You are on page 1of 48

1

மரபு கவிதைபெட்டகம் பெரு மதிப்பிற்குரிய


மின்னிதழ்-1 கவியுறவுகளுக்கு இனிய
ஆனி -சார்வரி தமிழ் வணக்கம்.

சமகாலப் புலவர்களாய் சரித்திரம்


ப�ோற்றும் பாவலர்களின்
ஆசிரியர் படைப்புகளை சுமந்து வரும்
தா.சிவசக்திவேல் மரபு கவிதைப்பெட்டகம்
த�ொலைப்பேசி எண் மின்னிதழை வெளியிடுவதில்
+91 7598094054
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிற�ோம்.
இம் மின்னிதழ் உருவாக
தூண்டுக�ோலாக இருந்து
இணையாசிரியர்: த�ொகுத்து, வழி காட்டியாக
பாவலர்.சரஸ்வதி பாஸ்கரன் விளங்கும் பாவலர் சரஸ்வதி
பாஸ்கரன் அம்மா அவர்களுக்கும்
கவிதைப்பெட்டகம் ஆசிரியர்குழு: துணையாக பயணித்து
கவிஞர்.தமிழ்தம்பி தூணாக இருக்கும்
கவிஞர்.ஜெனிதா அச�ோக் ப �ொ று ப்பா சி ரி ய ர ்க ளு க் கு ம்
கவிஞர்.கவிமுத்து ஆதரவளித்து வரும்
கவிஞர்.அனுராதா ப ா வ ல ர ்க ளு க் கு ம்
கவிஞர்.மயிலையூர் ம�ோகன் க வி யு ற வு க ளு க் கு ம்
நெஞ்சார்ந்த்த நன்றியை
தெரிவித்துக் க�ொள்கிறேன்
வெளியீடு:
கவிதைப்பெட்டகம் மின்னிதழ் குழு அன்புடன்
தா.சிவசக்திவேல்
ஆசிரியர்
வடிவமைப்பு மரபு கவிதைப்பெட்டகம்
கனி டிசைன்ஸ்
பாக்கம்பாடி
சின்னசேலம் (வட்டம்)
கள்ளக்குறிச்சி மாவட்டம்
த�ொ.எண் +91 7598094054

22
ஆனி-2020

அனைவருக்கும் வணக்கம்
எங்களின் சிவா கவிதைப் நன்றியையும் தெரிவித்துக்
பெட்டகம் மின்னிதழ் க�ொள்கிறேன் .
கவிஞர்களின் கவியாக்கத்திற்கு
அங்கீகாரம் தரவேண்டும் இதுவரை சிவா கவிதைப்பெட்டகம்
என்ற ஒரே ந�ோக்கில் மிகச் ஒன்பது மின்னிதழ்களை வெளியிட்டு
சிறப்பாக செயற்பட்டு வருவது கவிஞர்களின் ஆதாரவைப்
கண்கூடு . கவிஞர்களின் மரபு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
கவிதைகள் , புதுக்கவிதைகள் பத்தாவது மின்னிதழாக முத்தாக
துளிப்பாக்கள் , ஹைக்கூ வெளிவருகிறது நம்மின்
கவிதைகள் என அனைத்து மரபு கவிதைப் பெட்டகம் .
வகைமை கவிதைகளையும்
உள்ளடக்கியதாக எங்களின் இதழுக்காக சீரிய வகையில்
மின்னிதழ் ஒவ்வொரு மாதமும் பணியாற்றிய நிறுவனர்
அற்புதமான வடிவமைப்புடன் சிவசக்திவேல் அவர்களுக்கும் ,
வெளிவந்து க�ொண்டிருக்கிறது . மற்றுமுள்ள ப�ொறுப்பாசிரியர்கள்
அனைவருக்கும் , த�ொடர்ந்து
மரபு கவிதைகள் எழுதும் ஆதரவளிக்கும் கவிஞர்களுக்கும்
கவிஞர்கள் அதிக ஈடுபாட்டுடனும் என் நெஞ்சார்ந்த நன்றி .
ஆர்வத்துடனும் த�ொடர்ந்து
மின்னிதழுக்குப் பாக்கள் என்றும் அன்புடன்
அனுப்புவதால் தனியாக மரபு சரஸ்வதி பாஸ்கரன்
கவிதைகளுக்கென்று மின்னிதழ் இணையாசிரியர் ,
உருவாக்கலாம் என்ற என் மரபு கவிதைப் பெட்டகம்
எண்ணத்தை மறுப்பேதும்
ச�ொல்லாது அப்படியே
ஏற்றுக்கொண்டு , அதற்காக
சிறிதும் ஓய்வின்றி அழகிய
வடிவமைப்பு செய்து வெளியிடும்
சிறப்பு அன்புச் சக�ோதரர்
சிவசக்திவேல் அவர்களையே
சாரும் . அவருக்கும்
மனமார்ந்த வாழ்த்துகளையும்

33 மரபு கவிதைப் பெட்டகம்


ஆனி-2020

பண்ணிசைக்கும் புள்ளினங்கள்
பச்சைப் பட்டை விரித்தாற்போல்
பசுமை க�ொஞ்சம் மரக்கிளைகள்
கச்சை யணிந்த இளம்பெண்கள்
கவினை விஞ்சும் செடிக�ொடிகள்
க�ொச்சை ம�ொழிகள் பேசுகின்ற
க�ொவ்வை அலகுப் பசங்கிளிகள்
இச்சை தூண்டும் படித�ோகை
இயல்பாய் விரிக்கும் ஆண்மயில்கள் !

கூவிக் கூவிக் குயில்களுமே


குளிர்ந்த குரலில் மனம்மயக்க
தாவித் தாவிக் குருவிகளும்
தம்வால் ஆட்டி எழில்குவிக்க
தூவித் தூவிக் காக்கைகளும்
தூய்மைக் காடென் றெடுத்துரைக்க
வாவிக் குள்ளே க�ொக்குகளும்
வாகாய் மீனின் தலைக�ொத்த !

வண்ணம் பலவாய்ப் புள்ளினங்கள்


வாயைத் திறந்தால் தேன்குரல்கள்
மண்தாய் அணைப்பில் இயற்கைதாம்
மலர்ந்து மகிழ்ந்து மணம்வீச
கண்ணைக் கருத்தை ஈர்க்கின்ற
காட்டின் வனப்பு நிலையானால்
விண்ணும் மண்ணும் தூய்மையிலே
விளங்கி வாழ்வும் சிறந்திடுமே !

பாவலர்.கருமலைத் தமிழாழன்

*பாவகை-அறுசீர் விருத்தம்

4 மரபு கவிதைப் பெட்டகம்


ஆனி-2020

எனைக்கிறுக்காய் மாற்றிடுமே
வானிருக்கும் நிலவினிலே வண்ணமெலாம் குடியிருக்கும்
வண்டுவந்து தேனெடுக்க வண்ணமலர் பூத்திருக்கும்
தேனிருக்கும் கூட்டினிலே தேன்குடிக்கும் ஈயிருக்கும்
தென்றலெனும் காற்றுவேண்டி அவள்முகத்தில் முத்திருக்கும்
மீனிருக்கும் வதனமதில் மேதினிய�ோ குடியிருக்கும்
மெருகேற்றும் முகப்பூச்சில் அழகெல்லாம் ஒளிந்திருக்கும்
தானிருக்கும் இடத்தினையே தன்மணத்தால் வெளிக்காட்டும்
தண்மலரின் அழக�ொளிய�ோ எனைக்கிறுக்காய் மாற்றிடுமே!

வளைக்கரத்தில் செங்காந்தள் விரல்களென மலர்ந்திருக்கும்


வலைப்பின்னல் எதுவுமின்றி கருங்கூந்தல் நீண்டிருக்கும்
விளைநிலத்துச் செங்கதிராய் அவள்தலைய�ோ கவிழ்ந்திருக்கும்
வேல்விழிய�ோ என்னுளத்தை வலியின்றித் துளைத்திருக்கும்
தளைசீர�ோ டசையுமின்றி கவிதைய�ொன்று பிறந்திருக்கும்
தண்டமிழில் புதுக்கவிய�ோ அவளிதழில் தவழ்ந்திருக்கும்
வளையிருக்கும் சிறுநண்டோ அவள்பாதம் பார்த்திருக்கும்
வரும்வரையில் காத்திருக்க எனைக்கிறுக்காய் மாற்றிடுமே!

அவளிருக்கும் திசையினிலே என்விழிய�ோ பார்த்திருக்கும்


அவள்செல்லும் பாதையெலாம் என்தோட்டம் பூத்திருக்கும்
அவள்நெஞ்சில் குடியிருக்கும் அன்பாக நானிருக்க
அருந்தமிழைத் துணைக்கழைத்துக் கவிபாட மனமிருக்கும்
அவள்காட்டும் திசையெல்லாம் நான்சென்று நடைபயில
அனுதினமும் முயன்றிடவே தளராத உளமிருக்கும்
அவளருகே நானிருக்க என்னருகே அவளிருக்க
ஆண்டவனை வேண்டவேண்டி எனைக்கிறுக்காய் மாற்றிடுமே!

பாவலர் இராம.வேல்முருகன் வலங்கைமான்

*பாவகை-எண்சீர் விருத்தம்

5 மரபு கவிதைப் பெட்டகம்


ஆனி-2020

இளம் விடியற் ப�ொழுது நானே


ஒவ்வொரு புலனாய் உள்ளிழுக் கின்றேன்
ஒடுங்கிப் ப�ோனதென் உணர்வுகளே.
தவ்விடும் மனத்தைத் தள்ளிவைக் கின்றேன்
தகர்ந்து ப�ோவதென் கனவுகளே.
இவ்விடம் நினைவைச் ச�ொல்லிவைக் கின்றேன்
இதயம் வாழ்வதென் எழுத்தினிலே.
எவ்விடம் வரட்டும் எள்ளுவர் ச�ொன்னால்
எழுவேன் காற்றெனக் களத்தினிலே.

வாதமென் வழக்கம் வாதிடு கின்றேன்


வணிகம் செய்வதென் பழக்கமில்லை
ப�ோதனை எனில்நான் நாவிழுக் கின்றேன்
புதுமை தேன்மழை விருப்பதில்லை.
காதலை கனிவாய்க் காத்திடு கின்றேன்
கதவில் தாழிட நினைப்பதில்லை.
சாதனை புரிவேன் வையகம் காலில்
சரிந்தால் நானதை மறுப்பதில்லை.

தாக்கிடும் கணைகள் தாவிடும் முன்னால்


தடைக்கல் ப�ோடுவ ததுதமிழே.
ப�ோக்கிடம் அறியார் ப�ொய்யொடு வந்தால்
புழுவென் ற�ோடுவர் அறிகிலைய�ோ.
ஆக்கமும் தெரியாத் தூக்கமும் ஆங்கே
அழியும் ஆணவம் படிப்பினையே.
தீக்கனல் எழட்டும் தீதெலாம் மாயத்
தெளிவேன் நானிளம் விடியலிலே.

பாவலர்‘’அகன்’’@அனுராதா கட்டப�ொம்மன்.

