You are on page 1of 47

jkpo;ehL muR

Ntiytha;g;G kw;Wk; gapw;rpj;Jiw

gphpT : TNPSC Group II/ IIA Njh;T


ghlk; : jhs; I fl;lhaj; jkpo; nkhop jFjpj;jhs;
gFjp : jpUf;Fws;

fhg;Ghpik

jkpo;ehL muRg; gzpahsh; Njh;thizak; F&g; - II/ IIA Kjy;epiy kw;Wk;


Kjd;ik Njh;TfSf;fhd fhnzhyp fhl;rp gjpTfs;> xypg;gjpT ghlf;Fwpg;Gfs;> khjphp
Njh;T tpdhj;jhs;fs; kw;Wk; nkd;ghlf;Fwpg;Gfs; Mfpait Nghl;bj; Njh;tpw;F
jahuhFk; khzt> khztpfSf;F cjtpLk; tifapy; Ntiytha;g;G kw;Wk; gapw;rpj;
Jiwahy; nkd;nghUs; tbtpy; jahhpf;fg;gl;Ls;sJ. ,k;nkd;ghlf; Fwpg;GfSf;fhd
fhg;Ghpik Ntiytha;g;G kw;Wk; gapw;rpj; Jiwiar; rhh;e;jJ vd njhptpf;fg;gLfpwJ.

ve;j xU jdpegNuh my;yJ jdpahh; Nghl;bj; Njh;T gapw;rp ikaNkh


,k;nkd;ghlf; Fwpg;Gfis ve;j tifapYk; kWgpujp vLf;fNth> kW Mf;fk; nra;jplNth>
tpw;gid nra;Ak; Kaw;rpapNyh <LgLjy; $lhJ. kPwpdhy; ,e;jpa fhg;Ghpik rl;lj;jpd;
fPo; jz;bf;fg;gl VJthFk; vd njhptpf;fg;gLfpwJ. ,J Kw;wpYk; Nghl;bj;
Njh;TfSf;F jahh; nra;Ak; khzth;fSf;F toq;fg;gLk; fl;lzkpy;yh NritahFk;.

Mizah;>
Ntiytha;g;G kw;Wk; gapw;rpj;J Jiw
திருக்குறள் / Thirukkural (கட்டுரைகள்)
2 |
கட்டுரை தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் இருத்தல் வேண்டும்.

(ஒவ்வொரு வினாவிற்கும் 15 மதிப்பெண்கள்)

பயிற்சி எண்-1: திருக்குறள் - ஒரு சமயச்சார்பற்ற இலக்கியம்/நூல்


உலகப் புலவராம் திருவள்ளுவரின் திருக்குறள் பன்னாட்டு அறநூல்களின் தாயாக விளங்குகிறது.
எண்ணற்ற நீதிநூல்கள் இவ்வுலக அளவில் இருப்பினும் ”உலகப் ப�ொதுமறை” என்ற த�ொடருக்கேற்ப
இந்நூல் ப�ொதுமைக் கருத்துகளைத் தன்னகத்தே க�ொண்டு எம்மதத்தார்க்கும் சம்மதமான நூலாக
விளங்கும் பான்மையை இவண் காண்போம்.

சமயச்சார்பின்மை
”எம்மதமும் சம்மதம்; அனைவரின் வழிபாடுகளும் சடங்குகளும் அவரவர் உரிமை; அரச�ோ, தனிநபர�ோ
இவ்விடயத்தில் தலையிட உரிமையில்லை” – இதுவே மதச்சார்பின்மை.

அடையாளம் இன்மை
திருக்குறளின் எந்தக் குறட்பாவிலும் ஒரு குறிப்பிட்ட கடவுளர�ோ, சமயம�ோ, அடையாளங்களள�ோ
முன்னிலைப்படுத்தப்படவில்லை.

”மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எண்ணில் நல்ல கதிக்கு யாதும�ோர் குறையுமிலை”

என்ற (தேவாரம்) திருஞானசம்பந்தரின் வாக்கிற்குத் தேவையான இயல்பான, தேவையான கருத்துகளை


நூல் எடுத்துரைக்கின்றது.

ப�ொதுமைப் பண்புகள்

இந்நூலின் ”இறைவாழ்த்து” எல்லாம் வல்ல இறைவனின் இயல்புகளைக் கூறுகிறது. இறைவன்,


ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், பிறவிப்பெருங்கடல் ப�ோன்ற தொடர்கள் சமயங் கடந்த கடவுள்
நம்பிக்கைக்குப் பாதுகாப்பு தருகின்றது. இக்கூற்றுகள் இறைவனின் ப�ொதுமைக் குணங்களாகக் (General
Characters) கூறப்பட்டுள்ளன. இத்தொடர்களில் எந்தக் குறிப்பிட்ட சமயத் த�ொடர்களும் இல்லை என்பதே
உண்மை!

இறையியல்புகள்
• ”வேண்டுதல் வேண்டாமை இலான்”- விருப்பு வெறுப்பு அற்றவன்.
• ”தனக்கு உவமை இல்லாதான்” – ஒப்பற்றவன்; இணையிலாதவன்.
• ”ப�ொறிவாயில் ஐந்த வித்தான்” – புலன் நுகர்வுகளை அழித்தவன்; ஐம்புலன் நுகர்ச்சிக்கு அப்பாற்பட்டவன்,
என்பன ப�ோன்ற த�ொடர்கள் மனித குலம் கடைபிடிக்கும் இறையன்பின் வெளிப்படை!
பெருமை
பிறப்பொக்கும்! ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற க�ோட்பாடு இயற்கை, நியதி. ”பிறப்பினால்
அனைவரும் சமம் (All are equal by birth) என்பது அனைத்துலகச் சட்டம்; அறிவியல் அணுகுமுறை. அவரவர்
செய்யும் த�ொழிலால் மட்டுமே மக்கள் வேறுபடுவர் என்கிறது வள்ளுவம்.

• ”சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” – என்ற குறளடி இதனை வலியுறுத்தும்.


வையத்துள் வாழ்வாங்கு:
”வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வாணுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 3
இவ்வடியில் இயல்பான நெறிகளுடன் வாழும் ஒருவன் கடவுள் நிலைக்கு உயர்தப்படுவான்” என்பது கருத்து.
”இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை”.
”இயற்கைப் பண்புகளுடன் நேரிய வாழ்வு நடத்தும் ஒருவன், உழைப்போரில் உயர்ந்தவன்” என்பது
வள்ளுவர் க�ோட்பாடு. இதற்கு எம்மதமும் விலக்கன்று, இதனை முறையாக வழங்கும் நூல் திருக்கறள்.

முப்பொருள் நூல்
இந்தியத் தத்துவம் ”அறம்-ப�ொருள்-இன்பம்-வீடு” (தர்மம்- அர்த்தம்-காமம்-ம�ோட்சம்) பற்றிக் கூறத்
திருக்குறள�ோ முதல் மூன்றனுக்கே முதன்மை தந்து ஆக்கப் பெற்றது. சமயம் சார்ந்த ”ச�ொர்க்கம்-ம�ோட்சம்-
முக்தி” (Heaven) பற்றி இந்நூல் எங்கும் பேசவில்லை.

மனிதமே புனிதம்
வள்ளுவம் இவ்வுலக வாழ்வை மதிப்பிடும் நூல்; பாயிரவியல் கூறும் வான்சிறப்பும் அறன் வலியுறுத்தலும்
புனிதத்தின் உச்சம். வான் மழையின் சிறப்பை கூறுகையில் ”விண்ணின் மழைத்துளி மண்ணன்
உயிர்த்துளி” என்று ”இயற்கை வழிபாட்டுக்கு வழி செய்கிறார் வள்ளுவர்.

• ”வாழ்க்கை வாழ்வதற்கே” (Life for Life Sake) என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் க�ொண்டவர்
வள்ளுவர்.
அறத்தான் வருவதே!
• ”அறத்தான் வருவதே இன்பம்” என்பதால் நேர்மையான வழிகள் மூலம் அடைவதே உண்மையான
இன்பம் என்பதை வலியுறத்துகிறார். இக்கூற்று ”சமயவழி இன்பத்திற்குக் கதவைச் சாத்துகிறது.
மானுடத்தை மகிமைப்படுத்துகிறது.
• முகப்புரையின் முன்னோடி! இந்திய அரசியல் சட்டத்தின் 42-வது திருத்தத்தில் சேர்க்கப்பட்ட
”சமயச்சார்பற்ற” (Secular) என்ற ச�ொல்லுக்கு இலக்கணம் வகுத்ததும் முன்னோடியாக விளங்குவதும்
திருக்குறள்!
• உலகப் ப�ொதுமுறை: இந்தியக் குடிமைப் பணி அலுவர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள்
குறிப்பிட்டதைப் ப�ோல இந்நூல் ”உலகப்பொது மறையன்று; உலகப் ப�ொதுமுறை” அதாவது ----
கடைபிடிக்க வேண்டிய நூல்.
• இனம், ம�ொழி, மதம், பண்பாடு, தேசம் கடந்து எல்லைகளற்று விரிந்துள்ள ஒப்பற்ற விடயங்களைக்
க�ொண்ட ”திருக்குறள்-ஓர் சமயச் சார்பற்ற நூல்” என்பதே நடைமுறை உண்மை.

பயிற்சி எண்-2: சமயச்சார்பின்மை என்றால் என்ன?


ƒ சமயச்சார்பின்மை என்பது, அனைத்து மதங்களையும் ஏற்றுக் க�ொள்ளுதல், சமமாக நடத்தல் அவற்றின்
விதிகள் ஒழுங்குகளுடன் ஒரு மதச்சார்பற்ற நாடாக, இந்தியா அனைத்து மதங்களையும் சமமாக
நடத்துகிறது. எம்மதமும் இங்கே தனிப்பட்ட உரிமைகள�ோ சலுகைகள�ோ பெறவில்லை.
ƒ அரசு எம்மதத்திற்கும் சலுகைகளை வழங்கவில்லை. பல்வெறு சமயத்தாரும் அனைத்துச் சடங்குகளையும்
புரிய அரசு அனுமதிக்கிறது. அது சகிப்புத்தன்மை, திறந்த மனம், நேர்மை மற்றும் உலகமயத்தை
உள்ளடக்கியது.
1. புலால் உண்ணாமை
“அவிச�ொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று”
4 |
ப�ொருள்: நெய் உட்பட பல்வேறு ப�ொருள்களையும், பெய்து செய்யும் வேள்வியைவிட ஓருயிரைக் க�ொன்று
உண்ணாமை நன்று.
க�ொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் த�ொழும்.
ப�ொருள்: எவ்வுயிரையும் க�ொல்லாமல் அதன் புலாலை உண்ணாதவனைக் கைகூப்பி எல்லா உயிர்களும்
த�ொழும்.
க�ொல்லாமை, நிலையாமை, ஊழ், அவா அறுத்தல் ஆகிய தலைப்புகள் சமயச் சார்புடைய மக்களின்
அன்றாட நடைமுறைகளாக உள்ளன. ஆனால், திருவள்ளுவர�ோ அவைகள் எல்லாம் எவ்வித சமயச் சார்புக்
கருத்துகளும் அற்ற விதிமுறைகளாக வகுத்துள்ளார். அறவியல் என்ற பெயரில் அவை ஒட்டும�ொத்த மனித
குலத்துக்கும் கற்பிக்கப்பட்டவை ஆகும்.

பெரும்பாலான இலக்கியங்களும், நூல்களும் சமய அடிப்படையில் ஆனவை. சான்றாக மில்டனின்


“ச�ொர்க்க இழப்பு“, “ச�ொர்க்க மீட்பு“ ஆகிய பேரிலக்கியங்கள் விவிலியம் சார்ந்தவை. ஷேக்ஸ்பியரின்
அனைத்து நாடகங்களும் கிறித்தவ மதம் சார்ந்த கருத்துகள் க�ொண்டவை. சமஸ்கிருதத்திலும், பெரும்பாலான
நூல்களும் முந்தைய இந்தியாவின் சனாதன தர்மத்தையும் அல்லது அடிப்படைவாதக் க�ொள்கைகளையும்
க�ொண்டவை. திருக்குறள் மட்டுமே தனது அனைத்துப் பக்கங்களையும் நடைமுறை மற்றும் குறிக்கோளியல்
வாழ்க்கையுடன் கூடிய செய்கைகளைக் க�ொண்டு விளங்குகிறது.

த�ொடர்புடைய அதிகாரங்கள்

1. கடவுள் வாழ்த்து 2. வான் சிறப்பு 3. நீத்தார் பெருமை 4. அறன் வலியுறுத்தல் 5. பெருமை

1. கடவுள் வாழ்த்து
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு“.
விளக்கம்: எழுத்துகளுக்கெல்லாம் முதன்மையானது அகரம்; அதுப�ோல, உலக உயிர்களுக்கெல்லாம்
முதன்மையானவன் இறைவன்.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் த�ொழாஅர் எனின்“.
விளக்கம்: தூய அறிவினை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காவிடின், நூல்களைக்
கற்றதனால் ஆன அறிவினால் பயனில்லை.
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்“.
விளக்கம்: மலர்மேல் அமர்ந்தவனாகிய இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தோரே, இவ்வுலகில் நீடு
வாழத் தகுதி பெற்றோர்.

எல்லாம் வல்ல இறைவனின் ப�ொதுமைப் பண்புகள்:


1. “வேண்டுதல் வேண்டாமை இலான்” – விருப்பு – வெறுப்பு அற்றவன்.
2. “இறைவன்“ - அரசன்.
3. “ப�ொறிவாயில் ஐந்து அவித்தான்” – ஐம்புலன்களால் ஏற்படும் இன்ப துன்பங்களை அழித்தவன்.
4. தனக்கு உவமை இல்லாதான்; அறவாழி அந்தணன்
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 5
5. எண்குணத்தான் – நல்ல பார்வை, நல்ல ந�ோக்கம், நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல முயற்சி, நல்ல
ஒருமைப்பாடு, நல்ல சிந்தனை.

2. வான்சிறப்பு
i) இயற்கை வழிபாடு, சிலம்பின் ஞாயிறு, திங்கள், மாமழை, புகார் நகரச்சிறப்புகள்.
“மாமழை ப�ோற்றதும் மாமழை ப�ோற்றதும்
நாமநீர் வேலி உலகிற்கு
அவனளிப�ோல் மேல்நின்று தான் சுரத்தலான்” - சிலப்பதிகாரம்
“விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி“
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு“
ஒழுக்கு – ஒழுக்கம், வாழ்க்கை.
ii) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பு – உணவு; வலிமை; துப்பார் – உண்பவர்.
iii) “சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வான�ோர்க்கும் ஈண்டு“.
பூசனை – வழிபாடு
விளக்கம்: வானம் வறண்டு ப�ொய்த்து விடுமாயின், விண்ணுலகத் தேவர்களுக்கும் வழிபாடுகள்
நடைபெறா.
iv) “தானம்தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காத தெனின்“.

விளக்கம்: வானம் மழையைத் தரவில்லையெனின், இவ்வுலகில் அரிய சிறப்புச் செயல்களாகிய


தானமும் தவமும் (க�ொடுத்தலும் இறைநிலை முயற்சியும்) நடைபெறா.

3. அறன் வலியுறுத்தல்
i) ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற“.
விளக்கம்: மனதில் குற்றமற்று இருத்தலே அறம் ஆகும்; பிறவகையான அறங்கள் எல்லாம் ஆரவாரத்
தன்மையுடையன.
ii) ”ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்”.
விளக்கம்: நம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் அறச்செயல்களை இடைவிடாது செய்தல் வேண்டும்.

4. பெருமை (Greatness):
i) ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்“.
6 |
விளக்கம்: பிறப்பினால் அனைவரும் சமம், அவரவர் செய்யும் செயல்களால் / த�ொழில்களால் மட்டுமே
அவர்கள் வேறுபட்டவர்கள்.
ii) ”மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்”.

விளக்கம்: சமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருப்பினும், பண்பில்லையெனின் அவர்கள்


மேன்மையுடையவர் அல்லர்; சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருப்பினும் பண்புடைய�ோராயின் அவர்கள்
கீழானவர் அல்லர்.

