You are on page 1of 280

þÿAll rights reserved.

š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


758

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


758

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


வாழப

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


வாழப் பிறந்தவள்

சிங்கை
தமிழ்ச் செல்வம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


உரிமை : ஆசிரியருக்கு
நூல் பெயர் : வாழப் பிறந்தவள் (நாவல்)
МАЕКО PATIPPAKAM (Publisher)
BLK 10 #03-78, GHIM MOH ROAD
SINGAPORE 270 010
ISBM : 981 - 04 - 08 3 -
AUTHOR : TAMIL
TITLE : T798 VAAZHAPPIRANDHAVAL
பதிப்பு : முதற் பதிப்பு
திருவள்ளுவர் ஆண்டு 2029
(டிசம்பர் 1998)
தாள் : 7.2 கிலோ கிரவுன்
நூல் அளவு : கிரவுன்
எழுத்து : 11 புள்ளி
மொழி : தமிழ்
பக்கம் : 270
படிகள் : 1000
மின் அச்சுக் கோப்பு
மற்றும் அச்சு : எம்.லபிரணட்ஸ
36, ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 24.
தொ.பே.எண் : 483052
ஓவியம்: வானம்படி இளங்கோவன்,
மலேசியா
தமிழகத்தின் விற்பனை
உரிமை : மாஸ்கே பதிப்பகம்
85சி, பங்கார் தெரு.
அயனாவரம் சென்னை - 600 023.
தொ.பே.எண் : 64 95
விலை : இந்தியா : ரூ.50/-
சிங்கப்பூர் : 20

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் III

பாராட்டுப் பா...!
சிறுகதை எழுதும் நல்ல
சிந்தனைச் சிற்பி ஆவர்;
மறுவிலா எழுத்தின் ஆளர்;
மதித்துநான் வைத்தி ருந்தேன்!
உறுபொருள் நீட்டிச் சொல்லும்
உன்னதம் புதினம் தீட்டும்
பெருந்திறன் வாய்க்கப் பெற்ற
பெற்றிநான் அறியா ஒன்றே!
திருதமிழ்சி செல்வம் நண்பர்
தீட்டிய நாவல் பார்த்தேன்;
பெருமிதங் கொண்டேன்; அந்தப்
பெருங்கதை தொடரின் நீட்டம்
கருப்பொருள் உணர்த்தும் சோகக்
காட்சிகள் கருத்திற் கொண்டே
சுருக்கமாய் சொல்வ தென்றால்
சொர்க்கமா; நரகம் தானா?
வாழ்ந்திடப் பிறந்தோ ரெல்லாம்
வையக வாழ்வில் நன்றே
வாழ்ந்திடப் பெற்ற ரென்று
வரையறுத் துரைக்கப் போமோ?
வாழ்ந்திடப் பிறந்து வந்தாள்
வளர்தமிழ் வனிதை நல்லாள்
வாழ்ந்திடா தொழிந்த வாழ்க்கைக்
கதையது வடிக்கும் கண்ணீர்!
மு. தங்கராசன்
செயலாளர்
தமிழ்வேள் நாடக மன்றம்
சிங்கப்பூர்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


IV வாழப் பிறந்தவள்

கவிஞர் செவ்வியன் 311-5ஆவது தெற்கு குறுக்குத் தெரு


மாநிலச் செயலாளர், கபாலீசுவர் நகர், நீலாங்கரை
திருவள்ளுவர் மக் க ள் நற் ப ணி மன் ற ம் சென்னை - 600 041.

அணிந்துரை
தமிழ்மொழி. இலக்கிய வளர்ச்சிக்குப் புலம் பெயர்ந்த
தமிழர்களின் பங்களிப்பு போற்றுதற்குரியதாகும். இருபதாம்
நூற்றாண்டின் தமிழ்மொழி வளர்சிக்குப் பாடுபட்டவர்கள்
ஈழத் தமிழ் இலக்கியவாதிகளே யாவர். ஈழத்துக்கு அடுத்த
வரிசையில் நிற்கும் தகுதி பெற்றவர்கள் மலேசியத் தமிழ்
எழுத்தாளர்கள். இன்று சிங்கப்பூர்த் தமிழர்களும் மலேசியத்
தமிழ் எழுத்தாளர்களுடன் போட்டி இடுகின்றனர்.
தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை
வணிக நோக்கோடு படைக்கிறார்கள். ஆனால், ஈழம்,
மலேசியா, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் மொழித்
தொண்டாகவே தங்களது பணியினைச் செய்து வருகின்றனர்.
இவை பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் நாடுகளில்
தமிழ்மொழி. வளர, தாயகத்திலிருந்து பல்வேறு
பங்களிப்புகளை எதிற்ப்பார்க்கின்றனர். தமிழ் எங்களது உயிர்
என்று கூறுபவர்கள் இலாப நோக்குடைய வணிகர்களாக
மாறிவிட்டபோது, இவர்களால் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு
பயன் தரத்தக்கவைகளை எங்கே வழங்கப் போகிறார்கள்?
நண்பர் சிங்கை தமிழ்ச் செல்வம் அவர்களின் தமிழ்
மொழி ஆர்வம் வியப்பூட்டுகிறது என்ற பன்னாட்டுக்
கவிஞரின் கவிதைகளைத் தொகுத்தவர், குறள்வழிக்
கதைகள், கவரிமான் என்ற இரண்டு சிறுகதைத்
தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு
சிறுகதைத் தொகுப்புகளுமே இளைஞர்களை நல்வழிப்
படுத்தும் பெரு நோக்கோடு அமைந்த இலக்கியப் பணியாகும்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் V
இவர் தற்பொழுது வாழப் பிறந்தவள் என்ற
நூலக்கியுள்ளார். இந்தக் கதை மலேசிய வானம்பாடி தமிழ்
இதழில் தொடராக வந்தது, இந்நாவல் தமிழக
மண்வாசனையோடு, மலலேசிய மண் வாசனையயும்
கமழச் செய்கிறது. நாவல் முழுவதும்
சிதையாமல் கதாபாத்திரங்களப் பேசச் செய்துள்ள பாங்கு
சிறப்பானது எளிய தமிழ் இனிமையான சொற் கோவை,
படிப்பவரின் உள்ளத்தில் கிளர்ச்சியூட்டும் லாவகம்
அனைத்துக்கும் மேலாக கற்போரின் உள்ளத்தில் சமுதாயச்
சிந்தனையைத் தூண்டும் முயற்சி இவைகளில் சிங்கை தமிழ்ச்
செல்வம் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் வளர்ச்சிபற்றிப் பேசும் ஒவ்வொரு தமிழனும்
இந்நூலை விலை கொடுத்து வாங்கிப் படிப்பதன் மூலம்
நண்பர், சிங்கை தமிழ்ச் செல்வம் அவர்களின் தமிழுணர்வை
வளர்க்க வேண்டும் இது கடமையும் கூட
இந்நூலுக்கு அணிந்துரை வழங்க வாய்ப்பளித்த
சிங்கைத் தமிழ்ச் செல்வம் அவர்களுக்கு, நன்றியைத்
தெரிவித்து கொள்கிறேன். அவரது தமிழுணர்வு மேலும்
பலப்பல நூல்களைத் தமிழ்
இலக்கியப்
அலங்கரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
சென்னை : 600 041 என்றும் அன்புள்ள
நாள் : 19-11-98 செவ்வியன்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


VI வாழப் பிறந்தவள்

என்னுரை
இலக்கியப் பணி ஆற்றுவதே இறவாப் புகழ்
எய்துவதற்குரிய வழி என்னும் நம்பிக்கை என் இதயத்தின்
அடித்தளத்தில் இளமைக் காலந்தொட்டே ஊறிச் சுரந்து
கொண்டிருக்கின்றது.
தமிழ் இலக்கிய உலகுக்கு நான் படைத்துள்ள
ஒவ்வொரு நூலையும் ஒவ்வோர் எல்லைக் கல்லாகக் கருதிப்
பாத்துக் கொண்டபோது இலக்கிய நெடுஞ்சாலையில் நான்
இதுகாறும் மூன்று எல்லைக் கற்களைத் தாண்டியிருக்
கிறேன்... என்று கொள்ளலாம். இந்த வாழப் பிறந்தவள்
என்னும் படைப்பு நான்காவது எல்லை கல்லா இலங்கி
நிறகிறது.
இந்திய நாட்டில் தாய்த் தமிழகத்தின் தென்
சீமையில் பிறந்து, மலை நாட்டின் மடியில் தவழ்ந்து, சிங்கைத்
திருநாட்டில் சீர் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.
சிங்கப்பூரியன் என்னும் உணர்வில் மண்ணின் மணங்கமழும்
மகத்தான படைப்புகளையே உருவாக்க வேண்டும் என்னும்
உந்துதல் காரணமாக எழுதும் படைப்புகள் எல்லாவற்றிலும்,
-
கதை - கவிதை - கட்டுரை - புதினம் நாடகம் என்பவற்றுள்
எதை எழுதினாலும் அதில் மண்மணங் கமழ்கள் வேண்டும்
என்ற நோக்கோடு எழுதிக்கொண்டு வருகின்றேன்.
வாழப் பிறந்தவளும் மண்மணங் கமழும் மாமணியாகக்
காட்சியளிப்பாள் என்பதில் மயக்கம் கிஞ்சிற்றும் இல்லை.
-
இந்த வாழப் பிறந்தவள் 1995 ஆம் ஆண்டில் மலேசியத்
திருநாட்டின் மத்தான வாரஇதழ் வானம்பாடியில் முப்பது
வாங்களாகத் தொடர்ந்து தவழ்ந்து வந்தவள் என்பதும்,
- சிங்கப்பூர் தமிழ்
அவள்தம் அணிநடை மலேசிய
நெஞ்சங்களில் நீங்கா நினைவாகப் பதிந்துள்ளது என்பதும்
ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் VII
எழுதத் தொடங்கிய காலந்தொட்டே எனக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளித்துவரும் என்னினிய
படைப்புகளைப் படித்த பின்னர் பாரட்டுவதோடு மேலும்
மேலும் தரமாக எழுதத் துண்டிய படைப்பிலக்கியச்
சான்றோர்களையும், வாழப் பிறந்தவளின் வடிவழகுப் பூரிப்பில்
திளைக்கும் இவ்வேளையில் நன்றியறிதலோடு நினைவு
கூர்கிறேன். மறந்திடப் போமோ அந்த மனங்கவர்
வாசகங்கள்!
என்னுடய இயக்கியப் படைப்புகளுக்கு எப்போதும்
உற்சாகமளித்து ஆதரவு காட்டிவரும் சிங்கப்பூர் தமிழ்
எழுத்தாளர் கழகத்தினர்க்கும், மற்றுமுள்ள அனைத்துச்
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளுக்கும், இலக்கிய ஆர்வலர்
களுக்கும், குறிப்பாக தமிழாசிரியர் பெருமக்களுக்கும்,
கவிஞர்களுக்கும், எழுத்தார்களுக்கும், மாணவச்
செல்வங்களுக்கும், சமூகத் கொண்டர்களுக்கும் இதயப் பசுமை
நிறைந்த நன்றி சொல்ல என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
வாழப் பிறந்தவள் வடிவமைப்புக்குத் துணை நின்ற
அனைவருக்கும், குறிப்பாக. மாஸ்கோ பதிப்பக உரிமை
யாளருக்கும், அணிந்துரை, வாழ்துரை வழங்கியருளிய
பெருமக்களுக்கும், முகப்போவியம் எழிலுற முடித்துத் தந்த
வானம்படி. இதழின் ஓவியருக்கும், குறித்த நேரத்தில்
அச்சியற்றித் தந்துதவிய அச்சகத்தாருக்கும் மற்றும்
இன்னோரன்ன பிற ஓரோ வழிகளில் உத்வி புரிந்தோர்
ஓவ்வொருக்கும் உளங்கனிந்த நன்றியினை உரித்தாக்கி
மகிழ்கின்றேன்.
அன்புடன்
தமிழ்ச்செல்வம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


758

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 1
கோலாலாம்பூரில் இருந்து கிளம்பி ஒருமணி
நேரம் ஓடி இருக்கும் புதிய நெடுஞ்சாலையில்
அவளது 'ஈஸ்வரா' நிதானாமய் ஓடிக் கொண்டி
ருந்து நெளிந்து நெளிந்து செல்கிற வேளையில்
வானளாவ நிற்கும் மலைத் தொடர்களும் அதை மூடி
நிற்கும் மரங்களும் அதன்மேல் வந்து விழுந்து எழுந்து
புகுந்து ஓடி விளையாடும் மேக் குழந்தைகளும்
அவள் பார்வையில் படாமல் இல்லை.
நேராகச் செல்கின்ற பாதை வளைவுகளில்
திரும்பும்போது அவன் கொஞ்சம் ஆர்வத்துடன்
அவற்றைப் பார்ப்பாள். எங்கே ஓரிடத்தில் திரும்பிய
போது மலையிலிருந்து இரண்டு சிறு அருவிகள் கீழே
இறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள் காரை
அங்கேயே நிறுத்தி விட்டு ஓடிப்போப் கால்களை
நளையவிட்டுக்கொண்டு நேரம் போவது தெரியாமல்
உட்கார்த்திருக்க வேண்டும்போல் இருந்தது.
மனிதன் சும்மா உட்கார்ந்திருந்தாலும் அவன்
மனம் அவனுடன் உட்கார்ந்திருப்பதில்லை
என்பதுபோல், அவளது கை, கால், கண் யாவும்
காரில் இருந்தாலும் பாழாய்ப் போன மனம் மட்டும்
ஏன் இப்படிப் பேயாய் அலைகின்றது.
கட்டுப்படுத்துகிறாள் கட்டுக்கடங்காமல் ஓடிய
கன்றுக் குட்டியைப் பிடித்துவந்து ஓரிடத்தில் கட்டிப்
போட்டதும் திகைத்து நிற்குமே அதைப்போல் அந்த
மனமும் அப்படியே ஒரு வினாடி திகைத்து நின்றது
மறுபடியும் ஓட ஆரம்பித்து அவளையே சுற்ற
ஆரம்பித்தது சுற்றிச் சுற்றி வந்தது. நீலாம்பரி என்ற
அந்த அறிவார்த்தமான பெண்ணைச் சுற்றி

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


2 வாழப் பிறந்தவள்
இப்போது நகர்வம் வருவது போல் அவளுடன்
சேர்ந்துகொண்டு அவனையும் இழுத்துக்கொண்டு
கற்றுலா செல்கின்றது.
நீலபம்பரி அதற்கு அடிமையாகிப் போய்
இன்று படும்பாடு போதாதென்று மறுபடியும்
அவளைத் தன் வழிக்கு இழுத்துச் செல்கின்றது
நீலபம்பரி விழித்துக்கொண்டாள். ஒருமுறை உடம்பு
சிலிர்த்து, விசுக்கென்று மனக்குருவி ஓடிப் போய்
எங்கேயோ ஒளிந்துகொண்டது. நீண்டு கிடக்கும்
அந்த நெடுஞ்சாலையைப் பார்க்கும்போது அதன்
அழகும் தெளிவும் கம்பீரமும் உறுதியும் அவளுக்கு
எதையோ நினைவுபடுத்தியது. நினைத்துப்
பார்க்கிறாள்.
பத்து அண்டுகளுக்கு முன் இந்தச் சாலைக்கு
இப்படி ஓர் அழகும் கம்ரபீமும் கிடையாது குண்டும்
குழிய கரடுமுரடான பாதைகளுமாய்க் கிடந்த
அந்தச் சாலைதான் இன்று இவ்வளவு அழகாகவும்
நேர்த்தியாகவும் மாற்றப்பட்டுள்ளது என்பதை
அறியும்போது நீலாம்பரிக்குத் தன்னைப்பற்றிய
நினைவும் சுடுமணலில் விழுந்து பொரியும் சோளம்
போல் பளிச்சென்று மின்னலாப் விரிகின்றது.
கடந்துபோன காலங்களில் நடந்துவந்த
பாதைகளில் பெற்ற அனுபவங்கள் அவள் கால்களில்
தைத்திருந்த ஆணிகளாய் நெஞ்சில் நெருடுகின்றன
அணிந்திருக்கும் அழகிய காணியின் மிருதுத்
தன்மையைக் கடந்து அந்த நெருடல் வலிக்கின்றது.
சாலையோரத்து மரங்களின் ஊடே நிமிர்ந்து நிற்கும்
தென்னைமரம் ஒன்று கண்ணில் படுகின்றது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 3

அந்த மலையடிவாரத்தில் அழகாகப் படர்ந்து


விரிந்து நிற்கும் மாமரங்களின் நடுவே புகுந்து
வெளியே வந்து வட்டவடிவ மரத்தின் இடையே
சென்று உயரத்தில் கொத்தும் குலைமாய்க் காய்த்
துக் குலுங்கும் அந்த மரத்தில்கூட எத்தனை வடுக்கள்.
அந்த வடுக்கள் யாவும் அதுபெற்ற அனுபவத்
தின் கால முத்திரைகள்தானே! அது ஒவ்வொரு
மட்டையையும் உதிர்த்துவிட்டு எழுந்த போதெல்
லாம் ஒவ்வொரு பாடத்தைப் பெற்றுத்தானே
உயர்ந்து நிற்கின்றது.
தேங்காயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த
நாளில் இருந்து ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியிலும்
அதுபெற்ற அனுபவம் போல், அவள் பிறந்தது முதல்
இன்றுவரை கிடைத்திருக்கும் அனுபவம்...!
தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு
வெளியே வந்த தென்னகங்கன்று அதுவளர்ந்து
மீண்டும் காய்களைத் தருகின்றபோதும் அதன் தாய்
அதன் பிடியிலேயே ஒட்டிக் கொண்டே இருந்து
மண்ணோடு மண்ணாகி மறைந்து போகிறது
என்றாலும் அது வேறு கன்று வேறாய்ப் பிரிந்த கதை
எப்போதும் கிடையாது. ஆனால் பெண்....!
அவள் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்து,
அவளும் பெண்ணாகித் தாயாகித் தன் வம்சம்
விளங்க வாழையடி வாழையாய்த் தொடர்கின்ற
போது தானே சம்பவங்களும் சரித்திரங்களும்
நிகழ்கின்றன. ஒவ்வொரு பெண்ணிலும் ஓராயிரம்
சம்பவங்கள்... ஒவ்வொரு பெண்ணிலும் ஓர்
சரித்திரம்!!

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


4 வாழப் பிறந்தவள்
அப்படி அவள் சரித்திரமாகி இராவிட்டால்
உலகம் போற்றும் உத்தமர்கள்! தியாகசீலர்கள்,
அறிஞர்கள் விஞ்ஞான மேதைகள் இம் மண்ணிலே
முளைத்திருக்க முடியுமா?
மண்ணைவிடப் பொறுமையாகி, பூவைவிட
மென்மையாகி... பொன்னை விட மேன்மையாகித்
திகழ்கின்ற பெண்மைக்குத்தான் எத்தனை சோதனை
கள்! எத்தனை எத்தனை வேதனைகள்!
உரசி உரசிப் பார்த்த பின்தானே தங்கம்
உயர்வாக மதிக்கப்படுகின்றது. பெண்ணும் பல
சோதனைகளைக் கடந்து துணிந்து நின்ற பின்னால்
தானே உற்றார் பெற்றோர், சுற்றத்தாரால் சூழ்ந்து
நிற்கும் உலகத்தாரால் மதிகப்படுகின்றாள்!
தியாகம் என்றும் அர்ப்பணிப்புத் தன்மை
என்றும் எத்தனை எத்தளை காரணங்களால் பெண்
தன்னையே தந்து மண்ணாகிப் போகிறாள்.
பிறந்தது முதல், மண்ணில் மீண்டும் புதைகின்ற
வரை அவள் அடைகின்ற கஷ்டங்கள் நஷ்டங்கள்
தான் எத்தனை எத்தனை எதிர்ப்படும் கஷ்டங்களைக்
கண்டு அஞ்சியும் ஏற்படுகின்ற நஷ்டங்களைக் கண்டு
அலுப்படைந்தும் வாழ்க்கையை வீணடித்து விடாமல்
எல்லா நிலைகளிலும் விவேகமாய் அவற்றைச்
சந்தித்ததால் அடைந்த வெற்றிதானே இப்பயணம்.
நீலாம்பரியின் ஈஸ்வரா கோலக்கங்சார் வந்து சேர்ந்த
போது அவளுக்கு ஏதாவது சாப்பிட வேண்டும்
போல் இருந்தது. காரை கார் நிறுத்துமிடத்தில்
விட்டுவிட்டுக் குளியலறையில் போய் முகம் கழுவிக்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 5
கொண்டு திரும்பியபோது உள்ளமும் உடலும்
கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்தது. மெல்ல
அங்கிருந்த கடைகளில் பார்வையைச் செலுத்திய
வளாய் நடந்தாள்.
நீண்ட நேரம் காரைச் செலுத்தியதால்
ஏற்பட்ட இடுப்பு வலி, கால்களின் இறுக்கம்
இப்போது, கொஞ்சம் குறைந்தது போல் தெரிந்தது.
கைவினைப் பொருள்களை விற்கும் கடைகளில்
காணப்பட்ட ஒவ்வொரு பொருளிலும் ஆழ்ந்து
தனது பார்வையை செலுதினாள். அவற்றின்
அழகான தோற்றம் அவன் மனதை மிகவும் கவர்ந்தது.
எல்லாவற்றையும் பார்க்கின்றாள் பார்ப்பதை எல்லாம்
வாங்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகின்றது.
ஆனால் எதை வாங்குவாள்... யாருக்காக வாங்குவாள்?
உல்லாசமாய் வானில் பறந்து கொண்டிருந்த
பறவையை யாரோ கல்லால் அடித்து விழ்த்தியது
போல் அவள் மனக்குருவி சுருண்டு போய்
அடங்குகின்றது. திரும்புகிறாள், சிற்றுண்டி விற்கப்
படும் இடத்திற்குச் சென்று ஒருதட்டை எடுத்து
அதி சில பலகாரங்களை எடுத்து வைத்துக்
கொண்டு அமர்கிறாள்.
தண்ணி ஏதாச்சும் வேணுமாக்கா...! அவளது
மேசைக்கருகில் சுத்தமான உடையில் சுறுசுறுப்பான
கண்களுடன் பத்துவயது மதிக்கத்தக்க சீனப்பையன்
ஒருவன் அவளைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.
அவனுக்கும் வந்த மொழிக்கும் வித்தியாசம்
இருந்ததால் சந்தேகத்தவிப்புடன் சுற்றுமுற்றும்
பார்க்கிறாள் அவள். இவன் இவனா தன்னை

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


6 வாழப் பிறந்தவள்
அப்படி விசாரித்திருப்பான்? மனதுக்குள் கேள்வி
எழுந்ததை முகம் காட்டிவிட்டது போலும். பையன்
பேசினான்.
'நான் தான் கேட்டேன்... என்ன
சாப்பிடறீங்க... மைலோவா, நெஸ்கபேயா இல்லே
பசும்பாலா...?
மிக மிகத் தெளிவாக, அழகாக அந்தச்
சீனாப்பையன் மறுபடியும் கேட்டான். துள்ளும்
உவகையுடன் அவனைத் தன் வலது கையால் இழுத்து
அனைத்துக்கொண்டாள் நீலாம்பரி.
'நீ... நீயா தமிழ்ல பேசினே! நீ சீனப்பிள்ளை
யாட்டம் இருக்கியே! தமிழ் படிக்கிறியா?'
ஆர்வமுடன் கேட்கிறாள். அவன் சிரிக்கிறான்.
'நான் சீனப்பையனும் இல்லை... தமிழ்ப் பையனும்
இல்லை... நான் ஒரு மிக்ஸ்... சம்போர்லா...' மறுபடியும்
சிரிக்கிறான். அவனது விளையாட்டுத்தனமான
பேச்சில் மயங்கியவளாய் அவளும் சிரிக்க, அச்
சிறுவன் அவள் முகத்தைத் திருப்பி,
'அங்கே பாருங்க.. அந்த ஜீன்ஸும் பனியனுமாய்
நிக்கிறாங்களே அவுங்கதான் எங்க அம்மா. பேரு
கங்கா, அதோ அரைக்கால் சிலுவாரும் பனிபனுமாய்
நிக்கறாரே அவர்தான் எங்க அப்பா....! அப்பா சீனம்
அம்மா தமிழ்! இதுதான் என்னோட லைஃப்
ஸ்டோரி...'
'உங்க சந்தேகம் தீர்ந்து போச்சுன்னு நெனைக்
கிறேன். இப்ப சொல்லுங்க... என்ன 'ட்ரிங்ஸ் எடுக்கப்
போறீங்க...'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 7
பெரிய கிழவனைப் போல் பேசினான். அவனை
வளைத்துக் கன்னத்தின் முத்தமிட்டு, 'ரெண்டு
மைலோ, உனக்கொன்னு எனக்கொண்ணு...
கொண்டுவா சீக்கிரம்!' அவனுக்குக் கட்டளை
யிடுகிறாள்.
சிறுவன் சுறுசுறுப்பாய் ஒடப் போய் அவள்
முன் மைலோவைக் கொண்டுவந்து வைக்கிறான்.
'இது பிஸினஸ்டைம். இப்ப நான் உங்களோட
உட்கார்ந்து சாப்பிட முடியாது. உங்களுக்கு ஓய்வு
கெடைச்சா இன்னொரு நாளைக்கு வாங்க அப்ப,
நான் உங்களுக்கு கம்பெனி கொடுங்றேன்.'
அவள் அசந்து போகிறாள். அவன் கடமையில்
கண்ணாய், பணத்தைக் கொடுத்துவிட்டு மறுபடியும்
அந்தக் கைவினைப் பொருள்கள் விற்கும் கடைக்குப்
போய் அழகிய தொப்பியும் ஒரு மேற்சட்டையும்
வாங்கி கொண்டு திரும்பிவந்து அவன் பெற்றோர்.
களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்
கொள்கிறாள்.
நீங்க ரெண்டு பேரும் ரொம்பவும்
வெச்சவுங்க உங்க பையன் ரொம்ப சமர்த்தா
இருக்கான். இவனை என்னால் மறக்க முடியாது. இது
என்னோட அன்பளிப்பு.'
அவர்களுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.
'நெஜமாகவே நாங்க அதிர்ஷ்டம் பண்ணினவுங்கதான்.
கடவுள் எங்கக் காதலுக்குக் கொடுத்த சன்மானம்
இவன்.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


8 வாழப் பிறந்தவள்
இருவரும் ஒரு குரலாய்ச் சொன்ன அந்த
வார்த்தை எவ்வளவு உயர்வான வார்த்தை! ஒருகணம்
சிலிர்த்துப் போகிறாள். மெல்லிய புன்கை
இதழ்களில் தவழ்ந்தோட,
'ஒட்டுமாங்கனி இல்லையா... அதுதான் தரமும்
சிறப்பாகவே இருக்கு...! மறுபடியும் வந்த நிச்சயம்
வருவேன். உங்க பையனுக்காகவே வருவேன்.
விடைபெற்றுக் கொண்டு காருக்கு வருகிறாள்.
காலை வெயில் முகத்தைக் கிள்ளியது. வானம்
தெளிவாகி சூரியன் மலை உச்சியைத் தாண்டி வந்து
கொண்டிருந்தான்.
மறுபடியும் பயணம் தொடங்குகின்றது. வயிறு
நிரம்பிப் போனதும், புதுப்பையன் அறிமுகமும்
உற்சாகாப் வண்டியை ஓட்டவைத்தன. கடந்த கால
சிந்தனைக்குச் சென்ற மனதை அந்தச் சிறுவன்
முழுதுமாய் வியாபித்துக்கொண்டிருந்தான்.
'எங்கக் காதலுக்குக் கிடைக்க சன்மானம்.' மனம்
ஒத்த தம்பதிகளின் வாக்குமூலம் அது. அந்தப்
பிள்ளையின் மீதுதான் அவர்களுக்கு எவ்வளவு
பெரிய மரியாதை! எவ்வளவு பெரிய நம்பிக்கை!
மரியாதையும் நம்பிக்கையும் பெருகும்போதுதானே
மனம் அங்கே கோட்டை கட்ட ஆரம்பிக்கின்றது.
பிள்ளையின் மீது பெற்றோர்கள் வைக்கின்ற
நம்பிக்கைதானே அவர்களுக்காக அவர்களை உழைக்க
வைக்கின்றது. உயிரையே பணயம் வைக்கச்
சொல்கின்றது. நீலாம்பரியின் நினைவில் அவளது
அப்பா வந்தார்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 9
2

அது ஒர் ஆடி அமாவாசை நேரம்! அப்பா


வுடன் அவள் ஆற்றில் குளிக்கச் செல்கிறாள்.
ஆடியில் பெருகிவந்த காவிரியின் குழந்தைகளுள்
ஒன்றான அரிச்சந்திரா நதியின் இரு கரையையும்
தொட்டுக்கொண்டு நீர் பெருக்கு கண் கொள்ளாக்
காட்சியாக இருந்தது. தமிழ்நாட்டின்
சியம் என்று சொல்லப்படுகின்ற நெற்களஞ்
தஞ்சைத் தரணியில்
இயற்க்கை எழிலை எல்லாம் தனக்குள்ளே அடக்கிக்
கொண்ட அந்தச் சின்னஞ்சிறு
கிராமத்தில் ஆன்
மீகமும் மனிதாபிமானமும் மிகுந்த பண்ணையார்
பசுபதியின் மூன்றாவது பெண்ணாகப் பிறந்தவள்தான்
இந்த நீலாம்பரி.
மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம்
பொன்சிந்தும் என்பது என்னவோ பழமொழியாக
இருந்தாலும், சூதுவாது அறியாத பசுபதியை அவரது
உடன்பிறப்புகள் சொத்துப் பிரிவினையில் நடுத்
தெருவில் விட்டுவிட்டு அவலத்தைப் போக்க
நீலாம்பரி அதிர்ஷ்ட தேவதையாய் வந்து பிறந்தாள்
என்றே சொல்லவேண்டும்.
அவன் பிறந்த ஆறாவது மாதத்திலேயே அந்த
மனையில் நின்றிருந்த தென்னையும்
மாவும் வஞ்சக
மில்லாமல் காய்த்துக் குலுங்க
ஆரம்பித்தனவாம்.
கன்று போடாத மலட்டுப் பசுவும் கன்று போட்டுக்
கை சோர்ந்து போகும்
அளவுக்குப் பால்
கொடுத்ததாம்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


10 வாழப் பிறந்தவள்

பத்து வயது நீலாவை மடியில் போட்டுத்


தட்டிக் கொடுத்துக்கொண்டே பண்ணையார் பசுபதி
பெருமை பேசிக் கொண்டிருப்பார். தந்தையைப்
பொறுத்தவரை அவள் அதிர்ஷ்டசாலிக் குழந்தை.
தாய்க்கே அவள் வேண்டாத விருந்தாளி. ஏற்கனவே
இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும்போது
இவளும் பெண்ணாகப் பிறந்துவிட்டதால் வந்த
ஏமாற்றம்! அவ்வளவுக்கும் அவள் அம்மாவுக்கு அந்த
இரண்டு பெண் குழந்தைகளும் சொந்தக்
குழந்தைகளும் அல்ல.
தியாகம் என்ற சொல்லுக்கே உதாரணம் அவள்
தாய் கோமளம். தன் சகோதரியின் இரண்டாவது
பிரசவத்திற்காகத் தன் பதினைந்தாவது வயதில்
உதவிக்கு வந்தவளைக் தன் கழுத்தில் கிடந்த தாலி
யைத் தானே சுழட்டி அவள் கழுத்தில் போட்டுத்
தன் பிள்ளைகளுக்குக் தாயாகவும் தன் கணவனுக்கு
மனைவியாகவும் ஆக்கிவிட்டு மண்டையைப்
போட்டவள். அவள் சகோதரி. சினிமாவசனம் போல்
அந்த விபரம் புரியாத வயதில் அவளிடம் அக்காகாரி
வாங்கிய சத்தியத்திற்கு மதிப்பளித்து இன்னொரு
பிள்ளைக்குத் தாயாகவே மாட்டேன் என்றிருந்தவள்.
கால ஓட்டத்தில் கணவனின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து அதுவே பெண்மைக்குப் பெருமைதரும்
பாக்கியத்தைக் கொடுத்ததும் அவள் மகமாயி முன்
நின்று மடிப்பிச்சைக் கேட்டது ஒரு ஆண்வாரிசு
வேண்டுமென்றே!
ஆனால் இவள் ஒன்று நினைக்க அந்த
பூவாடைகாரி வேறொன்றை நினைத்தாள். அதனால்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 11
பிறந்துவிட்ட பெண்ணையும் வெறுத்தாள். பேசும்
தெய்வமாய்க் குடி கொண்டிருந்த குலதெய்வத்தையும்
வெறுத்தாள். தாயைப் பொறுத்வரை நீலாம்பரி
ஆலகால விஷமாகவே தெரிந்தாள்.
அந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூட
அவள் விரும்பவில்லை. எப்போதும், எதிலும்
பாராமுகம். ஆனால் அப்பா அப்படியல்ல.
'உனக்குத் தெரியாது கோமளம், நம்ம புள்ள
நடக்க நடக்க அஷ்டலட்சுமியும் நம்ம வீட்ல
குடிவந்துடுவா பாரேன் நம்ம கஷ்டமெல்லாம் இவ
மூலமாத்தான் தீரும் என்பார்.'
இது எதுவுமே பெற்றவள் காதில் ஏறாது.
வெறுப்பான பார்வையோடு போய் விடுவாள்.
தந்தையின் வாக்கு பலித்தது. அவள் வளர
அந்தப் பண்ணையில் எல்லாமே செழிக்க ஆரம்பித்
தன. பழைய செல்வாக்கும் செல்வ வளமையும் மெல்ல
மெல்லத் திரும்ப ஆரம்பித்தன. ஆணுக்கு ஆணாகவும்,
பெண்துக்குப் பெண்ணாகவும் அவனை வளர்த்த
அப்பாவுக்கு அவள்மேல் அசைக்க முடியாத நம்பிகை
ஒன்று இருந்தது.
இந்தக் குடும்பத்தின் மானம் மரியாதையை
நீதான்டா கண்ணு கரை சேர்க்கணும். வழிவழியா
வந்த நம்ம கெளரவத்தை நீதான் தொடர்ந்து
காப்பாத்தணும், நெலைக்க வைக்கணும் என்பார்.
அந்தச் சின்னவயதிலேயே அந்த நம்பிக்கை என்ற
வார்த்தை அவள் மனதில் படிந்திருந்தது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


12 வாழப் பிறந்தவள்
கரைபுரண்டோடும் காவிரியில் அப்பா ஏதோ
மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே மூழ்கி
எழுவதைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்:
'அப்பா, குளிக்கிறப்பு ஏன் மந்திரம் சொல்றீங்க...
நானும் சொல்லிக் குளிக்கணுமா?' என்று.
மகளின் புதிக்கூர்மையும் எதையும் கேட்டுத்
தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும்
அவருக்கு நெஞ்சை நெகிழவைக்கும். எல்லா விவரங்
களையும் அவளுக்கு அவர் சொல்லுவார்.
'நீலம்... அம்மா! நீ பெரியவளாகிப் புருஷன் வீடு
போய், பிள்ளைங்கள பெத்தப்புறமும் இந்த அப்ப
னோட பழக்க வழக்கங்களை விடாம கடைபிடிக்
கணும். இந்த உலகத்தி எத்தனையே மதத்து சனங்க
இருக்காங்க, எல்லாருமே படைச்சவனை நம்புறாங்க,
மதிக்கிறாங்க, வணங்கறாங்க. யார் எந்த மதத்தில
பொறுக்கறாங்களோ அது அவரவர் பூஜாபலன்.
'இந்துவாப் பொறந்த நாம வாழறப்பவும் செத்து
சுடுகாட்டுக்குப் போறப்பவும் மண்ணில மறுபடியும்
புதையறப்பவும் இந்துவாகவே சாகணும். அதிலதான்
நம்ம பொறப்போட பெருமையே அடங்கி இருக்கு.'
'சொத்து சொகத்தைப் பாதுகாக்கலேன்னாலும்
மறுபடியும் நாம தேடிக்கலாம். ஆனா நம்ம பழக்க
வழக்கம், வாழ்க்கை முறைகளை விட்டுட்டோம்னா
அப்புறம் திரும்ப கொண்டுவர்றது முடியாத காரியமா
போயிடும்மா' என்பார்.
நள்ளிரவு வரும்போது அந்தப் பெரிய விட்டின்
முன்னால் வரிசை பிடித்து நிற்கும் வேப்ப மரங்களின்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ் செல்வம் 13
அடியில் போடப்பட்டிருக்கும் நீண்ட பலகைப்படுக்
கைகளில் வானத்து நிலாவின் வெளிசத்தில்
அவளுக்கு பாரதியாரையும் சொல்லுவார், பட்டினத்
தாரையும் சொல்விக்காட்டுவார். திருவள்ளுவரின்
அன்புடைமையைக் கூறுவார், வள்ளலாரின்
சன்மார்க்கத்தை விளக்குவார். தனக்குப் பின்னால் தன்
பரம்பரைக்கு ஆண்வாரிசு இல்லாமல் போய்விடுமோ
என்ற அச்சம் இருந்தாலும், தன் பெண் குழந்தைக்கு
எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தால், அவள்
மூலமாக வரப்போகும் தலைமுறைகள் செழிக்குமே
என்ற நம்பிக்கை அவரிடம் வேரூன்றி இருந்தது.
அந்தக் கிராமத்தின் பஞ்சாயத்து யூனியன்
பள்ளியில் அவளே முதல் மாணவியாகத் திகழ்ந்தாள்.
அவளுக்குப் பள்ளிரெனடாவது வயதில் அவளு
டைய அம்மாவுக்கு ஒர் ஆண்குழந்தை பிறந்தது.
வாரிசு வந்துவிட்ட மகிழ்ச்சியில் பண்ணையில்
குதுகலம் நிரம்பியோடியது. இப்போதுதான் அம்மா
அவளைப் பார்த்துக் கொஞ்சம் சிரிக்க ஆரம்பித்தாள்.
அவளது மூன்றாவது வயதில் அவளது
சாதகத்தை எழுதிக் கொடுத்த ஜோதிடர் ஒருவர்
நிச்சயமாக இவளுக்கு ஆண் சகோதரன் உண்டு
என்று சொல்லி வைத்துவிட்டுப் போன அந்த
வார்த்தை இப்போது பலித்துவிட்டதில் அம்மா
மகிழ்ச்சியாய் இருந்தாள். அவளது இடுப்புக்கு
ஒட்டியாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று
கணவரிடம் கேட்டுக்கொண்டாள்.
ஒட்டியாணம், ஒற்றைப் பின்னல், தலையில்
சூரியபிறை - சந்திரபிறை, பின்னால் திருகுப்பூ, காதில்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


வாழப்
14 பிறந்தவள்

ஜிமிக்கி, கைநிறைய வளையல் என்று


அவள் பட்டுப் பாவாடை கட்டி வந்து
மனதில் புதிதாய் ஒர் ஆதை உதயமாயிற்று.
தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு ஏன் நாட்டியம்
சொல்லின் கொடுக்கக் கூடாது? வைஜயந்திமாலா
போல், லலிதா பத்மினி ராகினி போல் ஏன் தங்கள்
பெண்ணும் பரதக்கலையைப் பயிலக்கூடாது என்ற
ஆசை நெஞ்சில் நிரம்ப, மறுநாளே ஆசிரியர் ஒருவர்
அந்த விட்டுக்குள் அடிவைத்தார். கார் இப்போது
பட்டர் வொர்த்தை நெருங்கிக்
இன்னும் பத்துநிமிட நேரத்தில் அந்த அழகிய
பாலத்தில் கார் நுழைந்துவிடும் நெஞ்சிலே பழைய
நினைவுகள் வலம் வந்துகொண்டிருந்தாலும்
கணகளின் கவனமும் கைகளின் கவனமும் காரைச்
செலுத்துவதில் நிதானமாய் இருந்தன.
எது நடந்து நேரம் போய்விடக் கூடாது என்று
அஞ்சினாளோ, அது இப்போது நடந்துவிட்டது.
பினாங்கை நோக்கி வெகு வேகமாகச் சென்று
கொண்டிருந்த 'புரோட்டன் வீரா' ஒன்று கட்டுப்
பாட்டை மீறி ஓடி எதிர்த்திசையில் புரண்டுவிழ,
சாலையில் பினாங்கிலிருந்து வந்து கொண்டிருந்த
கார்கள் வரிசையாய் ஒன்றன்பின் ஒன்றாய் மோதிக்
கொண்டதில் இரு மருங்கிலும் போக்குவரத்து
ஸ்தம்பித்துப் போனது.
கார்கள் நிறுத்தப்பட்டன. பலர் கார்களில்
பார்க்க
இருந்து இறங்கி வெளியே வந்து வேடிக்கைப்
ஆரம்பித்தனர். ஞாயிற்றுக் கிழமையாதலால்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 15

நிகழ்ச்சிகளுக்காகவும் உல்லாசப் பொழுது போக்கு


களுக்காகவும், விடுமுறையைக் கழித்து வீடுகளுக்குத்
திரும்புவதிலும் பயணத்தை வைத்திருந்தவர்கள்
சாலையின் நடுவிலும் ஓரத்திலும் விக்கித்துப் போய்
நின்றனர்.
அத்துமீறிப் போய் புரண்ட வீராவில் இருந்து
நபர்களை எடுக்க போலீசாரால் முடியாமல்
போகவே தீயணைப்பு வண்டிகள் வந்து வீரர்களைக்
கொட்டியது மருத்துவமனை வண்டிகளில்
தாதிமார்கள் படுக்கைகளுடன் வந்து இறங்கினர்.
நேரம் ஒடிக் கொண்டிருந்தது.
கதவுகள் இறுகிப் போனதாலும் எதிரும்
புதிருமாய் கார்கள் போதி சிக்கிக் கொண்டதாலும்
கார்கள் மிகவும் பயங்கரமாக விபத்துக்களுக்கு
ஆளாகி மோசமான சிதைந்த வண்டிகளில் இருந்து
கதவுகள் வெட்டப்பட்டு உள்ளிருந்தவர்கள் வெளியே
கொண்டுவரப்பட்டபோது வேடிக்கை பார்த்தவர்
காளில் சிலரின் முகம் வெளிறிப் போனது. சிலர்
தங்கள் நெஞ்சில் கைவைத்துக் கொண்டனர். மரணம்
என்பதைக் கண்ணுக்கு நேரில் பார்த்ததும் மனிதன்
ஏன் இப்படி நடுங்கிப் போகிறான் நீலாம்பரியும்
காரிலிருந்து இறங்கி வெளியே வந்து நின்றாள். முதலு
தவி சிகிச்சை செய்து மருத்துவர்கள் அவர்களில்
ஒருவரைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தபோது,
நீலாம்பரி கண்மூடி மனதுக்குள் இறைவனைத்
துதிக்க ஆரம்பித்தாள் கண்கள் கசிய வாய்
வபுராணத்தை ஒப்பவித்துக் கொண்டிருந்தது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


வாழப்
16 பிறந்தவள்
காருக்குள் இருந்து உயிர் போன நிலையில்
மீட்கப்பட்ட மூவரும் தமிழர்கள் இரண்டு பெண்
களும் ஒரு நடுத்தர வயது ஆணும் பயணம் செய்த
அந்தக் காரை ஓட்டிவந்த டிரைவர் அதிக
காயங்களுடன் அவசர சிகிச்சைக்குக் கொண்டு
போகப்பட்டார்.
பந்திங்கில் நடக்கவிருத்த திருமணம் ஒன்றிற்காக
குடும்பத்துடன் பினாங்கிலிருந்து போய்க் கொண்டி
ருந்த அவர்கள் கார்மீது எதிர்த் திசையில் வந்து
கட்டுப்பாட்டை இழந்து மறுபக்கம் புரண்ட கார்
மோதி அவர்களின் ஆயுட்காலம் முடிய நேர்ந்தது.
என்பதை அறிந்தபோது நீலாம்பரிக்கு அழுகை
பீறிட்டுக் கொண்டு வந்தது. ஏதோ தன்னுடைய
சொந்தம் ஒன்று தன் கண்முன்னாலேயே கொல்லப்
பட்டது போல் உடைந்து போனாள்.
அவர்கள் புறப்பட்டபோது நிச்சயமாக இதை
அவர்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.
திருமண விழாவின் கலந்துகொள்ள வேண்டும் என்ற
ஆசையில் விலையுயர்ந்த பட்டுப்புடவை நகைகள்
அணிந்துகொண்டு எத்தனை சந்தோஷமாக அவர்கள்
கிளம்பி இருக்கிறார்கள் என்பது சிதைந்து போன
உடல்களில் மின்னிக் கொண்டிருந்த ஆடை
அணிகலன்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.
மிகுந்த சிரமப்பட்டு வெட்டி எடுக்கப்பட்ட
கதவுகளின் இடுக்கில் சிக்கிக் கொண்ட பெண்மணி
ஒருவரின் துண்டிக்கப்பட்ட நிலையில்
பிளாஸ்டிக் பையின் சேகரிக்கப்பட்டபோது கடமை
உணர்வு மிக்க காவல்துறையினர் அந்தக் கையிலிருந்து

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 17
பத்துப் பன்னிரண்டு தங்க வைர வளையங்களைப்
பத்திரப்படுத்தினர். வாழ்கின்ற வரையில் எப்படி
எல்லாம் தன்னை அழகுபடுத்திப் பார்த்துக்
கொள்கின்ற மனிதன், ஆவி போன பின் அந்த
உடம்பின் மரியாதை என்ன என்பதை அறிந்தால்
இப்படி எல்லாம் பட்டுக்கும் பொன்னுக்கும் பேயாய்
அலைவானா?
அடுத்தவன் பிணமாகிக் கிடப்பதைப் பார்த்தும்,
அவனுக்கு இறுதிமரியாதை செலுத்தி அவனை
மண்ணுக்கும் நெருப்புக்கும் இரையாக்கி
வந்தபின்னும் மனிதன் அதை ஏன் உணர்வதில்லை.
சாலையில் எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டுப்
போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டவுடன் கார்கள்
நகரத் தொடங்கின. காலியான சாலையில் இருநூறு
மீட்டர் தூரம் வரை செந்நிறம் படர்ந்து கிடந்தது.
பார்க்கவே மனதில் ஒருவித கலக்கமும் கலவரமும்
வந்து ஒட்டிக் கொள்ளத் தொடங்கியது கடிகாரத்
தைப் பார்த்தாள்; பிற்பகல் மணி இரண்டாகி
இருந்தது.
பத்தே நிமிடத்தில் பினாங்கு பாலத்தைத்
தொட்டு, அங்கிருந்து நாற்பது நிமிட நேரத்தில் போக
வேண்டிய இடத்துக்குப் போய் விடலாம் என்று
எண்ணிக் கொண்டு வந்தவளுக்கு, விபத்தில் நேரம்
போய்விட்டதை நினைக்கும்போது யாரைக்
குறைபட்டுக் கொள்வது என்றே தெரியவில்லை.
'காலையில் பயணத்தைத் தொடங்கும்போது
தன்னையும் தன் குடும்பத்தையும், அடுத்தவரையும்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


18 வாழப் பிறந்தவள்
ஒட்டுபவர்கள் ஒருநிமிடம் சிந்திக்க ஆரம்பித்தால்
இந்தமாதிரி விபத்துக்கள் ஏற்பட வழியே இல்லையே!'
'கையில் ஸ்டியரிங்கைப் பிடித்ததுமே ஒலிம்
பிக்கில் ஓடுகின்ற நினைப்பில் ஓடுவதால் அல்லவா
இந்தப் பொருட் சேதம் உயிர்ச்சேதமும்...! என்றுதான்
இவர்கள் தங்களை உணரப் போகிறார்கள்....'
நீலா மனதுக்குள் பேசியவளாய் காரைச்
செலுத்துகிறாள் அவளது கணக்கின்படி இன்னும்
முப்பது நிமிடங்களின் சேரவேண்டிய இடத்திற்குப்
போய்விடலாம் அன்று அவள் வந்து இறங்கிய
அன்றைய பினாங்கின் நிலையும் இன்றுள்ள
பினாங்கின் நிலையும் நிறைய மாற்றங்களைப்
பெற்றிருந்தது.
அவள் இம்மண்ணில் காலடி வைத்தபின்
நான்கு பிரதமர்களின் ஆட்சியைக் கண்டுவிட்டாள்.
ஏறக் குறைய முப்பதாண்டுகாலம் ஓடிவிட்டது. தேசத்
தந்தை துங்குவும், டத்தோ உசேன் ஒனும், துன்
அப்துல் ரசாக்கும் மகாதீரும் அவள் கண்ணில்
வரிசையாய் நின்றனர். அதைப் போலவே தேசிய நில
நிதிக் கூட்டுறவுச் சங்கத் தந்தை துன் சம்பந்தன் டான்
ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ ஆதி நாகப்பன் டத்தோ
ஸ்ரீ சாமிவேலு என்று இந்திய சமுதாயத் தலைவர்
களையும் நினைக்கின்றாள்.
வரலாறு கண்ட வரலாற்றுச் சின்னங்களாப்
நிலைத்துவிட்ட அவர்களின் முயற்சியில் இந்தச்
சின்னஞ்சிறு நாடு கண்ட வெற்றியை நினைக்கும்
போது வாழவந்த வீட்டின் பெருமையில், பூரித்துப்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 19

போகும் மருமகளின் மனநிலை அவளுக்கு


உண்டானது.
உலகின் மிகப் பெரிய பாலங்களில் ஒன்றாகக்
கருதப்படும் பினாங்கு பாலத்தில் முக்கால் பங்கு
தாண்டிவிட்டாள் இடதுபுறத்தில் கடலில் நடுவே
பசுமை போர்த்திய மலைத்தொடராக - தண்ணிரில்
மிதக்கும் பந்தாக பூலாவ் ஜெர்ஜாக் தீவு தெரிகின்றது.
இயற்கை வளங்களின் வளமைக்கு ஓர் எடுத்துக்
காட்டாகக் காட்சி அளிக்கும் அந்தத் தீவு ஒரு
காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வரும் கப்பல்
பிரயாணிகள் நோய் வாய்ப்பட்டால் அவர்களை
அங்கே பாதுகாப்பாய் வைக்க உபயோகப்படுத்தும்
இடமாக இருந்ததாம் புறமலை என்ற பெயரும்
அதற்கு உண்டு என்று நீலாம்பரியின் மாமியார்
முன்பு இவளுக்குக் கதை கதையாய்ச் சொன்னது
நினைவுக்கு வருகின்றது. ஆனால் அதில் இப்போது
இன்னும் சில மாறுதல்கள் நடந்து வருவதைப்
பத்திரிகைச் செய்திவழி அவள் கண்டதுண்டு.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


20 வாழப் பிறந்தவள்
3

மனிதன் நினைப்பதுண்டு
வாழ்க்கை நிலைக்குமென்று;
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனித னென்று!...
காரின் வானொலியிலிருந்து பாடல் வருகின்
றது. அவளும் சுமார் இருபது வருடங்களாகக்
கேட்டுவரும் பாடல்தான். ஆனால் இன்று ஏனோ
அதை மறுபடியும் கேட்க ஆசைப்பட்டாள்.
கண்ணதாசனின் அப்பாடல் வரிகளில் சில
நிமிடங்கள் மனம் லயித்துப் போகின்றது.
அவளது மனதில் கட்டிய கோட்டைகள்தாம்
எத்தனை எத்தனை? அத்தனையும் சொல்லி வைத்தது
போல் மளமளவென்று சரிந்து மண்மேடாகிப் போன
மாயம்தான் என்ன?
'உன் துய மனதுக்கு உன் நல்ல குணத்துக்கு நீ
மகராசியாக வாழ்வாய்' என்ற பெரியோர்களின்
வாக்குப் பொய்த்துப் போன காரணம்தான்
என்னவாயிருக்கும்?
'மனம் போல் மாங்கல்யம்' என்றார்கள்.
அதுவும் மாறிப் போனது. பெருவாழ்வு வாழ்வாய்'
என்றார்கள். அதுவும் வெறும் பேச்சுடன் போனது.
அவளைப் பொறுத்தவரை நினைத்தது எதுவுமே
நடக்காமல், நினைக்காத விஷயங்கள் எல்லாமே
நடந்து முடிந்துவிட்டனவே! அதுதான் என்ன

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 21
அதிசயம்! கவியரசுவின் கூற்று அவளைப் பொறுத்த
வரை உண்மையாகித்தான்போனது.
மகளை ஒரு கலையரசியாக எல்லாம் தெரிந்த
சகலகலா வல்லியாகப் பார்க்க நினைத்த அவளது
அப்பாவுக்கு, அப்போது தெரிந்திருக்கவில்லை
விதியின் கை வேறு விஷயத்தை எழுதப் போகிறது
என்ற உண்மை. அது புரிந்திருந்தால் அவளுக்காக
நேரத்தை, பொருளைச் செலவு செய்து அவ்வள
வையும் கற்றுக்கொடுத்திருக்க மாட்டாரே.
கான சரஸ்வதியைப் போல் தேன்
பாடுவாள். கேட்பவர் மனம் உருகப் பாடுவாள்.
ஆண்டாளின் பாவையும், ஆழ்வாரின் பாசுரமும்,
அப்பரின் வாசகமும், வள்ளலாரின் உலக உருக்கமும்,
பாரதியின் கண்ணம்மாவும் அவள் உதடுகளின் வழி
இறங்கி வரும்போது, அப்பா அப்படியே உருகிப்
போவார்.
'கல்யாணம் பண்ணிட்டுப் போய் இன்னொருத்
தன் வீட்ல போய்க் குப்பை கொட்டப் போறவளுக்கு
ஏன் இதெல்லாம்! இந்தப் பணத்தை நாலு
கோயிலுக்குக் கொடுத்தாலும் போற கதிக்குப்
புண்ணியம் கெடைக்குமே!'
அம்மா அலுத்துக் கொள்வாள். 'அடி போடி
பைத்தியம்.... அவ எங்கே போனாலும் அவகூட
நானும் நீயும் போகமாட்டோம் நாம அவளுக்கக்
கொடுத்த வித்தைகள்தான் அவ கூடவே போகும்.
அதை வெச்சி அவ பேரும் புகழும் சம்பாதிச்சா அது
அவளுக்குத்தானே பெருமை. அப்ப நம்மைத்தானே

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


22 வாழப் பிறந்தவள்
மத்தவுங்க பாராட்டுவாங்க எப்பவும் ஒரு விஷயத்தை
நீ மனசில வெச்சுக்கோ கோமளம் நம்ம
பொண்ணுக்கு நாம கொடுக்கிற சீர் செனத்திய விட
இந்தமாதிரி சிறப்பான கல்விதாண்டி அடுத்தவன்
அவகிட்டே இருந்து அபகரிக்க முடியாத சொத்து'.
ஓடிக் கொண்டிருந்த காரின் ஸ்டியரிங்கில்
தலையை மோதிக் கொண்டு அழனும் போல்
இருந்தது அவளுக்கு.
அப்பாவுக்குத்தான் அவள் மீது எவ்வளவு
பெரிய நம்பிக்கை! அதை நிறைவேற்ற அவள்பட்ட
பாடுகள்...!. 'ஓ இறைவா, நீ அறியாத காலத்தின்
விளையாட்டா..?' அவளுக்குள்ளேயே தாங்க
முடியாத புழுக்கம்.
பாலத்தில் வலது புறமாய் இறங்கி ஓடிய கார்
சாலையில் நேரே வந்ததும், சாலை சமிக்கைகளைக்
கண்டவாறு சாலையைப் பின் தொடர்ந்தது.
ஸ்காடலண்ட் சாலையில் வண்டி வந்து
கொண்டிருந்தபோது அங்கே கம்பீரமாய் நிற்கும்
ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம்.
தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் விளையாடிக்
கொண்டிருந்தார்கள். எல்லாமே பன்னிரெண்டு
வயதுப் பிள்ளைகள்! வாழ்வில் மீண்டும் வருமா
என்று ஏங்கும் பருவம். கள்ளமில்லா நட்புகள்
மலர்கின்ற பருவம் பயமறியாத கன்றாய் துள்ளிக்
குதிக்கின்ற அப்பருவத்தில்தான் எவ்வளவு கனவுகள்!
ஆசைகள் லட்சியங்கள் பெண்ணாகப் பிறந்திருந்
தாலும் ஆண் பிள்ளைபோல் வளர்க்கப்பட்ட

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 23

பக்குவம் அவளுக்குள்ளேயே ஓர் ஆண்மையை


காலங்
உருவாக்கி வைத்திருந்ததால் பள்ளிப்பருவ
களில் எல்லாவிஷயங்களிலும் முன்னிலை வகிக்கும்
தன்மையும் எதிலும் முதன்மை பெற வேண்டும் என்ற
ஆர்வமும் அவளிடம் தலைதுாக்கி நிற்கும்.
தேர்வுக் காலங்களில் அவளே முதல்நிலை
மாணவியாகவும், பள்ளியின் விழாக் காலங்களில்
அவளே எல்லாவற்றையும் செயல்படுத்தும் பொறுப்
பாளராகவும் இருந்து மாணவர்கள், ஆசிரியர்களின்
அன்புக்கும் மரியாதைக்கும் உரியவளாகத் திகழ்ந்தாள்.
நாட்டு நடப்பும் உலகளாவிய அரசியல் சிந்தனையும்
அவளுக்கு அப்போதே அத்துப்படியாக இருக்கும்.
அரசியல் தலைவர்களின் வரலாறுகளில் அதிக
நாட்டம் வைப்பாள். உலக மக்களின் வாழ்க்கை
முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம்
அதிகமிருக்கும்.
அவளது பள்ளிப் பருவ காலங்களில் அவளுக்கு
அதிகமாய் நாட்டுப் பிரதமர் ஜவஹர்லால்
நேருவையும் கர்மவீரர் காமராஜரையும் பிடிக்கும்.
காந்திய வாதியான தந்தையின் நடவடிக்கைகளில்
கவனம் மிகுந்து நிற்கும். அப்பாவும் அவளுக்கு
அப்படிப்பட்ட சிந்தனைகள் வளரவேண்டும்
என்பதில் உதவியாகவும் ஊக்க முட்டுபவராகவும்
இருப்பார்.
இந்தச் சிந்தனைகளின் வளர்ச்சியில் அவள்
பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்துக்
கொண்டிருந்தபோது, மனதுக்குள் மிகப் பெரிய
கற்பனைகள் பெருகும். சாதாரண கிராமத்தில்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


24 வாழப் பிறந்தவள்
கால்கள் வலம் வரும்போது, மனம் நகர்ப்புறங்களில்
சுற்றிக் கொண்டிருக்கும் தான் வளர்ந்து பெரிய
வளானதும் தானும் ஒரு தலைமைப் பொறுப்பை
ஏற்று நாட்டுமக்களுக்கு சேவை செய்யவேண்டும்.
இந்திரா காந்திபோல் பேர் வாங்க வேண்டும்
என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு படுக்கை
யில் கற்பனை வானில் பறப்பாள். அப்பாவிடம் தன்
ஆசைகளைச் சொல்லி இதெல்லாம் நடக்குமாப்பா
என்று ஆர்வமும் கவலையுமாய்க் கேட்பாள்.
அவருக்கு உள்ளம் பூரித்துப் போகும். மகளை
அனைத்துக் கொண்டு தட்டிக் கொடுப்பார் உச்சி
மோந்து பாராட்டுவார்.
"ஏம்மா நடக்காது..?. உன்னோட ஆசைகள்,
லட்சியங்கள் எவ்வளவுக் கெவ்வளவு உயர்வா
இருக்குதோ, அந்த அளவுக்கு உன்னோட கனவுகள்
நிறைவேறும்மா. நல்லதை நினைச்சா அது நிச்சயம்
நடக்கும் என்பார். ஆனால் அம்மாவோ நேர்மாறாகப்
பேசி அவளை அதட்டி அடக்கி வைப்பாள்.
'பொண்ணா லட்சணமா இருடி. பொறந்த
இடத்துக்கும் போற இடத்துக்கும் பெருமை
தேடித்தரக் கூடிய பெண்ணாக இருக்கப் பாரு...
அடுப்படியில கெடக்க வேண்டியவளுக்கு அரை
கொறை படிப்பே போதாதா... ஒரேயடியாக
அரசாளப் போற நெனைப்பில வானத்துக்கும்
பூமிக்குமா பறக்காதே...!'
பொங்கிய பாலில் ஒரு கை தண்ணீர் விழுந்தது
போல் மனம் சப்பென்று அடங்கிப் போகும்.
இருந்தாலும் தன் ஆசைகளுக்கு என்றும் அவள்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 25
அணைபோட்டதில்லை. அது அவளுக்குள்ளேயே
வளர்ந்து கொண்டிருந்தது. பதினாறு வயதை அவள்
தொட்டபோது அவளது மூத்த சகோதரிகள்
அவளைவிட பத்துவயது மூத்த நிலையில் இருந்
தார்கள் ஆக மூத்த பெண் மணமுடித்துப் போயிருந்
தாள். அவளுக்கு அடுத்த பெண் சந்திரிகா மன
மாலைக்குத் தயாராக இருந்தாள்.
அழகும் குடும்ப செல்வாக்கும் பல இடங்களில்
இருந்தும் வரன்களைக் கொண்டு வந்தாலும் ஜாதக
தோஷம் என்று காரணம் காட்டிஅவள் திருமணம்
தள்ளிக்கொண்டே போயிற்று குடும்பத்தில் இது ஒரு
கவலைக்குரிய விஷயமாக இருந்து எல்லோ ருடைய
மனதையும் வருத்திக் கொண்டிருந்தபோதுதான் தரகர்
நடேசன் ஒரு நல்ல சேதியுடன் வந்தார்.
சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து வருகின்ற
மூன்று மாப்பிள்ளைகள் பண்ணையார் வீட்டில்
பெண் பார்க்க வருவதாகவும், தோஷம், கண்டம்,
இவற்றில் எல்லாம் அவர்களுக்கு நம்பிக்கை
கிடையாது என்றும் அவர்கள் வெளிநாட்டில்
இருந்து இந்த வரன்கள் வருவதால் பண்ணையார்
இதற்கு முழுமையாக ஒப்புதல் அளிக்காவிட்டாலும்
அவரது விருப்பத்திற்குத் தடை சொல்லாமல்
நாள் ஒன்றில் அவர்களை வரச் சொல்லும்படி
கூறினார். மனதுக்குள் புதிய கவலை ஒன்றும்
உருவானது வரப்போகும் மாப்பிள்ளைகள் யாராவது
நீலாம்பரியைப் பார்த்துவிட்டு அவள்தான்
வேண்டு மென்று கேட்டுவிட்டால் அது
படிப்பை எதிர்காலத்ை வெகுவாகப் பாதித்து

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


26 வாழப் பிறந்தவள்
விடுமே என்று அஞ்சினார். அப்படி ஒரு சூழ்நிலை
உருவாகிவிடக் கூடாது என்று இறைவனை வேண்டிக்
கொண்டார்.
வீட்டில் அவர் மனைவிக்கோ வேறுவிதமாய்
சிந்தனை ஒடியது. பருவமடைந்து பத்து வருடங்
களாய் வீட்டில் உட்கார்ந்திருக்கும் பெண்ணைவிட
இரண்டு வருடங்களுக்கு முன்பே பருவமடைந்த
நீலாம்பரியின் வளர்ச்சி மற்றவர்களுக்குப் பொறாமை
தரக்கூடியதாகவே இருந்தது. கலைநயம் ததும்பும்
உடல்வாகும் அறிவொளி வீசும் முகமும் பரிவு மிக்க
பாவனைகளும் ஒருமுறை பார்த்தவர் மறுமுறை
பார்க்கத் துண்டும் அளவில் அவளிடம் குடி
கொண்டிருந்தன. இவைகளே மூத்தவளின் திருமணத்
திற்குத் தடையாக இருப்பதாகப் பெற்றவள்
எண்ணினாள் பெண் பார்க்க வருகின்ற
இளையவள் வீட்டில் இல்லாமல் இருப்பதே நல்லது
என்று நினைத்தாள்.
கணவரிடம் மன்றாடி அந்த நாளில் அவள்
வேறு இடத்தில் இருக்க ஏற்பாடு செய்யக் கேட்டுக்
கொண்டாள். மனைவியின் பேச்சில் இருக்கின்ற
உண்மை ஓரளவுக்கு மகளின் எதிர்காலத்தைக்
காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவரும் அதற்கு
இசைந்தார்.
நீலாம்பரியின் நேரம் வேறுவிதமாய் அமைந்தது.
அந்த நல்ல நாளில் அவளது பள்ளி
உல்லாசப் பயணமாய் வெளியூர் செல்ல
ஏற்பாடாகி இருதினங்கள் முன்னதாகவே புறப்பட்டுப்
போகவேண்டியதாயிற்று அவர்களின் பயணம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 27
வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்கா,
தஞ்சைக் கோயில் என அமைந்தது.
ஊரெங்கும் சுற்றிப் பார்த்துவிட்டு அவள்
தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு
திரும்பியபோது யாரும் எதிர்பாராத அந்த அதிசயம்
நிகழ்ந்தது.
முதல்நாள் பெண்பார்த்துச் சென்ற மாப்பிள்
ளையின் தம்பி வந்திருந்தார். வீட்டில் பெரியவர்கள்
இல்லாததால் நீலாம்பரியே அவரை உபசரிக்க
வேண்டி இருந்தது. திருமணப் பத்திரிகைகளின்
பலவித மாதிரிகளைக் காட்டி எதைத் தேர்வு
செய்வது என்று கேட்டுப் போக வந்ததாகக் கூறினார்.
அவரை உபசரித்து, தேவையான விபரங்களையும்
தந்து, நீலாம்பரியே அனுப்பி வைத்தாள். அவர்
போனபின் அக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு
மகிழ்ச்சியில் கூத்தாடினாள். ஆனால் அவளது
அக்காவின் முகத்தில் எவ்வித மலர்ச்சியும் இல்லை.
நீலாம்பரி அவளைத் துருவித் துருவிக் கேள்வி
கேட்டாள். எதையுமே சொல்லாத சந்திரிகா ஒரு
வார்த்தை மட்டும் சொன்னாள்.
'எனக்கு பிடிக்கலே நீலம்...'
நீலாம்பரிக்குத் தூக்கிவாரிப் போட்டது.
எவ்வளவு சிரமப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தரகர்
கொண்டுவந்தார். அதிர்ஷ்டவசமாக எல்லாப்
பொருத்தங்களும் நிரம்பி இருவிட்டாரும் ஒப்புக்
கொண்ட பின்னால் இவள் ஏன் இப்படிச்
சொல்கிறாள்?

