You are on page 1of 79

சாப்பாடு, இட்லி, தோசைக்கு ஏற்ற கத்திரிக்காய் கொத்சு; இப்படி செஞ்சு

பாருங்க

Brinjal Recipes in tamil: நம்முடைய பகுதியில் எளிதில் கிடைக்கும் இந்த


கத்திரிக்காய் ஏகப்பட்ட பயன்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இவை வாதநோய்,
ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல்,
கரகரப்பானகுரல், உடல் பருமன் போன்ற நோய்களை குணப்படுத்தும் காய்கறிகளுள்
ஒன்றாகவும் உள்ளன.

கத்தரியில் காணப்படும் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க


உதவுகின்றன. மேலும் இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கவும்
உதவுகின்றன.

இப்படி நிறை ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள


கத்திரியில் எப்படி கொத்சு தயார் செய்யலாம் என இங்கு பார்க்கலாம்.

சிதம்பரம் ஸ்டைல் கத்திரிக்காய் கொத்சு செய்ய தேவையான பொருட்கள்

அரைக்க

மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்


கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1/2 டீ ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8 (கரத்திற்கேற்ப)

எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு, உளுந்து – 1/2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை
காய்ந்த மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 2
பூண்டு – 5
கத்தரிக்காய் – 1/2 கிலோ ( 4 துண்டுகளாக நறுக்கியது)
தக்காளி – 1 (பெரியது)
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவு (10 நிமிடங்களுக்கு ஊற வைத்தது)

கத்திரிக்காய் கொத்சு செய்முறை

அடுப்பில் ஒரு பேன் வைத்து சூடானதும் அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள


பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு வசம்
வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை நன்கு ஆற வைத்து மிக்சியில்
இட்டு அரைத்து கொள்ளவும்.

இந்த மசாலாவை ஒரு டப்பாவில் அடைத்து வைத்து 6 முதல் 7 மாதங்களுக்கு


பயன்படுத்தி வரலாம். தவிர, இவற்றை கார குழம்பு, மீன் குழம்பு, புளி குழம்பு
ஆகிவற்றுடனும் சேர்த்து ருசிக்கலாம்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு உளுந்து
சேர்த்து பொரிய விடவும். காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கிளறிய பின்னர்
சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பூண்டு சேர்த்து வதக்கவும்.

இவை ஓரளவு வதங்கிய பிறகு அவற்றோடு நறுக்கி வைத்துக்க வைத்துள்ள


கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் நன்கு வதங்கிய பிறகு அவற்றோடு
நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி சாஃப்டாக வதங்கிய பிறகு அவற்றோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள் முன்னர்
அரைத்து வைத்துள்ள குழம்பு தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறிய பிறகு
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடியால் மூடி 5 நிமிடங்களுக்கு வேக
விடவும்.

இவை நன்கு வெந்த பிறகு பருப்பு கடையும் கட்டையால் நன்கு மசிந்து விடவும். பிறகு
முன்பு ஊற வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொள்ளவும். இவை நன்கு சுண்டிய
பிறகு சாப்பாடு, இட்லி, தோசை என அனைத்திற்கும் டிஷ்ஷாக பயன்படுத்தி ருசித்து
மகிழவும்.

சளி இருமலைப் போக்கும் செலவு ரசம்; செய்வது எப்படி தெரியுமா?


Selavu rasam tamil: ரசம் காய்ச்சல், இருமல், தும்மல், உடல்
சோர்வு, உடல் களைப்பு, செரிமானப் பிரச்சனை, சத்துகுறைபாடு,
தொண்டை கமறல், வயிற்று புண் என அனைத்து நோய்களுக்கும்
மருந்தாக உள்ளது.
 Rasam Recipes in Tamil: நமது உணவு கலாச்சாரத்தில் ரசம் மிகவும் முக்கியம்
வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் பொருட்களை
குறிப்பிடலாம். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும்
புளிக்கரைசல் போன்றவை மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளன. இதில்
சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு
வகிக்கிறது.

ரசம் காய்ச்சல், இருமல், தும்மல், உடல் சோர்வு, உடல் களைப்பு, செரிமானப்


பிரச்சனை, சத்துகுறைபாடு, தொண்டை கமறல், வயிற்று புண் என அனைத்து
நோய்களுக்கும் மருந்தாக உள்ளது.

ரசத்தில் பல வகைகள் உள்ள நிலையில், சளி இருமலைப் போக்கும் செலவு ரசம்


எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

செலவு ரசம் செய்யத் தேவையான பொருட்கள்

அரைக்க

மிளகு – 1 டேபிள் ஸ்பூன்


சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
மஞ்சள் தூள் – சிறிதளவு
மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
நாட்டுத்தக்காளி – 2 பெரியது
பூண்டு – 5
சின்ன வெங்காயம் – 5

கருவேப்பிலை – 1 கொத்து
காய்ந்த மிளகாய் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து


நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு ரசத்திற்கு தேவையான அளவு தணண்ணீரை


அவற்றோடு சேர்க்கவும். பிறகு அவற்றோடு தேவையான அளவு உப்பு மற்றும்
கொத்தமல்லி சேர்த்து மிதமான சூட்டில் நுரை வரும் வரை கொதிக்க வைக்கவும்.

இதற்கிடையில், ரசத்தை தாளிக்க ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு


பொறியவும், கருவேப்பிலை – காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறி ரசத்தோடு
சேர்த்துக்கொள்ளவும்.

ரசம் நுறை தட்டி பொங்கி வரும் போது கீழே இறக்கி பரிமாறி சுவைக்கவும்.

சளி, இருமலை குணமாக்கும் தூதுவளை ரசம்; அருமையான சுவையின்


ரகசியம் என்ன தெரியுமா?

Tamil Recipe Thuthuvalai Rasam : பாரம்பரிய மருத்துவ குணம் உள்ள


தாவரங்களில் தூதுவளை கீரைக்கு முக்கிய இடம் உண்டு சளி இருமல் உட்பட பல
நோய்களுக்கு தீர்வளிக்கும் இந்த கீரை இயற்கை மருத்துவத்தில் முக்கிய
பங்காற்றுகிறது.  இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்பகளுக்கு நன்மை
அளிக்கும். பற்களை பலப்படுத்தும் இந்த மூலிகை வாதம் மற்றும் பித்த நோய்களுக்கு
உடனடி தீர்வை தருகிறது. மேலும் பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை
தூதுவளைக்கு உண்டு.

தூதுவளை இல்லையை பச்சையாக மென்று தின்றாலே அதன் மருத்துவ குணங்களை


நேரடியாக பெற முடிவும். மேலும் இந்த துதுவளை இலையை காயவைத்து
பொடியாக்கி எடுத்துக்கொள்ளலாம். நெய்யில் வதக்கி துவையலாக அரைத்து
உட்கொள்ளலாம். அந்த வகையில் தூதுவளையில் ரசம் வைப்பது எப்படி என்பதை
இப்போது பார்க்கலாம். வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த ரசம்
அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

தூதுவளை கீரை – ஒரு கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

பூண்டு – 6 பல்

கடுகு – சிறிதளவு

தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)

புளி – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 6

மிளகு, சீராகம் – தலா 1 டீஸ்பூன்

வரமிளகாய் – 2

பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்

செய்முறை :

முதலில் தூதுவளை கீரையை நன்றாக கட் செய்து நெய்யில் வதக்கி தனியாக


எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் வேறொரு கடாய் வைத்து அதில் 2
டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடேற்றவும்.
அதன்பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் புளியை ஒரு மிக்சியில் போட்டு நன்றாக
அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சூடானவுடன் இந்த கலவையை அதில் சேர்த்து
நன்றாக கலக்கவும்.

இதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து பொடி செய்த மிளகு சீராக தூளை
சேர்க்கவும். அடுத்து சிறிதளவு கறிவேப்பிளை சேர்க்கவும். அதில் பூண்டு மற்றும் சின்ன
வெங்காயத்தை இடித்து சேர்க்கவும். அடுத்து வரமிளகாய்யை கிள்ளி அதில் சேர்க்கவும்.

அதன்பிறகு நெய்யில் வதக்கிய தூதுவளை இலையை இடித்து அல்லது மிக்சியில்


அரைத்து இதில் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூளை சேர்க்கவும். அதன்பிறகு இதை
நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.

அடுத்து தனியாக ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு அதில் ககுடு, தோலுடன் இடித்த
பூண்டு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்துள் சேர்த்து நன்றாக தாளித்து  கொதித்த
ரசத்தில் சேர்க்கவும். அதன்பிறகு இதனை சிறிது நேரம் மூடி வைத்து எடுத்தால்
சுவையான மற்றும் ஆரோக்கியமான தூதுவளை ரசம் தயார்.

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா; சப்பாத்தி


பரோட்டா தோசைக்கு பொருத்தமா இருக்கும்!
veg kurma recipe in tamil: வெஜ் குருமா செய்வதற்கென பல செய்முறைகள்
உள்ளன. இருப்பினும், நாம் ஹோட்டல் ஸ்டைலில் இருந்தால் அதிகம்
விரும்புகிறோம். எனவே சப்பாத்தி, பரோட்டா, தோசை என அனைத்திற்கும்
பொருத்தமாக உள்ள ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா எப்படி தயார் செய்யலாம்
என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்


நெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – சிறிதளவு
பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
கருவேப்பிலை
வெங்காயம் – பெரியது 1
தக்காளி – பெரியது 1
உப்பு
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
பீன்ஸ் – 1 கப்
கேரட் – 1 கப்
முளைகட்டிய பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
காலிபிளவர் – 1 கப் (சூடு தண்ணீரில் நன்கு கழுவியது)
பால் – 1/2 டம்ளர்

அரைக்க

தேங்காய் துருவல் – 1 கப்


கசகசா – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4,5

நீங்கள் செய்ய வேண்டியவை

ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி
சூடேற்றவும். பின்னர், பட்டை, கிராம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை
சேர்த்து ஒரு கரண்டியால் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், கருவேப்பிலை,
வெங்காயம் ஆகியவற்றை அவற்றோடு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து
வதக்கவும். தக்காளி வதங்க சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது குருமாவிற்கான மசாலாவான மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா


ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும். பிறகு குருமாவிற்கென நறுக்கி வைத்துள்ள
காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து 1 நிமிடத்திற்கு கிளறி தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் குக்கர் என்றால் அவை ஓரளவு வேக தேவையான அளவு விசில் வைக்கவும்.

இதற்கிடையில், அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மிக்சியில் இட்டு நன்கு


அரைத்துக்கொள்ளவும்.

இப்போது முன்னர் வேக வைத்த காய்கறிகள் ஓரளவு வெந்த பின்னர், அவற்றுடன் இந்த
மசாலாவை சேர்த்து கிளறி கொள்ளவும். அவை சில நிமிடங்களுக்கு கொதித்த பிறகு
அவற்றோடு பால் சேர்த்துக்கொள்ளவும். சில நிமிடம் கழித்து 1 ஸ்பூன் சர்க்கரை
சேர்த்து அவற்றை நன்கு வேக விடவும்.

அவை நன்கு வெந்து தயாரானதும் அவற்றை கீழே இறக்கி கொத்தமல்லி இலைகளை


தூவி சப்பாத்தி, தோசைகளுக்கு பரிமாறவும்.

வரகு அரசி சாதம் செய்வது இவ்வளவு ஈஸியா?


இத்தனை நாள் தெரியாம போய்ருச்சே!

Millet Recipes in Tamil: சிறுதானிய வகைகளில் மிக முக்கியமான இடத்தை


பிடித்திருப்ப‍து வரகு என்றால் மிகையாகாது. இந்த வரகை நம்முடைய முன்னோர்கள்
அடிக்கடி சமைத்து சாப்பிட்டதால் தான், நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளுடனும்,
உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தனர். தற்போது மாறி வரும் உணவு கலாச்சாரத்தில்
சிக்குண்ட நாம் கலப்ப‍ட மற்றும் செயற்கை நிறப் பொடிகள், மற்றும் பூச்சிக்கொல்லி
மருந்து கலந்த, கெட்டுப்போன, ஆரோக்கியமற்ற‍உணவுகளைத் தேர்வு செய்து ருசித்து
வருகிறோம். ஆனால் நம் முன்னோர் விரும்பி உண்ட இந்த வரகில் ஏகப்பட்ட
மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.

வரகு அரிசி, கோதுமையைக் காட்டிலும் நார்ச்சத்து மிகுந்து காணப்படும் உணவு


பொருளாக உள்ளது. இதில் மாவுச்சத்து குறைந்து இருப்பதால், உடல்
ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தவிர கோடைக்காலத்தில் நல்ல குளிர்ச்சியாக
இருக்கும்.
வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற ஊட்டச் சத்துக்களும், எண்ணற்ற
தாதுப்பொருட்களும் நிரம்பி உள்ளன. மேலும், இவை விரைவில் செரிமானம்
ஆவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுப்பைவாகவும் உள்ளன.
மேலும் ரத்தத்தில் அதிகளவு சேர்ந்துள்ள‍ச‌ர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி,
மிதமான அளவுடன் பராமரிக்க உதவுகிறது.

இப்படி எண்ணற்ற மருத்துவ பயன்களை உள்ளடக்கியுள்ள வரகு அரசியில் எப்படி


சாதம் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வரகு அரிசி – 1 கப்

தண்ணீர் – 3 1/2 கப்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

தயிர் – தேவையான அளவு

கறிவேப்பில்லை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

நீங்கள் செய்ய வேண்டியவை

வரகு அரசியில் சாதம் தயார் முதலில் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து


கொள்ளவும்.

அதன் பின்னர், ஒரு குக்கர் எடுத்து அதில் அரிசி மற்றும் தண்ணீர் ஊற்றி குக்கரில்
வைத்து ஐந்து விசில் வந்தவுடன் இறக்கி நன்றாக குழைத்து ஆறவிடவும்.
அல்லது ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்து
கீழே இறக்கவும்.

பின்னர், சீரகம், கறிவேப்பில்லை, தயிர், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து


குழைத்த சாதத்தில் கொட்டி கிளறவும்.

அதனைத் தொடர்ந்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பிறகு, ஒரு கடாயில்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு
தாளித்து அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் பரிமாறி ருசிக்கவும்.

நெல்லை மாப்பிள்ளை சொதி; இப்படி செஞ்சு


பாருங்க…

சாதத்திற்கு சாம்பார், ஆப்பம், இடியாப்பத்திற்கு தேங்காய் பால் என்று சாப்பிட்டு


சலித்து விட்டதா? உங்களுக்காக, தேங்காய் பாலில் செய்த திருநெல்வேலி மாப்பிள்ளை
சொதி ரெசிபி இங்கே. இந்த சொதியை சாதம், ஆப்பம் மற்றும் இடியாப்பம் என
மூன்றிற்கும் பயன்படுத்தலாம். தேங்காய் பால் கொண்டு செய்வதால் உடலுக்கு சத்து
அளிப்பதோடு டேஸ்ட் வேற லெவலாக இருக்கும். வாருங்கள் இந்த மாப்பிள்ளை
சொதி எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 2

முருங்கைக்காய் – 1-2

பீன்ஸ் -8

கேரட் – 2

வெள்ளை கத்திரிக்காய் – 4
சின்ன வெங்காயம் -8-10

பூண்டு – 4 பல்

இஞ்சி – 1 துண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

தேங்காய் எண்ணெய் – 30 மிலி

தேங்காய் பால்- 200-250 மிலி (முதல் முறை எடுத்தது)

தேங்காய் பால்- 700-800 மிலி (இரண்டாம் முறை எடுத்தது)

மஞ்சள் – 2 சிட்டிகை

கடுகு – 1 டீஸ்பூன்

உளுந்து – 1 ½ டீஸ்பூன்

பாசிபருப்பு – 100 கிராம்

பச்சை மிளகாய் – 6-7

உப்பு -தேவையான அளவு

செய்முறை

முதலில் 4 தேங்காய்களை எடுத்து அதை துருவிய பின், அதிலிருந்து முதலில் 250 மிலி
அளவுக்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து மீண்டும்
இரண்டாம் முறையாக 800 மிலி அளவுக்கு தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.

