You are on page 1of 6

(5.

28) நிமிடங்கள்

தோட்ட வரலாற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஒன்றுள்ளது. மிட்லன்ஸ்


தோட்டத்தில்தான் முதன்முறையாக காடுகள் அழிக்கப்பட்டு முறையாக இரப்ப
மரங்கள் நடப்பட்டன. சஞ்சிக்கூலிகளாக வந்த தொழிலாளர்கள் வைத்து பெரும்
காடுகளை அழித்து ரப்பர் மரங்களை பயிரிட்டார்கள். மிட்லன்ஸில் பார்த்தோமென்றால்
பலவிதமான ரப்பர் மரங்கள் நடப்பட்டன. இந்த காடுகளை அழிக்க பெரும்பாலும்
அழைத்துவரப்பட்டவர்கள் தமிழர்கள்தான். செங்கல்பட்டு திண்டிவனம் காஞ்சிபுரம்
இந்த ஊர் கிராமங்களில் இருந்துதான் அதிகமானோர் வரவழைக்கப்பட்டார்கள்.
பலருக்கு ஆசை வார்த்தைகள் காட்டியே இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இதற்கு
அந்த ஊரில் உள்ளவர்களில் சிலரும் உடந்தை என்பதுதான் சோகம்.

ஆசை வார்த்தைகளை நம்பி பல கனவுகளுடன் இங்கு வந்து பார்த்தவர்களுக்கு


பேரதிர்ச்சி. வெறும் அடர்ந்த காட்டுப்பகுதிதான் அவர்கள் முன் தெரிந்தது. சரியான
உணவுகள் இல்லை. சரியான குடியிருப்பு என எதுவுமில்லை. வெறும் சாக்கு பைகள்
மட்டுமே அவர்களின் குளிருக்கும் வெய்யிலுக்கும் கொஞ்சம் பாதுகாப்பாக இருந்தது.
அந்த சாக்கு பைகளை வைத்துதான் தங்களால் கட்ட முடிந்த சிறு சிறு
கொட்டகைகளுக்கு கூரை போடார்கள். அங்கிருந்துதான் காடுகளை அழிக்க
அவர்கள் ஆரம்பித்திருந்தார்கள்.

காடுகளை அழிக்கின்றவர்களும் அந்த காடுகளாலேயே அழியவும் செய்தார்கள்.


மலேரியா காய்ச்சலில் சில இறந்தார்கள். சுத்தமான குடிநீர் இல்லாமல் சிலர்
இறந்தார்கள். வாந்தி வயிற்றுப்போக்காள் சிலர் இறந்தார்கள்.

இன்னும் சொல்வதென்றால் மிட்லன்ஸ் தோட்டத்தை அழிக்க புறப்பட்ட கப்பலில்


வந்தவர்களின் பாதிக்கும் அதிகமானவர்கள் இறந்தார்கள் எனவும் ஒரு குறிப்பு
சொல்லப்படுகிறது. அதைவிட துயரம், இறந்தவர்களை முறையாக புதைக்கவோ
எரிக்கவோ செய்யாமல் ஆங்காங்கே வீசியெறிந்தபடியும் அரைகுரையாக மண்ணைப்
போட்டு மூடிய படியும் செய்ததுதான். எது நடந்தாலும் காடுகளை அழிக்கும் வேலை
மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இவற்றுக்கு மிகச்சரியான ஆதாரங்கள்
இல்லாவிட்டாலும் செவிவழி செய்தியாக இன்றளவு வயதானவர்களால் இது
சொல்லப்படுகிறது.

பல மரணங்களை சந்தித்த பின்னரே மிச்சமுள்ளவர்களுக்கு முறையாக வீடுகள் கட்டி


கொடுக்கப்பட்டன. அதன் பிறகே இங்கு இரப்பர் தோட்டம் பயிரிடப்பட்டது. பெரிய
தொழிற்சாலைகளை நிறுவினார்கள்.

காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஒரு பகுதி வேலையும் (சிப்ட்) , பிற்பகல் 3
மணி முதன் இரவ் 11 மணிவரை இன்னொரு பகுதியாகவும் வேலை நேரத்தை
வைத்திருந்தார்கள்.

