You are on page 1of 5

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றிய மூத்த குடி”

என்பதற்கேற்ப பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் நமது தமிழினம். அவ்வினம்


பேசிய மொழி தமிழ்மொழி ஆகும். அறிந்த கருத்துகளையும் உணர்ந்த உணர்ச்சிகளையும் பிறருக்கு
எடுத்துக்கூற உதவுகின்ற ஒரு கருவி மொழியாகும். அம்மொழியைப் பேசுகின்ற மக்களது
கொள்கைகளையும் குறிக்கோள்களையும் எடுத்தியம்புவது இலக்கியமாகும். இவற்றினை வைத்து
நோக்கும் போது, இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் நிலைக்கண்ணாடி என்ற உண்மை
புரியவரும். இதனாலேயே இலக்கியம் வாழ்க்கையின் எதிரொலிகள், சமுதாயத்தின் வளர்ச்சியைக்
காட்டும் மைல் கற்கள், மனித இலட்சியத்தின் உயிர்நாடி என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.
தமிழ்மொழியின் இலக்கிய படைப்பில் காலத்தால் தோன்றியது சங்க இலக்கியம், தற்கால இலக்கியம்
மற்றும் பக்தி இலக்கியம் ஆகும். இந்த தமிழ் செவ்விலக்கியங்கள் பல நன்னெறி பண்புகளை
மனிதர்களிடையே ஊட்டும் வகையில் அமைந்துள்ளன. உதரணமாக முருகுணர்ச்சி நிறைந்த தமிழ்
இலக்கியங்களான திருமுறை, நாலாயிர திவ்விய பிரபந்தம் மற்றும் காப்பியங்கள் அனைத்தும்
இக்கால மனித வாழ்வு சிறப்புற அமைய பல நன்னெறி பண்புகளைக் கொண்டுள்ளது. ஆகவே,
தமிழ்ர்களால் காக்கப்பட்டு வரும் இந்த தமிழ் இலக்கியங்கள் மனிதன் நெறியான வாழ்வை
மேற்கொள்ளத் துணை புரிகின்றன என்று கூறினால் அது மிகையாகாது.

முதலாவதாகத் திருமுறையில் தேவாரத்தைப் பகுத்தாய்ந்து பார்க்கையில், அப்பர்


அவர்களின் கைவண்ணத்தால் மலர்ந்த ‘சலம் பூவோடு தூபம்’ எனும் பாடல் இன்றைய கால
மனித நெறியான வாழ்வை மேற்கொள்ளப் பல நன்னெறி பண்புகளைக் கொண்டுள்ளது.
இப்பாடலில் அப்பர்,

சலம் பூவோடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

போன்ற முருகுணர்ச்சி நிறைந்த வரிகளின் மூலம் வாசிப்பவரின் கவனிப்பை மற்றும் மனதை


ஈர்க்கின்றார். நீர், பூக்கள், நல்ல மணம் வீசும் தூபங்களை, நல்ல சங்கீதம் பொருந்திய பாடல்கள்!
ஆஹா! சொல்லும் போதே நம்மைப் பக்தி பரவசமடையச் செய்கின்றது. இப்பாடல் வரியின் மூலம்
அப்பர் நீர், பூக்கள், நல்ல மணம் வீசும் தூபங்களையும் மற்றும் தமிழ் இசையுடன் இறைவனின்
புகழை போற்றி இறைவனை வழிபடுவதை அறிய முடிகிறது. அதாவது மனிதனால் முடிந்த அளவு
கடவுளை வழிப்பட வேண்டும் எனும் நன்னெறி பண்பை இவ்வரி நமக்கு உணர்த்துகின்றது. நீர்,
மலர், தூபம் மற்றும் பூக்களைக் கொண்டு மனிதர்கள் சிக்கனமாக இறைவனை வணங்கினாலும் கூட
அவர் நமக்கு அருள் புரிவார். தேவையற்ற செலவு செய்யாமல் நாம் எளிய முறையில் இறைவனை
வழிப்பட வேண்டும். மேலும், அப்பர் அவர்கள் நாம் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் அல்லது
இன்பம் வந்தாலும் இறைவனை பிரத்தனை செய்தல் அவசியம் என்பதனை இப்பாடலில்
`நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்

உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்

எனும் வரிகளின் மூலம் எடுத்துரைக்கின்றார். இன்றைய காலத்தில் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்கள்


பல. இருப்பினும் அதனை நினைத்துக் கொண்டு நாம் இறைவனை மறக்கக் கூடாது. எந்நேரமும்
இறைவனின் புகழைப் பாடுவதன் மூலம் மனிதர்கள் வாழ்வில் வழி தவறிப் போவதில்லை. மேலும்,
அவர்கள் கொலை, கொள்ளை, மது போன்ற தீய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இறைச்
சிந்தனை அவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தி நல்வழிக்குக் கொண்டு செல்லும். ஆகையால்
ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற இறை நம்பிக்கை பெரிதும் உதவியாக அமையும். இப்பக்தி
இலக்கியத்தின் வழி, இறை நம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக இளையோர் நெறியான வாழ்வை
மேற்கொள்ளுவார்கள் என்பதில் கிஞ்ச்சிற்றும் ஐயமில்லை.

