You are on page 1of 3

முட்டையின் பயன்கள்

 முட்டையில் இருந்து கோழி வந்ததா..? இல்லை


கோழியிலிருந்து முட்டை வந்ததா..? என்கிற கேள்வி பல
நூற்றாண்டாக தொடர்கிறது. இதற்கு பலர் பலவித பதில்களை
வைத்துள்ளனர்.

 பல புதிர்களை தனக்குள் அடைந்து வைத்திருக்கும் ஒரு


அற்புதம் தான் இந்த முட்டை. அதிக ஊட்டச்சத்துக்கள்
நிறைந்த உணவுகளில் இந்த முட்டை முதன்மையான
இடத்தில் உள்ளது.

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி


சாப்பிடுவர். தினமும் 2 முட்டையை சாப்பிடுவதால் உங்களின்
உடலில் எப்படிப்பட்ட விளைவுகளும், மாற்றங்களும்
ஏற்படும்னு தெரியுமா..?

 சைவத்திலும் அசைவத்திலும் சேராத இந்த முட்டைக்கென்று


தனித்துவம் உள்ளது. இதனை விரும்பி சாப்பிடுபவர்களை
"Eggetarian" என்று அழைப்பர்.

 ஏன் தினமும் 2 முட்டை சாப்பிட வேண்டும் என்கிற


கேள்விக்கு பதில், இதில் இருக்க கூடிய அளவற்ற
ஊட்டச்சத்துக்கள் தான். அவை, வைட்டமின் எ, கால்சியம்,
மெக்னீசியம், பாஸ்பரஸ், கொலஸ்ட்ரால், வைட்டமின் டி,
சோடியம் போன்றவைகள் தான்.
 தினமும் 2 முட்டை சாப்பிட்டால் பல மாற்றங்கள் உடலில்
ஏற்படும். புரதசத்து மிக எளிமையாக இதில் கிடைப்பதால்
உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வேக வைத்த
ஒரு முட்டையில் 85 கலோரிகளும், 7 கிராம் புரதமும்
உள்ளன.

 முட்டையின் மஞ்சள் கருவில் choline என்கிற அமினோ


அமிலங்கள் உள்ளன. இவை ஞாபக சக்தியை அதிகரிக்க
பெரிதும் உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின் படி முட்டையை
சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் பலமடங்கு
உயர்வதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தினமும் 2
முட்டை சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்

 அத்துடன், இவற்றில் உள்ள Biotin மற்றும் vitamin B12 முடியை


வலிமையாக வைத்து கொள்ளும். இதனால் முடி உதிர்வு
பிரச்சினை உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது.

 வைட்டமின் டி முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. எனவே,


இவை எலும்புகளுக்கு வலிமையை தரவல்லது. அதாவது,
கால்சியமை எலும்புகளுக்கு அதிகமாக எடுத்து கொடுக்க
வைட்டமின் டி உதவுகிறதாம். இதனால் உங்கள் பற்கள்
மற்றும் எலும்புகள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கும்.

 முட்டையில் உள்ள Choline என்கிற அமினோ அமிலம்


புற்றுநோய் வராமல் தடுக்கிறதாம்.

 தினமும் 2 முட்டை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்


என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக காலை உணவில்
இதனை சேர்த்து கொண்டால் மிக விரைவிலே உடல் எடை
பிரச்சினை தீர்ந்து விடும்.

 ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த் முட்டையில்


இருப்பதால் இதய பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கிறது.
எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு முட்டையில்
உள்ள செலினியம் அதிக ஆற்றலை தருவதாக
ஆய்வறிக்கைகள் சொல்கிறது.

 முட்டையில் லுடீன் என்கிற மூல பொருள் நிறைந்துள்ளதால்


கண்களுக்கு அதிக வலிமையை தருகிறது. குறிப்பாக தினமும்
2 முட்டை சாப்பிடுவதால் கண் பார்வை அதிக
கூர்மையாகவும், தெளிவாகவும் இருக்கும். மேலும், சூரிய
கதிர்களில் இருந்து இவை நம்மை காக்கவும் செய்கிறது.

You might also like