You are on page 1of 16

HBTL2103

TAKE HOME EXAMINATION

SEPTEMBER/ 2020

HBTL2103

KESUSASTERAAN TAMIL I

NO. MATRIKULASI : 801116146096001


NO. KAD PENGNEALAN : 801116146096
HBTL2103
Bahagian A
கேள்வி 2 A

உரைநடை என்பது உலக இலக்கிய வரலாறுகளை காலத்தால்

பிற்பட்டதாகும். தமிழில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்திப்

பேசுவதோ அல்லது எழுதுவதோ மணிப்பிரவா நடை எனப்படும்.

எடுத்துக்காட்டாக தமிழில் உள்ள வார்த்தையான பல்கலைக்கழகம்

என்பதை வலிந்து வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி

சர்வகலாசாலை என மாற்றியமைக்கப்படுகிறது. சர்வகலாசாலை என்ற

வார்த்தையில் சர்வம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அனைத்தும்

என்றும் கலா என்ற வடமொழிச் சொல்லுக்கு கலை என்றும்

பொருள்படுகிறது. மணிபிரவாளநடையில் தமிழ்மொழியை விட

சமஸ்கிருத மொழியின் தாக்கம் அதிகளவில் இருந்தது என்பதே

உண்மை. அக்காலத்திய மணிப்பிரவாள நடைக்கு எடுத்துக்காட்டாக

"உபதேசரத்னமாலை" என்னும் நூலிலிருந்து ஒர் பகுதியைக் காணலாம்.

‘மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய

ப்ரசாதத்தாலே, க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப்

பின்பற்றாருமறிந்து உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து

ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக

ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார்’.

வடமொழி ஒலிகளை குறிக்க கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

தமிழ் மணிப்பிரவாள நடையில் தமிழ் எழுத்துக்களும், கிரந்த

எழுத்துக்களும் கலந்து எழுத்தப்பட்டன.

ன்புராணம், சத்திய சிந்தாமணி போன்றவை மணிபிரவாள எழுந்த

நூல்களாகும். சமணர் காலத்தில் தோற்றம் பெற்ற

மணிபிரவாளநடையைப் பிற்காலத்தில் வைணவர்கள் வளர்த்தனர்.

1
HBTL2103
நாலாயிரப் பிரபந்தத்திற்கு எழுதியுள்ள வியாக்கியானங்கள் சான்றாகத்

திகழ்கின்றன. மணிப்பிரவாள நடையில் வைணவ சமய நூல்களுக்கு

அமைந்த உரைநடை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன

அவை ஆழ்வார்களின் பாடல்களுக்கு அமைத்த வியாக்கியானங்கள்

மற்றொன்று, வைணவப் பெரியார்களின் வரலாற்றைக் கூறும்

நூல்களாகும். வைணவர்கள் திருவாய்மொழி வியாக்கியானங்களைப்

‘பகவத் விஷயம்’ என்று போற்றி வருகின்றனர்.

இவ்வியாக்கியானங்களில் ஆறாயிரப் படியே முதலில்

எழுந்ததொன்றாகும்.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இயற்றிய

திருவாய்மொழி நூலிலுள்ள பாடல்களுக்கு ஐந்து பேர் எழுதிய

பழமையான ஈடு உரைகள் உள்ளன. திருவாய்மொழி ஈடு உரை

மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. திருவாய்மொழி வேதத்தின்

சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை

வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன. சோழப் பேரரசுக்

காலத்திலும் அதன் பின்னரும், இன்றைய கேரளத்தையும்

உள்ளடக்கியிருந்த தமிழ் நாட்டில் ஒருசில வட்டாரங்களில்

சமஸ்கிருதச் செல்வாக்கு மிகுந்திருந்தது. சமஸ்கிருத மொழி

உயர்வானதாகவும், இறைவனுடைய மொழியாகவும் கற்பிக்கப்பட்ட

காலம் அது. தமிழில் சமஸ்கிருதத்தைக் கலந்து எழுதுவது உயர்

நடையாக அவ்வட்டாரங்களில் எண்ணப்பட்டது. ஆழ்வார்களுக்குப்

பின்னர், அவர்களுடைய நூல்களுக்கு உரை எழுதிய இராமானுஜருடைய

ஆக்கங்கள் மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருந்தன.

