You are on page 1of 7

வாசுகி மோகன்! - வாசகர் மோகம்!!

(A)

Part-1

*இஸ்லாம் என்பது உலக பொது மார்க்கம்*


*திருமறை குர் ஆன் உலக பொதுமறை*

இஸ்லாமிய மார்க்கத்தை யார் வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் ஆய்வு,செய்யலாம்,பகுத்து


அறியலாம்,அதே நேரத்தில் அதில் உண்மை தன்மை இருக்க வேண்டும்,

குர் ஆன் போதிக்கின்ற அடிப்படை கொள்கைகளை அது சிதைத்து,விட கூடாது,உறுதி செய்யப்படாத


அறிவியல் கருத்துக்களை ,குர் ஆனுடன் முடிச்சி போடுவது,நாம் விளங்கி கொண்டவைகள் தானே
ஒழிய குர் ஆனின் கருத்தாக நாம் எடுத்து கொள்ள கூடாது,இந்த நிலையில் தான் நமது ஆய்வுகள்
இருக்க வேண்டும் ,

இந்த நேரத்தில் மாற்று மத சகோதரர்கள் குர் ஆனை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் அறிவியல்
தவறான விளக்கத்தை கொடுத்தால் நாம் கண்மூடித்தனமாக அதில் விழுந்துவிட கூடாது ,அது
அவர்களுடைய விளக்கம் என்று எடுத்து கொண்டால் பிரச்சனையில்லை ..மாறாக அதை
கண்மூடித்தனமாக நம்பி கொண்டு ,மாஷாஅல்லாஹ் என்றும் ஷேர் பட்டனை தட்டி ஷேர் செய்து
பறக்க விடும் முன் சற்று யோசிப்பது நல்லது..உதாரணமாக

இந்த (2020) வருடத்தின் துவக்கத்தில் வாசுகி மோகன் எனும் பெயரில் பேஸ்புக்கில் ஒரு புது கணக்கு
துவங்கப்படுகிறது. வாசுகிமோகன் எனும் அந்த நபர் பிராமணப் பெண் என்றும், இலங்கை அகதியாக
நார்வேயில் குடியேறியவர் என்றும் அறிமுகம் செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில், பொதுவான பதிவுகள், இலங்கை அரசியல் என அதில் பதிவுகள் வெளிவருகின்றன.

பின்னர் மார்ச் மாதத்தில் இருந்து, குர்ஆன் தொடர்பான பதிவுகள் வெளிவருகிறது.

நார்வேயில் குடியேறிய பிறகு குர்ஆனில் ஆய்வு செய்து phd பட்டம் பெற்றவர் என்று கூடுதல்
அறிமுகம் செய்யப்படுகிறது.

வாசுகி மோகன் என்பவர் குர்ஆனில் அறிவியல் எனும் தலைப்பில் 167 குர்ஆண் வசனங்களை
அறிவியலுடன் உரசி அவற்றில் அறிவியல் இருப்பதாக நிரூபித்து நாற்பதாயிரம் அமெரிக்க டாலர்
(இன்றைய மதிப்பில் முப்பது லட்சம் இந்திய ரூபாய்) பரிசு பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த
167 கட்டுரைகளை ஒவ்வொன்றாக தினமும் தமிழில் எழுதப்போவதாகும் சொல்லிவிட்டு தினமும்
“அறிவியலை அதிரவிடும் திருக்குரான்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிடப்படுகிறது...இதன்
பின்னணி என்ன காண்போம்

Part-2

வாசுகி மோகன் எனும் பேஸ்புக் அக்கவுண்டில் வாசுகி மோகன் எனும் நபர் பல விஞ்ஞான
ஆய்வுக்கூடங்களுக்கு கடிதம் எழுதி அவர்களிடமிருந்து அறிவியல் தகவல்களை வாங்கி அவற்றை
குர்ஆனுடன் அலசி ஆராய்ந்து கட்டுரை எழுதியதாக சொல்லப்படுகிறது
பேஸ்புக்கில் இருக்கும் முஸ்லிம்கள் சமீபத்தில் பரபப்பாக பகிரும் (ஷேர் செய்யும்) ஒரு முகநூல்
பதிவுதான் "அறிவியலை அதிரவிடும் திருக்குரான்" என்ற தொடர் பதிவு.

இந்த தொடர் பதிவுகள் அனைத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களால் ஷேர் செய்யப்படுகிறது.


