You are on page 1of 66

1. நான் காட்டிய வழியில் நானே !

ஒரு நாள் கதிர்வேல் , முதலாளியிடம் சென்று " ஐயா எனக்கு கொஞ்சம் பணம்

வேணுமுங்க" என்றான். உடனே முதலாளி கந்தன் ஒன்றும் பேசாமல் கதிர்வேலுக்கு ரூபாய்

இரண்டாயிரத்தைக் கொடுத்தான். பணத்தைப் பெற்றுக் கொண்டதும் கதிர்வேல் , ஐயா

உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேனோ என்று வருத்தப்பட்டுக்

கொண்டான். கந்தன் உடனே புன்முறுவல் செய்தான். " மிக்க நன்றி ஐயா! நான் சென்று

வருகிறேன் என்று கூறி கிளம்பினான்.

கதிர்வேல் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் புகுந்தான். " கண்ணம்மா .., கண்ணம்மா, வா இங்கே

இந்த பணத்தைப் போய் பெட்டியில் பத்திரமாய் வைத்துக் கொள். அத்துடன் நீ செலவு

போக மிச்சம் பிடித்திருப்பாயே அதனையும் சேர்த்து பெட்டியில் வை. திருச்சியில் படிக்கும்

இராமனுக்கும், சாந்திக்கும் இப்பணத்தையெல்லாம் அனுப்பி வைப்போம் " என்றான். "

கண்ணம்மாவோ என்னங்க நீங்க, செலவு போக ஏது பணம்? இன்று வரை மானமும்,

உயிரும் தான் மீதி இருக்கிறது அதை வேண்டுமானால், அனுப்பி வைப்போம் என்றாள்.

இருவரும் பேசிக் கொண்டிருக்க ஒருவன் ஐயா தபால் என்றான்; கடிதத்தைக் கையில்

வாங்கியதும் உடனே பிரித்துப் படித்தனர். அதில் இராமனும் சாந்தியும் தங்களுக்குப்

பணம் வேண்டுமென்று எழுதியிருந்தனர். நலமா என்று கூட கேட்கவில்லை. இதை எண்ணி

கதிரும் கண்ணம்மாவும் வருந்தினர். இருப்பினும் தங்கள் கடமை என்று தன் வேலையை

தொடர்ந்து செய்தனர்.
அடுத்த மாதக் கடிதம் வந்தது. அதில் தங்கள் கல்லூரியில் எல்லோரும் சுற்றுலா

செல்கின்றோம். அதற்காக ரூபாய் முவாயிரமும் , கொஞ்சம் துணிகளும் எங்களுக்கு

வேண்டும் என்று கேட்டிருந்தனர். " அவர்களின் நெஞ்சில் துணி கூட ஈரமே கிடையாதா? "

என்று கண்ணம்மா கோபம் கொண்டாள். கதிர்வேல் , " அடி போடி நம் பிள்ளைகள் தானடி

எல்லாம் அனுபவிக்க வேண்டிய வயசுடி அவர்களாவது அனுபவிக்கட்டும் ; நாம் உயிர்

வாழ்வதே இக் குழந்தைகளுக்காகத்தானே கண்ணம்மா புரிஞ்சுக்க என்ன? " சரிங்க இனி

நான் கோபப்பட மாட்டேன் நானும் வேலைக்குச் சென்று நம் பிள்ளைகளை உயர்ந்த

நிலைக்குக் கொண்டு செல்ல உதவட்டுமா ? " என்றாள். கதிர்வேல் மிகவும் மகிழ்ச்சி

அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தான். தன் மனைவியின் தூய எண்ணத்தை நினைத்தும்

தன்னுடன் வாழ்வில் சமபாகமாய் இருப்பதை நினைத்தும் , இவளுக்கு இதுவரை நாம்

எதுவும் வாங்கித் தரவில்லையே! என வருந்த ஆரம்பித்தான்.

மறுநாளே கதிர்வேலுவுடன் கண்ணம்மாவும் கந்தனின் வயலுக்குக் கூலி வேலை செய்ய

புறப்பட்டாள். மாலை வீடு திரும்பியதும் இருவரின் கூலியை எண்ணினர். ரூபாய் 60

இருந்தது மேலும் வேலை பார்த்தால் இன்னும் அதிகமாய் பணம் சம்பாதிக்கலாம் என

எண்ணி சிறிதும் தாமதிக்காமல் ஊரில் உள்ள இரவு உணவகத்தின் கதிர்வேல் மாவு

ஆட்டும் பணிக்கும் கண்ணம்மா எச்சில் தட்டுகளையும் மற்றும் ஏராளமான


பாத்திரங்களையும் தேய்த்து நள்ளிரவு மணி ஒன்றுக்கு வீடு திரும்பினார். இருவரின்

கூலியையும் எண்ணினர். ரூபாய் நூறு கிடைத்தது. கந்தன் கொடுத்த கூலி ரூபாய்

அறுபதையும் அத்துடன் , இந்த நூறு ரூபாயையும் சேர்த்து மகிழ்ந்தனர். " கண்ணம்மா நாம்

தினமும் ரூபாய் முப்பதை மட்டும் செலவு செய்து மீதமுள்ள நூற்று முப்பதை வங்கியில்

சேமிப்போம் " என்றான்.

ஒரு நாளைக்கு ரூபாய் நூற்று முப்பது வீதம், முப்பது நாளுக்கும் ரூபாய் 3900 கிடைக்கும்.

இராமனுக்கும் சாந்திக்கும் ரூபாய் 1500 வீதம் மூவாயிரத்தை செலவு செய்வோம். மீதி

ரூபாய் 900 செல்வத்தின் படிப்புக்கும் கண்மணியின் படிப்புக்கும் செலவு செய்வோம்

என்று மகிழ்ந்து கொண்டு வாழ்ந்தனர். மூன்றாவது கடிதம் வந்து விழுந்தது. வீட்டில்

கதிர்வேலுவும், கண்ணம்மாவும் இல்லை. செல்வம் மட்டுமே இருந்தான். அதில் இராமனும்,

சாந்தியும் கடிதத்தில் பெற்றோரிடம் கேட்ட வரிகள் செல்வத்தின் நெஞ்சைப்‌ பிளந்தன.

(வசதியாக வளர்க்க முடியவில்லையெனில் ஏன் பெற்றீர்கள்? ) அதைப் படித்த செல்வம்

தனது அண்ணனையும், அக்காவையும் எதிர்க்க வயது போதாததால் மரியாதை கருதியும்,

அன்பின் மிகுதியாலும் ஒரு மோசமான முடிவெடுத்தான்.

நான் ஒருவன் இங்கு இல்லையெனில், நமது அண்ணன் அக்கா இருவருக்கும் மாதம்

ரூபாய் 450 - ஆன தனது பங்கும் போய் சேரும் என்று எண்ணி வீட்டில் உத்திரத்தில்

தூக்குக் கயிறைக் கட்டி கயிறின் நுனியில் தலையை வைத்துக்கொண்டு தனது தாய்

தந்தையை நினைத்து வருந்தி கொண்டே கயிறை கழுத்தில் விட்டு இறுக்கிக் கொண்டான்.

இவ்வுலக வாழ்வை நீத்தான். வெளியில் இருந்து வந்த கண்மணி ஐயோ! அண்ணே !

அண்ணே! என்று அலறினாள். பின் அருகில் இருந்த மேசையில் இருக்கும் கடிதத்தையும்

படித்தாள். கண்ணம்மாவும் கதிர்வேலுவும் உள்ளே நுழைந்தனர். கண்ணில் அக்காட்சியைக்

கண்டதும் கடித செய்தியைக் கண்மணி சொன்னதும் நெஞ்சுவலி வந்து அங்கேயே மயங்கி

விழுந்தான்.

கண்ணமாவும் மகனை நினைத்து அழுவதா , இல்லை கணவனை கவனிப்பதா? என்று

தெரியாமல் நடுக்கூடத்தில் நலிந்து போய் நின்றாள் . கண்மணி அப்பாவை


மருத்துவமனைக்கு அழைத்துப் போனாள். அண்ணனுக்கும், அக்காவுக்கும் தந்தி

கொடுத்தாள்.அடுத்த அடுத்த சில மணி நேரத்தில் திருச்சியில் இருந்து தொலைபேசியில்

பேசினர்.அண்ணனும் அக்காவும் அவன் இவ்வாறு தவறான முடிவுக்கு போவான் என்று

தெரியாது இருப்பினும். வருந்துகிறோம். தற்சமயம் எங்களால் அங்கு வர இயலாது. எங்கள்

கல்லூரியில் கலை நிகழ்ச்சி உள்ளது என்று பொய் சொல்லி நடந்தவற்றிற்கு நாம்

காரணமாகி விடுவோமோ என்று வராமல் தங்கள் வேலையைப்‌பார்க்க ஆரம்பித்தனர்.

செல்வத்தின் இறுதிச் சடங்கை செய்யக்கூட எவரும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர்

செய்து முடித்தார். சிறிது நாட்கள் கழித்து கதிர்வேலு வீடு திரும்பினார். மூத்த மகனையும்

மகளையும் மறந்தே போயினர். ஆறாத் துயரத்தில் ஆறு, ஏழு ஆண்டைக் கழித்தனர்.

கண்மணியும் வளர்ந்து பெண்ணாகினாள். அவளின் வாழ்வை இனிமையாக்க கண்ணமாவும்,

கதிர்வேலுவும் கண்ணீரைத் துடைத்து விட்டு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்தனர்.

கண்மணியும் தாய் தந்தைக்கு இணங்க நடந்து கொண்டாள்.

மேற்கொண்டு நடக்க வேண்டிய வேலைக்கு திட்டமிட்ட கதிர்வேலுவும் முதலாளி கந்தன்

வீட்டிற்கு சென்றான். கந்தன் " உன் மகளை திருமணம் செய்து தர வேண்டுமானால்...."

என்று தகாத வார்த்தைகளைக் கூறி கதிர்வேலுவை ஆத்திரமடையச் செய்தான். கதிர்வேலு

கந்தனைத் தாக்கவே, இதனைப் பயன்படுத்தி கதிர்வேலுவை சிறையில் அடைக்க போலீசில்

புகார் செய்தான்.

மறுநாள் கண்மணியின் நிச்சயதார்த்தம் நடக்கும் வேலையில் போலீஸ் உள்ளே புகுந்து ,

கதிர்வேலுவை கைது செய்தனர்.ஏதும் பேசாமல் மாப்பிள்ளை வீட்டாரும் எழுந்து

போயினர். கண்மணியின் திருமணமும் நின்று போனது .மீண்டும் கண்ணீருடன்

கண்ணம்மாவும் கண்மணியும் வாழ்வை ஓட்டினர். கண்மணி குடும்பத்தைக் காக்க

வேலைக்குப் புறப்பட்டாள். கதிர்வேலுவும் சிறையில் இருந்து வீடு திரும்பினான்.

வேலை முடித்து வீடு வந்த கண்மணி அப்பாவை பார்த்து ஆறுதல் வார்த்தைகளைக்

கூறிவிட்டு , இனி எனக்கு இப்பொழுது திருமணம் எல்லாம் வேண்டாம் .நானே சம்பாதித்து

உங்களையும் காப்பாற்றி என்னையும் காத்துக் கொள்ளும் அளவுக்கு நான் உயர்ந்த பின்பு


சொல்கிறேன் .பின் நீங்களே எனக்கு ஒரு ஏழை மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம்

முடித்து வையுங்கள் என்று கூறினாள். இரவு உணவு அருந்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு

மகிழ்ச்சியுடன் உறங்கினர் .

கதிர்வேலுவுக்கும், கண்ணம்மாவுக்கும் வேலை ஏதுமின்றி இருந்தனர். ஆதலால் வீட்டிலேயே

அவர்கள் இருவரும் கைவேலைகளைச் செய்து பணம் சேமித்தனர். திடீரென புயல் ஒன்று

உருவானது. கொட்டும் மழை காதுகளைப் பிளக்கும் இடியோசை .. மகளோ வீடு

திரும்பவில்லை. நேரம் பத்தைக் கடந்தது .கண்மணி இடிக்கும் மழைக்கும் பயந்து ஒரு

மண்டபத்தின் கீழ் நின்று இருந்தாள். அவ்வழியே வந்த கந்தன் கண்மணியைக் கண்டதும்

தனது இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தினான்.

தனியே மாட்டிக்கொண்ட கண்மணி செய்வதறியாது கூச்சலிட்டாள். கந்தன் கண்மணியை

சீர்குலைத்தான். கண்மணி தனது கற்பை இழந்து மயங்கி மண்டபத்திலேயே கிடந்தாள்.

விடியற்காலையில் விழிப்புற்றவுடன் வீடு திரும்பினாள். தாய், தந்தை உறங்காமல்

விழித்திருந்தனர். நடந்ததைக் கூறினாள். கதிர்வேல் கண்ணம்மா இருவரும் மேலும் மேலும்

எழும் சோகத்தை நினைத்து அரளி விதையை அரைக்கலாயினர்.

இதைக் கண்மணி தனது தாய் தந்தையை மட்டுமல்லாது பிள்ளைகளால் கைவிடப்பட்ட

அனைவரையுமே தன் தாய் தந்தை போல எண்ணி பணிவுடன் அவர்களைக் காப்பாற்றி

இந்நாட்டில் கண்ணாய் கருமணியாய் ஒளிபெற்று வாழத் தொடங்கினாள். கங்கை யமுனை

இவற்றை விட நீயே புண்ணியமானவள் என்ற பாராட்டைப் பெற்று சிறப்புற்றாள்.

அன்று முதல் கரிசல்பட்டியும் கலை கட்டியது. கந்தனும் தன் தவறு உணர்ந்து கண்மணியை

மணந்தான். வாழ்வும் வளமானது. தீவினையாவும் தொலைந்தது. இன்று வாழ்த்தியவுடன்

மகளே ! என்று குரல் கேட்டது .திடுக்கிட்டு அனைவரும் திரும்பினர். மிகவும் வேகமாக ஒரு

வயதான பெண் உள்ளே நுழைந்து ஐயா! அம்மா , மகனே! என்னை தயவு செய்து

மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டாள்.

அவளது வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.


எல்லோரும் என்ன .. யார் நீ என்றெல்லாம் கேட்டனர். சற்று நேர அமைதிக்குப் பிறகு தன்

சோகக்கதையைக் கூறத் தொடங்கினாள். இதே ஊரில் ஒரு வஞ்சகனால் கெடுக்கப்பட்டேன்..

அதன் மூலமே இப்பெண்ணைப் பெற்றேன்.சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு குப்பைத்

தொட்டி அருகே என் மகளை வைத்து விட்டு விட்டுச் செல்லும் போது அழுகைச் சத்தம்

கேட்டதும் திரும்பினேன்.

கதிர்வேல் குழந்தையை எடுத்துச் செல்வதைப் பார்த்தேன்.அச்சூழ்நிலையில் குழந்தையைத்

தவிர்ப்பதே என் நோக்கம் ஆனதால் அப்படியே சென்று விட்டேன்.காலம் கடந்தாலும் என்

மகளைக் காண வந்தேன். அவளே தொடர்ந்து இது உண்மை என்று நம்புங்கள் என்றதும்

கதிர்வேலுவும் கண்ணம்மாவும் அதிர்ந்தனர்.

பின்னர் கண்மணியை அவளைப் பெற்ற தாயிடமே ஒப்படைப்பதற்காக அவளிடம்

பேசினர். ஆனால் கண்மணி அதை மறுத்து விட்டாள். என்னை வளர்த்ததால் நான்

உங்களுடன் தான் இருப்பேன் என்று கூறி தன்னை விட்டுச் சென்ற என் தாயையும்

நம்முடன் இணைத்துக் கொள்வோம் என்று கதிர்வேல் கண்ணம்மாவிடம் சொல்லி

சேர்த்துக்கொண்டு தன் வாழ்வை மேலும் வளம் ஆக்கிக் கொண்டாள்.நெறி பிறழாமல்

நேர்மையாக ஒரு முடிவை எடுத்தாள்.


2. உழைப்பவர் உயிர் வாழ்வர்

கல்யாணி சீக்கிரமா கிளம்பி வரியா இருக்குதா உனக்கு நாம இன்னும் பேருந்தில் வேறு

ஒரு மணி நேரம் போகணும் இல்ல. நீ வரதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சு போயிரும்டி.

கல்யாண பெண் அங்கு இருக்கா. நீ இல்ல.

நமக்கு பேரன் பேத்திங்க இருக்காங்க. நினைப்பு வச்சுக்க. சரி.. சரி.. கிளம்பிட்டேன்.

சும்மா கத்திட்டு இருக்காதீங்க தாத்தா நானும் வரேன்... என்னங்க அவனையும் கூட்டிட்டு

போவோமா சரி வாடி நேரமாகுதுங்குறேன்.( திருமணத்திற்கு சென்று விட்டனர்).

