You are on page 1of 3

ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) என்றொரு புத்தகத்தை ஏழு

வருடங்களுக்கு முன்னர் படித்தேன். படித்தவுடன் அந்தப் புத்தகத்தில் இருக்கும்


கருத்து மிகவும் பிடித்தது.

நான்கு ஒரு நிமிட மேலாண்மைக் கருத்துகளை இந்தப் புத்தகத்தில்


சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல் (One Minute Goal Setting)

ஒரு நிமிடத்தில் நிலை அறிதல் (One Minute Status)

ஒரு நிமிடத்தில் பாராட்டுதல் (One Minute Appreciation)

ஒரு நிமிடத்தில் தவறுகளைச் சுட்டுதல் (One Minute Reprimand)

1. ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்:

இது மிக முக்கியமான ஒன்று. பல மேலாளர்கள் செய்யத் தவறுவது. பல முறை


நான் செய்ய மறந்து பின்னர் தவறுகள் நேரும் போது சரி செய்திருக்கிறேன்.
குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லாவிட்டால் எப்படி அந்தக்
குறிக்கோளை அடைய முடியும்?

சிலர் குறிக்கோளைச் சொல்கிறேன் என்று நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள்.


இந்த 'ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல்' முறையில் அதிகபட்சம் ஐந்து
நிமிடங்கள் எடுத்துக் கொண்டால் போதும். அப்படியென்றால் நீண்ட காலக்
குறிக்கோளை வரையறுக்க முடியாது; குறுகிய காலக் குறிக்கோளைத் தான்
வரையறுக்க முடியும் என்று சில மேலாளர்கள் நினைக்கிறார்கள்.
அப்படியில்லை. முதலில் நீண்ட காலக் குறிக்கோளை வரையறுத்துவிட்டு
பின்னர் அந்தக் குறிக்கோளை அடைய குறுகிய காலக் குறிக்கோள்களைப் பற்றிப்
பேசலாம்.

குறிக்கோளைப் பற்றிப் பேசுதல் என்றால் மேலாளருக்கு மட்டுமே குறிக்கோள்


தெளிவாகப் புரிதல் இல்லை. நம்முடன் வேலை பார்த்து அந்தக் குறிக்கோளை
அடைய உதவுபவர்களும் அந்தக் குறிக்கோளை நன்றாகப் புரிந்து கொள்ள
வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக இதில் பல முறை கோட்டை விட்டு பின்னர்
சரி செய்திருக்கிறேன். குறிக்கோள் எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தால் தான்
வேலை சரியாக சரியான நேரத்தில் நடந்து முடியும். வேலை செய்பவருக்குக்
குறிக்கோள் புரியாமல் இருந்தால் அவர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையின்
முக்கியத்துவமும் நேரத்தோடு செய்து முடிக்க வேண்டிய கட்டாயமும் புரியாது.
அப்படி நடந்தால் வேலை நேரத்துக்கு நடக்காமல் மேலாளரும் கடைசி
நிமிடத்தில் அந்த வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய
வேண்டியிருக்கும். அப்புறம் யாரை நொந்து என்ன பயன்?

ஒரு நிமிடத்தில் (சரி ஐந்து நிமிடத்தில் என்றே சொல்வோம்) குறிக்கோளைக்


குறித்துப் பேசும் போது வேலை செய்பவர்களுக்கும் அந்த குறிக்கோள் புரிந்ததா,
அந்தக் குறிக்கோளின் முக்கியத்துவம் புரிந்ததா, அந்த வேலையைச் செய்வதால்
எடுத்துக்கொண்ட பணிக்கு என்ன பயன் என்று புரிந்ததா, வேலை செய்யும்
தங்களுக்கு அதனால் என்ன நன்மை என்று புரிந்ததா என்று அறிந்து கொள்ள
வேண்டும். அதற்கு குறிப்பான கேள்விகளை (Pointed Questions) அவர்களிடம் அந்த
ஐந்து நிமிடங்களிலேயே கேட்கலாம். பல முறை அவர்கள் சரியாகப் புரிந்து
கொள்ளவில்லை என்பதும் இன்னும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால்
அவர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அப்படி
முதன்முறையிலேயே குறிக்கோளை பணி புரிபவர்கள் தெளிவாகப் புரிந்து
கொண்டு விட்டால் மேலாளருக்கு அப்புறம் வேலையே இல்லை; அவர்களே அந்த
வேலைக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டு தானாகவே வேலையை
முடித்துவிடுவார்கள்.
அடுத்த மூன்று 'ஒரு நிமிடத்தில்' கோட்பாடுகளை தொடர் இடுகைகளாக
இடுகிறேன்.

இந்த இடுகைகள் மேலாளர்களுக்கு மட்டும் இல்லை. இந்தியாவில் இருக்கும்


நண்பர்கள் மூலமாக வேலையை இங்கிருந்த படியே ஒருங்கிணைக்கும்
மென்பொருளாளர்களும் (Onsite Coordinator), சிறு தொகுப்புத் தலைவர்களும் (Module
Leader) இந்த கோட்பாடுகளைப் பயன்படுத்தலாம். நண்பர்கள் தங்கள்
அனுபவங்களைப் பற்றிப் பேசினால் இந்தத் தொடர் இன்னும் பயனுள்ளதாக
இருக்கும்.

You might also like