You are on page 1of 4

‘அழகான மௌனம்’ நாவலில் கதைக்கருவை ஆராய்ந்து இக்கதையில் இடம்பெற்றுள்ள

கதாப்பாத்திரங்களின்வழி உணர்த்தப்படும் படிப்பினைகளைப் பகுத்தாய்ந்த்ய் 500


சொற்களுக்குள் ஆய்வுக்கட்டிரை எழுதுக.

கவிதையின் கற்பனை அழகுகளையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டு வர


முடியும் என்று உணர்த்தப்பட்ட பிறகு, தமிழ் உரைநடைப் படைப்பிலக்கியத்தில் முதலில்
தோன்றியது நாவல்தான்" என்று கூறுவார் இலக்கியத் திறனாய்வாளர் இரா.தண்டாயுதம்.
வாழ்க்கையில் ஒரு முறை ஒருவர் பெற்ற அனுபவத்தை அதே அளவிற்கு மற்றொரு முறை
அவரால் கூட பெற முடியாது. ஆனால், அந்த வாய்ப்பினை நாவல் மூலமாகப் பெற முடியும்
என்று நா.பார்த்த சாரதி(1937) என்ற புகழ்பெற்ற நாவலாசிரியர் கூறுகிறார். அதேப்போல், அந்தக்
காலத்து தோட்டப்புற வாழ்க்கையில் ஏற்பட்ட அழகம்மாளின் அனுபவத்தைச் சித்தரிக்கும்
நாவலாக ‘அழகான மௌனம்’ திகழ்கிறது.

‘அழகான மௌனம்’ எனும் நாவலானது தோட்டப்புற வாழ்க்கையைக் கருவாகக் கொண்டுள்ளது.


ஒரு தோட்டப்புற தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் தினசரி பிரச்சனைகளும், சவால்களும்
எப்படி அவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும்
வகையில் இந்நாவல் அமைந்துள்ளது என்று சொன்னால் அது வெள்ளிடைமலையே. ஏழ்மை எனும்
சாக்கில் சிக்கிக் கொண்டு, பின் அதிலிருந்து விடுபட எம்மாதிரியான சவால்களையும்
இடையூறுகளையும் எதிர்க்கொள்ள நேரிடுகிறது என்பதை துள்ளியமாக விளக்குகிறது இந்நாவல்.
ஆக, அழகம்மாள் எனும் தோட்டப்புற கூலியைக் கொண்டு இக்கதையை நகர்த்தி சென்றுள்ளார்
எழுத்தாளர் நிலாவண்ணன்.

‘அழகான மௌனம்’ எனும் நாவலில் முதன்மை கதாப்பாத்திரமான அழகம்மாள் நமக்குப் பல


படிப்பினைகளைக் கொடுக்கும் நபராகத் திகழ்கிறார். தோட்டப்புறம் எனும் அழகிய வாழ்க்கை
சூழலில் பூத்துக்கிடந்த பல வருமை பூக்கள்களில் ஒன்றான அழகம்மாள் ஒரு சிறந்த தாயாகத்
திகழ்கிறார். ஏழ்மை வாழ்க்கையோடு பழகிப்போன அழகம்மாள் எந்த நிலையிலும் தாய் என்ற
பொறுப்பைச் செய்ய தவறியதில்லை. முனியாண்டி, சுப்பரமணியம், தங்கராசு மற்றும் சரசுவதி
போன்ற நான்கு பிள்ளைகளுக்குத் தாயான அழகம்மாள் தன் பிள்ளைகளின் நலனில் அதிக
அக்கரை செழுத்துவாள். பிள்ளைகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பது, அவர்களின்
எதிர்காலத்திற்காக உழைப்பது, பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற
தாயுணர்வுமிக்க பொறுப்புகளைச் செய்தார் அழகம்மாள். தன் கணவன் குடுப்பத்தை எண்ணாமல்
இந்தியாவிற்குச் சென்று, பிறகு அங்கேயே காலமானப் பிறகும், அழகம்மாள் மனம் தளராது தன்
பிள்ளைகளுக்காக வாழ ஆரம்பித்தார். எந்தக் காரணத்திலும் தன் பிள்ளைகள் அனாதையாக
வழியற்று வாழ்ந்துவிடக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தைக் கொண்டதால் கணவனின் பிரிவை
ஏற்றுக்கொள்ள பழகினாள். இவரின் இச்செயலானது ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்ற
சிறந்த வழிகாட்டலைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. அதன்பிறகு, அழகம்மாளின் மூலம்
கல்வியின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள முடிகிறது. அழகம்மாள் ஒரு படிப்பறிவற்ற
தோட்டத் தொழிலாளியாக இருந்தாலும், கல்வியின் அருமை பெருமைகளை நன்கு புரிந்து
கொண்டவள். கல்வியின் மூலம் மட்டும்தான் தன் குடும்பத்தின் ஏழ்மை வாழ்க்கையை
மாற்றியமைத்திட முடியும்;அதுமட்டுமின்றி, தன்னைப்போல் தன் பிள்ளைகளும் கூலிகளாக
அடிமைப்பட்டுவிட கூடாது என்ற எண்ணமும் கொண்டவள். இதனால், சுப்பிரமணியை மேற்கல்வி
படிப்பதற்கு அயராது பாடுபட்டு சில இடங்களில் கடன் வாங்கினார்.