தாத்தா எனக்கு நீங்க ஒரு பஞ்சுமிட்டாய் வாங்கி தாங்க தாத்தா ஏன்டா என்னை போட்டு

படுத்துற சரி வாசலுக்கு வா என்னப்பா ! ஒன்னு எவ்வளவு? ஐந்து ரூபாய் பெரியவரே! சரி

கொடுப்பா இந்தாங்க ஐயா டேய்! இங்கேயே தின்னுடா இன்னும் நிறைய குழந்தைகள்

இருக்காங்க .
சரி தாத்தா பார்க்கத்தான் நல்லா இருக்கியே! ஏன் இப்படி கொஞ்சம் மிட்டாய் வித்து

கடினப்படுற. படிக்கலையா? இல்லிங்க ஐயா! நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை

படித்தேன்.

பின்னால தொலைதூரக்கல்வி ல ஆங்கில இலக்கியம் படிச்சேன் . அப்ப எனக்கு என்று

யாருமே இல்லை அந்த நேரம் ஒரு முறை உணவகத்தில் வேலை பார்த்துவிட்டு வர

வழியில் ஒரு பெண் தண்டவாளத்தில் படுத்து இருந்தா. அதை பார்த்ததும் பதறிப் போய்

அந்த பெண்ணைத் தொட்டு த் தூக்கி விட்டேன்.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த போலீஸ்காரர் நாங்க தப்பானவர்கள் என்று நினைத்து

எவ்வளவோ சொல்லியும் கேட்காம எங்களை ஒரு நாள் முழுவதும் சிறையில் வைத்து

கொடுமை பண்ணிட்டாங்க. அப்புறம் விடுதலை ஆனதுக்கு அப்புறம் அந்த பெண்ணிடம்

நான் சொன்னேன்..

நீ செத்திருந்தாலும் இந்த அவமானம் இருந்திருக்காது. என்னால தான் இப்படி ..என்னை

மன்னித்துவிடு! என்றேன். உடனே அவள் இல்லை நான் சாகப் பார்த்த நேரத்துல எனக்காக

ஒரு உயிர் உலகத்துல இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன். நான் ஒரு அனாதை எனக்கு மார்பகப்

புற்றுநோய் இருக்கு. என்னை காப்பாற்ற யாரும் இல்லை.

அதான் சாகலாம்னா நீங்க என்னை காப்பாத்திட்டீங்க. இல்லமா! எல்லாத்துக்கும் சாவு முடிவு

இல்லை. இப்படியே பேசிட்டு இருந்தோம் .ஐயா இப்பதான் நான் கொஞ்சம் யோசிச்சேன்.

அந்த பெண்ணை நானே திருமணம் செய்ய எண்ணினேன். திருமணமும் கடவுள்

புண்ணியத்திலும் முடிஞ்சது வருடம் பன்னிரண்டு ஓடிடுச்சு.. பிள்ளை இல்ல . அப்புறம்


எனக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். இப்ப அவங்க திருச்சியில் உள்ள கான்வென்ட்ல

பெரியவள் நான்காவதும் , சிறியவள் ஒன்றாவதும் படிக்கிறாள். இத்தனை ஆண்டுகளுக்குப்

பின் இப்ப என் மனைவிக்கு புற்றுநோய் அதிகமாயிற்று. ஆனால் அறுவை சிகிச்சை மூலம்

குணப்படுத்தலாம் என்று டாக்டர் சொல்றாங்க .அதான் வேற வேலை தேடாம இப்படியே

வாழ்க்கையே நல்லா நடத்துறேன்.

என்னப்பா நீ இவ்வளவு படிச்சிட்டு இப்படி அறிவு கெட்டத்தனமா இருக்க. நல்ல

வேலைக்குப் போய் இருக்கலாம். அவளையும் காப்பாற்றி இருக்கலாம். சரி அதான் இல்ல

கடன் வாங்கியாவது அவளுடைய உடம்பை குணப்படுத்திட்டு இனியாவது நல்ல

பொழப்பை தேடுப்பா.

நான் பாரு திருச்சியில் இருக்கின்ற ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு

பெற்றேன். அப்படி இருந்தும் என்னுடைய இரண்டு மகள்களுக்கும் ஒரு நல்ல விதத்துல

திருமணம் செய்யணும்னு ஏழு லட்சம் கடன் வாங்கி திருமணம் முடிச்சுட்டேன் .இப்ப

எனக்கு ஒரு கவலையும் இல்லை.

கடனை கூட முக்கால் பங்குக்கு அடச்சிட்டேன். இப்ப பேரன் பேத்தியில சந்தோசமா

இருக்கிறேன். வாழ்க்கை என்றால் இப்படி நகர்த்தணும்ப்பா. படிச்சவங்களா இருந்து நீங்க

பயப்படறது சரி இல்ல. சரிங்க ஐயா ஏழு லட்சம் கடன் வாங்கி நீங்க இன்னும் அதை

அடைக்கல இப்ப உங்க உயிர் போயிட்டா ,அது என்னவாகும் உங்கள் மனைவி நிலை

என்ன ஐயா!

இல்லை உங்கள் இரண்டு மாப்பிள்ளையும் உங்களுக்காக அந்த கடனை அடைத்து உங்க

மனைவிக்கு சோறு போடுவாங்களா?

தம்பி நீ கேட்கிறாயே நான் என் கடமையை செய்து விட்டேன். கடன் மட்டுமே மீதம்.

அப்படி ஏதும் நடந்தால் அவர்கள் பின் எழும் பிரச்சனைகளை பார்த்துக்கனும்பா. அந்த

கவலையெல்லாம் நாம் பட்டு, வாழும் பொழுது நம் கீழே இறங்கி போய் நம்ம

வாழ்க்கையை அழிச்சுக்கக் கூடாது. அதான் என் விருப்பம்.


வயசுல பெரியவரா இருக்கீங்க இருந்தாலும் ஒன்று சொல்லனும் ஐயா! மனிதனா பிறந்த

நாம வாழ்ந்து முடித்தாலும், மற்றவரை வாழ வைக்கும் படியாக வாழனும் ஐயா! எனக்கு

அந்த வாழ்க்கை தான் பிடிக்கும் .கடன் வாங்குவது மிகவும் தப்பு ஐயா ! உழைத்து ஒத்த

ரூபாய் சம்பாதித்தாலும் போதும், நாளாகும் இலட்சியங்கள் நிறைவேற! ஆனால் கௌரவம்

மிஞ்சும்.

இறந்தும் வாழ்வோம்! என் மனைவியையும் பிள்ளைகளையும் காக்க நான் இந்த ஒரு

தொழிலை மட்டும் செய்யலீங்க.நீங்க இதுல வர பணத்தை வைத்து ஒரு இரவு நேர

நடமாடும் உணவகம் வைத்து இருக்கேன் .காலைல இருந்து 11 மணி வரை காலை டிபன்

மற்றும் புட்டு போன்றவைகள் வீடு வீடாக போய் விற்பனை செய்கிறேன். இதன் மூலம்

எனக்கு ஒரு நாளைக்கு செலவுகள் போக மீதம் ச

500 மிச்சம் இருக்கும். அதையும் நான் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்கிறேன்.

வருடத்திற்கு 1,80,000 வரை வருகிறது. பின்னும் அவளுக்காக இரண்டு லட்சம்

தேவைப்படுகிறது.

அது இன்னும் சில நாட்களில் கிடைக்கும். ஆனால் கடன் மட்டும் வாங்க மாட்டேன் ஐயா!

ஐய்யோ! கொஞ்சம் தள்ளுங்க ஐயா! உங்க கிட்ட பேசுனதுல என் அடுத்த வேலையை

மறந்துட்டேன். போங்கய்யா போய் கடன் இல்லாமல் வாழ வழிய‌ பாருங்க. நான்

கிளம்புறேன் பஞ்சு மிட்டாய்... பஞ்சுமிட்டாய் ....

பாப்பா தின்னா நாக்கு சிவக்கும்.... மனசு பூரா இனிக்கும்... ஓடி வா... ஓடிவா.....
3. புனர் ஜென்மம்

காலை வணக்கம் சீதா! இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் மறந்துட்டியா என்ன? இந்தா

என்னோட பரிசு. எப்படிங்க பிறந்தநாள் எல்லாம் கொண்டாடுறதுது. நமக்கு தான்

குழந்தையே இல்லையே என்னால எப்படி சந்தோஷப்பட முடியும் ஆமா எப்படி நீங்க

மட்டும் இவ்வளவு சுலபமா எடுத்துக்கிட்டு இருக்கீங்களோ என்ன பண்றது சீதா இது நம்ம

பூர்வ ஜென்ம பாவம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான் சரி சரி இன்னைக்கு

போய் அதெல்லாம் ஞாபகப்படுத்தாமல் முதல்ல குளிச்சிட்டு கோயிலுக்கு போகலாம்

அப்புறம் அப்படியே ஒரு அனாதை விடுதிக்குப் போய் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு

எல்லாம் இனிப்பு, துணிகள் , சாப்பாடு என இன்றைய பொழுதை கழிக்கலாம்.

சீக்கிரம் கிளம்பி வா! பத்து நிமிடத்துல. சரிங்க இதோ கிளம்பி வந்து விடுகிறேன் .( கொஞ்ச

நேரம் ஆனது ) சீதா இன்னும் கிளம்பலையா சீக்கிரம் கிளம்பி தெருமுனையில் இருக்கிற

பிள்ளையார் கோவிலில் இருக்கேன் நீயும் வந்திடு அப்படி என்ன அவசரம் இருங்க இதோ
வீட்டைப் பூட்ட வேண்டியதுதான் நானும் கிளம்பிட்டேன். ( இருவரும் கோவிலுக்குப்

போயினர் ).

சாமிய நல்லா வேண்டிக்க நம்மள மாதிரி இவ்வுலகத்துல யாருமே குழந்தை இல்லாம

இருக்கக் கூடாதுன்னு சரிங்க என்று பிரகாரத்தை சுற்றி வந்தாள் கோவில் நந்தவனத்தில்

ஒரு அழுகை சத்தம் கேட்டது. சீதா உடனே பதறி ஓடினாள். அருகே சென்றாள். பச்சிளம்

குழந்தை ஒன்று இருந்தது குழந்தையை எடுத்து அதை தன் கணவன் இராமனிடம்

காட்டினாள் இக்குழந்தையை ஏன் சீதா நாமே எடுத்து வளர்க்கக்கூடாது.

கொஞ்சம் யோசித்துப் பாரு இதுல யோசிக்க என்னங்க இருக்கு என் மனசு என்ன

நெனச்சிச்சோ அதை தான் உங்க மனசும் சொல்லி இருக்கு சரிங்க முதல்ல கோயில்

நிர்வாகியை சந்தித்து விஷயத்தை சொல்லிட்டு நாம குழந்தையை நம்ம வீட்டுக்கு

எடுத்துக்கிட்டு போகலாம் சரி சீதா நீ போய் காரில் உட்காரு நான் எல்லாத்தையும்

முடிச்சிட்டு வர்றேன் ( இராமன் காருக்கு திரும்பினான் குழந்தையும் )

கார் கிளம்பியது சீதா இராமனிடம் குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றி பேசி வந்தாள்

இப்பேச்சிலேயே குறியாய் இருந்தவன் காரை சரியாக ஓட்டாமல் எதிரே வந்த மணல் லாரி

மீது பயங்கரமாக மோதினான் சீதாவும் குழந்தையும் லேசான அடியுடன் தப்பித்து

விடுகின்றனர்.

சிறிது காலம் கழிந்தது குழந்தையிடம் அவள் நல்ல விதமாக அன்பு காட்ட

விரும்பவில்லை நாட்கள் பல கழிந்தன சிறுவன் சிவாவுக்கு வயது ஆறு ஆனது

பள்ளிப்பருவம் வந்தது ஆனாலும் சீதா சிவாவை பள்ளியில் சேர்க்க ஆர்வம்

காட்டவில்லை சிவாவின் மனதுக்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் பள்ளி

செல்கின்றனர் நான் மட்டும் போக முடியவில்லையே என்ற வருத்தம் மிகுதியாய்

காணப்பட்டது.

இதை அறிந்தும் சீதா கண்டுகொள்ளவில்லை இருப்பினும் சிவா சீதாவிடம்

அடம்பிடிக்கிறான் தொல்லை கொடுத்தான் மீண்டும் உன்னை ஏதாவது கோவிலிலேயே


அனாதையாக கொண்டு போய் விட்டு விடுவேன் என்றாள். அனாதை என்றால் என்ன?

என்று சிவாவுக்கு புரியவில்லை இருப்பினும் அவன் படிப்பதிலேயே தனது கவனத்தை

செலுத்தினான்.

அக்கம் பக்கத்தால் சீதாவை பயங்கரமாக விமர்சிக்க ஆரம்பித்தனர் அவமானம் தாங்காமல்

சிவாவைப் பள்ளியில் சேர்த்தாள்.

பள்ளியிலேயே முதல் மாணாக்கனாக தேர்வாகினான் பின் பத்தாம் வகுப்பில்

மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்களை பெற்று சாதனை புரிந்தான் ஊரே அவனைப்

பாராட்டியது பரிசுகளை வழங்கியது அப்படியே மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்து

அம்மாவிடம் இச்செய்தியை கூறினான். ஆனால், சீதா அவனது இதயத்தை புண்படுத்தும்

படியான அனாதை என்ற வார்த்தையை பயன்படுத்தினாள்.

இதை சிவா கேட்டு அதிர்ச்சியுற்றான் ஆறு வயதில் அம்மா சொன்னா அதே வார்த்தை

என்று திகைத்தான் உடனே இச்செய்தியைப் பற்றி அக்கம் பக்கம் வீடுகளில் கேட்டு ஒரு

வழியாய் உண்மையை அறிந்து கொண்டான் பின் வீடு திரும்பி சீதாவிடம் சென்று அம்மா

இனி உங்களுக்கு பாரம் வேண்டாம் என்னை பிடிக்கவில்லை என்றால் என்னை கொன்று

விடுங்கள் என்று கதறுகிறான்.

இதைக் கண்ட சீதாவுக்கு அப்பொழுதுதான் மனம் சற்று வேதனைப்பட்டது சிவா நீ

அழாதே இனி உன்னை திட்ட மாட்டேன் நீ என்றைக்கும் என் பிள்ளை தான் என்று

சொல்லி சீதாவின் மனம் துடித்தது ஆனால் அவள் சிவாவிடம் சென்று பேச தயங்கினாள்

சிவா உண்மை தெரிந்த சில தினங்களில் அவன் ஊரை விட்டே சென்று விடுகிறான் சீதா

அப்பொழுது தான் குழந்தைப் பாச வேதனையை அனுபவித்தாள்.

பின் சில மாதங்கள் கழிந்தும் சிவா வீடு திரும்பாததால் சீதா சிவாவை தேடி ஊர் ஊராக

தேடித்திரிந்தாள் வருடங்கள் பல ஓடின சிவா வேலையுடன் மனைவி பிள்ளை என


குடும்பஸ்தன் ஆகினான் ஆனால் வீடு வீடாக தேடி வந்த சீதா பிச்சை எடுக்கும் நிலைக்கு

வந்தாள்.

ஒரு நாள் சீதா இது தான் சிவாவின் வீடு என்று தெரியாமல் பிச்சை கேட்டு வெளியே

நின்றாள் உள்ளிருந்து வந்த சிவா பதறிப் போனான் ஐயோ அம்மா நீயா இந்த நிலைக்கு

இப்படி ஆளானாய் என்று அழுதான் உடனே சீதா இல்லை சிவா நான் உன்னை

புண்படுத்தினேன் அல்லவா அதான் என்று எனக்கு இந்த நிலை நீ தான் என்னை மன்னிக்க

வேண்டும் என்று கூறிக் கொண்டே சிவாவின் மடியில் விழுந்தாள் அப்படியே பட்டினியால்

பாசத்தால் உயிர் பிரிந்தது சிவா கதறினான் பின் தன்னால் தான் அம்மா இப்படி திண்டாடி

இறந்தால் என்று தனது வாழ்நாள் முழுவதுமாக வேதனை பட்டுக்கொண்டே வாழ்வைக்

கழித்தான்.
4. வந்ததும் போனது

செல்வபுரம் என்னும் ஊரில் குபேரன் அவனது மனைவி லட்சுமி இருவரும் வாழ்ந்து

வந்தனர் ஒரு நாள் குழாய் அடியில் என்னடி லட்சுமி உனக்கும் உன் புருஷனுக்கும்

ஏதாவது சண்டையா சண்டை எல்லாம் இல்லைங்க அம்மா ஏன் கேட்டீங்க இருவருக்கும்

திருமணமாகி நான்கு வருடம் ஆயிடுச்சு குழந்தை இல்லை என்று கேட்டேன் கடவுள்

இன்னும் கருணை காட்டலமா லட்சுமி நான் கேட்டேன் என்று தப்பா நினைக்காத உனக்கு

நிச்சயமா குழந்தை பிறக்கும் பாரேன் சரி நான் கிளம்புகிறேன்.

