You are on page 1of 5

À¢Ã¢× « : š츢Âõ «¨Áò¾ø

( 10 ÒûÇ¢¸û )

À¼ò¾¢ø ¸¡½ôÀÎõ ¿¼ÅÊ쨸¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ³óРš츢Âí¸û ±Øи.

1._______________________________________________________________________

________________________________________________________________________

2._______________________________________________________________________

________________________________________________________________________

3.______________________________________________________________________

________________________________________________________________________

4._______________________________________________________________________

________________________________________________________________________

5._______________________________________________________________________

_______________________________________________________________________
பிரிவு ஆ : திறந்தமுடிவுக் கட்டுரை

( 25 புள்ளிகள் )

கீழ்க்காணும் 1,2 ஆகிய தலைப்புகளுள் ஏதாகிலும் ஒன்றனைத்


தெரிவு செய்து கட்டுரை எழுதுக. கட்டுரை 80 சொற்களுக்குக்
குறையாமல் இருக்க வேண்டும்.

1. ‘நான் விரும்பும் புது உலகம்’ எனும் தலைப்பில் கட்டுரை


எழுதுக.

அல்லது

2. ‘நான் ஒரு பேனா’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதுக.


விடைகள்

வாக்கியம் அமைத்தல்

1. மேகன் சறுக்குப் பலகையில் சறுக்கி விளையாடுகிறான்.


2. மேனகாவும் சசிகலாவும் ஏற்றம் இறக்கம் விளையாடுகின்றனர்.
3. நண்பர்கள் இருவர் இருக்கையில் அமர்ந்து உரையாடுகின்றனர்.
4. பிரமிளா ஊஞ்சல் விளையாடுகிறாள்.
5. பிரவின் ஊஞ்சலில் வேகமாக ஆடுகிறான்..

திறந்த முடிவுக் கட்டுரை

மனிதனின் ஆசைகளை அவ்வளவு எளிதில் கணக்கிட முடியாது.


வினாடிக்கு ஒரு ஆசையென்று அது வளர்ந்து கொண்டே செல்கிறது. நாம்
வாழும் இவ்வுலகம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எனக்கும்
ஓர் நியாயமான ஆசை உண்டு. அவ்வுலகம் எப்படி எல்லாம் இருக்கும் என்ற
கற்பனை எனக்கு அவ்வப்போது வருவதும் உண்டு.

நான் விரும்பும் புது உலகம் தூய்மையானதாக இருக்கும். அங்கே


இயற்கையை மாசு படுத்தும் மனித நடவடிக்கைகள் ஏதும் இருக்காது.
வானளாவிய கட்டிடங்களை விடவும் பச்சைப் பசேல் புல்வெளிகளே
மிகுதியாக இருக்கும். நீரும் நிலமும் காற்றும் ஒலியும்
தூய்மைக்கேடுகளுக்கு அப்பாற்பட்டிருக்கும். இதனால் மனிதர்கள் நோய்
நொடியின்றி இயற்கையோடு ஒன்றி வாழ்வார்கள்.

இவைப்போக நான் விரும்பும் புது உலகில் மனிதர்கள் நற்பண்புகளை


மட்டுமே கொண்டிருப்பர். அவர்களிடத்தில் பிற மனிதனை அச்சுறுத்தும் தீய
குணங்கள் இருக்காது. இதனால் எங்கும் அன்பு மழைப் பெய்யும். கொலை
கொள்ளை முதலிய சீர்கேடுகளில் இருந்து விடுதலைப்பெற்ற உலகமாக அது
இருக்கும்.
இவற்றோடு நான் விரும்பும் புது உலகில் பணத்திற்கான
முக்கியத்துவம் குறைவாக இருக்கும். மனிதர்கள் தங்களிடம் உள்ளவற்றை
ஒருவருக்கொருவர் இலவசமாகத் தந்து வாழ்வார்கள். இதனால் தேவைக்கு
அதிகமாய்ச் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் தேவை இல்லாமல் போகும்.

நண்பர்களே, இத்தகைய உலகம் வெறும் கற்பனையில் மட்டுமே


அமையக்கூடும். ஆனாலும் நாம் அனைவரும் நினைத்தால் இத்தகைய
உலகை கண் முன்னே உருவாக்கலாம். அந்தப் பொற்காலத்துக்காக
உங்களைப்போல் அடியேனும் காத்திருக்கின்றேன்.

2.

இன்றும் வழக்கம் போல் நான் என் எஜமானருக்காக உழைத்துக்


கொண்டிருக்கிறேன். அவர் தேவைப்படும்போதெல்லாம் என்னை பயன்
படுத்திக்கொண்டிருக்கின்றார். அதே சமயம் மற்ற மாணவர்கள் என்னை
ஆசையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பள்ளியின் ஓய்வு மணி
ஒலித்தது. என் எஜமானர் என்னை பத்திரப்படுத்தி விட்டு சிற்றுண்டிச்
சாலைக்கு விரைந்தார்.என் நினைவுகள் பின்னோக்கி நடக்கின்றன.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள். ஆனால் நான் சிறு


துரும்பல்ல. மாணவர்களாகிய நீங்கள் பயன்படுத்தும் பேனா ஆவேன்.
என் பெயர் ரோமன். என் உடல் இரும்பைக் கொண்டு
தயாரிக்கப்பட்டது. என் தோல் பகுதி கறுப்பு நிறமாகும். நான் சிலாங்கூர்
மாநிலத்தில் பிறந்தேன். பல இயந்திரங்களால் செதுக்கப்பட்டுப்
பிறந்தும் பிறருக்கு பயன்படப் போவதை நினைத்து பெருமையோடு
இப்பூமிக்கு வந்தேன்.

சில நாள் தயாரிப்புக்குப் பிறகு என்னை சரவாக் மாநிலத்திற்கு


ஏற்றுமதி செய்தனர்.அங்கிருந்த புத்தகக் கடையில் நான் காட்சிக்கு
வைக்கப்பட்டேன். மற்ற என் நண்பர்கள் போல் இல்லாமல் என் உடம்பு
பல சிற்ப வேலைப்பாடுகளோடு காட்சியளித்தது. எனவே என்
விலையும் அதிகமாகவே இருந்தது. இரு மாதங்களுக்குப் பிறகு
பெரியவர் ஒருவர் நான் இருந்த கடைக்கு வந்தார். அவருக்கு என்னை
மிகவும் பிடித்துப்போனது. என்னை வாங்கிச்சென்று தன் பேரனுக்குப்
பரிசாகத் தந்தார். அன்று முதல் அவரது பேரன் குமார் என் எஜமானர்
ஆனார்.

நல்ல மாணவரான அவர் என்னை மிகவும் கவனமாகப் பேணி


வருகிறார். நானும் அவரது தேவைக்கு ஏற்ற சேவையை வழங்கி
வருகிறேன். சரி மாணவர்களே, நேரம் ஆகி விட்டது. இனி என்
எஜமானர் வந்து விடுவார். நான் அவருக்காக உழைக்க வேண்டும்.
நீங்களும் உங்கள் வேலையை கவனியுங்கள். நன்றி.

You might also like