*பாவகை-எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

66 மரபு கவிதைப் பெட்டகம்


ஆனி-2020

காவிரித் தாயே வருகவே


மாமழையே ப�ொழிகவே
காவிரித்தாய் வழங்குகின்ற கருணையினைப் ப�ோற்றிடுவ�ோம் .
பாவியவள் என்செய்வாள் பதுக்குகின்ற கூட்டத்தினால் .
ஆவியிழந்து ப�ோகின்றாள் ஆவணங்கள் பலவற்றால் .
தீவினையால் திக்கெல்லாம் தீண்டுகின்றார் வஞ்சகரே !

பாரினிலே ஆறுகளில் பாகுபாடே இல்லையில்லை .


வேரினிலே பழுத்தாலும் வேட்கையுடன் உண்ணுகின்ற
சேரிகளில் பாய்கின்ற செந்தமிழின் தேவியினை
ஊரினிலே நிலைக்காமல் உருவாக்கும் சமுதாயம் !’

வேளாண்மைப் பல்கிடவே வேண்டுகின்றார் தமிழரெல்லாம் .


கேளிக்கை விளையாட்டா கேட்கின்றார் பலரும்தான் .
நாளிதழ்கள் எந்நாளும் நவில்கின்ற செய்திகளை
மீளாய்வு செய்வதற்கு மீண்டிடுமா அரசாங்கம் !

நீதிநெறி பிறழ்கின்ற நிலையற்ற அரசாங்கம்


பாதியிலே விட்டதுவே பலனேதும் இல்லாமல்
நாதியற்று நிற்கின்றோம் நல்லதண்ணீர் நமக்கில்லை
ஓதியநற் செய்தியெல்லாம் ஓலங்கள் ஆகுதிங்கே !

காவிரியின் மேலாண்மை காண்போமா இனிமேலே .


பாவிகளே ச�ொல்லுங்கள் பலன்பெறுமா தமிழகமே
நாவறண்டு பாலையான நானிலத்தைப் பாரீர�ோ
தீவினையைச் செய்யாதீர் தீக்குள்ளே தள்ளாதீர் !.

ச�ோலைவனம் தற்போது ச�ோகத்தால் வாடுதிங்கே


காலையிலே மலர்களுமே கண்ணீரால் ஏங்குதிங்கே
மாலையிலே தென்றலுமே மங்கிடுதே நீரின்றி .
பாலைவனம் வேண்டாமே பசுமையினைத் தாராய�ோ !

பாவலர்.சரஸ்வதிபாஸ்கரன்
*பாவகை-தரவு க�ொச்சகக் கலிப்பா

7 மரபு கவிதைப் பெட்டகம்


ஆனி-2020

காவிரித் தாயே வருகவே


மாமழையே ப�ொழிகவே
மூன்றுமாத இடைவெளியில் முற்றிலுமே மாறிடுமா
ஊன்றுக�ோலாய்க் காவிரித்தாய் உதவிடவும் முடியுமாச�ொல் !
ஆன்றோர்கள் வாக்கெல்லாம் அடுத்தடுத்தே ஏமாற்றம் .
த�ோன்றுகின்ற இடம்நோக்கித் த�ொடர்ந்திடுமா மீண்டுமினி !

கயவர்கள் கைகளிலே காவிரியே சிக்கிவிட்டாய்


மயக்கமுமே வேண்டாமே மாதாவே பாய்ந்திடுவாய்
தயக்கமுமே ஏன்தாயே தமிழ்நாட்டில் பாய்ந்திடவே
வியன்பொருளாய் எண்ணுகின்றோம் விரைந்திடுவாய் நீயுந்தான் !

அணைகளுமே ப�ோட்டேதான் ஆர்பரிக்கும் உன்றனையும்


இணைகின்ற ப�ோதினிலே இறுமாப்பால் தடுத்திடுவார்
திணைகளுமே வாடுவதால் திண்டாடும் உனதுள்ளம் .
துணையாக அழைத்திடுவாய் தூவட்டும் வான்மழையே !

மாரியது பெய்தாலே மதகுகளும் தாந்திறக்கும்


ஊரினிலே காவிரியும் உன்மத்தம் க�ொண்டிடுவாள்
காரிருளும் சூழ்ந்தாலும் காவிரியும் பாய்ந்திடுவாள்
பாரினிலே நிலையன்று பாரதத்தின் நிலையிதுவாம் !

பாய்கின்ற காவிரியின் பலனாக வேளாண்மை


காய்கின்ற வயலெல்லாம் கணப்பொழுதில் மாறிவிடும்
ந�ோய்களுமே அண்டாது ந�ோதலுமே இருக்காது .
வாய்திறந்தே அழைக்கின்றோம் வந்திடுவாய் காவிரியே !

பாவலர்.சரஸ்வதிபாஸ்கரன்

*பாவகை-தரவு க�ொச்சகக் கலிப்பா

8 மரபு கவிதைப் பெட்டகம்


ஆனி-2020

நீ...நான்...எல்லாமாய்
வானம்நீ பறக்கின்ற சிறுபுள் ளாய்நான்
வற்றாத நதியும்நீ பாயும் மீன்நான்
கானம்நீ சுதிதவறா நல்லி சைநான்
காற்றும்நீ உறவாடும் உயிர்மூச் சாய்நான்
மானம்நீ அதைக்காக்கும் மேலா டைநான்
மலரும்நீ அதுக�ொண்ட இனிக்கும் தேன்நான்
ஞானம்நீ வியக்கின்ற கருத்தாய்த் தான்நான்
நல்லனநீ க�ொணர்கின்ற நலமாய் நானே.!

மண்வளம்நீ விதையாக முளைக்கின் றேன்நான்


மழைவளம்நீ முகிலாகப் ப�ொழிகின் றேன்நான்
பண்வளம்நீ பாட்டாக இசைக்கின் றேன்நான்
பாவளம்நீ ப�ொருளாக உறைகின் றேன்நான்
எண்வளம்நீ எழுத்தாக விரிகின் றேன்நான்
இசைவளம்நீ தாளமென இணைகின் றேன்நான்
கண்வளம்நீ பார்வையெனக் காண்கின் றேன்நான்
கலைவளம்நீ கவிதையெழிற் செய்வோன் நானே !!

அன்பென்னும் அமுதம்நீ பருகத் தான்நான்


அழகென்னும் பெட்டகம்நீ அடையத் தான்நான்
இன்பத்தின் அருவியாய்நீ குளிரத் தான்நான்
ஏகாந்த வெளியும்நீ அமைதி யாய்நான்
நன்முத்துத் தமிழும்நீ கவிதை யாய்நான்
நயமிக்கச் ச�ொல்லும்நீ ப�ொருளாய் நானே
என்சொத்து எல்லாம்நீ எனச்சொல் வேன்நான்
என்காதற் தெய்வம்நீ க�ோவில் நானே!

கவிமாமணி" இளவல்" ஹரிஹரன், மதுரை

*பாவகை-எண்சீர் விருத்தம்

99 மரபு கவிதைப் பெட்டகம்


ஆனி-2020

செந்தமிழைக் காப்போம்
செந்தமிழ�ோ செகமெங்கும் தழைக்க வேண்டும்
செழுமையது மாறாது நிலைக்க வேண்டும்
முந்தைய�ோர்தம் ம�ொழியென்று காக்க வேண்டும்
முழுவுலகும் ம�ொழிதமிழைச் சேர்க்க வேண்டும்
சிந்துவெளி யகல்வெல்லாம் ந�ோக்க வேண்டும்
செம்மொழியாம் தமிழைநாம் காக்க வேண்டும்
சந்தமிகும் செய்யுலெல்லாம் ; க�ோக்க வேண்டும்
சாகாமல்ச் சுவடிகளை யாக்க வேண்டும் .

வண்டமிழை வையமெல்லாம் வளர்க்க வேண்டும்


வடம�ொழிகள் கலவாது வடிக்க வேண்டும்
கண்டம்கு ம ரிபிறந்த தமிழை நாமும்
காப்பதற்குச் சங்கங்கள் அமைக்க வேண்டும்
த�ொண்டாகத் தமிழையெங்கும் வளர்ப்ப தற்குத்
த�ொடராக விழாவெல்லாம் துவக்க வேண்டும்
முண்டாசுக் கவிஞனவன் தலைப்பெ டுத்து
முறையாகக் கவிமுழக்கம் செய்தல் வேண்டும்

ஆதிம�ொழி தமிழென்று மழியா யாமல்


ஆன்றோரும் சான்றோரும் அதனைக் க�ொண்டு
ஓதுதற்கு கந்தநூல்கள் செய்தல் வேண்டும்
உலகமெல்லாம் தமிழ்பரவச் செய்தல் வேண்டும்
சாதலற்றுச் செம்மொழிய�ோ சகத்தில் வாழ
சங்கம்வ ளர்த்ததெங்கள் மரபை யெம்மோர்
காதலுற்றுக் கற்கக்க ளமைத்தல் வேண்டும்
கனித்தமிழ்மீ தெமக்கோகா தலதில் வெண்டும் .
பாவலர்.வில்லூர் பாரதி

*பாவகை-எண்சீர் விருத்தம்

1010 மரபு கவிதைப் பெட்டகம்


ஆனி-2020

நெய்தல் நிலம்
பைந்தமிழ்ச் செம்மல்.நிர்மலா சிவராசசிங்கம்

விடிகாலைக் கதிரவனின் கதிர்கள் மின்ன


மெல்லென்று பூங்காற்றுத் தவழ்ந்து செல்லும்
கடலலைகள் காதல�ொடு கரையைத் த�ொட்டுக்
கடலுக்குள் மீண்டெழுந்து பாய்ந்து செல்லும்
படருகின்ற க�ொடியெல்லாம் மணலில் சாயப்
பசுமையாகக் காட்சிதரும் நெய்தல் மண்ணும்
மடல்களினுள் வண்டினமும் ம�ொய்த்து நிற்க
மதிமயங்கித் புன்னைமரம் தலையை ஆட்டும்

ஆடிய�ோடும் சிறுவரெல்லாம் ஓன்று சேர்ந்தே


அசைந்தோடும் நண்டுகளை விரட்டி ய�ோடப்
பாடியாடி மணலினிலே செய்த வீடு
பாதங்கள் பட்டதுமே இடிந்து வீழும்
ஓடிய�ோடி உழைப்போரும் கரையில் தங்கி
ஓய்வெடுத்தே அமர்ந்திருப்பர் இன்பம் ப�ொங்க
நாடிவரும் க�ொக்குகளும் வட்ட மிட்டு
நண்டுகளை மெல்லெனவே தூக்கிச் செல்லும்

செல்லுகின்ற படகுகளை அணியஞ் செய்யச்


செங்கதிரும் மேற்கினிலே மறைந்து ப�ோகும்
புள்ளினங்கள் சிறகடித்துக் கூட்டை ந�ோக்கிப்
புடைசூழ வானமதில் பறந்து செல்லும்
சில்லென்று வீசுகின்ற தென்றல் காற்றும்
சிந்தைதனை மகிழ்வித்துத் தழுவிப் ப�ோகும்
ஒல்லென்று கடலைகளும் ஒலித்துப் பாய
உறங்காமல் மீனவர்கள் செல்வர் சேர்ந்து

