You are on page 1of 64

சமர்ப்பணம்

நீல வானம் வெள்ளை மேகம்


எட்டு திசையும் உன் புகழ் போகும் !

கடந்துப் போன வாழ்க்கை பதிவுகளில்


உடைந்துப் போனது இதயம்

உடைந்துப் போன இதய இடுக்குகளில்


நிறைந்து வலிந்தது இதயம்....

மறக்க முடியாத ஞாபகத் திரை


இன்னும் நிழலாக இதய அரங்கத்தில்
மனதில் உதித்த அந்தச் சோகமெனும் பிறை
இன்னும் தேயாமல் வளர்பிறை அங்கத்தில்...

வலியின் மொழிகள் என் இதய வலிகள்


கண்ணர்ீ துளிகளாய் வடிக்கின்றேன் !
உனக்காக சில சமர்ப்பணத் துளிகள் !
மன்மதனின் மனத்துளிகள்

என் தமிழ் அன்பர்களுக்கு என் தமிழ் வணக்கம்,

மீ ண்டும் என் கவிதை பயணத்தில் ஓர் அடி வைக்கின்றேன். ஊன்வலி


கொண்டு அழுவதைவிட உள்ளத்தில் வலிக் கொண்டு அழும் மனிதர்களே
அதிகம். அந்த வரிசையில் உள்ளங் கனத்து, வலிகளில் சங்கமித்த என்
வாழ்க்கை நிகழ்வுகளின் புலம்பல்களை இந்த நூல்வழி
வெளிக்கொணர்ந்துள்ளேன். இதை ஒரு துன்பப் பகிர்ந்தளிப்பாக நினைந்து என்
அன்பர்களோடு பகிர்ந்துக் கொள்ள முன் வந்துள்ளேன். உறவு, சமுதாயம்,
கடவுள், காதல் மற்றும் பல பாத்திரங்களில் இந்த நூல் நிறைக்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் மனம் வலிகளில் மட்டும் கலந்து விடக்கூடாது எனும்
நோக்கத்தில் சில இன்பக் கவிதைகளையும் இதில் தொகுத்துள்ளேன்.

“குணம்நாடிக் குற்றமும் நாடி


அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்”

எனும் வள்ளுவர் கூற்றுக்கிணங்க வலிகளில் அதிகம் நிறைந்துள்ளதால்


இந்தப் படைப்புக்கு வலியின் மொழிகள் எனும் தலைப்பைத்
தேர்ந்தெடுத்துள்ளேன்.

இவ்வேளையில் என் பெற்றோர், சகோதரச் சகோதரிகள், நண்பர்கள்,


உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாகத் தமிழ்மொழியின் பால் எனக்குள்
ஒரு மிகுந்த ஆர்வத்தையும் பற்றையும் ஏற்படுத்திக் கொடுத்து என்
அனைத்துப் படைப்புகளுக்கும் உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்
திரு.வ.சந்திரன்
ீ அவர்களுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலில் இடம்பெற்றுள்ளக் கவிதைகள் உங்கள் அனைவரையும் கவரும்
என பெரிதும் நம்புகிறேன்.

நன்றி, வணக்கம்,
அன்புடன்,
மன்மதன் துரைசாமி
நன்றி

கவிதைகளை வாசித்த கணமே அதை உள்வாங்கி ஓவியங்களாய் வரைந்த


தம்பி அர்வின் பாண்டியன் அவர்களுக்கு என் நன்றியையும் பாராட்டுகளையும்
தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் கலைப்பயணம் மென்மேலும் தொடர்ந்து
பல சாதனைகளைப் படைக்குமென பெரிதும் நம்புகிறேன்.

‘ உன் கரங்களின் அசைவு


ஓவியங்களாய் மலரட்டும்
பல மனங்களின் பாராட்டில்
உன்னோடு கலை வளரட்டும்’

அன்புடன்,
மனமதன் துரைசாமி
வாழ்த்துரை

குன்றென நிமிர்ந்து நில்


குடையென பணிவு கொள்
மன்றினில் உயர்ந்து நில்
மனத்தினில் அமைதி கொள்
நன்றென நினைப்பதெல்லாம்
நடத்திட துணிவு கொள்

முயற்சி என்னும் விதையை


முழுமையாகத் தூவி விடு
முளைத்தால் மரமாகட்டும் – இல்லையேல்
மண்ணுக்கு உரமாகட்டும்

உமது கவிதை மொழிவது


மெய்யா ? பொய்யா ? – தர்க்கமல்ல
விளையப் போவது
நன்மையா ? தீமையா ?
ஆராய்ந்து உதிர்த்துவிடு

கடவுள் யார் பக்கம் ?


இதுவல்ல கேள்வி – நீ
கடவுள் பக்கமா ?
ஆம் என்றால்
இறைவன் கருணையானவன்
கலங்காதே
வெற்றி உன் நிழலாய்
பின் தொடர்கின்றது
வாழ்க உன் தமிழ்த் தொண்டு
வாழ்க நம் தமிழ்ச் சமுதாயம்

அன்புடன்,
ஆசிரியர் திரு.சந்திரன் வரமுத்து

கவிதை
1.
தமிழீ ழக் கதாநாயகன்
(இலங்கை இராணுவத்தின் மீ து முதல் முறையாக விடுதலை புலிகள்
விமானத் தாக்குதல் செய்தப் போது எழுதப்பட்டக் கவிதை)