திருக்குறளின் சிறப்பு பண்புகள்


1. சமயச்சார்புகள், மத அடையாளங்கள் இன்மை.
2. இந்திய அரசியல் சட்டத்திற்கு இசைவான அரசியல் கருத்துகள்.
3. உலக மாந்தர்க்குக் கூறும் ப�ொதுமை அறவுரை.
4. வீடுபேறு – முக்தி – ம�ோட்சம் பற்றிப் பேசாமை.
5. அறம் – ப�ொருள் – இன்பம் பற்றி விரிவாகப் பேசுதல்.
6. பல மதத்தவரும் திருக்குறளைத் தத்தம் நூல் என்னும் உரிமை க�ொண்டாடுதல்.
7. திருக்குறள் ஒரு குறிப்பிட்ட தலைப்பு/பிரச்சனை பற்றி மட்டும் பேசாமை, மனித இருத்தலுக்கான (Human
Existence) ப�ொதுமைக் கருத்துகள் பேசுதல்.
8. ஆத்திகர் – நாத்திகர் அனைவரும் திருக்குறளை முழுமனதுடன் ஏற்றுக் க�ொள்ளல்.
9. திருக்குறள் - சாதி, சமயம், ம�ொழி, இனம், நாடு என எல்லைகளற்று விரிந்த நூல் திருக்குறள்
அறவியலுக்கும், அறிவியலுக்கும் முதன்மை தருதல்.
10. ப�ொதுவாகவே இந்திய தத்துவவியல் (மெய்ம்மையியல்) அறம், ப�ொருள், இன்பம், வீடு (ம�ோட்சம்) பற்றிப்
பேச, திருக்குறள�ோ முதல் மூன்றையும் மட்டுமே வலியுறுத்துகிறது, பேசுகிறது. அது ம�ோட்சம் என்ற சமயம்
சார் கருத்து பற்றி எங்கும் பேசவில்லை.
11. சமயச்சார்பின்மை, இரக்கம், அனைத்தையும் உள்ளடக்கிய சிந்தனை ஆகியவை பற்றி விரிவாக பேசுகிறது.
12. எந்த ஓர் அரசர்/தலைவர் பற்றிய குறிப்பும், கடவுளர் பற்றிய பெயரும், பெருமையும் இன்மை.
13. எந்த ஒரு சமயச்சார்பும் இன்றி மனித குலம் முழுமைக்கும் ப�ொதுவான கருத்துகளின் பதிவு.
14. மானுட நாட்டம் மட்டுமே நூலின் குறிக்கோள்.
15. சமயச்சார்பற்ற இந்திய அரசியல் சட்டத்தின் மாண்பினைக் காக்கும் நூல் திருக்குறள்.
16. இந்திய அரசியல் சட்ட முகப்புரையின் விளக்கம் திருக்குறள் (காண்க: திருக்குறள் – ஓர் அரசியல்
அறிவியல் நூல்) (A Text of Political Science).
17. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதைகளின் எண்ணங்களை திருக்குறள்
வலிமைப்படுத்துகிறது.

பயிற்சி எண்-3: திருக்குறள் - 'ஒரு வாழ்வியல் நூல்' - நிறுவுக.


1. அன்புடைமை: குடும்ப உறுப்பினரிடையே அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கையானது, வறண்ட நிலத்தில்
பட்டமரம் தளிர்ப்பதற்குச் சமம். பட்டமரம் எந்நிலத்திலும் துளிர்க்காது.
2. இல்வாழ்க்கை: குடும்ப வாழ்க்கையில் அன்பும் அறமும் நீடித்தால், அதுவே வாழ்வின் நற்பண்புகளையும்,
பயனையும் விளைவிக்கும்.
3. வாழ்க்கைத் துணைநலம்: மனைவி என்பவள் மாட்சிமைமிக்க குணங்கள் க�ொண்டவளாக விளங்க,
நல்ல பிள்ளைகளைப் பெறுதல் அவளுக்கு அணிகலன்கள் ஆகும்.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 7
4. மக்கட்பேறு: மற்றவர்கள் தன் மகனைச் சான்றோன் எனப் புகழக் கேட்ட தாய், அவனைப் பெற்ற
காலத்தைவிட மிக்க மகிழ்ச்சி அடைவாள்.
5. விருந்தோம்பல்: முகரும்போதே வாடிவிடும் அனிச்ச மலர்போல, விருந்தினரை மாறுபட்ட முகத்துடன்
வரவேற்பின் அவர் மனம் வாடிவிடும்.
6. அடக்கம் உடைமை:
(a) நெருப்பினால் ஏற்பட்ட புண் மருந்தினால் ஆறிவிடும். ஆனால், பிறரின் கடுஞ்சொற்களால் விளைந்த
வடு (தழும்பு) மனக்காயமாக மாறி ஆறாமல் நிலைக்கும்.
(b) ஒருவர் எவ்வொன்றைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும். இன்றேல் ச�ொற்குற்றத்தில்
அகப்பட்டுத் துன்புறுவர்.
7. ஒழுக்கம் உடைமை: நல்லொழுக்கம் நல்ல குடிமைப் பண்புகளை உருவாக்கும், தீய�ொழுக்கம்
குடும்பத்தையே இழிவுக்குள்ளாக்கி விடும்.
8. ப�ொறையுடைமை: ஆணவத்தால் நமக்குத் தீங்கு செய்தவர்களை, நாம் நமது ப�ொறுமை என்ற குணத்தால்
வென்று விட வேண்டும்.
9. அழுக்காறாமை: ஒருவன் தன் நெஞ்சத்தில் ப�ொறாமையற்றவன் என்ற நிலையை வாழ்வின்
க�ொள்கையாகக் கடைபிடிக்க வேண்டும்.
10. தீவினையச்சம்: தீய செயல்கள் தீய விளைவுகளையே தரும். ஆகையால், அவற்றைத் தீயைவிடத்
தீயதாகக் கருதி ஒதுக்க வேண்டும்.
11. ஒப்புரவறிதல்: வாழ்க்கையில் முயன்று ஈட்டிய ப�ொருள்களையெல்லாம், இல்லாதவருக்குக் க�ொடுத்து
உதவுவதே மேம்பட்ட குணம்.
12. ஈகை: இல்லாதவர்க்குக் க�ொடுப்பதே ஈகை, பிறவகையான க�ொடையெல்லாம், பலனை எதிர்பார்த்துச்
செய்வனவாகும்.
13. புறங்கூறாமை: பகைவர் குற்றத்தைப் பெரிதுபடுத்திப் பார்ப்பதைவிட ஒருவன் தன்மேலுள்ள
குற்றங்குறைகளை ஆராய்வானாயின், உலக உயிர்கள் தீமையின்றி வாழும்.
14. வெட்டிப் பேச்சு பேசுவ�ோர், மக்களாகக் கருதப்படார். அவர்கள் பதர் எனப்படும் ப�ொய் நெல்லைப்
ப�ோன்றோர், அவர்களால் எவருக்கும் பயனில்லை.
15. அறன் வலியுறுத்தல்:
(a) மனதில் குற்றம் இல்லாது இருப்பதே அறம், பிறவகையெல்லாம் ஆரவார ஆடம்பரத் தன்மை உடையன.
(b) நம்மால் முடிந்த வரையில் அறச்செயல்களை ஒருவன் இடைவிடாமல் செய்து க�ொண்டேயிருக்க
வேண்டும்.
16. இனியவை கூறல்: நல்ல ச�ொற்களை விரும்பி ஒருவன் பேசுகையில் அவனிடம் இருக்கும் தீமையெலாம்
விலகி அறம் பெருகும்.
17. செய்ந்நன்றியறிதல்:
(a) ஒருவற்குக் காலத்தில் செய்யும் சிறு உதவி கூட, இந்த உலகை விடப் பெரியதாகும்.
(b) நாம் பிறர்க்கு எவ்வுதவியும் செய்யாமல் பிறர் நமக்குச் செய்யும் உதவி கடலைவிடப் பெரியதாகும்.
(c) பிறர்க்குச் செய்யும் உதவிக்கு “அளவு“ என ஒன்றில்லை. உதவியைப் பெறுவ�ோரின் குணத்தைப்
ப�ொறுத்ததே உதவியின் அளவு.
18. ஒப்புரவறிதல்:
(a) ஊர் நடுவே உள்ள குளம் நிறைந்திருந்தால் உயிரினம் நன்மை பெறுவதைப் ப�ோல அறிவுடையவனின்
செல்வம் அனைவருக்கும் பயன்படும்.
(b) உள்ளூரில் பழுத்த மரம் எவ்வாறு உயிரினங்களுக்குப் பயன்படுகிறத�ோ, அதைப்போல நல்லவரின்
செல்வம் எல்லோர்க்கும் பயன் தரும்.
8 |
(c) ஒரு மருந்து மரம் (Herbal Tree) பயன்படுவதைப் ப�ோல, பெருந்தன்மையுடையவனின் செல்வம்
எல்லோர்க்கும் பயன்படும்.
19. ஒப்புரவறிதல்: பிற உயிர்களின் உணர்வுகளை அறிந்தவனே மனிதன், இன்றேல் அவன் செத்ததற்குச்
சமம்.
20. கள்ளாமை-திருடாமை: பிறர் ப�ொருளை அவர் அறியாமல் கவர்வோம் என மனதால் நினைப்பதே
பெருங்குற்றம்.
21. வெகுளாமை-சினங்கொள்ளாமை: ஒருவரின் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் க�ொல்லும் க�ோபத்தைவிட
அவனுக்குப் பகைவன் யாருமில்லை.
22. க�ொல்லாமை: நன்னெறி எனப்படுவது யாது என்றால், எவ்வுயிரையும் க�ொல்லாமல் இருப்பதே ஆகும்.
23. கல்வி: த�ோண்டத் த�ோண்ட சுரக்கும் ஊற்றினைப் ப�ோல, மக்களுக்கு நூல்களைப் படிக்கப் படிக்க
அறிவு வளரும், பெருகும்.
24. கல்லாமை: ஆடுகளம் இல்லாமல் சூதாடுவதைப் ப�ோன்றது, ஒருவன் நூலறிவு இல்லாமல் கற்றவர்
சபையில் பேச முயல்வது.
25. கேள்வி: நல்லொழுக்கம் உடைய சான்றோரின் ச�ொற்பேச்சு கேட்டு நடப்பது, வழுக்கும் சேற்று நிலத்தில்
நடக்கும் ப�ோது தாங்கி நிற்கும் ஊன்றுக�ோலைப் ப�ோன்றதாகும்.
26. சிற்றினம் சேராமை: ப�ொழியும் மழைநீர் சேரும் நிலத்திற்குத் தகுந்தாற்போல் மாறும், அதுப�ோல மக்கள்
தாம் சேர்ந்திருக்கும் கூட்டத்தால் குணம் பெறுவர்.
27. காலமறிதல்: தகுந்த நேரம் வரும் வரை காத்திருந்து இரை கவ்வும் க�ொக்கைப் ப�ோல ஒருவன், தம்
செயல் வெற்றிபெறத் தகுந்த சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
28. இடனறிதல்: நீர்நிலையை விட்டு நீங்கினால் முதலையைப் பிற உயிர்கள் வென்றுவிடும். தண்ணீரில்
மட்டும் தான் முதலையின் செல்வாக்கு. அதுப�ோல, ஒருவர் வெற்றி பெற “இடம்“ முதன்மையானது.
29. சுற்றம் தழால்: தனக்குக் கிடைத்த இரையை (உணவை) காகம் தன் இனத்தைக் கூவியழைத்து
உண்ணும். அப்படிப்பட்ட தன்மையுடையவர்களுக்கே செல்வம் மேன்மேலும் பெருகும்.
30. அறிவுடைமை: அறிவுடையார் வேறு எச்செல்வம் இல்லையெனினும் எல்லாம் உடையவர் ஆவார்.
அறிவிலார் செல்வந்தர் ஆயினும் தம் முட்டாள் தனத்தால் அவற்றை இழந்து விடுவார்.

பயிற்சி எண்-4: திருக்குறள் அன்றாட வாழ்வுடன் த�ொடர்புடைய நூல்

1. The Possession of Love : அன்புடைமை


“அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த் தற்று“.
ப�ொருள்: அன்பின்றி வாழும் வாழ்க்கையானது, பாலை நிலத்தில் பட்ட மரம் தளிர்ப்பதற்குச் சமம்.

2. Domestic life/Familial life : இல்வாழ்க்கை


“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது“.
ப�ொருள்: இல்வாழ்க்கையில் அன்பும் அறமும் இருந்தால், நல்ல பண்புகளையும் பயனையும் தரும்.

3. The Worth of Wife : வாழ்க்கைத் துணைநலம்


“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு“.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 9
ப�ொருள்: மனைவியானள் இல்லத்திற்கு நல் அணிகலன், அவளுக்கு நல்ல புதல்வர்களைப் பெறுதல் சிறந்த
அணிகலன்.

4. The Wealth of Children : மக்கட்பேறு


“ஈன்ற ப�ொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”.
ப�ொருள்: தன் பிள்ளை, பிறரால் சான்றோன் எனக் கேட்கும் தாய், அவனை ஈன்ற ப�ொழுதைவிட மிக
மகிழ்வாள்.

5. Hospitality : விருந்தோம்பல்
“ம�ோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
ந�ோக்கக் குழையும் விருந்து“.
ப�ொருள்: அனிச்ச மலர் முகர்ந்தவுடனே வாடும். அதுப�ோல, மாறுபட்ட முகத்துடன் ந�ோக்கினால் விருந்தினர்
மனம் வாடுவர்.

6. (a) The Possession of Self-Restraint : அடக்கம் உடைமை


“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”.
ப�ொருள்: தீப்புண் மருந்தினால் ஆறிவிடும். ஆனால், பிறரால் ஏற்பட்ட மனக்காயம் ஆறாத வடுவாகி விடும்.
(b) Whatever they fail to guard, over lips men guard should keep,
“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
ச�ோகாப்பர் ச�ொல்லிழுக்குப் பட்டு“.
ப�ொருள்: ஒருவர் எவ்வொன்றைக் காக்கா விடினும் நாவை அடக்கிப் பேச வேண்டும். இன்றேல்
ச�ொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். (ச�ோகாப்பர் - துன்பப்படுவர்).

7. The possession of Decorum : ஒழுக்கம் உடைமை


“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்“.
ப�ொருள்: நல்ல செயல் ஒருவனை உயர்த்தும். தீச்செயல் அவனை இழிந்தவனாக்கி விடும்.

8. The Possession of Patience : Forbearance : ப�ொறையுடைமை


“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்“
ப�ொருள்: செருக்கினால் நமக்குத் தீமை செய்தவரை நாம் நமது ப�ொறுமையால் வெல்ல வேண்டும்.

9. Not Envying : அழுக்காறாமை


“ஒழுக்காறாக் க�ொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு“.
ப�ொருள்: ப�ொறாமையின்மை என்ற க�ொள்கையை ஒருவன் தன் வாழ்வின் வழிமுறையாக க�ொள்ள
வேண்டும்.
10 |
10. Dread of Evil Deeds : தீவினையச்சம்
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”.
ப�ொருள்: தீய செயல்கள் தீய விளைவுகளையே தரும். ஆகையால், அவற்றைத் தீயை விடத் தீயதாகக் கருதி
ஒதுக்க வேண்டும். (ஒழுக்கு - வாழ்க்கை முறை, அழுக்காறு - ப�ொறாமை).

11. Duty to society : Reciprocity – ஒப்புரவறிதல்


“தாளாற்றித் தந்த ப�ொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் ப�ொருட்டு”.
ப�ொருள்: பாடுபட்டு ஈட்டிய ப�ொருள் தேவைக்கு அதிகம் இருப்பின் பிறர்க்கு உதவ வேண்டும்.

12. Giving-Charity : ஈகை-க�ொடுத்தல்


“வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து“.
ப�ொருள்: இல்லாதவர்க்கு க�ொடுப்பதே ஈகை. பிற அறங்கள் எல்லாம் பலனை எதிர்பார்த்துச் செய்வதாகும்
(குறியெதிர்ப்பு – எதிர்பார்த்துச் செய்யும் ஈகை - aimed at expectation).

13. Not Backbiting : புறங்கூறாமை


“ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு?”
ப�ொருள்: பிறர்குறை காண்பதை விடத் தன் குற்றங்குறைகளை ஆராய்ந்தால் உயிர் வாழ்வுக்குத் தீமை
இல்லை. (ஏதிலார் – பிறர்; பகைவர். மன்னும் உயிர்க்கு – நிலைபெற்ற உயிர்களுக்கு).

14. Against Vain Speaking : பயினில ச�ொல்லாமை


“பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்”.
ப�ொருள்: வெட்டிப் பேச்சுப் பேசுபவன் மனிதன் அல்லன். அவன் பதர் ப�ோன்றவன். (பதர் - ப�ொய்நெல், பதடி
- பதர், ப�ொய் நெல் Chaff - பயனற்ற ப�ொருள், பதடி).