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


28 வாழப் பிறந்தவள்
'உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ஏன்
இப்படி உளர்றே. அம்மா அப்பாவுக்கு கஷ்டத்தை
கொடுக்க நெனைக்காதே. அவுங்களுக்குத் தெரிஞ்சா
கோபப்படுவாங்க..'
அக்காவுக்கு அறிவுரை கூறுகிறாள். அவளுக்குக்
கோபம் வருகிறது.
'கட்டிக்கிட்டு வாழப்போறது நீயில்லே...
நான்தான்....! அந்த மாப்பிள்ளை எனக்கு வேண்டாம்.'
'ஏன் வேணாம்..'
'எனக்குப் பிடிக்கலே....'
'அதத்தான் கேட்கறேன்... ஏன் அவரை
உனக்குப் பிடிக்கலே எதுல கொறைச்சல்! ஆளு
நல்லாத் தானே இருக்கார். எதனால உனக்குப்
பிடிக்கலே....'
'அதை உன்கிட்ட சொல்ல நான் விரும்பலே.
முகத்திலடித்தது போல் பதில் வந்ததும் நீலாம்பரி
திரும்பினாள். அவள் மனம் பெற்றோர்களைச் சுற்றிச்
சுற்றி வலம் வந்தது. நீலாம்பரியின் மனதுக்குள்
வருத்திக்கொண்டிருந்த விஷயம், அம்மா அப்பாவின்
காதில் விழுந்தபோது அங்கே பூகம்பம் வெடித்தது.
ஒரு பிரளயமே கிளம்பியது.
'உங்கப்பா நம்பிக்கையை இப்படி வீணாக்
கிட்டியேடி பாவி.... இப்ப எந்த மொகத்தை
வெச்சிக்கிட்டு அவுங்களோட பேசுவாரு... இப்படி
அவரைத் தலைகுனிய வெச்சிட்டியேடி....' அம்மா
அழுகையும் ஆத்திரமுமாய் கத்திக்கொண்டிருந்தாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 29
விட்டின் நடு முற்றத்தில் ஊஞ்சவில்
கொண்டிருந்த அப்பாவின் முகம் இறுகிப்
போயிருந்தது. தூணில் சாய்ந்தபடி நின்றிருந்த
நீலாம்பரி வாசலில் வந்து நின்ற தரகர் நடேசனைப்
பார்த்து பயந்து போனாள்.
அப்பா என்ன சொல்லி சமாளிப்பார். எப்படி
அவர்களை வேண்டாம் என்று தட்டிக் கழிப்பார்....
என்று தனக்குத் தானே கலவரப்பட்டுக் கொண்டி
ருந்தபோது அதே நினைவுடன் தரகரும் உள்ளே
துழைந்தார்.
அப்பாவுக்கு நேராகத் தூணில் சாய்ந்துநின்ற
நீலாம்பரி, தன் அறைக்குள் போய் நின்றாள்.
அம்மாவும் பதட்டத்துடன் உள்ளே போனாள் தரகர்
பண்னை யாருக்கு வணக்கம் சொல்லி
விசாரித்துக் கொண்டே அருகில் வந்தார்.
அவரைத் தன் எதிரில் கிடந்த இருக்கையில்
அமரச் சொன்ன பண்ணையார், அவர் வந்த
காரணத்தைக் கேட்டார்.
தரகருக்கு உள்ளங்காலில் இருந்து உச்சந்
தலைவரையில் இனம் புரியாத நடுக்கம் ஏற்படு
கின்றது. வறண்டுபோன தொண்டையை ஈரமாக்கிக்
கொண்டு மெல்ல விஷயத்தைச் சொல்கிறார்.
பண்ணையாரின் முகம் மலர்கின்றது. தரகத்தைத்
தன் கையால் தட்டிக் கொடுக்கிறார்.
'நம்ம கையில என்னய்யா இருக்கு... எல்லாம்
அவன் விருப்பம்...! இதுதான் முடிவுன்னு அவன்
தீர்மாச்சிட்ட அதை மாத்த யாரால் முடியும்...!
கவலைப்படாம வரச் சொல்லுய்யா... போ.. போய்
காப்பிட்டுட்டுப் புறப்படு....' சலனமில்லாமல் எழுந்து
வெளியே நடக்கிறார் பண்ணையார்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


30 வாழப் பிறந்தவள்

பசுபதியின் மனதில் பலவித போரட்டங்கள்.


மூத்தவளைப் பார்த்துவிட்டுப் போய் இளைய
பெண்னைக் கொடுங்கள் என்று கேட்பவனுக்கு
என்ன பதில் சொல்வது என்ற கேள்வி
இவ்வளவு விமரிசையாகப் பெண்பாக்கும்
நிகழ்ச்சியை வைத்துவிட்டு இப்போது திருமணம்
நடகவில்லை என்றால் கிராமத்து சனங்களுக்கும்
உற்றா உறவினர்களுக்கும் என்ன பதில் சொல்வது
என்ற கவலை ஒருபுறம்!
சின்னவளுக்கு அந்த மாப்பிள்ளையை முடிவு
செய்து திருமணத்திற்கு நாள் குறிப்பது என்றால்
அதற்கு முன்பு மூத்தவளின் திருமணத்தை நடத்தியே
தீரவேண்டும். அவளுக்கு உடனடியாக மாப்பிள்ளை
பார்த்தாக வேண்டுமே என்ற மாபெரும் கவலை
ஒருபுறம்!
திரும்பிய திசைகளில் எல்லாம் கடுமையான
இரும்பு வேலிகளாய் பிரச்னைகளின் அணிவகுப்பு
மறுபுறம், வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு, வாய்
நிறைய வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு வந்து
வணங்கி நின்ற தரகரைப் பார்க்கிறார்.
'உங்க மனசில என்ன இருக்குன்னு எனக்கு
புரியுது எசமான். பெரிய பெண்ணுக்கு மாப்பிள்ளை
இல்லேன்னு கவலைப் படாதீங்க. ரெண்டு கல்யாண
மும் ஒரே நாள்ல நடக்கும்... பிள்ளையாண்டான்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 31
மூணு பேருங்க இருக்காங்க. நிச்சயம் ஒரு
மாப்பிள்ளை நாளைக்கே வருவார் பாருங்க.'
தரகர் பணிவுடன் சொல்கிறார். பண்ணை
யாருக்கு ஆச்சர்யமான விஷயத்தான் அது அது
எப்படியா இவ்வளவு உறுதியா சொல்றே! அப்படி
ஏதாச்சு பேச்சு கேள்விப்பட்டியா.'
ஆர்வமுடன் கேட்கிறார்.
'எல்லாம் நான் சொல்லலே எசமான், எல்லாம்
ஜோதிடந்தான் சொல்லுது. இன்னும் எண்ணி
இருபது நாள்ல உங்கங் மகளுக்கு கல்யாணம்
நடந்துடும்னு ஜாதகம் சொல்லுதே எசமான்.'
தரகர் உறுதியாகச் சொல்லிவிட்டுப் போய்
விட்டார்.
வைகாசி மாதம் ஆறுகளில் நீர்வற்றிப் போய்
படுகைகளாய்க் கிடக்கும் காலம் ஆற்றங்கரையோரம்
வரிசை பிடித்து நிற்கும் சரக்கொன்றை மரங்களில்
பச்சையும் மஞ்சளும் கலந்த பூக்களும் முருங்கைக் காய்
போன்ற அதன் காய்களும் சிறுவர்களுக்கு
விளையாட்டுப் பொருளாகி ஆற்றுப் படுகைகளை
மஞ்சள் பூக்கவைத்திருக்கும் காட்சி கண் கொள்ளாக்
காட்சியாக இருக்கும்.
வயது வந்த பண்ணையார் வீட்டுப் பெண்கள்
பகலில் வெளியே வரமாட்டார்கள். இரவில் நிலா
ஒளியின் காலார நடப்பதற்காக அவர்கள் பாதுகாப்
பான வேலை ஆட்களுடன் நடப்பது வழக்கமாக
இருக்கும். அதிகாலை நாலு மணிக்கெல்லாம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


32 வாழப் பிறந்தவள்
அவர்கள் புது நீரில் குளிக்க வருவார்கள். அப்போ
தெல்லாம் அந்தப் படுகையே திணறிப் போகும்
அளவுக்குக் கால்சலங்கை மணலில் பதிய ஓடி
விளையாடும் நீலாம்பரிக்கு இப்போது அந்தக்
குதுகலம் காணாமல் போயிருந்தது.
அந்தப் படுகையைப் போலவே அவளது
உணர்வுகளும் அடங்கிப் போய்க் கிடந்தன.
அப்பாவை நினைக்கும்போது ஒருபுறம் ஏமாற்றமா
கவும் மறுபுறம் பரிதாபமாகவும் தெரிந்தது. அவருக்
காகத் தன்னால் செய்ய முடிந்த ஒரே நன்றிக் கடன்
இதுதான் என்று தீர்மானித்துவிட்டாள் அம்மாவைப்
பற்றிய கவலை அவளுக்கு எப்போதும் இருந்ததே
கிடையாது அம்மாவைப் பொதுத்தவரை அவள்
அடக்க ஒடுக்கமான பெண்ணாய் இருந்து குடும்
பத்தை நடத்தி நல்ல பெயரை வாங்கினால் போதும்
அதிகமாய் அவள் பூமி அதிர நடந்தால் கூட
அம்மாவுக்குப் பிடிக்காது.
அவளது கால்களில் சலங்கை நிறைந்த
கொலுசை மாட்டி அதன் மேல் கெட்டியாகப்
பிடிக்கும் வெள்ளிக்காப்பு ஒன்றையும் மாட்டி
விடுவாள். அது அவளது துள்ளலைக் குறைத்து
மெதுவாய் நடக்கச் செய்யும். முடிந்தவரை நீலாம்
பரியை அடக்கமாக வளர்ப்பதில் கண்ணாய்
இருந்தாள் அவள். அதனால் நீலாம்பரி தாயை
வெறுக்கவில்லை. மரியாதையோடு நடந்து
கொண்டாள். தாயின் அன்பையும் தந்தை கொடுத்து
வந்ததால் தாயின் அன்பு குறைந்ததில் அவளுக்குக்
குறை ஏதும் தெரியவில்லை. வயது வளர வளர

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 33

அறிவில் தெளிவு வர ஆரம்பித்ததும் தாயின்


நடைமுறைக்கான காரணம் கொஞ்சம் அவள்
அறிவுக்கு எட்டியது.
இரண்டாம் தாரமாய் வந்தவள் தன்
குழந்தையை மட்டுமே கவனிக்கிறாள் என்ற அவச்
சொல் வந்துவிக்ட கூடாது என்ற அச்சத்தினாலேயே
ஊரருக்கும் உறவினருக்கும் பயந்து தன்னை
முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கிறாள்
என்பதை அவள் தனது யூகமாய் கணித்துக்
கொண்டாள். ஆனால் அதில் அதிக தீவிர கவனம்
காட்டுவதில்லை.
சில சமயங்களின் தன்னை அதிகமாய் கண்டிக்
கும் அம்மா அக்காவை பூப்போன்று கவனிப்பது
கண்டு சிறு ஆதங்கம் ஏற்படும். கொஞ்சம் நேரம்
தோட்டத்தில் உலாவருவதில் அந்தக் கவலையும்
மறந்து போகும். மீண்டும் பழைய நிலைக்குத்
திரும்பிவிடுவாள்.
சந்திரிகாவைப் பொறுத்தவரை அவளது
தாய்முகம் காணாதவள் அவளுக்கு எல்லாமே இந்த
அம்மாதான். பெயருக்கேற்ற நிறமும் அழகும். அதிக
செல்வத்தினால் அடாவடித்தனமும் கொஞ்சம்
பிடிவாதமும் அவளோடு சேர்ந்திருந்தன. அவளுக்கு
அப்பாவைப் பிடிக்காது அவரது ஆச்சாரம்
பிடிக்காது. அவரின் கட்டுப்பாடு பிடிக்காது,
அறிவுரை பிடிக்காது. மனம் நிறைந்த மரியாதை
மட்டும் உண்டு.
தங்கையிடம் பாசமும் பரிவும் கொண்டவள்,
தங்கை இல்லாத நேரத்தில் தாயுடன் இருப்பவள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


31 வாழப் பிறந்தவள்
அவள் வந்துவிட்டால் அவளுடன்தான் இருப்பாள்.
அவர்கள் நல்ல தோழிகளாய் இருந்தனர். எல்லா
விஷயங்களையும் கலந்து பேசிக் கொள்வார்கள்.
தங்கை சொல்லும் கதைகளை ஆர்வமாய்க்
கேட்பாள். தங்கை படித்தவள் என்ற மரியாதை
கொடுப்பாள் வழக்கமாக இரவில் நிலாவில் நடக்க
வந்த இருவரும் ஆற்று மணல் பரப்பில் அமர்ந்து
பேசிக் கொண்டிருந் தார்கள். இருவர் மனதிலும்
இருவகை சோகம்! பேச்சுவாக்கில் இருவரும் நீண்ட
மொளனத்தில் ஆழ்ந்து போக, பார்வை எங்கெல்
லாமோ அலைகின்றது. எங்கும் ஒரே மயான அமைதி!
அவர்களுடன் துனைக்கு வந்த காவலாள்
காணாமல் போயிருந்தான்.
நீலாம்பரி பயத்துடன் திரும்பிப் பார்க்கிறாள்.
பக்கத்தில் இருந்த அக்காவும் காணப்படவில்லை.
எழுத்து நடக்கின்றாள். அங்கும் இங்குமாய்த்
தேடுகிறாள். அடர்ந்து படர்ந்து நின்ற சரக்கொன்றை
மரத்தடியில் யாரோ பேசும் பேச்சுக் குரல் கேட்டு
நிற்கிறாள் குரலுக்குரியவர்கள் யாரென்று அறிய
மெல்ல நடந்து பின்புறமாய்ச் சென்று கவனிக்கிறாள்.
அவளுக்கு மூச்சு நின்றுபோகிறது.
பண்ணையின் காவலாள் மணியரசுவின்
மடியில் சந்திரிகா படுத்திருந்தாள். அவன் கதை
கதையாய்ச் சொல்லிக்கொண்டிருந்தான். நீலாம்பரிக்கு
ஒர் உண்மை தெரிய ஆரம்பித்தது.
அன்றைக்கு அப்பா சொன்ன மாப்பிள்ளையை
வேண்டாம் என்று சொன்னதன் காரணம் இதுதான்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 35
என்பது தெளிவாகிப் போனது அக்காவின் மீது
வைத்திருந்து மரியாதை கொஞ்சம் கொஞ்சமாய்க்
குறைய ஆரம்பித்தது. நெருங்கினாள். 'அக்கா!' என்று
அதட்டினாள். அரண்டு போய் எழுந்தவளை
இழுத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்தாள்!
தங்களைத் தங்கை பார்த்துவிட்டதால் பயம்
எற்பட்டாலும் ஒருவகையில் அதுவும் நன்மைக்கே
என்ற ஆறுதலுடன் சந்திரிகா தங்கையைப் பின்
தொடர்ந்தாள். வீடுவரை அவளது கையைப்
பிடித்துக் கொண்டு நடந்து வந்தாள். வீட்டு
வாசல்படி வந்ததும் அவள் கையை உதறி நடத்தாள்.
அம்மாவை அழைத்து அவளை கவனித்து கொள்
என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் ஓடினாள்.
அப்பா இப்போது ஓர் பாவத்தின் பிறப்பிடமாகி
விட்டது போன்ற கவலை அவளைக் காவ்விக்
கொண்டது. தலையணையில் முகம் புதைத்துத்
தேம்பிக் தேம்பி அழுதாள்.
விஷயம் அப்பாவுக்குத் தெரிந்தால் அவர்
என்ன செய்வார் என்பது நன்றாக அவளுக்குத்
தெரியும். துண்டு துண்டுகளாய் வெட்டி வீட்டுக்
காவல் நாய்களுக்கு இரையாகப் போட்டுவிடும்
முரட்டு சுபாவம் அவருக்குள் நீண்ட நாளாய்த்
தூங்கிக் கொண்டிருப்பது அவள் அறிந்ததுதானே!
பயத்தால் உடம்பு நடுங்க ஆரம்பித்தது.
அவள் பின்னாலேயே வந்து அம்மா விஷயம்
அறிந்து துடித்துப் போனாள். தாயில்லாப் பெண்
என்று தலைக்கு மீறிய செல்வம் கொடுத்து வளர்த்த

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


36 வாழப் பிறந்தவள்
தன் பயனா இது என்று வாயிலும் வயிற்றிலும்
அடித்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்தாள்.
கண்டித்து வளர்த்தால் மாற்றாதாய்
கொடுமைப்படுத்துகிறாள் என்று சொந்தங்கள்
எதையாவது சொல்லிக் குடும்பத்தைக் கலைத்து
விடுவார்களோ என்ற பயத்தில் முகம் வாடாமல்
மூத்தாளின் குழந்தைகளைத் தன் குழந்தையாய்
எண்ணி வளர்த்தவள் இன்று செய்வதறியாது தவித்து
நின்றாள்.
மாமன் மகள் நால்வரும் அத்தை மகன்கள்
ஐவரும் அந்த வீட்டின் ராஜகுமாரர்களைப் போல்
வலம் வந்து கொண்டிருந்தும், இவளுக்கு ஏன்
இப்படிப் போயிற்று புத்தி...!
நினைத்து நினைத்துப் பார்க்கிறாள் எதுவுமே
புலனாகவில்லை. இதயத்தை இறுக்கிப் பிடித்துக்
கொண்டு கணவனிடம் விஷயத்தைச் சொல் விடத்
தயாரானாள் அவள்.
நீலாம்பரி முதன் முதலாகத் தாயை நெருங்கிப்
பேச வருகிறாள். அப்பா வருவதற்குள் அக்கா மனதை
எப்படியும் மாற்றிவிடலாம் என்ற நப்பாசை வேறு
அவளுக்கு. கருங்கள் சிலைபோல் பிடிவாதமாய்
உட்காந்திருந்தவளைப் பார்த்து நொறுங்கிப்
போயிருந்த தாயைத் தொட்டுத் திருப்புகிறாள்.
மகளைப் பாக்கவே வெட்கமாக இருந்து
அம்மாவுக்கு. இடுப்பில் சொருகி இருந்த புடவைத்
தலைப்பை எடுத்து வாயில் வைத்தவளாப்
விம்முகிறாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 37

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்


தன்பிள்ளைத் தானே வளரும் என்பதற்கு உதாரண
மாய் மகள் நிற்பதைப் பார்க்கும்போது அவளுக்குப்
பெற்ற வயிறு குளிர்ந்தது. மகளை வாரி அணைத்து
முத்தமிட்டாள்.
'என்னை மன்னிச்சுடும்மா.... உன்னை அடக்கி
வைக்க விரும்பி ரொம்பவும் கொடுமைப் படுதி
விட்டேன். அன்பு பிரியம்னா என்னன்னே தெரியாம
வளர்த்திட்டேன். உனக்கு நான் செய்த பாவத்துக்கு
தான் இன்னிக்கு இறைவன் என்னை அழவைக்கிறான்.'
நீலாம்பரிக்கு இது புது அனுபவம்தான்.
முதலாப் அம்மா அவளைத் தொட்டு அனைத்துப்
பேசுகிறாள். அவளுக்கும் அழவேண்டும் போல்
இருந்தது மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அம்மாவைத் தேற்றினாள்.
'அப்படி எல்லாம் பேசாதீங்கம்மா... அடிச்சு
நிமித்தி எடுத்தாதான் இரும்பு கத்தியாகுது. நெருப்
புலப் போட்டுக் கொளுத்தி எடுத்தாகான் கிளிஞ்சல்
சுண்ணாம்பாகுது. வெட்டி தீட்டினாத்தான் வைரம்
வைரமாகும்.
'அம்மா, நீங்களும் அப்பாவும் என்னைக்
கண்டிச்சு வாளர்த்ததால்த்தான் நான் இன்னிக்கு
நல்லா வளர்ந்திருக்கேன். உங்க கட்டுப்பாடுங்கிற
வட்டத்துக்குள்ளேயே நின்னதாத்தான்
என்னையே நான் கட்டுப்பாடா வெச்சிருக்கேன். நான்
வெட்டி சமப்படுத்தின கரைகளுக்குள்ளே அடங்கி
ஓடுற நதியாட்டம் உங்க பாதையில் போ ற
கண்டிப்புதாம்மா காரணம்.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


38 வாழப்பிறந்தவன்
'பெத்தவங்க அடக்கு முறைகளைக் குறை
சொன்னா அது புரியாதவங்க பேசற பேச்சு... நீங்க
எப்பவும் எனக்குக் கொடுமை பண்ணினது கிடையா
தும்மா...'
மகளின் வார்த்தைகள் பெற்றவளுக்குத்
தெம்பூட்டின தன் பிள்ளை தன்னை வெறுக்க
வில்லை என்பதை அறிந்த மனம் அமைதியானது.
மகளின் மனதைப் புரிந்து கொள்ளக் கிடைத்த
சந்தர்ப்பம் கொடுத்த திருப்தியில் மூத்தவளை
எப்படியும் மறுநாள் ஓழுங்குபடுத்தி விடலாம்
முடிவுடன் உறங்கப் போனாள்.
பொழுது புலர்ந்தது. காலை மணி ஒன்பது
ஆனபோது, காங்கேயம் காளைகள் பூட்டிய
வில்வண்டி வாசலில் வந்து நின்றது. பண்ணையாரின்
மூத்த மகள் ரேவதியும் மருமகன் சுந்தரேசனும்
வண்டி யிலிருந்து இறங்கினார்ள்.
பண்ணையாரும் இறங்கினார்.
மதியம் வீடு அமர்க்களப்பட்டது. மூத்த மகள்
இங்கு அங்குமாய் நடைபயின்று கொண்டிருந்தாள்...
மாலைகள், கூறைப்புடவைகள், புது மாங்கல்யச் சரடு
எல்லாம் வீட்டு பூஜை அறையில் வைக்கப்பட்டன.
பண்ணையின் கோயில் அர்ச்சகர் கிருஷ்ணமாச்
சாரியார் குதூகலமாய் வந்து உட்கார்ந்தார்.
அம்மாவும் நீலாம்பரியும் திகைத்து நிற்க, மூத்த
மகள் மும்முரமாக் காரியங்களைச் செய்து
கொண்டிருக்க, பண்ணையாரின் ஒரே ஆண்வாரிசான
சோமநாத சேதுபதியின் கையைப் பற்றியவாறு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்த் செல்வம் 39
பண்ணையாரின் மூத்த மருமகன் புது வேட்டி,
சரசரக்க் ஆச்சாரியாரின் முன்பு வந்து அமர்ந்தார்
அதே நேரத்தில் பண்ணையார், சந்திரிகாவின்
கையைப் பிடித்து அழைத்து வந்து மருமகன்
பக்கத்தில் அமர்த்துகிறார்.
மந்திரங்கள், அரண்மனை போன்ற அந்த வீடு
முழுவதும் ஒலிக்க மஞ்சள் சரட்டிலே கோக்கப்பட்ட
பொன்தாலி சந்திரிகாவின் கழுத்தை அலங்கரித்தது
தாலி கட்டிய கரத்தால் அவள் நெற்றியில் செந்தூரம்
வைக்கிறார் மாப்பிள்ளை.
'கல்யாணமாகி ஏழு வருஷமா பிள்ளை
இல்லேன்னு இன்னொரு வீட்டுப் பெண்ணை என்
புருஷனுக்கு கட்டிவைக்கறதைவிட என் தங்கச்சியை
என் புருஷன் கட்டிக்கிட்டா எனக்குப் பிரச்னை
வராதுன்னு அப்பாகிட்டே நான்தாம்மா கேட்டேன்.'
ரேவதி தாயிடம் மெல்லச் சொன்னாள்.
அட்சதையத் தூவி மணமக்களை வாழ்த்திவிட்டுத்
திரும்பிய பகபதி, 'என் பிள்ளைங்க எப்பவுமே என்
பேச்சை மீறமாட்டாங்க' என்கிறார்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


40 வாழப் பிறந்தவள்
5

'என்னை மன்னிச்சுடும்மா உன்னோட ஆசை


களுக்கு கல்லறை எழுப்பி அதுமேல நின்றுதான்
என்னோட கெளரவத்தை நான் நிலைநாட்டி
இருக்கேன். இந்தப் பெருமைய எனக்குத் தேடித்தந்த
நீதான் எனக்குக் கொள்ளி போடணும்.ஏன்னா
என்னோட நம்பிக்கையை நீதான் காப்பாத்தினே.... .நீ
மட்டும் மனசு வைக்கலேன்னா ஊர் சனம் என்னைத்
தூத்தி சிரிக்கும் அந்த அவமானத்திலேர்ந்து நீ
என்னைக் காப்பாத்திட்டேம்மா.'
உணர்ச்சிப் பிழம்பாப் அப்பா சொல்லிக்
கொண்டிருக்க நீலாம்பரியோ உணர்ச்சியில்லாப்
பிண்டம் போல் சிலையாய் நின்று கொண்டிருந்தாள்.
'இந்த வயதில் இப்படியொரு அவசரக்
கல்யாணம் தேவையா எனக்கு.... பண்ம் பகட்டு
அந்தஸ்து இவற்றை மட்டுமே வைத்து ஒரு நபரை
முடிவு செய்து என் எதிர்காலத்தையே இப்படி
இருளாக்கி விட்டீர்களேயப்பா... முகம் தெரியாத-
மொழி தெரியாக அந்த நாட்டில் போய் நான் என்ன
செய்வேன்.'
தனக்குள்ளேயே வெடித்துச் சிதறினாள் அவள்.
"தங்கமான பிள்ளையம்மா.... உன்மேல.
உயிரையே வெச்சிருக்கு.உன்னைக் கொடுத்தா
போதும்; உங்க பொண்ணுக்காகப் பொன்னும்
பொருளும் எனக்கு நீங்க கொடுக்கவேணாம்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 41
பதினாறு வருஷம் வளர்த்து இவ்வளவு அழகாகவும்
அறிவாவும் கொடுத்திருக்கிற உங்களுக்கு நான்தான்
பொன்னும் பொருளும் அள்ளி, தரணும்'. எப்படிப்
பேசுது பாரேன்."
"நீ ரொம்பக் கொடுத்து வெச்சவ...உங்கப்பா
சொல்றமாதிரி நீ அதிர்ஷ்டக்காரிதான்மா..."
மாப்பிள்ளையின் பழக்க வழக்கம் நடை உடை
பாவனை கண்டு அம்மாதான் மகளிடம் பேசினாள்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பேசா
மடந்தையாய் அமர்ந்திருந்தாள் அவள். ஒருவாரம்
ஓடியது. சந்திரிகா புருஷன் வீடு போய்விட்டாள்.
அவளுக்காக அப்பா நிறைய சீர் செய்தார். ஆனாள்
இவளது புருஷனோ எதுவுமே வேண்டாம் என்று
சொல்லிவிட்டு மலேசியாவுக்கு கிளம்பிவிட்டான்.
முப்பது நாளில் விசா அனுப்பித் தன்னோடு
அழைத்துக் கொள்வதாகச் சொல்லிப் புறப்பட்டான்.
பதினாறு வருடங்கள் எதுவுமே தெரியாமல்
இஷ்டம்போல் உலாவந்து கொண்டிருந்த நீலாம்பரி
இப்போது எதை நினைத்துப் பயப்பட
ஆரம்பித்தாள். திடீரென்று வந்து அவளது
பயணத்தை திசைதிருப்பிய அந்த மனிதன் எதிர்
காலத்தை எப்படி அமைகக்ப் போகிறான்..?
அவனது ஆசைகள் ரசனைகள்.அணுகு
முறைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் எப்படி
இருக்கும்.அவன் நல்லவனா கெட்டவனா..எப்படி
என்னைத் தன் வாழ்வாக்கிக் கொள்ள இவன்
சம்மதித்தான்... மனதுக்குள் புழுங்கினாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


42 வாழப் பிறந்தவள்

நீலாம்பரியின் விசாவும் வந்துவிட்டது. அவளது


வெளிநாட்டுப் பயணம் திருவிழாக் கோலமாக
இருந்தது. ஆரம்பத்தில் அவளது திருமணத்தால்
அவளின் ஆசைகள் லட்சியங்கள் எல்லா வீணாகிப்
போய்விடும் என்று பயந்த பண்ணையார்,
மாப்பிள்ளையுடன் கலந்து பேசியபின் அந்தப்
பயமெல்லாம் மறந்து போனார்.
நீலாம்பரியின் அறிவும் திறமையும் அயல்நாட்டு
சுலபமாக
வாழ்க்கை முறைகளை வெகுவிரைவில்
கவலை
எற்றுக்கொள்ள உதவும் என்பதால் அந்தக
கல்வியை
தேவையில்லை எனவும், நீலாம்பரியின்
மேலும் தொடர நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்
கொடுத்து அவள் விருப்பம் போல் படிக்கவைப்பேன்
என்றும் மாப்பிள்ளை மாமனாரிடம் உறுதி
கொடுத்ததால் பண்ணையார் சந்தோஷமாய் மற்ற
காரியங்களில் கவனமாய் இருந்தார். மகளின் பயண
ஏறபாடுகள் துரிதமடைந்து கொண்டிருந்தன.
சொந்தங்கள் எல்லாம் வீடு முழுவதும் நிரம்பி
சோகம்
இருந்தன. நீலாம்பரியின் மனம் முழுவதும்
நிறைந்திருந்தது அவள் வளர்ந்த காலத்தில்
அவளோடு வளர்ந்த அந்த வீட்டு மரங்கள்
அவள் பிரிவை நினைத்து அழுவது போன்ற பிரமை.
அவளுக்காகவே அந்த வீட்டு வேலைக்காரப்
பெண்கள் வளர்த்துவிட்ட ஜாதிமல்லியும் சந்தன
முல்லையும் மனம் உடைந்து மண்ணில் விழுந்து
கிடப்பது போன்ற தோற்றம்.
கூடை கூடையாய் அவைகளை மலர்வதற்குள்
பறித்து வந்து தொடுத்து அவளது இரட்டைப்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 43
பின்னலில் சூட்டியபின்பே அவைகள் மலர்ந்த
நாட்கள் போய், பறிப்பதற்கும் தொடுப்பதற்கும்
ஆட்கள் இல்லாது அவைகள் கொடியில் மலர்ந்து
மண்ணின் மடியில் விழுந்து கிடந்தன. தரையில்.
உட்கார்ந்து ஆசையுடன் அவற்றை அள்ளி இரண்டு
கைகளும் நிரம்ப முகத்தில் வைத்து மூடிக்
கொள்கிறாள். அந்த சுகந்த மண்ம் மூக்கின் வழியாய்.
புகுந்து உடம்பு முழுதும் பரவி அவளை அணைத்துக்.
கொள்கின்றது.
அவள் மலர்ந்த நாளில் இருந்து மனம்
விரும்பிய உறவுகளில் அதுவும் ஒன்று. மூடிய
கைகளுக்குள் இருந்த பூக்கள் அவள் விழிநீரின்
சூட்டில் திணறுகின்றன. தாங்க முடியாத சோகத்
துடன் அவைகளைப் போட்டுவிட்டு நடக்கின்றாள்.
இந்த வாழ்க்கை அந்த மண்ணில் கிடைக்குமா?
எங்கும் மனதுடன் நடந்து வீட்டுத் தோட்டத்தின்
பின்னால் வருகிறாள் கிணற்றடியில் பந்தலாய் நிற்கும்
பலா மரமும் மா மரமும் சூரிய ஒளி பூமியில்
படாமல் குடை பிடித்துக் கொண்டிருந்தன.
கிணற்றின் பக்கத்தில் கிடந்த சிமெண்ட்
மேசையில் அமர்கிறாள். வாரி நிரம்பியிருந்த
தண்ணீரில் இரண்டு கால்களையும் விட்டு நனைக்
கிறாள் உள்ளங்காலில் பரவிய குளிர் உடம்பையும்
சீண்டுகிறது. தன்னை மறந்து கால்களை ஆட்டிக்
கொண்டிருக்கிறாள். சற்று நேரத்தில் அங்கே சத்திரன்
வருகிறான். அப்பாவின் தங்கைப் பிள்ளை அவளது
அத்தை பிள்ளை. அவளைவிட இரண்டு வயது
மூத்தவன். எங்கே வெளியூரில் படித்துக்கொண்டிருந்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


44 வாழப் பிறந்தவள்

தான். அவளது திருமணத்திற்கு வர முடியால்


போனதால் இப்போது வழியனுப்ப வந்த தன்
பெற்றோர்களுடன் வந்திருத்தான் அறிவார்த்தமான
சிந்தனைகளுடன் உலாவருபவன். வாடிப் போய்க்
கிட ந்த நீலாம்பரியின் முகத்தைப் பார்த்து
ஆறுதலாய்ப் பேசினான்.
'நீலம் எங்களை எல்லாம் விட்டுட்டுப்
போறோம்னு கவலைப்படாதே பொண்ணாப்
பொறந்தாலே இப்படித்தான் எல்லாரையும்
விட்டுட்டு வேற இடத்துக்குப் போயாகணும் . எங்க
அக்காவும் உன்னை மாதிரி அழுதுகிட்டுத்தானே
மாமியார் வீட்டுக்குப் போச்சு.... இப்ப அது
சந்தோஷமாத்தானே இருக்கு. மாசத்துக்கு ஒருதடவை
வீட்டுக்கு வந்து எங்களைப் பார்த்துட்டுப்
போவுதுல்லே! நீயும் அதே மாதிரி வந்தா எல்லாம்
சரியா போயிடும் நீலம்... அழாதே!" என்றான்.
நீலம் இப்போதுதான் நிஜமாகவே அழ
ஆரம்பித்தாள். பூப்போன்ற அவள் மேனி மெல்ல
மெல்லக் குலுங்கியது.
'எப்படி சந்திரா, நான் அழாம இருக்க முடியும்!
அத்தாச்சி பக்கத்தில இருக்கு; அதோட புருஷன்
நமக்கெல்லாம் பழக்கமானவரா இருக்காரு...
அததோட மட்டுமில்லாம் நமக்கு சொந்தக்காரங்களா
இருக்காங்க. அங்கே அத்தாச்சிக்கு எந்தப் பயமும்
கெடையாது.'
'ஆனா, எனக்கு இவர் யாருன்னு தெரியாதே!
அந்த ஊர் சனங்களத் தெரியாதே.... அங்கேருத்து

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ் செல்வம் 45
இங்கே ஓடிவரத்தான் முடியுமா?. அஞ்சுவருஷம்
பத்துவருஷம் கழிச்சுதானே வரமுடியும்?'
அவள் மனதில் இருத்த பயம் இப்போது
கலக்காக மாறியது.
'பயப்படாதே நீலம்.உன்னோட கணவரைப்
பார்த்தா படிச்சவரா, வசதியுள்ளவராத் தெரியுது.
உனக்கு அவர் எந்தக் கொறையும் வைக்க
மாட்டாருன்னு நெனைக்கறேன். கொஞ்சநேரம்
பழகினதிலேயே அவரோட குணம் தெரிஞ்சு போச்சு
எனக்கு. உன்மேல் ரொம்ப பிரியம் வெச்சிருக்காரு.
அது மட்டுமில்லே. நீ நாட்டியம் கெரிஞ்சவன்னு
அவர் தம்பி சொன்னதால்தான் உன்னை அவர்
கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினாராம்.நீ
எவ்வளவு நாளா டான்ஸ் கத்துக்கறே..? அரங்கேற்றம்
முடிச்சுட்டியான்று துருவித் துருவி கேட்டாரு....
எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச தெரியுமா?
எங்கவீட்டுப் பெண்ணைப் பத்திக் கொஞ்சமாவா
சொல்வேன்;நெறையவே சொன்னேன்.
'நீ பாடுவே.... வீணை வாசிப்பே, நட்டுவாங்கம்
பண்ணுவேன்னு சொன்னேன். அவர் அசந்து
போய்ட்டாரு பாரேன்...! அப்படின்னா உங்க நீலம்
ஒரு சர்வகலாசாலன்னு சொல்லுங்கன்னு என்
தோள்ல தட்டினாரு".
'நீலம்.... அவருக்குக் கலைகள்ல .
மரியாதை இருக்கு..! சரபோஜி மஹால்.... பெரிய.
கோயில்லாம்.போனப்ப அற்புதமா ரசிக்கப்
பேசினாரு... நிச்சயமா அவர். உனக்குப் பொருத்தமான
மாப்பிள்ளைதான்...'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


46 வாழப் பிறந்தவள்
பெரிய பிரசங்கமே நடத்திவிட்டான் அவன்.
அவள் அவனையே வைத்த கண் வாங்காமல்
பார்த்தாள். அந்தப் பார்வை அவனது உணர்வுகள்
அனைத்தையும் ஒரு வினாடி அவள் முன் மண்டியிட
வைத்தது.
'சந்திரா... ஏன் என்கிட்டே இப்படிப் பொய்
சொல்றே... உன்னைவிட... அவர் எனக்கு எந்த
வகையில பொருத்தம்னு நெனைக்கறே! ஏன்
நீங்கள்லாம் இருந்தும் என்னை இப்படி அனாதையா
எங்கேயோ கண் காணாத காட்டுக்கு அனுப்பறீங்க.
உங்களுக்கு நான் என்ன தப்பு செய்தேன். எங்க
அப்பா முடிவு பண்ணினாலும் உங்க அப்பா...
அதுதான் என் மாமா இதை நிறுத்தி இருக்கலாமே".
'என்னைப் பத்தி ஏன் யாருமே யோசிக்கல...
பணமும் பகட்டும் பதவியுமா ஒரு ஆள் வந்து
நின்னதும் அவனைப்பத்தி எதையுமே யோசிக்காம
எப்படிப் பொண்ணைக் குடுக்க இவுங்கள்லாம்
சம்மதிச்சாங்க... நீகூட யார்கிட்டேயும் எதையும்
கேட்கலியே சந்திரா.....'
அவள் மனம் திறந்து கொண்டிய வார்த்தை
களால் மண்பார்த்து நின்ற சந்திரன் மறுபடியும்
அவளைத் தேற்றினான்.
'என்னை மன்னிச்சிடு நீலா.. . !என்னைவிட
உன்னை ஆழமா நேசித்தது நம்ம ஸ்ரீதர்
அவனுக்கு உன்னோடத் திருமண விஷயம்
தெரிஞ்சதுமே அவன் படிப்பை விட்டுட்டு மிலிட்
டரியல சேரப் போய்ட்டான். எங்களால உன்னை

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 47
நேசிக்க முடிஞ்சுதே தவிர... நெருங்க முடியலே... உங்க
அப்பாவை உனக்குத் தெரியாதா? அவருக்கு
கெளரவம்தான் பெருசு அதனாலத்தான் உன் கூடவே
சுத்திகிட்டு இருந்த எங்கள விட்டுட்டு, எங்கிருத்தோ
வந்த ஒருத்தருக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்
கொடுத்திட்டாரு.
'இனிமே வரு! எந்தப் பிரயோசனமும்
இல்லை! நீ படிச்ச பொண்ணு. நம்ம குடும்பத்திலேயே
பொண்ணுங்கள்ல அதிகம் படிச்சதும் விஷயம்
புரிஞ்சதும் நீதான். கிடைக்கிற வாழ்க்கையை
புத்திசாலித்தனமா வாழ்ந்து காட்டணும். நீ தூரமா
போனதால நாங்கள்லாம் உன்மேல் வெச்ச அன்பும்
தூரமா போயிடும்னு கவலைப்படாதே! நீ எப்பவும்
எங்க மனசில நெறைஞ்சிதான் இருப்பே! மனதைத்
தேத்திக்கிட்டுப் பயணத்துக்கு தயாராகு நீலம்....!
"நிச்சயமா நீ நெனைச்ச்தை, விரும்பியதை
எங்கே இருந்தாலும் சாதிக்கக் கூடிய... உன்னையே
நம்பி நீ புறப்படு.'
ஒரு குளத்துப் பூக்களாய் மிதந்து கொண்டி
ருந்து பாச உணர்வுகள் ஒருவரை ஒருவர் ஆறுதல்
படுத்திக் கொள்ள அவளுக்கு விடை கொடுத்தனுப்பு
கிறான் சந்திரன்.
என்ன இருந்தாலும் இரத்த சம்பந்தமான
உறவுகளின் பாசம் எப்போதும் ஈரத்துடனேயே
இருக்கும் என்பதை அவன் பேச்சும் போக்கும்
அவளுக்கு உணர்த்தின. மணவினைக்கு முன்னிருத்த
நீலாம்பரி முற்றிலும் மாறிப் போயிருந்தாள். இனம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


48 வாழப் பிறந்தவள்
புரியாத சோகம் ஒன்று அவளை தழுவி நின்றது.
கழுத்திலே கிடந்த மாங்கல்யம்கூட கனப்பது போன்ற
பிரமை! நினைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு
எதையாவது நினைத்துக் கண்மூடிப் போகிறாள்.
ஒரு புதிய மண்ணில் ஒரு புதிய மனிதனுடன்,
புதிதாய்த் தொடங்கவிருக்கும் புதிய குடும்பவாழ்க்கை
அவளுக்கும் பலவித புதிய எதிர்பார்ப்புகளை
உண்டாக்க அவள் பதினாறு ஆண்டுகள் பதினாறு
நாட்கள் வாழ்ந்திருந்த மண்ணிவிருந்து பிரிகின்ற
நேரம்.
தாயும் உடன் பிறப்புகளும் உள்ளுக்குள்
இத்தனை நாட்களாய்ப் போட்டு மூடிவைத்திருந்த
உண்மை அன்பை வெளிப்படுத்துவின்ற நேரம்
சுற்றமும் நட்பும் அவள் வாழ்வாங்கு வாழ.
வேண்டும் என்று மனதார வாழ்த்தி அனுப்ப அந்த
விட்டில் குழுமி நின்று வழியனுப்பும் நேரம்.
புறப்பட்டுவிட்டாள். அழகும் பசுமையும்
நிறைந்த அந்தக் கிராமத்திலிருந்து சென்னை வந்து
ஒருநாள் இரவு முழுவதும் ஓட்டலில் தங்கி இருந்துப்
பிழியப் பிழிய அழுது முடிந்து, விமான நிலையத்தில்
காலடி வைத்தபோது கையிலிருந்த சின்னப் பையிலி
ருந்து விபூதியை எடுத்து அவள் நெற்றியில் பூசிய
அப்பா அவளிடம் சொன்னார்:
'மகளே! உன்னை மட்டும் நான் விமானத்தில்
ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கவில்லை.
உன்னோடு இந்த மண்ணின் மானம் மரியாதை
கவுரவமும் நமது குடும்பத்தின் மரியாதையையும்
சேர்த்தே அனுப்பிவைக்கிறேன்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 49
'உன்னால அந்த மண்ணில பொறந்த
மண்ணோட பெருமை பெருகனும் பேரோட
புகழோட வாழனும் உமேல நான் வெச்ச,
நம்பிக்கையை கடைசிவரைக்கும் நீ காப்பாத்தனும்.'
அப்பாவும் மற்றவர்களும் போய்விட்டார்கள்
கைத்துண்டை கீழே போட்டது போல். கீழே குனிந்து
கொஞ்சம் அந்த மண்ணைத் துண்டி எடுக்கிறாள்
மடித்து கைப்பையில் வைக்கிறாள் உள்ளே நுழைந்து
தனக்குரிய இடத்தில் பேய் அமர்கிறாள்.
யார் யாரோ வருகிறார்கள். என்னென்ன
மொழியெல்லாமோ பேசுகிறார்கள். பணிப்பெண்
வந்து சில விளக்கங்களைச் சொல்கிறாள். பெல்டை
போட்டுக் கொள்ளக் கற்றுக் கொடுக்கிறான்.
தானாகப் பெல்ட்டை போட்டுக்கொண்டு நிமிர்ந்து
உட்கார்ந்து கண்களை முடித் தியானத்தில்
முழ்குகிறாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


50 வாழப் பிறந்தவள்
6

எத்தனை எத்தனை கற்பனைகள்! எவ்வளவு


ஆர்ப்பாட்டங்கள்...! ஏதோ உலகத்தில் இல்லாத
உன்னதான மாப்பிள்ளை வந்துவிட்ட நினைப்பில்
அல்லவா அவளுக்கு அந்த அவசரத் திருமணம்
நடைபெற்றது எவ்வளவு பிரியமாய் இருந்தார் அப்பா
அத்தனை பிரியத்தையும் ஆற்றிலே அள்ளிப்
போட்டது போல் அல்லவா அவளைத் திசைக்க
வைத்துவிட்டார்.
முழுசாய் பள்ளி இறுதிநிலையை முடித்த பின்
தான் ஒரு டாக்டராகவேண்டும் என்ற எண்ணத்தில்
இருந்தவளை அந்த ஆசை நிறைவேதும் முன்பாக
இப்படி அரைகுறையாய் அனுப்பிவைத்த அப்பா
அன்று சொன்ன சமாதானப்படி கணவன் தனக்கு
அந்தப் படிப்பைக் கொடுப்பான் என்ற ஆசையுடன்
வந்தவளுக்கு அவனது மலேசிய வாழ்க்கை
முறையைப் பார்த்ததுமே பெருத்த ஏமாற்றமாய்
இருந்தது.
தமிழ்நாட்டி அந்தக் கிராமத்தில் தினமும்
ஒருகாரில் மோதிரமும் மைனர் செயினும்
கடியாரமுமாய் வந்து இறங்கிப் பெரிய அரசாங்க
அதிகாரிலே நடந்து கொண்டவன் இங்கே
ஒட்டல் யூனிபாமில் வந்து நின்றது அவனுடைய
வேஷத்தின் முதல் திரையை அகற்றியது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 51

அலுவலக நேரத்தில் மனைவியை அழைத்துப்


போகத் தான் வேலைசெய்யும் பிரபல ஐந்து நட்சத்திர
ஒட்டலின் வேளைக் கொண்டு வந்திருந்தான் அவன்
மெளனமாய் போய் அமர்த்தாள் முக்கால் மணிநேரப்
பனம் வழி நெடுக நிறைந்து கிடக்கும் கட்டிடங்கள.
மரங்கள் புதிதாய் எழும்பும் தொழிற்சாலைகள்
என்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டே அவன் வர
அவன் அருகில் இருந்த மலாய்க்கார நண்பனிடம்
மலாய் மொழியில் என்னவோ கொண்டு
வந்தான் நீம்லாபரிக்கு மிகப் பெரிய ஏமாற்றமாய்
அவனின் நடைமுறை அமைந்தது ஒரு புது
மனைவியை வரவேற்கும் கணவனின் உணர்ச்சிகள்
இப்படியா இருக்கும் மனதுக்குள் குமைந்தவாறு
அவனுடன் சென்றாள் நோரக வீட்டுக்குப் போய்
வேன் நின்றதும் சின்னஞ்சிது குழந்தைகள்
ஓடிவந்தனர். வயதான பெண்மணி கையில் மஞ்சள்
நீர் ஆரத்தியுடன் வந்தார். ஏதோ கடமைக்கு ஆரத்தி
எடுத்துவிட்டு ஓரமாய்த் தட்டை வைத்தவர் அவளை
வா வென்று அழைக்காமலேயே உள்ளே போகிறார்
அவன் அவளை அழைத்துப் போகிறான். வீடு
பெரிதாக இருந்தது நடவடிக்கைகள் அவளுக்குப்
புலனாகாமல் இருந்தால் கொஞ்சம் அச்சம் வந்து
அவளிடம் ஒட்டிக் கொண்டது.
அவன் அவளை மேல் மாடியில் இருந்த தன்
அறைக்கு அழைத்துச் சென்றான் மிகமிக அழகாக
அலங்கரிக்கப்பட்டு சினிமாவில் வரும் படுக்கை அறை
போல் காட்சியளித்தது அவளின் கண்கள்
வியப்புடன் ரசிக்கத் தொடங்கின. அதையொட்டிய

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


52 வாழப் பிறந்தவள்
படி அமைந்திருந்த நீண்ட அறை ஒன்று கண்ணில்
தென்பட அங்கே நுழைகிறாள் நீலாம்பரி.
உடல் முழுதும் புல்லரிந்துப் போக, கண்கள்
புத்தொளி பெற்று ஒளியுடன் மின்ன, வைத்த கண்
வங்காமல் அந்த உருவத்தையே பாக்கிறாள்.
எதுவுமே தெரியாக ஐடம் என்றல்லவா
நினைத்தேன். இது என் கணவரின் உருவமா? அவரும்
ஒரு நாட்டியக்காரரா? மனம் வியப்பால் தவித்தது.
'ஆச்சர்யமா இருக்குதா நீலம்! இந்தக்
கலைக்காகத்தான் உன்னை நான் வெல குடுத்து
வாங்கினேன். நீ ஒரு அற்புதமான ஆடலாசின்னு
எனக்கு நல்லாவே தெரியும் உன்னை ஒரு கலைக்
கோயிலாப் பார்க்கணும்.கிறதுதான் என்னோட
ஆசை.'
அவன் அவள் பின்னால் வந்து அவள்
தோளைப்பற்றிக் கொண்டே பேசினான். நன்றியோடு
அவனைப் பார்த்தாள் முழுதுமாய் அந்த அறையைப்
பார்க்கிறாள் நிறைய வண்ண வண்ணப்படங்களில்
அந்த அறையை நிரப்பி வைத்திருந்தான் ஒரு பெரிய
பிரேம் காலியாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
அதையே பார்த்துக் கொண்டிருந்தவளை நெருங்கி
வந்தன்.
'இதுல ஏன் யாரோட படமும் இல்லேன்னு
பார்க்கறியா நீலம் இதுல கூடிய சீக்கிரம் உன் படம்
வந்துடும்' என்கிறான்.
அவள் மிரட்சியுடன் பார்க்கிறாள். அவளைத்
தன்னுடன் அனைத்துக் கொள்கிறான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 53

'பயப்படாதே நீலம்! இந்த தெய்வீகமான


இடத்தி உன்னோட படத்தையும் மாட்டினா
எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா. எனக்கு
மனைவியா வர்றவ கலையார்வம் மிகுந்தவளா
இருப்பான்னு ஜோதிடர் சென்னப்ப, நான் அதை
நம்பல நீலம்! என்னோட தம்பி வந்து உன்னைப் பத்தி
சொன்னப்ப நான் அசந்து போனேன் நீலம்.'
நீ எனக்கு கிடைக்கணும்னு நான் கடவுள்
வேண்டிக்கிடடேன். என்னோட வேண்டுதல் வீணாப்
போகல. கடவுள் எனக்கு உன்னையே மனைவியாக்
கொடுத்திட்டாரு.'
முதன் முறையாக ஒரு ஆணின் அணுக்கமும்
நெருங்கிய பேச்சும் அவளை திணற வைக்கின்றன.
அச்சத்துடன் அவனைப் பார்க்கிறாள்.
தன் கைகளால் அவளது சுருண்ட கேசத்தை
நீவிக் கொடுத்தவனாப் பேசுகிறான்:
'பிரயாணக் களைப்பு உனக்கு அதிகமா
இருக்கும்னு நெனைக்கிறேன். முதல்ல நீ போய்க்
குளிர்சிட்டு ஓய்வெடுத்துக்கோ.. உனக்கு நான்
துணியை எடுத்து வெச்சிருக்கேன். குளிர்ச்சிட்டு
அதைத்தான் நீ உடுத்திக்கனும் நான் கொஞ்ச நேரம்
கீழே போட்டு வர்ரேன்.'
அவன் போய்விட்டான் நீலம் குளிப்பதற்காகக்
குளியலறைக்குச் சென்றாள் அறையின் அமைப்பில்
மனம் கொஞ்சம் அசந்து போனது. வீட்டின் வசதிகள்
நாட்டின் மாற்றத்துக்கு ஏற்பவும் அவனது வசதிக்கு
எற்றதாகவும் இருப்பதை உணர்ந்தாள் ஆனால்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


54 வாழப் பிறந்தவள்
அவளவு பெரிய வீட்டில் பெண்களே
பெரிய குறையாகவே அவளுக்குப் பட்டது நீண்ட
பின்னலை அவிழ்த்து முடியைப் பிரித்துவிட்டுப்
பாவாடையைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு
குளியலறை உள்ளே செல்கிறாள். குளித்து முடித்துத்
தலையைத் துவட்டிக் கொண்டு வந்து மேசைமீது
கிடந்த மாற்றுடையைக் கையில் எடுக்கிறாள் அது
ஓர் இரவு ஆடையாக இருந்ததைக் கண்டு மனம்
அரண்டு போகிறது. ஏதே தீண்டத்தகாத ஒன்றைத்
தீண்டிய நினைவில் தூக்கித் தூரப் போட்டுவிட்டுத்
தன் பெட்டியைத் திறந்து தன உடைகளில் ஒன்றைத்
தேடி அணிகிறாள்.
கண்ணாடி முன் நின்று முகத்துக்குப் பவுடர்
பொட்டு வைத்தபோது அவன் கையில்
பலகாரத்துடன் உள்ளே நுழைகிறான் கொண்டு
வந்ததை மேசைமீது வைத்துவிட்டுத் திரும்பி
அவளைப் பார்த்தபோது அவள் கண்ணில் விழுந்து
விட்ட தூசியை எடுப்பதில் முனைப்பாக இருந்தாள்.
அவளிடம் நெருங்கிப் போகிறான் அவளை
முழுமையாய் ஒருமுறை பார்க்கிறான் அவள்
தோளில் கைவைத்து அழுத்துகிறான் அவள் திரும்பிப்
பார்க்கிறாள்.
'ஏன் இதை உடுத்திக்கல நீலம்....! கீழே
கிடந்ததை எடுத்துக் காட்டுகிறான்.
'எனக்கு அதெல்லாம் பிடிக்காது...' சட்டென்று
பதில் சொல்கிறாள்.
மெல்லச் சிரித்துக் கொண்டே அவள்
முகத்தைத் தன் கையால் திருப்புகிறான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ் செல்வம் 55

'எதெல்லாம் உனக்குப் புடிக்காது நீலம்?


குரலில் ஆண்மையின் திமிர் ஓங்கி நிற்கின்றது.
எதற்கும் கவலைப்படாதவளாய் அவள் அருகில்
கிடந்த நாற்காவியின் அமர்ந்து அதே கால்கட்டை
ஏதோ காயம்பட்டுள்ளதைப் பார்த்துக்கொண்டே
'இந்த மாதிரி அரையும் குறையுமா அவிழ்த்துப்
போட்டு நிற்க்கறது...' பளிச்சென்று சொல்கிறாள்.
அவன் விக்கித்துப் போகிறான். அவளை அழுத்த
மாய்ப் பார்க்கிறான் குனிந்து கால் விரலைப்
பார்த்துக் கொண்டிருந்தவளின் நீண்ட கூந்தல்
தரையில் விழுந்து கிடந்தது. சட்டென்று அதை
வாரிப் பிடித்து இழுத்து,
'எனக்கும் இந்த அசிங்கமெல்லாம்
துன்து உனக்குத் தெரியுமா நீலம்!'
அவன் வார்த்தையை விட அவனது பிடி
கடிமையாய் வலித்தது. முதல் அடி! நீலாம்பரியின்
வாழ்க்கையில் முதன் முதலாக அவளுக்கு ஏற்பட்ட
பெருத்த அவமானமாய் அந்த நிகழ்ச்சி. நிமிர்கிறாள்
ஒரே வீச்சில் அவன் கையைத் தள்ளிவிட்டு
அவனிடமிருந்து நகர்ந்து நிற்கிறாள் கண்ணில் தீ
பறக்கிறது.
'என்ன வந்துச்சு உங்களுக்கு...? நான் என்ன
சொல்லிட்டேன்னு இப்படி நடந்துக்கிட்டீங்க...?
இதுதான் நீங்க படிச்சிருக்கிற நாகரீகாமா?'
அவள் அவனைப் பார்த்துப் பேசிய விதம்
அவனை அஞ்சவைத்தது மனதுக்குள் பெரியதொரு
திகைப்பு! ஏதோ கிராமத்துப் பெண் தமிழைத் தவிர

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


56 வாழப் பிறந்தவன்
வேறு பொறி அறியாதவள்; சொந்த பந்தம் யாரு
மில்லாத ஊரில் சொன்னதைக் கேட்டு அடங்கிக்
கிடப்பாள் என்று நினைத்தது தவறாகிப் போய்
விட்டதே என்று அஞ்சினான் ஒரு வழியாய்த்
தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு அவளிடம்
மன்னிப்பு கேட்பது போல் பேசினான்.
'என்னை மன்னிச்சிடு நீலம்! உணர்ச்சிவசப்
பட்டுட்டேன் நான் எப்பவும் இப்படித்தான்
காரணமில்லாம டென்ஷனாயிடுவேன் சின்னச் சின்ன
விஷயத்துக் கெல்லாம் நிதானமில்லாமல் ஆத்திரப்
பட்டு என் அருமையான நண்பர்களை யெல்லாம்
இழந்துட்டேன் நீயும் என்னை வெறுத்திடாதே.'
சட்டென்று தரையில் மண்டிபோட்டு அவள்
இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.
நீலம் தவித்துப் போனாள்.
என்ன ஆண்பிள்ளை இவர்! தன் தவறுக்காக
இப்படிக் கெஞ்சுவதா? மனதுக்குள் உருகி அவனைத்
தட்டிக் கொடுத்துக் கண் ணீ
விடுகிறாள் அவன் அவள் கைகளில் முத்தமிடுகிறான்.
அவளை அணைத்துக்கொண்டு நடந்தவன் தான்
கொண்டு வந்திருந்த உணவு வகைகளை அவளுக்கு
எடுத்து வைத்துச் சாப்பிடச் சொல்கிறான். அவள்
விசித்திரமாய் அவனைப் பார்க்கிறாள்
புதிதாக வந்திருக்கும் மருமகளை வரவேற்க
ஆளில்லை என்றாலும், அவளோடு ஒன்றாக அமர்ந்து
உண்ணக் கூடவா ஆளில்லாமல் போய்விட்டது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கத் தமிழ்ச் செல்வம் 57
இந்த வீட்டில் உங்களைத் தவிர வேறெ
யாருமே இல்லியா... நாம வந்தப்ப ஓடிவந்த
குழந்தைகள்லாம் எங்கே போனாங்க எப்பிடி
இவ்ளவு பெரிய வீட்ல நீங்க மட்டும் இருந்தீங்க?
சரமாரியாக அவள் கேள்விகளை அடுக்கி
கொண்டே போனாள். அவன் முகம் வாடிப்போனது.
'நான் கொடுத்து வைக்காதவன் நீலம்! என்னைப்
பெத்தவுங்களுக்கு இன்னும் ரெண்டு பிள்ளைங்க
இருக்காங்க. அப்பாவும், அம்மாவும் ரெண்டு மாசம்
முன்னாலத்தான் அக்ஸிடென்ட்ல செத்துப்
போனாங்க! தம்பிங்க தனியா இருக்கானுங்க' அவன்
தேம்பத் தொடங்கினான்.
அவள் அவனை மார்புடன் அனைத்துக்
கொண்டாள். பெண்மைக்கே உரிய தாயன்பு, அங்கே
தலைதூக்கி நின்றது. அவன் கேசத்தை நீவிக்
கொடுத்தாள்.
'பரவாயில்லிங்க.. இனிமே நான் கண்டதையும்
கேட்டு உங்களைத் தொந்தரவு பண்ணமாட்டேன்.
வீட்ல யாருமில்லேன்னு இப்படிக் கடையில வாங்கிச்
சாப்பிடறது. இதுவே கடைசிய இருக்கணும். இனிமே
அடுப்படியில நானே சபைப்பேன்.'
அவன் ஆடிப் போனான்.
'வேணாம், வேணாம்... உனக்கு அந்த வேலையே
வேணாம்.. அதை எல்லாம் அதுங்க பார்தத ் ுக்குங்க....'
அவனது பதட்டம் கண்டு ஒருபுறம் சிரிப்பு.
மறுபுறம் வேதனையுமாய் அவனைப் பாக்கிறாள்
நீலம். பிறந்த வீட்டின் வாழ்க்கை நிலையும் வீடு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


58 வாழப் பிறந்தவன்
பூராவும் நிரம்பி வழிந்த சொந்தங்களும் அவள்
நினைவில் வந்து வந்து மோதுகின்றன. எவ்வளவு
அருமையான இனிமையான வாழ்க்கை முறை அது!
எந்த நேரமும் விருந்தும் வேடிக்கையும்.. அடடா..
மீண்டும் எப்போது அதைக் காணப்போகிறாள்
அவள்!
தன்னந்தனியா விட்டேத்தியா ஒரு மேசை
முன் உட்கார்ந்துகொண்டு எங்கோ போய் அவன்
வாங்கி வந்து வைத்திருக்கும் சாப்பாட்டைக்
கைவிரலால் எடுத்து வாயில் போட்டபேது அந்த
மணம் வயிற்துக்குள் போனதுமே குமட்டிக் கொண்டு
வந்தது அவளுக்கு மெல்ல ஒதுக்கி வைத்துவிட்டுக்
குழாயில் கையைக் கழுவின் கொண்டு வந்தவளுக்கு
களைப்பும் பசியும் சேர்ந்து தூக்கத்தைக் கொண்டு
வந்தன.
எதிரே மெத்தை விரிந்து கிடக் அதில் போய்
படுக்கிறாள். அவன், அவளையே பாக்கிறான்.
'உனக்கு சாப்பாடு பிடிக்கலேன்னா பரவா
யில்லா நீலம்.. படுக்கை பிடிச்சிருக்கா.'
அன்பொழுகக் கேட்கிறான். அவள் தலையை
ஆட்டி பிடித்திருக்கிறது என்கிறாள் அருகே மடித்து
வைக்கப் பட்டிருந்த போர்வையை எடுத்து
அவளுக்குப் போர்த்திவிட்டு அவன் பாய்
தலையணையுடன் கீழே போகிறான். அவள்
அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கிறாள்.
கதவைக்கூடத் தாளிட்டுக் கொள்ளச் சொல்லா
மல் பொறுப்பற்றவனாய் எங்கே போகிறான் இவன்!

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 59
எழுந்து வந்து பார்க்கிறாள். அவன் படிகளில்
இறங்கிக் கீழே போயிருந்தான். மெல்ல மெல்ல இறங்கி
வந்து பார்க்கிறாள். முப்பது வயதுப்
ஒருத்தி அவனைத் திட்டிக் கொண்டிருக்க அவன்
அவளைச் சமாதானப்படுத்துகிறான்.
'எல்லாம் அவ வழிக்கு வர்ற வரைக்குந்தான்
கமலா கொஞ்சம் பொறுமையா இரு... இவ
கொஞ்சம் புத்திசாலி' நீலத்தின் உடம்பு நடுங்க,
மீண்டும் மேலே போய்ப் படுத்தாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


60 வாழப் பிறந்தவள்.
7

கார், 'ஜாலான் கோட்லிப்' பில் நுழைந்து


பாகான் ஜெர்மால் வழியாகத் தஞ்சோங் பூங்காவை
நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அவளால் மாநிலத்தின்
பதினைந்து வருட வளர்ச்சியைக் கற்பனை
செய்து பார்க்க முடியவில்லை.
பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும்
பினாங்கு மாநிலத்தை அதன் வளர்ச்சியின்
வேகத்தைப் பார்க்கும்போது, அதை நேரில் பார்க்க
வேண்டும் என்ற அவா நெஞ்சில் எழுந்ததுண்டு.
ஆனால் அந்த ஆசை நிறைவேறு நாள் இப்போது
தான் வந்துள்ளது.
புதிய வீடமைப்புப் பகுதிகளில் எழுந்து நிற்க்கும்
அடிக்கு மாடிக்கட்டிடங்கள், அதைத் தாண்டிச்
செல்லச் செல்ல புத்தம்புது தங்கும் விடுதிகள்,
ரெஸ்டாரெண்ட்கள், சாலையோரக் கடைகள்,
வெளிநாடோ என்று திகைக்கும் அளவில் விதவித
மான வெளிநாட்டுக்காரர்கள்.
கார் சைனீஸ் ஸ்விம்மிங் க்ளப்பைத் தாண்டி
ஓடுகிறது கடற்கரைப் பகுதியைக் கண்கள் மேய்
கின்றன. பாம்பு போன்ற சாலையில் வளைந்து
போவதில் ஒரு தனிப்பட்ட சந்தோஷம். கார்
ஸ்டியரிங்குக்கு மேலே கிடந்த கையடக்கமான
கம்யூட்டர் ஹோல்டரை எடுக்கிறாள் தூங்கிக்
கொண்டிருந்த அதனை விழிக்க வைத்து தோழியின்
தொலைபேசி எண்ணைத் தேடுகிறாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 61
வஞ்ஞான வளர்ச்சியில் மனிதனின் வேகத்தை
இன்றைய நாகரீக உலகம் அனுபவித்து வருகின்ற
வளர்ச்சி அவளுக்கும் கை கொடுத்திருந்து. காரில்
இணைக்கப்பட்டிருந்த போனை எடுக்கிறாள் எதிர்.
முனையில் ரஹ்மத். குரல் கேட்டதும் குற்றால
அருவியெனக் குளிர்கின்ற குரலின் குழைவு.
'இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்.
வாசல்ல நில்லு.. அலையாம நேரா வர்றதுக்கு
அதுதான் வழி.'
தோழியிடம் சொல்லி வைக்கிறாள். எதிர்
முனையில் குரல் நிற்காமல் தொடர்கின்றது.
அலைச்சலுக்குப் பயப்படறவளா நீ.. சூறாவளியில
மாட்டினாலும் துணிச்சலோட கரை சேரக்
கூடியவளாச்சே நீலம்! இந்த அமைதியான பங்களா
வீடு இருக்கிற இடமா தெரியாமப் போய்டும்.'
தோழியின் விகல்பமற்ற பாராட்டில் மனம்
விழுந்து எழுகிறது. போனை மாட்டுகிறாள் மனம்
மறுபடியும் எங்கோ பின்னோக்கி ஓடுகிறது.
அடுக்கடுக்காய் எழுந்துவரும் அலைகளைப் போல்
அந்த நினைவின் அலைகள்!
தந்தையின் நம்பிக்கையை உடைத்துவிடக்
கூடாது, சிதறடித்து விடக்கூடாது என்ற கவலையில்
முன் பின் தெரியாத ஒருவனுக்குக் கழுத்தை நீட்டி
விட்டு அவனே சகலமும் எனக் கடல்தாண்டி
வந்தவளை, அவன் வரவேற்று வாழவைத்த விதம்
இருக்கிறதே..!

