You are on page 1of 3

அரங்கனுடைய அரவணை பிரசாதம்!

அரவணை – அரவு + அணை – பாம்பணை

திருவரங்கப் பெருமானுக்கு இரவு நேர உணவு, அரவணை. அரங்கனுக்கு


மட்டுமல்ல. அவனைத் தாங்கிக் கிடக்கும் ஆதிசேஷனுக்கும் அதுவே அமுது.

வேகவைத்த பச்சரிசியைக் கெட்டியான வெல்லப்பாகில் சேர்த்துக்


கிளறிக்கொண்டே இருக்கும்போது நெய்யைச் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள்.

சமைப்பது மண் பாண்டத்தில்தான் என்பதால் கொட்டக் கொட்ட நெய்யை அது


உறிஞ்சிக் கொண்டே இருக்கும்.

அரங்கன் “வெள்ளி பூணார்; வெண்கலம் ஆளார்”. அதாவது தங்கம் தவிர


வெள்ளியாலான நகைகளை எல்லாம் அணிய மாட்டார். பித்தளை, வெண்கலம்
போன்ற பாத்திரங்கள் தளிகைக்கு உபயோகிக்க மாட்டார்கள்.

‘ஸ்வர்ண பாத்திரம்’ என்று சொல்லப்படும் மண்பானைகளையே (அன்றாடம்


புதிய புதிய பானைகள்) தளிகைக்கு உபயோகிப்பார்கள். மண் பானையில்
செய்வதால் அக்கார அடிசில் முதல் பல பிரசாதங்கள் லேசாக அடிப்பிடித்த
வாசனை வரும்.

ஒரு குறிப்பிட்ட பதத்தில் சட்டென்று இறக்கி வைத்து ஏலம், பச்சைக் கற்பூரம்


சேர்த்துக் கிளறினால் அது அரவணை. இதற்குக் குங்குமப்பூ, நாட்டுச் சர்க்கரை
சேர்த்த பசும்பால் துணை.

மற்ற பிரசாதங்கள்

காலை 8.45 மணிக்கு திருவாரதனம். கோதுமை ரொட்டி படைக்கப்படுகிறது.


பெருமாளுக்கு பதினொன்று, தாயாருக்கு ஆறு. ரொட்டியின் செய்நேர்த்தியை
பற்றி பார்ப்போம்,

வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும். அந்த ஈரப்பதத்தோட கோதுமை


மாவு போட்டு நல்லா பிசையணும். வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும்
உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும். அதனை நெய்யில் போட்டு
பொரித்து எடுக்கணும். பெருமாளுக்கான ரொட்டி ரெடி. காய்ச்சாத பசும்பால்
இரண்டு லிட்டர். மண் ஓட்டில் வெண்ணெய், உப்பு போட்டு வேக வைத்த
பாசிப்பருப்பு.

அடுத்து தொடர்ந்தாற்போல வந்து விடுவது பொங்கல் பூஜை. காலை ஒன்பது


மணிக்கு, மிளகு, சீரகம் இடாமல் பாசிப்பருப்பு, பச்சரிசி மட்டும் உபயோகித்து
வெண் பொங்கல். இதற்கு கத்தரிக்காய் அல்லது வாழைக்காய் அல்லது
வெள்ளைப் பூசணி வெட்டிப் போட்டு தினமும் ஒரு வகை காய்கறியமுது. பச்சரிசி
உளுந்து மாவு தோசை. பெருமாள் வைத்தியரான தன்வந்திரி தயாரித்து
அளிப்பதான ஜீரண மருந்து. சுக்கு, வெல்லம், சீரகம், ஏலக்காய்ப் போட்டு இடிச்சு
அரைத்த மருந்து.

மதியம் 12.30 முதல் 1.30 வரை உச்சி கால பூஜை. இதற்குப் பெரிய அதிசரம் என்று
பெயர். பெரிய அதிரசம் பதினொன்று. பதினெட்டு படி தளிகை (வெறும் சாதம்),
பாசிப்பருப்பு கறியமுது. தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம், இட்ட ரசம்
இதற்கு சாத்தமுது என்று பெயர். அரிசி, பாசிப்பருப்பு, பால், வெல்லம் இட்ட
பாயசம். இதற்கு கண்ணமுது என்று பெயர்.

மாலை ஆறு டு ஏழு. சீராண்ணம் பூஜை. உளுந்து வடை பெரியது பதினொன்று.


பெரிய அப்பம் ஆறு. பெரிய தேன் குழல் எனப்படும் அரிசி முறுக்கு ஆறு. பால்,
பச்சரிசி, வெல்லம் இட்ட பால் பொங்கல் இது அரை இனிப்பாக இருக்கும்.
இவற்றில் தாயாருக்கு மட்டும் கூடுதலாக வெல்லம் இட்ட பச்சரிசிப் புட்டு. இரவு
ஒன்பது முப்பது மணிக்கு செலவு சம்பா. எட்டுப்படி வடிசல் சாதம், பாசிப் பருப்பு
என்று முடித்தார் ரெங்கன்.

காலை முதல் இரவு அரவணை வரைக்குமாக பெருமாளுக்கும் தாயாருக்கும்


வைத்து பண்ணப்படும் நைவேத்ய அன்னங்கள் யாவுமே, உடனே ஸ்ரீ பண்டாரம்
வந்து சேர்ந்து விடும். பக்தர்களுக்கும் பெருமாள் நைவேத்ய பிரசாதம் போலவே
பல அன்னங்களும் பணியாரங்களும் மிகவும் செய்நேர்த்தியுடன்
ஆத்மார்த்தமாகத் தயாரிக்கப்பட்டு திருக்கோயில் பிரசாத ஸ்டால்களில்
பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது!” என்கிறார் பணியாளர்களில் ஒருவரான
மாதவன்.

இரவு பத்து மணிக்கு பெருமாளுக்கு அரவணை .


திருவரங்கன் திருவடி தஞ்சம்.

You might also like