தமிழீ ழக் கதாநாயகனே


தமிழர் வாழச்சதா உழைப்பவனே
தமிழரின் உறவுக்காரனே
மேதகு எங்கள் பிரபாகரனே

தமிழர்க்கு ஒரு தனிநாடு


இதுதானே உன் பெரும்பாடு
விரைந்தாயே மிகத் துணிவோடு
மறந்தாயே உன் தாய்வடு

துப்பாக்கிக் குண்டுகள்
தமிழரைத் தூளாக்கிச் சென்றன
அப்பாவி மக்களை
ஆங்காங்கே நிப்பாட்டிக் கொன்றனர்

இப்படியே விட்டால்
ஆகாது என்று
போர்கொடி நட்டாய்
தலைவனாய் நின்று

அமைதி போராட்டம் செய்தாய்


புழுதி மண்ணாய் நம்மை மிதித்தனர்
எதிரி தலையாவும் கொய்தாய்
புடவைப் பெண்ணாக கொஞ்சம் பயந்தனர்

உன் கம்பீரத்தை
உலகமே வியந்துப் பார்த்தது
உன் போர்வரத்தால்

இலங்கை அரசுக்கு வேர்த்தது
தரைப்படை
இன்று விமானப் படையானது
இஃது இலங்கை அரசுக்கு
அவமானச் சின்னமானது

எத்தனை தமிழரை
எதிரிகள் மாய்த்தனர்
அத்தனை எதிரியும்
உன்னெதிரிலே மாய்ந்தனர்

பாய்ந்துத் தாக்கிய
ராணுவப் படை
மீ ண்டும் எழுந்தது

எத்தனை வந்ததுத்
தடையாக
அத்தனையும் மாற்றினாயே
தமிழர் காக்கும் குடையாக

தலைவனாக நீர் உள்ளவரை


தமிழீ ழம் வெகு தொலைவிலில்லை
தாங்கும் கரமாய் நீர் உள்ளவரை
வங்கும்
ீ எங்கள் மார்பில் வலியில்லை

உன் காந்த விழிகளில்


எதிரியை வழ்த்தினாய்

உன் காந்தி விழிகளில்
புலிகளை வாழ்த்தினாய்

சத்தியமாய் சொல்கிறேன்
நிச்சயம் மலரும் தமிழீ ழம்
உன் இலட்சியப் பாதையில்
நிரந்தரமாய் வாழும் தமிழினம்
2.
தோட்டம் சொல்லும் நட்பு

முகிலா தேவா தர்மா


நம் தோட்டப்புறம்போல் ஒரு சொர்க்கம் வருமா ?

பகலா இரவா எதுவோ


நம் பழகிய வேளைப்போல் ஒரு பருவம் வருமா ?

ஒளியோ வலியோ
ஒன்றாய் இணைந்திருந்தோம்

ஒரு தேவைதை பின்னே


ஒருசேர அலைந்திருந்தோம்

அடித்துக் கொண்டதுண்டு
அணைத்திருந்ததே அதிகம்
இடித்துக் கொண்டதுண்டு
இணைந்திருந்ததே அதிகம்

அம்பார் தெனாங் தோட்டம்


இது நேசம் வளர்த்திட வெள்ளையன் வகுத்தத் திட்டம்
அடித்துச் சொல்கிறேன்
அவன் மீ ண்டும் வந்தால், எங்களுக்கே தருவான் நட்பில் சிறந்ததோர்
பட்டம் !
3.
வைரக் காதல்

பொன்மாலைப் பொழுது
வைரமுத்தே !
இதுதான் உங்கள் முதல் பாடலின் முதல் வரி !

என்னைப் பொறுத்தவரை
அஃது உங்கள்
உயிர் காதலின் முகவரி

பொன்மணி காதலியின் அழகு பெயரின்


முன்நின்ற இரு எழுத்தே
பொன் மாலைப் பொழுதானது
உங்கள் மெய்க்காதல் அம்பலமானது!
4.
மனைவியின் மரணம்

நான் இறந்தால்
நீ விதவை
நீ இறந்தால்
நான் வெறும்பை

காட்டுக்குப் போகிறாள் என் இராணி


வெறும் காற்றடைத்த பையானது என் மேனி

வட்டுக்கு
ீ இனி யாரடித் தலைவி
என் விரலுக்கு இனி யாரடி துணைவி

விருட்சம் விழுந்தது மண்ணோடு


நிழல் இனி கிடையாது
வட்டுக்குள்
ீ நுழைந்த கவலைக்குடம்
இனி விழுந்தாலும் உடையாது

கண்ணரில்
ீ பாலமிடுகிறேன்
உன் கல்லறை வந்துச் சேர
நில்லடி நில்லடி வருகிறேன்
போய்விடுவோம் நாம் ஒரு சேர !
5.
முதியோர் இல்லங்கள்

தனக்கும் பசி
ஆனாலும் உனக்கு ஊட்டினார்
தணியாத வறுமை
ஆனாலும் சீராட்டினார்

கணக்கில் அடங்கா
வலியோடு வாடினார்
ஆனாலும் கணக்காய்
உன் வசதிகளைத் தேடினார்

உனக்காக உழைத்து
தோல் மட்டும் மிஞ்சியது
உன் தாயின் உழைப்பை
பால் காடும் பாடியது

உணர்ச்சிகள் கொண்ட
உத்தமப் பிள்ளைகளே
உணராமல் போன ீரே
உயர்ந்தது முதியோர் இல்லங்களே !
6.
ஓட்டு