அந்த பதிவுகளின் கீழ் இடப்படும் கமென்டுகள் உணர்ச்சிபூர்வமாக இருக்கின்றன.

'மாஷா அல்லாஹ்' என்ற கமென்டு முகநூலையே அதிரவிடும் அளவிற்கு அதில் இடப்படுகிறது.

இந்த அளவிற்கு முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படுவதற்கு காரணம் என்ன?

"அறிவியலை அதிரவிடும் திருக்குரான்" என்ற அந்த பதிவு முஸ்லிம் அல்லாதவரால் பதியப்படுவதாக


சொல்லப்படுவதுதான் முஸ்லிம்களின் உணர்ச்சிவசத்திற்கு காரணம்.

வாசுகி மோகன் என்ற பிராமண குலத்தைச் சார்ந்த ஒரு இந்து பெண்மனி திருக்குர்ஆனை ஆராய்ந்து
ஒரு கட்டுரை எழுதி அதில் வெற்றி பெற்றதாக சொல்லப்படுவதுதான் முஸ்லிம்களின் பரவசத்திற்கு
காரணம்.

பொதுவாக, முஸ்லிம்களின் நம்பிக்கைகளைப் பற்றி மாற்றுமதத்தினர் உயர்வாக பேசும்போது அதை


பரப்புவதை அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள்.

முஸ்லிம்கள் ஹலால் முறையில் அறுத்து சாப்பிடுவதைப் பற்றி நல்லவிதமாக பேசும் ஒரு பிறமத
மருத்துவரின் வீடியோவை பகிர்ந்து அவருக்கு நன்றிக்கடன் செலுத்தியதை உதாரணமாகக் கூறலாம்.

அதுபோல, மதுரை ஆதீனம் அவர்கள் அல்ஹம்து சூராவை ஓதியதை பகிர்ந்து அவருக்கு நன்றிக்கடன்
செலுத்தியதையும் நினைவுகூறலாம்.

இதுபோன்று, வாசுகி மோகனின் பதிவுகள் வெறும் நன்றிக்கடனாக பகிரப்பட்டால் அது நல்ல விஷயமே.
குறைகான ஒன்றுமில்லை. ஆனால், இந்த பதிவுகள் அப்படி பரப்பப்படவில்லை.

குர்ஆனை முழுமையாக விளங்கி அவற்றின் விஞ்ஞான விளக்கங்களை மிகச்சரியாக உணர்ந்து,


அறிவியலின் கருத்துக்களுடன் குர்ஆன் வசனங்களை மிகத்துல்லியமாக பொருத்திபார்ப்பதாக சிலாகித்து
அந்த பதிவுகள் பரப்பப்படுகின்றன.

குர்ஆனில் ஆராய்ச்சி பட்டம் (Phd) பெற்றிருப்பதாக சொல்லப்படும் வாசுகி மோகன் என்பவரின்


பதிவுகள் அந்த தரத்தில் இருக்குமானால் நாமும் அந்த பதிவுகளை பரப்புவதில் ஆட்சேபனையில்லை.

ஆனால், வாசுகி மோகன் என்பவரின் அறிவியல் புரிதல் மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில் அந்த
பலவீனமான புரிதல்கள் குர்ஆனுடன் பொருந்திப்போவதாக அவர் கூறுவது குர்ஆனின்
நம்பகத்தன்மைக்கு ஊறுவிளைவிப்பதாகவே அமையும்.

குர்ஆன் கூறும் அறிவியல் என்ற பெயரில் முஸ்லிம் அறிஞர்கள் பலரும் ஏற்கனவே பல தவறான
புரிதல்களை வெளிப்படுத்தி அவை மோசமான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில் அதுபோன்ற
நிலைமையை வாசுகி மோகன் என்பவரின் பதிவுகள் ஏற்படுத்திவிடும் என்ற எச்சரிக்கையை விடுவது
மட்டுமே நமது பதிவின் நோக்கம்.
வாசுகி மோகன் என்பவரின் அறிவியல் புரிதலில் இருக்கும் குறையை அவருடைய ஒரு பதிவில்
இருந்தே பார்ப்போம்.

"படைப்பாளனின் பாதுகாப்பு வானம்"(சவால் 79) என்ற அவருடைய பதிவில் இருந்து...

//நபியே
வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டு உள்ளது என்று சிந்திக்க வேண்டாமா?

