You are on page 1of 1

கோள்களின் நிலைகள்

ஜுலை 10 முதல் ஆகஸ்ட் 9 வரை


சே.பார்த்தசாரதி
சூரியன் இக்காலத்தில் மிதுனம் விண்மீன் தொகுதியிலிருந்து கடகம் தொகுதிக்கு நகர்கின்றது.

சூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:


புதன்: இம்மாதம் மூன்றாம் வாரத்திலிருந்து புதன்கோள் காலையில் கிழக்கு அடிவானில் இருந்தபோதிலும்
இதைக் காண்பது கடினம். எனினும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இது வானில் சூரியனிடமிருந்து
நன்கு விலகிவருவதால் இதைக் காண வாய்ப்புள்ளது. இது கடகம் விண்மீன் தொகுதியிலிருந்து
மிதுனம் தொகுதிக்குச் செல்கின்றது.
வெள்ளி: சூரியன் தோன்றும் முன் காலை கிழக்கு அடிவானில் வெள்ளிக் கோள் இருந்தபோதிலும், இது
வானில் சூரியனுக்கு அருகில் இருப்பதால் இக்காலத்தில் இக்கோளினைக் காண்பது கடினம். இது
மிதுனம் விண்மீன் தொகுதியிலிருந்து கடகம் தொகுதிக்குச் செல்கின்றது.
( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த டிசம்பர் மாத துளிர்
இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)

சூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்


செவ்வாய்: செவ்வாய்க் கோள் மாலையில் இருள்சூழ்ந்தபின் மேற்கு அடிவானில் இருந்தபோதிலும், வானில்
சூரியனுக்கு அருகே இருப்பதால் இதைக் காண்பது கடினம். இக்காலத்தில் இது கடகம் விண்மீன்
தொகுதியிலிருந்து சிம்மம் தொகுதிக்குச் செல்கின்றது.
வியாழன்: வியாழன் கோளினை மாலை சூரியன் மறைந்தபின் கிழக்கு வானில் மிகப் பிரகாசமாகக் காணலாம்.
இது பாம்பாட்டி விண்மீன் தொகுதியில் உள்ளது.
சனி: இம்மாதம் மாலையில் சூரியன் மறைந்து இருள்சூழ்ந்தபின் கிழக்கு அடிவான் அருகே ஒரு
நட்சத்திரம் போன்று சனிக்கோளினை காணலாம். இது தனுசு தொகுதியில் உள்ளது.

சில முக்கிய வான் நிகழ்வுகள்:


ஜூலை 13: இரவில் நிலவிற்கு சற்றுகிழக்கே 2 டிகிரி அருகாமையில் வியாழன் கோள் பிரகாசமான நட்சத்திரம்
போன்று இருக்கக் காணலாம்.
ஜூலை 16: முழுநிலவு.
ஜூலை 16: இன்று நிலவிற்கு சற்று மேற்கே 4 டிகிரி அருகாமையில் சனிக்கோளினை ஒரு மின்னாத நட்சத்திரம்
போன்று காணலாம்.
ஜூலை 21: நிலவு பூமிக்குத் தொலைவு நிலையில் ( apogee) இருத்தல்
ஜூலை 21: புதன் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே இருத்தல்( Mercury inferior conjunction)
ஜூலை 28-29: தெற்கு டெல்டா கும்ப விண்மீன் தூரல்கள் (Delta aquariids). அதிகாலை 3 மணிக்குமேல் விடியும்
வரை விண்தூரல்கள் (எரிநட்சத்திரங்கள்) கும்பம் விண்மீன் தொகுதியிலிருந்து தோன்றி வருவதைப்
போன்று காணலாம். மார்ஸ்டன் என்ற வால்மீனின் உதிரிகளின் வழியே பூமி கடந்து செல்லும்போது
இந்நிகழ்வு ஏற்படுகின்றது. வானம் தெளிவாக இருந்தால் மணிக்கு சுமார் 20 விண்கற்கள்
விழக்காணலாம். இந்நாட்களில் நள்ளிரவிற்கு பிறகு தோன்றும் தேய்பிறைநிலவின் மங்கலான
வெளிச்சம் இந்நிகழவை காண இடையுறாக இருக்காது.
( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த டிசம்பர் மாத துளிர்
இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)
ஆகஸ்ட் 1: அமாவாசை.
ஆகஸ்ட் 2: நிலவு பூமிக்கு அருகாமை நிலையில் (perigee) இருத்தல்.

You might also like