பல இரப்பர் தோட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இரப்பர் பால்கள் இங்குள்ள


தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு பதப்படுத்தப்படும். அதன் பிறகு பல
படிநிலைகள் இருந்தது. எல்லாம் முடிந்தபின் இந்த பிட்லன்ஸ் தோட்டத்திலிருந்தே
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. முக்கியமாக வாகனங்களில்
சக்கரங்களுக்கு (டயர்) இந்த இரப்பர் பால்கள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டன.
இங்கிருந்து போர்கிள்ளான் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து
கப்பல் வழியாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

காடுகளை அழித்து பால் மரங்களை பயிரிட்டது போக பால் மரங்களை பாதுகாப்பாக


வளர்த்தார்கள். அதிகிருந்து சில பால்மரம் சீவும் வேலைக்கு சென்றார்கள். பால் மரம்
சீவுதலில் திறமை இல்லாதவர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு வெளிகாட்டு
வேலைகள் கொடுக்கப்பட்டன.1950-1960 காலக்கட்டத்தில் இந்த மிட்லன்ஸ்
தோட்டத்தில் செம்பனை மரங்கள் பற்றி யாருக்கு பரிட்ச்சயம் இல்லை. இரப்பர் மரங்களே
கோலோட்ச்சிய காலகட்டம் அவை.

1.59 நிமிடங்கள்

மிட்லன்ஸ் தோட்டத்திற்கு இந்தப் பெயரை வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான்.


இப்போது அதனை கிள்ளான் புக்கிட் திங்கி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதோடு இந்தத் தோட்டம் இப்போது வீடமைப்பாக மாறியிருக்கிறது. மிட்லன்ஸ்
தோட்டம் இன்று செக்‌ஷன் 7 எனவும், செக்‌ஷன் 16 எனவும் அறியப்படுவது போல
ஹைலென்ஸ் என்பது இப்போது புக்கிட் திங்கி எனவும் பார்க்லென்ஸ் எனவும் பெயர்
மாற்றம் கண்டு பொதுவாக அறியப்படுகிறது.

ஹைலென்ஸில் கூட அந்தக் காலக்கட்டத்தில் சுற்றியிருந்த ஹைலென்ஸ் தோட்டம்


சுங்கை ரெங்கம் தோட்டம், இவையெல்லாம் 2 டிவிஷனாக இருந்தது. அதே போல புக்கிட்
ஜெலெத்தோங்கில் எட்டாம் நம்பர் என்று ஒரு பகுதி இருந்தது. பாசாலை என என
சொல்லுவார்கள் . பாசாலை என்றால் ரப்பர் டிவிஷன். ரசாக் தோட்டம் புக்கிட் சுபாங்
தோட்டம், ஆர்.ஆர்.ஐ தோட்டம் , எல்மேனியா தோட்டம், ஈபோர் தோட்டம், சீபில்ட்
தோட்டம், கேஸ்டபில் தோட்டம் போன்ற தோட்டங்களில் உள்ள இரப்பர் பால்கள் மிட்லன்ஸ்
தோட்டத்திற்குத்தான் கொண்டுவரப்படும். இங்கிருந்துதான் பதப்படுத்தும் வேளை
முடிந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும்.

1.12 நிமிடங்கள்

மிட்லன்ஸ் தோட்டத்திற்கு இன்னொரு பொயரும் இருக்கிறது. முன்பு இதனை ஆயர்


கூனிங் எனவும் சொல்லுவார்கள். இந்தத் தோட்டத்தின் நடுவில் ஆறு போன்ற பெரியா
கால்வாய் இருந்தது. புக்கிட் செராக்கா காட்டுப்பகுதியில் இருந்து தாமான் ரஸ்னா
வழியான புக்கிட் கூடா என்ற இடத்திற்கு சென்று பின்னார் கிள்ளான் ஆற்றில்
சேர்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தக் கால்வாய் தண்ணீரைத்தான் குடித்து,
பலரும் வாந்தி பேதிக்கு ஆட்பட்டு அவதிப்பட்டார்கள். அந்தக் காலக்கட்டத்தில்தான்
இந்த இடத்தில் கொயினா ! என்ற செடியை நட்டார்கள். இச்செடி மலேரியாவிற்கு
நல்லதொரு மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அந்தச் செடியைப் பிடுங்கி அதன்
கிழங்கை எடுத்து கால்வாயில் கழுவுவார்கள். அப்போது அந்தக் கால்வாய் முழுக்க
சகதியாகி மஞ்சள் நிறத்தில் இருக்கும். மலாய் மொழியில் ஆயர் என்றால் தண்ணீர்,
கூனிங் என்றால் மஞ்சள். அதுதான் மஞ்சள் தண்ணி தோடம் என்றதிலிருந்து மலாய்
மொழியில் ஆயர் கூனிங் என்று பரவாலக அழைக்கப்பட்டுவிட்டது.