வருத்தத்துடன் வீடு திரும்பிய லட்சுமி குபேரனிடம் போய் என்னங்க நமக்கு குழந்தை

இல்லைன்னு ஊரில் எல்லாருமே கேட்டுக்கொண்டே இருக்காங்க சில பேர் குத்தலாவும்

பேசுறாங்க என்னால தாங்கிக்க முடியல நாம வேண்டாத சாமி இல்லைங்க ஆனால் தெய்வம்

நம்ம குறைதீர்க்கவே இல்லை பார்த்தீர்களா என்றாள் குபேரன் கடவுளுக்குத் தெரியும் நமக்கு

எப்ப குழந்தை தரனும்னு நீ வருத்தப்படாதே இப்பவே நாம ரொம்ப கஷ்டப்படறோம் அதனால

தான் கடவுள் நமக்கு குழந்தை தருவதை தள்ளிப் போட்டிருக்காரு வருத்தப்படாமல் வேலையை

பாரு நான் வேலைக்கு போயிட்டு வந்துடறேன்.

மாலை வீடு திரும்பினான் குபேரன்…..


லட்சுமி இந்த பத்து ரூபாய் இன்றைய கூலி என்று கொடுத்துவிட்டு முகம் கை கால் கழுவி

விட்டு சாப்பிட அமர்ந்தான்‌லட்சுமி செய்வது அறியாது விழித்தாள் .

என்னடி பாக்குற சோறு போடு என்றான்…

என்னங்க நீங்க நேற்று தந்த ஐந்து ரூபாய் காசு காலை சாப்பாட்டோடு தீர்ந்து போச்சுங்க

ஒரு மணி நேரம் பொறுத்துக்கோங்க இப்ப போய் சாமான் வாங்கி சமைத்து போடுறேன்

என்று கடைக்குப் போனாள் போகும் வழியிலே மயங்கி விழுந்தாள் செய்தி வீட்டுக்கு

வந்தது குபேரன் ஓடினான் அங்கு சென்றதும் குபேரா உனக்கு குழந்தை பாக்கியம்

வந்துருச்சுப்பா என்றனர் குபேரன் மகிழ்ந்தான் கடும் பசியிலும் இராப்பகலாய் உழைத்து

லட்சுமியை நல்ல முறையில் கவனித்துக் கொண்டான்.

மாதம் பத்து ஆனதுஇன்னும் ஒரிரு நாட்களில் குழந்தை பிறந்து விடும் என்றனர்

மருத்துவர்கள் இந்நிலையில் லட்சுமியும் குபேரனும் நள்ளிரவு வரை பிறக்க இருக்கும்

குழந்தையைப் பற்றி பேசி விட்டு உறங்கினர்.

காலையில் கண்விழித்தான் குபேரன் அருகில் இருக்கும் லட்சுமியைப் பார்த்து

திடுக்கிட்டான் லட்சுமியின் வாயில் நுரை தள்ளி இருந்தது கண்ணில் நீலம் பாய்ந்து

இருந்தது பின்பு தான் தெரிந்தது பாம்பு தீண்டி இறந்தாள் என்று கடவுளை திட்டித்

தீர்த்தான் கொடுப்பதை போன்று இருப்பதையும் பறித்தாயே ! என்று கூறியவன், அடுத்த

எட்டு நாளில் தானும் இறந்து போனான் துக்கம் ‌


தாளாமல் ஏக்கத்தில்.
5. காதல் சுகமானது

சுந்தரம் கிளம்பிட்டியா இல்ல சொர்ணம் கொஞ்சம் பொறு இதோ வந்துடுறேன் போடா

அதெல்லாம் முடியாது நான் வேண்டுமானால் பஸ் ஸ்டாப்ல இருக்கேன் சீக்கிரமா வா

இல்லைனா கல்லூரியில் மணி அடிச்சிருவாங்க டா சரி இப்போ இதோ வரேன் பேருந்து

நிலையத்துக்கு வருவதாக சொன்னானே இன்னும் வரவில்லையே என்ன சொர்ணம்

தேடிட்டு இருந்தியா அட போ லூசு நான் இந்த மரத்தின் பின்னாடி தான் மறஞ்சு

நின்னுகிட்டே இருந்தேன் ஏமாந்துட்டியா சரி சுந்தரம் அதனால என்ன இப்ப பஸ் வருது
முதல்ல அதுல‌ ஏறு சரி சொர்ணம் எனக்கு பின்னாலயே ஏறு ம்..ம்..சீக்கிரம் இந்த சீட்ல

உட்காரு அண்ணே இரண்டு காலேஜ் ஸ்டாப் குடுங்க சொர்ணம் உனக்கு நானே டிக்கெட்

எடுத்துட்டேன்.

சுந்தரம் நேத்து ராத்திரி நான் சரியா தூங்கல டா உன் மடியில கொஞ்ச நேரம்

படுத்துக்கவா ? அதனால என்ன ? ( ஆழ் உறக்கத்தில் சொர்ணம் ) சொர்ணம் எழுந்திரு

காலேஜ் வந்துருச்சு. வா இறங்கு இறங்கியதும் சுந்தரம் இன்னிக்கு நாம காலேஜ் போக

வேணாம் அதுக்கு பதிலா இருவரும் சினிமாவுக்கு போகலாம் வா..ப்ளீஸ்.. ஐயோ நான்

வரலப்பா எங்க அம்மாவுக்கு தெரிஞ்சுச்சு தொலஞ்சேன் முதல்ல இன்னிக்கி காலேஜுக்கு

உள்ள வா அப்புறம் பேசிக்கலாம் ( இன்னைக்கு எந்த முகத்துல முழிச்சேனோ தெரியல

இன்னைக்கும் அவனை சுத்துவதற்கு கூட்டிட்டு போக முடியலையே நம்ம மனசுல

இருக்குறத சொல்ல முடியலையே என்று வருத்தத்துடன் வகுப்பறைக்குள் செல்கிறாள் ).

( அவள் அவளையே பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் ‌அவள் பார்ப்பதை கண்டு

அவளின் விழிக்குள் அவனும் ஊடுருவி விட்டான் )

சுந்தரம் வகுப்பு முடிஞ்சதும் நான் உன்னிடம் ஒன்று பேசனும் சரி வா பேசலாம் ( வகுப்பு

முடிந்ததும் ) என்ன சொர்ணம் ‌ஏதோ சொல்லணும்னு துடிச்சியே இப்ப சொல்லு அது

அது வந்து ஒன்னும் இல்ல சுந்தரம் நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க என்ன

காரணம் அட போ இவ்வளவு தானா நீ எதற்கு இப்ப என்னைய வம்பு இழுக்கிற

உன்னுடைய அழகு வருமா போ சொர்ணம் நான் கருப்பா இருக்கிறதால நீ என்னை

இப்படி வம்பு இழுக்காத ப்ளீஸ் ( ஐயோ நம்ம மனசுல இருக்குறத சொல்ல முடியலையே )

சரி சும்மா வா வீட்டுக்கு போகலாம் பஸ் வந்துருச்சு ஏறு ஏறு

மறுநாள் கல்லூரியில் சுந்தரத்தின் வகுப்பில் படிக்கும் தேன்மொழி சுந்தரத்தை மிகவும்

விரும்புவதாக சுந்தரத்திடமே தனது காதலை வெளிப்படுத்தினாள் விஷயம் அறிந்த

சொர்ணம் சுந்தரத்தை கூப்பிட்டு தனது காதலை வெளிப்படுத்த திட்டமிட்டாள் இத்திட்டம்

தேன்மொழிக்கு தெரிந்ததும் சொர்ணத்திடம் சென்று கெஞ்சி அழுதாள் உடனே சொர்ணமும்


ஆம் நான்தான் கூறவில்லை நீயாவது சுந்தரத்துடன் நன்றாக வாழவேண்டும் என்று

வாழ்த்தினாள்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல் சொர்ணம் சுந்தரத்தின் வீட்டு வாசலுக்கு சென்றாள்

சுந்தரம் காலேஜ் நேரம் ஆயிடுச்சுடா கிளம்பு சீக்கிரம் என்றாள் ( உள்ளிருந்து சுந்தரம் )

நான் இன்னைக்கு அடுத்த பஸ்ல வர்றேன் நீ போ என்றான் சொர்ணம் வருத்தத்துடன்

பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தாள் அரை மணி நேரம் கழிந்ததும் தேன்மொழி

அங்கு வந்தாள் பின் அடுத்த பத்து நிமிடத்தில் சுந்தரமும் வந்தான்.

என்ன தேன்மொழி ரொம்ப நேரமா உன்னைய காக்க வச்சிட்டேனா சாரிடா ப்ளீஸ்

என்றான் இருவரின் கண்களுக்கும் தெரியும்படி சொர்ணம் இருந்தும் இருவரும்

சொர்ணத்துடன் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை ( இரண்டு ஆண்டுகள் கழித்து ) இந்த

மாதத்துடன் காலேஜ் முடிய போகுது சுந்தரம் நீ போய் ஒரு வேலையில சேரு பின் நம்ம

திருமணம் பற்றி உங்க அப்பா கிட்ட பேசு சரியா சரி தேன்மொழி இதோ இந்த பரிட்சை

முடியட்டும் நாம வேலைக்கும் சேர்ந்தே போகலாம் (காலேஜ் வாழ்க்கை முடிந்து

வேலைக்குப் புறப்பட்டனர் ).

அன்றைக்கு சொன்னதைப் போல நீ போய் உங்க அப்பா கிட்ட பேசு சுந்தரம் பேசலாம்

...ஆனா தேன்மொழி கொஞ்சம் பயமா இருக்குது ( தேன்மொழி , சுந்தரம் இருவரும்

சொர்ணத்திடம் உதவி கேட்டு போயினர் ) சொர்ணமும் சுந்தரத்தின் அப்பாவிடம் பேசினாள்

சுந்தரத்தின் அப்பா ஒரு மனதாக ஒப்புதல் தெரிவித்தார் சொர்ணம் மனதுக்குள் அழுதபடி

சுந்தரத்திடம் இனிப்பு வழங்கினாள் நாள் குறியுங்கள் என்று கூறி மேற்படிப்பு படிக்க

அமெரிக்கா புறப்பட்டாள்

சில மாதங்கள் கழித்து தேன்மொழி சுந்தரம் திருமணம் முடிந்தது தேன்மொழிக்கு ஒரு சில

ஆண்டுகளில் பிள்ளை பிறந்தது சந்தோஷமாக வாழ்க்கையை நோக்கி வந்தனர் தனது

ஆண் குழந்தையின் ஒன்றாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடத் திட்டமிட்டனர். பின்

அதற்காக புதுத்துணிகளை எடுக்க புறப்பட்டனர்.


சுந்தரமும் தேன்மொழியும் மிக வேகமாக காரில் போய்க் கொண்டிருந்தனர் எதிரே வந்த

ஒரு அரசு பேருந்தின் மீது மோதினர் தேன்மொழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்

சுந்தரம் மயக்கமான நிலையில் மருத்துவமனையில் இருந்தான் சொர்ணத்திற்கு சுந்தரத்தின்

அப்பா தகவல் அனுப்பினார்.

அமெரிக்காவில் இருந்து மூன்று தினங்களுக்கு பின்னர் சொர்ணம் வந்தாள் . நடந்த

முழுவதையும் அறிந்ததும் தன் காதலால் பட்ட வருத்தத்தைக் காட்டிலும் அவனின் நிலை

கண்டு மிகவும் வருத்தம் கொண்டாள்.

மறுநாள் சுந்தரமும் வீட்டுக்கு வந்தான். சொர்ணம் சுந்தரத்தைக் கண்டு ஆறுதல் கூறினாள்.

அதே சமயம் , சுந்தரத்தைக் கண்டதும் பழைய காதல் அவளுக்கு நினைவுக்கு வந்தது

ஆனால் அவள் மௌனமாக வீடு திரும்பினாள்.


சுந்தரத்தின் குழந்தை அழும் சத்தம் கேட்டு சுந்தரத்தின் வீட்டுக்குள் ஓடினாள். குழந்தையை

சமாதானம் பண்ணி உறங்க வைத்தாள் சுந்தரம் சொர்ணாவிற்கு நன்றி கூறினான்.

சொர்ணம் தனக்குள் இருந்த காதலை கட்டுப்படுத்த முடியாமல் சுந்தரத்திடம் எனக்கு உன்

நன்றி எல்லாம் தேவையில்லை உன்னையே எனக்கு கொடு என்றாள் சுந்தரம்

திடுக்கிட்டான் சொர்ணம் அவனைக் காதலித்ததை முழுதாக கூறினாள்.

சுந்தரம் மிகவும் வருத்தம் கொண்டு தேன்மொழியை மறக்க முடியாமல் தவித்தான்

இருப்பினும் சொர்ணத்தின் காதலுக்கு மரியாதை தர தீர்மானமும் செய்தான்.

அவனது அப்பாவிடம் பேசினான். அப்பாவும் சம்மதம் தெரிவிக்க மீண்டும் சுந்தரம்

சொர்ணம் என்ற புது வாழ்க்கையைத் தொடங்கினான் ஆண் குழந்தையைத் தவிர நான்

வேறு பிள்ளை பெற்றுக்கொள்ள மாட்டேன் என அவளே உறுதி கொண்டாள்.

சுந்தரமும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டான் இருவரும் இன்பமாய் வாழ்ந்தனர்.

6. மானம் போனது

பாஸ்கர் என்னய விரும்புறியா இல்லையா சொல்லுடா நான் உன்னை உயிருக்கு உயிராய்

நேசிக்கிறேன்டா பிரியா இல்லை நீ கொஞ்சம் யோசித்துப் பாரு நமக்குள்ள ஒத்துப்

போகுமா போகனும்பா அதான் காதல் பாஸ்கர் நீ பயப்படத் தேவையில்லை நான்

உன்னைய கடைசி வரை விடாமல் உன்னோடு இருந்து இப்பிறவியை கழிக்க

ஆசைப்படுகிறேன்டா என்னை புரிஞ்சுக்கப்பா தயவுசெய்து சரி பிரியா உன் அன்பு எனக்கு

புரியுது நானும் உன்னை கண்கலங்காமல் காப்பாற்றுவேன் சரியா ?

சரி வா நாம எங்கேயாவது போகலாம் எங்க போகணும் பாஸ்கர் வா வர்றேன்டா ..

எனக்கு ஊர் சுத்துனா பிடிக்காது . ஆனால், முதன் முதலாக உன்னைய அழைத்துச் செல்ல

மனம் துடிக்குது.
அதனால நாம‌ நம்ம எதிர்காலம் சிறப்பாக அமைய கடவுளிடம் வேண்டனும்

மலைக்கோட்டைக்கு போகலாம் சரியா? நிச்சயமாக உன் கருத்து தான் என் கருத்து. நீதான்

எனக்கு உலகம். விநாயகரை கும்பிட்டு விட்டு நம் வாழ்க்கையை தொடரலாம்.

பிரியா பார்த்தாயா மேலே உயர்ந்ததும் கீழே உள்ள அனைத்தும் நமக்கு தெரிகிறது நாம்

நம்ம‌ ஊர்ல பார்க்காத இடங்களையும் பார்க்க முடிகிறது இல்லப்பா ? ஆமாம். பாஸ்கர்

எனக்கும் நான் மேலே வரனும்னு ஆசையிருக்கு ஆனால், வசதியில்லையே.

என்ன‌ பிரியா வேறு ஏதோ நினைத்து பேசுற போல இருக்கு உன் மனசுல இருக்குறது

எதுவானாலும் மறைக்காம சொல்லுமா எனக்கும் படிக்கனும்னு ஆசையா இருக்குப்பா ?

ஆனால் ,

அது நடக்க ..சரி நீ அந்த ஆண்டு மதிப்பெண் எடு நானே உன்னை படிக்க வைக்கிறேன்

சரியா மகிழ்ச்சியா இரு. ( கல்லூரியும் முடித்தாள்) பாஸ்கர் திருமணம் எப்படா செய்ய

போகிறாய் நான் வேறு பக்கம் நீ வேறு பக்கமாக எத்தனை நாள்டா இருக்குறது.

இல்லை பிரியா எனக்கு ஒன்றும் தாமதப் படுத்தனும்னு கட்டாயம் இல்லை. இருந்தும், நான்

சம்பாதிக்கும் பணத்தை வைத்து இப்ப ஒன்னும் குடும்பம் நடத்திட‌முடியாது.

உனக்கு இன்னும் உலகம் விலங்கலன்னு நினைக்கிறேன் நீயும் உன் தம்பி தங்கைகளைப்

படிக்க வைக்கணும் அதனால உன் படிப்பு வைத்து கொஞ்சம் உன் குடும்பத்தை நல்ல

நிலைமைக்கு கொண்டு வா அப்புறம் நம்ம திருமணம் செய்து கொள்வோம் தயவு செய்து

கேட்டியா ப்ரியா செல்லம் பாஸ்கர் அட பாருடா பாத்தியா உனக்கு இருக்கும் இந்த

அறிவு எனக்கு போயிடுச்சு நாம காதலிக்க ஆரம்பித்து இதோட எட்டு வருடம்

ஆகிவிட்டது என்று நினைத்தேன் சீச்சீ..நான் என் குடும்பத்துக்கும் எதுவும் செய்யலன்னு

நினைக்க மறந்துட்டேன் நன்றி பாஸ்கர் முதலில் அதை செய்வோம் பின் நாம் திருமணம்

செய்து கொள்வோம் சரியாடா பிரியா.