கற்கே நன்றெ கற்கே நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

என்பதற்கேற்ப அழகம்மாளுக்குக் கல்வியின் அருமை தெரிந்திருந்தனால்தான், தன் வசதிக்கும்


சக்திக்கும் மீறி உழைத்த மற்றும் கடன் வாங்கிய அத்தனை பணத்தையும் பிள்ளையின் படிப்பிற்குச்
செலவளித்தார்.

அடுத்ததாக, இந்நாவலில் அடுத்த முன்னனி கதாப்பாத்திரமான முனியாண்டியிடமிருந்து நிறைய


படிப்பினையைக் கற்றுக்கொள்ள முடிகிறது. ஓர் ஏட்டறிவு அற்றவனிடம் அயராத உழைப்பு
இருக்குமாயின், அவன் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்திட முடியும் என்ற கருத்தையை
முன்வைக்கம் அளவிற்கு முனியாண்டி திகழ்கிறான். தான் பள்ளிக்குச் செல்ல நாட்டமில்லாமல்
இருந்தாலும், தோட்ட வேலை,மாடுகளை வளர்ப்பது போன்ற வேலைகளில் முழு ஈடுபட்டினை
செழுத்தி அல்லும் பகலும் உழைத்தான் முனியாண்டி. படிப்படியாக முன்னேறி, இப்பொழுது பத்து
ஏக்கர் நிலத்தை உருவாக்கி செம்பனை மரங்கள் நடுதல்; அதில் கிடைக்கும் பழங்களை
விற்றல்,சுயமாக ‘டிராக்டர்’ வாங்குதல் போன்ற செயல்களைச் செய்து குடும்பத்தின் ஆழமரமாகத்
நிற்கிறான் முனியாண்டி. அதோடு, முனியாண்டி குடும்பத்தின் மீது அதிக அக்கரையும் பாசமும்
கொண்டவனாகத் திகழ்கிறான். கைக்குழந்தையாக சரஸ்வதி இருக்கும்பொழுது, அவளை அன்புடன்
பார்த்துக் கொள்வது, அழகம்மாள் இல்லாதபோது தன் தம்பு தங்கயைப் பார்த்து கொள்வது,
உணவுகளைப் பரிமாறுவது போன்ற கடமைகளைச் செய்து வந்தான். மேலும், தான்
படிக்காவிட்டாலும், கல்வியில் நாட்டத்துடன் இருக்கும் சுப்பிரமணியை எப்படியாவது
மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற அக்கரையில் அயராது உழைத்தான். இவனின் இப்பண்பானது,
ஒரு குடும்பத்தை மேன்மையடையச் செய்வதற்குக் குடும்பத்தின் மூத்த பிள்ளையின் பங்கு மிகவும்
அவசியமானது என்று நன்கு உணர்த்துகிறது.