சோழர்காலத்தில் சமஸ்கிருதத்தின் வழி புகுந்த சமயக்

2
HBTL2103
கருத்துருக்களும், தமிழில் எழுந்த சமஸ்கிருதத் தழுவல் நூல்களும்

இத்தகைய போக்குக்கு வாய்ப்பாக அமைந்தன.

எடுத்துக்காட்டு

அக்காலத்திய மணிப்பிரவாள நடைக்கு எடுத்துக்காட்டாக

"உபதேசரத்னமாலை" என்னும் நூலிலிருந்து ஒர் பகுதியைக் காணலாம்.

மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரசாதத்தாலே,

க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்பற்றாருமறிந்து

உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று

ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார்.

சமஸ்கிருத ஒலிகளை குறிக்க கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

தமிழ் மணிப்பிரவாள நடையில் தமிழ் எழுத்துக்களும், கிரந்த

எழுத்துக்களும் கலந்து எழுத்தப்பட்டன.

பன்னிரண்டாவது நூற்றாண்டின் முற்பகுதியில்தான் மணிபிரவாள நடை

முழுவடிவம் பெற்றது. வைணவர்கள் அதிகமாக மணிபிரவாள நடையில்

நுல்கள் செய்தனர்.

2B
தனிதமிழ் ஆர்வலர்கள் தமிழ்மொழியில் வடமொழியின் ஆதிக்கத்தைக்

குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். தமிழ் தனித்தியங்க

முடியும் என்று முதன்முதலில் கூறியவர் திராவிட மொழியியல்

தந்தை கால்டுவெல் ஆவர். தமிழ் மொழி தனி செம்மொழியாய்

நிலைபெற்று விளங்கவும் வளம் பேற்று வளரவும் முடியும் என்று

கூறியுள்ளார். தனிதமிழ் பற்றி கால்டுவெல் கூறியபோதிலும் தனிதமிழ்

கொள்கையை நடை முறைப்படுத்தியவர் மறைமலையடிகள் ஆவார்.

மறைமலையடிகள் 1961 ஆம் ஆண்டு முதல் பிறமொழி கலக்காத

தனித் தமிழில் பேசவும் எழுதவும் தொடங்கினார். தமிழில் அவர்

3
HBTL2103
எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் செவ்வையாக

உன்னி கவனித்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் முடியும்

என்று ஆணித்தனமாக கூறலாம். மறைமலையடிகளின் உரைநடையால்

தனித் தமிழ் மரபும் வளரலாயிற்று. தனித்தமிழில் எழுத முயன்றதன்

விளைவாகப்புதுச் சொல்லாக்கங்களைப் தமிழ் மொழியை வளம்

பெறச்செய்தார்.

அறிஞர்கள் தனிதமிழ்க் கொள்கையை வலியுறுத்தி ஆங்காங்கே

சொற்பொழிவுகளும் நூல்களும் செய்தவண்ணமாயிருத்தனர். தமிழவேள்

உமா மகேசுரனார், திரு.வி.க., சோம சுந்தர பாரதியார்,

கா.சுப்பிரமணியனார், பண்டிதமணி கதிரேசனார், மு.வ., சுப. மாணிக்கனார்

போன்றோர் செந்தமிழ் நடையில் எழுதத் தொடங்கினர். ‘தமிழ்ப்

பொழில்’ செந்தமிழ்ச் செல்வி, ‘ செந்தமிழ்’ போன்ற இதழ்கள்

செந்தமிழில் வெளிவர தொடங்கியது.

மேலும், மொழிஞாயிறு தேவ நேயப்பாவாணர் மற்றும்

பெருஞ்சித்திரனார் இருவரும் தனிதமிழில் எழுதுவதைத் ‘ தனித் தமிழ்

இயக்கமாக’ வளர்த்தனர். பெருஞ்சித்திரனார் தமிழுக்கென்றே

‘தென்மொழி’ என்னும் இதழை நடத்துகின்றார். தென்மொழி ஓர்

இயக்கமாகவே இயங்குகிறது.