*பாவகை-எண்சீர் விருத்தம்

1111 மரபு கவிதைப் பெட்டகம்


ஆனி-2020

நெய்தல் நிலம்
துன்பங்கள் சூழ்ந்துவரும் பரவர் வாழ்வில்
துணிவுடனே மீன்பிடிக்க நாளும் செல்வர்
கண்களிலே உறக்கமின்றி உள்ளம் வாடக்
காத்திருப்பர் கரையினிலே பெண்க ளெல்லாம்
விண்மீன்கள் கண்சிமிட்டும் வானில் நின்று
விரைவாக வட்டநிலா நகர்ந்து செல்லும்
வெண்ணிறத்து முகிலெல்லாம் சூழ்ந்து நின்று
விழிக்கின்ற மங்கையரைக் காத்து நிற்கும்

நிற்கின்ற நேரமெல்லாம் இறையை வேண்ட


நெஞ்சமது நிம்மதியைத் த�ொலைத்து நிற்கும்
ப�ொற்கரங்கள் நீட்டுகின்ற பரிதி மெல்லப்
ப�ொன்னிறமாய்ப் பவனிவர வானம் மின்னும்
வெற்றியுடன் திரும்பியவர் பாய்ந்த ணைத்து
விருப்புடனே காட்டிடுவார் மீன்கள் கூடை
சுற்றிவரும் காகங்கள் வட்ட மிட்டுத்
துடிக்கின்ற மீன்களதைக் கவ்வ எண்ணும்

எண்ணிறைந்த மீனவரின் நெஞ்சில் என்றும்


ஏக்கங்கள் வேதனைகள் படர்ந்து நிற்கும்
கண்காணா இடங்களிலும் படகு ப�ோகும்
கலக்கமுடன் அலைந்திடுவார் கரையைத் தேடி
உண்ணாமல் உறங்காமல் மனத்தில் தாக்கம்
உள்ளமெல்லாம் கலங்கிடவே கண்கள் ஏங்கும்
கண்மயக்கம் அடைந்திடவே கிடப்பர் வீழ்ந்து
கண்டவர்கள் உதவிவிட்டால் கிடைக்கும் வாழ்வே
பைந்தமிழ்ச் செம்மல். நிர்மலா சிவராசசிங்கம்

*பாவகை-எண்சீர் விருத்தம்

12
12 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

வாகை சூடுவ�ோம்!
செந்தமிழ�ோ செகமெங்கும் தழைக்க வேண்டும்
செழுமையது மாறாது நிலைக்க வேண்டும்
முந்தைய�ோர்தம் ம�ொழியென்று காக்க வேண்டும்
முழுவுலகும் ம�ொழிதமிழைச் சேர்க்க வேண்டும்
சிந்துவெளி யகல்வெல்லாம் ந�ோக்க வேண்டும்
செம்மொழியாம் தமிழைநாம் காக்க வேண்டும்
சந்தமிகும் செய்யுலெல்லாம் ; க�ோக்க வேண்டும்
சாகாமல்ச் சுவடிகளை யாக்க வேண்டும் .

வண்டமிழை வையமெல்லாம் வளர்க்க வேண்டும்


வடம�ொழிகள் கலவாது வடிக்க வேண்டும்
கண்டம்கு மரிபிறந்த தமிழை நாமும்
காப்பதற்குச் சங்கங்கள் அமைக்க வேண்டும்
த�ொண்டாகத் தமிழையெங்கும் வளர்ப்ப தற்குத்
த�ொடராக விழாவெல்லாம் துவக்க வேண்டும்
முண்டாசுக் கவிஞனவன் தலைப்பெ டுத்து
முறையாகக் கவிமுழக்கம் செய்தல் வேண்டும்

ஆதிம�ொழி தமிழென்று மழியா யாமல்


ஆன்றோரும் சான்றோரும் அதனைக் க�ொண்டு
ஓதுதற்கு கந்தநூல்கள் செய்தல் வேண்டும்
உலகமெல்லாம் தமிழ்பரவச் செய்தல் வேண்டும்
சாதலற்றுச் செம்மொழிய�ோ சகத்தில் வாழ
சங்கம்வ ளர்த்ததெங்கள் மரபை யெம்மோர்
காதலுற்றுக் கற்கக்க ளமைத்தல் வேண்டும்
கனித்தமிழ்மீ தெமக்கோகா தலதில் வெண்டும் .

பாவலர்.ஓசூர் மணிமேகலை

*பாவகை-நிலைமண்டில ஆசிரியப்பா

13
13 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

வானமங்கை!
வானமங்கை வாழ்த்துகளே மழையாய் வந்து
வாழவைக்கும் மானிடரை புவியி லென்றும்
தேனமுதாய் பயிர்களுக்கு வயலில் வந்து
தேவையான மகசூலைத் தருமே என்றும்!
நாணமுற்ற புதுப்பெண்போல் தலையைசாய்த்து
நெற்கதிர்கள் தலைக்கவிழும் நிலத்தை ந�ோக்கி
மானத்தில் வேளாண்மைத் த�ொழிலைச் செய்து
மக்களெல்லாம் இனிதுவாழ மழையே நன்று!

வெள்ளமெனப் பாய்ந்துவந்து சிலரின் வாழ்வை!


வீணடித்த க�ொடுமையையும் மறக்க வில்லை!
பள்ளங்கள் படுகுழிகள் அனைத்தும் ஓடி!
பல்லோர்கள் குடியிருப்பும் அழிந்த ச�ோகம்!
உள்ளத்தால் மறந்திடாத பெருந்து யர்தான்!
ஊரெல்லாம் மழைவெள்ளம் க�ொன்றக் காதை!
கள்ளமிலா மனத்துடனே உழைத்த வர்கள்!
கடுமழையால் ச�ோதனையில் அவதி யுற்றார்!

மழையென்னும் விசும்பல்கள் இல்லா விட்டால்


மண்ணிலெந்த உயிர்வாழும் வாய்ப்பே இல்லை
தழைக்கின்றத் தாவரங்கள் விலங்கு யாவும்
தம்வாழ்வை மண்ணுலகில் மழையால் வாழும்
நுழைக்கின்ற நற்செய்தி செவியில் நாளும்
நூதனமாய் மழைச்சிறப்பே நமக்கும் நன்றாம்
குழைக்கின்ற வண்ணங்கள் இணைந்தாற் ப�ோன்றே
குலமாந்தர் மழையால்தான் சிறந்தே வாழ்வர்!

அமரர்.பாவலர். கவியழகன்,
(இறுதியாக மின்னிதழுக்கு அனுப்பிய கவிதை)

*பாவகை-எண்சீர் விருத்தம்

14
14 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

மண்ணில் பிறந்த மகிமையே - தமிழ்மொழி


வண்ணம் தந்து வணக்கம் ச�ொல்லி
மண்ணில் பிறந்த மகிமைத் தமிழே!

எண்ணம் தந்தே எழுந்த தமிழே


கண்ணில் காணும் காட்சி நீயே.

வண்ணத் தமிழே வாசம் தந்தே


எண்ணம் எல்லாம் எம்மையும் கவர்வாயே .

முத்தமிழ் பேசி முன்னின்று யாத்தால்


புத்தெழில் வீசிப் புதுமையும் விளையுமே!

நற்றமிழ் பயின்று நலமாய் வாழ்ந்து


பற்றாய்க் கற்று பயனைப் பெறுவ�ோமே!

நற்றமிழ் பாவால் நனிசிறந்து வாழ்த்திப்


பற்றால் தமிழில் பாக்கள் யாப்போமே!

கற்ற கல்வியும் கடிதென உயர்ந்து


பெற்ற தாயாய்ப் பேறுகள் பெறுகவே .!

தமிழே ப�ோற்றி தலையாய் க�ொண்டே


அமிழ்தாய் வாழ அறமே அருள்கவே !

உருவாய் உணர்வாய் உலகத் தமிழாய்


திருவாய் போற்றி திசையாய் ஒளிர்கவே!

அன்னைத் தமிழே அகிலம் ப�ோற்றி


உன்னை எனக்கே உருகித் தருகவே!

செந்தமிழ் பேசிச் செழிப்பாய் வாழ்ந்தால்


முந்தையர் உலகும் முத்தாய் ப�ோற்றுமே!
பாவலர். நகுலா சிவநாதன்

*பாவகை-குறள் வெண் செந்துறை

15
15 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

நேரிசை வெண்பாக்கள்
அரசியல்

ஆதார மற்றவர் ஆதயம் தேடவும்


பூதா கரப்பழி பூட்டிட - த�ோதாக
சேதார மாக்கிட சேவையும் தூற்றினர்
காதான செய்தி கெடும் .

தமிழ் ம�ொழி

நற்றமிழ்ப் பாவிசை நல்லோர் பலராக


ப�ொற்றா மரையது ப�ோற்றிடப் - பெற்றிட
வற்றாத் தமிழின் வளமாக வாழ்ந்திட
கற்றிடக் கண்டு களி .

காதல்

சிற்றிடை சாய்ந்திட சற்றே நளினமாக


வெற்றிடை வாசமே வீசுமந்த - பற்றினில்
ஒற்றிட லாகாதே உந்தனது தேகமும்
சற்றும் சரியாது சார்பு .

த�ொற்று

முற்றிலும் தெட்டதே முற்றிடா முன்னமே


த�ொற்றிடா தென்றுமே த�ொற்றத - கற்றிட
அற்றிட வல்லாத கற்றிட வாகியே
நெற்றியிடைக் கண்னே நிறை .

இல்லறம்

பற்றினான் பற்றுடன் பற்றாகிப் பெற்றவள்


கற்றிடக் கற்றவன் காத்ததே - நற்றென
உற்றிட உற்றவன் ஊற்றான அன்பினில்
த�ொற்றிடத் தூவானம் த�ோற்று .
பாவலர்.வாசன் சாவி

16
16 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

காதலைவேண்டல்!
முத்துதிர் சிரிப்பைச் சிந்தி
ம�ோகன அழகைக் கூட்டி
பித்துறச் செய்யும் பெண்ணே
பேரெழில் கண்டேன் நானும்
சித்துகள் செய்தே நீயும்
சிந்தையைச் சிதற வைத்தாய்
சத்துனைப் பேச்சால் என்னைச்
சார்ந்து க�ொள் காதலாளே

கண்மணி நில்லு க�ொஞ்சம்


காரணம் ச�ொல்லிப் ப�ோநீ
மண்ணிலே காதல் இயல்பு
மனதிலே கலக்கம் வேண்டாம்
உண்மையில் உன்னை எண்ணி
உருகினேன் நானும் நாளும்
கண்டுக�ொள் என்னை நீயும்
கணவனாய் வரிப்பாய் நாளை

நெஞ்சினில் க�ொண்டேன் காதல்


நேரிலே வருவாய்ப் பெண்ணே
அஞ்சுதல் என்றும் வேண்டாம்
அன்பதே எதையும் வெல்லும்
வஞ்சியே உன்னை யன்றி
வாழ்வும் எண்ணம் இல்லை
விஞ்சும�ோர் ஆசை நம்முள்,
விடியலைத் தரும் என்றும்

பாவலர்.சரஸ்வதிராசேந்திரன்

*பாவகை-அறுசீர் விருத்தம்

17
17 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

தவறாது கிட்டும் தரமான இன்பம்


விடிகின்ற காலை விரிகின்ற பூவை
விழிகண்டு துள்ள வியப்பொன்று த�ோன்றும்
மடிகின்ற ப�ோதும் மலர்கிறதே நாளும்
மனமகிழ்வு தந்து மணம்வீசி நன்றாய்
விடைகாணா வாழ்வில் விதிவழியே சென்று
வினைபுரிய ஏன�ோ விரும்பாத உள்ளம்
தடையின்றி நெஞ்சத் தளையகற்றி வாழ்ந்தால்
தவறாது கிட்டும் தரமான இன்பம்

அலைமெல்லப் பாத வடித�ொட்டுப் ப�ோக


அசைகின்ற துள்ள மழகாகக் க�ொஞ்சம்
நிலையற்ற வாழ்வு நினைக்கின்ற ப�ோதும்
நிறைவேறு மாசை நினைவ�ோடு நிற்கும்
வலைப�ோட்டுத் தேடி வருகின்ற பாசம்
வறுமைக்கு ளேன�ோ வதைபட்டுப் ப�ோகும்
மலைப�ோல யென்றும் மயங்காது நின்று
மதிப்போடு பாரில் மனம்போல வாழு.