15. Assertion of the Strength of Virtue : அறன் வலியுறுத்தல்


(a) “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற“.
ப�ொருள்: மனத்தில் குற்றம் இல்லாதிருப்பதே அறம். (மாசு – குற்றம், ஆகுல நீர – ஆரவாரத்தன்மையுடையன
- wasted).
(b) “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்“.
ப�ொருள்: நம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் அறச்செயல்களைப் செய்ய வேண்டும். (ஒல்லும் வகையான்
– முடிந்த வரையில், ஓவாதே - இடை விடாது, அறவினை - நற்செயல்களை).
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 11
திருக்குறள் கட்டுரைகள்

அன்பார்ந்த தேர்வர்கள் கவனத்திற்கு,


தமிழ் வழி/ஆங்கில வழிப் படித்த இளநிலை, முதுநிலை, ப�ொறியியல் மற்றும் மருத்துவப் பட்டதாரிகளாகிய
நீங்கள், திருக்குறளின் கருத்துகளை நன்கு புரிந்து க�ொண்டு உள்வாங்கி, எந்தத் தலைப்பில் அத்தலைப்புத்
த�ொடர்பான எவையேனும் 6 குறட்பாக்களை மேற்கோள் காட்டியும் அவற்றிற்கேற்பச் சிறு உட்தலைப்புகள்
இட்டும் 300 ச�ொற்களுக்கு மிகாமல் எழுதுங்கள் !
1. கட்டுரையின் த�ொடக்கத்தில் 30 அல்லது 40 ச�ொற்களில் முன்னுரை,
2. ஐந்து அல்லது ஆறு உட்தலைப்புகள் (Sub-Titles),
3. இறுதியில் 30 ச�ொற்களில் இதுகாறும் கூறியவற்றைத் த�ொகுத்து முடிவுரை என எழுதுவது உங்களின்
தமிழ்த் தகுதியினை உயர்த்தும்.

குறிப்பு: எழுத்துப் பிழையின்றி எழுதுதல் கூடுதல் தகுதி.


வாழ்த்துகள்!

மாதிரிக் கட்டுரை-1

உணவு உண்ணும் முறைகளைப் பற்றி வள்ளுவத்தின் கருத்து

முன்னுரிமை
ந�ோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது மக்கள் அன்றாட வாழ்வில் எழுந்த வாக்கு. இது பிற்காலத்தில்
இலக்கிய வாக்காக, சான்றோர் வாக்காக மாறிவிட்டது. ப�ொது வாழ்வில் பணியாற்றுபவர்கள் உள்ளத்தின்
உறுதியும், அறிவின் தெளிவும் கெடாமல் காத்து க�ொள்ள வேண்டும். இதற்கு முக்கியமாக வேண்டப்படுவது
நாவடக்கம். இதனை வள்ளுவர் மருந்து எனும் அதிகாரத்தின் மூலம் கூறுகிறார்.

செயற்கை உணவு முறை


விலங்குகளும், பறவைகளும் இயற்கையாகவே தம் உடலுக்கு ஏற்ற உணவையும், அதன் அளவையும்
அறிந்து உண்ணுகின்றன. அவற்றின் நாக்கும் அளவறிந்து உண்ணும் கருவியாக அமைந்துள்ளது. மக்கள்
நாக்கும் த�ொடக்கத்தில் அந்த ஆற்றல் பெற்றிருந்தது. ஆனால், பகுத்தறிவும் எண்ணும் ஆற்றலும் வளர வளர
புலன்களின் இயற்கை ஆற்றல் இல்லாத�ொழிந்தது. இதனை வள்ளுவர் “மாறு அல்ல” என்ற ச�ொல்லின்
மூலம் மனிதர்கள் வாழும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இயற்கையான உணவினை உண்ண வேண்டும்
என்பதனைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
”அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து.”

உண்ணும் முறை
பழங்காலத்து மருத்துவ முறைப்படி ஒருவனுடைய கையில் நாடி பார்த்து அவன் உற்றந�ோய் இன்னது
என்று காண முடியும். அவ்வாறு காணும் ப�ோது உடலில் வாதம், பித்தம், சிலேத்துவம் என்னும் மூன்றும்
மிகாமலும், குறையாமலும் இயற்கையான அளவில் இருந்தால் ந�ோயற்ற நிலை என்று கூறுவார்கள். இந்த
மூன்றில் ஒன்றோ, இரண்டோ மிகுதியானாலும், குறைந்தாலும் ந�ோய் உண்டாகும்.
”மிகினும் குறையினும் ந�ோய் செய்யும் நூல�ோர்
வளமுதலா எண்ணிய மூன்று.”
12 |
முன் உண்ட உணவு எவ்வாறு சீரணமானது என்பதை ஆராய்ந்து அறிந்து, அந்த அளவைக் கடைப்பிடித்துப்
ப�ோற்றிப் பிறகு அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், உடம்பிற்கு மருந்து
என்று ஒன்று வேண்டியதில்லை.
”மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது ப�ோற்றி உணின்”.
முன் உண்ட உணவு செரிமானம் ஆன பிறகு, உண்ண வேண்டியதை இன்ன அளவுதான் வேண்டும்
என்று உறுதி செய்து க�ொண்டு அதன் பிறகு அந்த அளவு உணவை உண்ண வேண்டியது கடமை. அதுவே,
உடம்பைப் பெற்றவன் உடம்பை நெடுங்காலம் காத்துச் செல்லும் வழியாகும்.
”அற்றால் அளவறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு”.

உணவே நஞ்சு
உடலுக்குத் தேவையான உணவை ஆராய்ந்து தெளிந்து அந்த உணவின் குறைந்த அளவு இன்னது
என்று உறுதி செய்து உண்கின்றவரிடம் இன்பம், உடல் நலம் தலைதூக்கி நிற்கும். அதுப�ோல, மனத்தின்
விருப்பத்திற்கு இயைந்த அளவு புலால் மிகுதியாக உண்பவனிடம் ந�ோய் தலைகாட்டி நிற்கும்.
”இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் ப�ோல நிற்கும்
கழிபேர் இரையாண்கண் ந�ோய்.”
பசித்தவன் அளவிற்கு ஏற்றவாறு நாவை கட்டுப்படுத்தாமல் ஒன்றையும் ஆராயாமல், அளவு மீறி மிகுதியாக
உண்டால் ந�ோயும் எல்லை மீறித் தலைக்காட்டும்.
”தீயளவு அன்றித் தெரியான் பெரிதுண்ணின்
ந�ோய் அளவு இன்றிப் படும்.”

மருந்து
ந�ோய் தீர்க்கும் மருத்துவர் வந்த ந�ோய் என்ன ந�ோய் என்று ஆராய்ந்து அந்த ந�ோய் என்ன காரணத்தால்
வந்தது என்று உறுதி செய்து அதனைத் தணிக்கும் வழி என்ன என்று உறுதி செய்து ப�ொருத்தமான
முறையைக் கையாள வேண்டும்.
”ந�ோய்நாடி ந�ோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”
ந�ோயாளி, ந�ோயைத் தீர்க்கும் மருத்துவன், மருத்துவனுக்குத் துணையாகும் மருந்து. அம்மருந்தினைத்
தப்பாமல் செய்து ந�ோயாளிக்குக் க�ொடுப்பவன் என்று மருந்து 4 உட்பிரிவுகளைக் க�ொண்டது எனக்
குறிப்பிடுகிறார்.

முடிவுரை: இங்ஙனம் வள்ளுவர் ஒரு மனிதன் ந�ோயில்லாமல் வாழ உணவு உண்ண வேண்டிய
முறையினைப் பற்றியும், ந�ோய் ஏற்படின் அதனைக் கண்டறிந்து குணமடையும் வழிமுறையும் குறிப்பிடுகிறார்.

மாதிரிக் கட்டுரை-02

பெண்ணியம் - திருக்குறளில் பெண்ணியம் சார்ந்த கருத்துகள்

முன்னுரை
திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஒரு நிலவுடைமைச் சமூகமாகும். அச்சமூகத்தில் பெண்கள்
இல்லத்திற்குரியவர்களாக மட்டுமே இருந்துள்ளனர். ஆண்கள் புற உலகில் செல்வாக்குடன் ஆதிக்கம்
பெற்றும் இருந்துள்ளனர். அச்சமூகச் சூழலில் அறம் உரைக்கப் பாடிய திருக்குறளில் அக்காலப் பெண்களின்
வாழ்வியல் நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இடம் பெற்றுள்ள பெண்மைக் குணமான
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 13
கற்பு, ஒழுக்கம், கணவன்-மனைவி உறவு, இல்லத்தைப் பேணும் பண்பு முதலானவற்றை இக்காலப்
பெண்ணிய பார்வையில் இங்கு காணலாம்.

கற்புத்தன்மை
புராதனப் ப�ொதுவுடைமைச் சமூகத்தில் பாலியல் வேறுபாடு இல்லாமல் உறவு வைத்து வாழ்ந்து
வந்துள்ளனர். நிலவுடைமை வர்க்கம் த�ோன்றிய பின் ச�ொத்துக்களைத் தம் வாரிசுக்குத்தான் க�ொடுக்க
வேண்டும் என நினைத்து நிலவுடைமையாளர்கள் தம் குழந்தைதான் என்பதை நிரூபிக்க பெண்களைக்
கற்பு எனும் க�ோட்பாட்டில் நிலை நிறுத்தியுள்ளனர். இங்குதான் ஆணாதிக்கச் சமூகம் த�ோற்றம் பெறுகிறது.
அக்கற்புக் க�ோட்பாட்டை வள்ளுவரும் தம் குறட்பாக்களால் கூறியிருப்பதால் அதை ஓர் ஆணாதிக்க சமூக
கருத்தியலாகவே காண முடிகிறது.
இவ்வாழ்வில் கற்பு என்னும் உறுதி இருக்க பெற்றால், அம்மனைவியை விட வேறு செல்வம் கிடையாது.
”பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்”.
கற்பு நெறியில் தன்னையும் காத்துக் க�ொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த
புகழையும் காத்து தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது.

கணவன்-மனைவி உறவு
பண்டைக்காலச் சமூகத்தின் ஆண்கள் மிகுதியாக உழைப்பில் பங்கெடுத்தால் அவர்களே சமூகத்தில்
முன்மையானவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். வள்ளுவர் வாழ்ந்த காலக் கட்டத்திலும் அதேநிலை என்பதால்
பெண்கள் கணவனின் உழைப்பைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழல் இருந்துள்ளது. அந்நிலையை
வள்ளுவர் தன் படைப்பில்
”பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு”.
பெண்கள் கணவரைப் ப�ோற்றி தம் கடமைகளையும் செய்வாரானால் பெருஞ்சிறப்புடைய மேல் உலக
வாழ்வைப் பெறுவர்.
மனைவி நற்குணம் ப�ொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் ப�ொருந்திய
மனைவி அமைந்தால் பயனற்றதாகும். “நற்குணம் ப�ொருந்திய மனைவி அமையாவிட்டால் வாழ்க்கை
சூன்யமாகிவிடும். இந்த பண்பு மற்றும் நற்குணம் என்பது ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக
வரையறுத்துள்ளனர்.” ஆண்களின் பண்பாட்டை எதிர் ந�ோக்கும் சமூகம் அதை வற்புறுத்தவில்லை. ஆனால்
பெண்களிடம் பண்பாட்டையும், மரபையும் வற்புறுத்தியுள்ளனர். பெண்களை இல்லத்திற்குரியவர்களாகக்
கூறிவிட்டு இல்லச் சுமைகளிலிருந்து ஆண்கள் விலகிக் க�ொள்கின்றனர்.

பெண்ணை இழிவு படுத்தல்:


பெண்கள் இல்லத்தில் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களுக்கு வெளியுலக அனுபவம் இருப்பது இல்லை
என்றும், ஆதலால் அவர்களிடம் சிந்தனைத்திறன் குறைவு என்றும், அவர்களின் பேச்சைய�ோ, கருத்தைய�ோ
கேட்டு நடப்பது கேடு விளையும் என ஆணாதிக்கச் சமூகத்தினர் கருதியுள்ளனர். இக்கருத்து குறளிலும்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
”மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் ப�ொருளும் அது”.
மனைவியை விரும்பி அவள் ச�ொன்ன படி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். கடமையை
விரும்பியவர்க்கு வேண்டாத ப�ொருளும் அதுவே எனக் கூறப்பட்டுள்ளது. கணவனை வணங்கி அவனுக்கு
ஏவல் பணி செய்யும் ஓர் அடிமைப் பெண்ணாக வற்புறுத்தப்படுவதைக் காண முடிகிறது.
”தெய்வம் த�ொழாஅள் க�ொழுநன் த�ொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”.
14 |
கடவுளை வழிபடாது கணவனைத் த�ொழும் பெண் பெய் எனக் கூறின் மழை பெய்யும் என்பது கற்பு பற்றிய
நடைமுறை வணக்கம். தெய்வத்தை விடக் கணவன் அதிக சக்தி படைத்தவனாகக் காட்டப்பட்டுள்ளான்.
இது ஆண்களின் சமூக மேலாண்மையைக் காட்டுகிறது. பெண்கள் கணவனை வணங்கி, ஏவல் பணி
செய்வதைத் தவிர சமூகத்தில் பிற பணிகளில் பங்கெடுத்ததாகக் காட்டப்படவில்லை.

இல்லமும், பெண்ணும்:
தந்தை வழிச்சமூகத் த�ோற்றத்திற்குப் பின் பெண்களின் இயக்கத்தை இல்லறத்தில் நிலை நிறுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு “இல்லாள்” “மனையாள்” “வீட்டுக்காரி” என்ற இடம் க�ொடுத்து அவர்களை இல்லத்தில்
அடைத்துள்ளனர். வீட்டில் கணவன், பிள்ளை, விருந்தினர் இவர்களிடம் பரிவுடனும், பணிவுடனும் நடந்து
க�ொள்ள வேண்டும் என நீதி ப�ோதிக்கப்பட்டுள்ளது.
”மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்”.
இல்லத்திற்குத் தேவையான நற்பண்பு பெண்ணிடம் இல்லாவிட்டால் அவள் எவ்வளவு சிறப்புடையவளாக
இருந்தாலும் பயனில்லை.

மாதிரிக் கட்டுரை-03

அன்றாட வாழ்வில் திருக்குறளின் பங்களிப்பு

திருவள்ளுவர் கட்டமைக்கும் சிறந்த குடும்ப அமைப்பைத் தெளிவுபடுத்துக


உலக அறநூலாக விளங்குவது திருக்குறள். எல்லோருக்குமான ப�ொதுவான நீதிகளைச் ச�ொல்வது
இவ்வறநூல். தனி மனிதன், அவனால் ஆக்கப்படும் குடும்பம் பற்றிய நெறிகளைத் திறம்படச் ச�ொல்கிறது
இந்நூல். மனிதன் ஒரு சமூக விலங்கு அவன் சமூகத்தைச் சார்ந்தே வாழ வேண்டும், சமூகத்தின் அடிப்படை
அலகு, குடும்பமே. அக்குடும்பம் நலமுடன் அமைய வேண்டியதன் தேவையைத் திருக்குறள் தெளிவுபடக்
கூறுகிறது. அதன் வகைமைகளை காண்போம்.

இல்வாழ்க்கை
கணவனும்-மனைவியுமாக அமைகின்ற இல்வாழ்க்கையில் இருவரும் ஒருவர்க்கொருவர் உற்ற
துணையாக இருத்தல் வேண்டும் என்பதை வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரம் வலியுறுத்துகிறது.
”மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”.
இக்குறள், குடும்பத்தின் பெருமைக்கு மனைவியையே காரணியாக்குகிறது. பெற்ற பிள்ளைகளை
நல்லவராக்கிச் சமூகத்திற்குத் தருவது அவளது மிகச்சிறந்த அணிகலன் என்கிறது. பிள்ளைகளை மிகச்
சிறந்தவர்கள் ஆக்குவதை விட மிகச்சிறந்த செல்வம் இல்லை என்கிறார் வள்ளுவர். சிறந்த பிள்ளைகளை
உருவாக்கி விட்டால் எப்பிறவியிலும் தீமைகள் சேரா என்பது வள்ளுவர் தரும் நம்பிக்கை.

