You are on page 1of 17

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை

வரலாறு
பாகம்-20

அது 1855-ஆம் ஆண்டு கோகுலாஷ்டமி நாள்


வந்தது. கண்ணன் பிறந்த அந்த நன்னாளை
கோலாசலமாகக் கொண்டாடுவதற்கான
எற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் கோகுலாஷ்டமியன்று அசம்பாவித
நிகழ்சச
் ி ஒன்று நடந்தது.
அன்று ராதாகோவிந்தருக்கு உச்சிக்கால
பூஜையும் நைவேத்தியமும் நிறைவேறிய பின்னர்,
அர்ச்சகரான ஷேத்திரநாதர் ராதாராணி
விக்கிரகத்தைப் பள்ளியறையில் வைத்துவிட்டு,
கோவிந்தரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்று
கொண்டிருந்தார். வழியில் திடீரென கால்
வழுக்கிக் கீழே விழுந்தார்.
கோவிந்த விக்கிரகத்தைின் ஒரு கால் உடைந்து
விட்டது. இது விஷயமாகப் பல பண்டிதர்களின்
யோசனை கேட்கப்பட்டது.
கதாதரர் பரவச நிலைகளில் அவ்வப்போது
ஆழ்வதையும் இது பொன்ற பிரச்சனைகளுக்கு
விடை சொல்வதையும் பற்றி ஏற்கனவே
கேள்விப்பட்டிருந்த மதுர்பாபு அவரது
அறிவுரையைக்கேட்பதில் ஆர்வம் காட்டினார்.
இது பற்றி ஹிருதயர் கூறியதாவது, உடைந்த
விக்கிரகம் பற்றி மதுர்பாபு கேட்டதும் கதாதரர்
பரவசநிலையில் ஆழ்ந்தார். பரவசநிலை
கலைந்ததும், புதிய விக்கிரகம் தேவையில்லை
என்று கூறிவிட்டார். உடைந்த விக்கிரகங்களைச்
செப்பனிடுவதில் கதாதரர் கைதேர்ந்தவர் என்பது
மதுருக்குத் தெரியும். அவரது வேண்டுகோளின்
பேரில் கோவிந்த விக்கிரகத்தை உடைந்த காலை
கதாதரரே சரி செய்தார்.
அந்த விக்கிரகமே தொடர்ந்து வழிபடப்பட்டது.
இன்றும் அதனை உன்னிப்பாகப் பார்ப்பவர்கள்
கூட அது உடைந்து , சீர் செய்யப்பட்டது என்று கூற
முடியாது. அவ்வளவு அழகாக அதனைச் சரி
செய்துள்ளார் குருதேவர்.

