You are on page 1of 4

லக்கின

பாவ பலன்கள்

பாவம் என்றால் என்ன?


‘பாவம்’ என்றால் ‘எண்ணம்’ அல்லது ‘சிந்தனை’ என்று பொருள்படும். உதாரணமாக
'அகம்பாவம்' என்னும் வார்த்தையை பிரித்து பார்த்தோமானால் அதில் 'அகம்' என்றும் 'பாவம்'
என்றும் இரண்டு சொற்கள் இணைந்துள்ளன. 'அகம்' என்றால் 'நான்' அல்லது 'தான்' என்று
பொருள்படும். 'பாவம்' என்றால் 'எண்ணம்' என்று பொருள் படும். 'அகம்பாவம்' என்பதின் பொருள்
'தான் என்ற எண்ணமாகும்'. எனவே பாவம் என்பது எண்ணங்களை குறிக்கிறது. எண்ணம்போல்
வாழ்வு என்பது முதுமொழி. மனிதனுக்கு ஆயிரக்கணக்கான எண்ணங்கள் உண்டு. மனிதன் எதை
அடைய விரும்புகிறானோ , அது அவன் மனதில் எண்ணமாகத்தோன்றுகிறது. மனிதனின் எண்ண
அலைகள் பிரபஞ்சத்தில் பரந்து விரிந்து செல்கிறது. பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் மனிதனின்
எண்ண அலைகள் அனைத்தும் பதிவாகிக்கிடக்கிறது. நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தைதான் ஒரு
வரை படமாக வரைந்து அதை ஜாதகம் என குறிப்பிடுகிறோம். அந்த ஜாதகத்தில் உள்ள
பன்னிரண்டு பாவங்களுக்குள்தான் மனிதனின் அனைத்து எண்ணங்களும் பிறப்பு சமயத்தில்
பதிவாகிறது. எந்த ஒரு செயலுக்கும் எண்ணமே காரணமாக அமைகிறது. எனவே ஜாதகத்தில்
பதிவாகியுள்ள மனிதனின் எண்ணங்கள் பாவ காரகங்கள் என அழைக்கப்படுகின்றன. பாவ
காரகங்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட செயலுக்கு காரணமான எண்ணங்கள் என்று பொருள்படும்.
உதாரணமாக திருமணம் என்ற எண்ணம் லக்கினத்திற்கு ஏழாமிடத்தில் பதிவாகியுள்ளது, குழந்தை
என்ற எண்ணம் லக்கினத்திற்கு ஐந்தாமிடத்தில் பதிவாகியுள்ளது. எண்ணங்கள் செயல்பாட்டிற்கு
வருமா? வராதா? என்பது கிரகங்கள் பாவங்களில் நின்ற சாதக பாதக நிலைகளை பொருத்து
ஆராய்ந்து கூறப்படுகிறது.

லக்கின பாவ காரகங்கள்


உயிர், உடல், உடல் வலிமை, உடற்பொலிவு, உடல் தோற்றம், அங்க அடையாளம், உடல்
சுத்தம், ஆயுள், ஆரோக்கியம், தலை, தலை முடி, ரத்தம்,தோல், பெயர், புகழ், கீர்த்தி, எண்ணம்,
நினைவு, உணர்வு, குணம், பழக்க வழக்கங்கள், கடவுள் பக்தி, கவனம், ஐம்புலன்கள், சுய மரியாதை,
சுய விருப்பம், சுய முயற்சி, நோய் எதிர்ப்பு சக்தி, பிறந்த இடம், தாயின் கௌரவம், தந்தையின்
பூர்வ புண்ணியம், குழந்தையின் பாக்கியம், சகோதரனின் லாபம், விழிப்பு, புத்துணர்வு,சந்தோசம்,
ஜாதகர்.