படைப்பாளன் சொன்ன இந்த வசனத்தை


வாசுகி மோகன் புரிந்து கொண்டு அறிவியல் உலகத்தோடு மோதுகிறாள்...... (திருக்குரானின்
வசனத்தை) //

என்று தொடங்குகிறார்.

//வானம் பல கோடி உயரத்தில் இருப்பதால் தான் சூரியனின் வெட்பம் பூமியை நேரடியாக தாக்காமல்
பாதுகாக்க படுகிறது.//

என்று சொல்கிறார். இதில் நமக்கு பிரச்சினையில்லை. அடுத்ததாக அறிவியலை "அழுகவிடும்" கருத்தை


வெளிப்படுத்துகிறார்.

//சூரியன் தனது வட்ட பாதையில் பயணம் செய்யும் போது தன்னோடு சந்திரனையும்


-நட்சத்திரங்களையும் இழுத்து கொண்டு ஓடுவது அறிவியல் உலகத்தின் வியப்பு. //

என்கிறார். அதாவது, நட்சத்திரங்களையும் சூரியன்தான் இழுத்துச் செல்கிறது என்கிறார். இது மோசமான


புரிதல்.

இத்தனை வருடகால அறிவியல் வரலாற்றில் இதுபோன்ற கருத்தை எவரும் கூறியிருக்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக, கருந்துளை (Black hole) பற்றின தவறான புரிதலையும் வெளிப்படுத்துகிறார்.

//சூரியன் தன்னோடு இழுத்து கொண்டு ஓடும் நட்சத்திரங்கள் பாதை மாறி விட்டால்.................

இறைவா............

அடுத்த நொடி சூரியன் நட்சத்திரத்தை சூரியனில் உள்ள........

கருங்குழி (Black Hole)


உள்ளே இழுத்து கொண்டு விடுகிறது.

இந்த வியப்பு
அறிவியல் உலகத்தை வியப்பில் ஆழ்த்துகிறது. //

ஒரு நட்சத்திரம் சூரியனைவிட்டு விலகிவிடும் நிலை வந்தால் அப்போது அந்த நட்சத்திரத்தை சூரியனில்
உள்ள கருங்குழி உள்ளிளுத்து விடுகிறது என்கிறார். சமீபத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர்
கருந்துளையில் புகைப்படம் வெளிவந்த பிறகு கருந்துளை பற்றி தெரியாத ஆளே இல்லை என்று
சொல்லும் அளவுக்கு கருந்துளை என்றால் என்னவென்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.
ஆனால் சூரியனில் கருந்துளை இருப்பதாக இவர் கூடுவது கருந்துளை என்றால் என்னவென்றே
இவருக்கு தெரியவில்லை என்பதை காட்டுகிறது.

பெரிய நட்சத்திரங்கள் முழுவதுமாக எரிந்து அவற்றின் எரிபொருள் தீர்ந்த நிலையில் அடர்த்தி


அதிகமாகி உருவாவதே கருந்துளை. கருந்துளை என்பதே நட்சத்திரங்களை விட அதிகமான
ஆற்றல்வாய்ந்த பொருளாகும். அதனருகே எந்த ஒன்றும் செல்ல இயலாத நிலையில் சூரியனில்
கருந்துளை இருப்பதாக எந்த ஆய்வுக்கூடமும் சொல்லாது.

இந்த தகவலை நான் நாசா ஆய்வுக்கூடத்தில் இருந்து பெற்றேன் என்பது உலகத்தில் இன்றுவரை
சொல்லப்படாத பொய்யாகும்.

இப்படி ஒரு நிகழ்வு வானில் நிகழ்வதாக இவர் கூறுவது இவருடைய அறியாமையே தவிர இது
உண்மையல்ல.

உண்மையல்லாத இந்த தகவலைத்தான் உலகில் உள்ள பல ஆய்வுக்கூடங்களில் இருந்து பெற்றதாக


வாசுகி மோகன் என்பவர் கூறுகிறார்.

நிச்சயமாக! இந்த பொய்யை எந்த ஆய்வுக்கூடத்திலும் கொடுக்கமாட்டார்கள்.

அப்படியென்றால், வாசுகி மோகன் என்பவர் கூறும் செய்திகளின் நிலைதான் என்ன?