கேள்வி 3
உரைநடையின் பொருளில் புதுமை கண்டவர் திரு.வி.க. அவர்

வழங்கிய நடை, உரைநடையின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் ஒரு

சிறந்த இடத்தைப் பெற்றதாகும். நீண்ட தொடர்களுடன், குறியீடுகள்

இன்றி, ஏற்ற இறக்கங்கள் இன்றி உணர்ச்சி வெளிப்பாட்டில் கவனம்

செலுத்தாது, நீண்ட பத்திகளுடன் வழங்கியது பத்தொன்பதாம்

நூற்றாண்டின் உரைநடை. அதிலிருந்து மாறுபட்டுச் சிறுசிறு

தொடர்களையும், பல்வேறு உணர்ச்சிகளையும் முறையாக

4
HBTL2103
வெளிப்படுத்தும் குறியீடுகளுடன் துள்ளல் அமைப்பில், உள்ளத்துக்

கருத்துகளுக்கேற்பச் சொற்களைப் புகுத்திப் புதியதோர் அழகுநடையை

உருவாக்கியவர்களுள் திரு.வி.க. தலைசிறந்தவராவார்.

இளமையில் அவரிடம் கால்கொண்ட நடை வேறு. சங்க இலக்கியப்

பயிற்சிக்குப் பிறகு அமைந்த கடிய நடைவேறு, பத்திரிகைத் துறையில்

நுழைந்த பிறகு அமைந்த இனிய நடைவேறு. இறுதியில் அமைந்த

பத்திரிகைக்காக மாற்றப்பட்ட நடையே அவரது உரைநடை

வடிவமாயிற்று என்று அவரே தெளிவு செய்தல் காண்கிறோம். அவர்

கொண்ட நடை பற்றிய விமர்சனத்தை அவர் கூற்றின் வாயிலாகவே

காண்போம்.

“யான் தமிழ்ப் போதகாசிரியனாயிருந்தவன். இப்பொழுது தமிழ்ப்

பத்திரிகையாசிரியனானேன். தேசபக்தனுக்கென்று ஒரு தனிநடை

கொண்டேன். சிறுசிறு வாக்கியங்கள் அமைக்கலானேன். எளிமையில்

கருத்துகள் விளக்கும் முறையைப் பற்றினேன். அந்நடையை நாடோறும்

எழுதி எழுதிப் பண்பட்டமையால் அதுவே எனக்கு இயற்கையாகியது.

பழைய தொடர் மொழிகளும் கோப்பு மொழிகளும் என்னுள்ளேயே

ஒடுங்கின. சமயம் நேர்ந்துழிச் சிலவேளையில் அவை தலைகாட்டும்.”

எவ்வித நடையைக் கைக்கொண்டார் என்பது பற்றி அவர் தரும் ஒரு

குறிப்பையும் இங்குக் காணல் தகும்.

“செவ்விய தமிழ்நடை, தமிழ்நாட்டிலுள்ள பல்லோர்க்கு இது போழ்து

பயன்படாதென்று கருதித் தேசபக்தனுக்கெனச் சிறப்பாக ஒருவகை

உரைநடையைக் கொண்டுள்ளேன். இதுகாலைத் தமிழ்நாட்டு

வழக்கிலுள்ள பிற மொழிக்குறியீடுகளையும் இக்கால வழக்குச்

சொற்களையும் ஆன்றோராட்சி பெறாத சில முறைகளையும் பண்டைத்

5
HBTL2103
தமிழ் மக்கள் கோலிய வரம்பிற்குப் பெரிதும் முரணாதவாறு ஆண்டு

வருகின்றேன்” என்ற கூற்றுகளிலேயே அவர்தம் செவ்வியநடை

புலனாகிறதன்றோ? உருவாகும் உரைநடைகளின் நடையில் மாற்றம்

காண்பது எதனால்? இவ்வினாவுக்குப் பலரும் பல்வேறுவகைக்

காரணங்களைக் காட்டியுள்ளனர். திரு.வி.க. அதனை இயற்கை என்னும்

ஒரே வகை விதைகளினின்றும் தோன்றும் மரங்கள், உருவ வேறுபாடு

கொண்டு வளர்வது போல - மாறுபடுவது என்றும், மொழிநடை அவரவர்

இயற்கைக் கேற்ற வண்ணம் அமையும் என்றும் கூறுகின்றார். உள்ளப்

பண்போடு பண்பை உருவாக்கிய சூழல், வாழ்ந்த சூழல், கற்ற நூல்,

பழகிய பழக்கம் இவற்றைப் புலப்படுத்துவது போல அது காணப்பெறும்;

ஒவ்வொருவரின் கையெழுத்தும் மாறுதல் போல அதுவும்

ஒவ்வொருவரிடமும் மாற்றம் கொள்ளும்" என்கிறார், டாக்டர்

மு.வரதராசனார்.

