You are on page 1of 6

கல்வி அறிவோடு வாழும் வாழ்க்கை தவம்

கல்வி அறிவின்றி வாழும் வாழ்க்கை சவம்

கல்வி என்பது அறிவு சார்ந்தது அன்று

கல்வி என்பது உயிர் சார்ந்த்து இன்று!

கல்வி என்ற மூன்றெழுத்துச் சொல்லில் ஒருவரது முழு வாழ்வும் அடங்கியிருக்கிறது என்றால்


மிகையாகாது. கல்வி என்பது அறிவுத்திறன் அடிப்படையில் தோன்றியதோடு மனித வாழ்வில்,
ஒழுக்கத்தையும் நற்பண்பையும் ஏற்படுத்துவதுதான் கல்வியின் தலையாய நோக்கமாகும்.
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்பதுபோல கல்வியறிவு இல்லாதவருக்கு எவ்வுலகமும் இல்லை
என்பதனை அனைவரும் உணர வேண்டும். அற்புத சாதனமாகத் திகழும் கல்வியை ஒவ்வொரு
மானிடனும் கற்றால் மட்டுமே செம்மையாக வாழ முடியும். இக்கல்வியின் முக்கியத்துவத்தினையே பல
கற்றல் கோட்பாடுகளும் வலியுறுத்துகிறது. அதே போல் மலேசியக் கல்வி திட்டமானது-

‘இறைநம்பிக்கை, இறைவழி நிற்றல் எனும் அடிப்படையில் அறிவாற்றல், ஆன்மிகம், உள்ளம், உடல்


ஆகியவை ஒன்றிணைந்து சமன்நிலையும் இயைபும் பெறத் தனிமனிதரின் ஆற்றலை முழுமையாக
மேம்படுத்தும் ஒரு தொடர் முயற்சியாகும். இம்முயற்சியானது அறிவு, சால்பு, நன்னெறி,
பொறுப்புணர்ச்சி, நல்வாழ்வு பெறும் ஆற்றல் ஆகியவற்றை பெற்றுக் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும்
நாட்டிற்கும் ஒருமைப்பாட்டையும் செழிப்பையும் நல்கும் மலேசியரை உருவாக்கும் நோக்கத்தைக்
கொண்டதாகும்.’ (கல்விச் சட்டம் 1996)

ஆகையால், மலேசிய தொடக்கப்பள்ளித் தமிழ்மொழி பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கற்றல்


கற்பித்தலில் அமுலாக்கத்திலுள்ள கல்வியில் கலையின் கூறுகளையும் அடிப்படைக் கருத்துமையையும்
கற்றல் கோட்பாட்டினையும் நன்கு ஆராய்ந்து பார்போம்.