பாசி பருப்பில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும்.


அதனை கரண்டியின் பின்புறத்தை பயன்படுத்தி மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேறிய பின், அதில் இரண்டாம் முறை
எடுத்த தேங்காய் பாலை ஊற்றி சிறிது கொதிக்க விட வேண்டும்.
அதில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைகாயை சேர்த்துக் கொள்ள
வேண்டும். இதனுடன் நறுக்கிய வெள்ளை கத்திரிக்காய் சேர்த்து சுமார் 7 நிமிடங்கள்
வேக விட வேண்டும். பின்னர் இதில், நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட் சேர்த்து கொதிக்க
விட வேண்டும்.

அடுத்ததாக வேறு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடான பின்னர், அதில்


தேங்காய் எண்ணெய் சேர்த்து காய விட வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி,
பூண்டு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.

வதங்கிய பின் இதனை, அடுப்பில் வெந்துக் கொண்டிருக்கும் காய்கறிகளுடன் சேர்க்க


வேண்டும். இதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து
கொதிக்க விட வேண்டும்.

இப்போது பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்க வேண்டும். சற்று கொதித்த பிறகு,


கடைசியாக முதல் முறை எடுத்த தேங்காய் பாலை இதனுடன் சேர்த்து கொதிக்க
வைத்து இறக்கி விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் தாளிப்பதற்காக ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து, தேங்காய்


எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். இதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து பொரிய விட வேண்டும்.

நன்றாக பொரிந்த பின்னர், இதை சொதியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


தேவைப்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் அருமை திருநெல்வேலி மாப்பிள்ளை சொதி ரெடி!

காலை உணவுக்கு இந்த வரகரிசி பொங்கல்


செஞ்சு பாருங்க….

Kodo millets pongal in tamil: தென்னிந்திய உணவுகளில் பிரபலமான உணவாக


பொங்கல் உள்ளது. நம்முடைய வீடுகளில் தயார் செய்யப்படும் பொங்கலோடு
சிறிதளவு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் காலை உணவு
சிறப்பாக அமையும். நாம் செய்யும் இந்த பொங்கலுக்கு எப்போதும் பயன்படுத்தும்
பச்சை அரிசியை விட வரகரிசியில் செய்து வந்தால் கூடுதல் சுவையும் உடலுக்கு நல்ல
வலுவும் கிடைக்கும்.

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் வரகரிசி சிறுநீரகம், ரத்த ஓட்டம், ஆண்மை


குறைபாடுகள், நீரிழிவு, இதயம் போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண
உதவுகிறது. இப்படி மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படும் வரகரிசியில் பொங்கல்
எப்படி செய்வது என்ற படிகளை இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வரகு – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
பச்சைமிளகாய் – 3
இஞ்சி – சிறிய துண்டு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சூர்யகாந்தி எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
முந்திரிபருப்பு – 10 – 15
மிளகு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
உளுந்து – டீ ஸ்பூன்
பெங்காயம்

நீங்கள் செய்ய வேண்டுயவை

ஒரு சிறிய பாத்திரம் எடுத்து வரகரிசியை அதில் இட்டு நன்கு ஊற வைக்கவும்.


இதற்கிடையில், ஒரு சிறிய பாத்திரம் அல்லது பேன் எடுத்து அதில் பாசிப்பருப்பு
சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு அதை ஊற வைத்துள்ள வரகரிசியுடன்
சேர்த்து அலசி எடுத்துக்கொள்ளவும்.

வரகரிசியை பெரும்பாலும் அதிக நேரம் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.


இருப்பினும் சில நிமிடங்களுக்கு ஊற வைத்து நன்கு அலசிக் கொள்வது மிகவும்
நல்லது.
இப்போது ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அலசி வைத்துள்ள வரகரிசி மற்றும்
பாசிப்பருப்பை இட்டு அவை வேக தேவையான தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
மேலும் அவற்றோடு பச்சை மிளகாய், இஞ்சி, 1 டீ ஸ்பூன் எண்ணெய் மற்றும்
தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குக்கர் என்றால் 4 – 5 விசில்
போதுமானது.

பொங்கல் நன்கு வெந்த பிறகு அவற்றை தாளிக்க, தனியாக ஒரு பாத்திரம் எடுத்து
அதில் நெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் விடவும். அவை சூடானதும், முந்திரி
பருப்பு சேர்த்து வறுக்கவும். அவை ஓரளவிற்கு வறு பட்டதும் அவற்றோடு உளுந்தம்
பருப்பு சேர்த்து வறுக்கவும். கடைசியாக சீரகம் சேர்த்து வறுக்கவும். அவை நன்கு
வறுபட்ட பிறகு அவற்றோடு கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம்.

இவை தயார் ஆனதும், முன்னர் வேக வைத்துள்ள பொங்கலை சேர்த்து நன்கு மிக்ஸ்
செய்து கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர் பார்த்த வரகரிசி பொங்கல் தயாராக
இருக்கும். அவற்றோடு சாம்பார் அல்லது தேங்காய் சட்னி அல்லது கத்தரிக்காய் கோஸ்
சேர்த்துக்கொள்ளலாம்.

10 நிமிஷத்துல ரெடியாகும் கார பணியாரம்!


தக்காளி சட்னி ”காம்பினேஷன்” வேற லெவல்

நமது கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடிய உணவு பண்டம் குழிப்பனியாரம். வீட்டில்


உள்ள பொருட்களைக் கொண்டே இதனை எளிதாக செய்யலாம் என்பது இதன்
சிற்ப்பம்சம். குழிப்பனியாரத்திற்கான மாவில் இனிப்பு, காரம் என இரண்டு வகைகளில்
பனியாரம் செய்யலாம். நாம் இப்போது கார பனியாரம் எப்படி செய்வது என்பதைப்
பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

இட்லி அரிசி – 1 கப்

உளுந்து – ½ கப்
வெந்தயம் – ½ டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – ¼ டீஸ்பூன்

கடலை பருப்பு – ½ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 3-4

பூண்டு – 10 பல்

சின்ன வெங்காயம் – ¼ கப்

தக்காளி – 2

புளி – நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்து 4 மணி நேரம்
ஊற வைக்க வேண்டும்.

பின்னர் இதனை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள


வேண்டும். தண்ணியாக இல்லாமல் கொஞ்சம் கெட்டியான பதத்தில் எடுத்துக்
கொள்ளுங்கள்.
இந்த மாவில் உப்பு சேர்த்து, கரைத்துக் கொள்ளுங்கள். அதனை 8 மணி நேரம் புளிக்க
விட வேண்டும்.

அடுத்து, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொரிய
விடுங்கள்.

இதில் ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு நன்கு சிவக்க விடுங்கள். இதனுடன்
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கும் போதே, இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும்


கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்க வேண்டும். மேலும் இதில் தேவையான அளவு
உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக, இதில் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இதனை


மாவுடன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.

இப்போது, தக்காளி சட்னி வைப்பதற்காக, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து,


எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வைத்த பூண்டு மற்றும் வெங்காயத்தை அதில் போட்டு


வதக்க வேண்டும். இதில் புளி சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் இதில் காய்ந்த மிளகாய்களை கிள்ளி போட்டு, தக்காளியை சேர்த்து வதக்க


வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

வதங்கியவுடன், அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிட வேண்டும். ஆறிய பின் ஒரு


மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனை தாளித்து வைத்துக்
கொள்ளுங்கள். அருமையான தக்காளிச் சட்னி ரெடி!

இப்பொழுது, பனியாரச்சட்டியை அடுப்பில் வைத்து காயந்ததும், குழிகள் எண்ணெய்


ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் மாவை ஊற்றி வேக விட
வேண்டும். எல்லா பக்கம் சமமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அருமையான
கார பனியாரம் இப்போது ரெடி!

தக்காளி சட்னியுடன் இந்த காரப் பனியாரத்தைச் சாப்பிட சாப்பிட்டுக் கொண்டே


இருக்கலாம். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த எளிய உணவை சமைத்து மகிழுங்கள்.
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா போதும்;
சத்தான சுவையான சாதம் 10 நிமிஷத்துல
ரெடி…!

Variety Rice Tamil News: கறி இலை அல்லது கறிவேப்பிலை என அழைக்கப்படும்
இந்த சத்து மிகுந்த இலையில் ஏராளமான நன்மைகள் நிரம்பியுள்ளன. இவற்றில் உள்ள
விட்டமின்கள் முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றையை
மேம்படுத்துகிறது. அதே வேளையில் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க,
மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை
குணப்படுத்தவும் கறிவேப்பிலை நமக்கு உதவுகிறது.

இப்படி பல வித நன்மைகளை உள்ளடக்கியுள்ள கறிவேப்பிலையில் எப்படி சாதம்


செய்வது என்பது குறித்து பார்க்கலாம்…

கறிவேப்பிலை சாதம் செய்யத் தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 1 கப்
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
மிளகு – 8
எள் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4 எண்
பெருங்காயம் (அ) அசாஃபோடிடா தூள் – 1/4 தேக்கரண்டி
புளி – சிறிய துண்டு

சமையலுக்கு
சமைத்த அரிசி – 1 கிண்ணம்
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு 2


தேக்கரண்டி கடலை பருப்பு, 1 1/2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, 1 தேக்கரண்டி
சீரகம், 1/4 தேக்கரண்டி வெந்தயம் 8 மிளகு, 1/2 தேக்கரண்டி எள், 4 காய்ந்த மிளகாய்
ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். பின்னர் 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் (அ) அசாஃபோடிடா தூள், சிறிய துண்டு புளி மற்றும் 1 கப்
கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.

இவை நன்கு ஆறிய பிறகு அவற்றை ஒரு மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து
தனியாக வைத்துக்கொள்ளவும்.

இப்போது, மற்றொரு பாத்திரம் எடுத்து அதில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி


சூடேற்றவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி கடலை பருப்பு, 1 தேக்கரண்டி உளுந்தம்
பருப்பு, 1/2 தேக்கரண்டி கடுகு, 2 டீஸ்பூன் வேர்க்கடலை 2 காய்ந்த மிளகாய்
இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு வறுக்கவும்.

பிறகு சமைத்து வைத்துள்ள சாதத்தை அவற்றி கொட்டி சேர்க்கவும். அவற்றோடு


முன்னர் அரைத்து வைத்துள்ள பொடியையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து
நன்கு கிளறவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த ஊட்டச்சத்து மிகுந்த கருவேப்பிலை சாதம் தயாராக


இருக்கும்.

வீடே மணக்கும் அருமையான கல்யாண


ரசப்பொடி… சீக்ரெட் என்ன தெரியுமா?
Rasam Powder Recipe in tamil: ‘உணவே மருந்து’ என்பார்கள் அந்த
பழமொழிக்கேற்ப உள்ள உணவுகளில் ரசமும் ஒன்று. ஏனென்றால் ரசத்தில்
முக்கியமான சில மசாலா பொருட்களை சேர்க்கிறோம். அவை நமது உடலில் ஏற்படும்
பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. மேலும் பாக்டீரியாவால் வரும்
தொல்லைகளுக்கு முடிவு கட்டுகிறது.

இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ள ரசத்திற்கு எப்படி பொடி செய்யலாம்


என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மல்லி – 1/2 கப்


கருவேப்பிலை
மிளகு – 1/4 கப்
சீரகம் – 1/4 கப்
கடலை பருப்பு – 1/4 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
மஞ்சள் தூள்
பெருங்காயம்

செய்முறை

ரசம் பொடி செய்வதற்கு பொருட்களை தனித்தனியாக வறுத்து கொள்வது


அவசியமாகும். அந்த வகையில் முதலில் ஒரு சிறிய கனமான பாத்திரம் எடுத்து அதில்
மல்லியை கொட்டி அவற்றை மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுக்கவும்.
வாசனைக்காக சில கருவேப்பிலைகளை சேர்த்துக்கொள்ளலாம். வறுத்த பிறகு
அவற்றை தனியாக எடுத்தது வைத்துக்கொள்ளலாம்.

பின்னர், மிளகு மற்றும் சீரகம் எடுத்து தனித்தனியாக வறுத்து கொள்ளவும். பிறகு


கடலை மற்றும் துவரம் பருப்பை ஒன்றாகவே சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து காய்ந்த மிளகாயையும் தனியாக வறுத்து எடுக்கொள்ளவும்.

இப்போது வறுத்த அனைத்து பொருட்களும் நன்றாக சூடு ஆறிய பிறகு, மிக்சியில்


ஒன்றாக போட்டு ஓரளவு நன்றாக அரைத்து கொள்ளவும். அப்படி அரைத்த பிறகு
அவற்றுடன் மஞ்சள் போடி மற்றும் பெருங்காயம் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக
அரைக்கவும்.

நீங்கள் எதிர்பாத்த ரசம் பொடி தயாராக இருக்கும். அவற்றை ஒரு டப்பாவில் எடுத்து
வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே


எப்படி செய்யனும்னு தெரியுமா?
நாம் சாம்பார் வைக்கும்போது ஒவ்வொரு மசாலாப் பொடியையும் தனித்தனியாக
சேர்த்து சாம்பார் வைப்போம். ஆனால் இவ்வாறு செய்யும் போது மசாலா பொடிகளின்
அளவை சரியான அளவில் சேர்க்காவிட்டால் சாம்பார் சுவையாக வராது. இதற்கு
தீர்வாக ஒரே மசாலாவாக, ஒரு சாம்பார் பொடியை தயார் செய்து வைத்து
வைத்துவிட்டால், சாம்பார் வைக்கும் போது எளிதாக இந்த மசாலாவை சேர்த்து
சுவையான சாம்பார் வைக்கலாம். வாருங்கள் இந்த எளிய, வாசனையுடன் கூடிய,
சுவையான தஞ்சாவூர் ஸ்டைல் சாம்பார் பொடியை, வீட்டிலேயே எப்படி செய்வது
என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் – 100 கிராம்

மல்லி – 100 கிராம்

கடலை பருப்பு – 20 கிராம்

துவரம் பருப்பு – 20 கிராம்

உளுந்து – 20 கிராம்

அரிசி – 20 கிராம்

சீரகம் – 10 கிராம் அல்லது 4 டீஸ்பூன்

வெந்தயம் – 10 கிராம் அல்லது 2 டீஸ்பூன்


மஞ்சள் தூள் – 4 கிராம் அல்லது 1 டீஸ்பூன்

பெருங்காயம் – 4 கிராம் அல்லது 1 டீஸ்பூன்

செய்முறை

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து காய்ந்த மிளகாய், மல்லி, துவரம் பருப்பு, கடலைப்
பருப்பு, உளுந்து, அரிசி, சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக,
மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆறிய பின், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, ஒரு மிக்ஸியில் போட்டு பாதி அளவு
அரைபடுமாறு அரைக்க வேண்டும்.

பின்னர் இதனுடன், பெருங்காயம் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள


வேண்டும்.

இப்போது நல்ல வாசனையுடன் கூடிய சுவையான சாம்பார் பொடி ரெடி!