குர்ஆனில் இருப்பதாக அவர் சொல்லும் விஞ்ஞான செய்திகள் எல்லாம் ஏற்கனவே இன்டர்நெட்டில்


குவிந்து கிடக்கும் செய்திகள்தானே தவிர புதிய விஷயங்கள் ஏதுமில்லை. குர்ஆனில் விஞ்ஞானம் என்று
இன்டர்நெட்டில் இருக்கும் தகவல்களில் பல இஸ்லாத்தை கேவலப்படுத்தும் நோக்கில் யூதர்கள் தயாரித்து
வெளியிடுபவையே. அத்தகைய தகவல்களை எளிய தமிழில் சுவைபட சொல்கிறார் என்பதைத் தவிர்த்து
அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

குர்ஆனில் இருப்பதாகக் கூறப்படும் பல விஞ்ஞான விளக்கங்கள் குர்ஆன் வசனங்களுடன்


பொருந்திப்போகவில்லை என்று முஸ்லிம் அறிஞர்களாலேயே கூறப்பட்டுவரும் நிலையில் அவற்றையே
கட்டுரையாக எழுதி நாற்பதினாயிரம் டாலர் பரிசு வென்றதாக வாசுகி மோகன் என்பவர் கூறுவது
சந்தேகத்தின் வாசலை திறந்து வைக்கிறது.

வாசுகி மோகன் என்று சொல்லப்படும் முகநூல் பக்கத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிட்ட நிலையில் அந்த
சந்தேகத்தில் தெளிவுபெறும் நோக்கில் அந்த முகநூல் பக்கத்தை விரிவாக பார்ப்போம்.

https://web.archive.org/web/20200806094413/https://m.facebook.com/story.php?
story_fbid=173802767483348&id=100045608762643

வாசுகி மோகன்! - வாசகர் மோகம்!!


(B)

Part-3

நார்வே நாட்டில் ஆறுவருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்று
முதல்பரிசை வாங்கியதாக வாசுகி மோகன் என்பவரின் அறிமுகம் தொடங்குகிறது.
இந்து மதத்தின் பிராமண சமூகத்தைச் சார்ந்த பெண் என்று சொல்லப்படுகிறது. இந்து பெண்ணான இவர்
குர்ஆனை ஆய்வு செய்து அதில் Phd பட்டம் பெற்றவர் என்று சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் முரணான தகவல் இவரிடமிருந்தே வருகிறது...

//இந்த வேதத்தில் Phd பட்டம் பெற்றவள் நார்வே யூனிவர்சிட்டியில் நான்//

என்று ஒரு இடத்தில் சொல்கிறார்.

//கைரோ இஸ்லாமிக் யூனிவர்சிட்டியில் 5 ஆண்டுகள் படித்து திருக்குரானில் PhD(Goldmedal) வாங்கிய


நான்//

என்று மற்றொரு இடத்தில் சொல்கிறார்.

Phd பட்டம் பெற்றது எகிப்தா? அல்லது நார்வேவா? என்ற சந்தேகத்தை வாசுகி மோகன் என்பவரே
கிளப்பிவிடுகிறார்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். அதுபோல இவர் முதுகலை பட்டம் (M.Com)
வாங்கியதாக சொல்லப்படும் ஒரு பல்கலைக்கழகமே இல்லை என்பதுதான் அடுத்த கோணல்.

//டெல்லி டவ் லால் ராம் பல்கலை கழகத்தில் (Dau lal ram university of delhi) Mcom படிப்பை படித்து
முடித்தேன்//

இப்படி ஒரு பல்கலைகழகம் டெல்லியில் இல்லை. இல்லாத கல்லூரியில் பட்டம் பெறும் வித்தையை
தெரிந்தவர் வாசுகி மோகன் என்று கூறினால் அது மிகையில்லை.

அடுத்ததாக இவர் கூறும் கட்டுரை போட்டி...

¶¶ நார்வே நாட்டில் கிறிஸ்தவர் அசோசியேசன் மற்றும் இஸ்லாமியர் அசோசியேசன் ஆகியவை


இணைந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை போட்டி நடத்தியதாக சொல்கிறார்.

¶¶ "பைபிள்/குரான்" என்ற தலைப்பில் போட்டி நடந்ததாக சொல்கிறார். (இது என்ன தலைப்பு என்றே
தெரியவில்லை)

¶¶ 132 போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் இவர்தான் நாற்பதினாயிரம் டாலர் மதிப்புள்ள முதல்


பரிசை வாங்கியதாகவும் சொல்கிறார்.