2.16 – இன்றளவும் மறக்க முடியாத சம்பவமாகவும் வரலாறாகவும் இருப்பது; 1941 நடந்த


கிள்ளான் தொழிலாளர்கள் போராட்டம். மிட்லன்ஸில்தான் இப்போராட்டம்
முதலாவதாக அரகேறியது. இதற்கு பின்னணியில் இரண்டு நபர்களைக்
குறிப்பிடுகின்றனர். ஒருவர் வெள்ளையன் இன்னொருவர் (பெயரைச் சொல்லவில்லை) .
இந்தப் போராட்டத்ததில் நோக்கம், அடிப்படை சம்பளம், தொழிலாளர் உரிமை
அவர்களுக்காக விடு வசதிகளுக்கு குரல் கொடுப்பதாகும். சாதாரணமா
தொடங்கினாலும் சீக்கிரமே காட்டுத்தீயாக பரவத்தொடங்கி பெரிய போராட்டமாக
மாறியது. இந்தப் போராட்டத்தில் குறைந்தது ஆறு பேர் வரை மரணித்தார்கள்.
ஆங்கிலேயர்கள், காவல் துறையினரைப் பயன்படுத்தி போராட்டத்தில்
ஈடுபட்டவர்களைச் சுட்டுவிட்டார்கள். மிக லாவகமாக இப்போராட்டத்தை கமுனிஷ்
போராட்டமாக திசை திருப்பிவிட்டார்கள். அதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட பலர்
நாடுகடத்தப்பட்டார்கள். அவர்களில் சிலர் இந்தியாவிற்கும் இன்னும் சிலர் எந்த
நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள் என்று தெரியாத சூழலே அப்போது இருந்தது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்குட்பட்ட நாடுகளுக்கு அவர்கள் அனுப்பப்பட்டதாக கேள்வி.
ஒரு சிலர் மட்டும் நாடுகடத்தப்படாமல் தூரத்திலிருக்கும் தோட்டங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டார்கள். காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் உண்டு;
அடைத்து வைக்கப்படவர்களும் உண்டு, துன்புறுத்தப்பட்டவர்களும் உண்டு,
சுடப்பட்டவர்களும் உண்டு. இதுதான் தோட்ட தொழிலாளிகள் முன்னெடுத்த முதல்
எழுச்சி போராட்டம் எனலாம். ஏறக்குறைய இருபதாயிரம் தொழிலாளர் வரை இந்தப்
போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

0.14- இந்தப் போராட்டத்திற்கு பிறகுதான் ஓரளவிற்கு சம்பள உயர்வு கிடைத்தது.


தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

0.47 – 1941/42 காலக்கட்டத்தில் இங்கு ஜப்பானியர்களின் ஆசி இருந்தது. மலாயாவை


ஜப்பானியர்கள் கைப்பற்றினார்கள். அப்போது தோட்டத்தொழிலாளர்கள் பல
இன்னல்களுக்கு ஆளானார்கள். உணவு தட்டுப்பாடு வருவாய் இல்லாமை என
அடிப்படியே இங்குள்ளவர்களுக்கு பெரிய பிரச்சனையாகிப்போனது. வெறும்
மரவள்ளிக்கிழங்குதான் உணவாக மாறியது. பலரின் உயிரைக் காப்பாற்றியது அதுதான்.
0.54 – ஜப்பானியர்களின் காலம் முடிந்து , 1948-ல் ஊரடங்கு (டருராட்) ஊரடங்கு
அறிவிக்கப்பட்டது . இதுவும் கூட தோட்டத்தொழிலாளர்களை பெரிதும் பாதிப்புக்கு
உள்ளாக்கியது. பயந்து பயந்து வேலைக்கு செல்லும்படியானது. ஏனெனில் அப்போது
பலருக்கும் கமுனிஷ் என்று முத்திரை குத்தப்பட்டு ஆபத்தான சூழலில் இருந்தார்கள்.
குறிப்பாக போராட்டவாதிகளை அவ்வாறு ,முத்திரை குத்தி பயத்தினுடாகவே வாழ
வைத்திருந்தார்கள். சந்தேகத்துக்குட்பட்டவர்களை கது செய்தார்கள்.
துன்புறுத்தினார்கள் சிலர் சுட்டும் கொல்லப்பட்டனர். இப்படி பல இன்னல்களையும்
குறிப்பாக சொல்வதென்றால் உயிரைக் கையில் பிடித்துகொண்டு தப்பித்து
வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