முதலில், ஹாவர்ட் காட்னரின் பல்வகை நுண்ணறிவு கோட்பாட்டினை எடுத்துக் கொண்டால்,


அக்கோட்பாட்டானது ஒரு மனிதன் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் சுமூகமாக தன் மூளையின்
அறிவாற்றலைக் கொண்டு சமாளிப்பர் என்பதனை குறிப்பிடுகிறது. அதே போல் லீவ் வய்கோட்சிகி
என்ற உளவியலாளரின் கோட்பாட்டினை எடுத்துக் கொண்டோமானால், அவர் மாணவர்கள் தங்கள்
அறிவுத்திறனை வளர்ப்பதற்கு ஏட்டுக் கல்வி மட்டும் போதாது என்பதனை உறுதியாகத் தெரிவிக்கிறார்.
இதனால், ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாலுமியாக இருந்து மாணவர்களைச் சரியாக வழிநடத்த
வேண்டும். ஆசிரியர்கள் முழுமையான மாணவர்களை உருவாக்க கல்வியில் கலையின் கூறுகளையும்,
கல்வியில் கலையின் கோட்பாட்டினையும் அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகும். உயிர்
உடலில் இருந்து பிரிந்தாலும் ஒரு மானிடன் வாழ்ந்த வாழ்வை இவ்வுலகம் தொடர்ந்து பேசிக்
கொண்டே இருக்கும். அப்பேச்சு, தூற்றும் வகையில் அமைவதும் போற்றும் வகையில் அமைவதும்
ஒருவர் கடைப்பிடித்த வாழ்க்கை நெறியைப் பொறுத்துள்ளது. இவ்வாழ்க்கை நெறியானது கல்வியின்
வழியே பெறப்படுகிறது என்று மார்த்தட்டிக் கூறலாம். ஆக, அவ்வாழ்க்கை நெறியினைத்
தொடக்கப்பள்ளியிலிருந்தே மாணவர்களுக்குத் தமிழ்மொழி பாடத்திட்டத்தின் வழி ஆசிரியர்கள்
போதித்தால் சாலச் சிறந்ததாகும். காட்டாக, தொடக்கப்பள்ளியின் முதலாம் படிநிலை (ஆண்டு 1-3)
மாணவர்கள் அடிப்படை மொழித்திறன்களான கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து, ஆகியவற்றைக்
கைவரப்பெறுவதற்கு ஏதுவாக தமிழ்மொழிக் கலைத்திட்டத்தில் உள்ளடக்கத் தரமும் கற்றல் தரமும்
வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வுள்ளடக்கங்கள் அனைத்தும் ஹாவர்ட் காட்னரின் பல்வகை நுண்ணறிவு
கோட்பாட்டுடன் ஒத்துப் போகிறது என்பது நிதர்சனம். ஹாவர்ட் காட்னர் மனிதனின் சிந்தனையை
ஒன்பது வகையாகப் பகுத்துள்ளார். அவ்வொன்பது வகைகளும் முதலாம் படிநிலை மாணவர்களின்
தமிழ்மொழி பாடத்திட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஒன்றாம் ஆண்டு தமிழ்மொழி
பாடத்திட்டத்தில் கதை கூறுதல், சரியான உச்சரிப்புடன் வாசித்தல் போன்ற உள்ளடக்கத்தின் வழி
மாணவர்கள் தங்களின் மொழித்திறன், ஏரணம் இசை, மற்றும் எளிதாக மற்றவருடன் உரையாடுதல்
‘இன்டர்பிரசனல்’, உடல் அசைவு ‘கினிஸ்தேதிக்’ போன்ற திறனை வளர்த்துக் கொள்ள முடியும். உலகில்
உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு சிக்கலைத் தீர்க்க ஒரே மாதிரியானத் தீர்வுகளை
வழங்குவதில்லை. இதனால் மாணவர்களால் தமிழ்மொழி பாடத்தின்வழி 9 நுண்ணறிவுகளையும் அடைய
முடியவில்லை என்பதால் ஆசிரியர்கள் அனைத்து நுண்ணறிவுகளையும் பயன்படுத்தி தமிழ்மொழி
பாடத்திட்டத்தினை வகுக்க கடமைப்பட்டுள்ளனர். 9 நுண்ணறிவுகளையும் கொண்டு தமிழ்மொழி
பாடத்தினைப் போதிப்பதால் மாணவர்களுக்குத் தமிழ்மொழி படிப்பதில் நாட்டம் வருவதோடு
மாணவர்கள் மற்ற நுண்ணறிவுகளில் கைவசம் பெற முடியும்.
மொழி