ஆனால், மேற்கண்ட எந்த நிகழ்வுகளுக்கும் சாட்சியம் இல்லை என்பதுதான் வாசுகி மோகன் என்பவரின்
மீது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

அதாவது, கட்டுரைப் போட்டி நடந்ததற்கும், அவர் முதல் பரிசு பெற்றதற்கும் வாசுகி மோகன் என்பவர்
மட்டுமே சாட்சியாக இருக்கிறார். வேறு எவருக்கும் அது தொடர்பான தகவல்கள் தெரிந்திருக்கவில்லை
என்பதுதான் அதிர்ச்சியின் உச்சகட்டம்.

நடந்ததாக சொல்லப்படும் கட்டுரைப்போட்டியில் 264 பக்கங்கள் கொண்ட கட்டுரையை வாசுகி மோகன்


என்பவர் சமர்ப்பித்ததாக சொல்லப்படுகிறது. அவற்றுள் 167 பக்கங்கள் ஆய்வு கழகங்களின் ஆய்வு
அறிக்கைகள் என்றும் சொல்லப்படுகிறது. (ஆனால், அந்த ஆங்கில கட்டுரையையும் அதற்கு ஆதாரமாக
அவர் சொல்லும் ஆய்வு கழகங்களின் அறிக்கைகளையோ இதுவரையில் எவரும் பார்க்கவில்லை)

குர்ஆனில் இருந்து 167 வசனங்களுக்கு தேவையான அறிவியல் விளக்கங்களை உலகில் உள்ள ஆய்வு
கழகங்களிடம் இருந்து பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆதாரங்களை வைத்துதான் அந்த கட்டுரைப்போட்டியில் ஜெயித்ததாக வாசுகி மோகன் என்பவர்


கூறுகிறார்.

//உலகில் பல ஆய்வு கூடங்களுக்கு மெயில் அனுப்பி (எனது ஐ டி, நான் வாங்கிய பட்டங்கள் காப்பி)
எதற்காக இந்த விபரங்கள் தேவை என்பதை ஆதாரத்துடன் மெயில் அனுப்பும்போது அவர்கள் லிங்க்
கொடுப்பார்கள்.

அதில் அனைத்து விபரங்களும் படித்து, டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


(அன்புடன் வாசுகி மோகன்)//

அதாவது, தன்னுடைய அடையாளங்களை வெளிப்படுத்தி ஆய்வு கழகங்களிலிருந்து ஆதாரங்களை


பெற்றதாக கூறுகிறார் வாசுகி மோகன் என்பவர்.

நட்சத்திரங்களை சூரியன் இழுத்துச் செல்கிறது என்ற ஆதாரத்தை எந்த ஆய்வகத்திலிருந்து பெற்றார்


என்பதையும், சூரியனில் இருக்கும் கறுப்பு புள்ளிகளை கருந்துளை(Black hole) என்று எந்த ஆய்வகம்
கூறியது என்பதற்கும் வாசுகி மோகன் என்பவர் ஆதாரம் சமர்பித்தால் அவர் உண்மை கூறுகிறார் என்று
அர்த்தம்.

ஆனால், அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான ஆதாரத்தை எந்த ஒரு ஆய்வுக்கழமும் வழங்காது.

எந்த ஆய்வுக்கழத்திடமும் இருந்து பெறாத ஆதாரத்தை வைத்து 13 நீதிபதிகளை நம்ப வைத்து


முதல்பரிசை பெற்றதாக வாசுகி மோகன் என்பவர் கூறுவது அந்த கட்டுரை போட்டி நடந்ததாகக்
கூறுவது உண்மையல்ல என்பதையே நிறுவுகிறது.

நடக்காத போட்டியில் எழுதாக கட்டுரையை வைத்து இல்லாத முதல் பரிசை வென்ற வாசுகி மோகன்
என்பவர் உலகத்தையே அதிர விடுகிறார்.

---+ +++++-----+-

நார்வேயில் Phd

https://web.archive.org/web/20200806094900/https://www.facebook.com/permalink.php?
story_fbid=149705069893118&id=100045608762643

கைரோ (எகிப்து)

https://web.archive.org/web/20200806095120/https://www.facebook.com/permalink.php?
story_fbid=166683981528560&id=100045608762643

டெல்லி யூனிவர்சிட்டி
https://web.archive.org/web/20200806095207/https://www.facebook.com/permalink.php?
story_fbid=123596299170662&id=100045608762643

ஆய்வக லிங்க்

https://web.archive.org/web/20200806095258/https://www.facebook.com/permalink.php?
story_fbid=151992972997661&id=100045608762643

You might also like