You are on page 1of 2

2

ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

ஸ்ரீ பாரதி வேத வித்யா குருகுலம்


(2, சாந்தி நகர் மூன்றாவது தெரு, ஆதம்பாக்கம், சென்னை-600088)

ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே ச துஷ்டா


ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |
பவச் சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னாஸ் ஸூதூரே
விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்சசைல ||

(உன்னிடத்தில் கொண்டுள்ள பயத்தால் தன்னுருவத்தை மலைபோல் எடுத்துக் கொண்டு


இருந்து வந்த கிரௌஞ்ச அரக்கனை கொன்ற முருகா ! என் உடலுக்கு மிருகத்தாலோ,
பறவைகளாலோ, கொசு மற்றும் கிருமிகளாலோ ஏற்படும் நோய்கள் யாவும் உனது கூரிய
வேலால் சிதறுண்டு வெகு தொலைவில் விலகிச் சென்று அழியட்டும் )

(ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்)

எல்லாம் வல்ல இறைவன் அருளாலே உலக மக்கள் அனைவருக்கும் க்ஷேமம்


உண்டாக ப்ரார்த்திப்போமாக.. இன்று உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக்
கொண்டுள்ள கொரோனா எனும் தீவிர வைரஸ் சீக்கிரம் சிதறுண்டு அழியட்டும். இது நம்
அனைவருடைய ப்ரார்த்தனை. இந்த ப்ரார்த்தனையுடன் நாம் இறைவனை
இறைஞ்சுவோம்,, இதற்காக நாம் கூட்டாக சிரத்தையுடன் தியானங்கள், ஜபங்கள்,
பூஜைகள், நாம சங்கீ ர்த்தனைகள் செய்வோம். அவன் நிச்சயம் மனம் இறங்கி உலக
மக்களை காப்பான் என்பது உறுதி. நாதனை நம்பினால் நல்லதே நடக்கும்

மஹாபெரியவாள், காயத்திரி மந்திரத்தின் மஹிமையையும், சக்தியையும், எந்த


இக்கட்டிலும் அது நம்மை காக்கும் என்றும் உபதேசம் செய்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல. இக்கட்டிலிருந்த சிலருக்கு அவரின் இந்த உபதேசத்தினால், காயத்ரி
அம்பாள் அவர்களை காப்பாற்றி இருக்கிறாள். இதனை மனதில் கொண்டு, இந்த
கொரோனா வைரசின் கொடும் பிடியிலிருந்து உலக மக்களை சீக்கிரம்
காப்பாற்ற, ,மஹாபெரியவாளின் அறிவுரையாகவும், எடுத்துக்கொண்டு, ‘கோடி காயத்திரி
யக்ஞம்’ செய்வதாக தீர்மாணம் ஆகியிருக்கிறது.. இதன் விவரம் பின்வருமாறு :

இந்த வேள்வியில் கலந்துகொள்ள விரும்பும், உபநயனம் செய்விக்கப்பட்ட, 400


ரித்விக்குகள், பிலவ வருஷம், சித்திரை மாதம் 16-ந் தேதி, (29-4-2021) அனுஷ

நக்ஷத்திரம் கூடிய வியாழக் கிழமையிலிருந்து, 100 நாட்கள், அதாவது ஆடி மாதம்

21-ந்தேதி (6-8-2921) வெள்ளிக்கிழமை முடிய, தங்கள் தங்கள் கிருஹத்தில் தினமும்

குறைந்தபக்ஷம், 300 காயத்திரி மந்திரங்களாவது, சிரத்தையுடன் ஜெபிக்கவேண்டும்.


சந்தியாவந்தனம், மாத்தியான்னத்தில் ஜெபிக்கும் காயத்திரி மந்திர எண்ணிக்கை இதில்
அடங்காது. ஜெபிக்கும் மந்திரத்தின் எண்ணிக்கை, அட்டவணையில் குறித்துக்

கொள்ளவேண்டும். 100 நாட்கள் முடிந்தவுடன், அதாவது மொத்தமாக ஒரு

கோடிக்குமேல் காயத்திரி மந்திரம், ஜெபிக்கப்பட்டவுடன், கடைசி நாளான ஆடி 21-

ந்தேதி (6-8-2021) அவரவர் கிருஹத்திலேயே ‘காயத்ரி ஹோமம்’ செய்யவேண்டும்.

சமித்து, நெய் இவற்றுடன் 108 காயத்ரி மந்திரம் ஜெபித்து ஹோமம் செய்யவேண்டும்.

இவற்றுக்கான சங்கல்ப மந்திரங்கள், விதி முறைகள் பிறகு அனுப்பி வைக்கப்படும்..

கோடி காயத்திரி யஞ்ஞத்தில் கலந்து கொள்ள விதிகள் :

1. அன்பர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த யக்ஞத்தில் கலந்துகொள்ள வேண்டும்.


2. தினமும் மூன்று வேளைகளிலும் சந்தியாவந்தனம், மாத்யான்ஹிகம் செய்தல்
வேண்டும்.
3. தினமும் காலையில் ஸ்னானம் செய்து, இஷ்ட தெய்வத்திற்கு தங்களால் இயன்ற சிறு
பூஜை செய்து ஜெபத்தை ஆரம்பிக்கலாம்.

4. இந்த யக்ஞ காலத்தில் (100 நாட்களும்) தம் கிருஹத்தை தவிற வேறு எந்த

இடத்திலும் அன்னமோ, வேறு பலஹாரமோ உண்ணாமல் இருப்பது நலம்.


5. T.V யிலோ, வேறு உபகரணங்களிலோ, அல்லது தியேட்டரிலோ, செய்தி அறிக்கையை
தவிற வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் பார்க்காமல் இருப்பது உத்தமம். இது மனத்தை
ஒருமைப்படுத்தி, முழுவதுமாக ஜபத்தில் ஈடுபடுவதற்கு உதவும்..
6. உடல் நலக்குறைவினால், அல்லது தீட்டு, முதலிய வேறு காரணத்தினால் சில நாட்கள்
ஜெபம் செய்யமுடியாமல் போனால், வரும் நாட்களில் கூடுதல் எண்ணிக்கையை
ஜெபித்து ஈடு கட்டவேண்டும்
7. தவிர்க்கமுடியாத காரணத்தினால் ஜபத்தை தொடர முடியாமல் போனால், அதை
உடன் எங்களுக்கு தெரிவிக்கவும்
8.. ஒரு குடும்பத்தில் எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்
9. இந்த லோக க்ஷேமார்த்த காரியத்தில் சேர்ந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் தங்கள்,
பெயர், விலாசம். வயது, மொபைல் போன் நெம்பர், இவற்றை கீ ழ்கண்ட மொபைல்
போனுக்கு ‘WHATSAPP MESSAGE’ அல்லது ‘SMS’ அனுப்பவும்.

1. ப்ருஹ்மஸ்ரீ. கஜானன கனபாடிகள், 9445113583


2. ப்ருஹ்மஸ்ரீ பால விக்னேஷ் கனபாடிகள் 9094875759
3. ஸ்ரீ. கே.வி.ராமதாஸ் 9840355881
4. ஸ்ரீ. ஆர்.வெங்கட்ராமன், 9443495950
5. ஸ்ரீ. ஏ.பாலகிருஷ்னன், 9444516433 ……

You might also like