அரிசி அரிசி என்றதும்


வரிசைக் கட்டி ஓடினர் நம் மக்கள்

பின்னே, அவதி அவதி என்றால்


வருமோ அந்த அரசியல் ஈக்கள்

உங்கள் கையில் உள்ளன


மாலை தொடுக்கும் பூக்கள்

இன்பச் சடங்கா, இறுதிச் சடங்கா


முடிவு செய்வது உங்கள் கைகள் !
7.
மொழிகள்

தோள்களில் சாய்ந்திடு
என் தோழமை இராணியே
தோற்றனர் பலப்பேர்
நீயே என் தோழமை ஞானியே

பால்நிலா வானிலே
பழகிட மேகங்கள்
பாசநிலா உன்னாலே
பறந்தது என் சோகங்கள்

வலித்திடும் பொழுதிலே
மொழித்திடும் உன் வார்த்தைகள்
பளிச்சென்று சொல்லுவேன்
உன்பின்னே பிறவரிசைகள்

நினைக்காத நொடிகள் இல்லை


இது நிஜமான நட்பின் எல்லை
உனக்கான நொடிகள் எல்லாம்
நான் வரம் வாங்கிய இன்பத்தின் எல்லை

மொழிகளே !
மொழித்துக் கொண்டே இருக்கின்றேன் உன் திருநாமம்
நாத்திகன் நான் ஆனாலும்
உன் பெயரே நான் உச்சரிக்கும் குருநாமம்.
8.
உலகம் அழியுமா !

மாயன் சொல்லாமல் சொன்னதாம்


உலகின் அழிவின் நாளை
மறுபடியும் மெல்லத் திறக்குமாம்
பைபிள் கூறிய உயிர் பேழை

எனக்கென்ன பயம்
பயந்தால் அவன் பெருங்கோழை
கணக்கென்று இருந்தால்
முடிப்பது அவன் வேலை

அழிந்தால் அழியட்டும்
நாம் ஒன்றாக போய்விடுவோம்
விடிந்தால் ஒளிவசும்

நாம் மறுபடியும் வேர்விடுவோம்

தனித்தனியான மரணங்கள்
நம்மை அணுஅணுவாக கொன்றுவிடும்
தரணியே அழியுமென்றால்
நாம் அழும்வேலை நின்றுவிடும்

அழியுமா ?
அஃது ஆண்டவனின் தீர்ப்பு
அழிந்தால்,
அடுத்த உலகின் திறப்பு
9.
காசேதான் உலகமடா

காசுக்காக நான் அலைந்தது


கடவுளுக்கு மட்டும் தெரியும்
கடவுளுக்காக நான் அலைந்தது
என் கண்ண ீர் மட்டும் அறியும்

கடவுளின் பிடியில்
உலகம் சுழன்றது
காசுக்களின் பிடியில்
மனிதம் சுழன்றது

கடவுள் கடவுளாக மட்டும்


வேலைச் செய்கிறார்
காசு கடவுளுக்கு நிகராக
வேலை செய்கிறது.

காசேதான் உலகமடா
இது கடவுளுக்கும் தெரியுமடா !
10.

திருந்தினேன்

உன் இதயப் போர்வையில்


ஒழிந்துக் கொள்ளும் குழந்தையாய்

உன் இதய மலரினில்


விழுந்து ஒழுகும் தேன்துளியாய்

மீ ண்டும் வருவேன்
அந்தப் பயணங்கள் தேடி

மீ ண்டும் வருவேன்
அந்தப் பாசங்கள் தேடி

விடிந்தப் பகலினில் நான் இருந்தால்


முடிந்தவரை முயற்சிப்பேன்
உன் இதயம் சேர

விடியாவிட்டால் ?

காதல் மகளே !

உன் உணர்வில் கலந்திடுவேன்,


கறைப்படியாத உன் இதயக் கருவோடு
மீ ண்டும் நான் பிறந்திடுவேன் !
11.
எங்கள் கண்மணிகளை விட்டுவிடு

பள்ளிக் கூடங்களில்
மாணவிகள் களவு
படுக்கையறையினில்
மனைவிகள் களவு

அரக்கன் வேடங்களில்
சில மனிதக் குரங்கு
அவன் ஆசை அடங்கிட
இவர்களே விருந்து

போதுமடா சாமி
பிளந்து விடும் போல் இந்தப் பூமி
நான் போற்றுகின்ற சாமி
அவர்களுக்கு நல்லப் புத்தி காமி!
12.
ஒரு காதலியின் கர்வம்

நான் அழும்போது நீயும் அழு


நான் விழும்போது நீயும் விழு
நான் தொழும்போது நீயும் தொழு

காரணம் நான் உன்னையே


படித்திடும் புத்தகப் புழு
கனம்நொடிதோறும் உன்னையே
நினைத்திடும் எண்ணங்களின் குழு !

இஃது ஒரு காதலியின் கர்வம்தான்


ஆனாலும் இஃதும் ஒரு காதல்தான் !
13.
அய்யகோ பாவம்

அண்டை வட்டோடு
ீ சண்டை
நாய்க்குட்டியோடு முத்தப் பரிமாற்றம்
அப்பா அம்மாவோடு சண்டை
நவன
ீ முகப்புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்

இப்போதெல்லாம்
அருகில் உள்ளவரோடு மனிதன் பேசுவதில்லை

அவன் அறிவியல் உலகத்தில்


மனித உறவுக்கு இடமில்லை

அதனால்தான் பூமி வேண்டாமென்று


செவ்வாய்த் தேடுகிறான்
அங்கிருந்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும்
செய்தி அனுப்ப ஓடுகிறான்

அய்யகோ பாவம் !
இது யார்விட்ட சாபம் !
14.

