You are on page 1of 1

ராம்பிரசாதி காளி மீதான கவிதைகள் - 01

{தாந்திரீக ஞானப்பாடல்கள்}
********************************************
அவள் வதனம் வழுவற்ற மதி
பேரின்பம் தரும் அம்ருத ஒழுக்கு
அவள் உடல் வசீகரணமான உடலற்ற
இறையழகின் பிரபாவம்
ஹே மன்னா, அதிர்ச்சியடைய வேண்டா
சிவமாகிய பிரம்மம் ஆதாரமாகி அவள் அடிகளில்
கிடக்க,
யாரிவள் இந்தப்போர்க்களத்தில்?
சந்திர வெள்ளொளி தரித்தவள்
அனைத்து கல்யாண குணம் கொண்டவள்
புன்சிரிப்பு தேனொழுகும் இதழ்
இந்தத்தோற்றம் மனிதனால் தாங்கமுடியாது!
நினைத்துப்பார்!
இவளே உலகை ஒளிர்விக்கிறாள்!
அவள் முக்கண்ணே சூரிய சந்திர அக்னியில் ஒளிரும் ஒளி!
அவள் இனிய இதயம் அனைத்திலும் மேலானது
அறம் நிறைந்தது!
யார் மகள் இவள்!
இந்தப்போர்களத்தில் எதைத் தேட வந்தாள்?
அவள் உடனிருப்போரைப் பார்!
காற்றிலசையும் மூங்கிலைப்போன்ற வளைந்த நகங்கள், முள்ளங்கிப் பற்கள்! குலைந்த கேசம்,
தூசிபடிந்த உடல்
என்னைப் பயமுறுத்துகிறது!
உன்னை அம்மா என்று அழைப்பவன் பாவத்தைக் மறக்கடிக்கவில்லை என்றால்
சியாமா, உமா உன்னை யார் தாயென்று அழைப்பார்கள்!
ராம்பிரசாத் ஸென் காளி கவிதை - புரிந்த அளவிற்குள் மொழிபெயர்ப்பு!

Translated by Sri Sakthi Sumanan

You might also like