You are on page 1of 2

மேற்கண்ட படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிக்கலையின் கூறுகளில்

மூன்றனைக் காட்டுகளுடன் பகுத்துக் காட்டுக.


காட்சிக் கலை என்பது, காட்சி அம்சத்துக்கு முதன்மை கொடுக்கும் கலை வடிவத்தைக்
குறிக்கும். மேற்கண்ட படம் காட்சிக்கலையைப் பயன்படுத்தி அமைந்துள்ளதால் அதிலிருந்து
அடிப்படை மூன்று கூறுகளை நாம் பார்க்கலாம். நமக்கு புலனுணர்வு, தசை வளர்ச்சி போன்ற
கூறுகளை மட்டும் மேம்படுத்தாமல் வாழ்வியல் கலைகளையும் தேசிய கல்வித் தத்துவத்திற்கு
இணங்க வளர்க்க வழிவகுக்கின்றது. இருபக்க மூளை வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றது. காட்சிக்கலை
உடல், மணம், ஆண்மீகம் போன்ற கூறுகளில் மாணவர்களைச் சிறந்து விளங்கச் செய்கின்றது.
காட்சிக்கலை நமக்கு பலவகையில் கற்பனை ஆற்றலையும் வளர்க்கிறது என்றால் மிகையில்லை.

தோற்றம், வடிவம், வண்ணம், அமைப்பு போன்றவை காட்சிக் கலையின் முக்கியக் கூறுகள்


அனைத்தும் நமது சுற்றுச்சுழலில் காணப்படும் கருக்களாகும். சுலபமாகவும் இயற்கையாகவும் பாட
வேளை இருப்பதோடு உற்சாகமாகாவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஒன்றை நான் வர்ணித்து
சொல்வதற்கு பதிலாக படங்களை பயன்படுத்தினால அது நல்ல புரிதலையும் கொடுக்கிறது. காட்சிக்
கலையானது மென்மேலும் நமது கர்ப்பணை திறனை வளர்த்து புத்தாக்க சிந்தனைக்கும் வழி
வகுக்கின்றது. காட்சிக் கலை கொண்டு ஒன்றை நாம் பார்க்கையில் அதனை பற்றிய பல
தகவலையும் நமது மூளை விரைவாக கைபற்றுகிறது.

அதைப்போன்று மேற்கண்ட படத்தில் காணப்படும் காட்சிக் கலையை பார்க்கையில் பல


வகையான கோடுகளை நம்மால் பார்க்க முடிகிறது. கோடுகள் புள்ளிகளின் ஒன்றோடொன்று
இணைந்து இயற்கை பொருட்களில் உள்ள கோடுகள் மற்றும் மனிதனால் செய்யப்பட்ட கோடுகள்
என்று இரு வகை கோடுகளை காட்டும். கோடுகள் சேர்ந்து ஒரு வடிவம், தோற்றம், தொடர்பு, வெளி,
அசைவு போன்றவற்றை குறிக்கும். மேற்கண்ட படத்தை பார்க்கையில் மலை போன்ற வடிவில்
கோடுகள் காணப்படுவதை பார்க்கலாம். இவை நெளி கோடுகளாகும். இக்கோடுகள் படத்தின் பின்
புறத்தில் இருப்பதை போல காட்சி தருகிறது.
மேலும் இந்த படத்தில் நிறைய வடிவங்களை நாம் பார்க்கலாம். வடிவங்கள் ஒரு
பரப்பளவு, உயரம், நிறை மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மேற்பரப்புகளைக் கொண்டுள்ளதையே
வடிவம் என்கிறோம். வடிவத்தில் இரண்டு வகைகள் உள்ளன அவை கான்கிரீட் வடிவங்கள் மற்றும்
மாயை வடிவங்கள் ஆகும். மேற்கண்ட படத்தின் வடிவங்கள் மாயை வடிவங்கள் தான் ஏனெனில்
ஓவியம் அல்லது ஓவியம் மூலம் சித்தரிக்கப்படும் 2D பரிமாண காட்சி படங்களை இது
காட்டுகிறது. இப்படத்தில் முக்கோணம், சதுரம், வட்டம் போன்ற வடிவங்களை அங்கு பிள்ளைகள்
தனது மணல் வீடுகளை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

மேலும் வண்ணம் ஒரு படத்தை பார்த்து நாம் இரசிக்க வழிவகுக்கும். இதன்படியே


மேற்கண்ட படம் கடற்கரை காட்சியை உணர்த்தினாலும் இதற்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறம்
மட்டுமே தீட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படம் பார்ப்பவருக்கு பல வகையில் தகவலை
தருவதை கண்கூடாக பர்க்கலாம். சூடான நிறமாகவும் கருப்பு விளங்குவதால் மேலும் வெள்ளை
நிறம் குளிர் நிறமாக இருக்கையில் இப்படத்திந் மேல் நல்ல ஈர்ப்பும் உண்டாகுகிறது. சூடான நிறம்
ஒரு துடிப்பான, தீவிரமான, நம்பிக்கையான, போர், உயிரோட்டமான விளைவை உருவாக்குகிறது
மாறாக குளிர் நிறம் குளிர், சோகமான, அமைதியான மற்றும் அமைதியான விளைவை
உருவாக்குகிறது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் தோற்றம் அதிகமாக இருப்பதை காணலாம். தோற்றம் என்பது


தொடக்க புள்ளியுடன் இறுதி புள்ளியை இணைப்பதன் விளைவாகும். மேலும், வெளிப்புற
கோடுகளால் சூழப்பட்ட ஒரு தட்டையான பகுதி என்றும் கூறலாம். தோற்றம் இரண்டு வகையாக
உள்ளது அவை வடிவியல் தோற்றம் மற்றும் கரிம தோற்றம் ஆகும். இப்படத்தில் நிறைய
வடிவியல் தோற்றம் மற்றும் கரிம தோற்றம் உள்ளது. பாறைகள் போன்ற கோணமற்ற இலவச
வடிவத்தை நாம் கரிம தோற்றத்தில் பார்க்க முடிகிறது. முக்கோணங்கள், சதுரங்கள், பிரமிடுகள்,
கோளங்கள் போன்ற கோணங்களை வடிவியல் தோற்றத்தில் பார்க்கலாம்.

இருதியாக இப்படத்தில் பல வகையாக காட்சிக் கலையை நாம் பார்க்கலாம் என்று


தெளிவாக உள்ளது. இது போன்ற காட்சிக் கலைகள் நமது மனதில் ஆழமாக பதிவதுடன் சிந்தனை
ஆற்றலையும் வளர்க்கிறது.

You might also like