மனைவியின் பெருமை
மிக அரிதான நற்குணங்கள் உடையவராக மனைவி அமைந்து விட்டால், ஒருவனின் வாழ்வில் எல்லாமே
நல்லதாகி விடும். ”இல்லதுஎன் இல்லவள் மாண்பானால்?” எனக் கேட்கிறது வள்ளுவம். பெண் ஆனவள்
தன்னைக் காத்துத் தன்னைக் க�ொண்டவன் ஆகிய கணவனையும் பேணி இணையராக இன்புற்று
வாழ்வதே மிகச்சிறந்த குடும்பத்திற்கு அடிப்படை என்கிறது திருக்குறள்.
”தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்
ச�ொற்காத்துச் ச�ோர்விலாள் பெண்”
இல்லறக் கடமைகள் பெரும்பாலும் பெண்ணையே நம்பியிருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 15
கணவனின் கடமை
ஆகச்சிறந்த குடும்பஸ்தன் என்பவன், இடைவிடா முயற்சிகளில் முனைந்து தன் குடியை உயர்த்துவதையே
ந�ோக்கமாகக் க�ொண்டிருப்பான் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குடும்பத்தலைவனின்
ப�ொறுப்புகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவதே இக்குறளின் ந�ோக்கம்.
”இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை”
துறவியர், வறுமையர், இரப்போர் அனைவருக்கும் இல்லத்தலைவனே துணையாக இருத்தல் கடமை
என்கிறது வள்ளுவம்.
”துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இரந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை”
இக்குறள் இல்லறத்தில் உள்ளோரின் ப�ொதுக் கடமைகளையும், விருந்தோம்பற் பண்பினையும் விளக்குகிறது.

அறமே அடிப்படை
”அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல”
என்ற குறள், இல்லவாழ்வோர், அறவழிகளின் மூலமே இன்பம் பெற வேண்டும் என்பதையும், மற்ற
மறவழிகளின் வழிப்பெறும் இன்பம் இழிவானது என்பதையும் கூறுகிறது. இல்லறத்தின் ந�ோக்கம்
இவ்வுலகியம் இன்பம் அதனை அடையும் வழிமுறைகள் நேர்மையானவையாக இருத்தல் நலம் என்பதே
இதன் சாரம்.
ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், ந�ோயாளிகள் மற்றும் முதிய�ோர், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும்
குடும்பஸ்தன் என்பான் துணைவனாக இருக்க வலியுறுத்துகிறது திருக்குறள். பழிச்சொற்களுக்கு அஞ்சி,
பகுத்து உண்ணும் குணம் உடையவனே சிறந்த குடும்பத்தலைவன் என்கிறது வள்ளுவம்.
”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
இக்குறள் இல்வாழ்க்கை நிறைந்த பயனடைய, அன்பும் அறமுமே அடிப்படை என்கிறது. இவ்விரண்டும்
இல்லாத குடும்ப அமைப்பு எவ்வளவு வசதிகளை உடையதாயினும் மேம்பட்டதன்று என்பது வள்ளுவக்
க�ொள்கை.

மக்கட்பேறு !
”எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே –
அது நல்லவராவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே”
என்ற பாடல், மனைவி, தாய் என்ற இருவகைப் பாத்திரம் ஏற்கும் பெண்களின் பெருமையைப் பேசுகிறது.

விருந்தோம்பல்
இல்லறத்தில் இருந்து இல்வாழ்வுக்குரிய ப�ொருள்களையும், வீட்டையும் ப�ோற்றிக் காத்து வாழ்வதெல்லாம்
தன்னை நாடி வந்த விருந்தினர், துறவியர், ஆதரவற்றோர், யாசகர் ஆகிய�ோரைக் காத்துப் ப�ோற்றவே
என்பதனை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.
”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் ப�ொருட்டு”
ஆக மிகச்சிறந்த குடும்பக் கட்டமைப்பு என்பது ஊரும், பேரும், காரும் அல்ல. நல்ல கணவன், நல்ல மனைவி,
நல்ல பிள்ளைகள் என்பதனை வான்புகழ் வள்ளுவம் நிறுவுகிறது !
16 |
மாதிரிக் கட்டுரை-04

அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்களிப்பு

இல்லறமும், நல்லறமும் பற்றிய வள்ளுவத்தின் சிந்தனைகள் பற்றி ஒரு கட்டுரை வரைக.


”திருக்குறள் உலகப்பொதுமுறை” என்பது இந்தியக் குடிமை அலுவலர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
அவர்களின் கருத்து: தனிமனிதன், அவனால் ஆக்கப்படும் நெறிகளைத் திறம்படச் ச�ொல்கிறது திருக்குறள்.
மனிதன் ஒரு சமூக விலங்கு, சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம், மனிதனும் அவன் சார்ந்த குடும்பமும்
ஒழுங்காக அமைந்தால் சமூகமே நல்லதாகிவிடும். திருக்குறள் அன்றாட வாழ்க்கைக்கு வலியுறுத்தும்
நெறிகளை இவண் காண்போம்.

இல்வாழ்க்கை
வள்ளுவப் பேராசான் கூறுவது, குடும்பப் பெருமையை மனைவியையே சாரும்; நல்ல பிள்ளைகளே
அவளின் சிறந்த அணிகலன்கள் என்கிறது.
”மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”

மனைமாட்சி
மிக அரிதான நற்குணங்கள் உடையவளாக மனைவி அமைந்து விடின், அக்குடும்பத்திற்கு வேறு
பெருமையே இல்லை என்பது வள்ளுவம்.
”இல்லதுஎன் இல்லவள் மாண்பானால் உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை?”
இல்லத் தலைவியாகிய பெண், தன்னையும் காத்துத் தான் க�ொண்டவனையும் காக்கும் ப�ொறுப்புடையவள்
என அறிவுறுத்துவது வள்ளுவத்தின் சிறப்பு.
”தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
ச�ொற்காத்துச் ச�ோர்விலாள் பெண்”

கணவனின் கடமை
ஆகச்சிறந்த குடும்பத் தலைவன், இயல்வான வழிகளில் முயன்று தனது குடியை உயர்நிலைக்குக்
க�ொண்டுசெல்பவனே என்கிறார் வள்ளுவர்.
”இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை”
பாராது, துறவியர், வறியவர், இரப்போர் ஆகிய�ோரை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பது இக்குறள்.

நேர்மையே அடிப்படை
நேரிய வழிகளில் அடையக் கூடிய மகிழ்வே நிம்மதி; மாறான வழிகளில் இன்பம் துய்ப்பது நிலையானதன்று.”
”அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல” - என்கிறது குறள்.
வாழ்க்கையின் ந�ோக்கம் இன்பமே. எனினும் அதனை அடையும் வழிமுறை நேர்மையே என்பது
திருக்குறளின் முழுமையும் பரந்து காணப்படும் அறம். எது வாழ்க்கை? அன்பு, அறம் ஆகிய இரண்டும்
உடைய வாழ்க்கை சிறந்த பயன்களைத் தரும். இவையிரண்டும் இல்லாக் குடும்பம் எவ்வளவு வசதிகளை
உடையதாயினும் மேம்பட்டதன்று என்பது வள்ளுவம்.
”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 17
மக்கட்பேறு

”எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அது


நல்லவராவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” - என்றி திரையிசைப்பாடலடிகள்,
”தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்”
”சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்பது புறப்பாடலின் சான்று.

விருந்தோம்பல்
இல்லற வாழ்வின் இலக்குகளில் முதன்மையானது விருந்தோம்பல். விருந்தினர், துறவியர், ஆதரவற்றோர்,
யாசகர் ஆகிய�ோரைப் பேணுதலும் ஒன்று. இதனை வலியுறுத்தும் வள்ளுவம்,
”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் ப�ொருட்டு”

த�ோன்றின் புகழ�ொடு!
”மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்;
ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று ப�ோற்றிப் புகழ வேண்டும்” - கவிஞரின் கருத்து.
”த�ோன்றின் புகழ�ொடு த�ோன்றுக” என்பது வள்ளுவரின் கட்டளை.

தாயிற் சிறந்த!
”ஈன்ற ப�ொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”.
சான்றோன் ஆனவன், ”அன்பு நாண் ஒப்புவரவு கண்ணோட்டம் வாய்மை” ஆகிய உயர் பண்புகளின்
உறைவிடமாக விளங்க வேண்டும் என்பது குறட்கொள்கை.
பிள்ளைகளின் கடமை! இவனை பிள்ளையாகப் பெற்றமைக்கு இவன் தந்தை என்ன தவம் செய்தான�ோ
என ஊரார் வியக்கும் வண்ணம் நல்ல குடிமைப் பண்பு மிக்கவனாகத் திகழ விழைகிறது வள்ளுவம்.
”மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் க�ொல்லெனுஞ் ச�ொல்”

மக்கட்பேறு: பேறு – செல்வம். ஒருவரின் சிறந்த செல்வம் அவரின் பிள்ளைகளே என்பது குறட்கொள்கை.
”தம்பொருள் என்ப தம்மக்கள்” என்பது குறள்.

சிற்றினம் சேராமை
”சேரிடம் அறிந்து சேர்” என்பது பழம�ொழி. ஒருவனின் நட்பு அவன் ஆளுமையில் முதன்மைப் பங்கு
வகிக்கிறது. ”மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு” என்பது உண்மையான கருத்து. நல்லவன் கூடத்
தன் சேரிடத்தால் கெட்டவனாகக் கூடிய நிகழ்வுகள் இன்றைய காலகட்டத்தில் வெளிப்படை வள்ளுவரின்
எச்சரிக்கை நடைமுறை அறவுரை.
”மருவுக மாசற்றார் கேண்மை” என்கிறார் வள்ளுவர். அற்ற குளத்து அறுநீர்ப் பறவையாய் உள்ளோரின்
நட்பினை நீக்க வேண்டும்.
ஆடை நெகிழும் ப�ோது உடன் வந்து காக்கும் கை ப�ோன்றவரே சிறந்த நட்பினர் என்பது வள்ளுவம்.
ஒழுக்கமே உயர்வு தரும்! ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை”, ”ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற
குறளடிகள் மனித குலம் முழுமைக்கும் ப�ொருந்தக் கூடியன. ஏனெனில், ”தீய�ொழுக்கம் என்றும் இடும்பை
தரும்” என எச்சரிக்கிறார் வள்ளுவர்.
18 |
ஒத்தது அறிவான்! “பிறரின் உணர்வுகளைப் புரிந்த நடப்பவனே மனிதன்” என்ற கருத்தில்,
”ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்” என்பது ஒப்புரவ நெறி!
தீயினும் அஞ்சுக! ”தீய விளைவுகளையே தருமாதலால் தீயவற்றைத் தீயைவிட அஞ்சவேண்டும்” என்ற
ப�ொருளில், ”தீயினும் அஞ்சப் படும்” என்பது குறள் நெறி.
”மறந்தும் பிறன்குடு சூழற்க” எனக் கட்டளையிடுகிறது திருக்குறள்.
பணமே தேவை! ஒருவனை மதிப்புமிக்கதாக்குவது ப�ொருள்.
”கையிலே காசில்லாதவன் கழுதை“ என்பது ச�ொலவடை.
ஒருவரைப் ப�ொருட்டாக மதிக்க செய்வது ப�ொருளே.
”ப�ொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்கிறார் வள்ளுவர்.
”இல்லாரை எல்லாரும் எள்ளவர்” எனவே, திறனறிந்திப் ப�ொருள் ஈட்டுக என்கிறது குறள்.
இதுகாறும் கூறியவற்றால் ”திருக்குறள் மக்களின் அன்றாட வாழ்வில்” செய்யும் பங்களிப்பு மிகப்பெரியது
என்பது உறுதியாகின்றது!

மாதிரிக் கட்டுரை-05

மனிதத்தின் மீது திருக்குறளின் தாக்கம்

திருவள்ளுவர் காட்டும் சமத்துவச் சிந்தனைகள் - (300 ச�ொற்களுக்கு மிகாமல்) ஒரு கட்டுரை


எழுதுக.
திருக்குறள் இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையை வலிமைப்படுத்துகிறது. முப்பாலின் முதலிரு பால்கள்
வழித் திருக்குறள் காட்டும் ”சமத்துவக் க�ோட்பாட்டை” இவண் காண்போம்.

முகப்புரை
”இந்திய நாட்டு மக்களாகிய நாம் இறையாண்மை மிக்க சமத்துவச் சமயச்சார்பற்ற மக்கள் ஆட்சிக் குடியரசு
மற்றும் அதன் அனைத்துக் குடிமக்களையும் காப்பது” ”சமத்துவம்” ஆனது “சுதந்திரம், நீதி, சக�ோதரத்துவம்”
ஆகியவற்றை உள்ளடக்கியது.

சமநீதி
மனத்தளவில் ஒரு பக்கம் சாயாமல் நேர்மையுடன் நடந்து க�ொள்வது, பேசும் பேச்சினில் எதிர�ொலிக்கும்.
”ச�ொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் டஇன்மை பெறின்”
தனி மனிதரும் சரி, ஆள்வோரும் சரி விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகாமல் நடக்க வேண்டும் என்பது
வள்ளுவம்.

செங்கோண்மை
எந்த ஒரு விடயத்தையும் நன்கு ஆராய்ந்து எவர் பக்கமும் சாயாமல் ஆட்சி செய்து இன்னார்-இனியர் எனத்
தேர்ந்து அதன் வழி நிருவாகம் செய்வதே சமநீதி தவறா ஆட்சி.
”ஆர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை”
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 19
ஆட்சிப் பெருமை
ஆட்சியாளர்கள் குடிமக்கள் எவரும் தம்மை அணுவதற்கு எளியராகவும், கடுஞ்சொல் பேசாதவராகவும்
இருத்தல் வேண்டும் என்கிறது ”இறைமாட்சி” அதிகாரம்.
”காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்”
- இக்குறள் அரச பரம்பரைக்கு மட்டுமன்றி, மக்களாட்சி நிலவும் இக்கால ஆள்வோருக்கு மிகவும் ப�ொருந்தும்.

சார்பின்மை
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” - பெருமை
”பிறப்பினால் அனைவரும்/அனைத்துயிர்களும் சமம். அவரவர் த�ொழில்களால் மக்கள் வேறுபடுகின்றனர்”
என்ற குறட் கருத்து உலகச் சமத்துவச் சிந்தனையின் உச்சம்.
”யாதும் ஊரே, யாவரும் கேளிர்”
என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றும் ”உலகமே ஒரு குடும்பம்” என்ற உண்மையை உணர்த்துகிறது.
”வசுதைவ குடும்பகம்” என்று வடம�ொழி வேதங்கள் காட்டும் க�ொள்கையும் இவண் நினைவு கூரத்தக்கது.
”பிறப்பு ஒக்கும்” – இரண்டு ச�ொற்களையும் ஒரே சீரால் “பிறப்பினால் சமம்” என்று ச�ொன்ன வள்ளுவத்தின்
மாண்பு வியக்கத்தக்கது.

சட்டத்தின் முன்!
”கடவுளின் முன் எல்லோரும் சமம்”
”சட்டத்தின் முன் அனைவரும் சமம்”
”இயற்கையில் அனவைரும் ஒன்றே” என்பன உலகளாவிய முழக்கங்கள்.
இம்முடிவுகளின் ஒட்டும�ொத்த சாரமாக விளங்குவது ”திருக்குறள்” எனில் அது மிகையன்று.

பாரதியின் அறைகூவல்!
“ஏழையென்றும் அடிமையென்றும் எவறுமில்லை சாதியில் – இழிவுக�ொண்ட மனிதர் என்போர்
இந்தியாவில் இல்லையே”- என்ற பாரதியின் ச�ொற்கள் திருக்குறளின் சாரமே ஆகும்.

