You are on page 1of 3

ஆறு காசுக்காகாத அருமையான சூளை

இருவர் மண் சேர்த்திட ஓருவர் பண்ண

ஈரைந்து மாதமாய் வைத்தச் சூளை

அருமையாய் இருப்பினும் அந்த சூளை

அரை காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே!

Posted by குமரன் (Kumaran) at 11/08/2006 06:31:00 AM 28 comments Links to this post

Wednesday, November 01, 2006

கற்பக மரம் = தமிழ்மணம்

அடர்ந்த காடு. ஒருவன் அந்தக் காட்டு வழியாக நடந்து போகிறான். நடுப்பகல்


நேரம் என்பதால் நடந்து நடந்து களைத்துப் போய்விட்டான். சிறிது நேரம்
ஓய்வெடுப்போம் என்று ஒரு மரத்தின் கீ ழே அமர்ந்தான். அந்த மரம்
கேட்பதையெல்லாம் கொடுக்கும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.

'ஆகா. ரொம்பத் தாகமாக இருக்கிறதே. குளிர்ந்த நீர் கிடைத்தால் நன்றாக


இருக்குமே' என்று எண்ணினான். எண்ணிய மறுவிநாடி ஒரு குடுவையில்
குளிர்ந்த நீர் அவன் அருகில் இருந்தது. வியப்புடன் அதைப் பார்த்து குடுவையை
எடுத்து குளிர்ந்த நீரை அருந்தி மகிழ்ந்தான்.

தாகம் ஆறியவுடன் 'பசிக்கிறதே. அறுசுவை உணவு இருந்தால் இந்நேரம் மிக


நன்றாக இருக்குமே' என்று எண்ணினான். உடனே அறுசுவை உணவுகள் அங்கே
தோன்றின. உண்டு மகிழ்ந்தான்.

'அப்பாடா. வயிறு நிறைய உண்டு ஆயிற்று. ஜிலு ஜிலு எனக் காற்று வசுகிறதே.

இந்த நேரத்தில் ஒரு கட்டில் இங்கே இருந்தால் உறங்கி ஓய்வெடுக்கலாமே'
என்று எண்ணினான். கட்டிலும் வந்தது. கட்டிலில் ஏறிப் படுத்தான்.
'நடந்து நடந்து கால்கள் வலிக்கின்றனவே. யாராவது கால் பிடித்துவிட்டால்
சுகமாக இருக்கும்' என்று எண்ணினான். ஒரு அழகிய பெண்ணும் வந்து கால்களை
பிடித்துவிடத் தொடங்கினாள்.

சுகமாக உறங்கத் தொடங்கியவனுக்குத் திடீரென ஒரு ஐயம் எழுந்தது. 'நாம்


படுத்திருக்கும் நேரம் புலி வந்து நம்மை அடித்துப் போட்டுவிட்டால்?'. ஒரு
புலியும் வந்தது. அவனைக் கொன்றும் போட்டது.

தமிழ்மணமும் அப்படித்தான் இருக்கிறது. இங்கே சுகங்களும் கிடைக்கின்றன.


மற்றவையும் கிடைக்கின்றன. கேட்டது கிடைக்கும் இங்கே. சுகங்களை மட்டும்
பெற்று வாழவேண்டும்.

Posted by குமரன் (Kumaran) at 11/01/2006 06:41:00 AM 35 comments Links to this post

Tuesday, October 31, 2006

சொல்வது ஒன்று புரிவது ஒன்று

அடிப்படையில் மனம் ஒரு ஊகிக்கும் இயந்திரம். புரியாததை ஏற்கனவே


தெரிந்ததை வைத்து இட்டு நிரப்புவதை தனது வேலையாக மனம் நினைக்கிறது.
அதனால் ஏற்படும் விளைவு 'துணிபுகள்'. இந்தத் துணிபுகள் முக்காலங்களையும்
சேர்ந்த பல காரணிகளால் ஆனது - நினைவுகள், நம்பிக்கைகள், தற்போதைய
பார்வைகள்/கண்ணோட்டங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள், சூழ்நிலைகள்,
ஆசாபாசங்கள், நோக்கங்கள். ஒருவர் சொல்வதைப் புரிந்து கொள்வது என்பது
கடினமான வேலை என்று தோன்றுகிறதா? எளிதில் தவறு செய்யக் கூடிய ஒன்று
தோன்றுகிறதா? உண்மை.

- அண்மையில் கலந்து கொண்ட 'The Art of Listening' பயிற்சி வகுப்பிலிருந்து.

துணிபுகள் - Assumptions
காரணிகள் - Factors

Posted by குமரன் (Kumaran) at 10/31/2006 10:53:00 AM 19 comments Links to this post

Monday, October 30, 2006

மாற்றம் எனது மானிடத் தத்துவம்

உண்மையறிந்தவர் நீர் மட்டுமே!

என்னைப் பார்க்கும் போதெல்லாம்

என் அளவுகளை மீ ண்டும் எடுக்கும்

தையல் காரரே

உண்மையறிந்தவர் நீர் மட்டுமே!

Posted by குமரன் (Kumaran) at 10/30/2006 05:29:00 AM 46 comments Links to this post

Wednesday, October 25, 2006

கடவுளும் அவள் இடையும்

கடவுளும் அவள் இடையும் ஒன்று

சிலர் உண்டென்பர்

சிலர் இல்லையென்பர்

கல்லூரியில் நுழைந்தவுடன் எழுதியது (1989 - 1990

You might also like