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


62 வாழப் பிற்ந்தவள்
நீலத்தின் நெஞ்சில்தான் எத்தனை எத்தனை
அடிகள். அதைத் தாங்கி அவள் எழுந்து வந்த
நிலைமைதான் எத்தளை கொடுமையானது.
இன்று சொந்தமாக காரும் காரிலே போனும்
இன்ன பிற. வசதிகளும் சொந்தமாய் ஆடம்பர
அடுக்குமாடி வீடும், இவைகளை தன் உடமை
யாக்கிக் கொள்ளவும் இந்த மண்ணில் உரிமையுள்ள
பெண்ணாக வாழவும் அவள் கொடுக்க விலைதான்
என்ன?
பார்க்க ஆள் அழகாக இருக்கிறான். வசதி
படைத்தவனாகவும் படித்தவனாகவும் தெரிகிறான்
என்ற காரணத்தினால் மட்டுமே அவனை அவளுக்
குப் பொருத்தமானவனாக நினைத்து தாரை
வார்த்துவிட்ட அப்பா மற்ற எதுவுமே பொருந்தாத
நிலையில் அவள் வாழ்வு பாழாகிப் போனதை அறிய
வழியே இல்லாமல் போனது.
தனக்கு வரவேண்டிய மனைவி படித்தவளாக,
கலையார்வம் மிக்கவளாக, குடும்பப் பாங்குடைய
வளாக, எல்லோரிடமும் சகஜமாய்ப் பழகும் சிநேக
பாவமுள்ள வளாக இருக்கவேண்டும் என்று திரும்பத்
திரும்பச் சொன்னவன் இங்கே அதற்கு நேர்மாறாக
நடந்து கொள்வது அவளுக்குப் புரியாத புதிராகவே
இருந்தது. எதையும் விளங்கிக் கொள்ள முடியாத
வளாய் அவள் தவித்துக் கொண்டிருந்தாள் முதல்
நாள் இரவு பெற்ற அனுபவம் நினைக்க நினைக்க
நெஞ்சை பிளப்பது போல் இருந்தது. திருமணமாகாத
இளைஞனைப் போல் நடித்த தன் வாழ்க்கையைப்
பாழாக்கிவிட்ட அவனை எப்படி பழி தீர்ப்பது!

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ் செல்வம் 63
எப்படிப் போராடி ஜெயிப்பது.. யாருமே அறிமுகம்
இல்லாத இந்த மண்ணில் எப்படி வாழ்நாளைக்
கழிப்பது?
அவள் தலையே வெடித்து விடும்போல்
இருந்தது. வேதனையும் எமாற்றமும் ஒரே நேரத்தில்
அவளைத் தாக்க 'அப்பா' என்று அலறுகிறாள்
உடல் நிலைதடுமாறிப் படிகளில் உருண்டுபோய்க்
கீழே விழுகிறாள். கீழே அவன் அதிர்ச்சியுடன்
ஓடிவந்து அவளைத் தூக்கி சோபாவில் படுக்க வைக்க
அவன் மனைவி தண்ணீர் கொண்டுவந்து முகத்தில்
தெளிக்கிறாள். மூர்ச்சையாகிக் கிடந்த நீலம் மெல்ல
கண் விழிக்கிறாள். இருவரையும் ஒருசேரப்
பார்த்ததும் மறுபடியும் அதிர்ச்சி மேலிட மயங்கி
விழுகிறாள் இருவரும் பயந்து போகின்றர்.
அவசர அவசரமாய் டாக்டருக்குப் போன்
செய்து வரவழைத்தான். அவர்வந்து சோதித்து மருந்து
கொடுத்து விட்டு உடல் சோர்வை அகற்ற ஒரு
ஊசியும் போட்டுவிட்டுச் சென்றார் சோபாவிலேயே
படுத்துறங்கியவளைக் காலையில் அந்த வீட்டுக்
குழந்தைகள் சீண்டி எழுப்பின. பள்ளிச் சீருடையுடன்
அழகாய், துருதுருவென்று பார்த்துக்கொண்டிருக்கும்
அவர்களைப் பார்த்ததும் மனதில் ஓர் மகிழ்ச்சி
பிறக்கிறது. கைகளைத் தொட்டுப் பிடித்துக்
கொண்டாள் கன்னத்தைக் தடவினாள் அவர்களும்
சிரித்தார்கள். அவளைக் தொட்டுப் பார்த்துக்
கொண்டிருந்தபோது பள்ளிக்கூட பஸ் வந்து நின்றது.
குழந்தைகள் அவள் கன்னத்தில் இச் என்று முத்த
மிட்டுவிட்டு ஒடிப்போய் அதில் ஏறிக்
கொண்டார்கள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


64 வாழப் பிறந்தவள்
அந்த இனிமையான இதழ்களின் அழுத்தம்
குறைந்துவிடாமல் இருக்க இரண்டு கைகளையும்
வைத்துக் கன்னத்தை மூடிக்கொண்டாள். எவ்வளவு
நேரம் அப்படி உட்காந்திருந்தாளோ அது
அவளுக்கே தெரியாது. எதிரில் இருந்த மேசையில்
சூடான காபியை வைத்துவிட்டு தோளில்
உரிமையுடன் கை வைத்து,
'இதைக் குடிச்சிட்டுப் போய் குளி...! பிரமை
பிடிச்சமாதிரி உட்கார்ந்தே இருந்தா பிரச்னை தீர்ந்து
போகாது. புத்தியப் பயன்படுத்தத் தெரியனும்.
அபத்தான் உருப்பட முடியும்! பார்த்தா
பொண்ணாத் தெரியறே! ஆனா இப்படி ஒரு
பாழுங்கிணத்தில் விழுந்துட்டீயோம்மா' என்று
பரிவுடன் கூறும் அந்தப் பெண்ணையே
வினாடிகள் உற்றுப் பார்க்கிறாள். வயதில் அவளை
விட மூத்தவளாகவும், அந்தக் குழந்தைகளின் தாயா
கவும், அவனது மனைவியாகவும் இருக்கின்ற அந்தப்
பெண் இவளிடம் பரிவு காட்டக் காரணம்தான்
என்ன?
'அக்கா!' தீனமாய் வெளிவருகிறது நீலத்தின்
குரல்.
'என்னம்மா.. என்ன வேணும்!' தாய்மையின்
பரிவாய்
'நீங்க நெஜமாவே அவுருக்கு மனைவிதானா...!
இதுங்கள்லாம் அவரோட பிள்ளைங்கதானா...?'
அமுதுகொண்டே கேட்கிறாள் நீலம்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 65
எதிரே நின்றவளின் இதயம் மெழுகாகி
அவளைத் தன்னோடு சேர்த்துக்கொள்கிறாள்.
'தங்கச்சி... இவன் மனுஷனே இல்லம்மா...
இவனுக்கு நான்தான் முதல் மனைவி. ஆனா எனக்கு
அப்புறமா இன்னொரு பெண்ணைக் கட்டிகிட்டு
வந்தான். இவன் படுத்தின பாட்டுல அந்தப்
பொண்ணு இன்னொருத்தனோட ஓடிப் பேச்சு...
பணத்தாசை புடிச்சவன்மா இவன்! உன்னோட
அழகை விலையாக்கத்தான் உனக்குத் தாலி கட்டிக்
கொண்டாங்ந்திருக்கான். நீ இதுவரைக்கும் ஏமாந்தது
போதும்; இனிமேலும் ஏமாந்துடாதே... உன்னை
வெச்சி புதுசா ப்ளான் பண்றான்.. கவனமா இரு
சொல்லிவிட்டு அவள் முதுகில் தட்டிக்
கொடுத்துவிட்டு உள்ளே போனாள்.கொஞ்ச
நோரத்தில் குசினியில் பாத்திரங்கள் உருண்டன.
அவளது ராஜாங்கம் தொடங்கிவிட்டதை அது
எதிரொலித்தது அந்தப் பெண் சொல்லிச் சென்ற
வார்த்தைகளுடன் முதல் நாள் களைப்பு பசி,
அதிர்ச்சி அத்தனையும் சேர்ந்து தலையில் ஓர்வித
கனத்தை எற்படுத்தி லேசாய் வலியையும்
உணடாக்கியது.
நெற்றியில் கைவைத்தவாறு எழுத்து மேலே
செல்ல முயன்றாள். இன்னும் மயக்கம் முழுமையாய்
கலையாமல் தொல்லை கொடுத்தது. மூன்று நான்கு
படிகளைத் தாண்டி இருப்பாள். உடம்பு துவள
ஆரம்பித்தது. மறுபடியும் தரையில் விழப்போகும்
தருணம். ஓடிவந்து அவன் அவளைத் தாங்கிப்
பிடித்துக்கொண்டான். கையில் குழந்தை போல்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


66 வாழப் பிறந்தவள்
அள்ளிப் போப் படுக்கையில் சாய்த்து அவள்
நெற்றியில் அழுத்தமாய் முரட்டுத்தனமாய் ஒரு
முத்தமிட்டான் வெறுப்புடன் நெற்றியைத்
துடைத்தவள் அவன் மீது படிந்திருந்த மேல்நாட்டுச்
சென்ட்டின் மணம் தாளாமல் மூக்கைக் சுளித்தாள்.
அருகிலேயே அமர்ந்தான். மெல்ல சுந்தலை
நீவி விட்டான். கையை எடுத்துத் தன்
வைத்துக் கொண்டான். அவள் முகத்தருகே குனிந்து
பேசினான்.
'நீலம்.. நீலம்மா.. நீ எவ்வளவு அழகான
பொண்ணு! உனக்கிருக்கிற அழகோட மதிப்பு
உனக்குத் தெரிய வேணாம்... இந்த வயசில அதுக்கு
நீ மரியாதை கொடுத்துப் பாதுகாக்கலோன்னா
தேவைப்படறப்ப அது நமக்குக் கிடைக்காமல்
போயிடும்.'
அவள் நெருப்பாப் அவனைப் பார்த்தாள்
'பார்க்காதே நீலம்.. அப்படிப் பார்க்காதே.. உங்க
அப்பாவும் அம்மாவும் உன்னை எனக்காகவே
ஓவியமா வளர்த்து கொடுத்திருக்காங்க.. காவியம்
பேசற இந்தக் கண்ணால இவ்வளவு கோபமா
பேசலாமா! இங்கே காதல் பேசணும்.. கவிதை
பேசணும்.'
வக்கிரமாய் அவளது இரண்டு கன்னங்
களையும் விரல்களால் அழுத்தினான். முற்றிய
மாதுளம்பழமாய்ச் சிவந்து கன்றிப் போது கன்னம்.
ஆத்திரமும் அவமானமும் பிடுங்கித் தின்ன
அவள் படுக்கையிலிருந்து எழுகிறாள். அவள் எழுந்து
கொள்ள வசதியாய் அவன் நகர்த்துகொண்டான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 67
'இங்கே பாரு நீலம்! உன்னோட அழகும்
அறிவும் ஆடல் கலையும்தான் எனக்கு வேணும். இந்த
உடம்பை நான் தொடவே மாட்டேன். இது எனக்குப்
பணம் காய்க்கும் கற்பக விருட்சம்! இந்தக் கற்பக
விருட்சம் எப்பவும் செழிப்பாக இருக்கணும். பட்டினி
போட்டுக் காயப் போட்டுடாதே! வகை வகையா
சாப்பாடு வரும்... சாப்பிடு.'
'விதம் விதமா ஆடை அணிகள்
வரும்... விருப்பம் போல
'கண்ணுல எப்பவும் கவிதைகள் நெறைஞ்சி
ருக்கணும். உதட்டில் சிரிப்பு எந்த நேரமும் ஓடி
விளையாடணும் நீ அழுது நான் பார்க்கக் கூடாது.
கட்டிலில் இருந்து எழுந்து நின்று அவளுக்கு
அறிவுரை வழங்கியவன் விருட்டென்று வெளியேறி
னான். சில நிமிடங்களின் திரும்பி வந்தான் அவளிடம்
கொத்துச் சாவி ஒன்றை நீட்டினான்.
இதோ இங்கே இருக்கிற அலமாரியோட சாவி
இது! நீ எப்ப வேணுமின்னாலும் திறந்து எதை
வேணுமின்னாலும் எடுத்துக்கலாம்.
அவள் முன் வீசிவிட்டுப் போய்விட்டான்.
அவள் நீண்ட நேரம் செயலற்று உட்கார்ந்திருந்தாள்
நெஞ்சு நிறைய பீதியும் கலவரமும் சேர்ந்து
கொண்ட அவனை நினைக்கும்பொழுது உடல்
நடுங்கியது.
'புத்தியைப் பயன்படுத்தினா முடியும்' என்ற
அந்தப் பெண்ணின் வார்த்தை அப்போதைக்கு வேத
வாக்கா அமைந்து அவளை ஆறுதல்படுத்தியது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


68 வாழப் பிறந்தவள்
எழுத்துபோய் அலமாரியைத் திறந்தாள்
கண்கள் மலைத்தன உட்புறத் தட்டுகளில்
கண்னைப் பறிக்கும் வைர நகைகளும்,
பட்டுப்புடவைகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
வைத்த கண் வாங்காமல் வைத்த கையை எடுக்காமல்
சிலையாய் நின்றாள் அவள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ் செல்வம் 69
8

'புத்தியிருந்தா பொழைக்சிக்கலாம்' என்று


சொன்ன அந்தப் பெண் மறுபடியும் அவளிடம்
வரவே இல்லை. நீலாம்பரி அலமாரியில் நிரம்பி
வழிந்த ஒவ்வொரு பொருளையும் அள்ளிப்
பார்த்தாள்.
புடவைகளும் நகைகளும் பெண்கள் விரும்பி
வாங்கி அணிந்தவையாய்த் தெரிந்தன. புடவை
களுக்கான ரவிக்கைகள், உள்பாவாடைகள் கூட
அளவோடும் பொருத்தமானவைகளாகவும் இருப்பது
அவளுக்கு வியப்பைத் தந்தது. புடவைகளை எடுத்துப்
பிரித்தபோது மட்டும் அவற்றில் சில மாறுதல்களைக்
கண்டான் சில புடவைகளின் வீசிய நறுமணம்
அடுத்த புடவைகளில் மாறுபட்டு வீசியது அதைப்
போலவே ரவிக்கைகளின் அளவுகளும் கூடக் குறையத்
தெரிந்தன நீலாம்பரி அறிவுக்கு வேலை கொடுக்க
ஆரம்பித்தாள்.
நிதானமாக நகைகளைப் பிரித்தாள் டிசைன்
களை ஒன்றுபடுத்திப் பார்த்தாள் அங்கேயும் மாற்றம்
கண்டாள் அவற்றை அணிந்திருந்த பெண் ஒருத்தி
அல்ல. அவர்கள் இருவர் அல்லது அதற்கும்
மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று தெளிவு
படுத்திக் கொண்டாள்.
'இவன் பொல்லாதவன், என்னை மட்டு
மில்லே...! இன்னும் பெண்ணுங்கள இவன்
கொண்டுவந்தான்' என்று அந்தப் பெண் சொன்ன

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


70 வாழப் பிறந்தவள்
சொல் நினைவுக்கு வருகிறது. அவனது அயோக்கியத்
தனம் புரிகிறது. திருமணம் என்ற பெயரால் பல
பெண்களின் வாழ்வைக் கெடுத்தவன் என்பதும்
புரிகிறது.
நல்லவேளையா அவன் இதுவரை அலங்
கோலப்படுத்தாமல் இருந்தான் அதுவே தான் செய்த
தர்மம் என்று திருப்திப் பட்டுக் கொண்டவளாய்
அந்த அலமாரியைத் தன்னால் முடிந்தவரை ஆராய்ந்
தாள். பல போட்டோ ஆல்பங்கள் கிடைத்தன.
மூன்று திருமண ஆல்பங்கள்! அனைத்திலும்
மணமகன் அவன்தான். ஆனால் மணப் பெண்கள்
மாறியிருந்தார்கள் வருடங்களையும் குறித்திருந்தான்.
முதல் மனைவியாகப் படத்தில் நின்ற பெண்தான்
விட்டில் இருப்பவள் என்றும் தெரிந்தது. அடுத்
தடுத்து கண்ட பெண்கள் நிறத்திலும் வயதிலும்
மூத்தவளைவிட பன்மடங்கு மாறுபட்டிருந்தார்கள்
சற்று முன்னால் கண்ட புடவை நகைகள் அவர்கள்
அணிந்தவை என்பது உறுதியானது நீலாம்பரி
முடிவுக்கு வந்தாள். அவனிடம் தன் குடும்பம்
ஏமாந்தது போல் அவனை எப்படியும் ஏமாற்றிப் பழி
தீர்க்க முடிவு செய்தாள்.
கையிலிருந்தவற்றை அலமாரியில் வைத்து
விட்டுக் கட்டிலில் வந்து உட்கார்ந்துகொண்டாள்.
திடீரென்று வலிப்பு வந்தது போல் கத்த ஆரம்பித்
தாள் கீழேயிருந்து அவனது மனைவி ஓடிவந்தாள்
யார் வந்தும் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு
அவள் துடித்தாள். அந்தப் பெண் செய்வதறியாது
தவித்து அவனுக்குப் போன் செய்து அழைத்தாள்
அவனும் ஓடிவந்தான். கையில் கிடைத்தவற்றை
எல்லாம் வாரியிறைத்தாள் தடுமாறிப் போனான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 71
அவனது தவிப்பும் பதட்டமும் அவளது
ஆர்ப்பாட்டமும் கண்ட அவளின் மனைவி உள்ளே
ஓடினாள். சற்று நேரத்தில் உள்ளேயிருந்த வயதான
ஒரு பெண்மணியுடன் திரும்பிவந்தாள். அந்த வயதான
பெண்மணியைக் கண்டதும் நீலாம்பரி சிலையாக
நின்றாள். அவர் அவளிடம் நெருங்கித் தன் கைகளால்
அவளைப் பிடித்ததும் அவள் அவரின் தோளில்
சாய்ந்துகொண்டாள் உடம்பு துவள ஆரம்பித்தது.
அமைதியாய்த் தரையில் உட்கார்ந்த அந்த அம்மா,
அவளைத் தன் மடியில் சாய்த்துக்கொண்டாள்.
'போடா.. போ.. உன்னோடஆட்டத்துக்
கெல்லாம் அழிவு காலம் நெருங்கி வந்தாச்சு..
அநியாயமா அடுத்தவன் புள்ளைங்கள பரிதவிக்க
விட்ட உன்னோட விளையாட்டுக்கு முடிவு கட்ட
வேண்டிய காலம் நெருங்கிடுச்சி.. பேடா.. போ..
பேடா வெளியே’
அவன் அந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தும்
குரலைக் கேட்டும் நடுங்கினான் மறு வார்த்தைப்
பேசாமல் கீழே இறங்கிப் போனான். கொஞ்ச
நேரத்தில் அவனுடைய மோட்டர் சைக்கிள்
வெளியான சத்தம் கேட்டது.
மடியில் கவிழ்ந்து கிடந்த நீலாம்பரி கண் திறந்து
பார்த்தாள். அவளையும் அறியாமல் கண்ணில் நீர்
பெருகியது. அம்மா என்று அந்த மாதைக் கட்டிக்
கொண்டாள். தன் தாயைக் கட்டிப் பிடித்துக்
கொண்டது போன்ற ஆறுதல்.
'அழாதேம்மா... என்னோட வயித்தில இப்படி
ஒரு கேவலம் பிள்ளையா வந்து பொறக்கும்னு நான்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


72 வாழப் பிறந்தவள்
நினைச்சும் பார்க்கலே... ஆட்டம் கத்துக்க வர்றேன்னு
இவன்கிட்ட வந்து சேர்ற சில தறுதலை பசங்களும்
குட்டிகளும் சேர்ந்து இவனையும் கெடுத்து
இவனோட குடும்பத்தையும் கெடுத்துகிட்டு
இருக்கிறானுங்க.. ஒரு பாவமும் அறியாத அப்பாவிப்
பெண்ணுங்கள ஆசை வார்த்தைப் பேசிக் காதலிச்சுக்
கல்யாணம் பண்ணி...'
அவர் பேச்சை நிறுத்தினார். நீலாம்பரி
ஆர்வமும் பரபரப்பாய் அவர் முகத்தைப் பார்த்தாள்
மேலே ஏதும் பேசமுடியாதவராய் அவளது
முகத்தைத் தன் கையால் தடவிவிட்டு...
'மகளே.... உனக்கு என் தலையெழுத்து இப்படி
ஆச்சுன்னு எனக்குத் தெரியலியோம்மா. ஒண்ணு
மில்லாத வீட்டுப் பிள்ளையா இருந்தா பணத்துக்கு
ஆசைப்பட்டு உன்னை அக்கரை மாப்பிள்ளைக்குக்
கொடுத்துட்டாங்கன்னு சொல்லலாம், ஆனா நீ
வசதியான குடும்பத்துப் பெண்ணா இருக்கியே..
உன்னை இப்படிப் பாழுங் கிணத்துல தள்ளி விட
உன்னைப் பெத்தவங்களுக்கு எப்படிம்மா மனசு
வந்துச்சு..'
நீலாம்பரி திகைத்துப் போனாள். என்ன இது
என்று வியந்து பார்த்தாள் தன்னைப் பற்றிக்
கவலைப்படுவதும் சொல்ல வந்த விஷயத்தைப்
பாதியில் நிறுத்தியதும் ஏதோ பயங்கரம் மறைக்கப்
படுகிறது அல்லது நிகழப் போகிறது என்பது
மட்டும் அவளுக்குப் புரிந்து. அமைதியாள்.
'ஏன் அமைதியாயிட்டே.. உனக்குப் பேசவே
வராதா... பல பாஷை பேசக்கூடிய மண்ணில

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 73
பொறந்த பொண்ணுங்களையே பந்தாடின பயலோட
கையில வந்து மாட்டியிருக்கியே... நீ எப்படிம்மா
தப்பிப் பொழக்கப் போறே....'
நீலாம்பரி எச்சரிக்கையானாள். ஏதோ வழி
திறக்கப் போகும் அடையாளம் தென்படுவது புரிந்தது.
மனம் பொறுமை பொறுமை என்று அடித்துக்
கொண்டது. எதுவும் புரியாதது போல் நடிக்க
ஆரம்பித்தாள். அழுகை பிறீட்டது தேம்பல்
அதிகமானது.
'அழாதே பெண்னே... அழாதே... அழுதவங்க
எப்பவும் காரியம் பண்ணினதா வரலாறு
கெடையாது. புத்தியைக் திடப்படுத்தித் துணிஞ்சு
நின்னா, நீயும் பொழைச்சிக்கலாம்.'
அம் மாதின் முகத்தை ஆதாரவாய்ப்
பார்த்தாள்.
'அடம்பிடிக்காம, அழுது புலம்பாம நான்
சொல்றபடியெல்லாம் நீ நடந்தா உன்னோட
ஊருக்கே நான் உன்னை அனுப்பி வெப்பேன்; நான்
சொல்றதைக் கேட்பியா....?
நீலாம்பரி தலையாட்டினாள் இருவரும்
சமையலறைக்குப் போனார்கள். அவன் மனைவி
இருவருக்கும் சூடான பானம் கொடுத்தாள்.
அவளைப் பார்த்து.
'கமலாட்சி உன்னோட புருஷனுக்குப் போன்
பண்ணி இவ தூங்கிட்டான்னு சொல்லு' என்று
கூறிவிட்டு நீலாம்பரியுடன் மாடியறைக்கு அந்த மாது

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


74 வாழப் பிறந்தவன்
போனார். கதவைச் சாத்தித் தாளிட்டுக்கொண்டு
அவளைக் தன்னருகில் வைத்துக்கொண்டு அவளைப்
பற்றி முழுமையா விசாரித்தார். அந்த சின்னப்
பொண்ணுக்குத் தன் பிள்ளையால் நேர்ந்துவிட்ட,
நேரவிருக்கின்ற இன்னல்களை நினைக்க நினைக்க
அவருக்கும் அழுகை வந்தது. புடவைத்தலைப்பால்
கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
'நானும் உன்னை மாதிரிதான் இந்த ஊருக்கு
அந்த நாட்லேர்ந்து வந்தேன்மா. ஆனா என் புருஷன்
அதான் இவனோட அப்பா தங்கான மனுஷன்.
இங்கே வந்து வேலை செஞ்சி காசு சேத்து என்னை
வந்து காலிகட்டிக் கொண்டாந்தாரு. அப்பவெல்லாம்
தண்ணி கப்பதான். பினாங்கு வந்து சேர்ந்ததும்
எங்கள எல்லாம் நடுகடல்ல இருக்கிற இன்னொரு
தீவுல வெச்சிருந்தாங்க. கொத்துவியாதிக்குப் பயந்து
கொஞ்சநாள் அங்கே வெச்சிருந்து அப்புறந்தான் கீழ
இறக்குவாங்க. பொறமலைன்னு அந்த இடத்துக்குப்
பேரு.'
'என்னோட வூட்டுக்காரரு அங்கேயே வேலை
பார்த்தாரும்மா.. அங்கோதான் என்னோட வாழ்க்கை
ஆரம்பிச்சுது. அப்புறமா ரிட்டையர் ஆனதுக்கப்
புறந்தான் இங்கே வந்தோம் இவன் மட்டும்தான்
புள்ளன்னு நெனைச்சிடாதே... இன்னும் மூணு
பசங்க; எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. ஆனா
யாரும் என்னை நெனைக்கிறதில்லே... அவரு
போனதோட என் சந்தோஷமும் போச்சு...'
'இருந்த சொத்தை நாலா பங்கு போட்டுகிட்டு
அவனவன் பாட்டுக்குப் போய்ட்டான் இவன்தான்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 75
கடைசிப் பையன். தனியா இருக்கானேன்னு
கூட நான் தங்கினேன். தறுதலையாய்ப்
போயிருந்தா
கூட நான் கவலைப்பட மாட்டேன். தான்
தோன்றிப்
பயலாப் போய்ட்டானேன்னுதான் கவலையா
இருக்கு.'
'இவனை யாரும் கண்டிக்க முடியாது
தன்னோட இஷ்டத்துக்கு ஆடுறான்மா...நல்ல
சம்பாத்யம்! இவன் வெச்சதே சட்டமா இருக்கு.
செய்த அடாவடித்தனத்தை நான் கண்டுக்கக்
கூடாதுன்னு என்னை வீட்டுக்குப் பின்புறத்தல
அடைச்சி வெச்சிருக்கான். இவ என்னோட தம்பி மக...
இவனுக்கு வாக்கப்பட்டு வந்து இதுவரைக்கும்
அவனோட எடுபிடியாத்தான் இருக்கா.. சொந்த
மாமன் மக, அதனாலத்தான் இவள எதுவும் செய்ய
முடியல அவனால. ஆனா அதுக்கப்புறமா
ரெண்டுபேரைக் கட்டிக்கிட்டான். அந்தப்
பெண்ணுங்க எங்கே போனாங்க, என்ன ஆனாங்
கன்னு தெரியல... கேட்டா பேயா கந்துவான். உன்னை
எப்படித்தான் கண்டுபிடிச்சி கல்யாணம்
பண்ணிகிட்டான்னு தெரியலேம்மா... உன்னோட
அழகு உன்னோட நாட்டியம்.. இதுதான் இப்ப
அவனுக்கு கெடைச்சிருக்கிற சீதனம். இதை
வெச்சித்தான் அவன் பொழைக்கப் பார்க்கறான்.
'நீ நெனைச்சா அமைதியா, நல்லபடியா
அவனுக்கு அடங்கிப் போனவளாட்டம் நடந்து இந்த
நாட்டியப் பள்ளியை நடத்து. அவன் சந்தோஷமா
காசை எண்ணிகிட்டிருப்பான். எவன் காலைப்
புடிச்சாச்சும் நான் உன்னை உன்னோட ஊருக்கு
அனுப்பி வெச்சிடுறேன்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


76 வாழப் பிறந்தவள்

நீண்ட தாலாட்டில் தன்னை மறந்து குழந்தை


போல்
தீடிரென்று ஒலி கேட்டுக் கண்விழிப்பது
கடைசி வார்த்தையைக் கேட்டு சட் ட ென நிமிர்ந்தாள்.
கண்கள் ஆர்வமாய் மலர்ந்தன
'நெஜமாவா... நெஜாவாம்மா... நீங்க என்னை
ஊருக்கு அனுப்பிடுவிங்களா..உண்மையாவா?'
தன் வலதுகையை நீட்டினாள் அந்த அம்மா
அவள் கையைப் பிடித்து இறுக்கமாய் சத்தியம்
செய்து கொடுக்கிறார்.
நாளைக் காலையிலேர்ந்து நீ புதுமனுஷியா
நடந்துக்கணும். அவனே அசந்து போற அளவுக்கு
உன்னோட பழக்க வழக்கம் இருக்கணும். ஒரு மாசம்
பல்லைக் கடிச்சுகிட்டு நாளை ஒட்டிடு.
அவர் போய் விட்டார். நீலாம்பரிக்கு அந்த
வீடு முழுவதும் ஓடி ஆடவேண்டும் போல் இருந்தது
விடுவிடுவென குளியலறைக்குள் ஓடினாள் ஷவரைத்
திறந்துவிட்டுக் களைப்புத் தீரக் குளித்தாள் சுத்தமான
கொண்டாள்
ஆடையை எடுத்து உடுத்திக்
கட்டிலில் உட்காந்து கண்ணை மூடிச் சிறிதுநேரம்
அமைதியாய் இருந்தாள் பின் எழுந்து போய்க்
போய்ப்
கதவைச் சாத்தித் தாளிட்டாள் படுகையில்
படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
பொழுது புலர்ந்தது அந்த விட்டில் புதிய
களைகட்ட ஆரம்பித்தது. எப்பொழுதும் இல்லாத
அதிசயமாய் அவன் அமைதியாய் வீட்டில் நடந்து
கொண்டிருந்தான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 77
9

நாராஜன் இப்போதெல்லாம் வெகு


சுறுசுறுப்புடன் இயங்கினான். வேலைக்குப் போவதும்
நேரத்தோடு வீட்டுக்கு வருவதும் நடன வகுப்பு
மாணவ மாணவிகளைக் கவனிப்பதிலும் தீவிரம்
காட்டினான்.
வெறும் சினிமாப்பட நடனக் காட்சிகளும்.
தானாகவே கற்பனை செய்துகொண்டு தயாரித்த
நடனங்களும் மட்டுமே சொல்லிக் கொடுத்துக்
கொண்டிருந்தவன், இப்போது நீலாம்பரியின் புதிய
புதிய நடன அமைப்பில் அந்து போனான்
கலைக்களஞ்சியமான தஞ்சை மண்ணிலே
பிறந்து வளர்ந்து கல்வியையும் கலைகளையும்
ஒருங்கே கற்ற காரணத்தினால் அவளது கலைபக்தி.
அளவு கடந்திருந்தது ஆண்டவனுக்கு மட்டுமே
அர்ப்பணிக்க வேண்டி அப்பாவின் ஆசைக்காக
அவள் கற்றுக்கொண்ட பரதம் இப்போது அவளை
ஆபத்திவிருந்து காப்பாற்றும் ஒர் துடுப்பாய்
அமைந்து போனது அவளுக்கே ஆச்சர்யமாகவும்
நிம்மதியாகவும் இருந்தது.
அப்பாவை நினைத்துக் கொண்டாள்.
மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டாள் அவளின்
மாமியார் சொன்ன வார்த்தைகளை மட்டுமே
உத்திரவாதமாய் நம்பி ஒவ்வொரு நிமிடத்தையும்
கழித்துக் கொண்டிருந்தாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


78 வாழப் பிறந்தவள்
நடன வகுப்பு மாணவிகளின் கலை நிகழ்ச்சி
களையே படைத்து கொண்டிருந்த நாகாராஜ் தனது
சிந்தனையில் புதிய ஏற்பாடொன்றையும் திட்ட
மிட்டான். தங்கச்சிலையொன்றுதரையிலே தவழ்வது
போல் அவள் நடந்து வரும் அழகிலும் கண் மூடிக்
கண் திறப்பதற்குள் அவள். கண்பார்வை சொல்லும்
ஆயிரமாயிரம் கவிதைகளும் உண்டோ இல்லையோ
என ஒவ்வொரு இதயமும் எங்கித் தவிக்கும் இடையும்
அவனுக்கு அந்த ஏற்பாட்டைச் செய்யச் சொல்லிக்
கெஞ்சின நண்பர்களுடன் யோசித்து மாநிலத்தின்
முக்கிய தங்கும் விடுதியொன்றில் அந்த ஏற்பாட்டுக்கு
நாளையும் இடத்தையும் பதிவு செய்தான்
அவன் ஏற்பாட்டைக் கேட்டு முதலில் நீலாம்பரி
மறுத்தாலும் மறுகணமே ஒத்துக்கொண்டாள். எந்த
வகையிலும் தன் போக்கில் அவனக்குச் சந்தேகம்
ஏற்பட்டு விடக்கூடாது என்று கவனமாய் இருந்தாள்.
நாகராஜன் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தான்.
மாநிலம் முழுவதும் அவளது வண்ண வண்ண
போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிகை விளம்
பரங்கள் துண்டுப் பிரசுரங்கள் ஏராளமாய் விநியோ
கிக்கப்பட்டன. அரங்கேற்ற நிகழ்ச்சியாகவும் நிதி
திரட்டும் நிகழ்ச்சியாகவும் அந்த நடனநிகழ்ச்சி
அமைந்து முழு நிகழ்ச்சியையும் நீலாம்பரியே
வழங்குவதாய் ஏற்பாடு.
முக்கிய இயக்கங்கள், சங்கங்கள், அரசியல்
பிரமுகர்கள், முக்கியஸ்தர்களின் வீடு தேடிப் போய்
அழைப்பைக் கொடுத்தான் நாகராஜ் நிகழ்ச்சி
நடைபெற இன்னும் முன்று தினங்களே இருந்தன

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 79
அன்றைய வகுப்பு முடிந்த பின் வீட்டின் மாடியில்
இருக்கும் அகன்ற பால்கனியில் நின்று புதிய சில
முத்திரைகளையும் பாவங்களையும் பயிற்சி செய்து
கொண்டிருந்த நீலாம்பரியிடம் வந்தான் நாகராஜ்.
அவன் வந்தது தெரிந்தும் தெரியாதவளாய்
நாற்காலியில் அமர்ந்தவாறு கால் பாதத்தைக்
கவனித்துக் கொண்டிருந்தவளிடம் நெருங்கி, அவள்
சற்றம் எதிர்பாராத நிலையில் அவளது பாதத்தை
வலது கையால் தூக்கி இச்சென்று ஒரு முத்தம்
பதித்தான். அவள் தடுமாறிப்போனாள் அவள்முன்
மண்டியிட்டு உட்கார்ந்திருந்தவன்,
'என் தேவிக்கு இன்னுமா என்மீது கோபம்
தணியவில்லை. இந்த ஒரு முத்தத்திலேயே இவ்வளவு
தடுமாற்றம் என்றால், நாட்டிய அரங்கேற்றம்
முடிந்தபின் நடைபெறப் போகும் நமது
அரங்கேற்றத்தில் நான் அள்ளி வழங்கப்போகும் அந்த
முத்தமழையில் இந்தப் பொன்மேனி என்ன
ஆகுமாம்...!'
அவள் அவனை அற்பமாய்ப் பார்த்தாள்.
மனதுக்குள் கனல் தகிக்க ஆரம்பித்தது.
'அற்பநாயே... என் நிழலைக்கூட நீ தீண்ட
முடியாதடா... கனவா காணுகிறாய் இரு உன்
கண்ணிலேயே நான் தீ வைக்கின்றேன் என்று கறுவிக்
கொண்டாள்.
'என்ன செய்யறது நீலா... இந்த அழகுமேனியை
அணுஅனுவா அங்குலம் அங்குலமா நான் மட்டுமே
ரசிக்கணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா எனக்குச்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


80 வாழப் பிறந்தவள்

சேரவேண்டிய ஐஸ்வர்யத்தை எல்லாம் இந்த


உடம்பில கொட்டி வெச்சிட்டானே கடவுள்...
அதனாலத்தான் அதையே வெச்சி நான் பொழைக்க
வேண்டியிருக்கு.
'எத்தினியோ பேரு அழகான பொஞ்சாதி
என்னென்னமோ
இருந்திட்டா அவள வெச்சி
பண்றான்... நான் இப்ப அப்படியெல்லாம் போக
மாட்டேன் நீலி இப்படியே. இப்படியே வெச்சி நான்
பணம் பண்ணிக்காட்றேன் பாரேன். சொல்லிக்
கொண்டே அவளைத் தொட வந்தவனின் கையைத்
தட்டிவிட்டு உள்ளே போய் குளியலறைக்குள் புகுந்து
கொண்டாள் அவள் மணமாகி இத்தனை நாட்க
ளாகியும் அவளை நெருங்க முடியாது தள்ளியே
நின்றவன் மனதில் திடீரென்று ஒர் எண்ணம் பிறந்தது.
மானசீகமாய் அவளைக் கற்பனை செய்து
கொண்டு பார்த்தான் மனதுக்குள்ளேயே ஒரு களிப்பு!
'முடியட்டும் நிகழ்ச்சி, முடிக்கிறேன் உன்னையும்’
என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அங்கிருந்து
போனான்.
அவன் போய் நீண்ட நேரம் ஆனபிறகே அவள்
உள்ளிருந்து வெளியே வந்தாள். ஒடிப்போய் கதவைத்
சாத்திவிட்டு வந்து உடுத்த ஆரம்பித்தாள்.
கட்டிலில் உட்கார்ந்தபோது, கால் பாதத்தில்
அவன் உதடுகள் பதிந்த இடம் அருவருப்பை உண்டு
பண்ணியது எழுந்து போய் டெட்டால் எடுத்து
மறுபடியும் கழுவினாள் காலை அழுத்தமாய்
துடைத்துக் கொண்டு படுக்கையில்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 81

துக்கம் வர மறுத்தது. நாளை மறுநாள் நடக்க


விருக்கும் நிகழ்ச்சியும், அதன் பின்னால் தாயகத்
திற்குப் புறப்பட்டுப் போகவிருக்கும் எண்ணமும்
சுழன்று சுழன்று வட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
நாகராஜன் இந்த மண்ணில் பிறந்த
பெண்களையே அலங்கோலப்படுத்தியவன் என்ற
அவனது தாயின் வார்த்தை அவள் நெஞ்சில் திகில்
வரவைத்தது. மனதுக்குள் தன்வீட்டுக் குல
தெய்வத்தைக் கும்பிட்டுக் கொண்டாள். தனக்கு
அவனிடமிருந்து விடுதலை கிடைத்தால் போதும்
என்று பலமுறை பிரார்த்தனை செய்து கொண்டு
கண்களை மூடினாள் எப்படியோ தூக்கம் வந்தது
துங்கிப் போனாள். ஆனால் நாகராஜ் துங்கவில்லை.
அவளது அமைதிக்குப் பின்னால் ஏதோ மர்மம்
இருக்கவேண்டும் என்று உறுதியாய் நினைத்தான்.
மனைவியிடமும் தாயிடமும் தன் சந்தேகத்தைக்
காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டான்.
கூண்டில் அடைப்பட்ட புலிபோல் அங்கும்
இங்குமாய் நடைபோட்டுக் கொண்டிருந்தவன்
கண்ணில் மேசையில் கிடந்த வார இதழ் ஒன்று
படுகிறது. சுழல்கின்ற மின்விசிறியில் பத்திரிகையின்
உட்பக்கங்கள் காற்றில் படபடக்க உள்ளே
வண்ணத்தில் மின்னிய ஒர் திரைப்படக் காட்சியில்
அவன் கண்கள் விழுகின்றன.
'குப்' பென்று கோழிக்குஞ்சைக்
பருந்துபோல் இடது கையால் அதை எடுத்துப்
படிக்கிறான். பளீரென்று வண்ணத்தில் மின்னும்
இருவரின் இறுக்கமான படமும் அதையொட்டிய

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


82 வாழப் பிறந்தவள்
செய்தியும் அவனை வியக்கவைத்தன. அந்த மன
மொத்த காதல் ஜோடி ஏதோ ஒரு விளம்பரத்திற்கு
தங்கள் உடம்பை விலைக்கு விற்ற தகவல் அவன்
மூளையின் ஒரு மூலையில் திடீரென்று ஓர் திட்டம்
முளைவிடுகிறது. உடம்பெல்லாம் புத்துணர்ச்சி
பிறக்கின்றது. பத்திரிகையில் பல்லைக் காட்டிக்
கொண்டிருந்த அந்தக் காதல் ஜோடிக்கு அழுத்தமாய்
ஒது முத்தம் கொடுத்து, தேங்க்ஸ் என்றவாறு
பத்திரிகையை மேசையில் போட்டுவிட்டு சோபாவில்
ஆனந்தமாய் சாய்கிறான். ஏதோ பிக் ஸ்வீப்பில் முதல்
பரிசைத் தட்டிவிட்ட பூரிப்பில் உள்ளம் உவகையில்
துள்ளியது.
எதிரே தூங்கிக் கொண்டிருந்த தொலைபேசி
கனவு கண்ட குழந்தையால் கிணுகினுத்தது.
ஆர்வமாய் எடுத்தான் பிரபல பத்திரிகையின் நிருபர்
ஒருவர் பேசினார் நடக்க விருக்கும் நிகழ்ச்சிக்கு
மேலும் சில சிறப்பு அழைப்புகள் வேண்டும் என்றார்.
‘சரி’ என்றவன்,
'உங்க பத்திரிக்கையிலேர்ந்து யாரு வருவாங்க
மேன். எவனாச்சும் சாவுகிராக்கி அனுப்பி வெச்சி
டாதே. உருப்படியா எழுதக்கூடிய, அதே வேளையில்
அற்புதமா படம் புடிக்கக் கூடிய கேமரா மேனையும்
அனுப்புங்க. ஒவ்வொரு அசைவையும் கேமரா
அள்ளிக்கிற மாதிரி எடுக்கணும் என்று கட்டளை
யிடுகிறான்.
எதிர் முனையில் நிருபர் நாகரீகமாய் பதில்
சொல்கிறார்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 83
'கவலைப்படாதீங்க ஸார்... நாங்க அனுப்பற
ஆள் இண்டர்நேஷனல் பத்திரிகையில ஒர்க்
பண்ணினவரு. கடவுளோட கண்ணுக்குத் தப்பி
னாலும் தப்பலாம் நம்ம சித்தார்த்தன் கேமராவுக்குத்
தப்பமுடியாது. நிகழ்ச்சிக்கப்புறமா எங்க பத்திரிகையில
வர்ற ஸ்டில்ஸ் எப்படின்னு சொல்லுங்க. உங்க
தங்கச்சியோட ஒவ்வொரு போஸும் பத்திரிக்கை
யோட ஓட்டத்தை எப்படி ஏத்தப் போவுதுன்னு
பாருங்க...'
வானத்திலே கொண்டுபோய் அங்கிருந்து
துக்கித் தரையில் வீசியவனாய் போனை வைத்தான்
அவன் நாகராஜனுக்கு அவமானத்தால் உடம்பு எரிய
ஆரம்பித்தது. திடீரென்று அவள் வயதையும் தன்
வயதையும் கணக்கிட்டுப் பார்த்தான். மனம்
கொஞ்சம் உறுத்தியது. பதினைந்து வயதா என்று
தனக்குள் கேட்டுக் கொண்டான் நரைமுடிக்குக்
கறுப்பு சாயமும், முக ஒப்பனையும் போதுமான
உடல் பாதுகாப்பும் அவனை இளமை மாறாமல்
வைத்திருந்தாலும் பிறப்புப் பத்திரமும் ஜாதகமும்
அடிக்கடி அவன் வயதைப் பத்திரப்படுத்திக் கூட்டி
வருவதை அவனால் என்ன. அவனைப் படைத்த
ஆண்டவனால் கூட மாற்றமுடியாது என்பதை
நினைத்தபோது கவலை மிகுந்தது.
சற்று முன் பாலாய் பொங்கிய சந்தோஷத்தை
பத்திரிகை நிருபர் ஒரே ஒரு வார்த்தையில் அடக்கி
விட்டுப் போனதால் உற்சாகமிழந்து போய்
மறுபடியும் சோபாவில் போய் படுத்துக்கொண்டான்.
பத்திரிகை நிருபர் சொன்ன சித்தார்த்தன் மனதில்
நின்றான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


84 வாழப் பிறந்தவள்

'இன்டர் நேஷனல் பத்திரிகைகள்ல வேலை


பார்த்தவராமே. அவனை எப்படியாவது வழிக்குக்
கொண்டு வரவேண்டும். அவனது
கண்களையும் இனிமேல் நான்தான் பயன்படுத்திக்
கொள்ளவேண்டும் இனியும் நான் சும்மா இருக்கக்
கூடாது.
மனதில் எழுந்தத் திட்டம் உடனடியாக
செயலாக்கம் பெற ஆரம்பித்தது. அந்தப் பத்திரி
கைக்குப் போன் செய்து சித்தார்த்தனைக் கேட்டான்.
அவன் பள்ளிவாசலுக்குப் போயிருப்பதாக வீட்டில்
சொன்னார்கள் வந்ததும் கூப்பிடச் சொல்லித் தனது
நம்பரைக் கொடுத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.
மறுபடியும் தலைவலிக்க ஆரம்பித்தது.
'பேரைக் கேட்டா சித்தார்த்தன்னு சொல்றான்.
வீட்ட கேட்டா பள்ளி வாசலுககுப் போய்ட்டான்னு
சொல்றாங்களே....'
'உண்மையிலேயே இவன் யாரு... இவன்தான்
அந்த ரிப்போட்டர் சொன்ன ஆளா. வேறெ
எங்காச்சும் போயிடுச்சாட...!
மீண்டும் போன் அழுதது போய் எடுத்தான்.
'குட்' ஈவின்ங் ஸார்... ஐ ஆம் சித்தார்த்தன் ஹியர்'
குரல் இனிமையோடு காதில் புகுந்தது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம்
10

அரங்கம் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்.


வண்ண ஜாலம் மின்விளக்குகளின்
காட்டும்
இடையே நாகராஜன் கம்பீரமான தோற்றத்தில் ஒலி
பெருக்கியைக் கையில் பிடித்துக் கொண்டு சிங்காரத்
தமிழில், மலாயில், ஆங்கிலத்தில் மாற்றி மாற்றி
அறிவிப்புகளைச் செய்துகொண்டும் வரவேற்புரையை
நிகழ்த்திக்கொண்டும் சகலகலா வல்லவனாய்க் காட்சி
தந்துகொண்டிருந்தான்.
மேடையிலே ஆடப்போகிறவள் நீலாம்பரியே
என்றாலும் தன்னையும் ரசிகர்களின் கண்களில்
திணித்துவிட வேண்டும் என்ற ஆசை அவனை
ஆட்டுவித்துக்கொண்டிருந்தது. இயல்பாகவே
நாகராஜனுக்கு எங்கும் நிறை பரம் பொருளாய்த்
தானே இருக்கவேண்டும் என் ற ஆசை எப்போதும்
உண்டு.
மணவீட்டுக்குப் போனால் மணமகனாகவும்
இழவு வீட்டுக்குப் போனால் பிணமாகவும் இருந்து
எல்லோருடைய பார்வையிலும் இருக்க ஆசைப்படும்
அற்பகுனம் படைத்தவன் அவன். அதே நிலையில்
தான் அறிவிப்பாளராய் ஒருவர் நியமிக்கப்
பட்டிருந்தும் வரவேற்புரை நிகழ்த்த வந்தவன் நிகழ்ச்சி
நடத்துனராக மாறிப் போயிருந்தான்.
திரைக்குப் பின்னால் நின்று கொண்டு
அவதிப்பட்டுக் கொண்டிருந்த அறிவிப்பாளர்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


86 வாழப் பிறந்தவள்
சிரமப்பட்டு அவரை உள்ளே இழுத்து அமரச்
சொல்லிவிட்டு நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
ஆடல் கலைக்கழகு தேடப் பிறந்தவள்.
ஆடாத பொற்பாவை ஆடவந்தாள்.
குரல் வளமும் இசை நயமும் கொண்ட
அறிவிப்பாளர் தன் இனிய மொழிவளத்தோடு
அறிவிக்க வானரதம் மண்ணில் இறங்க அதிலிருந்து
முழுநிலவு நடைபயில்வது போல் நீலாம்பரி
மேடையில் நடந்துவந்தாள். அவளின் கும்பிட்ட
கரங்கள் ரசிகர்களின் மனதைச் சிலிர்க்க வைக்க ஓர்
ஆனந்த வெள்ளப் பெருக்கமாய் கைதட்டல் அரங்கை
உலுக்கியது. கேமரா மேன் சித்தார்த்தன் சிலையாய்
நின்றான்.
அவளது ஒவ்வொரு பதங்களும் பாவங் களும்
அவன் கண்ணைக் குளமாக்குகின்றன. தனது 20
வருடப் புகைப்பட அனுபவத்தில் எத்தனையோ
கலைஞர்களைப் பேட்டி கண்டவன். எத்தனை
எத்தனையோ கலைநிகழ்ச்சிகளைப் படம்பிடித்து
விமர்ச்சனம் எழுதியவன். அப்போதெல்லாம் எழாத
அனுதாப உணர்வும் இரக்க உணர்வும் இவள்மேல்
எழக் காரணம் தெரியாமல் தவித்தான்.
முன்தின இரவு நாகராஜ் அவனைப் போனில்
ஒப்பந்தம் செய்து கொண்டபோது சொன்ன
வார்த்தைகள் அப்போது வியாபார ரீதியில்
சாதாரணமாய் இருந்தாலும் இப்போதுதான் அதன்
உள்ளடக்கம் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 87

'அவளை அணு அனுவாக... அங்குலம் அங்குல


மாக உன் கேமரா படம் பிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு அசைவுக்கும் உனக்கு நான் ஒரு நூறு
தருவேன்.'
வார்தையில புதைந்து கிடந்த மனவக்கிரமும்
குரோதமும் இப்போது தெரிகிறது. நிச்சயம் இவள்
அவன் தங்கையாக இருக்க முடியாது தாரமாகவும்
இருக்க முடியாது. இவன் மனைவியாக இவள்
இருந்தால் நிச்சயம் இப்படி மூன்றாவது நபரிடம்
படம் பிடிக்கச் சொல்லமாட்டான். அப்படியானால்
அவளுக்கு அவன் யார் எப்படி இவனிடம் இவள்
விலை போனாள்...
மனதுக்குள் ஒர் போராட்டம் நடந்து
கொண்டிருக்க அவளைப் பார்ப்பதையோ படம்
பிடிப்பதையோ சில நிமிடங்கள் மறந்தவன் தனது
பத்திரிகைக்காக அவளது நடன பாவங்களை படம்
பிடித்தான்.
கைவிரல்களில் மலர்ந்த தாமரையும் ஓடிய
மீனும் பாய்ந்த அம்பும். கனிவும் குழைவும் உருக்கமும்
அவனை வியக்க வைக்க அத்தனையும் அவன்
கேமராவுக்குள் பிடித்துக் கொண்டான் இறுதியாக
அவள் ஆடிக் கொண்டிருக்கையில் அவனையும்
அறியாமல் அவளது விழிகளில் மனம் லயித்தது.
அந்த அற்புதமான கண்களில் சிலநிமிடம் மனம்
வைத்தான் அடுத்த கணம் கேமராவின் விளக்கு
அந்தக் கண்களை மட்டும் பல கோணங்களில்
தொட்டுவந்தது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


88 வாழப் பிறந்தவள்
நீலாம்பரி திரைக்குள் மறைந்துவிட்டாள்.
இன்னும் கொஞ்ச நேரம் மேடைக்கு வரமாட்டாளா
என்ற ஏக்க உணர்வோடு ரசிகர்கள் திரும்பினார்கள்.
'அடுத்த புரோகிராம் எப்ப நாகா' என்று பலர்
கேட்டு அவனைத் திணறவைத்தார்கள்.
'எங்க சங்க வளர்ச்சி நிதிக்காக பாப்பா ஒரு
புரோகிராம் பண்ணிக் கொடுக்கணும். இப்பவே
அட்வான்ஸ். என்று பிரபலங்கள் அவன் கையில்
முன் பணத்தை வைத்தார்கள் பெருமையில் அவன்
அவர்களோடு கைகுலுக்கி விடை பெற்றான். நிகழ்ச்சி
அவன் எதிர்பார்த்ததைவிடப் பலமடங்கு வெற்றி
பெற்றது நண்பர்களோடு உட்கார்ந்து பேசினான்.
மறுபடியும் மறுபடியும் சூட்டோடு சூடாக
நிகழ்ச்சிகளை நாடுமுழுவதும் நடத்தலாம் என்று
நண்பர்கள் சொன்னார்கள். அவளிடம் எதையும்
சொல்லாமல். கேட்காமல் அடுத்த நிகழ்ச்சிகள்
ஏற்பாடாயின.
மாடியில் அமர்ந்திருந்தவளின் முன்பு அவ்
வாரத்தில் வெளிவந்திருந்த பத்திரிகைகளைக்
கொண்டு வந்து போட்டான் நாகராஜன்.
'அன்னிக்கு சொன்னப்ப என்னைப் பார்த்து
முறைச்சியே... இப்ப பாரு உன்னோட மாமன்
மச்சான்லாம் என்னமா உன்னைப் புகழ்ந்து
தள்ளியிருக்கான்னு.'
சொல்லி விட்டுக் கீழே போய்விட்டான் அவன்.
மனதில் ஏற்பட்ட வலியோடு கையில் ஒரு
பத்திரிகையை எடுக்கிறாள். அவளது நாட்டிய

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 89
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படமும் விமர்சனமும்
அதில் காணப்பட்டன. வெகு அழகாகவும் அருமை
யாகவும் படங்களும் விமர்சனமும் அமைந்திருந்தன.
அவளது பாவங்களை படைப்புகளை மிகமிக
உயர்வாகப் பாராட்டியிருந்தார்கள். அவளது அழகிய
கண்களை மட்டும் அட்டைப்படமாய்ப் போட்டு
வெளியாகி இருந்த வார இதழின் உட்புறத்தைப்
புரட்டுகிறாள்.
வியப்பால் கண்கள் விரிகின்றன. அவள் எதிர்
பார்க்காத படங்கள். எதிர்பாரத அளவுக்குப்
புகழுரைகள். பாராட்டுரைகள். ஆனந்தக் கண்ணிர்ப்
பெருக்குடன் படிக்கிறாள். மனதுக்குள் அப்பா வந்து
நிற்கிறார். உடம்பு சிலிர்க்கிறது.
'அப்பா.... அப்பா.... நீங்க நெனைச்ச மாதிரி
என்னை எல்லோரும் புகழ்ந்து பாராட்டியிருக்
காங்களே. நீங்க அதைப் பார்க்க வேணாமாப்பா...
இன்னிக்கே இதை நான் உங்களுக்கு அனுப்பி
வைக்கறேன்பா..'
சிறு குழந்தையாய்த் தேம்புகிறாள். கண்களில்
நீர் திரையிட்டிருக்க, கையிலிருந்த பத்திரிகையின்
விமர்சனத்தை மறுபடியும் மறுபடியும் படிக்கிறாள்.
படித்து முடித்தபின் கடைசியாய்க் காணப்பட்ட
இரண்டு வரிகளில் கண்கள் நிலைக்கின்றன.
'படமும் செய்தித் தெகுப்பும் சித்தார்த்தன்'
'யார் இவர்.... இவரால் எப்படி என் இதய
சோகத்தைக் கண்டு கொள்ள முடிந்தது. விமர்சனம்
என்றுகூட நினைக்காமல் என் கண்கள் சொன்ன

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


90 வாழப் பிறந்தவள்

சோகத்தையும் சுட்டியிருக்கிறாரே.... இவர் எனக்கு


உதவி செய்ய முன் வருவாரா... இவரை நான்
தொடர்பு கொள்ளமுடியுமா.... இறைவா எனக்கு
வழிகாட்டு என்று தனக்குள் புலம்பிக்கொண்டாள்.
மீண்டும் அந்தப் பத்திரிகையை எடுத்துப் பார்ப்பதும்
அவன் பெயரைப் படிப்பதுமாய் நேரம்
கொண்டிருந்தது. நாகராஜன் மீண்டும் வந்தான்.
'மா்பழதுக
எப்பவுமே அதோட ருசி
தெரியாதும்பாங்க அந்த மாதிரிதான் உன்னோட
கதையும் இப்பவாச்சும் உன்னோட மதிப்பு என்னன்னு
தெரிஞ்சு கிட்டியா. இனிமேலாக்கம்
பிடிக்காம நடந்துக்கப் பாரு இது பொன்விளையிற
பூமி. உன்னோட அழகுக்கும் திறமைக்கும் லட்சம்
லட்சமா வந்து குவியிற காலம் எனக்கு நெருங்கி
யிருக்கும் அடம் புடிச்சி அதை நீ வீணாக்கிடாதே.'
அவளை வார்ததைகளால் அவன் அவஸ்தைப்
படுத்திக் கொண்டிருந்தபோது போன் அலறுகிறது.
எரிச்சலுடன் போய் எடுக்கிறான். எதிர்முனையில்
வந்த குரலைக் கேட்டு வாயெல்லாம் பல்லாக
இளித்துக்கொண்டு குழைகிறான்.
'உங்களுக்கில்லாமலா போஸ்... எப்ப எங்கேன்னு
சொல்லிடுங்க... அங்கேயே வந்துடுறேன்.'
மறுமுனையில் அவனுக்கு இடமும் நேரமும்
சொல்லப்படுகிறது. இவன் இங்கே மேலும் மேலும்
குழைகிறான்.
'முன்னால் வந்ததெல்லாம் உள்நாட்டுச் சரக்கு
போஸ்... இது அப்படி இல்லியே! இது கடல் தாண்டி

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 91
வந்ததாச்சே. அதிலேயும் இன்னும் கைபடாத கேஸ்
போஸ்... மதிப்பை நீங்கதான் கூட்டணும்.'
மறுமுனையில் வந்த பதில் திருப்தி தராமல்
போகவே மேலும் கெஞ்சிக் குழைகிறான். அவன்
வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
'இரண்டு நாள்தானே. இங்கே இருந்தா என்ன,
அங்கே இருந்தா என்ன. முதலுக்கு மோசமில்லாம
இருந்தா சரி. பத்திரமா சேதமில்லாமல் திருப்பிக்
கொடுத்திடனும் இதுலதான் நம்ம பொழைப்பே
அடங்கியிருக்குது.' போஸ் சொல்லிவிட்டுப் போனை
வைக்கிறான்.
சுவரில் சாய்ந்தவாறு அவனையே பார்த்துக்
கொண்டிருந்த நீலாம்பரிக்கு அவன் பேச்சும்
போக்கும். ஏதோ புதிதாய் சதிசெய்யப் போகிறான்
என்பதை உணர்த்தியது. கண்டும் காணாதது போல்
மறுபடியும் பத்திரிகையில் மூழ்கியது போல் பாவனை
செய்துகொண்டிருந்தாள்.
சினிமா வில்லனைப் போல் துள்ளிக் குதித்து
அருகில் வந்தான்.
'சொர்க்கவாசல் திறந்தாச்சடி என் செல்லக்
கிளியே... உனக்காக கப்பலுக்கும் ஹோட்டலுக்கும்
தரகனுக்கும் செலவு செய்த பணமெல்லாம் செக்
புக்கா வந்து இறங்கப் போகுதுடி சாப்பாட்டை
அனுப்பறேன். தின்னுட்டு ஒய்வெடுத்துக்க. இது
தாண்டி எனக்கு செல்வத்தை அள்ளிக்
கொடுக்கப் போற தங்கச் சுரங்கம்.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


92 வாழப் பிறந்தவள்
கொண்டே அவளைத் தொட ஆசையுடன் வந்தவன்
கையைத் தட்டிவிட்டு அவள் விலகிப் போகிறாள்.
அவன் ஒதுங்கிக்கொள்கிறான்.
'ஓக்கே... உன்னோட இஷ்டம். யாருக்கு குடுத்து
வெச்சிருக்கோ, அவன் அனுபவிக்கட்டும்.'
வெளியேறிப் போகிறான். அவன் பேச்சு நடக்கப்
போவது இதுதான் என்று உறுதிப்படுத்திவிட்டது.
நெஞ்சில் கை வைத்துக்கொண்டு படுக்கையில்
சாய்ந்தாள் மனம் மின்சார வேகத்தில் ஓடியது.
எங்கே போவது. யாரைத் தேடுவது. தவித்தாள்.
மறுபடியும் அந்த வாரப் பத்திரிக்கையை எடுத்தாள்.
பக்கங்களைப் புரட்டினாள் கடைசிப் பக்கத்தில்
பத்திரிகை அலுவலகத் தொடர்பு எண் இருப்பதைக்
கண்டாள். மெல்ல நடந்து போன் இருக்குமிடம்
வந்தாள். மங்கிய விளக்கொளியில் நம்பரைச் சுழற்
றினாள் மணி அடித்துக் கொண்டேயிருந்தது. யாரோ
வந்து எடுத்தார்கள். தீனக்குரலில் 'ஹலோ' என்றாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 93
11

போனில் கைவைத்த உடனேயே அவள்


தோளில் கைவைத்த நாகராஜன் நரி ஆட்டுக்குட்டியை
வாயில் கெளவவியது போல் அலாக்காகத் தூக்கிப்
போய் கட்டிலில் போட்டான்.
'கொல்லன் தெருவிலேயே ஊசி விக்கப் பாத்தா
எப்படிம்மா..? நான் உன்னை விலைபேசிக்
கிட்டிருக்கேன். நீ என்னையே ஏலம் போடப்
பார்க்கறியே. கில்லாடிக்கும் கில்லாடி நான் எனக்கே
நீ கடுக்கா குடுத்தா எப்படி உன்னோட தஞ்சாவூர்
பாய்ச்சல்லாம் இங்கே செல்லாது கண்ணு. கையக்
காலச் சுருட்டிகிட்டு மரியாதையாத் துங்கு விடிஞ்சு
பார்க்கறேன்.'
அதிர்ச்சி, பயம், ஏமாற்றம்! அப்படியே
ஐம்புலன்களும் ஒடுங்கிப் போய், சுயநினைவை
இழந்தவளாய்ப் படுக்கையில் கிடந்தாள் நீலாம்பரி.
ஏதேதோ பயங்கரக் கனவுகள் கனவில் தலைவிரி
கோலமாய் அலையும் பிசாசுகள் அவளைப் பிடிக்க
வருவது போன்ற தோற்றம் இடியோசை கேட்ட
நாகம் போல் சர்வாங்கமும் நடுங்கி ஒடுங்கிக்
கிடந்தாள் பேதை,
பொல்லாத அந்தப் பொழுதும் விடிந்தது.
முகத்தில் சில்லெனக் குளிர்க்காற்று படுகிறது. கண்
இமைகள் மெல்லப் பிரிகின்றன. இமை முழுமையாய்
திறக்கமுடியாமல் வலிக்கின்றது. சிரமப்பட்டுத்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