இதனை தொடர்ந்து, திருமுலர் அவர்களால் உருவாக்கப்பட்ட திருமந்திரத்தில் உள்ள


ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் எனும் பாடலை ஆராய்ந்து பார்க்கலாம்.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே

இப்பாடல் வரிகளில் உள்ள சொற்கள் யாவும் கடினமாக இல்லாமல் அனைவருக்கும் மிகவும்


எளிதாகப் புரியும் வண்ணம் அமைந்துள்ளது. ஒருவர் தன் வாழ்நாள் முடிந்து இறந்தவுடன் அவரின்
உற்றாரும் உறவினரும் கூடி ஓலமிட்டு அழுவார்கள். இறந்தவரின் பெயர் நீங்கி பிணம் என்று
ஆகிவிடும் .இறந்தவர் உடலை முட்செடிகள் தூதுவளை நிறைந்த சுடுகாட்டில் வைத்து எரித்து
விட்டு நீரில் மூழ்கி குளிப்பார்கள். சிறிது நாட்களுக்குப் பிறகு அவரை மறந்து விடுவார்கள். இது
மனிதனின் சுபாவம். இதுவே இப்பாடலில் பொருளாகும். இப்பாடல் மனிதன் வாழ்க்கையை
மேம்படுத்தும் வகையில் பல நன்னெறி பண்புகளை எடுத்துரைக்கின்றது. முதலில் நாம் இந்த
பிறவியின் நோக்கத்தை உணர்ந்து நடக்க வேண்டும் என்ற நன்னெறி பண்பை இப்பாடல்
உணர்த்துகின்றது. இறைவனின் அருளமுதைப் பெற, உலகத்தில் பிற உயிர்களுக்குத் தன்னால்
இயன்றதைச் செய்ய மீண்டும் ஒரு பிறவி எடுக்க மாட்டோமா என்று ஏங்கும் ஒரு மனிதனாக நாம்
இருக்க வேண்டும். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பது ஒளவையார் வாக்கு. மனித
பிறவியே அரியது, அதிலும் ஆறறிவுள்ள மனிதனாகப் பிறத்தல் அரிது என்றார் ஔவையார்.
எனவே இப்பிறவியில் நாம் நற்செயல்களை செய்து வாழ வேண்டும். பின்பு, இந்த பாடல் மனித
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்ற தத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது. ஒரு மனிதன்
அவன் இயற்க்கை எய்திய பின் எதையும் கொண்டு போவதில்லை. ஆகையால் வாழ்வும் நாட்களில்
பொருட்செல்வதின் மீது அதிக நாட்டம் கொள்ளமல் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.
மேலும், நாம் இறந்த பிறகும் இந்த உலகம் நம்மை போற்ற வேண்டும் பாஎனும் நன்னெறி பண்பை
இப்பாடல் உணர்த்துகின்றது.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

(அதிகாரம்:புகழ் குறள் எண்:236)

என்று வள்ளுவர் கூறுவது போல் உலகில் எவ்வளவோ பேர் தோன்றி மறைகின்றனர். இவர்களில்
யாரை உலகம் நினைக்கிறது? அல்லது இவர்களில் எத்துணை பேர் உலகத்திற்குத் தன்னால்
இயன்றவற்றை அளித்துச் சென்றுள்ளனர்? புகழுடன் இருப்போர் மட்டுமே உலகில்
தோன்றியவர்களாகக் கருதப்படுகின்றனர். மற்றவர்கள் இவ்வுலகில் பிறப்பதைவிட பிறவாமல்
இருப்பது நல்லது என்கிறார் வள்ளுவர். ஆகையால் நாம் தலைசிறந்த மனிதாக வாழ்ந்து
இயன்றவற்றை செய்ய வேண்டும். எனவே இப்பிறவியின் நோக்கத்தை உணர்ந்தால் மனிதன்
வாழ்வில் சிறந்த நிலைக்குச் செல்வான் என்பது திண்ணம்.

அதுமட்டுமில்லாமல், திருஞானசம்பந்தர் பாடிய ‘தோடுடைய செவியன்’ எனும் பகுத்தாய்ந்து


பார்க்கையில், இப்பாடலில் திருஞானசம்பந்தர் அவர்கள் இறைவனை மிகவும் அழகான சொற்களை
கொண்டு வர்ணித்துள்ளார். இந்த பாடலை படிக்கும் நமக்கே இறைவனின் உருவத்தை மிக நன்றாக
உணர முடியும். ஞானசம்பந்தர்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