அறத்தோடு வாழ அகிலத்தில் நாளும்


அழியாத சீரை அடைவாயே நீயும்.
திறத்தோடு நாளை தெளிவாகக் க�ொண்டால்
தினந்தோறு மின்பம் தெவிட்டாம லள்ளும்.
முறையான வாழ்வை முனைப்போடு ஏற்று
முழுதாக நீயும் முயன்றாலே வெற்றி
நிறைவாக என்றும் நிலைத்திங்கு சேரும்
நிழலாக நேர்மை நெறிநாளும�ோங்கும்

பாவலர்.மதுரா

*பாவகை-வெண்டளையான் இயன்ற எண்சீர் விருத்தம்

18
18 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

க�ொர�ோனா
நுண்மியை வருக என்போம்
நுழைவதில் மகிழ்ச்சி க�ொள்வோம்
நன்மைகள் செய்க என்போம்
நாமுமே பழகிக் க�ொள்வோம்
அண்மையின் ஆய்வு யாவும்
அதற்கென மருந்து காணும்
பன்முக முயற்சி யாவும்
பலன்களே அளிக்கா நிலையில்.

என்னதான் செய்வ திங்கே


எப்படி நாம்வாழ் வதிங்கே
துன்பமே கூடு திங்கே
துரத்துதே த�ொற்று நாளும்
மண்ணிலே பிறந்த பின்னே
மடிதலும் உரிமை தானே
கண்களில் நீரைச் சுமந்து
கலங்கியே நின்று நம்மை.

தனிமைதான் படுத்திக் க�ொண்டும்


தவிப்பிலே வாழ்ந்த வாழ்கை
இனியுமே த�ொடர்ந்து விட்டால்
இன்னுயிர் காப்பு தன்னில்
தன்நிலை இழந்து ப�ோகும்
தகைமைகள் இற்றே அகலும்
இனிமைகள் என்ற ச�ொல்லே
என்றுமே அருகிப் ப�ோகும்

வறுமையே பிணியாய் மாறி


வருவன எதிர்க்கும் ஆற்றல்
திறனிலா நிலையை எய்தி
தெறித்திடும் பட்னிச் சாவாய்
வருவது வரட்டும் என்றே
வாழ்விதை வாழ்ந்து பார்ப்போம்
கருவறை நிலையில் நாளும்
கண்களை மூடிக் க�ொண்டே....
பாவலர்.வெங்கடாசலம் ராமசாமி

*பாவகை-அறுசீர் விருத்தம்

19
19 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

மாமழையைப் ப�ோற்றுவ�ோம்
மண்ணுலகில் மாந்தரெல்லாம் மகிழ்ச்சி ய�ோடே
மனம்நிறைந்த வாழ்வினையே வேண்டி நாளும்
விண்ணுலகின் அமுதமான மழையைத் தானே
வியன்பொருளாய்ப் ப�ோற்றிடுவர் காண்போம் நாளும்
க�ொண்டலது தங்கிவரும் வகையில் நாமும்
க�ோலமிகு மரங்களையே வளர்ப்போம் நாளும்
எண்ணங்கள் ஈடேற்றும் வளமை தன்னை
எந்நாளும் அளித்திடுவாள் இயற்கை தானே.

ப�ொழிகின்ற மழைநீரைத் தேக்கி வைத்துப்


ப�ொன்னெனவே விளைவினையே பெருக்கி வாழ்வோம்
அழிந்திடுமே அல்லலுமே விண்ணின் நீரால்
அமிழ்தமெனத் திகழ்வதாலே சிறந்தே வாழ்வோம்
செழித்துவரும் நம்வாழ்வும் செம்மை யாக
செல்வவளம் சிறந்துவர சேர்ந்தே வாழ்வோம்
க�ொழிக்கின்ற செல்வத்தால் ஈந்து வாழும்
க�ொள்கையினைப் பெற்றிடுவ�ோம் மழையால் தானே.

வாரிவாரி வழங்குகின்ற வள்ளல் ப�ோல


வரையாது க�ொடுக்கின்ற மாரி வாழி
ஏரிகுளம் நிறைந்திடவே முகிலைக் க�ொண்டே
எந்நாளும் ப�ொழிகின்ற மாரி வாழி
பாரினிலே மக்களுடை பகைமை மாற்றப்
பதமாகப் ப�ொழிந்துவரும் மாரி வாழி
தேரினிலே தெய்வத்தை ஏற்றி நாமும்
தேவதையாய்ப் ப�ோற்றிடவும் மாரி வாழி.

பாவலர்.மஞ்சுளா ரமேஷ்

*பாவகை-எண்சீர் விருத்தம்

20
20 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

சங்கப் பாடல் என் கைவண்ணத்தில்

வளைந்திடும் காலினை வடிவாய்ப் பெற்ற


வஞ்சக முதலையும் வசிக்கும் ஆழி
தளைகளை அறுத்திடும் க�ொம்புங் க�ொண்டே
தன்னினத் தாருடன் சுறாவும் நீந்தும்,
கழிமுகப் பகுதியைக் கடந்தே யின்று
காதலின் உணர்விலே இரவில் வந்தாய்..!
விழிகளில் பூத்திடும் வியப்பே யிங்கு
வீணாய்த் துன்பமும் விளைவ தேன�ோ..!

முந்தையப் ப�ொழுதினில் பிடித்த மீன்கள்


முழுதுமே உலர்ந்திடக் கரையில் காயும்
சிந்தையைக் கவர்ந்தவள் மணற்ப ரப்பில்
சிலையென அவ்விடம் இருப்பாள் தானே..!
முண்டகக் க�ொடித ழைத்து வண்ண
முயர்மலர் வழிநெடு பூத்தி ருக்கும்
கண்டதை நீயுணர் வாயே ; அங்கு
கணீரென ஒலித்திடும் மணிகள் பூட்டி

அழகிய புரவியில் வருங்கால்_அந்தோ


அறுபடும் க�ொடிகளும் தேர்கால் பட்டே..!
பழகிய பாதையில் புங்கை ப�ொன்னாய்
பரந்துவி ரிந்திடக் காண்பாய் யெங்கும்..!
அவ்வழி உனக்கது நன்மை யாகும்
ஆதவன் வந்திடும் பகலே தானே..!
செவ்வழி நடந்திட மாந்த ரென்றும்
செழிப்புடன் வாழ்வது பயனென் ப�ோமே..!
பாவலர்.அனுராஜ்

*பாவகை-எண்சீர் விருத்தம்

21
21 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

எனையாளும் தெய்வம்
தாயாகி எந்நாளும் தாங்கும் தெய்வம்
தண்ணெழிலில் சூழ்சிந்தை உறைந்த தெய்வம்
வாயார வாழ்த்தியே பாடும் தெய்வம்
வடிவான கலையழகில் நிலையாம் தெய்வம்
சேயாக எனையணைத்தே அருளும் தெய்வம்
சிந்தையிலே குடிபுகுந்த சீராம் தெய்வம்
ஓயாமல் உறங்காமல் ஓங்கும் தெய்வம்
ஓங்குபுகழ் மும்மூர்த்தம் இணைந்த தெய்வம்

மலைமடவாள் மங்கையினை மணந்த. தெய்வம்


மனதாரப் ப�ோற்றிய�ோரைக் காக்கும் தெய்வம்
தலையாய குணத்துடனே தனித்த தெய்வம்
தவத்தோர்க்கு வரங்கொடுத்தே தவித்த தெய்வம்
அலைகடலின் நஞ்சினையே அருந்தும் தெய்வம்
அங்கையற்நற் கண்ணியாளும் அழகின் தெய்வம்
கலையாத க�ோலமாக அமர்ந்த தெய்வம்
கரும்பாரின் மலர்க்கொன்றை சூடும் தெய்வம்

அன்பினிலே மயங்கியேதான் அருளும் தெய்வம்


அடியவரின் பக்தியிலே அடங்கும் தெய்வம்
ஆனந்தத் தாண்டவமே ஆடும் தெய்வம்
ஆற்றலுடன் அறிவையுமே அருளும் தெய்வம்
அன்றாடம் த�ொழுதிடுவ�ோர் ப�ோற்றும் தெய்வம்
அருள்மணியின் வாசகரை ஆண்ட தெய்வம்
அன்பர்கள் இதயத்தில் நிறைந்த தெய்வம்
அணியாக அம்பலத்தே ஆடும் தெய்வம்

பாவலர்.மீராஸ்ரீ

*பாவகை-எண்சீர் விருத்தம்

22
22 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

சூளுரைக்கக் கடைசி வாய்ப்பு


வான்வெளியை ஊடுருவும் ஆற்றல் க�ொண்டோம்
வாழ்நிலையில் பல்லாற்றல் மேவக் கண்டோம்
மண்குடைந்து மர்மங்களைத் தேடு கின்றோம்
மார்தட்டி வெற்றிகளைப் பாடி நின்றோம்
கண்ணடைந்த தூரத்தை வளைக்கப் பார்த்தோம்
காலமெல்லாம் சுயநலத்தைப் பேணிக் காத்தோம்
துன்பநிலை கையளித்த நுண்மி யாலே
துவளுகின்றோம் துடிக்கின்றோம் புவியின் மீதே !

ஆணவத்தின் குரல்வளையைக் கடித்த தாங்கே


அழிக்கின்ற ஆயுதமாய் மனித ரிங்கே
பூணுகின்ற வேடமெலாம் வெளிறிப் ப�ோக
பூட்டுகிற�ோம் கதவுகளை நெஞ்சம் வேக
காணுகிறக் காட்சியெலாம் ஏக்கம் கூட்டும்
காலத்தைக் காதலிக்கும் எண்ணங் காட்டும்
நாணுகிற�ோம் தவறுகளால் விடியல் எங்கே?
நல்லியல்பு தான்சிதையின் பாவம் பங்கே !

