You are on page 1of 5

SOWNDHARYA B

22B082
ENVIRONMENTAL EDUCATION
பசுமை அமைதி
 பசுமை அமைதி" என்பது சுற்றுச் சூழலைப் போற்றி பாதுகாத்திடுவதற்காக 1971 ஆம் ஆண்டு அமெரிக்காவில்
தோற்றுவிக்கப்பட்ட அரசுசரா நிறுவனம் ஆகும்.

 இது தற்போது நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாமைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

 இது உலக அளவில் மக்களிடையே சுற்றுச்சுழல் விழப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கத்தை முன்னெடுத்துச்


செய்வதற்காகவும் சுற்றுச்சூழலை சீரழிப்பது அரசாக இருந்தாலும் வணிக நிறுவனங்களாக இருந்தாலும் அதனை
எதிர்த்து வன்முறையற்ற வழிமுறைகளில் மக்கள் போராடுவதற்க்கு உதவ ஏற்படுத்தபட்ட நிறுவனம் ஆகும்.
பசுமை அமைதி அமைப்பின் குறிக்கோள்கள்:

 பருவநிலை மாற்றத்தைத் தடுத்தல்


 பழமையான காடுகளை பாதுகாத்தல் 
 பெருங்கடல்களைக் காப்பாற்றுதல்
 திமிங்கலங்கள் வேட்டையாப்படுதலை தடுத்து நிறுத்துதல்
 மரபணு மாற்றத் தொழில்றுட்டத்திற்கு மறுப்பு தெரிவித்தல்
 அணு ஆற்றலின் அச்சுறுத்தலை தடுத்தல்.
 நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்களை அகற்றுதல்.
பசுமை அமைதி அமைப்பின் வெற்றிச் சாதனைகள்:
 நச்சுத்தன்மை மிக்க கழிவுப் பொருட்களை வளர்ச்சி பெறாத நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை
செய்யப்பட்டுள்ளது.
 அதிகாரபூர்வ உடன்படிக்கை மூலம் வணிக திமிங்கல வேட்டை தற்காலிகமாக அரசால் தடை
செய்யப்பட்டுள்ளது.
  உலகளவில் மீன்பிடித் தொழிலை முறைப்படுத்த ஐ.நா மாநாடு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 தென் பசிபிக் பெருங்கடயில் திமிங்கல சரணாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 அண்டர்மிகா பிரதேசத்தில் கனிம வளங்களை அளவுக்கு அகதிகமான பயன்படுத்திடல் அதிகாரபூர்வமாக 50
ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
 ஆழ்கடலில் சுருக்கு வலைகளை பயன்படுத்தி பெருமளவு மீன் பிடித்தல் அதிகார பூர்வமாக முற்றிலும் தடை
செய்யப்பட்டுள்ளது.
 அணு ஆயுத சோதனைகள் நடத்திடுவதை எதிர்த்து பசுமை அமைதி அமைப்பு நடத்திய தனது முதல்
போராட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ளது.

You might also like