வேண்டும்

நூறு கலப்புத் திருமணம் வேண்டும்


சாதிகள் ஒழிக்க
பெரும் கவிதைத் திருவிழா வேண்டும்
பலக்கவிஞர்கள் விழிக்க

ஒரு நெருப்பு குவியல் வேண்டும்


அநீதிகளை அழிக்க
சிறு தீக்குச்சி வேண்டும்
நீதிச்சுடர் ஒளிக்க

இந்த ஆசைகளைச் சொல்ல


என் கவிதை வரிகள் துடிக்க
எந்தன் வாசல் வா இறைவா
என் கனவுகளைப் படிக்க !
15.

ஒரு தேவதை அழுகிறாள்

பால் நிலவு வண்ணம்


பழுத்தக் கன்னம்
பளிங்கு மேனி
பசுமையின் மேனி
பார்வைக்கு அம்மன்
பார்வைகள் விண்மீ ன்

பாவம் என்னவென்றால்
அவள் கணவன் இழந்தப் பெண்
பலக்கனவுகள் இழந்தக் கைம்பெண்

உடனே அமலுக்கு வந்தது


நம் கலாச்சாரச் சட்டம்
உறுதிமொழி செய்துக் கொண்டு
அவள் வாங்கி கொண்டாள் விதவை எனும் பட்டம் !
16.
காதல் செய்வோமா ?

இதழும் இதழும் முத்தம் கொண்டு


ஓர் ஈரக் காதல் செய்வோமா ?
இமையும் இமையும் மோதிக் கொண்டு
ஓர் இன்பக் காதல் செய்வோமா ?

இன்பம் துன்பம் பகிர்ந்துக் கொண்டு


ஓர் இதயக் காதல் செய்வோமா ?
இரவும் பகலும் இணைந்துக் கொண்டு
ஓர் இனிமை காதல் செய்வோமா ?

இதுவும் அதுவும் வேண்டுமென்று


ஒரு தொல்லைக் காதல் செய்வோமா ?
இமைகள் மூடி விளையாடும்
சிறு பிள்ளைக் காதல் செய்வோமா ?

இதுவே இதுவே உலமெனும்


ஒரு கொள்ளைக் காதல் செய்வோமா ?
இறைவன் கூட உயர்ந்துப் பார்க்க
ஒரு நல்ல காதல் செய்வோமா ?
17.
இராமனோடு சீதை சேரட்டும்

கண்கள் என்றால் கண்ண ீர் விடும்


அது காதலுக்காக மட்டும் தொண்ணூறு சதவிகிதம் விழும்

காதல் என்றால் இன்பம் துன்பம் வரும்


அது துன்பத்தில் மட்டும் தொண்ணூறு சதவிகிதம் வாழும்

ஆண்களில் பத்துச் சதவிகிதம் இராமன்


பெண்களில் பத்துச் சதவிகிதம் சீ தை

பத்துச் சதவிகிதம் இராமனும் சீதையும்


தொண்ணூறு சதவிகிதப் பேய்களின் கையில்

இறைவா !

பேய்களோடு பேய்கள் சேரட்டும்


இராமனோடு சீதை சேரட்டும் !
18.

காதலன்

பெண்களைத் துரத்திச் செல்லும்


இதயத் திருடன்
கண்களை வைத்திருந்தாலும்
அவன் இன்னும் குருடன்
19.

உலகநாயகன்

கலைஞானியே !
யார் உன்னைச் சீண்டியது
கலைத் தீப ஒளியில்

விஷ்வரூபம்

விளங்காத மனிதர்களுக்கு ஏதோ பாவம்


விஷயம் புரிந்தோர்க்கே அது விஷ்வரூபம்

எலும்புத் துண்டை வாங்கிக் கொண்டு


சில நாய்க்குட்டிகள் குரைக்குது
எலும்பில் கூட சினிமா கண்ட
உன் கலைத்தேகம் துடிக்குது

கமல் என்ற கடலுக்குள்


கலைநீர் மட்டும் ஓடுது
கர்வம் கொண்ட காட்டு மனிதம்
அதில் உப்புக் கொட்டப் பார்க்குது

சிரித்துக் கொண்டே இருப்பார் என்று


எரித்து விட எண்ணமோ
சிரிப்பில் கொஞ்சம் நிறுத்தம் கொண்டால்
எஞ்சுவதிங்கே என்னவோ ?

நிஜம் காட்டினால்
உடனே கசக்குது
நகைச்சுவை என்னவென்றால்
காளையும் பால் கறக்குது
20.
சாமிக்கு ஒரு விண்ணப்பம்

கதறி அழுகின்றது பூமி


காற்றுக்கும் மூச்சடைத்தது சாமி
கயவரின் கையில் பூமி
கண்டுங்காணாமல் போனது சாமி

எந்தன் சாமிக்கு ஒரு விண்ணப்பம் !

மனிதநேயம் நலிந்த
கலியுக வாழ்வில்
மணிக்கணக்காய் பாடுபடும்

என் இதயச் செழிப்பினைக் காக்காவிட்டாலும்


பரவாயில்லை,

உன் கோவிலில் கழற்றி வைக்கும்


என் இரண்டு செருப்பினையாவது காத்திடு
21.

நினைவுகள்

அழிந்துக் கொண்டே போகுது


நம் அடையாள சின்னங்கள்
அறிந்தும் இன்னும் தூங்குது
நம் அறிவான எண்ணங்கள்

பாட்டிச் சொன்ன கதைகளின் கதகதப்பும்


பக்கத்து வட்டு
ீ சமையலின் பகிர்ந்தளிப்பும்
கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த கும்மாளமும்
நேற்றோடே முடிந்ததே
அது சேற்றோடே விழுந்ததே !
22

வறுமை

வறுமை என்னை வாட்டுதோ ?