இந்த பொடியை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக்


கொள்ளுங்கள். இதனை நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம். நீங்கள் சாம்பார்
வைக்கும் போது இந்த சாம்பார் பொடியை சேர்த்து சுவையான சாம்பார் செய்து
சாப்பிடுங்கள்.

மசாலா கலவை முக்கியம்: அய்யர் வீட்டு சாம்பார்


ரகசியம் இதுதான்!

சிலருக்கு வீட்டில் செய்யும் சாம்பாரை விட திருமணங்களில் பரிமாறப்படும் சாம்பார்


மிகவும் பிடிக்கும். குறிப்பாக பிராமணர் வீட்டு விசேஷங்களில் வைக்கப்படும் சாம்பார்
எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது நமக்கு மிகவும்
அவசியமான ஒன்றாக உள்ளது. தமிழ்-பிராமண சமூகத்தின் முக்கிய அம்சம் பாரம்பரிய
ஆயுர்வேத உணவான சாத்விக் வகை உணவுகள் தான். செயற்கை பொருட்களின்
எந்தவொரு பயனும் இல்லாமல் தயாரிக்கப்படும் இவ்வகையான உணவுகள் உடலை
வலுப்படுத்தும்.

தமிழ்-பிராமண திருமணங்களில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் வாழை இலையில்


பரிமாறப்படும் உணவை ஒருபோதும் தவறவிடுவதில்லை. வாழை இலையில்
வெவ்வேறு உணவு பண்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு
பரிமாறப்படும் ..குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டிய ஊறுகாய், சிப்ஸ், அப்பளம்
, இலையின் குறுகிய பக்கத்தில் வழங்கப்படுகின்றன. காய்கறி கிரேவி மற்றும் வறுத்த
உணவுகள் கறி, கூட்டு, பொரியல்,பச்சடி போன்றவை இலையின் பரந்த பக்கத்தில்
வழங்கப்படுகின்றன. முக்கியமாக கல்யாண சாம்பார். திருமணங்களில் பரிமாறப்படும்
சாம்பார் வீட்டில் வைக்கும் வழக்கமான சாம்பாரை விட கெட்டியாகவும் காய்கறிகள்
அதிகமாகவும் சேர்க்கப்பட்டிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்தி
தயாரிக்கப்படுவதால், கதம்ப சாம்பார் என்றும் அழைக்கப்படுகிறது

தற்போது சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் பூசணி,கத்திரிக்காய்,முருங்கைக்காய் (வெட்டியது) – 3 அல்லது 4 துண்டுகள்


புளி – எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு /100 கிராம்
நல்லெண்ணெய் – 1/4 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு
கடுகு -1/2 ஸ்பூன்
வெந்தயம் -1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
பச்சை மிளகாய் -1
கறிவேப்பில்லை, கொத்தமல்லி தேவையான அளவு

சாம்பார் மசாலா செய்ய தேவையான பொருட்கள்


நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
மல்லி -2 ஸ்பூன்
கடலை பருப்பு -1 ஸ்பூன்
கருப்பு உளுந்து -1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
வெந்தயம் -1/4 ஸ்பூன்
அரைத்த தேங்காய் -1 ஸ்பூன்

செய்முறை

சாம்பார் மசாலா தயாரிக்க, அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் 2 தேக்கரண்டி


எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ,காய்ந்த மிளகாய், வெந்தயம்
சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இறுதியாக, அரைத்த தேங்காயைச் சேர்த்து சிறிது
நேரம் வறுக்கவும்.பிறகு வறுத்தவற்றை ஆற வைத்து மிக்சியில் பொடியாக அரைத்து
கொள்ளவும்.

புளி சாறு எடுத்து அதில் காய்கறிகள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக
வைக்கவும். தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்க்கவும். காய்கறிகள் வெந்த பின்பு
வேகவைத்த துவரம் பருப்பைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

பின்னர், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.தேவைகேற்ப உப்பு


சேர்க்கவும்.

தாளிப்பதற்கு ஒரு கரண்டி எண்ணெய் விட்டு அதில் கடுகு, வெந்தயம்,


கறிவேப்பில்லை ,சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து
தாளித்து சாம்பாரில் கொட்டவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

மணக்க மணக்க கல்யாண சாம்பார் ரெடி..

வறுத்து அரைத்தால் போதும்… வித்தியாச


முறையில் சாம்பார்!
Simple Sambar Recipe Tamil : எப்போதும் பருப்பை வேகவைத்து சாம்பார்
செய்யும் செய்முறைக்கு பதிலாக, பருப்பை வறுத்து அரைத்து இப்படி செய்து
பாருங்கள். வித்தியாச சுவை மட்டுமல்லாமல், இதனை செய்வதற்கான நேரமும்
குறைவு.

தேவையான பொருள்கள் :  

வறுத்து அரைக்க :

துவரம் பருப்பு – 1/4 கப்


கொத்தமல்லி விதைகள் – 3 டீஸ்பூன்
கருப்பு மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
வெந்தய விதைகள் – 1/8 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 4-6
எண்ணெய் – 2 டீஸ்பூன்

சாம்பாருக்கான பிற பொருட்கள்

சின்ன வெங்காயம் – 20
நறுக்கிய தக்காளி – 1
பெல் பெப்பர் க்யூப் – 1
கெட்டியான புளி சாறு – 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்

செய்முறை :

பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் கொத்தமல்லி விதைகள், கருப்பு


மிளகுத்தூள், வெந்தயம், கடலை பருப்பு, உலர்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றைச்
சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது துவரம் பருப்பைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு  இந்தக்
கலவையைக் குளிரவைக்கவும்.

குளிர்ந்ததும், வறுத்த பொருட்களை அடர்த்தியான பேஸ்ட்டாக அரைக்கவும்.


கெட்டியான பேஸ்ட் தயாரிக்க போதுமான தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்போது குக்கரில் இருக்கும் மீதமான எண்ணெய்யை மீண்டும் சூடாக்கவும். அதில்,


கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

பிறகு, வெங்காயம், தக்காளி மற்றும் பெல் பெப்பர் ஆகியவற்றைச் சேர்த்து 2


நிமிடங்கள் வதக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் புளி சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

இப்போது அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் வரை
சமைக்கவும்.

அழுத்தம் வெளியானதும் சாம்பாரின் நிலைத்தன்மையைச் சரிபார்க்கவும். உங்கள்


விருப்பத்திற்கு இது மிகவும் கெட்டியானதாக இருந்தால் இருந்தால் 1 / 4-1 / 2 கப்
தண்ணீர் சேர்த்து ஒரு கொதி நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

இறுதியாகக் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சாம்பாருடன் சாதத்தைச் சேர்த்துப்


பரிமாறவும்.

வீடே மணக்கும் சுவையான வெண்டைக்காய்


மோர் குழம்பு!
.
Tasty Ladysfinger Mor Kozhambu recipe Tamil

Tasty Ladysfinger Mor Kozhambu recipe Tamil : காரம் அதிகம் இல்லாத


மோர்க் குழம்பு யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் வித்தியாச முறையில் இதுபோன்று
மோர்க் குழம்பு செய்து பாருங்கள், மோர் பிடிக்காதவர்கள் கூட விரும்பி
சாப்பிடுவார்கள். இதன் ஸ்பெஷல் பேஸ்ட், மோர் குழம்பின் ருசியை அதிகரிக்கச்
செய்கிறது.

மசாலா பேஸ்டுக்கு:

துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்


பச்சரிசி  – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
சுடுதண்ணீர் – ½ கப்
தேங்காய் (அரைத்தது) – ½ கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் – 1
இஞ்சி – 1 இன்ச்

குழம்புக்கு :

தயிர் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெண்டைக்காய் – 250 கிராம்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் (உடைந்தது) – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை சிறிதளவு
மஞ்சள் – ¼ டீஸ்பூன்
உப்பு – ¾ டீஸ்பூன்

செய்முறை :
 
முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் துவரம் பருப்பு, பச்சரிசி, கொத்தமல்லி விதைகள்
மற்றும் சீரகத்தை,
½ கப் சூடான தண்ணீரில் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இப்போது ஊறவைத்த பருப்பை தண்ணீருடன் மிக்சி ஜாருக்கு மாற்றி, அதில் தேங்காய்,
கறிவேப்பிலை, மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீரைச்
சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இந்தத் தேங்காய் கலவையை 1 கப் தயிருடன் ஒரு பெரிய கிண்ணத்தில் கலந்து


வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பெரிய கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் சுத்தம் செய்த
வெண்டைக்காயை சேர்க்கவும்.

மிதமான தீயில் வெண்டைக்காய் கருகாத அளவிற்கு அதன் ஒட்டும் தன்மை மாறும்


வரை வறுக்கவும்.

கடாயிலிருந்து வறுத்த வெண்டைக்காயைத்  தனியே ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பிறகு அதே கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு, சீரகம், வெந்தயம், உலர்ந்த
சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், சில கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து
தாளிக்கவும்.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தேங்காய் தயிர் கலவையை இதில் ஊற்றி உப்பு


சேர்க்கவும்.

இந்தக் கலவையை நன்கு கலந்துவிட்ட பிறகு, வறுத்த வெண்டைக்காயை சேர்க்கவும்.

5 நிமிடங்கள் வரை வேகவைத்து, தேவைப்பட்டால் தண்ணீரைச் சேர்த்து தேவையான


நிலைத்தன்மையைச் சரிசெய்யவும்.

அவ்வளவுதான் சுவையான மோர் குழம்பு தயார். இதனை, சூடான சாதத்துடன் சேர்த்து


சாப்பிடலாம்.

ஹோட்டல் ஸ்டைலில் காரசாரமான


வத்தக்குழம்பு ரெடி!
Spicy Vatha Kuzhambu Recipe Tamil : ஹோட்டல் ஸ்டைலில் பார்ப்பரியமான
வத்தக்குழம்பு இந்த முறையில் செய்து பாருங்கள். காரசாரமான இந்தக் குழம்பு உங்கள்
தினசரி குழம்புகளிலிருந்து வித்தியாச ருசியைத் தரும். நூறு சதவிகித பாராட்டு நிச்சயம்.

புளி ஊறவைக்க :

1 எலுமிச்சை அளவிலான புளி அல்லது 1 டேபிள்ஸ்பூன் இறுக்கமாக நிரம்பிய புளி


1 கப் சுடுதண்ணீர்

வத்தக்குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :

நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வத்தல் – 3 டேபிள்ஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய், உடைந்த மற்றும் விதைகள் நீக்கப்பட்டது – 1 முதல் 2
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
சாம்பார் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
அரிசி மாவு – 1 டீஸ்பூன் (விரும்பினால் மட்டும்)
வெல்லம் – ½ டீஸ்பூன் (விரும்பினால் மட்டும்)

புளி ஊறவைக்க செய்முறை :

ஒரு கிண்ணத்தில் 1 எலுமிச்சை அளவிலான புளி அல்லது 1 டேபிள்ஸ்பூன் இறுக்கமாக


நிரம்பிய புளி எடுத்து, அதனை 1 கப் சூடான நீரில் ஊறவைக்கவும். 20 முதல் 30
நிமிடங்கள் இதனை மூடி ஊற வைக்கவும். பிறகு, புளியை பிழிந்து கரைசலை மட்டும்
தனியே பிரித்து எடுக்கவும்.

வத்தக்குழம்பு செய்முறை :

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு, வெப்பத்தை குறைத்து, கடுகு


சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், வெந்தயம், உலர்ந்த சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும்
பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

சிவப்பு மிளகாய் நிறம் மாறும் வரை வறுக்கவும் பிறகு நன்கு கிளறவும்.

இதில் இப்போது, மனதக்காளி வத்தல் சேர்க்கவும்.

இந்தக் கலவையை நன்கு கிளறி, மணத்தக்காளியின் நிறம் மாறும் வரை சில நொடிகள்
வறுக்கவும்.

இப்போது வெப்பத்தை அணைத்து, சாம்பார் தூள் சேர்த்து, ஒரு நிமிடங்கள் வரை


வறுக்கவும்.

இதில் இப்போது புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.

சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து வத்தக்குழம்பை சுமார் 25


முதல் 30 நிமிடங்கள் நடுத்தர-குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

கிரேவி அளவிற்கு கெட்டியாகும் வரை தொடர்ந்து கலந்து விடவும்.

பிறகு அரிசி மாவு மற்றும் வெல்லம் சேர்க்கவும். இந்த இரண்டும் சேர்ப்பது


உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்தான்.

இது சேர்த்தபிறகு வத்தக்குழம்பை 4 முதல் 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும். சுவை சரிபார்த்து உப்பு


சேர்த்துக்கொள்ளலாம். சூடான சாதத்தோடு சுவையான வத்தக்குழம்பை பரிமாறலாம்.

அறுசுவை நிறைந்த தக்காளி தொக்கு : எளிதில்


செய்வது எப்படி?

Thakkali Thokku recipe Tamil : சிறிதும் நேரமில்லாமல் நகர்புறங்களில் பணி


செய்து கொண்டிருக்கும் நண்பர்களே ஒருமுறை தக்காளி தொக்கு இந்த முறையில்
செய்து பாருங்கள். மிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் தயாராகும் இந்த தொக்கை,
மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். இனிப்பு, புளிப்பு,
கசப்பு உள்ளிட்ட அறுசுவையும் இந்த தொக்கில் இருக்கிறது.

தேவையான பொருள்கள் :

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
பெரிய தக்காளி (நறுக்கியது) – 6
சிறிய எலுமிச்சை அளவிலான புளி
வெல்லம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் – ½ டீஸ்பூன்
காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

முதலில், சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி பெரிய தக்காளியை நன்கு வதக்கவும்.

பிறகு புளி, வெல்லம் சேர்த்து கலந்து, இதனை மூடி 10 – 15 நிமிடங்கள் அல்லது


தக்காளி மென்மையாக மாறும் வரை சமைக்கவும்.

தக்காளி நன்கு குழைந்த பிறகு அதனோடு வறுத்து பொடித்த வெந்தயம் மற்றும் கடுகு,
மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.

மசாலா நன்றாக இணைக்கப்பட்டு எண்ணெய் பிரிக்கப்படுவதை உறுதி செய்யும் வரை


நன்கு கலந்து விடவும்.

ஒரு சிறிய சூடான கடாயில், எண்ணெயை ஊற்றி அதில் கடுகு, பெருங்காயத்தூள்


மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
தயாரிக்கப்பட்ட தக்காளி தொக்கு மீது தலைப்பை ஊற்றவும்.

இறுதியாக, இந்தக் கலவையை நன்றாக கலந்துவிட்டால் சுவையான தக்காளி தொக்கு /


தக்காளி ஊறுகாய் ரெடி.

இதனை சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.

மேலும், காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மாதங்கள் வர


பயன்படுத்தலாம்.

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் ருசியான


பருப்பு ரசம்!
Parupu Rasam Dal Rasam Recipe Tamil : தினமும் ஒரேபோன்ற ரசம் வைத்து
சலித்துவிட்டதா? மிகவும் எளிதாக, வித்தியாசமாக இந்த பருப்பு ரசம் செய்து
பாருங்கள். மீண்டும் மீண்டும் ருசிக்கத் தூண்டும்.

மசாலா கலவைக்குத் தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி விதைகள் – 1 டீஸ்பூன்


சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – ¾ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு

மற்ற பொருட்கள்:

நெய் / தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்


கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 3 பற்கள்
தக்காளி (நறுக்கியது) – 1
புளிச் சாறு – 1 கப்
கீறிய பச்சை மிளகாய் – 1
மஞ்சள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வேகவைத்த துவரம் பருப்பு – 2 கப்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி (நறுக்கியது) – ஒரு கைப்பிடி

செய்முறை :

முதலாவதாக, மசாலா கலவையைத் தயாரிக்க சூடான கடாயில் கொத்தமல்லி


விதைகள், சீரகம், மிளகு, வெந்தயம், உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் சில
கறிவேப்பிலை சேர்த்து மசாலா நறுமணமாக மாறும் வரை உலர்ந்த நிலையில்
வறுக்கவேண்டும்.