லக்கினத்தில் கிரகங்கள் நின்ற பலன்


1. லக்கினத்தில் சூரியன் நின்றால் ஜாதகர் புகழுடையவர், நிர்வாகத் திறமையுடையவர்.
2. லக்கினத்தில் சந்திரன் நின்றால் ஜாதகர் புகழுடையவர், பந்த பாசமுடையவர், உணவுப்பிரியர்,
சஞ்சல புத்தியுடையவர், பிரயாணத்தில் விருப்பமுடையவர்.
3. லக்கினத்தில் செவ்வாய் நின்றால் ஜாதகர் முன்கோபி, தைரியவான், கலகப்பிரியர்.
4. லக்கினத்தில் புதன் நின்றால் ஜாதகர் புத்திசாலி, ஹாஸ்யப்பிரியர், கலகலப்பானவர்.
5. லக்கினத்தில் குரு நின்றால் ஜாதகர் ஒழுக்கசீலர், சாந்த குணமுடையவர், தர்ம குணமுடையவர்,
ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்.
6. லக்கினத்தில் சுக்கிரன் நின்றால் ஜாதகர் ஆடம்பரப்பிரியர், அலங்காரப்பிரியர், கலைத்துறையில்
ஈடுபாடுடையவர், சுக விரும்பி.
7. லக்கினத்தில் சனி நின்றால் ஜாதகர் நீதிமான், மந்த நடையுடையவர்.
8. லக்கினத்தில் ராகு நின்றால் ஜாதகர் அங்கஹீனமுடையவர், முதுமையான தோற்றமுடையவர்,
ரகசிய நடவடிக்கைகள் உடையவர்.
9. லக்கினத்தில் கேது நின்றால் ஜாதகர் விரக்தி மனப்பான்மையுடையவர், பற்றற்றவர்.

லக்கினத்தில் பன்னிரு பாவாதிபதிகள் நின்ற பலன்


1. லக்கினத்தில் லக்கினாதிபதி நின்றால் ஜாதகர் புகழுடையவர், சொந்த காலில் நிற்பவர், சுய
முயற்சிகளில் வெற்றியடைவார்.
2. லக்கினத்தில் இரண்டாம் வீட்டதிபதி நின்றால் ஜாதகனை பணம் பொருள் தேடி வரும், குடும்ப
உறுப்பினர்களின் பாசம் ஜாதகனுக்கு கிடைக்கும்.
3. லக்கினத்தில் மூன்றாம் வீட்டதிபதி நின்றால் ஜாதகனுடைய இளைய சகோதரன் ஜாதகனுக்கு
உதவியாக இருப்பான்.
4. லக்கினத்தில் நான்காம் வீட்டதிபதி நின்றால் ஜாதகனுடைய தாய் ஜாதகன் மீது மிகுந்த
அன்புடன் இருப்பாள்,வீடு, வாகன சுகம் ஜாதகனை தேடி வரும்.
5. லக்கினத்தில் ஐந்தாம் வீட்டதிபதி நின்றால் ஜாதகனுடைய குழந்தைகள் ஜாதகன் மீது அன்பு
வைத்திருப்பார்கள், ஜாதகரை பலர் காதலிப்பார்கள்.
6. லக்கினத்தில் ஆறாம் வீட்டதிபதி நின்றால் ஜாதகருக்கு எதிரிகளால் பல தொல்லைகள் ஏற்படு.
பகை ஜாதகனைத் தேடிவரும்.
7. லக்கினத்தில் ஏழாம் வீட்டதிபதி நின்றால் ஜாதகரின் மனைவி/கணவன் ஜாதகர் மீது மிகவும்
அன்பாக இருப்பார்.
8. லக்கினத்தில் எட்டாம் வீட்டதிபதி நின்றால் ஜாதகனை அவமானங்கள் தேடிவரும்,ஜாதகருக்கு
பல மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வரும்.
9. லக்கினத்தில் ஒன்பதாம் வீட்டதிபதி நின்றால் ஜாதகரின் தப்பனார் ஜாதகர் மீது மிகுந்த அன்பு
வைத்திருப்பார்.
10. லக்கினத்தில் பத்தாம் வீட்டதிபதி நின்றால் ஜாதகருக்கு பேர், புகழ்,கௌரவம் தேடி வரும்.
11. லக்கினத்தில் பதினொன்றாம் வீட்டதிபதி நின்றால் ஜாதகருடன் நட்பு வைத்துக்கொள்ள
பலரும் விரும்புவார்கள்.
12. லக்கினத்தில் பன்னிரண்டாம் வீட்டதிபதி நின்றால் வெளி நாட்டு தொடர்புகள்
ஜாதகனைத்தேடிவரும்.