இல்லை
மனவலிமை தன்னைக் கூட்டுதோ ?

பொறுமை என்னுள் நாட்டுதோ ?


என்னைப்
பொம்மையாக்கிக் காட்டுதோ ?

வருவேன் வருவேன்

வறுமையே !

தருவேன் உனக்கொரு

வறுமையை !

பொறுமை பொறுமை !
வறுமையை !

போக்கிடுவேன் உன்
கொடுமையை !
23.
அன்பான எச்சரிக்கை

திருடி வைத்தக் காசெல்லாம்


தூக்கி எறிந்திடு நாட்டிலே
துக்கமென்ன துயரமென்ன
இனி எழுதமாட்டோம் எங்கள் ஏட்டிலே

அரிசி மூட்டை
எறிந்து விட்டு
நீ அரசக் கோட்டை
அடைந்தவன்

ஐந்து வருடம்
போதுமய்யா
நாங்கள் உன் ஆட்சி குறிக்கும்
ஆண்டவன்

மிரட்டவில்லை உலுக்கவில்லை
முழு உரிமை தன்னைக் கேட்கின்றோம்
குறட்டைச் சத்தம் ஓயுமுன்னே
முழு நிலவைக் காட்டக் கேட்கின்றோம்

மீ ண்டும் இறங்கி வருகின்றோம்


உன்னை தெய்வமென்றே அருள்கின்றோம்
ஓட்டுப் போட்ட மக்களுக்கு
உன் நேசம் காட்டு என்கின்றோம் !
24.

துரோகம்

ஆதி மனிதன்
மூட்டைத் தூக்கினான்
இன்று பாதி மனிதன்
முதுகில் குத்தினான்

அன்பன் என்று
நெருங்கப் பழகினான்
அவன் அரக்கனென்று
நேற்றுக் காட்டினான்

முத்தம் இடும் உதடெல்லாம்


காதல் பேசும் உதடல்ல
நித்தம் பழகும் உறவெல்லாம்
நேர்த்தியான உறவல்ல

மீ சை முளைத்தவன் எல்லாம்
பாரதியாக முடியாது
நேசம் வளர்ப்பதெல்லாம்
பாசமாக முடியாது

பாசம் சிலநேரம்
பாம்பாக மாறுது
பாவம் அது பலநேரம்
படைத்தவையே கொத்துது !
25.

கருப்புத் தேவதை

காதலி பெயரும்
கவிதைதான்

அவள் கருப்பாய் இருந்தாலும்


தேவதைதான்
26.

முட்டாளாய் ஒதுக்கிடுவோம்

இனித் தோழமை மட்டும் தேடலாம்


ஏனெனில் நாளைய உலகம் நிஜமில்லை
பனி உயிரென்றால் எமன் சூரியனாய் தோன்றலாம்
எனவே உயிர் அதுவும் நிலையில்லை

மண் தின்னும் உடலிது


ஏன் இன்னும் பிரிவுகள்
கண் சிமிட்டும் நேரத்தில்
விண் சேரும் ஆவிகள்

சாதிகளாய் பிரிந்தோம்
கல்லறை மட்டும் ஒரே வட்டில்

சாதி மனிதன் இறந்த பின்பு
சாதியின் பெயரில்லை அவன் கல்லறைக் கூட்டில்

மனிதா !
இனிச் சாதிகளை ஒழிப்போம்
முடியாது என்பவனை
முட்டாளாய் ஒதுக்கிடுவோம்.
27.

ஒரு விளக்காவது கொடு

பாரதியே !
எனக்கொரு வாழ்வு கொடு
பாரதமே என்னைப் போற்றும் நாள் வர
வாழ்த்துக் கொடு

படுத்துறங்கும் என் பாட்டுக்குத்


தீர்வுக் கொடு
அடுத்துவரும் என் சந்ததிகள் அதைப் படித்திட
வாய்ப்புக் கொடு

உன் வம்சம் என்பதலால்தான்


நானும் எழுதுகின்றேன்
என் அம்சம் அதை உலகறிய
இன்றே விடிவுக் கொடு

விடிவில்லாவிட்டாலும் பரவாயில்லை

ஒரு விளக்காவதுக் கொடு !


28.

நாங்கள் தமிழர்கள்

இராசே நீ நலம் வாழ்க


என் தமிழனைக் கொன்றாலும்
நீ நலம் வாழ்க

இதுதான் எங்கள் தமிழரின் பண்பாடு


உனக்கென்னத் தெரியும் நீ பகுத்தறிவில்லா பண்ணைமாடு

இராசே நீ சுகம் காண்க


என் தமிழனைக் கொன்றாலும்
நீ சுகம் காண்க

இதுதான் எங்கள் தமிழரின் கோட்பாடு


உனக்கென்னத் தெரியும் நீ பகுத்தறிவில்லா கொட்டகை ஆடு !

இராசே உன் நிலம் வாழ்க


என் தமிழனைக் கொன்றாலும்
நீ நீடூழி வாழ்க

உன்னோடு எனக்கென்ன முரண்பாடு


பாவம் நீ !
உணர்ச்சிகள் அற்ற வெறுங்கூடு !
29.

காதல்

இதயமும் இதயமும்
தழுவிக் கொள்ளும் இன்ப நாடகம்
இன்பமும் துன்பமும்
ஒளியேறும் உணர்ச்சி ஊடகம் !
30.

அம்மா

நாத்திகனும் வணங்கும்
உயிர் தெய்வம்
நேர்த்திக்கடன் கேளாத
உயர்ந்தத் தெய்வம்
31.

அப்பா

உனக்காக உழைத்திடும்
இரண்டுகால் இயந்திரம்
உன்தேடல் அனைத்தையும்
இயக்கிடும் இணையத்தளம் !
32.