ஆன்மிகச்சிந்தனை
(எக்சீஸ்தனலிஸ்) கணிதம்

ஹாவர்ட்
இன்டர்பிரசனல் காட்னரின் வெளி
கோட்பாடு

இன்ட்ராபிரசனல் இசைக்கலை

அசைவு

தொடர்ந்து, லீவ் வய்கோட்சிகியின் கட்டுவியக் கோட்பாடும் படிநிலை ஒன்று மாணவர்களின்


தமிழ்மொழி பாடத்திட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை. சித்திரமும்
கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கேற்ப ஆசிரியர்கள் படிநிலை ஒன்று
மாணவர்களுக்குச் சிறந்தொரு வழிக்காட்டியாக அமைய வேண்டும். 7 முதல் 9 வயது மாணவர்களின்
சிந்தனை முதிர்ச்சி அடையாது இருக்கும் என்பதால் லீவ் வய்கோட்ஸ்கியின் கோட்பாடு படி
ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சிறந்தொரு வழிக்காட்டியாக இருக்க வேண்டும். 7 முதல் 9 வயது
மாணவர்கள் ஆசிரியர்கள் செய்வதை அதிகம் பின்பற்றுவர். ஆசிரியர்கள் அனைவரும்

ஏறியவன் எங்கோ 
மேலேயிருக்க - ஏற்றிவிட்ட 
ஏணி மட்டும் 
அதேயிடத்தில் அடுத்தவனை 
ஏற்றிவிட 
காத்திருக்கிறது ?

என்பதனை உணர்ந்து அவர்களின் பணியைச் சரிவர செய்தல் வேண்டும். ஆசிரியர்கள்


மாணவர்களுக்குச் சிறந்தொரு வழிக்காட்டியாக மட்டும் இல்லாமல் அன்பு, அரவணைப்பு, அறிவுரைகள்
மற்றும் ஆலோசனைகளை அள்ளி இறைக்க வேண்டும். அப்படி அள்ளி இறைத்தால் மட்டுமே
அவர்களின் சிந்தனை மாற்றம் பெரும். இதனையே லீவ் வய்கோட்சிகி, வளர்ச்சி மேம்பாடு ‘(Zon
Perkembangan Proksimal)’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் படிநிலை மாணவர்களின் தமிழ்மொழிப் பாடத்திட்டமானது படைப்பாற்றல் ஆய்வாளரான


நெட் ஏர்மன் ஹோகா ஹோக்கி என்ற கோட்பாட்டுடன் சம்மதப்பட்டுள்ளது. முதலாம் படிநிலை
மாணவர்களின் தமிழ்மொழி பாடத்திட்டமானது இரண்டு பகுதியின் மூளை பயன்பாட்டையும்
கொண்டுள்ளது என்றால் கிஞ்சிற்றும் ஐயமில்லை. வலது மூளையைப் பயன்படுத்தி மாணவர்கள்
தமிழ்மொழிப் பாடத்தை இசை, காட்சி மற்றும் அசைவு கொண்டு படிக்க இயலும். இடது மூளையைப்
பயன்படுத்தி மாணவர்கள் தமிழ்மொழியினை காரண காரியங்களுடன் படிப்பர். ஆக, ஆசிரியர்கள்
முதலாம் படிநிலை மாணவர்களுக்குப் பாடம் போதிக்கும் போது, அம்மாணவர்கள் அதிக கேள்விகள்
கேட்டால், கோபப்படாமல் அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள்
அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தால் மட்டுமே நெட் ஏர்மன் கோட்பாட்டின் படி
அவர்களின் சிந்தனை முதிர்ச்சி அடையும் என்பது அவரின் கருத்தாகும். ஆக, தமிழ்மொழி பாடத்தின்
மீது ஆர்வம், பற்று ஏற்படுவதற்கும், பாட நூலையே மட்டும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல்
ஆசிரியர்கள் பல விளையாட்டுகளை வைத்து இப்பாடத்தினைப் போதிக்கலாம். ஆக, இருபக்க மூளை
கோட்பாட்டை அறிந்த ஆசிரியர்கள் சீரான மாணவர்களை உருவாக்க தமிழ்மொழி பாடவேளை
தொடங்கும் முன் மாணவர்களின் படிநிலைக்கு ஏற்றவாறு குறைந்தது இரண்டு அல்லது மூன்று
நிமிடமாவது பாடம் சம்மந்தப்பட்ட விளையாட்டுகளைச் செய்து வந்தால் மாணவர்களுக்குத்
தமிழ்மொழியின் மீது நாட்டம் அதிகரிக்கும். அதே வேளையில் ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் திறனும்
வளம் பெறும்.

