You are on page 1of 3

தமிழவேள்

கோ.சாரங்கபாணி
அவர்கள்
ஆற்றிய
சேவைகள்
கோ. சாரங்கபாணி (சாரங்கபாணி
கோவிந்தசாமி) (ஏப்ரல் 20, 1903 - மார்ச் 16, 1974)
சிங்கப்பூரின் சமூகத் தலைவர்.
பத்திரிகையாளர், எழுத்தாளர்,
செயல்பாட்டாளார் என அறியப்பட்டவர்.
மலேசியாவும் சிங்கப்பூரும் 'மலாயா' என்று
ஒரே நாடாக இருந்த காலத்தில், இங்கு வாழ்ந்த
இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும்
ஒருமைப்பாட்டுக்காகவும் 40 ஆண்டு
காலத்துக்கும் மேலாகப் பாடுபட்டவர்.
மலாயாவில் நவீனத் தமிழ் இலக்கியம்
தழைக்கவும் தமிழ்ப் பண்பாட்டு வேர்களை
உருவாக்கவும் வித்திட்டவர்களில்
முதன்மையானவர். தமிழ் மக்களின்
மொழியையும் பண்பாட்டையும் போற்றி
வளர்க்க அவர் ஆரம்பித்த தமிழர் திருநாள்
கொண்டாட்டம், மலேசியா, சிங்கப்பூரில்
இந்தியக் கலையும் தமிழ் இலக்கியமும் வளர
வழிகோலியது. அவர் தொடங்கிய தமிழ்
முரசை சமூக மேம்பாட்டுக்கான ஊடகமாக
பயன்படுத்தினார். மலாயாவில் வாழ்ந்த
தமிழர்கள் குடியுரிமை பெற்றவர்களாக
வாழவும், தாய்மொழியாம் தமிழோடு தமிழ்க்
கலை இலக்கியத்தைப் போற்றி
வளர்த்தெடுக்கவும் வேண்டி பல்லாற்றானும்
பாடாற்றியவர். பிரிட்டிசாரின் காலனித்துவ
ஆட்சியின்போது மலாயா இரப்பர்
தோட்டங்களில் தொழிலாளிகளாக இருந்த
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட
கொடுமைகளைக் கண்டு மனம் பொறுக்காமல்
கொதித்தெழுத்து தமிழர் சீர்திருத்த
சங்கத்தின்வழி போராடியவர்.
அனைத்திற்கும் மேலாக, மாலாயாவிலும்
சிங்கப்பூரிலும் தமிழ்மொழிக் கல்வி
நிலைப்பதற்கு மிக உறுதியான அடித்தளத்தை
ஏற்படுத்தியவர் அமரர் கோ.சா என்பது
பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ள
வரலாறு. மலாயாவில் முதன் முதலாகப்
பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது அதில்
சமற்கிருத மொழியைப் பாட மொழியாக
வைக்கவேண்டும் என பேராசிரியர் நீலகண்ட
சாஸ்திரி பரிந்துரை செய்தார். ஆனால், அமரர்
கோ.சா இந்தப் பரிந்துரையை மிகத் தீவிரமாக
எதிர்த்தார். பல்கலைக்கழகத்தில் தமிழயே
வைக்கவேண்டும் என்று போராடினார்.
பல்கலைக்கழகத்தில் தமிழை இடம்பெறச்
செய்வதற்காக ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற
நிதித்திட்டத்தைத் தொடங்கி நாடுமுழுவதும்
சுற்றித்திரிந்து பணத்தைத் திரட்டி தமிழைக்
காப்பாற்றிய பெருமகனார் இவராவார்.
இவருடைய அயராத உழைப்பின் பயனாகவும்
தமிழ்மக்கள் ஒன்றுதிரண்டு வழங்கிய
ஆதரவினாலும் மலாயா பல்கலைக்கழகத்தில்
தமிழை முதல் மொழியாகக் கொண்ட இந்திய
ஆய்வியல் துறை அமைந்தது.

You might also like