You are on page 1of 3

அரிய தவத்தால் வந்ததோ என்னும் படி விளங்கும் ஆனால் உமக்கு இயல்பாக

வருத்தமே இல்லாமல் அமைந்த மலர்ந்து வசும்


ீ கதிருடன் கூடிய சுடர்கின்ற
திருமேனியுடன், இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த என்றும் குறையாத
விரியாத ஞானத்துடன், எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றீர்! வரும்
காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்களும் ஆகி
உலகத்தையும் உலக மக்களையும் ஒருங்கே காத்தருள்கிறிர்! உமது சீரை
சொல்லி முடிப்பது அடியேனால் முடியுமோ?

ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்

சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை

போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்

மாது வாழ் மார்பினாய்! என் சொல்லி யான் வாழ்த்துவனே?

ஓதுபவர்களின் வேதங்களெல்லாமும், மற்றும் எந்த உலகத்திலும் எப்படிப்பட்ட


சாத்திரங்களும், உமது புகழைத் தான் ஓதுகின்றன! பிறிதொன்றுமில்லை!
மலர்கள் வாழ்கின்ற நந்தவனத்தில் விளைந்த திருத்துழாய் விளங்கும்
திருமுடியினாய்! அலர் மேல் மங்கை வாழும் மார்பினாய்! உம்மை
வாழ்த்துவதற்கு அடியேன் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்!

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை

மூழ்த்த நீர் உலகெல்லாம் படையென்று முதல் படைத்தாய்!

கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து

சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதோ?


பெருகி இருக்கும் பிரம்மாண்ட நீரில் இருந்து உலகங்களையும்
உலகமக்களையும் படைப்பாய் என்று உமக்குள்ளிருந்து தோன்றிய தாமரையில்
நான்முகனைப் படைத்தீர்! பலர் உம்மை வாழ்த்துவார்களாக இருக்கிறார்கள்!
மிகச் சிறந்த ஞானம் முதலிய குணங்களை உடைய அரன் முதலாகச்
சொல்லப்படும் தெய்வங்கள் எல்லாம் உமது குணங்கள் ஒவ்வொன்றையும்
எடுத்துக்கொண்டு பல்வேறாகப் போற்றித் துதிக்கிறார்கள்! அப்படித் அவர்கள்
துதித்தால் உமது தொன்மையான புகழ் அவ்வளவு தான் என்று ஆகிவிடாதோ?
உம்மால் படைக்கப்பட்ட பிரமதேவனால் படைக்கப்பட்டவர்கள் எப்படி உமது
தொன்மையான புகழைப் பாட முடியும்? அப்படி அவர்கள் பாடினால் உமது தொல்
புகழ் மாசு பெற்றுவிடுமே!

மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது

மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்

மாசூணா வான்கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால்

மாசூணா உனபாத மலர்ச்சோதி மழுங்காதே?

குற்றமே அடையாத ஒளிவசும்


ீ திருமேனியுடன், கூடாது குறையாது குற்றமே
அடையாத பேரறிவுடன், எல்லாப் பொருட்களும் ஆகி, அனைத்திற்கும்
அடிப்படையான ீர்! அப்படி இருக்க குற்றமில்லாத உயர்ந்த கோலம் கொண்ட
தேவர் தலைவன் உம்மை வழிப்பட்டால் உமது குற்றம் அடையாத திருப்பாத
மலர்களின் பேரொளி மழுங்கிவிடுமே!

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்

தொழுங் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே

மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்


தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?

தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த களிறு ஆகிய


கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத
கூர்மை பொருந்திய வாய்களை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி,
கருடப்பறவையின் மேல் ஏறி, யானை துன்பமடைந்து கொண்டிருந்த
மடுக்கரையில் தோன்றின ீர்! அது பொருந்தும்! உமது மழுங்காத ஞானமே
கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே! விரிந்து பரந்த
உலகில் தொழும் அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால்
உமது பெரும் பேரொளி குன்றி விடாதா?

You might also like