நாளையென்ற நாளிருப்பின் வெளியே ப�ோவ�ோம்


நாற்றிசையும் நன்மையுள்ளும் இனிமை யாவ�ோம்
சூளைகண்ட வாழ்வையெண்ணி அன்பைப் பெய்வோம்
சுத்தமுடன் புறமகத்தை மீண்டும் நெய்வோம்
வாளெடுக்கும் கேவலத்தை என்றும் செய்யோம்
வனத்துறையும் செடிக�ொடியின் நுனியும் க�ொய்யோம்
சூளுரைக்க இயற்கைதரும் கடைசி வாய்ப்பு
சுருளாமல் மனந்திறத்தல் ஒன்றே காப்பு
பாவலர்.விசு இம்மானுவேல்

*பாவகை-எண்சீர் விருத்தம்

23
23 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

உணர்ந்தால் மட்டுமே விடை கிட்டும்!


மரபே என்றும் சூத்திரமே!
மனத்தின் விளைச்சல் பாக்களடா!
உரசிப் பார்க்கும் புத்தியடா
உலகில் அதுவுன் சக்தியடா!
வரந்தான் இங்கே வாழ்க்கையடா
வாழ வைப்பான் மனிதனடா
மரம்போல் எம்மில் எத்தனைபேர்
மரத்திற் கிணையே மரமாமே!

வெட்ட வெட்டத் தழைக்குமடா


வாரி இங்கே இறைக்குமடா!
கெட்ட மனிதன் இங்குண்டு
கெட்ட மரம்தான் எங்குண்டு?
வட்ட வட்டக் கனவுகளில்
வாழ்கை தானே பெரும்பாடம்?
பட்டம் பெற்றால் ப�ோதாது
பார்த்துப் பேச வேண்டுமடா!

ச�ொல்லச் ச�ொல்ல இனிக்குமடா


ச�ொல்லின் இன்பம் நிலைக்குமடா!
நல்ல நல்ல வார்த்தைகளை
.நாடே கேட்டு வியக்குமடா!
செல்ல ரிச்ச எம்மனத்தை
சிந்தை குளிர வைக்குமடா!
எல்லை தாண்டிச் சிந்திப்பான்
இவனே கவிஞன் கவிஞனடா!

அம்பாள் அடியாள் பாட்டுக்கும்


அகம்தான் என்றும் காரணமாம்
செம்மண் தனிலே வீழ்ந்தபிணம்
செதுக்கி எடுத்த சிந்தனைநான்
எம்மண் விட்டுப் பிரிந்ததுயர்
ஏற்று நடத்தும் காவியம்நான்
இம்மண் தனிலே நினைந்துருகும்
இன்பத் தமிழின் ஓவியம்நான்!
த�ொடரும்...

பாவலர்.அம்பாளடியாள் சாந்தரூமி
*பாவகை-அறுசீர் விருத்தம்

24
24 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

அன்னை
அன்னைத் தமிழை அம்மா தரவே
முன்னைப் பிறப்பின் முத்தான தவமாய்
என்னைப் புவியில் ஏற்றிய உறவாய்
தன்னை வருத்தித் தகைமை தந்து

பாசம் காட்டும் பக்குவம் பேணி


நேசம் ச�ொல்லும் நெஞ்சம் அம்மா
வாச மலராய் வசந்தத் தென்றலாய்
தேசம் எங்கும் தேடியே பெற்றிடா

நறுமலர் ப�ோல நாடியே சேரும்


உறுபகை விரட்டி உரிமை தந்தே
வெறுமை களைந்து வேதனை நீக்கிச்
சிறுமை இல்லாச் சிகரம் ஏற்றி

அரிய ம�ொழியால் அறிவை ஊட்டிப்


புரிதல் ச�ொல்லிப் புதுமை காட்டிப்
பெருமை ப�ோற்றிப் பேரிடர் த�ொலைத்து
வருபகை விலக்கி வணங்கித் துதித்து

கருவறைத் தாங்கிக் கருணை உதிர்த்து


தருவைப் ப�ோலத் தாங்கிக் க�ொள்ளும்
தாயின் பெருமை தரணியில் சிறப்பே
சேயின் மகிழ்சசி சேவடி த�ொட்டே

வானின் நிலவாய் வண்ணம் சூடியே


தேனின் சுவையாய் செந்தமிழ் ச�ொல்லும்
ஊனினை உருக்கும் உள்ளம் கண்டு
கூனிக் குறுகாதே குழந்தை இதயம்

பாடிப் பரவுவேன் பாரிலே தாய்மையே


கூடிக் களிக்கும் குயிலின் குரலாய்
தாள்கள் பணியவே தண்மையாம்
நீள்வான் உலகில் நீயே தாயே..
பாவலர். சிவதர்சினி ராகவன்

*பாவகை-நேரிசை ஆசிரியப்பா

25
25 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

விதைப்போம் கவிதை வித்தை


பற்றித்தொழு முத்துக்குமரனை
வெற்றிக்கொடி கட்டித்தரவென
நெற்றிக்கணி சித்தக்கனிவ�ொடு-திருநீறும்!

பக்கத்துணை மிக்கத்தருவனை
மக்கட்குறை சிக்கக்களையுவ
முக்கட்சிர முச்சத்தலைவனை-உளம�ோதும்

முற்றிக்கெடு த�ொற்றுப்பிணியற
உற்றுக்கவி வித்துப்பெருகிட
வெற்றுப்பத மெட்டத்துணைய�ொடு-மலையேறும்!

முத்துத்தமி ழெட்டத்திருவ�ொடு
வித்துக்கட ல�ொட்டுத்துறைவனை
ம�ொத்தத்துணை கட்டிப்புரவென-நினைவாகப்!

பற்றுக்கறை இச்சைக்குறையறு
குற்றச்சுமை நச்சுப்பொறிவிடு
கற்றுக்கொள மெச்சுத்தமிழெடு-கவிபாடப்!

பட்டத்தினை எட்டத்துணிவெடு
வெட்டிச்சொலை விட்டுத்தடையறு
முட்டிச்செலு முத்துக்கவிய�ொடு-விரைவாகப்”

பற்றைக்கலை முட்டத்துணைவரு
ச�ொற்கற்றுரை சுற்றுப்புவிய�ொடு
நிற்கத்தர நெற்றிக்கனியனி-னடிப�ோற்றிப்!

பச்சைக்கொடி பற்றிப்படருவ
கச்சைக்கனி ஒட்டிக்குழையுவ
அச்சத்தினை வெட்டித்திருதரு-நிறைய�ோனே!

பாவலர். அழகர் சண்முகம்

*பாவகை-சந்தக்குழிபு

26
26 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

கல்லோடு கவிபேசுவ�ோம்
அலையடித்து கலைவடித்து கல்லிங்குப் பேச
அலையடித்த ஆணியாக நிற்குதிங்கு கலையே
சிலைவடித்த சிற்பியிங்கு பாடலாகும் நிலையே
சிலையாக நமையிங்கு நிறுத்துதிந்தக் கலையே!
கலைமணியே தந்தாரே கற்சிற்பம் காண்க
கலைஞர்தம் கற்பனையைகைவண்ண மாக்க
சிலையாக களிரிங்கே காவலுக்குச் சிங்கம்
சிறப்பிதனை ரசிப்பதுக்கு கூட்டமிங்குப் ப�ொங்கும்!

உளிவ�ொலியே அலைவழியே நிலைத்தொலிக்கும் கேட்க


உண்மையிலே ஊரெங்கும் உளிஒலிகள் சப்தம்
நளினமகள் நர்த்தகியே சிவகாமி இங்கே
நல்லாயர் சிற்பத்தை உளியினாலே வடிக்க
நளினமாக அபிநயிக்கும் அதிசயமே ஆடும்!
நற்றுளியே ஆக்கியத�ோர் ஒருக்கல்லில் க�ோவில்
மளியுமிங்கு கூட்டந்தான் தற்பெருமையில் லாமல்
மிளிருமிந்த சிறப்புத்தான் சிற்பிதனைப் பேசும்!

வளிவ�ொலியே வாங்குமிந்த வையகமே காணீர்!


விழிவழியே அதிசயத்தை வியந்திங்குப் பேணி!
நளினமாக ஆடுகிறாள் நடனமங்கை தேனீ
நிலவுலகம் ப�ோற்றிடுதே நற்கலையின் பாணி
களிநடனம் காண்பதற்கு கரைபுரண்டார் ஆர்த்து
கண்ணுக்கு விருந்தாகும் கலையிங்குப் பூத்து
எளியவர்க்கும் அளிக்கிறது எங்கவூரின் விருந்து
எளிதில் கிடைக்கிறது ஏற்புடனே அருந்து!

பாவலர்.குயில்.மு.இரசியாபேகம்

*பாவகை-எண்சீர் விருத்தம்

27
27 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

தாய்மை
தன்னுயிரை எண்ணாமல் தன்மகவைப் ப�ோற்றவே
அன்னையவள் எண்ணுவாள் அன்பாலே - என்றுமே
சின்னத�ொரு ஆசையையும் சித்தியாக்க வேண்டியே
என்னுள்ளே நிற்பாள் இனிது.

நாளும் மகன்தனை நெஞ்சினிலே வைப்பதால்


மாளும் வரையில் மனத்தினில் - க�ோளும்
அவனைப் புகழும் அளவில் உயர்த்தி
அவனியில் வைப்பாள் அவள்.

மண்ணில் உலவும் மனிதக் கடவுளவள்


பெண்ணில் அவளே பெருமையாம் - கண்ணாய்
வணங்கும் விதத்தில் வளமே விளையும்
அணங்காம் எனதுறவாய் அவள்.

உறவில் அவளே உணர்வின் முதன்மை


இறப்பில் மறந்தும் இருக்கா- மறதி
திறக்கும் வடிவில் திருவின் உருவம்
சிறக்கும் நமது சிறகு.

கருவி லுருவானக் காலம் முதலாய்


அருவாய் இருப்பினும் அன்பாய் - இருப்பாள்
எருவாய் இருந்தே எழிலாய் வளர்ப்பாள்
குருவாய் அவளைக் கருது.

வேலை இருப்பினும் வேண்டியது செய்தவளும்


காலை முகந்தனைக் காண்பவள் - ச�ோலை
நிலையினைக் கண்டதாலே நிம்மதி யாவாள்
விலையேது மில்லை வியப்பு.

பாவலர்.க.லட்சுமி ராம்பிரசாத்

*பாவகை-நேரிசை வெண்பாக்கள்

28
28 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

என்னவளின் கண்
வில்லினின் றம்பு விடுபடாக் காலையும்
க�ொல்லுதே என்ன க�ொடுமை - மெல்லியளால்
விற்புருவக் கீழே விழியம்பு க�ொண்டென்னை
வெற்றிக�ொண்ட விந்தை இது .

இதுவென்ன விந்தை இருண்ட திராட்சை


மதுவாலே வாரா மயக்கம் - பதுமை
அவளின் திராட்சை அருவிழியி ரண்டால்
அவனிய�ோர்க் கேகுமே யாங்கு!

ஆங்கொருக்கால் மீனும் அருங்குளத் தினின்றேக


நீங்கும் தனதுயிரை நீணிலத்தில் - ஈங்கு
முகக்குளத்து மீன�ோ முகத்தினதே தங்கிச்
செகுத்திடுதே திண்மை உளம்.