என்கின்ற முருகுணர்ச்சி நிறைந்த வரிகள் இறைவன் தோடணிந்த திருச்செவியை உடைய


உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான
பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என்
உள்ளத்தைக் கவர்ந்தகள்வன் என விளக்கின்றது. ஒரு நாள் அவருடைய தந்தையார்
ஞானசம்பந்தரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார். செல்லும் வழியில், கோவில் திருக்
குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது, ஞானசம்பந்தருக்கு பசி எடுத்து அழுதார்.
அங்கு பார்வதி சிவனோடு தோன்றி பாலை ஞானசம்பந்தருக்குத் தந்து அவரின் பசியைப்
போக்கினார். அவ்வமயம் கரையேறிய தந்தையார், குழந்தையின் வாயினில் இருந்த பாலின்
துளியைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவராய், தனது கையில் ஒரு குச்சியை ஏந்தியவராய், யார்
கொடுத்த பாலடிசிலை நீ உண்டனை, எச்சில் மயங்கிட உனக்கு இட்டாரை காட்டு என்று
மிரட்டினார். குழந்தை கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக, உச்சி மேல் குவித்த கைகளை எடுத்து
ஒரு விரலாலே திருக்கோயிலின் கோபுரத்தை காட்டி தோடுடைய செவியன் எனும் பாடலை
பாட்டினார். இப்பாடலின் வழி மனிதர்கள் பல நன்னெறிகளை கற்று கொள்ள முடிகின்றது முதலில்
நாம் இறை பக்தியை மனதில் கொண்டிருக்க வேண்டும் எனும் நன்னெறி பண்பை இப்பாடலில்
மூலம் அறியலாம். திருஞானசம்பந்தர் துன்பத்தில் அதாவது பசியில் இருக்கும் பொழுது அவர்
இறை பக்தி கொண்டதால் இறைவன் அவரின் பசியை போக்கினார். அது போல நாம் இறை
பக்தியைக் கொண்டிருந்தால் நமக்கு துன்பம் நிகழும் போது இறைவன் அதனை நீக்கி விடுவார்.
இறை நம்பிக்கை தளரிக்னறபோது மனிதன் தன்னம்பிக்கையை இழக்கின்றான். ஆகையால் இறை
பக்தியை கொண்டு வாழ்ந்தால் மனிதன் நிச்ச்யமாக இன்பமாக வாழ்வான் என்பது மறுக்க முடியாத
உண்மை.

மேலும், நாலாயிர திவ்வியப் பிரபந்ததில் உள்ள பாடலை பார்ப்போம். இந்த நாலாயிர திவ்வியப்
பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். அதில் திருப்பாவையுள்ள
ஒரு பாடலான 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ மிகவும் சுவையூட்டும் வகையில்
எழுதியுள்ளப்பட்டுள்ளது. இப்பாடலில்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

என்கின்ற வரிகளின்வழி மனிதர்கள் அனைவரும் இயற்கையைப் போற்றி வாழ வேண்டும் எனும்


நன்னெறி பண்பை உணர்த்துகின்றது. எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும் வண்ணம் அருள்வான்
இறைவன் ஆகவே அவ்வழியில் மானிட பிறவியாகிய நாமும் இயற்கையைப் போற்றி வாழ
வேண்டும். அதன் அருமை அறிந்து, அதனை அழிக்கமல் பாதுக்காப்பது நமது கடமையாகும்.
இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் அது வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும். பிறகு, அது மட்டும்
அல்ல, பசு தன்னுடைய கன்று குட்டிக்கு மட்டும் அல்ல, வீட்டில் உள்ளவர்களுக்கும் பால் தரும்.
நம் வீட்டுக்கு பால் வருகிறது. நாம் பசு வளர்ப்பதில்லை. அது போல, நல்லவர்கள், பெரியவர்கள்,
சான்றோர், ஆச்சாரியர்கள் இறைவனை அடி அருள் பெறும் போது, அந்த அருள் நமக்கும் வந்து
சேரும் என்ற நன்னெறியை தெரியப்படுகின்றது. நூற்றுக்கு ஒருவன் நல்லவனாக இருந்தால் கூட
அவனைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர். ஆகவே நாம் செய்யும் நற்செயல்கள் நமக்கு மட்டும்
நன்மை அளிக்கமால் நம்மை சுற்றி உள்ளவர்களையும் சேரும்.
சுருங்கக்கூறின், தமிழ் மட்டுமல்ல எந்த மொழி இலக்கியமும் ஒரு புது அனுபவத்தை
நமக்கு ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. இலக்கியம் மனிதனின் நல்வாழ்வுக்கு அடித்தளமாக
உள்ளது. நாம் ஒவ்வொருவரும் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனைக் கற்க
வேண்டும்..தமிழ் இலக்கியங்கள் மனிதர்கள் நெறியான வாழ்க்கையை மேற்கொள்ளத் துணை
புரிகிறது என்பதனை மேலே உள்ள நன்னெறி பண்புகள் யாவும் இதற்கு பாரைச்ச்சாற்றுகின்றன்.
இதனால் மனிதர்கள் வாழ்வில் வழி தவறிச் செல்லாது சிறந்ததொரு வாழ்க்கையை வாழ முடியும்.
இத்தன்வழி, தமிழ் செவ்விலக்கிய பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட திருமுறையிலும், நாலாயிர
திவ்வியப் பிரபந்ததிலும், காப்பியங்களிலும் காணப்படும் நன்னெறிகள் இக்கால மனித வாழ்வுக்கு
பெரிதும் பங்காற்றுகின்றன என்பது திண்ணம்.

You might also like