இந்தக் கலவை முற்றிலும் குளிர்ந்ததும், தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றி, அது சூடானதும் அதில் கடுகு சேர்க்கவும்.

கடுகு வெடித்ததும், சீரகம், பெருங்காயத்தூள், உலர்ந்த சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை


மற்றும் பூண்டு சேர்த்துக் குறைத்த தீயில் வதக்கவும்.

இப்போது தயாரிக்கப்பட்ட மசாலா கலவையைச் சேர்த்து மசாலா நறுமணமாக மாறும்


வரை வதக்கவும்.

பிறகு, தக்காளி, புளிச் சாறு, பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து,
அதனை மூடி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

இப்போது, வேகவைத்த துவரம் பருப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.

2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறுதியாக, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து சூடான


சாதத்துடன் பருப்பு ரசத்தைச் சேர்த்து சாப்பிடலாம்.
வித்தியாச முறையில் எளிமையான கதம்ப
சாம்பார் தயார்!
Samar Recipe Simple Sambar Recipes Lunch recipe Tamil

Sambar Recipe Sambar Rice Tamil : சமையலில் எப்படி தினம் தினமும்


வித்தியாசத்தை கொண்டு வருவது என தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, நிச்சயம் இந்தக்
கதம்ப சாம்பார் கைகொடுக்கும். உங்களுக்கு பிடித்தாள் காய்கறிகளை சேர்த்து
இதுபோன்ற முறையில் சாம்பார் வைத்துப் பாருங்கள், பாராட்டுகள் நூறு சதவிகிதம்
உறுதி!

தேவையான பொருள்கள்

பிரஷர் குக்கருக்கு

துவரம் பருப்பு – ½ கப்


தண்ணீர் – 2 கப்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
முள்ளங்கி (நறுக்கியது) – 1 கப்
முருங்கைக்காய் – 6 துண்டுகள்
கேரட் (நறுக்கியது) – ½ கப்

மற்ற மூலப்பொருள்கள்:

புளி சாறு – 1 கப்


நீளமாக வெட்டிய பச்சை மிளகாய் – 1
பொடியாக நறுக்கிய தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
வெல்லம் – ¾ டீஸ்பூன்
வெங்காயம் – 1/2
உப்பு – தேவையான அளவு
சாம்பார் தூள் – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் / சமையல் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – ¾ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
உலர்ந்த சிவப்பு மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு

பிரஷர் குக்கர்:

முதலில் ஒரு பிரஷர் குக்கரில் அரை கப் நன்கு கழுவிய துவரம் பருப்பை எடுத்துக்
கொள்ளுங்கள்.

அதோடு 2 கப் தண்ணீர் சேர்க்கவும். அல்லது பருப்பை சமைக்க தேவையான தண்ணீரை


சேர்த்துக்கொள்ளுங்கள்.

பிறகு மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.

அதன்மேல், ஒரு சிறிய கிண்ணத்தில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை


(முள்ளங்கி, கேரட், முருங்கைக்காய்) சேர்த்து வைக்கவும். கிண்ணத்தில் தண்ணீர் சேர்க்க
வேண்டாம்.

பின்னர் நடுத்தர சுடரில் 5 விசில்களுக்கு பிரஷர் குக்கரை விடவும்.

இறுதியாக, அழுத்தம் வெளியானதும், சமைத்த காய்கறிகளை தனியே எடுத்து,


பருப்பை நன்கு கடைந்துகொள்ளவும்.

செய்முறை:

முதலாவதாக, ஒரு பெரிய கடாயில் 1 கப் புளி சாற்றை பிழியவும்.

மேலும் அதில், மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

விரும்பினால் வெல்லத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்பு, இந்தக் கலவையை கொதிக்க வைக்கவும்.

இப்போது, வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.


இதனை நன்றாக கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்னர் சமைத்த காய்கறிகளைச் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். காய்கறிகள்


ஏற்கெனவே சமைக்கப்பட்டுள்ளதால், அதிகம் சமைக்க வேண்டாம்.

மேலும், கடைந்த பருப்பைச் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

சாம்பரை கொதிக்க வைக்கவும். அஜீரணத்திற்கு காரணமாக இருக்கும் பருப்பைச்


சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க வைக்க வேண்டாம்.

பின்னர் சாம்பார் பொடியைச் சேர்த்து விரைவாக கலக்கவும். இல்லையெனில் சாம்பார்


தூள் கட்டிகளை உருவாக்கும்.

மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

ஒரு சிறிய கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு, பெருங்காயத்தூள், சிவப்பு


மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

அவை வெடித்தவுடன், உடனடியாக சாம்பாரில் சேர்க்கவும்.

இறுதியாக, காய்கறி சாம்பருக்கு ஒரு நல்ல கலவையை கொடுத்து சூடான சாதத்துடன்


பரிமாறவும்.

குறைந்த நேரத்தில் வாய்க்கு ருசியா மோர்


குழம்பு! எப்படி செய்யலாம்

Simple Mor Kuzhambu Mor Kolambu Recipe Tamil : குறைந்த நேரத்தில்


செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு.

சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து


சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை
அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள ஸ்பெஷல் பேஸ்ட் சேர்த்து மோர் குழம்பு செய்து
பாருங்கள். நிச்சயம் மறுமுறை செய்வீர்கள்.
மசாலா பேஸ்ட்டுக்கு :

துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்


சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சரிசி – ½ டீஸ்பூன்
தனியா விதைகள் – 2 டீஸ்பூன்
தண்ணீர் (ஊறவைக்க) – 1/2 கப்
துருவிய தேங்காய் – ½ கப்
பச்சை மிளகாய் – 3

மோர் குழம்புக்கு :

பூசணி / வெள்ளை பூசணிக்காய் / வெள்ளரி (நறுக்கியது) – 1½ கப்


தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
சற்று புளித்த தயிர் – 1 கப்

தாளிக்க :

தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்


கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

முதலாவதாக, ஒரு சிறிய கிண்ணத்தில் துவரம் பருப்பு, சீரகம், பச்சரிசி மற்றும்


கொத்தமல்லி விதைகளைச் சேர்த்து, அதில் தண்ணீர் கலந்து 30 நிமிடங்கள் ஊற
வைக்கவும்.

[பிறகு ஊறவைத்த பருப்பு மற்றும் மசாலாப் பொருள்களோடு தேங்காய் மற்றும் பச்சை


மிளகாய் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பெரிய கடாயில் நறுக்கிய பூசனிக்காயைச் சேர்த்து, அதில் தண்ணீர்,
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் மூடி
வைக்கவும்.

பிறகு, பூசனிக்காயோடு தயாரிக்கப்பட்ட தேங்காய் மசாலா பேஸ்ட்டை சேர்க்கவும்.

குறைந்த தீயில் இந்தக் கலவையோடு தயிர் சேர்க்கவும். தயிர் நன்றாக இணைக்கும்


வரை தொடர்ந்து கலந்துவிடவும்.

இப்போது, சூடான வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு,


பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

தயார் செய்து வாய்த்த மோர்க் குழம்பு மீது இந்தத் தாளிப்பை ஊற்றினால்


சுவையான மோர்க் குழம்பு தயார்.

வெரைட்டி சாதத்திற்கு ஏற்ற உருளை வறுவல்


இதுதான்!
Potato fry recipe, potato fry recipe in tamil : உருளைக்கிழங்கு வறுவல் புதினா
புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா
வகையான கலவை சாதத்திற்கும் பொருத்தமா இருக்கும்.

சின்ன உருளைக் கிழங்கு – 1 கிலோ


வெங்காயம் – 100 கிராம்
தாளிக்க – 4
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
கடுகு,உளுத்தம் பருப்பு – தாளிக்க
கடலைப் பருப்பு – தாளிக்க தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:

உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து கொள்ளவும். ஒரு வாணலியில்


எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
கறிவேப்பிலை, போட்டு தாளித்ததும் அதில் இஞ்சிபூண்டு விழுது, வெங்காயம்
இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி பின் உருளைக் கிழங்கையும் சேர்த்து


நன்கு கிளறவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள், உப்பு என
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும்.

பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித் தழை தூவிப்
பரிமாறவும். சுவையான சின்ன உருளைக்கிழங்கு வறுவல் தயார்.

பாகற்காய் ஃப்ரை.. இப்படி செஞ்சா கசப்பு என்ற


பேச்சுக்கே இடமில்லை!
pavakkai fry recipe pavakka recipes tamil : நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும்
நன்மைத் தரும் பாகற்காய் வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ
பார்க்கலாம்.பாகற்காய் வறுவல் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை

இதனை நீங்கள் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு சேர்த்து
சாப்பிட்டால் அருமையாக இருக்கும். ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் வறுவல்.

தேவையான பொருட்கள் :

சின்ன/பெரிய பாகற்காய் – 1 /4 கிலோ


மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
தனியா பொடி – 1 தேக்கரண்டி
சீரகப்பொடி – 1 /2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – கொஞ்சம்
தயிர் – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – .10
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – கொஞ்சம்

செய்முறை :

* பாகற்காயை நன்கு கழுவி விதையை எடுத்து விட்டு நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை நன்கு தட்டிகொள்ளவும்.

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாகற்காய் அத்துடன், மிளகாய், தனியா, மஞ்சள், சீரகப்


பொடி, தயிர், பூண்டு, உப்பு போட்டு நீர் ஊற்றாமல் பிசையவும். இதனை அப்படியே
ஒரு மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.

* பிறகு, அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப்


போட்டு வதக்கவும். பின்னர் பிசறி வைத்த பாகற்காயை போடவும்.

* தீயை மிதமாக வைக்கவும். அடிக்கடி பிரட்டி விடவும். 15 நிமிடத்தில் காய் வெந்து,


நல்ல கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும்.

* கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இந்த பாகற்காய் வறுவல் கசப்பாக இருக்காது. சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு நல்ல
துணைக் கறி ரெடி.

வீட்டையே மணமாக்கும் ஸ்ரீரங்கம் வத்தக்


குழம்பு: ஈஸியான செய்முறை

Lifestyle news in tamil:   தென்னிந்திய சமையல்களில் சாம்பாருக்கு முக்கிய இடம்


உண்டு. அதிலும் முருங்கை சாம்பார், முள்ளங்கி சாம்பார், பருப்பு சாம்பார் என வகை
வகை சாம்பார்களை செய்து ருசிப்போம். அது போலவே வத்தக் குழம்பு நாம்
விரும்பிய காய்கறி எல்லாம் சேர்த்து செம டேஸ்டியாக வைத்து
உண்போம். கிராமங்களில் சாம்பாரை விட வத்தக்
குழம்பு, புளிக்குழம்பு போன்றவற்றையே மக்கள் விரும்பி உண்பார்கள். ஏனென்றால்
அவைகளை நன்றாக சுண்ட வைத்து, மறு நாள் காலையில் சாப்பிட்டால், குண்டான்
சோறு சாப்பிடலாம். 

வத்தக் குழம்பை பொறுத்தவரை, இதில் பருப்பிற்கு வேலை இல்லை


என்பதால், சாம்பார் போல நிறைய நேரம் ஆகாது. இப்படி விரைவிலும்,எளிதிலும்
செய்யக் கூடிய வத்தக் குழம்பு தயிர் சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் அடி தூளாக
இருக்கும். அதே போல வெறும் வெள்ளை சாதத்திற்கு வைத்து சாப்பிட்டால் அதை
விட அமர்க்களமாக இருக்கும். வழக்கமாக ஓட்டலில் வழங்கும் வத்தக் குழம்பை விட
நமது வீட்டில் நல்எண்ணெயில் செய்யக்கூடிய வத்தக் குழம்பிற்கு போட்டி எதுவும்
இல்லை.    

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வித டேஸ்டில் வத்தக் குழம்பு


தயார் செய்கிறோம். காரைக்குடி ஒரு டேஸ்ட் என்றால் மதுரையில் சிறிது வித்தியாமாக
இருக்கும். அது போன்று தான் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் தாயார் செய்யப்படும் வத்தக்
குழம்பு வேற லெவல் டேஸ்ட்டாக இருக்கும். இதில் வழக்குமாக சேர்க்கும்
மசாலாக்களை தவிர்த்து ஆரோக்கியமான மசாலாவை பயன்படுத்துகிறார்கள். எனவே
தான் இந்த பகுதியில் கிடைக்கும் வத்தக் குழம்பு அவ்வளவு அருமையாக உள்ளது. 

தேவையான பொருட்கள்:

4 கப் –  எலுமிச்சைச் சாறு

ஒரு சில – சின்ன வெங்காயம் 

முருங்கைக்காய் (விரும்பினால்)

1 – நெல்லிக்காய் அளவிலான வெல்லம்

உப்பு – தேவையான அளவு 

100 மிலி – நல்எண்ணெய்

வறுப்பதற்கு: 

1 தேக்கரண்டி – கடுகு விதைகள்
1/2 தேக்கரண்டி – பெருங்காய பொடி 

2 – சிவப்பு மிளகாய்

ஒரு சில – கறிவேப்பிலை

1/2 தேக்கரண்டி – மஞ்சள் தூள்

வத்தக்குழம்பு பொடி செய்வதற்கு:

2 தேக்கரண்டி – வெந்தயம், ஒரு உலர்ந்த பொன்னிறமாக வறுத்து தூள்

4 தேக்கரண்டி – மல்லி 

6 – முழு சிவப்பு மிளகாய்

2 தேக்கரண்டி – மிளகு சோளம்

1 தேக்கரண்டி – சீரகம்

2 தேக்கரண்டி – டூர் பருப்பு

2 தேக்கரண்டி – சன்னா பருப்பு

1 தேக்கரண்டி –  அரிசி

2 தேக்கரண்டி – உளுந்த பருப்பு

ஒரு சில கறிவேப்பிலை

நீங்கள் செய்ய வேண்டியது:

* வத்தக் குழம்பு பொடி செய்வதற்காக நாம் பட்டியலிட்டுள்ள அனைத்து


பொருட்களையும் ஒவ்வொன்றாக எடுத்து, அடுப்பில் வைக்கப்பட்ட ஒரு  பாத்திரத்தில்
பொன்னிறமாக உலர்த்தி வறுக்கவும், அவை குளிர்ந்த பின் ஒன்றாக (வறுத்த வெந்தயம்
தவிர) நன்றாக பொடி செய்யவும்.  
* நல்எண்ணெயில் நான்கில் மூன்று பங்கு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் இட்டு
சூடாக்கவும்.

* கடுகு, சிவப்பு மிளகாய், பெருங்காய பொடி சேர்க்கவும். அவை


பிரிந்ததும், கறிவேப்பிலை சேர்க்கவும்.

* இப்போது சின்ன வெங்காயம் மற்றும் முருங்கைக்காய் துண்டுகளை


அதில் 2 நிமிடங்கள் வறுக்கவும்.

* வறுத்த வெங்காயத்தில் தூள் வெந்தயம் தூள் சேர்த்து கிளறவும்.

* அதில் எலுமிச்சை புளி சாற்றை ஊற்றவும்.

*பின்னர்  உப்பு, மஞ்சள் தூள் மற்றும் வெல்லம் சேர்க்கவும்.

* வெங்காயம் / முருங்கைக்காய் மென்மையாகும் வரை வேகவைக்கவும்.