7.21 – 1960 களில் இன்னொரு போராட்டம் நடந்தது. அதற்கு அப்போது தலைமையேற்று


நடத்தியவர் தோட்டத் தொழிற்சங்க தலைவர் அமரர் ஹரிகிருஷ்ணன் அவர்கள். ஒரு
பெண்மணி வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மூன்று நாட்கள் போராட்டம்
நடந்தது. யாரும் வேலைக்குச் செல்லவில்லை. ஆட்கள் இல்லாததைக் கண்டு தோட்ட
நிர்வாகமே அதிர்ச்சிக்குள்ளானது. அதன் பிற்கு; வேலை நீக்கம் செய்யப்பட்ட
பெண்ணுக்கு வேலையைக் கொடுத்தார்கள். இருந்தாலும் தோட்ட நிர்வாகத்தினருக்கு
திருப்தி இல்லை. எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என எண்ணியிருந்தார்கள்.
அதற்காகவே தோட்ட தொழிற்சங்க தலைவர் ஏதாவது தவறு செய்வாரா என
காத்திருந்தார்கள். அதனை ஒரு காரணமாக வைத்து தலைவரை வேலையை விட்டு
நீக்கிவிட திட்டமிட்டிருந்தார்கள்.

அதற்கான செயல்களிலும் அவர்கள் இறங்கினார்கள். தோட்டத்திலுள்ளவர்களுக்கு


இடையில் சண்டையை ஏற்படுத்தினார்கள். தோட்டத் தொழிற்சங்க தலைவர் திரு
ஹரிகிருஷ்ணனுக்கும் அவரது மைத்துனருக்கும் சண்டை எழுந்தது. அதனை
முன்வைத்து தோட்டத் தொழிற்சங்க தலைவர் ஹரிகிருஷ்ணனை 24 மணிநேரத்தில்
வேலை நீக்கம் செய்தார்கள்.

அன்றைய காலக்கட்டத்தில் கிள்ளானில்தான் பெரிய காவல் நிலையம் இருந்தது.


இன்று ஷா அலாமில் பெரிய காவல் நிலையில் இருக்கிறது. அன்று; ஷா அலாம் என்ற
பெயரும் நகரமும்கூட இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப்போது கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, கோலாலும்புர்தான் பெரிய நகரங்களாக
இருந்தன. இன்றுவரை கிள்ளானில் அந்த காவல் நிலையம் இருக்கிறது. இப்போது
கிள்ளான் உத்தாரா , கிள்ளான் செலாத்தான் என பிரித்துவிட்டார்கள்.

அன்றைய காவல் நிலையத்தில் தலைமை காவல்துறை அதிகாரியாக இருந்தவர்


டத்தோ அழகேந்திரன் அவர்கள்.

தொழிற்சங்கமும் ரொம்பவும் வலுவான ஒன்றாக இருந்ததால்; அதற்கும்


கமுனிஸ்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்டார்கள். அதனை
துப்பறிவதற்காகத்தான் கான்ஸ்டெபல் வேலுவை அனுப்பினார்கள். அவர் ஒரு சாதாரண
தொழிலாளியாகவே அங்கு மாறுவேடத்தில் இருந்தார். அவர் ஒரு காவல் துறை
அதிகாரி என யாருக்கேம தெரியவில்லை.

1962-ல் ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்தது. சாலைக்கு எதிர்ப்புறத்தில் ஒரு அச்சாய்


கடை இருந்தது. அங்குதான் திருடர்கள் நுழைந்துவிட்டார்கள். அந்தக் கடை
இன்னமும் இருக்கிறது.