லக்கினாதிபதி பன்னிரு பாவங்களில் நின்ற பலன்


1. லக்கினாதிபதி லக்கினத்தில் நின்றால் ஜாதகர் புகழ் விரும்பி, தற்பெருமை பேசுபவர், சுய
கௌரவத்தை விட்டுக்கொடுக்காதவர்.
2. லக்கினாதிபதி இரண்டாம் வீட்டில் நின்றால் ஜாதகர் பணம் பொருள் தேடி அலைபவர்.
3. லக்கினாதிபதி மூன்றாம் வீட்டில் நின்றால் ஜாதகர் தன் இளைய சகோதரனின் தயவை
நாடுவார்.
4. லக்கினாதிபதி நான்காம் வீட்டில் நின்றால் ஜாதகர் தன் தாயாரின் உதவியை நாடுவார்.
5. லக்கினாதிபதி ஐந்தாம் வீட்டில் நின்றால் ஜாதகர் தன் குழந்தைகளின் தயவை நாடுவார்.
6. லக்கினாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால் ஜாதகர் வம்பு சண்டைக்குப்போவார்.
7. லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் நின்றால் ஜாதகர் எதிர் பாலார் மீது மோகம் உள்ளவராக
இருப்பார்.
8. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் நின்றால் ஜாதகர் அவமானங்களை தானே தேடிக்கொள்வார்.
9. லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் நின்றால் ஜாதகர் இறை அருளை நாடிச்செல்வார், தன்
தகப்பனாரின் தயவை நாடுவார்.
10. லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் நின்றால் ஜாதகர் பட்டம், பதவிகளை அடைய பெரும் முயற்சி
செய்வார்.
11. லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் நின்றால் ஜாதகர் பலருடைய நட்பை நாடுவார், லாபம்
கருதி நட்புகளை, உறவுகளை ஏற்படுத்துவார்.
12. லக்கினாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் நின்றால் ஜாதகர் வீட்டிற்கு வெளியே
பொழுதைக்கழிக்க விரும்புவார்.

பிறப்பு லக்கினமும் பிறப்பிடமும்


1. ஜென்ம லக்கினத்தை சூரியன் பார்த்தால் குழந்தை தகப்பன் வீட்டில் அல்லது அரசு மருத்துவ
மனையில் அல்லது தேவாலயத்தில் பிறக்கும்.
2. ஜென்ம லக்கினத்தை சந்திரன் பார்த்தால் குழந்தை தாய் வீட்டில் அல்லது தாயின் உறவினர்
விட்டில் பிறக்கும்.
3. ஜென்ம லக்கினத்தை சுக்கிரன் பார்த்தால் குழந்தை தாய் வீட்டில் பிறக்கும்.
4. ஜென்ம லக்கினத்தை சந்திரன் பார்க்காவிடில் குழந்தை பிறக்கும் நேரத்தில் தகப்பன் அயல்
வீட்டில் தங்கியிருப்பான்.
5. ஜென்ம லக்கினத்தை குரு பார்த்தால் குழந்தை பூஜை அறையில் பிறக்கும்.
6. ஜென்ம லக்கினத்தை புதன் பார்த்தால் குழந்தை சித்திரமெழுதிய வீட்டில் பிறக்கும்.
7. ஜென்ம லக்கினத்தை சனி பார்த்தால் குழந்தை இருட்டு அறையில் பிறக்கும்.