* அதன் பின் வாணலியில் வத்தக் குழம்பு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

* குழம்பு கெட்டியாகும் வரை காத்திருக்க வேண்டும். 

* இறுதியாக, மீதமுள்ள எண்ணெயை வாணலியில் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த திருச்சி ஸ்ரீரங்கம் வத்தக்


குழம்பு தயாராக இருக்கும். இதை வெறும் வெள்ளை சாதத்திலோ அல்லது தயிர்
சாதத்திற்கோ வைத்து உண்ணலாம்.  

காரசாரமான பூண்டு சட்னி… தோசை, இட்லிக்கு


அதிரடி காம்போ!
poondu chutney recipe garlic chutney recipe in tamil :
பூண்டு சட்னி இட்லி , தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சாதத்திற்கும் ஊறுகாய்
போல் தொட்டுக்கொள்ளலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ரொம்ப தூரம் பிரயாணம் செய்பவர்கள் இதை தாரளமாக எடுத்துச் செல்லலாம்.


இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. இட்லிக்கு மட்டும் இல்லாமல்
குழிப் பணியாரம், அரிசி ரவையில் செய்யும் கொழுக்கட்டை எல்லாவற்றிக்கும்
தொட்டுக் கொள்ளலாம்.

பூண்டு – 20 பல்
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – ஒரு கைப்பிடி
புளி – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கடுகு – தாளிக்க

முதலில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் பூண்டுகளை


போட்டுபொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கடலைப்பருப்பை போட்டு அதையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ள


வேண்டும். ஒரு மிக்ஸியில் வறுத்தெடுத்த பூண்டு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை,
புளி, காய்ந்த மிளகாய் இவற்றையெல்லாம் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி கடுகு, கறிவேப்பிலைதாளித்து,


அரைத்து வைத்த விழுதை இதில் சேர்த்து இறக்கி வைக்கவும். பூண்டை அப்படியே
சாப்பிட மறுப்பவர்களுக்கு இப்படி சட்னி அடிக்கடி செய்து கொடுத்தால் உடலுக்கு
மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்

சப்பாத்தி, பூரிக்கு வெள்ளை குருமா…


அட்டகாசமான காம்போ!
vegetables kurma recipe white kirma recipe : தோசை, இட்லி, சப்பாத்தி,
இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெள்ளை காய்கறி குருமா

தேவையான பொருட்கள்:

காய்கறி கலவை – 2 கப் (பீன்ஸ், காரட், காலிப்ளவர், பட்டாணி, உருளை)


பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
தனியா – 1 டீஸ்பூன்

அரைக்க:

தேங்காய் – அரை மூடி


பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
சோம்பு – 1/4 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 5
பூண்டு – 1 சின்ன பல்

தாளிக்க:

பட்டை, லவங்கம் – 1/2 ஸ்பூன்


கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு


போட்டு பிறகு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி
தக்காளி போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். அரைக்க கொடுத்துள்ள
பொருட்களை நல்லா நைசா அரைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் காய்கறி கலவையை போட்டு நல்லா ஒரு வதக்கு வதக்கி சிறிது உப்பு, தண்ணீர்
சேர்த்து கொதிக்க விடவும். நல்லா கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை
போட்டு கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்த பின் கொத்தமல்லி தூவி அடுப்பை
அணைத்துவிடவும். பிறகு சிறிதளவு தயிர் சேர்க்கவும். சுவையான வெள்ளை குருமா
தயார்.

இவை பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து


சாப்பிட சுவையாக இருக்கும்.

ஹோட்டல் ஸ்டைல் பூரி கிழங்கு ரகசியம்


இதுதான்பா!
poori kilangu recipe hotel style poori kilangu : பெரும்பாலும் காலை நேரச்
சிற்றுண்டியாக தயாரிக்கப்படும் பூரி கிழங்கு குருமா.

பூரி கிழங்கு மசாலா என்றால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். உருளை கிழங்கை


கொண்டு செய்யப்படும் இந்த மசாலா பூரிக்கு ஒரு சூப்பர் சைடு டிஷ்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ


பெரிய வெங்காயம் – 1 அல்லது 2
பழுத்த தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சுக்குத் தூள் -1 டீஸ்பூன்
மல்லி விதை – 1 ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன்
கரம் மசாலா -1 டீஸ்பூன்

உருளைக்கிழங்குகளை வேக வைத்து, தோலுரித்து மசித்து கொள்ளவும்.கொத்தமல்லி


விதை, சீரகம், ஓமம் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து
கொள்ளவும்.வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக அரைத்து பேஸ்ட்
செய்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், வரமிளகாய் கிள்ளிப்
போட்டு தாளிக்கவும்.பிறகு அரைத்த வெங்காய விழுதை பச்சை வாசனை போகும்
வரை வதக்கவும்.
அதன் பின்னர் தக்காளி விழுதை சேர்த்து வேகவிடவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுக்கு தூள் பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.மசித்த


உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
மசாலா கிழங்கில் பிடித்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.காரம்
தேவையெனில் சேர்க்கவும்.சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து
கொள்ளவும்.வெந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
நோய்களை தீர்க்கும் கிராமத்து ஸ்டைல் வெந்தய
குழம்பு!

vendhaya Kuzhambu Recipe Vendhaya Kuzhambu in tamil l : கிராமத்து


ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி எப்படி எளிதாக நம் வீட்டிலே சமைப்பது என்பது
குறித்து பார்க்கலாம்.

நாம் தினமும் விதவிதமான குழம்புகளை செய்து சாப்பிடுவதுண்டு. எளிமையான


முறையில் வீட்டில் செய்து உண்டு மகிழுங்கள் .உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 1,1/2 டீஸ்பூன்


நல்ல எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
பூண்டு – 10 பற்கள்
தக்காளி (சின்னது) – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
வத்தல் பொடி – 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி – 1 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் போடி – 1/2 டீஸ்பூன்
சீரக பொடி – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – 1 எலுமிச்சை அளவு

செய்முறை:

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம் சேர்த்து பொறிந்ததும்


கடுகு சேர்த்து தாளித்து, உரித்த வெங்காயம் போட்டு நன்றாக
வதக்கவும்.வதங்கும்பொழுது சிறிதளவு கறிவேப்பிலை போட வேண்டும்.பின்னர்
பூண்டு போட்டு பொன்னிறமாக வதக்குங்கள்.
அதனுடன் வத்தல் பொடி, குழம்பு மிளகாய் தூள், சீரக தூள்,மஞ்சள் தூள், மல்லித்தூள்
சேர்த்து கிளறி, புளி கரைசல் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடுங்கள், 15
நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள்.. மனமான வெந்தய குழம்பு ரெடி..!

எண்ணெய் மிதக்கும் பூண்டு குழம்பு… செம்ம


டேஸ்ட்!
poondu kuzhambu recipe poondu kuzhambu in tamil : உடல் உபாதைகள்,
வயிற்று பிரச்சனைளுக்கு பூண்டு மிகவும் நல்லது. இன்று செட்டிநாடு ஸ்டைலில் பூண்டு
குழம்பு

சுவையான, ஆரோக்கியமான பூண்டு குழம்பு! வித்தியாசமான முறையில், ஒரு வாட்டி


இப்படி வெச்சு பாருங்க. பூண்டு, வெங்காயம் குழம்பை பொதுவாக தமிழர்கள்
வீடுகளில் அடிக்கடி செய்யும் மிகவும் பிரசித்தமான குழம்பு

பூண்டு – மூன்று முழுவதும்


கடுகு – கொஞ்சம்
சிறிய வெங்காயம் – இரண்டு கப்
தக்காளி – நான்கு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
வெந்தயம் – சிறிதளவு
புளி – எலுமிச்சை அளவு
செய்முறை:

எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெந்தயம், வெங்காயம்,


இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பூண்டு முழுதாக சேர்க்கவும் வதக்கி தக்காளி சேர்த்து
நன்கு வதக்கவும்.
மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை
அனைத்தும் போட்டு நன்கு வதக்கவும் பிறகு புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பாக அரை டீஸ்பூன் மிளகு தூள், கொத்தமல்லி போட்டு
கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான உடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டு குழம்பு தயார்.

சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும்


ரகசியம் இதுதான்!

தமிழர்களின் மாநில உணவு போல பார்க்ப்படுகிறது இட்லி. மல்லிகைப் பூ போன்ற


மிருதுவான இட்லியும் அதற்கு ஜோடியாக சுவையான சட்னி, சாம்பார் வைக்கும்போது
இட்லியை அடிச்சுக்க ஆளே இல்லை என்று சொல்லலாம்.

மல்லிகைப் பூ போல, பஞ்சு போல இட்லி மென்மையாக இட்லி அவிக்க வேண்டும்.


அதே நேரத்தில் அந்த இட்லி அவிக்கும்போது ஒட்டாமலும் வர வேண்டும்
அப்போதுடஹன் இட்லி நன்றாக இருக்கும். இட்லி மல்லிகைப் பூ போல
மென்மையாகவும், பிசுபிசுவென ஒட்டாமலும் அவிக்க வேண்டும் என்று
விரும்புகிறீர்களா? உங்களுக்காக இதோ சில குறிப்புகளைத் தருகிறோம்.

சாஃப்ட்டான இட்லி பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம்:

மல்லிகைப் பூ போல, பஞ்சு போல இட்லி மிருதுவாக இருப்பதற்கு முதலில்


அனைவரும் கட்டாயம் காட்டன் துணி பயன்படுத்த வேண்டும்

இட்லி ஊற்றுவதற்கு காட்டன் துணி பயன்படுத்தாமல் அப்படியே இட்லி தட்டில்


மாவை ஊற்றினால் இட்லி தட்டில் பிசுபிசு என்று ஒட்டத்தான் செய்யும். அதற்காக,
வெறும் தட்டில் மாவு ஊற்றும்போது இட்லி குழிகளில் சிறிது எண்ணெய் தடவியபின்
மாவு ஊற்றினால் தட்டில் இட்லி ஒட்டாமல் அழகாக வரும் என்பது அனைவருக்கும்
தெரிந்த ஒன்று. எண்ணெய் தடவி இட்லி ஊற்றும்போது சிலருக்கு அது பிடிக்காமல்
போகக்கூடும் அப்படியானவர்கள் இட்லி ஊற்றும்போது துணியில் ஒட்டாமல்
சாஃப்டாக இட்லி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு முதலில்
இட்லியை வைப்பதற்காக தனியாக சுத்தமான காட்டன் துணியை பயன்படுத்த
வேண்டும்.

பலரும் இட்லி அவிப்பதற்கு ரேஷன் கடைகளில் இலவசமாக அளிக்கப்படும்


வேட்டியை பயன்படுத்துகின்றனர். அந்த வேட்டியில் பாலிஸ்டரும் கலந்து இருப்பதால்
சரியாக வராமல் போகும். அதனால், 100% காட்டன் துணியை பயன்படுத்தி இட்லி
அவித்தால் இட்லி ஒட்டாமல் வரும்.

அதோடு, அவசியம் அனைவரும் இட்லி துணியை துவைத்து வெயிலில் காயவைத்து


உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், இட்லி நன்றாக
ஒட்டாமல் சாஃப்டாக வரும்.

இட்லியை ஊற்றும்போது ஒவ்வொரு முறையும் இட்லி பாத்திரத்தில் உள்ள தண்ணீர்


சூடேறியதும் இட்லி துணியை அந்த தண்ணீரில் நனைத்து பயன்படுத்தலாம். அப்படி
இட்லி துணியை நனைத்து பயன்படுத்தும் இட்லி ஒட்டாமல் வரும்.

அதே போல, இட்லிக்கு ஊற்றும் மாவில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கலக்கி


விட்டு பின்னர் இட்லி ஊற்றி அவித்து எடுக்கும்போதும் இட்லி ஒட்டாமல் அருமையாக
வரும்.

இட்லி பஞ்சுபோல மென்மையாகவும் ஒட்டாமலும் வருவதற்கு மற்றொரு வழிமுறை,


இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து
அரைக்க வேண்டும்.

இட்லி ஒட்டாமல் வருவதற்கு, இட்லியை அவித்த பிறகு, இட்லி தட்டில் இருந்து


இட்லியை எடுக்கும் முன்னர் சிறிதளவு சுத்தமான தண்ணீரை இட்லி மீது தெளித்து
எடுத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் வரும்.

அதே போல, இட்லியை அவசரமாக எடுக்க விரும்புகிறீர்கள் என்றால், இட்லி தட்டு


பின்புறத்தில் குழாய் தண்ணீரை திறந்து விட்டு குளிர்விக்க வேண்டும். அதன் பிறகு
இட்லியை எடுத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் அருமையாக சாஃப்டாக வரும்.

அதே நேரத்தில், இட்லி மிருதுவாகவும் துணியில் ஒட்டாமலும் வருவதற்கு இட்லி மாவு


அரைக்கும்போது நாம் சேர்க்கும் பொருட்களும் மாவு அரைக்கும் பதமும் முக்கிய
காரணமாக அமைந்துள்ளன.
4 பங்கு இட்லி அரசிக்கு ஒரு பங்கு உளுந்து சேர்த்து ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒரு
தேக்கரண்டி ஜவ்வரிசி, ஒரு தேக்கரண்டி வெள்ளை அவல் ஆகியவற்றை சேர்த்து 5
மணி நேரம் ஊறவைத்து அரைத்தால் பஞ்சுபோல குஷ்பு இட்லி மென்மையாக வரும்.

அதே நேரத்தில், இட்லி அவிக்கும்போது, கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்


இட்லி அவிக்கும் நேரம் ரொம முக்கியமானது. 10 நிமிடத்திற்கு மேல் இட்லியை
அவிக்க கூடாது. சரியாக 10 நிமிடத்தில் இட்லி அவிந்து அழகாக வர வேண்டும்.
அதுதான் இட்லியின் சரியான பதம்.

இந்த டிப்ஸ்களைப் லாவகமாக பஞ்சு போல சாஃப்டான இட்லியை அவித்து


ஒட்டாமல் எடுத்து அழகாக சாப்பிடுங்கள்.

அப்படி ஒரு ஆரோக்கியம் இதுல இருக்கு..


கொள்ளு ரசம்!
kollu rasam recipes kollu rasam recipe tamil : உடலில் உள்ள அதிகளவு
கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுவுக்கு உண்டு. இன்று கொள்ளுவில் ரசம்
செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கொள்ளு – கால் கப்,


புளி – நெல்லியளவு,
தக்காளி – 2,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
பூண்டு – 6,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள், கடுகு – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


புளியை கரைத்து கொள்ளவும்.

கொள்ளுவை கல் இல்லாமல் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.


மறுநாள் களைந்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் கொள்ளை மிக்சியில்
அரைத்தெடுக்கவும்.

மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.

வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன்


பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

இதை சூப்பாகவும் குடிக்கலாம்.

வாங்கி பாத்… கர்நாடகா ஸ்பெஷல்


அட்டகாசமான கத்திரிக்காய் சாதம்!
kathirikai satham vangibath kathirikai satham recipe : கர்நாடகாவில் இந்த
கத்தரிக்காய் சாதம் அல்லது வாங்கி பாத் மிகவும் பிரபலம். இப்போது கத்தரிக்காய்
சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பச்சரிசி-2 கப்
நல்ல பிஞ்சு கத்தரிக்காய்-1/2 கிலோ

மசாலா தயாரிக்க:
கடலைப்பருப்பு-1/2 கப்
கொத்தமல்லி விதை-1/2 கப்
வெந்தயம்-1 டீஸ்பூன்பட்டை-2
காய்ந்த மிளகாய்-10
வறுக்க எண்ணெய்-1/4 கப்
புளி-ஒரு எலுமிச்சை அளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
புளியைக் கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியை காய வைத்து அதில் கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை வெந்தயம்


என்று ஒவ்வொன்றாகப் பொடித்து (ட்ரை பவுடர்) வைத்துக் கொள்ளவும். இத்துடன்
உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

கத்தரிக்காயை நீள நீளமாகப் பிளந்து தயாராக வைத்துள்ள மசாலாவை அடைக்கவும்.