அச்சமயம் வேலு; ஸ்டோரில் வேலை செய்துகொண்டிருந்தார். ஏறக்குறை 50 மீட்டர்


தொலைவு இருக்கும். மத்தியான நேரம். திருடர்கள் அந்தக் கடையில் நுழைந்த போது,
அச்சாயின் மனைவி கூச்சல் போட்டிருக்கிறார். அந்தச் சத்தம் கேட்ட வேலு, உடனே
அங்கு ஓடியிருக்கிறார். அவர் வருவதைக் கண்டதும் திருடர்கள் பக்கத்திலிருந்த
காட்டுப்பகுதிக்கு ஓட; வேலுவும் அவர்களை துரத்தியபடி ஓடியிருக்கிறார்.
கொள்ளைக்காரர்கள் கையில் துப்பாக்கியை இருந்தது. ஒரு காட்டத்தில் அவர்கள்
வேலுவை சுடவும்; சுட்ட இடத்திலேயே வேலு இறந்துவிட்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு தோட்ட மக்களும் கூடியிருக்கிறார்கள். கையில் கிடைத்த


கத்தி கம்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறார்கள். வேலுவை சுட்ட
கொள்ளைக்காரர்களை ஊர் மக்களே பிடித்து அடித்து கொன்றுவிட்டார்கள்.

பிறகு மாவீரன் வேலுவுக்கு அச்சாய் அவர்கள் ஒரு கல்லறையைக் கட்டியுள்ளார்.


இப்போது ஐ-சிட்டி என்று அழைக்கப்படும் இடம் அன்று சுடுகாடாக இருந்தது. அங்கு
அவருக்கு அந்த கல்லறையை கட்டினார். இதில் துயரம் என்னவென்றால் மாவீரன்
வேலுவிற்கு குடும்பம் என யாரும் இருந்தார்களா இருக்கிறார்களா என யாருக்கும்
தெரியவில்லை. சிலர் சொல்கிறார்கள் அவரின் குடும்பத்தினர் நைகல் கார்டன்
தோட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு யாரிடமும் எந்த ஆதாரமும்
இல்லை. அவரின் வீர செயலுக்காக அப்போது இருபதாயிரம் வெள்ளி சண்மானமாக
அறிவிக்கப்பட்டது . ஆனால் அதனை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை.

பின்னர் அவருக்குத்தான் மலேசியாவில் உயரிய விருதாக கருதப்படும் எஸ்.பி விருது


வழங்கப்பட்டது. இவ்விருது துங்கு என்னும் விருதை விட விருதாக அப்போது
கருதப்பட்டது.

அவ்விடம் ஐ-சிட்டியாக உருமாற்றம் காணும் போது மாவீரன் வேலுவின் கல்லறையும்


இடிக்கப்பட்டது. உண்மையில் இது வருத்தப்படவேண்டிய ஒன்று. நாட்டுக்காக போராடி
உயிர் நீத்த ஒருவருக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கவேண்டாம். வரலாற்றிலும்
அவரைப் பற்றி குறிபிடப்படும்படியாக எதும் இல்லை.

அன்று நற்றமிழ் துணைவன் என்ற புத்தகத்தில் இவரைப் பற்றி நான் படித்திருக்கிறேன்.


அப்போது நான் படிவம் ஒன்று படித்துக்கொண்டிருந்தேன். இப்போது அந்தப் புத்தகம்
கூட இல்லை. குறிப்பாக சொல்லவேண்டுமெனில் கா.புனிதன் அவர்கள் சிரமம் எடுத்து
மலாய்க்கார ஆசிரியர் மூலமாக இணையத்தில் எழுதியுள்ளார். காண்ஸ்டபில் வடிவேலு
என நீங்கள் தேடினால் அது கிடைக்கும். அவரின் கதையை தவறாது வாசிக்க
வேண்டும். அந்தக் கட்டுரையில், வேலு இங்கு தங்கி துப்பறிந்த விபரங்கள் இல்லாமல்,
நேரடியாக காவல் துறையிலிருந்து இங்குன் வந்தவராக சொல்லப்பட்டிருக்கிறது.

You might also like