You are on page 1of 6

77 லூக்கா 17: 21 - இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும்

சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்


இருக்கிறதே என்றார்

லூக்கா 8: 45 - அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார்.


எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே
கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து
நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக்
கேட்கிறீர் என்றார்கள்.

46 - அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்;


ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.

47 - அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு,


நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்டகாரணத்தையும்
உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு
அறிவித்தாள்.

48 - அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை


இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

லூக்கா 7 1 - அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய


காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.

2 - அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன்


வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.

3 - அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன்


வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி
யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.

4 - அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர்


இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.

5 - அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும்


கட்டினான் என்றார்கள்.

6 - அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச்


சமீபமானபோது நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில்
போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள்
பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;

7 - நான் உம்மிடத்தில் வரவும் என்னைப்பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு


வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

8 - நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற


சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை
வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால்
செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை
அனுப்பினான்.

9 - இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி,


தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும்
நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார்.

10 - அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த


வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.

மத்தேயு 19 :18 - அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு


இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு
செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக;

24 - மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில்


பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது
எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

6: 22 - கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால்,


உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

மத்தேயு 25 :35 - பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்;


தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச்
சேர்த்துக்கொண்டீர்கள்;

40 - அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான


இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்
என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
மத்தேயு 5 :13 - நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது
சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும்,
மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.

14 - நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற


பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.

17 - நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு


வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல,
நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

1 யோவான் 1 – 1 John 1
1 - ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே
கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே
தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு
அறிவிக்கிறோம்.

1 கொரிந்தியர் 6: 19 - உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில்


தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள்
உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

யாத்திராகமம் 33 Exodus
20 - நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு
உயிரோடிருக்கக் கூடாது என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 – Acts 17:


27 - கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத்
தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும்
தூரமானவரல்லவே.

28 - ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்;


அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று
சொல்லியிருக்கிறார்கள்.

https://hindumathambhagavadgita.blogspot.com/search?q=2.21

ஸ்ரீமத் பகவத்கீதை Chapter 5


5.13 உடலை அடக்கியவன், எல்லா கர்மங்களையும் மனதால் விலக்கிவிட்டு ஒன்றும் செய்யாதவனாக

ஒன்பது துவாரங்களையுடைய உடலில் (கண் 2, நாசி 2,வாய் 1, காது 2,சிறுநீர் 1,மல துவாரம் 1) சுகமாக

இருக்கிறான்

5.21 வெளிவிஷயங்களில் பற்றில்லாதவன், தன்னில் அந்த சுகத்தை அடைகிறான். அவன்

பிரம்மசமாதியில் நிலைபெற்றவன்.அழியாத சுகத்தை அடைகிறான்


-
5.22 குந்தியின் மைந்தா, எவை உண்மையில் இந்திரியவிஷயங்களில்(கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்)

தோன்றிய இன்பங்களோ, அவைகள்தான் துன்பத்திற்கு காரணமானவைகள். தோற்றமும் முடிவும்

உள்ள அவைகளில் ஞானி இன்புறுவதில்லை

2.21 பார்த்தா, யார் இதை

அழியாததாகவும்,மாறுபடாததாகவும்,பிறவாததாகவும்,

குறையாததாகவும் அறிகிறானோ அந்த மனிதன் எப்படி

யாரை கொல்வான், யாரை கொல்ல சொல்வான்.

-
2.22 மனிதன் எப்படி பழைய உடைகளை விட்டுவிட்டு

புதிய உடைகளை அணிந்துகொள்கிறானோ, அவ்வாறே

தேகத்தில் இருப்பவன் இறந்துபோன உடல்களை

விட்டுவிட்டு புதிய உடல்களை அடைகிறது

2.47 கர்மம் செய்யவே உனக்கு அதிகாரம்

கொடுக்கப்பட்டுள்ளது. ஒருபோதும் கர்ம பலன்களில்

அதிகாரம் செலுத்தாதே. கர்ம பலன்களை உண்டு


பண்ணுபவனாகவும் இருக்காதே. கர்மம் செய்யாமலும்

வெறுமனே இருக்காதே

The Mother's Gaze


ஸ்ரீ அன்னையின் பார்வை

என் கண்ணின் உள்ளே ஆழமாக ஒருமுகப்படு.