தொடர்ந்து படிநிலை இரண்டு மாணவர்களான நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் மாணவர்களின்


தமிழ்மொழி பாடத்திட்டமானது உயர்நிலைச் சிந்தனைத்திறனுக்கான ஒரு பாடத்திட்டமாக
அமைந்துள்ளது. பாட நூலில் படிக்கும் செய்யுளும் மொழியணிகளையும் இரண்டாம் படிநிலை
மாணவர்கள் பகுத்தாய்த்தல் பயன்படுத்துதல் மட்டும் இல்லாமல் அம்மொழியணிகளை கட்டுரைகளில்
பயன்படுத்தி அவர்களின் ஆக்கப் புத்தாகத் தன்மைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, படிநிலை இரண்டு மாணவர்களின் தமிழ்மொழி பாடத்திட்டத்தில் கட்டுரை எழுதும்
வழிமுறை படிநிலையை காட்டிலும் சற்று மாறுப்பட்டுள்ளது. காட்டாக, அலுவல் கடிதம், தன்கதை,
கருத்து விளக்கக் கட்டுரை, கற்பனைக் கட்டுரை, வாதக் கட்டுரை, விவாதக் கட்டுரை, நேர்காணல்,
நிகழ்ச்சியறிக்கை ஆகியவற்றை ஏற்புடைய கருத்துகளுடன் இலக்கணப் பிழையின்றிப் பொருத்தமான
மொழியணியைப் பயன்படுத்தி நல்ல மொழிநடையில் எழுதுவதற்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க
வேண்டும். இதன்வழி மாணவர்கள் உற்சாகமாகவும் அவர்களை முழுமையாக ஈடுபடுத்தியும்
தமிழ்மொழியினைக் கற்பர்.

படிநிலை இரண்டு மாணவர்களின் தமிழ்மொழி பாடத்திட்டத்தில் கல்வியில் கலையின் கூறுகள்


குறைவாகவே காட்சியளிக்கின்றன. மாணவர்கள் அதிகம் புத்தகத்தினையே மையமாகக் கொண்டு
படிப்பதனால் மலேசியக் கல்வித் திட்டத்தில் மாற்றம் தேவை என்பதே என்னுடையக்
கண்ணோட்டமாகும். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பதனை மலேசியக் கல்வித்திட்டம்
உணர்ந்து சிறந்த வழிமுறைகளை அமுலாக்கத்தில் கொண்டு வர வேண்டும். காட்டாக, படிநிலை
இரண்டு தமிழ்மொழி பாடத்தில் உள்ள செய்யுள்களையும் மொழியணிகளையும், 21-ஆம் நூற்றாண்டின்
கல்வித்திட்டத்திற்கு இணங்க ஆசிரியர்கள் மாணவர்களைக் கதையாகவோ அல்லது நாடகமாகவோ
நடிக்கச் சொல்லலாம். இப்படிச் செய்வதனால் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலை உயிரோட்டமாக
வழிநடத்தவும் மாணவர்களின் மனதையும் சிந்தனையும் ஒருநிலைப்படுத்தவும் துணைப்புரிகின்றது.
மாணவர்கள் செய்யுளும் மொழியணிகளையும் பொருள் உணர்ந்து நடிப்பதனால் அம்மொழியணிகள்
அனைத்தும் பசுமரத்தாணி போல் மனதில் பதியும்;நல்பயன் விளையும்.