திரு.வி.க. பழகிய துறைகள் பல, பயின்ற துறைகள் பல, நுழைந்த

துறைகள் பல, தேடிய துறைகள் பல. எனவே, அவரிடம் பல்வேறுபட்ட

துறைமொழியறிவும், கலைமொழியறிவும் தமிழ்மொழியறிவோடு

சங்கமமாயின. ஆதலின் அவருடைய நடை இவற்றையெல்லாம்

வெளிப்படுத்தும் சிறந்த நடையாகக் காணப்படுகிறது எனலாம்.

6
HBTL2103

BAHAGIAN B
கேள்வி 1

இலக்கியம் என்றால் இலக்கு+இயம் எனப் பிரிக்கலாம். இலக்கு என்றால்

குறிப்பிட்ட இலசட்சியத்தைக் கொண்டது.இயம் என்றால் இயம்புதல்

என்று பொருள்படும். ஆக, இலக்கியம் என்றால் குறிப்பிட்ட

கொள்கையை எடுத்துக் கூறுவதாகும். இலக்கியத்திற்கு இன்றியமையாத

உறுப்புகளாகக் கற்பனை, உணர்ச்சி,கருத்து, வடிவம் ஆகியவை

விளங்குகின்றது.

மக்கள் தம் கருத்துகளைப் பிறருக்கு எடுத்துக் கூறி, பிற

எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அறிந்து கொள்வதில் விருப்பம்

கொள்கின்றனர்; கண்டு இன்புறுகின்றனர். அவற்றைப் பிறருக்குக் கூறி

படிப்பினையை உணர்த்துகின்றனர். இதனால்தான் சிலப்பதிகாரம்,

சிந்தாமணி, மணிமேகலை போன்ற காப்பியங்கள் பிறந்தன.

கருத்து, கருப்பொருள், பாடுபொருள் ஆகியவை ஒரு பொருள் குரிப்பவை.

இலக்கியப் படைப்பாளர்கள் தங்களின் பட்டறிவையும்

உணர்ந்தவற்றையும் பிறரோடு பகிர்வதற்கும் படிப்பனை

உணர்த்துவதற்கும் விரும்புகின்றனர். அந்தப் படிப்பினையே கருத்து

ஆகும். எந்த வடிவில் இலக்கியமானாலும், அதனுள் கருத்து அவசியம்

இருத்தல் வேண்டும்; மானிட சமுதாயத்தைச் செம்மைப் படுத்தி

அறவழி வாழ துணைபுரியும்.

பகுத்தறிவைக் கொண்டு , காரணம் காணும் அறிவு கொண்டு

கலைகளைப் படைத்தல் இயலாது என்கிறார் கீ ட்ஸ். எண்ணி எண்ணிச்

சிந்தனையில் வாழ்வதைவிட, உணர்ந்து உணர்ச்சியில் வாழும் வாழ்வே

வேண்டும் என அவர் ஏங்கியதற்குக் காரணம் உள்ளம் விரும்புமாறு

அமையும் கற்பனை அவரிடம் சிறந்திருந்தமையே ஆகும். ரிச்சர்ட்ஸ்

7
HBTL2103
என்பவர் கற்பனை உணர்த்தும் சொல்லுக்கு அறுவகை பொருள்

தருகின்றார்.

· மனக்கண்ணில் பொருள் காணுதல்

· உவமை உருவகம் முதலியவற்றால் பொருû களை உருவாக்கிக்

காணுதல்

· பிறருடைய மனநிலையை~ இன்பத்துன்பங்களை உணர்தல்

· வெவ்வேறாக உள்ள பொருள்களை இயைத்துக் காணுதல்.

· வாழ்க்கையின் அனுபவத்தை வெவ்வேறுவகையில் அமைத்துக்

காணுதல்.

· பொருள்களை உள்ளவாறே உணரும்போது, மாறுபட்ட

பொருள்களை நிறுத்தக் காணல். உள்ளவாறு அமையும் கற்பனைக்குப்

பொருள்களை ஒழுங்கு படுத்தலும் அழகுற அமைத்தலும் தேவை;

உள்ளம் விழையுமாறு அமையும் கற்பனைக்கோ, உள்ளவற்றின்

சிலவற்றைக் கூட்டலும் கழித்தலும் தேவையாகின்றன.

இலக்கியத்தைப் பாடும் புலவர்கள் உள்ளதை உள்ளவாறே பாடுவது

இல்லை. உள்ளதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியும் பாடுகிறார்கள்.