பழுதபட்ட விக்கிரகத்தைப் பூஜிப்பதைப் பற்றிப்


பலர் பலவாறாகப்பேசினார். ஆனால் கததரரின்
அறிவுரையில் நம்பிக்கை கொண்டிருந்த
ராணியும் மதுரும் இத்தகைய பேச்சுகளுக்குச்
செவிசாய்க்கவில்லை. கவனமின்மைக்காக ’
ஷேத்திரநாதர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
ராதாகோவிந்தரின் பூஜை செய்யும் பொறுப்பு
குருதேவருக்குக் கொடுக்கப்பட்டது.
ராம்குமாருக்கு உதவியாக காளியின்
திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை
ஹிருதயர் ஏற்றார்.
ராதா கோவிந்தர் விக்கிரகம் உடைந்ததைப் பற்றிய
இன்னொரு நிகழ்சச ் ியை வேறொரு சமயத்தில்
ஹிருதயர் எங்களிடம் கூறினார்.
கல்கத்தாவிலிருந்து சில மைல்கள் வடக்கே
வராக நகரில் கூடிகாட்படித்துறைக்கு அருகில்
நடால் பகுதியைச்சேர்ந்த பிரபல நிலக்கிழாரான
ரதன்ராய்க்குச் சொந்தமான ஒரு படித்துறை
இருந்தது. அந்தத் துறைக்கு அருகில் தசமகா
வித்யை கோவில் ஒன்று உள்ளது.
ஆரம்ப காலத்தில் அந்தக் கோயிலில்
வழிபாட்டிற்கும் நைவேத்தியத்திற்கும் சிறந்த
ஏற்பாடுகள் இருந்தன. நாம் குறிப்பிடுகின்ற
இந்தக் காலகட்டத்தில் அந்த ஆலயம் அழியும்
நிலையில் இருந்தது.
கதாதரிடம் பக்தியும் மதிப்பும் கொண்டு,
அவருடன் மதுர் நெருங்கிப் பழகத் தொடங்கிய
நாட்களில் இருவரும் ஒரு நாள்
அந்தக்கோயிலுக்குச் சென்றனர். மோசமான
நிலையிலிருந்த அந்தக்கோயிலின் அன்றாட
வழிபாட்டிற்கு மாதம் இரு மணங்கு அரிசியும்
இரண்டு ரூபாயும் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு
மதுர்பாபுவைக்கேட்டுக்கொண்டார் கதாதரர்.
மதுர்பாபுவும் உடனடியாக அதற்கு இசைந்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குருதேவர்
சிலவேளைகளில் அந்தக்கோவிலுக்குச் சென்று
வருவதுண்டு. ஒரு முறை கதாதரர் அங்கிருந்து
வந்து கொண்டிருந்தபோது பிரபல நிலக்கிழாரான
ஜெயநாராயணன் தாம் கட்டிய படித்துறையில்
பலருடன் நின்று கொண்டிருந்தார்.
கதாதரருக்கு அவரைத் தெரியும். எனவே
அவரைச் சந்திக்கச்சென்றார். கதாதரரை
வணங்கி மரியாதையுடன் வரவேற்ற
ஜெயநாராயணர் தன் நண்பர்களுக்கும் அறிமுகம்
செய்து வைத்தார்.
உரையாடலின் போது கோவிந்த விக்கிரகத்தைப்
பற்றிய பேச்சு எழுந்தது.
ஜெயநாராயணர்கதாதரரிடம் கோவிந்தர் உடைந்து
விட்டாராமே? என்று கேட்டார்.
கதாதரர் அதற்கு பதிலாக ஆகா! என்ன
அறிவுத்திறன்? சிதைக்க முடியாத முழுமையான
பரம்பொருள் உடைந்துவிடுமா? என்று
கேட்டுவிட்டு தொடர்ந்து வீணான விவாதங்கள்
எழுவதைத் தவிர்ப்பதற்காகப் பேச்சின் போக்கை
மாற்றினார்.
எதிலும் தேவையற்ற அம்சங்களை விலக்கி.
தேவையானவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளும் படி
அறிவுரை கூறினார். ஜெயநாராயணரும்
கதாதரரின் குறிப்பை உணர்ந்து பயனற்ற
கேள்விகள் கேட்பதை நிறுத்திக்கொண்டார்.
ஹிருதயர் கூறினார், குருதேவர் பூஜை செய்வது
ஒரு கண்கொள்ளாக்காட்சி.
பார்ப்பவர்கள் அப்படியே தங்களை மறந்து நின்று
விடுவர். அந்த தெய்வீகக் குரல்! இதய
ஊற்றிலிருந்து அந்த இன்குரல் பொங்கி வரும்
போது தான் எத்தனை உருக்கம்!
ஒரு முறை கேட்டாலும் போதும் மறக்கவே
முடியாது. அவரது பாடல்களில் பெரிய இசை
மேதாவித்தனம் எதுவும் இருக்காது. ஆனால்
பாடலின் பொருளை அப்படியே தன்னுள் வாங்கி,