பன்னிரு லக்கினங்களும் குணாதிசயங்களும்


1. லக்கினம் மேசமானால் ஜாதகர் முங்கோபி, செயல் வேகமுடையவர், தைரியமானவர், அதிகார
தோரணையுடையவர்,ஆளுமையுடையவர், ஆணவம் மிக்கவர், புகழை விரும்புபவர்.
2. லக்கினம் ரிசபமானால் ஜாதகர் ஆடை ஆபரணப்பிரியர், சுக விரும்பி, உணவுப்பிரியர், அழகை
ஆராதிப்பவர்.
3. லக்கினம் மிதுனமானால் ஜாதகர் புத்திசாலி, பல நண்பர்களையுடையவர், நகைச்சுவை விரும்பி,
கலகலப்பானவர்.
4. லக்கினம் கடகமானால் ஜாதகர் அன்பு மனமுடையவர், எல்லோரையும் அரவணைப்பவர்,
உணவுப்பிரியர்,அமைதியான தோற்றமுடையவர்.
5. லக்கினம் சிம்மமானால் ஜாதகர் அரசனைப்போன்றவர், தலைமை தாங்கும் தகுதியுடையவர்,
தியாக மனப்பான்மையுடையவர், பொது நல விரும்பி.
6. லக்கினம் கன்னியானால் ஜாதகர் புத்திசாலி, இயற்கை காட்சிகளை ரசிப்பவர், விவாதப்பிரியர்,
சாதனையாளர்.
7. லக்கினம் துலாமானால் ஜாதகர் பெண் மோகம் உடையவர், பணம் பொருள் தேடி அலைபவர்,
பணத்தின் மீது பற்றுள்ளவர், வியாபார நோக்கமுடையவர்.
8. லக்கினம் விருச்சிகமானால் ஜாதகர் ரகசிய நடவடிக்கைகளுடையவர், முன் கோபி, உள்ளுணர்வு
மிக்கவர்,ரகசியங்களை பாதுகாப்பவர், உணர்வுகளை வெளிக்காட்டாதவர்.
9. லக்கினம் தனுசானால் ஜாதகர் தர்ம சிந்தனயுடையவர், ஒழுக்க சீலர், சாத்வீக குணமுடையவர்,
சாந்தமானவர்.
10. லக்கினம் மகரமானால் ஜாதகர் சோம்பலுடையவர், தொழில் மீது பற்றுடையவர்.
11. லக்கினம் கும்பமானால் ஜாதகர் சோம்பலுடையவர், ரகசிய நடவடிக்கைகளுடையவர்,
உள்ளுணர்வு மிக்கவர், ரகசியங்களை பாதுகாப்பவர்.
12. லக்கினம் மீனமானால் ஜாதகர் தெய்வ நம்பிக்கையுடையவர், சுக விரும்பி, அதிக
தூக்கமுடையவர்.

லக்கின விசேசம்
1. மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு உள்ளுணர்வு
அதிகமாக இருக்கும்.
2. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு மாந்தரீகம் எளிதில் சித்திக்கும்.
3. விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்கள் பாவ காரியங்கள் அதிகமாக செய்வார்கள்.
4. தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் புண்ணிய காரியங்கள் அதிகமாக செய்வார்கள்.
5. விருச்சிகம், கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு மறைபொருள் அறிவதில் அதிக விருப்பம்
இருக்கும்.
6. கன்னி லக்கினக்காரர்கள் கவர்ச்சி காட்டுவதில் விருப்பமுடையவர்கள்.
7. துலாம் லக்கினக்காரகளுக்கு வாசி யோகம் சித்திக்கும்.
8. மகர லக்கினக்காரர்கள் மற்றவருக்கு நன்றாக அடிமை வேலை செய்வார்கள் (எடுபிடி வேலை)
அல்லது மற்றவர்களை அடிமை போல் பணித்து வேலை வாங்குவார்கள்.

You might also like