உன்னை நாளைக்கு வேலையில் சேர்த்து விடுகிறேன் நீ போய் வா ஒரு ஆண்டு காலம்

முடிந்தது பிரியாவும் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தால் அவளின் வீடும் வசதி


பெற்றது தம்பியும் முதுகலைப் படிப்பை முடித்து வேலைக்கு தயாராகினால் ஒரு நாள்

பிரியா...,

பாஸ்கர் நீ சொன்னதைப் போன்று நான் என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு

வந்து விட்டேன். இப்பொழுது நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வீட்டில்

சொல்லி நம்ம திருமணம் பற்றி நான் கூறுகிறேன். சரி பிரியா நல்ல முடிவு. நாளை உன்னை

உடனே சந்திக்கிறேன்.

பாஸ்கர் இந்தாடா இனிப்பு என் வீட்டில் ஒத்துக்கிட்டாங்கடா பிரியா எனது வீட்டில் கொஞ்சம்

சரியாகிவிட்டது. நாளையே உன் வீட்டிற்கு பெண் பார்க்க வருகிறோம் . சரி நான் வீட்டில் போய்

சொல்கிறேன். நாளை பார்ப்போம் ஐயா சும்மா வாங்க வாங்க மாப்பிள்ளை உள்ளே வாருங்கள்.

அமருங்கள் இனி நாமதான் பையனையும் நீங்கள் பெண்ணையும் பார்க்கணும் அவர்கள் தான்

முன்னரே பார்த்து பழகிவிட்டனர். இருப்பினும் இக்கால சூழ்நிலை கருதி விரும்பியவர்களை

நாமே சேர்த்து வைப்பது முறை என்று நாம் கருதி இருக்கிறோம்.

இருப்பினும் எல்லாவற்றையும் முறைப்படி பெண் பார்த்தால் நிச்சயம் திருமணம் என செய்து

வைத்தாலே நம் பிள்ளைகளுக்கு நன்மையைத் தரும். இனி நீங்க தான் சொல்லணும் ஐயா அதன்

பேச நினைத்ததை எல்லாம் நீங்களே சொல்லிட்டீங்க வருகிற ஞாயிற்றுக்கிழமையே நிச்சயத்தை

வைத்துவிடலாம். சரிங்க அப்படியே ஆகட்டும் ( எல்லோரும் புறப்பட்டனர் ) பெண் வீட்டாரும்

மாப்பிள்ளை வீட்டாரும் எல்லாம் உறவினர்கள் நண்பர்கள் என மிகவும் பிரமாதமாக வரவேற்பு

அளித்தனர்.

இந்நிலையில் வெள்ளியன்று இரவு பாஸ்கர் பாஸ்கர் இங்கு வாடா சீக்கிரம் வாடா கொஞ்சம்

திடமா இருடா தயவுசெய்து என்னடா ரவி பயப்படாத சொல்லுடா அவள் மோசக்காரி டா

உன்னை அவள் ஏமாற்றி விட்டாள் டா இத்தனை நாட்களாக போடா உலராத போய் வேலை

இருந்தா பாரு பாஸ்கர் சத்தியமா சொல்லுறேன் அப்படி பேசிய பெண் வீட்டாரும் சேர்ந்து

திட்டமிட்டுச் செயல்பட்டு விட்டனர்.


அவள் அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தவுடன் அங்கு வருகிற வருமானம் மட்டும் இன்றி

அவள் அலுவலகம் முதலாளியிடம் பணம் நிறைய கிடைக்க ஆரம்பித்ததும் அவன் அவனுக்காக

வாழ்வதென்று முடிவெடுத்து இருக்கிறாள் பின் தான் அவளும் அவனும் உடன்பட்டு பல

இடங்களுக்கு சுற்றித்திரிந்து இருக்கிறார்கள் அவன் பெயர் செல்வம் என்று சொன்னார்கள் உன்

பிரியா பிரியத்தை தேடவில்லை செல்வத்தைத் தேடிக்கொண்டாள்.

தன் வீட்டில் செய்தியை சொன்னான் அவன் வீட்டிலேயே அவனுக்கு மானம் போனது

இறுக்கமான மனதோடு அவள் வீட்டுக்கு சென்றான் உங்கள் பெண் என்னை ஏமாற்றினாள்

நானும் அவளும் காதலித்தோம். சரி... இன்று அவள் கால் நீண்டு விட்டது. என் வீட்டார்

உங்களுக்கு என்ன செய்தனர்? உங்கள் பெண் நடத்தைக்கு நீங்கள் துணை போனீர்கள் என்ன

மனிதர்கள்...

உங்களுக்கு பிறந்த பெண்ணை விட நீங்கள் தான் மோசமானவர்கள் நீங்க நல்லாவே இருங்க ..

நிச்சயம் வென்றது எங்களின் மானம் போனது உங்கள் வீட்டில் பால் பாயாசம் கொதிக்கிறது.
கடவுள் தான் தீர்மானிக்கனும் உங்களால் முடிந்தால் நன்மையைச் செய்யணும் இல்லனா

தீமையாவது செய்யாம இருக்கணும் விடுங்க இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை நான் போகிறேன்.

7. அடிக்கு அடி

ஏய் நாயே! கதவை திற இல்லை நான் கூரையில தீ வைத்து விடுவேன் திறக்கிறாயா இல்லையா

என்றான் குருசாமி யோவ் என்ன மிரட்டினால் பயந்திடுவேன்னு நினைச்சியா உன்னால

முடிஞ்சதை பார்த்துக்கோ அம்மா ஏம்மா அப்பாவுக்கு கதவை திறக்க மாட்டீங்களா இல்லடா

கண்ணு உங்க அப்பா குடிச்சிருக்காரு அது மட்டும் இல்லை என்னையும் உங்களையும்

அடிப்பாருடா அதனால அந்த ஆளு அங்கேயே கிடக்கட்டும் நீங்கள் வாருங்கள் நாம்

சாப்பிடுவோம் என்றான் நீலமேகம்.

கண்ணனும் பாலுவும் சாப்பிட்டுவிட்டு உறங்கினர் நீலமேகமும் உறங்கினாள்.


திடீரென முகத்தில் ஒரு ஒளி அடித்தது கண்ணனும் பாலுவும் திடுக்கிட்டு விழித்தனர் ஜன்னல்

கதவை திறந்து பார்த்தனர் குருசாமி மேற்கூரையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததைப்

பார்த்தனர்.

உட்புறம் தீ வர ஆரம்பித்தது இருவரும் அலறினர் சத்தம் கேட்டு நீலமேகம் விழித்தாள்.

தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக் கொள்ள

முயற்சித்தாள் குடிசையை விட்டு வெளியே வரும்பொழுது கண்ணனின் மீது மட்டும்

தீப்பரவியது அக்கம் பக்கம் இருப்பவர் எல்லாம் அவனைக் காப்பாற்ற நினைத்தனர் ஆனால்

மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இறந்தான் கண்ணன்.

பொழுது விடிந்தது குருசாமிக்கு நினைவு தெளிந்தது விழித்தான் தன் வீட்டு கூரை எரிந்தது கண்டு

அஞ்சினான் ஒரு அலறல் சத்தம் கேட்டதும் குருசாமி பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தான் அங்கே

மனைவியும் தன் இளைய மகன் பாலுவும் அழுது கொண்டிருந்தனர். கண்ணனின் பிணம் அங்கு

கிடந்தது குருசாமி திடுக்கிட்டு என்ன நடந்தது என வினவ நீலமேகம் கோபமுற்று அவனை

காவலில் பிடித்து கொடுத்து விட்டாள் மேற்படி காரியங்கள் முடிந்தன.

ஒரு சில நாட்களில் குருசாமியும் சிறையில் இருந்து திரும்பினான் நீலமேகம் அதிர்ந்தாள் இவன்

எப்படி திரும்பினான் என அவளுக்கு சந்தேகம் வந்தது பின் தான் தெரிந்தது அவன்

குடிபோதையில் செய்தது கொலை என்று சொல்ல முடியாது என நீதிபதி யின் தீர்ப்பை அறிந்தாள்

குருசாமி நீலமேகத்திடம் மன்னிப்பு கேட்டாள் நீலமேகத்திற்கோ அதனை ஏற்க முடியவில்லை

ஆனால் நீலமேகத்தை தொடர்ந்து கொண்டே இருந்தான். சத்தியம் செய்தான் பிறகு நீலமேகமும்

ஓரளவுக்கு ஒப்புக்கொண்டாள் இப்படியே வாரம் இரண்டு ஓடியது.


திடீரென ஒரு நாள் இரவு குருசாமி நன்கு குடித்துவிட்டு வீடு திரும்பினான் தேவையில்லாமல்

மகன் பாலுவை அடித்தான் நீலமேகம் தடுத்துப் பார்த்தாள் அவன் அடங்கவில்லை அவளையும்

அடித்து நொறுக்கினான். இரவு பொழுது அழுகையிலேயே கழிந்தது காலை எழுந்ததும்

நீலமேகம் தானும் ஒரு வேலைக்கு செல்வோம் என திட்டம் தீட்டினாள் வேலையும் கிடைத்தது

நாளை முதல் போகலாம் என திட்டம் போட்டாள்.

மாலைப்பொழுது ஆனதும் பாலு பள்ளியிலிருந்து வீடு திரும்பினான் அவனுக்கு தேவையான

பள்ளி சீருடை எல்லாம் வாங்கி வருவதற்கு என நீல மேகம் மட்டும் கடைக்கு சென்றான் பாலு

மட்டும் வீட்டில் இருந்தான் குருசாமி வீட்டுக்குள் வந்து புகுந்தான் பாலு உடனே வெளியேறி

விட்டான்.

குருசாமி வீட்டில் உள்ள தூக்கு பெட்டி எல்லாவற்றிலும் பணத்தை தேடினான் பணம் படத்தைத்

தவிர அவன் கைக்கு எதுவும் கிடைக்கவில்லை நீலமேகம் உள்ளே வந்தால் இவன் இருப்பதை

அறிந்து சீருடை எல்லாம் மறைத்து உள்ளே வைத்தாள்.

நீலமேகம் வா இங்கே எனக்கு பணம் கொடு என்றான். அது எல்லாம் ஒன்றும் என்னிடம்

கிடையாது மரியாதையா போயிடு என்றாள்.

குருசாமி அவளின் பேச்சுக்கெல்லாம் அடங்கவே இல்லை நீலமேகத்திடம் இருந்து சுருக்கு

பையை பிடுங்கினால் பைக்குள் ஒன்றுமே இல்லை உடனே தாலியை கழட்டுமாறு

வற்புறுத்தினான் நீலமேகம் மறுத்துவிட்டாள் அவளை அடித்து அவள் கழுத்தில் இருந்து


தாலியை அறுத்துக் கொண்டு போனான் போனவன் திரும்பவும் உள்ளே வந்து நீல மேகம் அந்த

சோற்றில் விஷம் கலந்து விட்டேன் அதை நீயும் உன் மகனும் சாப்பிட்டு நிம்மதியாய் சாவுங்கள்

என்று கூறி வெளியேறினான்.

அம்மா அம்மா என்று அழைத்தபடியே பாலு உள்ளே நுழைந்தான் அம்மா எனக்கு சீருடை

எல்லாம் வாங்கிட்டியா என்று பார்த்தால்தான் பிறகு அம்மா எனக்கு தூக்கம் வருது நான்

தூங்குறேன் என்றான் பாலு இருடா கொஞ்சம் பொறு இப்ப சாப்பாடு செஞ்சிடுவேன் அப்புறம்

தூங்கலாம் என்றாள் அம்மா நீ கடைக்கு போனப்பவே சாப்பிட்டேன் என்றான் நீலமேகம்

திடுக்கிட்டு வந்தால் கையிலோ பணம் இல்லை அவளுக்கு வேறு வழியும் தெரியலை மகனே

இறக்கப் போகிறான் இனி நாம் மட்டும் ஏன் வாழ வேண்டும் என்று அவள் பாலுவை தூங்க

வைத்துவிட்டு தானும் விஷம் அருந்தினாள் பொழுது விடிந்தது பாலு எழுந்தான் அம்மா

படுத்திருக்கும் கோலம் கண்டான் அம்மா அம்மா என அலறினான் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள்

எல்லாம் வந்தனர் பாலுவுக்கு சமாதானம் கூறினர் பாலுவுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது

ஏன் அம்மா இப்படி செய்தாய் என்று தனக்குள்ளே வினவினான்.

சற்று நேரம் போனது குருசாமி குடித்துவிட்டு வீடு திரும்பினான் திரும்பியவன் குடிபோதையில்

என்ன நீலமேகம் நீ மட்டும் நல்லா தூங்குகிறாயா இல்லை நான் விஷம் கலந்த சோற்றை நீ

மட்டுமே தின்னாயா ஏன் உன் மகனுக்கு தரலையா என்றான் பாலுவுக்குள் கோபம் கிளம்பியது

அக்கம் பக்கத்தினர் அவனை சமாதானப்படுத்தினர். மீண்டும் குருசாமி போதையில் இரு

உண்மையை சொல்ல போறேன் கேளு என்றான் அங்கிருந்த அனைவரும் அவன் வாயிலிருந்து

வரும் வார்த்தைக்காக காத்திருந்தனர் மேலும் நான் பணம் கேட்டேன் நீ தரவில்லை ஆதலால்

சோற்றில் விஷம் கலந்ததாக பொய்தான் சொன்னேன் என்றான் பாலு .

இதனைக் கேட்டதும் புரிந்து கொண்டான் ஓ அதனால்தான் என் அம்மா நேத்து வீட்டில் சோறு

இருந்தும் புதியதாய் சமைத்தாள் என்ன ஊர் மக்களிடம் கூறினார் என் அம்மாவின் இறுதி

சடங்கை முடித்து வீடு திரும்பினார் அப்பனும் போதை தெளிந்து எழுந்தான் வீட்டில் எதுவுமே

நடக்காதது போல் வெளியேறினான் ஒரு மாத காலம் போனது பாலு பன்னிரண்டாம் வகுப்பு

முடிக்கும் தருவாய்க்கு வந்தான் தேர்வு நெருங்கியது அத்துடன் அம்மாவின் நினைவும்

வருத்தியது
ஒருநாள் குருசாமி வீட்டுக்கு வந்தான் பாலு விடம் ஆறுதலாக பேசினான் பாலு எதற்கும் பிடி

கொடுக்கவில்லை இருப்பினும் குருசாமியிடம் மாற்றம் தெரிந்தது அவன் திருந்திய நிலையில்

காணப்பட்டான்‌பாலு தேர்வை முடித்தான் முடிவுகளும் வந்தது நல்ல மதிப்பெண்கள்

அடைந்தான் கல்லூரியில் நுழைந்தான் இப்படி ஏழு வருடங்கள் ஆயின பாலுக்கு

திருமணமானது அவன் அலுவலகம் சென்றான் ஒருநாள் குருசாமி பகலிலேயே தண்ணி

அடித்துவிட்டு மருமகளிடமே கீழ்த்தரமாக நடக்கும் துணிந்தான்.

நீல மேகத்தைப் போலவே அடித்தான் பாலு மாலை வீடு திரும்பினான் ஆனால் மனைவி தீபா

ஒன்றுமே சொல்லவில்லை ஒரு நாள் ஞாயிறு காலை தூங்கி எழுந்து பாலு மார்க்கெட் சென்றான்

அந்த நேரம் குருசாமி தீபாவிடம் பணம் கேட்டான் தர மறுத்ததால் அதற்காக அவள் கழுத்தில்

இருந்த தாலியை பிடுங்கினான் அந்த நேரம் பாலுவும் உள்ளே நுழைந்தான் இன்னும் அப்பா

திருந்தாத நிலையை கண்டவன் அவர்க்கு அடி கொடுக்க எண்ணினான் பாலு குருசாமியை

அடித்து நொறுக்கினான் பின் குருசாமி அந்த ஊரைவிட்டு துரத்தினான் தன் அம்மாவுக்கு

நேர்ந்தது தன் மனைவிக்கும் நேர்ந்தது இவை எண்ணி குருசாமிக்கு பதிலடி கொடுத்தான்.

8. இப்படித்தான் வாழனும்
வணக்கம் ஐயா அனைவருக்கும் வணக்கம் கண்மணிகளா நம் தினமும் பாடம் நடத்துவதற்கு

முன்தினம் ஒரு சிந்தனையை பார்ப்போம் இன்றோ நான் உங்களுக்கு கதை

சொல்லப்போவதில்லை இன்று நான் ஒரு கண்கூடான உண்மையை சொல்ல போகிறேன் மற்ற

கதையின் உண்மையைக் கண்டோம் ஆனால் அன்புக்கு இனிய மாணவர்களே இன்று நான்

படித்ததை சொல்ல போவதில்லை கண் முன்னே நடந்ததை விவரிக்க போகிறேன்.