அந்த உணர்ச்சியைத் தமது தேனொழுகும்
தெய்வீகக் குரலில் குழைத்து தாள லய சுத்தமாக
அப்படியே இழைய விடுவார்.
உணர்ச்சி அல்லது பாவம் தான் சங்கீதத்தின் உயிர்
நாடி, என்பதை அவரது பாடல்களைக் கேட்கின்ற
யாரும் உணர்ந்து கொள்ள முடியும். அதே
வேளையில் தாளமும் லயமும் கீதத்துடன்
இசைந்து வராவிட்டால் இசையின் பாவம் சரியாக
வெளிப்பட முடியாது.
பிறர் பாடுவதையும் குருதேவர் பாடுவதையும்
ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெரியும். ராணி
ராசமணி தட்சிணேசுவரத்திற்கு
வரும்போதெல்லாம் குருதெவரைப் பாடும்படிக்
கேட்டுக்கொள்வார்.
கீழ்காணும் பாடலை ராணி மிகவும் விரும்பினார்.
ஓ அன்னையே!
நீசிவனின் மார்பின் மீது
நிற்கும் காரணம் தான் என்ன?
நீ நாக்கினை வெளியே நீட்டிக்கொண்டு
ஓர் எளிய பெண்ணைப்போல் இருக்கிறாய்.
அதன் காரணம் எனக்குப் புரிகின்றது.
ஓ! உலகைக் காப்பவளே!
இது உன் பரம்பரை ப் பண்பா?
உன் தாயும் இவ்வாறே உன் தந்தையின் மார்பின்
மீது நின்றாளா?
குருதேவரின் பாடல்கள் இனிமையாக
இருப்பதற்கு வேறொரு காரணமும் உண்டு. பாடும்
போது அவர் தம்மையே மறந்து பாடலின்
உணர்ச்சியிலும் அதன் பொருளிலும் பரிபூரணமாக
ஒன்றிப் பாடுவார்.
எந்த மனிதரையும் மகிழ்விப்பதற்காக அவர்
பாடுவதும் இல்லை. தம்மை மறந்து
சுற்றுப்புறத்தையும் மறந்து குருதேவர்
பாடுவதைப்போல வேறு யாரும் பாடுவதை
நாங்கள் கேட்டதே இல்லை.
எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
பாடகர்கள் சிறிது பாராட்டை எதிர்பார்ப்பார்கள்.
குருதேவர் விஷயத்தில் அந்த எதிர் பார்ப்பு கூட
இருந்ததில்லை. அவர் பாடுவதை யாராவது
புகழ்ந்தால், அந்தப் புகழ்மொழி பாடலில்
பொஞ்குகின்ற உணர்ச்சிக்கும் அதன்
கருத்துக்கும் தானேயன்றித் தமக்கு அல்ல
என்றே எண்ணினார்.
கதாதரர் பாடும்போது அவரது கண்களிலிருந்து
நீர் தாரைதாரையாக வழியும். பூஜை செய்யும்
போது பிறர் அருகில் வருவதையோ பேசுவதையோ
சிறிதும் அறியாத அளவிற்கு அதில் அப்படியே
லயித்து விடுவார். என்று ஹிருதயர்
சொல்வதுண்டு.
குருதேவர் கூறினார் பூஜைவேளையில் அங்க
நியாசம், கர நியாசம், போன்ற சடங்குகளைச்
செய்யும் போது மந்திரங்களின் எழுத்துகள்
பிரகாசமான வண்ணங்களில் என் உடலில்
ஒளிர்வதைநான் கண்டேன்.
குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாக ஒரு
பாம்பைப்போல சஹஸ்ராரத்திற்குச் செல்வதைப்
பார்த்தேன்.
அந்த சக்தி கடந்து சென்ற உடலின் பகுதிகள்
செயலற்று, உணர்ச்சியிழந்து உயிரற்றவை
போலாகிவிட்டன.
பூஜை வேளையில் ரம் இதி ஜலதாரயா வஹனி
ப்ராகாரம் விசிந்த்ய, என்று கூறியபோது அதாவது
ரம் என்ற பீஜ மந்திரத்தைக் கூறி நீரைத்
தெளித்து பூஜை செய்யும் பகுதியைச் சுற்றி
அக்கினிச் சுவர் எழும்பியிருப்பதாகக் கற்பனை
செய்தபோது, நூற்றுக் கணக்கான
ஜீவாலைகளைக் கொண்ட ஓர் அக்கினிச் சுவர்
எழும்பி அவ்விடத்தை எந்த வித ஆபத்தும்
நேராவண்ணம் காப்பாற்றுவதைக் கண்கூடாகக்
கண்டேன்.
உள்ளம் ஒன்றி கதாதரர் பூஜை செய்யும் போது
அவரது உடலில் ஒரு தெய்வீக ஒளி
பிரகாசிப்பதைக் கண்ட மற்ற பிராமணர்கள்
ஒருவருக்கொருவர்,” இறைவனே மனித
உருத்தாங்கி வந்து பூஜை செய்வது போல்
அல்லவா உள்ளது? என்று வியப்புடன்
பேசிக்கொண்டதாக ஹிருதயர் கூறினார்.