கடவுள்

ஆத்திகன் பார்வையில்
அவர் நம்பிக்கை
நாத்திகன் பார்வையில்
அவர் அன்பின் கை !
33.

ஏழ்மை

உழைக்காத மனிதரின்
தாரக மந்திரம்
பிறர் உழைப்பைத் திருடிடும்
தைரியத் தந்திரம்
34.

உழைப்பு

உழைத்தால்
ஆண்டியும் அரசனாகலாம்
ரஜினிபோல்
நாடாளும் நடிகராகலாம்
35.

எழுந்திடு

இழுத்து இழுத்து நடந்தால்


மணலில் உன் பாதங்கள் பதியாது
இமைகள் மூடிக் கிடந்தால்
கனவில் கூட சாதகங்கள் கிடையாது !
36.

கலியுகம்

சிலுவைகள் இயேசுவைத்
தேடும் காலம்
தொழுகைகள் இறைவனைத்
தேடும் காலம்

அழுகைகள் அன்பைத்
தேடும் காலம்
விழுதுகள் விருட்சம்
தேடும் காலம்

இன்று
மனிதம் தின்று மனிதன் வாழ்கிறான்.
இதை
இறைவன் நின்று இனிதே காண்கிறான்

மனிதம் வென்று இறையருள்


தோற்றதா ?
இந்த இனிய உலகம் இருளினில்
தொலைந்ததா ?
37.

நீ அம்மா நான் பிள்ளை !

நீ மரம் நான் பழம்


சுமைகள் உனக்கு சுவைகள் எனக்கு

நீ வானம் நான் வண்ணம்


இடிகள் உனக்கு இமைகள் எனக்கு

நீ பசு நான் பால்


பருத்தி உனக்கு பசுமை எனக்கு

நீ அலை நான் வலை


நுரைகள் உனக்கு மீ ன்கள் எனக்கு

நீ சமையல் நான் சாதம்


விறகு உனக்கு விருந்து எனக்கு

நீ கடவுள் நான் மனிதன்


படையல் உனக்கு பந்தி எனக்கு
38.
ஆயிரம் ஒன்றானால்

ஆயிரம் இறைவன்
ஒரே வானம்

ஆயிரம் மதம்
ஒரே மேகம்

ஆயிரம் சாதி
ஒரே ஜோதி

ஆயிரம் உறவு
ஒரே நிலவு

ஆயிரங்கள் ஒன்றானால்
மனிதமும் ஒன்றாகும்
இந்த மண்பூமி நன்றாகும்.
39.

ஒரு சாதி கதை

ஒரு காதல் கருவறுக்கப்பட்டது


ஓர் அப்பா அம்மாவின் சாதி திமிரில்

இரு பிள்ளைகள் அழுதனர்


அழிவில்லா கண்ண ீரில் !

ஓர் அப்பா அம்மாவின் உயிர் காக்கப்பட்டது


சாதி மாறிய குருதி துளியில்

இங்கு பிள்ளைகள் அழுதனர்


ஆனந்தக் கண்ண ீரில் !
40.

நிம்மதி

பச்சை குழந்தை ஒன்று


ஏதும் கேளாமல் யாரை நோக்காமல்
பாதை தனியே பயணம் நன்று

இச்சை ஏதும் இல்லா


வித்தை பயணம் இது
அச்சம் நாணமில்லா அழகுக்குட்டிக் கன்று

பிச்சை வாங்கிக் கொள்வோம்


இவன் புன்னகை உலகைக் கொஞ்சம்
கூச்சம் கூச்சல் இல்லா உலகில் தனியே நின்று

மச்சம் இந்த வாழ்க்கை


மிச்சம் இல்லா கண்ண ீர்
துச்சமாக இழந்தோம் துளி ஆடிய அன்று !
41.

தாய் தோழி

இங்கு நிழலாடுவது
ஒரு நட்பின் பிம்பம்
இது மட்டும் நிலையென்றால்
அதுவே எனதின்பம்

பெளர்ணமி அம்புலியின்
பரிசுத்த வெண்மை
பழகிய நேசத்தில்
யாம் கண்ட உடைமை

கதிரவத் துளிகள்
நிலவில் ஒழுகும்
அது ஒழுகிடும் நிலையே
நிலவது ஒளிரும்

தாய்மையின் துகளது
எங்கள் நேசத்தின் அலங்காரம்
வாய்மையே இங்கு நிலை
இது நேசத்தின் அவதாரம்

என் வரம் எதுவென்றால்


மொழிகள் என மொழிப்பேன்
தாய்தோழி இவளுக்காய்
என் தின ஜென்மம் விழிப்பேன்
42.
நீதான் பிரமன்

மரிக்கும் உடல்
மனமெனும் கடல்
இந்த இருப்பிள்ளை விளையாட்டில்
மனிதம் எனும் ஆடல்

ஆடியவர் எல்லாம் மண் பூமியில்


அறம்படைத்தோர் சிலர் அவதாரச் சாமியில்
கூடியவர் எல்லாம் பிரிவது நியதி
குழப்பங்கள் தீர்ந்தால் நிலைப்பெறும் அமைதி

உனக்கான வாழ்க்கை
அதில் நீதான் பிரமன்
அதைப் படைப்பது உன்னுரிமை
பயந்தால் அது செம்மண்

சிரித்திடு கொஞ்சிடு
விளையாடு
மூச்சு காற்றுப் போனதும்
விடை கொடு !
43.
முதல் முறையாக எனக்காக

அட மன்மதா !
அழகே உன் மாதா

அடுத்தொரு உண்மை
அம்புலி உன் பிதா !