அந்தா மரைமூழ்கி ஆழ்வண்டு தேன்குடித்(து)


அந்தோ மயங்கிய தாங்கென்பர் - செந்தாமரை
அன்ன முகத்தில் அருவிழி வண்டுகள்தாம்
என்னை மயக்குவ தென்?

என்ன வ�ொருவிந்தை இவ்வுலகில் தாமரை


தன்னிலை பச்சை தனிலேக - ப�ொன்னார்
கமல முகத்தில் கருப்புவெள்ளை யாய்க்கண்(டு)
இமைக்க மறந்தான் இவன் .

இவனுக்கோ ரையம் இருநிலத்தீர் தீர்ப்பீர்


அவனியில் ஆதவன் அல்லோன் - உவந்தே
ஒருசேரக் கண்டதிலை ஒண்டொடியா ளுக்கோ
இருசுடரும் சேர்ந்திருப்ப தென்?
பைந்தமிழ்ச் செம்மல்.வெங்கடேச சீனிவாசக�ோபாலன்

*பாவகை-நேரிசை வெண்பாக்கள்

29
29 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

தமிழென்னும் ஆதிம�ொழி!
ஆதி ம�ொழியாம் அரனார் அருளிய
நீதி நிறைந்தொளிர் நித்திலம் ஓதவே
ச�ோதி யனைய சுடரறி வாலென்றும்
மேதினி மேவிடும் மேல்! .

மேலாம் அறம்பொருள் மேதினி இன்பஞ்சொல்


நூலாங் குறளை நுணுகவும் ந�ோலாமை
வேலாம் வினைகள் விரைந்து விலக்கவும்
காலும் இறையருள் காண்.

இறையருள் கூடும் இனிய தமிழ்ப்பா


முறையுடன் பாட முனைந்து குறைகள்
மறையக் குணமும் மலர வளமும்
நிறையத் தருவான் நிதம்.

நிதமும் புலர்ந்து நிறையும்நற் காலை


அதனில் விழித்தே அரனை முதலில்
இதமாய் மனத்தில் இருத்தியே பாடிப்
பதமாய்த் த�ொடங்குன் பணி..

பணியிற் பரிவும் பணிவும் நிறைந்து


துணிவும் ஒழுக்கம் த�ொடையாய் அணிந்து
பிணியாம் ப�ொறாமைப் பிசுக்கு விலக்க
மணியாம் மனிதர் மனம்.

மனிதர் மனத்தில் மனிதம் மலரக்


கனியாம் தமிழறம் காப்பு முனிவு
குனிவாம் அறிவைக் குதறும், க�ொழிக்க
இனிதென்றும் ஆதி ம�ொழி.
பாவலர்.செல்லையா வாமதேவன்
*பாவகை-நேரிசை வெண்பா

30
30 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

கல்வி
கல்வி தருமே கரையிலா இன்பமே
செல்வம் தரும�ோ உணர்.

படிப்பு நெறியுடன் பண்பைத் தருமே


துடிப்புடனே பூமியில் வாழ்.

.அறிவினைத் தந்திடும் ஆற்றலைக் கூட்டும்


அறிந்திடு நூல்பலக் கற்று.

அறிவியல் எல்லாம் அறிந்து தெளிந்தே


அறிவிற் சிறந்து விளங்கு.

தத்துவம் கற்றிடு தன்னை அறிந்திடு


நித்தமும் நன்மையே காண்.

.கலைகள் அனைத்துமே கற்றுத் தெளிய


நிலைத்தே உயருமே வாழ்வு.

நியாயமும் வாதமும் நீதியாய்க் கற்க


வியாழனாய் ஆள்வான் குரு.

வண்டமிழ்க் கற்றிட வான்புகழ் கிட்டுமே


தெண்டமிழ்க்கு ஏதிங்கே ஈடு.

வித்தைகள் செய்திட வித்தகன் ஆகலாம்


சித்தம் குவிந்திடக் காண்.

.எத்துணைக் கற்கினும் ஏணியை ஓர்ந்திரு


நித்தமும் தாய்தந்தைப் பேண்.

கல்விப் பெருமை கடமையில் காட்டுமே


செல்வம் பெருகச் சிறப்பு.

கள்வரும் க�ொள்ளார் கரையிலா வெள்ளமும்


அள்ளும�ோ கல்வியை இங்கு.
பாவலர்.கேசவ தாஸ்,சுசீந்திரம்

*பாவகை-குறள் வெண்பாக்கள்

31
31 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

அருள்வாயே ! தமிழ்த்தாயே!
மலராக மணமாக மகிழ்வோடு வருவாள்
மனத�ோடு உறவாடி மகிழ்ந்தாடும் உறவாய்
மனதார மகிழ்வோடு மலர்ந்தாடும் இனிதாய்
மனதெல்லாம் நிறைவ�ோடு மகிழ்வாகும் தாயே.!

நிறைவாக என்மனதில் நீங்காது வாழ்வாய்


நிறைபாரம் துன்பங்கள் நேர்ந்திடாது காப்பாய்
நிறைவ�ோடு உனையேநான் நின்னடியேப் பணிந்தேன்
நிறைவாக நிறைந்திட்ட நந்தனமே நீயே.!

தமிழாக இனிதாகத் தழைந்தோடி வருவாய்


தமிழ்வேதம் வடிவாகத் துடிப்பாக எழுவாய்
தமிழ�ோசை வழியாகத் தரணியாளச் செய்வாய்
தமிழேதான் கவிபாடத் துடிப்பாக எழுமே.!

தேன்தமிழின் திறனாலே தமிழ�ோடு நானும்


தேன்நிலவின் அழகெல்லாம் தெவிட்டாமல் கூடி
திண்ணமுடன் தெள்ளமுதாய் தேடுகின்றேன் பாடி
தென்றலுடன் மனங்குளிர தேனமுதாய் வாராய்.!

தீந்தமிழின அழக�ோடு திளைத்தேனே நானும்


தீஞ்சுவையும் பெருகிய�ோடி தீராத தாகம்
மாங்கனியின் சுவையாக மகிவ�ோடு நாளும்
மாக்களிப்பின் அலையாக மலைத�ோட வாராய்.!

பூந்தமிழின் நினைவ�ோடு புனைந்தேனே மாலை


பூமிதனில் புகழ�ோடு ப�ொழிந்தோட வாராய்
ப�ொன்னெழிலாய் திகழட்டும் பணிவ�ோடு வாழ
பண்ணெழிலாய் மலரட்டும் பரவசமாய் தாராய்.!
பாவலர்.நிறைமதி நீலமேகம்
*பாவகை-பதினாறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

32
32 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

அந்திப்பொழுது
அந்தி மேகம் மின்னும் ப�ோதில்
ஆழி மீன்கள் துள்ளி வீழும்
மந்தி கூட்ட மாகப் பாய
மாவின் கனிகள் க�ொட்டி நிற்கும்
அந்த ணாளர் வந்து க�ோவில்
ஆக மங்கள் ஓதி நிற்பர்
மல்லிப் பூவின் வாசம் பட்டு
மாது துள்ளும் காத லாலே!

உழைப்பு:

மழையது ப�ொழிய வாங்கு


மனமது குளிர்ந்து ப�ோச்சு
விளைந்தது கரும்பும் வாழை
விதவித மாகச் செந்நெல்
தழைத்தது தரணி யெங்கும்
தமர�ொடு பிறரும் கூடி
உழைத்ததால் பெருடை கண்டார்
உலகமும் வியத்தல் கண்டே!

பாவலர்.ச�ோதி செல்லதுரை

*பாவகை-நிலைமண்டில ஆசிரியப்பா

33
33 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

கற்பதில் வழுவாதே

நலந்தருங் கல்வி யதனை


நாளுமே நீயுங் கற்பாய்!
பலமது நெஞ்சிற் க�ொண்டே
பழுதற நீயுங் கற்பாய்!
உலகினில் வளமாய் வாழ
உகப்புடன் தினமுங் கற்பாய்!
குலமது சிறக்க வேண்டி
குறைவற நீயுங் கற்பாய்!

புலன்களை மயக்க வல்ல


புறப்பொருள் பலவு முண்டு!
புலனமும் முகநூ லென்று
புழங்கிடும் அவற்றை ஒதுக்கு!
புலப்பகை நீயுங் க�ொண்டு
புலமையைப் பெறவே பயில்வாய்!
அலமர லின்றி நாளும்
ஆர்வமாய் நன்றே கற்பாய்!

படிப்பதை விலக்கி நீயும்


பகட்டினை விரும்பி டாதே!
துடிப்புடன் நன்றாய்க் கற்று
துயரதைப் ப�ோக்கு வாயே!
விடியலாய் என்றும் எமக்கு
விளங்கிடுங் கல்வி யதனை
படிறுகள் ஏது மின்றிப்
பயின்றிட வெற்றி தானே!

பாவலர்.த.கி.ஷர்மிதன்
*பாவகை-அறுசீர் விருத்தம்

34
34 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

சுற்றுச்சூழல் காப்போம்
சந்தனத்தில் த�ோய்ந்துவரும் தண்டலையின் தென்றல்
சங்கீதம் பாடிவரும் மூங்கிலிலே நுழைந்து
நந்தவனக் க�ொடியெனவே நன்னாடும் இருந்து
நறுமணத்தை நாற்றிசையும் காற்றினிலே அனுப்பும்
இந்திரனின் ச�ொர்க்கமென்றே இவ்விடத்தைச் ச�ொல்லி
எள்விழுந்த இடங்காட்டும் பாய்புனலின் தூய்மை
கந்தனிடம் பன்னிருகண் கடன்வாங்கிப் பார்த்தேன்
கண்டதெலாம் கற்பனையே கண்ணீரில் கரைந்தேன்.

அம்மம்மா வெந்தணல�ோ?... அவனியெங்கும் பரவ


அனல்நடுவே சிறுபுழுவாய் ஆனதென்ன உலகம்
கும்பிட்ட கங்கையுமே குப்பைகளால் நிறைய
குடிநீரை மலக்குடலில் காட்டுதந்த அவலம்
கம்பத்தின் உயரத்தைக் கடந்துநிற்கும் கழிவில்
கடைப�ோட்டுக் க�ொடும்பிணிகள் விலைபேசும் உயிரை
செம்பாதி நஞ்சினையே சிற்றூரும் இணைந்து
சிலகாலம் மூச்சிழுத்தால் முடிந்துவிடும் உயிரே..

மரமின்றி மழையின்றி மாசுள்ள வளியை


மாற்றவ�ொரு ஆளுமில்லை யாருக்குத் தெரியும்
உரமென்று நெகிழிகளே உழுநிலத்தில் விழுந்தால்
உயிர்காக்கும் உணவளிக்க எந்தவழி இருக்கு
வரமென்றே முன்பிறந்தோர் வளர்த்ததிந்த இயற்கை
வலைதளத்தில் கண்திறக்கும் உனக்கென்று விளங்கும்
தரங்கெட்ட மனிதாவுன் தன்னலத்தை மறந்து
தன்மகளாய்க் காப்பாற்றுத் தரணியையும் நினைந்தே..