தட்சிணேசுவரத்திற்கு வந்த பின்னர் ராம்குமார்


குடும்பச்சுமையைப் பற்றிய கவலையிலிருந்து
பேரளவிற்கு விடுபட்டிருந்தார். ஆனால்
கதாதரரின் போக்கு மட்டும்
உறுத்திக்கொண்டிருந்தது. தம்பியின் தனிமை
நாட்டமும், உலகியலில் அக்கறையின்றி விலகி
நிற்கும் இயல்பும், எதிலும் விருப்பமின்றி
உதாசீனமாக நடந்து கொள்வதும் ராம்குமாரின்
மனத்தை வாட்டின.
காலை, மாலை என்றில்லாமல் கோயிலிலிருந்து
தொலைவில் கங்கைக் கரையில் ஆழ்ந்த
சிந்தனையுடன் அவர் நடப்பதும், பஞ்சவடியில்
ஏதோ நினைவாக அமர்ந்திருப்பதும்,
பஞ்சவடியைச் சுற்றியிருந்த அடர்ந்த காட்டில்
நெடுநேரம் இருந்து விட்டு வருவதும்
ராம்குமாருக்குப் பிடிபடாத புதிராக விளங்கின.
நாட்கள் கடந்தன. ஒரு வேளை
பெற்றஅன்னையின் நினைவால் வாடுகிறான்
போலும்.ஆனால் காமார்புகூருக்குச் செல்ல
வேண்டுமென்று ஒரு போதும் அவன்
கூறியதில்லை. நான் கேட்ட போது கூட அந்த
விருப்பம் இல்லையென்றே சொன்னான். எனவே
காமார்புகூருக்கு அனுப்பத்தேவையில்லை.
எனக்கும் வயதாகிக்கொண்டே போகிறது.
நாட்கள் செல்லச்செல்ல தளர்ச்சியும்
தள்ளாட்டமும் அதிகமாகி விட்டது.இன்றோ
நாளையோ வாழ்ககை ் என்று முடிவுறும் என்பது
யாருக்குத்தெரியும்?
இனியும் காலத்தை வீணாக்கக்கூடாது. சாகுமுன்
தம்பியை எப்படியாவது ஆளாக்கி அவன்
சொந்தக்காலில் நின்று சம்பாதித்து சிறப்பாக
வாழும்படிச் செய்வது என் கடமை, என்றெல்லாம்
ராம்குமாரின் மனத்தில் எண்ணங்கள் எழுந்து
அலைமோதின.
ஆகவே கதாதரருக்குக் கோயில் பொறுப்புகளைக்
கொடுப்பதுபற்றி மதுர்பாபு அவரிடம் கலந்து
ஆலோசித்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சி
அடைந்தார்.
கதாதரர் முதலில் காளியின் திருவுருவத்தை
அலங்கரிக்கும் பணியையும், தொடர்ந்து பூஜைப்
பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அந்தப்
பணியைத் திறம்படச் செய்தபோது அவரது
கவலை வெகுவாகக்குறைந்து விட்டது.
அதன் பின்னர் அவர் கதாதரருக்கு சண்டி, காளி
போன்ற பல்வேறு தெய்வங்களின் பூஜை
முறைகளில் பயிற்சி அளித்தார். கதாதரரும்
அவற்றைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டார். சக்தி
மந்திர தீட்சை பெறாமல் தேவிபூஜை செய்வது
முறையல்ல என்பதற்காக மந்திரோபதேசம்
பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.
கேனாராம் பட்டாச்சாரியார் என்ற சிறந்த உபாசகர்
கல்கத்தாவில் பைடக்கானா தெருப்பகுதியில்
வசித்துவந்தார்.
தட்சிணேசுவர ஆலயத்திற்கு அவர் அடிக்கடி
வருவார் . மதுர்பாபு மற்றும் ராணியின்