என் குழந்தாய், என்னுடைய கண்களின் உள்ளே ஆழமாக உன்னால் ஒருமுகப்பட்ட முடிந்தால், நீ அறிந்து
கொள்ள விரும்பியவையும், புரிந்து கொள்ள விரும்பிய வையும், நீ உய்த்துணர நினைத்தவையும்
அனைத்துமே உனக்குக் கைகூடும். மிகத் தீவிரமான ஒருமுகப் படுதலும், உன்னுடைய கண்களிலிருந்து
வெளிப்படும் ஆர்வத்தின் வலிமையும் போதும், எவை குறித்து நீ ஆர்வமுறுகிறாயோ, அவை
அனைத்தும், உனக்கு அவசியமானவை அனைத்தும் கிட்டும். இந்த உலகம் முழுவதையும், என் கண்களில்
நீ காணலாம். இந்த பூமியிலும், சொர்க்கத்திலும் எழில்மிக்கதாய் உள்ள எல்லாவற்றையும் என் கண்களின்
ஊடே நீ காணலாம்.
இந்த உலகின் அற்புதங்களை எல்லாம் தேடி நீ இங்குமங்கும் அலையத் தேவையில்லை அனைத்தும்
என்னுள்ளே அடக்கம்; அனைத்தும் என் வழியேதான் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. உன்
இதயத்தில் நான் உறைவதைக் காண முயற்சி செய் அப்போது, நீ அனைத்தையும் காண்பாய்; என்
கண்களில் எல்லாவற்றையும் காண்பாய்.

ஸ்ரீ அன்னை
தெய்வீகத் தீண்டுதல்
The Divine Touch

என் அன்புக் குழந்தைகளே ,

நீங்கள் அச்சம் கொள்ளக் கூடாது . உண்மையில் 99 % நோய்கள் உடலின் அடிமன உணர்வின்


அச்சத்தின் விளைவாகவே வருகின்றன .

என்னுடைய முதல் அறிவுரை கவலைப்படாதே என்பது தான் . நோயைப் பற்றி


எவ்வளவுக்கவ்வளவு அதிகமாக சிந்திக்கிறாயோ அவ்வளவுக்கவ்வளவு நீ அதில் ஒருமுனைப்படுகிறாய் .
எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அதிகம் அஞ்ச , அஞ்ச அது வளர்வதற்கு நீ அதிக இடமளிக்கிறாய் .
இதற்கு மாறாக நீ உன்னுடைய கவனத்தையும் , உன்னுடைய ஆர்வத்தையும் வேறிடத்திற்குத்
திருப்பினால் , நோய் குணமடையும் சாத்தியத்தை நீ அதிகரித்துக் கொள்கிறாய் .

நோய்க்கு அது என்னவாக இருந்தாலும் , காற்றையும் ,சூரியனையும் விட மேம்பட்ட நிவாரணம்


வேறில்லை என்பது இப்போது நன்கு அறியப்பட்டுள்ளது .

நீ உண்ணும் உணவைக் கட்டுப்படுத்தினால்


மட்டுமே ,உன்னிடம் வந்துள்ள நோயைக் குணப்படுத்தமுடியும் .

உடல் தான் குணமடைய லேண்டும் என்று முடிவு செய்தால் , அது குணமடைந்து விடும் .

நீங்கள் நூற்றுக்கணக்கான மருந்துகளை உட்கொண்டாலும் , உங்கள் உடல் நோயை வெற்றி கொள்ள


வேண்டும் என்ற மனஉறுதி உங்களிடம் இல்லாவிட்டால் , அவை உங்களை விட்டு அகலவே அகலாது
ஸ்ரீ அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை.

அருள் எப்பொழுதும் செயல்படக் காத்‌திருக்கிறது.

ஆனால் நீ அதைச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

அதன் செயலை எதிர்க்கக்கூடாது.

தேவையான ஒரே நிபந்தனை நம்பிக்கைதான். உன்னை எதாவது தாக்குவதாக நீ உணரும்போது ஸ்ரீ


அரவிந்தரையும் என்னையும் உதவிக்கு அழை.

உன்னுடைய அழைப்பு உண்மையானதாக இருந்தால் (அதாவது நீ உண்மையாகவே குணமடைய


விரும்பினால்) உன்னுடைய அழைப்பிற்கு பதில் கிடைக்கும்.

அருள் உன்னைக் குணப்படுத்தும்.

~ ஸ்ரீ அன்னை.💝

👆🏿👉🏿 இது நுரையீரலுக்கு எளிமைப்படுத்தப்பட்ட யோகா முத்ரா. உங்கள் பணிக்கு நீங்கள்


பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனில், உங்களுக்கு சளி அல்லது ஒவ்வாமை அல்லது
நுரையீரல் அறிகுறிகள் இருந்தால், ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் உங்கள் கைகளை இந்த நிலையில்
வைத்திருங்கள். உங்கள் குறியீட்டு, நடுத்தர மற்றும் மோதிர விரல்களின் உதவிக்குறிப்புகளை
அழுத்துவதன் மூலம் உங்கள் கட்டைவிரலின் அடிப்பகுதி, நடுத்தர மற்றும் நுனியில் அழுத்தத்தை
உணருவதே இந்த கை நிலை (முத்ரா) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில் இரு
கைகளையும் பிடித்துக் கொள்ளுங்கள் (அது எளிதானது என்றால் நீங்கள் ஒரு நேரத்தில் ஒன்றைச்
செய்யலாம்) ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடங்கள் சிறந்தது.

உங்களுக்கு அறிகுறிகள் இல்லையென்றால், இந்த முத்ரா உங்கள் நுரையீரலை வலுப்படுத்த உதவும்,


இப்போது அதைப் பயிற்சி செய்வது நீங்கள் அறிகுறிகளுடன் முடிவடைந்தால் பின்னர் சிறப்பாக
செயல்பட உதவும்.
நன்றி!

You might also like