You are on page 1of 1

கோள்களின் நிலைகள்

நவம்பர் 10 முதல் டிசம்பர் 9 வரை


சே.பார்த்தசாரதி

சூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:


புதன்: இம்மாதம் முதல் இரண்டு வாரங்கள் மாலைநேரக்கோளாக இருந்த புதன் மூன்றாம்
வாரத்திலிருந்து காலை நேரகோளாக மாறுகின்றது. இருப்பினும் இம்மாத கடைசி
மூன்றுதினங்களிலிருந்து டிசம்பர் இரண்டாம் வாரம்வரை அதிகாலையில் சூரியோதயத்திற்கு
சற்றுமுன் கிழக்கு அடிவானில் இதைக்காணலாம். அதன்பின் இருமாதங்களுக்கு வெறும்கண்ணால்
இதைக்காண இயலாது. இக்கோள் விருச்சிகம் தொகுதியிலிருந்து துலாம் தொகுதிக்குச் செல்கிறது.
வெள்ளி: இம்மாதம் அதிகாலை விடியும் நேரத்தில் கிழக்கு வானில் மிகப்பிரகாசமாக இதைக்
காணலாம். இக்கோள் கன்னி விண்மீன்தொகுதியிலிருந்து துலாம் தொகுதிக்குச் செல்கிறது
சனி: சனிக்கோளை இம்மாத மூன்றாம் வாரத்திலிருந்து அதிகாலை விடிவதற்குமுன்
கிழக்குவானில் காணலாம். இம்மாதம் இக்கோள் கன்னி விண்மீன்தொகுதியிலிருந்து துலாம்
தொகுதிக்குச் செல்கிறது
( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த ஏப்ரல் மாத துளிர்
இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)

சூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்:


செவ்வாய்: மாலை இருள்சூழவும் மேற்கு வானில் சிகப்பு நிற செவ்வாயைக் காணலாம். இக்கோள்
பாம்பாட்டி தொகுதியிலிருந்து தனுசு விண்மீன் தொகுதிக்குச் செல்கிறது.
வியாழன்: இம்மாதம் சூரியன் மறைந்து சில நேரம் கழித்து கிழக்குவானில் பிரகாசமாக இக்கோளைக்
காணலாம். இது ரிஷபம் தொகுதியில் உள்ளது.

சில முக்கிய வான் நிகழ்வுகள்:


நவம்பர் 14: அமாவாசை. நிலவு அண்மைத்தொலைவில் இருத்தல் ( perigee).
முழுசூரியகிரகணம். இந்தியாவில் கிரகணம் தெரியாது. ஆஸ்திரேலியாவின் அருகே இது தெரியும்.
நவம்பர் 17 புதன் கோள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அமைதல் (inferior conjunction)
நவம்பர் 28: முழுநிலவு. அரிநிழல் சந்திரகிரகணம் (penumbral lunar eclipse). இவ்வகைக் கிரகணங்களை
வெறும் கண்களால் கண்டுணர இயலாது.
நவம்பர் 29 : நிலவு சேய்மைத்தொலைவில் இருத்தல் ( apogee).
டிசம்பர் 3: வியாழன் கோள் சூரியனுக்கு நேர் எதிரே இருத்தல் (opposition). அதாவது சூரியன் மறையவும்
இது கிழக்கே உதயமாகும்.வியாழன் அதிகபட்ச பிரகாசமாக இருத்தல்.
டிசம்பர் 5: புதன் கோள் கிழக்குவானில் சூரியனிடமிருந்து அதிகபட்சமாக 21 டிகிரி மேற்காக பிரிந்து
இருத்தல்

சர்வதேச விண்வெளிநிலையம் தமிழகத்தில் நன்கு தெரியும் சில நாட்கள்:

டிசம்பர் 6: பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது தென்மேற்கு திசையில் மாலை சுமார் 6.48 க்குத்
தெரியத்தொடங்கி தென்கிழக்கில் சரியாக 6.53.27 க்கு பூமியின் நிழலில் மறையக்காணலாம். இது
கேரளாவில் கோட்டையத்தைக் கடந்து சேலம்- வேலூர் வழியே தமிழ்நாட்டைக் கடந்து
செல்வதால் இப்பாதையில் அமையும் மாவட்டங்களில் தலைஉச்சி வழியே செல்வதை சுமார்
6.52 க்குக் காணலாம். தமிழ்நாட்டில் அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரயமாக 60 முதல்
90 டிகிரி வரை இருக்கும்.

You might also like