94 வாழப் பிறந்தவள்

திறக்கிறாள். புகைபோல் தெரியும் சூழ்நிலையில்


ஏதோ மாற்றம் கண்ணை அகல விரித்துப்
பார்க்கிறாள்.
'எந்த இடம் இது யாரிடம் வந்திருக்கிறோம்.
எப்படி வந்தோம் பரபரப்பானாள் எழுந்து
தன்னையும் பார்க்கிறாள் சுற்றுப் புறத்தையும்
பார்க்கிறாள். நேற்று இரவு உடுத்திய அதே ஆடை,
முகத்தில் குங்குமம் கூட கலையாமல் இருந்தது.
பெரிய
ஆனால் இடம் மட்டும் மாறியிருந்தது
அதிர்ச்சி. இது அவன் வீ ட ல் ல என்று புரிகிறது.
திடீரென்று கதவு திறக்கப்படுகின்றது. யாரோ
இரு பெண்கள் வருகிறார்கள் கையில் கொண்டுவந்த
தட்டுகள் மேசையில் வைத்துவிட்டு அவளை
நெருங்கினார்கள்.
'அக்கா இதைக் குடிச்சிட்டுப் போய் குளிங்க,
கொஞ்ச நேரத்தில் மொதலாளி வந்துடுவாரு.'
சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். மேசையில்
இருந்த தட்டுக்களைப் பார்க்கிறாள். அவளுக்குத்
தேவையான காபி பலகாரம் ஒரு தட்டிலும் புத்தம்
புதிய ஆடை ஆபரணங்கள் இன்னொரு தட்டிலும்
இருந்தன.
நேரம் ஒடிக் கொண்டிருந்தது. பசியோ மற்ற
உணர்வுளோ இல்லாமல் செயல் இழந்து
போனவளாய் நீலாம்பரி உட்கார்ந்திருந்தாள்.
அந்த அறையின் அமைப்பு அது மிகுந்த
செல்வாக்கு மிக்க நபரின் வீடு என்பதை உறுதிப்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 95
படுத்தியது. அவற்றிலே காணப்பட்ட ஓவியங்களும்
அறையிலே மூலை முடுக்குகளிலே நின்ற சிலைகளும்
கீழ்த்தரமான உணர்வுகளைத் துண்டும் வகையில்
இருந்தன. படுக்கைக்கு நேர் எதிரே கண்ணாடி
பிரோவில் மேல்நாட்டு மதுவகைகள் அழகிய
கண்ணாடிக் கோப்பைகளுடன் இருந்தன.
அவள் அமர்ந்திருந்த படுக்கை நவீன அமைப்
பில் இருந்தது. ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் கொண்டு,
இனி மீளவே முடியாது என்ற துயரம் நெஞ்சில்
அடைக்க நீலாம்பரி அமர்ந்திருந்தாள்.
எங்கோ ஓர் ஊரில் இருக்கும் அப்பா
அம்மாவை நினைத்தாள். அழுகை அழுகையாய்
வந்தது. தன்னருகே இருந்த மேசை மீதிருந்த சிலையில்
இருந்து ஒரு பல்லி ஓசை எழுப்பியது. பல்லியைப்
பார்த்தாள். அது அவளின் பலகீனத்தைப் பார்த்து
ஏளனம் செய்வது போல் தோன்றியது. உற்றுப்
பார்த்தாள். அது உட்கார்ந்திருக்கும் இடத்தைப்
பார்த்தாள்.
அந்தச் சிலை வாளேந்தி நிற்கும் போர்வீரன்
அலெக்ஸாண்டரின் சிலை என்பது புரிந்தது எழுந்து
போய் வாளைக் கையில் எடுத்தாள். அது நிஜவாளாய்
இருந்தது. எடுத்ததை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு
வந்து மறுபடியும் உட்கார்ந்தாள். மூளையும்
விட்டதோ என்னும் அளவுக்கு யோசித்து எந்த
வழியும் தெரியாத நேரத்தில் கதவு திறந்தது தலை
நிமிர்ந்தாள்.
பளபளக்கும் பட்டு வேட்டியும் ஜிப்பாவும்
சந்தனப் பொட்டும் தங்க வைர நகைகளுமாய் அந்த

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


96 வாழப் பிறந்தவள்

ஆள் உள்ளே நுழைந்தார். ஒவ்வொரு அடியாக அந்த


ஆள் நடந்து வர அவள் நெஞ்சில் ஒவ்வோர்
அங்குலமாய் ஆணி அடிப்பது போலிருந்தது. அந்த
முகம் இரண்டு தினங்களுக்கு முன்பு மேடையில்
கண்ட பிரபலமான முகம் என்பதை உணர்ந்தபோது
குருதி ஓட்டம் நின்று விடுவதுபோல் இருந்தது.
எந்த நபர் ஆயிரமாயிரம் ரசிகர்களின் முன்பு
அவளுக்குப் பொன்னாடை போர்த்திப் பூச் செண்டு
கொடுத்தாரோ அதே பெரிய மனிதர்!
'பரதம் என்பது இந்தியப் பாரம்பரியத்தின்
விலை மதிக்க முடியாத சொத்து அதை நமக்கு
வழங்குகின்ற இந்தப் பெண் கலைமகளுக்குச் சமமா
னவர். இவரது கலைத்திறன் இந்த நாடு முழுவதும்
பரவிட நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும்
செய்திட வேண்டும் என்று எவரோ எழுதிக்
கொடுத்த துண்டுக் காகிதத்தைக் கையில் வைத்துக்
கொண்டு மேடையில் முழங்கியவர்தாம் அவள்
முன்னால் இளவயது வாலிபன் போல் நின்று
கொண்டிருந்தார்.
சமுதாயக் காவலர் கொடைவள்ளல், நற்குண
நம்பி என்றெல்லாம் அறிவிப்பாளர் பாராட்ட தன்
கழுத்தில் கிடந்த கனமான தங்கச் சங்கிலியை எடுத்து
அவளுக்குப் பரிசாக வழங்கிய வள்ளல்தான் பல்லைக்
காட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். நீலாம்பரி
மெளனமாய் உட்கார்ந்திருந்தாள். வந்தவர்
அவளருகே நெருங்கித் தோளைத் தொட்டார். அவள்
எழுந்து கொண்டாள் சட்டென்று கையைப் பற்றி
நிறுத்தினார்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 97

'மத்த பொண்ணுங்க மாதிரி உன்னை ஒரு


நாளைக்கு மட்டும் ருசிபார்த்துட்டு அனுப்பிடு
வேன்னு அந்த மடையன் நெனைச்சிட்டான்
பொண்ணு. ஆனா உன்னை நான் முழுசா குத்தகைக்கு
போயஎடுத்
ிடுச் துட்டேன்னு அவனுக்குத் தெரியாமப்
எத்தனுக்கு எத்தன் இவன் தெரியுமா!'
இரட்டை நாடி தேகம் குலுங்க அத்தரும்
ஜவ்வாதும் மணக்க அவளை நெருங்கிய அவரின்
நெருக்கம் அவளது மூச்சையே நிறுத்திவிடும் போல்
இருந்தது. முதலைவாயில் சிக்கியவளைப் போல்
அவள் தவித்தாள்.
'பயப்படாதே... நீ நெனைக்கிற மாதிரி உன்னை
நான் எதுவும் செய்யமாட்டேன். உனக்கு என்னைப்
புடிச்சி. இந்த இடம் புடிச்சி, நீயா என்கிட்டே வர்ற
வரைக்கும் உன்னை நான் எதுவும் செய்யமாட்டேன்.
உன்னை இங்கேயே கொலு வெச்சிருப்பேன்.
உன்னோட நடை அழகும் உடை அழகுமே இப்போ
எனக்குப் போதும். இடையழகை அப்புறமா
பார்த்துப்பேன்.'
அவர் படுக்கையில் சாய்ந்தார். குளுகுளு வசதி
செய்யப்பட்டிருந்த அந்த அறையில் நீலாம்பரியின்
உடம்பு தெப்பமாய் நனைந்து கிடந்தது.
'மனுஷன் பொறக்கிறது எல்லா சுகங்களையும்
அனுபவிக்கிறதுக்காகத்தான் அதை விட்டுவிட்டுப்
பத்தினி வேஷம் போட்டா பட்டினி கெடந்து
சாகவேண்டியதுதான். நீ விதி இல்லாம வீதிக்குப்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


98 வாழப் பிறந்தவள்
போயிடக் கூடாதும்மா என்னை நம்பு ஆயுள் பூரா...
மகாராணி மாதிரி வெச்சிக்குவேன்.
அந்த சூழ்நிலையிலும் அவளுக்குச் சிரிப்பு
வந்தது.
'இந்தக் கிழம் இன்னும் எவ்வளவு நாளைக்கு
உயிரோடு இருக்கும். என்று நினைத்தபோது
அவரே மறுபடியும் பேசுகிறார்:
'நான் உன்னோட இந்த அறையில இன்னிக்குப்
பூரா இருப்பேன். விடிஞ்சதும்தான் போவேன்/
எனக்கு வேண்டியதெல்லாம் இங்கே தானாவரும்.
உன்னை நான் தொட்டாலும் உன்னோட பேரு
கெட்டுப்போகும். தொடாம விட்டாலும் பேரு
கெட்டுப்போகும். உன்னோட மனசை அணு
அணுவா மாத்த என்னால முடியும் என்னோட
அனுமதி இல்லாம உன்னால இங்கிருந்து தப்பவே
முடியாது.'
நீலாம்பரி அவரின் அகம்பாவ மொழி கேட்டுத்
தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
'எல்லா ஆரம்பங்களுக்கும் நிச்சயம் ஒரு முடிவு
வரும் என்பது உனக்குத் தெரியாதா ஜடமே. என்று
வாய் முணுமுணுத்தது. சிறிது நேரம் மெளனமாய்
அவரையே பார்த்து நின்றாள்.
‘புத்தியிருந்தா பொழைச்சிக்கலாம்’ என்ற
அந்தப் பெண்ணின் வார்த்தைகள் அவள் நினைவுக்கு
வந்தன.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 99

மெல்ல அவரிடம் வந்தாள். அவர் காலடியில்


அமர்ந்தாள் பாதத்தில் கைவைத்து மெல்ல
நீவிவிட்டாள். அவர் அதிசயமாய்ப் பார்த்தார்.
'நீ தான் பொழைக்கத் தெரிஞ்ச பொண்ணு!
இவ்வளவு அழகை உனக்குக் கொடுத்த கடவுள்
அறிவைக் கொடுக்காம இருப்பானா என்ன? தேவதை
மாதிரி இருக்கிற நீ என் காலைத் தொடக்கூடாது
கண்ணே...! நான்தான் உன் காலைத் தொட்டுப்
பணிவிடை செய்யக் காத்திருக்கேன்’ என்று
அவளிடம் அவர் குழைய ஆரம்பித்தார். அவள்
எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கினாள்.
கால்களை மிகவும் பய பக்தியோடும் நளின மாகவும்
பிடித்துவிட்டவளாக அவரிடம் பேச்சுக்
கொடுத்தாள்.
'உங்களை நான் எப்படி நம்பமுடியும்?
என்னோட பாஸ்போர்ட் அவன்கிட்டே இருக்கு.
இந்த நாட்டுச் சட்டப்படி அது இல்லாம எங்கேயும்
யாரும் போகமுடியாது தங்கவும் முடியாது. நீங்க
சொல்ற மாதிரி என்னை ஆயுள் பூராவுக்கும்
வெச்சிக்கிறதா இருந்தா முதல்ல நீங்க என்னோட
பாஸ்போர்ட்டைத்தானே கேட்டிருப்பீங்க...!
'நீங்களும அவன் மாதிரி என்னை ஏலம் போடப்
பார்க்கறிங்க.. உங்க இஷ்டத்துக்குப் பயன்படுத்திட்டு
அப்புறம் அவன்கிட்டே அனுப்பிடுவிங்க.'
சொல்லிக் கொண்டே தேம்புகிறாள் சில
சொட்டுக் கண்ணிர்த்துளிகள் அவர் பாதத்தை
முத்தமிடுகின்றன. துடித்துப் போகிறார். வாரிச்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


100 வாழப் பிறந்தவள்
சுருட்டிக் கொண்டு எழுகிறார் பக்கத்தில் இருந்த
போனைக் கையில் எடுக்கிறார்.
'உனக்கு இப்ப உன்னோட பாஸ்போர்ட்
மட்டுந்தானே வேணும்?
அவளிடம் அழுத்தமாய்க் கேட்கிறார். அவள்
தனக்குப் பாதை திறக்கப்படப் போகிற சந்தோஷத்தில்
முகமலர்ச்சியுடன், 'ஆமாங்க' என்கிறாள்.
'அப்படின்னா... அதை நான் வாங்கிக்
கொடுத்திட்டா நீ என்னோட இருந்துடுவியா..?
'நிச்சயமாங்க... உங்க ஆயுள் உள்ளவரைக்கும்
உங்க காலடியிலேயே கிடப்பேங்க...’
அவருக்கு ஆனந்தம் அளவு கடந்தது. அவள்
முதுகில் உற்சாகமாய்த் தட்டிக் கொடுக்கிறார்.
'இப்பப் பாரு அந்த நாயை... அரைமணி
நேரத்தில் உன் காலடியில கொண்டு வந்து வெக்கச்
சொல்றேன் பாஸ்போட்டை.'
சொல்லிக்கொண்டே அவனை அழைக்கிறார்.
ஆவலாய் வந்து போனை எடுத்தவன் அவரது
வார்த்தைகளைக் கேட்டு அரண்டு போனான். அவசர
அவசரமாய் மாடிக்கு ஓடிப் போய் அவளது
பாஸ்போர்ட்டைத் தேடி எடுத்துக்கொண்டு
புறப்பட்டான்.
அவர் சொன்னது போல் அரைமணி நேரத்தில்
அந்தப் பங்களா முன் நிற்கிறான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 101

வாசலில் வந்து நின்ற நாகராஜன் நேராக மேலே


செல்லாமல், சிறிது நேரம் யோசனை செய்தான்.
தன்னுடைய மனைவி என்ற விஷயமே
தெரியாத அந்த நபருக்கு அவளுடைய பாஸ்போர்ட்
தன்னிடம் இருப்பது எப்படித் தெரிந்திருக்கும் என்று
சிந்தித்தான். முடிவு விரைவாகவே கிடைத்தது
அவனுக்கு.
அவன் முன்னால் வந்து நின்ற காளியப்பன்
விஷயத்தைக் கூறினான்.
'என்னண்ணே... இவ்வளவு பெரிய
யாயிட்டீங்க.. குட்டி வந்ததுமே அந்த ஆளுகிட்டே
அட்டையா ஒட்டிக்கிடிச்சி... போற போக்கைப்
பார்த்தா கெழவன் நாலாந்தாரமா தாலியே
கட்டிடுவான் போல இருக்கே! போய்ப் பாருங்க,
சிரிப்பும் கொம்மாளமும்...'
ஆயிரம் சுக்கலாகத் தன் தலை வெடித்து
விடாமல் இருக்கத் தன் தலையை இரு கைகளாலும்
இறுகப் பிடித்துக்கொண்டான் நாகராஜ் எவ்வளவு
நேரம் வாசற்படியில் உட்கார்ந்திருந்தானோ
தெரியாது. உள்ளேயிருந்து வேலைக்காரப் பெண்
வந்து உசுப்பியதும்தான் தன்னிலைக்குத் திரும்பினான்.
'ஐயா, மாடிக்கு வரச் சொன்னாங்க' என்று,
ஒற்றை வரியாய்ச் சொல்லிவிட்டு அவள் போனதும்
அவன் நடந்தான் காற்றிலே தவழ்ந்துகொண்டி

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


102 வாழப் பிறந்தவள்
ருக்கும் திரைச்சீலையைத் தள்ளிக்கொண்டு உள்ளே
நுழைந்தான்.
நீலாம்பரி கட்டிலில் ஒய்யாரமாய்ப் படுத்துக்
கொண்டு பத்திரிகையைப் படித்துக் கொண்டி
ருந்தாள். அவனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
முதலாளி வெற்றிலையை மென்று கொண்டே
அவனைப் புன்னகை ததும்ப வரவேற்றார். பெருமிதம்
பிடிபடாத முகம் அவனுக்கு வயிற்றெரிச்சலை உண்டு
பண்ணியது. மனதுக்குள்ளேயே கரித்துக்கொண்டு
முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டான்.
'பாஸ்போர்ட் கேட்டீங்களாமே போஸ்... அது
ஏன் உங்களுக்குன்னு யோசிச்சுக்கிட்டிருந்ததிலே
நேரமாயிடுச்சு... இப்ப எதுக்குங்க அந்த
பாஸ்போர்ட்?"
சம்பந்தா சம்பந்தமில்லாமல் வார்த்தைகள்
வந்து விழ, கை பழக்க தோஷத்தால் கும்பிட்டு
நின்றது.
'அந்தக் கேள்வியெல்லாம் உனக்கெதுக்கு
நாகராஜ்... பாப்பா மலாய் படிக்க ஆசைப்படுது.
அதை நான் டியுஷனுக்கு அனுப்பிப்படிக்க வைக்க
முடியாது. வாத்தியார் வெச்சிதான் படிக்க
வைக்கணும். உன்னை நம்பி உன்னோட வீட்ல
விட்டா நீ பாழாக்கிடுவே. அதனால அது இங்கேயே
இருந்த
படிக்கட்டும். அது இருக்கிற இடத்திலதான்
அதோட பாஸ்போர்ட் இருக்கணும் அதுதான்
சட்டம். தெரியும்லே உனக்கு!'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 103

நாகராஜ் அதிர்ந்து போனான். எப்போதோ


எங்கோ கேட்ட அந்த வார்த்தைகள் காதில்
எதிரொலிக்கின்றன.
'மண்வெட்டியை எடுத்து நீ ஊருக்கு குழி
பறித்தால் அது உன்னையே பார்த்திருக்கும்.' உடம்பு
சிலிர்த்து அடங்குகின்றது. ஒரு பாவமும் அறியாத
அந்த அப்பாவிப் பெண்ணுக்கு இவன் துரோகம்
செய்ய நினைக்க.. அவன் நம்பிக்கைக்குரிய நண்பரே
அவனுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்யத்
துணிவதா...?
'என்னப்பா... மெளனமாயிட்டே...! எதுக்கு
இந்தப் பொண்ணுக்குப் படிப்பெல்லாம்னு நெனைக்
கிறியா...? எல்லாம் காரணமாத்தான்...! பொண்ணு
அழகா மட்டுமில்லே... அறிவாகவும் இருக்கு...!
ஏற்கனவே நம்ம வீட்ல மூணு தெண்டத்தினி தின்னு
வளருதுக... இதுக்கு நாலுபாஷையைக் கத்துக் குடுத்து
கழுத்துல மூணு முடிச்சும் போட்டுட்டா நம்ம வரவு
செலவு கணக்கை ஒழுங்கு பண்ணிக்குமில்லே.?
அதுக்குத்தான்.'
நகராஜன் மட்டுமன்றி நீலாம்பரியும் அசந்து
போனாள் கிழவனின் சமயோசித மூளையை
நினைக்கும்போது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
தான் தப்பிக்க வேண்டி அவனுக்குச் சம்ம
தித்தது போல் நடிக்கப் போய் எவ்வளவு பெரிய
கற்பனைக் கோட்டை கட்டிவிட்டான் கிழவன் என்று
வியந்தாள். தன் பேச்சை உண்மை என்று நம்பும்
அளவுக்குத் தன்னாலும் நடிக்க முடிந்ததை எண்ணித்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


104 வாழப் பிறந்தவள்
தன்னையும் பாராட்டிக் கொண்டாள். ஆனால், அதே
நேரத்தில் நகராஜன் உடம்பு பெட்ரோல், தீப்பெட்டி
இல்லாமலே எரியத் தொடங்கியது.
'நன்றிகெட்ட கிழட்டு ராஸ்கல்... என்கிட்டேயே
உன்னோட கதையை விரிக்கிறியா நீ! உன்னோட
கதையை சீக்கிரமே நான் முடிக்கிறேன்' என்று
தனக்குள் கறுவிக்கொண்டு முகத்தில் வலிய வர
வழைத்த சிரிப்போடு,
'உங்களுக்கு ஏன் போஸ் இந்த கூத்தாடிக்
கூட்டமெல்லாம்... நீங்க நெனைச்சா எத்தினியோ
நல்ல குடும்பத்துப் பெண்ணுங்களாப் பார்த்துக்
கல்யாணம் பண்ணிக்கலாமே...'
சொல்லி முடிக்கவில்லை அவன். அந்த அறுபது
வயது மனிதனின் வலது கரம் அவன் கன்னத்தில்
பதிய அவன் தடுமாறிப் போய் தரையில் விழுந்தான்.
நீலாம்பரி வெடவெடவென்று நடுங்கிப்
போனாள்.
'அயோக்கியப் பயலே... அக்கரைச் சீமைக்குப்
போய் ஆசை வார்த்தைக் கூறி அங்கே உள்ள
மடையனுங்க கண்ணுல மண்ணைப் போட்டுட்டு
இப்படிப்பட்ட புள்ளைங்கள தாலிகட்டிப்
பொஞ்சாதின்னு சொல் ல ி இங்கே இறக்குமதி
பண்ணி, அப் ுறம் உங்க ஸ்டைல்ல ஏற்றுமதி பண்ற
விஷயம் எனக்குத் தெரியாதுன்னு நீ நெனைச்சி
கிட்டிருக்கியா...? நேத்திக்குப் பொறந்த உனக்கே
இவ்வளவு புத்தியிருந்தா எனக்கு எவ்வளவு அனுபவம்
இருக்கும்? அக்கினி சாட்சியா கல்யாணம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 105
பண்ணினவளை கூத்தாடின்னு சொல்றியே...
வெட்கமாயில்லே உனக்கு?'
ஆவேகமாய் வந்து உட்காருகிறார் அவர்.
எதுவுமே விளங்காமல் பயந்துபோய் ஒரு ஓரத்தில்
நிற்கிறாள் நீலாம்பரி. தன் முன்னால்
பாம்பா,பழுதையா என்று புரியாத தடுமாற்றம்
கீழே விழுந்த நாகராஜன் எழுந்து நின்றான்.
கன்னத்தில் விழுந்த அறை காதையும் பாதித்திருந்தது.
வொய்ய்ங் என்ற சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.
கையால் காதை அடைத்துக்கொண்டு பேசினான்.
'வேணாம் போஸ்.. பலவருஷ சிநேகிதம்!
கேவலம் ஒரு பொம்பளையினால வீணாகிப்
போயிடக்கூடாது. ஏதோ நீங்க ஆசைப்பட்டீங்கன்னு
அனுப்பி வெச்சேன்... ரெண்டு மூனு நாளைக்கு
வெச்சிருந்துட்டு அனுப்பி வைக்கிறதுதான்
மரியாதை. அதை விட்டுட்டு, உங்களுக்கு சம்பந்த
மில்லாத விஷயத்தில நீங்க தலையிடறது நல்லா
இல்லே போஸ்... அப்புறம் நான் பொல்லாத
வனாயிடுவேன்....!'
முதலாளி அவனை நெருங்கி அவன் சட்டையைப்
பிடித்துக் கொண்டு சரமாரியாக முகத்தில்
குத்தினார்.
'செய்யிறது அஞ்சடித்தனம்... இதுல என்னடா
வீறாப்பு வேண்டியிருக்கு...? நீ என்னை என்னடா
செய்ய முடியும்? ஆதரவு தரவேண்டிய நீயே அந்தப்
பெண்ணை அசிங்கப்படுத்த நினைச்சேன்னு
போலீஸ்ல உன்னைப் புடிச்சுக் குடுக்க எனக்கு
எவ்வளவு நேரம் ஆகும்னு நெனைச்சிப்பாரு...

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


106 வாழப் பிறந்தவள்
நாகரீகமா, மரியாதையா நடந்துக்க. இல்லேன்னா
கம்பி எண்ண வேண்டிவரும்.'
ஒரு நாட்டியப்பள்ளியின் நடத்துநராக.
கண்ணியமான கலைஞனாக... அழகனாக மேடை
யிலே, கம்பீரமாய் உலா வருகின்ற நாகராஜன், ஒரு
கைக்கூலிபோல் அவர் முன்னால் நிற்பது, அங்கே
நின்ற நீலாம்பரிக்கு வியப்பாக இருந்தது.
தனது நாட்டில் அடிமைகளாய் வேலை
செய்யும் சிலரை இப்படிக் கையாலாகாத வர்களாக
அவள் பார்த்ததுண்டு, ஆனால் இங்கே படித்த
பணவசதி படைத்த நல்ல மனிதர்கள் நாலுபேருடன்
சரிசமமாய் உட்கார்ந்து பேசிப் பழகக் கூடிய ஒருவன்
ஏன் இப்படிக் கழிசடைபோல் நடந்து கொள்கிறான்.
விளங்கவே இல்லை. அவளுக்கு.
ஆனால் நாகராஜனுக்குத் தன்னுடைய தவறு
விளங்கிவிட்டது.
ஒரு சமுதாயப் பெரும்புள்ளியாகவும்
செல்வாக்கு மிகுந்தவராகவும் இருக்கிறார் என்பதற்
காகவே அவ்வப்போது அவரது ஆசைகளுக்குத் தீனி
கொடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தவன், பண
ஆசையினால் நீலாம்பரி விஷயத்தில் கொஞ்சம்
மெத்தனமாய் இருந்துவிட்டான். இனிமேல் எதுவும்
செய்ய முடியாது என்பது அவனுக்கு உறுதியாகிப்
போனது. முடிவு செய்தான். அதையே முடிந்த
முடிவாய் செயல்படுத்தத் தொடங்கினான்.
'முதலாளி எதிர்பார்க்காத நிலையில் அவர்
முன்னால் வந்து குழைந்து கும்பிடுபோட்டு,'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 107
'என்னை என் தப்புக்காக மன்னிச்சுடுங்க
போஸ்...' என்றவாறு அவர் காலில் பணிகிறான்.
அவனைத் தட்டிக் கொடுக்கக் குனிந்தவரை
அப்படியே இழுத்து கீழே தள்ளி அவரின் பரந்த
மார்பில் ஏறி உட்காருகிறான்.
'கிழட்டு நாயே... உனக்கே இவ்வளவு திமிர்
இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும். இருக்க எடம்
குடுத்தா நீ படுக்கப் பாயா கேட்கறே?
ஏசிக் கொண்டே மார்பில்.. மூக்கில்.. கண்ணில்,
வாயில் மாறி மாறிக் குத்தினான். மின்சார வேகத்தில்
அவன் கைகள் இயங்கிக் கொண்டிருந்தன. மலை
சாய்ந்தது போல் கீழே கிடந்த அவரால் அவனை
ஒன்றும் செய்ய முடியவில்லை. இரண்டு கைகளையும்
இறுகப் பிடித்துக்கொண்டு வலுவான தன்
தலையினால் அவரது நெற்றியில் முட்டினான்
நாகராஜ்.
நீலாம்பரிக்குப் பொறுமை எல்லை கடந்து
போனது. சுற்றுமுற்றும் பார்த்தாள். தாக்குவதற்கு
எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. ஏதேச்சையாகக்
கண்ணில்பட்ட மாவீரன் சிலையில் இருந்த வாள்
மின்னியது. எடுத்தாள் பலமாகப் பிடித்தாள் ஒரே
அடியாக அவன் பிடரியில் அடித்தாள். அவன் குப்புற
விழுந்தான். ஆத்திரம் திரும் வரை அந்த வாளினால்
அவனை வெட்டினாள் கை சோர்ந்து போனது.
அவன் மூச்சும் நின்று போனது.
முதலாளி மெல்ல எழுந்தார். அவன் சட்டைப்
பாக்கெட்டில் இருந்த பாஸ்போர்ட்டை எடுத்து
அவள் கையில் கொடுத்தார்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


108 வாழப் பிறந்தவள்
வெளியே
'ஒடிப் போய்டு... எப்படியாச்சும்
போய் தப்பிச்சுடு... நான் இதுக்கு வழி பண் ணிக்கு
வேன். நீ ஒடிப் போய்டு.'
அவளைப் போகச் சொன்னார். கையெடுத்துக்
கும்பிட்டவள், ஆடையை ஒழுங்கு செய்துகொண்டு
கிளம்பினாள்.
அவர் அவளை அழைத்துக் கையில் கொஞ்சம்
பணத்தைக் கொடுத்து தன் முகவரி அட்டையையும்
கொடுக்கிறார்.
'செலவுக்கு வெச்சுக்க.. தேவைப்பட்டா போன்
பண்ணு... உன்னோட இந்த உதவியை நான் சாகற
வரைக்கும் மறக்கமாட்டேன். புத்திசாலித்தனமாக
நடந்து ஊருக்குப் போற வழியைப் பாரு,
இல்லேன்னா இங்கேயே நல்லவனாப் பார்த்துக்
கல்யாணம் பண்ணிக்க. உன்னோட மனசுக்கு நீ
எங்கே இருந்தாலும் நல்ல இருப்பே.'
அவள் வெளியேறி நடந்தாள். சாலையோர
கடைகளில் யார் யாரோ அவளை உற்று உற்றுப்
பார்த்தார்கள்.
தோளில் பையும் கேமராவும் கண்ணாடியுமாய்
நின்ற ஒருவன் அவளை நோக்கி நடந்து வந்தான்.
நேருக்கு நேராய் நின்று நிமிர்ந்து அவளைப்
பார்த்தான்.
அரண்டுபோய் அச்சத்துடன் அவளும்
பார்த்தாள். அந்த அழகிய கண் க ளை அவன்
அடையாளம் கண்டு கொண்டான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 109
13

விதி வாசல் சாத்தும்போது கடவுள் சன்னல்


கதவைத் திறந்து விடுவார் என்பது நீலாம்பரியைப்
பொறுத்தவரை நிஜமாகிப் போனது.
எல்லமே முடிந்து விட்டதாக நினைத்துக்
கொண்டிருந்தவளுக்கு இப்படி ஒரு நிம்மதி, அதுவும்
இவ்வளவு சீக்கிரம் கிடைக்குமென்று அவள்
நினைத்தும் பார்க்கவில்லை.
அரங்கநாயகத்தின் வீட்டிலிருந்து தப்பியோடி
வந்த பின், சாலையோரத்தில் அவனைக் கண்டு
கொண்ட சித்தார்த்தன், அவளை வெகு நேரம்
கெஞ்சிக் கேட்டுக் கொண்டபின்பே அவனுடன்
வருவதற்கு அவள் சம்மதித்தாள்.
முன்பின் தெரியாத வாலிபன் ஒருவனுடன்
அறிமுகமில்லாத ஊரில் தனியே செல்வது ஆபத்து
என்பதை மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்
கொண்டிருக்க,
அவளுக்குள் இன்னோர் சக்தி, 'அவன்
நல்லவன்... நல்லவன்! உனக்கு உதவி செய்வான்;
அவனை நீ நம்பு!' என்று அடித்துக்
அவன்கூடச் சென்றாள்.
அவன் தனது சிறுவிட்டினுள் அழைத்துப்
போப் நாற்காலியை எடுத்துப் போட்டு உட்காரச்
சொன்னான். உட்காந்துகொண்டாள். அந்த வீடு
முழுவதும் காகிதங்களும் பழைய புதிய பேனாக்களும்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


110 வாழப் பிறந்தவள்
சிதறிக் கிடந்தன. சன்னல் வழியே வந்த காற்றினால்
அவை பறந்துபோய் விழுந்திருக்கவேண்டும்.
'ஒண்டிக்கட்டையா இருந்தாலே இந்த
அவஸ்தைதான்..... நான் போடுற குப் ப ையை நான் தான்
கூட்டணும்... கொஞ்ச நேரம் கண் ண ை மூடிக்கிட்டு
இருக்கப் பாருங் க .... அஞ் ச ே நிமிஷத் த ில சுத்தம்
பண்ணிடுறேன்.'
என்று சொல்லிக் கொண்டே பரபரவென்று
சுழன்றான். எல்லாவற்றையும் ஒழுங்கு செய்துவிட்டு
மேசையில் இருந்த சிறு மின் விசிறியைச் சுழல
விட்டான். அவள் முன்னால் கிடந்த சிறு மேசையில்
ஒரு குவளை தண்ணிரைக் கொண்டுவந்து வைத்தான்.
ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு
எதிரிலேயே உட்கார்ந்தான். ஆழமாய் அவள்
முகத்தைப் பார்த்தான். எந்தச் சலனமும் இல்லாமல்
அவள் அவனைப் பார்த்தாள்.
'இப்ப சொல்லுங்க... ஏன் இப்படித் திடு
திப்புன்னு விட்டை விட்டு வெளியேறிட்டீங்க உங்க
வீட்ல உள்ளவங்களுக்கும் உங்களுக்கும் என்ன
தகராறு...? மனசுக்குப் பிடிச்சவங்கள கல்யாணம்
பண்ணிக்க வேணாமுன்னு சொன்னாங்களா... இல்லே
உங்க நாட்டியத்துக்கு தடையா ஏதும்
சொன்னாகளா....? எதுவா இருந்தாலும் என்கிட்டே
சொல்லுங்க. நான் அவுங்கள கவனிச்சுக்கிறேன்.'
அவன் நான் ஒரு பத்திரிகையாளன் என்ற
குனத்தையே அங்கு வெளிக்காட்டிக் கொண்டி
ருத்தான் அவள் பதிலே பேசாமல் இருந்தாள். மனம்
மட்டும் எதையோ அசைபோட்டது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 111
எங்கோ ஒரு மூலையில் துப்பாக்கியும்
கையுமாய் இந்திய எல்லையில் தாய் நாட்டைக்
காப்பாற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்
கொள்ளப் போய்விட்ட தன் அத்தை பிள்ளை
ஸ்ரீதரன் தன்மீது வைத்திருந்த காதல் நிறைவேறாத
ஏமாற்றத்தினால்தான் போனான் என்று அத்தான்
சந்திரன் சொன்னானே...
அந்த நினைவு அவளை அலைக்கழித்தது.
அத்தனை பேரில் யாராவது ஒருவர் அவளின் சுண்டு
விரலைத் தொட்டு, 'நான் உன்னைக் காதலிக்கிறேன்'
என்று துணிச்சலாய்ச் சொல்லியிருந்தால் அவள்
வாழ்க்கை எவ்வளவு ரம்மியமாக அமைத்திருக்கும்....
யாருமே சொன்னதில்லையே... அவர்கள் சொல்லாமல்
போனதுக்கும் விதியே காரணமாக
இருந்திருக்குமோ...'
'என்ன, நீங்க எதுவுமே பேசாம இருந்தா
எப்படி...! உங்களோட சூழ்நிலையை எனக்கு விபரமா
சொன்னால்தானே நான் உங்களுக்கு உதவ முடியும்?
மொனமாவே இருந்த எனக் கென்ன தெரியவரும்!
கொஞ்சம் அதட்டலும் உரிமையுமாய்ப் பேசினான்.
அவள் மெளனமாய் பாஸ்போர்ட்டை
அவனிடம் கொடுத்தாள். வாங்கிப்பார்த்தான்,
படித்தான். கூடவே இருந்த விசாவையும் பார்த்தான்,
படித்தான், எழுந்து நின்றான்.
'நீங்க தமிழ்நாட்டுப் பொண்ணா? இப்பத்தான்
இந்த நாட்டுக்கு வந்திங்களா..... அந்த நாகராஜனோட
மனைவியா நீங்க! என்னங்க கொடுமை இது!'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


112 வாழப் பிறந்தவள்

இப்போதுதான் அவளது இமைகள் படபடத்


தன. உதடுகள் துடித்தன. லேசாய்க் கண்ணீர்
ததும்பியது. அவன் தவித்தான்.
'வேணாங்க... நீங்க அழக் கூடாதுங்க...
பொண்ணுங்க அழுதா எனக்குப் புடிக்காதுங்க ப்ளீஸ்
ஆழாதீங்க கஷ்டம் வர்றப்ப தைரியமா இருக்கிறது.
தான் புத்திசாலித்தனம் நீங்க இந்த நேரத்திலேதான்
தைரியமா இருக்கனும் நான் இருக்கேன் உங்களுக்கு....
பயப்படாம... அழாம உங்க பிரச்னையை
எங்கிட்டேச் சொல்லுங்க.'
நடந்தவற்றை ஒன்று விடாமல் சொன்னாள்.
கேட்டு முடித்தவன் சிலையாக அமர்ந்திருந்தான்.
அப்புறம் எழுந்து நடத்தான். தன் மேசையில் இருந்த
தொலைபேசி அருகே சென்றான். கொஞ்சநேரம்
யோசித்தான். அதன் பின் போனை எடுத்துப்
பேசினான்.
மறுமுனையில் எவ்வித பதிலும் வராமல்
இருந்தது. போனை வைத்தான்.
உங்களை நான்தான் இப்போதைக்குப் பாதுகாக்
கணும். ஆனா அதுக்கு இந்த வீடு
இடமில்லே. இன்றைக்குப் பொழுதை மட்டு இங்கே
கழிசிட்டு நாளைக்கு நாம் போகவேண்டிய
இடத்துக்குப் போவோம். என்னை உங்க உடன்
பிறப்பா நெனைச்சி எந்தப் பயமும் இல்லாமல் இங்கே
நீங்க படுத்துத் துங்குங்க.'
அவள் படுக்கும் இடத்தைக் காட்டிவிட்டு
அடுப்படிக்குப் போனான். டின்னில் இருந்த

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 113

பிஸ்கட்டுகளை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்


கொண்டு பிளாஸ்கில் இருந்து ஒரு கப் காபியையும்
எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தான். அவளிடம்
வைத்தான்.
அவள் அவனைப் பார்த்தாள்.
'என்னை அந்நியனா நெனைக்கவே கூடாது
கூடப் பிறந்தவன்னு முன்னாலேயே சொல்லி
விட்டேன். என்ன உன்னை மாதிரி எனக்கொரு
தங்கச்சி இருக்கு கல்யாணம் முடிச்சி புள்ளையும்
குட்டியுமா சவுக்கியமா இருக்கு. நாளைக்கு நாம
அங்கதான் போகப் போறோம்... நல்லா சாப்பிடு;
நிம்மதியா துங்கு. அல்லாஹ் நம்மை எப்பவும்
கைவிடமாட்டான்.'
நீலாம்பரி அமைதியாய் அவன் பேச்சைக்
கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் 'அல்லாஹ்'
என்றதும் அதிர்ந்து நின்றாள். அவனை முறைத்துப்
பார்த்தாள். அவன் சிரித்தான்.
'என்னடா இவன் என்னன்னமோ உளர்றான்னு
பார்க்கறியா...! எனக்கு அல்லாஹ்வும், ஆதிபரா
சக்தியும், புத்தனும், ஏசுவும் எல்லாருமே ஒன்று
தாம்மா....! என்னை நான் ஆண்டவனோட
பிள்ளையாத்தான் நெனைக்கிறேன்! ஆண்டவன்.
யாரையும் அனாதையாகவோ, தனியாகவோ
படைகலே... உனக்கு நான் அண்ணன்தான்... உனக்கு
நல்லாத் தெரிஞ்ச அதே சித்தார்த்தன்தான்!'
அவள் அமைதியானாள். அவனைப் பாத்ரூம்
இருக்குமிடத்துக்கு அழைத்துப் போனான். இரவில்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


114 வாழப் பிறந்தவள்
எங்கும் போய்விடாதே என்று எச்சரித்து விட்டுப்
பாயை விரித்துப் படுத்துக்கொண்டான். நீலாம்பரி
கட்டிவில் உட்கார்ந்தவாறு நடந்த விஷயங்களை
நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் கனவில் கூட நினைத்ததில்லை தன்
கையால் நாகராஜன் வெட்டுப்படுவான் என்று.
தனக்குக் கணவனாக வந்தவன் தொட்டுத் தாலி
கட்டியவன். அவனையே அவள் வெட்டியிருக்
கிறாள். அவள் வெட்டிய காயங்களிலிருந்து ரத்தம்
வெளியாகி அவன் செத்துப் போனா அந்த பாவம்
தன்னைச் சும்மா விடுமா... என்றும் எண்ணினாள்.
உள்மனம் சொன்னது:
'இவனை நீ கொலையே செய்தாலும் தகும்'
என்று.
போர்வையை எடுத்துப் போர்த்திக்
கொண்டாள். தரையிலே நிம்மதியாய் உறங்கும்
சித்தார்த்தனைப் பார்த்தாள். ஏகாந்தியாய் அவன்
உறங்கிக்கொண்டிருந்தான். கழுத்துவரை இறங்கிய
சுருள் முடியும், நாள் கணக்கில் சவரம் செய்யாமல்
தாடியும் மீசையும், ஏதோ ஒர் இளம் துறவி போல்
தோன்றினான். பெயரும் அழகாக அவனுக்குப்
பொருத்தமானதாகவே இருந்தது.
முகத்தின் தெளிவு மனத்தின் உண்மையைக்
காட்டியது. மனித நேயம் அவனுள் தீர்க்கமாய்
நிரம்பியிருப்பதை பேச்சும் செயலும் எடுத்துக்
காட்டின. நம்பிக்கையோடு படுத்தாள் தூக்கம் வந்தது.
உறங்கிப் போனாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 115

பொழுது விடிய சிறிது நேரமிருக்கும், யாரோ


கதவைத் தட்டினார்கள். எழுந்து கொண்டாள்.
போய்க் குளியலறையில் மறைந்து கொண்டாள்.
அவன் மெல்ல எழுந்து போய் கதவைத் திறந்தான்.
இரண்டு மலாய்க்கார போலீஸ்காரர்கள்
அவனிடம் எதையோ கேட்டார்கள். இவனும்
எதையோச் சொன்னான். வந்தவர்கள் திரும்பிப்
போனார்கள். அவள் வந்தாள்.
'பயப்படாதே! அவர்கள் என் நண்பர்கள்.
இன்றைக்கு எனக்கு வேவை அதிகம் இருக்கும் போல்
தெரியுது!' என்றான்.
மறுபடியும் தூக்கம் வரவில்லை. விடிந்ததும்
புறப்படப் போகும் விஷயமாய் விபரங்களை
அவளிடம் சொன்னான். யார் கேட்டாலும்
உண்மையைச் சொல்லக் கூடாது என்று
கண்டிப்பாய்ச் சொல்லி வைத்தான்.
விடித்ததும் குளித்து முடித்துப் புறப்பட
ஆயத்தமானபோது தொலைபேசி அழைத்தது.
எடுத்தான் போலிஸ் நிலையத்தில் இருந்து அவசரச
அழைப்பு வந்தது. அதை மறுக்க முடியாதவனாப்ப்
புறப்பட்டான்.
கொஞ்ச நேரத்தில் வந்துடுறேன். நீ பசியாறீட்டு
உள்ளேயே இரு... போரடிச்சா அந்தப் புத்தகங்களைப்
படிச்சிகிட்டிரு, என்றவனாய், கேமராவை எடுத்துத்
தோளில் போட்டுக்கொண்டு பறந்தான்.
அவள் தொப்பென்று படுக்கையில் போய்
விழுந்தாள். எதையும் செய்யப் பிடிக்காமல் அங்கேயே

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


116 வாழப் பிறந்தவள்
படுத்திருந்தாள். எந்த வேளையிலும் மனம் லயிக்க
மறுத்தது வெளியேயும் செல்ல முடியாது. அந்தச்
சின்ன இடத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தே
நேரத்தை ஓட்டினாள்.
சின்னவீடாக இருந்தாலும் ஒரு நூல்நிலையம்
போல் புத்தகங்களால் நிறைத்து வைத்திருந்தான்.
திடிரென்று மனம் அதைப் பார்க்க விரும்பியது.
அலமாரியில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாகத்
திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைய
போட்டோ ஆல்பங்களையும் அடுக்கியிருந்தான்.
எடுத்துப் பார்த்தாள்.
நாட்டுத் தலைவர்கள், கலைநிகழ்ச்சிகள்,
பள்ளிக்கூட நிகழ்ச்சிகள், இயற்கைக் காட்சிகள்
நிறைய படங்கள் இருந்தன. அவளது ஆடல்
அரங்கேற்றப் படங்களும் இருந்தன. ஒவ்வொன்றாய்ப்
பார்த்தார்.
கையில் ஒலி வாங்கியுடன் நடைபயிலும்
நாகராஜனும் இருந்தான். அவளுக்குப் பொன்னாடை
போர்த்திச் சிறப்பு செய்த அரங்கநாயகமும் இருந்தார்.
இருவரையும் பார்க்கப் பார்க்க நெஞ்சில் கனல் தகிக்க
ஆரம்பித்தது. அதை அப்படியே மூடிவைத்து விட்டுப்
படுக்கையின் போய் உட்கார்ந்தாள்.
யாரோ கதவைத் தட்டினார்கள். மெல்ல
சாவித்துவாரம் வழியே பார்த்தாள். சித்தார்த்தன்
நின்றுகொண்டிருந்தான் கதவை திறந்தாள் உள்ளே
வந்தான் 'நீலா... அந்தத் தடியன் சாகல... ஆஸ்பத்திரி
யில படுத்திருக்கிறான்' என்றான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 117
'கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்
சாட்டப்பட்டு நாகராஜன் கைது செய்யப்பட்டு,
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்
பட்டிருக்கிறான். அதே வேளையில் பழியைக் தன்
மீது போட்டுக் கொண்ட அரங்கநாயகமும் சிறப்புப்
பகுதியில் சிகிச்சை பெற்று வருகிறார்' என்ற
செய்தியையும் சித்தார்த்தன் மூலம் அறிந்த நீலாம்பரி
'அடுத்து என்ன நடக்கும்?' என்ற சிந்தனையில்
ஆழ்ந்தாள்.
'வேறென்ன நடக்கும்... கொலை முயற்சியில்
ஈடுபட்டதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு நாலஞ்சு
வருஷம் கம்பி எண்ணிட்டு வருவான். அதோட
அவன் கதையும் முடிஞ்சிடும் அப்புறம் இந்த ஹீரோ
வேஷமெல்லாம் போடமுடியாது ஜெயிலுக்குப்
போவன் கொலைகாரன்கிற பேரோட தம்பி திரிய
வேண்டியதுதான்.'
சித்தார்தன் தாளில் எதையோ கிறுக்கிக்
கொண்டே அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.
முதல் நாள் அரங்கநாயகம் வீட்டில் பத்திரிகை
யார்கள் எடுத்த புகைப்படங்கள் பத்திரிகையில்
வந்திருந்தன. ஒவ்வொன்றாய் உற்றுப் பார்த்தாள்.
திடீரென்று எங்கோ ஒர் இடத்தில் கண்கள் நிலைக்க
'அண்ணா' என்று கூவினாள்.
வேலையில் கவனமாய் இருந்தவன் திடுக்கிட்டுத்
திரும்பினான்.
கையிலிருந்த பத்திரிகையை அவனிடம் காட்டி
அதில் அவள் பார்த்த பொருளையும் சுட்டிக்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


118 வாழப் பிறந்தவள்
காட்டுகிறாள். கீழே ஒரு மூலையில் சுவர் ஓரமாய்
ஒதுங்கிக் கிடந்த முத்துமாலை அவன் கண்ணில்பட
அவளைப் பார்க்கிறான்.
'அது என்னோட மாலை... எங்க குடும்ப நகை
நான் ஊர்லேர்ந்து வந்தப்ப போட்டுகிட்டு வந்த நகை;
எப்படியோ அறுந்து விழுந்திருக்கு.'
பதட்டமாய் சொன்னாள். அவளை ஆறுதல்
படுத்தினான். ஆனாலும் அவள் சமாதானமாக
வில்லை.
'இல்லேண்ணா, அதுல என்னோட பேர்
இருக்கு... எங்க குடும்பப் பேர் இருக்கு!' பதறினாள்.
அவன் கொஞ்சம் யோசித்தா அவளைத்
தட்டி கொடுத்தான்.
'கவலைப்படாதே... அதுவும் நல்லதுக்குத்தான்.
அப்படியே அது உன்னைக் காட்டிக் கொடுத்தாலும்
உனக்கு எந்த ஆபத்தும் வாரம உன்னைக் காப்பாத்த
வேண்டியது என்னோட பொறுப்பு.... நீ ஊருக்குப்
போய்ச் சேரும் வரைக்கும் நான் சொல்றப்படிதான்.
நடக்கணும். அப்பத்தான் உனக்கும் நல்லது; எனக்கும்
நல்லது முதல்ல நீ போய்க் குளிச்சிட்டுத் தயாராகு...
நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்துடுறேன்.'
சொல்விவிட்டு மின்னவாய் பாய்ந்தான். அவன்
போன பின் கதவைச் சாத்திவிட்டுப் போய்க்
குளித்தாள் பின் தண்ணீரைக் கொதிக்க வைத்துக்
கோப்பியைக் கலக்கிப் பிளாஸ்கில் ஊற்றி வைத்து
விட்டுத் தனக்கு ஒரு குவளையில் ஊற்றி எடுத்துக்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 119

கொண்டுவந்து உட்கார்ந்தாள் மறுபடியும் பத்திரிகை


யைப் புரட்டினாள் எல்லாம் ஆங்கில, மலாய்
பத்திரிகைகளாக இருந்தன. படம் மட்டும் தெரிந்தது.
தன்னுடைய ஆங்கில மொழியறிவு வளமாக
இல்லையே என்று வருத்தத்துடன் படத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் சித்தார்த்தன் வந்து
நின்றான். கையில் பெரிய பிளாஸ்டிக் பை இருந்தது.
அவளிடம் கொடுத்தான். அவள் விழித்தாள்.
'இது துப்பட்டா.... உங்க நாட்டுல உள்ள
முஸ்லீம் பொண்ணுங்க போட்டுக்கிற துணி.
இன்றைக்கு உன்னோட பேரை நான் மாத்தப்
போறேன். உன்னோட பேர் இனிமே யாஸ்மின்!
இதை நீ போத்திக்கணும்.... இது உன்னோட
கெளரவத்தை, மரியாதையை மட்டுமில்லை
உன்னோட உயிரையும் காப்பாத்தும். கடவுள்
இப்படித்தான் நமக்குத் துணை வருவாருன்னு நான்
நம்பறேன்.'
அவள் அவன் கால்களில் பணிந்து கும்பிட்
டாள். அவன் அவளை நெஞ்சோடு சேர்த்து ஆறுதல்
சொன்னான்.
'புறப்படம்மா, டாக்சி வந்துடுச்சி... இப்ப
கிளம்பினாத்தான் சாயங்காலத்துக்குள்ளே
வீட்டுக்குப் போய் ச ் சேரமுடியும்.'
அவளைத் துரிதப்படுத்திவிட்டு அவனும்
கிளம்பினான். அவனுக்குக் குடிப்பதற்குக் கோப்பி
யைக் கொண்டு வந்து கொடுத்தாள் கனிவுடன்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


120 வாழப் பிறந்தவள்
பார்த்தான். பார்வை யால் நன்றி சொன்னான். தனது
பொருட்களை அள்ளிக் கொண்டுபோய் வாசலில்
நின்ற டாக்சியில் வைத்துவிட்டு உள்ளே வந்தவன்,
முழுதும் போர்த்திய நிலையில் கண்கள் மட்டும்
திறந்திருக்க நீலாம்பரி நிற்பதைப் பார்த்தான்.
திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டான்.
'யாஸ்மின்... சீக்கிரமா வாம்மா...' அழைத்துக்
கொண்டுபோய் டாக்சியில் உட்கார வைத்தான்.
அவன் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான்.
'நாகப்பட்டினத்திலேர்ந்து தங்கச்சி வந்திருக்கு...
பினாங்கில இருக்கிற மச்சான் கிட்டே கொண்டு
போய் விடணும் தனியா அனுப்பறது நல்லா இல்லே...
அதான் அவசரமா லீவு போட்டுட்டுப் புறப்படறேன்.'
டிரைவர் கேட்காமலேயே சொன்னான். அவர்
சிரித்துக்கொண்டார்.
'அம்மாவைப் பார்த்தாலே அந்த ஊர்தான்னு
அப்படியே தெரியுதே... மாப்பிள்ளை எங்கே வேலை
செய்யறாரு தம்பி...'
உரிமையோடு கேட்கிறார். அவன் கொஞ்சம்
சுதாரித்துக்கொண்டான். குயின்ஸ் திரீட்ல சாப்பாட்
டுக் கடை வெச்சிருக்காரு. கூடமாட ஒத்தாசையா
இருக்கட்டுமேன்னுதான் தங்கச்சியும் வந்துருக்கு.'
டாக்சி பறந்தது, சாலை மேடுபள்ளங்களைப்
பற்றிக் கவலைப்படாமல் வண்டி சர்வசாதாரணமாக
ஒடியது.
"கிள்ளான்ல இருபது வருஷ சர்வீஸ் தம்பி...
நீங்க கவலைப்படாதீங்க... எத்தனை தடவை பினாங்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 121

குக்கு நான் போய்ட்டு வந்திருக்கேன் தெரியுமா...


தைப்பிங்க்ல போய் ரெஸ்ட் பண்ணுவோம்...
அப்புறமா வண்டியை எடுத்தா, ரெண்டுமணி
நேரத்தில போய் பினாங்கைப் புடிச்சிடுவேன்.'
டிரைவர் வீரப்பன் தன் திறமையைப் புகழ்ந்து
கொண்டிருந்தார் வண்டியின் ஆட்டம் தாலாட்டாக
இருக்க பின் சீட்டில் தனி ஆளாக அமர்ந்திருந்த
நீலாம்பரி தன்னை மறந்து உறங்கிப் போனாள்.
தைப்பிங் நகர் வந்து சேர்ந்ததும் வண்டியை
வழக்கமாக நிறுத்தும் இடத்தைத் தேடி
நிறுத்திவிட்டுத் தனக்கு அறிமுகமான சாப்பாட்டுக்
கடைக்கு அவர்களை அவர் அழைத்துச் சென்றார்.
வண்டியின் பின்னால் துங்கியவளை எழுப்பப்
போன சித்தார்த்தன், அவள் நெற்றியில் அழகாய்ப்
படிந்திருந்த சிவப்புப் பொட்டைத் தன் வலதுகைப்
பெருவிரலால் அழுத்தித் துடைத்தான். அவள்
பதறினாள்.
'பர்தாவைப் போட்டதுக்கப்புறம் நீ யாஸ்மின்...
நினைப்பில இருக்கட்டும்! அவன் அதட்டலோடு
வண்டியில் இருந்து இறங்கிச் சாப்பாட்டுக் கடைக்குப்
போனான். போய் முகத்தை நான்றாகக் கழுவித்
துடைத்துக்கொண்டு அமைதியாய் வந்து
உட்கார்ந்தாள்.
'இங்கே நல்ல சாப்பாடு இருக்கும்மா.. எல்லாம்
எங்கச் சாப்பாடுதான். ரசம் சாம்பார், மோர் எல்லாம்
கெடைக்கும்... பாயாசம் கூட உண்டு...
சாப்பிடுவீங்களா..?'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


வாழப்
122 பிறந்தவள்
அந்தக் குரலும் பரிவும் அவளுக்குத் தன் பிறந்த
வீட்டை நினைவுபடுத்தின. சமையல்காரர்
சோமாவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தின.
மணக்க மணக்க அவர் சமைத்துப் பரிமாறும் அந்த
அழகை நினைக்கும்போதே அவரைப் பார்த்து
உடனடியாக ஒரு கை அவர் கையால் சாப்பிட
வேண்டும்போல் இருந்தது. துக்கம் தொண்டையை
அடைக்க வெளிப்பட்ட அழுகையைச் சிரமப்பட்டு
அடக்கிக்கொண்டாள்.
'ஏன் சாப்பிடமாட்டாங்க... இங்கேதான் இந்த
மாதிரி. அங்கே எல்லார் வீடுகள்லேயும் சாப்பாடு
ஒரே மாதிரிதான். தங்கச்சிக்கு இந்தச் சாப்பாடு
ரொம்பப் பிடிக்கும்.'
சித்தார்த்தன் சமாளித்தான்; நீலாம்பரி புரிந்து
கொண்டாள்.
சிறிது நேர ஓய்வுக்குப் பின் டாக்சி புறப்பட்டது.
வீரப்பன் தனது கதைகளை அனுபவங்களைச்
சொல்லிக் கொண்டே வண்டியை ஒட்டினார்.
அவரது நீண்டகால சேவையின் ஒழுங்கு முறை
அவரது பயணத்திலேயே தெரிந்தது.
தனது வண்டியில் ஏறிவிட்டவர்களைத் தன்
உறவினர்களைப் போல் நினைத்து அவர்களின் மனம்
விரும்புகின்ற வகையில் பேசுவதில் வல்லவராக
இருந்தார். இடையிடையே நீலாம்பரிக்கு அறிவுரையும்
சொல்விக்கொண்டார்.
'பல இனமக்கள் வசிக்கின்ற ஊரும்மா! மனம்
வெச்சா மகராசனா வாழலாம். கொஞ்ச நாள்ல

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 123

உனக்கும் ஊரு புடிச்சிப் போயிடும். அப்புறம் புள்ளை


குட்டிங்க வந்து உன்னைப் போன்று கழுத்தைப்
புடிச்சித் தள்ளினாலும் நீ போகமாட்டே இங்கேயே
இருந்துடுவே.'
அவர் சொன்னதும் சித்தார்த்தன் அவளைத்
திரும்பிப் பார்த்தான். அவள் சட்டென்று
தலைகுனிந்து கொண்டாள். குறிப்பிட்ட முகவரி
வந்துவிட்டது. சொல்லி வைத்தது போல் டிரைவர்
வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினார். சாமான்
களை இறக்கி வைத்துவிட்டு வாடகையை வாங்கிக்
கொண்டு கிளம்பினார். பேசிய தொகைக்கும்
அதிகமாகவே சித்தார்த்தன் கொடுத்தான்.
திடுதிப்பென்று ஆள்வந்து நிற்பது கண்டு
வேலைக்காரப் பெண் ஓடிப்போய் சேதி சொல்ல,
வீட்டில் உள்ளவர்கள் தி புதிபு வென்று
வந்தார்கள் சித்தார்த்தன் முன்னால் நடக்க, நீலாம்பரி
பின்னால் தயங்கித் தயங்கி நடந்தாள். எதிரே வந்த
பெரியவர் ஆரத்தழுவிக் கொண்டார் அவனை.
மற்றவர்கள் புன்னகையினால் வரவேற்றார்கள்.
'அத்தா... இது நம்ம யாசின் நம்ம கூடத்தான்
இனிமே இருக்கும்.'
'அல்ஹம்துலில்லாஹ்' இப்ராகிம் இறைவனை
வேண்டி மகனை வாழ்த்தினார். அவளைப் பார்த்து,
'வாம்மா வா... பயப்படாம வா’ என்றழைத்தார்.
நீலாம்பரியின் உள்ளுணர்வுகள் ஸ்தம்பித்துப்
போயின. நடந்தாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


124 வாழப் பிறந்தவள்
சித்ததார்த்தன் யார் என்பது அவளுக்கு நன்கு
விளங்கிவிட்டது. அவன் ஒரு இஸ்லாமிய குடும்
பத்துப்பிள்ளை அவனது குடும்பம் பாரம்பரிய
முஸ்லிம் குடும்பம் அன்பான அப்பா அருமையான
தங்கை தங்கையின் பிள்ளைகள் என்று அவன் மேல்
அன்பைக் கொட்டுகின்றன. உறவுகள் இங்கே உண்டு
என்பதும் விளங்கிவிட்டது.
பீட்டர் தன் மகளை அழைத்து, 'ரஹ்மத்...
தங்கச்சியை உள்ளே கூட்டிட்டுப் போம்மா!' என்றார்.
அழகான பெண்ணொருத்தி வந்து அவளைத் தன்
கைகளுக்குள் சேர்த்துக்கொள்கிறாள். எல்லோரும்
உள்ளே போகிறார்கள்.
சித்தார்த்தன் அப்பாவையும் தங்கையையும்
அழைத்து நீலாம்பரியைப் பற்றிய முழு விபரத்தையும்
கூறுகிறான். அவர்களின் கண்களில், நீர் ததும்புகிறது.
அவள்மேல் பாசமும் பரிவும் அதிகமாகிறது.
'நீதான் சொல்லிட்டியேப்பா... இது நம்ம
யாசின்னு... அப்புறம் மறுப்பேது? இதுவும் நம்ம
புள்ளதான்... கண்ணுக்குக் கண்ணா இருந்த
மருமகளை இழந்து மகனோட கண்களையும் இழந்து
வாடிக் கிடந்த இந்தக் குடும்பத்தில் இந்தப்
புள்ளையாச்சும் சந்தோஷத்தைக் கொண்டு வரட்டும்.'
நீலாம்பரி அந்த மனிதர்களின் உண்மை
அன்பில் திணறிப் போனாள் ரஹ்மத் அவளை
அழைத்துப் போய் ஒர் அறையைக் காட்டி ‘நீங்க’
இனிமே இங்கே இருக்கலாம்: இது உங்க இடம்
என்று கூறி அவளுக்கான சில பொருள்களையும்
கொண்டுவந்து வைத்தாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 125
'நான் உங்களை விடச் சின்னவதான்! என்னை
நீ வா போன்னுகூப்பிடுங்க அப்பதான் எனக்குப்
பயம் போகும்.'
நீலாம்பரி தயங்கிக்கொண்டே சொல்கிறாள்.
அந்தப் பெண் அவளின் கன்னத்தில் தட்டி
விட்டு, 'வீட்டுக்குள்ளே இதுவேணாம்' என்று
முக்காட்டுத் துணியை அவள் மேலிருந்து எடுத்தாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


126 வாழப் பிறந்தவள்

15

நீலாம்பரியைப் பொறுத்தவரை காலம்


காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடிக்
கொண்டிருந்தது. அதன் வேகத்தில் அவள் எங்கெல்
லாமோ அடித்துச் செல்லப்பட்டு எதிர்பாராத
விதமாய் சித்தார்த்தன் என்ற நவீன யுகத்தின்
சிந்தனையாளன் கையில் ஒப்படைக்கப்பட்டாள்.
'அண்ணான் யூ.கே போய்ட்டு வந்ததிலேர்ந்து
ரொம்ப மாறிப்போச்சு... அதுக்கு மூட நம்பிக்கையில
பிடிப்பு கிடையாது. அதுக்காக நாத்திகமும் பேசாது.
இறைவனை நம்பனும் மதத்தை மதிக்கனும்கிறதில
அதுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையும் உறுதிப்
பாடும் உண்டு. எல்லா மதத்தையும் எல்லா தெய்வத்
தையும் மதிக்கும். ஒரு உண்மையான முஸ்லிமா அது
தன்னை எப்பவும் தற்காத்துக்கும்.
ரஹ்மத் தன் சகோதரனைப் பற்றி நீலாம்பரி
யிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். நீலாவின்
எண்ணமோ எங்கெல்லாமோ போய் வந்து
கொண்டிருந்தது. 'தர்மம் தலைகாக்கும்' என்று
சொல்லிக் கொண்டு வலது கை கொடுப்பதை இடது
கை அறியாவண்ணம் அள்ளிக் கொடுத்த தந்தையின்
தருமம்தான் இப்படி ஒரு பாதுகாப்பான இடத்தில்,
நல்ல மனிதர்கள் உள்ள இடத்தில் தன்னைக்
கொண்டு வந்து சேர்த்திருக்கவேண்டும் என்று
நம்பினாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 127

எடுத்த எடுப்பிலேயே, 'நான் உன் அண்ணன். நீ


என்னை நம்பு' என்று சொன்ன அந்த நல்லவனை
நினைத்தபோது இந்த மண்ணில் தனக்கும் ஒரு
சொந்தம் இருக்கின்றது என்ற பிடிப்பும் மனதில்
உருவானது.
'நீ ஊருக்குப் போகும் வரை நான் சொல்வதைக்
கேட்கனும், சொல்றபடிதான் நடக்கணும்’ என்ற
கண்டிப்பும் உரிமையும் வேறு யாராலும் சொல்ல
முடியாத வார்த்தை என்பதும், தூய நெஞ்சில்
இருந்துதான் அவை வரமுடியும் என்பதும் அவளுக்கு
நன்றாய்ப் புரிந்து போனது.
'தனக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தால்
இப்படித்தான் கண்டிப்பும் உரிமையுமாய்ப் பேசுவான்.
வழி நடத்துவான்' என்று நினைத்துக் கொண்டாள்.
அதே சமயம் அவன் சொன்ன அந்த வரிகள்
அவளைச் சிந்திக்கவைத்தன.
-
'நீ, உருக்குப் போய்ச் சேரும்வரை' பலமுறை
யோசித்தாள். ஆயிரமாயிரம் ஊர் மக்கள் உறவுகள்
முன்னிலையில் அவன் கையில் அவளைத் தாரை
வார்த்துக் கொடுத்து, அதன் பின் அவளை
அவனோடு வாழ மலேசியாவுக்கு அனுப்பிவைக்க
சென்னைக்கு வந்து நெஞ்சம் நிரம்பியப் பாசத்தோடும்.
நீர் நிரம்பிய கண்களோடும் அவளை அனைத்து
முத்தமிட்டு வழியனுப்பியபோது அவளின் அப்பா
சொன்ன அந்த வார்த்தைகள் நெற்றிப் பொட்டில்
நின்று அவளுக்கு நினைவுறுத்தின.
'பிறந்த மண்ணின் பெருமையைப் புகுந்த
மண்ணில் நீ நிலைக்க வைக்கவேண்டும் மகளே...

