You are on page 1of 4

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!


அந்தக் கண்ணனுக்கு மட்டும் இல்லை இந்தக் கண்ணபிரானுக்கும் இது
பொருந்தும்! ஏறக்குறைய இவர் நண்பர்கள் அனைவருக்குமே இவரிடம் கொஞ்சம்
குறைந்த பட்சம் லேசான மனத்தாங்கல் இருக்கிறது! ஆனால் இவரை
விரும்பாதவரே இல்லை! எல்லாருமே நண்பர்கள் தான்! இந்த இனிய
கண்ணபிரான் இரவிசங்கருக்கு இன்று பிறந்தநாள் (ஆகஸ்ட் 9)! எல்லா நலமும்
பெற்று, விட்டுப் போனவை எல்லாம் மீ ண்டும் கிடைத்து, இறைத்தொண்டிலேயே
கவனம் எல்லாம் நிலைத்து, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல
கோடி நூறாயிரம் ஆண்டுகள் இரவிசங்கர் வாழ நல்லதும் தீயதும் செய்திடும்
சக்தி அருள் புரிய வேண்டும்!

***

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ

படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே!

பெரியபிராட்டியாருடன் என்றும் நீங்காது இருக்கும் திருமாலே! உமது


திருமுகத்தின் ஒளியே மேலே கிளம்பி உம் தலையில் நீர் தரித்திருக்கும்
திருவபிஷேகமாக (கிரீடமாக/திருமுடியாக) ஒளிவசித்
ீ திகழ்கிறதோ? நீர் தேவ
தேவன் என்பதையும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்பதையும்
பரமபுருஷன் என்பதையும் உமது திருமுடியின் பேரழகும் பேரொளியும்
காட்டுகின்றதே! நீரே எம்மையுடையவர்! உமது திருவடிகளே சரணம்! சரணம்!
ஆகா! திருமுடி பரமேஸ்வரன் என்று ஒளிவசிக்
ீ காட்டுகின்றதே என்று
திருவடிகளையடைய வந்தேன்! அடியேனுக்கே உரிய அந்தத் திருவடிகளின்
அழகும் ஒளியும் திருமுடியின் அழகையும் ஒளியையும் மிஞ்சுவதாக
இருக்கிறதே! உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராக
பரந்து அலர்ந்துவிட்டதோ! திருமுடியின் பேரொளியைக் காண தீராமல்
திருவடிக்கு வந்தால் திருவடியின் பேரொளி மேலே பிடித்துத் தள்ளுகிறதே!
அடடா! உமது திருமேனியின் ஒளியே உமது பட்டுப் பீதாம்பரமாகவும் உமது
திருமேனியில் ஒளிவசும்
ீ திருவாபரணங்களாகவும் அனைத்தும் பொன்னிறம்
என்னும் படி கலந்து ஒளிவசுகிறதே!
ீ கடலிலே அகப்பட்ட துரும்பை ஒரு அலை
இன்னொரு அலையிலே தள்ளி அது இன்னொரு அலையிலே தள்ளி
அலைப்பதைப் போலே உமது திருமுடியின் ஒளி திருவடிகளிலே தள்ள அது
திருமேனியின் ஒளியிலே தள்ளுகிறதே! காலம் என்னும் தத்துவம் இருக்கும்
வரையில் கண்டுகொண்டே இருந்தாலும் திருப்தி வராது என்னும் படியான
பேரழகும் பேரொளியும் வாய்த்தது தான் என்னே! நீரே சொல்லியருள வேண்டும்!

கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா

சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது

ஒட்டுரைத்து இவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்

பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி!

உண்மையைச் சொன்னால் தாமரை உமது திருக்கண்கள், திருப்பாதங்கள்,


திருக்கைகள் இவற்றிற்கு ஒப்பாகாது! காய்ச்சிய நன்பொன்னின் பேரொளியும்
உமது திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகாது! ஏதேதோ ஒப்பு வைத்து இந்த
உலகத்தார் உம்மைப் புகழ்வனவெல்லாம் பெரும்பாலும் வெற்றுரையாய்ப்
பயனின்றிப் போகும்படி செய்யும் பேரொளி உடையவர் நீர்!

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்


பரஞ்சோதி இன்மையில் படியோவி நிகழ்கின்ற

பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்

பரஞ்சோஎளிமையின் எல்லை நிலமான கோவிந்தனே! பரஞ்சோதியாக


பேரழகுடனும் பேரொளியுடனும் நீர் திகழ, ஏகம் அத்விதீயம் என்றும் ஒப்பாரும்
மிக்காரும் இல்லாதவன் என்றும் பேசும் படியாக உம்மை விட மற்றோர்
பரஞ்சோதி இல்லாத வண்ணம் இந்த பிரம்மாண்டத்தை நடத்திக் கொண்டு உமது
திருமேனியாகவே இந்த பிரபஞ்சத்தையெல்லாம் உம் எண்ணத்தாலேயே
படைத்த எமது பரஞ்சோதியே! உலகத்தார் போற்றுவனவெல்லாம்
வெற்றுரையாய் ஆக்கும் பரஞ்சோதியாகவும் நீர்மைக்கு எல்லைநிலமாகவும்
ஒரே நேரத்தில் இருக்கும் உமது அளவில்லாத தெய்வக
ீ குணங்களை எல்லாம்
அடியேனாலும் பேச முடியாது!

மாட்டாதே ஆகிலும் இம்மலர்தலைமாஞாலம் நின்

மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க

மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்

மாட்டே நீ மனம் வைத்தாய் மாஞாலம் வருத்தாதே?

மலரில் பிறந்த பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த பேருலகத்தில் வாழ்பவர்கள்


எல்லாம் மலர் போன்ற உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க
முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும்
படியாக பற்பல சமயங்களையும் ஆக்கி வைத்தீர்! அவர்களைக் கடைத்தேற்றும்
வழியைக் காணாமல் நீர் உமது திருமேனியிலும் திருவடிகளிலும்
திருமுடியிலும் இருக்கும் மலர்த்துழாய் மேலே மனம் வைத்தீர்! இப்படி
இருந்தால் இம்மாஞாலத்து மக்கள் வருந்த மாட்டார்களா?

வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்


வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்

வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை

ஒருங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?தி கோவிந்தா! பண்புரைக்க


மாட்டேனே!

You might also like