அதனால்தான் இலக்கியம் என்பது கலை ஆகிறது. உள்ளம் விரும்புமாறு

அமையும் கற்பனைக்கும் வாழ்க்கையே அடிப்படையாகிறது.

வாழ்க்கையின் அனுபவமே அத்தகைய கற்பனையைத் தூண்டுகிறது.

சேக்கிழார் பெரியபுராணத்தில் சிறந்த கற்பனை நயங்களை அமைத்துப்

படைத்துள்ளார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

உணர்ச்சிகள் இல்லாமல் இலக்கியம் இல்லை. உணர்ச்சிகளின்

காரணங்களும் அவற்றை வெளிபடுத்தும் முறையும் மனிதருக்கு

மனிதர் வேறுபட்டு இருந்தாலும் உணர்ச்சிகள் மட்டும் ஒரே

தன்மையாக தான் இருக்கின்றது எனலாம். உணர்ச்சிகள் வெவ்வேறு

8
HBTL2103
காரணங்களால் வெவ்வேறு சுழலில் பிறக்கும். ஆனால், அந்த

உணர்ச்சிகள் எல்லாக் காலத்திற்கும் பொதுவான உணர்ச்சிகளாகும்.

மனிதனின் படைப்புகளில் அவனது எல்லா உணர்ச்சிகளும்

வெளிப்படுவது இயல்பாகும். இலக்கியத்தில் பல்வகையான

உணர்ச்சிகளை காணலாம். ஐந்து வகையான உணர்ச்சிகள் இலக்கியம்

நொடிது வாழும் என்கிறார் வின்செஸ்டர்

· நியாயமான, தக்க உணர்ச்சி, நல்ல காரணத்திற்காக நல்ல

வகையில் அமைவது.

· ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை

ஒட்டியது; ஆழம் உடையது.

· தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உனர்ச்சி; பொருந்ததாதும்

வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து கொண்டு

வரப்படாமல் இயல்பாக அமைவது.

· வாழ்க்கையில் பல கோணங்களை விளக்குமாறு பலவகை

உணர்ச்சிகள் கூடி அமைதல்

· மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள்

காரணமாகவோ, புலனின்பம் காரணமாகவோ அமையும்

உணர்ச்சிகளைவிட உயர்வுடையதாய்.

பல்வகை உணர்ச்சிகள் - மகிழ்ச்சி, வேடிக்கை, கவலையற்ற

மனநிறைவு முதலியவற்றை விட அச்சம் துயரம், கவலை போன்ற

உணர்ச்சிகளையுடைய இலக்கியம் மக்களால் பெரிதும்

போற்றப்படுகின்றது.

ஷேக்ஸ்பியர் இன்பியல் நாடகத்தைவிட துன்பியல் நாடகங்கள்

போற்றப்படுகின்றது என்கிறார். கலைஞர்களின் உள்ளம் அச்சம், துயரம்

முதலிய உணர்ச்சிகளால் பெரிதும் தாக்குண்டு ஆழ்ந்து உணரும் நிலை

9
HBTL2103
எய்துகிறது. அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும் உடையவனாக

அமைகின்றன. வின்செஸ்டர் - பாட்டில் உணர்ச்சியை அமைக்கும் புலவர்

பாட்டின் வடிவத்திலும் அமைக்கலாம்; பாட்டின் பொருளிலும்

அமைக்கலாம். பாட்டில் சொற்பபொருளிலும் கருத்திலும் உணர்ச்சியை

அமைத்தலே, அதன் வடிவத்தில் அமைத்தலைவிட சிறந்தது என்கிறார்.

உணர்ச்சி பாட்டின் வடிவத்திலும் பொருளிலும் ஒருங்கே புலப்படுமாறு

அமைந்த பாட்டே சிறந்தது.

ஒருவரின் உள்ளத்தின் துயரம் அவருடைய கண்ண ீரில் புலப்பட, அந்தக்

கண்ண ீரைக் கண்ட மற்றொருவரின் உள்ளத்தைத் தாக்குவது போல

கலைஞரின் உணர்ச்சி அனுபவம் அவர் படைத்த கலையின் வடிவத்தில்

புலப்பட, அதை கற்பவரின் உள்ளத்திலும் அதே அனுபவம்

விளங்குகிறது. ஆகவே, அனுபவம் ஓர் உள்ளத்திலிருந்து மற்றோர்

உள்ளத்திற்குப் பரவுவதற்குக் கலையின் வடிவம் பயன்படுகிறது.