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


128 வாழப் பிறந்தவள்
எத்தனை துன்பமும் துயரமும் வந்தாலும் அவற்றை
எல்லாம் வென்று நிற்கவேண்டும் என்ற அவரின்
வேண்டுகோள்...
அந்த மண்ணின் பெருமை... தான் பிறந்த
குடும்பத்தின் பெருமை. எல்லாமே அவள் தலையில்
அல்லவா சுமத்தப்பட்டுள்ளது! ஏற்பட்டுவிட்ட
கஷ்டங்களையும், ஏமாற்றங்களையும் கண்டு அஞ்சி
நடுங்கி அழுது மாண்டுபோனால் ஏற்படப் போகும்
அவமானம் அவளுக்கு மட்டுமில்லையே! அது
அவளது மண்ணுக்கும் குடும்பத்துக்கும் சேர்ந்த
அவமானமாகத்தானே முடியும்.
யோசித்தாள்... தனக்கேற்பட்டுவிட்ட அவ
லத்தை நினைத்து தன்னை மாய்த்துக் கொள்வதோ...
அல்லது வாழா வெட்டியாகத் திரும்பிப்போவதோ
வடிகட்டின முட்டாள்தனம் என்று தெளிவு பிறந்தது
மனதில் முடிந்த முடிவாய் ஒரேமுடிவாய் மனதைத்
திடப்படுத்திக்கொண்டாள். பேனாவையும் பேப்பரை
யும் ரஹ்மத்திடம் கேட்டு வாங்கினாள். தனது
வீட்டுக்கு அப்பா அம்மாவுக்கு ஒரு கடிதம்
எழுதினாள் சித்தார்த்தனிடம் அதைக் கொடுத்துப்
படிக்கச் சொன்னாள். அவன் அவளை அதிசயமாய்ப்
பார்த்தான்; ஆனந்தமாய் பார்த்தான் செல்லமாய்
அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்தான்.
'அல்லாஹ் மகா பெரியவன்... உன்னோட
மனசுல இவ்வளவு சீக்கிரம் தெளிவை உண்டாக்
கினதுக்கு ஆண்டவனுக்குத்தான் நான் நன்றி
சொல்லனும் வல்ல நாயன் உனக்கு நல்ல வழியை
சீக்கிரமே காட்டிடுவாரும்மா.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 129
உற்சாகமாய் கடிதத்தை மடித்து ஒட்டினான்.
'இப்பவே அஞ்சல்ல சேத்துடுவேன். அத்தாகிட்டே
சொல்லி உனக்கு அடுத்த வேலையை ஆரம்பிச்
சாகனும்' என்றவனாய் வெளியே கிளம்பினான்.
மனம் சொன்னதை கை செய்தது. கடிதம்
போனபின்பு மனம் லேசாகிப் போயிருந்தது. அந்த
மண்ணிலிருந்து வந்த இரண்டு வாரத்தில் இன்றைக்
குத்தான் முழு நிம்மதியாய் அவள் இருந்தாள்.
ரஹ்மத்தின் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்பி
யதும் அவர்களோடு பொழுது கழியும்.
ரஹ்மத்தின் கணவர் சபாவில் இருந்த காரணத்
தினாலும் வயதாகிவிட்ட தந்தைக்கு பாதுகாப்பாக
யாருமில்லாத காரணத்தினாலும் ரஹ்மத் பினாங்கில்
தந்தையின் வீட்டிலேயே இருந்து வந்தாள்.
எதிர்பாராத விதமாய் சித்தார்த்தனின்
அண்ணன் ஆசாத் ஒரு விபத்தில் தன் மனைவியை
இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த
நேரம் அது அவனையும் கவனிக்க ஆளில்லாததால்
எல்லாப் பொறுப்புகளும் ரஹ்மத்தின் கையில்
சேர்ந்தது. அன்பும் பரிவும் அனுசரனையும் மிகுந்த
அந்தப் பெண் எல்லோருக்கும் தாயாக இருந்து
குடும்பத்தைக் கவனித்து வந்தாள்.
'நாளைக்கு நாமெல்லாம் அட்வென்டிஸ்ட்
மருத்துவ மனைக்குப் போகப் போறோம். யாஸ்மின்.
எங்க அண்ணனுக்கு நாளைக்குத்தான் கண் கட்டு
அவிழ்க்கப் போறாங்க அவருக்குப் பார்வை வர்றது
அபூர்வம்னு சொல்லிட்டாங்க... இருந்தாலும்
எல்லாருக்கும் மேல ஆண்டவன் இருக்கரே...'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


130 வாழப் பிறந்தவள்
கவலையோடு சொன்னாள் ரஹ்மத்.
நீலாம்பரிக்கு அவளைப் பார்க்கும்போது அழுகை
வந்தது. கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
'உனக்கு அண்ணன் எதுக்கு இந்தப் பேரு
வெச்சுதுன்னு உனக்குத் தெரியாது யாஸ்மின் எங்க
பெரியண்ணன் ஆஸாத் தன் கூடப்
பெண்ணைக் காதலிக்கக் கல் ய ாணம் பண் ணிக்
கிட்டாங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர்
அளவுக்கு மீறி நேசிச்சாங்க அண்ணன் அறிவியல்
பல்கலைக் கழகத்தில விரிவுரையாளரா இருந்தாரு.
யாஸ்மின் பெரிய மருத்துவமனையில டாக்டரா
இருந்துச்சு...
'அத்தா மேல அதுக்கு அவ்வளவு பிரியம்.
அத்தாவுக்கும் அவ்வளவு பாசம் வெச்சிருந்தாங்க.
ரெண்டுபேரும் அவுங்க வீட்டுக்குப் போய்ட்டு
பினாங்கு திரும்பற நேரத்தில மழையில கண்
தெரியாம கார் பாதை மாறிப் போய்...'
அழுகிறாள் ரஹ்மத், நீலாம்பரிக்கு அவளைத்
தேற்றமுடியாமல் சங்கடமாகிப் போனது.
'அழாதேக்கா... நிச்சயம் கடவுள் அவருக்கு
கண்ணைக் கொடுத்து நம்மையெல்லாம் பார்க்க
வெப்பாரு தைரியமா இரு...' என்று சமாதானப்
படுத்துகிறாள்.
'இல்லே யாஸ்மின்... அண்ணனுக்குக் கண்ணு
வந்ததும் அது யாஸ்மினைத்தான் முதல்ல கேட்கும்.
அதுதான் எங்களுக்குப் பயமா இருக்கு... யாஸ்மின்
செத்துப்போன விஷயம் தெரிஞ்சா அண்ணனுக்கு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 131

உயிரே போயிடும், யாஸ்மின்....! எதை நெனைச்சு


அழறதுன்னு தெரியலியே....' ரஹ்மத் உருகிக்
கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போது
கடவுள்மீதே கோபம் வருகிறது நீலாம்பரிக்கு ‘ஏன்
இப்படி எல்லாம் கடவுள் இந்த குடும்பத்தில்
கஷ்டத்தைக் கொடுத்து வேதனைப் பட வைக்கிறார்’.
என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.
புதிய சக்கர நாற்காலி ஒன்று வாங்கிக்கொண்டு
இன்னும் சில பொருட்களையும் தூக்கிக்கொண்டு
அத்தாவும் சித்தார்த்தனும் வந்தார்கள். ரஹ்மத்
அடுப்படியில் வேலையாய் இருந்தாள். பீட்டர்
கைப்பொருளை கீழே வைக்காமலேயே,
'யாஸ்மின்... இதை எடுத்துட்டுப் போய் ஆசாத்
ரூம்ல வைம்மா... என்றழைக்க, நீலாம்பரி வந்து அவர்
கையில் உள்ளதை வாங்கிக்கொண்டு, எங்கே போவது
என்று தெரியாமல் தடுமாறுகிறாள்.
'அத்தா கூப்பிட்டதும் ஓடிவந்து வாங்கிட்
டியே... அடுத்த வேலை தெரியாம முழிச்சிகிட்டு
நின்னா எப்படி?'
சித்தார்த்தன் வேடிக்கையாய்க் கேட்க,
அப்போதுதான் பீட்டர்க்குத் தன் தவறு புரிகிறது.
மறைந்த மருமகளின் நினைவு இன்னும் அவர்
நாக்குக்குகூட மாறவில்லை என்பதை நினைத்து
தன்னையே நொந்துகொள்கிறார்.
'என்னை மன்னிச்சுடும்மா... நான் என்னோட
மருமகளைக் கூப்பிடற நினைப்பில உன்னைக்
கூப்பிட்டுட்டேன். நீயும் வந்து ட்டேபரவா

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


132 வாழப் பிறந்தவள்
யில்லேம்மா! இங்கே வெச்சிட்டுப் போய் உன்
வேலையைப் பாரு... ரஹ்மத் வந்து எடுத்து
வைக்கட்டும்.'
அவளைச் சமாதானப்படுத்த அவர் முயன்
றாலும் ரஹ்மத் குறுக்கே வருகிறாள்.
'யாஸ்மின்... இதெல்லாம் எடுத்துகிட்டு
என்னோட வா... இதோ, இதுதான் அண்ணனோட
அறை இங்க வெச்சுட்டு, இதை எல்லாம்
ஒழுங்குபடுத்து யாஸ்மின் சொல்லிக்கொண்டே
அவள் நடக்க, நீலாம்பரி அவள் சொன்னதைச்
செய்தாள்.
மறுநாள் அவர்கள் மருத்துவமனைக்குச்
சொன்றார்கள் 'யாஸ்மினும் வரட்டுமே' என்று
பீட்டர் சொல்ல, அவளும் போனாள்.
ரஹ்மத் ஒவ்வொரு வினாடியும் இறைவனிடம்
வேண்டிக்கொண்டிருந்தாள். அண்ணனின்
அறிவொளி வீசும் கண்களைப் பார்க்கவேண்டும்
என்ற ஆசைகளுடன் மருத்துவ மனைக்குப்
புறப்பட்டாள்.
பீட்டர் எல்லாவற்றையும் இறைவன் கையில்
ஒப்படைத்துவிட்ட மனத்துடன் இருந்தார். சித்தார்த்
தனோ அண்ணனைப்பற்றிக் கவலை கொள்வதற்கு
எதுவுமே இல்லை என்ற நிலையில் இருந்தான்.
உயிரினும் மேலாக அவன் நேசித்த அவனது
கண்ணுக்குக் கண்ணாக இருந்த மனைவியே
போனபின் இனிப் பார்வை வந்தும் அவன் என்ன
சந்தோஷத்தை அடைந்துவிடப் போகிறான் என்ற

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 133
கேள்வியே அவனுள் வியாபித்திருந்தது. அவனைப்
பொறுத்த மட்டில் அண்ணனுக்குப் பார்வை
வந்தாலும் வராவிட்டாலும் எல்லாமே ஒன்றுதான்.
சித்தார்த்தனின் வாழ்க்கையில் படித்திராத,
பார்த்திராத, சந்தித்திராத காதல் ஜோடிகள்
அவர்கள் கட்டுப்பாடு, மரபுவழி என்றெல்லாம்
சாங்கியம் பேசுகின்ற பீட்டர் மலைத்துப் போக
வைத்த பெண் அந்த யாஸ்மின் அவளது குண
நலன்கள், அவளிடமிருந்த மேல்நாட்டு நாகரீக
பழக்கவழக்கங்களின் குறைகளை மறைத்தன.
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து படித்தவளாக
இருந்தும் நடுத்தர வசதியுள்ள சாதாரண குடும்பத்தில்
மருமகளாக வந்து அந்த வீட்டுக்கு ஒளிசிந்திக்
கொண்டிருந்த தீபம் அவள் அவள் மறைவைத்
தன்னாலேயே தாங்கிக்கொள்ள முடியாதபோது,
அவளோடு உயிராய்க்கலந்து போனவனால் எப்படித்
தாங்க முடியும்?
சித்தார்த்தன் டாக்டரிடம் போனான்.
வழக்கமாய் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள்.
'நம்ம கையில ஒண்னுமில்லை மிஸ்டர்
சித்தார்த்தன்! எல்லாம் ஆண்டவன் சித்தம்...! டாக்டர்
போய்விட்டார். அவன் மெளனமாய்த் திரும்பி
நடந்தான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


134 வாழப் பிறந்தவள்
16

மலையடிவாரத்தில் அங்கொன்றும் இங்


கொன்றுமாய்த் தெரிந்த பெரிய வீடுகளில் பீட்டரின்
விடும் ஒன்று தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில்
இருந்து வந்து பினாங்கில் சாதாரணமாய் ஒரு
துணிக்கடையை ஆரம்பித்து தனது நேர்மை,
விடாமுயற்சி, நாணயம் என்ற தன்மைகளால் நல்ல
நிலைக்கு உயர்ந்து மாநிலத்தில் மதிக்கக் கூடிய
மனிதராய் அவர் வாழ்ந்துகொண்டிருந்தார்.
தனது பிள்ளை ஒரு பெண்ணை, அதுவும்
தமிழ் நாட்டிலிருந்து ஒருவன் மணமுடித்து அழைத்து
வந்த பெண்ணை, அடைக்கலம் கொடுத்து தங்கள்
வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறான். சட்டம்
சமுதாயப் பாதுகாப்புக் கருதி அவளை இஸ்லாமியப்
பெண்ணைப் போல் பெயர் மாற்றி உடைமாற்றி
உலவ விட்டிருக்கிறான் என்பதெல்லாம் அவருக்கு
ஆரம்பத்தில் சர்வசாதாரணமாகத் தெரிந்தாலும்
நாளடைவில், அது அவரது மனசாட்சியை சோதனை
செய்ய ஆரம்பித்தது.
ரஹ்மத்தை அக்காவென்றும் சித்தார்த்தனை
அண்ணாவென்றும், தன்னை அப்பாவென்றும்
வாய்நிறையக் கூப்பிட்டு, அவர்கள் சாப்பிடும்
உணவைச் சாப்பிட்டு, அவர்கள் சொன்ன இடத்தில்
இருந்து அந்தப் பெண் நாட்களைக் கழிப்பது
அவருக்கு மனம் ஒப்ப மறுத்தது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 135
தான் ஏதோ தவறு செய்வதாக நினைத்தார்.
தனியாக பலமணி நேரம் உட்கார்ந்து சிந்தித்தார். ஒரு
முடிவுக்கு வந்தார். கடைக்குப் போய் சில
பொருட்களை அவளுக்காக வாங்கி வந்தார். அவளை
அழைத்து அவளிடம் கொடுத்தார். அவள் அவற்றைப்
பார்த்து பயந்து பின் வாங்கினாள்.
வேண்டாம்.... இதெல்லாம் எனக்கு வேண்டாம்.
எனக்கு இந்த வேஷத்தில் இருந்த நம்பிக்கை
யெல்லாம் செத்துப் போச்சு அண்ணன் சித்தார்த்
தன்னு பேரு வெச்சிருந்தாலும் அதுக்குள்ளே யார்
இருக்காங்கன்னு அதுக்கே நல்லாப் புரியும் அது
மாதிரி என்னோட உடையும் தோற்றமும் பேரும்
மாறிப் போனாலும் எனக்குள்ளே யார் இருந்து
என்னை வழி நடத்துறாங்கன்னு எனக்குத்
தெரியும்பா...'
அவளது உறுதிப்பாட்டை அவர் கலைக்க
விரும்பவில்லை.
'உன்னோட விருப்பம் யாஸ்மின். நீ எப்படி
நெனைச்சாலும் உன்னை எங்க குடும்பத்தில ஒரு
ஆளா நாங்க முடிவு பண்ணிட்டோம். ஆனா நீ இந்த
நாட்டிலேயே வாழனும்னா அதுக்குன்னு சில
விதமுறைகள் இருக்கு அதையெல்லாம் நீ கடை
பிடிச்சாகனும் இல்லேன்னா, உன்னை அரசாங்கமே
நாட்டை விட்டு வெளியேறச் சொல்லிடும்.
அவள் அச்சத்துடன் பார்க்கிறாள். அவர்
சொன்ன விஷயம் விளங்கவில்லை என்பதை முகம்
காட்டியது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


136 வாழப் பிறந்தவள்

'ஆமாம்மா... நீ உன் புருஷனோட அழைப்பின்


பேர்லதான் இந்த நாட்டுக்குள்ள வந்திருக்கே உனக்கு
இங்கே யாரும் பாதுகாப்பு இல்லேன்னா நீ நிரந்தரமா
தங்க முடியாது.... சுதந்திரமா நடமாடவும்
'அப்ப, நான் என்னப்பா செய்யணும்! கவலை
யோடு கேட்கிறாள் நீலாம்பரி அவர் கருணையோடு
அவளைப் பார்க்கிறார். அருகில் அழைத்து அமர்த்திக்
கொள்கிறார்.
'நான் சொல்றதைக் கேட்டு நீ பயப்படவோ
கவலைப்படவோ கூடாது மகளே! இந்த நாட்டுச்
சட்டப்படி அன்னிய நாட்டுப் பிரஜை இந்த நாட்டுல
தங்கலாம்னா அதுக்கு ஒரேவழி இந்த நாட்டுப்
பிரஜையான ஆண்மகனைக் கல்யாணம் பண்ணிக்
கணும் அதிர்ஷ்டவசமா வெளிநாட்டுப் பெண்களுக்
குத்தான் அந்த வாய்ப்பு உண்டு, அப்படிக் கல்யாணம்
பண்ணிக்கிட்ட பொண்ணு, புருஷனோட நிரந்தரமா
இங்கேயே தங்கிடணும். சொல்லிவிட்டு அவளைப்
பார்க்கிறார் பீட்டர்.
'அப்பா'... அவள் முகம் பயத்தால் இறுகிப்
போகிறது.
'பயப்படாதே மகளே... இது இந்த நாட்டுச்
சட்டம். கணவனும் மனைவியும் குறைந்தது 10
வருடகாலம் இங்கேயே தங்கிக் குடும்பம் நடத்திக்
குழந்தைகள் னு வந்துட்டா அப்புறம்
உரிமையும் கிடைச்சிடும். இந்த நாட்டுல உரிமையோட
வாழக்கூடிய சகல வாய்ப்பு வசதிகளும் கிடைச்சிடும்.
அதனால நீ நான் சொல்லப் போற சில விஷயங்கள
யோசிக்கனும் உன்னோட விருப்பத்துக்கு மாறா

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 137
நானோ என் பிள்ளைகளோ எதுவும் செய்ய
மாட்டோம்.'
நீலாம்பரி மெளனமாய் இருந்தாள்; அப்புறம்
அவரிடம் பேசினாள்.
'சொல்லுங்கப்பா... நீங்க எதைச் செய்தாலும்
எனக்கு நல்லதைத்தான் செய்வீங்க, தாராளமா
சொல்லுங்க உறுதியாய்ச் சொல்லும் அவளை
மனதுக்குள் பாராட்டிக்கொண்டார் பீட்டர்.
'யாஸ்மின்... முதல்ல நீ உன்னோட அப்பா
அம்மா சொந்த பந்தம் குடும்பம் எல்லாத்தையும்
பத்துவருஷத்துக்கு மறந்துடனும் அல்லது
மறக்கத்தயாராகனும் அடுத்தது, நீ உன்னோட
சொந்த நன்மைக்காகப் படிக்கனும் மலாய் ஆங்கிலம்
ரெண்டையும் எழுதவும் பேசவும் கத்துக்கணும்.
அப்புறம் நீ வேலைக்குப் போகணும் இதையெல்லாம்
செய்யறதுக்கு முன்னால நீ கல்யாணம்
பண்ணிக்கனும் ஒரு இந்துப் பையனோ அல்லது
ஒரு முஸ்லிம் பையனோ யாரோ ஒரு பிள்ளைக்கு நீ
மனைவியாகணும்...
'உன்னைப் படிக்க வைக்கிறதும் வேலைக்கு
அனுப்பறதும் உனக்கு மாப்பிள்ளை பார்த்துக்
கல்யாணம் பண்ணி வைக்கிறதும் என்னோட வேலை...
ஊரையும் உறவையும் மறந்து மனசில உறுதியைக்
கொண்டு வர வேண்டியது உன்னோட வேலை இது
கட்டாயமோ வற்புறுத்தலோ இல்லை. உனக்கு
விருப்பம் இருந்தாதான்... இல்லேன்னா, அடுத்த
வாரமே நீ ஊருக்குப் போய்ச் சேர நான் ஏற்பாடு
பண்ணிடுவேன்.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


138 வாழப் பிறந்தவள்
அவள் சிலையாய் இறுகிப்போனாள் அவரது
ஒவ்வொரு வார்த்தையும் அவளால் நினைத்தும்
பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. அவள்
முகத்தில் கண்ட கலவரத்தால், அங்கேயே அவளை
விட்டு விட்டு அவர் எழுந்து போனார்.
மாமல்லபுரத்துக் கடலோரப் பாறைகளின் மேல்
வந்து மோதிக் செல்லும் அலைகளின் பேரிரைச்சல்
களாய் அவ்வார்த்தைகள் அவள் காதில் வந்து
மோதிக் கொண்டிருந்தன.
'இந்த ஊர்ல ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்
கணும் பத்துவருஷம் இங்கேயே தங்கணும். எவ்வளவு
பயங்கரமான வார்த்தைகள்... நினைக்கும் போதே
பயம் தொண்டையை அடைத்தது. தனக்கு நடந்து
முடிந்த பொம்மைக் கல்யாணமும் கூடவே
நினைவுக்கு வருகின்றது.
எப்படி எல்லாம் எதிர்காலத்தைப் பற்றி அவள்
கனவு கண்டு கொண்டிருந்த பருவம் அது தன்
படிப்பை முடித்துவிட்டு ஒரு நைட்டிங்க் கேல்ளாக...
ஒரு இந்திரா காந்தியாகத் தனது தாய் மண்ணுக்கு
சேவை செய்யவேண்டும் என்று கண்டு கொண்டி
ருந்த கனவை எல்லாம் குறைக் காற்றாய் வந்து
மோதிக் கலைத்து அல்லவா அவன் அவள்
கழுத்திலே தாலிகட்டினான்.
'என் படிப்பு போகிறதப்பா' என்று அழுத
போது, 'மாப்பிள்ளை படிக்க வைப்பாராம்மா' என்று
எவ்வளவு நம்பிக்கையோடு அவளுக்கு அப்பா
ஆறுதல் சொன்னார்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 139

படிக்க வைப்பதாகச் சொல்லிவிட்டு இங்கே


வந்து அல்லும் பகலும் அனலில் புழுவாய்த் துடிக்க
வைத்தவனல்லவா அவன்....! ஆனால்,
இங்கே படைத்தவனின் மறுஉருவமாய் வந்து
நிற்கின்ற பீட்டர் சொல்கிறாரே....
'உன்னைப் படிக்க வைக்கிறேன், சுயமாய்
சம்பாதிக்க வைக்கிறேன்; சொந்தக் காலில் நிற்க
வைக்கிறேன்.... 'என்று.
அவர் சொல்வதைக் கேட்டுப் படித்து
வேலையும் பார்க்க ஆரம்பித்துவிட்டால் அடுத்த
வருக்குப் பாரமில்லாமல் வாழ்க்கையை ஓட்டலாமே!
நினைக்க சந்தோஷமாகத்தான் இருந்தது.
ஆனால் அதற்காகத் திருமணம் செய்துகொண்டு...
பத்துவருட.. காலம் ஊரையும் உற்றார் உறவினரையும்
மறப்பதா? மனம் கேள்வியைப் போட்டது. பதிலையும்
அதுவே சொன்னது.
'மறந்துவிடு... உன்னைப்பற்றி... உன் பொன்னான
எதிர்காலத்தைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்
படாமல், தங்களையும் தங்கள் கெளரவத்தையும்
மட்டுமே நினைத்து உன்னைக் கண்காணாத
இடத்தில் தள்ளிவிட்ட அவர்களை மறந்துவிடு.... நீ
வாழவேண்டும்.... நிறைய சாதிக்க வேண்டும்; உன்னை
இந்த மண்ணுக்கு இறைவன் எதற்காக அனுப்பி
னாரோ அதைச் செய்தே தீரவேண்டும் கிடைத்துள்ள
வாய்ப்பை வாழ்வைப் புறக்கணித்துவிடாதே....
நடந்தவை கடந்தவையாகப் போகட்டும். இனி
நடக்கவிருப்பவை நல்லவையாக மலரட்டும்.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


140 வாழப் பிறந்தவள்
நீலாம்பரி தெளிவு பெற்றாள். ஆயிரம் முறை
வந்துவந்து மோதும் பழைய நினைவுகளை மூட்டைக்
கட்டி ஒரு மூலையில் போட்டுவிட்டுப் புதிய
முடிவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள
வேண்டும். அதற்கு இன்னும் சில நாட்கள் தனக்கு
அவகாசம் தேவைப்படும் என்று நினைத்தாள். அவள்
சிந்தனையை வாசலில் வந்து நின்ற தபால்காரர்.
கலைத்துவிடுகிறார். ஒடிப்போய் கடிதத்தை வாங்கிக்
கொண்டு உள்ளே போகிறாள்.
எதிர்பட்ட பீட்டர் அதை வாங்கிப் படிக்கிறார்
முகம் முழுவதும் கவலை ரேகைகள் படர்கின்றன.
கையில் கடிதத்தை வைத்துக்கொண்டு இங்கும்
அங்குமாய் நடக்கிறார். அவரையே பார்த்து நிற்கும்
நீலாம்பரியை அப்போதுதான் நினைக்கிறார்.
'ஒண்ணுமில்லேம்மா.. ரஹ்மத்தோட கணவர்
லெட்டர் போட்டுருக்காரு... யாஸ்மின் போனதுக்குப்
புறம் இந்தவீட்டுல எனக்கு யாருமில்லேன்னு ரஹ்மத்
தங்கியிருந்துச்சு மருமகப்பிள்ளைக்கு சாப்பாடு
சிரமமா இருக்குதாம். ரஹ்மத்தை உடனடியா
அனுப்பி வைக்கணும்.
கையில் கடிதத்துடன் உள்ளே போனார். விபரம்
அறிந்த ரஹ்மத் கலக்கமடைந்தாள்.
'எப்படி அத்தா நான் இந்த நேரத்தில
அவர்கிட்டே போறது?. அண்ணன் ஆசாத் இன்னும்
நல்ல நிலைக்கு வர லியே. அதோட
இல்லைன்னு அண்ணனுக்கும் தெரியாதே. நீங்க
எப்படி சமாளிப்பீங்க?'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 141

ஒரு பொண்ணுக்குரிய கலக்கம் அவளிடமிருந்து


வெளிப்பட்டது.
'யாஸ்மின் இல்லேன்னு யாரும்மா சொன்
னாங்க... இதோ இங்கே இல்லியா யாஸ்மின்...!?'
தன் பின்னால் வந்து கொண்டிருந்த நீலாம்பரி
யைப் பிடித்து அவள் முன் நிறுத்துகிறார். ரஸ்மத்
அதிர்ந்து போய் அவரைப் பார்க்கிறார்.
'முள்ளை முள்ளாலத்தான் எடுக்கணும்.
வைரத்தை வைரத்தாலத்தான் வெட்டணும்.
காயப்பட்ட நெஞ்சுக்குத்தான் காயத்தோட வலி
தெரியும். நீ போய் உன்னோட பொருள்கள
எடுத்துக்கிட்டுப் புறப்படத் தயாராகு... போ'.
அழுத்தந் திருத்தமாய் இப்ராகிம் கூற எதுவும்
சொல்லத் தெரியாமல் நீலாம்பரி மலைத்து நிற்க,
உணர்ச்சி வெள்ளமாய் ரஹ்மத் அவளை,
'யாஸ்மின்... யாஸ்மின்..' என்று கூறி ஆரத்
தழுவிக் கொண்டாள்.
அடுத்த நிமிடம் மாடி வராந்தாவில் இருந்து
ஆசாத்தின் குரல் வேகமாய் ஒலிக்கிறது. கூடவே
படியை நோக்கிச் சக்கரநாற்காலி உருண்டு வர...
ஏக்கம் நிறைந்த குரலில்,
'யாஸ்மின்.. மைடியர் யாஸ்மின்' அழைத்துக்
கொண்டே வண்டியிலிருந்து எழுந்து நடந்தவன்,
யாரும் எதிர்பாராத வண்ணம் படிகளில்
உருள்கிறான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


142 வாழப் பிறந்தவள்

'ஆசாத்' என்று பீட்டர் அலற... 'அண்ணா'


என்று துடித்துபோய் ரஹ்மத் பதற. கண்ணிமைக்கும்
நேரத்தில் ஓடிப்போய் அவனைத் தன்மடியில்
தாங்குகிறாள் நீலாம்பரி.
நெற்றிப் பொட்டிலே சிராய்ப்புகள் கண்டு
குருதி கசிய தன் சேலைத்தலைப்பால் அதை அவள்
ஒத்தி எடுக்கிறாள். தன் மகளை நெஞ்சோடு
மகா
அனைத்து, 'நீ கிளம்பும்மா.. அல்லாஹ்,
கருணையாளன். அவன் மகாப் பெரியவன்னு
நிரூபிச்சுட்டான். நீ புறப்படு...'. மகளைத் துரிதப்
படுத்துகிறார் பீட்டர்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 143

17

இயல்பாகவே குடிகொண்டிருந்த சேவை


மனப்பான்மையும் பரிவுணர்ச்சியும் அவளைத்
தன்னை மறக்க வைக்க மாடிப்படிகளிலே உருண்ட
வனை ஒடிப்போய் அள்ளி மடியில் போட்டுக்
கொண்டு ஒரு தாயின் தவிப்புடன் அவனைத் தாங்கிக்
கொண்டவளுக்கு அவனது உறவுகள் ஓடிவந்து
அவளைத் தூக்கிப் போய் படுக்க வைத்து ஆறுதல்
சொல்லி, ஆசுவாசப் படுத்திய பின்புதான் தனது
அவசரம் புரிகிறது.
''ச்சே.. என்ன மடத்தனமான செயல்! முன்பின்
அறிமுகமில்லாத ஆடவனைத் தொட்டுத் தூக்கி
மடியில் கிடத்தி, முந்தானையால் நெற்றியைத்
துடைத்து...' நினைக்கும்போதே மேனி நடுங்கியது
அவளுக்கு உடம்பு முழுவதும் பெட்ரோல் ஊற்றிக்
கொளுத்திக் கொண்டுவிடலாம் போல் மனம்
தகித்தது.
மறுகணமே மனச்சாட்சி கேள்விகளை வீசத்
தொடங்கியது.
'அடிப் பைத்தியக்காரி.... உன் உடன்பிறப்பாய்
உன்
இருந்தால் நீ சம்மா இருந்திருப்பாயா?
உறவுக்காரனாய் இருந்திருந்தால் நீ பார்த்துக்
கொண்டிருப்பாயா. பெண்மை என்பது தாய்மை
யல்லவா. ஆபத்துக் காலத்தில அது சாதி, மத இன
பேதம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காதே.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


144 வாழப் பிறந்தவள்
பகைவனாய் இருந்தாலும் பரிவு காட்டுமே... அதிலும்
நீ யாரென்று கேட்கமலேயே உன்னையும் தன்
குடும்பத்துப் பெண்ணா சேர்த்துக் கொண்ட
குடும்பமாச்சே....'
நறுக்கென்று ஊசி தைத்தது போன்ற வலி.
அவளுக்கும் மனமுண்டு என்பதை அந்தவலி
நினைவுறுத்தியது.
'ஆமாம்.... தான் யாரென்று தெரியா காலத்தில
சித்தார்த்தனும்.... தனது அவலம் புரியாமலேயே
பீட்டரும் அவளுக்கு உதவியதை நினைத்தாள்.
நெஞ்சுக்குள் சிலிர்த்தது. கண்களில் நீர் நிரம்பியது.
சுதாரித்துக் கொண்டாள்.
அடுத்தவருடைய கஷ்டங்களைப் பகிர்ந்து
கொள்வதில் அந்த வீட்டில் இருந்த மூன்று பேருமே
ஒருவருக்கொருவர் சளைத்தவராக இல்லை என்பதை
வந்த சில நாட்களிலேயே அனுபவப் பூர்வமாய்
உணர்ந்து கொண்ட நீலாம்பரிக்கு தானும் ஏதாவது
ஒரு வகையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற
எண்ணம் இப்போது உருவாகத் தொடங்கியது.
அதை எவ்வகையில் செயல்படுத்துவது என்று
காத்திருந்தாள்.
ரஹமத் தன் கணவனுக்குத் துணையாக
அவனிடம் போய்விட்டாள். குழந்தைகளும்
போய்விட்டார்கள். சித்தார்த்தனும் வேலைக்குப்
போய்விட்டான் வீட்டில் பீட்டரும் ஆசாத்
நீலாம்பரி மட்டுமே இருந்தார்கள் அடிக்கடி
அத்தாவிடம் ஆசாத் அந்த மென்மையான

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 145
பெண்ணைப் பற்றிக் கேட்பான். விழிகள் இல்லை
என்றாலும் வாயின் மொழிகள் அவனுக்குப்
பார்வையாய் இருந்தன.
'யாருப்பா அந்தப் பொண்ணு.... சந்தனமாலை
மாதிரி இருக்கிறாளே... வெறுங்காலோட நடந்தாலும்
அதிலேகூட ஒருவித ஒசை இருக்கப்பா.. அவளோட
அசைவுகள் அடிக்கடி செத்துப்போன யாஸ்மினை
ஞாபகப் படுத்துதுப்பா..'
'யா அல்லாஹ்' பீட்டர் தவித்துப் போவார்.
'அது ஊர்லேர்ந்து வந்த பிள்ளையப்பா....
இந்துப் பெண்... அப்பாவித்தனமானது ஆண்டவன்
கருணையோட அவளுக்கு எல்லா ஐஸ்வர்யங்
களையும் அள்ளி வழங்கியிருக்கிறார். ஆனா
வாழ்வுதான் கெடைக்காமப் போச்சு. யாரோ ஒரு
கபோதி கையில இந்தக் காவியத்தைக் கடவுள்
கொடுத்துட்டான். சின்னாப் பின்னமாயிட்டா....
தம்பிதான் இங்கே கொண்டுவந்தான் நம்ம
பிள்ளையாவே மாறிடுச்சு... அவ்வளவு அடக்கம்
பணிவு.'
சிறிது நேரம் மெளனமாய் இருந்துவிட்டு
ஆசாத் தன் தந்தையிடம் கேட்டான்.
'எல்லா கபோதிகளும் ஒரே மாதிரி இருக்க
மாட்டாங்க அத்தா..!. யாஸ்மின் போய்ட்டாளேன்னு
கவலைப்பட்ட நீங்கள்லாம் இந்தப் பொண்ணுக்கு
அவபேரை வெச்சு அவளாகவே நினைக்கிறப்ப நான்
மட்டும் ஏன் வேறு விதமா நெனைக்கனும். நானும்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


146 வாழப் பிறந்தவள்
அவளை என்னோட யாஸ்மின்னா ஏன் ஏத்துக்க
கூடாது....?'
'மகனே... நீ என்னப்பா சொல்றே....! அது
எப்படி நடக்கும்?'
"ஏன் நடக்காது.... நாம மனசு வெச்சா எல்லாமே
நடக்கும். நீங்க சொல்லுங்க... நான் நெனைக்கிறது
தவறா.... நான் ஆசை ஆசையா வெச்சிருந்த,
என்னோட யாஸ்மின் எனக்கில்லேன்னு ஆனதுக்கப்
பறம் இந்தப் பெண்ணை அந்த இறைவன் எனக்
காகவே அனுப்பியிருக்கிறான்னு நான் ஏன் முடிவு
பண்ணக் கூடாது?/
'வாழ்க்கையில் ஆதரவு இல்லாம கஷ்டப்
படுறவங்களுக்கு உதவி செய்யறது மட்டும் போதுமா?
அத்தா. அவங்களுக்கு முழுமையான வாழ்க்கையைக்
கொடுக்கிற வாய்ப்பும் வசதியும் நமக்கிருந்தும் நாம்
ஏன் அதை செய்யக் கூடாது...!'
மகனின் அழுத்தமான வார்த்தைகள் அவரைச்
சிந்திக்க வைத்தன.
'உன்னோட நீண்ட நேரம் பேசிக்கிட்டே
இருந்திட்டேன் மகனே! நீ ஏதாச்சும் சாப்பிடணுமே...
கொஞ்சம் இரு கீழே போய் சாப்பாடு கொண்டு
வர்றேன்.'
பீட்டர் பேச்சைத் திசை திருப்ப எண்ணி வேறு
விஷயத்துக்குப் போகிறார். ஆனால் அதுவே
அவனுக்கு வாய்ப்பாகிப் போகின்றது. இடம் பார்த்து
வார்த்தையைப் போடுகிறான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 147
'நீங்க ஏன் கீழே போகணும் அத்தா.... அதான்
யாஸ்மின் இருக்கே... எனக்கு ரொட்டியும் பாலும்
போதும் கொண்டுவரச் சொல்லுங்க.'
மறுக்க முடியவில்லை அவரால் கீழே
பத்திரிகை படித்துக் கொண்டிருந்த நீலாம்பரியை
அழைக்கிறார். மகனுக்காக ரொட்டியும் பாலும்
கொண்டுவரப் பணிக்கிறார். அவன் தனக்குக்
கிடைத்த முதல் வெற்றியை அவருக்கு நினைவுறுத்து
கிறான்.
'இப்ப பாருங்க... சாதாரண ரொட்டிக்கும்
பாலுக்குமே ஒரு பொண்ணு தேவைப்படறா... இந்தக்
கபோதிக்கு... கண்ணில்லாத குருடனுக்கு நீங்க
எவ்வளவு காலம் காவல் இருக்கப் போறீங்க....
சொல்லுங்க.'
அவர் தடுமாறிப் போகிறார். மகனை மார்போடு
அணைத்துக் கொள்கிறார்.
'என்னை மன்னிச்சிடு மகனே.... உன்னை நான்
தவிக்க விடமாட்டேன். உனக்குத் தகுதியான
துணையை நானே சீக்கிரம் கொண்டுவருவேன்..'
'இல்லத்தா.... எனக்குன்னு இந்தப் பெண்தான்
வேணும்.'
'நீ சொன்னாப் போதுமா ஆசாத். அவ விரும்ப
வேண்டாமா.... அதிலேயும் அவ சுத்தமான இந்துப்
பொண்ணாச்சே.'
''நீங்க சொன்னா அந்தப் பொண்ணு கேட்பா
அத்தா அவளோட நுனி விரல்பட்டதுமே எனக்கு
அம்மா நெனைப்புதான் வந்துச்சி. அந்த அளவுக்கு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


148 வாழப் பிறந்தவள்
அவமனசில இரக்க குணம் நிறைஞ்சிருக்கும். இந்தப்
பார்வையில்லாதவனுக்கு அந்தப் பரிவுதான் வேணும்.'
அந்த நேரத்தில் நீலாம்பரி படியேறி வருகிறாள்.
அவளது ஆடையில் படிந்திருக்கும் சுகந்த மணம்
அவன் நாசிக்குள் புகுந்து ஒருவித பரபரப்பை
ஏற்படுத்துகிறது. 'அத்தா.... அவதான் வர்ரா....
கேளுங்கத்தா... எனக்காக அவ மாறி வருவாளான்னு
கேளுங்க.'
அவன் அவரை உசுப்புகிறான். அவனது
திரண்ட தோள்களைத் தன் கைகளால் அழுத்தி
ஆறுதல் படுத்துகிறார் பீட்டர். கொண்டுவந்த
உணவை மேசையில் வைத்துவிட்டு அவனருகில்
வந்தவள்.
'இப்பவே சாப்பிடுறீங்களா.. இல்லே அப்புறமா
சாப்பிடப் போறீங்களா..? மென்மையாய்க்
கேட்கிறாள். பீட்டர். ஆழமாய் அவளைப்
பார்க்கிறார். அவளது கண்களில் மின்னும் அன்பு
அவரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
'உங்களுக்கும் வெச்சிருக்கேன் அத்தா... நீங்களும்
சாப்பிடுங்க..'
சொல்லிக் கொண்டே தட்டுகளில் பரிமாறு
கிறாள். அவருக்காக எடுத்து வைத்ததை அவரிடம்
கொடுக்கிறாள். இன்னொரு தட்டில் இருந்ததை
எடுத்துக்கொண்டு அவனிடம் வருகிறாள்.
'ரொம்ப நேரம் வெச்சிருந்தா ஆறிப் போயிடும்.
இப்பவே நீங்களும் சாப்பிடுங்க. உங்களுக்குச் சிரமம்
இல்லாமே நானே ஊட்டிவிடுறேன்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 149
அவன் சிறுபிள்ளையாய் வாய் திறக்க அவள்
தாயாகி அவனுக்கு அந்த ரொட்டித் துண்டுகளை
வாயில் ஊட்டுகிறாள். தேவைப்படும்போது தண்ணீர்
கொடுக்கிறாள். அந்தக் காட்சியைக் கண்டு பேச வாய்
வராமல் அமைதியாய் பீட்டர் அமர்ந்திருக்கிறார்.
திடீரென்று அவருக்குள் ஓர் ஆசை.
'மகளே யாஸ்மின்..... இந்த அன்பும் ஆதரவும்
எத்தனை நாளைக்கும்மா. இதை வாழ்நாள் பூரா
அவனுக்கு உன்னால கொடுக்க முடியுமா?’
அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்கிறாள் கையிலே
இருந்த உணவு அப்படியே இருக்க விழிகள்
நிலைக்கின்றன.
'பயப்படாதேம்மா... இப்ப அவசர ஆபத்துக்கு
அவனுக்கு இப்படி எல்லாம் நீ கை கொடுத்தா
அப்புறம் எப்பவும் அவன் உன்னோட உதவியை
தேடலாமில்லியா. அதனாலத்தான் கேட்கறேன்.'
அவள் கொஞ்சம் அமைதியானாள்.
மனதுக்குள் புதிய புதிய அலைகளின் எழுச்சிகள்
உருவாகின்றன. வார்த்தைகள் வராமல் கொஞ்சம்
திணறிப் போகிறாள்.
'என்னம்மா பயந்துட்டியா... எனக்கு நீ செய்ற
உதவியெல்லாம் சாதாரணமா ஒரு பொண்ணு
தகப்பனுக்கு செய்றதுதான். நான் இன்னும் கொஞ்ச
நாளைக்குத்தான் இருப்பேன். ஆனா ஆசாத் அப்படி
இல்லேம்மா அவன் இன்னும் நீண்ட நாளைக்கு
வாழப் போறவன்! அதனாலத்தான் அப்படிக்
கேட்டேன். உன்னால அவன் ஆயுட்காலம்
முழுசுக்கும் கைகொடுக்க முடியுமா?'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


150 வாழப் பிறந்தவள்

இப்போது நீலாம்பரியின் நெஞ்சில் ஆர்ப்பரித்த


அலைகளின் ஓசைகள் அடங்குகின்றன. முகத்தில்
தெளிவு பிறக்கின்றது. இதழ்களிலும் குறுநகை
தவழ்கின்றது. கீழே குனிந்து கையில் தட்டை
எடுக்கிறாள்.
'முடியும்... என்னோட ஆயுட்காலம் வரைக்கும்
இவருக்கு என்னால கை கொடுக்க முடியும்.'
உறுதியும் அழுத்தமுமாய் வருகிறது வார்த்தை
கள் பீட்டர் திகைத்துப் போகிறார். ஆசாத்
கண்களில் இருந்து நீர்பெருகி வழிகின்றது. பேச
முடியாமல் தடுமாறி அவளது கைகளைப்
பற்றுகிறான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 151

18

சித்தார்த்தன் என்ற புதுமை மனிதன் வீட்டுக்குத்


திரும்பியிருந்தான்.
வீட்டில் அப்படி ஏதும் அதிசயம் நிகழ்ந்து
போனதாய் அவனுக்குப் புலப்படவில்லை. மனித
நேயம், நாகரீக வளர்ச்சி விஞ்ஞான உலகின்
அற்புதங்கள் என்று போய்க் கொண்டிருப்பவன்
அவன்.
வேலையில்லாத வெட்டிப் பேர்வழிகளின்
பொழுது போக்குக் கதைகளையோ திண்ணைப்
பேச்சையோ கொஞ்சமும் பொருட்படுத்தாதவன்.
தந்தையின் தொலைபேசி அழைப்பு அவனை ஓடிவர
வைத்தது. மகனைத் தனியே அழைத்து தன் மனதில்
புதிதாய் முளைத்துள்ள ஒரு முடிவை வெளியிட்டார்.
சட்டென்று முகம் மாறிப் போய் அப்புறம் சம
நிலைக்குத் திரும்பினான் அவன் அந்தக் கண
நேரத்தில் ஏதோ ஒன்று அவனிடமிருந்து
வெளிப்பட்டு ஒடி மறைந்தது.
'யாஸ்மின் இந்த நாட்டிலேயே நிரந்தரமா
தங்கணுமின்னா அவளுக்கு உடனடியாக நிக்காஹ்
பண்ணியாகணும்பா. அந்தப் பொண்ணு அதை
ஏத்துக்குவாளான்னு தெரியலே அவ என்னான்னா
ஆயுட்காலம் பூரா உன் அண்ணனுக்கே சேவை
செய்யப் போறேன்னு சொல்றா. நான் என்ன
சொன்னாலும் கேட்கமாட்டேன்கிறா. ஆனா

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


152 வாழப் பிறந்தவள்
உன்னோட அண்ணன் மனசில அவ வேற விதமா
பதிவாயிருக்கா மகனே!
தந்தையின் பேச்சில். கடைசிவரியில் கண்ட
கவலை அவனை அழுத்தியது என்ன அது என்பதை
அறிந்து கொள்வதில் மனம் ஆர்வம் காட்டியது.
அதற்குள் பீட்டர் முந்திக்கொண்டார்.
'என்னோட யாஸ்மின் செத்துப் போகலேன்
கிறான். என் எதிர்காலத்துக்கு இவதான் வேணுமிங்கி
றான்.பா...'
மறுபடியும் கவலையின் தேக்கம் சித்தார்த்தன்
புரிந்து கொண்டான். அவனுடைய அண்ணனை
நன்றாகப் புரிந்து வைத்திருப்பவன் தான் விரும்பிய
பொருளுக்காக வருஷக் கணக்காய் காத்துக்
கிடக்கவும் தயாராக உள்ளவன் அவன் யாஸ்மின்
தனக்கு வேண்டும் என்று பள்ளி நாட்களிலேயே
அடம்பிடித்துக் காதலித்து கல்யாணம் முடித்தவன்.
அதே போல் இவளையும் விரும்ப ஆரம்பித்
திருக்கிறான் என்றால், அதில் யாரும் எவ்வித
மாற்றத்தையும் செய்துவிட முடியாது. அப்படியே
யாரும் குறுக்கிட்டாலும் அது அவன் முடிவை
மாற்றாது. அவன் தன்னையே மாய்த்துக் கொள்வான்.
பிடிவாதக்காரனான அண்ணனைப் பற்றி
நினைக்கும்போதே கவலை பெருகியது. தந்தைக்கு
ஏற்பட்டுள்ள கவலையும் நியாயமானதுதான் என்று
நினைத்துக்கொண்டான்.
'ரெண்டு நாள் அவகாசம் கொடுங்க அத்தா...
நான் கொஞ்சம் யோசிக்கறேன்' என்ற ஆறுதலான

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 153
வார்த்தையோடு தன் அறைக்குள் புகுந்து
கொண்டான். மேசையில் கிடந்த டைரியை எடுக்
கின்றான். தினசரி டைரி எழுதும் பழக்கமுள்ளவன்
என்பதால் அன்றைய நிகழ்வுகளை எழுத அதைத்
திறக்கின்றான். பச்சைநிற மையினால் எழுதப்பட்ட
சில குறிப்புகள் கண்ணில் படுகின்றன.
ஆர்வமாய்
படிக்கிறான்.
'இன்று நான் பார்த்த அந்த விழிகளை என்
பார்வை உள்ள வரையில் நான்
கொண்டிருக்கப் பிரியப்படுகின்றேன். ஆனால் அது
வேறொருவனுக்கு உரிமையுள்ளதாய் இருக்கின்றதே...'
நீலாம்பரியின் நடன நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு வீடு திரும்பிய பின் அவளைப் பற்றிய
செய்திகளை எழுதியபின் தனக்காக எழுதியது அது.
ஆசைகளை எல்லாம் துரத்தி விட்டு உட்கார்ந்
திருந்தவன் மனதில் ஓடிவந்து உட்கார்ந்துகொண்ட
அவளை அவ்வளவு பத்திரமாய் அவன் மூடி
வைத்துப் பூஜித்தான் என்பது அவனுக்குள் ஓடிக்
கொண்டிருக்கும் மூச்சுக் காற்றுக்கு மட்டுமே தெரிந்த
விஷயம். ஆனால் அந்த ஆசைகள் அத்தனையும்
அவள் அனாதையாய் வந்து அவன் முன்
நேரத்தில் கண்காணாத தேசத்துக்கு ஓடிப்போனது
தான் பெரிய அதிசயம்!
'உன்னை மாதிரியே எனக்கொரு தங்கச்சி
இருக்கு என்னை உன்னோட அண்ணனா
நினைச்சிக்கிட்டு இங்கேயே இரு' என்று தானாய்
வந்து விழுந்த வார்த்தைகள் அவளை அவனிட

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


154 வாழப் பிறந்தவள்

மிருந்து தூரத்தே ஒதுக்கி வைத்தன. அவனும்


ஒதுங்கிப் போனான். ஆனால் அண்ணனாய் நெருங்கி
நின்றான்.
அந்த நீலாம்பரியை யாஸ்மின் என்று பெயர்
மாற்றி உடைமாற்றி உலவ விட்டது அவளை
வாழவைக்க வேண்டும். அவள் இந்த மண்ணில்
நிரந்தரமாய் வாழவேண்டும் என்ற ஆசையினாலேயே
ஆனால் அதுவே இப்போது வேறு வடிவம்
பெறவிருப்பதை நினைக்கும்போது அவனுக்கே
ஆச்சர்யமாக இருந்தது.
எங்கோ பிறந்து வளர்ந்தவளை எவனோ
ஒருவன் தன் சுயநலத்துக்காக இறக்குமதிப்
பொருளாக இந்த மண்ணில் கொண்டுவந்து
நடுத்தெருவில் வீசி விட்டுப் போன கொடுமையி
னால்தானே அந்தப் பொண்ணுக்கு இவ்வளவு
பிரச்னைகள். அதற்கு முடிவு காணாமல் அப்படியே
விட்டு விடுவதால் அவளுக்கு விடிவு காலம் எப்படிப்
பிறக்கும்?
யோசித்தான்... நெடுநேரம் யோசித்தான். ஒரு
முடிவு பளிச்சென்று தோன்றியது எழுந்து போனான்.
நீலாம்பரியைத் தேடினான். அவள் காணப்பட
வில்லை. மாடிப்படியில் தாவி ஓடினான்.
மேலே பால்கனியில் அவன் நாற்காலியில்
அமர்ந்திருக்க, அவள் கையில் ஒரு புத்தகத்துடன்
நின்றாள். மென்மையான குரலில் எதையோ படித்துக்
கொண்டிருந்தாள். ஆசாத் வெகுவாக அதை ரசித்துக்
கொண்டிருந்தான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 155
'நீ ரொம்பக் கொடுத்து வெச்சவ யாஸ்மின்.
அத்தா என்னைத் தமிழ் படிக்க வைக்கல... தம்பி
படிச்சான் அதுவும் அம்மாவோட வற்புறுத்தல்
தாங்காம அவனை மட்டும் தமிழ் படிக்க வெச்சாங்க.
இந்த மொழியை நான் இழந்த நஷ்டத்தை
இதுவரைக்கும் உணரல. ஆனா இப்ப அதை நீ
படிக்கறப்ப உண்மையிலேயே அது எனக்குப் புரியுது.
என் தாயோட மொழியை நான்
தெரிஞ்சுக்காம
போனது எவ்வளவு பெரிய இழப்புன்னு இப்பத்தான்
புரியுது.
தனக்குத் தமிழ் தெரியாமல் போன வருத்தத்தில்
அவன் மனம் வாடுவது அவளுக்கும் வருத்தத்தைக்
கொடுத்தது. அவனுக்கு ஆறுதல் கூறினாள்.
'தமிழ் தெரியலேன்னு எதுக்காக நீங்க
வருந்தனும் ஆங்கிலமும் மலாயும் நெறையப்
படிச்சிருக்கீங்க. அதுதானே இந்த நாட்டுக்கு
முக்கியம். அதுக்காக நீங்க பெருமைப்பட
வேண்டாமா. அந்த மொழி இருந்தாத்தானே
இங்கேயும் வெளியே எங்கேயும் எதையும் செய்துக்க
முடியுது. தமிழைப் படிச்சு என்ன பண்றது? சும்மா
பெருமைதான் பேசிக்கலாம்.'
அவளது மனதுக்கும் அறிவுக்கும் பட்டதை
அவனிடம் சொல்கிறாள். அவன் மறுத்து
தலையாட்டுகிறான்.
'அப்படி சொல்லாதே யாஸ்மின்... தமிழ் மிகச்
சிறந்த மொழி அதிலேயும் நம்ம தாய்மொழி! அதைப்
படிக்காம இருக்கிறது நமக்குத்தான் கேவலம்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


156 வாழப் பிறந்தவள்

தமிழைப் புரிஞ்சு வெச்சிருக்கிறதுக்காக நீ ரொம்பவும்


பெருமைப்படனும் ஆங்கிலமும் மலாயும் அடுத்தவுங்
களோட தொடர்பு கொள்ளத்தான். ஆனா நம்மத்
தாய்மொழி நமக்கு உயிர் மாதிரி யாஸ்மின் எப்பவும்
அதை மட்டும் இழிவா பேசாதே..."
நீலாம்பரி அவனது உள்ளத்தில் புதைந்து
கிடந்த ஏக்கத்தின் வெளிப்பாடு கண்டு தடுமாறிப்
போனாள். தமிழ் மண்ணில் பிறந்த தனக்குத் தன்
தாய் மொழியின் அருமை தெரியாது போனதற்காக
வெட்கப்பட்டாள்.
'உனக்குத் தெரியுமா யாஸ்மின் செத்துப்
போன என்னோட யாஸ்மின் எவ்வளவு அழகாப்
பாடுவா தெரியுமா. அவ நல்லாத் தமிழ் படிச்சவ..
ரேடியோவில் வர்ற சினிமாப் பாட்டுகள கேட்டு,
நான் அவளைப் பாடச் சொல்லுவேன். ஆனா அவ
தானா எழுதித் தமிழ்ப்பாட்டுப் பாடுவா. அது
மட்டுமில்லே பாரதிதாசன், பாரதியார் பாடல்களை
யெல்லாம் உன்னைமாதிரி புத்தகத்தை வெச்சிகிட்டுப்
பாடிக் காட்டுவா. தம்பியும் நல்லா பாட்டெல்லாம்
எழுதுவான் யாஸ்மின் அவன் எழுதின கவிதை
புத்தகம் கூட இருக்கு.'
நீலாம்பரி சிலையாக நின்றாள். அந்த வீட்டில்
இன்னும் என்னென்ன அதிசயங்கள் இருக்குமோ
என்று நினைத்துக் கொண்டாள். அதே நினைவில்
எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவளின் கைகளைத்
திடீரென்று தன் கையினால் பிடித்த ஆசாத்,
'நீ பாடுவியா யாஸ்மின்...! உனக்கு பாடத்
தெரியுமா?'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 157
ஆர்வமாக் கேட்கிறான். அவள் தடுமாறிப்
போகிறாள். அவனது கைகளை மெல்ல விலக்கி
விட்டுக் கொஞ்சம் தள்ளி நிற்கிறாள். அந்த
நிமிடத்தில் அவனக்கு என்ன பதில் சொல்வது என்று
தெரியாமல் திணறி நின்றவளை சித்தார்த்தன் வந்து
காப்பாற்றுகிறான்.
'ஆடத் தெரிஞ்ச மயில் பாடாது பாடத்
தெரிஞ்ச குயில் ஆடாது. ஆனா இந்த மயில்
அற்புதமா ஆகும். அதைவிட அற்புதமா பாடும்.'
மனந்திறந்த சொற்களுடன் அண்ணனிடம் வந்து
அவன் தோளைப் பற்றிக் கொள்கிறான் அவன்.
'அண்ணா! உனக்கு இந்த யாஸ்மின் யாருன்னு
நான் முழுசா சொல்ல நேரமில்லாமப் போச்சு...!
இந்த யாஸ்மின் ஒரு கலையரசி. இந்தக் கலையரசி
இருக்க வேண்டிய இடமே வேறெஇடம் ஆனா
நேரமும் காலமும் இங்கே கொண்டுவந்து
நிறுத்தியிருக்கு இவளோட நாட்டிய அரங்கேற்றத்
துக்கு பாஸ் வாங்கிட்டு, படம் புடிக்கப் போனவன்
நான். ஆனா அந்த அரங்கேற்றமே இறுதியாய்
போயிடும்னு அப்ப நான் நெனைச்சுக் கூட
பார்க்கலேண்ணா...
நடந்து முடிந்த அவலத்தை அவனிடம்
முழுமையாய் விளங்கினான். நீலாம்பரி என்ற அந்தக்
கலையரசிக்கு நிகழ்ந்துவிட்ட சோகத்தையும்,
நிராதரவாய் நின்ற அவளுக்கு நிரந்தர பாதுகாப்பு,
கொடுக்கவே இங்கு கொண்டு வந்ததாகவும்
சொன்னான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


158 வாழப் பிறந்தவள்

ஆசாத் அதைக் கேட்டுச் சிறிது நேரம்


அதிர்ச்சியில் இருந்து மீண்டான். தம்பியின் மீது
இருந்த அன்பும் மரியாதையும் அதிகமானது.
அவனைத் தன் அருகில் அழைத்து அமர்த்திக்
கொண்டான்.
'தம்பி... நீ இறைவனை நம்பறியா. அவனோட
கருணையை நம்பறியா?'
சித்தார்த்தன் அண்ணனை அதிசயமாய்ப்
பார்த்தான்.
'ஏன் அண்ணா, இப்படிக் கேட்கறே!
என்னோட பேரை மாத்தி வெச்சிட்டேன்னா நான்
எப்பவுமே சுத்தமான உண்மையான முஸ்லீம்தான்
அண்ணா. நான் எப்பவும் அல்லாஹ்வை நம்பறவன்...
அவரோட கருணையை நம்பறவன்..'
'அப்படின்னா உடனடியா எனக்கும்
யாஸ்மின்னு பேர் மாத்தி வெச்சிருக்கற அந்த
நீலாம்பரிக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்... ஏன்
என்னான்னு கேட்டுக் காலத்தை வீணாக்கதே...
அத்தாவுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. நீ
உலகத்தைப் பார்த்தவன், அதைப் படிச்சவன்…
சிறகொடிஞ்ச பறவைக்கு மருந்து போட்டா மட்டும்
போதாது. அது மறுபடியும் சுதந்திரமா தன்னோட
சிறகுகளை விரிச்சு வானத்தில பறக்கணும்...
அப்பத்தான் நாம செய்த காரியத்துக்குப் பெருமை
இருக்கும் புரியலையா தம்பி நீலா வாழனும்.. நம்ம
நீலா வாழணும்…

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 159
சித்தார்த்தன் மலைத்துப் போனன்.. நீலாம்
பரியைப் பார்த்தான். அவள் எங்கே போனாள்
என்றே
தெரியவில்லை. அண்ணனை விட்டு விட்டு, கீழே
இறங்கிவந்த அவன் பீட்டர் மடியில் முகம் புதைத்து
விம்மிக் கொண்டிருக்க, அவர் ஆறுதலாத்
தட்டிக்
கொடுத்துக் கொண்டிருந்தார்.
உலகத்தில் வினாடிக்கு வினாடி எத்தனையோ
அதிசயங்கள் நிகழ்வதாக அறிகின்றோம். அது
போலத்தான் ஆசாத் நீலாம்பரியைத் தனக்குத்
துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்து
அதைத் தன் தந்தையிடமும் தம்பியிடம் கூறியதும்.
இறந்துவிட்ட ஆசை மனைவியின் சோகத்தைப்
போக்கவும் தன் தேவைகளை அறிந்து பணிவிடை
புரியவும் நீலாம்பரி என்ற யாஸ்மின் பொருத்த
மானவள் என நினைத்து அவளை மனைவியாக்கிக்
கொள்ள முடிவு செய்தபோது அவனுக்கு
இருந்த
எண்ணமும் அந்த எண்ணத்தில் நின்ற யாஸ்மினும்
வேறுகோணத்திலும் - தம்பியிடம் முழுக் கதையும்
தெரிந்தபின் அந்த நீலாம்பரி என்ற பெண்ணின் மேல்
கொண்ட ஆசை மாறி - அவள் மீதும் அவள்
அறிவுத்
திறன் ஆடல்கலை மீதும்கொண்டுவிட்ட மரியாதை
யும் அன்பு மிக உன்னத நிலைக்குப் போய் அவள்
வாழ்நாள் வரை நம் கூடவே இருக்க வேண்டும் என்ற
முடிவைச் செய்தது.
தம்பி போனபின் - நீலாம்பரி போய்விட்ட பின்
குளிர் நிலவின் ஸ்பரிசமும் தென்றலின் தழுவுதலும்
துணையிருக்க அவன் தனித்திருந்தான் அவனோடு
பேச அவன் மனம் இருந்தது. அது அவனோடு
எதை

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


160 வாழப் பிறந்தவள்
எல்லாமோ பேசியது நீண்ட நேரம் போராடினான்.
முடிவு! ஒரே முடிவாய் நின்றது.
அவள் யாராய் இருந்தால் என்ன? அவளிடம்
உள்ள தமிழ் வாழவேண்டும் அற்புதான ஆடல்
கலை வளரவேண்டும் இனிய இசை வளரவேண்டும்
அதற்காக நான் அவளை மணப்பேன். அந்த
மணவாழ்க்கை அவளுக்கு இம்மண்ணில் நிரந்தரத்
தைக் கொடுக்கும் அவளுக்கு ஒரு பாதுகாப்பையும்
கொடுக்கும். அவனாக அவன் மனதுக்குள் ஒரு
முடிவை செய்துகொண்டு 'காலிங்பெல்'
அழுத்தினான் அது அலறிக் கொண்டிருந்து அவன்
அழுத்தின் கொண்டிருந்தான் யாரும் வந்ததாய்த்
தெரியவில்லை மீண்டும் அழுத்தினான்.
'இதோ இங்கேதான் இருக்கேன்... என்ன
வேணும்? ஏதாச்சம் சாப்பிடறீங்களா....!' நீலாம்பரி
அவனை நெருங்கி வருகிறாள் அவன் அவள் நிற்கும்
திசை நோக்கிக் கையை நீட்டிகிறான்
'சாப்பாடு மட்டுந்தான் எனக்குத் தேவையா
நீலா... நீ கூட என் மனசைப் புரிஞ்சு நடக்க
மாட்டீயா...!
குரலில் கவலை தோய்ந்து கிடக்கின்றது. அது
நீலாம்பரியின் மனதை நெருடுகின்ற்து.
'ஏன் இப்படிப் பேசறீங்க..... என்ன வந்துச்சு
உங்களுக்கு. இது சாப்பிடும் நேத்தானே....! பசிக்கிற
நேரத்தில் சாப்பிட்டுட்டா அடுத்த விஷயத்தை
அப்புறம் பேசலாம்...

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செய்வம் 161
'போசலாம், ஆனா நீ வரமாட்டியே... உனக்குத்
தான் கீழே நெறைய வேலை இருக்கே... இந்தக்
குருடனைப் பக்தி நெனைக்கவோ கவலைப்படவோ
உனக்கேது நேரம்...!'
அவள் அதிர்ச்சியால் அதிர்ச்சியால்
பேசாமல் நிற்கிறாள். அவன் அவள் பதிலை
எதிர்பார்க்கிறான். நிமிடங்கள் ஓடுகின்றன.
'ஏன் நீலா.. என், பேச மாட்டேங்கிறே?
என்னோட பேச்சு உன்னோட மனசைக் கசஷ்டப்
படுத்துதா...? நான் ரொம்பவும் நொந்து போயிருக்
கேன் நீலா... உன்னோட வாழ்க்கையில விதி எப்படி
ஈவு இரக்கம் காட்டலியோ அப்படித்தான் என்
வாழ்க்கையிலேயும் நடந்துபோச்சு.. அதனாலத்தான்...
அதிலேர்ந்து மீண்டு வரத்தான் உனைன் நான்
கேட்கறேன்.....
'நீலா.... அடிப்பட்டவனுக்குத்தான் வலி
தெரியும். பசிக்கிறவனுக்குத்தான் உன்னோட அருமை
புரியும். நீயும் நானும் பயங்கரமான விபத்திலேர்ந்து
மீண்டு வந்திருக்கோம். இதுவரைக்கும் நாம
ரென்டுபேரும் உயிரோட இருக்கிறதே எதோ ஒரு
நல்ல கரியத்தை சாதிக்கிறதுக்காகத்தான்......
காரணமில்லாமல் காரியங்கள் எப்பவும் எங்கேயும்
நிகழ்றதே இல்லே... நீ இதைப் புரிஞ்சுக்கணும்... நீ
படிச்சுவதானே... கொஞ்சம் யோசனை பண்ணு...'
நீண்ட நேரம் பேசிவிட்டு அவள் பதிலை
எதிர்பார்க்கின்றான்.
'அதுக்காக் நாம ரெண்டு பேரும் கல்யாணம்
தான் பண்ணிக்கனுமா... இப்படியே இருக்கக்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


162 வாழப் பிறந்தவள்
கூடாதா? நான் உங்களுக்கு காலம் பூரா இப்படிப்
பணிவிடை செய்யமாட்டேனா..?'
'மாட்டே... நீ என் காலம்பூராவும் இன்றைக்கு
இருக்கிற இதே மனசோட எனக்குப் பணிவிடை
சொய்யமாட்டே....!
'ஏன் அப்படிச் சொல்றீங்க.. என் மேல்
நம்பிக்கையில்லையா உங்களுக்கு!'
இல்லே.. உன் பேர்ல மட்டுமில்லை... காலத்தின்
பேர்ல இந்தச் சமுதாயத்தின் பேர்ல இந்த சனங்கள்
பேர்ல நம்ப சொந்தங்கள். பேர்ல எனக்கு யார்
பேர்ல்லேயும் நம்பிக்கை இல்லே நீலா...'
'காலம் மாறும்... பலப் பல மாற்றங்கள் வரும்;
நம்ம சமுதாயம் உன்னையும் என்னையும்பத்தி கதை
கதையா பேசும். ஆணாப் பொறந்த எனக்கு அதுல
எந்தக் கவலையும் இருக்காது. ஆனா நீ அந்த வீணாப்
போன கதைகளுக்காகப் பயப்படுவே. ஊர் உலகத்தை
நெனைச்சி என்னை விட்டு ஒதுங்கி போவே....
இதுக்கப்புறம் நான் தனியா அனாதைய நிற்பேன்...
இப்போதைக்கு எனக்கு ஒரே துக்கம்.. ஒரே சோகம்...
அப்புறம் இரண்டு துக்கம்! இருமடங்கு சோகம்....'
'நாம கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் -
உலகம் பழிக்காதா... சாதிசனம் பழிக்காதா..."'
'பழிக்கும்... ஏசும்... கால நேரம் பார்க்காம கதை
கதையாப் பேசி ஓய்ஞ்சு போகும். அதுகாக நாம
இப்படியே இருக்கனுமா என்ன...? இன்றைக்கு என்
கண்ணீரைத் துடைக்க.. என் கவலையைப் போக்க

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கை தமிழ்ச் செல்வம் 163

எந்த சாதிசனம்... ஊர் உலகம் ஒடிவந்து நிற்குது.


