You are on page 1of 33

காவிய நாயகி

சமுதாயப்பின்னனி

• மன்னர்கள், மன்னரின் பொதுக்காவலர்கள், பொதுமக்கள், புலவர்கள் போன்ற அரண்மனை


சமுகத்தினரே இந்நாடகத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.

• பொன்னி (முதன்மை கதாபாத்திரம்) – குயவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்

• பெருஞ்சேரலாதன், கரிகாலன் – மன்னர்கள் சமுதாயத்தைனர்

• சான்று – சோழ மன்னன் கரிகாலனுக்கும், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுக்கும் வெண்ணிப் பறந்தலை


என்னுமிடத்தில் நடந்த பெரும் போரில், கரிகாலனின் வாள் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்தது.
முதுகுக்கு வெளியே வந்துவிடவே சேரன் தோற்று சோழன் வெற்றி பெற்றான். தன் வெற்றியைக்
கொண்டாட அவையைக் கூட்டினான் கரிகாலன்.
• அமைச்சர் காளிங்கராயர், தளபதி, புலவர் உருந்திரங்கண்ணனார் – அரண்மனை சமுதாயத்தினர்

• சான்று – பல அரண்மனை சமுகத்தினர்கள் கரிகாலன் கூட்டிய அவையில் வந்திருந்தனர்.

• தீவட்டி, அம்மாவாசை - காவலர் சமுதாயம்

• சான்று – இருபதாம் காட்சியில், கோட்டை வாயிலில் அன்று நடக்கவிருக்கும் பொன்னியின் வழக்கைப்


பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

• பொன்னியின் தந்தை, மருதவாணர் மற்றும் அந்தணச் சிறுவன் – பொதுமக்கள் சமுதாயம்


இடப்பின்னனி

இந்நாடகத்தில் முக்கியப் பின்னனி சேர சோழ நாடு.

•சான்று – பொன்னி, சோழ நாட்டில் பிறந்து வாழ்ந்த மருதவாணரின் மகள் ஆவாள். சேரநாட்டிற்கு
அறுவடை திருநாளுக்காகப் போகும் வழியில் வீரனாக மாறுவேடமிட்ட சேரமன்னன்
பெருஞ்சேரலாதனிடம் மனதப் பறிக்கொடுக்கிறாள். (காட்சி 15-18)

வெண்ணிப் பறந்தலை போர்களம்

•சான்று – சேர மன்னன் பெருஞ்சேரலாதனுக்கும் சோழ மன்னன் கரிகாலனுக்கும் நடந்த பெரும் போரில்
கரிகாலனின் வாள் சேர மன்னனின் மார்பில் பாய்ந்து புற முதுகை துளைத்தது.
வெண்ணிப்பறந்தலை – பொன்னி பிறந்த ஊர்

•சான்று – உயிர் நீக்கும் தருவாயில் பொன்னியின் நெற்றியில் திலகமிட்டு மணைவியாக


ஏற்றுக்கொள்கிறான் சேர மன்னன். அவளின் சொந்த ஊரில் திருமணம் நடைப்பெறுகின்றது.

கரிகாலன் அரசவை

•சான்று – தன் காதலனின் மரணத்திற்குப் பிறகு அரசவைக்குச் சென்று ‘நின்னினும் நல்லவனே’ என்று
பெருஞ்சேரலாதனை போற்றிப் பாடுகையில் அரசவையினல் கோபமடைகின்றனர். அரவையினர்
கோபத்தில் அவளுக்கு தக்க தண்டனையை வேண்டினாலும், கரிகால மன்னன் தீர விசாரித்து தீர்ப்பு
வழங்க முடிவு செய்கின்றான்.
• விருந்தினர் விடுதி – பொன்னிக்குத் தண்டனை வழங்கும் வரை தங்க வைக்கப்பட்ட இடம்.

• சான்று – காளிங்கராயனும் தளபதியும் பொன்னியை விஷம் கொடுத்து கொல்வதற்கு கார்கோடனை


ஏவுகின்றனர். துறவியைக் கொல்ல வேங்கையனையும் பணிக்கின்றனர். ஆனால், கரிகாலன்
அவற்றைகளைத் தகர்த்தெரிந்துவிட்டார்.