ஒப்பற்ற உண்மைகள்!
1. உயிர்க்கொலை, புலால் மறுப்பு இல்லாதவரை உலகமே வணங்கும்.
2. ஆயிரம் வேள்விகளினும் சிறந்தது புலால் மறுப்பு - உயிர்க்கொலை செய்து உண்ணைாமை.
3. ”எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற உலகம் ப�ோற்றும்
மெய்யியல்.
4. ”உள்ளவது எல்லாம் உயர்வுள்ளல்”.
5. மனித இனம் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள், நடத்தைகளைக் க�ொண்டுள்ள உயர்நூல் திருக்குறள்.
6. ”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூல�ோர்
த�ொகுத்தவற்றுள் எல்லாந் தலை”. -
உணவு, ப�ொது; எனது – உனது என்றில்லை. எல்லோருக்கும் ஈந்து உண்பதே நாகரிகச் சமூகத்தின்
நன்னெறிக் க�ொள்கை!
7. நம்மைவிட எளியவரிடம் இரக்கம் காட்டல் வேண்டும் ”வல்லான் வகுப்பதே வாய்க்கால்” என்ற நிலை
மாற வேண்டும்
20 |
”வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து” - உயர் சிந்தனை
8. அன்பே உயிர்!
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புத�ோல் ப�ோர்த்த உடம்பு”
அன்பு இருக்கும் இடத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளுக்கும் சற்றும் இடமில்லை. அன்பு உலகமாக ஆற்றலாக
விளங்கும் அரும்பெரும் மந்திரம். அன்பு சமநிலையில் மட்டுமே செலுத்தப்படும். அதில் கூடக்குறைவு
என்பதற்கே இடமில்லை.
9. உலகம் முழுவதும் சமயவழிச் சிந்தனைகளே முதன்மை பெற்று நின்ற காலத்தில், திருக்குறள் மட்டுமே
மதவழி வேறுபாடுகள் இன்றிச் சமத்துவ ந�ோக்கிலும், ப�ோக்கிலும் ”அறம்” ஒன்றையே முன்னெடுத்தது!
10. ப�ொதுமை: திருக்குறள் இறைவாழ்த்தில் தத்தும் சமயக் குறிப்புகள் உள்ளன எனக் கூறுவாரும், அதன்
ப�ொதுமையை, உட்கிடக்கையை மறுப்பது இல்லை. மதம்சார் நூலன்று, குறள், அது மனிதம் பேசம் புனித
நூல். 1. எச்சமயத்தவரும் - தத்தும் நூலாகக் க�ொள்ளுதல், 2. இறை மறுப்போரும் திருக்குறளை ஏற்றல்.

குடியியல்
அதிகாரங்கள் 96 முதல் 108 வரை குடியியல், குடிமை, மானம், சான்றாண்மை, பண்புடைமை, பெருமை
என்பதாக ஒரு சிறந்த குடிமகன்/குடிமகள் எவ்வாறு விளங்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது.

• ஜி.யு. ப�ோப் குறிப்பிடுவதைப் ப�ோல, ”திருவள்ளுவர் உலகப் புலவர்”


• திரு.வி.க. அவர்களின் கூற்றுப்படி ”திருக்குறள் ஒரு நாட்டார்க்கோ, இனத்தார்க்கோ, ம�ொழியார்க்கோ
உரியதன்று – மன்பதை முழுமைக்கும் ப�ொது”.
தனித்துவம்
திருக்குறள் சமயம், வழிபாடுகள், சடங்குகள் பற்றிப் பேசாத நூல். திருக்குறள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட
ஆற்றலையும், அறிவுத் திறமையினையும் தூண்டுகின்றது. அறத்துப்பாலும், ப�ொருட்பாலும் வாழ்க்கைக்குத்
தேவையான நுணுக்கமான திறன்களை உலகுக்குத் தருகின்றன.
”மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்-எண்ணல்
நல்லகதிக்கு யாதும�ோர் குறையும் இலை”
என்ற சம்பந்தர் தேவாரத்தின் சாரமாகத் திருக்குறள், ”எல்லார்க்கும் எல்லாம்” என்ற இடம் ந�ோக்கி வள்ளுவம்
நகர்த்துகிறது என்பதே உண்மை.

பயிற்சி எண் 5: மனிதத்தின் மீது திருக்குறளின் தாக்கம் - திருக்குறளில் மனிதம்

1. The Greatness of Ascetics - நீத்தார் பெருமை


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
ப�ொருள்: செய்தவற்கு அருமையான செயல்களை செய்பவரே பெரிய�ோர், சிறிய�ோர் செயற்கரிய செயல்களைச்
செய்யார். (பெரியார் x சிறியர்).

2. Assertion of the Strength of Virtue - அறன் வலியுறுத்தல்


(a) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 21

ப�ொருள்: மனதில் குற்றம் இல்லாமல் இருப்பது அறம், மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை
உடையவை. (ஆகுல நீர – ஆரவாரத் தன்மையுடையன).
(b) அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
ப�ொருள்: இன்பம் என்பது அறநெறியுடன் கூடிய வாழ்வில் இருந்து விளைவது. அறமல்லாத இன்பம்,
இன்பமன்று, புகழும் இல்லாதது. (புறத்த – அறத்துக்குப் புறம்பாவன).

3. The Possession of Love - அன்புடைமை


(a) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
ப�ொருள்: அன்பில்லாதவர்கள் எல்லாப் ப�ொருள்களையும் தமக்கே உரித்தாக்கிக் க�ொள்வர். அன்புடைய�ோர்
தமது எலும்பினையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். (என்பு – எலும்பு/bone).
(b) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த த�ொடர்பு.
ப�ொருள்: உயிருக்கும், உடம்புக்கும் இடையே உள்ள உறவு என்பது அன்போடு இணைந்த வாழ்க்கையின்
பயன் ஆகும். (என்போடு – எலும்போடு கூடிய உடல். த�ொடர்பு – உறவு).
(c) என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்.
ப�ொருள்: எலும்பற்ற புழு ப�ோன்ற உயிர்களை வெயில் வருத்தி அழிப்பதைப் ப�ோல அன்பற்ற உயிர்களை
அறம் அழித்துவிடும்.

4. The Utterance of Pleasant Words – இனியவை கூறல்


(a) முகத்தான் அமர்ந்து இனிது ந�ோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
ப�ொருள்: முகத்தால் விரும்பி, இனிமையுடன் ந�ோக்கி, உள்ளம் கலந்து இன்சொற்களைப் பேசுவதே அறமாகும்.
(b) பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
ப�ொருள்: பணிவும், இனிய பேச்சும் ஒருவற்கு அணிகலன்கள் ஆகும். மற்றவை அணிகலன்கள் அல்ல.
(அணி – அழகு, அணிகலன் - Jewels).
(c) சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
ப�ொருள்: பிறர்க்குத் துன்பம் தராத இனிய ச�ொற்கள் இம்மை–மறுமை ஆகிய இரண்டிலும் இன்பம் தரும்.
(சிறுமை – தீமை).

5. Impartiality – நடுவுநிலைமை
(a) தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
ப�ொருள்: தகுதியுடையர், தகுதியற்றவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும், பழியாலும்
காணப்படும். (எச்சம் – மிச்சம்/ச�ொச்சம்).
(b) சமன்செய்து சீர்தூக்கும் க�ோல்போல் அமைந்தொருபால்
க�ோடாமை சான்றோர்க்கு அணி.
ப�ொருள்: தான் சமமாக இருந்து, தராசினைப் ப�ோல, ஒரு பக்கமாகச் சாயாமல் “நடுநிலை“ (Neutrality)
ப�ோற்றுவது சான்றோர்க்கு அழகு.
22 |
6. The Possession of Self-Restraint – அடக்கமுடைமை
(a) நிலையின் திரியாது அடங்கியான் த�ோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
ப�ொருள்: தன் நிலையிலிருந்து மாறாமல் அடங்கி நடப்பவனுடைய உயர்வு (த�ோற்றம்), மலையின் உயர்வை
விட மிகவும் பெரியதாகும். (மாண-மிகவும்/very/too).
(b) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
ச�ோகாப்பர் ச�ொல்இழுக்குப் பட்டு.
ப�ொருள்: ஒருவன் எவற்றை காக்கா விட்டாலும், நாவை மட்டுமாவது காக்க வேண்டும். தவறினால்
ச�ொற்குற்றத்தில் துன்பம் வந்து சேரும். (ச�ோகாப்பர் – துன்புறுவர்).

7. The Possession of Decorum – ஒழுக்கம் உடைமை


(a) ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ப�ொருள்: மேன்மையைத் தருவது ஒழுக்கமே. ஆகையால், அதனை உயிரைவிட மேலானதாகக் கருதிப்
ப�ோற்ற வேண்டும். (விழுப்பம் – மேன்மை/eminence ஓம்ப-காக்க).
(b) அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
ப�ொருள்: ப�ொறாமை உடையவனிடம் செல்வம் நிலையாததைப் ப�ோல, ஒழுக்கம் இல்லாதவனின் வாழ்வில்
உயர்வு இல்லை. (அழுக்காறு – ப�ொறாமை/Envy; ஆக்கம் – செல்வம்).

8. The Possession of Patience/Forbearance – ப�ொறைவுடைமை


(a) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் ப�ொறுத்தல் தலை.
ப�ொருள்: தன்னை வெட்டுவ�ோரையும் விழாமல் தாங்கும் நிலம்போல், தம்மை இகழ்வாரையும் ப�ொறுப்பதே
தலைசிறந்த அறமாகும்.
(b) திறனல்ல தற்பிறர் செய்யினும் ந�ோந�ொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
ப�ொருள்: பிறர் நமக்குத் தீமை செய்த ப�ோதும் அதற்காக வருந்தி, அவருக்கு அறம் அல்லாதவற்றைச் செய்யாது
இருத்தல் நன்று (ந�ோ ந�ொந்து – துன்பப்பட்டு).
(c) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
ப�ொருள்: செருக்கினால் நமக்குத் தீங்கு செய்தவரை, நாம் நம்முடைய ப�ொறுமை பண்பினால் வென்று விட
வேண்டும். (மிகுதியான் – செருக்கினால்; தகுதியான் – ப�ொறுமையால்).

9. The Absence of Fraud – கள்ளாமை/திருடாமை


(a) களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது ப�ோலக் கெடும்
ப�ொருள்: களவினால் உண்டாகும் செல்வம் பெருகுவது ப�ோலத் த�ோன்றி விரைவில் இல்லாது ப�ோய்விடும்.
(b) உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
ப�ொருள்: பிறர் ப�ொருளை அவர் அறியாத வகையில் வஞ்சித்துக் க�ொள்வோம் என மனதால் நினைப்பதே
பெருங்குற்றமாகும்.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 23
10. Veracity – வாய்மை - Truthfulness
(a) உள்ளத்தால் ப�ொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
ப�ொருள்: ஒருவன் தன் உள்ளமறியப் ப�ொய்யின்றி நடப்பானேயானால், அவன் உலகத்தார் உள்ளங்களில்
எல்லாம் இருப்பான்.
(b) புறந்தூய்மை நீரான்அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்.
ப�ொருள்: புறத்தூய்மை (உடல் தூய்மை) நீராலும், அகத்தூய்மை வாய்மையாலும் விளங்கும்.

11. Not Doing Evil – இன்னா செய்யாமை


(a) சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் க�ோள்.
ப�ொருள்: சிறப்புடன் கூடிய பெரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறருக்கு துன்பம் செய்யாமையே
குற்றமற்றவர் க�ொள்கையாம். (மாசு – குற்றம்).
(b) எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
ப�ொருள்: எவ்வளவு சிறியதாயினும், எப்போதும் யாருக்கும் மனதால் தீங்கு செய்யாதிருத்தலே தலைசிறந்த
பண்பாகும். (மாணா – தீமை).

12. Learning – கல்வி


(a) கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
ப�ொருள்: ஒருவன் நல்ல நூல்களைக் குற்றம் இல்லாமல் கற்க வேண்டும். கற்ற பிறகு கற்ற கல்விக்குத்
தக்கவாறு அந்நெறியில் நிற்க வேண்டும்.
(b) உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் த�ொழில்.
ப�ொருள்: மகிழும் படியாகக் கூடிப்பழகி, இனி இவரை எப்போது காண்போம் என்று வருந்தி எண்ணும்
படியாகப் பிரிதல் அறிஞரின் த�ொழிலாகும். (உவப்ப – மகிழும்படியாக, தலைக்கூடி – பழகி, புலவர் –
கற்றறிந்தோர்/Learned Scholar).

13. Ignorance – கல்லாமை


(a) உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.
ப�ொருள்: கல்லாதவர் உயிர�ோடு உள்ளனர் எனச் ச�ொல்லப்படும் அளவினரே அல்லாமல், எதுவும் விளையாத
களர்நிலத்துக்கு ஒப்பானவரேயாவர். (மாத்திரையர் – அளவினர், களர்நிலம் – தரிசு நிலம்).
(b) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றார�ோடு ஏனை யவர்.
ப�ொருள்: நல்ல நூலறிவு உடையவர�ோடு ஒப்பிடுகையில், கல்லாதவர்கள் விலங்கிற்கும் சமம். (அனையர்
– ப�ோன்றவர்).
24 |
14. Selection and Confidence – தெரிந்து தெளிதல்
(a) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
ப�ொருள்: ஒருவரின் பெருமைக்கும், சிறுமைக்கும் உரைகல்லாக இருப்பன அவரவர் செயல்களே.
(கட்டளைக்கல் – உரைகல், ப�ொன்னை மாற்றிப் பார்க்கும் கல்).
(b) தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
ப�ொருள்: பிறரைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அது அவனுக்கு மட்டுமன்றி அவன் பரம்பரைக்கும்
தீராத துன்பத்தைத் தரும். (இடும்பை – துன்பம்/distress/sorrow, வழிமுறை – பரம்பரை/சந்ததி/hierarchy).
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 25
கட்டுரை தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் இருத்தல் வேண்டும்.

(ஒவ்வொரு வினாவிற்கும் 15 மதிப்பெண்கள்)

பயிற்சி எண்-1: திருக்குறளும் உலகளாவிய மதிப்புகளும், மனிதாபிமானம், சமத்துவம்


மனித குலத்தின் உலகளாவிய மாண்புகள் யாவை?

சான்றோரும், அறிவுடைய�ோரும் பின்பற்றும் உயர்மதிப்புகள் பல இவ்வுலகில் உள்ளன. இப்பண்புகளே


உலகை இயக்குகின்றன. இப்பண்புகள் இல்லையெனில், திருவள்ளுவர் கூறுவதைப் ப�ோல இவ்வுலகம்
மண்ணில் புதைந்து மாண்டு இருக்கும்.

“பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்” – என்பது குறள் நெறி.

மனிதகுல மதிப்புகள்

அறம், இல்வாழ்க்கை, பிள்ளைச் செல்வம், அன்பு, விருந்தோம்பல், இனியவை கூறல், அடக்கம், ஒழுக்கம்,
ப�ொறுமை, அழுக்காறாமை, புறம் பேசாமை, ஒப்புரவு, ஈகை, புகழ், அருள், கூடாவ�ொழுக்கம், வாய்மை, கல்வி,
கேள்வி, அறிவு, மானம், குடிமை, சுற்றந்தழால், பெருமை, பண்புடைமை மற்றும் சான்றாண்மை.

திருக்குறள் மேற்கண்ட அனைத்து விவரங்களையும் ஆழமாகப் பதிவு செய்கிறது.

திருக்குறளும், உலகளாவிய மதிப்புகளும் (மனிதநேயம், சமத்துவம் . . . . . ).

1. Giving / Charity) - ஈகை / க�ொடை:

வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

ப�ொருள்: இல்லாதவர்க்குக் க�ொடுப்பதே க�ொடை, இருப்போர்க்கு ஈவது, பலனை எதிர்பார்த்துச்


செய்வதாகும்.

குறியெதிர்ப்பு: பிரதிபலன் பார்த்துச் செய்வது. (நீரது – தன்மையுடையது).

2. Not Doing Evils - இன்னா செய்யாமை:

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் ப�ோற்றாக் கடை?

ப�ொருள்: பிற உயிர்களின் துன்பத்தைத் தன்னுடையதெனக் கருதிக் காக்காவிடின், அறிவினால்


ஆகும் பயன் என்ன? ஒன்றுமில்லை.

ந�ோய் - துன்பம்
26 |

3. Not Killing - க�ொல்லாமை:

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூல�ோர்

த�ொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

ப�ொருள்: கிடைத்ததைப் பகிர்ந்தளித்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காத்தல், அற நூலார்


வலியுறுத்தும் அறங்களில் எல்லாம் தலைசிறந்த ஒன்றாகும்.
ஓம்புதல் – காத்தல்.

4. Compassion - அருளுடைமை:

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.

ப�ொருள்: அருளற்றவன், தன்னைவிட எளியவரைத் துன்புறுத்துகையில், தன்னைவிட வலியவர்


முன் தன்நிலையை எண்ணி அஞ்சி நிற்கும் தன்மையை நினைக்க வேண்டும்.

5. Friendship - நட்பு:

நகுதற் ப�ொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் ப�ொருட்டு.

ப�ொருள்: சிரித்துப் பேசிப் பழகுவதற்கு மட்டுமே நட்பு அன்று, நண்பன் தவறிழைக்கும் ப�ோது
முற்பட்டுச் சென்று இடித்துத் திருத்துவதே நட்பு.

நட்டல் – நட்பு க�ொள்ளல்; இடித்தல் – திருத்துதல்.