உன்னை
இல்ல உனக்குப் பாதுகாப்புக் கொடுக்க,
வாழ வைக்க எத்தனை பேரு ஓடிவந்து நிக்கிறாங்க..?
அப்படியே வந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம
யாராச்சும் வருவாங்களா...!'
நீலா வாயடைத்து நிற்கிறாள். அவளால் மறு
பேச்சுப் பேச முடியாமல் உணர்வுகள் தடுமாறு
கின்றன. சற்று நேரம் கழித்து மெல்லப் பேசுகிறாள்.
'நீங்க உங்க சனங்கள்ல ஒரு நல்ல பொண்ணா
உங்களுக்குத் தகுந்த படிச்ச பொண்ணா பார்த்துக்
கல்யாணம் பண்ணிக்கலாமே.. நான் உங்க அளவுக்குப்
படிக்கலியே... அதுலேயும் நான் வேற....'
அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவன்
கைகாட்டி நிறுத்துகிறான்.
'நீலா.. நீ சொன்ன மாதிரி எங்க சொந்தங்
கள்லேயே ஒரு பெண்னை நான் பார்த்துக்
கல்யாண்ம் பண்ணிடலாம்; என்னைவிடப் படிச்ச
பணக்காரியைக் கூட நான் கல்யாணம் பண்ணலாம்....
ஆனா அவகிட்டே படிப்பிருக்கும், அழகிருக்கும்;
உன்னைமாதிரி அன்பு இருக்குமா..? என்தாய் மாதிரி
என்னைப் பார்க்கிற மனசிருக்குமா...? எதையுமே
எதிர்பார்க்காம இரவு பகல் என்னைப் பாதுகாக்கிற
பிரியமிருக்குமா...?'
மீண்டும் மெளனம் நிலவுகின்றது. அவளால்
பேச முடியாத சூழ்நிலையில் கொண்டுபோய் அவன்
அவளை நிறுத்திவிடுகிறான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


164 வாழப் பிறந்தவள்
'படிக்காத பொண்ணுக்குப் படிப்பைச்
சொல்லிக் கொடுத்துடலாம்... பணமில்லாதவருக்குப்
பணத்தைக் கொடுத்துப் பணக்காரியாக்கிடலாம். ஏன்
அழகே இல்லாத பெண்ணைக்கூட ஆயிரம்
பத்தாயிரம்னும் பணத்தைக் கொட்டிப் பேரழகியா
மாத்திடலாம். ஆனா அன்பையும் பரிவையும் மனித
நேயத்தையும் யாரும் யாருக்கும் கத்துக் கொடுக்கவோ
வாங்கிக் கொடுக்கவோ செய்து கொடுக்கவோ
முடியவே முடியாதம்மா... அது தானா பெய்யற மழை
மாதிரி!'
நீலா நான் உன்னை நேசிக்கிறது நீ காலம்
பூராவும் வேலைக்காரியா இருந்தது பணிவிடை
செய்யணுமிங்கிறதுக்காக இல்லேம்மா... உன்னோட
எதிர்காலத்துக்கு ஒரு பாதுகாப்பா, ஆதாரமா நான்
இருக்கணுமின்னுதான்.
நம்மோட கல்யாணம் ஊர் உலகத்துக்காக
நமக்காக இல்லே... பாழாய்ப்போன சமுதாயத்தில ஒரு
வயசுவந்த ஆணும் பெண்ணும் தனியா நின்னு
பேசவே ஒப்புதல் கிடையாது இந்த நிலைமையில
நீயும் நானும் எப்படி ஒரேவீட்ல வருஷக் கணக்கா
வாழமுடியும்.
நீயும் நானும் நம்மதியா நம்ம காரியத்தைப்
பாக்கணும்னா சட்டப்படி நாம இணையணிம்.... அது
கொஞ்ச நாள் பேச்சா இருக்கும். அப்புறம் காணாமப்
போயிடும். நான் உன்னைச் சட்டத்தால மட்டுமே
மனைவியா எத்துக்குவேன். சம்சாரிய ஒரு நாளும்
மாறமாட்டேன். நான் எப்பவும் ஆசாத்துங்கிற
மனுஷனாவே இருப்பேன்.. நீ நிலாவா...

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 165

நீலாம்பரியாத்தான் இருப்பே. நம்ம உறவு இப்படியே


என்றைக்கும் இருக்கும். சித்தார்த்தன் எப்படி உனக்கு
அன்னனோ ரஹ்மத் எப்படி உனக்கு அக்காவோ..
அத்தா எப்படி உனக்கும் அத்தாவோ அதே மாதிரி
இந்த ஆசாத். உனக்கு எப்பவும் அண்ணன் தான்.
என்ன என்னோட யாஸ்மின் இங்கே இன்னமும்
நிக்கிறாம்மா...'
நீலாம்பரியின் கண்ணில் கங்கையும் காவிரியும்
பெங்கி வழிகின்றன எங்கேயோ விட்டுவிட்டு வந்த
தாயும் தந்தையும் சொந்தங்களும் ஓடிவந்து அவளை
அள்ளி அணைத்து முத்தமழை பொழிவது போல்
திணறிப் போகிறாள்.
படித்தவன் படித்தவன்தான் என்பதை அவன்
அவளுக்கு உணர்த்திவிட்டான். அவனுக்குள் அவள்
மீது எழுத்த பரிவைக் காட்ட ஒரே வழி இந்த
வழிதான் அவளை நிரந்தரமாய் வாழ வைக்க..அவள்
யாராலும் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க
வறுமையோ மற்ற கஷ்டங்களோ அவள்
சிந்தனையைக் குழப் ப ாமல் இருக் க அவன் தேர்வு
செய்த ஒரேவழி இந்தப் பதித் திருமாணம் தான்
அவள் பூரண சம்மதம் சொல் ல பீட்டரும்.
ரஹ்மத்தும் அவள் கணவனும் சித்தார்த்தனும்
மனப்பூர்வமாய் சம்மதம் தெரிவிக்க; அந்தக்
குடும்பத்தில் நீலா நிரந்தர உரிமை பெற்றாள்.
அவள் படிப்பு ஆரம்பமாயிற்று. மலாய்
படித்தாள்... ஆங்கிலம் படித்தாள்.. அவளுக்கு
எழுகின்ற சந்தேகங்களை அவன் போக்குவான்
கற்பூரம் போல் எல்லாவற்றையும் பற்றிக் கொள்ளும்
தன்மை அவரிடம் நிரம்பியிருந்தது தனியாக எங்கும்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


166 வாழப் பிறந்தவள்
செல்லக் கற்றுக் கொண்டாள் சித்தார்த்தன்
அவளுக்கக் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தான்
அதிலும் தேர்வு பெற்றாள்
அவளது திறமையும் அறிவும் வீணாகிவிடக்
கூடாது என்பதற்காக ஒரு நடன வகுப்பையும்
ஆரம்பித்தார்கள் மனத்துயரங்கள் மறைந்து புதுப்
பிறவி எடுத்தது போல் அவன் நடமாடத் தொடங்
கினாள் அப்ப அம்மாவுக்கு அவள் எழுதிய கடிதங்
களில் அவள் நாகராஜனோடு வாழ்வது போலவே
விஷயங்களை எழுதிவந்தாள் அவர்களும் அவளுக்கு
மகிழ்ச்சியான செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்
தார்கள் ஆண்டுகள் ஓடிக் கொண்டிருந்தன.
கால ஓட்டத்தில் பீட்டர் மறைந்து போனார்.
ரஹ்மத் பினாங்கிற்கே வந்துவிட்டாள் தொழில்
நிமித்தம் அவள் கணவரும் பினாங்கில் தங்கினார்.
தனது கலைக்குப் பினாங்கைவிட தலைநகர்தான்
பொருத்தமாய் இருக்கும் என்று முடிவு செய்து
நீலாம்பரி ஆசாத்துடன் தலைநகருக்கு வந்து
விட்டாள் தன் மாற்றம் குறித்து தந்தைக்குக் கடிதம்
எழுதினாள்
வயது ஓடிக் கொண்டிருப்பது போலவே
வாழ்க்கை அடிக் கொண்டிருத்தது நீலாம்பரியைத்
தெரியாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு
அவள் உயர்ந்துவிட்டாள் சமய சமூக இயக்கங்களில்
அவள் பங்கு அதிகமாய் இருந்தது அவள் நினைவுகள்
செயல்கள் எல்லாம் ஆசாத் ஆசாத் என்றே. ஓடிக்
கொண்டிருந்த வேளையில் ஊரிலிருந்து ஒரு கடிதம்
அவளை நாடி வந்தது ஆவலுடன் திறந்தாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 167

20

அன்றொரு நாள் தனது ஆற்றாமையைச்


சொல்லித் தன் அத்தை பிள்ளை சந்திரனிடம்
நீலாம்பரி அழுதபோது அவன் சொன்ன அந்த
வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
'என்னைவிட உன்னை அதிகமா நேசிச்சது.
ஸ்ரீதரன்தான். நீ அவனுக்கு இல்லேன்னு ஆனதும்
அவன் ராணுவத்துக்குப் போய்ட்டான்.'
அந்த ஸ்ரீதரன்தான் அக்கடிதத்தை எழுதி
யிருந்தான் அதில் கண்ட வார்த்தைகள் அவளை
உலுக்கின. அவனது மனதில் மறைந்து கிடந்த
அனைத்தும் அந்தக் கடித உறைக்குள் திணிக்கப்பட்டு
அவளுக்கு அனுப்பப்பட்டிருந்தன
நீலாம்பரி என்றைக்குமே இதை எதிர்பார்க்க
வில்லை எங்கோ ஓடிப்போனவன் இத்தனை
ஆண்டுகளுக்குப் பின் வெளிக்கிளம்பி வந்திருக்
கிறான். அதிலும் அவளைத் தேடி அலைந்து
களைத்துப் போன சோகத்தை சொற்களால்
மாலையாக்கி அவளுக்கு அனுப்பியிருக்கிறான்.
'நீலம்... நாமெல்லாம் ஒரு கொடித் தோரணமாய்
ஆடிய அந்தப் பிள்ளைப் பருவ நாட்களை நீ
எண்ணிப்பார். ஆற்றங்கரை மணற்பரப்புகளிலும் வயல்
வரப்புகளின் மேலும் நாம் ஓடித் திரிந்த நாட்களை
உன்னால் மறக்க முடிந்ததா...? நாற்றங்காலிலே
தலைசாய்த்தாடு நாற்றுபோல் நீ வளர்த்து நடந்த

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


168 வாழப் பிறந்தவள்
பருவத்தில் உனக்காக மனதுக்குள் மேடையிட்டு அதில்
உன்னை நான் ஆடவைத்து ரசித்த நாட்க எத்தனை
எத்தனை தெரியுமா நீலம்!"
'தங்கைப் பிள்ளைகள் தின்று வளரவும் படித்து
உயரவும் அனுமதித்த மாமா உன்மேல் ஆசை வைக்
கவோ.. உன்னை மணந்து கொள்ளவோ அனுமதிக்க
மாட்டா என்றுதான் நான் மனதுக்குள் அமைத்த
மேடையைக் கலைத்துப் போட்டுவிட்டு கண் காணாத,
இடத்துக்கு ஓடினேன். அங்கே எதிரிகள் என்னைக்
கொல்லவில்லை. என நினைவுகளே கொன்றன.
உன்நிலை அறியத் துடித்தேன்... நீலக்கடல் தூரம்
காட்டியது. ஆண்டுகள் ஓடியபின் அப்பா வைப் பார்கக
ஓடிவந்தேன்... அப்போது உன் நினைவு என்னை
விடவில்லை; ஓடினேன். உன் கால்பதிந்த இடமெல்லாம்
தேடினேன். ஆனால் வெளிகாட்டி கொள்ளும்
துணிவுதான் வரவில்லை அத்தை... உன் அம்மா
உன்னை பற்றி நிறையவே சொன்னார்கள்.
நீ நன்றாக வாழவதாகச் சொன்னார்கள். அதன்
அடையாளமாய் உன் படங்களையும் உன் கடிதங்
களையும் காட்டினார்கள்.
நீலம்! நீ வாழவில்லை. வாழ்வது போல் வேஷம்
போட்டுக் கொணடிருககின்றாய் என்பதை உன்னு
டைய படங்களும், உன் கடிதவரிகளும் எனக்குக்
காட்டிவிட்டன.
எங்கள் குலக் கொடியே.... நீ வஞ்சிக்கப்பட்டு
விட்டாய் எனபது மட்டும் நன்றாகப் புரிகின்றது.
ஆனாலும் குலப்பண்பு... குடும்பக் கெளரவம் தந்தையின்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 169
மேல் கொண்ட மரியாதை உன்னை அங்கேயே நிலைக்க
வைத்துள்ளன என்பதும் புலனாகின்றது. ஏன், ஏன் இந்த
அவலநிலை உனக்கு?
உன் பாதங்கள் நோகாமல் பாதுகாக்க நானில்
லையா... உன் விழிகள் சோராமல் சிரிக்க வைக்க
என்பாடல் இல்லையா....! உன் நெஞ்சம் குளிரவைத்து
நித்தம் கோடி முத்தம் தந்து நெஞ்சில் வைத்துத் தாலாட்ட
உன் அத்தான் நானில்லையா.... வாழ்வின்
வசந்தமே... ஒரே ஒருமுறை.. . ! உன் திருமுகத்
காட்டு... இவ்வுலகம் ஆனந்தமயமானது, அன்பு
மயமானது என்பதை நான் உனக்கு நிரூபிக்கின்றேன்.
நீலம்... உனக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள்
எதுவானாலும் எனக்கு நீ எழுது. உனக்கு நானிருக்
கிறேன். இந்த உலகத்தை நினைக்காதே. உன்னையும்
என்னையும் மட்டுமே நினைத்துப்பார் என்
எண்ணங்களை உன் காலடியில் கொட்டிவிட்டேன்
நீலம். இனிவரும் எதிர்காலத்தை நீ எழுது.
உன்னையே உலகமாய், உயிராய் எண்ணும் உன்
அத்தான்.
திரும்பத் திரும்ப அந்தக் கடிதத்தைப் படித்தாள்.
மனம் கனத்தது. தனியே போய் எங்காவது ஒரு
ஒரத்தில் நின்று ஓவென்று அழவேண்டும் போல்
இருந்தது காலம் கடந்து போனபின் வந்து நிற்கின்ற
அவனை எந்தவகையில் ஆறுதல் படுத்துவது என்ற
புரியாத தவிப்பில் இங்கும் அங்குமாய் நடந்து
கொண்டிருந்தாள்.
தந்தையும் தாயும் தன்மேல் வைத்த நம்பிக்
கையை மெய்ப்பிக்க இல்லாத கணவனையும்,

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


170 வாழப் பிறந்தவள்

தொட்டுப் பார்க்காத குடும்ப வாழ்க்கையையும் ஒரு


திரைப்படம் போல் உருவாக்கி அவர்களுக்குப்
போக்குக் காட்டிக் கொண்டிருப்பது அவர்களுக்கே
புரியாத போது இவன் மட்டும் எப்படிப் புரிந்து
கொண்டான்?
வயதுக் கோளாறு... காதலின் ஆழமா...! எந்த
முடிவுக்கும் வர முடியாதவளாய் கடிதத்துடன் நின்று
கொண்டிருந்தவளை பிரேமா வந்து கலைத்தாள்.
நினைவுகள் ஓடிப் போயின. வந்து நின்ற தோழியுடன்
பேசத் தொடங்கினாள்.
பிரேமா ஒரு சமூக சேவகி. அரசியல் பதவியும்
வகிப்பவள். தமிழ்ப்பள்ளியில் பயில்கின்ற மாணவர்
களுக்கு நிதி சேர்க்கும் நிகழ்ச்சியொன்றை நடத்த
வேண்டும் என்ற தன் ஆவலைத் தூக்கிக்கொண்டு
வந்திருந்தாள்.
மிகப் பெரிய கலைநிகழ்ச்சியாகப் படைத்து
நிறையப் பணம் சேர்த்து நிதியளிக்க வேண்டு
மென்பதால் நாட்டிய நிகழ்ச்சியை நீலாம்பரிதான்
வலி
தயாரித்துக் கொடுக்கவேண்டும் என்று அவள்
யுறுத்தினாள்.
ஏதாவதொரு காவியத்தை நாட்டிய நாடக
மாக்கி மேடையேற்றினால் நல்ல பலனை எதிர்
பார்க்கலாம் என்ற யோசனையும் சொன்னாள்.
நீலாவுக்கு அவளது கருத்து நல்லதாகப் பட்டது.
பாடல்களை யார்
ஆனால் நாட்டிய நாடகத்திற்குப்
எழுதுவார்கள் என்ற கேள்வியும் பிறந்தது. நாட்டில்
உள்ள உள்நாட்டுக் கவிஞர்கள், பாடலாசிரியர்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 171
களிடம் பாடல்களை எழுதச் சொல்லி அவற்றைப்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்
தார்கள். ஆனால் அது அவர்களின் எண்ணத்தை
முழுமையாய்ப் பிரதிபலிக்குமா என்ற சந்தேகத்தில்
நின்றது. பிரேமா முழுப் பொறுப்பையும்
நீலாம்பரியிடம் விட்டு விட்டுப் போய்விட்டாள்.
அவள் போனபின் நீலாம்பரி உள்ளே வந்து
வீட்டுவேலைகளைக் கவனித்தாள். ஆசாத் தூக்கம்
கலைந்து எழுந்துவிட்டான் என்பதை அவனது
குளியலறையில் நீர் ஊற்றும் சத்தம் காட்டியது.
அவன் இப்போது முக்கால் பங்கு இயல்பான
நிலைக்குத் திரும்பியிருந்தான் படிப்பது எழுதுவது
என்பது மட்டும் அவனுக்குச் சிரமமாய் இருந்தது.
அதை நீலாம்பரி நிறைவு செய்தாள்.
மாடிப்படிகளில் தானாக இறங்கிவந்தான்
ஆசாத், நேராக அவள் இருக்கும் இடத்திற்கே
வந்தான். மேசையில் அவள் வைத்திருந்த உணவு
என்னவென்பதை மோப்பம் பிடித்தே சொன்னான்.
தானாக தட்டை எடுத்துக் கவனமாய்ப் பரிமாறிக்
கொண்டான். அவனது வேலைகளை ஒன்று
விடாமல் கவனித்துக் கொண்டிருந்த நீலாம்பரி அவன்
பின்புறமாய் வந்து தோளில் கைவைத்து நாற்காலியில்
அமர்த்தி உணவுத் தட்டைக் கையில்
கொண்டு அவனுக்கு ஊட்டுகிறாள்.
'என்னைச் சொந்தமா இயங்க விடமாட்டியா
நீலா... எப்பவும் எனக்குப் பணிவிடை செய்யறதே
உன்னோட வேலையா எடுத்துக்காதே... உன்னோட
வேலைகளைக் கவனிம்மா.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


172 வாழப் பிறந்தவள்

அவன் சொன்னது எதுவும் .


தாய்க் காட்டிக் கொள்ளாமல் தன் கடமையை அவள்
ஒழுங்காகச் செய்துகொண்டிருந்தாள்.
'நீலா... உனக்கு இது அலுத்துப் போகலையா?
இன்னும் எவ்வளவு காலம் வரைக்கும் இப்படியே
இருப்பே. அவள் அவன் முகத்தை ஏறிட்டுப்
பார்க்கிறாள். கறுப்பு நிறக் கண்ணாடிக்குள் பதுங்கிக்
கிடக்கும் அவனது விழிகள் அவளைச் சிந்திக்க
வைக்கின்றன.'
தன் கண்கள் இல்லாத நிலையிலேயே தன்னை
இத்தனை கருணையுடன் பார்த்தவன், அந்த விழிகள் மனம்
மட்டும் இருந்திருந்தால் எவ்வளவு தூரம்
கண்
வைத்திருப்பான். சில சமயங்களில் கடவுளுக்கே
தெரியாமல் போய்விடும் என்பது அவ்வளவு
உண்மையா?
அவனது விழிகள் பறிக்கப்பட்டதால் எவ்வளவு
பெரிய நஷ்டம் அவனுக்கு! அவனுக்கு மட்டுமா
நஷ்டம்? அவன் குடும்பத்திற்கு அவன் சமுதாயத்திற்கு
அவன் நாட்டுக்கு...
எங்கோ எப்போதோ பார்த்த படத்தில் யாரோ
பார்வை
ஒருவர் கண் கொடுக்க விழியிழந்தவர்
பெற்றதை நினைத்துப் பார்க்கிறாள். அப்படி ஒரு
அதிசயம் இவனுக்கும் நடந்தால் அது எவ்வளவு நல்ல
ஏன்
விஷயமாக இருக்கும். அதைப்பற்றி இதுவரை
யாருமே யோசிக்கவில்லை...
அவன் மீதே கவனமும் சிந்தனையும் நிலைத்
திருக்க, அவன் கேட்ட கேள்விக்குப் பதில் வராமல்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 173
போகின்றது. மெளனத்தில் நேரம் கலைவதைக் கண்ட
ஆசாத் அவளைத் தொட்டு உசுப்புகிறான்.
'சொல்லு நீலா... இந்தக் குருடனுக்கு உன்
னோட காலமும் நேரமும் கழியறதிலே நீ கவலைப்
படலியா... இது உனக்கு அலுப்பா இல்லியா?'
தூக்கத்தில் இருந்து விழித்தவளைப் போல்
தடுமாறுகிறாள்.
'என்ன சொல்றீங்க... யாருக்கு அலுப்பு...
எதனால அலுப்பு?'
'உனக்குத்தான்... எனக்காக நாளை வீணடிக்
கிறியே. அது அலுப்பா போகலையான்னுதான்
கேட்கறேன்.'
சிரிக்கிறாள்... பின் அமைதியாகிறாள். அவன்
கை கழுவிக் கொள்ள உதவி வெளியே வந்து
நாற்காலியில் உட்கார வைக்கிறாள். உங்க அம்மாவை
நீங்க இப்படி ஒரு வார்த்தைக் கேட்பீங்களா.. இல்லே
உங்களக்குன்னு ஒரு பிள்ளை இருந்து அதுக்கு
இப்படி ஒரு நிலைமை வந்தா நீங்க இப்படி
நடந்துக்குவீங்களா?"
'என்னோட காலமும் நேரமும் வீணாகறதைப்
பத்திப் பேசறீங்களே... நீங்களும் உங்க குடும்பமும்
எனக்காக எவ்வளவு காலத்தையும் நேரத்தையும்
வீணாக்கியிருக்கீங்க. என்னால எந்தப் பயனும்
இல்லாம இந்த அளவுக்கு என்னை உயரவெச்சிருக்
கீங்களே.... அதெல்லாம் உங்களுக்கும் உங்க
குடும்பத்துக்கும் அலுப்பில்லையா.... விரயமில்லையா....'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


174 வாழப் பிறந்தவள்
'சும்மா ஒருவேளைச் சோத்துக்குக் கையேந்தி
நிக்கிற பிச்சைக்காரி, கொஞ்சம் அழகா இருந்தா
நெஞ்சு கூசாம அவளைப் படுக்கைக்குக் கூப்பிடக்
கூடிய பாவிங்க உலாவுற காலத்தில, என்னை இந்த
மண்ணில தங்க வைக்கனுமிங்கிற காரணத்துக்காக
யாருக்கும் எதுக்கும் பயப்படாம, கவலைப்படாம
கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே. அது எதைச்
சேர்ந்தது? அது அலுப்பில்லையா..?
'ஏன் என்னை வார்த்தையினாலேயே சித்ர
வதைப் பண்றீங்க..'
அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். அவன்
அவளைச் சமாதானம் செய்யமுடியாமல் தவித்தான்.
'என்னை மன்னிச்சுடும்மா... நான் இனிமே
அப்படி எல்லாம் பேசமாட்டேன். இது ஆண்டவன்
கட்டளைன்னு நெனைச்சு சந்தோஷப்படாம உன்னை
வீணா சங்கடப்பட வெச்சிட்டேன். இனிமே இப்படி
ஒரு தப்பு நடக்காது. வா... வந்து சாப்பிடு.'
அவள் அமைதியானாள். அப்புறம் அவனைக்
கேட்டாள்.
'நீங்க ஏன் மறுபடியும் பார்வையைப் பெற வேற
வகையில முயற்சிக்கக் கூடாது? எத்தனையோ பேர்
கண்தானம் செய்யறாங்களே... ஆண்டவன் தான்
நமக்கு நல்ல வசதியைக் குடுத்திருக்காரே... ஒருதடவை
முயற்சி பண்ணிப் பாருங்களேன்....'
அவளது வார்த்தைகள் அவனையும் யோசிக்க
வைத்தன.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 175
21

அருமைத் தோழியின் வீட்டில் நுழைந்ததுமே


பழைய நினைவுகள் மறந்து போய் அவளைத் தன்
நெஞ்சோடு சேர்த்துக்கொள்கிறாள் நீலாம்பரி.
'நீ ரொம்பவே மாறிட்டே நீலம்! உன்னோட
நடை, உடை, பாவனையெல்லாம் முன்னமாதிரி
இல்லே... நீ ரொம்ப புத்திசாலி...! ஒவ்வொரு
பெண்ணுக்கும் நீ ஒரு எடுத்துக்காட்டு உன்னோட
பேட்டியையும் டி.வி.யில பார்த்தப்ப அந்த டி.வி.
பெட்டியையே கட்டிப்பிடிச்சு முத்தம் தரலாம்
போல இருந்துச்சிடி எவ்வளவு அழகா நீ இங்கிலீஷ்
பேசறே உன்னோட மலாய் மொழியைப் பார்த்து
என் கணவர் அசந்து போய்ட்டாருடி....'
நெஞ்சம் நிரம்பிய நன்றி உணர்வுகளோடு
புன்னகைக்கிறாள் நீலம்.
'எல்லாம் அந்த ஆண்டவனோட கிருபைதான்
ரஹ்மத், நாம எப்படி ஆசைப்பட்டாலும் அதை
நிறைவேற்றி வைக்கிறது என்னவோ அவன்
செயலாத்தானே இருக்கு இன்னார்க்கு இன்னா
ருன்னு எழுதிவெச்சு வழி நடத்துறவனே அந்த மகா
கருணையாளன் தானே...'
பேசிக் கொண்டே இருவரும் உள்ளே
போனார்கள். நீலாம்பரியைக் குளித்து ஓய்வெடுக்கச்
சொல்லிவிட்டு, சமையல் வேலையில் கவனமானாள்
ரஹமத் கைகள் காய்கறிகளில் இருந்தாலும் மனம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


176 வாழப் பிறந்தவள்
என்னவோ இந்த அழகான பெண்ணை முதன்
முதலாய்ச் சந்தித்த அந்த நாளில் போய் நின்றது.
பினாங்கு மருத்துவ மனைக்கு முதன் முதலாய்
பணியில் சேர்ந்திருந்த அவளது சகோதரன்
அவளிடம் தான் ஒரு பெண்ணை அனுப்பி வைப்ப
தாகவும் அவளுக்கு ஆங்கில மலாய் டியூஷன்
சொல்லிக் கொடுக்க ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு
செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அன்று
மாலை ஐந்துமணிக்கே வாசலில் நின்று வரப்போகும்
அந்தப் பெண்ணுக்காகக் காத்திருந்தாள் ரஹ்மத்.
அவள் எதிர்பார்த்த அந்தப் பெண் காரிலிருந்து
இறங்கியதும் அதிர்ந்து போனாள் அவள்.
வரப்போகும் பெண் ஏதோ ஒரு பள்ளிக்கூட
மாணிவியாக இருப்பாள் என்று எதிர்பார்த்தவளுக்கு
பாவாடை தாவணியோடு கவிபேசும் கருவண்டுக்
கண்களோடும் ஒரு சித்திரப்பாவை வந்து நிற்பது
அதிர்ச்சியாகவும், அதிசயமாகவும் இருந்தது. கூடவே
வந்த ஆப்ரகாம், அவளை நெருங்கி அந்தப்
பெண்ணைப் பற்றிச் சொன்னதும் வந்த பெண்ணை
வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள்.
அன்றுமுதல் அவளே நீலாம்பரிக்கு ஆசிரியை
ஆகி ஆங்கிலமும் மலாய் மொழியும் கற்றுத் தந்தாள்.
ஓரளவு அவள் மொழித்தேர்ச்சி பெற்றதும் அவளது
கணவர் மூலம் அவளுக்கு இலக்கண மரபுகள் இரு
மொழியிலும் கற்பிக்கப்பட்டன.
எதையும் வெகு சீக்கிரத்திலேயே கற்றுக்
கொள்ளும் திறமை படைத்த நீலாம்பரி ஆறு
மாதத்தில் தேறிவிட்டாள். அதன் பின் டேவிட்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 177

வீட்டிலேயே அவளிடம் பேசி மொழியறிவை


வளர்த்துவிட்டான். அதன்பின் ஆசிரியை மாணவி
என்ற நிலைமாறி, அன்பு மிகுந்த தோழிகளாய்
இருவரும் ஆகிப் போனார்கள்.
நட்புக்கு உதாரணம் இவர்கள்தான் என்பது
போல் அவர்களின் நட்பு உறுதியாகவும் உண்மை
யாகவும் வளர்ந்து வந்தது. ரஹ்மத் நீலாம்பரியின்
வாழ்நாள் முழுவதும் சந்தித்த அனைத்து விஷயங்
களையும் அறிந்தவள் அவளுக்கு ஆறுதல் தேவைப்
படும் போதெல்லம் மனதுக்கு இதமாக ஆறுதல்
அளிப்பவர் இதோ இன்றும் தனது உள்ளக்கிடக்கை
ஒன்றைத் தோழியிடம் கூறி, அதற்கான ஆலோசனை
நாடி வந்திருக்கின்றாள் நீலாம்பரி அந்த இனிய
தோழியின் ஆசையை நிறைவேற்ற தனது
சகோதரனின் உதவியை நாடியிருந்தாள் அவள் .
நல்ல விஷயங்கள் யார் நிறைவேற்ற நினைத்
தாலும் அவர்களுக்குத் துணை நின்று உதவி
செய்வதில் ரஹ்மத் எப்போதுமே முன் நிற்பவள்.
மற்றவர்களுக்கே அப்படி என்றால், அன்புத்
தோழியின் ஆசையை மட்டும் மறுப்பாளா என்ன?
தன் கணவரோடும் சகோதரனோடும் கலந்து பேசி
அவளை வரச் சொல்லி அதைப்பற்றி இன்று
முழுமையாகப் பேசி முடிக்கவே இன்றைய இந்த
சந்திப்பு!
சமையலறையில் இருந்து வெளியே வந்து
தோழியைத் தேடி மேலே போகிறாள் ரஹ்மத்.
பயணக் களைப்பு மிகுதியில் குளித்து முடித்து
ஆடைமாற்றிய உடனேயே படுக்கையில் சாய்ந்திருந்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


178 வாழப் பிறந்தவள்
தாள் நீலாம்பரி. அவளருகில் சென்று அவளை
எழுப்ப நினைத்தவள். அந்த அழகான பெண்ணின்
முகத்தையே வைத்தவிழி வாங்காமல் பார்த்து
நின்றாள்.
சுமார் நாற்பது வயதைத் தொட்டுவிட்ட அந்தப்
பேரிளம் பெண்ணின் எழில் அவள் கண்களை
அசரவைக்கின்றது.
கொஞ்சமும் கலையாத ஒவியமாய்... மாசுபடாத
சித்திரமாய் அவள் தெரிந்தாள் காட்டில் காய்ந்த
நிலவுபோல் ஆகிவிட்ட அந்தப் பெண்ணின்
இளமைக் காலத்தை நினைக்கும்போதே நெஞ்சு
கனத்தது. அவிழ்ந்து கட்டிலில் இருந்து தரையில்
புரண்டு கொண்டிருக்கும் அவளது கூந்தலை அள்ளி
மெத்தையில் போடுகிறாள். கருமேகமாய்ச் சுருண்டு
கிடக்கும் அந்தக் கேசச் சுருளில் ஒன்றிரண்டு வெள்ளி
முடிகள்!
ஓ... இயற்கையின் அருட்கொடை அல்லவா
அந்த நரை...! வாழ்க்கையின் அனுபவத்திரட்சி
அவளையும் நிலை நிறுத்திவிட்டது கண்டு
மனதுக்குள் ஓர் திருப்தி... திரும்பி நடக்கிறாள். ஆனால்
நீலாம்பரி எழுந்து அவளை நிறுத்துகிறாள். இருவரும்
கீழே வருகிறார்கள்.
கடந்த காலம்... நிகழ்காலம் தோழிகளின்
பேச்சில் கரைகிறது.
'இனிமேலும் புதுசா என்ன செய்யப் போறே
நீலம்... ஏதாச்சும் ஐடியா வெச்சிருக்கியா. வயசு
ஓடணும்லே....'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 179

தோழியின் எதிர்காலத் திட்டத்தை அறிந்து


கொள்வதில அவளுக்கிருந்த ஆர்வம் பேச்சில்
தெரிகிறது.
'நெறைய இருக்கு ரஹ்மத்..!. இன்றைக்கு நான்
வந்திருக்கிற இந்த வேலை வெற்றிகரமா முடிஞ்சிடுச்
சின்னா அடுத்த கட்டப் பணியை உடனே
ஆரம்பிச்சிடுவேன்....'
'நிச்சயமா உன்னோட ஆசை நிறைவேறிடும்
நீலம். டேவிட்டுக்காக நீ செய்திருக்கிற தியாகம்...
உனக்காக டேவிட் செய்திருக்கிற தியாகம்...
இதுக்கெல்லாம் கடவுளோட ஆசிர்வாதம் நெறைய
இருக்கும்கிறது என்னோட நம்பிக்கை. நீ அந்த
நம்பிக்கையோட இரு.. நிச்சயம் வெற்றி கிட்டும்.'
தோழிகள் சாப்பிட அமர்ந்தார்கள். தோழியின்
உணவுப் பழக்கத்தை நன்கு அறிந்து வைத்திருந்ததால்
அவளுக்காகவே மிகமிக நேர்த்தியான சைவ
சமையலைச் செய்திருந்தாள் ரஹ்மத், நீலத்திற்கு விழி
கொள்ளாத வியப்பு! புன்னகையுடன் தோழியைப்
பார்த்தாள்.
'என்ன பார்க்கறே...? நீ என்ன சாதாரண ஆளா...
மிகப் பிரபலமான நாட்டியக் கலாராணி... உனக்கு
விருந்து கொடுக்க எத்தனை பேர் காத்துக்
கிடக்கிறாங்கன்னு எனக்குத்தானே தெரியும்..!
உனக்காகப் பார்த்துப் பார்த்து செய்திருக்
கேன்டிம்மா! நல்லா சாப்பிடு...'
உணவின் சுவை அவளுக்குப் பிடித்திருந்ததால்
சுவைத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறாள். இருபது

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


180 வாழப் பிறந்தவள்
முப்பது நிமிடங்கள் ஓடியிருக்கும். வாசலில் கார்
வந்து நிற்கும் சத்தம் கேட்டு ரஹ்மத் வெளியே
வருகிறாள். அவள் கணவரும் அண்ணனும்
வந்தார்கள் சாப்பாடு முடிந்து எல்லோரும் ஒன்றாக
அமர்ந்து பேசினார்கள். ரஹ்மத்தின் அண்ணன் தான்
கொண்டு வந்திருந்த ஃபைலில் இருந்து சில
காகிதங்களை எடுத்து வந்து அதை வைத்துக்
கொண்டு அவளிடம் பேசினான்.
டேவிட்டின் பார்வையில் மீண்டும் கொண்டு
வருவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும்,
விரைவில் கண்கள் கிடைக்குமானால் அதைத்
தன்னால் நிறைவேற்றிக் காட்ட முடியும் என்றும்
ரஹ்மத்தின் அண்ணன் சொன்னார். பினாங்கில்
இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும்
நீலாம்பரி கோலாலம்பூருக்குப் பயணமானாள்.
நன்றி மறப்பது நன்றன்று என்பது காலத்தினால்
செய்த உதவி இந்த ஞாலத்திலும் பெரிது என்பதும்
அவள் உயிரணுக்களோடு கலந்திருந்த உணர்வு
களாகும். தன் பிள்ளைப் பிராயத்திலிருந்தே அந்த
உணர்வுகளோடு வளர்ந்தவளுக்கு இந்த முதிர்ச்சி
பெற்ற வாழ்க்கை நிலையில், தன்னை இந்த அளவுக்கு
நிலைப்படுத்தி வைத்த அந்தக் குடும்பத்திற்குத் தன்னா
லான நல்ல காரியம் ஒன்றைச் செய்யவேண்டும் என்று
நினைத்தாள்.
பார்வையிழந்த டேவிட்டிற்குப் பார்வை
கிடைக்குமானால் அதனால் எவ்வளவு நன்மைகள்
விளையும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
இயல்பாகவே பிறருக்காக உழைக்கும் குணம்கொண்ட

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 181

அவளுக்கு விழிகள் பறிக்கப்பட்டது எவ்வளவு பெரிய


மனக்கஷ்டத்தைக் கொடுத்த விஷயம் என்பதும்
அதனால் அவனுக்கேற்பட்ட இழப்புகள் என்ன
வென்பதும் அவள் அனுபவத்தால் உணர்ந்த
வளாயிற்றே!
'அந்த நல்லவன் நலம் பெற்று விழிபெற்று
மீண்டும் நடக்க ஆரம்பித்தால்...' அவள் மனம்
இறைவனிடம் நீண்ட பிரார்த்தனை செய்தது.
பினாங்கிலிருந்து வந்ததுமே அவனிடம் அவள்
உற்சாகமாய்ப் பேசினாள். ஏதோ ஒரு சந்தோஷம்
கைக்கு வரப்போவது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது.
நடையிலும் செயலிலும் துள்ளல் மிகுந்து
காணப்பட்டது. டேவிட் ஆச்சர்யப்பட்டான். அவள்
விட்டில் இல்லாத நேரத்தில் அவளுக்கு வந்த
கடிதங்களைக் கொடுத்தான் ஆவலுடன் வாங்கிப்
பார்த்தாள்.
சித்தார்த்தன் சபாவில் இருந்து புறப்பட்டு
வருவதாகவும் வந்து இருதினங்கள் ஜோகூரிலும்,
சிங்கப்பூரிலும் சில வேலைகள் முடித்துக்கொண்டு
கோலாலம்பூர் வருவதாகவும் எழுதியிருந்தான்.
சிங்கையில் நடைபெறப்போகும் புகைப்படக்
கண்காட்சியில் தனது படங்கள் இடம் பெறுவதா
கவும், நிச்சயம் பரிசுகளைத் தட்டக்கூடிய
பதாகவும் அவன் குறிப்பிட்டிருந்தான். அவன் வருகை
அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பலமுறை
அக்கடிதத்தை டேவிட்டிடம் படித்துக் காட்டினாள்.
தோட்டத்தில் டேவிட் உலவிக் கொண்டிருந்
தான். ஊஞ்சலில் அமர்ந்தவாறு அவனிடம் நீலாம்பரி

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


182 வாழப் பிறந்தவள்
பேசிக்கொண்டிருந்தாள். மாலையில் தவழ்ந்து வரும்
தென்றலும், அதன் இதமான குளிரும் அதில் கலந்து
வரும் சுகந்த மணமும் அவனுக்குப் புதுத் தெம்பைத்
தந்தன. நடந்து சென்றுகொண்டிருக்கையில் முகத்தில்
மோதிய ஜாதிமல்லிக் கொடியைக் கையால் தடவிக்
கொண்டே அவளிடம் பேசினான்.
'ரொம்ப அழகா வளர்ந்திடுச்சி நீலம்...
உன்னோட கைக்கு எப்பவுமே ராசி அதிகம். இந்த
வீட்டுக்கு நாம வந்தப்ப வெறுந்தரையா கெடந்த
இந்தத் தோட்டம் இப்ப எவ்வளவு அழகா இருக்குது
பாரேன்.'
அவளுக்கும் அந்த வார்த்தைகள் மகிழ்வைத்
தராமல் இல்லை. 'கரடு முரடான பூமியைக்கூட
கருணையோடு கை வைத்தால் அதுவும் கைலாச
பதியாய் மாறிவிடும் என்ற தாயின் வார்த்தைகள்
நினைவுக்கு வந்தன. எழுந்துவந்து அவனருகில் நின்று
அவனோடு சேர்ந்து அந்தச்சந்தன வண்ண
மொட்டுக்களை ஆசையுடன் தடவிப் பார்க்கிறாள்.
வீட்டின் முன்னே கார் வந்து நிற்கும் சத்தம்
கேட்டு இருவரும் திரும்புகின்றனர். பெரிய டேச்சி
ஒன்று நிற்கவும் அதிலிருந்து இருவர் இறங்கவும்
நீலாம்பரி அவர்களை நோக்கிச் செல்கிறாள். அந்த
இருவரில் ஒருவன் ஜீன்ஸ் சிலுவாரும் மேலே சிவப்பு
நிற பனியனும் அணிந்து கறுப்பு கண்ணாடியுடன்
நின்றான். இன்னொருவன் பைஜாமாவில் இருந்தான்.
பைஜாமாவில் இருந்தவன் கண்களில் ஒருவித
பரபரப்பும் தேடலும் இருந்தன.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 183

தனக்குக் கிடைக்க வேண்டிய பணத்தைப்


பெற்றுக்கொண்டு வாடகைக் கார் சென்றதும்
ஜீன்ஸும் பனியனுமாய் நின்றவன் வாசல் கேட்டில்
கைவைத்துத் தள்ளியவாறு உள்ளே நுழைந்தான்.
அவளருகே வந்து கறுப்புக் கண்ணாடியைக்
கழற்றியவாறு...
'நல்லா இருக்கியா நீலாம்பரி' என்றான்
கனிவுடன். எங்கிருந்தோ ஒரு தீப்பந்து வந்து தலையில்
விழுந்தது போன்ற தகிப்பு நீலாம்பரிக்கு பேச வாய்
எழாமல் திகைத்து அதிர்ச்சியால் தொண்டை
வறண்டு நின்றாள். வந்தவன் முன்வைத்த காலைப்
பின்னால் இழுத்துக்கொண்டான்.
'என்ன நீலாம்பரி... இத்தனை வருஷத்துக்கு
அப்புறமா உன்னைப் பார்க்கணும்கிற ஆசையோட
நான் வந்துருக்கேன். நீ, வா என்று ஒரு வார்த்தை
சொல்லி அழைக்காம நிக்கறியே...
மறந்துட்டேன்னா... உன்னைப் பார்க்கணும்னு
ஊர்லேர்ந்து வந்திருக்கிற உன்னோட அத்தை மகன்
ஸ்ரீதரனைக்கூடவா நீ மறந்துட்டே....'
நறுக்கொன்று முதுகில் ஊசி குத்துவது
போன்ற உணர்வு....! நிமிர்ந்து கூர்ந்து அந்த
மனிதனைப் பார்க்கிறாள் அமைதியான பார்வையும்
குறுகுறுக்கும் பார்வையை ஏந்திய கண்களில் ஓர்
தவிப்பும் எதையோ பேசத் துடிக்கும் உதடுகளுமாய்
அவன் நின்றான்.
அத்தை பிள்ளையா.... ஸ்ரீதரனா..? தன்னைக்
காணவிரும்பிக் கடிதம் எழுதிய அந்த அத்தானா?
அவன் எப்படி இந்தப் பாவியுடன் சேர்ந்தான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


184 வாழப் பிறந்தவள்

மனதுக்குள் எழுந்த கேள்வி வெளியே வரும் முன்பே


ஸ்ரீதரன் பேசினான்:
'உனக்கு நான் எழுதிய கடிதத்துக்கு நீ பதில்
போடாததால நானே புறப்பட்டு வந்தேன்.
உன்னோட பழைய முகவரிக்குப் போய் இவரைப்
பார்த்தேன். இவரும் உன்னைப் பார்க்கணும்கிற
ஆசையோட இருந்தாரு.... அதனாலதான் முகவரி
யைத் தேடி வாங்கி ரெண்டுபேருமா வந்தோம்.
அங்கே முகவரியைத் தேட கஷ்டமா இருந்தாலும்,
இங்கே கஷ்டமில்லாம கெடைச்சிடுச்சி... எந்தச்
சிரமமும் இல்லாம டாக்சி வந்துடுச்சி.'
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே
அவள் அருகில் டேவிட் வந்தான். அவளருகில் வந்து
அவள் தோளில் கைபோட்டு,
'யாரு வந்திருக்காங்க நீலம்... உன்னோட
ப்ரண்ட்ஸா... உள்ளே அழைச்சிட்டு வராம வெளியே
நின்று பேசிகிட்டு இருக்கியே...' என்கிறான்.
'ரொம்ப துரத்திலேர்ந்து வந்துருக்காங்க
டேவிட்.. நமக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவங்க
தான். அவன் கையை எடுத்துத் தன் கையில்
சேர்த்துக் கொண்டவள் இயல்பான நிலைக்குச்
சட்டென்று மாறிப்போனாள்.
'லக்கேஜ் இங்கேயே இருக்கட்டும்... நீங்க வாங்க...
அதை வேலைக்காரப் பொண்ணு எடுத்துவைக்கும்.'
இருவரிடமும் சொல்லி உள்ளே அழைத்துப்
போகிறாள். உள்ளே சென்றதும் இருக்கையைக்காட்டி

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 185
அமரச் சொல்கிறாள். என்ன வேண்டும் என்று
கேட்டுக் குடிப்பதற்கு தேநீர் கொடுத்துக் குடிக்கச்
சொல்கிறாள்.
பின் சாவகாசமாய் வந்து டேவிட்டின் அருகில்
அமர்கிறாள். இரண்டு பேரின் பெயரையும் சொல்லி
அறிமுகப்படுத்துகிறாள்.
ஸ்ரீதரன் தன் அத்தை மகன் என்பதையும்
தன்னை மணக்க விருப்பம் கொண்டு மனதிற்
குள்ளேயே அந்த விருப்பத்திற்குக் கல்லறை கட்டிக்
கொண்டவன் என்பதையும் டேவிட்டிடம் சலன
மில்லாமல் சொல்கிறாள் ஸ்ரீதரன் அதிர்ந்து
போகிறாள். அவள் சொன்ன வார்த்தைகள்
அவனருகில் அமர்ந்திருந்த நாகராஜனையும்
அதிர்ச்சியடையச் செய்கிறது. ஆனால் டேவிட்டின்
முகம் மட்டும் கறுத்துப் போகிறது. நீலாவைத் தன்
கைகளால் தொட்டு,
'நீலாம்பரி... அந்த ஆள் இப்ப எதுக்கு இங்கே
வந்துருக்கிறார்னு நான் தெரிஞ்சுக்கலாமா. ஏன்னா
இந்த மாதிரி கையாலாகாத ஆண்களால எத்தனை
அப்பாவிப் பெண்களோட நம்பிக்கையெல்லாம்
சிதைஞ்சுப் போய் எதிர்காலமே குட்டிச் சுவராகி
யிருக்குன்னு உனக்குத் தெரியுமா. இந்தப் பாவி
மட்டும் உன்னைத் துணிச்சலோட அப்பவே
கல்யாணம் பண்ணியிருந்தா இன்றைக்கு நீ இவ்வளவு
கஷ்டப்பட்டிருக்க மாட்டியே, நீலம்... அன்றைக்கு
உன்னைப் பத்திக் கவலைப்படாம ஒரு கபோதி
யாட்டம் ஓடிப் போனவன்.... இப்ப எதுக்கும்மா
வந்திருக்கிறான்... எதுக்காக வந்துருக்கான் இங்கே?'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


186 வாழப் பிறந்தவள்
தாயாகித் தந்தையாகி, அவளைச் சுற்றித் தகர்க்க
முடியாத வேலியாகிக் காலம் காலமாய் காத்து
நிற்கும் காவல் தெய்வத்தின் சீற்றமோ அது! நீலாம்பரி
அவனை ஆசுவாசப்படுத்தினாள்.
'இல்ல டேவிட்... அது இவரோட தப்பில்லே....
காலம் செய்த கோலம்... அதுக்கு இவர்
செய்யமுடியும்....! என்னோட தலையில் ஆண்டவன்
எழுதினதைத் தவிர வேறெ ஒண்னு நாமா
எழுதிடவா முடியும்? இவர் என்னை விட்டுப்
போனதினாலத் தானே இப்படிப்பட்ட உண்மையான
ஒரு உறவை ஆண்டவன் எனக்குக் கொடுத்தி
ருக்காரு...!'
'சொல்லிக் கொண்டே அவன் கையை எடுத்துத்
தன் மடியில் வைத்துக்கொண்டாள். அவளது பேச்சும்
போக்கும் ஸ்ரீதரனையும் நாகராஜனையும் தடுமாற
வைத்தன. ஸ்ரீதரன் எதனையும் பேசாமல் திணறிக்
கொண்டிருக்க மறுபடியும் டேவிட் பேசுகிறான்.'
இப்படி எல்லாம் நீ பேசி சமாளிக்காதே நீலம்!
அந்த நேரத்தில இவன் உன்னைக் கல்யாணம் பண்ண
லேன்னாலும் அந்த அயோக்கியனுக்கு உன்னைக்
கட்டிக் கெடுக்காம இருக்க ஏதாச்சும் பண்ணி
யிருக்கலாமே. அதைக்கூட இவன் செய்யலியே….’
நீலாம்பரி அவனை இடைமறித்துக் கூறுகிறாள்.
அவன் தோளில் கை வைத்துச் சமாதானப்
படுத்தியவளாய்,
'டேவிட்... நீங்க ஆத்திரப்படவேண்டிய
அவசியமே இல்லை. ஏன்னா இப்ப இந்த இடத்தில

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 187

அந்த நபரும் உட்கார்ந்துதான் இருக்கிறாரு...


அதாவது எனக்குத் தாலிகட்டி இந்த ஊருக்கு
என்னைக் கூட்டிவந்த அந்தப் புண்ணியவான்...
என்னோட கணவர்னு உரிமை கொண்டாடி
வந்திருக்கிறார் டேவிட்.'
அந்த வார்த்தையைக் கேட்ட டேவிட்டின்
உடம்பு மெல்ல நடுங்கத் தொடங்குகின்றது. கண்களில்
ஈரம் கசிகிறது. நெஞ்சுக்குள் அடிபட்டு விழுந்த
சிட்டுக் குருவியின் படபடப்பு அவனாகவே
நீலாம்பரியின் கையைத் தேடி இறுகப்பிடித்துக்
கொள்கிறான்.
எதிரே அமர்ந்திருந்த நாகராஜன் டேவிட்டின்
உணர்ச்சி பாவங்களைக் கண்டு மெல்ல எழுந்து
அவனருகில் வருகிறான். அவன் தோளில் வலது
கையை வைத்து,
'நீங்க என்னைத் தப்பா நெனைச்சிடாதீங்க...
நீங்களும் நீலமும் நெனைக்கிறமாதிரி நான் பழைய
நாகராஜனா பழைய நினைவுகளோடு இங்கே
வரலே. இப்ப நான் திருந்தின மனுஷன் நான் செய்த
பாவங்களுக்கெல்லாம் காலம் என்னைத்
தண்டிச்சிடுச்சி. நான் ஜெயில்லேர்ந்து வந்ததும் நேரா
உங்க வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டிருப்பேன்.
ஆனா நீலாம்பரி என்னைப் பார்த்து பயந்து
மறுபடியும் வாழ்க்கையில குழப்பம் வந்து கஷ்டப்படக்
கூடாதுன்னுதான் நான் வரலே…’
டேவிட்டின் நடுக்கம் குறைகிறது. நீலாம்பரியின்
கைகளைப் பிடித்திருந்த கையை எடுத்து

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


188 வாழப் பிறந்தவள்
நாகராஜனைத் தொடுகிறான். அவன் இரண்டு
கைகளினாலும் டேவிட்டின் கைகளைப் பற்றிக்
கண்ணீர் ஒற்றிக்கொண்டு பேசுகிறான்.
'உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே
தெரியலிங்க.... ஒரு பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து
அவளுக்கு நல்லது செய்ய வேண்டிய கணவனே
அவளுக்கு முழு துரோகியா மாறித் தொந்தரவு
கொடுத்த நேரத்தில, கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி
இத்தனைவருஷமா கண்ணை இமை காப்பாத்தற
மாதிரி நீலாம்பரியை நீங்க காப்பாத்தி இருக்கீங்க…
நான் செய்த பாவத்துக்கு கடவுள் சரியான
தண்டனையைக் கொடுத்திட்டான். நான் இன்னும்
கொஞ்ச காலந்தான் உயிர்வாழப் போறவன். அதுக்கு
முன்னால நீலாம்பரியை நேர்ல பார்த்து மன்னிப்பு
கேட்கத்தான் வந்தேன். அதே நேரத்தில உங்ககிட்டே
என் நன்றியைத் தெரிவிக்கவும் இது ஒரு வாய்ப்பா
இருக்குன்னு நெனைச்சேன். கடவுள் என்னைக்
கைவிடல. இவர் உங்க முகவரியைத் தேடி என்கிட்டே
வந்ததும் இவரோட நானும் வந்துட்டேன்.
எக்காரணத்தைக் கொண்டும் என்னை நீங்க தப்பா
நினைக்கக் கூடாது. நான் உங்க வாழ்க்கையில
தொந்தரவு கொடுக்க வரலே. நீங்க ரெண்டுபேரும்
சந்தோஷமா வாழனும்னு கடவுளை வேண்டிக்
கிறேன். நீங்க என்னை மனசார மன்னிக்கணும்..
அப்பத்தான் எனக்கு மன அமைதி கிடைக்கும்.
டேவிட் நாகராஜனை அருகில் அமர்த்திக்
கொள்கிறான். நீலாவின் பக்கம் திரும்பி,

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 189
'நீலா இன்றைக்கு இரவு சாப்பாடு ஸ்பெஷலா
இருக்கனும்னு மீனாட்சிகிட்டே சொல்லும்மா... நீ
வந்து உன் அத்தானோடு பேசிக்கிட்டு இரு...நான்
இவர் கூட கொஞ்சம் தோட்டத்தில்
வர்றேன்.'
சொல்லிக் கொண்டே டேவிட் எழுந்து
நடக்கிறான். எவ்வித தடங்கலும் இன்றி அவன்
நடக்க, அவன் பின்னால் பரபரப்புடன் சென்று அவன்
கையைப் பிடிக்கிறான் நாகராஜன்.
'பயப்படாதீங்க நாகராஜ்... எனக்கு இது பழகிப்
போன விஷயம். நீலா என்னை ரொம்பவும்
பக்குவப்படுத்திட்டா... இந்த உலகத்தில எப்படி
வாழனும்கிறது கடந்த காலத்தில எங்களுக்குப்
பழகிப்போச்சு... நானோ நீலாவோ எதையும் கண்டு
பயப்படற நிலையில இப்ப இல்லை. ஏன்னா எல்லா
கஷ்டங்களையும் அந்தப் பொண்ணு கடந்து
வந்துட்டா. நானும் பல சோதனைகள்ல விழுந்து
எழும்பிட்டேன். அதனால இனிமே வரப்போற
எதுக்காகவும் நாங்க பயப்பட வேண்டிய அவசியம்
கிடையாது...'
நாகராஜன் அவன் பேச்சில் இருந்த சில
வார்த்தைகளால் சங்கடப்பட்டான்.
'நீங்க என்னை மன்னிக்கலேன்னு நெனைக்
கறேன். ஸார்... ஒழுங்கான வளர்ப்பு முறையும் நல்ல
வழிகாட்டுதலும் இல்லாம கண்ட கண்ட நண்பர்
களோட சேர்ந்து இளமைக்காலத்துல நான் கெட்ட
வனா இருந்தது உண்மைதான். ஆனா இப்ப முழுசா
திருந்திட்டேன். மனுஷனா நான் வாழனும்னு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


190 வாழப் பிறந்தவள்
நெனைக்கிற நேரத்தில கடவுள் எனக்கு வாய்ப்பை
வழங்கல... ஆனா அதுக்காக நான் வருத்தப்படலே
ஸார் நீங்க ரெண்டுபேரும் என்னை மனசார
மன்னிக்கனும் அந்த மன்னிப்பு எனக்கு பாபவிமோ
சனம் தந்துடும் என்னை நம்புங்க நான் உங்களுக்குத்
தொல்லை கொடுக்க வரலே சத்தியமா நான்
மாறிட்டேன் ஸார்...!'
டேவிட் அவனை சமாதானப்படுத்துகிறான்.
இருவரும் தோட்டத்து ஊஞ்சலில் அமர்கிறார்கள்.
தனது கடந்த காலத்து நிகழ்வுகளையும் ஏற்பட்ட
இன்னல்களையும் ஒரு பாதிரியாரிடம் தன் மனம்
விட்டுச் சொல்லும் குற்றவாளியைப் போன்று
டேவிட்டின் கைகளைப் பற்றியவனாக நாகராஜன்
சொல்லிக்கொண்டிருந்தான்.
விட்டின் உள்ளே தன் எதிரில் துசுபடாத
ஒவியம் போல் அமர்ந்திருந்த நீலாம்பரியை இமை
கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஸ்ரீதரன்.
வீட்டின் முன் அறையில் வைக்கப்பட்டிருந்த
கேடயங்களும் பிரேமுக்குள் அடங்கிய நிழற்படங்
களும் நினைவுப் பரிசுகளும் அவள் இந்த நாட்டில்
வாழ்ந்ததற்கான அடையாளச் சின்னங்களாய்
பிரதிபலித்தன. கடந்து போன காலங்களில் அவள்
சந்தித்த சோதனைத் தீயில் எல்லாம் விழுந்து எழுந்து
புடம் போட்ட தங்கமாய் அவள் மிளிர்ந்தாள்.
நெஞ்சில் முட்டி மோதும் பெருமிதம் ஒருபுறமும்
அந்த நாளில் அவளைக் காப்பாற்றத் திராணியற்றுப்
போன குற்ற உணர்வு ஒருபுறமுமாய் அவனைத் திணற
வைக்க சற்றே நிதானித்தவன்,

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 191

'நீலம்... உன்னைப் பார்க்க நான் நாகராஜ


னோடு வந்தேன்னு என்மேல வருத்தப்படறியா?
எனக்கு அறிமுகம் இல்லாத இந்த ஊர்ல அவனை
விட்டா வேறு வழியே இலலை நீலம் எப்படியாவது
உன்னை நேர்ல பார்த்துட்டுத்தான் சாகனும்கிற
ஆசையில ஓடிவந்தேன் நீலம்... நீலம் நீ நல்லா
இருக்கியா. டேவிட் உன்னை நல்ல வெச்சிருக்
கிறார்ன்னு வெளித்தோற்றம் சொன்னாலும் உள்ளுக்
குள்ளே எரிமலை இன்னும் குமுறிக்கிட்டு
இருக்குன்னு எனக்குத் தெரியுதும்மா...'
'மாமாவுக்கு... அந்தப் பெரிய மனிதருக்கு நீ
கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டே! ஆனா
உன்னோட வாழ்காலம் காட்டுல எரிஞ்ச நிலவு
போல ஆயிடுச்சே..! சொல்லு நீலம்... நீ சந்தோஷமா
இருக்கியா...?
போசிக் கொண்டே எழுந்து வந்து அவள்
முகத்தைத் தன் கைகளில் ஏந்திக் கண்களால் ஆழமாய்
அவளைப் பார்த்தான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


192 வாழப் பிறந்தவள்
23

இறக்கை கட்டிப் பறந்து போன இருபத்தி ஆறு


ஆண்டுகள்...! அந்த இடைப்பட்ட காலத்தில்தான்
எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து போயிருக்
கின்றன. ஆனால் காலம் எவ்வளவுதான் மாறினாலும்,
காரண காரியத்தோடு உலக வரலாற்றில் பலவித
மாற்றங்கள் வந்த போதும் அவன் மட்டும் மாறாமல்
அந்த மனதுக்குள் அவளையே கருவறைத் தெய்வமாக்
கிப் பூஜித்து வந்தான். அந்தத் தவத்துக்குக் கிடைத்த
பயனாய் அவன் அவளைப் பார்க்கும் வாய்ப்பை.
சந்திக்கும் நேரத்தை சூழ்நிலையைக் காலம் கையில்
கொடுத்துள்ளது. ஆனால் அது கனிந்து கையில்
விழுமா அல்லது காலம் என்னும் மரத்திலேயே
காயாகவே தொங்கிக் கொண்டிருக்குமா?
அவனது இரு கைகளுக்குள்ளும் ஏந்தப் பட்ட
முகத்தின் உணர்ச்சி பாவங்கள் அவனைச் செயலிழக்க
வைத்தன. கதை கதையாய் எழுதக் கூடியவன் அவன்!
ஆனால் காவியங்களையே அவளது விழிகள்
அவனிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தன.
மெளனமாய் அவன் கைகளை விலக்கிவிட்டு
எழுகின்றாள்.
'ஸ்ரீதர்... நீ வீடு முழுசும் பார்க்கலியே, வா
பார்த்துட்டு வரலாம்....'
அவள் பேச்சு அவனை மெய்சிலிர்க்க
வைக்கிறது. அந்தப் பாவாடை தாவணி காலத்தின்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 193

பழக்கம் இப்போதும் அப்படியே இருக்கிறது


என்றால்... அவளும் இன்னும் உள்ளத்தால் குழந்தை
யாகத்தான் இருக்கிறாளா..? அவள் பின்னாலேயே
சென்றான்.
ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு
வந்தான். மேலே மட்டும் நான்கு பெரிய அறைகள்
இருந்தன. பெரும்பாலும் நண்பர்கள் உறவினர்கள்
வருகைக்காக சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இரண்டாவது தளத்தில் ஒரு பெரிய அறை!
அதுதான் மாஸ்டர் பெட்ரும் அதில் மிகப்பெரிய
அலமாரியில் அடுக்கப்பட்ட பலவகையான நூல்கள்,
அது ஒரு விரிவுரையாளரின் அறை என்பதைப்
பார்த்தாலே புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்
பட்டிருந்தது. குளியலறை, குளிர்சாதன வசதி என்று
மிகவும் சொகுசான முறையில் இருந்த அந்த
அறையில் ஒற்றைப் படுக்கையும் படிக்க எழுத மேசை
நாற்காலியும் இருந்தன.
'ஸ்ரீதர்! இது தூன் டேவிட் இருக்கிற
பார்வையில்லேன்னு நெனைக்காதே. அவருக்கு
ஆயிரம் கண்ணாக்கும்....'
சொல்லிக்கொண்டே அவள் நகர்ந்து வந்தாள்.
அடுத்தாற்போல் சமையலறையை ஒட்டியது போல்
ஒரு சின்னஞ் சிறு அறை தரையில் சுருட்டி வைக்கப்
பட்ட பாயும் தலையணையும் பக்கத்தில் ஒரு துணி
அலமாரியும் இருந்தன. வேலைக்காரியின் அறை
யென்று நினைத்துக் கொண்டான். அவளோடு
நடந்தான் முன்னால் நடந்தவள் நின்றாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


194 வாழப் பிறந்தவள்
'ஸ்ரீர், இதுதான் என்னோட அறை!
அமைதியா பொழுதை கழிக்கப் போதுமான இடம்!'
அவள் சொன்ன சொல் அவனை அந்த
இடத்திலேயே ஆணி அடித்தாற்போல் நிறுத்தியது.
'என்னது... நீ... நீ இந்த இடத்தில துங்கறியா..?
நீலாம்பரி... நீ என்ன சொல்றே?'
அவன் கண்கள் மிரண்டது போல் அவளைப்
பார்க்கின்றன. அவனுக்கு நன்றாக அந்த நாட்கள்
நினைவுக்கு வருகின்றன...
அவள் படுப்பதற்காக அவள் அப்பா அந்தக்
காலத்தில் பர்மா தேக்கில் கலை அம்சம் பொருந்திய
கட்டில் செய்து போட்டவர் ஒரு ராஜகுமாரி போல்
வாழ்ந்தவளா இன்று இப்படி...?
ஆத்திரமாய் அவள் தோள்களைப் பற்றி, நீ
என்ன சொல்றே நீலம்? யாரையோ ஏமாத்தறதா
நெனைச்சி நீ உன்னையே ஏமாத்திகிட்டு இப்படிப்
பட்ட ஈனத்தனமான வாழ்க்கை வாழறியா நீ.?
அவனுக்கென்ன குறைச்சல். அவனோட வாழறதில
என்ன தப்பு. ஏன் அவனையும் ஏமாத்தி உன்னையும்
ஏமாத்தி. தன் தலையிலடித்துக் கொண்டு
அழுகிறான்.
'நீலம்... மாமா பெரிய தப்பு பண்ணிட்டார்
நீலம். வெளிநாடு போனா நீ நல்லாயிருப்பேன்னு
தப்புக் கணக்குப் போட்டு அநியாயமா ஏமாந்து
போய்ட்டாரும்மா... இந்த வாழ்க்கை நீ வாழ்றதை
அவர் பார்த்தா நெஞ்சு வெடிச்சே செத்துப்
போய்டுவாரே! கடவுள் அவருக்கு அந்த