குடும்பத்தில் பலரையும் அவருக்குத்தெரியும்.
அவர் நல்ல சாதகர் என்பதால் எல்லோரும் அவரை
மதித்துப்போற்றினர்.
ராம்குமாரையும் கேனாராம் அறிந்திருந்தார்.
அவரிடம் மந்திரோபதேசம் பெற்றுக்கொள்வதென
கதாதரர் முடிவுசெய்தார்.
மந்திரோபதேசம் பெற்றவுடனேயே கதாதரர் பரவச
நிலை அடைந்து சமாதியில் ஆழ்ந்துவிட்டார்என்று
கூறப்படுகிறது.
இதைக்கண்ட கேனாராம் அளவற்ற மகிழ்ச்சி
அடைந்தார். சீடரின் உயர்ந்த பக்தியும் பக்குவமும்
அவருக்குச் சொல்லொணா வியப்பை அளித்தது.
சீடர் தமது லட்சியத்தில் வெற்றி பெற மனமார
வாழ்த்திச்சென்றார்.
இந்த வேளையில் ராம்குமார் ராதாகோவிந்தரின்
பூஜைப் பணியைத் தாம் ஏற்றுக்கொண்டுவிட்டு
காளியைப்பூஜிக்கும் பணியை கதாதரரிடம்
தற்காலிகமாகக் கொடுத்தார்.
அவ்வப்போது ஏற்பட்ட உடல் தளர்ச்சியோ,
தம்பியைக் காளிக்கோயில் அர்ச்சனர் பணியில்
சிறந்த முறையில் ஈடுபடச்செய்ய வேண்டும் என்ற
எண்ணமோ அவரது இந்த முடிவிற்குக்
காரணமாக இருக்கலாம். மதுர்பாபுவும்
ராம்குமாரை நிரந்தரமாக ராதா கோவிந்தர்
பணியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
ராம்குமாருக்கு வயதாகிவிட்டதால் உடல் தளர்ந்து
விட்டதையும், அவரால் காளிகோயில்பூஜை
போன்ற கடுமையான பணியைச் செய்ய இயலாது
என்பதையும் மதுர்பாபு உணர்ந்து தான் இருந்தார்.
அதனால் தான் உடனடியாக இந்த மாற்றங்களைக்
கொண்டுவந்து விட்டார்.
இப்போது முதல் கதாதரர் காளிகோயில்
அர்ச்சகராகப் பணியாற்ற முறையாக
நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றங்களால் ராம்குமார் மகிழ்ச்சி யுற்றார்.
அன்னையின் பூஜை பற்றிய விவரங்களை எல்லாம்
கதாதரருக்கு விளக்கமாகக் கற்பித்தார்.
காளிகோயில் பூஜை பற்றிய அவரது கவலை
தீர்ந்தது.
சில நாட்களுக்குப் பின்னர் ராம்குமார்
மதுர்பாபுவிடம் கலந்துபேசி ராதாகோவிந்தர்
ஆலய பூஜைப் பணியை ஹிருதயரிடம்
ஒப்படைத்துவிட்டார்.
சில நாட்கள் விடுமுறையில் காமார்புகூர் சென்று
வர விரும்பினார். அவரது அந்த ஆவல்
நிறைவேறவில்லை.

ஏதோ வேலை நிமித்தமாகக் கல்கத்தாவின்


வடக்கிலுள்ள சியாம்நகர் முலாஜர் என்ற
ஊருக்குச் சென்ற அவர் அங்கே திடீரென
காலமானார்.

காளிகோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றபின்


அங்கு ஓர் ஆண்டு மட்டும் பூஜை செய்தார். என்ற
குறிப்பிலிருந்து அவர் 1856-ஆம் ஆண்டு
காலமானார்

தொடரும்..
JOIN SRI RAMAKRISHNA WHATSAPP
GROUP

https://wa.me/919789374109?
text=Send_whatsapp_Group_Link

You might also like