6. Courtesy - பண்புடைமை:

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

ப�ொருள்: குணக்கேடனிடம் இருக்கும் பெருஞ்செல்வம், கெட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்ட பால்


திரிவது ப�ோலக் கெடுதியாகும்.

7. Hearing - கேள்வி:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

ப�ொருள்: நல்ல விடயங்கள் எவ்வளவு சிறிதாக இருப்பினும் கேட்க, அவை நிறைந்த பெருமையைத்
தரும்.

8. Purity in Action - வினைத்தூய்மை :-

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.


(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 27
ப�ொருள்: பெற்ற தாயே பசித்திருக்கக் கண்டாலும், ஒருவன் சான்றோர் பழிப்பதற்குக் காரணமான
இழிசெயல்களைச் செய்தல் கூடாது.

9. Manly Effort - ஆள்வினையுடைமை:

''தாளாண்மை என்னம் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு''.

ப�ொருள்: “பிறர்க்கு உதவுதல்“ என்ற உயர்நிலைமை, “முயற்சி“ என்ற பண்பில் நிலைத்திருக்கிறது.


தாளாண்மை – முயற்சி; வேளாண்மை – உதவி செருக்கு – பெருமை.

10. Duty to Society / Reciprocity - ஒப்புரவறிதல்:

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றுங் க�ொல்லோ உலகு.

ப�ொருள்: பலன் எதிர்பாராது செய்யும் உதவி, கைம்மாறு வேண்டாமல் ப�ொழியும் மழைக்குச் சமம்.

மாரி – மழை. கடப்பாடு - கடமை.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதுஒருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து.

ப�ொருள்: ஒப்புரவினால் துன்பம் வருமென்றால், அத்துன்பத்தை ஒருவன் தன்னை விற்றாவது


பெற்றுக் க�ொள்வதே நல்லது.

11. The Renunciation of Flesh - புலால் மறுத்தல்:

தினற்பொருட்டால் க�ொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

ப�ொருள்: புலால் உண்பதற்காக உலக�ோர் உயிர்களைக் க�ொல்லாது இருப்பாரானால், விலையின்


ப�ொருட்டு ஊன் விற்போர் இல்லாமல் ப�ோவார்.

12. The Possession of Knowledge - அறிவுடைமை:

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் த�ொழில்.

ப�ொருள்: அஞ்சத்தகுந்தனவற்கு அஞ்சாமலிருப்பது முட்டாள்தனம்; அஞ்சத்தக்கவற்றிற்கு அஞ்சுவதே


அறிவுடைய�ோர் செயலாகும்.

13. Perfectness - சான்றாண்மை:

க�ொல்லா நலத்தது ந�ோன்மை பிறர்தீமை

ச�ொல்லா நலத்தது சால்பு.


28 |
ப�ொருள்: எவ்வுயிரையும் க�ொல்லாமை ஒரு தவம், அதுப�ோலப் பிறர் தீமையைப் பேசாதிருத்தல்
சான்றாண்மை.

ந�ோன்மை – ந�ோன்பு, தவம்.

14. Gratitude - செய்ந்நன்றியறிதல்:

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

ப�ொருள்: உதவி என்பது முன் செய்த உதவியின் அளவைப் ப�ொறுத்தன்று, உதவி செய்யப்பட்டவரின்
குணத்தைப் ப�ொறுத்ததாகும்.

வரை – அளவு.

15. Knowing the Power - வலியறிதல்:

உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை

வளவரை வல்லைக் கெடும்.

ப�ொருள்: தன்னிடம் உள்ள ப�ொருளின் அளவை ஆராயாமல் செய்யும் ஒப்புரவினால், ஒருவனின்


செல்வத்தின் அளவு விரைந்து கெடும்.

தூக்காத – ஆராயாத, வல்லை – விரைந்து.

பயிற்சி எண்: 2 ''திருக்குறளும் வாழ்வியல் மதிப்பீடுகளும்'' - பற்றி ஒரு கட்டுரை வரைக.

1. Impartiality : நடுவுநிலைமை:

ச�ொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

விளக்கம்: உள்ளத்தில் எவ்விதச் சார்பும் இல்லாமல் இருப்பின் அவன் வாக்கினிலும் நடுநிலை


உறுதியாகக் காணப்படும்.

க�ோட்டம் – 3 க�ோணல்; எதிர்மறை.

2. The Possession of Decorum : ஒழுக்கமுடைமை:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீய�ொழுக்கம்

என்றும் இடும்பை தரும்.

விளக்கம்: நல்லொழுக்கம் எப்போதும் நன்மைகளுக்கு விதையாக விளங்கும்; தீய�ொழுக்கம்


துன்பத்தையே தரும்.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 29
3. Dread of Evil Deeds - தீவினையச்சம்:

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துள்ளற்க தீவினைப் பால்.

விளக்கம்: தன் வாழ்வில் ஒருவனுக்கு அன்பு இருக்குமானால், பிறர்க்குத் தீங்கு செய்தலை


ஒருப�ோதும் அவன் எண்ணக்கூடாது.

துள்ளற்க – நினையாதே.

4. The Renunciation of Flesh - புலால் மறுத்தல்:

அவிச�ொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

விளக்கம்: நெய்யினைப் ப�ொழிந்து செய்யும் ஆயிரம் வேள்விகளை விட, ஒரு உயிரைக் க�ொன்று
அதன் புலாலை உண்ணாமலிருப்பது பல மடங்கு நன்மையைத் தரும்.

5. The Absence of Fraud - கள்ளாமை:

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது ப�ோலக் கெடும்.

விளக்கம்: திருட்டுத் தனத்தால் கிடைத்த செல்வம் பெருகுவது ப�ோலத் த�ோன்றி அழிந்து விடும்.

ஆக்கம் – செல்வம்/Wealth, அளவிறந்து – அளவு கடந்து.

6. Hearing - கேள்வி:

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை.

விளக்கம்: ஒருவன் படிக்காதவனாக இருப்பினும், அறிவாளிகளின் ச�ொல்பேச்சைக் கேட்டால், அது


அவன் தளர்ச்சியுற்ற காலத்தில் ஊன்று க�ோலாய் உதவும்.

ஒற்கம் – தளர்ச்சி.

7. Seeking, the Aid of Great Men - பெரியாரைத் துணைக் க�ோடல்:

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை.

விளக்கம்: தம்மை விடப் பெரியவரைத் தமக்கு உற்றவர் ஆக்கிக்கொண்டு வாழ்வது, வலிமைகளுள்


எல்லாம் மிகச்சிறந்த வலிமையாம்.

தம்மின் – தம்மை விட; தமர் – உறவினர்.


30 |
8. The Right Sceptre - செங்கோன்மை:

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

விளக்கம்: இவ்வுலகத்து உயிர்கள் எல்லாம் வானம் வழங்கும் மழையை எதிர்நோக்கி வாழும்,


குடிமக்கள் எல்லோரும் அரசனின் நல் ஆட்சியை எதிர்நோக்கி வாழ்வார்கள்.

9. Energy - ஊக்கமுடைமை:

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்

மரம்மக்கள் ஆதலே வேறு.

விளக்கம்: ஊக்கமே ஒருவற்குச் சிறந்த செல்வம், அச்செல்வம் இல்லார் மக்கள் அல்லர், மரம்
இரண்டிற்கும் வேறுபாடு த�ோற்றமே.

10. Power in Speech - ச�ொல்வன்மை:

ச�ொலல்வல்லன் ச�ோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

விளக்கம்: பேச்சு வல்லமை, ச�ொற்குற்றம் இன்மை, அஞ்சாதவனாகவும் உள்ள ஒருவனை வெல்லக்


கூடியவர் இவ்வுலகில் இல்லை.

பயிற்சி எண்: 3 திருக்குறளில் காணப்படும் சமூகவியல் கருத்துகள்

I. Social Aspects - சமூகவியல் கருத்துகள்:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

ப�ொருள்: மழை என்ற வருவாயின் வளங்குறைந்தால் உழவர் ஏர் க�ொண்டு நிலத்தை உழமாட்டார்.

புயல் – மேகம், வாரி – மழை.

2. Domestic Life - இல்வாழ்க்கை:

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

ப�ொருள்: துறவியர், ஏழையர் மற்றும் மறைந்த முன்னோர் ஆகிய மூவரையும் காக்கும் கடமை
இல்லறத்தார்க்கே உரியது.

துவ்வாதவர் – வாழ்வை அனுபவிக்க இயலாத ஏழைகள்.


(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 31
3. Cherishing Guests/Hospitality - விருந்தோம்பல்:

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் ப�ொருட்டு.

ப�ொருள்: இல்லறத்தில் இருந்து கடமையாற்றுவது என்பது தன்னை நாடி வரும் விருந்தினரைக்


காத்து உதவுவதற்குத் தான்.

ஓம்பி – காத்து, வேளாண்மை – உதவி.

4. Against Vain Seaking - பயனில ச�ொல்லாமை:

பல்லார் முனியப் பயனில ச�ொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

ப�ொருள்: பலரும் முகம் சுளிக்கும் படியாக வெட்டிப் பேச்சு பேசுவ�ோன் அனைவராலும்


இகழப்படுவான்.

முனிய – வெறுக்க.

5. Imposture - கூடாவ�ொழுக்கம்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

ப�ொருள்: சான்றோரால் கண்டிக்கப்பட்ட தீமைகளை விட்டு விலகிவிட்டால் ப�ோதும், தவசிகள் ப�ோல


முடியை மழிக்கவும் வேண்டாம், வளர்க்கவும் வேண்டாம்.

6. The Absence of Fraud - கள்ளாமை, (திருடாமை):

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

ப�ொருள்: மற்றவர் செல்வத்தின் மீது ஆசை க�ொண்டு அவர்கள் அறியாமல் திருடுவது, த�ொடக்கத்தில்
இனிதாக இருப்பினும், விளைவு வரும் ப�ோது தீராத துன்பத்தையே தரும்.

வீயா விழுமம் – தீராத துன்பம்.

7. Poverty - வறுமை/இல்லாமை:

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாத�ொன்றும் கண்பாடு அரிது.

ப�ொருள்: ஒருவன் நெருப்பில் கூடத் தூங்கி விடலாம். ஆனால், வறுமையில் கண நேரம் கூடக்
கண்களை மூட முடியாது.

துஞ்சல் – உறக்கம். நிரப்பு – வறுமை.


32 |
8. Baseness - கயமை:

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

ப�ொருள்: தாம் கேட்ட இரகசியங்களை பிறருக்கு வலிய க�ொண்டு ப�ோய்ச் ச�ொல்லுவதால் கயவர்கள்,
பறை என்ற கருவிக்கு ஒப்பாவர்.

மாதிரிக் கட்டுரை - 1

திருக்குறள் ஓர் அரசியல்-அறிவியல் நூல் (Political Science) - ஆய்க.

”அவர் ச�ொல்லாதது எதுவும் இல்லை; ச�ொன்னதை அழகுபடுத்தாமல் விட்டதும் இல்லை” என்பர்


திருவள்ளுவர். முப்பாலின் முதல் இருபால்களும் வாழ்வாங்கு வாழ்வதற்குத் தேவையான வளமைமிகு
கருத்துகளை வாரி வழங்குகின்றன. நடுவணதாகிய ப�ொருட்பால் இயன்றவரை ஓர் அரசியல் ஆய்வேடாகவே
விளங்குகின்றது. முடியாட்சி-குடியாட்சி என்ற பேதமின்றி எம்முறை ஆட்சியாயினும் அறத்தோடு கூடிய
”அரசியல் ஆட்சிமுறை” (Governance) திருக்குறளில் வலியுறுத்தப்படுகிறது. அரசியலில், கெளடில்யரின்
”ப�ொருள் நூலைப்” (Arthasasthra) பின்னுக்குத் தள்ளி வள்ளுவம் முன் நிற்கும் பாங்கினை இவண்
காண்போம்.

செங்கோன்மை

ஓர் அரசின் நேர்மையை இவ்வதிகாரம் வரையறுக்கின்றது. எத்தகைய சூழ்நிலையிலும் குடிமக்களைக்


காத்தலும், குற்றங்களைக் கண்டித்தலும் அரசின் கடமைகள். இவ்வினைகளில் ஆட்சியாளர் வழுவக் கூடாது
என்கிறது வள்ளுவம்.

”மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்ற ம�ோசி கீரனாரின் கூற்றுக்கு ஏற்ப, குடிமக்கள்
ஆட்சியாளரையே ந�ோக்கி வாழ்தலால், ஆள்வோரின் ஆளுமையும், நேர்மையும் முதன்மையாகக்
க�ொள்ளப்படுகிறது.

”மன்னவன் க�ோல்நோக்கி வாழும் குடி” என்பது குறள். எந்த ஒரு விடயத்திலும் ஆய்வு, நடுவு நிலை,
ஆளுமை மூன்றும் இணக்கமாக இருப்பதே அரச நீதியாக வள்ளுவம் உரைக்கிறது.

”ஓர்ந்துகண் ண�ோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய்வ அஃதே முறை“ என்ற குறள் நினைவு கூரத்தக்கது.

க�ொடுங்கோன்மை

முறை தவறிய ஆட்சியின் கூடாச் செயல்பாடுகள் இத்தலைப்பில் அலசப்படுகின்றன.

”முறைக�ோடி மன்னவன் செய்யின் உறைக�ோடி

ஒல்லாது வானம் பெயல்”

என்ற குறள், முறை தவறிய ஆட்சியாளர் நாட்டில் வானமும் ப�ொய்த்துவிடும் என்கிறது.


(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 33
”க�ோன்நிலை திரியின் க�ோள்நிலை திரியும்

க�ோள்நிலை திரியின் மாரி வறம் கூறும்” - மணிமேகலை என்ற காப்பிய அடிகள் ஒப்புந�ோக்கத்
தக்கது.

ஆட்சிப்பிழை

குடிமக்களிடம் இருந்து பெறப்படும் வரிகள் மூலமான வருவாய் (Income by Taxes) ஓர் ஒழுங்கிற்கு உட்பட்டு
அமைய வேண்டும். அளவிறந்த, நெறியற்ற வரிவசூல் வழிப்பறிக் க�ொள்ளைக்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.

”வேல�ொடு நின்றான் இடுவென்றது ப�ோலும்

க�ோல�ொடு நின்றான் இரவு”.

என்ற குறளடிகள், உலக ஆட்சியாளர்க்கு வழங்கப்பட்ட உன்னத வழிகாட்டுதல். குடிகளை வருத்திப்


பெறப்படும் வரியானது ஆட்சிக்கு அடிக்கப்படும் சாவு மணி என்பதைத் திருவள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார்.

”அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வததைத் தேய்க்கும் படை”. - என்பது வள்ளுவம் காட்டும் அரசியல்

ஆட்சியின் மாட்சி

ஒரு சிறந்த ஆட்சியாளன், குடிமக்கள் தன்னை எளிதில் அணுகக் கூடியவனாகவும், கடுஞ்சொல் பேசாதவன்
ஆகவும் இருக்க வேண்டுவதன் அவசியத்தைக் குறள் க�ோடிட்டுக் காட்டுகிறது. நீதி வழுவாது ஆளும்
ஆட்சியாளன், குடிமக்களுக்கு இறைவனாகக் கருதப்படுவான்.

”முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்” – என்கிறது குறள்.

”திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக்

கண்டேன்“ என்பது ஆழ்வார் பாசுரம்.

”வேலன்று வென்றி தருவது மன்னவன்

க�ோலதுவும் க�ோடா தெனின்” என்ற க�ோட்பாடு, ஆட்சியாளரின் நேர்மையைப் பறைசாற்றுகிறது.

வரவும்-செலவும்

நாட்டின் வரவும்-செலவும் குடிமக்களுக்குப் பகிர்மாணப்பட வேண்டியதன் தேவையை வள்ளுவம்


வரையறுக்கிறது. அரசின் முதன்மைப் பணிகள் ”இறைமாட்சி”-யில் பட்டியலிடப்படுகின்றன.

”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு”

இக்குறள், ஓர் அரசின் ஒவ்வோர் ஆண்டின் நிதிநிலையை மேலாண்மை செய்கிறது. ப�ொது விநிய�ோகம்
(Public Distribution) பற்றிய தெளிவான கருத்தையும் இதன் மூலம் வள்ளுவம் வகுக்கிறது.
34 |
இயற்றல் – வருவாய்க்கான வழிகள் - Sources; ஈட்டல் – த�ொகுத்தல் - வசூலித்தல் – Collection; காத்தல்
– சேமித்தல் – Banking; வகுத்தல் – திட்டமிடல் –(Scheming/Planning).