அடுப்பில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காயையும்
போட்டு நன்றாக வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு மீண்டும் சேர்த்து
மூடி வைக்கவும். கத்தரிக்காய் நன்றாக வெந்து, க்ரே பேஸ்ட் போல் ஆனவுடன்,
தயாராக வடித்து வைத்துள்ள சாதத்துடன் சேர்த்துக் கலந்து (குழையாமல் கலக்க
வேண்டும்)

பரிமாறவும் சூடாகப் பரிமாறத் தேவையில்லை. ஒரு தட்டில் சாதத்தைப் பரத்தி


சிறிதளவு நல்லெண்ணெய் போட்டுப் பின் கத்தரிக்காய் மசாலாவைப் பரத்தி, கலந்தால்
சாதம் குழையாமல் கலக்கலாம். தயிர்ப் பச்சடி, பொறித்த அப்பளம், உருளைக் கிழங்கு
ரோஸ்ட் கறி, அவியல் முதலியவைகளுடன் சேர்த்துப் பரிமாறினால், விருந்துக்கு நல்ல
மெனு ருசியாக இருக்கும்.

இதுதான்யா கல்யாண வீட்டு வாழைக்காய்


வறுவல் ரகசியம்!
valakai varuval hotel style valakai varuval : செட்டிநாடு வாழைக்காய் வறுவல்.
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு ஒரு சரியான
சைடிஷ்.

இது வரை நீங்கள் ருசிக்காத அளவுக்கு ஒரு ருசியில், வாழைக்காய் ஃப்ரை. இந்த மாதிரி
டேஸ்டில் இதற்கு முன் சாப்பிட்டே இருக்க மாட்டீங்க.

செய்முறை:

முதலில் 2 வாழைக்காயை எடுத்து நன்றாக கழுவி அரை வேக்காடாக அவித்து எடுத்துக்


கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியில் பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு, இஞ்சி,
மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் பொடி, உப்பு இவை
அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு மைபோல அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அவித்து வைத்திருக்கும் வாழைக்காய் தோல் உரித்து விட்டு வட்டமாக சிறு சிறு
துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்திருக்கும்
மசாலாவை ஒரு தட்டில் கொட்டி அதில் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய் முன்னும்
பின்னும் மசாலா சேரும்படி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு உங்களுக்கு தேவையான


எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு, மசாலா தடவி
வைத்திருக்கும் வாழைக்காய் சேர்த்து வறுத்து எடுங்கள். இரண்டு பக்கமும் வேகவிட்டு
வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை சாம்பார்சாதம், தயிர்சாதம் ஆகியவற்றிற்கு
மிகவும் ருசியாக இருக்கும். இப்பொழுது சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி..!

இட்லி, சாப்பாடு இரண்டுக்குமே செம்ம சைடிஷ்..


முட்டை தொக்கு!
mutta thokku recipe mutta thokku recipe in tamil : வாரந்தோறும் சிக்கன்,
மட்டன் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் முட்டையைக்
கொண்டு தொக்கு செய்து சாப்பிடுங்கள்.

இந்த முட்டை தொக்கு அருமையான செட்டிநாடு ரெசிபி போன்று மிகவும் சுவையாக


இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடும் அளவில் மிகவும் ஈஸியாகவும்
இருக்கும்.

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி


காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பச்சை
வாசனை போக நன்கு வதக்கி, இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக்
கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி


காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்
மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் சிறிது
தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் பேனை வைத்து, அதில்


முட்டையை வைத்து, அதன் மேல் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள்
சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து 2
நிமிடம் முட்டையில் மசாலா சேரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், முட்டை தொக்கு ரெடி!!!

சுடச்சுட எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு…


அட்டகாசமான ருசியில்!
ennai kathirikai kulambu recipe ennai kathirikai kulambu : சூப்பரான
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த எண்ணெய்
கத்தரிக்காயை விரும்பி சாப்பிடுவார்கள்.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான குழம்பு வகை

செய்முறை :

* கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள


காம்பை விட்டு ஒரு கத்தரிக்காயை (பூ போல) நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி
கொள்ளவும்.

* பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

* தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கி


கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக


வதக்கி ஆற விடவும்.

* மிக்சியில் வதக்கிய வெங்காயம், தக்காளியை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து


கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய
பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

* அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.

* கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி


விடவும்.

* இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும்.

* அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு
உப்பு போட்டு கொதிக்க விடவும்.

* நன்கு கொதித்து கத்தரிக்காய் வெந்து குழம்பு திக்கான பதத்துடன் எண்ணெய் மேலாக


தெளிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

சட்டென ரெடியாகும் இன்ஸ்டன்ட் தக்காளி


சட்னி
Easy Tomato chutney Recipe Breakfast recipes Tamil : காலையில் எழுந்து
உணவுகளை சமைப்பது என்பது பலருக்கும் மிகப் பெரிய வேலை. அதுபோன்ற
நேரங்களில் நிச்சயம் கைகொடுக்கும் இந்த இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி. செய்வது
மட்டுமல்ல சுவையும் சுண்டி இழுக்கும் விதமாகவே இந்த சட்னி இருக்கும்.

தேவையான பொருள்கள்

தோராயமாக நறுக்கப்பட்ட மீடியம் அளவு தக்காளி – 4


கறிவேப்பிலை – 1 ஸ்ப்ரிங்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
சிவப்பு மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
எண்ணெய் (முன்னுரிமை தேங்காய் அல்லது எள்) – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* கடாய் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றிக் கடுகு சேர்க்கவும்.

* கடுகு வெடித்ததும், அதில் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். அவை சுமார் 20


விநாடிகளில் பொன்னிறமாகிவிடும். அந்த நேரத்தில், வெந்தயம் மற்றும்
பெருங்காயத்தூளைச் சேர்த்து, கூடவே கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள் தூள், சிவப்பு
மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

* எல்லாவற்றையும் நன்கு கலந்து, தக்காளி வதங்கும் வரை காத்திருக்கவும். இதற்கு சில


நிமிடங்களுக்கு மேல் ஆகக்கூடாது. சட்னி வறண்டு காணப்படுவதாக நீங்கள்
நினைத்தால், ஓரிரு டீஸ்பூன் தண்ணீரைச் சேர்க்கவும்.

* தக்காளியிலிருந்து எண்ணெய் தனியே பிரிந்து வரும் நேரத்தில், கலவையை நன்கு


மசித்து விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி சட்னி தயார்.

பச்சரிசியில் பஞ்சு போல இட்லி: உளுந்து கலவை


அளவுதான் முக்கியம்
Idli Recipe Tamil News, Raw Rice Idli Tamil Video: பச்சரிசி பயன்பாடு
இப்போது அதிகரித்து வருகிறது. பழைய நாட்களைப் போல இப்போது வீட்டில் நெல்
அவிக்கும் நடைமுறை இல்லை. எனவே நெல் விளைவிக்கும் பலரே பச்சரிசி
சாப்பாடை விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். கேரளாவில் இந்த நடைமுறை மிக
அதிகம். தமிழ்நாட்டிலும் பிரபலமான ஹோட்டல்கள், மெஸ்களில் பச்சரிசி
பயன்படுத்தி சாதம் வைக்கிறார்கள். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு புழுங்கல்
அரிசியைவிட பச்சரிசி நல்லது என உணவியல் நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.

பச்சரிசியை பயன்படுத்தி சாதம் மட்டுமல்ல… பஞ்சு போல இட்லியும் செய்ய முடியும்.


பச்சரிசி இட்லி டேஸ்டியாகவும் இருக்கும். இதில் உளுந்து கலவை மாறுபடும்.
பச்சரிசியை பயன்படுத்தி இட்லி தயார் செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.
Raw Rice Idli Tamil Video: பச்சரிசி இட்லி
இட்லிக்கு பொதுவாக 4 டம்ளர் புழுங்கல் அரிசிக்கு, ஒரு டம்ளர் உளுந்து போடுவது
வழக்கம். ஆனால் பச்சரிசி இட்லி தயார் செய்ய, ஒரு டம்ளர் பச்சரிசிக்கு இரண்டு
டம்ளர் உளுந்து தேவைப்படுகிறது.

முதலில் பச்சரிசியை நன்கு கழுவி விடுங்கள். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி
சூடாக்கி பச்சரிசியில் ஊற்றி அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அதே போல்
உளுந்தையும் நன்றாகக் கழுவி, 3 மடங்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைக்க
வேண்டும். ஊற வைத்த தண்ணீரை மட்டுமே மாவு அரைக்க உபயோகப்படுத்த
வேண்டும்.
முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஊற வைத்த
தண்ணீரை ஊற்றி, நுரைக்க நுரைக்க அரைத்து எடுக்க வேண்டும். அதே போல்
பச்சரிசியை தனியாக, ஊற வைத்த தண்ணீரை தெளித்து அரைக்க வேண்டும்.
இரண்டுமே அரைத்து முடித்ததும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கைகளால் நன்கு
கலந்து விட வேண்டும்.

மாலையில் மாவு அரைத்து வைத்தால் மறுநாள் காலையில் இட்லி ஊற்றலாம். 8 மணி


நேரம் வரை புளிக்க வைப்பது நல்லது. பெரிய தட்டுகளில் இட்லி ஊற்றி வைத்தால்,
சுமார் 25 நிமிடங்கள் வரை வெந்து வருவதற்கு நேரம் எடுக்கும். இந்த முறையில் மாவு
கிரைண்டரில் தான் அரைக்க வேண்டும் என்பதில்லை. மிக்ஸியிலும் அரைத்துக்
கொள்ளலாம். மிக்ஸியில் அரைத்தால் மல்லிகைப் பூ போல இட்லி கிடைக்கும்.

சிலருக்கு பச்சரிசி ஒத்துக் கொள்ளாது. வயிற்று பிரச்சனைகள் உருவாகலாம். அவர்கள்


பச்சரிசியை தவிர்ப்பது நல்லது.

சாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான


லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!
sambar sadam lunch box recipes

sambar sadam lunch box recipes : குழந்தைகள் பள்ளியில் மதியம் சாப்பிட


அருமையான உணவு சாம்பார் சாதம்.
சாம்பார் சாதம் என்பது கலவை சாத வகைகளுள் ஒன்று.
இதனை சுவையாகவும், எளிதாகவும் செய்யலாம். இது ஒரு தென்னிந்திய வகை சாதம்.
பருப்பு, காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் சேர்த்து செய்யப்படுவது.
மக்களுக்குப்பிடித்த சாம்பார் சாதம். கிராமப்புற சமூகங்களில் இதுவரை
அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது.

உருளைக்கிழங்கு, காரட்டை சற்று பெரிய துருவலாக


துருவிக்கொள்ளவும்.வறுப்பதற்கான சாமான்களை வறுப்பதற்கு முன், கால் ஸ்பூன்
எண்ணெயில் முதலில் பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு மற்ற
சாமான்களை வறுத்தெடுத்து அதன் பின் பொடிக்கவும்.அரிசியையும் பருப்பையும் நன்கு
கழுவி, 6 கப் நீர் ஊற்றி குக்கரில் 6 விசில் வரை நன்கு வேகவைக்கவும்.ஒரு
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

எண்ணெயை ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை


மிளகாயைப் போட்டு வதக்கவும்.நன்கு வதங்கியதும் தக்காளியையும் கொத்தமல்லி,
சிறிய துண்டுகளாய் அரிந்த கத்தரிக்காய்கள் இவற்றைப்போட்டு மஞ்சள் தூளும் சேர்த்து
கறிவேப்பிலையும் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து மசியும் வரை நன்கு
வதக்கவும்.அதன் பின் காரட், உருளைத்துருவல்கள் சேர்த்து ஒடு பிரட்டு பிரட்டவும்.

புளியைக்கரைத்து ஊற்றி சிறிது உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.மசாலா சற்று


கெட்டியானதும் வெந்த சாதம், உருக்கிய நெய் சேர்த்து, போதுமான உப்பும் சேர்த்து,
குறைந்த தீயில் அனைத்தும் சேரும் வரை ஐந்து நிமிடங்கள் கிளறவும்.கமகமக்கும்
சாம்பார் சாதம் தயார்!!இதற்கு தொட்டுக்கொள்ளவென்று தனியாக எதுவும்
தேவையில்லை. அருமையான ஊறுகாய், அப்பளம், வற்றல்கள் போதும்.

கையேந்திபவன் கார தோசை.. இதுல தான் அந்த


ரகசியமே இருக்கு!
Kara dosa recipe, dosa recipes: தோசை என்றாலே நமக்கெல்லாம் ஒரே
குஷிதான்.. அதிலும் கார தோசை என்றால்வேண்டாம் கேட்கவே வேணாம்.பொதுவாக
தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு …
கார தோசை. கார தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கப் துவரம்பருப்பு – 1/4 கப் தேங்காய் – 1/2 முடி மிளகாய் – 4 சீரகம் –
1/2 டீஸ்பூன் மிளகு – 10 உப்பு – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் தோசை மாவு தயாராக வைத்துக் கொள்ளவும்.பின்னர் மிளகாயை தண்ணீரில் 5


நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறியபின் மிளகாய் மற்றும் பூண்டை உப்பு
சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனையடுத்து முட்டையுடன் சிறிது உப்புத்தூள்
சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு தோசைக்கல்லை காய வைத்து, மாவை
பரவலாக ஊற்றவும். தொடர்ந்து தோசை மீது முட்டையில் இருந்து சிறிதளவு பரவலாக
ஊற்றி, முட்டை அரை பதமாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள பூண்டு – மிளகாய்
கலவையை சமமாக பரப்பி விடவும். சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
அதன்பிறகு இரண்டு பக்கமும் வெந்ததும் மடித்து, எடுத்து வைக்கவும். பின்னர் எடுத்து
பரிமாறவும்.

இதற்கு கார சட்னி, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். காலை மாலை டிபனுக்கு
இதை ட்ரை பண்ணுங்க

ஐயர் வீட்டு வத்தக் குழம்பு ரகசியம்


தெரிஞ்சிக்கோங்க!
Vatha kulambu recipe, vatha kulambu in tamil : சுண்டக்காயில் புரதம் ,
கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. வத்தக் குழம்பு என்றாலே நினைவுக்கு
வருவது சுண்டைக்காயும், மணத்தக்காளியும்தான்.சுண்டைக்காய் வற்றல் குழம்பு
தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்று.

வத்தக் குழம்பு செய்யும்போது தனியாக வறுத்து அரைத்து செய்வதைக் காட்டிலும்


இப்படி பொடியை மொத்தமாக அரைத்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்

காய்ந்த மிளகாய் – 2,
புளி – ஒரு எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.

செய்முறை :

* புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய்,


கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக
வதக்கவும்.

* அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை


சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும்,


நெய்யும் சேர்த்து சாப்பிட்டால்… அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம்
தொட்டு சாப்பிடலாம். மணத்தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை
ஆறவைக்கும்.

மெத்தென்று பஞ்சு போல இட்லி: மாவு இப்படி


அரைக்க வேண்டும்!