அடுத்த கதாப்பாத்திரமாகப் பெருமாளிடமிருந்து ஒரு குடும்பத் தலைவன் எப்படியெல்லாம்


இருக்கக் கூடாது என்பதையும் நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. அழகம்மாளின் முதல்
கணவனான பெருமாள் சாரயத்திற்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி
நோய்வாய்பட்டுப் போனார். அதோடு மட்டுமல்லாது, நோயாளியானதால், முன்பு போல் வேலை
செய்ய முடியாமல் போனது அழகம்மாளுக்குக் குடும்பத்தை வழிநடத்த சிரமமாகிப் போனது. நோய்
முத்திப்போன பிறகும் தனது குடிப்பழக்கத்தை விடாமல் அடிமையாகிப் போனார். கூடுதலாக,
தான் இந்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று அழகம்மாளுக்கு மேலும்
தொந்தரவாகினார்.அவனின் பிடிவாத்ததினால் அழகம்மாள் பிறரிடம் கடன் வாங்கி அவரை
இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும் நிலமை ஏற்பட்டது. குடுப்பத்திற்காக எவ்வித சொத்தையும்
சேர்க்காமலும் குடுப்பத்தின் நலனைக் கருதாமலும், தனது சுயநலத்தினால் இந்தியாவிற்குப்
புறப்பட்டு, சில நாட்களில் அங்கேயே இறந்தும் போனார். இவரின் சுயநலத்தால், இவரின் குடும்பம்
பல சவால்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகினர்.

அதன்பிறகு, மாரி தண்டல் எனும் கதாப்பாத்திரத்தின் வழி, ‘அடாது செய்பவன் படாது படுவான்’
என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கோள் சொல்வது வத்தி வைப்பது, புறம் பேசுவது எப்படி
என ஓர் ஆய்வு நூலே எழுதும் அழவிற்குத் திறமையானவர் மாரி தண்டல். சங்கத்தின் பொதுக்
கூட்டத்தின்போது, காரியதரிசி கோபாலை அடுத்த காரியதரிசியாகப் பொறுப்பேற்றிவிடக் கூடாது
என்பதற்காகப் பலவாராகத் திட்டமிட்டார் மாரி தண்டல். தோட்டத்தில் இருந்து சிலருக்கு மட்டும்
இரவு விருந்திற்கு அழைப்பிதழ் கொடுத்து, வெளிநாட்டு மதுவைக்கொண்டு அவர்களைத் தன்
வசமாக்கியத்தோடு, கோபாலை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டுமென்று அவர்களின் மனதில்
நஞ்சைக் கலக்கியிருந்தார். தன்னைவிட அல்லது தன்னை எதிரப்பவனை அழித்துவிட வேண்டும்
என்ற தவறான எண்ணம் அவருக்குள் ஊடுறுவிக்கிடந்தது. அதுமட்டுமின்றி, தன்னைவிட
அழகம்மாள் முன்னேறிவிடக் கூடாது என்று பல வழியில் அவளுக்குத் தடையாக இருந்தார் மாரி
தண்டல். தான் மட்டும்தான் தோட்டத்தில் செழிப்புடன் இருக்க வேண்டும்; அழகம்மாள் போன்ற
தகுதியற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறிவிடக் கூடாது என்ற தீய எண்ணமும் பொறாமையும்
அவரை சூழ்ந்திருந்தது. இவ்வளவு தீயக்குணங்களைக் கொண்டிருந்தனால்தான், இன்று மாரி
தண்டல் படுத்த படுக்கையாகி விட்டார். இறைவன் தீங்கு செய்பவனுக்குத் தக்க நேரத்தில்
தண்டனை வழங்குவார் என்பதற்கு மாரி தண்டல் சிறந்த உதாரணம்.

