You are on page 1of 3

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு (1)

எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை


அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.
அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக்
கொண்டிருக்கின்றது.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100 )

நன்மை தரும் இனியசொற்கள் இருக்கும்போது


அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும்
கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும் போது
காயைப் பறித்துத்தின்பதற்கு ஒப்பாகும்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (391)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்;


அவ்வாறு கற்ற பிறகு கற்ற கலிவிக்குத்தகுந்தபடி
நடந்துகொள்ள வேண்டும்.

You might also like