பாவலர் இதயம் விஜய்,ஆம்பலாப்பட்டு

பாவகை-எண்சீர் விருத்தம்

35
35 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

வணங்கிடுவ�ோம் வாருங்கள்
பாவலர்.தங்கை பாலா ஆசினி

எல்லை நிற்கும் சாமிகளே


எதிர்ப்பார் இன்னல் களைபவர்கள்
த�ொல்லை க�ொடுப்போர் வினைகளையும்
த�ோல்வி அடையச் செய்பவர்கள்
புல்லும் பூண்டும் கண்ணுறங்க
புவியை காக்கும் உத்தமர்கள்
இல்லம் மறந்த வீரர்களை
இதயம் ஏற்போம் வாருங்களே....

பனியைக் கண்டும் தயங்காது


பணியைச் செய்யும் படைவீரர்
இனிதாய் நாமும் வாழ்வதற்காய்
இறுதி மூச்சைத் தருபவர்கள்
கனிவாய் ந�ோக்கு அவர்களையே
கயவர் சதியை ஒழிப்பவர்கள்
தனியாய் நின்றுப் ப�ோராடி
தாயின் எல்லைக் காப்பவர்கள்...

தேச நலனே பெரிதென்று
தேகம் க�ொடுத்தும் பகைமுடிப்பார்
நாசக் கார கூட்டத்தின்
நாடி ஒடுங்க வைப்பாரே
வேசம் ப�ோடும் க�ொட்டத்தை
வேள்வி க�ொண்டே முடிப்பாரே
நேசக் கரங்கள் நீட்டிடுவேம்
நேயர் குடும்பம் காத்திடவே...

*பாவகை-எண்சீர் விருத்தம்

36
36 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

வணங்கிடுவ�ோம் வாருங்கள்

குண்டு வெடிப்புச் சத்தங்கள்


குருதிச் ச�ொட்டும் நேரத்தில்
வண்டாய்த் துளைத்துப் ப�ோனாலும்
வலிமை க�ொண்டே எழுவார்கள்
த�ொண்டைக் குழியில் மூச்சிழுத்தும்
த�ொடுத்தப் பணியை முடிப்பார்கள்
எண்ணத் தீரம் க�ொண்டவர்கள்
எதிரி திட்டம் அழிப்பவர்கள்....

உயிரும் இங்கே துச்சமென்றே


உறுதி நெஞ்சில் க�ொண்டவர்கள்
வயிரம் பாய்ந்த தேகத்தை
வரமாய் பெற்றப் புத்திரர்கள்
துயிலை மறந்தே ஓடுகின்ற
துடுக்கு மிக்க படைவீரர்
பயில்வோம் நாமும் பாடங்கள்
பட்டாள வீரர் த�ோள்கண்டே....

வணங்க ஏற்ற உத்தமர்கள்


வாழ்க வாழ்க இராணுவமே
மணக்கும் மல்லி சரம்தொடுத்து
மாலை சூட வாருங்கள்
அண்டை நாட்டு த�ொல்லைகளை
அகற்றும் தீரச் செயல்புரியும்
த�ொண்டால் உயர்ந்தக் க�ோபுரத்தை
த�ொழுவ�ோம் ஒன்று கூடுங்கள்....

பாவலர்.தங்கை பாலா ஆசினி

*பாவகை-அறுசீர் விருத்தம்

37
37 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

தண்டமிழின் இலக்கணத்தைக்
கற்போம் இன்றே !!
குணங்கெட்ட மாந்தரெலாம் கூடிக் கூடிக்
குவலயத்தில் வேந்தரென மாறிப் பாடிப்
பணத்துக்காய்ச் சேவைசெய்ய ஓடித் தேடிப்
பரிதவிக்கும் ஏழைகளின் வீட்டை நாடித்
துணையாக நானிருப்பே னென்று கூறித்
துடிப்பதெலாம் நடிப்பதெலாம் உண்மை யன்று...
மனத்தூய்மை யுற்றவரைக் கண்ட துண்டோ!
மறந்தும்நீ யவர்பின்னே சென்ற துண்டோ..!

அறிவுப்பா லூட்டிவிட்ட ஔவை யாரை


அறத்தின்பால் வாழ்ந்துவந்த வள்ள லாரை
மறைய�ோதி வழிகாட்டும் சித்தர் ஏட்டை
மறத்தமிழர் பாவாணர் செப்பும் கூற்றை
நிறைவான புத்திச�ொன்ன பெரிய�ோ[யா]ர் மற்றும்
நெருப்பாகப் பாவேந்தர் பாடும் பாட்டை
மறந்தும்நீ கல்லாம லிருந்து கெட்டால்
மறுமையிலும் கேடும்மைத் த�ொடரு மன்றோ !

இடைவந்த கூட்டமெலாம் மடையை மாற்றி


எழுதிவைத்த ஓலையிலே ப�ொய்யைக் கூட்டிப்
படையின்றி உன்னறிவை உன்னை வைத்தே
பசப்புரையைச் செய்துன்னை மூட ராக்கும்
கடைந்தெடுத்த ப�ொய்களிலே உண்மை இல்லை
கரையான்கள் கூட்டத்தால் அடைந்தோம் த�ொல்லை
தடைவந்து தனித்தமிழை என்ன செய்யும் ?
தண்டமிழின் இலக்கணத்தைக் கற்போம் இன்றே..!.
பாவலர். தர்மா

*பாவகை-எண்சீர் விருத்தம்

38
38 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

நேரிசை வெண்பாக்கள்
துணிந்து நின்று துயரத்தை வெல்வாய்

துணிவ�ோடு நின்றால் துயரத்தை வெல்வோம்


அணியாம் நமக்கு அறிவே - பிணியாம்
செருக்கை ஒழித்திட்டால் செம்மைதான் வாழ்வில்
திருக்குறளாய் வாழ்ந்திடுதல் தீர்வு

வாய்மையே வெல்லும்

உண்மையது ப�ோற்றினால் உள்ளங்கள் வாழ்த்திடும்


திண்மையிது நம்புங்கள் தீர்க்கமாய் - எண்ணத்தில்
தூய்மை வரட்டுமே தூணாகும் வாழ்விற்கு
வாய்மை சிறந்த வழி.

தாய்மையைப் ப�ோற்றுவ�ோம்

கருவ�ோடு தாங்கி கருணையில் ஓங்கி


உருவாக்கி நின்றிடுவார் உண்மை - தருவாரே
ஊக்கம் பெரிதென ஊன்றுக�ோலும் ஆவாரே
ஆக்கம் அவரே அறி.

அன்பினால் ஆள்வோம்

அன்பால் உலகையே ஆளலாம் உண்மையாய்


என்றும் செலுத்தினா லேற்றந்தான் - மென்மையாய்
வாழும் முறையறிந்து வாழ்ந்திடுவ�ோம் நன்மையாய்
சூழு முலகிற்குச் ச�ொல்.

நல்ல நட்பே துணை

கற்பைப்போல் எண்ணலாம் கள்ளமில்லா நட்பினை


மற்றது உண்டோச�ொல் மண்ணுலகில் - உற்ற
உறவென எல்லாம் உதவிடும் வாழ்வில்
திறமாகும் நட்பே துணை
பாவலர்.மு.வா.பாலாஜி

39
39 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

கலைந்தகனவு
கருவறை க�ோயிலைக் கட்டி வாழ்ந்திடத்
திருவுரு பதித்து திங்களும் பத்துடனே
பக்குவம் க�ொண்டு பாங்காய் ஈன்றே
எக்குறை வரினும் என்னுயர் காத்தே

த�ோணியாய்த் தாயவள் த�ோன்றியும் மிதக்கவே


ஏணியாய் தன்மகன் ஏறியே வருகவே
கல்வியின் சிறப்பின் கரைதனைக் கடக்கவே
கல்லிலும் முள்ளிலும் கால்கள் நடந்ததே

பட்டமும் மகன்பெற பட்ட பாடும்


பட்டினிப் ப�ொழுதுகள் பஞ்சாய் பறந்ததே
வாரிசு முதல்மகன் வாழ்வினில் படித்தவன்
வாரியே அனைத்துமே வான்புகழ் வாழ்த்துமே

உறவுகள் அறியவே ஊன்றி கூறியே


சிறகிலாப் பட்சியாய்ச் சிகரமாய்ப் பேசியே
அளவற்ற இன்பமாய் அன்புடன் பாடியே
பளபளப்பு முகமுடன் படிக்கவும் அனுப்பவே

கனவுகள் சுமந்து கல்வியின் சான்றுடன்


வினவியே பணிபெற விதியென அழைக்கவே
பணிபுரி ஆவலும் பலவென ந�ொறுங்கவே
அணியாம் ஏற்றமும் அனுதினம் சரியவே

சுயத�ொழில் செய்யவே சுமைகளும் குறையுமே


இயலா தென்பதும் இல்லாது ப�ோகுமே
செல்வமும் வாழ்வினில் செயலிலா நிற்கவே
பல்துறை நாடியே பணியினில் சேரவே

ஓடியே உழைத்ததும் ஓலமாய் ஆனதே


வாடிய பணியிலே வாழ்வுமே ப�ோனதே
பட்டமும் பதவியும் பதறி ஓடவே
வட்டமிடும் குருவிநான் வழியிலை எனக்கே .

பாவலர்.அபிராபி கவிதாசன் சுவீஸ்


*பாவகை-நேரிசை ஆசிரியப்பா

40
40 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

தருக்கள்

உயிர்வளி காத்திடுமே ஊனும் வளர்க்கும்


பயின்றே தருக்கள் பழங்களும் நல்கிப்
பயிரும் உணவும் பெருக்கியே பாரில்
வயிறும் வளர்த்திடும் வாழ்ந்து!

நதிக்கரை நாடி நெடிதுயர் துன்பம்


சதியிலாக் காய்கனி சேர்த்தே உயிர்வளி
ஈந்துமே வாழ்வினில் ஏற்றமும் கண்டிடும்
பாந்தமென வாழ்ந்திடப் ப�ோற்று!

மழைதனைத் தந்திடும் மாமரங்கள் ஈர்க்கும்


தழைத்துமே மேகங்கள் தண்கனிகள் ஈந்தே
குழைத்துமே வண்ணங்கள் கண்டு வளமும்
செழித்திடும் மானுடம் செப்பு!

நட்பு

நகமும் சதையுமாய் நட்புமே பாரில்


புகழும் உயர்வும் பலமே யுகம்தான்
மலருமே நாறும் மணக்கிறதே ஊரும்
நலமே விரும்பும் நட்பு!

பெண்மை

ஈர்க்கும் நளினமும் இன்சொலும் மங்கைதனின்


ஆர்க்கும் அதரங்கள் அன்பினால் க�ோர்க்கும்
அதிமதுரப் புன்னகை ஆனந்தம் மேவி
மதியும் பயின்றின் மகிழ்வு!

பாவலர்.இரா.மீனாட்சி சுந்தரம்

*பாவகை-நேரிசை வெண்பாக்கள்

41
41 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

தமிழால் உயர்வோம்!!