• வேண்மாளின் அந்தப்புரம் – கரிகாலனும் வேண்மாளும் சந்திக்கும் இடம்

• சான்று - காளிங்கராயர் மற்றும் தளபதியின் கூட்டு சதித்திட்டமும் இங்குதான் நடந்தேறியது.


வேண்மாளுடன் பேசி சென்ற கரிகாலனைத் தேடி தளபதி அங்கு வந்து ஓலையை யாரும் அறியாமல்
விட்டுச் செல்கின்றான். அதனை தன் கணவருக்குவந்தது என்றெண்ணி தன் கணவன் மீது சந்தேகம்
கொள்கிறார் வேண்மாள்.
• வான மண்டலம் – முதல் காட்சி & இறுதி காட்சி

• சான்று – வான மண்டலத்தில் பொன்னி பெருஞ்சேரலாதனைத் தேடி அலையும் இடம். பொன்னி


பெருஞ்சேரலாதனுடன் இணைந்து கைகோர்த்து மேகங்களின் மேல் நடந்து செல்லும் காட்சி.
காலப்பின்னனி

• சேர சோழ மன்னர்களின் காலக் கட்டதை மையமாக்க் கொண்டு எழுதப்பட்டது.

• சான்று – வெண்ணி பறந்தலை களத்தில் பெருஞ்சேரமன்னனுக்கும் கரிகாலன் மன்னனுக்கும்


போர்.
மொழிநடை

• வாசகர்கள் விரும்பும் நடையில் எழுதுவது படைப்பாளர்களின் கடமையாகும்.

• காவிய நாயகி நாடகத்தில் 5 மொழிநடை உண்டு.


1. அடுக்கு மொழி

2. இலக்கிய நடை

3. பேச்சு நடை

4. இயற்சொல் நடை

5. நகைச்சுவை நடை
பேச்சு நடை

• சேர சோழ பாண்டியன் காலத்தில் பேசப்பட்ட எளிய மொழி, கலப்பற்ற பேச்சு மொழி நடையே
இந்நாடகத்தில் வெளிப்படுகின்றது.

• சான்று – தீவட்டி: டேய் அம்மாவாசை

அமா : ஏண்டா தீவட்டி?

தீவட்டி: இன்னிக்கு நம்ம மகாராஜாவினுடைய அவையிலே அந்தப் புலவர்


பொன்னியினுடைய வழக்கு விவாத்ததிற்கு வருதாமே, முடிவு எப்படிடா இருக்கும்?

(காட்சி 20- கோட்டை வாயில்)


இயற்சொல் நடை

• இயற்சொற்கள் என்பது எளிய சொற்களாகும்

• சான்று – “ஐயா, அதோ அந்தப் பத்து பன்னிரண்டு தென்னை மரங்களுக்கிடையே தெரிகிறதே,


அதுதான் என் தங்கையின் வீடு”

• தென்னை மரங்கள், வீடு போன்ற சொற்கள் கல்வியறிவு இல்லாதவர்களுக்கும் புரியும்


வண்ணம் உள்ளது.
இலக்கிய நடை

• செய்யுள், தொடர், அடிகள் போன்றவற்றை எதுகை, மோனை போன்ற இலக்கிய கூறுகளுடன்


இணைத்து படைப்பதே இலக்கிய நடையாகும்.

• புலவர்கள், மன்னர்கள், அரசர்கள் போன்றவர்களின் உரையாடல் இலக்கிய நடையிலேயே இருக்கும்.

• “ஓ! சேரர், சேரலர், கேரளர், உதியர், பொறையர், குடவர், குட்டுவர், ஆதர், வானவர், பூழியரெனக் குடி
பெயர் கொண்டு வடக்கு திசை பூழி, வான்கீழ் தென்காசி, குடக்கே கோழிக்கோடும் கொண்டு
கடற்கரையின் ஓரமே தெற்காக உள்ள பதினென் காகத்தையும் ஆளுகின்ற அரசராகிய
பெருஞ்சேரலாதரின் மெய்க்காவல் வீரனா நீ?” – பொன்னி (காட்சி - 33)
அடுக்குமொழி நடை

• சந்தம், ஒரே ஓசை கொண்ட சொற்கள் அடுக்கி வருவது அடுக்குமொழி நடை

• சான்று :-

• “அகிலம் போற்றும் ஆதித்த குலத்தில் உதித்த அரசர் பெருமகன் இமயத்தில் புலிக்தகொடி


பொறித்த ஏற்றமிகு கொற்றவர்”.