மனதிற்கும்
உன் கவிமாது

தனி மனிதன்
உன் அடையாளம்

கனி மனமோ
உன் அலங்காரம்

மொழிப் பற்று உனதுயிர்


பற்றும் மொழி உன்பெயர்

கலைப் படைக்கும்
கவிஞனே !
கடவுள் வாழ்த்தட்டும்
இந்த இளைஞனை !
44.
மனசாட்சி

அவரவர் மனசாட்சியில்
தோற்றுப் போகும் அவரவர் யோக்கியங்கள்

அவரவர் மனசாட்சியில்
தோற்றுப் போகும் அவரவர் பரிசுத்தங்கள்

அவரவர் மனசாட்சியில்
தோற்றுப் போகும் அவரவர் இராமன் சீதை கதைகள்

அவரவர் மனசாட்சியில்
தோற்றுப் போகும் அவரவர் சாமி பூஜைகள்

யோக்கியம், பரிசுத்தம், இராமன் சீதை, சாமிபூஜைகள்,


இவையெல்லாம் நம் மனசாட்சிகள் !
45.
காலமும் எனைக் குழந்தை செய்

எனக்கென்ன கவலை
நான் மழலை ஜென்மம்
உறக்கத்தில் கூட
என் மனதில் இன்பம்

கடன் இல்லை காதல் இல்லை


கடுகளவும் என்னுள் கவலையில்லை
மடைத் திறக்கும் அவைகள் போல
தடையென்பது என் இன்பத்திற்கில்லை

கடவுள் செல்லம் நான்


கனிப்போல் வெல்லம் நான்
கவிப்போல் இனிமை நான்
கலையான பொம்மை நான்

மழலை என் மொழிகள்


மயக்கும் மது துளிகள்
கவலை எனும் வரிகள்
காண முடியா கவிகள்

இறைவா !
காலமும் எனைக் குழந்தை செய்
என் மழலையில் நிதம் கவிதை கொய் !
46.

இரவி

தொலைந்துப் போன எங்கள் தீபாவளி


துரத்தி வரும் இதயத் தீராவலி
கலைந்துப் போன கனவு பின்பம்
மொழிக்க முடியாத மெளன விரதம்

விளைந்தப் பயிர் இறந்த துன்பம்


விடியல் திருடிய இருளின் இன்பம்
வாழ்ந்த நாட்கள் குறுகிய கணிதம்
வரலாற்று பதிவில் கருகிய புனிதம்

வழ்ந்த
ீ நொடிகள்
இரணத்தின் உச்சம்
வடு
ீ முழுக்க
உன் இரத்தத்தின் மிச்சம்

கடவுள் தேடினேன் அப்போது


கதவுகள் மூடிக் கொண்டன
காட்சித் தர வரவில்லை
கடவுள் ஒன்று உண்டென

கதறி அழுதேன் கண்ண ீர் மொழியில்


காட்சிக் குருடு கடவுள் விழியில்
கடைசி மூச்சைக் கையில் பிடித்து
கவலை வேண்டாம் என்று சொன்னாய்
கருத்தைக் கேட்டு மெளனம் காத்தேன்
காட்சி விலகி நீ எங்குப் போனாய் ?
47.
காலம் மாறியது

அந்தப் பறவைகள் கூட்டுக்குள்


பறவைகள் இல்லை
எந்தன் பாவைகள் மேனியில்
பட்டுப்புடவைகள் இல்லை

இந்த இரவு வேளையில்


உறக்கமும் இல்லை
பந்தப் பாசத்தின் பரிதவிப்பில்
மனிதனுக்கு இரக்கமும் இல்லை

பறவைகளும் புடவைகளும்
காணாத இடத்தில்
உறக்கமும் இரக்கமும்
கைக்கெட்டா இமயத்தில்

காலம் மாறியது
காட்சிகளும் மாறியது
கலையும் கலாச்சாரமும்
காகிதமாகி நீரில் ஊறியது !
48.

தேவதை

முழு நிலவின் வெள்ளை வெளிச்சம்


முகமாக,
புது மலரின் மென்மை குணம்
மனமாக,
விழுதுகளின் சீர் நீளம்
கூந்தலாக,
விண்மீ ன்களின் மினுமினுப்பு
கண்களாக,
பாலாடையின் பளபளப்பு
கன்னமாக,
நீரோடையின் சிலுசிலுப்பு
இதழ்களாக
இப்படியோர் தேவதை
என் இதயமாக
இன்பம் வளர்ந்துவிடும்
இமயமாக
49.

கருவிழியும் கருவறைதான்

சாய்ந்தாடுவது அம்மாவின் மடியில்


பாய்ந்தாடுவது அப்பாவின் பிடியில்

பெண் பிள்ளைக்குத் தோழனாக


ஆண் பிள்ளைக்கு வரனாக

கண்கொண்டு காக்கும்
இவர் கருவிழியும் கருவறைதான்

இவர் தோள்களில் ஆடுகையில்தான்


வானம் வசப்பட்டது
இவர் சொல்வழி போகையில்தான்
ஞானம் வசப்பட்டது.

அப்பா !
இவர் அம்மாவின் அறிவிப்பு
நம் ஆன்மாவின் உயிர்ப்பிப்பு

அம்மா அம்மாதான் !
அப்பா அப்பாதான்!

ஓர் உறவு
கருவில் தொடங்கி கல்லறை வரை
ஓர் உறவு
அணுவில் தொடங்கி அஸ்திவரை !
50.