அமைச்சு

ஆட்சித் தலைமைக்கு அணுக்கமாயிருந்து அரச நிர்வாகத்தில் உறுதுணையாக இருக்கும் அமைச்சர்கள்


தெளிந்த அறிவு உடைய�ோராக இருத்தல் வேண்டும். அனைத்தும் அறிந்த உயர்ந்த நெறியுடைய�ோராக
இருத்தல் வேண்டும்.

”கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு”

இக்குறள் ஓர் அமைச்சரின் தகுதிப்பாடுகளை வரையறுக்கிறது. அமைச்சன், தனது நாட்டின் நலம்


விரும்பியாகவும், அரச முறைகளின் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்ற அதே சமயம், மக்களின்
மனநிலையறிந்து செயல்படுபவனாகவும் இருத்தல் வேண்டும்.

”செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்”

என்ற குறள், அமைச்சர், உயர் அரசு அலுவலர், மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ப�ோன்ற
எல்லா நிலையினருக்கும் ப�ொருந்துவதாகும்.

தெரிந்து வினையாடல் (Selection and Employment)

அரச நிர்வாகத்தில் ஊழியரைப் பணியமர்த்தலும், வேலை வாங்குதலும் மிகப்பெரிய கலை. ஆட்சியாளர்க்கு


உரிய நிர்வாகத் திறமையே இதில்தான் அடங்கியுள்ளது. ஒரு சிறந்த நிர்வாகியின் இலக்கணம்
வள்ளுவத்தால் தீட்டப்பட்டுள்ளது. ப�ொருள் வரும் வருவாய்களைப் பெருக்கி வளத்தை உருவாக்கி உற்ற
இடையூறுகளை ஆராய்ந்து நீக்குவ�ோன் அரசுக்கு வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும்.

”வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை

ஆராய்வான் செய்க வினை”. (வாரி-வருவாய்)

ஒரு செயலைச் செய்பவனின் தகுதிகள் ஆராயப்பட வேண்டும். அவனிடம் ப�ொறுப்புகள் ஒப்படைக்கப்பட


வேண்டும் என்கிறார் வள்ளுவப் பேராசான்.

”இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்” – என்கிறது திருக்குறள்.

இடம்-ப�ொருள்-ஏவல்

வினையாற்றக் கூடிய காலம், செயல் ஆகியவற்றுடன் அது செயல்படத் தேவையான இடமும் கருத்தில்
க�ொள்ளப்பட வேண்டும் என்கிறது வள்ளுவம்.

வாய்ப்பான இடத்தை கண்டாலன்றி எந்தக் காரியத்தையும் த�ொடங்கக் கூடாது.

”த�ொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்னல் லது” – இடனறிதல்.


(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 35
காலமறிதல்

செயல்படுபவர்கள், உரிய கருவிகளுடன் காலமறிந்து செயல்பட வேண்டும். பெரிய காரியங்களைச் செய்ய


நினைப்பவர் காலத்தோடு ப�ொருந்தச் செய்ய வேண்டும்.

”பருவத்தோடு ஒட்ட ஒழுகல்”

”காலம் கருதி இடத்தாற் செயின்” ஆகிய குறளடிகள் ”காலத்தின்“ முதன்மையை


வலியுறுத்துவனவாகும்.

”அருவினை என்ப உளவ�ோ கருவியான்

காலம் அறிந்து செயின்”

என்ற குறள் அலுவலர், ஆட்சியாளர் அனைவருக்குமான காலப் பெட்டகமாகும்.

பெரியாரைத் துணைக் க�ோடல்

எத்தகைய திறமையுடைய�ோனாக இருப்பினும் மனிதத் தவறுகள் சர்வ சாதாரணம். ஆட்சியாளர்


தவறிழைக்கையில் இடித்துத் திருத்துகின்ற சான்றோர்கள் உடனிருக்க வேண்டும். ”எல்லாம் எமக்குத்
தெரியும்; அறிவுரை தேவையில்லை” என்ற ஆணவம் வரக்கூடாது.

”இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்”.

இடிப்பார்

தவறு கண்டப�ோது திருத்தும் ஆற்றல் மிக்கோர் நிர்வாகம் என்பது, தனிய�ொருவன்பாற் பட்டதன்று, அது
கூடிச்செய்யும் க�ோட்பாட்டின் பாற்படும். எனவே, ஆள்வோர் எச்செயலலையும் சூழ்ந்து செயல்பட வேண்டும்.
நல்லவர்களின் த�ொடர்பை எக்காலத்தும் ஆட்சியில் உள்ளோர் விட்டுவிடல் கூடாது என்பது குறளாசானின்
அரசியல் நெறி.

குற்றம் கடிதல்

ஆட்சியாளர்க்குரிய குற்றங்கள் பற்றிய விவரங்கள் இத்தலைப்பில் கூறப்படுகின்றன. அரசுக்கு நன்மை


பயக்காத வினைகளை ஒருவன் எந்நேரத்திலும் விரும்புதல் கூடாது. செருக்கும், சினமும், சிறுமை குணமும்
இல்லாமல் ஆட்சியாளர்கள் தமது செயல்பாடுகளில் மட்டுமே சிறந்து விளங்க வேண்டும் என்பது வள்ளுவம்.

”வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு ப�ோலக் கெடும்”.

என்பதற்கேற்ப, அரசியலில் த�ொலைந�ோக்குடன் கூடிய சிந்தனையும், நடவடிக்கையும் மிகவும்


தேவைப்படுகிறது.

”குற்றமே காக்க ப�ொருளா” என்பதற்கேற்ப குற்றங்கள் அண்டாமல் காக்க வேண்டும் என்பது அரசியலில்
அறம் நிலைப்பதற்கான வழியாகும்.
36 |
படைச்செருக்கு (Military Spirit)

”பேராண்மை என்பது தறுகண்ஒன்று உற்றக்கால்

ஊராண்மை என்னும் செருக்கு”.

எதிரிகளுக்குக்கூட இடையூறு வரும்போது ஓடிச்சென்று உதவுதலே உண்மையான வீரத்தின் அடையாளம்


என்பது இக்குறள் காட்டும் க�ொள்கை.

பகைவரிடம் படைக்கலன்கள் இல்லாதப�ோது ப�ோரிடல் ப�ோரறமன்று என்பதனை வலியுறுத்துவதே இதன்


இன்னொரு பக்கம். கம்பன் காட்டும் இராமாயணப் ப�ோர்க்களக் காட்சியில், இராவணனிடம் இராமன் கூறும்
”இன்று ப�ோய் நாளை வா” என்ற கூற்று இத்தகைய ப�ோரறமே.

”கானமுயல் எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது”

இக்குறள் ப�ோர்க்களத்தில் வெற்றி பெறும் வீரனை மட்டுமன்றி, எந்த ஒரு தனி மனிதனின் முயற்சியையும்
அவனது பேராண்மையின் அளவையும் பேசுகிறது. முயல் வேட்டையாடி வெற்றி பெறுவதை விட,
வெங்கொடுங்காட்டில் மதகளிறாம் ஆண்யானை வேட்டையில் த�ோல்வியுறுவதே மேல் என்ற
மேலாண்மைச் சிந்தனையை விதைக்கிறது இக்குறள்.

நாடு

நாட்டையாள்வோர் தமது குடிகளைப் பசி, பிணி, பகை இவை அண்டாது காக்க வேண்டியதன் அவசியத்தைப்
பட்டியலிடுகிறார் வள்ளுவர். ”சிலம்பு-மேகலை” ஆகிய ”இரட்டைக் காப்பியத்தில்”

”பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி”

என முரசறைவ�ோன் கூறுவதாகக் காட்டப்படும்.

வான் புகழ் வள்ளுவம�ோ,

”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு”

என்று ”நாடு” பற்றிய இலக்கணத்தைப் பேசுகிறது. அதாவது, ”பஞ்சம்-பிணி-பகை” இம்மூன்றும் ஒரு


நாட்டினை எக்காலத்தும் அண்டக் கூடாத விடயங்கள் என்பதைப் பேசுகிறது திருக்குறள்.

மேலும், ஒரு நாடு, மக்கள் விரும்பிச் சென்று தேடும் வளங்கள் இல்லாமல், இயற்கையாகவே விளைந்து
வளங்கொழிக்கும் செழிப்பும், வளமும் மிக்கதாக அமைய வேண்டும் என்கிறார், வள்ளுவர்.

”நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு” - என்ற குறள் சிந்திக்கத் தக்கது.


(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 37
முடியாட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட பேரறநூலாம் திருக்குறள். எக்காலத்துக்கும் ப�ொருந்தக்கூடிய
மக்களாட்சியின் மாண்பிற்குச் சிறிதும் களங்கம் விளையா வண்ணம் ப�ொருட்பால் முழுமையும் ஓர் அரசியல்
ஆய்வேடாகவே விளங்குகின்ற பாங்கினைக் காணலாம்.

மாதிரிக் கட்டுரை - 2

அரசியல் நிகழ்வுகளில் திருக்குறளின் ப�ொருத்தப்பாடு

முன்னுரை

உலகம் உருண்டு க�ொண்டே இருக்கிறது. கால ஓட்டத்திற்கு ஏற்ப அதன் காட்சி நிகழ்வுகள் மாறிக்
க�ொண்டே இருக்கின்றன. அந்தந்தக் காலத்தில் த�ோன்றிய நூல்கள் அவற்றைப் பதிவு செய்துள்ளன. சில
நூல்கள் மட்டும் காலத்தைக் கடந்து, எக்காலத்து நிகழ்வுக்கும் ப�ொருந்தும்படி கருத்துகளைக் கூறுகின்றன.
அவற்றுள் ஒன்று திருக்குறள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் த�ோன்றிய திருக்குறளின் கருத்துகள்
இன்றைய நிகழ்வுகளுக்கும் ப�ொருத்தப்பாடு உடையதாக இருக்கிறது.

மக்களைக் காத்தல்
ஓர் அரசின் தலையாய கடன் மக்களைக் காத்தலே ஆகும். இன்றைய அரசு மக்களை இரண்டு நிலைகளில்
காக்கின்றது. ஒன்று உள்நாட்டில் கள்வர்கள் உள்ளிட்ட தீய�ோரிடம் இருந்தும், சிறுத்தை உள்ளிட்ட
வனவிலங்குகளிடம் இருந்தும் மக்களைக் காப்பாற்றுதல், மற்றொன்று பகை நாட்டிடமிருந்து மக்களைக்
காப்பாற்றுதல், செயின் பறிப்பு, பெண்களைச், சீரழித்தல் ப�ோன்ற க�ொடுமைகள் நடக்கும் ப�ோது காவல்
துறை செயல்பட்டு அவை மேலும் நிகழா வண்ணம் தடுக்கின்றன. வெளிநாட்டுப் ப�ோர் நடக்கும் ப�ோது
இராணுவம் சிறப்பாக செயல்படுகின்றது.
இத்தகைய நிகழ்வுகளுக்கு,
“இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்“. (547)

“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு


இறையென்று வைக்கப் படும்“. (537)

“க�ொடையளி செங்கோல் குடிய�ோம்பல் நான்கும்


உடையானாம் வேந்தர்க் க�ொளி”. (390)
ஆகியன ப�ொருத்தமுடையனவாக உள்ளன.

படை நிர்வாகம்

வெளிப்பகையால் வரும் துன்பத்தைத் தடுக்கும் இராணுவப் படையாயினும், உட்பகையால் வரும்


துன்பத்தைத் தடுக்கும் காவற்படையாயினும் சரி, இரண்டுமே 365 நாளும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
படையின் சிறப்பு என்பது வீரர்களின் எண்ணிக்கையும், படைக் கருவிகளின் எண்ணிக்கையும்
38 |
குறையாமல் பார்த்து க�ொள்ளுதலே ஆகும். அரசும் ஆண்டுத�ோறும் படைக்கு ஆள்சேர்க்கின்றனர். புதிய
கருவிகளை உற்பத்தி செய்தும், இறக்குமதி செய்தும் சேர்க்கின்றனர். அடுத்து வீரர்களுக்கு ஆட்சியாளர்
ஏதும் மக்கள் மீது வெறுப்பு க�ொள்ளாமல் இருக்க வேண்டும். அதனால்தான் சிறப்புகள் பல செய்கின்றனர்.
பிறகு, வீரர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளமும், ஒய்வூதியமும் வழங்க வேண்டும். இவையெல்லாம்
இன்றும் நடந்து க�ொண்டிருக்கின்றன. திருவள்ளுவர் கூறும்,
“சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை“ (769)
என்ற குறள் இந்நிகழ்வுக்கு ப�ொருத்தப்பாடு உடையதாக உள்ளது.

நிதி நிர்வாகம்

வரவு-செலவு இல்லாத அரசே உலகில் இல்லை என்று ச�ொல்லிவிடலாம். அந்த அளவிற்கு நிதி முக்கியமானது.
எந்த ஒரு அரசுக்கும் இன்று மூன்று வழிகளில் தான் நிதி வருகின்றது.

1. தன் மக்களிடம் வரி வசூல் செய்வதன் மூலம் வருவது.

2. வெளிநாட்டுப் ப�ொருள்களை இறக்குமதி செய்யும் ப�ோது அதன் மீது விதிக்கும் இறக்குமதி வரி.

3. புதையல் ப�ொருள் மீது விதிக்கும் வரி.

பகை நாட்டில் க�ொள்ளையடித்தல் பண்டைக் காலத்து வருவாயுள் ஒன்று. அதாவது, பிறநாட்டிலிருந்து


வருவது, அது இன்று இறக்குமதியாக உள்ளது. இவற்றையே,

“உறுப�ொருளும் உல்கு ப�ொருளும்தன் ஒன்னார்த்

தெறுப�ொருளும் வேந்தன் ப�ொருள்“. (756)

முதலாவதாகிய தன் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரி குறித்துக் கூறும்போது, முதலில் வரி வசூல்
வழிகளைத் திட்டமிட வேண்டும். ச�ொத்து வரி, விற்பனை வரி, நீதிமன்றக் கட்டணம், பதிவுக் கட்டணம்,
வருவாய் வரி, கல்வி வரி, சேவை சரக்கு வரி, சாலை வரி என்பன ப�ோன்று ப�ொருள் வரும் வழிகளைப்
பெருக்குவதற்கான திட்டமிட வேண்டும். பின் அவற்றைச் செயல்படுத்திப் ப�ொருள் ஈட்ட வேண்டும். ஈட்டிய
ப�ொருளைக் காக்க வேண்டும். காத்த ப�ொருளை உரிய வழியில் செலவழிக்க வேண்டும். இதைத்தான்
இன்றைய அரசுகள் செய்கின்றன.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு” (385)

என்று கூறியுள்ளது. இன்றைக்கும் மிகச்சரியாகப் ப�ொருந்துகிறது.

செலவினத்தின் வரையறை:

ஈட்டலுக்கும் காத்தலுக்கும் வரையறுத்த சட்டங்கள் உள்ளன. வகுத்தலாகிய செலவினத்திற்கு வரையறை


இல்லை. பாதுகாப்பு, நிர்வாகம், மக்கள் நலம், ஆபத்து உதவி எனப் பல வகையில் செலவினம் ஏற்படும். ஒரு
நாடு ப�ொருளாதாரத்தில் வல்லமை உடைய நாடாக இருக்க வேண்டுமானால் செலவின் ப�ோது கீழ்வரும்
மூன்றினைக் கருத்தில் க�ொள்ள வேண்டும்.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 39
1. வரவை விடச் செலவு குறைந்தால் ஒருப�ோதும் தீங்காது.

2. வரவும்-செலவும் தம்முள் சமமாக இருந்தால் தீங்கு இல்லை.

3. வரவைவிடச் செலவு அதிகமானால் கட்டாயம் தீங்கு வரும்.

இம்மூன்றும் ப�ொருந்தும்படித்தான் திருவள்ளுவர்.

“ஆற்றின் அளவுஅறிந்து ஈக அதுப�ொருள்

ப�ோற்றி வழங்கும் நெறி“ (477)

”ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை

ப�ோகாறு அகலாக் கடை“ (478)

“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளப�ோல

இல்லாகித் த�ோன்றாக் கெடும்“ (479)

என்ற வரிசையாகவே குறிப்பிட்டுள்ளார்.