• “ஓ! சேரர், சேரலர், கேரளர், உதியர், பொறையர், குடவர், குட்டுவர், ஆதர், வானவர்”.
நகைச்சுவை நடை

• கேலிக்கையாகவும் யாரையும் குறிபிட்டு சாடாமலும் இருப்பது நகைச்சுவை நடை.

• சான்று :-

• தீவட்டி : டேய்! டேய்! யாரு நடுநிலை வகிச்சாலும் நம்ப தலை விதி நம்ம ரெண்டுபேரும் நடு
நிலைமை வகிக்க முடியாது. நீ அந்த ஓரந்தான் நிக்கனும். நான் இந்த ஓரந்தான் நிக்கனும்.
அதனால மரியாதையாய் போய் நில்லு.
கொடுத்த
வாக்கைக் தமிழ் பற்று
காப்பாற்றுதல்
உண்மையை நிலைநாட்டுதல்

• பொன்னி தன் மன்னவன் மீதுள்ள மாசு நீங்க, அவையினர் பலவகையாகச் சாடிப் பேசினாலும்
தன் நியாயத்தைத் நிலைநாட்டுவதில் உறுதியுடனும் துணிவுடனும் போராடினாள்.

• சான்று :-

• ஏ! மன்னனே! புகழை விரும்பி வெற்றி பெற்ற உன்னைவிட மானங்காத்து மறைந்த சேரர்


நல்லவரல்லவா? ( காட்சி : 2)
தீர ஆரய்ந்து முடிவெடுத்தல்

• முதல் நாள் தொடங்கி, பொன்னிக்குத் தண்டனை வழங்குமாறு அவையினர் அனைவரும்


கூறியபோதும், தீர விசாரிக்க வேண்டும் என்ற நோக்கில் வழக்கை ஒத்தி வைக்கிறார் கரிகாலன்.

• அதோடு, உண்மையை அறிய துறவியாக மாறுவேடம் பூண்டு, பொன்னியைச் சந்திக்கிறார் கரிகாலன்.

• சான்று :-

• கரிகாலன் : அப்படியா! சரி மாமா. அடுத்த விசாரணைக்குள் பொன்னியைப் பற்றித் தீர


விசாரித்தறிவோம், பின்பு அவள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கையைப் பற்றி முடிவு செய்வோம்.
(காட்சி : 4)
வரம்பு மீறாக் காதல்

• சேர மன்னனுக்கும் குயவர் குலத்தில் பிறந்த சோழ நாட்டு பொன்னிக்கும் காதல் மலர்ந்தது.
பொன்னியின் மீது கொண்ட காதலினால் பெருஞ்சேரலாதன் இறக்கும் தருவாயில் பொன்னியைத் தன்
மனைவியாக்கிக் கொண்டார். அதேப்போல், மரணித்த தன் கணவனுக்காக நியாயம் கேட்டு சோழ
மன்னனிடம் போராடுகின்றாள் பொன்னி. இறுதியில் வானுலகில் தன் கணவனுடன் இணைந்தால்
பொன்னி.

• சான்று :-

• “இறுதிவரை இது நீடிக்கும். நான் தங்கள் சம்மத்துடனேயே அவளை மணக்க விரும்புகிறேன். சற்று
அவகாசம் தேவை” – பெருஞ்சேரலாதன் (காட்சி – 18)
பெண்களை மதித்தல்

• ஒரு விதவை பெண்ணான பொன்னியை ஒதுக்காமல், கரிகாலச் சோழன் அவளின்


குற்றசாட்டை ஆராய்ந்து தக்க நீதி வழங்கினார். பெண்களுக்கும் பேச்சுரிமை கரிகாலச்
சோழனின் அவையில் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், தன் கணவனைத்
தேர்ந்தெடுக்கும் உரிமையும் பொன்னிக்கு வழங்கப்பட்டது.