கேள்வி 2

தரமான திறனாய்வு புதிய இலக்கியங்கள் படைப்பவர்களுக்கு

தூண்டுதலாக விளங்குகின்றது. திறனாய்வுக் கலை ஒரு பக்கம்

இலக்கியத்தை அனுபவிக்கத் துணை செய்வதுடன் மறுபக்கம் அந்த

இலக்கியத்துறை சரியான பாதையில் அடியெடுத்து வைக்கவும் வழி

வகுத்துக் கொடுக்கிறது என சொல்கிறார் அமரர்

டாக்டர்.இரா.தண்டாயுதம் அவர்கள்.சிறுகதைகளை திறனாய்வு செய்யும்

பொழுது அதன் ஒவ்வொரு தொகுதிகளைப் பிரித்து

எடைப்போட்டுத்தான் தரத்தை , சிறப்பை உறுதி செய்ய முடியும்.

சிறுகதையில் தலைப்பு மிக மிக அவசியமான ஒன்றாகும்.தலைப்பு

இல்லாதது இலையுதிர்ந்த மொட்டை மரத்துக்குச் சமம்.ஒரு சிறு

செய்தியாக இருந்தாலும் நிச்சயமாகத் தலைப்பு

10
HBTL2103
வேண்டும்.சிறுகதையின் தலைப்பு கருத்தை உள்ளடக்கியதாக இருக்க

வேண்டும்.அது தான் சிறந்த தலைப்பாக அமையும்.

தொடக்கம் சிறுகதையை ஓர் எழுத்தாளர் தம் விருப்பம் போல்

எப்படியும் தொடங்கலாம்.சிறந்த சிறுகதைக்கு சிறப்பான தொடக்கம்

இன்றியமையாததாகிறது.

எதிர்பாராமல் வட்டினுள்
ீ அடைக்கப்பட்டிருந்த தன் மனைவியின்

நாயைக் காப்பதற்காக முயன்றபோது ,காப்டன் பாரஸ்டியர் ஒரு

காட்டுத்தீயில் சிக்கி மாண்டதாகச் செய்தி படித்தபோது,பலர்

திடுக்கிட்டார்கள் .இப்படிச் சோமர் செட்மாம் எழுதிய (The lion’ s skin) என்ற

சிறுகதை தொடங்குகிறது.

தந்தையைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்து போனோம் .அதில்

கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லை போல்

இருந்தது.சிவராமையர் டேஞ்ஜரஸ் –என்ற இரண்டு வார்த்தைகளே

இருந்தன.தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து

வந்தது.இவ்வாறு தொடங்கியது கு.ப ராஜகோபாலன் எழுதிய ‘விடியுமா’

என்ற சிறுகதை.இத்தகைய தொடக்கங்கள் சிறுகதைக்குக்

கவர்ச்சியூட்டிச் சுவை மிக்க அமைப்பைத் தருகின்றன.அப்பொழுதுதான்

அதன் தொடர்ச்சி நெகிழ்ச்சியின்றி அமையும்.படிப்போரின் கவனத்தை

ஒருமுகப்படுத்தவும் உதவும்.சிறுகதையின் தொடக்கம் வாசகர்களை

ஈர்த்து ,படிக்கத் தூண்டுவதாய் இருத்தல் அவசியம்.

கதைப்பின்னல் –கதையை நல்ல முறையில் தொடங்கிவிட்டால் மட்டும்

அது சிறப்படைந்து விடாது.ஒரு வலையைப் பின்னும் போது எந்தக்

குறையுமின்றி அமைந்தால் அது நல்ல வலையாக

அமையும்.இல்லையென்றால் கோணல் மாணலாக

அமைந்துவிடும்.அதைப் போல் கதையைத் தொடங்கியது முதல்

11
HBTL2103
ஒழுங்கு முறையாக நகர்த்திச் செல்ல வேண்டும்.எந்த இடத்திலாவது

தொய்வு ஏற்பட்டால் கதையின் சுவை குறைந்து அதன் தன்மையும்

மாறுபட்டுப் போகும்.சிறுகதை விறுவிறுப்பாய்த் தொடங்கி ,அதன்

தொடர்ச்சியில் நகர்ச்சிச் செல்ல வேண்டும்.படிப்பவர்களைச்

சோர்வடையச் செய்யக் கூடாது.கதை உணர்ச்சியோட்டம் உடையதாய்

அமைதல் வேண்டும்.கதையமைப்பானது சங்கிலித்தொடர் போன்று

கதைமாந்தர்கள் இடையே பின்னிப் பினைந்து காணப்பட

வேண்டும்.டாக்டர்.மு.வரதராசனுடைய ‘விடுதலையா’ ,’குறட்டை ஒலி’ ,

என்ற சிறுகதைகள் சிந்தனைக்கு விருந்தூட்டுவன.

சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படும் விருத்தாசலம் என்ற

இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’

, ‘அன்று இரவு’ ஆகிய படைப்புகள் அவருடைய அரிய

படைப்புகளாகும்.இவருடைய சிறுகதைகளில் பல,புதுமைப்பித்தன்

கதைகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன.’உலகத்துச் சிறந்த

சிறுகதைகள்’ ,’தெய்வம் கொடுத்த வரம்’ என்ற இவருடைய

மொழிபெயர்ப்புத் தொகுதிகளில் உலகிலுள்ள சிறந்த சிறுகதைகளைக்

காணலாம்.

கரு-ஒரு சிறுகதையில் நிச்சயம் கரு இருக்கும்,இருக்க

வேண்டும்.மக்களுக்குப் பயன்படக் கூடியதும் சிந்தனையைத்

தூண்டத்தக்கதுமான கருவைத் தெரிவு செய்யும் போது ,அது நன்கு

திரட்சி பெறும் வகையில் கதையில் அடக்கமாக வேண்டும்.கரு மிகச்

சிறப்பாக அமைந்த சிறுகதைகள் படிப்பவரின் நெஞ்சில் நீங்காமல்

நிற்பனவாகும்.ரா.கி .ரங்கராஜனுடைய ‘பல்லாக்கு’, பரிசுப் பெற்ற

சிறுகதைத் தொகுதியாகும்.’நிலா நனையுமா’ என்பதும் இவருடைய

சிறப்புடைய சிறுகதைகள் ஆகும்.ஜெயகாந்தன் ,தம் கதையில் சமுதாய

12
HBTL2103
ஊழல்களை அலசிக் காட்டுவார்.கு.ப.ராஜகோபால் எழுதிய ‘காணாமலே

காதல்’ ,’புனர் ஜென்மம்’, ,’கனகாம்பரம்’, முதலியன சிறுகதைத்

தொகுப்புகளாகும்.இவர் கதைகளில் கற்பனையும் ,மனோதத்துவமும்

நிறைந்திருக்கும்.புதுமைப்பித்தனின் சங்குத் தேவனின் தர்மம் என்ற

சிறுகதை இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.கரு கதையில்

அதன் அழகு முழுவதுமாய் வெளிப்பட வேண்டும் என்பது

அறியப்படுகிறது.

கதைமாந்தர்கள்,ஓரு சிறுகதையில் இரண்டு.மூன்று

கதைமாந்தர்கள்,இடம் பெற்றாலும் ஒரு பாத்திரம் மட்டுமே கதையின்

மையக்கருத்தின் பிரதிபலிப்பாக விளங்கும்.மற்ற இரண்டு கதை

மாந்தர்களும் தலைமைப் பாத்திரத்திற்குப் பக்க பலமாக இருப்பர்.அந்த

முக்கியப் பாத்திரத்தைப் கதையில் அறிமுகப்படுத்துவதிலும் ஓர்

இலாகவம் இருக்க வேண்டும்.கதைமாந்தர்கள் கதையுடன் பின்னிப்

பினையவில்லையென்றால் கதை குறையுடையதாக அமைந்து

விடும்.சிறுகதை ஒரே முறையில் படித்து முடிக்க கூடியதாக இருத்தல்

வேண்டும்.ஒரே ஒரு பயன் அல்லது விளைவு உடையதாக இருத்தல்

வேண்டும் என்றும் ,அதனால் கதையில் வரும் சில நிகழ்ச்சிகளும்

கதைமாந்தர்களும் அந்த ஒன்றனுக்குப் பயன்படக் கூடிய

வரையறையோடு அமைய வேண்டும் என்றும் கூறுவர்.தொடக்கம்

முதல் முடிவு வரை ஒரே நோக்கம் உடையதாக விளங்கல்

வேண்டும்.சிறுகதையில் கதைமாந்தர் ஒரு சிலராகவே இருந்தாலும்

,ஒரு முழுத்தன்மை மட்டும் கட்டாயம் வேண்டும்.தேவையற்ற

வருணனைக்கோ,வேண்டாத நிகழ்ச்சிகளுக்கோ இடம் தராத சிறிகதை

என்னும் கலை,சிறிய வடிவிலேயே ,முழுத்தன்மை பெற்று

விளாங்குவதால் ,அரிய கலை என்று போற்றத்தக்கதாகும்.