ஐயா சொல்லுங்கள் நாங்கள் எல்லோரும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம் மாணாக்கர்களை

நான் இன்று எப்பொழுதும் போல வீட்டிலிருந்து புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையத்தில்

இருந்து திருச்சியில் உள்ள துவாக்குடி நோக்கி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தேன்

அப்போது அந்த பேருந்து காய்கறி சந்தைக்கு வந்து நின்றது அங்கு பேருந்தில் ஏறிய வியாபாரி

தம்பதி ஒருவர் கூடைகள் மூட்டைகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வந்தனர்.

அவர்கள் விடியற்காலை வரும் பொழுது அவர்கள் வளர்க்கும் நாய் ஒன்றையும் அழைத்து

வந்திருக்கின்றனர் பின்னால் திரும்பும் பொழுது அந்த நாய் பேருந்தில் ஏறிவிட்டது நடத்துனர்

அதனை அடித்து இறக்கி விட்டனர் அம்மா காலைல கூட்டம் இல்லை இப்பொழுது கூட்டமாக

இருக்கிறது யாரையாவது கடித்தால் நான் தான் பொறுப்பு நல்ல வேலை நீ வேண்டுமானால்

இறங்கி செல் என்று கத்தியபடி விசில் ஊதினார்.

பேருந்து நகர்ந்தது அங்கிருந்து அந்நாய் எங்களின் வேகத்திற்கு ஓடத் தொடங்கியது பின்

அது ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்துக்கு இணையாக நின்றது பேருந்து கிளம்பியதும்

அந்த நாயும் ஓடத் தொடங்கியது பால்பண்ணை காட்டூர் வழியாக திருவெறும்பூர் வரை 13

கிலோமீட்டர் தூரம் அந்த நாய் ஓடி வந்தது இதில் என்ன கொடுமையென்றால் என் செல்ல

மாணாக்கர்களே! அந்த நாயை வளர்த்தவர்கள் நீ போய் அதை இழுத்து வா இல்லை நீ

போ என பேருந்தில் 13 கிலோமீட்டர் சண்டையிட்டனரே தவிர யாரும் அதனைப் பிடித்து

வர இருவருமே இறங்கி செல்லவில்லை அந்த நாய் பேருந்து உடனே ஓடி வருவதையும்

அவர்கள் பொருட்படுத்தவில்லை அவர்கள் திருவெறும்பூரில் பேருந்தை விட்டு இறங்கினர்

அந்த நாய் ஓடி வந்து அவர்களை எக்கி தாவி உடலெங்கும் முத்தமிட்டது. இருவரின்

கால்களிடையே புகுந்து விளையாடியது சற்றும் அதற்கு கோபமே வரவில்லை அவர்களின்


மேல் மேலும் அது வருத்தம் மட்டும் அடைந்தது மண்ணில் விழுந்து புரண்டு புரண்டு

கண்ணீர் வர அழுது தீர்த்தது .

பின் இந்த நாயால்தானே பேருந்தில் இருந்து கீழே இறங்கினோம் என்ற கோபத்தோடு

அந்த நாயை மீண்டும் அவர்கள் தாக்கத் தொடங்கினர்

தான் வாங்கி வந்த முருங்கைக்காயில் இரண்டு மூன்று எடுத்து அந்த நாயினுடைய

உடலில் அடிக்கத் தொடங்கினர். அது வலி தாங்காமல் அழுது கொண்டிருந்தது புரண்டது

ஆங்காங்கே அந்த நாயினுடைய உடலில் ரத்த காயங்கள் படிந்தன .

அது ஒருபுறம் அழுது கொண்டிருக்க …..

அந்த கணவனும் மனைவியும் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திலே அவர்களின்

கிராமத்திற்காக செல்லக்கூடிய சிற்றுந்து வரும் என காத்திருந்தனர்.

பேருந்து வருவதற்குள் இந்த நாய் சற்று அழுகையை தனித்துக் கொண்டு மீண்டும் அந்த

எஜமானினுடைய மடியிலேயே போய் படுத்தது அவர்கள் ஒரு நிமிடம் யோசித்தனர்

என்ன செய்வது என்றே புரியவில்லை.

கீழே குனிந்து பார்த்தால் ஆங்காங்கே ரத்த வடுக்கள் இருந்தன . கண்ணீர் மல்க அதனை

தடவி கொடுத்து விட்டு அவர்கள் அப்படியே பேருந்துக்காக காத்திருந்தனர் .


கோபித்துக் கொள்ளாதடா கட்டாயமாக நாங்கள் உன்னையும் அழைத்துச் செல்வோம்

என்று அவர்கள் அந்த நாயிடம் கூறினர். அவர்களுடனே அந்த நாய் சென்றது.

அன்பிற்கினிய மாணவர்களே! இந்த நாயானது நமது மனிதர்களுக்கு மாபெரும் பாடத்தை

கற்பித்து இருக்கிறது பாசம் அன்பு என்றால் எப்படி வைக்க வேண்டும் என்றல்லவா கூறி

இருக்கிறது.

ஆறறிவு மனிதர்கள் மிருகமாக வாழ்கிறார்கள் இந்த கதையிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்

கொண்டீர்கள் செல்லங்களா! ஐயா நாங்கள் இக்கதையிலிருந்து நாம் யாருடன் இருந்து

கொண்டு அன்பு வைக்கிறோமோ அவங்க நம்ம மீது சூழ்நிலை காரணமாக அன்பு

செய்யத் தவறினாலும் நாம் அவர்களிடத்தில் கொண்ட நன்றியும் அன்பையும் என்றென்றும்

விட்டுவிடக்கூடாது.
மேலும் , அன்பை ஆழமாக்க தெரிந்து கொண்டோம் ஐயா...

கண்ணுங்களா ! உண்மையாகவே நம்ம மனிதரும் இப்படித்தான் வாழ வேண்டும் நீங்கள்

இந்த சிந்தனையை வாழ்நாளில் மறக்காதீர்கள்.

செல்லங்களா! இதனை என்றும் நீங்கள் மறக்காதீர்கள் அனைவரும் சொல்லுங்கள் நான்

படித்த மிகப்பெரிய பாடம் இது இன்று போல் நீங்கள் என்றும் வாழ வாழ்த்துகிறேன்

இன்று இரவு வேண்டுகிறேன் என்னுடைய அடுத்த வகுப்பில் நாம் பாடத்தைப் பார்ப்போம்

நான் வருகிறேன் நன்றி ஐயா நன்றி.

9. கௌரவம்

இன்னைக்குத் தான் ஞாயிற்றுக்கிழமை ஆச்சே எங்க இவ்வளவு அவசரமா கிளம்பிட்டு

இருக்க ஸ்வேதா... இல்லைங்க நான் ஏற்கனவே திருமணத்திற்கு முன்னால் பார்த்த

வேலையை விட்டு விட்டேன் இல்ல இப்ப …..

அந்த இடத்துக்கு பக்கத்தில் இருக்கிற அலுவலகத்தில் வேலை இருக்குன்னு செய்தித்தாளில்

படித்தேன்.

அதான் வீட்ல சும்மாவே இருக்கறதுக்கு போலாம்னு கிளம்புறேன் .


அங்கு நேர்முகத் தேர்வு நீங்களும் குளிச்சிட்டு உடனே வந்து என்னை அங்கு கொண்டு

விடுங்கள் .

சரி ஸ்வேதா இந்த மோகன் சொல்றத எப்ப கேட்டிருக்க இப்ப நான் ஏதாவது சொன்னால்

சண்டை வரும் நீயே போயிட்டு வந்துடு .

எனக்கு இது பிடிக்கல மோகன். நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க பணமும் கிடைக்கும் அதே

நேரம் கொஞ்சம் நான்கு சுவர தாண்டி பல விஷயம் நடக்கிறதயும் தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு..

இல்ல ஸ்வேதா நீ போயிட்டு வா அப்புறம் பேசுவோம்.

சரி மோகன் நான் கிளம்புறேன்.

சென்றாள் …

ஸ்வேதா அங்கிருந்து தொலைபேசியில் ….

நேர்முகத் தேர்வு முடிந்தது மோகன். எனக்கு ஐந்தாயிரம் சம்பளம் நீங்க உடனே இங்கு வந்து

என்னை எங்காவது கூட்டிட்டு போங்க.

நாம் அப்புறம் மாலையில் வீடு திரும்பலாம்.

இல்லை என் மீது கோபம் வேண்டாம்.

நீ நேர வீட்டுக்கு வந்துடி செல்லம். உன்னிடம் நான் கொஞ்சம் பேசணும்.

நாம் அப்புறம் மாலைல எங்கயாச்சும் போகலாம் வா.

சரி வந்து தொலைக்கிறேன் வீடு வந்தாள்.

ஏன் மோகன் இப்படி என்னை படுத்துற ?

ஸ்வேதா ! நான் உனக்கு என்ன குறைவச்சேன் சொல்லுடா செல்லம் .

பின்பு நீ ஏன் வெளியே போகணும்னு நினைக்கிற?

நாம் இருவரும் எங்காவது சுற்றுலா மாதிரி போய் வரலாம்.


இல்லையென்றால் தினமும் கூட நாம் மாலை எங்காவது போய் வருவோம்.

இப்போ உலகம் போற போக்கு உனக்கு தெரியலடா. கொஞ்சம் என் கண்ணுல பார்த்த

சிலவற்றை சொல்றேன் கேளு….

தினமும் பேருந்துல பார்க்கிறேன். பல பெண்கள் கடினப்படுறத பார்க்கிறேன். சில பெண்கள்

விரும்பியும் பல பெண்கள் விரும்பாமலும் மனசு கேட்காமலே வேலைக்கு போகிறார்கள்.

அந்த காலைப் பொழுது பேருந்துகளில் தொங்கும் கும்பலில் தனக்கும் ஒரு இடம் தேடுவாள்.

அதிகாரி திட்டுவான் என்ற பயம் நேரம் வேறு ஆகிறது என்று பேருந்து ஏற இங்கே படிகளில்

நிற்கும் சில ஆண்கள் எப்படியும் இறங்க மனம் இன்றி இடித்து நிற்பார்கள். அதையும்

தாங்கிக்கொண்டு பெண்கள் ஏறுவார்கள் மேலேயோ கர்ப்பிணி பெண்ணோ அல்லது சக

வயதுக்காரர்களோ பெண்களுக்கு பெண்கள் இடம் தருவதில்லை. அந்தப் பெண் இருக்கிறாள்

பெண்ணுக்கு தம்பி வயதில் இருப்பவன் அவளை உரசுகிறான்.

அம்மா வயதுக்காரர்களை அத்தை என்கிறான். இது போதாதென்று பெண்களை இழிவுபடுத்தும்

விதத்தில் பாடல்கள் காட்சிகள் என பேருந்தே அவர்களுக்கு உதவியாக இருக்கின்றன. கேட்க

மனம் இருப்போரும் நமக்கேன்? என பார்த்துவிட்டு செல்பவர்களே அதிகம்.

இன்னும் சிலர் அவமானப்படுவர் அதில் நானும் ஒருவன் ஸ்வேதா……

ஏன் உங்களுக்கு என்னவாயிற்று ? ஆம். நான் அப்படி போகாமல் நின்று கொண்டு

வேதனைப்படுகிறாளே!

நாம் உதவலாம் என்று எனக்கு அருகில் அந்த அம்மாவுக்கு இடம் அளித்தேன். அவர்கள்

என்னை பார்த்து என்ன நான் உனக்கு அத்தையா இல்லை உன் அன்பானவள் ஆக இருக்க

நினைக்கிறாயா? என கேட்டுட்டாங்க.

இப்படி உதவி செய்யவும் எங்களைப் போன்ற சில ஆண்களால் முடியாமல் இருக்கிறோம்.

நினைத்துப் பார் இதில் சில புருஷனும் மனைவியும் சேர்ந்தே பேருந்து ஏறுகின்றனர்.


அவர்களின் நிலை மிகவும் மோசம். உலகம் அழிவை நோக்கி போகிறது ஸ்வேதா.

அதோடு இல்லை ……

இங்குதான் இப்படின்னு அலுவலகம் போனால் அங்கே மேலதிகாரி தன்னுடைய எச்சைக்கு

இணங்க பெண்களை தன்வயப்படுத்துகிறான் ஒரே அலுவலகத்தில் கணவன் மனைவி இருவரும்

பணி செய்தால் மேலதிகாரி அவனை நேரத்துக்கு அனுப்பி வைப்பான்.

பின் தான் மனைவியை விட்டுக்கு அனுப்பும் அலுவலகம் எவ்வளவோ!

இப்படி எங்கு காணினும் அவலம் ஒரு கௌரவமான வாழ்க்கையைக் காண முடியல. இந்த

உலகத்தில் உன் மீது எனக்கு சத்தியமாகச் சொல்கிறேன் எனக்கு சந்தேகம் இல்லை. அற்ப

பணத்திற்காக மற்ற பெண்களைப் போல் என் மனைவியும் இப்படி அவல நிலைக்கு போவதை

நான் விரும்பவில்லை அவ்வளவுதான்……

உன் ஆசைப்படி நான் வேண்டுமெனில் உனக்கு ஒரு சிறிய அலுவலகம்

அமைத்து தருகிறேன். நீ தன்னிச்சையாக அங்கிருந்து பல சிறு தொழில்களை இயக்கு.

நீ முதலாளியாக இரு. அங்கிருந்து யாரிடமும் நீ கையேந்த வேண்டாம்.

என் சம்பளமே நம் குடும்பத்திற்கு போதுமானது ஆகும். இருப்பினும் உன் ஆசைக்காக தான்

இதுவும்.
சரி என்று சொல்லுடா ஸ்வேதா…..

மோகன் எனக்கு ஒன்றும் பணம் மட்டும் முக்கியமில்லை. நானும் நான்கு சுவர் தாண்டி

போகணும் இந்த உலகத்தில் பல செய்திகளைக் காண வேண்டும் அவ்வளவுதான்.

நீங்க இவ்வளவு சொல்லுறதை பார்த்தால் எனக்கு பயமா இருக்கு. எனக்கு நீங்களும் நம்

வாழ்க்கையும் தான் முக்கியம்.

அதுக்கு நான் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டேன். நாம் இப்படியே சிரிச்சிட்டே

வாழ்க்கையைக் கழிக்கணும் மோகன் என்னை மன்னித்து விடுங்க.

சரி ஸ்வேதா நல்லவேளை நன்றி ஸ்வேதா. நம் வாழ்க்கை கௌரவமாக இருக்க

வேண்டும்னுதான் நானும் விரும்புறேன்.

சரி மோகன் அப்படியே வாங்க நம்ம இப்ப எங்காவது இந்த மாலை பொழுதை கழிக்கலாம்

கிளம்புவோம்.
10. தாழி உடைந்தது

செல்லம் தொழில் நல்லா போகுது விளையாட்டு போல பதினாறு வருடமாயிடுச்சு செல்வம்

ஆனால் நம்ம இப்படியே இருந்திடவும் கூடாது ஏதாவது இன்னும் முன்னேறனும்.. என்னங்க

கோவிச்சுக்காதீங்க தப்பான எண்ணத்துல சொல்லலப்பா நான் அதிகத்திற்கு ஆசைப்பட்டால்

அப்புறம் உள்ளதும் போயிடும்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அதான் சொல்றேன்

செல்லம் உன் மாமன் நான் போய் அப்படிலாம் ஆசைப்படுவேனாடா இல்லடா நாட்டுல நிறைய
இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்காங்க அம்மா தினமும் நம் கடைக்கு வேலை கேட்டு

வராங்க மனசு என்னமோ என்னைய கொல்லுதும்மா நம் தொழில் செய்து ஏதோ இப்ப நல்லா

வாழறோம்மா பாவம் அவங்க

சரிங்க ஏங்க கொஞ்சம் பணம் லாபம் வந்ததும் உங்களுக்கு புத்தி மாறிச்சோன்னு பயந்துட்டேன்

மன்னிச்சுருங்க நல்லது செய்றத தள்ளி போடாதீங்க உடனடியா உடனே செய்யுங்க... சரி என்ன

செய்யலாம்னு இருக்கீங்க இல்ல செல்லம் நாம புதுசா யோசிக்கிறதை விட நம்ம அச்சகத்த

இன்னும் விரிவு செய்யலாம்னு என்னுறேன்...சரியா சொன்னீங்க வாழ்த்துகள் நன்றி செல்லம்

எங்க உதவாம‌போயிடுவியோனு பயந்தேன் நன்றி நன்றி.. சரிங்க இப்ப இருக்கிற இடம்

அப்படியே இருக்கட்டும் அதில் கை வைக்காதீங்க புதுசா ஒரு இடம் பாருங்க அங்க புதுசா அச்சு

எந்திரம் வாங்குங்க மீண்டும் சொல்றேன் வாழ்த்துகள் இன்று மிகவும் மகிழ்ச்சியா இருக்கேன்

நான்

நாம் மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலுக்கு போகலாமா தாராளமாக நல்ல காரியம்

செய்கிறோம் இறைவன் அருளையும் பெறலாம் வா செல்லம் கிளம்பு .