• மன்னனாக இருந்தாலும், தன் மணைவியின் ஆலோசனைகளைக் கேட்டு அவற்றை ஆராய்ந்து


அதன் படி நடந்தார் கரிகாலன் சோழன்.
நாட்டுப்பற்று

• தன் நாட்டின் மீதுள்ள பற்றினால் எதிர் நாட்டைச் சேர்ந்த தன் காதலனையும் அவனைக்
காதலித்ததற்காக மனம் வருந்துகின்றாள்.

காட்சி : 32

பொன்னி: அப்பா! நம் தாய்நாட்டைக் கைப்பற்ற வந்திருக்கும் சேரலாதரைச் சேர்ந்த


வீரரை நான் காதலித்ததற்காக இப்பொழுது, மிகவும் வேதனைப்படுகிறேன்.
தன்மானத்துடன் வாழுதல்

• ‘புறப்புண் ஏற்பட்டும் உயிர் வாழ்கிறான் சேரன்’ என்ற சொல்லுக்கு ஆளாகக் கூடாது


என்றெண்ணி உயிர் நீத்தான் பெருஞ்சேரலாதன். தன் தன்மானத்தை அவர் தன் உயிரை விட
மேலானதாக க்ருதுகின்றார்.

• சான்று :-

• பெருஞ்சேரலாதன் :- உனக்காக நான் வாழ்ந்தாலும், பெருஞ்சேரலாதன் புறப்புண்பட்டும் உயிர்


வாழ்ந்தான் என்று உலகம் என்னை பழித்துப் பேசுமே. (காட்சி : 37)
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல்

• ஒரு ஆண்டிற்குள் பொன்னியைத் திருமண செய்துக்கொள்வதாக வாக்களித்த பெருஞ்சேரலாதன்,


மருதவாண்ரின் முன்னிலையின் அவளின் நெற்றியில் திலகமிட்டு தன் மனைவுயாக ஏற்றுக்கொண்டார்.
பிறகே உயிர் துறக்கிறான்.

• சான்று :-

• பெருஞ்சேரலாதன் :- உன்னை நான் மணமேடையில் மனைவியாகக் கைப்பிடிக்காவிட்டாலும் இந்த


களத்தில் உன் தந்தையின் முன்னிலையில் என் வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டு உன்
நெற்றியில் திலகமிட்டு விடுகிறேன் வா. (காட்சி : 37)
தமிழ்ப் பற்று

• சிற்றூரில் நடைப்பெறும் அறுவடைத் திருநாளைக் கண்டு களிக்கச் செல்லும் வழியில் மக்கள்


பேசுகின்ற மொழியில் மொழிக்கலப்பு இருப்பதை கண்டு அமைச்சரோடு உரையாடுகிறான்.

• சான்று :-

• “அமைச்சரே! அங்கு கும்மியடித்த பெண்கள் பாடிய பாடலில் வடச்சொற்கள் ஏராளமாகக்


கலந்திருப்பதை கவனித்தீர்களா?” – பெருஞ்சேரலாதன் (காட்சி – 12)
வீரத்துடன் செயல்படுதல்

• பொன்னி ஒரு குயவப் பெண்ணாக இருந்தாலும் வீரத்துடன் செயல்பட்டாள்.

• சான்று :-

• “நான் யார்? நான் யார்? நீங்கள் எந்த மண்ணில் வந்து நின்றுகொண்டு இறுமாப்போடு
பேசுகின்றீர்களோ, அந்த மண்ணுக்குச் சொந்தக்காரகளில் நானும் ஒருத்தி. மன்னர் மக்களைக்
காப்பார். மக்கள் நாட்டைக் காக்க வேண்டும் என்னும் பண்பு கற்றவள்” – பொன்னி (காட்சி -
34)
வினை விதைத்தவன் வினையறுப்பான்

• பல சூழ்ச்சிகளைச் செய்து, சோழ மன்னன் கரிகாலனை வீழ்த்த எண்ணிய களிங்கராயருக்கும்


தளபதியாருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

• சான்று :-

• கரிகாலன் :- தாங்கள் நாட்டிற்குச் செய்த பெரும் துரோகத்தையும் புரிந்து கொண்டோம்.