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 195
தண்டனையைக் கொடுக்காம சந்தோஷமா. நீ நல்லா
இருக்கிறேங்கிற சந்தோஷத்திலேயே போய்ச்
சேர்ந்துட்டாரும்மா....'
அவன் கைகளைப் பிடித்து நிறுத்தி, அவன்
அழுவதை நிறுத்துகிறாள்.
ஸ்ரீதரனுக்கு சொல்ல வேண்டிய விஷயம் வெகு
சுலபமாய் அவனுக்கு விளங்கிவிட்டது. அவளுக்கு
நிம்மதியைத் தந்தது.
'ஸ்ரீதர்... யார் எங்கே எப்படிப் பிறந்தாலும்
அவுங்க எதை அனுபவிக்கணும்னு தலை
அமையுதோ அப்படித்தான் எல்லாம் அமையும்.
அழகும் அறிவும் படிப்பும் திறமையும் இருந்தும் நீ
இன்னும் இப்படி ஒரு ஏகாந்தியா சுத்திகிட்டு
இருக்கிறேன்னா அதுவும் விதியோட விளையாட்டு
தானே!'
'என்னதான் உலகவாழ்க்கையில மனிதன்
நாகரிகத்தைக் கொண்டு வந்தாலும் ஒரு ஆணும்
பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்தி எதிர்
காலத்துக்கு தங்களோட மிச்சங்களை விட்டுப்
போனாத்தான் அவங்க வாழ்ந்ததா அடையாளம்
கூறுது திருப்தி அடையுது இந்த சமுதாயம்.
'என் தாய் தகப்பனும் நான் வாழனும்னுதான்
நெனைச்சாங்க ஆனா அவுங்க போட்ட கணக்குதான்
தப்பா போச்சு... அந்நிய நாட்டுக்குப் போற நம்ம
ஆளுங்க அங்கே எப்படி வாழ்ந்துகிட்டிருக்கிறான்.
என்ன செய்து கிட்டிருக்கிறான்னு
சிந்திக்கிறது கெடையாது. ஆடை ஆபரணங்களோட

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


196 வாழப் பிறந்தவள்

கண்ணுக்கு வெளிச்சமா ஒருத்தன் வந்து நின்னுட்டா


போதும், ஏமாந்துடுறாங்க.'
'அப்படித்தான் ஒரு ஒட்டல் சிப்பந்தியான
நாகராஜன் பகட்டா வந்து நின்னு அப்பாகிட்டே
பேசினப்ப அப்பாவும் ஏமாந்து போய்ட்டாங்க.
அவுங்க கண்ணுல தெரிஞ்சதெல்லாம் மலேசியாவில்
தன் மக பெரிய வசதியான வாழ்க்கை
போறாங்கிற கற்பனை மட்டுந்தான்! அப்பா
மட்டுமில்லே பூரீதர், அவர்மாதிரி ரொம்ப தாய்
தகப்பனார் இதைத்தான் செய்யறாங்க.. ஆனா,
'மொழி தெரியாத நாட்டுல. யாரும் அறிமுக
மில்லாத நாட்டுல அந்தப் பொண்ணுங்க அனுபவிக்
கிற கஷ்டநஷ்டம் அவுங்களுக்குத் தெரியறதுக்கு
வாய்ப்பே கிடையாது ஸ்ரீதர் எத்தனை பொண்ணுங்க
என்னைவிட கேவலமான நிலைமையில சிக்கிச்
சீரழிஞ்சிருக்காங்கன்னு அவுங்களுக்குத் தெரியுமா..
'ஏதோ அதிர்ஷ்ட வசமா சில பொண்ணுங்
களுக்கு நல்ல வாழ்க்கை அமையுது. இன்னும் சில
பொண்ணுங்க புத்திசாலித்தனமா பொழைச்சிக்
கிறாங்க தலைக்கு வந்தது தலைப்பாகையோட
போச்சுன்னு சொல்வாங்க. என்னைப் பொறுத்த
வரைக்கும் அது உண்மையாயிடுச்சு அப்பா அம்மா
செய்த புண் ணியம் என்னை இந்த
வாழ்க்கையில பாதுகாத்து வெச்சிருக்குது ஸ்ரீதர்!'
பூ மழையாய் உதிர்ந்த அவளின் வார்த்தைகள்
அவனைத் திணற வைத்தன. கண்களில் படிந்த
ஈரத்தைப் புறங்கையால் துடைத்தவனாய் சொன்னான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 197
'இருந்தாலும் வாழ்வைத் தேடி நீ நெருப்
பாற்றில் நீந்திக் கரை சேர்ந்துருக்கே நீலம்...!'
'என்ன செய்யறது ஸ்ரீதர்... வாழப் பொறந்
துட்டோமே... வாழ்ந்தாகணு மில்லியா..!'
'ஆனா நீ இன்னும் வாழலியே... அப்படி ஒரு
நாடகம்தானே போட்டுகிட்டிருக்கே..!'
அழுத்தமாய்ச் சொன்னான். அவள் சிரித்தாள்.
பேசிக்கொண்டே இருவரும் வெளியே வந்தார்கள்.
'இன்னும் நீ புரியாமத்தான் பேசறே ஸ்ரீதர்...!
இந்த உலகத்தில எத்தனை பேர் உண்மையா
வாழ்ந்துகிட்டிருக்கிறாங்கன்னு உன்னால சொல்ல
முடியுமா. எத்தனை குடும்பங்கள்ல என்னன்ன
நாடகம் நடந்துகிட்டிருக்குன்னுதான் உன்னால
கண்டுபிடிக்க முடியுமா?'
'எங்கயும் உண்மையில்லே ஸ்ரீதர் நூற்றுக்கு
எண்பது பேர் போலியாத்தான் வாழறாங்க ஊர்
உலகத்துக்காக வெறும் வேஷம் போட்டுக்
காலத்தைக் கடத்திகிட்டிருக்கிறவங்க இன்றைக்கு
நிறைய பேர்.'
'உண்மையான அன்பு நேசம் பாசம் பற்று
எல்லாம் அங்கே இல்லை. மாறாக அடுத்தவங்க
கண்ணுக்கு அழகான வாழ்வு நடத்திற மாதிரி
நாடகம்தான் நடக்கும். அப்படிப்பட்ட உலகத்தில
என் வாழ்க்கை மோசமா போயிடலியே...'
'அந்த நாடக வாழ்க்கைக்கும் அவங்க ஒரு
அடையாளம், மிச்ச மீதின்னு அவுங்க வாரிசுகளை
விட்டுட்டுப் போனாங்களே... அது உன்னால

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


198 வாழப் பிறந்தவள்

முடியாதே நீலம்... உன்னோட வாழ்வு நிறை


வாகலியே...!'
'நிறைவாகப் போகுது ஸ்ரீதர்... கூடிய சீக்கிரம்
அது நிறைவேறிடும். இவ்வளவு பெரிய வீட்ல அந்தக்
குறை இருந்தது நெஜந்தான். அதையும் சீக்கிரம்
நிறைவாக்கிடுவேன். என்னை அப்பான்னு கூப்பிட
பிள்ளைகள் வந்துடும்.'
சொன்னவள் கண்களில் நீர் தளும்புகிறது.
அவன் பார்த்து விடக்கூடாது என்பதற்காக மெல்ல
அதைத் துடைத்துக் கொள்கிறாள். பூரீதர் அவள்
சொன்ன சொல்லால் வாயடைத்துப் போய் நடந்து
வருகிறான். மூளையில் பலவித குழப்பங்கள்.
'என்ன செய்யப் போகிறாள் இந்த நீலாம்பரி!'
என்ற வினாவுடன் அவளைப் பின் தொடர்கிறான்.
தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த
இருவரும் வருகின்றனர். அனைவரும் உள்ளே சென்று
இரவு உணவுக்காக மேசைமுன் அமர்கின்றார்கள்.
டேவிட் சர்வ சாதாரணமாய் தன் இருக்
கையில் அமர்ந்து மற்றவர்களைப் போல் உணவை
எடுப்பது மற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அவன் பக்கத்தில் அமர்ந்து நீலாம்பரி அவனுக்குத்
தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
'நீலா உனக்கு சந்தோஷமான விஷயம் நடக்கப்
போற இந்த நேரத்தில நம் உறவினர்கள்
வந்திருக்கிறது இன்னும் மகிழ்ச்சிகரமான விஷயம்
இல்லையா...'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 199

அகமும் முகமும் மலர அவன் சொன்னதைக்


கேட்டு மற்றவர்கள் அவனை வியப்புடன் பார்க்க,
அவள் டேவிட்டின் தோளில் கைவைத்து,
'எல்லாம் உங்க பெரியமனசுதான் காரணம்...
நாளைக்கு மத்தியானம் அவுங்கள் லாம்
சேர்ந்துடுவாங்க அப்புறம் இந்தவீடு விழாக்கோலம்
கொண்டாடும். மகிழ்ச்சியுடன் அவள் சொல்ல,
ஸ்ரீதரன் ஆர்வத்தை அடக்க முடியாமல் 'யார்
வர்றாங்க நீலம்... எங்களைவிட இன்னும்
முக்கியமான அந்த விருந்தாளிகள் யாருன்னு நான்
தெரிஞ்சுக்கலாமா...?' என்று கேட்டான்.
'விருந்தாளிகள் வரல ஸ்ரீதர்... இந்த வீட்டுப்
பிள்ளைகள்... அதாவது எங்க பிள்ளைகள் நாளைக்கு
வீட்டுக்கு வர்றாங்க...'
இரண்டுபேர் கண்களும் வியப்பால் விரிய
அவள் புன்னகையுடன் அவர்களைப் பார்க்கிறாள்.
அந்த நாலு பேரும் வீட்டுக்கு
அப்புறம் நீலாவுக்கு என்னைக் கவனிக்கவே நேரம்
இருக்காது. டேவிட் சொல்கிறான்.
ஸ்ரீதர் அவளையே மெளனமாய்ப் பார்க்க
நாகராஜன் நெஞ்சம் நிறைந்த திருப்தியுடன் அவளை
மனதால் வாழ்த்துகிறான்.
தொலைபேசி அழைக்கிறது. அதை எடுத்த
நீலாவின் காதில் வந்து விழுந்த எதிர்முனை தகவல்
அவளது ஜீவனையே பறித்தது போல் ஆகிச்
செயலற்று நிற்கிறாள் அவள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


200 வாழப் பிறந்தவள்

24

அந்தக் கொடுமையான சம்பவம் நடந்து மூன்று


போல்
நாட்கள் ஒடிவிட்டன. நீலாம்பரி நடைபிணம்
சொல்ல யாருமே
ஆகிவிட்டான். அவளுக்கு ஆறுதல்
இல்லாதது போன்ற நிலை டேவிட் எதையும்
பேசாமல் மெளனமாய் இருந்தான் ஒரு காலத்தில்
பயங்கரக் கொடுமைக்காரனாய் இருந்த நாகராஜன்
இப்போது மிகவும் முக்கியமான நபராகி டேவிட்டுக்
கும் நீலாம்பரிக்கும் தேவையான உதவிகளைச் செய்து
கொண்டிருந்தான். ஸ்ரீதரனை அவர்களோடு விட்டு
விட்டு மற்ற பணிகளை அவன் பார்த்தான்.
சிங்கையில் நிழற்படக் கண்காட்சியில் கலந்து
கொண்டு வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிய மகிழ்ச்
சியைப் பகிர்ந்து கொள்வதற்காகத் தலைநகர் திரும்பிக்
கொண்டிருந்த சித்தார்த்தன் கோலாலம்பூரை
நெருங்கிக் கொண்டிருக்கும்போது விரைவுச்
சாலையில் நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்தில்
சிக்கி மோசமான நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தான். அந்த மூன்றாவது நாளில்
தான் அவனால் கண்களைத் திறந்து பார்க்க
முடிந்தது. அருகிலேயே சோகச் சித்திரமாய்
அமர்ந்திருந்த நீலாம்பரிதான் அவன் கண்களில்
தென்பட்டாள்.
அவன் முகத்தில் ஆயிரம் ஆயிரம் உணர்ச்சி
பாவங்கள்... உள்ளத்தில் புதைந்து கிடந்தவற்றை
யெல்லாம் அவளிடம் ஒன்றுவிடாமல் கொட்டிவிடத்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 201
துடிக்கும் தவிப்பு...! சேலைத்தலைப்பை வாயில்
வைத்து சத்தம் வராமல் குமுறிக் கொண்டிருந்தவளின்
தலையில் தன் வலது கையை வைத்து ஆறுதலாய்
தடவிக் கொடுக்கிறான் சித்தார்த்தன். பேச
நினைத்தும் பேச முடியாத நிலை சுற்றி நிற்கும்
டாக்டர்கள் தாதிகள் கண்களில்கூட நீர் கசிகிறது.
தன் கையால் செய்கையால் பேனா வேண்டும் என்று
கேட்கிறான்.
பேனாவும் தாளும் அவனிடம் கொடுக்கப்
பட்டதும் மிகவும் சிரமப்பட்டு அவன் சில
வாக்கியங்கள் எழுதி டாக்டரிடம் காட்டுகிறான்.
அதைப் படித்த டாக்டர் தாதியிடம் விஷயத்தைக் கூற
அவன் பயணம் செய்த வாகனத்தில் இருந்து எடுத்த
அவனது பெட்டியும் மற்ற உடமைகளும் கொண்டு
வரப்பட்டு நீலாம்பரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அந்தப் பெட்டியைத் திறக்கச் சொல்கிறான். அதனுள்
இருக்கும் நீலவண்ண டைரியை எடுக்கச் சொல்
கிறான். அதை வாங்கி நீலாம்பரியிடம் கொடுக்கிறான்
'அதைப் படி' என்ற பாவனையில் கைகளைக் காட்டு
கிறான்.
பக்கங்களைப் புரட்டுகிறாள்.
ஒவ்வொரு பக்கமாய் வந்து கொண்டிருந்தவள்
கையைப் பிடித்து, அப்புறம் படிக்கலாம் என்று
நிறுத்துகிறான். அமைதியாய் சாய்ந்துகொள்கிறான்.
கண்கள் மூடிக் கொள்கின்றன. பயத்தால் நீலாம்பரி
தவிக்கிறாள். டாக்டர் அவளுக்கு ஆறுதல் கூறுகிறார்.
தனிமையில் அமர்ந்து சித்தார்த்தனின்
டைரியைப் படிக்கிறாள். பக்கம் பக்கமாய் அவன்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


202 வாழப் பிறந்தவள்
பார்த்த பலவற்றைப் பற்றிய குறிப்புகள். அந்தந்தப்
பக்கங்களில் அவனது ஆசைகள் லட்சியங்களை
வண்ணத்தில் கோடு போட்டிருந்தான் அந்த
ஆண்டில் துவக்கத்தில் வந்த அவனது பிறந்த நாளில்
அவன் எழுதிய குறிப்பு மிகவும் விசேஷமாய் கோடு
போடப்பட்டிருந்தது.
'இது எனது முப்பத்தி ஐந்தாவது பிறந்தநாள்.
நான் கண்ட பல அனுபவங்களின் அதிசயமான
ஒன்று நீலாம்பரியை இறைவன் என்கைகளில்
கொண்டு வந்து சேர்த்துதான். பாவம் அந்தப் பெண்!
எல்லா அம்சங்களும் சேர்ந்து பிறந்தவளை விதி வாழ
விடாமல் வைத்து வேடிக்கை பார்க்கின்றது.
அண்ணன் அன்பானவன், அவனை
ஆண்டவன் சோதித்தது நீலாம்பரியின் நிஜமான
அன்பில் அவன் திளைக்க வேண்டும் என்பதற்குத்
தானோ என்னவோ..!
எனக்கொரு தீராத ஆசை உண்டு... அந்த
இரண்டு விழிகளை நான் எப்போதும் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அந்த
ஆசை.. அந்த ஆசைக்குரிய விழிகள் நீலாம்பரியின்
நிலாமுகத்தில் அல்லவா சோகராகம் பாடிக்
கொண்டிருக்கின்றன.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 203
25

வெளியே இருள் கவிழ்ந்து கொண்டிருந்தது.


தோட்டத்தில் இருந்த புறாக் கூண்டில் புறாக்கள்
வந்து அடைந்து பேசத் தொடங்கின. சின்னஞ்சிறு
சிட்டுக்கள் வீட்டில் கூரைகளில் வந்து புகுந்து
கொண்டன. இனிமையான அந்த மாலைப் பொழுதில்
உள்ளிருந்து மென்மை யான கர்நாடக இசை மிதந்து
வந்தது. மீனாட்சியின் மாலைநேரப் பணியில்
இசையும் பூஜையும் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும்.
இப்போது பூஜை நேரம் என்பதால் மகாராஜபுரம்
சந்தானத்தை அம்மாலைப் பொழுதில்
பாடவிட்டிருந்தாள்.
'மதுர மதுர மீனாட்சி... மதுராபுர நிலையே...'
வெளியே நின்ற ஸ்ரீதரன் அந்தப் பாடலை முணு
முணுத்தான். ஆர்வமுடன் நீலாம்பரி அவனைப்
பார்த்தாள்.
'உன்னோட குரலைக் கேட்டு ரொம்பநாளாச்சு
ஸ்ரீதர்! நீ நல்லா பாடுவியே... இப்ப பாடுற பழக்கம்
இருக்கா இல்லையா...'
அவன் அவளை ஆர்வமாய்ப் பார்த்த அந்தக்
கண்களில் நீர் திரண்டு முத்தாய் உருண்டு விழத்தயா
ரானது. சுதாரித்துக் கொண்டான். அவளும்
பார்த்தாள். மெல்லச் சிரித்தாள்.
'என்ன ஸ்ரீதர்... என்ன ஆச்சி உனக்கு?' அவன்
அவளைப் பின்னால் விட்டு முன்னால் நடந்தான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


204 வாழப் பிறந்தவள்
ஊஞ்சலில் அமர்ந்திருந்த டேவிட்டும் நாகராஜனும்
எழுந்தார்கள்.
நீலாம்பரி டேவிட்டிடம் சென்று அவன்
கையைப் பற்றி அழைத்து வந்தாள். வீட்டினுள்
வந்தார்கள். பூரீதரும் நாகராஜனும் குளித்து உடை
மாற்றி வந்தபின் அனைவரும் சாப்பிட
அமர்ந்தார்கள்.
'இன்றைக்கு சாப்பாடு பிரமாதம்... மீனா கைக்கு
மோதிரம் போடணும் நீலா...' டேவிட் மகிழ்ச்சியோடு
சொன்னான்.
'அதோட இன்னொரு விருந்தும் இருக்குது
டேவிட்... நமக்கு இன்றைக்கு இசைவிருந்து
கொடுக்கப் போறார் ஸ்ரீதர். நீலாம்பரி புன்னகை
யோடு சொல்லிக்கொண்டே ஸ்ரீதரைப் பார்த்தாள்.
ஆண்டுக் கணக்கில் மூடிக்கிடந்த அந்தமனம்
அந்தக் கணப்பொழுதில் விழித்துக் கொண்டது.
காலங் காலமாய் அவளை இதயத்தில் வைத்துப்
பூஜித்துக் கொண்டிருந்தவன். அந்த பூஜை
தெய்வத்தின் புன்னகை ஒன்றுக்காகவே காத்துக்
கிடந்தவன். இதோ அவளின் இதழ் சிந்திய ஒரு
நகையில் மீண்டும் உயிர்த் தெழுந்தான்.
'என் நீலாம்பரி என்னை மறக்கவில்லை... அவள்
என்னைவிட்டு எங்கும் செல்லவில்லை... இனியவளே!
என் உயிரினும் மேலானவளே. உன் ஒரு புன்னகை
போதுமடி எனக்கு. நான் இனி எழுந்துவிடுவேன்.
என் எண்ணங்கள் பழுத்துவிடும். இது நிச்சயம். இது
நிச்சயம்.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 205

மனதுக்குள் எழுந்த உணர்ச்சி அலைகள்


பொங்கி வழிய... உணவை அளவு தெரியாமல் தட்டில்
போட்டுக்கொண்டு அதிலும் ஓர் நகைச்சுவை கிளம்ப
அந்தச் சூழ்நிலை ஸ்ரீதரை மிகவும் உற்சாகப்
படுத்துகிறது. அகம் பூரித்துக் கிளம்பும் சிரிப்பு
முகத்தைச் சிவக்க வைக்கிறது.
இயல்பாகவே ஸ்ரீதர் ஓர் ஆணழகன் நீலாம்பரி
யின் அத்தை பிள்ளைகளில் அவனே அழகானவன்.
அவன் அழகாய் இருந்ததனால்தான் அவனது தாய்
அவளை கர்நாடக இசை பயில வைத்தாள்.
அழகாய்ப் பாடுவான். பாரதியின் கண்ணம்மா
அவன் குரலில் பல வண்ணங்களில் வருவாள் விழாக்
காலங்களில் குடும்பத்தார் ஒன்று கூடும்போது
அவனது இசைக் கச்சேரி இல்லாத நாட்களே
இருக்காது. அந்த வாலிப வயதில் பருவகால
மலர்ச்சியில் மனதில் கிளர்ந்தெழும் காதல் நினைவு
களில் கண்ணம்மா உருவில் நீலாம்பரியே நிறைந்தி
ருப்பாள். அவன் உருகி உருகிப் பாட அவள் ஊஞ்சல்
சங்கிலியைப் பிடித்தவாறு நின்று ரசிப்பாள். இதோ.
அதே ஸ்ரீதரன்... அதே நீலாம்பரி பாடச்
சொல்கிறாள்... இல்லை இல்லை அவன் இதய ராணி
ஆணையிடுகிறாள். அவன் பாடுவானா..?
மறுப்பானா...
'என்ன ஸ்ரீதர்... கனவுலகத்துக்குப் போய்ட்
டியா... உன்னை பாடத்தான் சொன்னேன்.
உன்னோட சிந்தனையைப் பார்த்தா நீ ஓடத்தயாரான
மாதிரி இருக்கே...!'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


206 வாழப் பிறந்தவள்
சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரிக்கிறாள்
நீலாம்பரி.
உணவு முடிந்ததும் எல்லோரும் வரவேற்
பறைக்கு வந்தார்கள் வண்ணச் சித்திர வேலைப்
பாடுகள் அமைந்த ரத்தினக் கம்பளத்தில் பூஜை
அறையில் இருந்த தம்புராவை எடுத்துவந்து
வைக்கிறாள். அவனை வந்து உட்காரும்படி ஒரு
இடத்தைக் காட்டிவிட்டு அவள் டேவிட்டின்
அருகில் அமர்ந்திருந்தாள். நாகராஜன் பக்கத்திலேயே
அமர்கிறான். அந்த இனிமையான இரவு மிகவும்
அற்புதமான ஒரு கலைஞனின் குரலால் அலங்காரம்
பெற்றது.
இடது கையில் தம்புராவைத் தாங்கி ஏகாந்
தியாய் தலையைச் சாய்த்து அவன் பாடத்
தொடங்கினான்.
சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
டேவிட் ஆச்சர்யமாய் ரசித்தான். இவ்வளவு
அருமையான குரல்வளம் படைத்தவனா ஸ்ரீதர் என்று
அவன் நெஞ்சம் வியப்பானது இடையில் எதுவும்
பேசாமல் பாட்டில் லயித்திருந்தான். ஆனால்
நாகராஜனோ அவன் பாடும் பாடலையும் அதன்
பொருளையும் பாவங்களையும் உற்றுக் கவனிக்கிறான்.
சொல்லுக்குச் சொல் அவன் கண்களில் ஏதோ
தென்பட்டது. நீலாம்பரியைப் பார்க்கிறான். அவள்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 207

தன்னை மறந்து தாளம் போட்டு ரசித்துக்


கொண்டிருந்தாள். முகம் அப்போது பூத்த புதுக்
கமலம் போல் இருந்தது.
சோலை மலரொளியோ - உனது
கந்தரப் புன்னகைதான்?
கடலலையோ - உனது
நீலக்
நெஞ்சில் அலைகளடி...!
வாலைக் குமரியடி - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்!
நாகராஜன் பார்வை ஆழமானது. இருவரின்
பாவங்களையும் அவன் கண்களால் அளக்கிறான்.
உருகிப் பாடும் பூரீதரனை இமை கொட்டாது
பார்த்திருக்கிறாள் நீலாம்பரி அவள் கண்களிலே
மின்னும் ஆர்வம் நாகராஜன் இதயத்தைச் சுடுகிறது.
மனதில் எங்கோ ஒரு மூலையில் ஓர் சிறுகீறல்.
அவர்களையே மாறிமாறிப் பார்க்கிறான். பாடிக்
கொண்டிருந்த ஸ்ரீதரின் குரல் கம்முகிறது. பாட்டுத்
தடைபடுகிறது. அவன் மீண்டும் ஆரம்பிப்பதற்குள்
டேவிட் அதைத் தொடர்கிறான்.
சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திர மேதுக்கடி!
கண் ம ா!
ஆத்திரங் கொண்டவர்க்கே
சாத்ிரமுணடோ.
வதுவை
மூத்தவர் சம்மதியில்
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப் பேனோடி? இதுபார்
கன்னத்து முத்த மொன்று!

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


208 - வாழப் பிறந்தவள்
சில்லிட்டுப் போகிறது நீலாம்பரியின் மேனி!
டேவிட் டேவிட்டா பாடினான். அவளால் இவ்வளவு
அழகா பாடவும் முடியுமா!
தம்புராவை வைத்துவிட்டு ஸ்ரீதரன் அவன்
கையைக் குலுக்கிப் பாராட்ட கூடவே நாகராஜனும்
டேவிட்டைப் பாராட்டிக் கை குலுக்குகிறான்.
'நான் பாடினதுக்காக நீங்க என்னைப்
பாராட்டறதைவிட என்னோட குருவைத்தான் நீங்க
பாராட்டணும். ஏன்னா இந்தப் பெருமைஎல்லாம்
அவுங்களைத்தான் சேரும் என்கிறான் டேவிட்
மற்றவர்கள் ஆச்சர்யப்பட நீலாம்பரி
பெருமையாய்ப் பேசுகிறாள்.
இது இறைவன் உங்களுக்குக் கொடுத்த வரம்:
நான் தமிழைத்தான் உங்களக்குக் கத்துக் கொடுத்தேன்.
ஆனா பாடக் கத்துக் கொடுக்கலியே. எப்படி
இவ்வளவு அழகாப் பாடினிங்க என்னால நம்ப
முடியல டேவிட்'
உணர்ச்சிமயமாய்ப் பேசுகிறாள் நீலாம்பரி,
அவள் கையைப் பிடித்துக் கொண்டே டேவிட்
என்னாலையும் யாரையும் நம்பமுடியவில்லை நீலம்.
இப்ப என்ன நடக்குதுன்னே எனக்கும் புரியலியே
என்கிறான்.
'கற்பனையில் சிறகு கட்டிப்
வெளிநாட்டுக்கு வெளியிடங்களுக்குப் போறதில
சில சந்தோஷங்களை வாங்கிடலாம்னு நெனைச்
சிருக்கலாம்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 209

'இல்லே நீலா... அவன் என்றைக்கோ நழுவ


விட்டதை இப்பத் தேடி எடுத்துட்டுப் போக
வந்திருக்கிறான்னு நெனைக்கிறேன்..'
'அப்படீன்னா.....'
'ஆமாம் நீலா.... அவன் இன்னமும் உன்னை
மறக்கல... அவன் உன்னைத் தேடித்தான் வந்திருக்
கிறான். அவன் உன்மேல் வெச்சிருக்கிற அன்பு
சாதாரணமான அன்பில்லே நிலா. சின்ன வயசில
பிஞ்சு மன சில வேரோடின. அந்தப்
பிரியமும், பருவ வயசுல காதலா மாறி. அது கைக்கு
எட்டாமப் போனதில அவனுக்கு ஏற்பட்ட விரக்தியும்
வேதனையும் சில காலம் உன்னை மறக்க வெச்சிருக்கு.
ஆனா, நீ இப்ப இருக்கிற உண்மையான சூழ்நிலையை
அவன் நல்லா தெரிஞ்சுகிட்டா நிச்சயம் உன்னைத்
தனியா விட்டுட்டுப் போகமாட்டான். அவன் ஒரு
முடிவோடத்தான் வந்துருக்கணும்...'
'டேவிட்.... இதெல்லாம் யார் சொன்ன கதை
உங்களக்கு ஸ்ரீதர் அந்த வயசில என்னைக் காதலிச்
சதும் பிரியப்பட்டதும் உண்மைதான். ஆனா
இப்பவும் அதே நோக்கத்தோட தான் இங்கே
வந்திருக்கிறான்னு நீங்க எப்படிச் சொல்ல முடியும்.
அவனோட உண்மையான அன்புக்கு வேறே பேர்
வெச்சிடாதீங்க டேவிட்..'
டேவிட் சற்றே தடுமாறிப் போனான். நீலாம்பரி
தொடர்ந்தாள்.
'டேவிட் வாழ்க்கையை விட்டுடக் கூடாதுங்
கிறதுக்காக உலகத்தில ஒவ்வொருத்தரும் ஒரு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


210 வாழப் பிறந்தவள்
வகையில சொந்த பந்தங்களோட தன்னைப்
பிணைச்சிகிட்டு வாழத்துடிக்கிறது நமக்கு நல்லாவேத்
தெரியும். அன்றைக்கு என்னைப் பாதுகாக்கத்
தவறினான்னு நீங்களே புனிதரைக் குறைபட்டுக்
கிட்டிங்கன்னா அவன் மேல உரிமை கொண்டாடி
பேசற அளவுக்கு உங்களுக்கே வாய்ப்பைக்
கொடுத்தவன் அவன் என்னுடைய குடும்பமே
என்னைப்பத்திக் கவலைப்படாம நான் அனுப்பி
வைக்கிற கற்பனைக் கதைகளை உண்மையா
நெனைச்சிகிட்டுக் காலத்தை ஓட்டிகிட்டு இருக்கிறப்ப
எங்கேயோ இருந்த இவன் மனசில மட்டும் நான்
வாழற வாழ்க்கை பொய்யான வாழ்க்கைதான்னு
பட்டிருக்குதுன்னா அவன் என்மேல வெச்சிருக்கிற
அந்தப் பாசம்தானே காரணமா இருந்திருக்க
முடியும். அவன் என்னைக் காதலிச்ச காலம் வோற.
ஆனா அவன் காதலிச்சவ கிடைக்காமப் போனதும்
அந்த நீலாவை அவன் எப்பவோ மறந்துட்டான்
டேவிட். இப்ப அவன் தேடிவந்திருக்கிறது அவன்
அத்தை பொண்ணு நீலாம்பரியை. அவனோட
அஞ்சு வயசில ஆற்றோரத்தில் மணல் வீடு கட்டி
விளையாடின. அத்தைப் பொண்ணு நீலாம்பரியை.'
டேவிட் ஸ்தம்பித்துப் போனான். அந்த
ஸ்ரீதரன் மேல் அவள் வைத்திருக்கும் இவ்வளவு
ஆழமான நம்பிக்கையை அவன் காப்பாற்றுவான்.
தண்ணீரில் தத்தளிக்கும் எண்ணெயைப் போல்
தடுமாறுகின்ற அவனின் உணர்வுகள் என்னால்
இப்படித்தானே கற்பனை செய்ய வைத்தன. இவள்
மாறுபட்டு நிற்கிறாளே.!'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 211

மனதுக்குள் பேசிக் கொண்டாலும் அவளைப்


பிடித்துத் தன் அருகில் நிறுத்திக்கொண்டு,
'நீலா... அவன் மனசை நீ புரிஞ்சு வெச்சிருக்கிற
மாதிரி என்மனசையும் நீ புரிஞ்சுக்கக் கூடாதா..!’
என்கிறான்.
அவள் துடித்துப் போகிறாள். டேவிட்!.. . உங்க
மனசை இன்னுமா நான் புரிஞ்சுக்கலேன்னு நீங்க
நெனைக்கறீங்க..
'புரிஞ்சவளா இருந்தா இவ்வளவு நேரம்
என்னைப் பேசவிட்டிருக்க மாட்டியே நீ. இன்றைக்கு
உன் கிட்டே என் மனசில உள்ள முடிவை
சொல்லிடலாம்னு நெனைக்கிறேன். சொல்லிட்டா
மனசில உள்ள பாரமும் குறைஞ்சமாதிரி இருக்கும்.'
மனதுக்குள் பல கேள்விகள் குறுகுறுக்க
மெளனமாய் நின்றாள் அவள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


212 வாழப் பிறந்தவள்
26

அவன் இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை


நெருப்புத் துண்டாய்த் தூக்கிப் போடுவான் என்று
அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதால்,
அந்தச் சில நிமிடங்கள் போனதே தெரியாமல்
நின்றிருந்தாள்.
'நான் தப்பா சொல்லிட்டேனா நீலா.... ஏன்
மௌனமாயிட்டே...?'
'நீங்க ஒண்ணும் தப்பா சொல்லலியே.
உங்களோட எண்ணத்தைத்தானே சொன்னீங்க!
அதுல எந்தத் தப்பும் இல்லியே. ஆனா நான்
என்னோட எண்ணத்தை என்னோட அபிப்ராயத்தை
உங்களுக்குச் சொல்லனுமில்லியா....'
'ஆமாம் நீலா.... அதைத்தான் நானும்
எதிர்பார்க்கறேன். உன் இஷ்டத்துக்கு மாறா எதுவும்
நடக்காது, தாராளமா நீ உன் முடிவை சொல்லலாம்.'
'ஒரு பொண்ணுக்கு ஒரு தடவைதான்
திருமணம் நடக்கும். ஆனா எனக்கு இரண்டு தடவை
நடந்துடுச்சே... ஊர் உலகம் அறிய ஒருதடவையும்.
சட்டபூர்வமா இன்னொரு தடவையும் திருமணம்
நடந்து டுச்சே.... அப்புறம் எதுக்கு
திருமணம் எனக்கு டேவிட்..?'
'முதல் தாலிக்குச் சொந்தக்காரன் உயிரோடத்
தான் இருக்கிறான். சட்டப்படி என்னை மனைவி

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 213
யாக்கி கிட்ட நீங்களும் உயிராத்தான் இருக்கீங்க...
இதுல மூணாவதா இன்னொருத்தன் எதுக்கு
டேவிட்?'
டேவிட் அவள் முகத்தைப் பார்க்கத்
தயங்கினான்.
'இரண்டுபேர் இருந்தாலும் இதுல யாரோடும்
நீ வாழலியே நீலாம்பரி. உன்னைத் தொட்டுத் தாலி
கட்டினவன் உன்னைத் தொட முடியாத தூரத்தில நீ
போய்ட்டே. ஊருக்கு வேஷம் போட்டு நான்
போட்ட வேலி, நீயும் நானும் பக்கம் பக்கமா
இருந்தும் அதுபாசத்துக்கு மட்டுமே உள்ள வேலியா
போயிடுச்சி. அதனாலத்தான் உன்னையே நெனைச்சி
உனக்காகவே வாழ்ந்துகிட்டிருக்கிற ஒருத்தனை நீ
உண்மையாகவே திருமணம் பண்ணிக்கணும்னு நான்
பிரியப்படறேன். இது தவறா நீலம்?'
கண்ணில் நீர் மல்க அவன் கேட்கிறான். அவள்
அவன் தோளைத் தொட்டுப் பரிவுடன் தட்டிக்
கொடுக்கிறாள்.
'நீங்க பிரியப்பட்டது தப்பில்லே டேவிட்...!
ஆனா எனக்குத் திருமணம் பண்ணி வைக்கணும்னு
நெனைச்சதுதான் தப்பு... ஸ்ரீதர் எனக்கு நண்பன்தான்.
அந்த நட்பு இரண்டு ஆணுக்கும் இடையில உள்ள
தூயநட்பு மாதிரி உன்னதமானது டேவிட் இரண்டு
உயிர்த்தோழிகள் மாதிரி கள்ளம் கபடமில்லாதது.
நீங்க எங்க பழக்கத்தை வெச்சி.... திடீர் திடீர்னு
தெறிச்சு விழற உணர்ச்சிகள வெச்சி.... தப்பா முடிவு
பண்ணிடாதீங்க.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


214 வாழப் பிறந்தவள்
நீலாம்பரியின் அப்பழுக்கற்ற வார்த்தை
அவனைச் செம்மைப்படுத்த, நீண்ட பெருமூச்சுடன்
அவளுக்கு 'குட்நைட்' சொல்கிறான். அவனிடமிருந்து
விடைபெற்றுத் திரும்பியவள்,
'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா டேவிட்!
நான் சட்டப்படி உங்க மனைவி தான்...
மறந்துடாதீங்க.'
சொல்லிக் கொண்டே படிகளில் இறங்க
வருகிறாள். அங்கே சிலையாக நிற்கிறான் நாகராஜன்.
எவ்வித உணர்ச்சியும் இன்றி அவனைப் புன்னகை
யுடன் பார்த்து,
'இன்னும் தூங்கலியா நீங்க... பயணம் வந்தது
களைப்பா இருக்குமே...'
நெருங்கிய நண்பனை விசாரிக்கும் அணுக்கமும்
பரிவும், நிரம்பிக் கிடந்தது வார்த்தைகளில்.
பதில் சொல்லத் தடுமாறுகிறான் அவன் அவள்
படிகளில் இறங்குகிறாள். மறுபடியும் திரும்பிப்
பார்க்கிறாள். அவன் பார்வை அவளைத் தடுத்து
நிறுத்துகிறது.
'என்கிட்டே எதுவும் பேசணும்னு நீங்க
நெனைச்சா காலையில பேசலாம். இப்ப போய்த்
துங்குங்கள்'.
படிகளில் இறங்கிப் போய்விட்டாள்
அவள் கூடவே அவன் மனமும் போனது. வெறும்
ஜடமாய் படுக்கையில் போய் விழுந்தான் அவன் மணி

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 215

ஓடிக்கொண்டிருப்பதை சுவரில் தொங்கும் கடிகாரம்


தனது நாடித்துடிப்பினால் சொல்லிக் கொண்டிருந்
தது. மிகவும் இதமான குளிர்சாதனம் ஓடிக்
கொண்டிருந்த அந்த அறையில், மேல் சட்டையைக்
கழற்றிவிட்டுப் பணியனும் கைலியுமாய் கிடந்தான்
நாகராஜன் புரண்டு புரண்டு படுக்கிறான். தூக்கமே
வரமாட்டேன் என்று கண்கள் அடம்பிடிக்கின்றன.
அவன் மனதில் முழுமையாய் இப்போது டேவிட்
மட்டுமே நிறைந்திருந்தான்.
'அவனுடைய தியாக மனம் யாருக்குத்தான்
வரும்? வாழவேண்டிய வயதில் இப்படித் தனக்குத்
தானே விலங்கிட்டுக் கொண்டு ஒரு தியாக
வேள்வியே அவன் நடத்தியிருக்கிறானே' என்று
உள்ளம் உயர்வாய் எண்ணமிட்டது.
சுயநலத்தால் ஆண்வர்க்கத்துக்கே ஒரு
சாபக்கேடாய் தான் வந்து பிறந்த மண்ணில்
இப்படியும் ஒருவன் இருக்கிறானே என்று நினைத்துக்
கொண்டான் பக்கத்துப் படுக்கையில் உறங்கிக்
கொண்டிருக்கும் ஸ்ரீதரன் எவ்வித சலனமும் இன்றி
இடது கையைத் தலைக்கு அணையாகக் கொடுத்து
ஒருபக்கமாய் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்.
அவனது குழந்தை போன்ற முகத்தில் தவழும்
அமைதியைப் பார்க்கும்போது அவன்
அர்த்தமில்லாமல் கொண் ட கோபம் இப்போது
மறைந்து போனது. தன்னைத்தானே கடிந்துகொண்டு
நன்றாகப் படுத்துக் கொள்ள போர்வையை
எடுக்கிறான். கால் நீட்டியிருந்த இடத்திற்கு மேலே
வெள்ளை நிறத்தில் தலையோடு போர்த்தி நிற்கும்
வள்ளலாரின் திருவுருவம் கண்ணில் படுகிறது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


216 வாழப் பிறந்தவள்
சரக்கென்று தனது காலை இழுத்துக்
கொள்கிறான். அந்த வடிவத்தை கையெடுத்துக்
கும்பிட்டுப் படுக்கிறான். மூடிய கண்ணுக்குள் அந்த
முழுவுருவமே நிற்க மனம் மிகவும் அடங்கி ஆழ்ந்து
போகிறது. நன்றாக அவன் உறங்கிப் போகிறான்.
லேசான தூறலுடன் மறுநாள் பொழுது
விடிகிறது. முதன் முதலாய் அன்னிய மண்ணில் ஒரு
உதயத்தைக் கண்ட ஸ்ரீதருக்கு அது மிகவும்
உன்னதமான பொழுதாய்த் தெரிகிறது. அதிகாலைப்
பொழுது ஆரம்பமாகும்போதே வானொலி.
ஏறக்குறைய எட்டுமணி அளவில் நீலாம்பரி
திரும்பினாள். அதற்குள் டேவிட் குளித்து முடித்து,
தயாராகியிருந்தான். ஸ்ரீதரும் கீழே இறங்கிவந்து
மேசையில் கிடந்த அன்றைய நாளிதழ்களைப்
புரட்டினான். மீனாட்சி காபியைக் கொண்டுவந்து
அவன் முன்னால் வைத்து அவனைச் சாப்பிடச்
சொல்கிறாள். அவன் சிரிக்கிறான். அவளுக்கு அந்தச்
சிரிப்பு அதிசயமாய் இருக்கிறது.
'தப்பா நெனைச்சுக்காதீங்க இப்ப இங்கே மணி
எட்டுன்னா எங்க ஊர்ல மணி அஞ்சு சொச்சந்தான்!
இந்த நேரத்தில நான் நல்லாத் தூங்கிட்டுத்தான்
இருப்பேன் அங்கே எவ்வளவு வித்தியாசம்
பார்த்தீங்களா..?
அவனது மொழியில் அவள் கொஞ்சம்
கிறங்கிப் போகிறாள். நன்றாகத்தான் பேசுகிறான்
என்று நினைத்துக் கொண்டே.
'பரவாயில்ல தம்பி இங்கே இருக்கிறவரைக்கும்
எங்க ஊரோட அப்புறம் எங்களோட கொஞ்சம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 217
ஒத்துப்போங்க... அங்கே போய் உங்க இஷ்டத்துக்கு
மாத்திக்கிட்டாப் போகுது. இப்ப இதைக் குடிங்க'.
காபியைக் கையில் எடுத்துக் கொடுக்கிறாள்.
அதை வாங்கத் தனது கையில் இருந்த நாளிதழை
மேசையில் விரித்த நிலையில் போடுகிறான். மேலே
சுழலும் மின்விசிறியில் மேசை மீது விழுந்த பத்திரிகை
படபடக்கிறது. எடுத்து மடித்து வைக்கப் போன
மீனாட்சி, அடடே நம்ம தம்பி. அது எப்படிப்
பத்திரிகையில வந்துச்சி என்று வியப்புடன்
பார்க்கிறாள்.
படத்தையும் அவனிடம் காட்டி, இது
அய்யாவோட தம்பி சித்தார்த்தன். பேப்பர்ல வேலை
செய்யறாங்க. என்ன செய்தி போட்டிருக்குன்னு
சொல்லுங்க தம்பி என்கிறாள்.
படிக்கிறான். அவனுக்கு அந்தச் செய்தியும்
மகிழ்சியைத் தந்தது.
'எல்லாம் நல்ல விஷயந்தான்' என்றவாறு
அதைப்படிக்கிறான். 'எனக்கு அப்பவே தெரியும்
தம்பி... எங்கே பந்தயத்துல கலந்துகிட்டாலும் நம்ம
தம்பிதான் ஜெயிக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்!
அது மாதிரி படம் புடிக்க யாராலேயும் முடியாது
தம்பி, அதோட கண்ணு கேமராக் கண்ணுன்னு
அடிக்கடி அம்மா சொல்லுவாங்க. படத்தைப்
புடிக்கிறதில மட்டுமில்லே தம்பி செய்தி குடுக்கிற
திலேயும் சின்னய்யாவை மிஞ்ச முடியாது போங்க.
வருஷா வருஷம் அவார்டு வாங்கிக் குவிச்சிடுவாங்க.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


218 வாழப் பிறந்தவள்
சந்தோஷ மிகுதியில் உற்சாகமாய் அந்தப்
பத்திரிகையைத் துக்கிக் கொண்டு மேலே
டேவிட்டிடம் ஓடுகிறாள்.
'அய்யா பத்திரிகையைப் பாருங்க அய்யா. நம்ம
சின்னதம்பி படம் போட்டிருக்கு கையில கப்பு
வெச்சிகிட்டு ராசா மாதிரி நிக்குது பாருங்களேன்...!
அவனிடம் அந்த நாளிதழைக் காட்டியவாறே
பேசிக் கொண்டிருந்தவளுக்குச் சட்டென்று
தன்னுடைய அவசரபுத்தியும் அதனால் நடந் த தவறும்
த ி ட ீ ர
நினைவுக்க வர மெளனமாகிறாள்.ெ ன ற
் ு

கவலைப்படாதே மீனாட்சி. எனக்குக்


கண்ணில்லேன்னாலும் உன்னோட சந்தோஷமும்
பேச்சும் எல்லாவிஷயத்தையும் சொல்லிடுச்சி. எனக்கு
அவன் மேல எப்பவுமே நல்ல நம்பிக்கை உண்டு
மீனாட்சி அவன் மனசு வெச்சான்னா அந்தக்
காரியத்தை முடிக்காம வரமாட்டான்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கார்
வருகிறது. அதை ஒழுங்காய் நிறுத்த வேண்டிய
இடத்தில் நிறுத்திவிட்டு நீலாம்பரி வருகிறாள்.
மீனாட்சி ஒடிப்போய் பொருட்கள் நிரம்பிய
கூடைகளைத் தூக்கிக் கொண்டு வருகிறாள்.
ஸ்ரீதர் அவளைப் பார்த்து, 'காய்கறி மார்க்கெட்
முழுசா வீட்டுக்கு வந்து டுச்சே...!
கிண்டலாக.
நீலாம்பரியோ, 'சாப்பாட்டு ராமன் நீ
வந்துட்டே இல்லியா... அதனாலத்தான் என்கிறாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 219

27

சிங்கப்பூரிலிருந்து போனில் பேசுகிறான்


சித்தார்த்தன் என்றதுமே டேவிட் அந்தப் போனை
இங்கே கொண்டு வாருங்கள் என்று தோட்டத்திலி
ருந்தே கூவுகிறான். தொலைபேசியின் இணைப்பு
அவனிடம் நீட்டப்படுகிறது. நீலக்கடல்தாண்டி
நின்றாலும் தம்பியின் குரல் கேட்கும்போது அருகில்
இருந்து அனைத்துக் கொண்ட பாசத் துடிப்பு
அங்கே.
'என்னடா பண்ணிட்டு இருக்கே அங்கே...
உன்னைப் பார்க்கனும்னு இங்கே எல்லோரும்
ஆசையா காத்திருக்கோமின்னு உனக்குத் தெரியலி
யா நீ இன்றைக்கு ராத்திரிக்கே வந்துடு. உன்னைப்
பார்த்து ரொம்ப
சிங்கப்பூரில் மிகமிக உயர்தரமான தங்கும்
விடுதியில் நடந்து முடிந்த பரிசளிப்பு விழாவும்
விருந்து நிகழ்ச்சியும் நிறைவடைந்த பின், எல்லா
நிகழ்வுகளையும் அண்ணனுக்காகவும் நீலாம்பரிக்
காகவும் காமிராவுக்குள் அடக்கிக் கொண்டு, தான்
புறப்படவிருந்த செய்தியைச் சொல்லத்தான் அவன்
தொலைபேசியில் அழைத்தான். ஆனால் அவனை
முந்திக் கொண்டு அவன் உணர்வுகள் அண்ணனைப்
போய் தழுவிக் கொண்டது அவனுக்கே ஆச்சர்ய
மாகத்தான் இருந்தது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


220 வாழப் பிறந்தவள்
'வர்றோண்ணா... இன்னும் மூன்றுமணி
நேரத்தில உன் முன்னால நான் அமர்ந்திருப்பேன்.
நீலாகிட்டேயும் சொல்லிவை.'
அவன் முகத்தில் பொங்கிய மகிழ்ச்சி நீலாவுக்கு
உண்மையைத் தெளிய வைத்துவிட்டது. மீனாட்சி
யிடம் விஷயத்தைச் சொன்னாள். அங்கேயும் மகிழ்ச்சி
வெள்ளம் கரைபுரள்கிறது. பிள்ளைப் பேறு இல்லாத
அந்தத் தாயின் கவலையைப் போக்கி ஒரு
பிள்ளையாகவே அவளிடம் அன்பு வைத்திருப்பவன்
அவன்.
ஆக, அந்த வீட்டின் மூன்று அன்பு நெஞ்சங்கள்
அவனுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தன.
காலை உணவுக்காக எல்லோரும் தயாரானார்கள்.
நாகராஜன் கீழே இறங்கிவராததால் ஸ்ரீதல் மேலே
சென்று அவனை எழுப்பினான். அவனுக்குக்
காய்ச்சல் கண்டிருந்தது. பினாங்கில் இருந்து கிளம்பும்
போதே அவன் நலமில்லாமல்தானிருந்தான். ஸ்ரீதரைப்
பார்த்த வேகத்தில் தன்னை மறந்து காரை எடுத்துக்
கொண்டு தனியாகக் காரைச் செலுத்தி வந்தான்.
வந்த பின் நேரம் போனது தெரியாமல்
கொண்டிருந்தவன் படுக்கையில் விழுந்ததும் காய்ச்சல்
அவனை அழுத்திவிட்டது.
ஸ்ரீதரின் கைபட்டுக் கண் விழித்தவன் மூச்சுத்
திணறினான். அவனைப் படுக்கவைத்துவிட்டுக் கீழே
வந்து விஷயத்தை அவன் சொன்னதும் நீலாம்பரி
மேலே சென்றாள். உடம்புக்கு மேலே காய்ச்சலின்
வேகம் தெரிந்தது. கனத்த போர்வையால் அவனுக்குப்
போர்த்திவிட்டு டாக்டருக்குப் போன் செய்கிறாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 21
குடும்ப டாக்டர் மோகன் வந்து பார்த்து மருந்தும்
கொடுத்துவிட்டுப் போகிறார்.
'உடம்பும் உள்ளமும் அவருக்குப் பாதிக்கப்
பட்டிருக்குமா. கொஞ்சம் கவனமா பாருங்க என்று
அவர் சொன்ன வார்த்தைகள் அவர்களைப்
பயமுறுத்துகிறது.
'அனாவசியமான பயமும் கவலையும் அவனைப்
படுக்கவெச்சிருக்கு. கடந்த காலத் தவறுகளை
நெனைச்சி இப்ப வருத்தப்படறான். அனாவசியமா
கவலைப்படறான். குற்ற உணர்வினால ரொம்பவும்
மனம் உடைஞ்சுப் போயிருக்கிருன்னு
நெனைக்
கிறேன்.'
டேவிட்தான் சொன்னான். நீலாம்பரி
அவர்களைச் சாப்பிடச் சொன்னாள். அதே நேரத்தில்
மீனாட்சியிடம் சொல்லி நாகராஜனுக்குக்
கஞ்சி
தயார் செய்யச் சொன்னாள்.
'நீலா! நீயும் ஸ்ரீதரும் விமான நிலையம் போய்
தம்பியைக் கூட்டிக்கிட்டு வாங்க நான் நாகராஜனைக்
கவனிச்சுக்கறேன். தம்பி கேட்டா அண்ணனுக்கு
வேலை வந்துடுச்சின்னு சொல்லு.'
ரொட்டியில் பட்டரைப் போட்டவாறே
பேசுகின்றவனைப் பார்த்து, ஸ்ரீதர் நெகிழ்ந்து
போகிறான்.
டேவிட்டுக்குக் காபியைக் கலந்து கொடுத்துக்
கொண்டே நீங்க மருந்து சாப்பிட மறந்துடாதீங்க’
என்கிறாள் நீலாம்பரி.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


222 வாழப் பிறந்தவள்
தலையாட்டிக் கொள்கிறான் டேவிட்.
பங்சார் பாருவில் இருந்து விமானநிலையத்
விரைவுச்
திற்குக் கார் புறப்பட்டது. அந்த நீளமான
சாலையில் வாகனங்கள் செல்கின்ற வேகமும்
நேர்த்தியும் ஸ்ரீதருக்கு மிகவும் அரிய காட்சியாய்
இருந்தது. சினிமாவில் வருகின்ற மேல் நாடுகளின்
சாலைகளைப் போல் அவ்வளவு அழகோடும்
சுத்தமாகவும் அதே கணம் ஒழுங்கு மீறாத வகையில்
கட்டுப்பாட்டு விதிகளும் அவன் அணு அணுவாய்
ரசித்துக்கொண்டு வந்தான்.
மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும்
வாகனங்களுக்கிடையே மிக லாவகமாகப் புகுந்து
காரோட்டும் நீலாம்பரியைக் காணும்போது
அவனுக்கு அதிசயமாகவும், பெருமையாகவும்
இருந்தது.
'படித்த பெண்ணோடு வாழ நினைக்கிற பந்தயக்
குதிரையோடு ஓடிப்பார்க்க ஆசைப்படற விதமாதிரி
தான்னு நினைக்கிறேன்.'
பட்டென்று ஸ்ரீதர் சொல்கிறான். ஸ்டியரிங்கில்
இருந்த கவனம் அவன் பக்கம் திரும்புகிறது. ஒரு
பார்வை பார்த்துவிட்டுத் கவனத்தைக் காரில்
வைக்கிறாள் நீலம்.
'எதனால அப்படி ஒரு சந்தேகம் உனக்கு?
எங்கேயாச்சும் பலமா அடி வாங்கிட்டியா...?'
புன்னகை மாறாமல் கேட்டுக் கொண்டு
அவனைப் பார்த்தவள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 223

'ஏய்.. என்ன இது? இன்னும் பெல்ட் போடாம


இருக்கே. முதல்ல அதை மாட்டு ஸ்ரீதர் அவனிடம்
சீட் பெல்டைக் கட்டச் சொல்கிறாள். அவன்
விழிக்கிறான். இடது கையால் எடுத்துக் கொடுக்
கிறாள்.
திக்கித் திணறிக்கொண்டே,
'நல்ல ஊருடாப்பா இது! பிளேன்ல ஏறினதும்
கட்டுடா கட்டுடாங்கிறான். இங்கே வந்தா நீயும் கட்டு
கட்டுன்னு சத்தம் போடுறியே! நல்லாத்தான்
கட்டறிங்க அன்புக்கட்டு. சொல்லிக் கொண்டே
சிரிக்கிறான்.
பெல்டை ஏதோ ஒருவகையாய்ப் போட்டுக்
கொண்டான்.
சுபாங் அனைத்துலக விமான நிலையத்திற்கு
வந்து கார்களுக்காகவே பிரத்யேகமாய் ஒதுக்கப்
பட்டிருந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு,
அவனுடன் - பயணிகள் வெளியாகும் இடத்திற்குச்
செல்கிறாள் நீலம்.
'நானும் வரணுமா நீலம்... நான் இங்கேயே
நிக்கிறேன். நீ போய்ட்டு வாயேன்... அலுப்புடன்
அவன் சொல்ல, அவனை அங்கேயே ஓரிடத்தில்
நிற்கச் சொல்லிவிட்டு அவள் மட்டும் போகிறாள்.
முக்கியஸ்தர்கள் வரும்பாதையில் அவன்
வருகிறான். டிராலியைத் தள்ளிக்கொண்டு அவன்
முன்னே வர அவன் பின்னால் இரண்டு குழந்தைகள்
ஆணும் பெண்ணுமாய்த் தொடர்கின்றனர்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


224 வாழப் பிறந்தவள்
நீலம்பரி அவனிடம் சென்று அவன் கையைப்
பற்றி வரவேற்கிறாள்.
'செளக்கியம்தானே! கொறைஞ்சது ஆறுமாசம்
ஒடியிருக்கும் இல்லியா. எப்படி முடிஞ்சுது
இந்தமாதிரி வனவாசம் போக...'
அன்போடு கண்டிப்பும் கலந்து வருகிறது
குரலில்.
'கோபம் வந்தா அக்கம் பக்கமே தெரியாது
நீலாவுக்குன்னு அண்ணன் சொன்னது சரியாத்தான்
இருக்கு என் பின்னால யார் வர்றாங்கன்னு பார்க்
கலியே. இது சுகன், இது சுகந்தி.'
அப்போதுதான் அவளது பார்வை அந்தக்
குழந்தைகள் மீது படிகிறது. அவர்களை நெருங்கி
'ஹலோ! சொல்கிறாள்.
'யாரு இவங்க ரெண்டுபேரும்... சுத்தி பார்க்க
வந்துருக்காங்களா
ஆர்வமாய்க் கேட்கிறாள். வாய்வழி வார்த்
தைகள் வந்தாலும் கண்கள் அந்தக் குழந்தைகள் மீதே
இருந்தன. சித்தார்த்தன் டிராலியைத் தள்ளிக்
கொண்டே சொன்னான்:
'ஆமாம்... மலேசியாவை... மலேசியாவில
இருக்கிற நம்ம சனங்கள.. ஓடுகிற ஆறுகள்... பறக்கும்
பறவைகள்.... இன்னும் என்னென்ன இருக்குதோ
அத்தனையும் பார்த்துட்டுப் போக ஆசைப்
பட்டாங்க அழைச்சிட்டு வந்துருக்கேன்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 225

நம்ம வீட்லதானே இருப்பாங்க...! நம்மகூட


வெச்சு கலாமில்லியா...'
ஆசையாய்க் கேட்கிறாள் நீலாம்பரி சித்தார்த்
தன் நெஞ்சில் யாரோ பால் வார்த்தது போன்று
குளிர்ச்சி மனம் நிறைந்து கண்களில் நன்றியுணர்ச்சி
பொங்க,
'ஆமாம்; நம்ம கூடவே... நம்ம வீட்லேயே
இருப்பாங்க என்கிறான்.
பேசிக் கொண்டே ஸ்ரீதர் இருக்கும் இடத்திற்கு
வந்து அவனை அறிமுகம் செய்து வைக்கிறாள்
நீலாம்பரி. பின்பு காருக்கு வருகிறார்கள் பொருள்
களை காரில் வைத்துவிட்டு, குழந்தைகளையும்
ஸ்ரீதரையும் காரில் இருக்கச் சொல்லிவிட்டு,
சித்தார்த்தன் அவளைத் தன்னோடு வரச்சொல்லி
முன்னால் நடந்தான்.
இருவரும் விமான நிலையத்தில் கைவினைப்
பொருள்கள் விற்கும் இடத்திற்குச் செல்கின்றனர்.
அங்கே உள்ள பொருள்களைப் பார்த்துக்கொண்டே
சித்தார்த்தன் சொன்னான்.
'நீலம்... வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும்
கஷ்டம் வரும்... அதேமாதிரி தர்மசங்கடமான
நிலைமையில நான் இருக்கிறேன் நீலம். இந்த
இக்கட்டான சூழ்நிலையிலேர்ந்து என்னை நீதான்
காப்பாத்தனும்.'
நிராதரவாய் நின்று அபயம் என்று அவள்
குரல் கொடுத்தபோது ஓடிவந்து கைகொடுத்த
தெய்வமே அவளிடம் கையேந்தி நிற்கும் அதிசயம்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


226 வாழப் பிறந்தவள்
நீலாம்பரி ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். அவனது
பால் போன்ற முகம். கொஞ்சமும்
பார்வை. இவையெல்லாம் அவனது நல்ல குணத்தின்
நற்சான்றிதழ்கள் அந்த நல்லவனுக்கு அப்ப என்ன
கஷ்டம் வந்திருக்க முடியும். யோசித்தாள்.
அன்று அவளுக்கு உதவ, அவன் யோசிக்க
வில்லை. ஆனால் இன்று இவள் யோசிப்பதா?
'நான் என்ன செய்யனும் இப்ப...?'
அழுத்தமாய்க் கேட்டாள். அவன் உருக்கமாய்ச்
சொன்னான்:
'அந்தப் பிள்ளைகளோட அம்மா நீதான்னு
சொல்லணும்.'
அந்த வியாபார இடத்தில் கனகமழை பொழிந்
தது போலிருந்தது அவளுக்கு அவனுக்கு
எப்படி நன்றி சொல்வது என்ற தெரியாமல்
தடுமாறினாள்.
'நீலம்! என்னோட நண்பனும் அவன் மனைவி
யும் வெளியூர் போன இடத்தில கார் விபத்துக்குப்
பலியாகிட்டாங்க. யாருமே இல்லாத அவுங்க
ரெண்டுபேருக்கும் இந்தக் குழந்தைகள்தான் உறவு,
சொத்து சுகம் எல்லாம். இப்ப இவுங்க ரெண்டு
பேரையும் விட்டுட்டு அவுங்க போயிட்டாங்க இவுங்க
ரெண்டு பேரும் அனாதையா நிற்கறதைப் பார்க்க
எனக்கு மனசு வரலே நீலம்!'
'பல நாட்கள்ல அவுங்க ரெண்டு பேரும்
எனக்காக கண் விழிச்சிருந்து சாப்பாடு போட்டிருக்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


227
சிங்கைத் தமிழ்ச் செல்வம்
காங்க... அந்தப் பெண் என்னோட துணிகளைத்
துவைச்சி அயர்ன் பண்ணிக் கொடுத்திருக்குது நீலம்!'
'இப்ப அவுங்க பிள்ளைங்க அனாதையா
நிற்கிறத நான் எப்படிப் பார்த்துகிட்டு இருக்கிறது.
என்
அதனாலத்தான் உன்கிட்டே கொண்டு வந்தேன்.
அண்ணனுக்குத் தாயாகவும் கண்ணாகவும் இருந்து
இத்தனை வருஷம் காவல் காத்து நிக்கிற நீதான்
இந்தப் பிள்ளைகள வளர்க்க முடியும். இதை நீ
எனக்குச் செய்ய முடியுமா, நீலம்!'
அவள் அவனைப் பெருமிதமாய்ப் பார்த்தாள்.
எனக்கு வரப்போற ஏழாந்தேதி பிறந்தநாள்
வருதுன்னு நினைப்பே இல்லியா?'
சித்தார்த்தன் புரிந்து கொண்டான்.
'நீலம்... உனக்க என்னோட பரிசா இந்த
இரண்டு பேசும் சித்திரங்களைத்தான் தரமுடிஞ்சுது.
சந்தோஷம் தானே...
இருவரும் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார்கள்.
கையில் கொண்டுவந்த சாக்லேட் டின்களை
குழந்தைகளிடம் கொடுத்த சித்தார்த்தன்,
'சுகன், சுகந்தி... உங்க அம்மாவுக்கு வணக்கம்
சொல்லுங்க பார்க்கலாம்' என்றான்.
குழந்தைள கை குவிக்கின்றன.
ஸ்ரீதரோ குழப்பத்தில் ஆழ்ந்தான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


228 வாழப் பிறந்தவள்
28

ஒரு கோயிலுக்குள் புதிதாய் வந்து சேர்ந்த


திருவிளக்குகள் போல் அந்தக் குழந்தைகள் இருந்தார்
கள்
வாழ்க்கையில் எல்லா சந்தோஷங்களையும்
குறைவறப் பெற்றிருந்த அந்த வீடு, பிள்ளைகள்
இல்லாத ஒரு குறையையும் இந்த வருகையால் நிறைவு
செய்துகொண்டது.
வீட்டில் புதுப்புதுப் பொருள்கள் வந்து
சேர்ந்தன.
ஏழுவயது ஐந்து வயது நிரம்பிய இருவருடைய
முகத்திலும் படர்ந்திருந்த சோகம் மறைந்து புதுப்
பொலிவு மின்னத் தொடங்கியது.
மீனாட்சி சித்தார்த்தனை வெகுவாகப்
பாராட்டினாள்.
'உன்னாலத்தான் இந்த விட்டுக்கு சந்தோஷத்
தைக் கொண்டுவரமுடியுது. ஐயா. நீ வந்துட்டாலே
கங்கை புரண்டு வந்த மாதிரி சந்தோஷம்
இங்கே
குதிபோட ஆரம்பிச்சிடும் உன்னோட மனசுக்கு நீ
கோடி கோடி ஜென்மத்துக்கும் நல்லாயிருக்கனும்
ஐய.'
என்று அவனை வாழ்த்தினாள் தேங்காய் ஒன்றில்
குடம் வைத்துத் தலையைச் சுற்றித் திருஷ்டிக்
கழித்துப் போட்டு உடைத்தாள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 229
மதிய உணவுக்குப் பின் தன் நண்பர்களைப்
பார்த்துவரக் கிளம்பினான் சித்தார்த்தன் அன்று
மாலையில் ஒரு மகளிர் கருத்தரங்கில் அவன் செய்தி
சேகரிக்க வேண்டியிருந்தது.
'நான்கு மணிக்கு வந்து விடுவேன்' என்று
கூறியபடித் தனது மோட்டார் சைக்கிளில் அவன்
புறப்பட்டான்.
அந்த வீட்டில் நாகராஜன் இருப்பது அவனுக்குக்
கொஞ்சமும் பிடிக்கவில்லை. அண்ணனின் மனம்
வாடக்கூடாது என்பதற்காக அமைதியாய் வெளிக்
கிளம்பினான். அவன் முகத்தைப் பார்த்தே அவனது
உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்ட நீலாம்பரியும்
மெளனமாகிவிட்டாள். அவனது ஆதங்கம்
அவளுக்குப் புரியாமல் இல்லை. இருந்தும் எதையும்
இப்போது பேச வேண்டாம் என்று அமைதி
காத்தாள்.
ஆனால், படுக்கையில் கிடந்த நாகராஜனுக்கு
மனம் இருப்புக் கொள்ளலாமல் தவித்தது. தானாக
வந்து தேவையில்லாமல் சங்கடத்தில் மாட்டிக்
கொண்டதாக அவன் நினைத்தான்.
முதலில் அவனைத் தேடி ஸ்ரீதர் வந்தபோதே
அவன் தன்னை மிகவும் சிரமப்பட்டுத் தற்காத்துக்
கொண்டான். அவன் வருவான் என்று கனவிலும்
அவன் எதிர்பார்க்கவில்லை. தீராத நெஞ்சு வலி
யினாலும் குடல் புண்ணாலும் அவதிப்பட்டுக்
கொண்டிருந்தவன் தனக்கு இறுதிகாலம் நெருங்கிக்
கொண்டிருக்கும் வேளையில் தான் துரோகம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