கோயிலுக்குள் சென்று வெளியே வந்தனர்……

செல்லம் நான் உன்னை வீட்டில் விட்டுவிட்டு இடம் பார்க்க போயிட்டு வரேன். நான் வரேன்..

மதியம் சாப்பிடுமா….

சரிங்க...

இடம் பிடித்து போனது மகிழ்வோடு வீடு திரும்பினான் முகிலன்.

செல்லம் இடம் கிடைத்துவிட்டது. இனி எல்லாம் வெற்றி தான்.

நான் இன்று இரவே சென்னைக்குச் சென்று, நல்ல அச்சு எந்திரம் புதிதாக பெரிதாக வாங்கிட்டு

வரேன்..

சரிங்க பார்த்து கவனமா போயிட்டு வாங்க.


இரவு வந்தது சென்னைக்கு புறப்பட்டான் முகிலன். விடிந்தது சென்னையில் வெற்றி

கனவுகளோடு கால் பதித்தான் முகிலன்.

ஒவ்வொரு இடமாக தேடி தேடி இரவானது. ஒரு வழியாகப் பத்து இலட்சத்தில் எந்திரத்தை

வாங்கினான்..

ஒரு லாரியை வாடகைக்கு எடுத்து எந்திரத்தோடு தானும் அதே லாரியில் சென்னையில் இருந்து

திருச்சிக்கு வந்து கொண்டிருந்தான்.

இடம் எந்திரம் கிடைத்த மகிழ்வில் நிம்மதியாக லாரியிலேயே தூங்கினான்..

வண்டி பெரம்பலூர் அருகே வரும் பொழுது முகிலனின்‌வாழ்வை முடிக்க வந்த எமன் ஆனான்...

லாரி ஓட்டியவன் .

தண்ணி அடித்துவிட்டு வண்டியை ஓட்டியதில் நின்று கொண்டிருந்த வண்டியில் கொண்டு

போய் மோதிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

அந்த வண்டியில் வந்த மற்ற நபர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். முகிலன் மட்டும்

உறக்கம் கலையும் முன்பே உயிரிழந்தான். ( வெண்ணை திரண்டு வரும் நேரம் தாழி உடைந்தது ).
11. மறுவாழ்வு

ஐயா ஐயா எழுந்திரிங்க நீங்க இங்க வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது இப்படியே

படுத்து தூங்குறீங்க இல்லன்னா விட்டத்தை பார்த்தபடி அழுவுரிங்க என்ன ஆச்சு

உங்களுக்கு முதல்ல நீங்க போய் பல் துலக்குங்க.. பின்னாடி எல்லாத்தையும் பேசிக்கலாம்

நான் எழுந்து குளித்து பால் குடித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன் நீங்களும் குளித்துவிட்டு

வாங்க நாம பேசலாம் சரிங்க தம்பி நான் இதுவரை வேலைகளை முடித்துக் கொண்டு

முதியவராகிய ஆசை நம்பி வந்தார்.. என்னய்யா எல்லாம் முடிந்ததா வாருங்கள் நாம்

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை பார்த்து விட்டு வரலாம் தம்பி எனக்கு நீண்ட நாள்

ஆசை இதுதான் இந்த ஊரிலேயே இருந்தும் இத்தனை நாட்களாக அங்கு போனதே

இல்லை காரணம் என்ன ஐயா உலகம் போற்றும் மலைக்கோட்டைக்கு இந்த ஊரிலேயே

இருந்து கொண்டு போகவில்லையா அப்படியானால் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை

இல்லாமல் சில காலம் முன்பு தான் இந்த நம்பிக்கை வந்திருக்கும் போலிருக்கே

ஆச்சரியமாக இருக்கிறது தம்பி அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் என்னுடைய

வாழ்க்கையை என்ன சொல்ல வாருங்கள் நாம் கிளம்புவோம் புறப்பட்டனர்…..

கோயிலுக்குள் நுழைந்தனர் வினைகளை போக்கும் விநாயகா இத்தனை நாள் உன்னை

பார்க்க வரவில்லை தம்பி கூறியது போல் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இல்லை

நிறையவே இருந்தது அமைதியும் பொறுமையும் அன்பும் பண்பும் உள்ளவன் தான்

கோவிலுக்குள் நுழையலாம் இதில் எந்த தகுதியும் பெற்றிடாத நான் எப்படி உன்னை

தொடுவதில் உண்மையாகும் அதுதான் ஊரைச் சுற்றி நான் வீட்டிற்கு வரவில்லை

இப்பொழுது வந்திருக்கிறேன் இனியேனும் வாழ வழி செய்யுங்கள்... துணை நிற்க

கடவுளை கும்பிட்டு விட்டுப் பாதையில் வந்து அமர்ந்தனர் தம்பி அது தெரிகிறதே


அதுதான் நான் பிறந்த திருவிளர்ச்சோலை பசுமையான கிராமம் நல்ல தாய் தந்தைக்கு

நான் ஒரே மகன் நான் பிறந்த வீடு மிகவும் செல்வம் குவியும் இடம் என்னை நல்ல

பள்ளியில் தான் சேர்த்தனர்.

என் தந்தை ஒருநாள் பாம்பு தீண்டி இறந்தார்.

அப்பொழுது என்னைக் கேட்க ஆள் இல்லாமல் திமிரு தலைக்கேறி அலைய

தொடங்கினேன்... என் தாய் நல்லவன் என்ற நம்பிக்கையில் பணம் நகையினை

எல்லாவற்றையும் பத்திரப்படுத்த மாட்டாள். பார்க்க பார்க்க எனக்கு அனுபவிக்க ஆசை

வந்தது என் கண்ணுக்கோ மனதிற்கும் எதுவும் தவறு என்று படவே இல்லை என்னை தன்

உயிரினும் மேலாக நினைத்து என் தாய்க்கு அவளின் இறப்பு வரை சாக்கடை குணம்

தெரியவில்லை.

நல்ல வேலை அவள் அறிந்திருந்தால் 80 ஆண்டுகாலம் உயிரோடு இருந்திருக்க மாட்டாள்

என் தாயால் இந்த ஊரிலே எத்தனை வீட்டுப் பிள்ளைகள் படித்தார்கள் நான்தான் புத்தி

கெட்டு அலைந்தவன் மெல்ல மெல்ல வீட்டில் இருந்து பணம் திருடுவேன் அந்த பணத்தை

கொண்டு என்னை போலவே ஊர் சுற்ற தயாராக இருக்கும் நண்பர்களை தேடிப் பிடித்துக்

கொண்டேன்.

நாளடைவில் போதை ஏற்றும் பாக்குகள் புகையிலை என நாளடைவில் புகைக்கவும்

தொடங்கினேன் பழக்கம் அதிகரிக்க அதிகரிக்க நட்பு வட்டம் பெரிதாகியது.. கையில்

மதுக்கிண்ணம் ஏந்தி இன்பத்தின் உச்சி வரை சென்றேன்.


என் தாயிடம் பொய்களை கூறி அந்த தெய்வத்தை நம்ப வைத்து வீட்டில் நகைகளை

எல்லாம் வாங்கி தொழில் தொடங்குவதாக கூறி அவளையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி விட்டு

நானும் என் பாதையில் நடந்தேன் நாட்கள் நகர்ந்தன எனக்கு என் தாய் அழகான ஒரு

பெண்ணை திருமணம் முடித்து வைத்தாள்.

ஒரு இரவு தான் என் மனைவி என்னோடு தங்கினார் பின் அவளின் தாய் வீட்டிற்கு

போனவள் மறுவாழ்வை தேடி போய்விட்டார் என் தாய் இந்த சம்பவம் ஏன் நடந்தது

என்று என்னை அப்பொழுதும் தீயவனாக பார்க்கவில்லை..

முதன்முதலாக நம்பினால் என் தாய் இந்த நம்பிக்கை என்னை மேலும் வளர்த்தது நான்

திருச்சியை விட்டு வெளியூர்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது என்று தாயிடம் பொய்

சொல்லிவிட்டு ஊர் ஊராக சென்று செல்வத்தை எல்லாம் போதிக்க அர்ப்பணம்

ஆக்கினேன்.

நான் கேட்டேன் என்பதை விட நாலு பேரை கெடுத்தேன் என்பதுதான் இன்னும் அவலம்..

தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்தாள்.. என்னை நம்பிய உயிர் என்னை பிரிந்தது வீட்டில்

தனிமையாகப்பட்டேன் .
பின்பு தான் வெளியில் சென்றால் கொஞ்சம் கூட எனக்கு மரியாதையும் என் மீது

மற்றவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை என்பதை உணர்த்தேன்.

என் அக்கம் பக்கத்து வீட்டார்கள் கூட என்னை எத்தனை நாட்களாக வெறுத்து உள்ளார்

என்பதை புரிந்து கொண்டேன்.

அந்த புனிதவதியால் தான் என்னை இத்தனை காலம் மதித்தனர் என்பதையும் உணர்ந்தேன்.

என்னால் மேலும் அவ்வீட்டில் இருக்க முடியவில்லை.

தீய பழக்கங்களிலும் என் தீய எண்ணங்களுக்கும் மறுவாழ்வு தேடி தான் இந்த

ஆசிரமத்திற்கு வந்துள்ளேன். தம்பி தற்பொழுது எனக்கு என்று உள்ள எனது வீட்டை இந்த

மறுவாழ்வு மையத்திற்கே எழுத போகிறேன் .

அப்பொழுதுதான் என் தாயின் ஆன்மா உண்மையிலேயே சாந்தி அடையும் நான்

இதுவரை நானாக வாழ்ந்து விட்டேன் இனியேனும் நான் என்பதை மறந்து மனிதனாக

வாழ போகிறேன்.

12. சொல்வதற்கு இல்லை

08.01.2009

கோயம்புத்தூர்
அன்பு தோழிக்கு வணக்கம்!

என்ன மாலா நல்லா இருக்கியா ? உன் கடிதம் கிடைத்தது பரவாயில்லை நீயாவது நன்றாக

உள்ளாயே அதுவரை எனக்கு நிம்மதி.

நான் இங்கே வேலை தேடி நொந்து விட்டேன். நிறைய நேர்முகத் தேர்வை பார்த்து

விட்டேன் ஒன்றும் சரியில்லை என அனுப்பிவிட்டனர். கை நிறைய பட்டம் வைத்திருந்து

ஒன்றும் சரியில்லை போதாது என்று பேசுகின்றனர். எனக்கு பொறுப்புகள் இருப்பதால்

உன்னை போல் திருமணம் செய்து கொள்ள முடியாது.. நான் வாழ்க்கையை ஒவ்வொரு

நொடியும் ஒவ்வொரு யுகமாக கழிக்கிறேன். உனக்கு ஒரு முக்கியமான செய்தி நான்

அதிர்ந்த காட்சி ஒன்றைக் கண்டேன்...

அண்மையில் ஒரு நேர்முகத் தேர்வுக்கு போனேன் அது ஒரு கணினி மையம் நான்

புடவை கட்டிட்டு போனேன் அங்கே இருக்கும் பெண்கள் மார்பு தெரியும் அளவுக்கான

உடையும் போட்டு வேலை பார்க்க வந்தாங்க நான் தேர்வில் தேர்வாகவில்லை

முன்பெல்லாம் காரணம் கேட்டதில்லை எனவும் எனக்கும் கோபம் கொப்பளித்தது

நிறுவனம் முதல்வரின் அறையில் பெண்களின் நிர்வாண படங்கள் அவர்களின்

உதவியாளராக ஒரு பெண் அலங்கோலமாய் நான் கூட அந்த அறையில் தங்க வேண்டும்

என்று கூறினார்...

இருந்தால் நீங்கள் இது 21 ம் நூற்றாண்டு சேலைக்கு விடுதலை தாருங்கள் வேலை

தருகிறோம் என்றான் நீயும் தாய்க்கு தான் பிறந்தாய் நீ என்ன பிறப்பா என்று கேட்டு

வெளியேறினேன்.

என் வீட்டில் கூட திட்டித் தீர்த்தனர் நீ சுடிதார் போட்டுவிட்டு போக வேண்டியதுதானே

என வற்புறுத்தினர் நான் போகவில்லை அங்கிருந்து பெண்கள் கூட என்னை கொஞ்சம்

பொறுத்துக்கோங்க நல்ல சம்பளம் என்றார்கள்.

ஒருத்தன் மட்டும் பார்க்க வேண்டிய உடம்ப ….

பங்கு போட்டு பணம் சம்பாதிக்கிறது எனக்கு பிடிக்காது.


முகத்தில் அறைந்தார் போல் சொல்லிட்டேன். என்ன மாலா நான் ஒன்றும் தப்பா

பேசலையே நான் படித்த கல்வியைக் கட்டில் போட இல்லையே கண்ணியமாக

வாழத்தானே?

நீ தான் பதில் சொல்லணும்……

எனக்கு மறக்காமல் பதில் கடிதம் எழுது.

ஆனால், இப்ப நான் இருக்கிற நிலைமையில உன் கடமையை ஆறுதலா இருக்கு நல்லா

தூங்கு நல்லா சாப்பிடு அழகா ஒரு குழந்தை பெத்துக்கோ அப்படியே நல்ல ஒரு வேலை

இருந்தா எனக்கு ஒரு வேலை பாரு என்னை விட்டு பிரிந்து விடாதே என் உயிர் தோழி .

இப்படிக்கு

உன் உயிர் தோழி

அ.உஷா.
13. பதில் இல்லா வினா

தம்பிகளா! …..

நீங்க படிக்கிறீங்களா? ….

உங்களுக்கு எந்த ஊர் ?....

அண்ணே! நாங்கள் எல்லோரும் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி

ஆண்டு படிக்கிறோம்.

எங்களுக்கு சொந்த ஊரு சிதம்பரம்.

நல்ல படிக்கணும் தம்பி . அப்பா அம்மா உண்மையாகவே கடினப்பட்டு படிக்க

வைக்கிறார்கள். நீங்கள் அவர்களின் நிலையறிந்து நடந்துக்கோங்க. பார்த்துக் கொள்ளுங்கள்

இன்றைக்கு தண்ணீர் இழுப்பு அதிகமாகவே இருக்கு..

ரொம்ப தூரம் போகாதீங்க சொல்லுவதை கேளுங்க சரியா தம்பி ?


எங்களுக்கு நீச்சல் தெரியும் நாங்க எல்லாரும் கடலில் பள்ளியில் படிக்கிறப்ப நீச்சல்

அடித்து முதல் மூன்று இடத்தை நாங்கள் மூவரும் பிடித்து விட்டோம் நீங்க உங்களோட

பிள்ளைங்க அங்க விளையாடுது முதல்ல அதை பாருங்கள்.

ஏ கண்ணுங்களா! ஏறு கரையேறு அடிச்சேன்னா தெரியுமா என்னடி நீ துணி துவைப்பதற்கு

முன் இதுங்கல புடிச்சு மேலே ஏற்றிவிடு சரிங்க நம் பிள்ளைகளை நான் கண்டிக்கிறேன்

பாவம் அடிக்காதீங்க இது அறியாமல் செய்யுது அந்த தம்பிகளை சொல்லுங்க... ரொம்ப

ஆழம் அங்கே அதிகம் நீண்ட தூரம் போகிறார்கள் மனசு பக்குனு இருக்குங்க தம்பி...

தம்பி.... என்ன அண்ணே ஆழம் அது இதுன்னு சொன்னீங்க இங்க பாருங்க ஒன்றுமே

இல்லை கழுத்தளவு தான் இருக்கு வா வா அண்ணே வேண்டாம் தம்பி நானே இங்கு

உயிரோடு சுவற்றுக்கும் மேற்பட்டவங்களை காப்பாற்றி இருக்கிறேன் சடலம் கூட சிக்காமல்

எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து இருக்காங்க அந்த தம்பிங்க தான் நல்ல தம்பிங்க

பாருங்க அவங்க கரையேறிட்டாங்க……

நீங்க ஏன் இப்படி அடம் பண்றீங்க ஏதோ சொல்லிட்டேன் நீங்க விளையாடுவது சரின்னு

படல கமலம் வாடி பிள்ளைகளை கூப்பிட கிளம்பலாம்... சிறிது நேரம் கழிந்தது கூட்டத்தில்

ஒரு பலத்த குரல் அண்ணன் சிக்கிட்டான் ஓடி வாங்க


மறந்துராதீங்க அப்பவே சொன்னேன் இல்ல என்னப்பா உங்க வயது... ச்சீ... ச்சீ.... என்னங்க

நீங்க பத்திரமா வாங்க தம்பியை காப்பாற்றிடுங்க சரி கமலம் பயப்படாத கீழே இறங்கிய

சோமு எழுந்திரிக்கவே இல்லை... நவீன காப்பாற்ற சென்ற சோமமும் சிக்கிவிட்டார் கமலம்

செய்தியை கேட்டதும் அடித்துக் கொண்டு அலறினாள்.