எனவே, பால் வார்த்தவனையே, தீண்ட நினைத்த பாம்புக்கு ஒப்பான காளிங்கராயரையும்
தளபதியாரையும் விசாரித்து, தண்டனை வழங்குமாறு ஆணையிடுகிறேன். (காட்சி : 41)
கதைப்பின்னல்
தொடக்கம்

• பொன்னியின் அறிமுகத்தில் தொடங்குகின்றது,

• வான மண்டலத்தில் உலாவும் அவளை போற்றிப் பாடி நாடகம் தொடங்கிகின்றது. (காட்சி 1)

• காட்சி 2-இல், சோழ மன்னன் கரிகாலனுக்குக்கும், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுக்கும் வெண்ணி


பறந்தலை என்னுமிடத்தில் நடந்த பெரும் போரில், கரிகாலனின் வாள் சேரனின் மார்பில் பாய்ந்து,
முதுகுக்கு வெலியே வந்துவிடவே சேரன் தோற்று சோழன் வெற்றிப் பெற்ற விழாவைக்
கொண்டாடும் சனபயில் அறிமுகமாகின்றாள் பொண்ணி. (காட்சி -2)
வளர்ச்சி

• மார்போடு நில்லாமல் முதுகிலும் கரிகாலர் வாளைப் பாய்ச்சியது சரியா என்று கவிதியின் மூலம்
கரிகாலச் சோழனிடம் கேள்வி எழுப்புகின்றாள் பொன்னி. (காட்சி – 2)

• அவளின் கவிதையை கேட்டு சபையே அதிர்ச்சிக்குள்ளானது.

• கரிகாலனுக்கு மாசு கற்பிக்கும் வகையில் பாடிய பொன்னிக்கு தண்டனை வழங்க காளிங்கராயர்


முற்பட்டார். மன்ன்னைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்பி சிம்மாசனத்தைக்
கைப்பற்றவே அவனது திட்டம். மன்னரே பொன்னியை காளிங்கராயனின் பொறுப்பில்
விருந்தினர் விடிதியில் தங்கவைக்க ஆனையிடுகின்றார் (காட்சி -2)
சிக்கல்

• கரிகாலன் வேண்மாள் தம்பதியினருக்கு இடையே நிகழும் சிக்கல்

• பொன்னியைப் பற்றி உரையாடிவிட்டு சென்றதும், காளிங்கராயர் திட்ட வந்த தளபதி


கரிகாலனுக்கு பொன்னி எழுதியதைப் போலவே ஓலை ஒன்றை வேண்மாளிடம்
ஒப்படைக்கின்றான்.

• ஓலையைப் பார்த்த வேண்மாள் கரிகாலனுக்கும் பொன்னிக்கும் தொடர்பு இருப்பதாக


சந்தேகப்பட்டு அழுகிறாள். இரும்பிடர்த்தலையரும் காரிகாலனைச் சந்தேகப்படுகின்றார்.
உச்சம்

• காளிங்கராயனுடைய சூழ்ச்சியும் தளபதியின் சூழ்ச்சியும் மன்னனுக்குத் தெரியவருகின்றது.

• காளிங்கராயரின் பேராசையில் சோழ நாட்டு இரகசியங்களை பாண்டிய மன்னனுக்குச் சொல்ல


முயன்றது கருகாலனுக்குத் தெரிய வருகிறது.
திருப்புமுனை

• கரிகாலன் துறவி வேடத்தில் வந்தது கரிகாலன் என்பதை அறிந்த அமைச்சர்கள்,


இரும்பிடர்த்தலையார், காலிங்கராயர், உருத்திரங்கன்ணானர், கழாத்தலையார்,
முடத்தாமக்கண்ணியார், அமைச்சர்கள், பெருங்குடி மக்கள் முதலிய அனைவரும் திகைத்தனர்.
முடிவு

• நாடகத்தின் இறுதியில், கரிகாலன் நல்லவர் என்பதை உணர்ந்தாள் பொன்னி.

• பொன்னி குற்றமற்றவள் என்பதையும் அவள் உண்மையில் யார் என்பதையும் சமபையில்


சொல்லி தீர்ப்புக் கூறி அவளை விடுவித்தார்.

• பொன்னி பொண்ணிப்பறந்தலையை நோக்கி நடக்கிறாள்.

• இறுதியில் அவள் பெருஞ்சேரலாதனுடன் வானுலகின் இணைந்தாள்.


நன்றி.

You might also like