படிநிலை இரண்டு மாணவர்களின் தமிழ்மொழி பாடத்திட்டமானது பி.பி.எஸ்.ஆர் தேர்வினை நோக்கி


இருப்பதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அதிகம் பயிற்சி அளித்தல் அவசியமாகும். ஆசிரியர்கள்
மாணவர்களுக்குக் கட்டுரைப் பயிற்சினைக் கொடுக்கும் போது, அக்கட்டுரைகளை மனனம் செய்யச்
சொல்லி கட்டளையிடக் கூடாது. மாறாக மலேசிய பாடத்திட்டத்தில் உள்ள 8 வரைப்படங்களைப்
பயன்படுத்தி ஆசிரியர்கள் கட்டுரையின் கருத்துகளை எழுதச் சொல்லித்தர வேண்டும். காட்டாக, வட்ட
வரைப்படம், குமிழ் வரைப்படம், இரட்டை குமிழ் வரைப்படம், மர வரைப்படம், முழுமையிலிருந்து
பகுதி வரைப்படம், செயற்பாங்கு வரைப்படம் பன் செயற்பாங்கு வரைப்படம் மற்றும் பால
வரைப்படம். இவற்றைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுவதனால் மாணவர்களுக்குச் சுலபமாக
இருப்பதோடு, அவர்கள் சொல்ல வரும் கருத்துகள் தெளிவாக விளங்கும். கூடுதலாக, அவர்களின்
கட்டுரையில் ஒரே மாதிரியான கருத்துகள் எழுதப்படாது. ஆக, இவ்வரைப்பட வழிமுறையினை
ஆசிரியர்கள் தமிழ்மொழி பாடத்தில் கட்டுரை எழுதுவதைக் கற்பிக்கும் போது பயன்படுத்த வேண்டும்.
இவ்வழி கற்றல் கற்பித்தல் தடையின்றி நடைப்பெறும்.

இறுதியாக, தொடக்கப் பள்ளி பயிலும் சிட்டுகள் மிகவும் துடிப்புடனும் விளையாட்டுத்தனமாகவும்


இருப்பார்கள். அச்சிட்டுகளைக் கையாளுவதற்குக் கண்டிப்பினை மட்டும் கையாளாமல் அவர்களின்
கவனத்தை ஈர்க்கும் வகையில் தினமும் கற்றல் கற்பித்தலைத் சரிவரத் திட்டமிட வேண்டும்.
கனவொன்று காண்பீர் இளைஞர்களே 
காலமும் உரைத்தார் கலாமவர்கள் ! 
சிந்திக்கத் தூண்டினார் சிறார்களையும் 
சிறகடிக்கச் செய்தார் சிந்தைவானில் ! 
மாணவனின் கனவால் மாற்றம்வரும் 
மண்ணில் வாழ்வும் வளம்பெறும் ! 
மாணவன் நினைத்தால் கூடிடும்விசை 
மறுப்பவர் எண்ணமும் மாறிடும்திசை ! 
அறிவார்ந்த ஆய்வுகளை நடத்திடுவீர் 
அறிவுசார் செயல்களை செய்திடுவீர் !

என்ற பழனி குமாரின் கவிதைக்கொப்ப மாணவர்களை நாளைய தலைவராகச் செதுக்குவதற்கு


ஆசிரியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். காட்சிக் கலை, இசைக் கலை மற்றும் அசை ஆகிய மூன்று
கூறுகளும் 80% முதலாம் படிநிலை மாணவர்களின் தமிழ்மொழி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுளது.
இரண்டாம் படிநிலை மாணவர்களின் பாடத்திட்டத்திலோ 50% மட்டுமே காணப்படுகிறது. மலேசியக்
கல்வித்திட்டமானது இரண்டாம் படிநிலை மாணவர்களின் தமிழ்மொழி பாடத்திட்டத்தில் கல்வியில்
கலையின் கூறுகளை அதிகம் உட்புகுத்த வேண்டும். அக்கூறுகள் இருப்பதன் வழி தமிழ்மொழி என்றும்
அழியாமல் மாணவர்களால் ஆர்வமாக கற்கப்படும் என்பது திண்ணம். ஆசிரியர்களும்
தமிழ்மொழியினைச் சரியான கூறுகளின் அடிப்படையில் போதித்தால் மட்டுமே தமிழ்மொழி
நிலைத்திற்க சாத்தியமாகும் என்பது வெள்ளிடை மலை ஆகும்.

You might also like