இந்த பாவிகளா எத்தனை முறை கூறினோம் நீங்கள் போனதும் இல்லாமல் இப்படி என்

வாழ்க்கையையும் பறித்து விட்டீர்களே உங்களின் மேதைப்படிப்பு சொல் பேச்சு

கேளாமையைத் தான் சொல்லிக் கொடுத்தாங்களா வயது கோளாறில் நீங்கள் போட வந்த

முழுக்கு என் வாழ்வையே பறித்து விட்டதே... அழாதீங்க மன்னிச்சிடுங்க நாங்களும்

நண்பனை இழந்து இருக்கும் நாங்கள் பணக்காரர்கள் நீங்கள் தயவு செய்து நாங்கள் தரும்

பணத்தை வாங்கிக் கொண்டு மன்னிச்சிடுங்க... உங்களின் பணம் எனக்குத் தேவை இல்லை

கேள்விக்கு பதில் தாருங்கள் என் கணவனை தர முடியுமா அவளின் வினாவிற்கு பதில்

கூற முடியாமல் வெட்கிக் குனிந்தனர்.


14. இதயங்கள்

என்னங்க... என்னங்க... சொல்லுறதை கேளுங்க பெண் மேல நம்பிக்கை தேவை தான்

எதற்காக நீங்க இரவு 11 ஆகுது இன்னும் ஆறு மணிக்கு வர வேண்டிய புள்ள

வரவில்லை எனில் கொஞ்சமாவது வருத்தம் இருக்குதா உங்களுக்கு.. நீங்களாம் என்ன

மனுஷங்க நான் ஒருத்தி கத்திட்டு 18 இருக்கேனே ஐயோ ஐயோ ஏன் ராகினி இப்படி

புலம்பறமா அவளுக்கு பஸ் கிடைச்சிருக்காது அதன் தாமதமாகுது இதுக்கு போய் சரிமா நீ

பதறிட்ட நான் போய் பார்க்கிறேன்.. பேருந்து நிலையம் ரயிலடியாம் சரியா கதவை உள்

பக்கம் பூட்டிக்கமா கணவன் தேடப் போனான்... ரோகினியால் வீட்டில் இருப்புக்

கொள்ளவில்லை அவளது யோசனை எண்ணங்கள் எல்லாம் என்னவோ நினைக்கத்

தோன்றினாள் வீட்டை விட்டு அவளும் கிளம்பினால் பேருந்து நிலையம் வந்தால்


ஏ...ரோகினி இந்தாம்மா என்னம்மா ஏன் இந்த நேரத்தில் இங்க வந்த அவளோட தோழி

வீட்டில் எல்லாம் தேடிட்டேன்....

இப்பதான் எனக்கும் கவலையா இருக்குமா நாம் வேண்டுமானால் எதுக்கும் காவல்

நிலையம் போய் புகார் தந்திடலாமா சொல்லுமா என்னங்க முட்டாள் தனமா பேசுறீங்க...

அப்புறம் நம்ம பெண்ணோட வாழ்க்கை நாளை பாதிக்குமே... வேண்டாம்ங்க... என்னடி நீ

பேசுற புகார் தருவது நம்ம பெண் வாழ்க்கையை கெடுக்கும் என்று தவறான கோணத்தில்

கொண்டு போக மாட்டாங்க.. அவங்களுக்கும் இதயம் இருக்குமா நல்லதை எண்ணிப்

பார்த்து போகலாம் நல்லது நடக்கும் நம்ம பெண் நமக்கு பத்திரமாக கிடைத்தால் சரிங்க

வாங்க போகலாம் நீ யாருப்பா என்ன ரெண்டு பேரும் யாரு நாங்க கணவன்

மனைவிதான் தப்பா எண்ணாதீங்க எங்க பெண் நேற்று மாலை 6 மணிக்கு வேலை முடித்து

வீட்டுக்கு வர வேண்டியவள் இன்னும் வரவில்லை அதான் பதறுகிறோம் புகைப்படம்

தாங்க புகார் எழுதி கொடுங்க கண்டுபிடிக்கலாம் பதறாதீங்க நீங்க எழுதி கொடுத்துட்டு

வீட்டுக்கு போங்க….

சரிங்க ஐயா உங்களை நம்பி தான் போகிறோம் சரி சரி உங்க பொண்ணுக்கு காதல் அது

இதுன்னு இன்னும் எதுவும் உண்டா தப்பா எண்ணாதீங்க எங்க சந்தேகம் அதான்

கேட்கிறோம். எங்களுக்கு தெரிஞ்சு அப்படி ஏதுமில்லை அப்படி எதுனாலும் அவன் எங்க

கிட்ட சொல்லிட்டா கூட போதும் அந்த பையன் காலம் முழுவதும் கண்கலங்காம

காப்பாற்றுவான் எங்களுக்கு சம்மதம் தான் நீங்க எப்படியாவது எங்கள் பெண்ணை

கண்டுபிடித்து தாங்க தயவு செய்து.. சரிங்க நீங்க வீட்டுக்கு போங்க நல்ல செய்தி வந்து

சேரும் விடிந்ததும் நம்பிக்கையுடன் வீடு திரும்பினர் ரோகிணியும் அவளது கணவனும்…..

[விடிந்தது காவல் நிலையத்தில் இருந்து எந்த தகவலும் இல்லையே என்று கவலைப்பட்ட

வண்ணம் இருந்தனர் காவல் நிலையத்திலோ காலை விடிந்தவுடன் பணிக்கு வந்த காவல்

அதிகாரியிடம் நடந்ததை விவரித்து விட்டு இரவு வேலையில் இருந்தவர் வீடு திரும்பினார்.


செல்வி கதவைத் திற என்னங்க வாங்க உள்ள வாங்க நம்ம பையன் பண்ணி இருக்கிற

கூத்த கேளுங்க வேலைக்கு போனவன் அங்கேயே ஒரு பெண்ணை காதலிச்சு குடும்ப

மானத்தை காற்றிலே பறக்க விட்டுட்டான். அவனை கொன்னுடுங்க இப்படி ஒரு பிள்ளை

தேவையில்லை அவளை பாருங்க எவ்வளவு கேவலமாக இருக்கா பாருங்க இதுக்கா

இவனை பெரிய படிப்பு படிக்க வச்சோம். நம்ம தகுதி என்ன நான் உயிரையே விட்டு

இருப்பேன் உங்கள பார்த்து கேட்கணும்னு உயிரோட இருக்கேன் .

அடியே ஏன்டி ! இப்படி பத்ரகாளி போல குதிக்கிற என்னடி அப்படி தப்பு பண்ணிட்டான்

அவன் இதயத்தைத் தொட்டது அந்த பெண் அவளுக்கும் அவனை பிடிச்சிருக்கு

அவ்வளவுதான் நீ மனதை போட்டு குழப்பிக்காத...இந்த பாழாய்ப்போன சமூகத்திற்காக

போய் ....

இரண்டு பேரையும் கூப்பிடு !இருவரும் வந்து காலில் விழுந்தனர் எந்திரிங்க என்றான்.

மருமகளின் முகத்தைக் கண்டால் பதறிப்போனான் ஒரு நிமிடம்.. மறு நிமிடமே

தேற்றிக்கொண்டு உன் தாய் தந்தையர் உன் முகவரி என்ன எல்லாம் கேட்டு விட்டு

கவலைப்படாதமா உங்களை நான் இல்லை உங்க அம்மா அப்பா கூட பிரிக்க மாட்டாங்க

நீ செய்தது தவறுமா உங்களை பெற்று படிக்க வைத்து ஆளாக்கி இருக்கோம் இதை நீங்க

பக்குவமா எடுத்துச் சொல்லி இருந்தால் நாங்க உண்மை அன்பிற்கு இந்த உலகத்துல எந்த

பெற்றோரும் கிடையாது. என்கிட்ட தான் புகார் தந்திட்டு, என்ன பண்ணி இருந்தாலும்

பரவாயில்லை.
என் பெண் மட்டும் எனக்கு வேண்டும் என்று ஒரு வார்த்தை தான் சொன்னாங்க வாங்க

உங்க வீட்டுக்கு நம்ம எல்லாரும் போகலாம் மருமகள் வீட்டிற்குள் நுழைந்தனர்.


ரோகினியும் அவள் கணவனும் பெண்ணைக் கண்டதும் மகிழ்ந்தனர் கட்டி முத்தமிட்டனர்

இதை கண்ட மருமகன் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாள் தவறுதான்

ஆனால் எங்களால் பிரிய இயலவில்லை என்று அழுதார்கள் மாமனார் சரி போகட்டும்

மாப்பிள்ளை இனி இதயங்கள் இனிக்க வாழுங்கள் எங்கள் இதயமும் இப்பொழுது தான்

உயிர் பெறுகிறது பெண் நல்ல கணவனைத் தேடினாள் என்றும் வாழ்க வளர்க.

15. பயணம் பாதையானது

குமரா நல்ல படிக்கணும்பா தம்பி படிப்பு தான் நம்ம சொத்துன்னு இருக்கணும் அப்பா

எந்த நிலையில் மனசு அலைபாயக் கூடாது நீ அம்மா இல்லாத பையன்னு எப்பவும்

எண்ணிடாதப்பா அப்பா நான் இருக்கேன் உன் அப்பா அம்மா எல்லாம் நான் தான் உன்

மனசுல எந்த கவலையும் இல்லாமல் நல்லா படிக்கணும் உனக்கு என்ன வேண்டும்

என்றாலும் நான் செய்கிறேன் சரி தம்பி பள்ளிக்கூடம் போயிட்டு வா நேரம் ஆகிவிட்டது

சரிப்பா நான் போயிட்டு வரேன்

பள்ளிக்குப் போனான் குமரன் ..அங்கே இந்த ஆண்டுக்கான கல்விச் சுற்றுலா

பேச்சுவார்த்தைகள் நடந்தது ஆசிரியர் மாணவர்களிடம் மாணவர்களே நாளை உங்கள்

வீட்டில் அனுமதி பெற்றுக் கொண்டு வாருங்கள் நாம் செல்லவிருக்கும் ஊர் சென்னை

அதற்கு போக வர மற்றும் உணவுக்கான செலவு என ரூபாய் 500 - ஐ வாங்கிட்டு வரணும்..

நாம் வருகிற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் நாம்

சென்று வரப் போகிறோம் மாணவர்களுக்கு பாடம் ஓடவில்லை மேற்கொண்டு சென்னை

தான் கனவாக இருந்தது பள்ளி முடிந்தது வீடு திரும்பினார்கள் பிள்ளைகள் ..குமரன்

அப்பா வேலை முடிந்து வரும் வரை காத்திருந்தான் அப்பா வந்தார் அப்பா அப்பா

என்றபடி ஓடினான் என்ன குமரா என்ன இவ்வளவு மகிழ்ச்சி ஏதேனும் போட்டிகளில்


வென்று விட்டாயா இல்லை இன்றைக்கு பள்ளியில் தேர்வில் ஏதேனும் வெற்றியா நன்று

என்றபடி அணைத்துக் கொண்டு முத்தமிட்டார்

அப்பா இல்லப்பா தங்கள் அனுமதி வேண்டும் கொடுப்பீர்களா சத்தியம் செய்யுங்கள்

அப்பொழுதுதான் சொல்லுவேன் என்றான் குமரன் மகனே எதுவானாலும் சரி செய்கிறேன்

உனக்காகத் தானடா நானே! எங்கள் பள்ளியில் சுற்றுலா அழைத்துப் போக

திட்டமிட்டுள்ளனர் சென்னைக்கு தங்களின் அனுமதி வேண்டும் மகனே நீ தாராளமாக

சென்று வா அதற்கென்ன படிப்பு என்பது அறிவை வளர்க்கத் தான் நீயும் எத்தனை நாள்

தான் இந்த ஊரிலேயே சுற்றி வருவாய் சென்று வா இன்பமாக ஆனால் ஜாக்கிரதையாக

சென்று வரணும் பா சரியா? எவ்வளவு பணம் பள்ளியில் கட்ட வேண்டி இருக்கும்

ரூபாய் 500 கட்டணமாக வேண்டும்.. சரி நாளை நானே பள்ளிக்கு வந்து கட்டி விடுகிறேன்

நீ போய் படித்துவிட்டு சாப்பிடவா நன்றாக உறங்கு சரி அப்பா பொழுது விடிந்தது

குமரன் பள்ளிக்கு போனால் அப்பா மோகனம் பள்ளிக்கு வந்து சுற்றுலாவிற்கு பணம்

கட்டினார் குமரன் அளவு கடந்த இன்பத்தோடு இருக்க நாட்கள் நெருங்கின புறப்படும்

வேளை வந்தது..ஆத்துரை விட்டு புறப்படும் நேரம் குமாரா மகனே பத்திரமாக சென்று வா

இந்தா உனக்கு பிடித்ததை வாங்கிக் கொள் செலவுக்கு வச்சுக்கப்பா இதில் 500 ரூபாய்

உள்ளது சரிப்பா நான் சென்று வருகிறேன் குமரன் கிளம்பினான்


வண்டி சென்னை சென்றடைந்தது சென்னையில் உள்ள கடற்கரைகள் , மிகவும் அழகான

வடபழனி முருகன் கோயில் கண்களை கவரும் ரங்கநாதன் தெரு மற்றும் சென்னையில்

இயங்கும் மின்சார ரயில் பறக்கும் ரயில் என பலவற்றை சுற்றி பார்த்தனர் ஞாயிறு இரவு

வந்தது சென்னை பேருந்து நிலையத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டனர்.

அனைவரும் வண்டியில் ஏறினர் வண்டி புறப்பட்டது வழியில் சில மாணவர்கள் தண்ணீர்

தாகமாக உள்ளது என்று கூறியதும் சென்னை தாம்பரம் அருகில் வண்டி நிறுத்தப்பட்டது

அங்கிருந்த கடையில் தண்ணீர் வாங்கி தந்தனர் ஆசிரியர்கள் அதற்கிடையில் குமரன்

யாருக்கும் தெரியாமல் வண்டியை விட்டு கீழே இறங்கி விட்டான் வண்டி புறப்பட்டது

ஆத்தூர் சென்றடைந்தது விடிந்ததும் வண்டியை விட்டு எல்லோரும் இறங்கினர்.

குமரன் காணவில்லை பதறினர். அவனது அப்பாவுக்கு செய்தி சென்றது அவர் பள்ளியின்

மீது கடுமையாகத் தாக்கி பேசினார் .

காவலிலும் புகார் செய்தார் நாட்கள் ஓடின ஒரு தகவலும் இல்லை.. மோகனின் இதயம்

படபடத்தது குமரனோ சென்னையின் அழகையும் கலைநுட்பத்தையும் கல்விக்

கூடங்களையும் பார்த்து இனி பணிக்கு சென்ற பின்பு தான் ஆத்துரை பார்க்க வேண்டும்

என எண்ணி தந்தைக்குக் கடிதம் எழுதினான்


அன்புள்ள அப்பா என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் நான் உங்களின் ஆசையை

சென்னையிலிருந்து நிறைவேற்றுகிறேன் எனக்கு நம்ம ஆத்துரைப் பிடிக்கவில்லை இந்த

சென்னையைத் தான் பிடித்திருக்கிறது.

எல்லா வசதியும் இங்கே உள்ளது நான் தங்கள் தந்த பணத்தை வைத்து 10 நாட்கள்

ஓட்டினேன் பிறகு ஒரு பள்ளி முதல்வரிடம் சென்று நான் எனது விருப்பத்தை ‌


சொல்லி

அழுதேன் அவரும் என் தவறை சுட்டிக்காட்டி பள்ளியிலும் அவரது வீட்டிலும் எனக்கு

இடம் சோறு உடை எல்லாமே தந்து உள்ளார். நான் இங்கு நலமாக உள்ளேன் நீங்களும்

என்னை இந்த ஊரில் இருந்து பிரிக்காமல் இருப்பீர்கள் என்றால் என்னோடு இருக்க

சென்னைக்கு வந்து விடுங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் அன்புடன் குமரன் என்று

எழுதி அனுப்பி வைத்தான்.

ஒரு மனதாக குமரனின் மீது கோபம் இருந்தாலும் மகனின் ஆசைக்காக மோகன்

சென்னைக்கு வந்துவிட்டான் பயணம் பாதையை மாற்றியது நன்மைக்குத்தான் என இரண்டு

வருடம் பின்பு தான் தெரிந்தது திடீரென பெய்த புயல் மழையில் ஆத்தூர் கிராமமே நீரில்

மிதந்தது குமரனின் பள்ளிக்கூடம் இடிந்தது மோகன் மனதில் அப்பொழுதுதான் குமரனை

முழுமையாக மனம் மன்னித்தது.


16. ஐந்தறிவு

வைகை வரும் கேட் போட்டாங்களா அண்ணே!

ஆமாம் ஐயா சரிங்க சிறிது மணித்துளிகள் கடந்தன கேட்டை மீறி மக்கள் தண்டவாளத்தை

கடந்தபடி இருந்தனர் .

