You are on page 1of 23

இலக்கணம்

ஆண்டு 6
உள்ளடக்கத் தரம் : 5.3
சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

கற்றல் தரம் : 5.3.25


பெயரடை, வினையடை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
அடை

 சொல்லின் தன்மையை அல்லது இயல்பை


விளக்குவதாகும்.
 பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும்
அடையாக வரும் சொல்லைப் பண்புச்சொல்
என்கிறோம்.
பெயரடை
 பெயர்ச்சொல்லின் தன்மையை அல்லது
இயல்பை விளக்குவது பெயர்ச்சொல்லாகும்.

 பெயரடை பெரும்பாலும் ‘ஆன’ என்ற


சொல் உருபு பெற்று வரும்.
வினையடை
 வினைச்சொல்லின் தன்மையை அல்லது
இயல்பை விளக்குவது வினைச்சொல்லாகும்.

 வினையடை பெரும்பாலும் ‘ஆக’ என்ற


சொல் உருபு பெற்று வரும்.
எடுத்துக்காட்டு
1. அழகான பதுமை
(பெயரடை) (பெயர்ச்சொல்)

2. உயரமான கட்டடம்
(பெயரடை) (பெயர்ச்சொல்)

3. அத்தைக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

4. தமிழ்மொழி தொன்மையான மொழியாகும்.


எடுத்துக்காட்டு
1. அழகாக வரைந்தாள்
(வினையடை) (வினைச்சொல்)

2. உயரமாகப் பறந்தது
(வினையடை) (வினைச்சொல்)

3. நாம் அனைவரிடமும் அன்பாகப் பேச வேண்டும்.

4. பாடும் திறன் போட்டியில் மாலதி இனிமையாகப்


பாடினாள்.
விளையாடலாம்
தேர்வு எண்
கேள்வி :

கண்ணன் நேர் ஓட்டத்தில் வேகமாக ஓடி


முதல் பரிசை வென்றான்.

பெயரடை

வினையடை
கேள்வி :

அக்காள் கட்டியிருந்த அழகான சேலை


அனைவரையும் கவர்ந்து ஈர்த்தது.

பெயரடை

வினையடை
கேள்வி :

கீர்த்தனா தேர்வில் கேட்கப்பட்ட அனைத்துக்


கேள்விகளுக்கும் சரியாகப் பதிலளித்தாள்.

பெயரடை
வினையடை
கேள்வி :

சிறப்பாக நடனம் ஆடிய தாரிகாவை


மக்கள் அனைவரும் பாராட்டினர்.

வினையடை

பெயரடை
கேள்வி :

பிறந்தநாள் விருந்தில் சுவையான உணவு


பரிமாறப்பட்டது.

பெயரடை

வினையடை
கேள்வி :

மலாக்கா மாநிலத்தில் அழகான வீடுகள்


கட்டப்பட்டுள்ளன.

வினையடை

பெயரடை
கேள்வி :

கடையில் வரிசையாக அடுக்கப்பட்ட


பொம்மைகள் சாரதாவின் மனதைக்
கவர்ந்தன.

பெயரடை

வினையடை
கேள்வி :

’்ரீதர், ஆசிரியர் வழங்கிய பாடங்களை


மிகவும் கவனமாகச் செய்தான்.

பெயரடை

வினையடை
கேள்வி :

திரு.முத்து கனமான மூட்டைகளைத் தூக்கிச்


சென்று கனவுந்தில் வைத்தார்.

பெயரடை

வினையடை
சரியான விடையைத் தேர்தெடுக்கவும்.
https://www.liveworksheets.com/2-fn1118823zs

விடைப்பட்டியல்
1.B 6. C
2.A 7. A
3.B 8. A
4.C 9. B
5.B 10. B

You might also like