முடிவுரை

இங்ஙனம் வள்ளுவர் ஓர் அரசனின் தலையாய கடன் மக்களைக் காத்தல் என்றும், அதற்குத் துணையாய்
இருப்பது சிறந்த படை நிர்வாகம் என்றும், மக்களிடம் வரி வசூல் முறையினையும் அதனைத் திருப்பி
மக்களுக்குத் திட்டங்களாக முறைப்படிக் கூறுகிறார்.

மாதிரிக் கட்டுரை - 3

திருக்குறளில் காணப்படும் ப�ொருளியல் விடயங்கள்

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூலாக, அனைத்துத் துறைகளுக்குமான ஏடாக ஒளிக்கிறது. அறம், அகம்,
அரசியல், தத்துவம் ப�ோன்றே வள்ளுவம் உரைத்த ப�ொருளாதாரக் கருத்துகள் மிகையானவை.
நூல் முழுமையும் இத்தலைப்பில் அடங்கியுள்ள கருத்துகளை இவண் பட்டியலிடுவ�ோம். திருக்குறள்
ப�ொருளாதாரத்தின் அடிப்படையினை எடுத்துரைக்கிறது. இக்கட்டுரையில் வள்ளுவம் தந்திட்ட அரிய
ப�ொருளியலைப் பட்டியலிடுவ�ோம்!

ப�ொருளின் சிறப்பு

”ப�ொருள் அல்லவரைப் ப�ொருளாகச் செய்யும்

ப�ொருளல்லது இல்லை ப�ொருள்”

என்ற குறள், இவ்வுலகம் ஒரு ப�ொருட்டாக மதியாதவரையும், மதிக்கச் செய்யும் மாண்புமிக்கது ப�ொருள்
என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

”ப�ொருள் இருந்தால் வந்து கூடும்

அதை இழந்தால் விலகி ஓடும்”


40 |
என்ற பழம்பாடல் நினைவுக்கு வரும். உறவும், நட்பும் கூடப் ப�ொருளால்தான் என்ற நிலை நடைமுறை
உலகியல்.

”இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு”

என்பதற்கேற்பப் பணம் இல்லாதவனைக் கட்டிய மனைவியும் மதியாள் என்பதே யதார்த்த நிலை.

”பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதன் இல்லை” என்ற நிலையே உண்மை.

”ப�ொருள் எனும் ப�ொய்யா விளக்கம் இருளகற்றும்

எண்ணிய தேய்த்துச் சென்று”

என்பதற்கேற்ப பணம் இருப்பவனுக்கு எந்நாடும் விலக்கன்று. எனவே, “ப�ொருள்“ என்பது ஒரு “ப�ொய்யா
விளக்கு“ என்பது உண்மை.

ஈட்டும் நெறி

தவறான வழிகளில் ப�ொருள் ஈட்டல் கூடாது என்பது குறள்நெறி. அவ்வாறு வரும் ப�ொருள் நிலைக்காது
என்பதே நெறி. அத்தகைய ப�ொருள் பச்சை மண் குடத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீருக்குச் சமம்
என்பது வள்ளுவம். தண்ணீரும் வீணாகி, பானையும் வீணாவது ப�ோல ஆகிவிடும் என எச்சரிக்கிறார்
வள்ளுவர். அதே நேரம், நல்வழியில் பணம் சம்பாதிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறார்
வள்ளுவர்.

“கலத்தால் ப�ொருள் செய்தே மார்த்தல்பசுமட்

கலத்துள்நீர் பெய்துஇரீ யற்று” – வினைத்தூய்மை

பணமே வலிமை

“வரவு-செலவு, பற்றாக்குறை, ஈடுகட்டுதல்“ என்ற ப�ொருளியல் நிலை குடும்பம் – அரசு என்ற


இருநிலைகளுக்கும் ப�ொருந்தும். “வலியறிதல்“ என்ற அதிகாரத் தலைப்பில் கூறப்படும் கருத்துகள் மிக
ஆழமானவை.

வருவாயை நிலையறிந்து செலவு செய்ய வேண்டியதன் தேவையை,

“ஆற்றின் அளவறிந்து ஈக அதுப�ொருள்

ப�ோற்றி வழங்கும் நெறி”

என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். அளவறிந்து வாழாதனின் வாழ்க்கை இருப்பது ப�ோலத் த�ோன்றி


இல்லாமல் ப�ோய்விடும். எனவே, வரவுக்கேற்ற செலவு – செலவுக்கேற்ப திட்டமிடல் என்ற நிலையை
வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 41
செய்க ப�ொருளை

”ப�ொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை அருளிலார்க்கு

அவ்வுலகம் இல்லாகி யாங்கு”

“ப�ொருள் உடையவரே இவ்வுலகில் வாழ முடியும்“ என்பதனை இக்குறள் வலியுறுத்துகிறது. எனவே, “செய்க
ப�ொருளை“ எனக் கட்டளையிடுகிறார் வள்ளுவர். அப்பொருளானது, பகைவரையும் நம்மிடம் மண்டியிடச்
செய்யும் கூரான வாள் ஆகும் என நிலைநாட்டுகிறது குறள்.

”செய்க ப�ொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

எஃகதனிற் கூரியது இல்”

சங்க நூல்கள் காட்டும் பிரிவுகளில் “ப�ொருள் வயிற்பிரிவு“ என்பதும் ஒன்று. இல்லற வாழ்வில் ஈடுபட்டோரில்,
ப�ொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் பிரிதலை ஒரு துறையாகவே பாடுகிறது சங்கம். த�ொல்காப்பியரும்
இது பற்றிப் பேசுகிறார்.

அரசின் வருவாய்

”உறுப�ொருளும் உல்கு ப�ொருளும் ஒன்னார்த்

தெறுப�ொருளும் வேந்தன் ப�ொருள்”

ஓர் அரசின் வருவாய் எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்பதை இக்குறள் வலியுறுத்துகிறது.

உறுப�ொருள்: வாரிசு இல்லாமல் இறந்தோரின் உடைமைகள்.

உல்கு ப�ொருள்: நிலவரி, விற்பனை வரி, சுங்கம் ப�ோன்ற வருவாய்கள்.

தெறுப�ொருள் – பகைவருடனான சண்டையில் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிக்கைகள்,


தண்டனைப் ப�ொருட்கள். இவ்வாறு ஒர் அரசுக்கு வரவேண்டிய வருவாயைப் பட்டிலிடுகிறது குறள்.

நேரிய முறையில் ! ஆட்சியாளர், குடிமக்களிடம் இருந்து பெறும் வருவாய் வகையிலான வரிகளின் அளவு
ஓர் கட்டுக்குள் இருத்தல் வேண்டும். இன்றேல், அது அவ்வரசின் ஆட்சிக்கே கேடாய் முடியும் என்பது
வள்ளுவத்தின் எச்சரிக்கை !

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணி ரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை”

முறை தவறி வரி வசூலித்த பாண்டியன் அறிவுடைநம்பியை எச்சரிக்கும் பிசிராந்தையார், முறையற்ற


வரிகளின் தீமையினை எடுத்துக் கூறி எச்சரிப்பது புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

”யானைபுக்க புலம்போலத் தானும் உண்ணான்

உலகமும் கெடுமே” என்கின்ற எச்சரிக்கை நினைவு கூரத்தக்கது.

குன்றேறி யானைப்போர்! ‘அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில்“ (தன்கையே தனக்கு உதவி) என்பது
நிதர்சனம். உரிமையுடன் கூடிய வாழ்க்கையென்பது, தானே ஈட்டிய ப�ொருளால் வாழ்வது, பிறரை நம்பி
வாழும் முறை நிலையற்றது.
42 |
”குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்னகத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை
என்ற குறளில் தானே ஈட்டிய ப�ொருள் க�ொண்டு வாழும் வாழ்க்கை, குன்றில் இருந்து க�ொண்டு யானைச்
சண்டையைக் காண்பதற்கு ஒப்பாகும் என்று நிரூபணம் செய்கிறார் வள்ளுவர்.

வரும் வழி
“அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த ப�ொருள்”
என்பதற்கேற்ப, நேர்மையான முறையில் ஈட்டப்பட்ட ப�ொருளால் அறம், இன்பம் இரண்டும் விளையும்,
அவையே நிலைக்கும் என்பது வள்ளுவம்.
தனி மனிதாயினும், அரசு ஆயினும் அருள், அன்பு இரண்டுடன் வாராத ப�ொருள், விரும்பப்படக் கூடாது
என்கிறார் வள்ளுவர். ஈட்டுவதிலும் (Earning) இரக்கம் தேவை என்பது, ப�ொருளியல் அரிச்சுவடி! வல்லது
அரசு !
”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு”
இயற்றல் – Earning, ஈட்டல் – Collection, காத்தல் – Banking, வகுத்தல் - Planning.
அரசு, குடும்பம், தனியாள், நிறுவனங்கள் அனைத்திற்குமான வழிகாட்டல் இக்குறள்.

மாதிரிக் கட்டுரை - 4

திருக்குறளில் மெய்யியல் (Philosophy) கருத்துகள் பற்றி ஒரு கட்டுரை வரைக

“திருக்குறள் – ஒரு மெய்யியல் நூல்“

திருக்குறள் நடைமுறை வாழ்க்கைக்கு உரிய நூலாக மட்டுமின்றி குறிக்கோளியலுடன் கூடிய


“மெய்ம்மையியல்“ நூலாகவும் விளங்குகிறது.

தவம், நிலையாமை, துறவு, ஊழ், பழைமை பற்றிய திருக்குறள் கருத்துகள் வாழ்க்கையின்


உண்மையை நிலைநாட்டுவன. இவ்வொழுக்கங்கள் ஒருவரை மகாத்மா நிலைக்கு இட்டுச் செல்வன.
வள்ளுவம் “இம்மெய்ம்மையியல்” க�ொள்கை பற்றி விரிவாகப் பேசுகிறது.

துறவறவியல்

இவ்வியலின் 25 முதல் 35 வரையிலான அதிகாரங்களில் மனிதம், புனிதம் ஆவதற்கான வழிமுறைகளைப்


பட்டியலிடுகிறார் வள்ளுவர். இவை எல்லோராலும் கடைபிடிக்கக் கூடியன அல்ல. ஆனால், இவை
அனைத்தும் வாழ்வின் உயர்நிலையை அடையத் தேவையான உன்னத குறிக்கோள்கள்.
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 43
பற்று அறு

பற்றற்ற நிலையை வள்ளுவம் வலியுறுத்துகிறது. உலக விடயங்களில் உறுதியற்ற தன்மையிருப்பதால்


(Instability) தாமரையிலைத் தண்ணீராய், விளங்க வேண்டும் என்பது மறைமுகக் கருத்து. எவ்வொன்றிலும்
அதீதப் பற்று வைப்பதனால் வரும் ஆபத்தினை வள்ளுவம் சுட்டிக் காட்டுகிறது.

”யாதனின் யாதனின் நீங்கியான் ந�ோதல்

அதனின் அதனின் இலன்”

இதனையே திருமூலர்

”ஆசைப்படப் பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசைவிடவிட ஆனந்த மாமே” என்கிறார்.

”பற்றுகளை விடுவதற்குப் பற்றுக இறைவனை” என்கிறது வள்ளுவம்.

”வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை” – விரும்பாமையே விட உயர்ந்த செல்வம்


இவ்வுலகில் இல்லை என்கிறார் வள்ளுவர். வேண்டாமையை விட மேலானது இல்லை என்பது
இதன் ப�ொருள்.

தவம்

”உற்றந�ோய் ந�ோன்றல் உயிர்க்குறுங் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு”

பிறர் செய்யும் தீமைகளைப் ப�ொறுத்தலும், எவ்வுயிர்க்கும் தீங்கு இழையாமையும் தவத்திற்கு இலக்கணம்


என்கிறது குறள். இதன் மறுப�ொருள், காட்டிலும் மேட்டிலும் அமர்ந்து கடுமை ந�ோன்பிருத்தல் அன்று தவம்.
”எண்ணம்-ச�ொல்-செயல்” மூன்றிலும் ஒத்துச் செயல்படும் சமநிலையே தவத்தின் வலிமை என்பது
மெய்யியல் வீதியையும் வெல்லக் கூடிய வலிமையைத் தவம் தருகிறது.

”கூற்றம் குதித்தலும் கைகூடும் ந�ோற்றலின்

ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு”

கூற்றம் – எமன், குதித்தல் – த�ோல்வி, ந�ோற்றல் – தவம் செய்தல்.

நிலையாமை
இவ்வதிகாரம் முழுமையும் நிலையாமைக் கருத்துகள் க�ொட்டிக் கிடக்கின்றன. நிலையில்லாத
ப�ொருள்களை எல்லாம் நிலையானது என்று உணர்கின்ற அறிவு மிக இழிவானது என்பதனால்
அவ்வறிவினைப் “புல்லறிவு“ (Little knowledge) என்கிறது குறள்.

”கூத்தாட்டு அவை“ (Theatre)-யில் கூடிக் களையும் கூட்டம் (Audience) ப�ோன்றது செல்வம், செல்வம்
நிலையானது அல்ல என்பது குறள் காட்டும் நெறி.

”இளமை, செல்வம், உடல், அழகு” ஆகியன நிலையானவை அல்ல என்ற கருத்து ”மணிமேகலை”
காவியத்தில் முன் வைக்கப்படுகிறது.
44 |
”நாளென ஒன்றுப�ோல் காட்டி உயிர்ஈரும்

பாளது உணர்வார்ப் பெறின்”.

”ஒரு நாள் என்பது நமது வாழ்நாளைக் குறைக்கின்ற வாள்” என்பது வள்ளுவக் க�ொள்கை. மேலும்,

”நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின்” – நரிவெரூவத் தலையார், புறநானூறு

”ஒல்லும் வகையின் அறவினை ஓவாதே

செலுல்லும் வாயல்லாம் செயல்”

என்பதற்கு ஏற்ப, நல்ல செயல்களை நம்மால் முடிந்த வரையில் செய்ய வேண்டும். “வாழ்க்கை சிறியது“(Life
is short) எனவே, ”மரணம் வரும் முன்னர், நல்வினைகள் செய்யப்பட வேண்டும்” என்பது குறள்நெறி.

”நாச்செற்று விக்குள் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்” என்கிறது வள்ளுவம்.

ஒரு ப�ொழுதும்

தான் வாழும் நாள் எவ்வளவு என்று தெரியாதவர்கள், பலக�ோடிகளையும் தாண்டிக் கற்பனை செய்து
க�ொள்கின்றனர் என்பது வள்ளுவத்தின் சாடல்.

”ஒருப�ொழுதும் வாழ்வது அறியார் கருதுப

க�ோடியும் அல்ல பல”

வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை வள்ளுவத்தைப் ப�ோல விளக்கிய நூல் வேறெதுவும் இல்லை.

”உறங்குவது ப�ோலும் காக்காடு உறங்கி

விழிப்பது ப�ோலும் பிறப்பு”

என்று மிக எளிமையாக நிலையாமையை விளக்குகிறது திருக்குறள்.

கூடுவிட்டு

”வீடுவரை உறவு, வீதிவரை மனைவி


காடுவரை பிள்ளை, கடைசிவரை யார�ோ?” – கண்ணதாசன்

”வாழ்க்கை என்பது வியாபாரம் – அதில்


ஜனனம் என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்” – கண்ணதாசன்
(திருக்குறள்-கட்டுரைப் பயிற்சி) | 45
”குடங்கை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு” என்ற குறள் நிலையாமையில்,

”கூடுவிட்டு ஆவிப�ோனால் கூடவே வருவதென்ன?” என்று வினவப்படுகிறது.

இன்பம் எங்கே?

”காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றின்

நாமம் கெடக்கெடும் ந�ோய்”.

”இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்”.

ஆம் அளவற்ற பற்றினை ஒரு ப�ொருளின் மீது செலுத்துவதால் வரும் தீமைகளை, அப்பற்றுகளை
விட்டுவிடுவதால் அகற்ற முடியும்.

இடுக்கண் வருங்கால்

“இடுக்கண் வரும்போது, துணிவ�ோடு எதிர்கொண்டு துடைத்தெறிக” என்பதே வள்ளுவத்தின் கட்டளை.

“துன்பம் வரும்போது சிரிக்கவும்“ என்பது இதன் ப�ொருளன்று. ”துன்பத்தை எதிர்கொண்டு வெல்க“ என்பதே
இக்குறள் குறிப்பிடும் க�ோட்பாடு.

எல்லா நிலைகளிலும், எல்லாத் துறைகளிலும் பேசப்படும் “திருக்குறள்“ “மெய்ம்மையியல்“ எனப்படும்


தத்துவத்திலும் தனது முத்திரையை விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை நிலை !.

You might also like