வாகனங்களும் பள்ளி செல்லும் பிள்ளைகளும் தூரத்தில் வைகைக்கு முன்பாகவே கடக்க

வேண்டிய சரக்கு ரயில் வந்து கொண்டே இருந்தது அனைவரின் பார்வையும் ரயில் மீது

இருந்தது திடீரென ஒரு பள்ளி குழந்தை தாவியது அதிர்ந்து போனேன்.

கத்தியதில் குழந்தை சுதாரித்துக் கொண்டு பின்வாங்கி ஓடியது அருகே பார்த்துக்

கொண்டிருந்தவர்கள் தூரத்தில் வரும் ரயில் எப்பொழுது வரும் பாதையை கடக்கலாம்

என்பதிலேயே குறியாக இருந்தனர்.

பேருக்கு பாப்பா வா இங்கே என்று கத்திட்டு அவனவன் அவசரத்தில் இருந்தானுங்க இது

ஒரு பக்கம் நடக்க …..


அவசர அவசரமாக கடந்து வந்து குனிந்து கேட்டை தாண்ட முயற்சித்த குழந்தையின்

பொறுப்பற்ற அப்பாவும் அம்மாவும் திரும்பி கூட பார்க்காமல் அவங்க வண்டியை

நுழைப்பதிலேயே கவனமாய் இருந்தாங்க.

இதையெல்லாம் கண்டு மனம் பொறுக்காமல் கோபப்பட்டு அவங்கள கத்த இராமன்

போதும் உங்க பணம் சம்பாதிக்கவும் சொத்து சேர்க்கவும் பின்னால உங்க குழந்தை

தண்டவாளத்தில் தாவரது கூட தெரியாமல் சொத்தை இழக்க பார்த்தீங்களே! என்ன

அவசரம்?.....

ஆறறிவு இருந்து பயன்படுத்தாமல் இப்படி அழிஞ்சு போறீங்களே !

திட்டிக்கொண்டே இருக்கையில் இந்த பக்கத்தில் இருந்து வந்து சரக்கு ரயில் நடைமேடை

அருகே சென்று நின்றது.

ஒரு பக்கம் மறு பக்கம் வைகை கடக்க காத்திருக்க வேண்டி இருக்கும் சூழலில் சிலர்

மேலும் கடக்க முயற்சிக்க வைகை வேகமாக வரத் தொடங்கிற்று அதே சமயம்

எதிர்புறத்தில் இருந்து சில முட்டாள் மனிதர்கள் கடக்க முயற்சித்து நடந்தனர்.

தண்டவாளம் வரை சென்ற குரங்கு ஒன்று இருபுறமும் திரும்பி பார்த்தது தூரத்தில் வரும்

வண்டியை பார்த்து பின்னோக்கி திரும்பி வந்து வண்டி கடக்கும் வரை காத்திருந்தது.


பிறகு கடந்தது காத்திருந்த சிலர் மட்டும் கடந்தனர் ஐந்தறிவு பெற்ற உயிரின் செயல் கூட

இந்த மனிதர்களை பாதிக்கவில்லையே இவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று திட்டிக்

கொண்டே பயணித்தான்.

17. அடமானம்

இளஞ்செல்வி எழுந்திரு புறப்பட நேரமாகுது இன்னுமா தூங்குற இன்றைக்கு கல்லூரி இலக்கிய

மன்ற விழா மறந்திடுச்சா உனக்கு சொல்லுடி மணி என்ன

ம்..ம்..

மணி 8 ஆகிடுச்சு தாமதமா போயிட்டு அங்க திட்டு வாங்கணுமா கிளம்புடி சரி சரி கத்தாதே

எந்திரிச்சிட்டேன் 30 நிமிடம் போதும் கிளம்பிடுவேன் கல்லூரி விடுதியில் இருந்து கல்லூரிக்கு

சென்றனர்.. விழா மேடை அலங்கரிக்கப்பட்டு‌தொடங்க இருக்கும் வேளையில்

பேச்சுப்போட்டிக்கு பெயர் எழுது தமிழ்த் துறை தலைவர் வந்து பெயர் குறித்துக் கொண்டார்

இளஞ்செல்வியும் பரிசுத்‌தொகையின் அழகை எண்ணி தாயின் கஷ்டத்தை உணர்ந்தவனாய்

படிப்பிற்கு உதவும் என்று பேச்சு போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டு தயாரானாள்

விழா தொடங்கிற்று கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அ.கனிவேலன் தலைமையில்

பெண்களின் கல்லூரி என்பதால் அமைச்சர் " பெண்ணின் பெருமை " என்னும் தலைப்பில்

உரையாற்றிய பின் அமர்ந்தார். பிறகுதான் தொடங்கியது பேச்சுப் போட்டி ஒவ்வொரு

போட்டியாளர்களாக மேடை ஏறினர் இளஞ்செல்வியும் மேடை ஏறினாள் முதன்முறையாக


குடும்ப வறுமை காரணமாக " வறுமை " என்கிற தலைப்பில் பேசி முடித்தாள் வெற்றியோடு

ஆம் ஒரு வழியாக போட்டி முடிந்தது இளஞ்செல்வியின் எண்ணம் ஈடேறியது

வெற்றி பெற்று பரிசுத் தொகையை பெற்றாள் மகிழ்ச்சியில் திளைத்த இளைஞர்கள் தோழி

மாலாவுடன் விடுதிக்கு சென்றான் அன்று மாலை கல்லூரி முதல்வரிடம் இருந்து அழைப்பு

வந்தது இளஞ்செல்வி முதல்வரைக் காண சென்றார்

முதல்வர் வா இளஞ்செல்வி வாழ்த்துகள் நான் நினைக்கவே இல்லை நீ படிப்பில் தான்

திறமைசாலி என்று நினைத்தேன் பேச்சிலும் நிரூபித்து விட்டாய் உன் திறமையால் அந்த

அமைச்சருக்கே உன்னை பிடிக்க போய்விட்டது என புகழ்ந்தாள் .. நன்றி நன்றி மட்டும் போதுமா

உன்னை அமைச்சர் இன்றைக்கே பார்க்கணும்னு சொல்லி இருக்கார் நீ போய் அவருக்கு நன்றியா

இருந்துட்டு இன்னைக்கு மட்டும் அங்கேயே தங்கிட்டு வா அவர் மனம் கோணாமல் நடந்துட்டு

காலை வந்தால் போதும் போதும் நிப்பாட்டுங்க... கல்லூரி முதல்வர் என பார்க்கிறேன் இல்லனா

என்ன பண்ணி இருப்பேன்னு தெரியாது நான் கஷ்டப்பட்டு படிக்கிறவ தான் அதுக்காக உடம்ப

விக்கிற பெண் இல்லை ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் நான் கிளம்புகிறேன் விடுதிக்கு.

இளஞ்செல்வி மாலா மாலா என்று அலறியபடி என்னடி என்ன என்று அழாமல் சொல்லுடி

இளஞ்செல்வி முதல்வர் பேசியதை கூறினாள் மாலாவும் இளஞ்செல்வியும் கலக்கத்துடன் இரவு

பொழுதைக் கழித்தனர் மனம் தெரியாதவர்களாய் கல்லூரியின் வகுப்பறைக்குள் நுழைந்து

அமர்ந்தனர் சில மணி‌நேரமே வகுப்பு நடந்தது இடைவேளை நேரம் மீண்டும் முதல்வரிடம்

இருந்து அழைப்பு வந்தது இளஞ்செல்விக்கு ஒன்றும் புரியாதவளாய் மனக்கலக்கத்துடன்

மாலாவிடம் அழுது புலம்பிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்

இளஞ்செல்வி திருந்தி விட்டாயா இல்லையா என மிரட்டினார் கல்லூரியின் முதல்வர்

உடனே நீங்கள் என்ன சொன்னாலும் என்னால் படிப்புக்காக கற்பை அனுமானம் வைக்க

முடியாது என மறுத்து கூறினார் வேண்டுமானால் என்னை கல்லூரியை விட்டு நீக்கி

விடுங்கள் என்று கோபத்துடன் கத்தினாள் சிரித்துக் கொண்டே கல்லூரி முதல்வர் அது

எப்படி அது நடக்காது உன்னை எப்படி அடிபணிய வைக்கணும்னு எனக்கு தெரியும்.

நாளைய உன் அம்மாவை கல்லூரிக்கு வரச்சொல் என உத்தரவு போட்டார் இளஞ்செல்வி


யார் வந்தாலும் சரி வறுமையைக்‌காட்டி என்னை சீரழிக்க விடமாட்டேன் என் தாயும்

அப்படிப்பட்ட பெண் இல்லை நானே முடிவு கட்டுகிறேன் என வகுப்பறைக்குள்

நுழையாமல் விடுதிக்குச் சென்றாள் என்ன செய்யலாம் என யோசிக்கும் வேளையில்

விடுதிப் பெண் பாதுகாவலர் வழியாக செய்தி வந்தது.. அமைச்சர் சந்திக்க இளஞ்செல்வி

புறப்பட வேண்டும் இல்லையெனில் என் கண்ணு முன்பாக உன் அம்மாவை

தொலைபேசியில் அழைத்து நாளைய கல்லூரிக்கு வரவழைக்க வேண்டும் என்றால் சந்திக்க

முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டு பாதுகாவலர் கையில் உள்ள தொலைபேசியை

பிடுங்கி தாயுடன் பேசினாள்.

நாளையே கல்லூரிக்கு வா உன்னுடன் நான் நேரில் பேச வேண்டும் பிறகு நீ முதல்வரை

பார்க்க வேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்தாள் விடிந்தது வழக்கம் போல்

கல்லூரிக்கு புறப்பட்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள் தாயின் வரவை எண்ணி பாடம்

ஓடாதவளாய் படபடப்புடன் இருந்தாலள்‌இளஞ்செல்வி சற்று நேரத்தில் முதல்வர்

அழைத்ததாக இளஞ்செல்வியை அழைத்துப் போனார்கள்..

அறைக்குள் சென்றால் தாய் கண்ணீருடன் நின்றிருந்தாள் படபடப்புடன் அம்மா அம்மா

எப்பொழுது அம்மா வந்த எனக்கு தெரியலையே ஏன் அழுகிறாய் என்ன சொன்னாங்க


இவங்க என்ன பத்தி தப்பு தப்பா சொல்லி இருப்பாங்க உன் பெண் அப்படி‌இல்லம்மா

என்னை நம்பாதே அம்மா என கோபத்துடன் அழுதாள்‌போதும் நிறுத்து இந்தா பாருங்க

உன் பெண் நடத்தையும் சரியில்லை வரவர படிப்பு இருக்கும் அதுக்கு தான் கூப்பிட்டு

சொல்ல அழைத்தேன் புத்தி சொல்லிட்டு போங்க சரிங்க இனி அவள் அப்படி நடந்துக்காத

அம்மா என் பேச்சைக் கேளுமா என்று கெஞ்சினாள் போதும் இனி எனக்கு மகளாய்

இருக்கணும்னா ஒழுக்கமா நடந்துக்க இவங்க பேச்சை அப்படியே கேட்டால் என்னை

அம்மானு கூப்பிடு நான் வருகிறேன்.

உன்னை அறியாத அம்மா பேசக்கூட இடம் தராமல் கிளம்பினாள். முதல்வருக்கு மகிழ்ச்சி

பொங்கியது. அப்புறம் என்ன போய் அழகாய் தயாராகு வண்டி அனுப்புகிறேன் என்று

கூறினார் நடந்த நிலைப்பாட்டை எண்ணி குமுறிக் கொண்டு ஏதும் பேசாதவளாய்

விடுதிக்குள் நுழைந்தாள் தனியாக இருந்த இளஞ்செல்வி புடவையை அவிழ்த்து

கல்விக்காக கற்பை அடமானம் வைப்பதை விட தாய் கூறியது போல் ஒழுக்கம்தான்

சிறந்தது என்று மன உறுதியோடு அவிழ்த்த சேலையில் தூக்கில் இட்டு உயிரை அடமானம்

வைத்தாள். எல்லாம் அறிந்த மாலா அடமானம் ஆன தோழி நினைவில் வெளியில் கூற

முடியாமல் வாடினாள்..
18. சுமை

பிள்ளையே பிறக்காமல் இருந்திருக்கலாம் அம்மா பாவம் நீயும் அப்பாவும் மூன்று பெண்

பிள்ளையை பெற்றதும் போதும் ஆயுள் கைதியா வாழுறதும் போதும் இரண்டு

அக்காவையும் கல்யாணம் பண்ணிட்டு படுற கஷ்டம் போதாதுன்னு இப்ப எனக்கும்

பண்ண துடிக்கிறீங்களா வேண்டாம்.. அதெல்லாம் ஒன்னும் இல்லை பிரேமா நீ வீணாக

உன் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே எங்களுக்கு எங்க பிள்ளைங்க நல்லா

இருந்தா அது போதும் காசு பணம் செலவு ஆனாலும் நீங்க மூணு பேரும் மகிழ்வாக

வாழ்ந்தால் இதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி சரி பெண் பார்க்க மாப்பிள்ளை

வீட்டார்கள் மாலையிலே வராங்களாம் நீ குளித்து தயாராகுமா ஏன் அம்மா இந்த வேலை

இதோடு எத்தனை பேர் வந்தானுங்க எவனாவது கல்யாணம் பண்ண முன் வந்தாங்களா

எனக்கு பிடிக்கல மா

ஏதோ உனக்காக தான் இந்த முறையும் வந்து நிற்க போகிறேன் சரி சரி நீ கிளம்பு

முதலில் மாலை நேரம் ஆனது வீட்டில் கேசரியும் பஜ்ஜியும் வழக்கம்போல் தயாரானது

அம்மாவிடம் போய் பிரேமா கிண்டல் அடித்தாள் அம்மா நீ மட்டும் நல்ல உணவகம்

வைத்தால் நல்லா ஓடும் சலிக்காமல் எத்தனை முறை பண்ணுற அம்மா ஒரு யோசனை

இந்த முறை வந்து பார்க்கும் பையனுக்கும் என்னை பிடிக்கலைன்னா கேசரிக்கும்


பஜ்ஜிக்கும் காசு வாங்கிடலாம் என்ன அம்மா சரியா அடியே அவங்க வருகிற நேரம்

இப்படியெல்லாம் பேசாமல் உள்ள போ கோபத்தை பாரு சிறிது நேரத்தில் மாப்பிள்ளை


வீட்டார் வந்தனர் பிரேமாவையும் வெளியே அழைத்தனர் பிரேமாவிற்கு பெரிய இன்ப

அதிர்ச்சி வழக்கம் போல் அல்லாமல்

பெண்ணைப் பிடித்துள்ளதாக சொல்லி மாப்பிள்ளை மனோகர் இன்பத்தில் ஆழ்த்தினார்

அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் என முடிவானது

திருமணம் நடந்தது ஆண்டுகள் சில உருண்டோடின அழகான பெண் குழந்தை என

இன்பகரமான வாழ்க்கை என அனைவரும் பேச்சு.. உள்ளுக்குள் உள்ளவருக்குத்தானே

தெரியும் கொல்லன் பட்டறையில் இரும்புக்கு மட்டும் சூடு இல்லை கொல்லனுக்கும்

என்று.. அழுத நிலையிலேயே அம்மாவை காணும் நிவேதாவிற்கு கண்ணீரின் விடை காண

துடித்தாள் அம்மா அழாதே ஏன் அம்மா தினமும் தனியாக அமர்ந்து எந்த நேரமும்

அழுகிறாய் என்றாள் நிவேதிதா.. உன் அப்பாவை நீ விடிந்ததும் பள்ளி செல்லும் முன்

தான் நீ பிறந்தது முதல் கண்டு இருக்கிறாய்... இரவு அவர் வரும்போது தூங்கிடுவ..

உன் அம்மா அவரை மணந்தது முதல் அழுகிறேன் அன்று பள்ளி படிக்கையில் எங்கள்

வீட்டில் இருந்து 7 கி.மீ தூரம் நடந்து ஆற்றைக் கடந்து தண்ணீரில் நீச்சல் அடித்து

படித்தோம் வளர்ந்தோம் இன்று உன் அப்பாவை மணந்த நாள் முதல் இன்று வரை அவர்

மிதக்கும் தண்ணியில் நான் நீச்சல் அடிக்கிறேன் இப்படி என் வாழ்க்கை தண்ணீரால்

தொடங்கி தண்ணீரில் முடிந்து கண்ணீராய் போனது... அடி தாங்க முடியாமல் உடலாலும்

உள்ள த்தாலும் உனக்காகவும்,

என் அப்பா அம்மாவுக்காகவும் உயிரை சுமையாய் சுமந்தபடி இருக்கிறேன் . நீயும் பெண்

என்பதால் மேலும் என் கவலையின் சுமை கூடுகிறது. நம்மைப் போன்ற பெண்களுக்கும்

உன் அப்பாவை போன்றவர்களை இன்னும் பொறுமையோடு சுமக்கும் பூமித்தாய்க்கும்…..

You might also like