13
HBTL2103
சிறுகதைக்கு கற்பனை வளம் தேவைப்படுவது போல மொழி வளமும்

இருக்க வேண்டும்.பிழையின்றிக் கோவையாக எழுதும் ஆற்றலைப்

பெற்றிருக்க வேண்டும்.சிறுகதை எளிய மொழிநடையில் மூலம்

மட்டுமே படைப்பாளர்கள் வாசகர்களின் வாசகர்களின் மனத்தில்

கருத்துகளைப் பதிக்க வேண்டும்.தனித்தமிழ் நடை,பண்டித நடை ,

ஆகியவை சிறுகதைக்கு கை கொடுக்காது.ஒரு பழகிய நடையுடன்

கூடிய பேச்சு வழக்கு ,சிறுகதைகளில் இடம் பெறல் வேண்டும்.இதன்

மூலமே படைப்பாளனின் படைப்பிலக்கியம் வெற்றி பெற இயலும்.

பின்னோக்கி உத்தி-ஒருவரின்

பிறப்பு,வளர்ப்பு,மனைவி,குழந்தைகள்,பற்றியெல்லாம், சொல்லிக்கொண்டு

வந்தால், அது சிறுகதையாக இருக்காது,நாவலின் சுருக்கமாகி

விடும்.ஒரு சிறுகதையைத் தொய்வடையச் செய்ய

,தேவையில்லாமல்,வளர்க்கப்படும் பின்னோக்கி உத்தியும் காரணமாகி

விடும்.

கலை வெளிப்பாடு என்பது ஒரு பொருளையோ ஒரு சூழ்நிலையையோ

நேரடியாக விளக்குவதைக் காட்டிலும் ,அதற்குச் சற்றுக்

கற்பனையையும் இனிமையையும் நயமுடன் கூட்டி,எழுதுவதில்தான்

,கலை வெளிபாடு தோன்றுகிறது.’அந்தக் கிராமத்தின் நடுவே ஓர் ஆறு

சல சல வென்ற இன்னிசை ஓசையுடன் ,கரையிலிருந்து வளைந்து

வளைந்து ஓடுகிறது என்று எழுதுவதில் தான் கலை நயம் மிளிர்கிறது.

புதிய சோதனை –பெரும்பாலான சிறுகதைகள் பழைய கருவையே புதிய

கோணத்தில் தருபவையாக இருக்கினறன.அமைப்பு முறையில் சில

மாற்றங்களும் முன்னேற்றமும் கண்டிருப்பினும் , ‘புதிய மொந்தையில்

பழைய கள் ‘ என்ற நிலையிலேயே இருக்கின்றது.புதிய சோதனைக்கு

உள்ளாகும் சிறு கதை கவனத்தைச் சற்று ஈர்ப்பதாக இருக்கும்.

14
HBTL2103
சிறுகதையின் தொடக்கத்தைப் போன்றே முடிவும் முக்கியத்துவம்

பெறல் வேண்டும்.சிறுகதையின் முடிவு இறுதிவரை படிப்போரின்

கவனத்தைக் கவரக் கூடியதாக இருக்க வேண்டும்.சிறுகதையின்

முடிவு கூறப்படவில்லை எனில் அது மனதில் நிலைத்து

நிற்காது.கதையின் முடிவு உரைக்கப்படல் அல்லது சிந்திக்கச் செய்தல்

ஆகியவற்றின் மூலமே படைபாளரின் ஆற்றல் உணரப்படும்.ஆகவே

,சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான முடிவு அவசியம் என்பது

உணரப்படுகிறது. சிறுகதையின் சிறந்த முடிவு சமூகப் பயன்

விளைவிக்கக் கூடியது.சில வேளைகளில் சிறுகதையின் முடிவுகள்

தலைப்புகளாய் அமைந்த நிலையில் அவை சிறப்பு பெறுவதும் உண்டு.

15

You might also like