தன்னிலை

எனதன்பாய் நான்
எனதுயிராய் நான்

உறவென்பது தன்னிலை அல்ல


படர்க்கை,
உன்னில் மட்டும் தன்னிலை
இது இயற்கை

நமக்காக கணக்காக துடிப்பது


நம் விழி மட்டுமே
நலமிழந்து நன்மை அறி
உனதறிவுக் கெட்டுமே !
51.

அப்துல் கலாம்

கனவு காணச் சொன்ன ீரே


நாங்கள் கனவு காணும் முன்னமே
கரையச் செய்தீர் கண்ண ீரை !

கவிதை நூறு சொன்ன ீரே


நாங்கள் சந்தம் தேடும் முன்னமே
காற்றில் கலந்தீர் உம்முயிரை !

வியக்க விந்தை செய்த விஞ்ஞானியே


சிறார்களுக்கெல்லாம் தந்தையான மெய்ஞானியே

அக்னிச் சிறகுகள் உதிர்ந்தன இன்று


அநியாயம் செய்தது இவரிதயம் நின்று
பட்டினி கிடக்குமே பாலகர் அறிவு
நீர் அன்போடும் அறிவோடும் பழகிய உறவு !

இந்த நூற்றாண்டின் பெருமை


அப்துல் கலாம்
எந்தக் காற்றோடு கலந்தாலும்
எங்கள் அன்பு கலாம் !
52.
கல்யாண சில்மிஷம்

தொடக்கம் ஒரு முத்தம் !


முடிவு கருச் சத்தம் !

இது காமம் அல்ல கலை !

இங்கொரு தாய்மையும் தகப்பன் சாமியும்


விதைக்கப்படுகிறது.
53.

நீயும் தாய்தானே

மார்பில் சாய்ந்து விளையாட


முதல் களம் தந்தது தாய்தானே !
மறுமுறை அந்த விளையாட்டில்
களம் தந்த நீயும் தாய்தானே !
54.

நான்கு சாமிகளை இகழ்ந்து


தன் சாமியை மட்டும் புகழ்ந்து
பக்தன் ஆனான் மனிதன் !

நான்கு சாதிகளை இகழ்ந்து


தன் சாதியை மட்டும் புகழ்ந்து
சாதி மதியனாய் ஆனான் மனிதன் !

நான்கு மதங்களை இகழ்ந்து


தன் மதத்தை மட்டும் புகழ்ந்து
மதவாதி ஆனான் மனிதன் !

நான்கு இனத்தை இகழ்ந்து


தன் மதத்தை மட்டும் புகழ்ந்து
இனவாதி ஆனான் மனிதன் !

மனிதம் கொண்டோர்க்கு மட்டும்


இந்தக் கணிதம் புரியும் !
55.

அங்கு நட்பின் தழுவல்


அங்கும் இங்கும் உளவல்

ஆறாம் படிவ உயர்வு


ஆருயிர் தோழியின் உறவு

மொழிகள் மாறிய பயணம்


விழியில் ஊறிய பெளத்தம்

காலையில் கூடிய வேலை


கர்த்தர் மகளின் சாலை

இரத்தப் பதிவில் இரவி


கண்ணர்ீ புதரில் கவி

இந்த இரவில் ஒரு தனிமை


இதுவும் ஓர் இனிமை !
56..
மன்மதத் தனிமை

ஒரு நிமிட யாசகத்தில் ஒரு ஜென்ம பிம்பங்கள்


கரு முதல் இந்தத் தருணம் வரை பல இன்பத் துன்பங்கள்

மறு ஜென்மம் ஒன்றிருந்தால்


பல்வேறு பழமை ஆசை
பின் நோக்கி காலம் கடந்தால்
உதிருமே இந்த அகிம்சை மீ சை

மழலைக் கொண்ட நாட்கள்


மனதைத் துளைத்த ஆட்கள்

தோட்டம் எனும் சொர்க்கம்


தோழமை எனும் வர்க்கம்

ஆட்டம் போட்டப் பள்ளி


அரைக்கும் செம்பனை மில்லி

அடுத்தக் கட்டக் கள்ளி


அழகில் கவிழ்ந்தச் செல்வி
57.

மந்திரமும் தந்திரமும்

பாலுக்குப் பூனை காவலா ?


படிக்காதவன் கையில் பட்டுக் கோட்டை நாவலா
பார்க்கின்ற சிவனுக்கு இதிலோர் ஆவலா ?
பறக்கின்ற மயில்மீ து தீமழைத் தூவலா ?

பாவம் அந்தத் தேவதை


அறியாத சூழ்நிலை
மேகம் மட்டும் மழையினை
அறியாத வானிலை

மழை வந்து பொழியுமுன்


குடைப்பிடிக்கும் சக்தி செய்
மந்திரமும் தந்திரமும்
கடைப்பிடிக்கும் உயிரைக் கொய் !
58.

வைரமுத்து வாரிசாய்
நானாக மாட்டேனா ?
எத்தனை கனவுகள்
ஏங்குதிங்கு என்பேனா !

வாலியின் சாயலில்
வரியெழுத மாட்டேனா ?
வறுமையில் வாடுது
என்வாலிப மைபேனா !

வாய்ப்புகளின் வதியில்

வாலிபக் கனவுகள்
வாய்ப்புகள் வாய்க்கும்வரை
கனவே நம் உணவுகள் !

கனவு தின்று
பயணம் செய்வோம்
நனவாய் மாறும்
பாரை மேய்வோம் !
59.

காதலி

ஆண்களைத் தொத்திக் கொள்ளும்


இதமான நோய்
ஆனாலும் அவள்தான்
அவனின் இரண்டாம் தாய் !

You might also like