You are on page 1of 1

ஹம்ஸ யோகம் – 01

மூலம்: பண்டிச் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா


தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
*****************************************************************************

ஹம்ஸ யோகம் அல்லது ஸோஹம் சாதனா என்பது இந்திய ரிஷிகளின் மணிமகுடமாக கருதப்படும்
சாதனையாகும். இது புராண, இதிகாசங்களில் மிக உயர்வாக சொல்லப்படும் ஒரு இரகசிய
சாதனையாகும். ஒரு சாதகன தனது ஆன்ம உணர்வை பரப்பிரம்மம் அல்லது சிவத்துடன் ஒன்றச்
செய்யும் சாதனை இதுவாகும்.. இத்தகைய உயர்நத ் ஆன்மீக அனுபவத்தைத் தரும் அதேவேளை இந்தச்
சாதனை முறையானது இலகுவானதும் அனேக கடினமான பயிற்சிகள் இன்றியும் கட்டுப்பாடுகள்
இன்றியும் அனைவராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமான ஒரு உயர் சாதனையாகும். இது குருதேவர்
பண்டிட் ஸ்ரீ ராம்சர்மா ஆச்சார்யா அவர்களது சப்த பிரம்மம் – நாதப்பிரம்மம் என்ற எழுத்துத்தொகுதி 19
புத்தகத்தில் முழுமையான ஒரு அத்தியாயமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுரைத்தொடர்
மேற்குறித்த அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பாகும்.
:ஸோ” என்ற சப்தத்திலும் “ஹம்” என்ற சப்தத்திலும் தொடர்ச்சியாக கவனம் வைத்து தியானிப்பது
மூலம் ஒருவன் தனது உள்மூச்சு, வெளிமூச்சு இரண்டையும் ஒத்திசைய வைக்கிறான். இதனால்
பிரணாயாம சித்தி வாய்க்கிறது. ஹகாரம் (ஹ என்ற அட்சரம்) சிவத்தினது பிராண அலைவினது சப்த
ரூபமாகும். ஸகாரம் (ஸ என்ற அட்சரம்) சிவத்தினுடைய வெளிப்பட்ட சக்தியின் பிராண அலையின் சப்த
ரூபமாகும். வலது நாசித்துவாரத்தின் சுவாசத்தினால் ஈர்க்கப்படும் பிங்கலை – சூரிய சுவாசம்
ஹகாரத்தினால் விழிப்படையச் செய்யப்படுகிறது. இடது நாசித்துவாரத்தின் சுவாசத்தினால்
ஈர்க்கப்படும் இடகலை – சந்திர சுவாரசம் ஸகாரதினால் விழிப்படையச் செய்யப்படுகிறது. இந்த இரண்டு
நாசிச் சுவாசங்களும் ஹம்ஸ யோகத்தினால் சமப்படும்போது மிக உயர்நத ் பிரணாயாமம் நிகழ்கிறது.
இதனால் வாய்க்கும் தியான சித்தியில் சாதகன் நான் என்ற அகங்காரம் முற்றிலும் அகன்று தன்னை
பரம்பிரம்ம நிலைக்கு விரிவடையச் செய்து உயர் ஆன்மீக அனுபவம் அடைகிறான்.
ஸோஹம் சாதனை என்பது நாத யோகத்தினூடான ஒரு பிராண யோக சாதனையாகும் . இந்தத் தொடரில்
இந்த சாதனையின் தத்துவார்த்தம், ஸ்ரீ காயத்ரி மந்திரத்தின் அடிப்படையில் எப்படி அஜபா ஜெப
சாதனை நடைபெறுகிறது, குண்டலினி யோக சாதனையில் எப்படி தொடர்பு படுகிறது ஆகிய
அடிப்படைகள் விளக்கப்படும். பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா அவர்கள் மிக அரிய யோக
இரகசியங்களை தனது சாதனை மூலம் அனுபவமாக அறிந்த ஒரு சித்த புருஷராவார். அவரது
விளக்கங்கள் அறிவியலும், ஆன்மீக இரகசியங்களும், அனுபவ ஞானமும், எளிமையும் நிறைந்தவை.
எப்படி எமது நாளாந்த வாழ்ககை
் யில் இந்த சாதனையைச் செய்வது என்ற தெளிவான படிமுறைகளையும்
தருகிறார். இந்த அரிய யோகத்தின் உள்ளர்த்தங்களை நம்பகமாக அறிந்துகொள்வதற்கு குருதேவர்
பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா இந்தக் கட்டுரைத் தொடரில் யோக இரகசியங்களைப்
பகிர்ந்துகொள்கிறார்.

You might also like