Tamil Recipe News, Soft Idli Cooking Tamil Video: இட்லி மாவு அரைத்து
பயன்படுத்துகிற பலருக்கு இருக்கிற ஒரே பிரச்னை, மாவு ஓரிரு நாட்களில்
புளித்துவிடுவதுதான். எனவே 3-வது நாளில் இருந்து தோசைதான் சுட
வேண்டியிருக்கிறது. அப்படி மாவை புளிக்க விடாமல், வாரம் முழுவதும் எப்போது
வேண்டுமானாலும் இட்லி அவிக்க வழி இருக்கிறதா? என்றால், இருக்கிறது. இதற்கு
மாவு அரைக்கும் முறை மிக முக்கியம்.
முதலில் கிரைண்டரில் மாவு அரைப்பதற்கு முன்னர் ஒரு முறை நன்கு கழுவி சுத்தமாக
வைத்து விடுங்கள். அடிக்கடி மாவு அரைக்கும் சிலர் கழுவுவது இல்லை. முந்தைய
முறை என்ன தான் கழுவி வைத்தாலும் அதன் புளிப்புத்தன்மை கிரைண்டரில்
ஒட்டியிருக்கும். எனவே இம்முறை கழுவாமல் அரைத்தால் மாவு சீக்கிரம் புளித்து
விடும்.

அடுத்தபடியாக அரிசி மற்றும் உளுந்து 3 மணி நேரமாவது ஊற வேண்டும். அதற்கு


குறைவாக ஊறினால் புளித்து போக வாய்ப்பு உள்ளது. உளுந்தை நீங்கள் அரைக்கும்
பொழுது கைபடுவதை தவிர்த்து விடுங்கள். இடையிடையே தண்ணீர் தெளித்து ஒரு
பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி மூலமாகத் தள்ளி விட்டு அரைக்கலாம்.

உடல் உஷ்ணத்தை தணிக்கும் வெந்தயக் களி


எப்படி செய்யனும் தெரியுமா?
kali recipes in tamil: நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம்
பல நற்பயன்களையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த அற்புதமான
மூலிகையில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள்
உள்ளன. மேலும் சுண்ணாம்பு, இரும்பு, சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுப்
பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ”
போன்றவைகளும் அடங்கியுள்ளன.

வெந்தயம் ஒரு ஆன்டிசிட்டாக செயல்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில்


வைக்க உதவுகிறது. மற்றும் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இவை
கொழுப்பைக் குறைப்பதோடு பித்தம் மற்றும் கபம் அதிகமாக உள்ள நபர்களுக்கு
ஏற்றதாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் வலியை போக்கவும்
வெந்தயம் உதவுகிறது.

வெந்தயக் களி – தேவையான பொருட்கள் – செய்முறை

புழுங்கல் அல்லது இட்லி அரிசி – 200 கிராம்


வெந்தயம் – 50 கிராம்

இவை இரண்டையும் சேர்த்து சுமார் 8 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.


பின்னர் ஒரு மிக்சியில் சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும். இவை நன்கு அரைந்த
பிறகு தோசைக்கு மாவு தயார் செய்வது போல தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து
கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கனமான பாத்திரம் எடுத்து அதில் முதலில் 200 மில்லி தண்ணீர்
ஊற்றி நன்கு கொதித்த பிறகு அரைத்து வைத்துள்ள மாவு சேர்க்கவும். ஒரு கரண்டியால்
தொடர்ந்து கிளறவும். முதலில் தனலை அதிகம் வைத்து கிளறவும். மாவு கெட்டியாக
வரும் போது மிதமான சூட்டில் வைத்து வேக வைத்து கீழே இறக்கவும்.

இப்போது பனை வெல்லம் அல்லது வெறும் வெல்லத்தை தனியாக நாம் தயார் செய்து
வைத்துள்ள வெந்தயக் களியுடன் சேர்த்து சுவைக்கவும்.

அட இவ்வளவு ஈசியா செய்ய முடியுமா


ரோட்டுக்கடை காளான்?

Kalan Masala: ரோட்டோர கடைகளில் விற்கும் காளான் சுவைக்காதவர்கள்


இருக்கவே முடியாது. இந்த டேஸ்டான காளானை நாம் நிச்சயம் தயாரிக்க வேண்டும்
என நினைத்திருப்போம். ஆனால் அவற்றுக்கான செய்முறை நமக்கு தெரிந்திருக்காது.
இந்த சுவையான காளானை நம்முடைய வீட்டிலே ஆரோக்கியமாகவும், அதே
சுவையோடும் மற்றும் எந்தவிதமான சாஸ் சேர்க்காமலும் எப்படி தாயார் செய்யலாம்
என்று இங்கு பார்க்கலாம்.

ரோட்டுக்கடை காளான் தேவையான பொருட்கள்

முட்டைகோஸ் – 200 கிராம்


காளான் – 200 கிராம்
மைதா மாவு – 100 கிராம்
சோள மாவு (கான்பிளவர் மாவு) – 25 கிராம்
கரம்மசாலா – 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
வெங்காயம் – 2 (பெரியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கிய)
கறிவேப்பிலை
தக்காளி – 3

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் முட்டைகோஸையும், காலனையும் நன்றாக கழுவி, பொடியாக நறுக்கி


வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கி
வைத்திருக்கும் முட்டைகோஸ், மற்றும் காளானுடன் மைதா, சோள மாவு, காஷ்மீரி
மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து
கொள்ளவும்.

இவை பிசைய நாம் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. தேவைப்பட்டால் ஒரு


டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளலாம். உப்பு சேர்த்து பிசையும்போது,
தானாகவே தண்ணீர் விடும். தவிர, முட்டைகோஸ், காளானை தண்ணீரில் அலசிய
போது அந்த தண்ணீர் இதில் இருக்கும்.

ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள


மாவில் வடை போல முறுகலாக சுட்டு எடுத்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் மற்றொரு பாத்திரம் வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு


எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம் வதங்கும் போது, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

புளிபிற்கு தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து, அவற்றை வதங்கும்


வெங்காயத்துடன் சேர்க்கவும். பிறகு இவற்றுக்கு தேவையான அளவு உப்பு, மிளகாய்
தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி, சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை,
நன்றாக வதக்கவும். (அதாவது தக்காளியின் பச்சை வாடையும், மசாலா பொருட்களின்
பச்சை வாடையும், முழுமையாக போக வேண்டும்).
இப்போது, முன்பு பொரித்து வைத்திருக்கும் முட்டைகோஸ் காளானை சிறு, சிறு
துண்டுகளாக உடைத்து, இந்த மசாலாவோடு 5 முதல் 7 நிமிடங்களுக்கு கிளறி
இறக்கவும்.

இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூப்பரான ரோட்டுக்கடை காளான் தயாராக


இருக்கும். இவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி
தழையை தூவி ருசித்து மகிழவும்.

புளி, தக்காளி எல்லாம் பழசு; மாங்காயில்


சூப்பரான ரசம் செய்வது எப்படி?

 Rasam Recipes in Tamil: ரசம் நமது உணவு கலாச்சாரத்தில் மிகவும் முக்கியம்


வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் பொருட்களை
குறிப்பிட்டு கூறலாம். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம்
மற்றும் புளிக்கரைசல் போன்றவை மருத்துவ குணம் வாய்ந்தவையாக உள்ளன. இதில்
சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு
வகிக்கிறது.

ரசம் காய்ச்சல், இருமல், தும்மல், உடல் சோர்வு, உடல் களைப்பு, செரிமானப்


பிரச்சனை, சத்துகுறைபாடு, தொண்டை கமறல், வயிற்று புண் என அனைத்து
நோய்களுக்கும் மருந்தாக உள்ளது.

ரசத்தில் பல வகைகள் உள்ள நிலையில் அந்த ரசங்களில் புளிப்பு சுவை கூட்ட நாம்
பெரும்பாலும் புளி அல்லது தக்காளியைத் தான் தேர்வு செய்வோம். ஆனால் ஒரு சில
பகுதிகளில் இவற்றுக்கு பதிலாக மாங்காயை பயன்படுகிறார்கள். அதிலும் நன்கு புளிக்க
கூடிய சில மாங்காயை சேர்க்கையில் ரசத்திற்கு நல்ல மணமும் சுவையும் கூடுகிறது.

இப்படி கூடுதல் மணமும் சுவையும் தரும் மாங்காயில் எப்படி ரசம் தயார் செய்வது
என்று இங்கு பார்க்கலாம்.

மாங்காய் ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:-


மாங்காய் – 1 (சிறிய அளவு)
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
சிவப்பு அல்லது காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிதளவு
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வெல்லம் – சிறிய துண்டு
மிளகு சீராக பொடி – 1 டீஸ்பூன்
கொத்துமல்லி தழை
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை

ஒரு பாத்திரம் அல்லது குக்கர் எடுத்து அதில் மாங்காய், துவரம் பருப்பு மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வேக விட்டு கீழே இறக்கவும். சூடு ஆறிய
பிறகு பருப்பு மற்றும் மாங்காயை நன்கு கிளறி மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்போது ஒரு ரசம் வைக்கும் பாத்திரம் எடுத்து அதில் நெய் விட்டு சூடானதும் கடுகு
தூவி பொரிய விடவும். பின்னர் சீரகம், சிவப்பு அல்லது காய்ந்த மிளகாய், பச்சை
மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவை சேர்த்து கிளறவும். பிறகு, தக்காளி மற்றும்
பெருங்காயம் பொடி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

இவை ஓரளவு வதங்கிய பிறகு முன்பு தயார் செய்து வைத்துள்ள பருப்பு மற்றும்
மாங்காய் கலவையை இவற்றோடு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்த பிறகு வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு
மிக்ஸ் செய்யவும். தொடர்ந்து மிளகு சீராக பொடி சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க
விடவும். நுரை வரும் போது கொத்தமல்லி தழை தூவி கீழே இறக்கவும்.
இப்போது சூடாக தயார் செய்துள்ள சாதத்தோடு ஓர் டீஸ்பூன் நெய் மற்றும் நாம் தயார்
செய்துள்ள மாங்காய் ரசத்தை சேர்த்து ருசித்து மகிழவும்.

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரையில்


துவையல் செஞ்சு சாப்பிட்டா! அருமையான
ரெசிபி ரகசியம் இங்கே

Vallarai recipe in tamil: வல்லாரை கீரையை நம்முடைய அன்றாட உணவுகளுடன்


சேர்த்து கொண்டால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும்.
இருமல் மற்றும் தொண்டைக்கட்டை நீக்குவதுடன், பல் ஈறுகளை வலுப்படுத்தும் ஒரு
நல்ல மருந்தாகவும் இவை பயன்படுகின்றன.

வல்லாரை கீரையோடு சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி,


தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூளை சோர்வு நீங்கி, ஞாபக சக்தி
அதிகரிக்கும். மேலும் இந்த கீரையுடன், சம அளவு கீழா நெல்லியை அரைத்து, அதன்
விழுதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும்.
பச்சையாக சாப்பிட்டால், மூளை நரம்புகள் பலம் பெறும்.

இப்படி ஏகப்பட்ட மருத்துவ நன்மைகளை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள வல்லாரை


கீரை எப்படி துவையல் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வல்லாரை கீரை துவையல் செய்யத் தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை – ஒரு கட்டு


சின்ன வெங்காயம் – 10
கடலை பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மிளகு – அரை டீஸ்பூன்
தேங்காய் – ஒரு துண்டு
தக்காளி – 2
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

வல்லாரை கீரை துவையல் செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடலை பருப்பு, மிளகு, சின்ன


வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் தண்ணீரில் சுத்தம் செய்த வல்லாரைக் கீரை இலைகளை எடுத்து அத்துடன்


சேர்த்து வதக்கவும். கீரை வதங்கி சுருங்கியதும் இறக்கி ஆற வைக்கவும்.

தற்போது, ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த கலவையுடன், தேங்காய் துண்டுகள், உப்பு


சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

உணவுகளுக்கு ஏற்ற, சுவையான மற்றும் சத்து நிறைந்த வல்லாரைக் கீரை துவையல்


தற்போது ரெடியாக இருக்கும். இவற்றை இட்லி, தோசை, பனியாரம் போன்ற
உணவுகளுடன் சேர்த்து சுவைத்து மகிழவும்.

பாகற்காய், நெல்லி, இஞ்சி… சுகர் பிரச்னைக்கு


இவ்ளோ சுலபத் தீர்வா?

Tamil Health Update : நீரிழிவு போன்ற சில நோய்களுக்கு எதிராக பாகற்காய்


சிறந்த மருத்துவமாக உள்ளது. பாகற்காய் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு
நோய்க்கு முன் வரும் அபாயத்தை குறைக்க உதவும். ஆனால் இது எந்த அளவிற்கு
உண்மை என்பதைஊட்டச்சத்து நிபுணர் ராஷி சவுத்ரி விளக்கியுள்ளார்.

கசப்பான ஒன்றை சுவைக்கும் போதெல்லாம், அது உங்கள் நாக்கின் நுனியில்


மட்டுமல்லாமல், உங்கள் முழு உடலிலும் உள்ள நியூரோசென்சரி பொறிமுறையைத்
தூண்டுகிறது. உங்கள் குடலில் சுவை ஏற்பிகள் உள்ளன. இதனால்  ஒவ்வொரு
முறையும் குடல் ஒரு கசப்பான பைட்டோ கெமிக்கலை சுவைக்கும் போது, அது
உடலில் உள்ள ஹார்மோன்களை வெளியிடுவதற்கான வேலையை செய்கிறது.
இது குறித்து ‘செயல்பாட்டு மருத்துவத்தின் தந்தை’ என்று குறிப்பிடப்படும் டாக்டர்
ஜெஃப்ரி பிளாண்டின் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டியுள்ள, அவர் “நீரிழிவு நோய்க்கு
சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படும் மருந்துகள் கூட  ஜிஎல்பி 1 (GLP1) அல்லது
குளுக்கோகன் என்ற இன்சுலின் போன்ற ஹார்மோனை வெளியிடுவதற்கு நம் உடலின்
கசப்பான சுவை பொறிமுறையைப் பிரதிபலிக்கின்றன.  இது நமது இரத்த ஓட்டத்தில்
பெப்டைட் 1 போன்றது. எனவே மாத்திரைகளை சாப்பிடுவதற்கும்  உண்பதை
உணர்ந்து உண்பதற்கு இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், பின்னர்
உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்யுங்கள்.

அவளைப் பொறுத்தவரை, ஒருவரின் HBA1C (ஹீமோகுளோபின் சோதனை) சுமார் 7-


7.5 ஆக இருந்தால், மருந்துகளைத் எடுத்துக்கொள்ளலாமல், உங்கள் உணவை
மாற்றியமைப்பது நல்லது.

“சமையல் கரேலா ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பாகற்காய் – பாதியளவு

வெட்டிய நெல்லிக்காய் – 2

இஞ்சி – சிறிதளவு

தண்ணீர் – 150 எம்எல்

எலுமிச்சை – 1

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.

அது எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

இதை  மெதுவாகச் உட்கொள்வது சாத்தியமில்லை, ”என்று குறிப்பிட்டுள்ள அவர் பலர்


கரேலா ஜூஸ் பச்சைக் சாப்பிட விரும்புவதைப் பகிரும்போது, இந்த
மாற்றியமைக்கப்பட்ட செய்முறை “உண்ணக்கூடியது” வகையில் இரக்கும். இதை
தாராளமாக முயற்சிக்கலாம்.

“உங்களுக்கு நீரிழிவு அல்லது முன் நீரிழிவு இருந்தால் இந்த வழியை பின்பற்றுங்கள்


பின்னர் படிப்படியாக நீங்கள் மற்ற பொருட்களை நீக்க ஆரம்பிக்க வேண்டும்,” என்றும்
அவர் கூறியுள்ளார்.