230 வாழப் பிறந்தவள்
செய்தவர்களை எல்லாம் சந்தித்து மன்னிப்புக்
கேட்கத் துடித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது
வெறிகொண்டு எழும்பும் மனதைக் கட்டிப் போட்டுத்
தானும் அடங்கிப் போவான்.
நேருக்கு நேராக அவன் முன்னால் ஸ்ரீதர்
வந்துநின்று,
"எங்கே நீலாம்பரி' என்று கேட்டதும், 'அவ
எங்கேயோ ஒடிப் போய்ட்டா... ஒடுகாலி!' என்று
சொல்லிவிட்டு அடுத்த நிமிடமே அவனிடம் தன்
வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
நடந்தவற்றை ஒன்றுகூட மறைக்காது அவனிடம்
கூறி அத்துரோகச் செயலுக்குப் பரிகாரம் செய்யக்
காத்திருப்பதாக அவனிடம் கூறினான்.
அதன்பின் அவனே சாரதியாகி அவனைத்
தலைநகருக்கு அழைத்தும் வந்தான் வந்தபின் முதன்
முதலாய் டேவிட்டைப் பார்த்ததும் மனம் கொஞ்சம்
முரண்டு பிடித்தது. ஆனால் நீலாம்பரி மேல் அவன்
கொண்டுள்ள ஆழமான அன்பைக் கண்டபின்
அவன்மேல் இனம்புரியாத கழிவிரக்கம் உண்டாகி
அவனுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற
எண்ணமும் மனதில் உதயமானது.
நீலாம்பரியின் பெற்றோர்களுக்குச் செய்த
துரோகத்தை நினைக்கும் போது தன்னைவிட ஒரு
கேவலமான மனிதனே இருக்கமாட்டான் என்று
தனக்கத்தானே நொந்துகொண்டான்.
தலையைத் தூக்க முடியாதவாறு தலை
கனத்தது. படுக்கையிலிருந்தவாறு வள்ளலார்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 231

உருவத்தில் பார்வையைப் பதிக்கிறான். அன்பும் பார்க


கருணையும் தவழும் அந்த முகத்தைப் பார்க்கப்
அழுகை பீறிட்டு வருகிறது.
தன்னுடைய கட்டுமஸ்தான உடம்பைப் பிற
பெண்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக
ராமலிங்கர் தன் மேனியை முழுவதுமாய்ப் போர்த்தி
யிருந்தார் என்று ஒரு புத்தகத்தில படித்துவிட்டு
நண்பர்களிடையே உட்கார்ந்துகொண்டு கிண்டலும்
கேலியும் செய்து பேசியது அப்போது நினைவுக்கு
வருகிறது.
'அழகான உடம்பை ஆண்டவன் கொடுத்தது
அதை மூலதனமா வெச்சு ஆதாயம் தேடத்தானேடா..
இந்தப் பண்டாரத்துக்கு இது ஏன்டா புரியல...!'
என்று அன்று சொன்னவன் இன்று அந்த உடம்பால்
எதுவுமே ஆகாது என்பதை உணர்ந்து கொண்டபின்
சிறுபிள்ளையாய் அழுகிறான்.
ஆரோக்கியமான உடம்பும் அழகான உள்ளமும்
இருந்தால், ஆண்டவன் அங்கே வந்து தங்கிவிடுவான்
என்பதை இப்போதுதான் அவனது ஆத்மா உணரத்
தொடங்கியது. உள்ளம் அழகுபெற ஆரம்பிக்கும்
போதுதான் மனிதன் புனிதனாகிறான் என்பதை
அவன் உணர ஆரம்பிக்கிறான். மாசு படிந்துகிடந்த
உள்ளத்தைக் கழுவ நினைக்கிறான். உள்ளத்தைக்
கழுவ ஒரேவழி உருகி அழுவதுதானே அழுகிறான்.
'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்' என்ற அந்த வள்ளலாரின் மனதை
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவன்
புரிந்துகொள்ளத் தொடங்கினான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


232 வாழப் பிறந்தவள்
'நீ உன்னை அறிந்தோ அறியாமலோ
பாவத்தைச் செய்திருந்தால், அதை நீ உணர்ந்தபின்
ஏதாவதொரு நன்மையைச் செய்துவிடு உன்
பாவங்கள் மறைந்து விடும். உன் தவறுகள்
மன்னிக்கப்படும்.
என்ற நல்லுரை இப்போது அவனுக்கு நினைவுக்கு
வருகிறது.
தன் பாவங்களை புண்ணிய நதியில் கழுவ
வேண்டுமானால் அதை எப்படி நிறைவேற்றுவது!
மனதில் இப்போது நீலாம்பரி வந்து நின்றாள்.
ஒரு தரும தேவதை போன்று நிற்கும் அவள் முகத்தை
நேருக்கு நேராகப் பார்க்க மனம் கூசியது.
'மார்கழிப் பணியில் பரிசுத்தமாகப் பூத்து நிற்கும்
தும்பைப் பூவை ஈவு இரக்கமின்றிப் பிய்த்து வீதியில்
போட்டது போல் அவளது அமைதியான வாழ்வை
நாசமாக்கிய பாவியாயிற்றே! அதற்கு இப்பிறப்பில்
கழுவாய் உண்டா...! அந்தப் பொண்ணுக்குத் தன்னால்
ஏதும் நன்மை செய்ய வழிகள் உண்டா...?'
மனதின் புலம்பலுக்கு விடை கிடைக்காமல்
புழுப் போல் படுக்கையில் நெளிந்துகொண்டிருந்தவன்
முன் நீலாம்பரி வந்து நின்றாள். அமைதியாய்
அவனைப் பார்த்தாள்.
'மருந்து சாப்பிட்டாச்சுன்னா வந்து பசியாற
லாமே... ஏன் இன்னும் படுக்கையிலேயே இருக்கீங்க.
இன்னும் ஜூரம் விடலியா..? கேட்டுக்கொண்டே,
வலது கையை அவன் நெற்றியில் வைத்துப்
பார்க்கிறாள். சூடுதணியாமல் அப்படியே இருந்தது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 233
டாக்டர் சொன்ன வார்த்தைகள் அவள்
நினைவுக்கு வருகின்றன.
"ஏன் கண்டதை எல்லாம் நினைச்சி மனசை
அலட்டிக்கிறீங்க நடந்து போனதை நினைச்சி
கவலைப்படறதினால போனது திரும்பிடவாப்
போகுது? கடந்ததை மறந்துட்டு, நடக்க வேண்டியதை
நல்லதா நடத்திவைக்கனும்னு கடவுளைப் பிராத்தனை
பண்ணுங்க எழுந்திருங்க எல்லாரும் உங்களுக்காக
காத்திருக்காங்க.'
அவன் அவளது பரிவில் உடைந்து போகிறான்.
'இன்னா செய்தாரை ஒறுத்தல், அவன்நான நன்னயம்
செய்துவிடல்' என்ற வள்ளுவரின் வாள் கொண்டு
அவனை ஒரே வீச்சில் வீழ்த்திவிட்டுப் போய்
விட்டாள் அவள்.
அந்தப் பஞ்சு போன்ற கையால் அவனைத்
தொட்டு அவன் காய்ச்சல் குறையவில்லையே
என்பதை அவள் சொன்ன மாத்திரத்திலேயே
அவனது பாவங்கள் கழுவப்பட்ட நிம்மதி உணர்வு
அவனை நிமிர்த்தியது எழுந்துபோய் ஷவரைத்
திறந்து வெது வெதுப்பான நீரைத் தலையில்
வேகமாய் விழவைத்தான் விடுவிடுவென்று உடம்பைத்
துடைத்துக் கொண்டு புதிய துணியை எடுத்து
உடுத்திக் கொண்டவனாய், கீழே இறங்கி வந்தான்.
ஊதுவத்தி மணம் வந்து கொண்டிருந்த திசையில்
திரும்பி பூஜை அறையில் நுழைந்து ஏற்றப்பட்டுள்ள
தீபத்தின் முன் சிலையாக நிற்கிறான்.
கண்களில் நீர் பெருக, வாய் ஒரு தேவாரப்
பாடலை ஒப்புவிக்கிறது. கற்பூரத்தைக் கண்ணில்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


234 வாழப் பிறந்தவள்
ஒற்றிக்கொள்கிறான். வெளியே வருகிறான். ஹாலில்
டேவிட்டும் ஸ்ரீதரனும் அமர்ந்திருக்க, குழந்தைகள்
இருவர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆச்சர்யமாய் அவர்களைப் பார்க்கிறான். ஜப்பான்
நாட்டுப் பொம்மை போல் கண்களில் நிறைந்து
காணப்பட்ட அந்தக் குழந்தைகளின் அருகில்
செல்கிறான்.
தொட்டுப் பார்க்க ஆர்வம் எழுகிறது.
குழந்தைகள் பயந்து விடுவார்களோ என்று தயங்கித்
தயங்கி நடக்கிறான். புதிய மனிதன் ஒருவன் தங்களை
நெருங்கிவருவதைப் பார்த்த அவர்கள் அவனைப்
பார்த்து மெல்லச் சிரிக்கின்றனர். பூப் போன்ற அந்தச்
சிரிப்பில் தன்னையே இழந்தவன், அவர்களின்
அருகில் அமர்கிறான். மெல்ல கன்னத்தில் கை
வைக்கிறான். உடம்பில் மின்சாரம் பாய்வது போன்ற
உணர் வலைகள் எழுகின்றன. சிலிர்த்துக்
கொள்கிறான்.
இதுதான் குழந்தையின்பமா.. குரல் கேட்டல்
செவிக்கின்பம்... அவர் மெய்த்தீண்டல் உடற்கின்பம்
என்றானே வள்ளுவன்! அது இதுதானோ. அவன்
உள்ளத்தில் உவவை பூக்கத் தொடங்கியபோது
'வணக்கம் மாமா...' என்று குழந்தைகள் சேர்ந்து குரல்
கொடுக்கின்றனர். ஜில்லென்று பனிக்காற்று முகத்தில்
வீசியது போன்ற குளிர்ச்சி! அப்படியே அப்படியே
இரண்டு பேரையும் கைகளில் சேர்த்து கன்னங்களில்
முத்தமிடுகிறான்.
'டேவிட்! இவங்க ரெண்டு பேரும் யாரு...
எங்கேயிருந்து வந்துருக்காங்க?"

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 235
டேவிட் சட்டென்று சொன்னான்.
'அவுங்க ரேண்டு பேரும் இந்த வீட்டுப்
பிள்ளைகள் தான் நாகராஜன்
இத்தனை நாளும் இருந்தாங்க காலையிலத்தான்
வந்தாங்க.. இனிமே இங்கேதான் இருப்பாங்க!
குழப்பத்திற்கு மேல் குழப்பம்...! ஸ்ரீதரன் முன்பு
குழம்பிப் போய் அமர்ந்திருந்தான். இப்போது இவன்
அவனைவிட இரு மடங்கு அதிகமாய்க் குழம்பிப்
போனான்.
மனதுக்குள் பலவிதமான கேள்விகள் எழுகின்
றன இவர்கள் இருவரும் ஊருக்காக நாடகம்
போடுகிறார்கள். இதில் இந்த சித்தார்த்தன் வேறு
புதுநாடகம் பொடுகிறானே. இதில் எதுதான்
உண்மை?'
அவனுக்குள்ளேயே அவன் தடுமாறிக்
கொண்டிருந்தபோது நீலாம்பரி வருகிறாள்.
குழந்தைகளை மேலே போகச் சொல்கிறாள்.
டேவிட்டின் அருகில் உட்காருகிறாள். அவர்கள்
இருவரையும் பார்க்கிறாள்.
'உங்க ரெண்டு பேருக்கும் ஒரு விஷயம் இப்ப
புரியணும்... இவுங்க ரெண்டு பேரும் யாருன்னு
தெரியணும்; அவ்வளவுதானே! இந்த ரெண்டு
பேருந்தான் இனிமே எங்களுக்கு ஆதாரம்....! இந்த
உலகத்தில தாய் இல்லாம. தநதையில்லாம
எத்தனையோ பிள்ளைங்க இருக்கிறாங்க.. ஆனா
இவுங்களுக்கு அம்மா... அப்பா ரெண்டுபேரும இல்ல.
அனாதை ஆசிரமத்தில வளர்ந்த ரெண்டுபேர்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


236 வாழப் பிறந்தவள்
தாங்களா விரும்பி வாழப் பிரியப்பட்டு வாழ்க்கையை
அமைச்சிகிட்டதுக்கு ஆண்டவன் கொடுத்தது இந்தப்
பிள்ளைகளைத்தான். ஆனா அவுங்க ரெண்டு பேரும்
இவுங்களை நிராதரவா வீதியில விட்டுட்டுப்
போய்ட்டாங்க.. எப்பவுமே நடுத் தெருவுல நிக்கிறவுங்
களுக்குக் கை கொடுத்தே பழகிப் போன சித்தார்த்தன்
கண்ணில இவுங்க பட்டதினால இந்த ஆண்டவன்
பாதத்துக்கு வந்து சேர்ந்துடுச்சுங்க.... என்னை
மாதிரியே...!'
அவர்கள் வாயடைத்துப் போய் சிலையாக
அமர்ந்திருக்கின்றனர்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 237

29

நாகராஜன் பினாங்கிற்குப் புறப்படத் தயாராகி


விட்டான். சித்தார்த்தன் திரும்புவதற்குள் தன்
பொருள்களைச் சரிசெய்துகொண்டு மற்றவர்களிடம்
விடைபெற்றுக்கொண்டு டேவிட்டிடம் தனியாகச்
சில நிமிடங்கள் பேசவிரும்பினான். டேவிட்டோடு
வெளியே வந்தான் அவன் கையில் நன்றாக ஒட்டிய
உறை ஒன்றைக் கொடுத்தான்.
'டேவிட்.. வாழ்க்கையில யாருக்கும் கிடைக்காத
அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்கது. ஆனா என்னோட
அறிவின்மையாலேயும் திமிர்த்தனத்தினாலேயும்
அதை நான் இழந்தேன். மனிதப்பிறவி கிடைக்கிறதுக்கு
கொடுத்து வைக்கணும்னு சொல்வாங்க அதிலேயும்
எந்த ஊனமும் இல்லாமல் பொறக்கிறது அரிய
விஷயம்னு பெரியவுங்க சொல்வாங்க.
'இந்த மண்ணுல மனிதனா பொறக்கிற வாய்ப்பு
எனக்குக் கிடைக்கது. அதிலேயும் பார்க்கிறவங்க
ஆசைப்படற அளவுக்கு அழகான உடம்பு எனக்குக்
கிடைச்சுது. அதோட இணையில்லாத ஆடல் கலைத்
திறமையையும் ஆண்டவன் எனக்குக் கொடுத்தான்.
அத்தனையும் வெச்சிகிட்டு மரியாதையா நான்
வாழ்க்கையை நடத்தியிருக்க முடியும் நடத்தியிருந்தா
இந்த மண்ணில எனக்கு ஒரு பேரும் கிடைச்சிருக்கும்.
என் பொணம் போறப்ப நல்ல புகழும் சேர்ந்து வரும்.
ஆனா நான் கண்ணிருந்தும் கபோதியா
இருந்துட்டேன். மனுஷத்தனம் என் க ிட் ட ே இல்லாம

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


238 வாழப் பிறந்தவள்
செத்துப் போச்சு. அதனால என்னோட ஒரு மிருகமும்
வளர்ந்துச்சு..... அது என்னை வழி நடத்தின விதமே
என் வாழ்க்கை நாசமாப் போகக் காரணம்.
'இப்ப நான் திருந்தின முழுமனிதனாயிட்டேன்.
உங்க முன்னால நான் இப்ப புது
இருக்கேன். உங்க மனசில எவ்விதக் களங்கமும்
இல்லேன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீங்க மனசால
என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லணும் அந்த
வார்த்தைதான் எனக்கு விமோசனம் கொடுக்கும்.
அடுத்த முறை உங்களை நான் சந்திப்பேனோ
இல்லையோ.. இந்தத் தடவை நான் நிறைஞ்ச
மனசோட போகணும்.
டேவிட் அவன் தோளில் ஆறுதலாய்த் தட்டிக்
கொடுத்தான்.
'ஒவ்வொருத்தரும் தன்னோட தவறை உணர்ந்து
வருந்த ஆரம்பிச்சிட்டா அதுவே அவுங்களுக்கு
மன்னிப்பு கெடைச்ச மாதிரிதானே நாகராஜ்.
நமக்குள்ளேயே இன்னொரு மனிதனும் இருக்கிறான்.
நாம் நல்லா இருந்தா அவன் நம்மைக் கொடுக்கப்
பாப்பான் நாம் கெட்டவுங்களா மாறினா அவன்
தன்னோட சுய உருவத்தையும் பலத்தையும் காட்டி
நம்மை வழிப்படுத்துவான். இப்ப உங்க நிலையும்
அப்படித்தான். உங்க மனசாட்சி உங்களை நல்ல
வழிக்குக் கொண்டு வரப்போகுது. இது நல்ல நேரம்
நாகராஜ். எனக்கு உங்கமேல எப்பவுமே கோபம்
கிடையாது என் தம்பி மாதிரிதான் நீங்களும்.... நீங்க
எப்பவும் இங்கே வரலாம்.... தங்கலாம்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 230
'ரொம்ப நன்றி டேவிட்! நான் மீண்டும் இங்கே
வர்றதும் வராததும் இறைவன் கையில இருக்கு இந்த
உறையில என்ன இருக்குதுன்னு இப்ப நீங்க தெறந்து
பார்க்க வேணாம். நாளைக்கு காலையில இதைத்
திறந்து பாருங்க... வீட்ல உள்ள எல்லாரும் ஒரு
இடத்தில உட்கார்ந்து சந்தோஷமா சாப்பிட்டுகிட்டு
இருக்கிற நேரத்தில இதைத் திறக்கணும் வரப்பேற
ஏழாந்தேதி நீலாவுக்கப் பிறந்தநாள்வருது அந்தப்
பிறந்த நாளைக்குத்தான் இதுல நான் பரிசு
வெச்சிருக்கேன் இந்தப் பரிசை நீலா எத்துக்கணும்.
ஏத்துகிற மனசு நீலாவுக்கு இருக்கு இப்ப நான்
புறப்படறேன்...!'
நாகராஜ் தன் காரில் ஏறி அமர்ந்தான்.
எல்லோரும் கையசைத்து விடை கொடுத்தார்கள்.
உயிரை விட்டுவிட்டு உடல் பிரிவது போல் அவன்
மனம் இலேசாகிப் போனது கார் புதிய சாலையில்
மிகவும் வேகமாய்ப் புறப்பட்டது வழி நெடுகிலும்
ஆண்டுக் கணக்காய் இழந்து போன நிம்மதி பற்றிய
நினைவுகள் முதன் முதலில் தஞ்சையில் இறங்கிய
நாளில் இருந்து இன்று கடைசியாய் நீலாம்பரியின்
முகத்தைப் பார்த்துத் திரும்பியது வரை நிழற்படமாய்
கண்ணில் தெரிய, காரைப் படுவேகமாய் ஒட்டிக்
கொண்டிருந்தான் அவன் கார் வேகமாக வந்து ஒரு
மலைப்பாதையில் வளைந்தபோது பின்
இருந்த பிளாஸ்டிக் கூடை சரிந்து விழுகிறது. காரின்
வேகத்தைக் குறைத்து ஒரு ஒரமாய் காரைக் கொண்டு
போய் நிறுத்துகிறான். கீழே விழுந்த கூடையை
எடுத்து ஒழுங்காய் வைத்துவிட்டு மறுபடியும் காரைச்
செலுத்துகிறான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


240 வாழப் பிறந்தவள்
அவன் பயணமானபோது நடு வழியில்
சாப்பிடுவதற்காக நீலாம்பரி கொடுத்த உணவையும்
தண்ணீர் பாட்டிலையும் தாங்கியிருந்ததுதான் அந்தக்
கூடை! அவளது தாயன்பை நினைத்து அவளை
மனசுக்குள் பாராட்டிக் கொண்டான். கார்
ஈப்போவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒய்வு
கொள்ளும் இடத்திற்குக் காரைக் கொண்டுபோய்
நிறுத்திவிட்டுக் கூடையை எடுத்து அதனுள்
இருப்பவற்றை ஆராய்ந்தான்.
ஒரு சில்வர் டப்பாவில் உப்புமாவும் சட்டினியும்
வைத்திருந்தாள் கூடவே இலையில் மடிக்கப்பட்ட
தோசையில் பொடியும் நல்லெண்ணெயும் கலந்
திருந்தாள். அத்தனையும் அவனுக்குப் பிடித்தமான
உணவு வகைகள் கண்களில் நீர் ததும்ப அதை
எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறான். இடது கையால்
ஒலி அலை ஆறைத் திருப்பினான் என்றோ கேட்ட
எஸ்.பி. பாலாவின் குரல் ஓடிவந்தது.
மணவாழ்க்கை வாய்ப்பதற்கு
மனைவி வாய்க்க வேண்டும்!
குலமகளாய்க் கிடைப்பதற்கோ
கொடுத்து வைக்க வேண்டும்!
விரக்தியோடு தலையாட்டிக் கொண்டான்.
சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவியவன்
துடைப்பதற்குக் கூடையில் இருந்த கைத் துண்டினை
எடுத்தான். மடித்து வைக்கப்பட்டிருந்த துண்டுக்குள்
இருந்து ஒரு கடிதம் கீழே விழுந்தது. எடுத்தான்.
மேல்புறத்தைப் படித்தான். அவன் பெயர் எழுதப்
பட்டிருந்தது. மறுபக்கம் திருப்பினான். நீலாம்பரி

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 241
என்று எழுதப்பட்டிருந்தது. உடம்பில் மின்னல்
தாக்கிய அதிர்ச்சி!
கடிதம்... அதுவும் அவன் பெயருக்கு நீலாம்பரி
எழுதிய கடிதம்...!
ஆர்வத்தோடும் அதிர்ச்சி மறையாமலும் பிரித்
தான் முத்துக்களாய் எழுத்துக்கள் கண்ணுக்கு
அழகாக எழுதப்பட்டிருந்த அந்த எழுத்துக்களை
மேலோட்டமாகப் பார்த்தவன் அவற்றை முழுமை
யாகப் படிக்கத் தயங்கினான்.
நீலாம்பரி ஒரு கடிதத்தினை வைத்திருக்கிறாள்
என்றால், அதுவும் அவன் பெயருக்கு அவள் எழுதி
வைத்திருக்கிறாள் என்றால், நிச்சயமாக அதில்
ஏதாவது விஷயம் இருக்கவேண்டும். நீலாம்பரியைப்
பொறுத்த வரை அவள் அடிபட்ட பாம்பு!
'பார்ப்பதற்கு அமைதியாகவும் பொறுமை
யாகவும் அவள் இருக்கிறாள் என்பது அவளால்
ஒன்றும் முடியாது என்பதற்காக அல்ல... அவள்
ஏதோ ஒன்றை மனதில் வைத்துக்கொண்டுதான்
இவ்வளவு தூரம் மரியாதை கொடுக்கிறாள். அவளைச்
சாதாரணமாய் நினைத்து மெத்தனமாய் நடந்தால்
அது கண்ணைத் திறந்து கொண்டே புதைச் சேற்றில்
இறங்கியதாகிவிடும் என்று மனம் எச்சரித்தது.
நீலாம்பரியையும் டேவிட்டையும் வீட்டில்
பார்த்த பின்பு... அவர்களின் படுக்கையறை,
உரையாடலைக் கேட்டபின்பு... அவர்கள் தங்களின்
எதிர்காலத்தின் நலம் கருதி இரண்டு குழந்தைகளைத்
தங்கள் குழந்தைகளாக்கிக் கொண்டதைக் கண்டபிறகு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


242 வாழப் பிறந்தவள்
அவன் ஒரு முடிவை முடிந்த முடிவாக்கி, அதை
டேவிட்டின் கையில் கொடுத்துவிட்டு வந்திருந்தான்.
இப்போது இந்தக் கடிதத்தைப் படித்து அதில்
காணப்பட்டுள்ள வாசகங்களைக் கண்டபின், அந்த
முடிவுக்குப் பங்கம் வருவதற்கு சந்தர்ப்பம்
வந்துவிடுமோ என்ற அச்சம் அவனைத் தடுத்தது.
கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு சில
நிமிடங்களைக் கழித்தான். மறுபடியும் ஒரு எண்ணம்
எழுந்தது.
'நீ எடுத்த முடிவு முடிந்த முடிவுதானே! இனி
அதை அடுத்தவர் மாற்ற முடியாத நிலையில்தானே
அதை அங்கே ஒப்படைத்துவிட்டு வந்தாய். எது
எப்படி இருந்தாலும் இருக்கட்டும் திறந்து படி:
என்று அது அவனுக்கு ஆணையிட்டது. படிக்கத்
தொடங்கினான்.'
'மரியாதைக்குரியவருக்கு...'
'ஆச்சர்யமாக இருக்கிறதா உங்களுக்கு? ஒரு
கன்னத்தில் உன்னை ஒருவன் அறைந்தால் அவனுக்கு
உன் மறு கன்னத்தையும் காட்டு என்ற புனிதனின்
அறவுரைகள் நெஞ்சில் பதிந்துவிட்ட நீலாம்பரிக்கு
இப்படித்தான் எதிரியையும் மதிக்கத் தெரியும் நான்
உங்களை மதிக்கிறேன். காரணம்! இந்த மண்ணில்
நான் வாழும் வாய்ப்பை நீங்கள்தான் எனக்குத்
தந்தீர்கள் என்பதற்காக!'
'இந்தப் புண்ணிய மண்ணில்.... பிறந்தவர்களை
விட வாழ வந்தவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள்.
ஆகவே அந்த வரத்தை அளித்த தங்களை நான்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 243

கடவுளாகத்தான் மதிக்கிறேன். எனக்கு நீங்கள் செய்த


கொடுமையே நன்மையாகிவிட்ட அதிசயம்தான் நான்
இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை!'
சித்தார்த்தன் என்ற தேவகுமாரனும் டேவிட்
என்ற புனித ஆத்மாவும் உங்களால்தான் எனக்கு
அறிமுகமானார்கள். நீங்கள் என்னை வீதியில்
விசியிருக்காவிட்டால் நான் இந்தப் புனிதர்களைச்
சந்தித்திருக்கவே முடியாது அல்லவா?
'பெண்ணைத் தனக்குள் அடிமையாக்கிக்
கொள்ள வேண்டும் என்ற வெறித்தனத்தில் மனிதன்
ஆடுகின்ற ஆட்டத்திற்கு முடிவும் அர்த்தமும்
இல்லாமல் போய்விடுகின்ற சமயத்தில்தான் பெண்
தன்னுடைய சுய வடிவத்தைக் காட்ட வேண்டிய
நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறாள் என்பதை நீங்கள் கூட
இப்போது உணர்ந்திருப்பீர்கள் உங்களைக் காலம்
இப்போது மாற்றி வைத்துள்ளது என்பதை உங்களின்
அமைதி வெளிப்படுத்துகிறது.'
'டேவிட் உங்களை மன்னிக்க வேண்டும்
என்பதில் நீங்கள் பிடிவாதமாக இருப்பதும் அதையே
எனக்குச் சொல்கிறது. நீங்கள் இனிமேலாவது வாழ
வேண்டும் மனைவி குழந்தைகளோடு வாழ வேண்டும்.
அடுத்தமுறை உங்கள் மனைவியோடும் பிள்ளைக
ளோடும் வாருங்கள். அதுதான் நல்வரவாக இருக்கும்.'
அதைப் படித்து முடித்தபோது கண்களில் நீர்
நிரம்பித் திரைபோட்டுக் கொண்டது. பெண்ணும்
பூமியும் ஒன்று என்று சொல்லி வைத்தது எவ்வளவு
தூரம் உண்மையாகிவிட்டது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


244 வாழப் பிறந்தவள்

இவ்வளவு தூரம் நடந்து முடிந்த பின்னும் இந்த


அளவுக்கு அவள் தன்மேல் வைத்திருக்கும் அன்பும்
மரியாதையும் அவளின் பெருந்தன்மையைத்தானே
காட்டுகின்றது. அந்தப் பெருமை மிக்கவளுக்கு அவன்
மனைவியும் குழந்தைகளும் அவன் ஜெயிலுக்குப்
போன உடனேயே அவனை விட்டுவிட்டுப்
போய்விட்டார்கள் என்பது தெரியவந்தால் அவள்
அவனைப் பற்றி என்ன நினைப்பாள்?
இந்த மரியாதையும் அன்பும் அதற்கு மேலும்
நீடிக்குமா... இல்லை இருந்த இடமும் தெரியாமல்
போய்விடுமா...
இனி அவள் அவனை மதித்தாலும் மதிக்கா
விட்டாலும் அதற்காக அவன் கவலைப்படப்
போவதில்லை. முன்னாலேயே முடிவு செய்துவிட்ட
அந்த முடிவுக்குத் தன்னைத் தயார்ப் படுத்திக்
கொண்டான். கடிதத்தைக் கிழித்துக் காற்றில்
பறக்கவிட்டான்.
நீலாம்பரியின் வீட்டு முகவரியையும்
தொலைபேசி எண் ண ையும் தாங் கிய அவளது
பெயரட்டை ஒன்றை எடுத்து, எதையோ பின்புறத்தில்
எழுதித் தன் மணிப்பர்ஸில் வைத்து அதைப்
பத்திரப்படுத்திக் கொண்டான். காரை மிக வேகமாகச்
செலுத்த ஆரம்பித்தான்.
மாலை மங்கி இருள் கவிழத் தொடங்கி
யிருந்தது.
புதிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இரண்டு
பக்கமும் விரைந்து கொண்டிருந்தன. அரசாங்கம்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 245
எத்தனை எத்தனை சாலைப் பாதுகாப்பு விதிகளைச்
சொல்லிக் கொடுத்திருந்தாலும்... எத்தனை எத்தனை
கடுமையான விதிமுறைகளை அமுலில் கொண்டு
வந்திருந்தாலும் காரைக் கையில் எடுத்தவுடன்,
பந்தயத்திடலில் புகுந்த உற்சாகத்தில் பறக்க
ஆரம்பித்துவிடும் காரோட்டிகளின் முன்னோடியாக
நாகராஜன் பறந்துகொண்டிருக்க, அவன் வண்டியை,
வேகக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விரட்டு
கின்றனர். ஆனால் அவனது காரோ வெகுவேகமாய்ப்
பாலத்திலிருந்து தாவிக் கீழே குதித்தது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


246 வாழப் பிறந்தவள்
30

சித்தார்த்தன் அன்றைக்குக் காலையிலேயே


ஸ்ரீதரனைத் தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்
கொண்டு பத்துமலை முருகன் கோயிலுக்குப்
புறப்பட்டுப் போய்விட்டான் ஸ்ரீதர் பழகும் விதமும்
அவனது அமைதியான தன்மையும் சித்தார்த்தனுக்கு
மிகவும் பிடித்துப் போயிருந்தது. இயல்பாகவே
கலைகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவனுக்கு
ஸ்ரீதரின் இசையின் மேல் கொஞ்சம் விருப்பம்
உண்டாகியிருந்தது. இருவரும் மலைக்கோயில்
முருகனைப் பார்த்து தரிசனம் முடித்துக்கொண்டு
கீழே வந்தார்கள். அந்த அழகிய சூழ்நிலையில்
இருவரும் தன்னை மறந்து இயற்கையின்
அன்பளிப்பை அருட்கொடையை ரசித்துக்
கொண்டிருந்தார்கள்.
'இந்தக் காலை நேரத்தில எனக்குத் தேவாரப்
பாடல்களைக் கேட்கிறதுக்கு ரொம்பப் பிரியமா
இருக்கும் ஸ்ரீதர்! இங்கே நீலாம்பரியைக் கூட்டி வரும்
போதெல்லாம் எனக்கு அந்தப் பாக்கியம் நெறையவே
கிடைக்கும். நீங்க பாடுவிங்கதானே. உங்களுக்குத்
திருமுறை பாடல்கள் தெரிஞ்சிருக்கனுமே.
பாடுவீங்களா ஸ்ரீதர்...'!
சித்தார்த்தன் அவனைப் பார்த்து ஆவலுடன்
கேட்கிறான். ஸ்ரீதருக்கும் விருப்பம்தான். சித்தார்த்தன்
ஏதும் நினைத்து விடுவானோ என்றுதான்
அமைதியாய் வழிபாட்டை முடித்துக்கொண்டு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 247
வந்தான். இப்போது அவனே விரும்பிக் கேட்டு
விட்டதால் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டான்.
'உங்களுக்கு என்ன வேணும்... தேவாரமா...
திருவாசகமா.. இல்லே திருப்புகழா?'
ஸ்ரீதர் கேட்டதும் சித்தார்த்தன் தடுமாறினான்.
அவன் என்ன கேட்கிறான் என்பது விளங்காமல்
அவனையே பார்த்தான்.
'நீங்க என்ன கேட்கறீங்க... தேவாரப் பாடல்கள்
பாடுறதுதான் எனக்குத் தெரியும். ஆனா இப்படிப்
பிரிச்சு சொல்லத் தெரியாது... இத்தனை விஷயம்
இதிலே இருக்குன்னு எனக்குத் தெரியாது ஸ்ரீதர்.
நீங்க எனக்கு மூன்று பாடல்களையும் பாடி எது
என்ன பாட்டு... யார் பாடினதுன்னு விளக்கமும்
சொல்லுங்களேன்.
உண்மையிலேயே சித்தார்த்தனின் ஆர்வம்
ஸ்ரீதரை வியக்க வைத்தது.
'தேவாரப் பாடல்கள்னு பொதுவா சொல்றது
இறைவனுக்காகப் பாடப்படும் போற்றிப் பாடல்
களைத்தான் குறிக்கும்... இதுல அப்பர் தேவாரம்...
ஞானசம்பந்தர் தேவாரம். சுந்தரமூர்த்தி தேவாரம்னு
அவரவர் பாடிய பாடல்கள் ஆயிரக் கணக்கில
உண்டு அருணகிரியார் பாடின திருப்புகழும்,
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும் உண்டு.
இதுக்கும் மேல இன்னும் பல அடியார்கள்
பாடிவெச்ச பல்லாயிரக் கணக்கான பாடல்களும்
தேவாரப் பாடல்கள்ல அடங்கும்.'

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


248 வாழப் பிறந்தவள்
பாடல்களைப்
இன்றைக்கு நான் இங்கே ஐந்து
பாடி விளக்கமும் சொல்றேன். எப்பவும் ஆலயங்
களுக்கு வந்து இறைவனை வழிபடறப்ப தேவாரப்
பாடல்களைப் பாட விரும்பினா ஒற்றையாகப்
பாடல்களை மட்டும் பாடிட்டுப் போகக் கூடாது.
ஐந்து புராணங்களையும் தவறாம ஒதனும்.
திருமுறைப் பாடல்களை வெறும் பொழுது
போக்குக்காகப் பாடக் கூடாது. அதை உணர்ந்து
பாடணும். உள்ளம் உருக ஒதனும்
சித்தார்த்தன் வியப்போடும் உருக்கத்தோடும்
கேட்டுக்கொண்டிருந்தான் ஸ்ரீதர் இரண்டு தேவாரப்
பாடல்களைப் பாடிவிட்டு மூன்றாவதாகத் திருவாசகத்
திலிருந்து கோயில் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார்
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீ யென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்னிரக் கேனே....
கோயில்
இது மாணிக்கவாசகர் அருளிய
சொன் னான்.
திருப்பதிகம்... என்று கூறி விளக்கமும்
அப்புறம் திருப்பல்லாண்டு பாடிப் பெரிய புராணப்
பாடல் ஒன்றையும் பாடிக்காட்டினான். சித்தார்த்
தனுக்குப் பனிமழையில் நனைந்தது போல் ஆயிற்று.
நீங்க இங்கே இருக்கிற வரைக்கும் நாம ரெண்டு
பேரும் தினமும் இங்கே வந்துடுவோம்... நீங்க எனக்கு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 249
இந்தப் பாடல்களையும் அதற்கான விளக்கங்
களையும் சொல்லிக் கொடுத்துடுங்க... எதையும்
முழுசாத் தெரிஞ்சுக்கலேன்னா எனக்குத் தூக்கமே
வராது ஸ்ரீதர்.
உணர்ச்சி பொங்கக் கேட்டுக்கொண்டான்.
ஸ்ரீதருக்கு அவன் ஆர்வமும் துடிப்பும் மகிழ்ச்சியைத்
தந்தன.
கொஞ்சம் ஆங்கிலம் படித்துவிட்டாலே தனது
மொழியைப் பண்புகளை மறந்து திரிகின்ற இளைஞர்
களிடையே பல நாடுகளைச் சுற்றிவந்தும் பலமொழி
களைக் கற்றிருந்தும் இவன் இப்படி ஒரு விசித்திர
மான மனிதனாய் இருக்கிறானே என்று பெருமைப்
பட்டுக் கொண்டான்.
'உங்கள் ஆசையை நான் ஒரளவுதான் நிறை
வேற்ற முடியும்... ஏன்னா இத்தனை பாடல்களையும்
நீங்க படிக்கவும் நான் சொல்லிக் கொடுக்கவும் நம்ம
ரெண்டு பேருக்குமே நேரம் போதாது. எது எதை
எங்கே பாடணும்... எப்படி ஒதனும்கிற விபரங்களை
மட்டும் நான் உங்களுக்குக் கத்துத் தர்றேன். அது
போதும் உங்களுக்கு. அப்புறம் சில புத்தகங்களை
வாங்கித் தர்றேன்... நீங்களே படிச்சிக்கலாம்.'
ஸ்ரீதர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே
சித்தார்த்தனின் கைத் தொலைபேசி சிணுங்க
ஆரம்பித்தது எதிர்முனையில் நீலாம்பரி அழைத்
தாள்.
இருவரும் புறப்பட்டார்கள். அவர்கள் வீட்டை
அடைந்தபோது காவல்துறை அதிகாரி ஒருவரும் ஒரு

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


250 வாழப் பிறந்தவள்
போலிஸ்காரரும் உள்ளே அவளிடம் பேசிக்
கொண்டிருந்தார்கள். அருகில் போய் விசாரித்த
சித்தார்த்தன் அதிர்ந்து போனான். ஸ்ரீதருக்கு விபரம்
தெரிந்து அவன் விக்கித்து நின்றான்.
'எனக்கு அப்பவே தெரியும், இவன் இப்படி
ஏதாச்சும் ஏடாகூடமா செய்வான்னு போனதுதான்
போறான், ஏன் நம்மக் குடும்பத்தைச் சந்திக்கு
இழுத்துவிட்டுப் போகணும் இருந்து கெடுத்தது
போதாதுன்னு இவன் செத்தும் தொல்லைதானா...!'
சித்தார்த்தன் வெறுப்பை உமிழ்ந்துகொண்டி
ருக்கையில், டேவிட் அவனை அதட்டுகிறான்.
'அவனைத் திட்டாதே தம்பி ஒருத்தன்
எவ்வளவுதான் தப்பு செய்திருந்தாலும் அவன்
செத்துப் போனதுக்கப்புறம் அவனைத் திட்டக்
கூடாது. அப்படித் திட்டியும் நமக்கு ஆகப்போறது
எதுவும் கிடையாதுப்பா அவன் மனக்குழப்பத்தினால
இந்தமாதிரி தப்பு பண்ணிட்டான். அவன் ஆத்மா
சாந்தி அடைய ஆண்டவன் கிட்டே பிராத்தனை
செய் இங்கே கிடைக்காத நிம்மதி அங்கேயாக்கம்
அவனுக்குக் கிடைக்கட்டும். அவன் போறதுக்கு
முன்னால என்கிட்டே ஒரு கவர் கொடுத்துட்டுப்
போனான். அதில என்ன வெச்சிருக்கிறான்னு திறந்து
பாருங்க...'
கவலையுடன் தம்பியிடம் சொல்கிறான். அந்த
நேரத்தில் அந்தக் கடிதஉறையைப் போலீஸ்காரர்
கையில் ஒப்படைத்துவிட்டு அதில் உள்ள கடிதத்தை

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 251
வாங்கிப் பார்க்கிறாள். மலாய் மொழியில் எழுதி
இருந்தான் போலீஸ் அதிகாரி அதையே அவனின்
மரணவாக்கு மூலமாய் எடுத்துக் கொண்டார். பிறகு
டேவிட்டிடம் வந்து,
'இனிமே ஆகவேண்டிய வேலைகளை நாங்க
கவனிக்க உங்க குடும்பத்தாரோட முழு ஒத்துழைப்பு
எங்களுக்கு வேணும் ஸார்! மிஸ்டர் சித்தார்த்தனுக்கு
என்ன செய்யனும்னு தெரியும்னு நினைக்கிறேன்.
எங்களோட நீங்க சேர்ந்து உதவி செய்தாதான்
வேலையை நாங்க சீக்கிரம் முடிக்க முடியும் இதோ
இக் கடிதத்தில உள்ள விஷயங்களை உடனே நாங்க
ஏற்பாடு செய்யனும் நீங்கதான் ஒத்துழைக்கனும்
என்றவாறு கடிதத்தை, சித்தார்த்தனின் கையில்
கொடுக்கிறார். அதைப் படித்துக் காட்டச்
சொல்கிறார்.
கடிதவாசகம் பாதி காவல் துறைக்கும், பாதி
டேவிட்டுக்கும் எழுதப்பட்டிருந்தது.
தன்னுடைய சாவுக்குத் தன்னுடைய முடிவே
காரணம் என்று அவன் எழுதியிருந்தான்.
தான் செய்த பழிபாவங்களுக்கெல்லாம்
கழுவாய் தேடிவிட்ட டேவிட்டுக்குத் தன்னால் எந்த
வகையிலும் நன்றி செலுத்த முடியாது என்பதால்,
இந்த முடிவை எடுத்ததாக எழுதி இருந்தான்.
டேவிட்டுக்கு எழுதிய கடிதம், சித்தார்த்தனைக்
கண் கலங்க வைத்தது. கண்ணீரை அடக்கமுடியாமல்
திணறினான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


252 வாழப் பிறந்தவள்
டேவிட்... ஒரு பெண்ணுக்கு இறைவன் எல்லா
வகையிலும் அளவு கடந்த சக்தியைக் கொடுத்திருக்
கிறான். அதைத்தான் அறிஞர்கள், பெரியோர்கள்
ஞானத்தை வைத்தான் ஈசன்
பெண்ணுக்குள்
என்றார்கள். எல்லாவகைச் சக்தியையும் பெற்ற
பெண்தான் ஒரு ஆணின் வாழ்வுக்கு ஆதாரமாக
இருக்கிறாள். ஆனால் அறிவில்லாத சில ஆண்மக்கள்
செய்யும் அடாவடித்தனத்தால் அவர்கள் அடிமை
போல் அல்லல்படுகின்றார்கள்.
பத்துமாதம் கருவில் சுமந்து திருவான உடம்பைக்
கொடுப்பவள்; பிறந்து மண்ணில் விழுந்த பின்தன்
உதிரத்தையே உயிரமுதாய் மகவுக்குத் தந்து
வளர்ப்பவள் பின் உடுத்தவும், உண்ணவும், நடக்கவும்
ஓடவும் கற்றுக் கொடுப்பவள்; பின் இந்த உலகத்தைக்
காட்டுபவள் அவள் தானே! தாயாகவும் சகோதரியா
கவும் தாரமாகவும் மாறி மாறிப் பிறப்பெடுத்து ஒரு
மகாசக்தியாய் இயங்கும் அவளால் தனித்து இயங்க
முடியாது என்ற வரலாறே கிடையாது. அவளுடைய
காரியங்கள் நல்வகையில் செழிக்கவும், அவளது
செயல்கள் சோர்வின்றி நடக்கவும்தான் அவளுக்கு ஆண்
துணை தேவைப்படுகிறது. அங்கேதான் கணவன் என்ற
உறவுமுறை அவசியப்படுகிறது. அவளுக்கு நல்ல
வழிகாட்டக் கூடிய ஒருவன், அவளுக்கு விழியாக
இருந்து இவ்வுலகத்தில் கை கோத்து நடைபோடத்தான்
கணவன் தேவைப்பட்டான். அந்த விழிகளாய் இருந்து
என்னால் என் நீலாவுக்கு இப்பிறப்பில் வழிகாட்ட
இறைவன் எனக்கு வாய்ப்பளித்து இருந்தும் நான் அதை
உங்களிடம்
நிர்மூலமாக்கிவிட்டேன். இறைவன்
நீலாவை ஒப்படைத்திருக்கிறான். அது நீலாவின் நல்ல

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத தமிழ்ச் செல்வம் 253

மனதுக்கு இறைவன் தந்த வரம்! அந்தத் தெய்வப்


பெண்ணுக்கு நான் செய்ய முடிந்த ஒரே நன்றிக்கடன்
என்னுடைய இரண்டு கண்களையும் தங்களுக்குத்
தானமாய் கொடுப்பதுதான்.
நீலாவை நீங்கள் உங்கள் கண்களால் ஒருமுறை
பார்க்கவேண்டும். அதன்பின் இறைவனிடம் வேறு எந்த
வரத்தையும் கேட்கமாட்டீர்கள். ஏழேழு பிறவிக்கும்
அவளோடு வாழும் பாக்கியம் இருந்தால் போதும்
என்பீர்கள்
என் வேண்டுகோளை நிராகரித்து விடாதீர்கள்.
என் நீலா வாழப் பிறந்தவள். அவள் வாழ வேண்டும்.
அவளை முழுமையாக நீங்கள் வாழவைக்க வேண்டும்.
என்மேல் நீங்கள் தூய்மையான அன்பைப் பொழிந்ததை
உங்களோடு இருந்த நேரத்தில் அறிந்தேன். என்னை
உங்கள் உடன் பிறப்பாய் நினைத்தது உண்மை
யானால் என் விழிகளை நீங்கள் ஏற்று என்னை
உங்களோடு வாழவையுங்கள். அந்த விழிகளோடு நான்
நீலாவைக் காலமெல்லாம் கண்டுகொண்டிருப்பேன். என்
விழிகள் மட்டுமல்ல. என் உடல் உறுப்புகள்
பிறருக்குப் பயன்படுமானால் அவற்றையும் தானம்
செய்துவிடுங்கள்.
அவன் எழுதிய அக் கடித வாசகத்தை
டேவிட்டுக்கு முழுமையாகப் படித்து முடித்தபோது
சித்தார்த்தனின் நெஞ்சு கனத்தது. காலத்தின்
கட்டளை இது என்றால் அதை யார்தான் மறுக்க
முடியும்!

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


254 வாழப் பிறந்தவள்
தான் வாழ்ந்த காலத்தில் நல்லது செய்ய
முடியவில்லை என்றாலும் இறந்தபின் இம்மண்ணில்
பிறருக்கு நல்லதைச் செய்துவிட்டுப் போக நினைத்த
அவனை வாழ்த்தினான். அவன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்தனை செய்துகொண்டான் குழந்தைகளை
மீனாட்சியிடம் ஒப்படைத்துவிட்டு அனைவரும்
பினாங்கு புறப்பட்டலாயினர்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 255
31

இந்திய நாட்டின் ஈடு இணையற்ற கலாச்சார


பாரம்பரியக் கலைகளை அந்த நாட்டுக் கலைஞர்
களுக்கு ஈடாகத் தங்களாலும் படைக்க முடியும்
என்பதைத் தங்களின் அளப்பரிய திறமை மூலம்
நிருபித்துக் காட்டிவரும் சிங்கப்பூர் கலைஞர்கள்
ஒன்று சேர்ந்து படைக்கும் மாபெரும் கலைவிழாவில்
மலேசிய நாட்டிலிருந்து சிறப்புக் கலைஞராக
நீலாம்பரி அழைக்கப்பட்டிருந்தாள் சித்தார்த்தனின்
நீண்ட நாளைய கனவு அது.
சிங்கையில் நடைபெற்ற அனைத்துலக
புகைப்படக் கண்காட்சியில் அவன் கலந்துகொள்ளச்
சென்றிருந்தபோது அங்கே சந்தித்த முக்கிய
பிரமுக்ளன வேண்டுகோளுக்கிணங்க நீலாம்பரி
யிடம் கேட்காமலேயே அந்த நிகழ்ச்சிக்கு அவன்
ஏற்பாடு செய்திருந்தான். நீலாம்பரியிடம் கேட்டு
அவள் மறுத்துவிட்டால் மனக் கஷ்டம் வருமே
என்று தனக்குத்தானே முடிவு செய்துவிட்டு
அவளிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது
அவள் பூவாய்ச் சிரித்தாள்.
'என்னால முடியும்னு நினைக்கிறீங்களா!
இனிமேலேயும் நான் இதெல்லாம் செய்யனுமா.. என்
மாணவிகள் இருக்கிறப்ப அவுங்களை வெச்சு இதை
செய்யக் கூடாதா..?'
மறுத்துவிட்டான் சித்தார்த்தன். 'நீ... நீதான்
செய்யனும் நீலா.. உன்னோட மாணவிகள்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


256 வாழப் பிறந்தவள்
செய்யறது உன்னோட பிரதிபலிப்புகள். உன் மாணவி
களிடத்திலேர்ந்து வரலாம். ஆனா உண்மையான
விஷயங்களை நீதானே கொடுக்க முடியும்.'
'இந்த உலகத்தில உன்னோட பேர் நிலைக்
கணும். ..உன்னால பரதக்கலைக்கு இன்னொரு
சாதனை கிடைக்கணும்... ஒரு சுவர்ணமுகியை ஒரு
பத்மா சுப்ரமண்யத்தை மறுபடியும் ரசிகர்கள் இங்கே
பார்க்கணும் உன்னால அது முடியும்... தயவு செய்து
மறுத்திடாதே நீலாம்பரி
அவன் தன் மீதும் தன் கலையின்
வைத்திருக்கும் நம்பிக்கையை நினைக்கும்போது
அவள் கண்களில் நீர் பெருகியது. ஒத்துக்
கொண்டாள்.
அரங்கம் நிறைந்த ரசிகர்கள் கூட்டம்.
அறிவிப்பாளரின் மூன்று மொழி அறிவிப்பும் இடை
இடையே வந்துபோகும் உள்ளுர்க் கலைஞர்களும்
அரங்கமன அவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்திற்கு
மகிழ்ச்சியைத் தந்தது போக மலேசிய நாட்டிய
மணியின் நடனம் அரங்கேற விருக்கிறது என்ற
அறிவிப்பு அங்கே மிகப் பெரிய எதிர்பார்ப்புநிறைந்த
கைத்தட்டலை வெளிப்படுத்தியது.
வானவில்லின் ஏழுவண்ணங்கள் ஒன்று கலந்த
வண்ணவிளக்குகள் ஜொலிக்க விலகிய திரையினில்
இருந்து அந்த கோலமயில் மெல்ல அடி எடுத்து
மேடையின் மையத்திற்கு வருகிறாள்.அவளது
அற்புதமான தோற்றமும் கூப்பிய கரங்களும் ரசிகர்கள்
உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்ய, மீண்டும்
மண்டபம் அதிர்வது போன்ற கரவொலி!

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 257

நீலாம்பரியின் கால்கள் உயிர்பெற்றன. மீண்டும்


உணர்வுகள் துடித்தெழுந்தன. மின்னல் கொடி ஒன்று
நெளிந்து மறைந்தது போல் திரைக்குள் மறைகிறாள்.
அரங்கில் நிசப்தம்! மெல்லிய இசை முழங்க கால்
சலங்கை குலுங்குகின்ற ஒலி!
ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள்
ஆடாத பொற்பாவை ஆடவந்தாள்....
சித்தார்த்தன் உணர்வுகள் சிலிர்த் தெழுகின்றன.
அந்த வரிகள்... அந்தப் பாடல் வரிகள். ஆம் அவளை
முதன் முதலாய் முகம் பார்க்க வைத்த வரிகள்.
இன்று மீண்டும் காதுகளில் புகுந்து எழுப்பி
விட... அவன் இப்போதும் சுழன்று ஓடும்
புகைப்படக் கலைஞனாகிப் போனான்.
கேமரா அவளின் கால் பதங்களில் பதிந்தது.
அவளது கை பாவங்களில் படிந்தது. அங்க
அசைவுகளில் முக பாவங்களில்.. ஒவ்வொரு
அங்கமாய்ப் புகுந்துவந்த கேமிராவுக்குள் மின்னும்
அந்த இரு விழிகளில் அவன் கவனம் பட்டென்று
விழ. அதிலே கொஞ்சம் லயித்துப் போகிறான்.
சில நிமிடங்கள்... அந்த சில நிமிடங்களிலதான்
எவ்வளவு பெரிய விஷயம் அவனுக்கு உணர்த்தப்
பட்டுவிட்டது.
பேசும் அந்த விழிகளில்தான் எத்தனை
மாற்றம்? அன்று காணப்பட்ட இனம்
கண்டு கொள்ள முடியாத அந்தச் சோகம் மறைந்து
இப்போது புதிய ஒளிபடைத்த பார்வையுடன்
சுழல்கின்ற அந்த விழிகளில்தான் எவ்வளவு பெரிய
நம்பிக்கையொளி!

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


258 வாழப் பிறந்தவள்
எப்படி வந்தது அந்த நம்பிக்கை! எங்கிருந்து
வந்தது அந்த இனிய தோற்றம்? எடுப்பான
படைப்புகளும் அவள் ஆடினாள் என்பதைவிட தன்
ரசிகர்களை அவள் ஆட்டிவைத்தாள் என்பதே
பொருத்தமாக இருக்கும்.
அவள் கால்கள் நின்றபோது அரங்கில் இருந்த
ரசிகர்களின் உயிர் மூச்சே நின்றது போன்ற அமைதி!
இருகரம் கூப்பி அவள் விடைபெற்றுக்
கொண்டு உள்ளே போய்விட்டாள் நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் பாராட்டுகளையும் பரிசுகளையும்
வழங்கி அவளுக்குச் சிறப்பு செய்தார்கள். அவள்
மேடையில் பாராட்டப் படுவதையும், ரசிகர்கள்
மத்தியில் அவளுக்குக் கிடைத்த பாராட்டுதல்
களையும் முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக்
கொண்டிருந்த டேவிட் தன் மனதுக்குள் வருந்தத்
தொடங்கினான்.
'இவ்வளவு பெருமைக்குரிய கலையரசியை
முழுமையாகக் தன் பணியைச் செய்யவிடாமல்
காலத்தைக் கழித்துவிட்டோமே என்ற கவலை
மிகுந்தது.
என்னுடைய வேண்டுகோளை ஏற்று என்
விழிகளை நீங்கள் பெற்று நீலாம்பரியை ஒருமுறை
பார்த்துவிட்டால், ஏழு ஏழு பிறவிக்கும் அவளே
வேண்டும் என்று பிராத்த்தனை செய்வீர்கள்' என்று
எழுதி வைத்துவிட்டுத் தன் கண்களைத் தனக்குத்
தானம் செய்துவிட்டுப் போன நாகராஜன்
நினைக்கிறான்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 259

அவனது ஆரம்பகால நடவடிக்கைகள்


முறையில்லாமல் போனாலும், கடைசிக் காலத்தில்
அவன் நல்லதைத்தான் சிந்தனை செய்திருக்கிறான்
என்பதை அவன் முடிவே உறுதிப்படுத்தியது.
நீலாவைக் கொண்டு தனது சம்பாத்தியத்தைப்
பெருக்கவும் வாழ்க்கை வசதிகளை அதிகமாக்கிக்
கொள்ளவும் ஒரு காலத்தில் நினைத்தவன், இப்போது
அவளை மனதில் வைத்தே தனது குற்றங்களுக்
கெல்லாம் பரிகாரம் தேடிக் கொண்டுவிட்டான்
என்பதை நினைக்கும் போது, அவனுக்காக மனம்
வருந்தியது.
நிகழ்ச்சி முடிந்து நீலாம்பரி கீழேவந்தாள்.
உள்ளம் நிறைந்த பூரிப்புடன் டேவிட் அவளை
வாழ்த்துகிறான். ஸ்ரீதர் கூடவே நின்று.
'இனிமேலும் நீ ஆடிக்கிட்டிருந்தா அப்புறம்
என்கதி என்ன ஆகுமோ... நீலா..'
என்று கிண்டலாய்ச் சொல்லி அவளது அற்புதத்
திறமையைப் பாராட்டுகிறான். அனைவரும் அவர்கள்
தங்கியிருக்கும் ஆடம்பர வசதிகள் நிறைந்த
ஹோட்டல் ஷங் ரி லா வுக்கு வருகின்றனர். அங்கே
சித்தார்த்தனின் சிங்கை நண்பர்கள் அவர்களுக்குச்
சிறப்பான விருந்துபசரிப்புக்கு ஏற்பாடு செய்திருந்
தார்கள்.
அந்த விருந்தின் முடிவில் நீலாம்பரியும்
சித்தார்த்தனும் எதிர்பார்க்காத வேண்டுகோள் ஒன்று
அங்கே விடுக்கப்பட்டது.
சிங்கையில் உள்ள இளையர்களின் கலை
வகையில்
ஆர்வம் நல்ல திசையில் போய், பயன்மிக்க

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


260 வாழப் பிறந்தவள்
வளர்ச்சி பெற வேண்டும் என்பதால், அங்குள்ள
இளையர்களுக்கு நடனப்பயிற்சியை நடத்தவிருப்ப
தாகவும், அதை முறையாகக் கற்றுக் கொடுக்க,
தமிழ்நாட்டிலிருந்து தாங்கள் ஓர் ஆசிரியரை ஏற்பாடு
செய்யவிருந்ததாகவும் இப்போது அந்த முடிவை
மாற்றிக்கொண்டு நீலாம்பரியை அதற்குத் தேர்வு
செய்துள்ளதாகவும் அதை மறுக்காமல் ஏற்று
நடத்தித் தரவேண்டும் என்பதே அவர்களின் அந்த
வேண்டுகோள்.
சித்தார்த்தன் வெகுவாக மகிழ்ந்து போனான்.
தான் போட்ட விதை ஒன்று முளைத்து அன்றே
வளர்ந்து கனிந்த மகிழ்ச்சி அது அந்த நண்பருக்கு
மனமார்ந்த நன்றியைக் கூறிக் கை குலுக்கினான்.
நீலாம்பரி அதிர்ச்சியில் தடுமாறிப் போயிருந்தாள்.
அவளுக்கு மனதுக்குள் விருப்பம் இல்லாமல்
இருந்தது. ஆனாலும் சித்தார்த்தன் தவறாக நினைத்து
விடுவான் என்று தன் வாயை முடிக்கிடந்தாள்.
கண்கள் மட்டும் டேவிட்டைப் பார்த்தன. அவள்
பார்வையில் அவள் தவிப்பை உணர்ந்து
கொண்டவனாய்....
'நீ சங்கடப்பட இதுல எதுவுமே இல்லே நீலா....
உன்னால முடியும்மா.... 'ஓக்கே' சொல்லு....' என்று
உற்சாகப்படுத்தினான்.
வாரத்திற்கு ஒருநாள் வகுப்பு என்ற
அடைப்படையில் அவர்கள் ஒப்பந்தம் செய்து
கொண்ட பின் அழகிய சிங்கை நகரின் எழிலில் மனம்
பறிகொடுத்து இரண்டு தினங்களை அங்கே சுற்றிப்
பார்ப்பதில் கழித்தார்கள்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 261

'தன்னுடைய பட்டப்படிப்பு சமயத்தில்


இருமுறை சிங்கப்பூர் வந்ததை டேவிட் நினைவு
கூர்ந்தான். சுதந்திரத்திற்குப் பின் நாடு மிக வேகமாக
முன்னேறியுள்ளதைப் பார்க்கும்போது வியப்பாகவும்
பெருமையாகவும் இருக்கிற தென்றான்.'
சித்தார்த்தன் 'உலகம் சுற்றும் வாலிபன்'
என்பதால் அவன் தான் சென்று வந்த நாடுகளோடு
சிங்கையை ஒப்பிட்டுக் காட்டினான். சிங்கப்பூர் அரசு
தன் குடிமக்களுக்காகவும், அவர்களின் சமய கலாசார
மேம்பாட்டுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும்
ஆற்றிவரும் திட்டங்களையும், அரசாங்கத்தோடு
மக்கள் இணைந்து ஒத்துழைப்பு நல்குவதையும்
எடுத்துக் கூறினான்.
நாட்டின் வளர்ச்சி மட்டுமன்றி, சுத்தமும்
அழகும் ஒழுங்கும் பணிவன்பும் மிகவும் போற்றத்தக்க
வகையில் அமைந்துவிட்டதால், பல்லின மக்களி
டையே. நல்ல புரிந்துணர்வும் ஒற்றுமையும் நிரவிக்
கிடப்பதால் நாடு அமைதியாக சுபிட்ச நிலையினை
அடைந்துள்ளதைச் சொன்னான்.
அவன் சொன்னதை நேரில் காணும்போது
ஸ்ரீதர் அதை மனதார ஒப்புக்கொண்டான்.
''ஒரு நாடு எல்லா வழிகளிலும் முன்னேற
வேண்டுமானால் அது அந்த நாட்டுக் குடி மக்களின்
கையில்தான் இருக்கிறது' என்றான்.
தனிப்பட்ட ஒரு மனிதனின் சிந்தனை
வளர்ச்சியும் அறிவு மேம்பாடும் தான் அவன்
சார்ந்துள்ள சமுதாயத்தை வலுப்படுத்த முடியும்.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


262 வாழப் பிறந்தவள்
சமுதாயம் முன்னேறினால் நாடு முன்னேறுவதில்
எவ்விதத் தடையுமிருக்காது. எங்கெல்லாம் தனி
மனிதன் அறிவு மழுங்கிப் போயிருக்கின்றதோ
அங்கெல்லாம் எவ்வித முன்னேற்றத்தையும்
காணமுடியாது என்று கவலையுடன் சொன்னான்.
அப்போது அவன் மனம் அன்னை பூமியை
எண்ணி வாடியது.
எத்தனை எத்தனை மகான்கள் என் தாய்
மண்ணில் தோன்றியும் இன்னும் அங்கே ‘ஒருதாய்
பிள்ளை' என்ற உணர்வே வரவில்லையே என்ற
ஏக்கம் மனதில் எழுந்தது. அவர்கள் குட்டி இந்தியா
என்றழைக்கப்படும் சிராங்கூன் சாலைக்கு வந்தார்கள்.
சித்தார்த்தனுக்கு அந்த மாலை நேரத்தில
அங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்தபோது,
தப்பித் தவறி சென்னையில் நிற்கிறோமோ என்ற
அச்சம் வந்துவிட்டது. அந்த கூட்டத்தைப் பற்றிய
விளக்கத்தை சித்தார்த்தன் சொன்னதும் அவனுக்கு
உடனே ஊருக்குக் கிளம்பவேண்டும் என்ற ஆவல்
பிறக்கிறது. நீலாம்பரியிடம் சொல்கிறான். மலேசியா
வுக்குப் போனதும் கிளம்பலாம் என்கிறாள். மறுநாள்
அவர்கள் கோலாலம்பூர் வருகிறார்கள்.
சித்தார்த்தன் புனிதரின் டிக்கட்டை உறுதிப்
படுத்திகொண்டு வந்துவிட்டான். அவனும் பயணத்
திற்குத் தயாராகிவிட்டான்.
'நீலாம்பரி.... உன்னை நினைச்சு நான் மட்டும்
இல்லே நம்ம குடும்பம் எல்லாமே பெருமைப்படுது.

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


சிங்கைத் தமிழ்ச் செல்வம் 263

இந்த மண்ணுல வாழ வந்து இங்கேயே ஒரு வரலாறு


படைச்சிருக்கே நீ... ஒவ்வொரு உடம்பிலேயும்
ஆண்டவன் ஒரு சக்தியை வெச்சுத்தான் இந்த
மண்ணுக்கு அனுப்பிவைக்கிறான். அந்த சக்தி
என்னன்னு புரிஞ்சு கிட்டு நீ அதை
காட்டிட்டே..'
'ஒருத்தனுக்கு மனைவியா இருந்து அவனோட
வாழ்ந்து குழந்தைகளைப் பெற்று வளர்க்கிறதுதான்
வாழ்க்கைங்கிற கதையை மாற்றி, நெஞ்சில் துணிவும்
நேர்மைத்திறனும் இருந்தா ஒரு பெண்ணால சாகாத
சரித்திரம் படைக்க முடியும்னு நீ சாதிச்சு காட்
டிட்டே உன்னோட துய்மையான கலைப் பயணம்
தொடரணும். அதுக்கான இரண்டு கண்களா
டேவிட்டையும் சித்தார்த்தனையும் இறைவன்
உனக்குக் கொடுத்திருக்கிறான். நான் புறப்படறேன்.
மீண்டும் வருவேன்.'
'அலைகடல் தாண்டி நான் போனாலும் உன்
முகம் என் கண்களை விட்டுப் போகாது. நீலக்கடல்
அலைகள் பாடும் நீலாம்பரியில நான் உன்னைப்
பார்த்து உள்ளம் நிறைஞ்சு வாழ்த்திகிட்டிருப்பேன்.
இந்த வானத்து நிலவும் தென்றலும் எப்பவும் நம்ம
உறவுக்குத் தூது சொல்லி வந்து போகும்.'
'அவள் பட்டுக்கரங்களிலே முத்தம் ஒன்றைத்
தந்துவிட்டுப் பயணப்பட்டான் பூரீதரன் தன் பொன்
வண்ணச் சிறகு விரிந்து பறந்த மலேசிய ஏர்லைன்ஸ்
விமானம் அவனை அன்போடு சுமந்து சென்றது.

வாழ்த்துங்கள்

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


758

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


758

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


758

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


758

þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998


þÿAll rights reserved. š¿™Í•È¤Í ¤®¿´ÍšÍšÆ²Íµ®Í, 1998

You might also like