தலைமையாசிரியர் முத்தண்ணன் மூலம்கூட நாம் பல படிப்பினைகளை அறிந்து கொள்ள


முடிகிறது. கஷ்டத்தில் இருப்பவர்க்குத் தக்க நேரத்தில் உதவி செய்யும் பண்பு தலைமையாசிரியரின்
இரத்தித்தில் கலந்ததாகும். புதிய முதலாளிகள் தோட்டத்தைத் துண்டு துண்டாக விற்கின்ற
நிலையில், அழகம்மாள் ஐந்து ஏக்கரை வாங்கிவிட வேண்டும் என்று தலைமையாசிரியர் அவளுக்கு
ஆலோசனை கூறினார். ஐந்து ஏக்கரை வாங்கும் அளவிற்குத் தன்னிடம் வசதியில்லாத நிலையைக்
கூறியபோது, அவளுக்கு உதவ முன்வந்தார் தலைமையாசிரியர். அதுமட்டுமின்றி, அனைவரையும்
சமநிலையாகப் பார்க்கும் நல்லெண்ணமும் தலைமையாசிரியரிடம் இருந்தது. தலையாசிரியரின்
மகனைப்போல் தன் மகனை மருத்தவர்க்குப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அழகம்மாள்
கூறும்பொழுது, அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். திறமையிருக்கும் இடத்தில் யார்
வேண்டுமானாலும் மருத்தவராகலாம்; அதேப்போல், அழகம்மாளின் மகன் சுப்பிரமணியம்
அனைத்துத் தகுதியும் கொண்டிருக்கிறான் என்பதால், அவனை மருத்துவருக்குப் படிக்க வைக்க
அழகம்மாளுக்கு வேண்டிய உதவியினைச் செய்து தந்தார் தலைமையாசிரியர். இவரின்
இச்செயலிருந்து, தலைமையாசிரியர் முத்தண்ணனைப்போல் சமுதாயுணர்வும் தூய சிந்தனையும்
உடைய மனிதராக வாழ வேண்டும் என்ற படிப்பினை நமக்கு வழங்குகிறது.

மேலும், சுப்பிரமணியம் என்ற கதாப்பத்திரத்தின் வழி, பொறுப்புணர்வுமிக்க ஒருவர் வாழ்க்கையில்


எப்பொழுதும் சிறந்து காணப்படுவார் என்ற படிப்பினையைப் புரிந்து கொள்ள
முடிகிறது.குடும்பத்தில் இரண்டவது மகனான சுப்பிரமணியம் தன் தாய் படும் சிரமங்களைக்
கருத்தில் கொண்டு கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். தான் படித்து இந்தக் குடும்பத்தை
முன்னேற்ற வேண்டுமென்று அல்லும் பகலும் படித்து சிறந்த தேர்ச்சியைப் பெற்றது, அவனின்
கல்வியின்பால் உள்ள முழு ஈடுபாட்டினையும் மற்றும் குடும்பத்தின் மீது பொறுப்புடன் இருக்கும்
பண்பையும் உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி, சுப்பிரமணியம் ஒரு இலட்சியவாதியென்றும்
குறிப்பிடலாம். சிறுவயதிலிருந்தே தான் மருத்தவராக வேண்டும் என்ற மனக்கோட்டையைக் கட்டி
வைத்திருக்கும் சுப்பிரமணியம், இந்தியாவிற்குச் சென்று மேற்கல்வியைத் தொடரினான். இன்று, ஒரு
சிறந்த மருத்தவராக மட்டுமல்லாது, கோலாலம்பூரில் ‘அழகம்மாள்’ எனும் கிளினிக் ஒன்றை
உருவாக்கும் அளவில் தன்னை முன்னேற்றப்படுத்திக் கொண்டான் சுப்பிரமணியம். அவனின்
இலட்சியமிக்க வாழ்க்கையினால்தான், தோட்டப்புற மக்களிடம் ஒரு தனி மரியாதையைப் பெற
இயன்றது. ஆக, ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதற்கொப்ப நாம் கல்வியறிவு
கொண்டிருந்தால் எங்குச் சென்றாலும், சுப்பிரமணியத்தைப் போல் அனைவராலும்
போற்றப்படுவோம்.

ஆக, மனிதன் பண்பட வாழுவதற்குப் போதிய படிப்பினைகளையும் கருத்துகளையும்


எடுத்துரைக்கும் வகையில் இந்நாவல் அமைந்துள்ளது. ‘அழகான மௌனம்’ எனும் நாவல்
மனிதனுக்குத் தேவைப்படும் படிப்பினைகளை அழகான மௌனத்தில் சித்தரித்துவிட்டது.

You might also like