள்ளடக்கிய வைத்துள்ள நல்லறிவு விலைமதிப்பில்லாதது என்றாலும், நூல்களின்
தாளுக்கும் தயாரிப்புக்குமான அடக்க விலை 50 ரிங்கிட் மட்டுமே.வெள்ளைச் சிறகுகளில் விலாசம் எழுதி
பொறுப்பாளர்களிடம் ஒப்படையுங்கள்.
……………………………………………………………………………………………………………

தொடர்ந்து வாழ்த்துரை..
வார்த்தைகளை
வடித்து வழங்க
வான நிலவு வர
இன்னும் நேரமிருக்கிறது என்பதால்
ஞான சைமன் வருகிறார்..
மோனம் களைந்து உங்கள்
கானம் இசையுங்கள் தலைவா..!
மலேசிய எழுத்தாளர் சங்கத்தலைவர் சகோதரர். ஞான சைமன் அவர்களை அன்புடன் மேடைக்கு
அழைக்கிறோம். அவருக்கு மரியாதைச் செய்வதற்கு அருமை சகோதரர் ந. பச்சைபாலன் அவர்கள்..
-----------------------------------------------------------------------------------
அவருக்கு நன்றி.
-----------------------------------------------------------------------------------
இனி நூல்களின் நகரம், மனக்கண் ஆகிய குறுங்கதைகளின் நூல் அறிமுகம்
இப்படியொரு
இலக்கியவாதி
எப்படிக்கிடைத்தார்
நமக்கென்று
பலமுறை யோசித்ததுண்டு
கோவலனைக் கற்றுக் காவலானாய் மாறி
கோடுகள் தாண்டி.. கோபுரத்தில் கொடியுமாகி..
நேரம் நீளும் அவர் தீரம் சொன்னால்..
செயல் புயல், நற்றமிழ் வயல், இந்த மண்ணில் தமிழர் பெருமைச் சுமக்க காலம் எழுதி வைத்த உயில்
டத்தோ஼ தெய்வீகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.

அவருக்கு மரியாதைச் செய்வதற்கு மீண்டும் அருமைச் சகோதரர் ந. பச்சைபாலன் அவர்கள்..

செயலாற்றிச் சென்ற புயலுக்கு நன்றி. அவருக்கு அன்புச் செய்வதற்கு


___________________________ அவர்களை அன்புடன் மேடைக்கு அழைக்கிறோம்.

……………………………………………………………………………………………………………
அவருக்கு நன்றி
நிகழ்ச்சியில் தொடர்ந்து ஏற்புரை..பிரசவ நாளில் மறுப்பிறப்பெடுத்த தாயொருத்தி பக்கத்தில்
படுத்திருக்கும் தன் பச்சிளங்குழந்தையைப் பார்க்கையில் சிந்தும் முதல் சொட்டு கண்ணீருக்குக்
கொஞ்சமும் குறைவில்லாத எழுத்தாளரின் ஏகாந்த உரை..

கனவுகள்
விற்கும்
கடைவீதி எங்கும்
கடவுளோடு
நடக்கிறார்கள்
கவிஞர்கள்
அப்படியொரு அழகியல் சுமக்கிறவர் நம் கவிஞர்.
பன்னெடுங்காலமாக இலக்கியத்தை விரும்பும் இலக்கியமே விரும்பும் அன்புச்சோகோதரர்
ந.பச்சைபாலனின் பெயர் மலேசியத் தமிழ் இலக்கியத்துக்குப் புதிதல்ல. எண்ணற்ற மாணவர்களின்
மனம் சேமிக்கும் நல்லாசிரியர்,தொடர்ந்து மலேசியத் தமிழ்க்கவிதை உலகில் செழித்திருக்கும்
கவிதைகளுக்குச் சொந்தக்காரர் போன்ற அடையாளங்களையெல்லாம் தாண்டி மலேசியத் தமிழ்
இலக்கிய உலகுக்கு ஹைக்கூவின் அழகை அப்படியே கடத்திய அருமைதான் அவரைப் பார்த்து கிறுக்கத்
தொடங்கிய என்னைப் போன்ற இளைஞருக்கெல்லாம் நினைவுத்தோகை சுமக்கும் இறகுகள். இந்த
முறை கதைகளின் வழி தன் கற்பனை தீவுக்குப் பாலம் கட்டியிருக்கிறார். நாம் எல்லாம் சுற்றிப் பார்க்க
வந்திருக்கிறோம். வந்தவர்களுக்குத் தன் கற்பூரச் சொற்களால் ஆரத்தி எடுக்க அன்புக் கவிஞரை
அருமை சகோதரரை
பொல்லாத காலத்தால்
இல்லாமல் போன தன்
அண்ணனை பெயரில்
பாதியெடுத்து
தன் பெயரில் பூட்டிப்
பாடிக் கொன்டிருக்கும்
நன்றிக்கு,
நகரும்
இலக்கணமான
நல்ல மனிதரை மேடைக்கு அழைக்கிறோம்.
-----------------------------------------------------------------------------------
அடுத்து தலைமையுரை என் தலைவன் உரை
மேகம் திரண்டு
வானம் குளிர்நத
் பின்
பூமி வணங்கி
மழையில் நனையும் முன்
அந்த இடைப்பட்ட இனிப்பு நிமிடத்தில்
தோகை விரிக்கும் மயிலுக்காய்
இமைக்காது காத்திருக்கும்
இயற்கை போல்
உங்கள் உரைக்காகக் காத்திருக்கிறது
இதயம்
டத்தோ஼..

ரோம் நகரம்

தீப்பிடிக்கும் போது

பிடில் வாசித்த
நீரோ குறித்து

யாரோ எழுதி வைத்த

தப்பான விளக்கத்தைதான்

ஒப்புவிக்கிறது உலகம்..

சொல்லிப் புரியாத

சொல்லில் புரியாத

தத்துவத்தைக்

காலம் கற்றுத் தரும்போது

தனித்து நின்று பிடில் வாசிப்பதுதான்

தன்மானத்தின்

தகுந்த அடையாளமெனும்

உங்கள் தார்மீக தர்மத்தில் நானும்

உடன்படுகிறேன்.

எந்தத்துறை மாறினால் என்ன இலக்கியம்

உங்கள் சொந்த துறை

இதில் பிடில் வாசிக்கவும் பிடித்ததை வாசிக்கவும்

நீங்கள் தான் அமைச்சர், அரசாங்கம், அரசன் எல்லாம்

தலைமையுரையாற்றி எங்கள் அன்பு அண்ணனின் அருமை நூல்களை அதிகாரப்பூர்வமாய்


வெளியிட இந்தச் சபையும் உங்களையே எதிர்ப்பார்க்கிறது YB

You might also like