சிந்தனையில் நிறைந்திட்டக் கவிகள் யாவும்


சிறப்புமிகு தமிழ்மொழியின் இனிமை தானே
வந்தவரும் ப�ோனவரும் தமிழை ஏச
வழியினையே தந்திடலை நிறுத்த வேண்டும்
சிந்தைநிறைத் தமிழ்மொழியும் வேண்டும் இங்கே
சீர்கெட்ட ம�ொழியதுவும் தேவை இல்லை
நந்தமிழால் உயர்ந்தோமே உணர்வோம் இஃதை
நந்தமிழை ஏற்றிடுவ�ோம் உலகின் முன்னே!

சீற்றமிகு பலம�ொழிகள் இருந்தால் கூட


சிந்தைநிறை தமிழ்தனுக்கே நிகரே இல்லை
ஏற்றமிகு மாணவர்காள் சென்று நானும்
என்னுயிராம் தமிழ்மொழியைப் ப�ோற்றிச் ச�ொல்வேன்!
ஏற்றம்பெற் றிங்கேதான் வாழு கின்றோர்
எளிமையான தமிழ்மொழியைக் கற்றோர் ஆவர்!
மாற்றாக பலம�ொழிகள் பயின்றிட் டாலும்
மங்காத புகழ்பெறுமே தமிழும் இங்கே!

தாழ்மையுடன் கூறுகிறேன் இங்கே நானும்


தமிழாலே எற்றத்தைப் பெற்றோம் என்றே
வீழ்ச்சியில்லை கூறுகிறேன் நமக்கே ஏற்றம்
வீழாதத் தமிழ்மொழியால் தான்கி டைக்கும்
காழ்ப்பேதும் க�ொள்ளாமல் தமிழைத் தூக்கிக்
கண்போன்ற இலக்கியத்தைக் கற்றே வாழ்வோம்
வாழ்க்கையினில் திருக்குறளை ஏற்று வாழ்ந்தால்
வாழ்க்கையுமே நலமுறுமே உணர்வோம் இஃதை!
பாவலர்.இர.அரவிந்த் கார்த்திக்

*பாவகை-எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

42
42 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

கவிப் பேரரசனே..கண்ணதாசனே..!
கூடல் பட்டியில் குழந்தையாய் பிறந்தாய்
பாடல் திறத்தால் பாரினை ஆண்டாய்
தேடல் நிறைந்த தெளிந்த அறிவால்
ஊடல் க�ொண்டே உறவினை அறிந்தாய்

எங்கும் இசைக்க எவரும் மகிழ


தங்கம் ப�ோலே தரமாய் வரிகளைத்
தரணிக் களித்தாய் தடமாய் பதிந்தே
அரணாய் நின்றே ஆறுதல் அளித்தாய்

தூக்கம் விழுங்கும் துக்க வீட்டில்


ஏக்கம் மிகுந்த ஏழையின் வீட்டில்
க�ொஞ்சிப் பேசும் காதல் நெஞ்சில்
அஞ்சி நடுங்கும் அறிவிலி நெஞ்சில்

இருமனம் ஒன்றாய் இணையும் வேளை


திருமண வீட்டில் தீந்தமிழ் வாழ்த்தாய்
மாளத் துடிக்கும் மானுடன் கூட
ஆளத் துடிக்கும் ஆளாய் மாறிட

உள்ளம் நினைத்ததை உள்ள படியே


கள்ளமின்றிக் ச�ொல்லிய கண்ணணின் தாசா
எட்டாய் இடையை எடுத்தே பாடியும்
பட்டாய் குழையும் பாட்டுத் தலைவா

கற்றது குறைவு காசினி உன்னிடம்


பெற்றதே அதிகம் பாமரன் கூடப்
படித்திடும் விதமாய் பதமாய் கவிதைகள்
வடித்து வகையாய் வந்தத் வாழ்க்கையே

அழகாய் கவிதைகள் அளித்து மகிழ்ந்தாய்


பழகும் திறத்தில் பாலை நிகர்த்தாய்
புலவர் பலரும் ப�ொருளில் திளைக்க
உலக�ோர் ப�ோற்றும் உன்னதப் ப�ொருளை

உன்கவி ச�ொல்ல உச்சம் க�ொண்டாய்


இன்றும் தவழ்ந்தே இல்லம் நுழைகிறாய்
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்

பாவலர். எம்.ஆர்.ஜெயந்தி
தூண்டும் வரிகளால் துயரினைத் துடைப்பாயே .

*பாவகை-நேரிசை ஆசிரியப்பா

43
43 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

வாழ்க்கை
வாழ்க்கை என்னும் வட்டம் கடக்கையில்
வாய்மை த�ோற்று ப�ொய்மை வென்றிடுமே
ஏழ்மை க�ொண்டோர் வாடி நின்றிட்டால்
ஏற்றம் வரும�ோ வாழ்வில் எந்நாளும்
தாழ்ப்பாள் இல்லா கேணி நடுவினிலே
தாவிக் குதிக்கும் தேரை தன்னுள்ளே
தாழ்வு மனமே ஓங்கி உயர்ந்திட்டு
தானாய் மாய்ந்து ஆவி அழிக்கின்ற

வீழ்ச்சி கண்டு புத்தி இழந்திட்டால்


வீணாய் ப�ோகும் சக்தி நல்லதையே
ஊழ்த்தல் உயர்வு எட்டும் த�ொலைவாகும்
ஊசல் தடுத்து ஊன்று க�ோலாகும்
சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றவரின்
சூரம் தன்னை பற்றி சென்றிடாது
சூழ்வோர் ஒன்றாய் அன்பாய் சேர்ந்திட்டு
சூதும் வாதும் குன்ற நலமாகும்

காழ்தான் ஆகும் காயே பின்னாளில்


கனிகள் நிறையத் தந்தே வலுவாக்கும்
ஆழ்ந்து நாமும் நாளும் சிந்தித்தால்
ஆயுள் முழுதும் நன்மை பெருகிடுமே
மூழ்கி எடுத்தல் நன்றே என்றெண்ணி
மூகம் க�ொண்டே நின்றால் பலனென்ன
வாழ்த்து பெற்றே வந்து முயற்சித்தால்
வாளும் கைக்கு எட்டும் தூரமாகும்

வீழ்ச்சி முற்றுப் புள்ளி ஆகிட்டால்


வீரம் என்ற ச�ொல்லும் அழிந்திடுமே
வீழ்வும் தாழ்வும் இங்கு இயல்புதானே
வீடல் முடிவு தந்தால் வாழ்வெதற்கு?
மூழ்கல் நமக்கு த�ோல்வி தந்திடுமே
மூத்தாள் வார்த்தை கேட்டால் வென்றிடலாம்
மூழ்த்தம் பார்த்தே எல்லாம் செய்திடவே
மூர்த்தி பெறலாம் நாமும் நானிலத்தில்

பாவலர்.தி.இராஜபிரபா

*பாவகை-எண்சீர் விருத்தம்

44
44 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

முருகன் சிறப்புகள்
இறையை யென்றும் இருகரங் கூப்பு
மறையை நாளும் மனத்தால் பாடவே .

கள்ள மின்றிக் கனிந்து ருகிட


உள்ள மெல்லாம் உவப்பவன் அவனே .

கருணை வடிவாய் கறந்த பாலாய்


உருகியே நெஞ்சில் உறைந்தவன் அவனே .

மணமாய் வீசும் மலராய் சிரிக்க


வணங்கிட நாளும் வரந்தரு பவனே .

காலை த�ோன்றும் கதிர வனாக


மாலை மயங்க மதிமுக மவனே .

அறுபடை வீட்டில் ஆறு முகமாய்


ஆறும் மருந்தாய் அவனியில் அவனே .

மந்திரப் ப�ொருளில் மாய�ோ னாயும்


சிந்தையி லுதிக்கச் சிறையிடு வ�ோனே .

நாடிய தேவர் நரனுக்கும் ஓமென


தேடிவரு மடியார்க் குதங்க மிகவே .

குமரக் கடவுள் குன்றில் நிறைய


அமரரு ளமர்ந்தே அருள்தரு வ�ோனே .

அறமும் தந்தே அருளும் இறைவன்


அருள்பு ரிந்திட அன்பனும் அவனே .

குறமகள் வள்ளிக் குறத்தியை மணந்த


குறுநகை யன்புக் க�ோவின் மகனே .

துயரில் தேவர் துன்பம் ப�ோக்கித்


மயக்கம் தீர்க்கும் மருந்தும் அவனே !
பாவலர்.ஜெயார்

*பாவகை-குறள் வெண் செந்துறை

45
45 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

காதல்
புத்தம் புன்னைப் பூவே
பூத்தாய் என்னைச் சேராய்
சத்தம் இல்லாக் கீதம்
சங்கம் தேடும் தென்றல்
முத்தம் ப�ோடும் மூங்கில்
முந்தி சாடும் சேலை
நித்தம் காதல் தேசம்
நித்தி ரைய�ோ மானே .

என்றன் எண்ணம் எல்லாம்


எங்கும் கண்டேன் உன்னை
உன்றன் உள்ளம் இங்கே
ஊஞ்சல் ஆடும் மங்கை
சென்ற பூவே சந்தம்
செம்மைப் பாடல் இஃதில்
தன்னைத் தஞ்சம் தந்தேன்
தாக்கம் எட்டும் தானே

அற்பக் காமம் அல்ல


அன்புக் காதல் மீனே
ச�ொற்பச் ச�ோலை உள்ளே
ச�ொந்த மேனி நல்லக்
கற்புக் க�ோயில் உண்டு
கன்னித் தாயின் பெண்டு
சிற்ப மாலை நீய�ோ
சின்னத் தேரும் நீயே

பாவலர்.பி.ச.க�ோபால்குமார்,இலஞ்சி

*பாவகை-எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

46
46 மரபு கவிதைப் பெட்டகம்
ஆனி-2020

செழுந்தமிழ்ச் செழுமை
தரணியில் உலவிடும் தனித்துவ ம�ொழியே
தரமாய் நீயும்
தங்கியே வளமாய்
மங்கிடாப் புகழாய்
சங்கப் பாக்கள்
தங்கமாய் மின்ன
காப்பியம் சுவைக்க
காவியம் இனிக்க
கன்னல் பாக்கள்
இன்பம் ஊட்ட
வள்ளுவர் ம�ொழியாய்
தள்ளிடா வழியாய்
நலமுரை நன்னூல்
கலங்கரை விளக்காய்
நல்வழி காட்ட
கல்வியிற் சிறந்த
கம்பரும் திருமால்
நம்புவி செழிக்க
தம்மை வருத்தி
இம்மை வாழ்வு
செழிக்க ஆக்கிய
அழியாப் புராணம்
ஆழ்வார் அடியார்
தாழ்ந்து பாட
அயல்மொழி நவில்வோர்
கயலாய் உன்னில்
மயங்கியே திறமது உரைக்க
உயருதே உந்தன் பெருமையும் புகழுமே !!
பாவலர். நளினா கணேசன்

*பாவகை-இணைக்குறள் ஆசிரியப்பா

47
47 மரபு கவிதைப் பெட்டகம்
த�ொடர்ந்து
மின்னிதழுக்கு
ஆதரவளியுங்கள்

நன்றியுடன்
-ஆசிரியர்

48

You might also like