முடக்கத்தான் கீரையில் தோசை; 10 நிமிஷத்துல


இப்படி செஞ்சு அசத்துங்க!

Mudakathan Keerai recipes in tamil: ‘முடக்கு அறுத்தான்’ என்பது


காலப்போக்கில் மருவி முடக்கத்தான் என்றானது. இந்த அற்புதமான கீரையை
நம்முடைய அன்றாட உணவுகளோடு சேர்த்துக்கொண்டால் கை, கால், மூட்டு வலி
போன்ற உடல் வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும் முதுகு எலும்பு
தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம்,
மூட்டுவலிகளையும் குணப்படுத்தும்.

இந்த முடக்கத்தான் கீரையை நாம் ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல்


ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போக வாய்ப்புள்ளது.
ஆனால் நாம் அது பற்றி பயப்படத் தேவையில்லை. இவற்றை தொடர்ந்து
சாப்பிடலாம். மூளைக்கு பலம் கிடைக்கும். தவிர முடக்கத்தான் கீரையின் துவையலை
நம்முடைய உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல்,
பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

இப்படி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள முடக்கத்தான் கீரையை


எப்படி தோசையோடு சேர்த்து ருசிக்கலாம் என்பது குறித்த எளிய செய்முறையை இங்கு
பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை தோசை செய்யத் தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரை – 2 கப்


புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

முடக்கத்தான் கீரை தோசை செய்முறை

முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு ஆகிவற்றை ஒன்றாக சேர்த்து, ஒரு


மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் அரைக்கவும்.

இவற்றை அரைத்துக் கொண்டிருக்கும்போதே நன்கு சுத்தம் செய்து நறுக்கிய


முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.

இதன் பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7
மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ளவும்.

மாவு தோசைக்கு தயாரானதும், தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மாவு


விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இந்த அருமையான தோசையோடு பூண்டு மிளகாய்ப் பொடி சேர்த்து சுவைத்து


மகிழவும்.

சின்ன வெங்காயத்தை நறுக்கி, நல்லெண்ணெயில்


தாளித்து… சூப்பரான சட்னி இப்படி செய்யுங்க!

chutney recipes in tamil: நம்முடைய வீடுகளில் பல வகை சட்னிகள் செய்து


சுவைத்திருப்போம். ஆனால் உல்லி எனப்படும் சின்ன வெங்காய சட்னி சுவைத்திருக்க அதிக
வாய்ப்பு இருந்திருக்காது. இந்த வகை சட்னிகள் செட்டிநாட்டு சமையல் வகையைச் சார்ந்தது.
இந்த அற்புதமான சட்னியோடு வெள்ளை பணியாரம் சேர்த்து சாப்பிட்டால் வேற லெவல்
டேஸ்டாக இருக்கும்.

மேலும், இவற்றை நம்முடைய பிரபல காலை உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம்


போன்றவற்றோடு சேர்த்து ருசிக்கலாம். இந்த டேஸ்டியான சின்ன வெங்காய சட்னி எப்படி தாயார்
செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
சின்ன வெங்காய சட்னி – தேவையான பொருட்கள்:-

அரைக்க

வரமிளகாய் – 7
காஷ்மீர் மிளகாய் – 5
தக்காளி – 400 கிராம்
பூண்டு பல்லு – 4
புளி – 4 கிராம்

தாளிக்க

நல்லெண்ணெய் – 5 டீ ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 15
சின்ன வெங்காயம் – 300 கிராம்
உப்பு – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் தூள் – 1/4 டீ ஸ்பூன்

செய்முறை:-

முதலில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக அரைத்து தனியாக எடுத்து


வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும்
கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தோடு
சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் முன்னர் அரைத்து வைத்துள்ளவற்றை இவற்றோடு


சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவைத்து கீழே
இறக்கவும்.

இப்போது உங்களுக்கு பிடித்த காலை உணவுகளோடு சேர்த்து ருசிக்கவும்.


சிறுதானிய உணவுகளுக்கு எப்போதும் தனி
”மவுசு” தான்; குதிரைவாலி சாம்பார் சாதம்
செய்வது எப்படி?

Sambar Rice recipe in tamil: புல்லுச்சாமை அல்லது சாமை என்று


அழைக்கப்படும் இந்த குதிரைவாலி அரிசி ஒரு புன்செய் பயிராகும். இவற்றை
ஆங்கிலத்தில் Horse-tail Millet, Barnyard Millet என்றும் அழைக்கபடுகிறது.

இந்த அற்புதமான குதிரைவாலி அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து


நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து,
பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன.
அதோடு கோதுமையைவிட குதிரைவாலியில் ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.

பச்சையம் இல்லாத சிறுதானியமாக உள்ள இந்த குதிரைவாலி அரிசி உடலில் உள்ள


தேவையில்லாத உப்புகளை கரைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் கண்
சார்ந்த அனைத்து பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய பீட்டா கரோட்டின் இவற்றில்
அதிகமாக உள்ளன.

அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியில் சாதம்


செய்து சாப்பிட்டு வந்தால் அவை அண்டாது.

இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள குதிரைவாலி அரிசியில் சாம்பார்


சாதம் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி (அ) சாமை அரிசி – 4 கப்,


பீன்ஸ், கேரட் – 250 கிராம்,
கத்திரிக்காய், தக்காளி – தலா 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 8,
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா – ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 10,
முருங்கைக்காய் – 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு,
சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

முதலில் குதிரைவாலி அரிசியை தண்ணீரில் கழுவி நன்கு ஊறவைக்கவும். அதன் பிறகு


புளியை நன்றாக கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் காய்கறிகள்,
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் துவரம் பருப்பு மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய
வேகவிடவும்.

தொடர்ந்து தனியாக அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு


சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப்
தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக்கரைசலை


விட்டுக் கொதிக்க வைக்கவும்.

அதன் பிறகு, அதில் ஊறவைத்த குதிரைவாலி அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக்


கிளறவும். பின்னர் 7 1/2 கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி
சேர்த்து நன்கு கிளறவும்.

அரிசி வெந்து குழைந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும். கடைசியாக


கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவி கீழ் இறக்கவும்.

இப்போது இந்த சுவையான குதிரைவாலி சாம்பார் சாதத்தை ருசித்து மகிழவும்.

ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்


பூண்டு தக்காளி தொக்கு; செட்டிநாடு ஸ்டைலில்
செய்வது எப்படி?
Tomato recipes in tamil: தொக்குகளில் பல வகைகள் உள்ளன. அவை
ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சுவை உண்டு. அந்த வகையில் தொக்கு வகைகளில்
மிகவும் பிரபலமான தொக்காக உள்ள தக்காளி தொக்கிற்கென தனித்துவமான சுவை
உள்ளது. கூடவே பூண்டு சேர்ப்பதால் இதன் டேஸ்ட் இன்னுமே அருமையாக உள்ளது
என்றால் நிச்சசயம் மிகையாகாது.

இப்படிப்பட்ட சுவைமிக்க பூண்டு தக்காளி தொக்கை செட்டிநாடு ஸ்டைலில் எப்படி


தயார் செய்வது என்று பார்ப்போமா!

செட்டிநாடு ஸ்டைல் பூண்டு தக்காளி தொக்கு தேவையான பொருட்கள்:

தொக்கு மசாலா:-

வெந்தயம் – 1/2 தேக்கரண்டி


கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 /4 தேக்கரண்டி

பூண்டு விழுது:–

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
பூண்டு பல்லு – 150 கிராம்

தக்காளி மற்றும் வரமிளகாய் விழுது:-

தக்காளி – 1 கிலோ
உலர் வரமிளகாய் – 20 கிராம்
காஷ்மீர் மிளகாய் – 20 கிராம்

தொக்கு :-

நல்லெண்ணெய் – 50 கிராம்
கடுகு – 11 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 25
நறுக்கப்பட்ட பூண்டு – 50 கிராம்
புளிச்சாறு – 100 கிராம்
பெருங்காயத்தூள் – 1 / 4 டீ ஸ்பூன்
கல் உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை

தொக்கு மசாலா பொருட்களை ஒரு கடாயில் இட்டு 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்,


அவை நன்கு ஆறிய பிறகு அரைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பூண்டை வதக்கிக்


கொள்ளவும்.

தக்காளி மற்றும் இரண்டு வகையான காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்கு பேஸ்ட் போல்
அரைத்து கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் தக்காளி பேஸ்ட்யை இட்டு 5 நிமிடங்களுக்கு


கிளறவும். தொடர்ந்து புளி சாறு சேர்த்து 10 நிமிடங்கள் கிளறவும்.

இதன் பிறகு, பூண்டு விழுது சேர்த்து 10 நிமிடங்கள் கிளறிக் கொள்ளவும். தொடர்ந்து


அவற்றை தாளித்த பின்னர் தொக்கு மசாலா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.

அதன் பின்னர், பெருங்காய தூள் சேர்த்து 15 நிமிடங்களுக்கு மிதமான தணலில்


சூடேற்றிக் கீழே இறக்கவும்.

இப்போது அவற்றை உங்களது விருப்பமான உணவுகளுடன் பரிமாறி ருசிக்கலாம்.

இடியாப்பம் செய்றீங்களா? அப்போ இந்த


தக்காளி குருமாவையும் சேத்து செய்ங்க!
Tomato kuruma recipes in tamil: நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய காய்கறிகளில்
ஒன்றாக தக்காளி உள்ளது. இந்த தக்காளியை விதவிதமான முறையில் சமைத்து
சாப்பிட்டு இருப்போம். தவிர, பல வகை சைடிஷ்சும் செய்து ருசித்திருப்போம். அந்த
வகையில் தக்காளியில் அருமையான குருமா எப்படி தாயார் செய்யலாம் என்று இங்கு
பார்க்கலாம்.

இந்த டேஸ்டியான தக்காளி குருமா இட்லி தோசை பூரி சப்பாத்தி, இடியப்பம் போன்ற
உணவுகளுக்கு சூப்பரான சைடிஷ். இப்போது இதற்கான எளிய செய்முறையை இங்கு
பார்க்கலாம்.
படி – 1

தேங்காய் துருவல் – 1/2 முடி


பழுத்த பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
பட்டை – 1, லவங்கம் – 1
சோம்பு – 1/2 ஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பூண்டு – 4 பல்
முந்திரிப்பருப்பு – 4
பொட்டுக்கடலை – 1/2 ஸ்பூன்

இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் இட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல
அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

படி – 2

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்


சோம்பு – 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் – 15 பல் (பொடியாக நறுக்கியது)

இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மேலே


கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து
தாளித்துக்கொள்ளவும்.

பின்னர் முன்பு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்த விழுதை வெங்காயத்தோடு


சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு
சேர்த்துக்கொள்ளவும்.

இதன் பிறகு,

மிளகாய்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து
கொதிக்க விடவும். அவை நன்கு கொதித்து வந்த பின்னர் கொத்தமல்லி தழையை தூவி
பரிமாறிவும்.

இப்போது சுலபமான முறையில் சூப்பரான தக்காளி குருமா தயாராகி இருக்கும். இந்த


டேஸ்டியான குருமாவை நிச்சயம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க மக்களே!!!

வெள்ளை அவல் முக்கியம்… மிக்ஸியில் இப்படி


ஒரு முறை இட்லி மாவு அரைச்சுப் பாருங்க!
Idli recipe in tamil: தென்னிந்திய காலை உணவுகளில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக
இட்லி உள்ளது. அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை
விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. சூடான இட்லிகளை
சட்னிகளுடனும், வீட்டில் வைக்கும் குழம்புகளுடனும் சேர்த்து சுவைத்தால்
திருப்தியான உணவு உண்பதற்கு ஈடாக இருக்கும்.

அப்படிப்பட்ட இட்லிகளை சில சமயங்களில் மிருதுவானதாக தயார் செய்ய


முடிவதில்லை. இப்படி பூ போன்ற இட்லி தயார் செய்வது மாயா வித்தை அல்ல. நாம்
இன்று பார்க்கவுள்ள இந்த சிம்பிளான டிப்ஸ்யை முயற்சித்தாலே போதும். மிருதுவான
இட்லிக்கு பல வகை டிப்ஸ்கள் இருந்தாலும் இந்த டிப்ஸ் சற்றே வித்தியாசமானது
மற்றும் எளிமையானது.

சரி, அந்த சிம்பிள் டிப்ஸ் பற்றி பார்ப்போமா!

மிருதுவான மற்றும் புசுபுசு இட்லிக்கான டிப்ஸ்:-

இட்லிக்கான மாவு அரைக்க சாப்பாடு அரிசி, புழுங்கல் அரிசி, ரேசன் அரிசி அல்லது
இட்லி அரிசி ஆகிய எதாவது ஒன்றை 3 1/2 டம்ளர் அளவில் தலை தட்டி அளந்து
எடுத்துக் கொள்ளவும்.
பிறகு, இவற்றுடன், 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 முறை தண்ணீர் விட்டு
அலசி ஊற வைத்துக்கொள்ளவும்.

இதே போல் ஒரு டம்ளர் அளவு முழு உளுந்து எடுத்து ஊற வைத்துக்கொள்ளவும்.

இப்படியான அளவுகளில் நீங்கள் எடுக்கும் போது அவை மிக்ஸியில் அரைக்க சற்று


எளிமையாக இருக்கும்.

மிருதுவான இட்லிக்கு இங்கு முக்கிய பொருள் ஒன்று சேர்க்க வேண்டும். அது


சேர்க்கும் போது இட்லி பஞ்சு போல மெத்தென்று வரும். அந்த பொருள்
வேறொன்ரும் இல்லை. அது வெள்ளை அவல் தான்.

இந்த வெள்ளை அவலை அதே அளவில் ஒரு பங்கு அளவிற்கு தலை தட்டி அளந்து
எடுத்துக் கொள்ளவும்.

ஒருவேளை நீங்கள் நைஸ் அவல் வைத்திருந்தால் அவற்றை அரைக்கும் போது ஊற


வைத்துக் கொள்ளவும். கெட்டியான அவலாக இருந்தால் அரைப்பதற்கு அரை மணி
நேரத்திற்கு முன்னர் ஊற வைத்தால் போதும்.

சிகப்பு அவல் பயன்படுத்தினால் இட்லியின் நிறம் மாறிவிடும் ஆனால் உடலுக்கு நல்ல


ஆரோக்கியம் கிடைக்கும்.

அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் சுமார் 3 நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை
ஊற வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பெரிய மிக்ஸி ஜார் எடுத்து அதில் முதலில் உளுந்தை இட்டு வடைக்கு
ஆட்டுவது போல் தண்ணீர் விடாமல் சிறிது சிறிதாக நீரை தெளித்து தெளித்து பொங்கி
வர ஆட்டவும்.

இறுதியாக ஊற வைத்த அவலை சேர்த்து ஒரு முறை அரைத்து எடுத்து கொள்ளவும்.

தொடர்ந்து அரிசியை இட்டு மிகவும் நைசாக அரைக்காமல் சற்று நொறுநொறுப்பாக


அரைத்துக்கொள்ளவும்.

மாவை அதிக நாட்கள் பயன்படுத்த அரைக்கும் போது குளிர்ந்த நீர் பயன்படுத்தவும்.

கடைசியாக கல் உப்பு சேர்த்து நன்கு சூடு பறக்க கலந்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியின் மோட்டார் சூட்டில் மாவு 3 மணி நேரத்திலேயே இட்லி நன்கு புளித்து
விடும்.

இப்படி இந்த எளிய செய்முறையை பயன்படுத்தி சாஃப்டான இட்லி தயார் செய்து


ருசித்து மகிழவும்.

You might also like